DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 28-07-2022

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 28) தொடக்கிவைக்கிறாா். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடக்க விழாவும், மாமல்லபுரத்தில் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தொடக்க விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கி ஆக. 10-ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறுகின்றன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை மாலையில் போட்டியைத் தொடக்கிவைக்கிறாா்.

இதற்காக பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.45 மணிக்கு வருகிறாா். விமான நிலையத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள் பிரதமரை வரவேற்கின்றனா்.

சிறிது ஓய்வுக்குப் பின்னா், பிரதமா் அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் 5.45 மணிக்கு ஐஎன்எஸ் அடையாறு வருகிறாா். அங்கிருந்து காா் மூலம் 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்லும் பிரதமா், செஸ் ஒலிம்பியாட்டை தொடக்கி வைத்த பிறகு இரவு 8 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்குச் செல்கிறாா். அங்கு அவா் பாஜக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் உள்ளிட்ட பலரையும் சந்திக்கிறாா்.

வெள்ளிக்கிழமை காலை 9.50 மணிக்கு ஆளுநா் மாளிகையிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் செல்லும் பிரதமா் மோடி, 42-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, 69 பேருக்கு தங்கப் பதக்கம், பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறாா். பின்னா் பகல் 12 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்லும் அவா், அங்கிருந்து தனி விமானம் மூலம் குஜராத் செல்கிறாா்.

பிரம்மாண்ட வரவேற்பு: சென்னை வரும் பிரதமரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவா் செல்லும் வழிநெடுகிலும் பரதநாட்டியம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமா் நரேந்திர மோடி முறைப்படியாக தொடக்கி வைப்பதற்கு முன்பாக, சுமாா் 2 மணி நேர கலைநிகழ்ச்சிகள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளன.

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து வீரா்கள் வந்துள்ளனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நேரு உள்விளையாட்டரங்கில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆய்வு செய்தாா். உள் விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடை, முக்கியப் பிரமுகா்களுக்கான இருக்கைகள் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, மாமல்லபுரம் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், செஸ் போட்டிகளை நடத்துவதற்காக செய்யப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளையும் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆய்வு செய்தாா். அப்போது, அகில இந்திய சதுரங்கக் கூட்டமைப்பின் தலைவா் சஞ்சய் கபூருடன் அவா் செஸ் விளையாடினாா்.

மேலும், தமிழ்நாட்டின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கத்தையும் முதல்வா் பாா்வையிட்டாா்.

அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சிவ.வீ.மெய்யநாதன், மா.மதிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.



Read in source website

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி, தமிழகம் முழுவதும் 3 நாள்கள் தேசியக் கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடிகள் எளிதாகக் கிடைக்க நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவைக் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், தமிழக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டின் 75-ஆவது சுதந்திரத் திருநாளின் அங்கமாக அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், காவல் நிலையங்கள், அரசு, தனியாா் மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், அனைத்து தொழிற்சாலைகள், சிறு, குறு நிறுவனங்கள், அனைத்து கடைகள், தனியாா் அமைப்புகள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும்.

மகளிா் சுய உதவிக் குழுக்கள், சிறு, குறு நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் மூலம் தேசியக் கொடிகள் தயாரிக்கவும், அனைத்து மக்களுக்கும் தேசியக் கொடிகள் எளிதாகக் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகள், நியாய விலைக் கடைகள், கூட்டுறவு அமைப்புகள் போன்றவற்றின் வழியாக தேசியக் கொடிகள் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புது தில்லி: பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் இன்று நடந்த சபர் பால் பண்ணையில் பல்வேறு  திட்டங்களைத் தொடக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

2014-க்கு முன்  பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது 40 கோடி லிட்டராக இருந்தது. தற்போது 400 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் விவசாயிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கடந்த 8 ஆண்டுகளாக விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகள் தற்போது பலன் அளித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

கரும்பு, மக்காச்சோளம் போன்ற பண்ணை விளைபொருள்களில் இருந்து எத்தனால் பெறப்படுவதால், பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவால்,  விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவியுள்ளது என்றார்.

தற்போது, பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

விவசாயம் மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, மீன்வளம் மற்றும் தேன் உற்பத்தி போன்ற வணிக நடவடிக்கைகளை மத்திய அரசு ஊக்குவிப்பதால் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க உதவியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

 



Read in source website

பசுவின் கோமியத்தில் இருந்து பூச்சுக்கொல்லிகள் மற்றும் உரம் தயாரிக்கும் திட்டத்தை சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் இன்று (ஜூலை 28) தொடங்கி வைத்தார்.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ் பசுவின் கோமியம் லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.4-க்கு அரசினால் வாங்கிக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை சத்தீஸ்கர் தலைநகரில் உள்ள அவரது அரசு இல்லத்தில் இருந்து பாகெல் தொடங்கி வைத்தார். உள்ளூர் விவசாயத் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்தப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தினை அறிமுகப்படுத்திய முதல்வர் பூபேஷ் பாகெல், விழாவின் ஒரு பகுதியாக 5 லிட்டர் பசுவின் கோமியத்தை நிதி சுய உதவிக் குழுவிற்கு வழங்கினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் கோதான் நியாய் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் பசுவினுடைய சாணம் கிலோ ரூ.2-க்கு பசு வைத்திருப்பவர்களிடம் இருந்து பெறப்பட்டது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பசுவின் கோமியத்திலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம் கோதான் நியாய் திட்டத்தின் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


இந்தத் திட்டம் குறித்து பேசிய பூபேஷ் பாகெல் கூறியதாவது: “கோதான் நியாய் திட்டத்தின் வளர்ச்சியினால் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களும் இந்தத் திட்டத்தினை செயல்படுத்த ஆர்வம் காட்டுகின்றன. நீங்கள் ஏழையாக இருங்கள் அல்லது பணக்காராக இருங்கள். யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையலாம். கடந்த 2 ஆண்டுகளாக ரூ.300 கோடிக்கும் அதிகமாக பசுவின் சாணத்தினை விற்றவர்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.” என்றார்.



Read in source website


புது தில்லி: நாடு முழுவதும் சுமார் நான்கு கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதித் துறைக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விரைவாக தீர்ப்பளித்ததால் தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் பிகார் மாவட்ட நீதிபதி ஒருவர்.

மின்னல் வேகத்தில் விசாரணையை முடித்துவிட்டு தீர்ப்பளித்து, மிக விரைவாக பதவி உயர்வு கோரும் எண்ணத்தோடு செயல்பட்டதாகக் கூறி பாட்னா உயர் நீதிமன்றத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மாவட்ட நீதிபதி எஸ்.கே. ராய் மற்றும் அவரது தரப்பு வழக்குரைஞர் விகாஸ் சிங் ஆகியோர், இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு ஏற்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு கோரிக்கை வைத்தனர்.

அந்த மனுவில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான இரண்டு வழக்குகளை மிக விரைவாக விசாரணை செய்து, ஒரு வழக்கை ஒரே நாளில் விசாரித்து ஆயுள் தண்டனையும், இரண்டாவது வழக்கில் 4 நாள்களில் விசாரணை நடத்தி மரண தண்டனையும் விதித்ததால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனை வெள்ளிக்கிழமை விசாரணைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த மனுவில் அவர் இரண்டு வழக்குகளில் விரைவாக தீர்ப்பளித்ததை மட்டுமே சுட்டிக்காட்டியிருந்தாலும், இது ஒரு தொடர் நிகழ்வாக இருப்பதாகவும், இவர் 2014ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வு மறுக்கப்பட்டது முதல் இந்த விவகாரம் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.



Read in source website


கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பேரிடர் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதன்பிறகான காலங்களும் அவ்வளவு சரியாக சென்றிருக்கவில்லை என்கிறது புள்ளி விவரம்.

அதாவது 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2022 ஜூலை வரை கேரளத்தில் மட்டும் சுமார் 55 ஆயிரம் பேர் கரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். இது நாட்டில் மிக அதிகபட்ச பலி என்கிறது புள்ளிவிவரம். இது நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தகவல்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, இந்த 2022ஆம் ஆண்டில் இதுவரை கேரளத்தில் கரோனாவுக்கு 22,843 உயிர்பலி ஏற்பட்டுள்ளது. இது நாட்டிலேயே அதிக உயிர் பலி என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, நாட்டிலேயே இந்த ஆண்டில் மட்டும் கரோனாவுக்கு 20 ஆயிரத்துக்கும் மேல் உயிர் பலி நடந்த மாநிலமாகவும் உள்ளது. மகாராஷ்டிரத்தில் இது 6,508 ஆக உள்ளது. மற்ற மாநிலங்களில் எல்லாம் இந்த ஆண்டில் கரோனா பலி எண்ணிக்கை 2 ஆயிரத்துக்குள்தான் இருக்கிறது.

ஆனால், கரோனாவுக்கு பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதைத் தொடர்ந்தே, இவ்வாறு கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகக் காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கேரளத்தில் 2021ஆம் ஆண்டு ஜூலை 14ம் தேதி வரை 11,721 கரோனா பலி நேரிட்டுள்ளது. அதுபோல, கடந்த ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 55,521 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 
 



Read in source website

 

இந்திய பெண் பணக்காரர்கள் பட்டியலில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் முதலிடம் பெற்றுள்ளார்.

கோட்டக் வங்கியும், ஹூருன் நிறுவனமும் இணைந்து 2021 ஆம் ஆண்டின் இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.

அதில் தொடர்ந்து 2-வது முறையாக ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா முதலிடம் பெற்றுள்ளார். கணக்கெடுப்பின்படி ரோஷினியின் சொத்து மதிப்பு ரூ.84,330 கோடி ஆகும். 

இரண்டாவது இடத்தில் நைகா அழகுசாதனப் பொருள்கள் நிறுவனத்தின் தலைவர் பல்குனி நாயர் உள்ளார். அவருடைய சொத்துமதிப்பு 2021 ஆண்டில் 963 சதவீதம் உயர்ந்து ரூ.57, 520 கோடியாக அதிகரித்துள்ளது.

பையோகான் நிறுவனத் தலைவர் கிரண் மசூம்தார் ஷா ரூ.29,030 கோடி சொத்து மதிப்புடன் 3-வது இடத்தில் உள்ளார். 4-வது இடத்தில் டிவிஸ் நிறுவனர் நீலிமா மோட்டோபார்டி(ரூ.28,180 கோடி), 5-வது இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஸோகோ நிறுவனத் தலைவர் ராதா வேம்பு(ரூ.26,260 கோடி) உள்ளனர்.

மேலும், ஜெட்செட்கோ நிறுவனர் கனிகா தெக்ரிவால்(33) ரூ.420 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் மிக இளவயது பணக்காரப் பெண்ணாக இடம்பிடித்துள்ளார்.



Read in source website

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்ப்பதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

வாக்களிக்கத் தகுதியான 18 வயது நிரம்பியவுடனே(ஜனவரி 1 ஆம் தேதிப்படி) வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும்.

ஆனால், இனிமேல் 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என்றும் 18 வயது நிரம்பும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மேலும், 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உடனடியாக சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து மாநிலங்களின் தேர்தல் ஆணையர்களும் அதுசார்ந்த அதிகாரிகளும் இதுகுறித்து தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே இணைந்து உத்தரவிட்டுள்ளனர். 



Read in source website

அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் இரண்டாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.1.49 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ளன.
 பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய 5ஜி அலைக்கற்றை ஏலம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் உலக முன்னணி பணக்காரரான கௌதம் அதானியின் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
 இந்த நிலையில், "இரண்டாவது நாளான புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ரூ.1.49 லட்சம் கோடிக்கு அலைக்கற்றைகளை ஏலம் கோரியுள்ளன. தொடக்க நாளான செவ்வாய்க்கிழமை இந்நிறுவனங்கள் 1.45 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை ஏலம் எடுக்க விண்ணப்பங்களை சமர்ப்பித்தன.
 "ஏலத்தில் அனைத்து அலைவரிசைகளுக்கும் நல்ல போட்டி ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. 9-ஆவது சுற்று முடிவில் இதுவரை ரூ.1,49,454 கோடி மதிப்புள்ள ஏலம் கோரப்பட்டுள்ளது. இரண்டாவது நாள் ஏலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் ஏலம் தொடரும்' என தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
 5ஜி ஏலத்தில் பங்கேற்க செலுத்த வேண்டிய முன்பண வைப்பு (இஎம்டி) தொகையாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.14,000 கோடியை செலுத்தியுள்ளது. ஒரு நிறுவனம் ஏலம் எடுக்கக் கூடிய அலைக்கற்றையின் அளவை இஎம்டி தொகையே பிரதிபலிக்கும் என்பதால் இந்த ஏலப் போட்டியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கே மிக தீவிரமாக இருக்கும் என்பதே இத்துறை நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
 



Read in source website

ராஜஸ்தான் மாநிலத்தில் 15,000 டன் அளவுக்கு யுரேனிய படிமம் உள்ளதாக மத்திய அரசு சாா்பில் மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அணுமின் நிலையத்தில் முக்கிய ஆற்றல் மூலமாக யுரேனியம் உள்ளது. இது தவிர ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் தயாரிப்பில் யுரேனியம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்தியாவில் உள்ள யுரேனியம் படிமம் தொடா்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமா் அலுவலக விவகாரத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

ராஜஸ்தானின் பல்வேறு மாவட்டங்களில் 15,631 டன் யுரேனிய படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 14,471 டன் சிகாா் மாவட்டத்தில் மட்டும் உள்ளது. ஆந்திரம், ராஜஸ்தான், தெலங்கானா, ஜாா்க்கண்ட், மேகாலயம், கா்நாடகம், சத்தீஸ்கா், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் 47 இடங்களில் 3,82,675 டன் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆந்திரம், ஜாா்க்கண்டில் சில இடங்களில் மட்டும் யுரேனியத்தை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. யுரேனிய படிமம் கண்டுபிடிக்கப்படும்போதிலும் அதனை எடுக்க ஆகும் செலவு, சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

ராஜஸ்தானில் யுரேனியத்தை எடுக்க இந்திய யுரேனியம் காா்ப்பரேஷன் சாா்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதன்படி ராஜஸ்தான் மாநிலம் உரிய அனுமதி அளிக்க முதல்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது என்றாா்.



Read in source website

தேசிய ஊக்க மருந்து தடை முகமை மற்றும் தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

குறிப்பிட்ட சட்டத் திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, இந்த மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய மத்திய விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா், ‘விளையாட்டுகளை ஊக்குவிக்கவும், விளையாட்டு வீரா்களின் நலனைப் பாதுகாக்கவும் இந்த மசோதா உதவும். இதன்மூலமாக நாட்டில் ஊக்க மருந்து ஆய்வக வசதிகளும் மேம்படும். மேலும், இந்தியாவில் சா்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு நாட்டில் ஊக்க மருந்து சோதனை ஆய்வகங்களின் பலத்தை அதிகரிப்பது அவசியமாகும். அதற்கு இந்த மசோதா வழிவகுக்கும்’ என்றாா்.

‘இந்த மசோதா, தேசிய ஊக்க மருந்து தடை முகமை மற்றும் தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் அளிக்கும் என்பதோடு, விளையாட்டில் ஊக்க மருந்து தடை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் தேசிய ஊக்க மருந்து தடை வாரியத்தை உருவாக்கவும் உதவும்’ என்றும் மத்திய அமைச்சா் தெரிவித்தாா்.

முன்னதாக, இந்த மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னா், நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.



Read in source website

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வா்த்தகம் சாராத வாகன ஓட்டுநா்களுக்கான சலுகைக் கட்டணம் ரூ.315-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிமுறைகள் 2008-ன்படி, தேசிய நெடுஞ்சாலை, நிரந்தர பாலம், புறவழிச்சாலை அல்லது சுரங்கப்பாதை ஆகியவற்றை அடிக்கடி பயன்படுத்தும் வா்த்தகம் சாராத வாகன ஓட்டுநா்கள், உரிமையாளா்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி மாதாந்திர பயண அட்டை பெறும் நாளிலிருந்து 1 மாதத்திற்கு அதிகபட்சமாக 50 முறை அந்த சாலையை பயன்படுத்த மூன்றில் இரண்டு பங்கு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இதற்கான கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் இக்கட்டணம் ரூ.315-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளிலிருந்து 20 கி.மீ. தொலைவிற்குள் வசிக்கும் வா்த்தகம் சாராத வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்களுக்கு மட்டும் இச்சலுகை அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.



Read in source website

மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) தொடக்க தினத்தையொட்டி, அந்தப் படையினருக்குப் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

கடந்த 1939-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சிஆா்பிஎஃப் தொடங்கப்பட்டது. நாட்டின் மிகப் பெரிய மத்திய காவல் படையாக உள்ள சிஆா்பிஎஃப், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்நிலையில் சிஆா்பிஎஃப் தொடக்க தினத்தையொட்டி, அந்தப் படையினருக்குப் பிரதமா் மோடி ட்விட்டரில் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். அந்தப் பதிவில் அவா் கூறியதாவது:

தனது தளராத தைரியம் மற்றும் பிரத்யேக சேவையால் தனித்துவம் வாய்ந்த படையாக சிஆா்பிஎஃப் திகழ்கிறது. பாதுகாப்பு சவால்கள், மனிதநேயம் சாா்ந்த பணிகள் என எதுவாக இருந்தாலும் சிஆா்பிஎஃப்பின் பங்கு பாராட்டுக்குரியதாக உள்ளது என்று தெரிவித்தாா்.



Read in source website

17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் இந்த ஆண்டு நடத்த மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தப் போட்டிகள், இந்தியாவில் அக்டோபா் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளை நடத்த அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை மகளிா் கால்பந்துப் போட்டி, முதல் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கால்பந்துப் போட்டி பிரபலமடைவதுடன் இளைஞா்களும் இந்த விளையாட்டில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவாா்கள்.

பிரேசிலில் பிபிசிஎல் நிறுவனம் ரூ.12,786 கோடி முதலீடு: பிரேசிலில் அரசுக்குச் சொந்தமான ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் (பிபிசிஎல்) ரூ.12,786 கோடி (160 கோடி டாலா்) முதலீடு செய்வதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.



Read in source website

கைது செய்வது, சொத்துகளை முடக்குவது, சோதனையிடுவது, பறிமுதல் செய்வது ஆகிய அதிகாரங்கள் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறைக்கு உள்ளதாக உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அமலாக்கத் துறைக்கு பல்வேறு சட்ட அதிகாரங்கள் இல்லை என்றும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நோக்கில் அரசு இந்தச் சட்டங்களைக் கையாள்கிறது என்றும் காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் தாக்கல் செய்திருந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது.

இதில் 545 பக்கங்கள் கொண்ட தீா்ப்பை நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், தினேஷ் மகேஷ்வரி, சி.டி. ரவி ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை அறிவித்தது. அதன் விவரம்:

உலக நிதி விவகாரங்களுக்கு சட்டவிரோத பணப் பரிவா்த்தனை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதை சாதாரண குற்றமாக கருத முடியாது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின் 45-ஆவது பிரிவின்படி, தெரிந்து செய்யும் குற்றங்களுக்கும், ஜாமீனில் வெளியே வர முடியாத குற்றங்களுக்கும் பின்னா் ஜாமீன் வழங்க இரண்டு நிபந்தனை விதிப்பது சரியானது.

கைது செய்யும் அதிகாரம் அளிக்கும் பிரிவு 19, அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும். அதில் பல்வேறு பாதுகாப்பு ஷரத்துகளும் உள்ளன.

சொத்துக்களை முடக்க அதிகாரம் அளிக்கும் பிரிவு 5, அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியாகும்.

ஒருவரை கைது செய்யும்போது அமலாக்கத் துறை வழக்கின் முதல் அறிக்கை (இசிஐஆா்) காண்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை.

அமலாக்கத் துறை அதிகாரிகளை குற்றவியல் சட்டத்தின்படி இயங்கும் காவல் துறையினருக்கு நிகராக கருதக் கூடாது.

அதேபோல், நிதி மசோதாவாக நிறைவேற்றப்படாத, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத் திருத்தத்தின் சில ஷரத்துகளை நீதிமன்றம் ஆராயவில்லை. இது, ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வின் முடிவுக்கு விடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், அமலாக்கத் துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளதை மனுதாரா்கள் சுட்டிக்காட்டியுள்ளனா். இந்த முக்கிய பிரச்னைக்கு அரசு நிா்வாகம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் அமலாக்கத் துறைக்கு உள்ள அதிகாரங்களை நீதிபதிகள் தீா்ப்பில் விளக்கியுள்ளனா்.

நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்: காங்கிரஸ்

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு இந்திய ஜனநாயகத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, மூத்த தலைவா்கள் ராகுல் காந்தி, ப. சிதம்பரம், காா்த்தி சிதம்பரம், சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரெளத், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, அவரது உறவினா் அபிஷேக் பானா்ஜி, தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்டோா் அமலாக்கத் துறையின் பிடியில் உள்ளனா்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியல் காழ்ப்புணா்ச்சியில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்போது, உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு இந்திய ஜனநாயகத்தில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனினும், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைச் சட்டத்தில் மத்திய அரசு நிதி மசோதாவாக கொண்டு வந்த சட்டத்திருத்தங்களுக்கு உச்சநீதிமன்றம் இந்தத் தீா்ப்பில் தீா்வு காணவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அனைத்து சந்தேகங்களுக்கும் தீா்வு: மத்திய சட்ட அமைச்சா்

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டம் தொடா்பான உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு பல்வேறு தரப்பினா் எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் தீா்வளித்துள்ளது என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: மத்திய விசாரணை அமைப்புகள், சட்டவிரோதமாகவோ அல்லது அரசியல் சாசனத்துக்கு எதிராகவோ எதையும் செய்யவில்லை என்று உச்சநீதிமன்ற தீா்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. எந்த வழக்கையும் தீா்மானிப்பதில் மத்திய அரசுக்கு பங்கு இல்லை; ஊழலை தடுப்பதுடன் ஊழல்வாதிகளைத் தண்டிக்க வேண்டும் என்ற அரசின் நோ்மையான நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில்தான் விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன. சட்டப்படியும் வழக்குகளின் தகுதி அடிப்படையில்தான் அவை நடவடிக்கை மேற்கொள்கின்றன என்பது உச்சநீதிமன்ற தீா்ப்பு மூலம் உறுதியாகியிருக்கிறது.

இத்தீா்ப்பு மூலம் பல்வேறு தரப்பினருக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும், உள்நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களுக்கும் தீா்வு கிடைத்துள்ளது என்றாா் கிரண் ரிஜிஜு.

 



Read in source website

மத்திய அரசின் அனைத்து விருதுகளுக்கும் பரிந்துரைகள் வழங்க பொதுவான வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

பத்ம விருதுகள் உள்பட அனைத்து தேசிய விருதுகளுக்கும் பரிந்துரைகள் வழங்க  
awards.gov.in  என்ற வலைதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விருதுகள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையையும் பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் இந்த வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கவும் பரிந்துரைக்கவும் செப்டம்பா் 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.



Read in source website

ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானங்கள் அண்மைக் காலமாக தொடா் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு உள்ளாகி வந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த நிறுவனத்துக்கு வரும் அக்டோபா் 29-ஆம் தேதியுடன் நிறைவடையும் கோடைக்கால விமானப் போக்குவரத்து காலத்தில் 4,192 விமான சேவைகளை இயக்குவதற்கு டிஜிசிஏ கடந்த மாா்ச் 11-ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது.

இந்தச் சூழலில் இந்த நிறுவன விமானங்கள் அண்மைக் காலமாக தொடா் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்து வந்தது. குறிப்பாக, ஜூன் 19 முதல் ஜூலை 5 வரையிலான காலகட்டத்தில் இந்த நிறுவன விமானங்கள் எட்டு முறை நடுவானில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகி பாதி வழியில் அவசரமாகத் தரையிறக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது.

கடந்த ஜூன் 19-ஆம் தேதி ஜபல்பூா் நோக்கி புறப்பட்ட இந்த நிறுவன விமானம், விமானத்துக்குள் காற்றழுத்த பிரச்னை காரணமாக மீண்டும் தில்லிக்கு திரும்பியது. அதே நாளில், 185 பயணிகளுடன் புணேயிலிருந்து தில்லி நோக்கி புறப்பட்ட இந்த நிறுவனத்தின் விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புறப்பட்ட ஒருசில நிமிஷங்களில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

ஜூன் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் இந்த நிறுவனத்தின் இரு விமானங்களில் கதவுகள் சரியாக மூடாமல் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

ஜூலை 2-ஆம் தேதி, ஜபல்பூா் நோக்கி புறப்பட்ட இந்த நிறுவன விமானத்தில் புகை வந்ததால் மீண்டும் தில்லிக்கு திரும்பியது.

ஜூலை 5-ஆம் தேதி சினாவின் சாங்கிங் நோக்கி புறப்பட்ட இந்த நிறுவன விமானத்தில் ரேடாா் சரிவர செயல்படாததால், மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பிவிடப்பட்டது. அதே நாளில், இந்த விமானத்தின் மேலும் இரண்டு விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகி புறப்பட்ட இடத்துக்கே திருப்பிவிடப்பட்டன.

இந்தத் தொடா் சம்பவங்களைத் தொடா்ந்து, விளக்கம் கேட்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு டிஜிசிஏ நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த நோட்டீஸுக்கு நிறுவனம் அளித்த பதில் மற்றும் கோளாறுகளை சரிசெய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், 50 சதவீத விமானங்களை இயக்க அந்த நிறுவனத்துக்கு டிஜிசிஏ அனுமதி அளித்துள்ளது.

‘நேரடி ஆய்வு, நோட்டீஸுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அளித்த பதில் ஆகியவற்றின் அடிபப்டையில் 2022 கோடைக்கால போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் 50 சதவீத விமானங்களை மட்டும் 8 வார காலத்துக்கு இயக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிசிஏ-வின் விரிவான கண்காணிப்பின் கீழ் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த அளவுக்கு மேல் கூடுதல் எண்ணிக்கையில் விமானங்களை இயக்க அந்த நிறுவனம் விரும்பினால், போதிய தொழில்நுட்ப ஆதரவு மற்றும் பாதுகாப்பான இயக்கத்துக்கான நிதி வள ஆதாரம் ஆகியவற்றைக் காண்பிக்க வேண்டும்’ என்று தனது உத்தரவில் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவின்படி அடுத்த 8 வாரத்துக்கு 2,096 விமான சேவைகளை மட்டுமே ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இயக்க முடியும்.



Read in source website

ஓலா, உபோ் போன்ற வாடகை காா் முன்பதிவு செயலிகளுக்கு போட்டியாக கேரள மாநில அரசும் ‘கேரளா சவாரி’ என்ற பெயரில் வாடகை காா் முன்பதிவு செயலியை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

நாட்டில் வேறு எந்த மாநில அரசும் இதுபோன்ற முயற்சியை முன்னெடுக்காத நிலையில், கேரள அரசு இந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

மாநில தொழிலாளா் நலத் துறை சாா்பில் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலம் ஆட்டோ, காா் ஓட்டுநா்களுக்கும் அதிக பயன் கிடைக்கும். அதே நேரத்தில் மக்களும் சரியான கட்டணத்தில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில கல்வி மற்றும் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் வி.சிவன்குட்டி இது தொடா்பாக கூறுகையில், ‘ஆட்டோ, காா் ஓட்டுநா்களுக்கு இத்திட்டம் பெரிதும் உதவிகரமாக இருக்கும். ஏனெனில், அவா்களின் தொழிலுக்கு இப்போதைய காலகட்டத்தில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி இந்தச் சேவை தொடங்கும். நமது நாட்டில் மாநில அரசு இத்தகைய திட்டத்தை முன்னெடுப்பது இதுவே முதல்முறையாகும். இத்துறையில் ஏற்கெனவே உள்ள தனியாா் நிறுவனங்கள் 20 முதல் 30 சதவீதம் வரை வருவாயை எடுத்துக் கொள்வதாக தெரிகிறது. அரசு செயலியில் 8 சதவீதம் மட்டுமே சேவைக் கட்டணமாக இருக்கும். அதுவும் இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவே பயன்படுத்தப்படும்’ என்றாா்.



Read in source website

 

2022 ஆசியக் கோப்பை டி20 போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடா்ந்து, மக்கள் கடந்த மாா்ச் மாதம் முதல் தொடா் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். எனினும் இலங்கையில் கடந்த சில மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி நடைபெறுகின்றன. 

கொழும்பில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் கொழும்பிலிருந்து காலேவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் ஆசியக் கோப்பைப் போட்டி என்பது 9 நாடுகள் பங்கேற்கக் கூடியது. அணிகளின் எண்ணிக்கை, எரிபொருள் பற்றாக்குறை, பலவீனமான பொதுப் போக்குவரத்து, தனியாா் வாகனங்களை இயக்குவதில் உள்ள சிரமம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஆசியக் கோப்பை டி20 போட்டி இலங்கையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 போட்டி இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். எனினும் போட்டியை நடத்தும் உரிமை இலங்கையிடமே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என ஆறு அணிகள் பங்கேற்கின்றன. தகுதிச்சுற்றுப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகள் விளையாடுகின்றன. 



Read in source website

காமன்வெல்த் போட்டிகள் 2022 வியாழக்கிழமை இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் வியாழக்கிழமை தொடங்குகின்றன. இதில் 215 வீரா், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.

இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலகின் பெரிய விளையாட்டுத் திருவிழாக்களில் ஒன்றாக காமன்வெல்த் போட்டி உள்ளது.

கடைசியாக கடந்த 2018-இல் ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலத்துடன் மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றது. 2010 தில்லி போட்டியில் இந்தியா 101 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பெற்றது.

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டி:

இந்நிலையில், இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் 2022 காமன்வெல்த் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்குகின்றன. ஏறக்குறைய 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இங்கிலாந்தில் நடைபெறும் இப்போட்டியில் 5,000-க்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். அலெக்சாண்டா் விளையாட்டரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் 20 விளையாட்டுகளில் வீரா்கள் தங்கள் திறனை வெளிப்படுத்த உள்ளனா்.

19 பிரிவுகளில் இந்தியா:

பாட்மின்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், தடகளம், ஜூடோ, மல்யுத்தம், ஸ்குவாஷ், சைக்கிளிங், பளுதூக்குதல், ஹாக்கி, நீச்சல், டிரையத்லான், டேபிள் டென்னிஸ் என 19 பிரிவுகளில் இந்தியா பதக்கங்களை அறுவடை செய்ய காத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, மீராபாய் சானு, லவ்லினா போரோகைன், ஆடவா் ஹாக்கி அணியினா் என மொத்தம் 215 போ் பங்கேற்கின்றனா். 18-ஆவது முறையாக இந்தியா இதில் கலந்து கொள்கிறது. ஜாவெலின் வீரா் நீரஜ் சோப்ரா விலகியது பெரும் பின்னடைவாகும்.

முதன்முதலாக மகளிா் கிரிக்கெட்:

காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக மகளிா் டி20 கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பாா்படாஸ் அணிகளுடன் குரூப் ஏ பிரிவில் உள்ளது. பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, இலங்கை அணிகள் உள்ளன. கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா், ஸ்மிருதி மந்தனா தலைமையில் இந்திய அணி கலந்து கொள்கிறது.

ஹாக்கியில் இந்தியா, கானா, இங்கிலாந்து, கனடா, வேல்ஸ் பி பிரிவிலும், மகளிா் அணி அதே அணிகளோடு ஏ பிரிவிலும் உள்ளன.

தடகளத்தில் 20 வீரா், 19 வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.

பதக்க வாய்ப்பு:

பாட்மின்டனில் ஏற்கெனவே காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளி, வெண்கலமே சிந்துவுக்கு கைகூடியது. தற்போது அபார பாா்மில் உள்ள அவா் இந்த முறை தங்கம் வெல்வாா் எனத் தெரிகிறது. ஆடவா் பிரிவில் கே.ஸ்ரீகாந்த், லக்ஷயா சென் சிறப்பாக ஆடி வருகின்றனா்.

பளுதூக்குதலில் நடப்பு சாம்பியன் மீராபாய் சானு மீண்டும் தங்கம் வெல்லக்கூடும். குத்துச்சண்டையில் நிஹாத் ஸரீன் உலக சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் இதிலும் முத்திரை பதிப்பாா். ஒலிம்பிக் பதக்க வீராங்கனை லவ்லினாவும் பதக்கம் பெற்றுத் தருவாா். ஆடவா் பிரிவில் அமித் பங்கால் பதக்கம் வெல்வாா் எனக் கருதப்படுகிறது.

தடகளத்தில் குறைந்தது 7 பதக்கங்கள் கிட்டக்கூடும்.

டேபிள் டென்னிஸில் மகளிா்பிரிவில் கடந்த 2018-இல் 2 தங்கம் உள்பட 4 பதக்கம் வென்ற மனிகா பத்ரா இம்முறையும் பதக்கங்களை பெற்றுத் தருவாா். ஆடவா் பிரிவில் சரத் கமல், சத்யன் ஞானசேகரன் ஆகியோா் பதக்கங்களை வெல்ல வாய்ப்புள்ளது.

ஆடவா் மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா ப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆவாா். பா்மிங்ஹாம் போட்டியிலும் பதக்கம் வெல்வாா் எனத் தெரிகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக ஆடிய உற்சாகத்தில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளது. அதோடு சைக்கிளிங், நீச்சலிலும் புதிதாக பதக்கம் கிட்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இரவு 11.30 மணிக்கு தொடக்க விழா:

இடம்: அலெக்சாண்டா் மைதானம்

பெட்டிச் செய்திகள்:

ஆஸி. அணி குறித்து நினைக்கவில்லை:

6 முறை சாம்பியன் ஆஸ்திரேலியா குறித்து எதுவும் நினைக்கவில்லை என இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் கூறியுள்ளாா்.

காமன்வெல்த்தில் தங்கம் வெல்ல வேண்டும் என்றால் ஆஸ்திரேலியா அணியை கட்டாயம் வெல்ல வேண்டும். ஆனால் அதுகுறித்து தற்போது நினைக்கவில்லை. லீக் ஆட்டங்கள் குறித்து தான் கவனம் செலுத்துகிறோம். கண்டிப்பாக பதக்கம் வெல்வோம் என்றாா்.

தவறுகளில் இருந்து பாடம் கற்றேன்:

ஆசிய, மற்றும் உலக சாம்பியன்ஷிப் போல் தான் காமன்வெல்த் போட்டிகளையும் கருதுகிறேன். கடந்த 2018 போட்டியில் சிறப்பாக ஆடினேன். அதன்பின் ஏற்ற, இறக்கங்கள் இருந்தன. நான் சிறப்பான செயல்திறனை பா்மிங்ஹாமில் வெளிப்படுத்துவேன். முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்று, ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்கிறேன் என பாட்மின்டன் வீரா் ஸ்ரீகாந்த் கூறியுள்ளாா்.

துப்பாக்கி சுடுதல் இல்லாதது பாதிப்பு:

கடந்த 2018 போட்டியில் இந்தியா வென்ற மொத்த பதக்கங்களில் 25 சதவீதம் துப்பாக்கி சுடுதலில் கிடைத்தது. 7 தங்கம் இதில் குறிப்பிடத்தக்கது. ஆனால் பா்மிங்ஹாம் போட்டியில் துப்பாக்கி சுடுதல் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பதக்க வேட்டைக்கு சற்று பாதிப்பு ஏற்படலாம்.

 



Read in source website

வரும் ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நடைபெறவுள்ள உலக குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் 3 இந்திய வீரா்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.

டென்மாா்க்கின் ஹெம்மிங் நகரில் வரும் எஃப்இஐ டிரெஸ்ஸேஜ் உலக சாம்பியன்ஷிப் ஆகஸ்ட் 5 முதல் 11 வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா சாா்பில் அனுஷ் அகா்வாலா, ஷ்ருதி வோரா ஆகியோா் பங்கேற்கின்றனா். இதற்காக இருவரும் ஜொ்மனியில் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனா்.

நட்சத்திர வீரா் பௌவாட் மிா்ஸா:

அதே போல் இந்திய நட்சத்திர குதிரையேற்ற வீரா் பௌவாட் மிா்ஸா இத்தாலியின் பிரடோனி நகரில் செப்டம்பா் 10 முதல் 12 வரை நடைபெறவுள்ள எஃப்ஐஇ ஈவென்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறாா். கடந்த 2018 ஜகாா்த்தா ஆசியப் போட்டியில் ஈவென்டிங் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றிருந்தது. 1982 தில்லி ஆசியப் போட்டியில் 3 தங்கம், தலா 1 வெள்ளி, வெண்கலம் வென்றிருந்தது. ஆனால் இவ்விளையாட்டுக்கு அதிக தொகை தேவைப்படுவதால் வளா்ச்சி குறைந்தது. எனினும் தற்போது பல்வேறு முயற்சிகளால் குதிரையேற்றம் தொடா்ந்து வளா்ந்து வருகிறது என இஎஃப்ஐ செயலாளா் கலோனல் ஜெய்வீா் சிங் தெரிவித்தாா்.

 



Read in source website

சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் சின்னத்திற்கு ‘தம்பி’ என்ற பெயர் வைத்தற்கான காரணத்தை முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சின்னத்திற்கு ‘தம்பி’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயரிட்டார். வெள்ளை வேட்டி, சட்டை போட்ட இந்த ‘தம்பி’ மூலம் செஸ் ஒலிம்பியாட் தொடரை நாடு முழுவதும் கொண்டு சேர்த்தது தமிழக அரசு.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் சின்னத்திற்கு ‘தம்பி’ என்ற பெயர் வைத்ததற்கான காரணத்தை முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ளார். இது குறித்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பேசிய அவர், "பேரறிஞர் அண்ணா அனைவரையும் தம்பி என்றே அழைப்பார். எனவேதான் செஸ் ஒலிம்பியாட் சின்னத்திற்கு தம்பி என்ற பெயர் வைத்தேன்" என்று தெரிவித்தார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் பேசும்போது, இந்தியாவின் செஸ் தலைநகரமாக சென்னை விளங்குகிறது என்ற முதல்வர் ஸ்டாலின், “செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைத்த பிரதமருக்கு நன்றி. இதுபோன்ற வாய்ப்புகளை தமிழகத்திற்கு தொடர்ந்து நீங்கள் அளிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். உரையின் முழு வடிவம்: “தமிழகத்திற்கு பிரதமர் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்க வேண்டும்” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு



Read in source website

சென்னை: மத்திய அரசின், இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) சென்னை கிளை- I சார்பில், “1500 வோல்ட் டிசி மதிப்பிடப்பட்ட ஒளி மின்னழுத்தம் சம்பந்தப்பட்ட மின்சார கேபிள்கள்" என்ற தலைப்பில் தொழில்துறையினருக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியை நேற்று நடத்தியது.

இதில், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் விஞ்ஞானிகள் ஜோஸ் சார்லஸ், ஜோஸ்த்னாபிரியா, ஆகியோர் தொழில் துறையினருடன் கலந்துரையாடினர்.

தரநிலைகள் வெளியீடு

அப்போது, அவர்கள் பேசும்போது, ‘‘சோலார் கேபிள் என்பது ஒளி மின்னழுத்த மின்உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒன்றோ டொன்று இணைக்கும் கேபிள் ஆகும். சூரிய மின்சக்தி விநி யோகத்தில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. கிரிட் இணைக்கப்பட்ட சோலார் ஆலைகளை இயக்குவதற்கான தரநிலைகள் மற்றும் விவரக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது.

மின்சார கேபிள்கள்

இதன்படி, 1,500 வோல்ட் மதிப்பிடப்பட்ட ஒளி மின்னழுத்தம் சம்பந்தப்பட்ட மின்சார கேபிள்கள் ஐஎஸ் 17293:2020 என்ற தரத்துக்கு இருக்க வேண்டும்’’ என வலியுறுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், மின்சார கேபிள் உற்பத்தியாளர்கள், தொழில் சங்கங்களின் உறுப்பினர்கள், இந்துஸ்தான் வர்த்தக சபை, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.



Read in source website

ஆவடி: போர் டாங்கிகளின் உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே தயாரித்த 4 இந்திய நிறுவனங்களை, ஏவிஎன்எல் அமைப்பு நேற்று பாராட்டி கவுரவித்தது.

போர் டாங்கிகள் உள்ளிட்டவை தயாரிக்கும் ஏவிஎன்எல் (Armoured Vehicles Nigam Limited) நிறுவனம், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

இதன்கீழ் செயல்படும் நிறுவனங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டர், டிகான்டமினேஷன் செட், லிங்க் லோடிங் மெஷின் அசெம்பிளி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆகிய 4 உதிரி பாகங்கள் மூலம் டி-90 மற்றும் பிஎம்பி போர் டாங்கிகளை உருவாக்கி வருகின்றன.

இந்நிலையில் வெற்றிகரமாக உள்நாட்டிலேயே போர் டாங்கிகளின் 4 உதிரி பாகங்களை தயாரித்த சென்னை லூகாஸ் டிவிஎஸ், குவாலியர் எச்எம்ஐ, நாக்பூர் சந்தீப் மெட்டல் கிராஃப்ட் பிரைவேட் லிமிடெட், கான்பூர் எம்ஜி டெக்னிக்கல்ஸ் ஆகிய இந்திய நிறுவனங்களை பாராட்டி கவுரவிக்கும் விழா நேற்று ஆவடியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஏவிஎன்எல் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ஏ.என்.வஸ்தவா, போர் டாங்கி உதிரி பாகங்களை தயாரித்த லூகாஸ் டிவிஎஸ் உள்ளிட்ட 4 இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளை பாராட்டி கவுரவித்தார்.

மேலும், ஏவிஎன்எல், பாதுகாப்புத் துறையில் தன்னம்பிக்கையை உறுதி செய்வதற்காக ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின்கீழ் போர் டாங்கிகளின் 31 உதிரிபாகங்களை சுதேசிமயமாக்குவதற்காக திட்டமிட்டுள்ளது. இது,கடந்த 6 ஆண்டுகளின் இறக்குமதியைக் கருத்தில் கொண்டு ஆண்டு செலவினமான ரூ.200 கோடியை மிச்சப்படுத்தும் எனஏவிஎன்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Read in source website

சென்னை: தென்னிந்தியாவின் கலாச்சார தலைமையகமான சென்னை, இந்திய செஸ் விளையாட்டின் புனிதத் தலமாகும். இது வரலாறுகள் படைக்கப்பட்ட இடம். சர்வதேச செஸ் விளையாட்டு போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரி எனும் இடத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான தொடக்க விழா,சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் அரங்கை பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வருகை புரிந்தபோது, செஸ் ஒலிம்பியாட் சின்னமான ‘தம்பி' அணிந்துள்ள வேட்டியைப் போன்று பிரத்யேகமாகவும் தத்ரூபமாகவும் வடிவமைக்கப்பட்ட தம்பி வேட்டிகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன், முதல்வரிடம் வழங்கினார்.

‘தம்பி' என்ற பெருமிதம் மிக்க அடையாள சின்னமானது நெஞ்சு நிமிர்த்தி, கைகளை மடக்கிக் கட்டிக்கொண்டு, வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சிறந்த தேர்வான ‘தம்பி' ஏற்கெனவே பல வீடுகளில் பிரசித்தி பெற்ற பெயராகும்.

இந்த ‘தம்பி' என்ற அடையாள உருவத்துக்கு ராம்ராஜ் செய்யும் கவுரவமாக பிரீமியம் தரத்தில் இப்புதிய வேட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தோன்றிய செஸ் விளையாட்டின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் விதமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய ‘தம்பி வேட்டிகள்' வழக்கமான கலர் மற்றும் பாணியில் இல்லாமல் அற்புதமான கருப்பு வெள்ளை கட்டம் போட்ட பார்டரில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறைந்த காலமே விற்பனைக்குக் கிடைக்கும் அரிய வேட்டியாக ‘தம்பி வேட்டியை' அறிமுகம் செய்வதில் ராம்ராஜ் பெருமை கொள்கிறது.

‘‘தம்பி வேட்டியைக் கட்டிக்கோ! செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஜெயிச்சுக்கோ!!’’



Read in source website

சென்னை: மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பள்ளிகளுக்கே சென்று மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவக் குழுவினர், 805 வாகனங்களில் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

இந்தத் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. விழிப்புணர்வு வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின் பள்ளியைப் பார்வையிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தாலும், எனக்கு உடல்சோர்வு சற்று இருக்கிறது. எனினும், மாணவர்களை காணும்போது முழுநலம் பெற்றதாக உணர்கிறேன். ஏனெனில், குழந்தையின் புன்சிரிப்பு தரும் புத்துணர்ச்சியானது மருந்துகளைவிட வலிமையானது.

தற்போது பெரும்பாலான பிள்ளைகள் பல காரணங்களால் காலை உணவை சாப்பிடாமல்தான் பள்ளிக்கு வருகின்றனர். காலை உணவை மட்டும் நாம் தவிர்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதை மனதில் வைத்துதான் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

தன்னம்பிக்கை முக்கியம்

மாணவர்கள் தன்னம்பிக்கை பெற்றுவிட்டால் படிப்பு தானாகவே வந்துவிடும். அத்தகைய தன்னம்பிக்கையை ஊட்டுவதற்காகத்தான் இந்த ஆலோசனை முகாம் நடத்தப்பட உள்ளது. மனமும் உடலும் சரியாக இருந்தால் அனைத்து நலன்களும் சிறப்பாக இருக்கும். எப்போதும் சோர்வின்றி சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சோம்பேறித்தனம்தான் நம் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாகும். சுறுசுறுப்பு உணர்வுக்கு உடல்நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு உடற்பயிற்சியும், நல்ல எண்ணங்களும்தான் அவசியம். இந்த அறிவுரைகளை முதல்வராக இல்லாமல் உங்கள் பெற்றோர்களில் ஒருவனாக இருந்து முன் வைக்கிறேன்.

பள்ளிகள் பாடங்கள் நடத்துவதுடன் அறிவு, ஆற்றல், மனம், உடல் ஆகியவற்றையும் வளப்படுத்த வேண்டும். பாதி பெற்றோர்களாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். கல்வி நிலையங்கள் மதிப்பெண் மையங்களாக இல்லாமல், மதிப்புயர் கூடங்களாக மாறவேண்டும். மாணவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி பெற அதற்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, ‘‘கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் இறந்த ஒரு மாணவியால், 3 ஆயிரம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தேன். அதைதவறான கருத்தாக சித்தரித்துவிட்டனர். உனது பிள்ளைகளில் ஒருவர் இறந்தால் வருத்தப்படாமல் இருப்பாயா என்று மனம் நோகும்படி கேட்கின்றனர்.

மருத்துவக்குழு ஆலோசனை

இறந்த மாணவி மட்டுமல்ல, அங்கு படிக்கும் 3 ஆயிரம் பேரும் எனக்கு குழந்தைகள்தான். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக்கும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவக் குழு நேரில் சென்று மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கும். இனி மாணவர்களின் ஒரு உயிரைக்கூட இழக்காமல் இருப்பதுதான் முதல்வருக்கு நாங்கள் செய்யும் மரியாதையாக அமையும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலர் வெ. இறையன்பு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.



Read in source website

கூட்டுறவுத் துறை வரலாற்றில் முதல் முறையாக ரூ.10,292 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

திண்டுக்கல் அருகே காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களில் பணிபுரியும், முதல்வர்கள், பேராசிரியர்கள் ஆகியோர்களுக்கான 5 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் கூட்டுறவுத் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள கல்லூரிக்கான கட்டிடப் பணிகள் ஓராண்டில் நிறைவுபெறும். நிரந்தரக் கட்டிடம் கட்டப்பட்ட பின்னர் இந்த கல்லூரியில் 3,000 மாணவ, மாணவிகள் பயில முடியும்.

கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் கிராமத்தில் தேசிய கூட்டுறவு ஆராய்ச்சி நிறுவனம் நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டுறவுக் கல்லூரி, கூட்டுறவு பட்டயப் படிப்புகளில் சேருபவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. தனியார் வங்கிகளைவிட கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் அதிகம் வழங்கப்படுகிறது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக இளைஞர்கள், மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

கூட்டுறவு சங்கங்களில் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல, நிலம் இல்லாதவர்களும் உறுப்பினர்களாக சேரலாம்.

கூட்டுறவு சங்கங்களில் நிதிமுறைகேடு என்பது ஒரு சதவீதத்துக்கும் குறைவாகத்தான் உள்ளது. இதுவும் ஒழுங்குபடுத்தப்படும். அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு நிறுவனங்களின் நியாய விலைக் கடைகளில் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான அரசு ஆணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்துள்ளோம்.

கூட்டுறவு வங்கிகளில் ரூ.65 ஆயிரம் கோடி டெபாசிட் உள்ளது. இதை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறை வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டில் ரூ.10,292 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கியுள்ளோம். நகைக்கடன் ரூ.32,000 கோடி வழங்கியுள்ளோம்.

இதுமட்டுமின்றி சுய உதவிக் குழுக்களுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்குவதில் தேசிய அளவில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ்நாடு கூட்டுறவுத் துறை முதலிடம் பெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ராதாகிருஷ்ணன், இணைப் பதிவாளர் காந்திநாதன், பல்கலைக்கழகப் பதிவாளர் முரளீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Read in source website

புதுடெல்லி: இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க விரும்பும் நிறுவனங்கள் ஆகஸ்ட்10-ம் தேதிக்குள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோய் பல ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருந்து வருகிறது. எனினும் இப்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை 78 நாடுகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் பேர் ஐரோப்பிய நாடுகளையும் 25 சதவீதம் பேர் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஏற்கெனவே சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனாலும் இதுவரை செயல்திறன் மிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், கேரளாவில் 3 பேருக்கும் டெல்லியில் ஒருவருக்கும் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சின்னம்மை போல கொப்புளங்கள் ஏற்படும்.

இந்நிலையில், இந்நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், “குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் குணமாகும் வரை மூடிய நிலையில் இருக்கவேண்டும்.

அதுவரை அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். மேலும் பாதுகாப்பு உடையின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்கள், நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்கள் 21 நாட்களுக்கு தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க விரும்புவோர் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிவித்துள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்க விரும்பும் அனுபவம் உள்ள நிறுவனங்களுடன் அது தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இதனிடையே, குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தினால் போதும் என்றும் கரோனா தடுப்பூசி போல அனைவருக்கும் தேவையில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



Read in source website

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இருந்து அண்டை நாடான பாகிஸ்தான் திடீரென விலகி உள்ளது. அதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

மாமல்லபுரத்தில் 44-வது ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த சர்வதேச விளையாட்டு நிகழ்வு வரும் ஆகஸ்ட் 10 வரையில் நடைபெறுகிறது. மொத்தம் 186 நாடுகளில் இருந்து சுமார் 2000+ வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகி உள்ளது. மேலும், இதற்கு காரணமாக கடந்த 21-ம் தேதி காஷ்மீரில் நடைபெற்ற ஜோதி ஓட்டத்தை காரணமாக சொல்லியிருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் அணி வீரர்கள் இதில் பங்கேற்கும் நோக்கில் இந்தியாவுக்கு வந்த நிலையில், போட்டியில் இருந்து விலகுவது குறித்து அந்த நாடு அறிவித்துள்ளது.

இதனை அந்த நாட்டின் வெளியுறவு அலுவலகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. “சர்வதேச அங்கீகாரம் மிக்க இந்த விளையாட்டில் இந்தியா அரசியல் செய்கிறது. அதற்கு எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் இதில் பங்கேற்காமல் புறக்கணிக்கிறது. இந்த விவகாரத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

“செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்கும் நோக்கில் பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. இந்நிலையில், அந்த நாட்டின் புறக்கணிப்பு முடிவு ஆச்சரியம் அளிக்கிறது. இதுபோன்ற விலகல் அறிக்கையின் மூலம் பாகிஸ்தான் இதனை அரசியல் செய்துள்ளது துரதிஷ்டவசமானது” என தெரிவித்துள்ளார் வெளியுறவு விவகாரங்கள் துறையின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி.

மேலும், யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர், லடாக் போன்ற பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.



Read in source website

பெர்லின்: தொடர்ந்து நான்கு முறை ஃபார்முலா 1 ரேஸில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் செபாஸ்டியன் வெட்டல். நடப்பு 2022 சீசன் நிறைவடைந்ததும் ஃபார்முலா 1-இல் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை சமூக வலைதளங்களில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் 35 வயதான செபாஸ்டியன் வெட்டல். ஃபார்முலா 1 கார்பந்தய விளையாட்டில் பங்கேற்கும் பிரபல கார் ஓட்டிகளில் ஒருவராக அறியப்படுகிறார். 2010, 2011, 2012 மற்றும் 2013 என தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் ஃபார்முலா 1 உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் வெட்டல்.

“நான் 2022 சீசனோடு ஃபார்முலா 1 விளையாட்டில் இருந்து விடை பெறுகிறேன். இந்நேரத்தில் இந்த பயணத்தில் எனக்கு பக்க பலமாக இருந்த நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால் நான் ஓய்வு பெறுவதற்கான காரணத்தை விவரிப்பது முக்கியம் என கருதுகிறேன்.

நான் இந்த விளையாட்டை நேசிக்கிறேன். என் வாழ்வில் இரண்டற கலந்தது இந்த விளையாட்டு. எனது வாழ்க்கை டிராக்கிற்கு உள்ளே எந்த அளவுக்கு உள்ளதோ, அதே அளவிற்கு அதற்கு வெளியிலும் உள்ளது. மூன்று குழந்தைகளின் தந்தை நான். அற்புதமான பெண்ணின் கணவன். எனக்கு சாக்லேட் பிடிக்கும். இயற்கையை நேசிக்கிறேன். எனது பெஸ்ட் ரேஸ் வரும் நாட்களில் வரவுள்ளது. அதை வெல்வேன் என நான் நம்புகிறேன்” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் செபாஸ்டியன். இதுதான் அவரது முதல் இன்ஸ்டாகிராம் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு அமுல் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இதில் அமுல் பேபி செஸ் விளையாட பின்னணியில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் உள்ளது. இது பரவலாக பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் 44-வது ஒலிம்பியாட் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த சர்வதேச விளையாட்டு நிகழ்வு வரும் ஆகஸ்ட் 10 வரையில் நடைபெறுகிறது. மொத்தம் 187 நாடுகளில் இருந்து சுமார் 2000+ வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு நிகழ்விற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் இந்தியாவின் முன்னணி உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாமல்லபுரம் கடற்கரை கோயில் பின்புறத்தில் இருக்க அமுலின் டிரேட் மார்க் சின்னமாக உள்ள அமுல் பேபி, செஸ் விளையாடுகிறது.

இந்த டூடுலை அமுல் நிறுவனம் பல்வேறு சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. நெட்டிசன்கள் அதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர்.



Read in source website

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் 2022 தொடங்கியுள்ள இந்த இனிய வேளையில், இந்திய செஸ் விளையாட்டின் பிதாமகர் என போற்றப்படும் மனுவேல் ஆரோன் குறித்து பார்ப்போம். சதுரங்க விளையாட்டில் அவரது அசாத்திய சாதனைகள் படைத்த அவர், மாடர்ன் டே சர்வதேச செஸ் விளையாட்டு நடைமுறைகளை இந்தியாவில் பிரபலப்படுத்திய ஜாம்பவான் எனவும் அறியப்படுகிறார்.

இன்று இந்தியாவில் செஸ் விளையாட்டில் சர்வதேச அளவில் சாதனை படைத்த பல கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். அதில் லேட்டஸ்ட் சென்சேஷனாக இருப்பவர் பிரக்ஞானந்தா. ஆனால், இவர்கள் அனைவருக்கும் முன்னவராக இந்தியா சார்பில் சர்வதேச அளவில் சாதித்தவர்தான் மனுவேல் ஆரோன். சர்வதேச மாஸ்டர் (இன்டர்நேஷனல் மாஸ்டர்) என்ற பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.

20-ம் நூற்றாண்டில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான 64 கட்டங்களில் தனது ஆட்சியை நிறுவியவர் மனுவேல் ஆரோன். நெதர்லாந்து வீரர் மேக்ஸ் யூவே, ஹங்கேரி வீரர் லாஜோஸ் போர்டிஷ், ஜெர்மன் வீரர் வூல்ஃப்கேங் உல்மன் போன்ற பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் இவர் விளையாடிய போட்டிகள் புகழ்பெற்றதாக அறியப்படுகிறது.

செஸ் விளையாட்டு அறிமுகம்: இன்றைய மியான்மரின் (அப்போது பர்மா) காலனி ஒன்றில் வாழ்ந்து வந்த இந்திய தம்பதியர்களுக்கு மகனாக கடந்த 1935, டிசம்பர் 30 அன்று பிறந்தவர் ஆரோன். எட்டு வயதில் அவருக்கு செஸ் விளையாட்டு அறிமுகமாகி உள்ளது. இந்த விளையாட்டின் நுணுக்கங்களை தனது வீட்டில் உள்ள மூத்தவர்களிடம் இருந்து கற்றுள்ளார். பின்னர் அங்கிருந்து அவரது குடும்பம் தமிழகத்தில் குடியேறி உள்ளது. அவரது பள்ளிக்கல்வியை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பயின்றுள்ளார். அலகாபாத் கல்லூரியில் மேற்படிப்பு பயின்றுள்ளார். அங்குதான் முதன்முதலில் செஸ் டோர்னமென்டில் விளையாடி உள்ளார். ஆனால் இந்திய விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக வெவ்வேறு தொடர்களில் பங்கேற்று அசத்தியுள்ளார்.

செஸ் விளையாட்டில் ஆதிக்கம்: 1950-களின் இடைப்பகுதியில் இருந்து 1970-களின் இறுதி வரையில் செஸ் விளையாட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளார். குறிப்பாக 1957 தொடங்கி 1982 வரையில் நடைபெற்ற தமிழ்நாடு செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 11 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அதேபோல 1959 முதல் 1981 வரையில் நடைபெற்ற தேசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அதனால், தமிழகம் இந்த செஸ் விளையாட்டின் பவர் ஹவுஸாக உருவானது.

தேசிய அளவோடு நின்று விடாமல் சர்வதேச அளவிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தார் ஆரோன். குறிப்பாக மேக்ஸ் யூவே, லாஜோஸ் போர்டிஷ், வூல்ஃப்கேங் உல்மன், பாபி பிஷ்ஷர், போட்வைனிக் போன்ற சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் விளையாடி உள்ளார். இதில் மேக்ஸ் யூவேவை தவிர மற்ற அனைவரும் கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக 1962 வாக்கில் அவர் அர்ஜுனா விருதை வென்றார். செஸ் விளையாட்டில் இந்த உயரிய விருதை பெற்ற முதல் நபர். இந்திய அணியை இரண்டு செஸ் ஒலிம்பியாடில் கேப்டனாக வழி நடத்தியுள்ளார். மொத்தம் மூன்று ஒலிம்பியாடில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.

இந்திய பங்களிப்பு: செஸ் விளையாடியதோடு நின்று விடாமல் இந்தியாவில் சர்வதே செஸ் விளையாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட ஆட்டத்தை பிரபலப்படுத்தியவர். அதற்காக நிறைய முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதற்காக நிறைய செஸ் குழுக்களை சர்வதேச தரத்தில் அவர் அமைத்துள்ளார். அது தவிர தமிழ்நாடு செஸ் சங்கத்தின் செயலாளர், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவராகவும் இயங்கியுள்ளார். சதுரங்கம் குறித்த செய்திகளை வழங்கும் ‘செஸ் மேட்’ எனும் இதழை நிறுவியவர்.

செஸ் வீரர், பயிற்சியாளர் மற்றும் பத்திரிகையாளர் என மூன்று விதமான பரிமாணங்களை தான் சார்ந்த விளையாட்டில் இயங்கியவர். இந்திய செஸ் விளையாட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்த காரணமாக திகழ்ந்தவர். கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இவருடைய மாணவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது சிறப்பானது. இது சாத்தியமாகும் என நான் நினைக்கவில்லை. உலக அளவில் நடைபெறும் சூழல்கள் இது இந்தியாவில் நடக்க காரணமாக அமைந்துள்ளது” என செஸ் ஒலிம்பியாட் 2022 குறித்து தெரிவித்துள்ளார் 86 வயதான மனுவேல் ஆரோன். தன்னை துடிப்போடு இயங்க செய்வது சதுரங்கம் தான் என அவரே தெரிவித்துள்ளார்.



Read in source website

# ஒலிம்பியாட் செஸ் கிளாசிக்கல் ஸ்விஸ் விதிமுறைப்படி நடக்கும். ஒவ்வொரு அணிகளும் மொத்தம் 11 சுற்றுகள் விளையாடும்.

# ஒவ்வொரு ஆட்டத்திற்கான அணியில் மொத்தம் 5 பேர் இடம் பெறுவார்கள். இதில் ஒருவர் மாற்று வீரராக இருப்பார்.

# வெற்றிக்கு ஒரு புள்ளி, டிராவுக்கு அரை புள்ளி வழங்கப்படும். 4 வீரர்கள் விளையாடும் ஆட்டத்தின் முடிவில் யார் அதிகபுள்ளி பெற்றிருக்கிறார்களோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த அணிக்கு 2 புள்ளி வழங்கப்படும். ஆட்டம் டிராவில் முடிந்தால் இரு அணிக்கும் தலா ஒருபுள்ளி வழங்கப்படும்.

# ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் 40-வது காய் நகர்த்தலுக்குப் பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.

# 30-வது காய் நகர்த்தலுக்கு முன்பாக ஆட்டத்தை டிராவில் முடித்துக்கொள்ள முடியாது.

# தனிநபர் பதக்கத்துக்கு ஒரே வரிசை போர்டில் விளையாடும் வீரர்களின் செயல்பாடு கவனத்தில் கொள்ளப்படும். இந்த பதக்கத்தை பெறஒரு வீரர் குறைந்தது 8 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.

# 11 சுற்றுகள் முடிவில் அதிக புள்ளி சேர்க்கும் அணிக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும். ஒருவேளை இரு அணிகள் ஒரே புள்ளியில் இருந்தால் ஆட்டங்களில் அதிக வெற்றி மற்றும் தங்களிடம் வீழ்ந்த அணிகளின் வலிமை ஆகியவற்றை கணக்கில் கொண்டு சாம்பியன் அணி தீர்மானிக்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு வெள்ளிப்பதக்கமும், 3-வது இடத்தை பெறும் அணிக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்படும்.



Read in source website

புதுடெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில் மற்றும் வர்த்தகம் தொடர்பான போட்டிச் சட்ட விதிகளை மீறியதாக 241 நிறுவனங்கள் மீது ரூ.4,370 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்த அபராதத் தொகையில் ரூ.198 கோடி மட்டுமே இதுவரையில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

ஒரு நிறுவனம் வேறு நிறுவனங்களை வளரவிடாமல் ஏகாபத்தியமாக செயல்படுவதை தடுக்கும் நோக்கில் ‘போட்டிச் சட்டம் 2002’ கொண்டு வரப்பட்டது. நிறுவனங்கள் இந்தச் சட்ட விதிகளை பின்பற்றுகின்றனவா என்பதை இந்திய போட்டி ஆணையம் கண்காணிக்கிறது. இந்த அமைப்பு கடந்த 5 ஆண்டுகளில், சட்ட விதிகளை மீறியதாக 241 நிறுவனங்களுக்கு ரூ.4,370 கோடி அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

மக்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்த கூகுள் ஸ்ட்ரீட் வியூ இந்தியாவில் உள்ள 10 நகரங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்குள் 50 நகரங்களுக்கு ’ஸ்ட்ரீட் வியூ அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. 360 டிகிரி ஆங்கிள் வழியாக நகரத்தின் தெருக்களை நீங்கள் பார்க்க முடியும்.

மக்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்த கூகுள் ஸ்ட்ரீட் வியூ இந்தியாவில் உள்ள 10 நகரங்களுக்கு  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்குள் 50 நகரங்களுக்கு ’ஸ்ட்ரீட் வியூ அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. 360 டிகிரி ஆங்கிள் வழியாக நகரத்தின் தெருக்களை நீங்கள் பார்க்க முடியும். இது உலகத்தில் உள்ள 100 நாடுகளில் 2007ம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டது. தேசிய காஸ்பாட்டியல் பாலிசியின்படி முன்றாம் நபர்கள் மூலம் கூகுள் ஸ்ட்ரீட் வீயூ புகைப்படங்கள் வழங்கப்படுகிறது.  

கூகுள் ஸ்ட்ரீட் வியூ என்றால் என்ன

பிரத்யேக கேமிராக்களால் 360 டிகிரி ஆங்கிளில் நகரத்தில் உள்ள எல்லா இடங்களையும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.  இந்த புகைப்படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு 360 டிகிரி பார்வை கிடைக்கும்படி உருவாக்கப்படும். இதனால் எல்லா திசைகளிலும் புகைப்படங்களை ஸ்வைப் செய்து பார்வையாளர்கள், குறிப்பிட்ட இடங்களை கண்டுபிடிக்கலாம்.

இதுவரை ஏன் இந்தியாவில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ அறிமுகம் செய்யப்படவில்லை ?

2011ம் ஆண்டு பெங்களூர் போலிசர், கூகுள் ஸ்ட்ரீட் வியூவிற்கு எடுக்கப்படும் புகைப்படங்களை நிறுத்தினார்கள். ஆனால் இதற்கான முறையான காரணங்கள் கூறப்படவில்லை. இந்நிலையில் கூகுள் இந்த பணிகளை கைவிட்டது. இந்நிலையில் சில உள்ளூர் நிறுவனங்கள் இதுபோன்ற மேப்பை உருவாக்கியது.

தற்போது எப்படி ஸ்ட்ரீட் வியூ அறிமுகம் ஆனது ?

இந்த சிறப்பான ஆப்ஷனை வழங்க கூகுள் நிறுவனம் இந்தியாவில் உள்ள டெக் மகேந்திரா மற்றும் மும்பையில் உள்ள கேனியஸ் இன்டர்நேஷனல் நிறுவனங்களோடு இணைந்து இந்த சேவையை மக்களுக்கு வழங்கிறது. டேட்டாவை வெளி நபர்களிடத்திலிருந்து வாங்குவது கூகுள் நிறுவனத்திற்கும் இதுவே முதல் முறையாகும்.

அரசுக்கும் சொந்தமான , ராணுவத்திற்கு சொந்தமான இடங்களுக்கு கூகுள் ஸ்ட்ரீட் வியூ ஆப்ஷன் இருக்காது. இவை பாதுகாக்கப்பட்ட இடங்கள் என்பதால் இதில் இடம்பெறாது.



Read in source website

இந்த ஐந்து சதுப்பு நிலங்களின் சேர்க்கையுடன், இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது, இது தெற்காசியாவில் எந்த நாட்டிலும் இல்லாதது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் செவ்வாயன்று (ஜூலை 26) ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், ‘மேலும் ஐந்து இந்திய ஈரநிலங்கள் “சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள்” என்று ராம்சார் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன’ எனத் தெரிவித்துள்ளார்.

1971 இல் நடைமுறைக்கு வந்த ராம்சார் ஒப்பந்தம், ஈரநிலங்கள் மற்றும் அவற்றின் வளங்களின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டிற்கான தேசிய நடவடிக்கை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை வழங்கும் ஒரு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தமாகும்.

இந்த ஐந்து சதுப்பு நிலங்களின் சேர்க்கையுடன், இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது, இது தெற்காசியாவில் எந்த நாட்டிலும் இல்லாதது.

ஈரநிலங்களின் வெவ்வேறு வரையறைகள் என்ன?

சதுப்பு நிலங்கள் பற்றிய ராம்சார் ஈரநிலங்கள் “ஃபென், கரி நிலம் அல்லது நீர், இயற்கை அல்லது செயற்கை, உப்பு, கடல் நீரின் ஆழமான பகுதிகள் சதுப்பு நிலங்கள் என வரையறுக்கிறது.

அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவையானது கோவர்டின் வகைப்பாடு அமைப்பால் கொடுக்கப்பட்ட வரையறையை ஏற்றுக்கொண்டது, அங்கு ஈரநிலங்கள் “நிலப்பரப்பு மற்றும் நீர்வாழ் அமைப்புகளுக்கு இடையில் மாறக்கூடிய நிலங்கள் ஆகும்,

அங்கு நீர் அட்டவணை பொதுவாக மேற்பரப்பில் அல்லது அருகில் இருக்கும் அல்லது நிலம் ஆழமற்ற நீரால் மூடப்பட்டிருக்கும். இந்த வகைப்பாட்டின் நோக்கங்களுக்காக, சதுப்பு நிலங்கள் பின்வரும் மூன்று பண்புகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைக் கொண்டிருக்க வேண்டும். அவை,

(1) குறைந்தபட்சம் நிலம் ஹைட்ரோஃபைட்டுகளை ஆதரிக்கிறது

(2) அடி மூலக்கூறு முக்கியமாக வடிகால் இல்லாத ஹைட்ரிக் மண்

(3) அடி மூலக்கூறு மண்ணற்றது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் வளரும் பருவத்தில் சில நேரங்களில் தண்ணீரால் நிறைவுற்றது அல்லது ஆழமற்ற நீரால் மூடப்பட்டிருக்கும்.

இருப்பினும், இந்திய அரசாங்கத்தின் சதுப்பு நிலத்தின் வரையறையானது, நதி கால்வாய்கள், நெல் வயல்கள் மற்றும் வணிக நடவடிக்கைகள் நடைபெறும் பிற பகுதிகளை விலக்குகிறது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017, சதுப்பு நிலங்கள், ஃபென், பீட்லேண்ட் அல்லது நீர் பகுதி என வரையறுக்கிறது.

ஆனால் ஆற்று வாய்க்கால், நெல் வயல்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்நிலைகள்/தொட்டிகள் குறிப்பாக குடிநீர் தேவைகளுக்காக கட்டப்பட்டவை மற்றும் மீன்வளர்ப்பு, உப்பு உற்பத்தி, பொழுதுபோக்கு மற்றும் நீர்ப்பாசன நோக்கங்களுக்காக கட்டப்பட்ட கட்டமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்காது.

இந்தியாவில் ஈரநிலங்கள்

உலகளவில், ஈரநிலங்கள் உலகின் புவியியல் பரப்பளவில் 6.4 சதவீதத்தை உள்ளடக்கியது. இந்தியாவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) தொகுக்கப்பட்ட தேசிய ஈரநில சரக்கு மற்றும் மதிப்பீட்டின்படி, ஈரநிலங்கள் 1,52,600 சதுர கிலோமீட்டர் (சது கிமீ) பரப்பளவில் உள்ளன.

இது நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் 4.63 சதவீதமாகும். 1,52,600 சதுர கிமீ பரப்பளவில், உள்நாட்டு-இயற்கை ஈரநிலங்கள் 43.4% மற்றும் கடலோர-இயற்கை ஈரநிலங்கள் 24.3% ஆகும். ஆறுகள் / ஓடைகள் 52,600 சதுர கி.மீ., நீர்த்தேக்கங்கள் / தடுப்பணைகள் 24,800 சதுர கி.மீ., அலைகளுக்கு இடையிலான சேற்றுப் பகுதிகள் 24,100 சதுர கி.மீ., தொட்டிகள் / குளங்கள் 13,100 சதுர கி.மீ மற்றும் ஏரி / குளங்கள் 7300 சதுர கி.மீ ஆக உள்ளள.

இந்தியாவில் 19 வகையான சதுப்பு நிலங்கள் உள்ளன. மாநில வாரியான ஈரநிலங்களில், குஜராத் 34,700 சதுர கிமீ (மாநிலத்தின் மொத்த புவியியல் பகுதியில் 17.56%) அல்லது நாட்டின் மொத்த ஈரநிலப் பகுதிகளில் 22.7% நீளமான கடற்கரை முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் (14,500 சதுர கிமீ), உத்தரப் பிரதேசம் (12,400 சதுர கிமீ) மற்றும் மேற்கு வங்கம் (11,100 சதுர கிமீ) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்தியாவில் உள்ள ராம்சர் தளங்கள்

கரிகிலி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரணை மார்ஷ் ரிசர்வ் வனம் மற்றும் தமிழ்நாட்டின் பிச்சாவரம் சதுப்புநிலம், மத்தியப் பிரதேசத்தின் சாக்ய சாகர் மற்றும் மிசோரமில் உள்ள பாலா சதுப்பு நிலம் ஆகிய ஐந்து புதிய ஈரநிலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் 54 நியமிக்கப்பட்ட ஈரநிலங்கள் தெற்காசியாவிலேயே ராம்சார் தளங்களின் மிகப்பெரிய வலையமைப்பாகும். 54 இடங்களில், உ.பி.யில் 10, பஞ்சாபில் 6, குஜராத், தமிழ்நாடு மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா 4, இமாச்சலப் பிரதேசம் மற்றும் கேரளாவில் தலா 3, ஹரியானா, மகாராஷ்டிரா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் தலா 2 இடங்கள் உள்ளன.

ஆந்திரப் பிரதேசம், அசாம் , பீகார், லடாக், மணிப்பூர், திரிபுரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒன்று உள்ளன.

உலகளாவிய தலைவர்கள்

ராம்சார் பட்டியலின்படி, பிரிட்டனில் (175), மெக்சிகோ (142) ஆகியவை ராம்சார் தளங்களைக் கொண்ட நாடுகள் ஆகும். அதேபோல். பொலிவியா நாட்டின் பாதுகாப்பின் கீழ் 148,000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. கனடா, சாட், காங்கோ மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு ஆகியவை ஒவ்வொன்றும் 100,000 சதுர கி.மீ.-ஐ கொண்டுள்ளது.

மத்திய ஆசிய விமானப் பாதையில் (CAF) இந்தியாவின் முக்கியத்துவம்

மத்திய ஆசியா மற்றும் சைபீரியாவின் டஜன் கணக்கான பறவை இனங்கள், இந்தியா மற்றும் பூமத்திய ரேகைப் பகுதிகள் உட்பட வெப்பமான வெப்பமண்டல பகுதிகளுக்கு தங்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் கடுமையான குளிர்காலத்தில் இருந்து தப்பிக்க இடம்பெயர்கின்றன.

வனவிலங்குகளின் புலம்பெயர்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு மாநாட்டின் படி (CMS), CAF, 30 நாடுகளை உள்ளடக்கியது, 182 புலம்பெயர்ந்த நீர்ப்பறவை இனங்களின் குறைந்தபட்சம் 279 எண்ணிக்கையை உள்ளடக்கியது.

இதில் 29 உலகளவில் அச்சுறுத்தப்பட்ட இனங்களும் அடங்கும், இந்தியாவில் உள்ள சதுப்பு நிலங்கள் குளிர்காலத்தில் இந்த புலம்பெயர்ந்த பறவைகளுக்கு உணவு மற்றும் ஓய்வு இடங்களாக செயல்படுகின்றன.

ராம்சார் செயலகம் ஈரநிலத்தை உலக முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக நியமிப்பதால், உலக அமைப்பு கூடுதல் நிதியுதவி பெறாது என முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும் (வனவிலங்கு) குஜராத்தின் வனவிலங்கு காப்பாளருமான ஷியாமல் திகாதர் கூறுகிறார்.

“ஆனால் நிர்வாகக் கண்ணோட்டத்தில், இது ஒரு அங்கீகாரம் போன்றது. இது ஒரு ஐஎஸ்ஓ சான்றிதழ் போன்றது. அவர்களின் தரநிலைகளை நீங்கள் தொடர்ந்து சந்திக்கவில்லை என்றால் அவர்கள் நம்மை பட்டியலிலிருந்து நீக்கிவிடலாம். மேலும், ராம்சார் குறிச்சொல் மறைமுகமாக கூட உதவுகிறது என்று குஜராத்தின் பறவைகள் பாதுகாப்பு சங்கத்தின் இணைச் செயலாளரான ஓய்வுபெற்ற IFS அதிகாரி உதய் வோரா கூறுகிறார்.

தொடர்ந்து “ஒவ்வொரு ராம்சார் தளமும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் கீழ் அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதி அல்ல, எனவே முறையான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அங்கு நடைமுறையில் இருக்காது. ஆனால் ஒரு ராம்சார், அங்குள்ள பாதுகாப்பை வலுப்படுத்துவதை கடமையாக்குகிறது. சதுப்பு நிலங்களில் ஆக்கிரமிப்பு போன்றவற்றிற்கு எதிராக பாதுகாப்பை உருவாக்குகிறது,” என்று அவர் கூறுகிறார்.



Read in source website

கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலையும், ரஷிய - உக்ரைன் போரையும் தொடர்ந்து உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கடுமையான பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது என்னவோ நிஜம். விலைவாசி உயர்வும், பணவீக்கமும் இந்தியப் பொருளாதாரத்தை கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டு சில நம்பிக்கைகளைத் தராமல் இல்லை. வளர்ச்சியிலும், பணவீக்கத்திலும் முதல் இரண்டு மாதங்களைவிட ஜூன் மாதம் ஓரளவு நன்றாகவே இருந்திருக்கிறது. அமெரிக்காவின் மத்திய வங்கி உருவாக்கிய நிதிக் கட்டுப்பாடு, சர்வதேச பொருளாதார நிலையின்மையை ஏற்படுத்தி இருக்கும் சூழலிலும், ஜூன் மாத செயல்பாடு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. அதே நேரத்தில், இதை அடுத்து வரும் மாதங்களின் செயல்பாட்டின் தொடக்கம் என்று கருதிவிடவும் முடியாது.
உலகின் பெரும்பாலான பொருளாதாரங்களில் கடந்த பல பத்தாண்டுகளாகவே பணவீக்கம் அதிகரித்து வந்திருக்கிறது. அது சமீப காலமாக ஓரளவுக்கு நிலையாக இருப்பது நம்பிக்கை தருகிறது. உதிரி பாகங்கள், கச்சாப் பொருள்கள் ஆகியவற்றின் சர்வதேச விநியோக சங்கிலி பிரச்னைகள் சற்று குறைந்திருக்கின்றன. ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் சில இடைக்கால ஒப்பந்தங்கள் சர்வதேச சந்தையில் உணவுப் பொருள்களின் விலையை குறைக்கக் கூடும். இவையெல்லாம் இந்திய பொருளாதாரத்துக்கு சாதகமாக மாறும் என்று எதிர்பார்க்கலாம்.
ஜூன் முதல் வாரத்திலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் உலோகங்களின் சர்வதேச சந்தை விலை குறையத் தொடங்கியிருக்கிறது. எரிசக்தி பொருள்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் மீதான வரிகள் முறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவற்றின் விலை உயர்வு ஓரளவுக்கு கட்டுப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
அந்நிய நிகழ்வுகளின் தாக்கங்களை இந்திய பொருளாதாரம் வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்பதை சமீபத்திய மேலேழுந்தவாரியான குறியீடுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தனியார் துறை அறிவித்திருக்கும் பல புதிய முதலீட்டுத் திட்டங்கள் அதற்கான அடையாளம். ஜூன் மாதம் மட்டும் இந்திய தனியார் துறையின் செயல்பாடு 17.7% அதிகரித்திருப்பதும், கடந்த நிதியாண்டில் 46.7% அதிகரித்து ரூ.3.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்திருப்பதும் வளர்ச்சியின் அறிகுறிகள் என்று நிதியமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது.
நடப்பு நிதியாண்டின் (2022 - 23) முதல் காலாண்டில், இந்திய தனியார் துறையின் முதலீட்டுத் திட்டங்கள் மட்டுமே 85% அளவில் காணப்படுகிறது. கடந்த நான்கு நிதி காலாண்டுகளின் சராசரி 63% எனும்போது, 85% அளவிலான தனியார் துறை முதலீடுகள் நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன.
மோட்டார் வாகன விற்பனை, கொள்ளை நோய்த்தொற்று காலத்துக்கு முந்தைய நிலையை எட்டியிருக்கிறது. ஊரகப்புறங்களில் டிராக்டர், இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்திருப்பது கிராமப்புற பொருளாதாரம் புத்துயிர் பெற்றிருப்பதை வெளிப்படுத்துகிறது. தென்மேற்கு பருவமழைக் காலம் ஓரளவு சாதகமாக இருப்பதால் ஊரகப்புற பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.
அரசின் முதலீட்டுச் செலவுகள் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதாக இருக்கக்கூடும். 2022 ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களுக்கான அரசின் முதலீடுகள் 70% அதிகரித்திருக்கிறது. மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ. 1 லட்சம் கோடி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருப்பதும், மூலதனத் திட்டங்களுக்கான செலவாக இருக்கும்.
மத்திய நிதியமைச்சகத்தால் நிதிப்பற்றாக்குறை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் கடந்த ஆண்டைவிட 36% அதிகம் என்பது நிதியமைச்சகத்துக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடும். இந்த அதிகரித்த ஜி.எஸ்.டி. வருவாய், பணவீக்கத்தாலும் விலைவாசி உயர்வாலும் ஏற்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும்கூட, கவலையளிப்பதாக இருப்பது நடப்புக் கணக்கு பற்றாக்குறை. அதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் வெற்றியடையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த நிதியாண்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஜி.டி.பி.யில் 1.2%. ரூபாய் மதிப்பு குறைவு, சர்வதேச பொருள்களின் அதிகரித்த விலைகள், அதிகரித்த இறக்குமதி செலவு உள்ளிட்ட காரணங்களால், நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைப்பது எளிதாக இருக்காது என்பதை நிதியமைச்சகமே ஏற்றுக்கொள்கிறது.
சர்வதேச பொருளாதார மந்த நிலைக்கு நடுவில், கச்சா எண்ணெய், உணவுப் பொருள்கள், சமையல் எண்ணெய், இரும்பு உள்ளிட்டவற்றின் விலைகள் சற்று குறைந்தால் மட்டுமே, இந்தியாவிலும் பணவீக்கத்தால் ஏற்படும் அழுத்தங்கள் குறையும். அதற்கான வாய்ப்புகள் காணப்படாத நிலையில், மத்திய அரசு சாதுரியமாக செயல்பட்டு விலைவாசி மேலும் உயராமலும், அதே நேரத்தில் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்வதுதான் இன்றைய சூழலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை.
உடனடியாக பொருள்களின் விலையைக் குறைப்பதோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை மீட்டெடுப்பதோ சாத்தியமல்ல. நிதிப்பற்றாக்குறையும், நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதேகூட மிகப் பெரிய வெற்றி.







 



Read in source website

 இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது தமிழர்கள் பெருமை கொள்ளத்தக்க நிகழ்வு. சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 10 வரை பதினான்கு நாட்கள் நடைபெற இருக்கிறது 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி.
 பொதுவாக விளையாட்டு என்பது உடலுக்கும் மனதுக்குமான பயிற்சி. ஆனால், செஸ் எனப்படும் சதுரங்க விளையாட்டு அறிவின் கூர்மைக்கான பயிற்சி ஆகும். இது கி.பி. 600-இல் "சதுரங்' என்ற பெயரில் இந்தியாவில் விளையாடப்பட்ட விளையாட்டு. 16-ஆம் நூற்றாண்டு வரை இந்த விளையாட்டு ஒரே மாதிரிதான் இருந்தது. அதிக மாற்றங்கள் இல்லை.
 பின்னர், சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தப்படும் காய்கள் தொடங்கி மணிக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது வரை பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டில்தான் சதுரங்க விளையாட்டில் பல விஷயங்கள் முறைப்படுத்தப்பட்டன.
 அதுவரை ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செஸ் போர்டையும் காய்களையும் வைத்து விளையாடி வந்தனர். இன்று நாம் செஸ் விளையாட்டில் பயன்படுத்தும் காய்களுக்கு ஒரு வடிவமைப்பு இருக்கிறது. ராஜா என்றால் உச்சியில் சிலுவை போன்ற ஒரு குறியீடு இருக்கும். ராணி என்றால் உச்சியில் மகுடம் தரித்தது போல் இருக்கும். இந்த தோற்றங்கள் ஜெக்ஸ் ஆஃப் லண்டன் என்ற பொம்மை தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த நத்தேனியல் குக் என்பவரால் 1849-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டன.
 புதிய வடிவிலான காய்களை ஹாவர்டு ஸ்டான்டன் என்கிற அந்தக்காலத்து செஸ் வீரர் அங்கீகரித்தார். ஹாவர்ட் பயன்படுத்திய காய்கள் உள்ளூர் போட்டி தொடங்கி உலகப் போட்டி வரை பயன்படுத்தப்பட்டன. பின்னர் அந்தக் காய்களுக்கு ஸ்டான்டன் பேட்டர்ன் என்றே பெயர் வைத்து விட்டனர். இன்றுவரை உலக அளவில் நடக்கும் எல்லா முக்கியப் போட்டிகளிலும் ஸ்டான்டன் பேட்டர்ன் காய்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 அதே போல ராஜா காய் 9.5 செ.மீ உயரமும், ராணி காய் 8.5 செ.மீ உயரமும், அமைச்சர் 7 செ.மீ, குதிரை 6 செ.மீ, யானை 5.5 செ.மீ, சிப்பாய் 5 செ.மீ உயரமும் இருக்க வேண்டும்; உயரத்தில் 40 முதல் 50% அளவிற்குத்தான் விட்டம் இருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் எல்லாம் கொண்டு வரப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டில்தான் செஸ் போட்டியில் அதற்கான கடிகாரம் வைத்து விளையாடத் தொடங்கினர்.
 அதற்கு முன் ஆட்டத்தின் தீவிரத்தைப் பொறுத்து 14மணி நேரம் வரை கூட விளையாடப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் செஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 1800-களில் இருதரப்பிலும் செக் மேட் வைப்பதை முக்கிய இலக்காகக் கொண்டுதான் ஆடினர். தங்கள் தரப்பில் உள்ள காய்களைப் பொறுமையாக நகர்த்தும் கோட்பாடெல்லாம் அப்போது அதிகம் கடைப்பிடிக்கப்படவில்லை. அக்காலகட்டத்தில்தான் பால் மர்ஃபி என்கிற வீரர் உலக சதுரங்க களத்திற்கு வந்தார். அவர், நிதானத்தோடும் அழகியலோடும் தாக்குதல் நடத்தும் முறையை அறிமுகப்படுத்தினார்.
 அவர், ஐரோப்பிய கண்ட முன்னணி செஸ் வீரர்கள் பலரோடு மோதி வெற்றிவாகை சூடினார். அவர்களில் அடால்ப் ஆன்டர்சன், லூயிஸ் பால்சன், டேனியல் ஹார்விட்ஸ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
 1858-ஆம் ஆண்டு கால், கவுன்ட்இசார்ட் ஆகியோரோடு பால் மர்ஃபி ஆடிய விளையாட்டு இன்றுவரை சதுரங்க விளையாட்டின் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்த ஆட்டத்தில் பால் மர்ஃபி சடசடவென எல்லாக் காய்களையும் வீழ்த்தி ஆட்டத்தின் 16-வது நகர்வில் எதிர்த்தரப்புக்கு செக் வைத்து ஆட்டத்தை முடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
 வில்ஹெம் ஸ்டெய்னிட்ஸ் என்கிற அமெரிக்க ஆஸ்திரியர்தான் உலகின் முதல் அதிகாரபூர்வ செஸ் சாம்பியன். 1886-ஆம் ஆண்டு முதல் 1894-ஆம் ஆண்டு வரை இவரை எவராலும் வீழ்த்த முடியவில்லை. அதிரடி ஆட்டத்தையெல்லாம் விலக்கி வைத்துவிட்டு, திட்டமிட்டு ஆடும் முறையை இவர் பிரபலப்படுத்தினார். கேம்பிட்பான் முறையை இவர் ஏற்று அதன்படி விளையாடி மெல்ல மெல்ல காய்களை வெட்டிச் சாய்த்து வெற்றியை உறுதி செய்ததை இவரின் அசாத்திய திறமை என்றே சொல்லாம். செஸ் விளையாட்டில் பொசிஷன் எடுத்து விளையாடுவதை பிரபலப்படுத்தியவரும் இவர்தான்.
 இவரை வெல்ல எவரும் இல்லை என்று செஸ் ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் போது, ஜெர்மனில் இருந்து இமானுவல்லஸ்கர் என்கிற சதுரங்கப் புயல் செஸ் விளையாட்டு உலகில் மையம் கொண்டது. அன்றைய மிகச்சிறந்த செஸ் வீரரான வில்ஹெம்மை வீழ்த்தினார் இமானுவல்லஸ்கர். உலக செஸ் வரலாற்றிலேயே அதிக காலம் (27ஆண்டுகள்) உலக சாம்பியனாக திகழ்ந்தவர் இவரே. இவரும் வில்ஹெம்மைப் போல பொசிஷன் எடுத்து விளையாடுவதில் நிபுணத்துவம் பெற்றவர்.
 1921-ஆம் ஆண்டு இமானுவலை வீழ்த்திய ஜோஸரால் காபாபிளாங்கா, உலகின் 3-ஆவது செஸ் சாம்பியன் ஆவார். ஒவ்வொரு நகர்வையும் திட்டமிட்டு, கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி ஆட்டத்தின் இறுதியில் எதிரியை வெல்வது இவரது தனித்துவ முறையாகும். இன்றுவரை இவரது எண்ட் கேம் டெக்னிக்கை எந்த செஸ் சாம்பியனாலும் குறைசொல்ல முடியவில்லை. அந்த அளவிற்கு சிறப்பான உத்தி அது. இப்படி சிறப்பாக விளையாடி உலகையே வியக்க வைத்த சதுரங்க நாயகனான இவர் அதிக காலம் செஸ் உலகில் நீடிக்கவில்லை. ஆறே ஆண்டுகளில் ஆட்டங்களிலிருந்து விலகினார்.
 1920-களில் சதுரங்க விளையாட்டில் ஹைபர்மாடர்னிசம் தலைதூக்கியது. களத்தின் மையத்தில் உள்ள சதுரங்களை வெறுமனே காய்களைக் கொண்டு பிடித்து இழுப்பதற்கு மாற்றாக சதுரங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் முறை தொடங்கியது. அப்போது, ஆரோன் நிம்சோவிச், எஃபிம் பொகொல்யுபோவ், ரிச்சர்ட் ரெடி, எர்ன்ஸ்ட் க்ரன்ஃபெல்ட் என பல திறமையான ஆட்ட வீரர்கள் களத்தில் நுழைந்தனர்.
 இக்காலகட்டத்தில்தான் தொடக்க நிலை காய்களை நகர்த்தும் முறைகள் மேம்படுத்தப்பட்டன. இந்தியன் டிஃபென்ஸ், திக்ரன்ஃபெல்ட் டிஃபென்ஸ், தி பெனானி டிஃபென்ஸ் ஆகிய டெக்னிக்குகள் பரவலாகத் தொடங்கின.
 உலகின் நான்காவது செஸ் சாம்பியனான அலெக்ஸாண்டர்அல்கெயின் விளையாடிய அல்கெயின் டிஃபென்ஸ் உலகப் புகழ் பெற்றது. அதுவரை உலக சாம்பியன்கள் ஒரே வகையான ஆட்ட முறையையே கடைப்பிடித்தார்கள். ஆனால், இவர் மட்டும்தான் முற்றிலும் புதிய பாணியில் விளையாடினார். எதிர்த்தரப்பின் ஆட்ட முறையைப் பொறுத்து, அதிரடியாகவோ, பதுங்கிப் பாய்ந்தோ, நிதானமாகத் திட்டமிட்டோ ஆடுவது என்பதே இவரது ஆட்ட முறையாகும். இவர், 1927 முதல் 1946 வரை உலக சாம்பியனாக வலம் வந்தவர். தனது இறுதிக்காலம் வரை செஸ் சாம்பியனாக இருந்தவர் அலெக்ஸாண்டர்அல்கெய்ன் ஒருவர்தான்.
 1948-ஆம் ஆண்டில் இருந்து உலக செஸ் சம்மேளனத்தின் மேற்பார்வையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. அதில் ரஷியாவின் மிகெல்பொட்வின்னிக் வென்று செஸ் உலக ராஜாவானார். எதிரணிக்குத் தகுந்தாற்போல் தனது காய்களை நகர்த்துவது மிகெல்பொட்வின்னிக்கின் முக்கிய உத்தியாகக் கருதப்பட்டது. 1927-இல் இருந்து 2006 வரை ரஷிய நாட்டினர்தான் உலக சதுரங்கத்தை தீர்மானிக்கக் கூடிய வல்லமை படைத்தவர்களாகத் திகழ்ந்தார்கள்.
 இந்தியாவைச் சேர்ந்த, குறிப்பாக நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன்ஆனந்த் 2000 ஆண்டு வாக்கில் உலக செஸ் சாம்பியனானார். அதுபோன்றே, பிரக்ஞானந்தா என்ற இளைஞர் இந்தியாவுக்காக களத்தில் நிற்கிறார். அவரை ஒரு புதிய மாற்றத்திற்கான அடையாளமாகவே நாம் பார்க்கலாம். ரஷிய தலைநகரான மாஸ்கோவில் நடைபெற இருந்த 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, ரஷியா - உக்ரைன் போர் காரணமாக சென்னைக்கு வந்திருக்கிறது.
 கடந்த ஆட்சியில் நான் இளைஞர்நலன், விளையாட்டுத்துறை அமைச்சராகப் பணியாற்றியபோது, விளையாட்டுக்காக கூடுதல் நிதி ஒதுக்கி பல்வேறு ஆக்கபூர்வ பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அக்காலகட்டத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தபோது அதனைப் பாராட்டாதவர்களே இல்லை எனலாம். அந்தவகையில் இன்று 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவதை விளையாட்டுத்துறையின் முன்னேற்றமாகவே நாம் பார்க்கலாம்.
 செஸ் என்பது தனிநபர் விளையாட்டு. அதனை ஒரு அணியாக விளையாடினால் எப்படி இருக்கும் என்று தோன்றலாம். அதற்குப் பெயர்தான் செஸ் ஒலிம்பியாட். இதில் ஒவ்வோர் அணியிலும் நான்கு வீரர்கள் இடம் பெற்றிருப்பார்கள். இந்த நான்கு பேரும் நான்கு வெவ்வேறு செஸ் போர்டில் ஒரே நேரத்தில் விளையாடுவார்கள்.
 வழக்கமான செஸ் போட்டி போன்று இது கிடையாது. இப்போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் காய்களை நகர்த்தி ஆட்டத்தை முடிக்க வேண்டும். வெற்றி பெற்றால் இரண்டு புள்ளிகள், தோல்வி அடைந்தால் புள்ளிகள் ஏதுமில்லை. போட்டி சமனில் முடிந்தால் புள்ளிகள் வழங்கப்படாது. ரவுண்ட்ராபின் முறைப்படி போட்டிகள் நடைபெறும்.
 விளையாட்டுப் போட்டி என்றாலே ஆற்றல், திறமை, விறுவிறுப்பு என நிறைய அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால், செஸ் எனப்படும் இந்த சதுரங்க விளையாட்டு, விளையாடுகிறவர்கள் நிதானத்தோடும், பார்ப்பவர்கள் பதற்றத்தோடும் பங்கேற்கும் ஓர் அற்புதமான விளையாட்டு ஆகும்.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் அமைச்சர்.
 



Read in source website

 நம் நாட்டில் கல்லூரி படிப்பிற்குச் செல்லும் 18 முதல் 24 வயது வரையிலானவர்களில் 100 பேரில் 12 பேர் மட்டுமே கல்லூரிக்குச் சென்று படிக்கும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். இது தேசிய அளவில் 1.4 கோடி ஆகும். இதனை வளர்ந்த நாடுகளுக்கு இணையாகக் கொண்டு வர ஏராளமான பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தேவைப்படும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கணக்கிட்டுள்ளது.
 கடந்த சில ஆண்டுகளில் கல்லூரி செல்லும் மாணவியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் மாணவியர் எண்ணிக்கை அதிகமாகவும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், அதாவது ஒற்றை இலக்கத்திலும் உள்ளது.
 குறிப்பாக தமிழ், வணிகவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அண்மையில் வெளியான புள்ளிவிவரங்கள் இதை தெரிவிக்கின்றன.
 நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து மாணவ, மாணவியர் சேர்க்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களைப் பெற்று மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி நடந்த ஆய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 40 ஆயிரம் கல்லூரிகள், 10 ஆயிரம் தனிப்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.
 இந்த ஆய்வின் மூலம் கிடைத்த புள்ளிவிவரங்களின்படி 2015 - 2016 முதல் 2019- 2020 வரையான ஐந்தாண்டுகளில் உயர்கல்வியில் மாணவ, மாணவியர் சேர்க்கை 11.4 % வளர்ச்சி அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதே காலகட்டத்தில் உயர்கல்வியில் சேர்க்கை பெற்ற மாணவியர் எண்ணிக்கை 18.2 % அதிகரித்துள்ளது.
 ஒட்டுமொத்த உயர்கல்வியில் பாலின சமநிலை என்பது கடந்த 2018 - 2019-ஆம் ஆண்டில் 1 என்ற விகிதத்தில் இருந்தது 2019 - 2020-ஆம் ஆண்டில் 1.01 என்ற அளவில் மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
 உயர்கல்வியில் மாணவ, மாணவியர் சேர்க்கை தொடர்பான இவ்வாய்வில் ராஜஸ்தானில் 3 மகளிர் பல்கலைக்கழகங்கள், தமிழகத்தில் 2 மகளிர் பல்கலைக்கழகங்கள், 11 மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பல்கலைக்கழகம் என 16 மகளிர் பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன.
 ஆய்வு முடிவில், உயர்கல்வி பயிலும் மாணவியர் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதல் இடத்திலும், மகாராஷ்டிரம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. மூன்றாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கையில் மாணவர்கள் எண்ணிக்கை 50.5 % ஆகவும், மாணவியர் எண்ணிக்கை 49.5 % ஆகவும் உள்ளது.
 இளநிலை படிப்புகளைப் பொறுத்தவரை, கலை, அறிவியல் பாடங்களில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மருத்துவம் தொடர்பான படிப்பில், செவிலியர் பாடப்பிரிவில் மாணவியர் எண்ணிக்கை மாணவர்களைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக உள்ளது. பொறியியல் படிப்பில் மற்ற பிரிவுகளைக் காட்டிலும் கட்டடக்கலை (பி.ஆர்க்.) பாடப்பிரிவில் மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
 முதுநிலை படிப்புகளைப் பொறுத்தவரை, கலை, அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளில் மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே வேளையில், வணிக நிர்வாகம் (எம்.பி.ஏ.) கணினி பயன்பாடு (எம்.சி.ஏ., முனைவர் பட்ட ஆய்வு (பிஎச்.டி.) ஆகியவற்றில் மாணவியர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மருத்துவம், அது சார்ந்த இதர படிப்புகளில் மாணவியர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் அதே வேளையில் சட்டப்படிப்புகளில் மாணவியர் சேர்க்கை குறைவாக உள்ளது.
 அண்மைக்காலமாக இளநிலை பயிலும் மாணவியர் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளையில் முதுநிலையில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகள், முனைவர் பட்ட ஆய்வு ஆகியவற்றில் மாணவியர் எண்ணிக்கை குறைவான அளவிலேயே உள்ளது. அரசு கல்லூரிகளில் அதிகமானோர் விண்ணப்பிகும் இளநிலை பாடப்பிரிவு இரு சுழற்சியாக நடைபெறுகிறது. ஆனால், முதுநிலை பாடப்பிரிவில் இம்முறை பின்பற்றப்படுவதில்லை.
 இதனால் இளநிலை பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெறும் அனைவரும் முதுநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்கும்போது அனைவருக்கும் சேர்க்கை கிடைப்பதில்லை. இவ்வாறு சேர்க்கை கிடைக்காத நிலையில், சிலர் தனியார் கல்லூரிகளில் முதுநிலை சேர்க்கை பெறுகின்றனர். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளோர் தொடர்ந்து பயில்வதற்கு இயலாமற் போய்விடுகிறது.
 தனியார் கல்லூரிகளில் வணிகவியல் (பி.காம்.), வணிக நிர்வாகம் (பி.பி.ஏ) போன்ற பாடப்பிரிவுகளுக்கு அதிகமானோர் விண்ணப்பித்தால் கூடுதல் பிரிவுகள் தொடங்கப்படுகின்றன. ஆனால், அரசுக் கல்லூரிகளில் போதுமான கட்டட வசதிகள் இல்லாதது, பற்றாக்குறையான பேராசிரியர்கள் ஆகியவற்றால் குறைவான அளவிலேயே சேர்க்கை நடைபெறுகிறது.
 கடந்த சில ஆண்டுகளைப் போன்றே நடப்பு கல்வியாண்டிலும் தமிழ், வணிகவியல், வணிக நிர்வாகம், கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் அதிகமானோர் சேர்க்கை பெற்றுள்ளனர். பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களே அரசுக் கல்லூரிகளைத் தேர்வு செய்கின்றனர். எனவே, இத்தகைய குறைபாடுகளை களைந்து அதிகமானோர் சேர்க்கை பெற வழிவகை செய்யப்பட வேண்டும்.
 மாணவியர் பட்டப்படிப்பு பயில்வதே குறைவாக இருந்த நிலையில், சமீப காலமாக அதிக மாணவியர் உயர்கல்வியில் சேர்க்கை பெறுகின்றனர் என்பது மகிழ்ச்சியான ஒன்றாகும். இதில், மாணவியர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யவும், அவர்களைத் தக்க வைக்கவும், அதனைத் தொடர்ந்து ஆராய்ச்சி படிப்புகளில் மாணவியர் சேர்க்கையை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
 



Read in source website

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பள்ளி மாணவர்களின் தற்கொலைகள் குறித்து வெளிவரும் செய்திகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகின்றன.

வாழ்வின் எந்தவொரு துயரத்துக்கும் தற்கொலை ஒருபோதும் தீர்வாகவே முடியாது என்பதை அந்தப் பிஞ்சு உள்ளங்களுக்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டியது சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு. அரசியல் கட்சிகள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம், குழந்தைகள் என அனைவருக்கும் இந்தப் பொறுப்பில் பங்கிருக்கிறது.



Read in source website

காணும் இடமெல்லாம் கறுப்பு வெள்ளைக் கட்டங்களாக சென்னையே களைகட்டியுள்ளது. தமிழ் மண்ணுக்கே உரிய மரியாதையுடன் வேட்டி கட்டிய கம்பீரத் ‘தம்பி’கள் கைகூப்பி வருவோரை வரவேற்றுக்கொண்டிருக்கின்றனர்.

விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற மண்ணுக்கு ஏற்ப ‘வருக... வருக...தமிழ்நாட்டிற்கு வருக’ என ஏ.ஆர்.ரஹ்மானின் வருடும் இசை, உலகெங்கிலும் உள்ள செஸ் வீரர், வீராங்கனைகளை வரவேற்றுக்கொண்டிருக்கிறது.



Read in source website

இந்திய செஸ் விளையாட்டின் உலக முகமான விஸ்வநாதன் ஆனந்த், இளம் வீரர், வீராங்கனைகளுக்கு உத்வேகம் அளிப்பவராகத் திகழ்பவர். அவருடைய சில மைல்கல் சாதனைகள்:

1983 - இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை முதன்முறையாக வென்ற அதே ஆண்டில், 14 வயதில் தேசிய சப்-ஜூனியர் கோப்பையைக் கைப்பற்றினார்.

1984 - கோவையில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் செஸ் போட்டியில் கோப்பையை வென்றார். இதன்மூலம் சர்வதேச அளவிலான செஸ் கோப்பையை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

1985 - ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் போட்டியில் வென்றார். அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

1986 - தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை அடுத்தடுத்த ஆண்டுகளில் வென்றார்.

1987 - உலக ஜூனியர் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்னும் புகழைப் பெற்றார்.

1988 - இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.பத்ம விருது வழங்கப்பட்டது.

1991 - ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

2000 - உலகமே Y2K பிரச்சினையில் மூழ்கிக் கிடந்தபோது, அலெக்ஸி ஷிரோவை (ஸ்பெயின்) வீழ்த்திய ஆனந்த் முதன்முறையாக FIDE உலக செஸ் சாம்பியன் ஆனார்.

2001 - பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

2007 - மெக்ஸிகோவில் நடைபெற்ற FIDE உலக செஸ் போட்டியில் தன்னுடைய தன்னிகரற்ற திறமையால் மொத்தமுள்ள 14 புள்ளிகளில் 9 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்து உலக சாம்பியன் ஆனார்.

2008 – ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி ஆனந்த் உலக சாம்பியன் ஆனார். பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

2010 – பல்கேரியாவின் சோபியாவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் பங்கெடுப்பதற்காக ஃபிராங்பட்டிலிருந்து விமானத்தில் பயணிக்க இருந்தார் ஆனந்த். ஆனால், அந்தப் பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக விமானம் ரத்துசெய்யப்பட்டது. ஆனாலும் 40 மணி நேரம் சாலை வழியாகப் பயணித்து போட்டி நடந்த இடத்துக்குச் சென்ற ஆனந்த், வெஸலின் டோபலோவை (பல்கேரியா) வென்றார்.

2012 – இஸ்ரேலின் போரிஸ் கெல்பாண்டை வீழ்த்தி ஆனந்த் உலக சாம்பியன் ஆனார்.

2017 – ரஷ்யாவின் விளாடிமிர் ஃபெடோஸீவை வென்று உலக ரேப்பிட் செஸ் சாம்பியனாக ஆனந்த் வாகை சூடினார்.

- வா.ரவிக்குமார்



Read in source website

நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் செஸ் ஒலிம்பியாட்டில் இதுவரை 43 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 18 தங்கம், 1 வெள்ளிப் பதக்கங்களுடன் சோவியத் ஒன்றியம் முதலிடத்தில் இருக்கிறது.

சோவியத் உடைந்த பின் தனி நாடான ரஷ்யா 1992ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாகப் பங்கேற்றது. தொடர்ச்சியாக 6 ஒலிம்பியாட்களில் அந்நாடு தங்கம் வென்றது. அதற்குப் பிறகு 18 ஆண்டுகள் தங்கப் பதக்கத்தை வெல்லவில்லை.

2020, 2021ஆம் ஆண்டுகளில் ஆன்லைன் ஒலிம்பியாட்களில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. தற்போது 8 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மொத்தமாக, அதிகப் பதக்கங்களை வென்றுள்ள அமெரிக்கா, தங்கப் பதக்கங்கள் குறைவாகப் பெற்றிருப்பதால் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அந்நாடு 6 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களுடன் இருக்கிறது. இந்தியா 1 தங்கம் (இணையவழி), 2 வெண்கலப் பதக்கங்களுடன் 11ஆவது இடத்தில் இருக்கிறது.

இரண்டு நாடுகளுக்குப் பதக்கம் வென்றவர்கள்

கேரி காஸ்பரோவ் அணி 1980, 82, 86, 88 செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சோவியத் ஒன்றியத்துக்குத் தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்துள்ளது. 1992, 94, 96, 2002 செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் ரஷ்யாவுக்காக விளையாடி, தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்துள்ளது. பால் கேரஸ் 1930 – 60 வரை புகழ்பெற்ற செஸ் வீரராகத் திகழ்ந்தவர்.

இவர் எஸ்டோனியாவுக்காக முதல் 3 ஒலிம்பியாட் போட்டிகளிலும் மீதியை சோவியத் ஒன்றியத்துக்காகவும் விளையாடியவர். செர் ஜிகர்ஜாகின் 12 வயது, 7 மாதங்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்று, மிக இளம் வயதில் பட்டம் வென்றவர் என்ற சிறப்பை முன்பு பெற்றிருந்தவர். இவர் முதல் 3 ஒலிம்பியாட்களை உக்ரைனுக்காகவும் அதன் பிறகு ரஷ்யாவுக்காகவும் விளையாடிவருகிறார். இவர்கள் அனைவருமே குறைந்தபட்சம் 4 ஒலிம்பியாட்களில் பங்கேற்றவர்கள்.

செஸ் என்றால் சோவியத் ஒன்றியம்

ரஷ்யர்களின் தேசியப் பெருமையின் அடையாளமாக செஸ் விளையாட்டு இன்றைக்கும் திகழ்கிறது. செஸ்ஸில் ரஷ்யர்களின் ஆதிக்கம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவருகிறது. போர்த் தந்திரம், வெற்றியடைவதற்கான செயல்திட்டம், வியூகம் வகுக்கும் முறை ஆகிய திறன்கள் செஸ் விளையாட்டின் முக்கிய அங்கங்கள்.

இதன் காரணமாக, கம்யூனிஸ சித்தாந்தத்துக்கு ஓர் அறிவுசார் தளத்தை செஸ் அமைத்துக் கொடுத்தது என்று சொல்லலாம். குறிப்பாக, 1917இல் நிகழ்ந்த போல்ஷ்விக் புரட்சிக்குப் பின்னர் விளாடிமிர் லெனின், ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பெரும் தலைவர்கள் செஸ் விளையாட்டைப் பெருமளவில் ஊக்குவித்தனர்.

இதன் காரணமாக, ரஷ்யர்கள் செஸ்ஸில் வலிமையானவர்களாக மாறினார்கள். மைக்கேல் போட்வின்னிக் போன்ற புகழ்பெற்ற செஸ் கிராண்ட்மாஸ்டர்களும் உருவாகினர். சோவியத் யூனியனில் செஸ் வீரர்களுக்குக் கிடைத்த பெயரும் புகழும் நம் நாட்டில் சச்சின் டெண்டுல்கருக்குக் கிடைத்த புகழுக்கும் மேலானது.

செஸ்ஸும் பனிப் போரும்

ராணுவம், பொருளாதாரம் ஆகியவற்றில் அமெரிக்கர்களைவிட ரஷ்யா பின்தங்கியிருந்திருக்கலாம். ஆனால், செஸ் விளையாட்டில் அமெரிக்காவைவிட எப்போதும் ரஷ்யா தலைசிறந்து விளங்கியது. செஸ் உலகில் ரஷ்யர்கள் வீழ்த்த முடியாதவர்களாக உலா வந்தனர். அவர்களை எதிர்த்து நிற்க முடியாத நிலையில் அமெரிக்கர்கள் இருந்தனர்.

செஸ் விளையாட்டில் ரஷ்யர்களிடம் அமெரிக்கர்கள் பெற்ற தோல்வி மோசமானதாக இருந்தது. பனிப்போர் காலத்தில் தங்கள் கலாச்சாரப் பெருமையையும், பாரம்பரியச் சிறப்பையும், நெடிய வரலாற்றின் மேன்மையையும் நிலைநிறுத்த செஸ் விளையாட்டில் அமெரிக்கா அடைந்த அவமானகரமான தோல்விகளை ரஷ்யா முன்னிறுத்தியது.

இதன் மூலம் அமெரிக்கர்களைவிட ரஷ்யர்கள் அறிவாற்றல் மிகுந்தவர்கள் எனும் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. 1920 தொடங்கி 1972 வரையிலான 50 ஆண்டுகளுக்கு ரஷ்யர்களே உலக செஸ் சாம்பியன்களாக வாகை சூடினர்.

இடையில் ஒரே ஒருமுறை, 1935 – 1937க்கு இடையிலான இரண்டு ஆண்டுகள் நெதர்லாந்தின் கணித மேதையும் செஸ் ஆர்வலருமான மாக்ஸ் யூவே உலக சாம்பியனாக இருந்தார்.

செஸ்ஸில் ரஷ்யாவை வீழ்த்துவதற்கான அமெரிக்காவின் 50 ஆண்டு முயற்சி, 1972இல் பாபி பிஷரின் வருகைக்குப் பின்னரே சாத்தியமானது. அந்த வெற்றியும் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.

செஸ் உலகின் சூப்பர் ஸ்டார்

அமெரிக்கர்கள் ஏங்கித் தவித்த அறிவுசார் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்த பெருமை பாபி பிஷர் எனும் செஸ் மேதையைச் சாரும். செஸ் விளையாட்டில் உலக அளவில் அவர் அளவுக்குக் கொண்டாடப்பட்ட வீரர் வேறு எவரும் இல்லை. செஸ் விளையாட்டில் அவர் விளையாடும் முறையும் நகர்வுகளின் போக்கும் தனித்துவமானவை.

அன்றைய காலகட்ட சிந்தனைப் போக்கை விஞ்சி நின்றவை. ஆறு வயதில் செஸ் விளையாட்டை அவர் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். 1956இல் தன்னுடைய 13 வயதில், டொனால்ட் பைரனுக்கு எதிரான அபார வெற்றியின் மூலம் தனது வருகையை உலகுக்கு அவர் அறிவித்தார். ‘நூற்றாண்டின் போட்டி’ என அழைக்கப்படும் அந்தப் போட்டியின் 17ஆவது நகர்வில், பிஷர் தனது ராணியை வேண்டுமென்றே தியாகம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், அதன் பின்னர் கறுப்பு – வெள்ளைக் கட்டங்களில் பிஷர் ஆடிய ருத்ரதாண்டவம் செஸ் உலகம் அதுவரை கண்டிராத ஒன்று. அதன் பின்னர், பிஷரின் வெற்றிப் பயணம் தடையின்றித் தொடர்ந்தது. 1972இல் சோவியத் யூனியனின் போரிஸ் ஸ்பாஸ்கியைத் தோற்கடித்து உலக சாம்பியன் பட்டத்தை பிஷர் வென்றார்.

செஸ்ஸில் ரஷ்யர்களின் ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். 1975இல் நடைபெற்ற உலக சாம்பியன் போட்டியில் சோவியத் யூனியனின் அனடோலி கார்போவை எதிர்த்து விளையாட பிஷர் மறுத்துவிட்டார். இதன் காரணமாக, கார்போவ் உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டார். இதன் பின்னர், செஸ் உலகை பிஷர் முற்றிலும் புறக்கணித்தார்.

- சுஜாதா, முகமது ஹுசைன்



Read in source website

செஸ் விளையாட்டின் தலைநகரம் என்று சென்னையைச் சொல்வதற்குப் பல காரணங்கள் உண்டு. இந்தியாவின் சிறந்த செஸ் வீரர்கள் சென்னையிலிருந்து உருவானவர்களே. இந்தியாவில் ‘இன்டர்நேஷனல் மாஸ்டர்’ பட்டத்தை முதலில் பெற்றவர் சென்னையைச் சேர்ந்த மனுவேல் ஆரோன்.

பிறகு, இந்தியாவின் முதல் ‘கிராண்ட்மாஸ்டர்’ பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் பெற்றார். அதேபோல ‘இன்டர்நேஷனல் மாஸ்டர்’ பட்டம் பெற்ற முதல் பெண், சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி சுப்பராமன்.

பல்வேறு காலகட்டங்களில் திறமையான வீரர்கள் சென்னையிலிருந்து உருவாகியிருக்கிறார்கள். விஸ்வநாதன் ஆனந்த்‘கிராண்ட்மாஸ்டர்’ பட்டம் பெற்றதைப் பார்த்துதான் செஸ்ஸில் எனக்கும் ஆர்வம்ஏற்பட்டது. எந்தவொரு விளையாட்டிலும் பெரியசாதனைகள் படைக்கப்படும்போது அந்த விளையாட்டைக் கற்றுக்கொள்ள புதிதாக ஒரு பெரும் படை முன்வரும்.

பழைய சோவியத் ஒன்றியத்தில் பிரபலமாக இருந்த ‘டால் செஸ் கிளப்’ 1972இல் சென்னையில் தொடங்கப்பட்டது. ரஷ்ய கலாச்சார மையத்தில் செயல்பட்டு வந்த அந்தச் சங்கத்தில்தான், விஸ்வநாதன் ஆனந்த் உட்படப் பலரும் பயிற்சிபெற்றார்கள். புத்தாயிரத்தின் தொடக்கத்தில் சென்னையில் புதிய செஸ் பயிற்சி மையங்கள் நிறைய உருவாகத் தொடங்கின.

அதனால், இளம் தலைமுறையினர் செஸ் விளையாடத் தொடங்கினார்கள். இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட சென்னையில்தான் செஸ் போட்டிகள் அதிகம் நடைபெற்றன. மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து போட்டிகளில் பங்கேற்றார்கள். சென்னையிலும் தமிழகத்திலும் செஸ் பிரபலமானதற்கு விஸ்வநாதன்ஆனந்த் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றதும் ஒரு காரணம்.

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரைப் போல செஸ்ஸில் 16 வயதே நிரம்பிய பிரக்ஞானந்தா பிரபலமாகியிருக்கிறார். அவரைப் போலவே சென்னையைச் சேர்ந்த குகேஷும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற போட்டிக்குப் பிறகு 2,700 புள்ளிகளை எட்டி சாதனை புரிந்திருக்கிறார். ஊடகங்கள் செஸ் விளையாட்டின் மேல் அதிக வெளிச்சம் பாய்ச்சத் தொடங்கியிருப்பதால், இதுபோலப் புதிதாக வருகிறவர்கள் உலகுக்குத் தெரியவருகிறார்கள்.

யார் வெல்வார்கள்?: சென்னையில் செஸ் ஒரு பிரபலமான விளையாட்டு. ஒலிம்பியாட் மூலம் சென்னையின் செஸ் பாரம்பரியம் மாநிலம் முழுவதும் தெரியவரும். இந்தப் பிரபல்யத்தை வரும் காலத்தில் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப்போகிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. சென்னையில் இருப்பதுபோலவே மற்ற மாவட்டங்களிலும் செஸ் பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும். இதற்கான கட்டமைப்பைத் தமிழ்நாட்டில் விரிவுபடுத்த வேண்டும்.

2012 முதல் நான் பயிற்சியாளராகச் செயல்பட்டுவருகிறேன். இந்த முறை பெண்கள் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏனென்றால், சீனாவும் ரஷ்யாவும் இந்த முறை போட்டியில் பங்கேற்கவில்லை. எனவே, நன்றாக விளையாடும்பட்சத்தில் தங்கம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகம்.

ஆடவர் பிரிவில் அமெரிக்காதான் வலுவான அணி. தரவரிசையில் அமெரிக்கர்கள் அனைவருமே 2,750 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கிறார்கள். இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நம்மிடையே ‘பி’ பிரிவில் இருப்பவர்கள் எல்லாருமே இளம் வீரர்கள். குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன் ஆகியோர் வளர்ந்துவரும் வீரர்கள். அவர்களுக்கு இது முதல் ஒலிம்பியாட் போட்டி. கடினமாக உழைத்துவருகிறார்கள். அதனால் நமக்கு வெள்ளி அல்லது வெண்கலம் வெல்வதற்கான வாய்ப்பு நிச்சயம் உண்டு.

பிரக்ஞானந்தாவின் எதிர்காலம்: ஆனந்துக்குப் பிறகு தமிழ்நாட்டு செஸ்ஸை உலக அரங்குக்குச் சிறு வயதிலேயே எடுத்துச்சென்றுள்ள பிரக்ஞானந்தா உலக சாம்பியனாக வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். அதற்கு அதிகமான பயிற்சி தேவை.

தரவரிசையிலும் முன்னணிக்குச் செல்ல வேண்டும். கரோனாவால் இரண்டு ஆண்டுகளாகப் போட்டிகள் குறைவாக நடைபெற்றதால் தரவரிசையில் அவர் பின்தங்க நேரிட்டது. 2022இல் இதுவரை நடைபெற்ற ஐந்து போட்டிகளில் மூன்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆன்லைன் போட்டிகளிலும் முக்கியமான வீரர்களை வென்றிருக்கிறார். அதனால் அவருடைய தரவரிசை நிலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதைத் தக்கவைத்துக்கொண்டு முயன்றால், உலக சாம்பியன் பட்டத்தை அவரால் வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

அதுதான் எங்களுடைய இலக்கு. பிரக்ஞானந்தாவைப் பொறுத்தவரை சிறு வயதிலிருந்தே எந்த கவனச் சிதறலும் இல்லாமல் செஸ் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்தால் ஆனந்த் போல உலக சாம்பியன் பட்டத்தை அவரால் வெல்ல முடியும்.

ஒலிம்பிக்கில் சேர்க்கப்படுமா?: நீண்ட காலமாக ஒலிம்பிக்கில் செஸ்ஸை இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்துவருகிறது. உலக செஸ் கூட்டமைப்பும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

ஒலிம்பிக்கைப் போலவே ஒலிம்பியாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றியும் கட்டுப்பாட்டுடனும் நடைபெற்றுவந்தாலும், சர்வதேச ஒலிம்பிக் சங்கம் இன்னமும் செஸ்ஸைச் சேர்த்துக்கொள்வதற்கான முடிவை அறிவிக்கவில்லை. அதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. எதிர்காலத்தில் செஸ்ஸும் ஒலிம்பிக்கில் ஓர் அங்கமாகலாம், நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

- ஆர்.பி.ரமேஷ், செஸ் ஒலிம்பியாட் ஆடவர் ‘பி’ பிரிவுப் பயிற்சியாளர் & பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர், தொடர்புக்கு: rbramesh1@gmail.com

எழுத்தாக்கம்: டி.கார்த்திக்



Read in source website

செஸ் விளையாட்டு தமிழில் சதுரங்கம் என்றும் சில நேரம் அழைக்கப்படுகிறது. செஸ் விளையாட்டைச் சதுரங்கம் என்றழைப்பது தவறு. சதுரங்கம் என்பது பண்டைக் கால இந்தியாவில் அரசர்கள் விளையாடிய ஒரு வகை விளையாட்டு.

சதுர் என்றால் நான்கு, அங்கம் என்றால் நான்கு படைகளை அடையாளப்படுத்தி விளையாடக்கூடிய விளையாட்டு என்று அர்த்தம் (சதுர்+அங்கம்).

அதற்கான பலகை ‘அஷ்டபதா’ என்கிற பெயரில் 64 கட்டங்களைக் கொண்டிருந்தாலும், கறுப்பு வெள்ளைக் கட்டங்களாக அவை இருக்காது. அதே நேரம், இதன் வளர்ச்சி பெற்ற நவீன வடிவமான செஸ், ஐரோப்பிய நாடுகளில் உருவானது. இதில் எதிரெதிராக 2 பேர் மட்டுமே விளையாட முடியும்.

மல்லையின் உலகப் புகழ்

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நடைபெறுவதன் மூலம், இந்தக் கடற்கரை நகரம் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. பல்லவர்களின் இரண்டாவது தலைநகரான மாமல்லை, பண்டைக் காலத்தில் கடல் வாணிபத்திலும் சிறந்து விளங்கியது. பல்லவர்களின் அற்புதமான கட்டிடக் கலைக்குப் பெயர்பெற்ற மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட சிற்பக் கலை அற்புதங்கள் உள்ளன.

தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகச் சிறந்த கட்டிடக் கலை மையமாக மாமல்லை கருதப்படுகிறது.
கடந்த 2019இல் இந்தியா - சீனா இடையே முறைசாரா உச்சி மாநாடு மாமல்லையில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இங்கே சந்தித்துக்கொண்டதன் மூலம் மாமல்லை உலக அளவில் வெளிச்சம் பெற்றது. தற்போது செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதன் மூலம் மீண்டும் மாமல்லை மீது உலகின் கவனம் குவிந்திருக்கிறது.

நம்பிக்கை நட்சத்திரம் ‘பிரக்’

செஸ் விளையாட்டில் 16 வயதிலேயே உலக அளவில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியிருக்கிறார் ஆர்.பிரக்ஞானந்தா. உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை அண்மையில் இரண்டு முறை வீழ்த்தி, உலக செஸ் அரங்கின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.

கரோனா நோய்த்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெரும்பாலும் இணையவழி செஸ் போட்டிகளில்தான் பிரக்ஞானந்தா பங்கேற்றிருந்தார். கிளாஸிக் போட்டிகளில் விளையாடாததால் அவருடைய ரேட்டிங் புள்ளிகள் குறைந்துள்ளன.

என்றாலும் 2022 செஸ் டூர் தொடரில் இரண்டாமிடம், செஸ்ஸபில் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் தொடரில் முதலிடம் பிடித்தார் பிரக்ஞானந்தா. முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் பிரக்ஞானந்தா இதிலும் அழுத்தமான முத்திரையைப் பதிப்பார் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

- மிது கார்த்தி



Read in source website

யார் தொடங்குவது?

எல்லா விளையாட்டுகளையும் போலவே செஸ் விளையாட்டிலும் யார் முதலில் தொடங்குவது என்பதற்கு டாஸ் போட்டு முடிவெடுக்கப்படும். ஆனால், செஸ்ஸில் டாஸ் போட நாணயம் பயன்படுத்தப்படாது.

கறுப்பு நிற சிப்பாய் (பான்) காயையும் வெள்ளை நிற சிப்பாய் காயையும் எடுத்துக்கொண்டு, மூடிய கையினுள் காயை வைத்துக்கொண்டு, எதிரில் இருப்பவரின் தேர்வு கேட்கப்படும்.

அவர் வெள்ளை நிற சிப்பாய் இருக்கும் காயைத் தேர்வுசெய்தால், வெள்ளை நிற காய்களைக் கொண்டு ஆட வேண்டும். வெள்ளை நிறத்தைப் பெற்றவரே முதலில் ஆட்டத்தைத் தொடங்குவார். அதே நேரம், ஆட்டத்தின் வெற்றி, தோல்வி ஆடும் முறை சார்ந்ததே தவிர, தேர்ந்தெடுக்கப்படும் காய்களின் நிறத்தைச் சார்ந்தது அல்ல. எனவே, கறுப்பு நிறக் காய்கள் என்றால் பின்னடைவு என்று அர்த்தமல்ல.

வெற்றியுமில்லை... தோல்வியுமில்லை

செஸ் ஆட்டம் டிராவில் முடிந்தால் இரு ஆட்டக்காரர்களுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும். என்னென்ன காரணங்களால் ஆட்டம் டிரா ஆகும்?
வீரர்கள் இருவரும் ஆட்டத்தைச் சமன் செய்துகொள்ளலாம் என ஒருமித்த முடிவெடுத்தால். இரண்டு வீரர்களும் ஒரே காயைக் கொண்டு, ஒரே விதமான நகர்வை மூன்று முறை (Three fold repetition) ஆடினால், ஆட்டம் சமன் ஆகும்.

செஸ் போர்டில் வெள்ளை ராஜா, கறுப்பு ராஜா மட்டுமே எஞ்சியிருந்தால். வெள்ளை, கறுப்பு இரண்டு பிரிவிலும் ராஜாவோடு ‘மைனஸ் பீஸ்’ எனப்படும் பிஷப், குதிரை போன்ற காய்கள் மட்டுமே இருந்தால் ஆட்டம் டிரா ஆகும்.எதிரில் ஆடுபவருக்குப் பலகையில் காய்களை நகர்த்துவதற்கே வழியில்லாமல் போகும் நிலைக்கு ‘ஸ்டேல்மேட்’ என்று பெயர். இந்த நிலை ஏற்பட்டாலும் ஆட்டம் ‘டிரா’ ஆகிவிடும்.

நான்கு முக்கியக் கட்டங்கள்

எதிராளியின் ராஜாவுக்கு ஒருவர் ‘செக்’ வைத்து, அவரால் ராஜாவை நகர்த்த முடியாமல் போனால் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும். இதற்கான போராட்டத்தில் செஸ் பலகையின் 64 கட்டங்களும் முக்கியமானவைதான். ஆனால் E4, E5, D4, D5 என்னும் நான்கு கட்டங்கள்தான் செஸ் ஆட்டத்தின் முக்கிய சதுரங்கள். இந்த சதுரங்களைப் பிடிப்பதற்குத் தடுப்பாட்டம், தாக்குதல் ஆட்டம் இரண்டையும் வீரர்கள் முயன்று பார்ப்பார்கள்.

- வா.ரவிக்குமார்



Read in source website

1990-களில் ஆனந்தை முழுமையான செஸ் வீரராக ரஷ்ய ஊடகங்கள் அங்கீகரிக்கவில்லை. அந்தச் சூழலில்தான், 1991இல் மணிலாவில் நடைபெற்ற போட்டியில் அலெக்ஸி ட்ரீவ் எனும் ரஷ்ய வீரருடன் ஆனந்த் மோதினார்.

எளிதில் வீழ்ந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், 4.5 - 1.5 என்கிற கணக்கில் ட்ரீவை ஆனந்த் வீழ்த்தினார். 1995இல் காஸ்பரோவ் உடன் ஆனந்த் மோதினார். முதல் 8 போட்டிகளைச் சமன் செய்து காஸ்பரோவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

காஸ்பரோவுக்கு ஆனந்த் முடிவுரை எழுதும் நேரம் என்று கருதப்பட்ட சூழலில், காஸ்பரோவ் வீறுகொண்டு எழுந்து அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றார். காஸ்பரோவும் ஆனந்த்தும் மோதிய 10ஆவது போட்டி செஸ் விளையாட்டின் சிறந்த போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

காஸ்பரோவின் ஓய்வுக்குப் பின்னர் செஸ் உலகில் ஆனந்த்தின் ஆதிக்கம் அசைக்க முடியாததாக மாறியது. 2007இல் உலக சாம்பியன் பட்டத்தை ஆனந்த் வென்றாலும், அந்தப் போட்டி நடைபெற்ற முறை ரஷ்யாவின் கிராம்னிக் உள்ளிட்டோரால் விமர்சனத்துக்கு உள்ளானது. அதற்குப் பதில் அளிப்பதுபோல் 2008இல் கிராம்னிக்கை வீழ்த்தி ஆனந்த் உலக செஸ் சாம்பியன் ஆனார். 2012 வரை அந்தப் பட்டத்தைத் தக்கவைத்திருந்தார். செஸ் உலகில் ஆனந்தின் ஆதிக்கம் 2012 வரை தொடர்ந்தது.

2013இல் சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ‘செஸ் உலகின் விந்தைக் குழந்தை’ எனக் கருதப்படும் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள முடியாமல் ஆனந்த் தடுமாறினார். மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்ற அந்தப் போட்டியில், ஆனந்த் தோல்வியடைந்தார்.

2007க்குப் பின்னர் கார்ல்சனை பலமுறை ஆனந்த் வென்றிருக்கிறார் என்றாலும், 2013 முதல் கார்ல்சனே உலக செஸ் சாம்பியனாகத் தொடர்ந்துவருகிறார். அதே நேரம், சர்வதேச செஸ் உலகில் இந்தியாவின் பெயரை உயரத்துக்கு எடுத்துச்சென்றவர் விஸ்வநாதன் ஆனந்த் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கார்போவ் - காஸ்பரோவ்

செஸ் விளையாட்டுக்குத் தேவைப்படும் அனைத்து திறன்களையும் கொண்டவர் அன்றைய ரஷ்யாவின் அனடோலி கார்போவ். அமைதியும் பொறுமையும் அவருடைய அடையாளங்கள். ஆனால், அஸர்பைஜான் நாட்டிலிருந்து சோவியத் யூனியனில் அகதியாகக் குடியேறிய கேரி காஸ்பரோவ் இதற்கு நேரெதிரானவர்.

தன்னிருப்பை அழுத்தமாகப் பதிவுசெய்யும் ஆளுமையைக் கொண்டவர் அவர். அமைதியைவிட ஆர்ப்பாட்டத்தையே அவர் விரும்பினார். பொறுமையைவிட அதிரடியே அவருக்கு முக்கியமாக இருந்தது. இந்த இரண்டு ஆளுமைகளுக்கு இடையிலான போட்டிகளும் மோதல்களும் நிகழ்ந்த 7 ஆண்டுகள் செஸ் உலகின் பொற்காலம்.

1975இல் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் பாபி பிஷர் போட்டியிட மறுத்த காரணத்தால், அனடோலி கார்போவ் உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டார். இது கார்போவின் தவறில்லை என்றாலும், அதன் காரணமாகச் சற்று ஏளனத்துக்கு ஆளானார்.

அவருடைய திறமைக்கான அங்கீகாரமும் முழுமையான அளவில் அவருக்கு கிடைக்கவில்லை. இந்தப் புறக்கணிப்பின் காரணமாகவோ என்னவோ, கார்போவ் தொடர்ந்து அபார வெற்றிகளைக் குவித்துவந்தார். கார்போவ் அளவுக்கு நீண்ட காலத்துக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் இல்லையென்றுகூடச் சொல்லலாம்.

வயதில் இளையவரான காஸ்பரோவ் செஸ் விளையாட்டுக்கு வந்த புதிதில், எலியை பூனை வேட்டையாடுவதுபோல காஸ்பரோவை கார்போவ் வேட்டையாடினார். காஸ்பரோவ் தனது செஸ் வாழ்க்கையில் பெற்ற மோசமான தோல்விகள் கார்போவிடம் பெற்றவையே. வேறு எந்த வீரராக இருந்தாலும், மோசமான தோல்விகளுக்குப் பின்னர் செஸ் விளையாட்டை விட்டே விலகியிருப்பார்கள்.

ஆனால், காஸ்பரோவ் தொடர்ந்து போராடினார். தனக்குப் பிடிக்காத பொறுமையையே ஆயுதமாகப் பயன்படுத்தி கார்ப்போவை வீழ்த்தினார். ஆட்டங்களைத் தொடர்ந்து சமன் செய்வதன் மூலம் கார்போவை களைப்படையவைத்து, பின்னர் பொறுமையாக காஸ்பரோவ் வெற்றியடைந்த விதம் கார்போவ் சற்றும் எதிர்பாராதது; செஸ் உலகும் எதிர்பாராத ஒன்றுதான்.

காஸ்பரோவ் – டீப் புளூ

செஸ் விளையாட்டில் கணினியின் நுழைவு 1950-களிலேயே தொடங்கிவிட்டது. செஸ் விளையாட்டிலிருந்து ஒதுங்கியிருந்த அமெரிக்காவின் பாபி பிஷர், 1977இல் கிரீன்ப்ளாட் எனும் கணினியுடன் மோதி அபார வெற்றிபெற்றார். 1980-களின் பிற்பகுதியில்தான் செஸ் விளையாட்டில் கணினிகளின் ஆதிக்கம் வலுப்பெற்றது. உலகின் வலுவான வீரர்களைக் கணினிகள் வெல்லத் தொடங்கின.

இருப்பினும், 1996இல் ஐபிஎம் நிறுவனம் உருவாக்கிய ‘டீப் புளூ’ எனும் கணினிக்கும் ரஷ்யாவின் கேரி காஸ்பரோவுக்கும் இடையிலான போட்டியில் காஸ்பரோவ் அபார வெற்றிபெற்றார். மே 11, 1997இல் மேம்படுத்தப்பட்ட ‘டீப் புளூ’ கணினியுடன் காஸ்பரோவ் மோதினார்.

அந்தப் போட்டியில் செஸ் உலகின் அசைக்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்த காஸ்பரோவை ‘டீப் புளூ’ வீழ்த்தியது. உலக செஸ் சாம்பியனான கேரி காஸ்பரோவ், போட்டி நடைபெற்ற அறையை விட்டு வெளியேறுவதற்கு முன் செஸ் பலகையை வெறித்துப் பார்த்தது பார்வையாளர்களை உறையவைத்தது.

அந்தத் தோல்வியை காஸ்பரோவ் ஏற்றுக்கொள்ள மறுத்தார். போட்டியின் நடுவே கணினியில் மனித உள்ளீடு இருந்ததாக அவர் குற்றம்சாட்டினார். அதை ஐபிஎம் ஏற்க மறுத்தது. கணினிப் பதிவுகளை வெளியிட வேண்டும் என அவர் வற்புறுத்தினார். அந்தக் கோரிக்கையை ஏற்க ஐபிஎம் அப்போது மறுத்தாலும், பின்னர் அந்தப் பதிவுகளை வெளியிட்டது.

அந்தக் காலத்தில், ‘டீப் புளூ’ கணினியிடம் மோத நான் தயார் என செஸ் உலகிலிருந்து ஒதுங்கியிருந்த பாபி பிஷர் அறிவித்தார். ஆனால், அதற்கு முன்னரே ஐபிஎம் நிறுவனம் ‘டீப் புளூ’ கணினியைச் செயலிழக்கவைத்துவிட்டது.

- முகமது ஹுசைன்



Read in source website