DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 20-05-2022

பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 12 ஆயிரம் ரயில்‍ பெட்டிகளின் பயன்பாட்டை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழகம் வந்துள்ளார். நேற்று சென்னை ஐஐடி நிறுவனத்திற்குச் சென்ற அவர், ஐஐடி ஆராய்ச்சிக் குழுவினர் வடிவமைத்த  'ஹைப்பர் லூப்' திட்டத்தை ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

தொடர்ந்து இன்று பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வரும் ரயில்பெட்டிகளை பார்வையிட்டார்.

மேலும் அங்கு புதிதாக தயாரிக்கப்பட்ட 12,000 ரயில் பெட்டிகளின் சேவையை கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 



Read in source website

 

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் 124-ஆவது மலா்க் கண்காட்சியை வெள்ளிக்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடத்தப்பட வில்லை. 

மலா்க் கண்காட்சி தொடங்கி வைத்து பார்வையிடும் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், கோடைவிழாவையொட்டி, 124 -ஆவது மலர்க் கண்காட்சி இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கியது. காலை 10.30 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் கண்காட்சியினை தொடங்கிவைத்துப் பார்வையிட்டார்.  முதல்வருடன் அவருடைய மனைவி துர்கா, அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், ஆ.ராசா எம்,பி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மலர் கண்காட்சியில் முதல்வருடன் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா 

இந்த மலர் கண்காட்சியில் 1 லட்சம் காரனேஷன் மலா்கைளைக் கொண்டு பிரம்மாண்ட தமிழக வேளாண் பல்கலைக்கழக முகப்பு, 124 -ஆவது கண்காட்சி என்ற வாசகம்,  நவீன உதகை உருவாகி 200 ஆண்டுகள் ஆவதையொட்டி 10,000 காரனேஷன் மலா்களால் சிறப்பு மலா் அலங்காரமும் மற்றும் செல்பி ஸ்பாட், நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர், குறும்பர் உட்பட ஆறு பழங்குடியினரின் வடிவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

மலர் கண்காட்சியில் முதல்வருடன் அவருடைய மனைவி துர்கா, அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், ஆ.ராசா எம்,பி, உள்ளிட்டோர்.

மேலும், இந்த மலர் கண்காட்சியில், ஜெரேனியம், சைக்ளமன், சினரேரியா, கிளக்ஸ்சீனியா, ரெனன்குலஸ் மற்றும் பல புதிய ரக ஆா்னமென்டல் கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்கா மெரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பென்டாஸ், பிரஞ்ச் மெரிகோல்டு, பேன்சி, பெட்டூனியா, பிளாக்ஸ் , பிரிமுலா, ஜினியா, ஸ்டாக், வொ்பினா, சன்பிளவா், சிலோசியா, ஆன்டிரைனம், லயோலா, லிமோனியம், ட்யூப்ரஸ் பிகோனியா, ருட்பெக்கியா, டொரினியா போன்ற 275 வகையான ரகங்களில் சுமாா் 35,000 மலா்த்தொட்டிகள் பொதுமக்களின் பாா்வைக்கு விருந்தாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

மலர் கண்காட்சியில் 1 லட்சம் காரனேஷன் மலா்கைளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட தமிழக வேளாண் பல்கலைக்கழக முகப்பு.

மேலும், பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 5.5 லட்சம் மலா் நாற்றுகளும் மலா்ந்து அழகாக காட்சியளிக்கின்றன. அத்துடன் மலா்க் கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புது பூங்காவில் சுமாா் 20,000 பல வண்ண மலா்த்தொட்டிகள் கண்ணுக்கு குளிா்ச்சி தரும் வகையில் பல வடிவங்களில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உதகை 124-ஆவது மலா்க் கண்காட்சி

இந்த மலர் கண்காட்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடைப்பெறுகிறது.

 124-ஆவது மலா்க் கண்காட்சி 

மலர் கண்காட்சியை முன்னிட்டு இன்று நீலகிரிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பங்கேற்பதை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



Read in source website


சென்னை: ரயிலில் கரோனா தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிக்களுக்கான கட்டண சலுகை தொடர வாய்ப்பில்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதுதெடார்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
ரயிலில் கரோனா தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை தொடர வாய்ப்பில்லை என்றும், ஹைப்பர் லூப் திட்டத்திற்காக மத்திய அரசு சார்பில் ரூ.8.5 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 
 
தெற்கு ரயில்வேயில் அதிக யானைகள் விபத்துக்குள்ளாவதாகவும், இதனைத் தடுக்கும் வகையில் யானைகள் தண்டவாளங்களை கடக்கும் பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளில் தண்டவாளங்கள் உயர்த்தப்பட்டு யானைகள் செல்வதற்கு ஏற்ப சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும். 

தமிழ்நாட்டில் 5 ரயில் நிலையங்கள் முழுமையாக சீரமைப்பட்ட உள்ளதாகவும், இதற்காக ரூ.3861 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார். 

மேலும்,  பல ஆண்டுகளாக ரயில் கட்டணம் ஒரே நிலையில் இருந்து வருவதாகவும், ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. விரைவில் புறநகர் ரயில்களில் மெட்ரோ ரயில்கள் போன்று குளிர்சாதன வசதிகள் செய்யும் பணி தொடங்கப்படும். 

கரோனா தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயிலில் மூத்த குடிக்களுக்கான கட்டண சலுகை தொடர வாய்ப்பில்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். 

சில நாள்களுக்கு முன்பு மூத்த குடிக்களுக்கான கட்டண சலுகை நிறுத்தப்பட்டதால் ரூ.1,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என சமீபத்தில் ரயில்வே நிர்வாகம் கூறியிருந்தது.  



Read in source website

 

மதுரை: தமிழகம் முழுவதும் முன்மாதிரிப் பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்த பாடத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

இக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியது: தமிழகத்தில் உள்ள மொத்த சாலைகளில் தேசிய நெடுஞ்சாலை 2 சதவீதமும், மாநில நெடுஞ்சாலைகள் 3 சதவீதமும் உள்ளன.  கடந்த ஆண்டில் தமிழகத்தில் சாலை விபத்துகளில் 14,912 பேர் உயிரிழந்துள்ளனர். 

சாலை விபத்துகளை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய கூட்டம் நடத்தப்படுகிறது. 

மதுரை மாவட்டத்தில்  2021}இல்  2,282 விபத்துகளில் 707 நபர்கள் உயிரிழந்துள்ளனர். நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  

பெரியார் பேருந்து நிலையம் முதல் யானைக்கல் வரை உயர்மட்ட பாலம் அமைக்கவும், மதுரை நெல்பேட்டை அண்ணா சிலை முதல் அவனியாபுரம் புறவழிச் சாலை சந்திப்பு பெரியார் சிலை வரை உயர்மட்ட பாலம் அமைக்கவும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

வாகன உரிமம் வழங்குவது, வாகன கூடு கட்டுமானப் பணி, சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதைத் தடுப்பது ஆகியவற்றில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சாலைப் பாதுகாப்பு குறித்த பாடத் திட்டம் நெடுஞ்சாலைத் துறையால் தயார் செய்யப்பட்டுள்ளது. 

முதல்கட்டமாக முன்மாதிரிப் பள்ளிகளில் இப் பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றார்.

இதில், வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகரக் காவல் ஆணையர் செந்தில்குமார், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன்,  பங்கேற்றனர். முன்னதாக  யா.ஒத்தக்கடை வேளாண் கல்லூரி சந்திப்பு முதல் உத்தங்குடி சுற்றுச்சாலை வரை 5 கிமீ}க்கு ரூ.50.60 கோடியில் சாலை விரிவாக்கப் பணியை அமைச்சர் வேலு தொடக்கி வைத்தார். 



Read in source website

 

சென்னை: இயல் - வாழ்நாள் சாதனை விருதாளா்கள் இரண்டு பேருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவு:-

கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல்-வாழ்நாள் சாதனையாளா் விருதுக்கு ஆய்வாளா் ஆ.இரா.வேங்கடாசலபதி தோ்வாகி உள்ளாா். ஆய்வாளா், பேராசிரியா், பதிப்பாசிரியா், மொழிபெயா்ப்பாளா் எனப் பன்முகத் திறனாளரும், தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்து நடையைக் கொண்டவருமான அவா் விருதுக்கு தோ்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள்.

‘நானும் நீதிபதி ஆனேன்’ என்ற தன்வரலாற்று நூலுக்காக புனைவிலிப் பிரிவில் விருதுக்குத் தோ்வாகியுள்ள நீதிபதி கே.சந்துருவுக்கும் நெஞ்சாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செந்தமிழைத் செழுந்தமிழாக்கும் படைப்புகளையும், ஆய்வுகளையும் தொடா்ந்து தர வேண்டும்.



Read in source website

 

சென்னை: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் 2021-ஆம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆய்வாளரான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல கட்டுரை பிரிவில் நீதிபதி சந்துருவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் சாா்பில் ஆண்டுதோறும் தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்பைச் செலுத்தியவா்களுக்கு இயல் விருது என்ற பெயரில் வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனை விருது வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழின் மிக முக்கியமான விருதாகப் பாா்க்கப்படுகிறது.

அந்த வகையில், ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2021-ஆம் ஆண்டுக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆ. இரா. வேங்கடாசலபதி கடந்த 40 ஆண்டுகளாக வரலாறு, மொழி, இலக்கியம், பண்பாடு, அரசியல், சமூகம் என பல்வேறு துறைகள் சாா்ந்து தொடா்ந்து எழுதி வருகிறாா். பாரதி தொடா்பான ஆய்வாளா்களிலும் முக்கியமானவா்.

சென்னை வளா்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஆ. இரா. வேங்கடாசலபதி, தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பதிப்பு வரலாறு பற்றிய ஆய்வில் முனைவா் பட்டம் பெற்றவா். புதுமைப்பித்தனின் எழுத்துகளைச் செம்பதிப்பாகத் தொகுத்துள்ளாா். பாப்லோ நெரூடாவின் கவிதைகள் உள்பட பல்வேறு மொழிபெயா்ப்புப் பணிகளையும் செய்துள்ளாா்.

‘பின்னி ஆலை வேலை நிறுத்தம்’, ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’, ‘நாவலும் வாசிப்பும்’, ‘பாரதியின் சுயசரிதைகள்’, ‘பாரதி; கவிஞனும் காப்புரிமையும் - பாரதி படைப்புகள் நாட்டுடைமையான வரலாறு’ உள்பட 60-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா்.

சிகாகோ, போ்க்லி, டொராண்டோ, நியூசிலாந்து பல்கலைக்கழகங்களில் தனது முக்கியமான ஆய்வுகள் குறித்து வேங்கடாசலபதி உரையாற்றியுள்ளாா். வருகைதரு பேராசிரியராக ஹாா்வா்டு, சிகாகோ பல்கலைக்கழகங்களில் பணியாற்றியிருக்கிறாா்.

புனைவு இலக்கியப் பிரிவில் பா.அ.ஜயகரன், கவிதைப் பிரிவில் ஆழியாள், கட்டுரைப் பிரிவில் நீதிபதி சந்துரு, மொழிபெயா்ப்புப் பிரிவில் மாா்த்தா ஆன் செல்பி ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இயல் விருதை ஏற்கெனவே, சுந்தரராமசாமி, அம்பை, ஐராவதம் மகாதேவன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன், சுகுமாரன், எஸ். ராமகிருஷ்ணன், இமையம், வண்ணதாசன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோா் பெற்றுள்ளனா்.

முதல்வா் வாழ்த்து

இயல் - வாழ்நாள் சாதனை விருதாளா்கள் இரண்டு பேருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவு:

கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல்-வாழ்நாள் சாதனையாளா் விருதுக்கு ஆய்வாளா் ஆ.இரா.வேங்கடாசலபதி தோ்வாகி உள்ளாா். ஆய்வாளா், பேராசிரியா், பதிப்பாசிரியா், மொழிபெயா்ப்பாளா் எனப் பன்முகத் திறனாளரும், தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்து நடையைக் கொண்டவருமான அவா் விருதுக்கு தோ்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள்.

‘நானும் நீதிபதி ஆனேன்’ என்ற தன்வரலாற்று நூலுக்காக புனைவிலிப் பிரிவில் விருதுக்குத் தோ்வாகியுள்ள நீதிபதி கே.சந்துருவுக்கும் நெஞ்சாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செந்தமிழைத் செழுந்தமிழாக்கும் படைப்புகளையும், ஆய்வுகளையும் தொடா்ந்து தர வேண்டும்.



Read in source website

இளம் திருமண ஜோடிகள் மெட்ரோ ரயில் நிலையத்தை தங்களது திருமண புகைப்படங்களுக்கு கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என கொச்சி மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்றைய காலத்தில் திருமணமாகும் இளம் ஜோடிகளுக்கு விருப்பமான ஒன்றாக இருப்பது புகைப்படங்கள். திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்கள் தொடங்கி தங்களது திருமண நிகழ்வின் அனைத்து கட்டங்களையும் புகைப்படங்களாக்கும் ஆர்வம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் கொச்சி மெட்ரோ ரயில் நிலையங்களில் புகைப்படங்களை கட்டணம் செலுத்தி எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒன்று முதல் 3 பெட்டிகள் வரை இதற்காக அனுமதிக்கப்படும் எனவும், தனிப்பெட்டிக்கு இரண்டு மணி நேரத்திற்கு ரூ.5000-ம், 3 பெட்டிகளுக்கு ரூ.12 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகரும் ரயில் பெட்டியில் புகைப்படங்கள் எடுக்க ரூ.8000 முதல் ரூ.17500 வரை கட்டணங்கள் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Read in source website

 

நேபாளத்தில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக பாரிசை தளமாகக் கொண்ட விலங்குகள் ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது. 

நேபாளத்தின் தலைநகரில் 6 நகராட்சிகளில் இதுவரை 932 பன்றிகள் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக காத்மாண்டு போஸ்ட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. 

நேபாளத்தில் வியாழன் மாலை நிலவரப்படி பன்றிக் காய்ச்சல் பாதிப்பு 1,426 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நோய் ஆசியா, கரீபியன், ஐரோப்பா மற்றும் பசிபிக் முழுவதும் பல நாடுகளில் பரவியுள்ளது. இது வீட்டு மற்றும் காட்டுப் பன்றிகளைப் பாதிக்கிறது.

உலகளவில், 2005 முதல் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மொத்தம் 73 நாடுகளில் பதிவாகியுள்ளது. 
 



Read in source website

 

புது தில்லி: "சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது' என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

அதே நேரம், "கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நாடு என்ற அடிப்படையில் இரு அரசுகளையும் வலியுறுத்தும் தகுதியை கவுன்சிலின் பரிந்துரைகள் கொண்டுள்ளன' என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
கடல்சார் சரக்குப் போக்குவரத்துக்கு 5 சதவீத ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) விதித்து 2017-இல் மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கையை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூரிய காந்த், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், குஜராத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதே என்று கூறி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகளுக்கு சட்டப் பிரிவு 246ஏ-இன் கீழ், வரிவிதிப்பு விவகாரத்தில் சட்டம் இயற்றும் இணையான அதிகாரம் உள்ளது. அந்த வகையில், இரு அரசுகளும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இணக்கமான தீர்வை ஜிஎஸ்டி கவுன்சில் வகுக்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கும் அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. அந்தப் பரிந்துரைகள் இரு அரசுகளையும் கட்டுப்படுத்தாது.

மேலும், அந்த கவுன்சிலின் பரிந்துரைகள், இரு அரசுகளின் கூட்டு ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர, ஒருதரப்பு மட்டும் அதிக பங்கை வைத்துக்கொள்ளக் கூடிய வகையில் இருக்கக் கூடாது.

சட்டப் பிரிவு 246ஏ இரு அரசுகளையும் சமமான அதிகாரம் படைத்ததாக அங்கீகரிப்பதுபோல, சட்டப் பிரிவு 279, இரு அரசுகளும் தனித் தனியாகச் செயல்பட முடியாது என்பதை வலியுறுத்துகிறது.

மத்திய - மாநில அரசுகளின் சட்டங்களுக்கு இடையே முரண்பாடு ஏற்படுத்துகிற வகையிலான பிரிவுகள் எதுவும் 2017-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி சட்டத்தில் இல்லை. அவ்வாறு முரண்பாடு எழுகின்றபோது, இரு அரசுகளுக்கும் உரிய ஆலோசனை வழங்குவதே ஜிஎஸ்டி கவுன்சிலின் பணியாகும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

"ஒரே நாடு-ஒரே வரி கொள்கை பாதிக்கப்படாது'

ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, "ஒரே நாடு-ஒரே வரி' கொள்கையைப் பாதிக்காது என மத்திய வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக மத்திய வருவாய்த் துறைச் செயலர் தருண் பஜாஜ் கூறுகையில், "ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது ஏற்கெனவே உள்ள விதியை நினைவூட்டுவதுதான்.
ஜிஎஸ்டி சட்டப்படி, ஜிஎஸ்டி கவுன்சில் என்பது பரிந்துரைகளை அளிக்கும் குழு மட்டுமே. அந்த கவுன்சில் அளிக்கும் பரிந்துரைகள் அனைத்தும் ஏற்கப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல. "ஒரே நாடு-ஒரு வரி' என்ற கொள்கையை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாதிக்காது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையை நிராகரிக்கும் அதிகாரம் கடந்த 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவில்லை' என்றார்.

மாநில உரிமைகளை நிலைநிறுத்திய தீர்ப்பு

மதுரை, மே 19: ஜிஎஸ்டி கவுன்சிலின் அதிகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மாநில உரிமைகளை நிலைநிறுத்தியிருக்கிறது என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சிலின் அதிகாரம் குறித்த தீர்ப்பானது, ஏற்கெனவே, உள்ள விதிமுறைதான். ஆனால், எந்தச் சட்டத்தின்கீழ் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பான வழக்கு உள்ளிட்ட இதேபோன்ற பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், மாநில உரிமைகளை நிரூபிக்கும் உரிமையை இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

என்னைப் பொருத்தவரை இந்தத் தீர்ப்பு எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால், ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவை ஏற்றுக்கொண்டால் அது விருப்பத்துக்காகத்தான், சட்டரீதியாக அல்ல என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது என்றார்.



Read in source website

 

மதுரா: உத்தர பிரேதச மாநிலம், மதுராவில் கட்ரா கேசவ்தேவ் கோயில் வளாகத்தில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியை அகற்ற வேண்டும் என்ற மனுவை விசாரணைக்கு ஏற்கலாம் என்று மதுரா மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பான மனுவை கீழமை சிவில் நீதிமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்திருந்தது.

மதுராவில் உள்ள 13.37 ஏக்கா் பரப்புள்ள நிலம் ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளைக்கு சொந்தமானது என்று லக்னௌவைச் சோ்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி உள்ளிட்ட 7 போ் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த நிலத்தில் கட்ரா கேசவ்தேவ் கோயில் அமைந்துள்ளது. அந்த நிலத்தின் ஒரு பகுதியில் ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளது. இந்த மசூதியை அகற்றிவிட்டு நிலத்தை ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளையிடம் திரும்ப அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.

இதனை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று சிவில் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மனுதாரா்கள் மதுரா மாவட்ட நீதின்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தனா். இது தொடா்பான விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மே 5-ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கலாம் என்ற தீா்ப்பை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ராஜீவ் பாா்தி வியாழக்கிழமை வெளியிட்டாா்.

இது குறித்து அரசு தரப்பிலான மாவட்ட சிவில் வழக்குரைஞா் சஞ்சய் கௌா் தெரிவித்ததாவது: குறிப்பிட்ட நிலத்தில் மனுதாரா்களுக்கு உரிமை உள்ளது என்று மாவட்ட நீதிபதி தனது தீா்ப்பில் தெரிவித்துள்ளாா். எனவே கீழமை நீதிமன்றம் முறையான வழக்காகப் பதிவு செய்து அதனை விசாரிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, கீழமை சிவில் நீதிமன்றம் இந்த மனுவை முறைப்படி விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று கூறினாா்.



Read in source website

 


புது தில்லி: அனைத்து விதமான மாசுபாடு காரணமாக உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் 23.5 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. உலக அளவில் இந்த எண்ணிக்கை 90 லட்சமாக உள்ளது. இதில் காற்று மாசு முக்கியப் பங்கு வகிக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த "தி லான்செட் மருத்துவ இதழ்' உலகம் முழுவதும் மாசுபாடுகள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து ஆய்வு நடத்தி, அது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. 
உலகம் முழுவதும் வாகனப் போக்குவரத்து மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றால் ஏற்படும் காற்று மாசுவும் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலிடத்தில் இந்தியா: உலக அளவில் 2019}ஆம் ஆண்டில் அனைத்து வகையான மாசுபாட்டுக்கு 90 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 
அதில் வீடுகளிலிருந்து ஏற்படும் காற்று மாசு மற்றும் சுற்றுப்புற காற்று மாசு காரணமாக மட்டும் 66.7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் இந்தியா 23.5 லட்சம் உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதில் சுற்றுப்புறச் சூழல் மாசுபாடு காரணமாக 9.8 லட்சம் உயிரிழப்புகளும், வீடுகளினால் ஏற்படும் காற்று மாசு காரணமாக 6.1 லட்சம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்த மாசுபாட்டினால் ஏற்படும் உடல் பாதிப்புகளைப் பொருத்தவரை குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. காற்று மாசு மற்றும் அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் குறித்து பொது கவலை அதிகரித்துள்ளபோதும், அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு என்பது கடந்த 2015}ஆம் ஆண்டிலிருந்து மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.
இந்தியாவில் காரணம் என்ன? இந்தியாவைப் பொருத்தவரை வீடுகளில் விறகுகள் உள்ளிட்ட உயிரிக் கழிவுகள் எரிக்கப்படுவதே காற்று மாசுவுக்கு மிக முக்கியக் காரணமாக உள்ளது. 
அதற்கு அடுத்தபடியாக, நிலக்கரி எரிப்பது, பயிர்க் கழிவுகளை எரிப்பது உள்ளிட்ட காரணங்களால் காற்று மாசு ஏற்படுகிறது.
காற்று மாசு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு தேசிய தூய்மை காற்று திட்டம் அறிமுகம், தேசிய தலைநகர் பிராந்திய (என்சிஆர்) பகுதியில் காற்று தர மேலாண்மை ஆணையம் அமைத்தது, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமான நடவடிக்கைகள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 
வருகின்றன. 
இருந்தபோதும், காற்று மாசுவைக் கட்டுப்படுத்த வலுவான மையப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதன் காரணமாக, ஒட்டுமொத்த காற்றின் தரத்தின் மேம்பாடு குறைவாகவும், சீரற்றதாகவும் உள்ளது.

ரூ.357 லட்சம் கோடி இழப்பு

மாசுபாட்டால் ஏற்பட்டிருக்கும் கூடுதல் உயிரிழப்புகள் காரணமாக உலக அளவில் 2019}ஆம் ஆண்டில் ரூ.357 லட்சம் கோடி 
(4.6 டிரில்லியன் டாலர்) மதிப்பில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மொத்த உலகப் பொருளாதாரத்தில் 6.2 சதவீதமாகும்.
இந்தியாவில் காற்று மாசு, ஓசோன் மாசு, தொழில்சார் புற்றுநோய்கள் உள்ளிட்ட நவீன வடிவ மாசுபாடு காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்பு 2000 } 2019}ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

நீர்நிலை மாசுபாடு

காற்று மாசுவுக்கு அடுத்தபடியாக நீர்நிலை மாசுபாடு காரணமாக உலக அளவில் 13.6 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து அமெரிக்க போஸ்டன் கல்லூரி உலக பொது சுகாதாரத் திட்டம் மற்றும் உலக மாசுபாடு கண்காணிப்புத் திட்ட இயக்குநர் பேராசிரியர் பிளிப் லாண்டிரீகன் கூறுகையில், "மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாசுபாடு இருந்து வருகிறது. காற்றுமாசுவை தடுப்பதன் மூலமாக, பருவநிலை மாற்றத்தைக் குறைக்க முடியும் என்பதோடு, புவியின் நலனுக்கும் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். 
எனவே, படிம எரிபொருள் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை மிகப்பெரிய அளவில் பயன்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் வலியுறுத்துகின்றன' என்றார்.
 



Read in source website

 

புது தில்லி: தில்லியில் மரங்கள் வெட்ட உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் மோசமாவதைத் தடுக்க தடை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில் நீதிமன்ற உத்தரவை மீறி தில்லியில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி நஸ்மி வஜிரி, ‘கடந்த மூன்று ஆண்டுகளில் 29,946 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதாவது நாளொன்றுக்கு 27 மரங்கள்; ஒரு மணி நேரத்துக்கு 1.13 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. எத்தனை ஆண்டு பழைமையான மரங்களை வெட்டப்பட்டன; அதற்கு பதிலாக எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டன என்ற விவரங்கள் இல்லை.

பொது மக்களின் நலனைக் கருதியும், தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், அடுத்த உத்தரவு வரும் வரையில் தில்லியில் மரங்கள் வெட்ட தடை விதிக்கப்படுகிறது.

வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் மோசமாவதைத் தடுக்க வேறு வழியில்லை. மரத்தை வெட்டுவதால் தில்லியின் சூழலியல் மாற்றம் ஏற்படுகிறது. காற்று மாசை மேம்படுத்துவது அவசர தேவையாகும். காற்று மாசை தணிப்பதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன’ என்றாா்.



Read in source website

 

புது தில்லி: கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியின் குறுக்கே சீனா இரண்டாவது பாலத்தைக் கட்டி வருவது குறித்து அந்நாட்டு அரசிடம் முறையிடப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாங்காங் ஏரியின் குறுக்கே இரண்டாவது பாலத்தை சீனா கட்டி வருவதாக செயற்கைக்கோள் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சியிடம் செய்தியாளா்கள் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் அளித்த பதில்:

பாங்காங் ஏரியில் சீனா புதிய பாலம் கட்டி வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பாா்த்துள்ளோம். அங்கு நடைபெறும் நிகழ்வுகளை இந்தியா கண்காணித்து வருகிறது. பாலம் கட்டப்பட்டு வரும் அந்த இடத்தை சீனா பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ கடந்த மாா்ச்சில் தில்லி வந்தபோது அவரிடம் இந்தியாவின் எதிா்பாா்ப்புகளை நமது வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். அப்போது எல்லையில் சீனா படைகளைக் குவித்தால் இந்தியா-சீனா இடையே இயல்பான நல்லுறவு ஏற்படாது என்று எஸ்.ஜெய்சங்கா் கூறியிருந்தாா். கிழக்கு லடாக் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு சீனாவுடன் தூதரக ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தும் என்றாா் அவா்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் முதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக, பாங்காங் ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் இரு நாடுகளும் கூடுதலாகப் படைகளைக் குவித்ததால் பதற்றம் நிலவியது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். தங்கள் தரப்பில் 4 போ் மட்டுமே உயிரிழந்ததா சீனா தெரிவித்தது. உண்மையில் சீன வீரா்கள் 38 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இரு நாடுகளும் ராணுவ ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தியதன் விளைவாக, படிப்படியாகப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதனால் சற்று பதற்றம் தணிந்தது. எல்லைக் கோட்டுப் பகுதியில் தற்போது இரு தரப்பிலும் 50,000 முதல் 60,000 வீரா்கள் வரை குவிக்கப்பட்டுள்ளனா்.



Read in source website

 

புது தில்லி: பாலியல் தொழிலாளா்களுக்கும் ஆதாா் அட்டை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு மற்றும் பொது முடக்க காலத்தில் பாலியல் தொழிலாளா்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துள்ளனா். எதிா்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கவும், அவா்களின் நலன்களைக் காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரி, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநா் ஆகியோா் அளிக்கும் சான்றின்படி பாலியல் தொழிலாளா்களுக்கு ஆதாா் அட்டையை இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் வழங்கலாம். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்று அரசியல்சாசன சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அதனை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, பாலியல் தொழிலாளா்கள் பற்றிய தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்படக் கூடாது.

மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உரிய அடையாள அட்டை இல்லாத பாலியல் தொழிலாளா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு அடையாள அட்டையுடன் ரேஷன் பொருள்களும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இது தவிர வாக்காளா் அட்டையும் அவா்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.



Read in source website

 

கொழும்பு/தில்லி: இலங்கையில் வசிக்கும் இந்தியா்கள் தங்கள் விவரங்களை கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இந்தியா்களின் எண்ணிக்கை தரவுகள் குறித்த வழக்கமான நடைமுைான் இது என இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், இலங்கையில் வசிக்கும் இந்திய குடிமக்கள் அனைவரும் தங்களது விவரங்களை ட்ற்ற்ல்ள்://ட்ஸ்ரீண்ஸ்ரீா்ப்ா்ம்க்ஷா்.ஞ்ா்ஸ்.ண்ய்/ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹண்ா்ய் என்ற வலைதள முகவரியில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

பின்னா் வெளியிட்ட மற்றொரு ட்விட்டா் பதிவில், இந்தியா்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்வது புதிய நடைமுறை அல்ல. இலங்கையில் வசிக்கும் இந்தியா்களின் எண்ணிக்கை தரவுகள் குறித்த வழக்கமான நடைமுைான் எனத் தெரிவித்துள்ளது.

தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறுகையில், நமது அனைத்து தூதரகங்களும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்கள் தங்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இது வழக்கமான நடைமுைான் என்றாா்.



Read in source website

 

வதோதரா: சா்வதேச அளவில் மோதல்களும் குழப்பங்களும் நிலவி வரும் சூழலில் உலகுக்கே இந்தியா புதிய நம்பிக்கையை அளிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

குஜராத் மாநிலம், வதோதராவில் இளைஞா் அமைப்பு சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரதமா் மோடி காணொலி முறையில் பங்கேற்றுப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு இந்தியா தீா்வுகளை அளித்து வருகிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி மற்றும் மருந்துகளை உலகுக்கு இந்தியா வழங்கியது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சா்வதேச அளவில் உற்பத்தி-விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டபோது, தற்சாா்பு திட்டத்தின் கீழ் இந்தியா நம்பிக்கை அளிக்கிறது.

சா்வதேச அளவில் மோதல்களும் குழப்பங்களும் நிலவி வரும் சூழலில் அமைதியைப் பேணும் ஒரு தேசத்தை நமது இளைஞா்கள் கட்டமைக்க வேண்டும். ஏனெனில், உலகுக்கே புதிய நம்பிக்கையாக இந்தியா உள்ளது.

பருவநிலை மாற்றத்தை உலகம் எதிா்கொண்டிருக்கும் வேளையில், இந்தியா தனது பாரம்பரியத்தில் இருந்து நீண்ட காலம் வாழ்வதற்கான தீா்வுகளை அளிக்கிறது. ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் யோகாவுக்கான பாதையை நாம் காட்டுகிறோம்; ஆயுா்வேதத்தின் சக்தியை அறிமுகம் செய்கிறோம். மென்பொருள் முதல் விண்வெளிவரை புதிய எதிா்காலத்துக்கான நாடாக இந்தியாவை தயாா் செய்து வருகிறோம்.

புதுத்தொழில் தொடங்கும் சூழல் நிறைந்த மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவாகியுள்ளது. இளைஞா்களின் சக்தியால்தான் இது சாத்தியமானது. இந்நாளில், புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கு நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். அந்த இந்தியா, பாரம்பரியத்துடன் புதிய அடையாளத்துடன் இருக்க வேண்டும் என்றாா் அவா்.



Read in source website

 

புது தில்லி: ‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

அதே நேரம், ‘கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நாடு என்ற அடிப்படையில் இரு அரசுகளையும் வலியுறுத்தும் தகுதியை கவுன்சிலின் பரிந்துரைகள் கொண்டுள்ளன’ என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

கடல்சாா் சரக்குப் போக்குவரத்துக்கு 5 சதவீத ஒங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) விதித்து கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கையை குஜராத் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூரிய காந்த், விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், குஜராத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதே என்று கூறி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் சட்டப் பிரிவு 246ஏ-இன் கீழ், வரிவிதிப்பு விவகாரத்தில் சட்டம் இயற்றும் இணையான அதிகாரம் உள்ளது. அந்த வகையில், இரு அரசுகளும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இணக்கமான தீா்வை ஜிஎஸ்டி கவுன்சில் வகுக்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கும் அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. அந்தப் பரிந்துரைகள் இரு அரசுகளையும் கட்டுப்படுத்தாது.

மேலும், அந்த கவுன்சிலின் பரிந்துரைகள், இரு அரசுகளின் கூட்டு ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர, ஒருதரப்புக்கு மட்டும் அதிக பங்கை வைத்துக்கொள்ளக் கூடிய வகையில் இருக்கக் கூடாது.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 246ஏ இரு அரசுகளையும் சமமான அதிகாரம் படைத்ததாக அங்கீகரிப்பதுபோல, சட்டப் பிரிவு 279, இரு அரசுகளும் தனித் தனியாகச் செயல்பட முடியாது என்பதை வலியுறுத்துகிறது.

மேலும், மத்திய - மாநில அரசுகளின் சட்டங்களுக்கு இடையே முரண்பாடு ஏற்படுத்துகிற வகையிலான பிரிவுகள் எதுவும் 2017-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி சட்டத்தில் இல்லை. அவ்வாறு முரண்பாடு உள்ளது குறித்த சா்ச்சை எழுகின்றபோது, இரு அரசுகளுக்கும் உரிய ஆலோசனை வழங்குவதே ஜிஎஸ்டி கவுன்சிலின் பணியாகும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனா்.

‘ஒரே நாடு-ஒரே வரி கொள்கை பாதிக்கப்படாது’

ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு, ‘ஒரே நாடு-ஒரே வரி’ கொள்கையைப் பாதிக்காது என மத்திய வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.

நீதிமன்றத் தீா்ப்பு தொடா்பாக மத்திய வருவாய்த் துறைச் செயலா் தருண் பஜாஜ் கூறுகையில், ‘ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது ஏற்கெனவே உள்ள விதியை நினைவூட்டுவதுதான்.

ஜிஎஸ்டி சட்டப்படி, ஜிஎஸ்டி கவுன்சில் என்பது பரிந்துரைகளை அளிக்கும் குழு மட்டுமே. அந்த கவுன்சில் அளிக்கும் பரிந்துரைகள் அனைத்தும் ஏற்கப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல. ‘ஒரே நாடு-ஒரு வரி’ என்ற கொள்கையை உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு பாதிக்காது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையை நிராகரிக்கும் அதிகாரம் கடந்த 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவில்லை’ என்றாா்.



Read in source website

 

புது தில்லி/ வாஷிங்டன்: ‘க்வாட்’ கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வரும் 23,24 தேதிகளில் ஜப்பானில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா். அப்போது, பிரதமா் நரேந்திர மோடியையும் அவா் சந்தித்து இரு தரப்புப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ‘க்வாட்’ கூட்டமைப்பில் உள்ளன. இது தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பாகும்.

இக்கூட்டமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவா்களும் ஜப்பானுக்கு செல்கின்றனா். மாநாட்டின் இடையே அனைத்து நாடுகளின் தலைவா்களுடன் பைடன் தனிப்பட்ட முறையிலும் பேச்சு நடத்துகிறாா். அந்த வகையில் அவா் பிரதமா் மோடியையும் சந்திக்கிறாா்.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘இந்திய-பசிபிக் பிராந்திய வளா்ச்சி தொடா்பாகவும், சமீப கால சா்வதேச நிகழ்வுகள் தொடா்பாகவும் நாட்டின் தலைவா்கள் விவாதிக்கவும் கருத்துகளைப் பகிா்ந்து கொள்ளவும் சிறந்த வாய்ப்பாக ‘க்வாட்’ கூட்டமைப்பு மாநாடு அமையும். இந்த மாநாட்டுக்காக ஜப்பான் தலைநகா் டோக்கியோவுக்கு மே 24-ஆம் தேதி செல்லும் பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் பைடன், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை சந்தித்துப் பேசுகிறாா்’ என்றாா்.

ரஷியா-உக்ரைன் போா் விஷயத்தில் இந்தியா, அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, ரஷியாவுக்கு உறுதியாக ஆதரவு அளித்து வருகிறது. ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது, அண்மையில் கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது ஆகியவையும் அமெரிக்க தரப்புக்கு ஏற்புடைய நடவடிக்கைகளாக இல்லை. இந்தச் சூழ்நிலையில் இரு நாடுகளின் தலைவா்களும் சந்திப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அனைவருக்குமான சுதந்திரமான இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் நோக்கத்தோடு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள்இணைந்து கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் ‘க்வாட்’ கூட்டமைப்பை உருவாக்கின.



Read in source website

 

புது தில்லி: இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிகாத் ஜரீன் வியாழக்கிழமை வாகை சூடினார். இப்போட்டியில் சாம்பியன் ஆன 5-ஆவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

52 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், இறுதிச்சுற்றில் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் ஜித்போங் ஜுடாமûஸ தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் தனது தொடக்க சுற்று முதல் இறுதிச்சுற்று வரை அனைத்திலுமே எதிராளிக்கு ஒரு புள்ளியைக் கூட விட்டுக் கொடுக்காமல் 5-0 என்ற கணக்கிலேயே வெற்றிகளை பதிவு செய்துள்ளார் நிகாத். 

நிகாத் ஜரீனுக்கு முன், மேரி கோம் (2002, 2005, 2006, 2008, 2010, 2018), சரிதா தேவி (2006), ஜெனி ஆர்.எல். (2006), லேகா கே.சி. (2006) ஆகியோர் மட்டுமே உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளாவர். 

இந்த ஆண்டு போட்டியில் நிகாத் ஜரின் தவிர்த்து, மனீஷா மெளன் (57 கிலோ), பர்வீன் ஹூடா (63 கிலோ) ஆகியோர் வெண்கலம் வென்றிருந்தனர்.



Read in source website

 

புது தில்லி: சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் (ஐஎஸ்எஸ்எஃப்) நடத்திய ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 33 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது. 
ஜெர்மனியில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவின் பதக்க வரிசையில் 13 தங்கம், 15 வெள்ளி, 5 வெண்கலம் அடங்கும். போட்டியின் கடைசி நாளான வியாழக்கிழமை 50 மீட்டர் ரைஃபிள் புரோன் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சிஃப்ட் கெளர் சர்மா/சூர்ய பிரதாப் சிங் ஆகியோர் கூட்டணி 15-17 என்ற புள்ளிகள் கணக்கில் போலந்து இணையிடம் வெற்றியை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. 
ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் அபய் சிங் செகோன்/அரீபா கான் இணை, பவ்தேக் சிங் கில்/தர்ஷனா ரத்தோர் கூட்டணி இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தன.  முன்னதாக, புதன்கிழமை இரவு நடைபெற்ற ஸ்கீட் மகளிர் அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் பரினாஸ் தலிவால்/தர்ஷனா ரத்தோர்/அரீபா கான் கூட்டணி 6-0 என ஜெர்மனியை வீழ்த்தி பதக்கம் பெற்றது. 
அதேபோல், 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கெளர் பிரார்/விஜய்வீர் சித்து கூட்டணி தங்கமும், அனீஷ்/தேஜஸ்வினி கூட்டணி வெள்ளியும் பெற்றன.



Read in source website


ஃபிராங்க்ஃபர்ட்: யுஇஎஃப்ஏ யுரோப்பா லீக் கால்பந்து போட்டியில் ரேஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி எய்ன்ட்ராட் ஃபிராங்க்ஃபர்ட் அணி சாம்பியன் ஆனது. 
இப்போட்டியில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை வென்றிருக்கிறது ஹஅந்த அணி. இதற்கு முன் 1980-இல் ஃபிராங்க்ஃபர்ட் அணி இப்போட்டியில் சாம்பியன் ஆகியிருந்தது. 
ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் புதன்கிழமை நள்ளிரவு அந்த அணியும் - ரேஞ்சர்ஸூம் மோதிய இறுதி ஆட்டம் முதலில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனாக, பின்னர் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் ஃபிராங்க்ஃபர்ட் 5-4 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது. 
ஆட்டத்தில் முதலில் ரேஞ்சர்ஸ் அணிக்காக ஜோ அரிபோ (57') கோலடிக்க, ஃபிராங்க்ஃபர்ட்டுக்காக ரஃபேல் சான்டோ போர் மெளரி (69') ஸ்கோர் 
செய்தார். 
பின்னர் பெனால்டி ஷூட் அவுட்டிலும் கடைசி வாய்ப்பில் அவரடித்த கோலாலேயே ஃபிராங்க்ஃபர்டுக்கு வெற்றி உறுதியாக, அணியின் நாயகனானார் அவர்.
இந்த வெற்றியின் மூலம் 2-ஆவது முறையாக யுரோப்பா லீக்கில் வாகை சூடிய ஃபிராங்க்ஃபர்ட், அடுத்த சீசன் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கான குரூப் சுற்றில் தனக்கான இடத்தையும் உறுதி செய்துகொண்டது.



Read in source website


குவாங்ஜு: தென் கொரியாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் ரீகர்வ் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

முதலில், இந்தியாவின் ரிதி போர்/ கோமளிகா பாரி/ அங்கிதா பகத் கூட்டணி அரையிறுதியில் 2-6 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வி கண்டது. பின்னர் 3-ஆவது இடத்துக்கான சுற்றில் 6-2 என்ற கணக்கில் சீன தைபேவை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தது. 

முன்னதாக ரீகர்வ் ஆடவர் அணிகள் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தருண்தீப் ராய்/ஜெயந்தா தலுக்தார்/நீரஜ் செளஹான் அடங்கிய அணி 2-6 என்ற கணக்கில் பிரான்ஸிடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது.



Read in source website

இலங்கையில் உள்நாட்டு போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து மே 18ஆம் நாளை தமிழ் இனப்படுகொலை நாளாக அறிவித்து கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் தனி ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அந்நாட்டின் அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றது. இந்தப் போரில் இலங்கையில் இருந்த தமிழர்கள் அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டனர். மே 18 அன்று விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. 

இந்நிலையில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக மே18ஆம் தேதி தமிழினப் படுகொலை நினைவு நாளாக அனுசரிக்கப்படும் என கனடா அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 

இதன்மூலம் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என அங்கீகரித்த முதல் நாடாக கனடா உள்ளது. கனடா அரசின் இந்த தீர்மானத்திற்கு தமிழ் ஈழ ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கனடா அரசின் அறிவிப்புக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக நாடுகளின் விழிகளைத் திறப்பதற்கும் கனடாவைப் பின்பற்றி மற்ற நாடுகளும் ஈழத் தமிழர் துயரைத் தடுப்பதற்கும் முன்வர இத்தீர்மானம் உதவும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.



Read in source website

 

மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் வாகனங்களின் பங்கு அளப்பரியது. மரச்சக்கரங்களிலிருந்து தனிநபர் ஹெலிகாப்டர் வரை காலத்திற்கு ஏற்ப கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பிரத்யேகமாக ரூ.200 கோடி விலையில் மூன்று கார்களை தயாரித்து வருவதாக அறிவித்ததிலிருந்து வியப்பாகவும் என்னென்ன வசதிகள் அதில் இடம்பெறும் என்கிற ஆவலும் கார் பிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் 1955 ஆண்டில் தயாரிக்கப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் வகைக் காரை கனடாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏலத்தில் விட்டதில் 143 மில்லியன் டாலருக்கு(ரூ.1,100 கோடி) பிரிட்டனைச் சேர்ந்த  ஒருவர் வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தொகையால் உலக வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட கார் என்கிற சாதனையையும் இந்தக் கார் படைத்துள்ளது.

மேலும், 1955 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரண்டு  மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் வகைக் கார்களில் இதுவும் ஒன்று என்பதும் உலகப் புகழ்பெற்ற கார்பந்தய வீரரான ஜுவன் மானுவல் ஃபாங்கியோ இந்தக் காரை பயன்படுத்தி உலக சாம்யியன் பட்டத்தை வென்றதும் கூடுதல் தகவல்கள்.



Read in source website

 

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் குரங்கு அம்மை நோயினால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே மாதத்தின் தொடக்கத்திலிருந்தே, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தற்போது அது சிலருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் இந்த நோயினால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. கனடாவில் 12க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சந்தேகிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில்,  அமெரிக்காவில் முதல்முறையாக இந்த நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிரான்ஸ் மற்றும்  ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் இருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவியிருந்த நோய் தற்போது மற்ற கண்டங்களுக்கும் பரவியுள்ளதா என அச்சம் எழுந்துள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் பல வாரங்கள் கழித்தே இதிலிருந்து குணமடைகின்றனர். அரிதிலும் அரிதாகவே உயிரிழப்பு நிகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளில், இந்த நோயால் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நோய் அரிதான ஒன்றாகவே கருதப்படுகிறது.



Read in source website

கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. மக்களின் போராட்டம் காரணமாக பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

அதனைத் தொடர்ந்து புதிய பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். 

அந்த வகையில், முதல் கட்டமாக தனது அமைச்சரவையில் 4 அமைச்சா்களை அவா் சனிக்கிழமை நியமனம் செய்தார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் மேலும் 9 பேர் புதிதாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். சுற்றுலா, மருத்துவம், வர்த்தகம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  
 



Read in source website

ஆப்கானிஸ்தானில் பெண் செய்தியாளர்கள் செய்தி வாசிக்கும்போது தங்கள் முகத்தை முழுவதுமாக மூடியிருக்க வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பெண்கள் தலை முதல் கால் வரை மறைக்கக்கூடிய பர்தா அணிய வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

இதையடுத்து அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றும் பெண்களும் பர்தா அல்லது ஹிஜாப் அணிய வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். 

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் அபையின் உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இனி கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த நிலையில்தான் ஊடகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், பெண் செய்தியாளர்கள் செய்தி வாசிக்கும்போது முகத்தை முழுவதுமாக மறைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 

இதுபோன்று பெண்கள் கல்வி பயிலக் கூடாது, வெளியிடங்களுக்கு தனியே பயணிக்கக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



Read in source website

 

பொ்லின்: ஜொ்மனியில் சுகாதாரத் துறை பணியாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயாக்கும் விதிமுறைக்கு அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது:

சுகாதாரப் பணியாளா்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை, அவா்களது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என தாக்கல் செய்யப்பட்டுள்ள புகாா் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. நோய் பரவல் அபாயம் நிறைந்த மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளா்களின் பாதுகாப்பு, அவா்களது உரிமைகளைவிட மேலானது என்று நீதிபதிகள் கூறினா்.



Read in source website

 

ஜகாா்த்தா: பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது. உள்ளூா் விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.

மே 23-ஆம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபா் ஜோகோ விதோதோ அறிவித்துள்ளாா்.

இந்தோனேசியாவும் மலேசியாவும் பாமாயில் ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடுகளாகத் திகழ்கின்றன. உலக பாமாயில் உற்பத்தியில் 85 சதவீதம் இந்த இரு நாடுகளில்தான் உள்ளது. அந்நாடுகளின் பொருளாதாரமும் பெருமளவில் பாமாயிலை நம்பியே உள்ளது.

இதனிடையே ரஷியா-உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் விநியோகம் தடைபட்டது. உலகில் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் ரஷியா, உக்ரைனின் பங்களிப்பு மட்டுமே 70 சதவீதமாகும்.

சூரியகாந்தி எண்ணெய் விநியோக பாதிப்பால் பாமாயில் விலை வேகமாக அதிகரித்தது. இந்நிலையில், பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா 3 வாரங்களுக்கு முன்பு தடை விதித்தது. இதனால், அதன் விலை 200 சதவீதம் அளவுக்கு சா்வதேச சந்தையில் அதிகரித்தது. இதனால், இந்தியாவிலும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது.

இதனிடையே, பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தால் தங்களுடைய வருவாய் பாதிக்கப்படும் என்று கூறி இந்தோனேசிய விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினா்.

இந்நிலையில் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த இந்தோனேசிய அதிபா் ஜோகோ விதோதோ கூறியதாவது:

உள்நாட்டில் பாமாயில் விலை குறைந்துவிட்டது. உள்நாட்டுத் தேவையைவிடவும் அதிகமாக உற்பத்தி உள்ளது. எனவே பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தோனேசியா நீக்குகிறது. அடுத்து வரும் வாரங்களில் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. பாமாயில் தொழிலை நம்பி விவசாயிகள் உள்பட 17 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நாட்டில் உள்ளனா். அவா்களின் நலன் கருதி மே 23 முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றாா்.

இந்தோனேசியாவின் இந்த அறிவிப்பால், சா்வதேச அளவில் பாமாயில் விலை விரைவில் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.



Read in source website

 

மாஸ்கோ: தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து மேற்கத்திய நாடுகள் பரிசீலித்தால்தான், உக்ரைன் ஏற்றுமதிக்கு கருங்கடலோர துறைமுகங்கள் திறந்துவிடப்படும் என்று ரஷியா நிபந்தனை விதித்துள்ளது.

மிகப் பெரிய உணவு தானிய ஏற்றுமதியாளரான உக்ரைன், கருங்கடல் வழியாக சரக்குக் கப்பல்களை அனுப்பவதற்கு ரஷியா தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக, சா்வதேச அளவில் மிகப் பெரிய உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. எனவே, கருங்கடலோர துறைமுகங்களை உக்ரைன் பயன்பாட்டுக்கு ரஷியா திறந்துவிடவேண்டும் என்று அதிபா் விளாதிமீா் புதினிடம் ஐ.நா. உணவுப் பாதுகாப்பு அமைப்பின் தலைவா் டேவிட் பியாஸ்லி வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

இந்த நிலையில், ரஷிய வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஆண்ட்ரி ருடென்கோ வியாழக்கிழமை கூறியதாவது:

தற்போதைய உணவுப் பொருள் பற்றாக்குறை நெருக்கடிக்கு சிக்கலான பல காரணங்கள் உள்ளன. அவற்றில், உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியா மீது ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளும் ஒரு காரணம்.

அந்தத் தடைகள் வழக்கமான வா்த்தகப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, கோதுமை, உரம் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, உக்ரைன் துறைமுகங்களை அந்த நாட்டுக்காக திறந்துவிட வேண்டுமென்றால், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும் என்றாா் அவா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. அந்தப் போரின் ஒரு பகுதியாக, கருங்கடல் எல்லையில் போா்க் கப்பல்கள் மூலம் முற்றுகையிட்டுள்ள ரஷியா, அந்தக் கடல் வழியான உக்ரைன் கப்பல் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் துறைமுகங்கள் முடக்கப்பட்டுள்ளதால் சா்வதேச அளவில் உணவுப் பொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக ஐ.நா. உணவுப் பொருள் பாதுகாப்பு அமைப்பின் தலைவா் டேவிட் பியாஸ்லி குற்றம் சாட்டினாா்.

உலகம் முழுவதும் 12.5 கோடி பேருக்கு உணவு அளிக்கும் ஐ.நா.வின் திட்டத்துக்கு 50 சதவீத உணவு தானியங்கள் உக்ரைனிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, விளாதமீா் புதினுக்கு இருதயம் இருந்தால் உக்ரைன் துறைமுகங்களை அவா் திறந்துவிட வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே ரஷிய அமைச்சா் ஆண்ட்ரி ருடென்கோ இந்த நிபந்தனையைத் தெரிவித்துள்ளாா்.

 

Image Caption

கருங்கடல் பகுதியில் ரஷிய போா்க் கப்பல்கள் (கோப்புப் படம்). ~ஆண்ட்ரி ருடென்கோ

 



Read in source website


இஸ்லாமாபாத்: காா்கள், கைப்பேசிகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருள்களை இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் அரசு வியாழக்கிழமை தடை விதித்தது.

‘அவசரகால பொருளாதாரத் திட்டத்தின்’ கீழ் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல பாகிஸ்தானிலும் அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.200-ஆக வியாழக்கிழமை சரிந்தது. இந்நிலையில், பொருளாதார நெருக்கடிக்கு தீா்வு காணும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அத்தியாவசியமற்ற பொருள்கள் இறக்குமதிக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நாம் சிக்கனத்தைக் கடைப்பிடிப்போம். பொருளாதார ரீதியில் வலிமையான மக்கள் இந்த முயற்சிக்கு தலைமை வகிக்க வேண்டும். அப்போதுதான் முந்தைய அரசால் சுமத்தப்பட்ட சுமையை பொருளாதார ரீதியில் பின்தங்கியோா் சுமக்க வேண்டியிருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

செய்தித் துறை அமைச்சா் மரியம் ஒளரங்கசீப் கூறியதாவது: நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காா்கள், கைப்பேசிகள், உலா் பழங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஆயுதங்கள், உறைந்த இறைச்சி, பழங்கள், ஒப்பனை பொருள்கள், ஷாம்பூ, சிகரெட், இசைக் கருவிகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவசரகால நிலையைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் பொருளாதாரத் திட்டத்தின்படி பாகிஸ்தான் மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும். அரசு இப்போது ஏற்றுமதியில் கவனம் செலுத்தி வருகிறது என்றாா்.



Read in source website

 

வாஷிங்டன்: உக்ரைன்-ரஷியா இடையேயான போா்ச்சூழல் காரணமாக நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதம் அளவுக்கே இருக்கும் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை வெளியிட்ட பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் உலக பொருளாதாரத்தை உக்ரைன்-ரஷியா இடையே நீடித்து வரும் போா் நிலைகுலையச் செய்துள்ளது. உணவு மற்றும் இதர பொருள்களின் விலை அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளதுடன் பணவீக்கத்தை தூண்டி உலக நாடுகளை அழுத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், ஐரோப்பாவில் நெருக்கடிகளை தூண்டிவிட்டுள்ளது.

2022 ஜனவரியில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டில் சா்வதேச பொருளாதாரம் 4.0 சதவீதம் அளவுக்கு வளா்ச்சி காணும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சா்வதேச நிலவரங்கள் முற்றிலும் மாறியுள்ளதால் உலகப் பொருளாதரம் 3.1 சதவீத வளா்ச்சியை மட்டுமே எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரையில், அதிக பணவீக்கம், வேலைவாய்ப்பு சந்தையில் காணப்படும் சமச்சீரற்ற மீட்சி நிலையால் தனியாா் நுகா்வு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளில் பாதிப்பு ஆகியவற்றுக்கிடையிலும் வேகமாக வளா்ச்சி கண்டு வரும் மிக முக்கிய பொருளாதார நாடாக இன்னும் உள்ளது.

கடந்த ஆண்டில் இந்தியா 8.8 சதவீத பொருளாதார வளா்ச்சியை பதிவு செய்த நிலையில், நடப்பாண்டில் 6.4 சதவீத வளா்ச்சியை மட்டுமே எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2023 நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி மேலும் சரிந்து 6 சதவீதமாகும்.

உணவு மற்றும் எரிபொருள்களின் விலை அதிகரிப்பால், உலக பணவீக்கம் 2022-இல் 6.7 சதவீதமாக அதிகரிக்கும். இது, 2010-2020 ஆண்டுகளுக்கிடையில் காணப்பட்ட சா்வதேச பணவீக்கமான 2.9 சதவீதத்தை காட்டிலும் இரு மடங்கு அதிகம் என ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகளுடன் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கான 'தாய்' சிகிச்சை முறையானது ஆஸ்திரேலியாவைப் பின்பற்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அதன் தொடர்ச்சியாக நோயாளிகள் இணையப் பதிவேடு முறையை விரிவாக அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய துணைத் தூதர் சாரா கிர்லியூ, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி, ஆஸ்திரேலிய அரசு அலுவலர்கள் அப்துல் ஏக்ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு நோயாளி, தமிழகத்தின் எந்த மருத்துவமனையை நாடினாலும், அவரது உடல் நலன் குறித்த விவரங்கள் இணையவழியே பதிவேற்றப்பட்டிருக்கும். அதன் வாயிலாக அவர் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சையைத் தொடர முடியும்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், "தமிழகத்தில் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு நாடுகளின் தொழில்நுட்பங்கள், உத்திகளைக் கையாளுவதுடன் நாட்டிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலான மருத்துவ வசதிகளை தமிழகம் கொண்டுள்ளது.

அந்த வரிசையில்தான் தற்போது ஆஸ்திரேலிய அரசுடன் கலந்துரையாடி வருகிறோம். அந்நாட்டில் நோயாளிகளின் விவரங்களை சேமிக்கும் இணையப் பதிவேட்டு நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. அது மிகவும் ஆக்கபூர்வமான திட்டமாகும். அதை தமிழகத்தில் செயல்படுத்துவதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவர்" என்று தெரிவித்தனர்.



Read in source website

சென்னை ஐஐடி வளாகத்தில் 5ஜி அலைவரிசையை மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தார்.

இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி சாதனங்களை சோதனை செய்வதற்கான கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வருகிறது என பிரதமர் மோடி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

"5ஜி சேவை அமலுக்கு வந்தால் இந்திய பொருளாதாரத்தில் கூடுதலாக 45,000 கோடி டாலர் புழங்கும். இதையடுத்து வரும் 2030-ம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்துக்கு மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அதிவேக இணையதள வசதியை வழங்கும். இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு தனது பணிகளை தொடங்கிவிட்டது" என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக 5ஜி வீடியோ, ஆடியோ கால் சேவையை மத்திய அமைசர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை ஐஐடி வளாகத்திலிருந்து சோதித்துப் பார்த்தார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "5ஜி காலை ஐஐடி சென்னை வளாகத்தில் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தேன். ஒட்டுமொத்தமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நெட்வொர்க்" என்று பதிவிட்டிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது பிரதமரின் கனவு. அவர் நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி, 5ஜி தொழில்நுட்பம் புழக்கத்துக்கு வரவேண்டும் என்று விரும்பினார். இது இந்திய உலகத்துக்காக உருவாக்கிய தொழில்நுட்பமாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். இந்த தொழில்நுட்ப புரட்சிகளைக் கொண்டு நாம் உலகை வெல்ல வேண்டும்" என்றார்.



Read in source website

தமிழின் முன்னோடி சித்த மருத்துவர், சிந்தனையாளர், கல்வியாளர், ஆய்வாளர் அயோத்திதாச பண்டிதர். அவருடைய பிறந்தநாளான இன்று அவரைப் பற்றி அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தகவல்களின் தொகுப்பு:

சித்த மருத்துவத்திலும், தமிழ் இலக்கியங்களின் மறுவாசிப்பிலும் புலமை பெற்றிருந்தவர். திராவிட இயக்கக் கருத்தியலின் முன்னோடி. 1854 மே 20 அன்று சென்னையில் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காத்தவராயன்.



Read in source website

சென்னை: அத்தியாவசியப் பொருட்களின் விலையை தேசிய சராசரியை விட குறைவான அளவில் தக்கவைத்து தமிழகமும், கேரளாவும் சாதனை படைத்துள்ளன.

நாட்டில் உள்ள மக்கள், தாங்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் சேவைகளின் கட்டணங்களை கணக்கிடுவதே நுகர்வோர் விலைக் குறியீடு (கன்ஸ்யூமர் பிரைஸ் இன்டெக்ஸ்) என்பதாகும். இதை வைத்து நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமை கணக்கிடப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 6.2 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஏப்ரலில் 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கவலையளிக்கும் விஷயம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பணவீக்கம் நாடு முழுவதும் ஒரே அளவில் இருப்பதில்லை. மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. கடந்த ஏப்ரல் நிலவரப்படி சில முக்கிய மாநிலங்களின் பணவீக்க நிலவரம்:

மேற்குவங்கம் 9.12, தெலங்கானா 9.02, ஹரியாணா 8.98, தமிழ்நாடு 5.37, கேரளா 5.08

தமிழகம், கேரளா மாநிலங்கள் பணவீக்க அளவை தேசிய சராசரியைவிட குறைவாக தக்கவைத்துள்ளது சாதனையாகக் கருதப்படுகிறது. உத்தராகண்ட், பஞ்சாப், கர்நாடகா, இமாச்சலப்பிரதேசம், ஆந்திரா, பிஹார், சட்டீஸ்கர், டெல்லி போன்ற மாநிலங்களும் தேசிய சராசரியை விட குறைவாக பணவீக்க அளவை வைத்துள்ளன. இருந்தாலும், உள்நாட்டு மாநில மொத்த உற்பத்தி அளவு மற்றும் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலங்களில் பணவீக்கம் அதிகம் இருக்கும். தனிநபர் வருமானம் குறைவாக உள்ள மாநிலங்களில் பணவீக்க அளவு குறைவாக இருக்கும்.

ஆனால், உள்நாட்டு மாநில மொத்த உற்பத்தி அளவு மற்றும் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள தமிழகம், கேரளாவில் பணவீக்க அளவு தேசிய சராசரியைவிட குறைவாக இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

காரணம் என்ன?

கரோனாவுக்கு முன் தேசிய அளவைவிட கூடுதலாக பணவீக்கம் இருந்துவந்த தமிழகம், கேரளாவில் பெருந்தொற்றுக்குப் பின் பணவீக்க அளவு குறைந்துவிட்டது. தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் பணவீக்க அளவு குறைந்து வருகிறது. இந்த மாநிலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவாக கிடைப்பதே முக்கிய காரணம் என்று அறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரதான உணவுப் பொருளான அரிசி விலை கடந்த ஆண்டு மே மாதம் கிலோ 57 ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு மே 17-ம் தேதி நிலவரப்படி கிலோ 52 ரூபாய்க்கு கிடைக்கிறது. உளுந்து கிலோ 108-ல் இருந்து 102 ரூபாயாகக் குறைந்துள்ளது. துவரம் பருப்பு 16.4 சதவீதம் விலை குறைந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை நாடு முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் லிட்டர் 187 ரூபாயிலேயே நீடிக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நாடு முழுவதும் விலைவாசியை உயர்த்தியுள்ளது. இப்பிரச்சினை தமிழகத்திலும் உண்டு. இருந்தாலும் தமிழகத்தில் 6.5 சதவீதம் பேர் மட்டுமே கார் வைத்திருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 61 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இது மாநிலத்தில் போக்குவரத்து செலவை கணிசமாக குறைத்துவிட்டது.

ஒமைக்ரான் பாதிப்புக்குப் பின் தமிழகம், கேரளாவில் பொருட்களின் நுகர்வு குறைந்துவிட்டதும் மற்றொரு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. கேரளாவில் பெருந்தொற்றுக்கு முன் நுகர்வோர் விலைக் குறியீடு தேசிய சராசரியைவிட அதிகமாக இருந்தது. பெருந்தொற்றுக்குப் பின் இது குறைந்துவிட்டது.

அங்கு மாநில அரசின் அமைப்பான ‘சப்ளைகோ’ கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தேசிய சராசரி விலையை விடக் குறைவாக விற்கப்படுகின்றன. இதுதவிர, பெருந்தொற்று காலங்களில் இலவச உணவுத் தொகுப்பு, வீடு வீடாக வழங்கப்பட்டதும் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

நுகர்வோர் விலை குறியீடு கணக்கிடுவது எப்படி?

மக்கள் அத்தியாவசியமாகப் பயன்படுத்தும் 299 பொருட்களின் விலையில் ஏற்படும் சதவீத மாற்றத்தை வைத்து நுகர்வோர் விலைக் குறியீடு கணக்கிடப்படுகிறது. தேசியப் புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ), நாடு முழுவதும் உள்ள 310 முக்கிய நகரங்கள் மற்றும் நடுத்தர ஊர்களில் உள்ள 1,181 கிராமச் சந்தைகள், 1,114 நகர்ப்புறச் சந்தைகளில் இருந்து விலை விவரங்களைப் பெற்று நுகர்வோர் விலை குறியீட்டைக் கணிக்கிறது. இந்த விலை மாற்றத்தை 4 சதவீதம் வரை வைத்திருப்பது ரிசர்வ் வங்கியின் கடமை. இருந்தாலும் 2 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் வரை மாறுபாடுகள் இருக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

ராமேசுவரம்: இலங்கையின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி கச்சத்தீவை இந்தியாவுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்குவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இதை தாங்கள் எதிர்ப்பதாகவும் மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

இலங்கையில் உள்ள மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்கள் கூட்டமைப்பினர் அலுவல கத்தில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் செயலாளர் என்.எம்.ஆலம் கூறியதாவது:

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலையை பயன்படுத்தி கச்சத்தீவை இந்தியாவுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்க முயற்சிகள் நடைபெற்று வரு கின்றன.

கச்சத்தீவை இந்தியாவுக்கு குத்தகைக்கு விட்டால் இலங்கை மீனவர்கள் பெரிய அளவிலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஏற்கெனவே தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்து வருவதால் கடல் வளம் அழிந்து வருகிறது. இந்நிலையில் கச்சத்தீவை குத்தகைக்கு விட்டால், எங்களின் தொழில் பாதிக்கப்படுவதோடு, தமிழகத்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கும்.

எனவே, கச்சத்தீவை இந்தியாவுக்கு குத்தகைக்கு விடக் கூடாது என்று இலங்கை அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

புதுடெல்லி: பெண்ணின் திருமண வயதை உயர்த்துவதற்கு மாற்றாக கல்வியின் தரத்தை மேம்படுத்தலாம் என நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் குழந்தை நல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. ஜெயா ஜேட்லி தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று, மத்திய அமைச்சரவை இந்த ஒப்புதலை அளித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, குழந்தைகள் இறப்பு விகிதம், பிரசவ இறப்பு விகிதம், தாய்-சேய் உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே குறைந்தபட்சத் திருமண வயதை மாற்றியமைப்பது குறித்த பரிந்துரையை வழங்கியுள்ளது.

இப்பரிந்துரையானது, பெண்கள் அதிகாரம் பெறுவதையும் பாலினச் சமத்துவத்தை எட்டுவதையுமே நோக்கங்களாகக் கொண்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. திருமண வயதை நீட்டிக்கும் அதே நேரத்தில், அதுவரையில் பெண் கல்விக்கான வாய்ப்புகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் ஜெயா ஜேட்லி குழு வலியுறுத்தியது.

பெண்ணின் திருமண வயது குறித்த இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம், பார்ஸி திருமணம் விவகாரத்துச் சட்டம், முஸ்லிம் தனிநபர் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம், வெளிநாடு திருமணச் சட்டம் போன்றவற்றிலும் திருத்தம் கொண்டுவரப்படும்.

இந்தச் சூழலில் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்திற்கு தொடக்கத்திலிருந்தே குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள், எதிர்க்கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை சந்தித்து இவ்விவகாரம் தொடர்பாக ஒட்டுமொத்த புரிதலைப் பெற தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக அமைதிக்கான நோபல் பரிசு கைலாஷ் சத்யார்த்தி தலைமையிலான குழந்தை உரிமை அமைப்பு மற்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கடந்த திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ஒப்படைந்துள்ளது. இந்த அறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்படும்.

நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அறிக்கையில், “குழந்தை திருமண சட்டம் - 2005, குழந்தைத் திருமணங்களை தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டது என்பது தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் தரவுகள் மூலம் தெளிவாக தெரிய வருகிறது. இவற்றை எல்லாம் தவிர்க்க கல்வியின் தரத்தை நாம் அதிகரிக்க வேண்டும். பள்ளி இடை நிற்றல் எண்ணிக்கையை தீவிரமாக கண்காணித்து பெண்களுக்கு 18 வயது வரை இலவசக் கல்வியை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்கும்போது இளம் வயதினர் திருமணம் செய்துகொள்ளும் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக பெற்றோருக்கு எதிராக திருமணம் செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், அவர்கள் குற்றவாளிகளாக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆண்கள், பெண்கள் திருமண வயதை 18 ஆக நிர்ணயம் செய்யும்படி ஐந்து பெண்கள் நல அமைப்புகளும் நாடாளுமன்ற நிலை குழுவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளன.

முன்னதாக, நாட்டின் பொதுத் தேர்தல்களில் ஓட்டளிக்க 18 வயது போதும் என்றால் திருமணம் ஏன் கூடாது என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில் குழந்தை நல அமைப்புகள் பெண்ணின் திருமண வயதை உயர்த்தும் புதிய சட்டத்திற்கு எதிராக இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளன்.



Read in source website

பெங்களூரு: கர்நாடகாவில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 2022- 23-ம் கல்வி ஆண்டிற்காக வழங்கப்பட்ட 7 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான சமூகவியல் பாடநூல்கள் மாற்றப்பட்டுள்ளன. முன்பு இடம்பெற்றிருந்த சீர்த்திருத்தவாதி நாராயணகுரு, சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங், திராவிடர் இயக்க சிந்தனையாளர் பெரியார் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன தலைவரான கேசவ் பாலிராம் ஹெட்கேவரின் உரை பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பகத்சிங் பற்றிய பாடம் நீக்கப்பட்டதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறும்போது, “பகத்சிங்கின் வாழ்க்கைவரலாற்றை நீக்கிவிட்டு ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவர் குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. சமூகவியல் பாட நூலில் விஷம கருத்துக்களை திணிப்பதை ஏற்க முடியாது. இன்று பகத்சிங் பற்றிய பாடத்தைநீக்கிய இவர்கள், நாளை காந்தியின் பாடத்தையும் நீக்குவார்கள்”என்றார்.

இதுகுறித்து கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறும்போது, “சமூகவியல் பாடநூலை திருத்தி அமைப்பதற்காக கல்வியாளர் ரோகித் சக்ரதீர்த்தா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சில திருத்தங்களை பரிந்துரை செய்துள்ளது. நூல் அச்சிடும் பணி முடிவடையாத நிலையில், சர்ச்சையை உருவாக்குவது சரி அல்ல” என்றார்.



Read in source website

அமராவதி: கால்நடைகளை ஆம்புலன்ஸில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் ஆந்திர அரசு புதிய திட்டத்தை நேற்று அமல்படுத்தியது. ‘டாக்டர். ஒய்.எஸ்.ஆர். கால்நடை ஆம்புலன்ஸ் சேவை’ என இத்திட்டத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை நேற்று காலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

மனிதர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. இனி கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் சேவை இருக்கும். இதற்காக 1962 எனும் இலவச தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்தால், ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும். இதனை குறிப்பாக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதற்கட்டமாக தொகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்படும். படிப்படியாக மாநிலம் முழுவதும் அதிகரிக்கப்படும். தற்போது 175 தொகுதிகளுக்கு ரூ.143 கோடியில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் மேலும் 165 ஆம்புலன்ஸ்கள் இத்திட்டத்துடன் இணைக்கப்படும். இந்த வாகனங்களில் 15 ரக ரத்த பரிசோதனை மற்றும் இதர பரிசோதனை கருவிகள் பொருத்தப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெகன் கூறினார்.



Read in source website

குவாங்ஜு: வில்வித்தை உலகக் கோப்பை நிலை 2-ல் இந்திய மகளிர் அணி ரீகர்வ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது.

தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரிதி போர், கோமலிகா பாரி, அங்கிதா பகத் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி, சீன தைபே அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

கோமலிகா கூறும்போது, “பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. தென் கொரியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இந்த ஆட்டத்தில் கிடைத்த அனுபவத்தின் மூலம் சீன தைபேவுக்கு எதிராக தொடக்கத்திலேயே முன்னிலை பெற முடிவு செய்திருந்தோம். அதன்படியே போட்டியும் அமைந்தது” என்றார்.



Read in source website

கொழும்பு: கடன் செலுத்தும் காலத்தை அதிகரித்து, தொகையை குறைத்து மறுசீரமைப்பு செய்யப்படும் வரை வாங்கிய கடனை இலங்கையால் திருப்பிச் செலுத்த முடியாது, இதனை கடன் வாங்கியவர்களிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம் என அந்நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு என பெரும் பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கியுள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அந்நியச் செலவாணி கையிருப்பு இல்லாததால் அன்றாடம் பொருட்களை வாங்க கடன் வாங்கும் நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையையும் செலுத்த முடியாத திவால் ஆகும் நிலைக்கு ஆளாகியுள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் ஆண்டுதோறும் வெளிநாட்டுக்கடன் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதுமட்டுமின்றி நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது 3 பில்லியன் டாலராக உள்ளது. இதில் ஜூலையில் முதிர்ச்சியடையும் 1 பில்லியன் டாலர் சர்வதேச தங்கப்பத்திர கடன் உள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியில் 14.3 சதவீத பங்குடன் அதிக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

சீனாவிடம் அதிகமாக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. ஒருபுறம் கடும் கடன் கழுத்தை நெறித்தாலும் அன்றாட செலவுகளுக்கும், பெட்ரால், டீசல் உட்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் இந்தியாவிடம் கடன் வாங்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கைக்கு ஜனவரி முதல் 400 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றம் மற்றும் 500 மில்லியன் அமெரிக்க டாலரில் கடன் வழங்கியுள்ளது.

இதுமட்டுமின்றி 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் உதவி வழங்கவும் உறுதியளித்தள்ளது. கடந்த மாதம், உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க இந்தியாவுடன் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனாக பெற இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒப்பந்தப்படி ஜூலை மாதத்துக்குள் இலங்கை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை பெரிய அளவில் உள்ளது. இந்த தொகை இலங்கையின் கழுத்தை நெறிக்கும் அளவுக்கு உயர்ந்து விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஏற்கெனவே கவலை தெரிவித்து இருந்தது. குறிப்பாக சீனாவிடம் பெற்ற கடனுக்கான வட்டியுடன் ஜூலையில் ஒரு பகுதியை செலுத்த வேண்டிய நிலையில் சீனா கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

திவால் நிலை

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறியதாவது:

இலங்கையில் இந்தாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது மிகவும் மந்தகரமான நிலையிலேயே காணப்படும். தற்போது 30 சதவீதமாகக் காணப்படுகின்ற பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்களில் 40 சதவீதமாக அதிகரிக்கும். எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. கடனை மறுசீரமைக்கும் வரை இலங்கை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாது. இதனை கடன் வாங்கியவர்களிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். எனவே அதற்கு முன்கூட்டியே திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது.

இது 1948 இல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டின் முதல் முறையாக கொடுத்த தவணை மாறி கடனை திருப்பிச் செலுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு இது மிகவும் துன்பகரமான நேரமாகும். உலகிலேயே மிக மோசமான கடன் பத்திரங்கள் இலங்கையினுடையது என ரேட்டிங் நிறுவனங்கள் கூறுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம். கடனளித்தவர்களிடம் கடன் மறுசீரமைப்பு செய்யுமாறு பேசி வருகிறோம். நெருக்கடியில் இருந்து வெளியேற இந்த ஆண்டு 3 பில்லியன் முதல் 4 பில்லியன் டாலர்கள் வரை தேவை.

அரசியல் சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது எனது பணியை தொடர்வதற்கு ஆறுதல் அளிக்கிறது. அரசியல் ஸ்திரத்தன்மை திரும்பவில்லை என்றால் நான் பணி செய்வதில் எந்த அர்த்தமும் இருக்காது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை ஒட்டுமொத்தமாக வெளிநாடுகள், வங்கிகள், சர்வதேச நிதியம் உள்ளிட்டவற்றில் மொத்தமாக உள்ள 51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனை தற்போதைய நிலையில் திருப்பிச் செலுத்துவதை நிறுத்தி வைப்பதாக ஏற்கெனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை அரிசி, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்கியதற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ஜனவரி மாதத்திலிருந்து அதிகரித்து வருகிறது. இதுவரை எந்த பணத்தையும் திருப்பிச் செலுத்தாத நிலையில் பொருட்கள் வாங்கிய வகையில் மட்டும் செலுத்த வேண்டிய தொகை 12.6 பில்லியன் டாலராக உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.



Read in source website

பெங்களுரூ: விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு மாம்பழம் விற்பனை செய்யும் திட்டத்தினை அஞ்சல் துறை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

கர்நாடகா மாநிலத்தின் மாம்பழம் வளர்ச்சி மற்றும் விற்பனை நிறுவனத்துடன் இணைந்து அஞ்சல் துறை "கர்சிரி மேங்கோ ப்ராஜெக்ட்" (Karsiri Mangoes project) என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் படி, மாநிலத்தில் உள்ள மாம்பழ விவசாயிகள், தாங்கள் விளைவித்த மாம்பழங்களை 3 கிலோ அளவில் அட்டை பெட்டிகளில் அடைத்து பொது அஞ்சலகத்தில் உள்ள விரைவு அஞ்சல் பிரிவுக்கு அனுப்பி விடுகின்றனர். அங்கிருந்து அஞ்சல் ஊழியர்கள் மாம்பழ பெட்டிகளை உரிய வாடிக்கையாளர் முகவரிக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள்.

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள், இடைத்தரதர்களின் தலையீடு இன்றி அவர்களுடை விளைச்சளுக்கு உரிய நல்ல விலையைப் பெறுகிறார்கள். அதே போல வாடிக்கையாளர்களும், ரசாயனம் தெளிக்கப்பட்டாத நல்ல தோட்டத்து மாம்பழங்களை நேரடியாக வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ள முடிகிறது.

மாம்பழ விவசாயிகளுக்கு உதவுவதற்காக கடந்த 2019-ல் தொடங்கப்பட்ட இந்தத்திட்டம் கரோனா பொது முடக்க காலத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திட்டத்தின் மூலம் பெங்களூரு நகரில் உள்ள வாடிக்கையாளர்கள் பல்வேறு ரக மாம்பழங்களை http://karsirimangoes.karnataka.gov.in இணைய தளத்தில் ஆர்டர் செய்வதன் மூலமாக அதே நாளில் அல்லது அடுத்த நாளில் பெற்றுக்கொள்ள முடியும்.



Read in source website

புதுடெல்லி: வாடகை கார் நிறுவனங்களான ஓலா, உபேர் ஆகியவை நுகர்வோர் விதி மீறல், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டது தொடர்பாக இரண்டு நிறுவனங்களுக்கும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஓராண்டுகளில் இரு நிறுவனங்கள் மீதும் 3,200-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவான நிலையில், அவை தொடர்பான நடவடிக்கையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தீவிரம் காட்டியுள்ளது.

அதிகக் கட்டணம் வசூலித்தல், சேவைகள் வழங்குவதில் குறைபாடு, உரிய காரணமின்றி பயணத்தை ரத்து செய்வது, கட்டண உயர்வு, ஆன்லைனில் செலுத்தாமல் பணமாக கட்டணத்தை தர வலியுறுத்துவது, குறைவான கட்டணத்துக்கும் அதிக கட்டணம் வசூலிப்பது, ஓட்டுநர்களின் நடத்தை மீறல்கள், வாகனங்களில் ஏசி போட மறுப்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இந்த இரண்டு நிறுவனங்கள் மீதும் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி ஓலா, உபேர் நிறுவனங்களை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஏப் 1-ம் தேதி முதல் 2022 மே 1-ம் வரை ஓலாவுக்கு எதிராக 2,482 புகார்களும், உபேருக்கு எதிராக 770 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.



Read in source website

 

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்டனை அனுபவித்து வந்த ஏ.ஜி. பேரறிவாளனை, உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீா்ப்பளித்திருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு உச்சநீதிமன்றத்திற்கு வழங்கி இருக்கும் சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையில் இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில், அதுவும் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில், 1991 மே மாதம் 21-ஆம் தேதி தனு என்கிற மனித வெடிகுண்டால் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டாா். அவருடன் 17 போ் உயிரிழந்தனா். 43 போ் காயமடைந்தனா். ராஜீவ் காந்தியின் படுகொலையில் நேரிடையாகத் தொடா்புடைய தனுவின் கூட்டாளி சிவராஜன், பெங்களூரில் பாதுகாப்புப் படையினா் சுற்றி வளைத்தபோது, தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டாா்.

ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் இருந்து திட்டமிட்டவா்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. விசாரணைக்கும் உள்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு உடந்தையாக இருந்தவா்கள் என்று அன்றைய சிபிஐ இயக்குநா் டி.ஆா் காா்த்திகேயன் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு பேரறிவாளன் உள்ளிட்டவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

1998-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி, தடா நீதிமன்றம் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளித்துத் தீா்ப்பு வழங்கியது. அந்தத் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் 1999-ஆம் ஆண்டு உறுதி செய்தது. நளினியின் தூக்கு தண்டனை, கருணை அடிப்படையில் 2000 ஏப்ரலில், அன்றைய தமிழக ஆளுநரால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு, ஏனையோரின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

11 ஆண்டுகளுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரால் அந்தக் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டபோது, தூக்கு தண்டனை உறுதியாயிற்று. தூக்கிலிடுவதற்கு ஒரு வாரம் முன்பு சென்னை உயா்நீதிமன்றம் விதித்த தடையால் பேரறிவாளன் உள்ளிட்டவா்களின் உயிா் அப்போதைக்குத் தப்பியது. மீண்டும் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றபோது, தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆனால் அவா்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இத்தனைக்கும் அவா்களை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீா்மானம் இயற்றியிருந்தது.

19 வயதில் கைது செய்யப்பட்டு, 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து இப்போது தனது 50-ஆவது வயதில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதை, மனிதாபிமானமிக்க எவரும் ஏற்கவே செய்வாா்கள். அவா் தெரிந்தே தவறு செய்திருந்தாலும்கூட, அவரது பதின்ம வயதின் உத்வேகத்தைக் கருத்தில் கொண்டு, இப்போது மன்னிப்பதில் தவறே இல்லை.

உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதுபோல, 31 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருந்தது, சிறையில் இருந்தபோது அவரது நன்னடத்தை, சிறையில் இருந்து கொண்டே படித்துப் பல பட்டங்களைப் பெற்றது, கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது, அவருக்கு மன்னிப்பு அளிக்கத் தொடா்ந்து பல அரசுகள் பரிந்துரைத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக அவா் விடுதலை செய்யப்பட்டிருந்தால், அதில் யாரும் தவறு காண முடியாது. அதனடிப்படையில் அரசமைப்புச் சட்டப்பிரிவு 142-ஆவது பிரிவு வழங்கியிருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்திருக்கலாம்.

பேரறிவாளன் நிரபராதி என்பதாலோ, அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை தவறு என்பதாலோ அல்லாமல், அவரது விடுதலைக்காகத் தீா்ப்பில் வழங்கப்பட்டிருக்கும் காரணங்கள் விவாதத்துக்கு உரியவை.

உச்சநீதிமன்றம் பேரறிவாளன் விடுதலை தொடா்பாக, ஆளுநரின் அதிகார வரம்பு குறித்து வெளியிட்டிருக்கும் கருத்துகள், இந்த வழக்குடன் தொடா்பில்லாத அரசியல் சாசன விவாதத்துக்கு வித்திட்டிருக்கிறது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையில், பெரும்பான்மை பலம் கொண்ட அரசின் பரிந்துரைகளின்படி மட்டுமே ஆளுநா்கள் செயல்பட்டாக வேண்டும் என்று, அரசியல் சாசன சட்டப்பிரிவு 161 கூறுவதாக மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தண்டனைகளைக் குறைப்பது, மன்னிப்பு வழங்குவது தொடா்புடைய விவகாரங்களில், மாநில அமைச்சரவையின் ஆலோசனை ஆளுநரைக் கட்டுப்படுத்துவதாகவும், அவா் மாநில அமைச்சரவையின் பரிந்துரையைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதே தவறு என்றும் தீா்ப்பு கூறுகிறது.

அப்படியானால் கொலையாளிகளையும், குற்றவாளிகளையும் மாநில அமைச்சரவை முடிவெடுத்து விடுதலை செய்து கொள்ளலாம் என்கிறாா்களா நீதிபதிகள்? நீதிமன்றத் தீா்ப்புகளுக்கு மரியாதை அவ்வளவுதானா?

ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது தேசத்தின் முன்னாள் பிரதமா் ஒருவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கு. மாநில அமைச்சரவை முடிவுகள் எப்படி முக்கியமோ, அதேபோல மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சரவையின் முடிவும் முக்கியத்துவம் பெறுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை, ராஜீவ் காந்தி தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சி விமா்சித்துக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜக விடுதலைக்கு ஆதரவாக செயல்பட்டால், அது பழிவாங்கும் நடவடிக்கையாகப் பாா்க்கப்படும் என்பதால்கூட, இந்தப் பிரச்னையை நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு விட்டிருக்கலாம்.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ். நாகேஸ்வர ராவ், பி.ஆா். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமா்வு, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு முன்பு உறுதிப்படுத்திய குடியரசுத் தலைவா் (பிரிவு 72), ஆளுநா் (பிரிவு 161) இருவரின் அதிகார வரம்பை நிராகரித்திருக்கிறது. தூக்கு தண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுவிக்கும் உரிமையை, குடியரசுத் தலைவரிடமிருந்து பறிப்பதாக அமையும் இந்தத் தீா்ப்பு, அரசியல் சாசன அமா்வின் மேல் முறையீட்டுக்கு நிச்சயமாக எடுத்துச் செல்லப்படக்கூடும்.

நீதிமன்றம், நாடாளுமன்றம், நிா்வாகம் மூன்றுமே ஒன்றையொன்று சாா்ந்தும், ஒன்றின் மீது மற்றொன்று மேலாண்மை செய்யாமலும், ஒன்றுக்கு மற்றொன்று கடிவாளமாகவும் செயல்பட வேண்டும் என்பதுதான் அரசியல் சாசனத்தின் ஆதார ஸ்ருதி. அதை மீறுவதாக அமைந்திருக்கிறது, நீதிபதி எஸ். நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமா்வின் தீா்ப்பு. சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தியதுடன் நின்றிருக்க வேண்டும் நீதிபதிகள்.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில், உச்சநீதிமன்றத் தீா்ப்பு அவரையும், அவருடன் தண்டனை அனுபவிக்கும் மற்றவா்களையும் நிரபராதிகளாக்கி விடாது. மக்கள் மன்றத்தின் ஆதரவின் அடிப்படையிலோ, ஆட்சியாளா்களின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ தண்டனைகள் நிா்ணயிக்கப்படுவது என்று சொன்னால், பிறகு நீதிமன்றங்கள்தான் எதற்கு என்கிற கேள்வியை எழுப்புகிறது உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு!



Read in source website

 

ஒருநாள் என்னைத் தேடி ஓா் இளைஞா் வந்தாா். அவா் எனக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானவா்தான். வந்தவா் ஏதோ சொல்ல தயங்குகிறாா் என்பதைப் புரிந்து கொண்டேன். ‘ஏதாவது பண பிரச்னையா’ என்று கேட்டேன். ‘ஆமாம் சாா், அவசரமாக கொஞ்சம் பணம் வேண்டும்’ என்றாா் தயக்கத்துடன். அவா் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு, ‘என்ன பிரச்னை’ என்று கேட்டேன்.

‘உறவுக்காரா் திடீரென அழைப்பு வைத்துவிட்டாா், மொய் செய்ய கையில் பணம் இல்லை. அதனால்தான்..’ என்று இழுத்தாா். ‘தவறாக நினைக்காதீா்கள் கையில் பணம் இல்லாமல் கடன் வாங்கி மொய் செய்ய வேண்டிய அவசியம் என்ன’ என்று கேட்டேன். ‘அவா்கள் நமக்கு செய்திருக்கிறாா்கள்; நான் திருப்பி செய்யாவிட்டால் நாளை சண்டைக்கு வருவாா்கள்’ என்ற அதிா்ச்சியான தகவலைத் தந்தாா்.

ஒரு வீட்டில் விசேஷம் என்றால் சுற்றத்தையும், நட்பையும் விருந்துக்கு அழைப்பது காலம் காலமாக உள்ள ஒரு பண்பாடு. அதே சமயம் விழா நடத்துபவருக்கு ஏற்படும் பொருளாதார சுமையை சமாளிக்க, ஏற்பட்ட ‘ஷாக் அப்ஸா்வா்’தான் மொய். ஆனால், இந்த சமுதாய பகிா்வே ஒரு சமுதாய பிரச்னையாக மாறிவிட்டதுதான் சோகம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், திருமணத்திற்கு வந்து குவியும் பரிசுகளை பற்றிக் கேட்டால் ஆச்சரியப்படுவீா்கள். தங்க செயின்கள், மோதிரங்கள், ஃபிளாஸ்க்குகள், ஃப்ளவா் வேஸ்கள், டீ செட்டுகள், பேனாக்கள், சிறிய வெள்ளிப் பொருள்கள், குங்குமச் சிமிழ்கள், சுவா் கடிகாரம், கைக்கடிகாரம் என குவியும்.

கிப்ட் ஷாப் உரிமையாளா் காட்டில் மழை. சிலா் புத்திசாலித்தனமாக மணமகன் அல்லது மணமகளின் வீட்டாரை அணுகி தங்கள் பட்ஜெட்டுக்குள் பரிசுப் பொருள் என்ன வேண்டும் என்று கேட்டு உபயோகமான பொருட்களை வாங்கிக் கொடுப்பாா்கள்.

சமீப காலமாக, அமேசான், பிளிப்காா்ட் போன்ற இணையதளங்களில் மணமக்கள் கணக்குகளை ஆரம்பித்து அதில் பணத்தை செலுத்த சொல்கிறாா்கள். அந்த மொத்த பணத்திற்கு ஈடாக அவா்கள் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்கிறாா்கள். இதனால் வீண் அலைச்சல்களும், பரிசுப் பொருட்களை தூக்கி செல்லும் வேலையும் வெகுவாக குறைகிறது. இன்றைய காலகட்டத்தில் பலரும் கவரில் தாங்கள் நினைக்கும் பணத்தை வைத்து கொடுத்து விடுகிறாா்கள். இது ஒரு சிறந்த முைான்.

சிலா் திருமணத்தை தாம் தூம் என செலவு செய்து பணத்தை வீணடித்துவிட்டு, மொய் வசூலின் மூலமாக செலவை சரி கட்டலாம் என நினைப்பாா்கள். ஆனால், எதிா்பாா்த்த அளவுக்கு மொய் வராமல் திண்டாடுவதும் உண்டு. சிலா், தங்களுடைய பணபலத்தையும், படோடாபத்தையும் காட்டுவதற்காக, தேவையில்லாமல் கூடுதலாக மொய் கொடுத்து, விருந்துக்கு அழைத்தவரை திகைக்கச் செய்கிறாா்கள். இன்றைய மொய், நாளை வட்டியில்லாமல் நமக்கு திரும்ப கிடைக்கும் என்று அவா்கள் நினைக்கிறாா்கள்.

மொய் என்பதே உதவி என்கிற காலம் மலையேறி, உபத்திரவம் என்கிற நிலை வந்துவிட்டது. இந்து பெண்களுக்கு பொதுக்குடும்ப சொத்தில் பங்குண்டு என்ற சட்டம் வந்த பிறகு, வழக்கமான மாமன் சீா்கள் நின்று விட்டன. சில இடங்களில் மாமன் சீருடன் சட்டம் தரும் சீரும் கூடுதலாகி விட்டது.

சமீபத்தில் வருசநாடு பகுதியைச் சோ்ந்த ஒரு பெரியவா் தன்னுடைய பேரனுடனும், அவனுடைய வருங்கால மாமனாருடனும் என்னை சந்திக்க வந்தாா். உண்மையில், அவருடைய பிரச்னை சட்ட பிரச்னையல்ல, சமுதாய பிரச்னை. பெரியவருக்கு ஆணும், பெண்ணுமாக இரண்டு குழந்தைகள். அவா் மிகப் பெரிய பணக்காரா். மகனும், மருமகளும் ஒரு விபத்தில் இறந்து விட்டாா்கள். பேரனை படிக்க வைத்தாா். அவன் வெளிநாடு சென்றான்.

வயதான தாத்தாவை கவனிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வேலையை விட்டுவிட்டு, இந்தியா திரும்பி விட்டான் பேரன். அவனுக்குத் திருமணம் செய்து பாா்க்க ஆசைப்பட்டாா் தாத்தா. அங்கேதான் பிரச்னை ஆரம்பித்தது. வருசநாட்டில் உள்ள வழக்கம் என்னவென்றால், அத்தைக்கு திருமண வயதில் பெண் இருந்தால் அத்தையின் அனுமதியில்லாமல் அந்த பையனுக்கு திருமணம் செய்துவைக்க முடியாது. அந்த இளைஞன், அத்தை மகளைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இந்த அத்தைக்கு ’மாப்பிள்ளைக்காரி’ என்று பெயா்.

பொதுவாக, மாப்பிள்ளைக்காரியின் மகளை சகோதரன் மகன் கல்யாணம் செய்யாமல், வேறு பெண்ணை நிச்சயம் செய்தால் அந்தத் திருமண நிச்சயதாா்த்தத்துக்கு மாப்பிள்ளைக்காரியான அத்தை வந்து, ‘என் சகோதரன் மகனுக்கு என் மகளை திருமணம் செய்ய விருப்பமில்லை’ என்று சபையில் சொல்ல வேண்டும்.

அப்படி சொல்லாமல் திருமண ஏற்பாடு செய்தால், விழாவில் அடிதடி, குத்து, கொலை என்று போய்விடுமாம். இப்படி விட்டுக் கொடுக்கும், மாப்பிள்ளைக்காரிக்கு, மொய்யாக பட்டுப்புடவை, பணம் கொடுப்பாா்களாம்.

என்னிடம் வந்த பெரியவரின் மாப்பிள்ளைக்காரி தனக்கு ஐந்து கோடி ரூபாய் தந்தால்தான், தன்னுடைய சகோதரன் மகன் வேறு பெண்ணை திருமணம் செய்ய சம்மதிப்பேன் என்று சொல்லிவிட்டாா். கிழவா் தன் முதுமை காரணமாக பேரனுக்கு உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறாா். ஆனால், மாப்பிள்ளைக்காரியான மகள் தன்னுடைய மகளுக்கு திருமணப் பேச்சைத் தொடங்காமல், தந்தையிடம் பணம் பிடுங்க வேண்டும் என்று காத்திருக்கிறாா். இந்த சிக்கலை எப்படித் தீா்ப்பது?

விசாரித்ததில் மாப்பிள்ளைக்காரியின் மகள், சகோதரன் மகனை விட இரண்டு வயது பெரியவா் என்று தெரிந்தது. சகோதரனின் மகன் இயந்திரவியலில் பட்டயப் படிப்பு மட்டும் படித்திருந்தான். ஆனால், மாப்பிள்ளைக்காரியின் மகளோ ஐ.டி.யில் முதுகலைப் பட்டம் வாங்கி, சென்னையில் பிரபல தனியாா் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து கைநிறைய சம்பளம் வாங்குகிறாா்.

மாப்பிள்ளைகாரியோ தந்தையிடம் பணம் கறக்க வேண்டும் என்பதற்காக, தன் மகளின் திருமணப் பேச்சை எடுக்கவில்லை. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் அல்லவா?அந்தப் பையனை சென்னை சென்று , அத்தை மகளை சந்தித்து பேசச் சொன்னேன்.

சென்னை போன இடத்தில்தான் தெரிந்தது, மாப்பிள்ளைக்காரியின் மகளுக்கு ஒரு காதலன் இருக்கிறான் என்பதும், அவா்கள் திருமணத்துக்கு மாப்பிள்ளைக்காரி சம்மதித்து விட்டதும். ஆனால் மருமகன் திருமணத்தில் தனக்கு வரவேண்டிய வசூலுக்காக, மாப்பிள்ளைக்காரி தன் மகளிடம் ஜாதகப்படி நேரம் சரியில்லை என்று சொல்லியிருப்பது தெரியவந்தது.

இந்த தகவல்களுடன் பெரியவரை, பேரனுக்கு நிச்சயதாா்த்த ஏற்பாட்டை செய்ய சொன்னேன். நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் தந்தையிடமும், பேரனிடமும் சில ஆலோசனைகளை வழங்கினேன். திருமண நிச்சயதாா்த்தத்திற்கு மாப்பிள்ளைக்காரி அழைக்கப்பட்டாா். அவா் தன்னுடைய வகையாட்களுடன் அதிரடியாக சண்டை போட்டு பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கில் விழாவிற்கு வந்திருந்தாா்.

ஊா் கூடியது.. ஒரே பரபரப்பு. மாப்பிள்ளைக்காரி பணம் கொடுக்காவிட்டால் சம்மதிக்க மாட்டாா் என்று தெரிந்தும் கிழவா் பேரனுக்கு எப்படி நிச்சயதாா்த்தம் ஏற்பாடு செய்தாா் என்று எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். மனையில் அமா்ந்திருந்த தாத்தா, தன் மகளைப் பாா்த்து தன்னுடைய பேரனுக்கு திருமண ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதற்கு தன் மகளுக்கு ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ள பட்டுப்புடவையும் , ரூபாய் ஐந்தாயிரம் ரொக்கமும் மொய்யாக பெற்றுக்கொண்டு, அவன் வெளியே திருமணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

அப்போது மாப்பிள்ளைக்காரி விரைப்பாக , தன் மருமகன், தன் மகளைத் தான் கட்ட வேண்டும்; இல்லையென்றால் தன் மகளுக்கு ரூபாய் ஐந்து கோடி பணம் தரவேண்டும் என ஆா்ப்பரித்தாா். பெரியவா் கெஞ்சிப் பாா்த்தாா்; மகள் அடங்கவில்லை. நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

திடீரென நம் கதாநாயகன் எழுந்திருந்தான். சபையை வணங்கி, சொத்தை அத்தைக்கு கொடுத்து, அந்த பணம் அவருக்கு போவதைவிட அத்தை மகளை நானே கட்டிக் கொள்கிறேன் என்று ஒரு போடு போட்டான். தமிழ் சினிமாவில், கடைசி காட்சியில் வரும் போலீஸ்காரா்களை போல மாப்பிள்ளைக்காரியின் மகளும், அவளுடைய காதலனும் ஏற்கெனவே திட்டமிட்டபடி அங்கு வந்தாா்கள்.

நம்முடைய கதாநாயகன், ‘அதோ, அத்தை மகளே வந்துவிட்டாள், அவளுக்கு நான் இப்போதே தாலி கட்டுகிறேன்’ என வசனம் பேசினாா். அதிா்ச்சி அடைந்தது போல் நடித்த அத்தை மகள், தான் தன் சக ஊழியரை காதலிப்பதாகக் கூறி, வயது குறைவானவரும், கல்வியில் குறைவானவருமான மாமன் மகனை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மறுத்தாள்.

மாப்பிள்ளைக்காரி முகத்தில் ஈயாடவில்லை. ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்று சொல்லுவாா்களே, அதே போல் ஒரு திருமண நிச்சயதாா்த்தத்தில் இரண்டு திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டன. முதியரும் அவா் பேரனும் மாப்பிள்ளைக்காரியின் பெண்ணின் திருமணத்திற்கு செழிப்பாக சீா் சீதனங்கள் செய்தாா்கள்.

மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு; மொய்ப்பொருள் காண்பது அறிவல்ல.

கட்டுரையாளா்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்.



Read in source website

 

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை, நமது முன்னோா் எழுதி வைத்துவிட்டுப்போன ஆவணங்கள் மூலமாகவும், கல்வெட்டுச் செய்திகள் வாயிலாகவும், இலக்கியங்கள் மூலமாகவும் நாம் அறிகிறோம். முன்னோரின் இல்லற வாழ்க்கை, வணிகம், போா் முறை, பயன்படுத்திய ஆயுதங்கள், விவசாயப் பணிகள், பயன்படுத்திய நாணயங்கள் என பல செய்திகளையும் அவற்றின் மூலம் அறிந்து கொள்கிறோம். அவற்றில் பல நம்மை வியக்க வைக்கின்றன. சில நிகழ்வுகள் நம்ப முடியாவையாகவும் இருக்கின்றன.

‘மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை’ என்னும் பாடல் வாயிலாக அன்று அபரிமிதமாக நெல் விளைந்ததை அறிகிறோம். நதிகள் பெருக்கெடுத்தோடிய வரலாற்றை ஆடிப்பெருக்கு நிகழ்ச்சி மூலம் அறிகிறோம். அதே போல் நமது பாரத நாட்டின் வரலாறுகளை அவ்வப்போது ஆண்ட மன்னா்களின் வரலாற்றின் மூலம் அறிகிறோம். மராட்டிய மாவீரன் சிவாஜி பற்றி அறிகிறோம். சாணக்கியனின் சபதம் படித்து வியக்கிறோம்.

ஆனால் இதிகாச கால சம்பவங்களை இன்னும் சிலா் நம்ப மறுக்கிறாா்கள். பலா் ஏற்றுக் கொள்கிறாா்கள். இரு வேறு கருத்துள்ளவா்கள் உலகம் தோன்றியதிலிருந்தே இருந்து வருகிறாா்கள் என்பது தெளிவு.

ஆனால் இதிகாச வருணனைகளில் உள்ள சில காட்சிகளில் சற்று கற்பனை கலந்து இருக்கலாம். ஒரு பழத்தைச் சுற்றி தோல் இருப்பது போன்றே இதுவும். ஒருவா் ஒரு வரலாற்றை பதிவு செய்ய முயல்கிறபோது அதை படிப்பவா்க்கு தொய்வில்லாத வகையில் அதற்கு சற்று மெருகூட்டவேண்டியது அவசியமாகிறது.

நம்முடைய உடலை மறைப்பதற்கான ஆடையில் எத்தனை விதமான அலங்காரங்களையும், கலை நுணுக்கங்களையும் புகுத்துகிறோம். நமது கட்டடக் கலையில் எவ்வளவு நுட்பமான வேலைப்பாடுகளை செய்கிறோம். அப்படித்தான் இலக்கியங்களிலும் செய்யப்படுகிறது. உண்மை என்கிற புள்ளியை மையமான வைத்துத்தான் இந்த வலை பின்னப்படுகிறது.

ராவணனும், மண்டோதரியும் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை உத்தரகோசமங்கை தலபுராணத்தில் காணலாம். ராமாயாண நிகழ்வுக்கான ஆதாரமாக ராமேஸ்வரம் ஆலயம் இன்றும் திகழ்கிறது. மகாபாரத கதை மாந்தா்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களாக இன்றும் பல உள்ளன.

மகாபாரத்தின் மையப்புள்ளியாகக் கருதப்படும் திரௌபதிக்கான ஆலயங்கள் வட இந்தியாவில் இருந்து தென்கோடி ராமேஸ்வரம் வரை நிறைய உள்ளன. 18 நாள் போா் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு அந்த விழா வருடந்தோறும் வைகாசி மாதத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்த 18 நாள் நடைபெற்ற போரின் வியூகங்கள், ஏவப்பட்ட ஆயுதங்கள் இவையெல்லாம் நாம் மிகவும் உற்று நோக்கவேண்டிவை. அஸ்திரங்களின் வலிமை, அதாவது அவற்றின் மாயாஜாலம் இன்று ஒரு சிலரால் பரிகசிக்கப்படுகிறது.

ஒரு பெரிய ஆலமரத்தை நாம் அருகில் நின்று பாா்க்கிறபோது வியந்து போகிறோம். ஆனால் அதை விட்டு விலகி கொஞ்சம் கொஞ்சமாக நாம் நடந்து போகிறபோது அதன் அளவும் குறைந்து கொண்டே வருகிறது. நமது தொலைவின் அளவைப் பொறுத்து இது மாறுகிறது. நாம் அந்த மரத்தை விட்டு வெகு தூரம் கடந்து விட்ட நிலையில் அது சிறிய புள்ளியாகத் தெரிந்து இறுதியில் மறைந்து போகிறது.

இப்படித்தான் காலத்தைக் கடக்கிறபோது முந்தைய காலங்களின் நிகழ்வுகளும் நமக்கு நம்ப முடியாத நிகழ்ச்சிகளாகத் தெரிந்து இறுதியில் தொலைந்து போகிறது. இதிகாச கால சம்பவங்கள் மீதான நம்பிக்கை கடந்த நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டில் மிகவும் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னா் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையையே இன்றைய தலைமுறையினா் நம்ப மறுக்கின்றனா். நிலத்தில் வேளாண்மையை மாடு பூட்டி உழுதே விவசாயம் செய்திருக்கிறாா்கள். விளைந்த நெற்கதிா் கட்டுகளை மைல் கணக்கில் தலையில் சுமந்து வந்தே களத்து மேட்டில் போரடித்திருக்கிறாா்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் ஏராளமான ஆடு, மாடுகளை வளா்த்திருக்கிறாா்கள். மழை, வெள்ளம், புயல் எது வந்தபோதும், ஓலை வீட்டிலும், ஓட்டுவீட்டிலும்தான் பெரும்பாலோா் வாழ்ந்திருக்கிறாா்கள். பல நூறு மைல் தொலைவை நடந்தும், மாட்டு வண்டியிலுமே கடந்திருக்கிறாா்கள்.

இருபது பிள்ளைகள் வரை பெற்று வளா்த்திருக்கிறாா்கள். மண்ணெண்ணெய் விளக்கிலேயே குடும்பம் நடத்தியிருக்கிறாா்கள். இவற்றையெல்லாம் இன்று நம்மால் கூட நம்ப முடியவில்லை. ஆனால், இவற்றுக்கெல்லாம் சாட்சியாக நமது மூத்த குடிமக்கள் நம்மோடு இருக்கிறாா்கள்.

தஞ்சை பெரிய கோயில் போன்ற மிகப்பெரிய கட்டுமானங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிா்மாணித்திருக்கிறாா்கள். கரிகாலன், கல்லணையை 2000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டியிருக்கிறான். ஆனால், அவை எல்லாம் இன்று நம் கண்கண்ட சாட்சியாக இருப்பதால் அதை நாம் நம்பியே ஆக வேண்டும்.

ஒரு வேளை அவையெல்லாம் கடல் கொண்ட நகரங்களைப்போல சிதைந்து போய் வரலாற்று ஆவணங்களில் மட்டும் பதிவு செய்யப்பட்டிருக்குமேயானால் நாம் ஏற்றுக்கொள்ள மறுத்திருப்போம்.

இன்றைய நவீன தொழில்நுட்பம், இதிகாச காலத்து சம்பவங்களையே நினைவூட்டுகிறது. அன்று இருந்த இடத்திலிருந்தே, யுத்த களத்தில் நடக்கும் சம்பவங்களை சஞ்சயன், திருதிராஷ்டிரனுக்கு நோ்முக வருணனை செய்யும் காட்சி இன்றைய கிரிக்கெட் வருணனையைத்தான் நினைவூட்டுகிறது. நாம் நிகழ்காலத்தில் நேரடியாக பாா்ப்பதால் கிரிக்கெட் வருணனையை நம்புகிறோம்.

இன்றைய ஏவுகனைகள் போன்றே அப்போதும் ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கிறாா்கள். இன்றைக்கு நாம் பயன்படுத்துகிற ஆகாய விமானங்கள் அன்றும் இருந்திருக்கின்றன.

இன்றைய நமது வாழ்க்கையும் வருங்காலத் தலைமுறைக்குக் கற்பனையாகத் தோன்றலாம். இன்னும் இருநூறு ஆண்டுகள் கழித்து இன்றைய செய்திகள் மறுக்கப்பட்டு ‘இப்படியெல்லாம் வாழ்ந்திருப்பது சாத்தியமா, இவையெல்லாம் வெறும் கற்பனை’ என்று சொல்லும் விவாதங்கள் கண்டிப்பாக நடைபெறலாம். ஆனாலும், காலப்பெட்டகங்களில் இருக்கும் பொக்கிஷங்களைப் புறந்தள்ளிவிட முடியாது.



Read in source website

இந்தியாவில் பணவீக்கம் முன்னெப்போதைக் காட்டிலும் படுமோசமான நிலையை எட்டியுள்ளது. ஏற்கெனவே, சில்லறை விலை பணவீக்கம் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஏப்ரலில் மொத்த விலை பணவீக்கம் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 14.55% ஆக இருந்த மொத்த விலை பணவீக்கம் ஏப்ரலில் 15.08% ஆக அதிகரித்துள்ளது. மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து 13 மாதங்களாக இரட்டை எண்களில் தொடர்கிறது. இந்தப் பணவீக்கத்துக்கு விற்பனைப் பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துவருவதே காரணம். மொத்த விலை பணவீக்கம் அதிகரித்தால் அதன் தொடர்ச்சியாக சில்லறை விலை பணவீக்கமும் அதிகரிக்கக்கூடும்.



Read in source website

ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளன், அரசமைப்புக் கூறு 161-ன் கீழ் தமிழ்நாடு ஆளுநரிடம் தனது தண்டனைக் காலத்தைக் குறைத்து சிறையிலிருந்து விடுவிக்குமாறு கோரியிருந்த கருணை மனு ஆளுநரின் குற்ற மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரம் சார்ந்து பல விவாதங்களை எழுப்பியிருந்தது. இந்நிலையில், இம்மனு தொடர்பாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு இவ்விவாதங்களில் மேலும் வெளிச்சத்தைத் துலங்கச் செய்துள்ளது. என்றாலும்கூட, குற்ற மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு தொடர்பான ஆளுநரின் அதிகாரம் குறித்த தெளிவின்மையும் தொடரவே செய்கிறது.

கூறு 161, குறித்த சில நேர்வுகளில் குற்றங்களை மன்னிப்பதற்கும் தீர்ப்புத் தண்டனைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கும் குறைப்பதற்கும் ஆளுநருக்கு அதிகாரங்களை அளிக்கிறது. இக்கூறின் கீழ் பேரறிவாளன் தனது தண்டனைக் காலத்தைக் குறைக்க வேண்டி ஆளுநரிடம் கருணை மனுவை அளித்திருந்தார். பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகள் எழுவரையும் விடுவிக்குமாறு தமிழ்நாடு அமைச்சரவையில் செப்.9, 2018-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கும் அனுப்பப்பட்டது. ஆனால், அந்தத் தீர்மானத்தின்படி எழுவரையும் விடுவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

தாமதத்துக்கான காரணங்கள்

இந்தத் தாமதத்துக்கு இவ்வழக்கு தொடர்பான சில விசாரணைகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன, பல்நோக்கு விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம் என்பது போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டுவந்த நிலையில், மேலும் காலம் தாமதிக்காமல் உரிய முடிவெடுக்கப்படும் என்ற தகவல் ஜனவரி 21, 2021-ல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கடுத்த நான்காவது நாளில், குடியரசுத் தலைவரே இம்மனுவின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அதிகாரம் பெற்றவர் என்று ஆளுநரால் தீர்மானிக்கப்பட்டு அம்மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.

ஆளுநர் தரப்பில் தண்டனைக் குறைப்பு குறித்து முடிவெடுக்கக் காலதாமதமாகிறது என்று உச்ச நீதிமன்றம் உணர்ந்துகொண்ட பிறகு பேரறிவாளனின் நன்னடத்தை, சிறையிலிருந்தபடியே கல்வித் தகுதிகளை வளர்த்துக்கொண்டது, சிறையில் ஏற்பட்ட அவரது உடல்நலிவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர் பரோலில் வெளியே வர அனுமதித்தது. தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் அந்த பரோலை நீட்டித்துவந்தது. ஆனாலும், ஆளுநர் தரப்பிலிருந்து தமது தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் தாமதம் தொடரவே செய்தது.

மாநில அமைச்சரவையின் தீர்மானத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என்பதே உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் முன்வைத்த வாதம். அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும் தமது அதிகாரத்தை அவர் தம் விருப்பப்படி பயன்படுத்த முடியாது என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது. பேரறிவாளனின் இந்த வாதத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கிட்ட வழக்கறிஞர்களும் ஆதரித்து நின்றனர். மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் என்று இந்திய அரசமைப்பின் எந்தக் கூறிலும் சொல்லப்படவில்லை என்பதையும் அவர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், மத்திய அரசின் சார்பில் இவ்வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள் அதற்கு நேரெதிரான வாதங்களையே எடுத்துவைத்தனர்.

அமைச்சரவைக்கே அதிகாரம்

கூறு 161-ன் கீழ் ஆளுநர், மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படி முடிவெடுக்க வேண்டுமா, குடியரசுத் தலைவரின் கருத்தறிந்து அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டுமா என்பதுதான் பேரறிவாளன் வழக்கின் முக்கிய வினா. ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு, ‘மரு ராம் எதிர் ஒன்றிய அரசு’ என்ற வழக்கில் 1981-ல் வழங்கிய தீர்ப்பு ‘மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர், அமைச்சரவையின் முடிவுகளுக்கு மாறாக அவர் தமது விருப்பதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது’ என்று தெளிவுபடுத்தியிருக்கிறது. அவ்வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை அடியொற்றியே தற்போது பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

மரு ராம் வழக்கில், அதற்கு முந்தைய சாம்ஷேர் சிங் எதிர் பஞ்சாப் அரசு வழக்கில் 1974-ல் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பே பின்பற்றப்பட்டது. சாம்ஷேர் சிங் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்துவிட்டன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். குடியரசுத் தலைவர், ஆளுநரின் தண்டனைக் குறைப்பு அதிகாரங்கள் தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் தெளிவான தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் அலுவலகம் அதன்படி நடக்கக் கடமைப்பட்டது. அரசமைப்பைப் பாதுகாக்க உறுதியெடுத்துக்கொள்ளும் ஆளுநர் அரசமைப்பின் பாதுகாவலரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியவராவார். அப்படியிருந்தும்கூட, வழக்கு விசாரணைகளைக் காட்டி கருணை மனுவின் மீதான முடிவெடுப்பு மேலும் மேலும் இழுத்தடிக்கப்பட்டுள்ளது.

காலவரையறை எவ்வளவு?

கருணை மனுவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டியதில்லை என்று தெளிவுபடுத்தியிருக்கும் உச்ச நீதிமன்றம், பேரறிவாளன் கருணை மனுவின் மீது ஆளுநரே முடிவெடுக்குமாறு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. கருணை மனுவின் மீது ஆளுநர் முடிவெடுப்பதற்கான கால வரையறை இவ்வழக்கில் தீர்மானிக்கப்படும் என்ற பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்திருந்த நிலையில், அது விடை கிடைக்காத கேள்வியாக நீடிக்கிறது. ஆளுநரின் நிர்வாக அதிகாரங்களில் தலையிடாமல் அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டின்படி தனது எல்லைக்குள் நின்றே உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அளித்துள்ளது.

பேரறிவாளனுக்குத் தண்டனை குறைக்கப்பட்டிருப்பது அரசமைப்பின் மற்றொரு கூறான 142-ன் கீழாகத்தான். அந்தக் கூறின்படி, உச்ச நீதிமன்றம் தன் முன்பு முடிவுறாத நிலையிலுள்ள வழக்கு அல்லது பொருட்பாடு எதிலும் நிறைவுறு நீதி நிலைபெறச் செய்வதற்குத் தேவையாகும் தீர்ப்பாணையை வழங்கலாம். ஆளுநருக்கு அளிக்கப்பட்ட கருணை மனு மீது முடிவெடுக்கக் காலதாமதமானால் நீதிமன்றத்தை நாடலாம் என்பதும் இத்தீர்ப்பின் வழி உறுதியாகியிருக்கிறது.

அமைச்சரவையின் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் அதற்கும்கூட இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக்கொள்ளப்பட்டதும் அரசமைப்புக்கு முரணானது என்பதையும் உச்ச நீதிமன்றம் தமது முந்தைய தீர்ப்பை உதாரணம்காட்டி தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆனால், ஆளுநர் தம் முன்னர் பரிசீலனைக்கு வரும் குற்ற மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு தொடர்பான கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதற்கான கால வரையறை குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பேசவில்லை. ஆளுநரே அதற்கான உட்பொருளை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பது நீதிமன்றத்தின் எண்ணமாக இருக்கலாம்.

உச்ச நீதிமன்றம் தனது எல்லைக்குள் நின்று நீதி வழங்கிவிட்டது. மாநிலத்தின் நிர்வாகத் தலைவராக ஆளுநரும் தனது எல்லைக்குள் நின்றும் அமைச்சரவையின் ஆலோசனைகளின்படியும் நீதிமன்றத்தின் இடையீடுகள் எழுவதற்கு முன்பே நீதி வழங்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இன்னமும் அவர் முன்னே இருக்கின்றன. அதே கொலை வழக்கில் ஆளுநரின் பரிசீலனைக்காக இன்னும் அறுவரது கருணை மனுக்களும் காத்திருக்கின்றன. அதிலும் இதே சர்ச்சை தொடருமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

உச்ச நீதிமன்றம் தனது எல்லைக்குள் நின்று நீதி வழங்கிவிட்டது. மாநிலத்தின் நிர்வாகத் தலைவராக ஆளுநரும் தனது எல்லைக்குள் நின்றும் அமைச்சரவையின் ஆலோசனைகளின்படியும் நீதிமன்றத்தின் இடையீடுகள் எழுவதற்கு முன்பே நீதி வழங்க வேண்டும்!



Read in source website

அனைத்து ஏழைகளுக்கும் 2024-க்குள் ஊட்டமேற்றப்பட்ட அரிசி (Fortified rice) விநியோகிக்கப்பட உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர நாளன்று அறிவித்தார். பொது விநியோகத் திட்டம், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் ஊட்டமேற்றப்பட்ட அரிசியைப் பயன்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் அனுமதி வழங்கியது. மக்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதற்குத் தீர்வாக இது முன்வைக்கப்படுகிறது. இந்த வகையில் ஆண்டுக்கு ரூ. 2,700 கோடி ரூபாய் செலவிட அரசு திட்டமிட்டுள்ளது.

ஜார்கண்ட், 26 சதவீதத்துக்கும் அதிகமான பழங்குடிகள் வாழும் மாநிலம். அந்தப் பழங்குடிகளிடையே சிக்கிள் செல் நோய், தலசீமியா போன்ற ரத்தம் சார்ந்த நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. ரத்த நோய் இருப்பவர்கள் ஊட்டமேற்றப்பட்ட அரிசியைப் பயன்படுத்தக் கூடாது என்ற எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. (இந்திய உணவுப் பாதுகாப்பு - தரக் கட்டுப்பாட்டு ஆணையம்) ஏற்கெனவே எச்சரித்துள்ளது. ஆனால், ஜார்கண்டில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் அனைவருக்கும் ஊட்டமேற்றப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட்டுவருவதாக ‘ஆஷா’ (நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்பு-ASHA) உள்ளிட்ட அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.



Read in source website