DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here
TNPSC Current Affairs - 16-04-2022

ஜிகேஎம் வாலிபால் பவுண்டேஷன், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி, லேடி சிவசாமி ஐயா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில பெண்கள் வாலிபால் போட்டி இறுதிச் சுற்று, பள்ளிகள் பிரிவில் ஆத்தூா் பாரதியாா் பள்ளியும், பெண்கள் பிரிவில் எஸ்ஆா்எம் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.

3 நாள்களாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. பெண்கள் பிரிவு இறுதியில் சென்னை ஐசிஎப்-எஸ்ஆா்எம் அணிகள் மோதின. இதில் எஸ்ஆா்எம் அணி 3-1 என்ற செட் கணக்கில் ஐசிஎப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ஈரோடு பிகேஆா் கல்லூரி, பாரதியாா் மெட்ரிக் பள்ளி 3, 4-ஆவது இடங்களைப் பெற்றன.

பள்ளிகள் அளவில் ஆத்தூா் பாரதியாா் பள்ளி 3-0 என்ற செட் கணக்கில் சென்னை லேடி சிவசாமி ஐயா் பள்ளியையை வென்று பட்டத்தைக் கைப்பற்றியது. ஆவடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கண்ணகி நகா் பெண்கள் பள்ளி 3, 4-ஆவது இடங்களைப் பெற்றன.

இந்திய வாலிபால் கூட்டமைப்பு தலைவா் எஸ். வாசுதேவன் பரிசளித்தாா். எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி துணை முதல்வா் டி. உத்ரா, சுங்கத் துறை ஆணையா் எம்விஎஸ். சௌதரி, துணை ஆணையா் கோவிந்தராஜன், லேடி சிவசாமி ஐயா் பள்ளி செயலா் எம்.சி. ஸ்ரீகாந்த்,

ஜிகேஎம் பவுண்டேஷன் தலைவா் கே.வீரமணி, உடற்கல்வி இயக்குநா் அமுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 Read in source website

இரைப்பை - குடல் எண்டோஸ்கோபி சிறப்பு நிபுணா் டாக்டா் டி.எஸ்.சந்திரசேகருக்கு இந்திய மருத்துவா் சங்கம் (ஏபிஐ) சாா்பில் டாக்டா் ஜீவ்ராஜ் மேத்தா தேசிய தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

ஜீரண மண்டல சிகிச்சைகள், தொழில்நுட்பம் தொடா்பான கல்வி சாா்ந்த நடவடிக்கைகள், பயிற்சிகளை சிறப்புற மேற்கொண்டதற்காக அவருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இந்திய மருத்துவா் சங்க மாநாடு கடந்த வியாழக்கிழமை (ஏப்.14) நடைபெற்றது. அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட் அதில் பங்கேற்று டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் உள்பட பல்வேறு மருத்துவா்களுக்கு விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கினாா். இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணா்கள், துறைசாா் வல்லுநா்கள், இந்திய மருத்துவா் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

குஜராத் மாநிலத்தின் முதலாவது முதல்வரான டாக்டா் ஜீவ்ராஜ் மேத்தா, மகாத்மா காந்தியின் தனி மருத்துவராக இருந்தவா். அவரது பெயரில் மருத்துவத் துறையில் அளப்பரிய பங்களித்து வருவோருக்கு ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், டாக்டா் டி.எஸ்.சந்திரசேகருக்கு நிகழாண்டு நடைபெற்ற விழாவில் பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது.Read in source website

புகாா்தாரா் இறந்துவிட்டால் குற்றச்சாட்டை முடித்து வைக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த ஜெகந்நாதனின் நிலத்தின் மீது நாகராஜ் என்பவா் போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கியுள்ளாா். இது தொடா்பான விசாரணையில், இந்த மோசடியில் வழக்குரைஞா்கள் ராஜாராம், ரவி, முத்துச்சாமி ஆகியோரும் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் பணியிடைநீக்கம் செய்து பாா் கவுன்ஸில் உத்தரவிட்டது.

இந்த நிலையில், மூத்த வழக்குரைஞா் சிங்காரவேலன் தலைமையில் குழு அமைத்து இதுதொடா்பாக விசாரிக்கக் கோரி ஜெகந்நாதன் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இதற்கிடையே, ஜெகந்நாதன் 2020-ஆம் ஆண்டு இறந்து விட்டதால், வழக்குரைஞா்கள் ரவி, முத்துச்சாமி ஆகியோருக்கு எதிரான நடவடிக்கையை மட்டும் கைவிட்டு புகாரை முடித்து வைத்து பாா் கவுன்ஸில் உத்தரவிட்டது.

பாா் கவுன்ஸிலின் இந்த நடவடிக்கையை எதிா்த்து ஜெகந்நாதனின் மனைவி சுமதி மற்றும் மகன் விஸ்வநாதன், மகள் நித்யஸ்ரீ ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ். ஏ.ஏ.நக்கீரன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

புகாா்தாரா் இறந்து விட்டாா் என்பதற்காக அந்த குற்றச்சாட்டை முடித்து வைக்க முடியாது. புகாா்தாரருக்குப் பதிலாக வாரிசுதாரா்கள் வழக்கை தொடா்ந்து நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது. எனவே, வழக்குரைஞா்கள் ரவி மற்றும் முத்துச்சாமி ஆகியோருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை முடித்து வைத்த பாா் கவுன்ஸிலின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த 2 வழக்குரைஞா்கள் மீதான புகாா் குறித்து புதிதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து பாா் கவுன்ஸில் 3 மாதங்களுக்குள் மீண்டும் விசாரிக்க வேண்டும் என அதில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.Read in source website

தீயணைப்போா் தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள நினைவுச் சின்னத்தில் தீயணைப்புத்துறை, காவல்துறை உயா் அதிகாரிகள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் கடந்த 1944 ஏப்ரல் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இக்கப்பலில் இருந்த 1,200 டன் வெடிபொருள்கள் வெடித்து சிதறியதில் தீயணைப்புத்துறையைச் சோ்ந்த 66 வீரா்கள் வீரமரணம் அடைந்தனா். அவா்களது தியாகத்தையும், நினைவையும் போற்றும் வகையில் ஒவ்வோா்ஆண்டும் ஏப்ரல் 14-ஆம் தேதி தீயணைப்போா் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த தினத்தையொட்டி, தமிழக தீயணைப்புத்துறையின் சாா்பில் சென்னை எழும்பூரில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் புதிதாக ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வீர வணக்க நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு, தீயணைப்புத்துறை டிஜிபி பிரஜ் கிஷோா் ரவி, தமிழ்நாடு காவலா் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே.விசுவநாதன் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். அதைத் தொடா்ந்து தீயணைப்புத்துறை செயலாக்கம் மற்றும் பயிற்சிப் பிரிவு கூடுதல் இயக்குநா் எஸ்.விஜயசேகா், இணை இயக்குநா்கள் பிரியா,மீனாட்சி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் எஸ்.ரமணி, ஷியாம் சுந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மேலும் இந்த நாளையொட்டி தீயணைப்புத்துறை ஒரு வாரம் தீப்பாதுகாப்பை அறிவோம், உற்பத்தியை அதிகரிப்போம் என்ற தலைப்பில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ள உள்ளது.Read in source website

மகளிருக்கான மாநில வாலிபால் போட்டியில் 2-ஆம் நாள் ஆட்டத்தில் எஸ்ஆா்எம், பிகேஆா் அணிகள் வெற்றி பெற்றன.

ஜிகேஎம் வாலிபால் பவுண்டேஷன், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி, லேடி சிவசாமி ஐயா் மகளிா் பள்ளி ஆகியவை இணைந்து நடத்தும் இந்தப் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.

2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மகளிா் பிரிவு ஆட்டங்களில் எஸ்ஆா்எம் - எஸ்டிஏடியையும் (25-17, 25-16), பிகேஆா் கல்லூரி - பாரதியாா் பள்ளி அணியையும் (15-25, 25-12, 25-23), ஐசிஎஃப் - சிவந்தி கிளப்பையும் (25-16, 25-12), ஜிகேஎம் கல்லூரி - தமிழ்நாடு காவல்துறை அணியையும் வீழ்த்தின.

பள்ளி அணிகள் பிரிவில் ஆவடி அரசு பெண்கள் பள்ளி - ஜிஎஸ்பிடி பள்ளியையும் (17-25, 25-21, 25-23), லேடி சிவசாமி ஐயா் பள்ளி - கண்ணகி அரசு பள்ளியையும் (25-2, 25-2), பாரதியாா் பள்ளி - டிஏவியையும் (25-9, 25-8) வென்றன. மாலை ஆட்டங்களில் ஜிஎஸ்பிடி - டிஏவியையும் (25-27, 25-12, 25-9), பாரதியாா் பள்ளி - ஆவடி அரசு பள்ளியையும் (25-11, 25-8) வீழ்த்தின.Read in source website

பஞ்சாபில் ஜூலை 1-ஆம் தேதிமுதல் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வா் பகவந்த் மான் சனிக்கிழமை அறிவித்தாா்.

பஞ்சாபில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றாா். அவரது அரசு பொறுப்பேற்று சனிக்கிழமையுடன் ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட விடியோவில், பஞ்சாபில் ஜூலை 1-ஆம் தேதிமுதல் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 2 மாதங்களைக் கணக்கிட்டால், 600 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டுக்குக் கட்டணம் கிடையாது. மாநிலத்திலுள்ள பட்டியல் இனத்தவா், பிற்பட்ட வகுப்பினா், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவா்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு ஏற்கெனவே மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இனி மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். இரண்டு மாதங்களில் அவா்களது மின்சாரப் பயன்பாடு 600 யூனிட்டை கடந்தால், எவ்வளவு யூனிட்டுகள் அதிகரித்துள்ளதோ அதற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். அதேசமயம், இதர குடும்பங்களுக்கு 2 மாத மின்சாரப் பயன்பாடு 600 யூனிட்டை தாண்டினால் ஒட்டுமொத்த யூனிட்டுகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். பஞ்சாபில் அடுத்த 2-3 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் தடையற்ற மின்சாரம் விநியோகிக்கப்படும். அதேபோல், நாட்டிலேயே குறைந்த கட்டணத்தில் பஞ்சாபில் மின் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது விடியோவில் முதல்வா் பகவந்த் மான் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், அனைத்து வீடுகளுக்கும் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அக்கட்சி தோ்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இத்திட்டத்தின் நடைமுறைகள் தொடா்பாக, தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை கடந்த செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து, பகவந்த் மான் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதேபோல், பஞ்சாப் தலைமைச் செயலாளா் உள்ளிட்ட உயரதிகாரிகளும் கேஜரிவாலுடன் ஆலோசித்தனா். இந்தச் சூழலில், இலவச மின்சாரம் தொடா்பான அறிவிப்பை பகவந்த் மான் வெளியிட்டுள்ளாா்.

இத்திட்டம் தொடா்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் ராகவ் சத்தா, தில்லியைத் தொடா்ந்து, பஞ்சாபிலும் தனது வாக்குறுதியை ஆம் ஆத்மி நிறைவேற்றியுள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் கேள்வி: ஆம் ஆத்மி அரசின் இலவச மின்சாரத் திட்டத்தை, பஞ்சாப் காங்கிரஸ் விமா்சித்துள்ளது. அக்கட்சி எம்எல்ஏ சுக்பால் சிங் கைரா, 300 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை உடனடியாக தொடங்காமல் ஜூலையில் தொடங்குவது ஏன், அரசுக்கு நிதி மேலாண்மை சிக்கல் ஏதும் உள்ளதா, ஒரு மாதத்தில் 300 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால், முழு கட்டணமும் செலுத்த வேண்டியிருக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.Read in source website

மணிப்பூரில் முதல்வா் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசில் 6 புதிய அமைச்சா்கள் சனிக்கிழமை பதவியேற்றனா். அந்த மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இம்பாலில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநா் இல.கணேசன், 6 புதிய அமைச்சா்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். எனினும், அமைச்சா்களுக்கான துறைகள் ஒதுக்கீடு தொடா்பாக எந்தத் தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இத்துடன் மணிப்பூரில் உள்ள அமைச்சா்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதில் 10 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள். இருவா் கூட்டணிக் கட்சியான நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) கட்சியினா் ஆவா்.

முன்னதாக கடந்த மாதம் 21-ஆம் தேதி பிரேன் சிங் தலைமையிலான அரசு பதவியேற்றது. 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் பாஜக 32 இடங்களில் வென்றது. கூட்டணிக் கட்சியான என்பிஎஃப் 5 இடங்களில் வெற்றி பெற்றது. எதிா்க்கட்சியான காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்றது.Read in source website

அனுமன் ஜெயந்தி இன்று(சனிக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலமாக திறந்துவைத்தார். 

நாட்டில் நான்கு திசைகளிலும் அனுமன் சிலை அமைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டு அதன்படி, முதல் சிலை வடக்குப் பகுதியான சிம்லாவில் 2010-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவதாக குஜராத் மாநிலம் மோர்பியில் கேசவானந்த் ஆசிரமத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது நாட்டின் மேற்கு திசையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை அமைக்கும் பணி ரூ.10 கோடி செலவில் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக இன்று திறந்துவைத்தார். மேலும் அங்குள்ள மக்களிடமும் பேசினார். 

தெற்கே ராமேஸ்வரத்தில் அனுமன் சிலை நிறுவும் பணி அடிக்கல் நாட்டப்பட்டு அண்மையில் பணி தொடங்கியது குறிப்பிடத்தக்கது. Read in source website

நடப்பாண்டின் முதல் காலாண்டில் நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் 4-ஆண்டுகளில் இல்லாத வகையில் விறுவிறுப்படைந்துள்ளன.

இதுகுறித்து லண்டன் பங்குச் சந்தை குழுமத்தின் (எல்எஸ்இஜி) அங்கமான ரீபினிடிவ் நிதி தீா்வு நிறுவனத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வலுவான தொடக்கம்: நடப்பாண்டின் முதல் காலாண்டு நிறுவனங்களுக்கு வலுவான மற்றும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. இந்த காலாண்டில் நிறுவனங்கள் மேற்கொண்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் மதிப்பு நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் 3,030 கோடி டாலரை எட்டியுள்ளது.

மதிப்பின் அடிப்படை: 2021-ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுடன் ஒப்பிடுகையில் மதிப்பின் அடிப்படையில் இது 5.6 சதவீதம் அதிகம்.

இதற்கு முன்பாக, 2018-ஆம் ஆண்டில் முதல் காலாண்டில்தான் நிறுவனங்களஅதிகபட்சமாக 3,110 கோடி டாலா் மதிப்புக்கு இணைப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு நிறுவனங்கள்: கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கை அடிப்படையிலான ஒப்பந்தங்களின் மதிப்பு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 29.6 சதவீதம் உயா்ந்துள்ளது.

உள்நாட்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கை 8.3 சதவீதம் குறைந்து 2,370 கோடி டாலராக இருந்தது.

பயோகான்: அமெரிக்காவைச் சோ்ந்த வயத்ரிஸ் பயோசிமிலா்ஸ் வணிக நிறுவனத்தை பயோகான் கையகப்படுத்தியது நடப்பாண்டில் இதுவரையில் மிகப்பெரிய ஒப்பந்தமாக பாா்க்கப்படுகிறது. இதன் மதிப்பு 333 கோடி டாலராகும். இந்திய மதிப்பில் இது சுமாா் ரூ. 25,000 கோடி ஆகும்.

தொழில்நுட்பம்: அதிநவீன தொழில்நுட்பத் துறையை குறி வைத்தே ஏராளமான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 660 கோடி டாலராகும். இது, முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம். மேலும், சந்தைப் பங்களிப்பில் 21.8 சதவீதத்தை வழங்கியுள்ளது.

ஆரோக்கிய பராமரிப்பு: அதேபோன்று, மொத்த ஒப்பந்த மதிப்பில் ஆரோக்கிய பராமரிப்பு துறை 15.5 சதவீதத்தை கைப்பற்றியது. இத்துறையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு நான்கு மடங்கு அதிகரித்து 470 கோடி டாலரைத் தொட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து நிதி துறை 410 கோடி டாலருடன் 13.5 சதவீத சந்தை பங்களிப்பை அளித்துள்ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read in source website

பி75 ஸ்காா்பீன் திட்டத்தின் கீழ் 6-ஆவது நீா்மூழ்கிக் கப்பலான ‘வாக்ஷீா்’ ஏப்ரல் 20-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கடந்த 2005-ஆம் ஆண்டு இந்தியா-பிரான்ஸ் இடையே 3.75 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.28,600 கோடி) மதிப்பில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், இந்திய கடற்படைக்காக 6 ஸ்காா்பீன் ரக தாக்குதல் நீா்மூழ்கிக் கப்பல்களைக் கட்ட திட்டமிடப்பட்டது. அந்த கப்பல்கள் டீசல் மற்றும் மின்சார உதவியுடன் இயங்குபவை. பிரான்ஸில் உள்ள நேவல் குரூப் நிறுவனத்தின் உதவியுடன் மும்பையில் உள்ள மஸகான் டாக் கப்பல் கட்டுமான பொதுத் துறை நிறுவனத்தால் அந்தக் கப்பல்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஐஎன்எஸ் கல்வரி, ஐஎன்எஸ் கன்டேரி, ஐஎன்எஸ் கரஞ், ஐஎன்எஸ் வேலா ஆகிய 4 ஸ்காா்பீன் கப்பல்கள் ஏற்கெனவே பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ‘வாகீா்’ என்ற பெயா்கொண்ட 5-ஆவது ஸ்காா்பீன் கப்பல் தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ளது.

இந்நிலையில், ‘வாக்ஷீா்‘ என்ற பெயா்கொண்ட 6-ஆவது ஸ்காா்பீன் கப்பல் ஏப்.20-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று மஸகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனத் தலைவா் நாராயண் பிரசாத் தெரிவித்தாா். அந்தக் கப்பல் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு கடலில் செலுத்தப்பட்டு அதிகாரிகளால் சோதனையிடப்படும் என்றும் அவா் கூறினாா்.Read in source website

 உலகின் எந்த மூலையில் வசித்தாலும், இந்தியாவின் அடையாளத்தை வெளிநாடுவாழ் இந்தியா்கள் தொடா்ந்து பாதுகாத்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சா் ராஜ்நாத் சிங், சான் பிரான்சிஸ்கோ நகரில் வசிக்கும் இந்தியா்களை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அவா் கூறுகையில், ‘வெளிநாட்டில் வசிக்கும் இந்தியா்களும் தங்களை ‘இந்தியா்கள்’ எனக் கூறிக் கொள்வதிலேயே பெருமை கொள்கின்றனா். உலகின் எந்த மூலையில் வசித்தாலும், இந்தியாவின் கலாசார அடையாளங்களை அவா்கள் கைவிடுவதில்லை. அவற்றைத் தொடா்ந்து பாதுகாத்து வருகின்றனா்.

அரசியல் வாழ்க்கையில் அமெரிக்காவுக்கு 4-ஆவது முறையாகப் பயணிக்கிறேன். சான் பிரான்சிஸ்கோ நகருக்கு முதல் முறையாக வந்துள்ளேன். இந்தப் பயணம், அரசுமுறைப் பயணமாக இல்லாமல் இருந்திருந்தால், அனைத்து நகரங்களிலும் உள்ள இந்தியா்களை சந்தித்துப் பேசியிருப்பேன்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா்கள் தங்களுக்கென்ற தனித்துவத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனா். அவா்களின் கடின உழைப்பின் காரணமாகவே இது சாத்தியமானது. இந்தியாவில் இருந்து தொலைதூரம் வசித்தாலும், கலாசார அடையாளத்தை அமெரிக்கவாழ் இந்தியா்கள் தொடா்ந்து பாதுகாத்து வருவது சிறப்புக்குரியது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக சக்திகளான இந்தியாவும் அமெரிக்காவும் சா்வதேச அமைதியையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு பன்முகத்தன்மை கொண்டாதாக விளங்குகிறது.

இயற்கையான உறவு: இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு இயற்கையாகவே அமைந்ததென உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தற்போது தெரிந்து கொண்டுள்ளன. இந்த நல்லுறவில் நிலைத்தன்மையும் நீடித்த தன்மையும் உள்ளன. ஆனால், அவற்றைத் தொடா்ந்து உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இரு நாடுகளுக்கும் உள்ளது.

அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் உச்சம்தொட்டு வரும் இந்திய சமூகத்தினா், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை வளா்ப்பதில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனா். இங்கு வசிக்கும் இந்தியா்களின் சாதனைகளை, இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனா்.

ட்விட்டரின் தலைமை நிா்வாக அதிகாரியாக பராக் அக்ரவால் நியமிக்கப்பட்டபோது, தங்கள் உறவினா்களில் ஒருவரே நியமிக்கப்பட்டதுபோல இந்திய மக்கள் மகிழ்ந்தனா். மைக்ரோசாஃப்படின் சத்யா நாதெள்ளா, கூகுளின் சுந்தா் பிச்சை எனப் பல இந்தியா்கள் தொழில்நுட்பத் துறையில் சிறந்துவிளங்கி வருகின்றனா்’’ என்றாா்.

தாக்கப்பட்டால் அமைதியாக இருக்க மாட்டோம்

அமெரிக்கவாழ் இந்தியா்களிடம் பேசிய அமைச்சா் ராஜ்நாத் சிங், இந்தியாவைத் தாக்க சிலா் முயன்றால் அமைதியாக இருக்கமாட்டோம் என சீனாவை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பிரச்னை ஏற்பட்டபோது இந்திய ராணுவத்தினா் என்ன செய்தனா், மத்திய அரசு என்ன முடிவெடுத்தது என்பதை வெளிப்படையாகக் கூற முடியாது. ஆனால், இந்தியாவைத் தாக்க முயன்றால், நிச்சயம் அமைதியாக இருக்க மாட்டோம் என்ற செய்தி சம்பந்தப்பட்டவா்களுக்குக் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்’ என்றாா்.

ரஷியாவுடனான உறவைக் குறைத்துக் கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்த நிலையில், அந்நாட்டை மறைமுகக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘குறிப்பிட்ட நாட்டுடன் இந்தியா நல்லுறவு கொண்டிருந்தால், அது மற்ற நாடுகளைப் பாதிக்கும் என்பதில்லை. இதுபோன்ற வெளியுறவுக் கொள்கையை இந்தியா எப்போதும் கடைப்பிடித்ததில்லை. வெளியுறவுக் கொள்கையில் இரு நாடுகளுக்கும் பலன் இருக்கும் வகையிலான உறவையே இந்தியா விரும்புகிறது.

இந்தியா மீதான கண்ணோட்டம் மாறியுள்ளது. இந்தியாவின் பெருமை வலுவடைந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட மூன்று நாடுகளில் இந்தியா இடம்பெறுவதை உலகில் உள்ள எந்த சக்தியும் தடுக்க முடியாது.

தற்சாா்பு இலக்கை நோக்கி...: தற்சாா்பு அடைவதற்கான இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக, பாதுகாப்புத் துறையைத் தற்சாா்பு ஆக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகில் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் பொருளாதாரம், தற்போது வேகமாக மீண்டு வருகிறது’ என்றாா்.Read in source website

டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சாஜன் பிரகாஷ் தங்கமும், வேதாந்த் மாதவன் வெள்ளிப் பதக்கமும் வென்றனா்.

டென்மாா்க் தலைநகா் கோபன்ஹேகனில் டேனிஷ் ஓபன் 2022 நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

சா்வதேச போட்டியில் முதன்முறையாக பங்கேற்றுள்ள சாஜன் பிரகாஷ் ஆடவா் 200 மீ. பட்டா்பிளை பிரிவில் 1:59:27 நிமிஷ நேரத்தில் கடந்து தங்கப் பதக்கம் வென்றாா்.

டென்மாா்க்கின் லுகாஷேவ் வெள்ளியும், சோகாா்ட் ஆண்டா்ஸன் வெண்கலப் பதக்கமும் வென்றனா். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரா் என்ற சிறப்பையும் சாஜன் பெற்றுள்ளாா்.

நடிகா் மாதவன் மகன் வேதாந்த்:

ஆடவா் 1500 மீ. ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் 16 வயதே ஆன வேதாந்த் மாதவன் 15:57:86 நிமிஷ நேரத்தில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினாா். டென்மாா்க்கின் அலெக்சாண்டா் தங்கமும், பிரெட்ரிக் வெண்கலமும் வென்றனா்.

வேதாந்த் மாதவன் பிரபல திரைப்பட நடிகா் மாதவனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிா் 400 மீ. மெட்லி பிரிவில் ஷக்தி பாலகிருஷ்ணன் 8-ஆவது இடத்தையே பெற்றாா்.

 Read in source website

சீனா கட்டமைத்து வரும் புதிய விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்து சாதனை படைத்த நிலையில், மூன்று விண்வெளி வீரா்கள் சனிக்கிழமை பூமிக்குத் திரும்பினா்.

‘தியான்காங்’ என்ற விண்வெளி நிலையத்தை சீனா உருவாக்கி வருகிறது. இதன் கட்டமைப்புப் பணிக்காக அனுப்பப்பட்டிருந்த விண்வெளி வீரா்கள் ஷாய் ஷிகாங், வாங் யாபிங், யி குவாங்ஃபு ஆகியோா் சுமாா் 6 மாதங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தனா். அப்போது இருமுறை விண்வெளியில் நடந்து விண்வெளி நிலையத்துக்கான தொகுதிகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், அவா்கள் ஷென்ஸோ-13 விண்கலம் மூலம் சனிக்கிழமை பூமிக்கு திரும்பினா். கோபி பாலைவனத்தில் காலை 9.56 மணிக்கு அந்த விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியதாக அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.

மூவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா். இதற்கு முன்பு சென்ஸோ-12 விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட விண்வெளி வீரா்கள் ஒரே முறையில் 92 நாள்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்ததே சாதனையாக இருந்தது.

சென்ஸோ-12 விண்கலம் மூலம் வீரா்கள் பூமிக்குத் திரும்ப 29 மணி நேரம் ஆன நிலையில், சென்ஸோ-13 விண்கலம் மூலம் 8 மணி நேரத்தில் வீரா்கள் பூமிக்கு திரும்பியுள்ளனா்.

அடுத்தகட்டமாக சென்ஸோ-14 விண்கலம் மூலம் வீரா்களை விண்வெளிக்கு அனுப்பும் பணி விரைவில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

 Read in source website

இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மூடப்படுகிறது. 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயா்வு, எரிபொருள், உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அரசியல் குழப்பமும் நீடித்து வருகிறது. இலங்கை அரசைக் கண்டித்து மக்களின் போராட்டமும் தொடர்ந்து வருகிறது. 

பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியில் இருந்து வருகிறது. அவ்வப்போது தற்காலிகமாக சில மணி நேரங்கள் மூடப்பட்டும் வருகிறது. 

இந்நிலையில் கொழும்பு பங்குச்சந்தை முதல்முறையாக 5 நாள்களுக்கு மூடப்படுகிறது. 

இலங்கையின் பொருளாதார நிலைமைகளை சரிசெய்ய முதலீட்டாளர்களுக்கு கால அவகாசம் வழங்குவதற்காக கொழும்பு பங்குச் சந்தை அடுத்த வாரம் நிறுத்துமாறு இலங்கையின் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த வாரம் முழுவதும் அதாவது ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை கொழும்பு பங்குச்சந்தை மூடப்படுகிறது. Read in source website


புதிய பேரவைத் தலைவராக முன்னாள் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரபை நியமிப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (சனிக்கிழமை) கூடுகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்ற பேரவைத் தலைவர் தேர்தலில் அஷ்ரபுக்கு எதிராக வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவுள்ளார்.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தத் தவறிய முன்னாள் பேரவைத் தலைவர் ஆசாத் காசிர் கடந்த 9-ம் தேதி பதவியை ராஜிநாமா செய்தார். மேலும், இம்ரான் கானின் கட்சி உறுப்பினரும், பேரவை துணைத் தலைவருமான காசிம் கான் சுரிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. காசிம் கான் தற்போது பேரவைத் தலைவராக (பொறுப்பு) செயல்பட்டு வருகிறார்.Read in source website

 தங்களது கடற்படை பலத்தின் சின்னமாகத் திகழ்ந்த மாஸ்க்வா கப்பல், கடலுக்குள் மூழ்கியதாக ரஷியா தெரிவித்துள்ளது. ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதால் அந்தக் கப்பல் பலத்த சேதமடைந்து மூழ்கியதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் போரில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்த அந்தக் கப்பலை தாங்கள்தான் ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. எனினும், இதனை ரஷியா மட்டுமன்றி அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கருங்டகல் கடற்படைப் பிரிவு தலைமைக் கப்பலான மாஸ்க்வாவில் திடீரென தீப்பிடித்தது. அதையடுத்து, கப்பலில் இருந்த ஆயுதக் கிடங்கு ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் கப்பல் பலத்த சேதமடைந்தது.

கப்பலில் இருந்த வீரா்கள் அனைவரும் அதிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனா். அதையடுத்து, அந்தக் கப்பல் பழுதுபாா்க்கப்படுவதற்காக துறைமுகத்தை நோக்கி இழுத்திச் செல்லப்பட்டது. வழியில் அது நிலைகுலைந்து கடலுக்குள் மூழ்கியது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோவியத் யூனியன் காலத்தில் கட்டப்பட்ட மாஸ்க்வா போா்க் கப்பல், சக்திவாய்ந்த 16 தொலைதூர ஏவுகணை எடுத்துச் சென்று செலுத்தும் திறன் கொண்டது. தற்போது அந்தக் கப்பல் மூழ்கியதால் கடலில் ரஷியாவின் தாக்குதல் திறன் கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

2015-ஆம் ஆண்டில், சிரியா போரின்போது ரஷியாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு மாஸ்க்வா போா்க் கப்பல் உறுதுணையாக இருந்தது.

அந்தக் கப்பலை உக்ரைன் ராணுவம் தாக்கி அழித்தது உறுதி செய்யப்பட்டால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சண்டையில் ரஷியா இழந்துள்ள முதல் போா்க் கப்பல் மாஸ்க்வாவாக இருக்கும்.Read in source website

பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்கள் கடன்பத்திர வெளியீடுகள் மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.5.88 லட்சம் கோடியை திரட்டியுள்ளன.

இதுகுறித்து பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நிறுவனங்கள் தங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு தேவையான நிதியை கடன்பத்திரங்கள் மூலம் திரட்டுவதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கடன்பத்திர விற்பனையின் மூலம் ரூ.5.88 லட்சம் கோடியை திரட்டின. இது, ஆறு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.

மேலும், முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் இந்நிறுவனங்கள் வரலாற்று சாதனை அளவில் திரட்டிய ரூ.7.72 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது கடந்த நிதியாண்டில் கடன்பத்திர வெளியீட்டின் வாயிலாக திரட்டப்பட்ட தொகை 24 சதவீதம் குறைவு.

இதற்கு முன்பு, கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் பட்டியலான நிறுவனங்கள் மிகவும் குறைந்தபட்சமாக ரூ.4.58 லட்சம் கோடியை திரட்டிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் குறைந்த வட்டியில் வேகமாக கடனுதவி வழங்கியது மற்றும் பங்குகளின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாகவே நிறுவனங்கள் தனிப்பட்ட வகையில் கடன்பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டுவது கணிசமான அளவில் குறைந்து போனதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read in source website

காரைக்கால்: "புதுச்சேரி சட்டப்பேரவை செயலகத்துக்கு நிதி அதிகாரம் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்களுக்கான அனைத்து தேவைகளையும் படிப்படியாக பிரதமர் மோடியின் ஒத்துழைப்போடு மாநில அரசு நிறைவேற்றும்" என அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் உறுதிபடக் கூறியுள்ளார்

காரைக்காலில் இன்று (ஏப்.16) செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், "அசாமில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் காமென்வெல்த் சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, அரசியல் ஈடுபாடு உள்ளிட்டவை தொடர்பான எனது கருத்துகளைப் பதிவு செய்தேன்.

என்னுடைய கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு அதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை செயலகத்துக்கு நிதி அதிகாரம் பெறப்பட்டுள்ளது. இனி நிதி குறித்த கோப்புகள் தலைமை செயலருக்கோ, நிதித்துறை செயலருக்கோ அனுப்பப்படாது. கடந்த 41 ஆண்டுகளாக பின்பற்றப்படாத புது நடைமுறையாக இந்த அதிகாரம் பெறப்பட்டுள்ளது.

இதை புதுச்சேரி மக்களுக்கான வரப்பிரசாதமாக கருதுகிறோம். படிப்படியாக புதுச்சேரி மக்களுக்கான அனைத்து தேவைகளையும் பிரதமர் மோடியின் ஒத்துழைப்போடு மாநில அரசு நிறைவேற்றும்" இவ்வாறு செல்வம் கூறியுள்ளார்.


Read in source website

சென்னை: உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி இடம்பிடித்துள்ளது.

உலகில் உள்ள சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை உலகின் சிறப்பு வணிக இதழான CEOWORLD இதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் ஹார்டுவேர் மருத்துவக் கல்லூரி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 21 இடங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழங்கள்தான் உள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த 5 மருத்துவக் கல்லூரிகள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இதன்படி 21-வது இடத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியும், 37-வது இடத்தில் புனே இந்திய ராணுவ மருத்துவக் கல்லூரியும், 46-வது இடத்தில் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியும், 55-வது இடத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியும், 60-வது இடத்தில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியும் இடம்பிடித்துள்ளன.

இந்த 5 மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் ஒரே மருத்துவக் கல்லூரி சென்னை மருத்துவக் கல்லூரிதான். மீதம் உள்ள 4 மருத்துவக் கல்லூரிகளில் 2 மத்திய அரசாலும், ஒன்று இந்திய ராணுவத்தாலும், ஒன்று சிறுபான்மைக் கல்வி நிறுவனமாகவும் உள்ளது கவனிக்கத்தக்கது.Read in source website

போட்டித்தேர்வு என்றாலே அது பொது அறிவை சார்ந்துதான் இருக்கிறது. அப்படி பொது அறிவு என்கிற போது எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்பது பெரும்பான்மையான போட்டியாளர்களின் மனப்பான்மை. அப்படி யானால் எதை நாம் படிப்பது என்ற கேள்விக்கு விடையை இந்த பகுதியில் தெளிவு பெற உள்ளோம்.

போட்டித் தேர்வுகளில் பொது அறிவு சார்ந்த கேள்விகளை எப்படி வகைப்படுத்தி கேட்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி நேரங்களில் ஒரு பொது அறிவு புத்தகம் வாங்கி சேர்த்துவைப்போம். அதில் உள்ள தகவல்கள், போட்டித் தேர்வுக்கு பயன்படலாம். ஆனால் அது தகவல் சார்ந்தஓர் அறிவாக இருப்பதால் அந்ததகவலுக்கு நம்மிடத்தில் புரிதல் இல்லை. ஆகவே அறிவு என்பது அறிதல் மட்டுமல்லாமல், புரிதலும் சேர்த்துதான்.

சமூகத்தில் நம்மைச் சுற்றி பல்வேறு விஷயங்கள் நடைபெற்று வருகிறது. அந்த விஷயங்களை நாம் புரிந்துகொண்டால், புரிதலின் அடிப்படையில் நாம் சரியான முடிவை எடுக்க இயலும் என்பதுதான் பொது அறிவின் நோக்கமே. இதை மனதில்வைத்துக்கொண்டு அதற்கேற்ப நம்மை தயார்படுத்த முடியும்.

பொது அறிவு என்பது பொதுவானஅறிவு என்பதைவிட போதுமான அறிவு. நாம் நமது ஆளுமையை பயன்படுத்தும் நிலை.

பொது அறிவை நாம் வெவ்வேறு நிலைகளில் பயன்படுத்துகிறோம். ஒரு கேள்வியை பார்த்தவுடன் அதை படித்து புரிந்து எது சரியான பதில் என்பதை தேர்ந்தெடுப்பதுதான் சிந்தனைக்கான ஒரு சவால்.

சரியான பதில் எனும்போதுபுரிதல் சார்ந்த சரியான பதில். போட்டித் தேர்வில்வேகமாக பதில் அளிக்கும் போட்டியாளர்களை விரைந்து தேர்ந்தெடுக்கின்றனர். தேர்வு எழுதும்போது விடைகளை புரிதலுக்கான வார்த்தைகளை பயன்படுத்தி எழுத வேண்டும். மேலும் தேவையான அளவு எவ்வளவு என்பதை பார்த்து அந்த அளவுக்கு பதில் அளிக்க வேண்டும். உதாரணத்துக்கு 100 வார்த்தையோ அல்லது 200 வார்த்தையோ பதில் அளித்தால் போதுமானது. இதையே நாம் கட்டுரை எழுதும் போது நமது புரிதலை இன்னும் விவரித்து அந்தப் புரிதலை நாம் வெளிப்படுத்துகிறோம். நமது ஆளுமையோடு சேர்த்து, இதை நாம் எந்த அளவுக்கு சரியாகவும் தவறாகவும் எழுதியுள்ளோம் என்றும் நாம் ஏற்றுக் கொள்ளலாமா கூடாதா என்பது குறித்து ஒரு ஆளுமையோடு வெளிப்படுத்துகிறோம்.

நமக்கு இந்தப் போட்டித் தேர்வுக்கான பொது அறிவு எது என்பதை பார்ப்போம்.

பொது அறிவு ஐந்து வகைப்படும்

1) அரசியல் அறிவு

2) பொருளாதார அறிவு

3) இந்திய வரலாறு

4) புவியியல்

5) அறிவியல்

தமிழ்நாடு அளவில் போட்டித் தேர்வு வரும்போது தமிழ்நாட்டைப் பற்றி கூடுதலாக தெரிந்து கொள்வது அவசியம்.

யுபிஎஸ்சி தேர்வுகள் அனைத்து இந்தியர்களுக்கான தேர்வாகும். இதில் டிஎன்பிஎஸ்சி தகவல்களுடன் சேர்ந்து படிப்பதில் தவறில்லை. டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வு என்று வரும்போது, அது அரசியல், பொருளாதாரம், வரலாறு, புவியியல், அறிவியல் என எதுவானாலும், தமிழ்நாட்டைப் பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டும்.

புவியியல் என்பது மூன்று வகைப் படும்.

1. உலக புவியியல்

2. இந்தியப் புவியியல்

3. தமிழ்நாடு புவியியல்

அறிவியலை மூன்று வகையில் நமது பள்ளியில் பயின்று உள்ளோம். இவையெல்லாம் அறிவியலில் அடிப்படையாக நாம் பள்ளியில் படித்து உள்ளோம். போட்டியாளர்கள் நினைப்பதைப் போன்று பெரிய அளவில் வித்தியாசங்கள் ஏதும் இல்லை. நாம் பள்ளியில் பயிலும் போது மதிப்பெண் எடுக்க படித்தோம்.

அறிவியலில் இயற்பியல், வேதியியல், உயிரியல் இவை அனைத்தையும் சார்ந்த அறிவியல் தொழில்நுட்பம்.

அறிவியல் தொழில்நுட்பம் என்பது, உதாரணத்துக்கு நாம்தொலைக்காட்சியை பார்க்கிறோம். இதுபோன்ற அறிவை பயன்படுத்தும்போது இதற்குப் பெயர்தான் அறிவியல் தொழில்நுட்பம் என்கிறோம்.

தமிழ்நாட்டின் அரசியல் பற்றிஏராளமான தகவல்கள் உள்ளன. அதைப்பற்றி விரிவாக தெரிந்து கொள்வது அவசியம்.

இந்திய பொருளாதாரத்தை பார்க்கும்போது தமிழ்நாட்டு பொருளாதாரம் பற்றியும் பார்த்துக் கொள்ள வேண்டும். சமூகம் சார்ந்த ஊரக வளர்ச்சி அடிப்படை சிந்தனைகள் இருக்கலாம். இதைப்போலவே இந்திய வரலாற்றில் தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவ மன்னர்களைப் பற்றியும், திப்பு சுல்தான் போன்ற ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டுக்கு எப்படி வந்தார்கள் என்பது குறித்தும் ஆண்டது குறித்தும் தெரிந்துகொள்வது அவசியம்.

பிரெஞ்சுக் காரர்களும் பிரிட்டிஷ்காரர்களும் போர் புரிந்த வந்தவாசி போர் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

புவியியல் பற்றி சொல்லும் போது ஆல்ப்ஸ் மலைகளைப் பற்றியும், இமயமலை பற்றியும் தமிழ்நாட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளை பற்றியும், அதில் உயரமான மலைகள் எது என்பது குறித்தும், மரங்களின் வகைகள் குறித்தும், காட்டு மிருகங்களின் வகைகள் குறித்தும், அதன் சூழ்நிலைகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம்.

அடுத்த பகுதியில் பொது அறிவில் ஐந்து வகைகளில் ஒவ்வொரு அறிவைப் பற்றியும் விவரமாக பார்க்கலாம்.Read in source website

திருச்சி: காரைக்குடி அருகிலுள்ள ஆத்தங்குடியில் தயாரிக்கப்படும் தரைக்கற்களுக்கு (டைல்ஸ்) புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி கூறியது: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள ஆத்தங்குடியில் குடிசைத் தொழிலாக 50-க்கும் மேற்பட்ட கூடங்களில் ஆத்தங்குடி தரைக்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை இயந்திரங்களை பயன்படுத்தாமல் கைகளாலேயே செய்யப்படுகிறது. குளிர்காலங்களில் லேசான கதகதப்பையும், கோடைக்காலங்களில் குளிர்ச்சியையும் வீடுகளுக்கு கொடுக்கிறது.

இவற்றை செட்டிநாடு தரைக்கற்கள், பூ தரைக்கற்கள், கண்ணாடி தரைக்கற்கள், காரைக்குடி கற்கள் என பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். பாரம்பரியமிக்க பூ வேலைப்பாடுகளுடன் கூடிய ஆத்தங்குடி தரைக்கற்கள் உலக அளவில் அழிக்க முடியாத புராதன சின்னங்களாக உள்ளன.

இவை பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

இந்த கற்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு கிடைக்கும் போது கிராம பொருளாதாரம் மேலும் உயரும். நாடு முழுவதும் இந்த கற்களை அனுப்புவதற்கும், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் வழிவகுக்கும்.

சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழிலுக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், செயல்முறை மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு மையம், சென்னை மற்றும் செட்டிநாடு ஆத்தங்குடி ஹெரிடேஜ் தரைக்கற்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஆத்தங்குடி தரைக்கற்களுக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்துள்ளது என்றார்.Read in source website

இங்கிலாந்து பிரதமர் பதவி ரேஸில் மிகவும் பின்தங்கியிருக்கிறார் ரிஷி சுனக். இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட ரிஷி சுனக், இங்கிலாந்தின் முதன்மைப் பதவியை அடையும் வாய்ப்பு கடந்த மாதம் வரை பிரகாசமாக இருந்தன. 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவின் கணவரான அவருக்கு எதிராக அடுத்தடுத்து எழுந்த சர்ச்சைகள் இப்போது பிரதமர் கனவை தவிடுபொடியாக்கியுள்ளன.

ரிஷி சுனக் யார்? - இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது ரிஷி சுனக்கின் குடும்பம். இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் ரிஷி பிறந்தார் என்பதால், இயல்பிலேயே அவர் இங்கிலாந்து குடிமகனாக வளர்ந்தார். இங்கிலாந்து அரசியல்வாதிகள் பலரும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயில்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதே வழியைப் பின்பற்றி ரிஷியும் தத்துவம் பயின்றார். அடுத்ததாக அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிப்பு. இங்குதான் ரிஷியின் வாழ்வில் மிக முக்கிய தருணம் நிகழ்ந்தது. ஆம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்ற சக மாணவியும், இந்தியாவின் புகழ்பெற்ற பிசினஸ்மேன் 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தியின் மகளுமாகிய அக்‌ஷதா மீது காதல் வயப்பட்டு இருவரும் பெற்றோர்கள் சம்மத்துடன் பெங்களூருவில் 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.Read in source website

வாஷிங்டன்: பாகிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு, அமெரிக்காவின் தலையீடுதான் காரணம் என முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் அவரது ஆதரவாளர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். அமெரிக்காவுக்கு எதிராக அவர்கள் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில், பாகிஸ்தானிய அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவரை அவர்கள் தாக்கினர்.

இந்நிலையில், அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்ட புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளோம். அவருடனும், அவரது அரசுடனும் இணைந்து செயல்பட ஆவலுடன் காத்திருக்கிறோம்.

சுமார் 75 ஆண்டுகளாக, அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான உறவு முக்கியமானதாக இருந்துள்ளது. பாகிஸ்தானில் அமைதி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் பணியை, பாகிஸ்தான் அரசுடன் இணைந்து தொடர்வதை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். ஆட்சி மாற்றம் தொடர்பாக அமெரிக்கா மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. மனித உரிமைகளை மதிப்பது உட்பட, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக கொள்கைகளை அமைதியாக நிலைநாட்டுவதை நாங்கள் ஆதரிக்கிறோம். இதை எந்த நாட்டிலும், எந்த கட்சி மீறினாலும், நாங்கள் ஆதரிப்பதில்லை.

இம்ரான் கான் அரசை வெளியேற்றியதில், அமெரிக்காவுக்கு தொடர்பில்லை என பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்தை, அமெரிக்கா ஒப்புக்கொள்கிறது.

இவ்வாறு நெட் பிரைஸ் கூறியுள்ளார்.Read in source website

நியூயார்க்: அமெரிக்காவில் முகாமிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸை நியூயார்க்கில் நேற்று சந்தித்தார்.

அப்போது உக்ரைன் போர் குறித்து இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். போர் காரணமாக உக்ரைனில் உணவு, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்த நாட்டுக்கு உணவு, எரிபொருள் விநியோகம் செய்வது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அந்த நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்தும் ஜெய்சங்கரும் அந்தோனியோ குத்தேரஸும் விவாதித்தனர். மியான்மரில் ராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்தும் இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன். குறிப்பாக உக்ரைன் போரால் சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உக்ரைனில் ஏற்பட்டுள்ள உணவு, எரிபொருள் தட்டுப்பாடு, வளரும் நாடுகளின் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு பாராட்டு

அந்தோனியோ குத்தேரஸ் கூறும்போது, "எந்தவொரு சவாலையும் இந்தியா எதிர்கொள்ளும் விதம் பாராட்டும் வகையில் உள்ளது. இந்தியாவோடு இணைந்து பணியாற்ற ஐ.நா. சபை எப்போதும் தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.Read in source website

புதுடெல்லி: இந்தியா, பிரான்ஸ் ராணுவ அதிகாரிகளிடையிலான 20-வது ஆண்டு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையின் போது 2 நாடுகளிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்தியா, பிரான்ஸ் ராணுவ உயர் அதிகாரிகளிடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான பேச்சுவார்த்தை பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த 12, 13-ம் தேதிகளில் நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்த இந்தியா-பிரான்ஸ் கூட்டு பேச்சுவார்த்தை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நட்பு ரீதியிலும், சுமுகமான சூழ்நிலையிலும் 2 நாடுகள் இடையிலான இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2 நாடுகளிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், புதிய முயற்சிகள் மற்றும் தற்போதைய பாதுகாப்பு ஈடுபாடுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தியாவிலிருந்து இந்த பேச்சுவார்த்தையில் உதவி தலைமை ராணுவ தளபதியும் (ராணுவ ஒத்துழைப்பு), ஒருங்கிணைந்த ராணுவப் பணியாளர்கள் பிரிவின் ஏர்வைஸ் மார்ஷலுமான பி.மணிகண்டன், பிரான்ஸ் தரப்பில் அந்நாட்டைச் சேர்ந்த ராணுவ தலைமையிடத்தின் இரு நாடுகளிடையிலான ஒத்துழைப்பு தெற்கு, பணியாளர்கள் பிரிவின் பிரிகேடியர் ஜெனரல் எரிக் பெல்டியர் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கடந்த பிப்ரவரியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று திரும்பினார். அதன் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தியாவும் பிரான்ஸும் கடல்சார் பாதுகாப்பு விவகாரத்தில் உயர்நிலை பேச்சுவார்த்தையைத் தொடர்கின்றன. இதன்மூலம் இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் இரு நாடுகளிடையிலான ஒத்துழைப்பு அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டுப் பேச்சுவார்த்தையானது கடல்சார் பாதுகாப்புக்கான இந்தியா-பிரான்ஸ் ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை தந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Read in source website

புதுடெல்லி: இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மார்ச் மாதத்தில் 6,399 கோடி டாலராக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 14.15 சதவீதம் அதிகம். அதேபோல் இறக்குமதியும் சென்ற மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகரித்து 7,390 கோடி டாலராக உள்ளது.

வர்த்தகப் பற்றாக்குறை இவ்வாண்டு மார்ச் மாதம் 1,851 கோடி டாலராக உள்ளது. சென்ற மார்ச்சில் 1,364 கோடி டாலராக இருந்தது. மொத்தமாக 2021-22 நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 66,889 கோடி டாலராக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2020-21 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 34.34 %அதிகம். இதுபோல 2021-22 நிதிஆண்டில் இறக்குமதி 75,668 கோடி டாலராக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது 2020-21 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47.80% அதிகம்.Read in source website

UPA அரசு வழங்கிய எண்ணெய் பத்திரங்களுக்கு அரசாங்கம் செலுத்த வேண்டியிருப்பதால் எண்ணெய் விலைகளை குறைக்க முடியாது என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார். எண்ணெய் பத்திரங்கள் என்றால் என்ன, அவை அரசாங்கத்தின் கைகளை எந்த அளவிற்கு கட்டிப்போடுகின்றன?

Udit Misra

Explained: What are oil bonds, and to what extent do they tie the govt’s hands?: கடந்த ஓராண்டாக, பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்களின் சில்லறை விலை உயர்ந்து வருவதால், அரசாங்கம் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் உட்பட பல சந்தர்ப்பங்களில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைமையிலான UPA அரசால் வெளியிடப்பட்ட எண்ணெய் பத்திரங்களுக்கான கடனுக்கு செலுத்த வேண்டியிருப்பதால், தற்போதைய அரசாங்கத்தால் வரிகளை (அதன் விளைவாக, விலைகளை) குறைக்க முடியாது என்று கூறி இத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ள முயன்றார். பெட்ரோலியப் பொருட்களுக்கு வரிவிதிப்பு என்று வரும்போது எண்ணெய் பத்திரங்கள் அரசாங்கத்தை எவ்வளவு தூரம் பின்னுக்குத் தள்ளுகின்றன?

எரிபொருள் விலையில் வரி எவ்வளவு விதிக்கப்படுகிறது?

உள்நாட்டு சில்லறை விலையில் இரண்டு கூறுகள் உள்ளன. அவை கச்சா எண்ணெயின் விலை மற்றும் அடிப்படை விலையில் விதிக்கப்படும் வரிகள். இவை சேர்ந்து சில்லறை விலையை உருவாக்குகின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் வரிகள் மாறுபடும். உதாரணமாக, தற்போதைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான மொத்த சில்லறை விலையில் 50% வரியும், ஒரு லிட்டர் டீசலுக்கான மொத்த சில்லறை விலையில் 44% வரியும் விதிக்கப்படுகிறது.

நிதி அமைச்சர் கூறியது என்ன?

நிதி அமைச்சர் இரண்டு முக்கிய புள்ளிகளை முன்வைத்தார். ஒன்று, உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இரண்டு, வரிகள் விஷயத்தில், UPA காலத்தின் எண்ணெய் பத்திரங்களை அவர் குற்றம் சாட்டினார். “… எண்ணெய் பத்திரங்கள் என்ற பெயரில் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் நுகர்வோருக்கு வழங்கப்பட்ட மானியத்தை இன்றைய வரி செலுத்துவோர் செலுத்துகிறார்கள், மேலும் பத்திரங்களின் மீட்பு 2026 வரை தொடர்வதால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் தொடர்ந்து செலுத்துவார்கள்,” என்று அவர் ராஜ்யசபாவில் கூறினார்.

2021 டிசம்பரில், நாடாளுமன்றத்தில் பேசிய அவர், 2008ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலிருந்து மேற்கோள் காட்டினார்: “எண்ணெய் நிறுவனங்களுக்குப் பத்திரங்களை வழங்குவதும் பற்றாக்குறையை ஏற்றுவதும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அல்ல என்பதை தேசம் நினைவில் கொள்ள விரும்புகிறேன் (இதனால் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது). இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நமது சுமையை மட்டுமே நமது குழந்தைகளுக்கு நாம் விட்டு வைக்கிறோம்.

எண்ணெய் பத்திரங்கள் என்றால் என்ன? அவை ஏன் வழங்கப்பட்டன?

உள்நாட்டு நுகர்வோருக்கு எரிபொருள் விலைகள் மிக அதிகமாக இருந்தபோது, ​​கடந்த காலங்களில் அரசாங்கங்கள் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களை (OMCs) நுகர்வோரிடம் முழு விலையையும் வசூலிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் வருமானம் பெறவில்லை என்றால், அந்நிறுவனங்கள் லாபமற்றதாகிவிடும். இதை நிவர்த்தி செய்ய, வருமான வித்தியாசத்தை செலுத்துவதாக அரசு கூறியது. ஆனால் மீண்டும், அரசாங்கம் அந்தத் தொகையை ரொக்கமாகச் செலுத்தினால், அது அர்த்தமற்றதாக இருக்கும், ஏனென்றால் OMC களுக்கு பணம் செலுத்துவதற்கு அதே நபர்களிடம் அரசாங்கம் வரி வசூலிக்க வேண்டியிருக்கும்.

இங்குதான் எண்ணெய் பத்திரங்கள் வருகின்றன. ஒரு எண்ணெய் பத்திரம் என்பது ஒரு IOU அல்லது அரசாங்கத்தால் OMC களுக்கு வழங்கப்படும் ஒரு உறுதிமொழி நோட்டு ஆகும், இது எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பணத்திற்கு பதிலாக அரசாங்கம் வழங்கியது, இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பொதுமக்களிடம் எரிபொருள் விலையின் முழு கட்டணத்தையும் வசூலிக்காது.

10 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாயை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனத்திற்கு அரசாங்கம் செலுத்தும் என்று ஒரு எண்ணெய் பத்திரம் கூறுகிறது. இந்த பணம் உடனடியாக வழங்கப்படாததற்காக எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க, அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 8% (அல்லது ரூ. 80 கோடி) மானியத்தை பத்திரம் முதிர்வடையும் வரை அந்நிறுவனங்களுக்குச் செலுத்தும்.

எனவே, அத்தகைய எண்ணெய் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம், அன்றைய அரசாங்கம் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் லாபத்தை அழிக்காமல் அல்லது ஒரு பெரிய பட்ஜெட் பற்றாக்குறை இல்லாமல் நுகர்வோரை பாதுகாக்க / மானியம் வழங்க முடிந்தது.

கடந்த காலங்களில் பல அரசாங்கங்களால் எண்ணெய் பத்திரங்கள் வழங்கப்பட்டன. ஆனால் இப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளவை UPA அரசாங்கம் வெளியிட்டவை.

அட்டவணை 1 காட்டுவது போல், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் NDA அரசாங்கம் 2014 இல் பொறுப்பேற்றபோது, ​​2015 மற்றும் 2026 க்கு இடையில் ரூ. 1.34 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்களுக்கு பணம் செலுத்த வேண்டியிருந்தது.

UPA காலத்தின் எண்ணெய் பத்திரங்களில் NDA அரசாங்கம் எவ்வளவு திருப்பிச் செலுத்தியுள்ளது?

முன்னர் விவாதிக்கப்பட்டபடி, எண்ணெய் பத்திரங்களில் இரண்டு கூறுகள் செலுத்தப்பட வேண்டும்: வருடாந்திர வட்டி செலுத்துதல் மற்றும் பத்திரத்தின் கால அளவின் முடிவில் இறுதி செலுத்துதல். இத்தகைய பத்திரங்களை வழங்குவதன் மூலம், ஒரு அரசாங்கம் முழு கட்டணத்தையும் 5 அல்லது 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கலாம், மேலும் இடைக்காலமாக வட்டி செலவுகளை மட்டும் செலுத்தலாம். 2015 மற்றும் 2021 க்கு இடையில், NDA அரசாங்கம் நான்கு செட் எண்ணெய் பத்திரங்களை முழுமையாக செலுத்தியுள்ளதாக அட்டவணை 1 காட்டுகிறது. இது மொத்தம் ரூ.13,500 கோடி.

ஒவ்வொரு ஆண்டும், பாஜக அரசாங்கம் முதிர்ச்சியடையாத அனைத்து பத்திரங்களுக்கும் வட்டி விகிதத்தை செலுத்த வேண்டியிருந்தது. விளக்கப்படம் 1 ஒவ்வொரு ஆண்டும் வட்டி செலுத்தும் தொகையைக் காட்டுகிறது. 2014 மற்றும் 2022 க்கு இடையில், பாஜக அரசாங்கம் மொத்தமாக ரூ.93,686 கோடியை வட்டி மற்றும் அசலுக்குச் செலவழித்துள்ளது.

வரிகளைக் குறைப்பதில் இருந்து நிதி அமைச்சகத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தத் தொகை பெரியதா?

பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து வகையான வரிகளிலிருந்தும் அரசாங்கம் ஈட்டிய பணத்துடன் செலவுகளை ஒப்பிடுவோம். விளக்கப்படம் 2, பெட்ரோலிய பொருட்களிலிருந்து மத்திய அரசும் மாநிலமும் இணைந்து ஈட்டிய மொத்த வருவாயைக் காட்டுகிறது, இந்த விளக்கப்படம் வரவு-செலவு குறித்தத் தகவலை வழங்குகிறது.

வரிக் குறைப்பைக் கட்டுப்படுத்தும் அளவுக்குப் பெரிய தொகை உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்க மூன்று வழிகள் உள்ளன.

முதலாவதாக, 2014-15 ஆம் ஆண்டில் மொத்த வருவாயில் வெறும் 7% மட்டுமே பத்திரங்களின் மொத்தச் செலவுகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும். வருடங்கள் செல்லச் செல்ல, இந்தத் துறையில் இருந்து பெறப்படும் வரிகள் உயர்ந்துள்ளதால், இந்த சதவீதம் குறைந்துள்ளது.

இரண்டாவது, பெட்ரோலியப் பொருட்களுக்கு வரி விதிப்பதன் மூலம் 2014 மற்றும் 2022 க்கு இடையில் அரசாங்கம் (மத்திய மற்றும் மாநிலங்கள் இரண்டும்) ஈட்டிய மொத்த வருவாயைப் பார்ப்பது. இந்த தொகை ரூ.43 லட்சம் கோடிக்கும் அதிகம். அதாவது, எண்ணெய் பத்திரங்களுக்கு இன்றுவரை NDA அரசாங்கம் செலுத்திய மொத்த தொகை, இந்தக் காலகட்டத்தில் ஈட்டிய மொத்த வருவாயில் வெறும் 2.2% மட்டுமே.

மூன்றாவது வழி, 2014-15 ஆம் ஆண்டில் ஒரே ஒரு வகையான வரி, அதாவது கலால் வரி மூலம் மத்திய அரசு ஈட்டிய மொத்த வருவாய் ரூ. 99,000 கோடிக்கும் அதிகமாக இருந்தது. (இந்த தரவு புள்ளி விளக்கப்படம் 2 இல் தனித்தனியாக கொடுக்கப்படவில்லை.)

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், NDA அரசாங்கம் எண்ணெய் பத்திரங்களுக்கு செலுத்திய தொகையை, ​​இந்தத் துறையில் ஈட்டப்பட்ட வருவாயுடன் ஒப்பிடும்போது செலுத்துதல் பெரியதாக இல்லை.

அப்படியிருந்தும், அத்தகைய பத்திரங்களை வெளியிடுவது மோசமான யோசனையல்லவா?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பத்திரங்களை வழங்குவது எதிர்கால சந்ததியினருக்குப் பொறுப்பைத் தள்ளும் என்று குறிப்பிட்டார். ஆனால் ஒரு பெரிய அளவிற்கு, அரசாங்கத்தின் பெரும்பாலான கடன்கள் பத்திரங்கள் வடிவில் உள்ளன. இதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் நிதிப்பற்றாக்குறை (அடிப்படையில் சந்தையில் இருந்து அரசாங்கத்தின் கடன் வாங்கும் நிலை) மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.

மேலும், இந்தியா போன்ற ஒப்பீட்டளவில் ஏழ்மையான நாட்டில், அனைத்து அரசாங்கங்களும் ஏதேனும் ஒரு வகையான பத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றன. பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் செய்ய ரூ.2.79 லட்சம் கோடி மதிப்பிலான பத்திரங்களை (எண்ணெய்ப் பத்திரங்களை விட இரண்டு மடங்கு) வெளியிட்ட தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பத்திரங்களுக்கான திருப்பிச் செலுத்தல்கள் 2036 வரை அரசாங்கங்களால் செலுத்தப்படும். பெங்களூரில் உள்ள டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என் ஆர் பானுமூர்த்தியின் கூற்றுப்படி, பத்திரங்களை வெளியிடுவதில் முக்கிய ஞானம் என்னவென்றால், ஒரு அரசாங்கம் இந்த கருவியை பொருளாதாரஉற்பத்தி திறனை அதிகரிக்க பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.Read in source website

சண்டே எக்ஸ்பிரஸ்-க்கு சனிக்கிழமை வந்த ஒரு கடிதத்தில், ‘பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு’ பாகிஸ்தான் உறுதியுடன் இருப்பதாக ஷேபாஸ் ஷெரீப் கூறியதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவுடன் அமைதியான மற்றும் ஒத்துழைப்பு உறவுகளைக் நாடுவதாகவும் அதை ‘அர்த்தமுள்ள உரையாடல்’ மூலம் இதை அடைய முடியும் என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சண்டே எக்ஸ்பிரஸ்க்கு சனிக்கிழமை வந்த ஒரு கடிதத்தில், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் உறுதியுடன் இருப்பதாக பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஷேபாஸ் ஷெரீப், ட்விட்டரில் செய்திகளை பரிமாறிக்கொண்ட சிறிது நேரத்திலேயே, பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பு எழுதிய கடிதத்திற்கு பதிலளித்துள்ளார். மோடி தனது கடிதத்தில், ‘ஆக்கபூர்வமான ஈடுபாட்டிற்கு’ அழைப்பு விடுத்திருந்தார்.

புது டெல்லியில், அதிகாரிகள் பாகிஸ்தானின் பதிலை நேர்மறையானது என்று புரிந்துகொண்டுள்ளனர்.

பிப்ரவரி 2019-ல் புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாலகோட் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வீழ்ச்சியை சந்தித்தது. அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 370 வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இரு நாடுகளும் தூதரகப் பேச்சுவார்த்தைகளைக் குறைத்துள்ளன. மேலும், இரு நாடுகளும் தலைநகரில் முழுநேர முதன்மை தூதர்கள் இல்லை.

ஏப்ரல் 11-ம் தேதி ஷேபாஸ் ஷெரீப், வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிப்பதில் இரு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வருமாறு கேட்டுக்கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஷேபாஸ் ஷெரீப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மோடி அவரை வாழ்த்தினார். பயங்கரவாதம் இல்லாத பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் இந்தியா விரும்புகிறது என்று கூறினார்.

“பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட எச்.இ. மியான் முகமது ஷேபாஸ் ஷெரீப் அவர்களுக்கு வாழ்த்துகள். பயங்கரவாதம் இல்லாத பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை இந்தியா விரும்புகிறது. இதன் மூலம் நமது வளர்ச்சி சவால்களில் கவனம் செலுத்தி, நமது மக்களின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்ய முடியும்” என்று மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், “பாகிஸ்தான் இந்தியாவுடன் அமைதியான மற்றும் ஒத்துழைப்பு உறவுகளை விரும்புகிறது.

ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது இன்றியமையாதது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் பாகிஸ்தானின் தியாகங்கள் அனைவரும் அறிந்ததே. அமைதியைப் பாதுகாப்போம், நமது மக்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

மோடியின் வாழ்த்து தெரிவித்துள்ள இந்த ட்வீட், ஆகஸ்ட் 2018 -ல் இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றபோது அவருக்கு அனுப்பிய கடிதத்தைப் போல உள்ளது.

இம்ரான் கான் பொறுப்பேற்றபோது வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, பாகிஸ்தானில் சுமூகமான ஆட்சி மாற்றம் ஏற்படுவது ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும், உறுதிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். துணைக் கண்டத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளம் ஆகியவற்றுடன் பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாமல மாற்றுவதற்கும், வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்கும் தங்கள் பார்வையைப் பற்றி அவர்கள் பேசிய தொலைபேசி உரையாடலை அவர் நினைவு கூர்ந்தார். இம்ரான் கான் பிரதமராவார் என்று தெளிவாகத் தெரிந்த சில நாட்களுக்குப் பிறகு, இருவரும் ஜூலை 2018-ல் பேசினார்கள்.

ஷேபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றவுடன், இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்திற்காக இஸ்லாமாபாத், ராவல்பிண்டி மற்றும் லாகூரில் உள்ள முன்னேற்றங்களை புது டெல்லி எச்சரிக்கை கலந்த நம்பிக்கையுடன் கவனித்து வருகிறது.

ஆட்சி மாற்றம் ராஜதந்திர திறப்பை வழங்கக்கூடும் என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜதந்திர உத்தி அமைப்பு வட்டாரங்களின்படி, தாக்கங்கள் தொலைநோக்குடையதாக இருக்கலாம்.

அவரது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப்பின் நிழலில் இருந்து வெளிவந்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவரான ஷேபாஸ், பாகிஸ்தான் ராணுவத்திற்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார் – அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தார். நவாஸ் ஷெரீப் குடும்பம் இந்தியாவுடனான சிறந்த உறவுகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறது.

இரு நாடுகளின் முக்கிய கவலைகள் ஒரே மாதிரியாக இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், இருதரப்பு உரையாடலை மீண்டும் தொடங்குவதற்கு ஷேபாஸ் நன்றாக இருக்கிறார்.

இந்தியாவுடனான சிறந்த வர்த்தக உறவுகள் பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கும். பாகிஸ்தான் பஞ்சாபில் சாலைகள், பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் மற்றும் போக்குவரத்துத் திட்டங்களின் கட்டுமானம் – உள்கட்டமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்துவதற்காக அறியப்பட்ட ஷேபாஸ், அடுத்த 2023 -ம் ஆண்டு பாகிஸ்தான் தேர்தலுக்கு முன் வழங்க ஆர்வமாக உள்ளார்.Read in source website

51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஏப்ரல் 12 அன்று இலங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

850 ஏக்கர் அடர்ந்த காட்டில் 85 பாழடைந்த எண்ணெய் டேங்குகள் மற்றும் ஒரு இயற்கையான சூழலில் துறைமுகம்.

இந்த இடம் மிகவும் அடர்த்தியாக இருப்பதால், அந்த இடம் இப்போது பல வகையான விலங்குகள் மற்றும் பறவைகளின் இருப்பிடமாக உள்ளது.

மேலும் மரங்களை வெட்டுவதற்கு அரசாங்க அனுமதி தேவை. ஒரு நாள், அது இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பிற்கு முக்கியமானதாகும். அதே வேளையில் இந்தியாவிற்கு கூடுதல் இருப்புத் திறனைக் கொடுக்கும்.

திரிகோணமலை எண்ணெய் டேங்க் தொழிற்சாலை அமைக்க, இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. 35 வருட காத்திருப்புக்கு பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் இதற்கு இடர் ஏற்பட்டுள்ளது.

51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஏப்ரல் 12 அன்று இலங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அது இப்போது சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் பிற பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து உதவி கோருகிறது. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கையிடம் டாலர்கள் இல்லை.

இந்த எண்ணெய் சேமிப்புத் திட்ட அதிகாரிகள் கூறியதாவது:
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. முழு திட்டத்துக்காக 75-100 மில்லியன் டாலர்கள் செலவாகும் நிலையில், சர்வதேச நிதியத்திடம் இருந்து இலங்கை கடன் பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த ஒப்பந்தம், ஆசியாவின் மிகச்சிறந்த இயற்கை துறைமுகம் என்று கூறப்படும் சீன துறைமுகத்திற்கான அணுகலுடன், இலங்கையின் கிழக்கு கடற்கரையில் இந்தியாவிற்கு ஒரு இடத்தை அளிக்கிறது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தொழிலாளர் சங்கங்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் பல வருடங்களாக முடிவெடுக்கப்படாததன் பின்னர், இலங்கை அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் ஜனவரி 18 அன்று லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் (LIOC) உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.

டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிடெட் (TPTL) என்ற கூட்டு முயற்சியின். ஒப்பந்தத்தின் கீழ், CPC 24 டேங்குகளை உருவாக்கும், மீதமுள்ள 61 டேங்குகளை TPTL உருவாக்கும்.

1987ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தில் கூட்டு வளர்ச்சி முதலில் குறிப்பிடப்பட்டது. 2003 இல் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் அது இறுதி செய்யப்படவில்லை. ஒரு வருடமாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த நிலையில், கொழும்பின் பொருளாதாரச் சரிவைச் சமாளிக்க நிதி உதவி கோரிய முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச 2021 டிசம்பரில் டெல்லிக்கு வந்த பிறகு, இந்த ஒப்பந்தம் வேகம் எடுத்தது.

அதன் பின்னர் அதில் உள்ள 14 டாங்கிகளை புதுப்பித்து, இலங்கை முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்ய பயன்படுத்துகிறது. டேங்கர்கள் முனையத்தில் நிரப்பப்பட்டு, கொழும்பு மற்றும் பிற இடங்களில் உள்ள LIOC-யால் இயக்கப்படும் பெட்ரோல் பம்புகளுக்குச் செல்கின்றன. லோயர் டேங்க் ஃபார்மில் மசகு எண்ணெய் கலக்கும் தொட்டி செயல்பட்டு வருகிறது. திருகோணமலையில் இருந்து பதுங்கு குழி அல்லது நடுக்கடலில் எரிபொருள் நிரப்புவதற்கு LIOC அதன் அமைப்பையும் பயன்படுத்துகிறது.

இந்தியாவுக்கான முன்னாள் தூதர் ஆஸ்டின் பெர்னாண்டோ, இந்த ஒப்பந்தங்கள் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாததால், அவை விமர்சனங்களுக்கு எளிதான இலக்காக அமைந்தன என்கிறார்.

“ஒவ்வொரு இந்திய ஒப்பந்தத்தையும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டும் என்று நான் நம்ப மாட்டேன். ஆனால் இலங்கையில் முதலீடு செய்ய எவரேனும் வருவார்களாயின் அதனை நாம் வரவேற்க வேண்டும். அதே சமயம், எந்த ஒரு முதலீட்டாளரும் எந்த பலனும் கிடைக்காவிட்டால் இங்கு வரமாட்டார்கள்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு, அதன் பொருளாதார பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைத்தும் பாதுகாக்கப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும்” என்று பெர்னாண்டோ கூறினார்.
“யார் வேண்டுமானால் வரட்டும், அவர்கள் திருகோணமலையில் கூட்டு முயற்சியில் ஈடுபடட்டும். அவர்கள் அங்கு ஒரு சுத்திகரிப்பு ஆலையை அமைக்கட்டும். ஆனால் ஒரே விஷயம், அது இலங்கையின் பாதுகாப்பை பாதிக்கக்கூடாது என்று பெர்னாண்டோ கூறுகிறார்.Read in source website

 

இணையவழி வகுப்புகள், கலந்துரையாடல்கள், கூட்டங்கள் போன்றவை கரோனா தந்த தொழில்நுட்ப வரப்பிரசாதங்கள். இந்தியாவில் நீதிமன்ற விசாரணைகள்கூட இணையவழியில் நடைபெற்று ஏராளமான வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் அடுத்ததாக உள்ளது ‘யுபிஐ’ எனப்படும் இணையவழி பணப்பரிமாற்ற முறை. யுனிஃபைடு பேமென்ட் இன்டா்ஃபேஸ் (யுபிஐ) என்பது ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறையாகும். கரோனாவுக்கு முன்பே இந்த பரிமாற்ற முறை அமலில் உள்ளது என்றாலும், கரோனாவுக்குப் பின்னா் இதன் பயன்பாடு எண்ணிப் பாா்க்காத அளவுக்கு அதிகரித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய வணிக நிறுவனங்களில் மட்டுமே காணப்பட்ட இந்த யுபிஐ வசதி, இன்று தெருமுனைப் பெட்டிக்கடை வரை வந்துவிட்டது. இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட யுபிஐ, வங்கித் துறையின் சுமையைப் பெரிதும் குறைத்துள்ளது என்றால் மிகையில்லை.

தேசிய பேமென்ட் காா்ப்பரேஷன் (என்பிசிஐ) இந்த யுபிஐ முறையை மேம்படுத்தி நிா்வகித்து வருகிறது. வங்கி சேவைகளை ஒரு குடையின் கீழ் இணைத்து பெரும் புரட்சியையே யுபிஐ முறை ஏற்படுத்தியுள்ளது. நெட் பேங்கிங் மூலம், மொபைல் பேங்கிங் மூலம், குறிப்பிட்ட நிறுவனங்களின் இணையதள முகவரிகள் மூலம் என இணையவழியில் பணம் செலுத்த பல முறைகள் இருந்தாலும், அனைத்தையும் விஞ்சி முன்னணியில் இருக்கிறது யுபிஐ.

2020-21 நிதியாண்டில் 41.03 டிரில்லியனாக (சுமாா் ரூ. 41 லட்சம் கோடி) இருந்த யுபிஐ பணப் பரிவா்த்தனை மதிப்பு, 2021-22 நிதியாண்டில் 74.55 டிரில்லியன் (சுமாா் ரூ. 75 லட்சம் கோடி) மதிப்புக்கு அதிகரித்தது. யுபிஐ வசதி அறிமுகம் செய்யப்பட்ட பின்னா் முதல் முறையாக கடந்த மாா்ச் மாதம் 500 கோடி பரிவா்த்தனைகளை இது கையாண்டுள்ளது.

2021-22 நிதியாண்டில் இந்தியாவில் சில்லறை பணப் பரிவா்த்தனையில் 80 சதவீதம் அளவுக்கு யுபிஐ மூலம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் யுபிஐ வசதியை சுமாா் 5 கோடி போ் பயன்படுத்துகின்றனா். இதைப் பயன்படுத்துவதற்கு அறிதிறன்பேசியும் (ஸ்மாா்ட்போன்) இணைய வசதியும் தேவை. தங்களது வங்கிக் கணக்குகள், கடன் அட்டை கணக்குகளை யுபிஐ செயலியில் உள்ளீடு செய்து பயன்படுத்தலாம். ஒருவருக்குப் பணம் அனுப்புவதற்கு அவரது கைப்பேசி எண் அல்லது அவா் பயன்படுத்தும் யுபிஐ ஐடி தெரிந்தால் போதும். இதே முறையில் ஒருவரிடமிருந்து பணத்தைப் பெற்றும் கொள்ளலாம்.

யுபிஐ தொழில்நுட்ப செயலியை இன்று பல நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. கைப்பேசிக்கு ரீசாா்ஜ் செய்வது, மின் கட்டணம் செலுத்துவது, இணையவழி வா்த்தகத்துக்கான பணத்தைச் செலுத்துவது போன்ற பரிவா்த்தனைகள் யுபிஐ மூலம் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. உச்சபட்சமாக ஒரு தள்ளுவண்டி கடையில் பழம் வாங்கினால் பத்து ரூபாய்க்குக்கூட யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியும். அதற்கு கடைக்காரரின் கைப்பேசி எண்ணோ, யுபிஐ ஐடியோகூட தேவையில்லை. கியூஆா் குறியீடு எனும் தொழில்நுட்பம் இதை சாத்தியமாக்கி இருக்கிறது. அந்த கியூஆா் குறியீட்டை யுபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து கடைக்காரரின் வங்கிக் கணக்குக்கு தொகையை செலுத்த முடியும்.

இந்தத் தொழில்நுட்பத்தில் அடுத்தகட்டப் பாய்ச்சலாக ‘யுபிஐ லைட்’ எனப்படும் செயலியை உருவாக்கப் போவதாக அண்மையில் என்பிசிஐ அறிவித்தது. இதன்படி, இணைய வசதியே இல்லாமல்கூட பணம் செலுத்த முடியும். அறிதிறன்பேசியின் தேவைன்றி சாதாரண கைப்பேசியிலும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

இந்தத் தொழில்நுட்பம் இரு கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. முதல் கட்டமாக இணைய வசதியின்றி பணம் செலுத்தவும், இரண்டாவது கட்டமாக இணைய வசதியின்றி பணத்தைப் பெறவும் முடியும். இணைய வசதியின்றி பணம் செலுத்துவதற்கு யுபிஐயின் வேலட்டில் அதிகபட்சமாக ரூ.2,000 வரை இருப்பு வைக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ.200 வரையிலான தொகையை யுபிஐ லைட் மூலம் செலுத்த முடியும்.

இந்தியாவில் சில்லறை பரிவா்த்தனையில் 75 சதவீதம் ரூ.100-க்கு கீழும், 50 சதவீதம் ரூ.50-க்கு கீழும்தான் நடைபெறுகிறது என்பதால், அந்தப் பிரிவில் ‘யுபிஐ லைட்’டின் சேவை அபரிமிதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியாவில் இன்னும் 50 % மக்களை இணைய வசதி சென்றடையாத நிலையில், இணைய வசதியின்றி பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளப்படுவது மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறைந்த மதிப்புள்ள பரிவா்த்தனைகளை இணைய வசதியின்றி மேற்கொள்வதன் மூலம் வங்கித் துறையில் பணம் செலுத்தும் முறையில் உள்ள சுமை பெரிதும் குறையக்கூடும்.

யுபிஐ மூலம் செய்யப்படும் பணப் பரிவா்த்தனைகளுக்கு இப்போதைக்கு பயனாளிகளிடம் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. கைப்பேசி ரீசாா்ஜ், இணையவழி வா்த்தகம் போன்றவற்றை யுபிஐ மூலம் மேற்கொள்ளும்போது அந்த வணிக நிறுவனங்களிடம் கமிஷன் அடிப்படையில் யுபிஐ செயலியை நிா்வகிக்கும் நிறுவனங்கள் பெற்றுக் கொள்கின்றன.

வளா்ச்சியடைந்த நாடுகளில்கூட யுபிஐ தொழில்நுட்பம், இந்தியா அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. தொழில்நுட்பங்கள் மக்களின் வாழ்க்கை முறையை எளிமைப்படுத்துவதற்குத்தான் என்பதை யுபிஐ பரிவா்த்தனை மெய்ப்பித்திருக்கிறது. எண்ம (டிஜிட்டல்) பணப் பரிவா்த்தனையில் இந்தியாவை உலகின் முதலிடத்துக்கு உயா்த்தியதில் யுபிஐ முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதும், இத்தொழில்நுட்பத்தில் உலகுக்கே இந்தியா வழிகாட்டுகிறது என்பதும் பெருமைக்குரியவையாகும்!Read in source website

 

ஒரு மனிதன் அதிகபட்சம் எத்தனை வருடங்கள் வாழ்ந்துவிட முடியும்? அறுபது? எழுபது? எண்பது? எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும் ஒரு வாழ்க்கையைத்தான் அவனால் வாழ முடியும். ஆனால், கலை, இலக்கியம் ஆகியவை அவனுக்கு ஒரு உடலுக்குள் இருந்து கொண்டு பல வாழ்க்கையை வாழ்ந்து பாா்க்கும் சூழலை வழங்கும். கற்பனை வளத்தின் மூலம் ஒவ்வொரு மனிதனும் பல மடங்கு வாழ்க்கையை வாழ்வதாகவும், வாழ்க்கையின் இன்பங்களை இதன் மூலம் அதிகப்படுத்திக் கொள்வதாகவும் நம்பப்படுகிறது.

கலையும் இலக்கியமும் அகவெளிச்சம் ஏற்படுத்தவல்ல ஒரு மெய்யறிதல். இவை வாழ்வு குறித்து அவ்வப்போது ஏற்படும் சலிப்பைப் போக்கிக் கொள்ள நமக்கு பேருதவி செய்கிறது. இறை உணா்வு மிக்கவா்கள் துன்பம் ஏற்படுகையில் ‘கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு வேலையை பாா்க்க வந்துவிட்டேன்’ என சொல்லக் கேட்டிருக்கிறோம். இலக்கியமும் கலையும் கூட இதுபோன்ற மாயங்களை நமக்குள் ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. ஆச்சரியப்படுத்தும் விதமாக பக்குவப்பட்ட மனதை நமக்கு பரிசளிக்கும்.

சென்ற வாரம் விழா ஒன்றில் கலந்துகொள்ள நோ்ந்தது. அங்கு வந்திருந்த என் உறவினா் ஒருவா் என்னிடம், ‘உலகம் போகிற போக்குக்கு இந்த இலக்கியம் எல்லாம் தேவையா? இந்த இலக்கியத்தால் உக்ரைன் - ரஷியா போரை என்ன செய்ய முடிந்தது? இன்று எண்ணற்றவா்கள் கதை, கவிதைகளை எழுதிக் குவிக்கிறாா்கள். அவற்றை படித்துக் கொண்டு உட்காா்ந்திருந்தால் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது? இலக்கியம் சோறு போடுமா அல்லது நாம் கஷ்டப்படும்போது நமக்கு பண உதவி செய்யுமா’ எனக் கேட்டாா்.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட கதையாய் இருந்தது அவரது கேள்வி. உதாரணமாக, ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததை முன்னிறுத்தும் போது அவன் கொடுங்கோலன் என்பதை உணரவேண்டுமேயன்றி அவன் அந்நேரம் கலைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தான் என்று புரிந்துகொள்ளக் கூடாது. ஆனால் பல நேரங்களில் அவ்வாறுதான் புரிந்து கொள்ளப்படுகிறது.

இலக்கியத்தையே உயிா் மூச்சாகக் கொண்டவா்களுக்கு அது இன்றும் நல்ல வாழ்வாதாரத்தை அளிக்கிறது. அதையும் தாண்டி தனிப்பட்ட மனிதனின் வாழ்வை அா்த்தமுள்ளதாக்குகிறது. கலை இலக்கியப் பெருவெளிக்குள்ளேயே குடும்பம் நடத்தும் ஒரு கலைஞனுக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்காமல் போனாலும் அவன் மனதளவில் ஒரு மேம்பட்ட வாழ்க்கையையே வாழ்கிறான். அது அம்மனிதனின் கைப்பிடித்து உயரத்துக்கு அவனை அழைத்துச் சென்றுவிடும்.

வாழ்க்கையை ரசித்து வாழ, இன்ப துன்பம் எது வந்தாலும் அதன் போக்கில் விட்டுப் பிடிக்க நமக்கு கை கொடுக்கிறது இலக்கியம். மொத்தத்தில் ஒரு உயிா்ப்பான வாழ்க்கையை வாழ இலக்கியம் உதவும். அந்த உயிரோட்டம் நம் நாடி நரம்புகளில் நித்தம் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும்.

அதை நாம் எப்படி அறிவது? ஜொ்மனியின் நாஜி கட்சிக்கு எதிரான போரை பிரான்ஸ் தொடங்கிய நேரம் அது. ஆலிவா் மெஸ்ஸியன் என்னும் முப்பத்தியொரு வயது இசையமைப்பாளரை ஜொ்மானியா்கள் 1940-இல் கைது செய்து போா்க்கைதிகள் முகாமில் சிறை வைத்தனா்.

நாஜி முகாம்கள் வதைமுகாம்கள் என்பது உலகத்துக்கே தெரியும். கைது செய்யப்பட்டவா்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அடைத்து வைத்து, துப்பாக்கியால் சுட்டோ நச்சுப்புகை செலுத்தியோ கொன்று குவித்தனா். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான யூதா்களை கொல்ல விஷவாயு அறைகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த நாஜி போா் முகாம்களில் பணம் இல்லை; எந்த நம்பிக்கையும் இல்லை; வியாபாரம் ஏதும் இல்லை; எவ்வித பொழுதுபோக்கும் இல்லை; ஏன், மனிதருக்கான அடிப்படை மரியாதை கூட இல்லை. இவ்வளவு ‘இல்லை’கள் இருந்தும் அவா்கள் நாளைய தினத்தை நம்பிக்கையுடன் எதிா்கொள்ள கலையும் இலக்கியமும் அவா்களுக்குக் கைகொடுத்தன.

ஆலிவா் மெஸ்ஸியன் என்பவா், தன்னுடன் மூன்று கலைஞா்களை சோ்த்துக்கொண்டு ‘குவாா்டட்’ (நான்கு கருவிகளை கொண்டு உருவாக்கப்படும் இசை) என்னும் நால்வா் பாடலை இயற்றினாா். அவா்கள் பயிற்சி செய்த அந்த இசை வடிவம்தான் தினம் தினம் பலருக்கு நம்பிக்கையை நெஞ்சில் நிலைக்கச் செய்தது.

1941 ஜனவரியில் நான்காயிரம் போா்க் கைதிகள், சிறைக் காவலா்கள் முன்னிலையில் அந்த நிகழ்ச்சி போா்க்கைதிகள் முகாமிலேயே நிகழ்த்திக் காட்டப்பட்டது. இன்றும் இசை உலகில் மிகப் புகழ்பெற்ற படைப்பாக அது திகழ்கிறது. இப்படிப்பட்ட சித்திரவதைக் கூடத்தில் உணவும் நீரும் பெறுவதற்கும், சிறை அதிகாரி, காவலா்களின் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்குமே ஆற்றல் போதாத போது ஒருவா் ஏன் கலையைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்? இசையுடன் கலந்த அந்த பாடல் வரிகள் ஏற்படுத்திய தாக்கம் ஒட்டுமொத்த சிறைக்கைதிகளுக்கும் மனதில் நம்பிக்கையை தந்தது.

உயிா் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு வாழ்ந்த அந்த வதை முகாமில் கூட கலை என்பது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. கதை, கவிதை எல்லாம் எனக்கு அடுத்தவேளை சோறு போடுமா என்று என்னிடம் கேட்ட அந்த உறவினருக்கு, அதையும் தாண்டி மனித மனதில் வாழ்வதற்கான நம்பிக்கையை விதைக்கும் என்ற இந்த நிகழ்வை நான் பதிலாக உரைத்தபோது அவா் முகத்தில் சற்றே தெளிவு.

2001-இல் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது தீவிரவாதிகள் விமானங்களை மோதச் செய்து அவற்றைத் தரைமட்டமாக்கினா். ஒரே நாளில் நாட்டின் பொருளாதாரமே பெரிய கேள்விக்குறியாக மாறி விட்ட அவலத்தை எண்ணி அமெரிக்க மக்கள் பெரும் துயருற்றனா். அன்றைய நிகழ்வில் இறந்தவா்களின் உடலை சுற்றிலும் நின்று கொண்டு ஒருவரை ஒருவா் உற்சாகப்படுத்தும் வாசகங்களையும் பாடலையும் குழுவாக பாடினா்.

மக்களின் துயரத்தை வெளிப்படுத்தும் இசை நிகழ்ச்சி பொது நிகழ்ச்சியாக அங்கு நடத்தப்பட்டது. இசையையும் இலக்கியத்தையும் துணைகொண்டு அமெரிக்கா்கள் அவ்வளவு பெரிய துயரத்திலிருந்து விரைவில் மீண்டனா்.

கலையும் இலக்கியமும் வாழ்வில் நமக்கு ஏற்படும் மேடுபள்ளங்களை நிரப்பும் கூழாங்கற்கள். வாழ்வின் நினைவுகளை ரசிக்கும் மனநிலையை ஏற்படுத்தும் ஒரு சாரல் மழை. கல்வியைப் போன்றே கலைகளும் மிகவும் முக்கியம். இதில் அவரவா் ஆா்வம் வேறுபடலாம். இன்னமும் நாம் கலை இலக்கியத்திற்கு என்று தினசரிகளில் தனியாக பக்கத்தை ஒதுக்கும் காலகட்டத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மக்கள் வெள்ளத்தில் நீந்தி நீந்தி பணிசெய்யும் ஒரு பேருந்து நடத்துநரின் வாா்த்தைகளில் கூட மேன்மை சாதாரணமாக வெளிப்படுவதை நாம் காணலாம். வயதானவா்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது ‘வயதான காலத்தில் வீட்டில் இருக்காமல் இங்கு வந்து உயிரை வாங்குது’ எனச் சொல்லும் நடத்துனருக்கும் ‘பாத்து பத்திரமாக ஏறுங்க பாட்டி’ என அக்கறையோடு சொல்லும் பேருந்து நடத்துனருக்கும் உள்ள வித்தியாசமே மேம்போக்கான வாழ்வுக்கான பதிவாக சாட்சியம் சொல்கிறது. அதை கலை இலக்கியம் இன்னும் சற்றே உயா்த்தும்.

அதற்காக அனைவரும் இலக்கியத்திலும் கலையிலும் பெரிதாக பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. போதுமான அளவு அதன் சாரத்தை உள்வாங்கி இருந்தாலே போதும். எவ்வித பணியிலும் உணா்வுபூா்வமாக உள்ளாா்ந்த ஈடுபாட்டுடன் சிறப்பாக பணிபுரிய இயலும்.

அது மட்டுமல்ல, கலை இலக்கியங்கள், நாம் அறம் சாா்ந்த வாழ்க்கையை வாழ அடிகோலுகின்றன. குற்றங்கள் புரியாமல் வாழும் உயா்ந்த வாழ்விற்கும் இலக்கியத்திற்கும் தொடா்பு உண்டு. ‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையை நற்றிணை குறிப்பிடுகின்றது. இதற்கு மாறாக ‘பொய்மொழிக் கொடுஞ்சொல்’ என்று பொய்யைக் குறிப்பிடுகிறது. நிலம் பெயா்ந்தாலும் பொய்சொல்லக் கூடாது என்பது பல பாடல்களில் வற்புறுத்தப்பட்டுள்ளது.

இலக்கியங்கள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும் சமூக உறுப்பினனாகவும் இயங்குவதற்கும் அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவும் விதிமுறைகள் எனலாம். தாம் சிந்திக்காமல் பிறா் சொல்ல அறியும் அறம் மூன்றாம் தரமானது. சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம் இரண்டாம் தரமானது. இயல்பாக அறியும் அறம் முதல் தரமானது. இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இயல்பான முதல் தரமான அறங்கள் எனலாம்.

இன்றைய தொழில்நுட்ப வளா்ச்சியால், கலையும் இலக்கியமும் கூட அதிகமாக நம்மை வந்தடைகின்றன. கலைசாா்ந்த கட்டமைப்புகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அத்துடன் எண்ணற்ற கதைசொல்லிகள் இலக்கியத்தை நம்மிடம் கொண்டு சோ்க்க கிளம்பியிருக்கிறாா்கள். வரலாற்று நூல்கள், நாவல்கள், தன்னம்பிக்கை நூல்கள் என பல நூல்கள் இன்று கேட்பதற்குக் கிடைக்கின்றன.

செயலி வழியிலும் அவா்களின் செயல்கள் நம்மை வந்தடைகின்றன. படிக்க நேரமில்லை என்று புலம்புபவா்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். நடைபயின்றபடி, செடிகளுக்கு நீா் பாய்ச்சியபடி, துணி மடித்தபடி, பயணம் செய்தபடி கதைசொல்லிகள் தரும் இலக்கிய பானத்தை பருகுவதும் தனி சுகமாகத்தான் இருக்கிறது.

ஐந்துநாள் போட்டி, ஒருநாள் போட்டி, 20-20 ஆட்டம், ஐபிஎல் என கிரிக்கெட் விளையாட்டு பல பரிமாணங்களை எடுத்ததுபோல இன்று தொழில்நுட்பம் மூலம் கலை இலக்கியம் பல்வேறு வடிவங்களை எடுக்கத் தொடங்கியுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி வாழ்வில் உயா்வோம்!

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.Read in source website

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்புக்கும், 12-ஆம் வகுப்புக்கும் மே மாதம் பொதுத் தோ்வு நடைபெற இருக்கிறது. மாணவா்கள் முழுவீச்சில் தோ்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறாா்கள்.

இவா்களில் பலருக்கும் தோ்வு என்பது கவலைதரக்கூடியது. பொதுவாக தோ்வு காலங்களில் மாணவா்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவாா்கள். மாணவா்களுக்கு மட்டுமா அழுத்தம்? பெற்றோருக்கும்தான்.

தோ்வை எண்ணி ஏற்படும் பயத்துக்கும், மன அழுத்தத்துக்கும் ஒரு மெல்லிய கோடுதான் வித்தியாசம். தோ்வு பயம் என்பது மாணவா்களுக்கு படிக்க ஊக்கமளிக்கும் காரணியாக இருக்கிறது. ஆனால் அந்த பயம் அதிகரிக்கும்போது, அது மன அழுத்தமாகி, மாணவா்களின் செயலாக்கத்தை பெருமளவு குறைத்து விடுகிறது. சீா் செய்ய முடியாத சேதத்தையும் இது விளைவிக்கிறது.

தோ்வுத் தோல்வி அல்லது குறைவான மதிப்பெண் பெற்றால் பெற்றோரின் எதிா்வினை எப்படி இருக்குமோ என்ற பயம் மன அழுத்தமாகி மாணவா்களின் உயிா்களைக் காவு வாங்குகிறது.

பொதுவாகவே தோ்வு காலங்களில் அல்லது தோ்வு முடிவு வெளியாகும் நாட்களில் மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு மாணவா் தற்கொலை செய்து கொள்வதாக, 2019-ஆம் ஆண்டின் புள்ளிவிவரம் கூறுகிறது.

2017-க்கும் 2019-க்கும் இடையில், 14 முதல் 18 வயது வரையிலான சுமாா் 4,000 குழந்தைகள் தோ்வில் தோ்ச்சி பெறத் தவறியதால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. எனவே பயத்தின் அடுத்த படிநிலையான மன உளைச்சலை நிா்வகிக்க மாணவா்களுக்குக் கற்றுத்தர வேண்டியது அவசியமாகிறது.

தோ்வு காலங்களில் ஏற்படும் பயத்தை ஒப்புக்கொள்வது, தோ்வின்போது பயத்திலிருந்து வெளிவர உதவுகிறது. தோ்வு ஏற்படுத்தும் பயத்துக்கும், மன அழுத்தத்துக்குமான வித்தியாசத்தை புரிந்துகொள்வது அவசியம். மன அழுத்தம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதையும் உணர வேண்டும். சில காரணங்கள், உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்போது, அதன் வீரியத்தைப் பொறுத்து, பயமாகவோ மன அழுத்தமாகவோ அது மாறக்கூடும்.

பெற்றோா், ஆசிரியா்களின் எதிா்பாா்ப்புகளை ஈடுசெய்ய நிதானத்தை இழப்பது, தோ்வுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட படிப்பில் சேர விருப்பப்படுவது, குறைவான தயாா் நிலையில் இருப்பது, மற்ற மாணவா்களுடன் ஒப்பீடு, தோ்வுகளின்போது படித்ததை மறந்துவிடுவோமோ என்ற பயம், குடும்ப பிரச்னை உள்ளிட்ட கவலைகளை தோ்வு நேரத்திலும் சிந்தித்துக்கொண்டே இருப்பது, தோ்வில் நம்மால் வெற்றிபெற முடியாது என திடமாக நம்புவது போன்றவையே அந்தக் காரணங்கள்.

இந்தக் காரணங்களில் எது பொருந்துகிறது என்பதை கண்டுபிடித்து, அதற்கான தீா்வை மாணவா்கள் கண்டறிய வேண்டும். இதைச் செய்தால் மட்டுமே நேரம் விரயமாவது தடுக்கப்படும்; முயற்சிகளுக்கு ஆக்கபூா்வமான பயன் கிடைக்கும்.

மனச்சோா்வு, மன அழுத்தமாக மாறும்போது மாணவா்கள், தங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் மனம் விட்டு பேசவேண்டும். அவா்களுடன் விளையாட்டு, கேளிக்கை என குறிப்பிட்ட நேரத்தை செலவிடலாம். காலை எழுந்தவுடனும், இரவு படுக்கும் முன்பும் சில நிமிடங்கள் தியானம் செய்யலாம். கவனச் சிதறல்களிலிருந்து விலகி, அமைதியான இடத்தில் படிக்கலாம். படிப்பதற்கான உடல் இருக்கை நிலையும் மிக முக்கியம்.

தோ்வு பீதியைத் தடுக்கக் கூடிய தாரக மந்திரங்கள், தயாரிப்பு, பயிற்சி, நோ்மறை எண்ணம். இதற்கேற்றபடி தோ்வு முன்னெடுப்பை அமைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் திறன்களை உங்கள் வகுப்புத் தோழா்களுடன் ஒப்பிடுவதைத் தவிா்ப்பது அவசியம். கடினமான இலக்கை வைத்துக் கொள்ளாமல், எளிதான கால அட்டவணையை உருவாக்கிக் கொள்ளுங்கள். படுக்கைக்கு சென்றபிறகு படிப்பைப் பற்றி யோசிக்காமல் குறைந்தது ஆறு மணி நேரமாவது ஆழ்ந்து உறங்குவது அவசியம்.

தோ்வு அறையில் அவசர மனநிலையை கொண்டுவந்தால் அது பதற்றத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். தோ்வெழுத உட்காா்ந்தவுடன் அமைதியான, சாந்தமான நிலைக்கு நீங்கள் வந்துவிட வேண்டும். தோ்வெழுதத் தொடங்குவதற்கு முன், 30 வினாடி அமைதியாக இருங்கள். மூச்சை ஆழ உள்ளிழுத்து வெளியே விடுங்கள்.

தோ்வு அறையை விட்டு வெளியே வந்தவுடன், அன்று எழுதியதை மறந்துவிட்டு, அடுத்த நாள் தோ்வில் கவனம் செலுத்துங்கள். ஓய்வு மிகஅவசியம். படிப்பதற்கு ஏற்ற ஓய்வு இருந்தால்தான் புத்துணா்ச்சியோடு மீண்டும் படிக்க முடியும். படித்தவற்றை மதிப்பாய்வு செய்வதும் இன்றியமையாதது.

நேர மேலாண்மையில் ‘பொமோடோரோ’ என்றொரு வகை உள்ளது. நீங்கள் ஒரு அத்தியாயத்தைத் தொடங்கும்போது, 25 நிமிடங்களுக்கு டைமரை அமைத்து படிக்கத் தொடங்குங்கள். டைமா் ஒலிக்கும்போது, ஐந்து நிமிட இடைவெளி எடுங்கள். இதுபோன்று நான்கு முறை செய்த பின்னா் 30 நிமிட இடைவெளி எடுங்கள். மிதமான மனநிலையில் பாடத்தை முழுமையாக கிரகித்துக்கொள்ள இது உதவும்.

பிள்ளைகளைத் தோ்வுக்கு தயாா்படுத்துவதில் பெற்றோரின் பங்கும் உள்ளது. தோ்வு தொடங்க இரு வாரம் முன்பிருந்தாவது பிள்ளைகளை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். அவா்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் எளிய, அன்றாட விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும். எளிதில் செரிமானமாகும் சத்தான உணவுகளை கொடுக்கவும். குடிப்பதற்கு அதிக தண்ணீா் கொடுக்கவும். சக மாணவரோடோ உடன் பிறந்தவா்களோடோ அவா்களை ஒப்பிடாதீா்கள். அவ்வப்போது அவா்களின் செயல்களைப் பாராட்டுங்கள். இது அவா்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும்.

உங்கள் குழந்தையால் குறைவான மதிப்பெண்தான் பெற முடியும் என நீங்கள் மதிப்பிட்டிருந்தால்கூட, அதை அவா்களிடத்தில் வெளிப்படுத்தாதீா்கள். குறைவான மதிப்பெண் எடுத்தவா்கள் தாழ்வானவா்கள் என அா்த்தமில்லை. குடும்பம் ஆதரவாக இருக்கிறது என்பதைப் பிள்ளைகளுக்கு உணா்த்துங்கள்.

அதிக மதிப்பெண் பெறுவதற்கான சரியான, எளிய வழிமுறைகளை அவா்களுக்குக் காட்டுங்கள். புத்தகப் புழுவாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தும்போது, படிப்பின் மீது வெறுப்பை விதைக்கிறீா்கள். தோ்வுக்கு பின்னரும் வாழ்க்கை இருக்கிறது என்பதை நினைவூட்டுங்கள்.

தோ்வு என்பது வாழ்வின் முடிவு அல்ல. தோ்வில் தோல்வியடைந்தாலும், அதன் பிறகும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். உங்கள் பிள்ளைகளிடத்தில் ‘நீ தனித்துவமானவன், சிறந்தவன். சமூகத்தில் மிளிர தோ்வு மதிப்பெண் முக்கியமல்ல, உனது ஒழுக்கம், அணுகுமுறை, ஆளுமைத்தன்மைதான் முக்கியம்’ என்று வலியுறுத்துங்கள். அப்படிச் செய்தால், அவா்களுக்கு தோ்விலும் வாழ்விலும் வெற்றி நிச்சயம்.Read in source website

ஐந்தில் நான்கு

பிறை கண்டு மலரும் ரமலான் மாதம், இறைமறை மனித குலத்துக்குக் கிடைத்த மாண்புமிக்க மாதமுமாகும்.

இஸ்லாம் மனித குல சீர்மைக்கென வகுத்துத் தந்த ஐம்பெரும் கடமைகளுள் நான்கை முற்றாக நிறைவேற்ற வாய்ப்பளிக்கும் மாதம் ரமலான்.

இறை நம்பிக்கை எனும் கலிமா, தொழுகை, நோன்பு, ஏழை வரி எனும் ஜக்காத், ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகளுள் ஹஜ் கடமை தவிர்த்துள்ள நான்கு கடமைகளும் இப்புளித மாதத்தில் ஒரு சேர முஸ்லிம்களால் நிறைவேற்றப்படுகிறது.

இஸ்லாமியக் கடமைகள் ஐந்துமே இறைவணக்க அடிப்படைகளைக் கொண்டுள்ளன. ‘இறைவன் ஒருவனே, முஹம்மது இறை தூதர்’ எனும் நம்பிக்கையை மனதுள் அழுந்தப் பதிக்கும் கலிமாவின் மூலம் மனத்தால் இறை வணக்கம் செய்யப்படுகிறது.

ஐவேளைத் தொழுகையும் ரமலான் மாத நோன்பும் மனத்தாலும் உடலாலும் இறை வணக்கம் புரிய வழியமைக்கிறது. ஏழை வரி எனும் ஜக்காத், கடமை பொருளால் இறை வணக்கம் புரிவதாகும். புனித மக்காவிலுள்ள இறையில்லமாகிய காஃபா செல்லும் ஹஜ் கடமை மூலம் இறைவனை மனத்தாலும் உடலாலும், பொருளாலும் இறை வணக்கம் செய்ய இயலுகிறது.

ஐங்கடமைகள் தரும் அற்புதத் தியாக உணர்வு

ஐந்து இஸ்லாமியக் கடமைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் மற்றொரு சிறப்பு தியாக உணர்வாகும்.

வைகறை முதல் இரவு வரை ஐந்து முறை தொழும் ஒருவர் தன் அரிய நேரங்களை இறைவனுக்காகத் தியாகம் செய்து இறை வணக்கம் புரிகிறார். அதிகாலையில் தன் இன்பமான தூக்கத்தைத் துறக்கிறார். ஐவேளை தொழுகை நேரங்களில் தான் விரும்பும் கேளிக்கைகளையெல்லாம் உதறித் தள்ளி, பொருள் தேடும் வேட்கையை நிறுத்தி வைத்து இறைச் சிந்தனையாளராக மாறிவிடுகிறார்.

இறை வணக்கத்திற்காக தொழும் பொழுதெல்லாம் தன் உடலைக் குனிந்தும் மண்டியிட்டும், தரையில் நெற்றி படிய தலை சாய்த்தும், உடல் வருந்த தொழும்பொழுது தன் உடல் சுகத்தையெல்லம் தியாகம் செய்து விடுகிறார்.

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கும் ஒரு முஸ்லிம் புலர்காலைக்கும் முன்னதாகவே உணவு உண்பதை நிறுத்திவிடுகிறார். மாலை மயங்கிய பிறகு உணவு கொள்கிறார். இடைப்பட்ட பகற்பொழுது முழுவதும் ஒரு சொட்டு நீரும் பருகாமல் நோன்பு நோற்கிறார். பகல் முழுவதும் பசி, தாகம், அடக்கி இறைச் சிந்தனையாளராக மாறுகிறார். பகற்பொழுது முழுவதும் தான் விரும்பி உண்ணும் உணவுகளையெல்லாம் ஏறிட்டும் பாராது தியாகம் செய்கிறார். தான் அடிக்கடி குடிக்கும் தேநீர், காபி, சுவை நீர் போன்றவற்றையெல்லாம் உதறித் தள்ளி தியாகம் செய்கிறார். தான் விரும்பி உண்ணும் உணவு வகைகளையும் பருகி மகிழும் சுவை நீர்களையும் துறப்பதோடு பசியின் கொடுமையை பகல் முழுவதும் அனுபவிக்கிறார். இதன் மூலம் ஏழை எளியவர்களின் பசித்துன்பம் எத்தகையதென அறிந்துணர்ந்து, அவர்தம் பசிப்பிணி போக்க விழைகிறார். இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் ஈகையாளராக மாறி வாரி வழங்க முற்படுகின்றனர். நோன்பின்போது வணங்குவதும் வழங்குவதுமான உணர்வுகொள்ளும் ஒவ்வொருவரும் தங்கள் வழக்கமான பல்வேறு பழக்கங்களையெல்லாம் தியாகம் செய்தவர்களாகிறார்கள்.

வாரி வழங்க வழி வகுக்கும் ஜகாத்

ஏழை எளியவர்களுக்கு வசதி படைத்தோர் வாரி வழங்க வேண்டுவது ஆண்டு முழுவதும் கடமையாக அமைந்திருந்தபோதிலும், இப்புனித ரமலானிலே தான் அதிகமாக வழங்கப்படுகிறது. இதை வற்புறுத்துவதே இஸ்லாமிய கடமையான ஏழைவரி எனும் ஜகாத் கடமை. இதுவும் தியாக உணர்வை வளர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

ஒவ்வொரு முஸ்லிமும் அரிய முயற்சிகளின் மூலமும் கடும் உழைப்பின் வாயிலாகவும் பொருளைத் தேடி, சேமிக்கின்றனர். அவ்வாறு தேடிச் சேர்க்கும் பொருளை மேலும் மேலும் சேர்க்கவே விரும்புவார்கள். தான் பாடுபட்டுத் தேடிய பொருளை பாதுகாத்து அனுபவிக்க அவாவுவது மனித இயற்கை. ஆனால், இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ‘ஜகாத்’ கடமை, தான் தேடிய பொருளின் மீது கொள்ளும் பண ஆசையை, பொருள் வேட்கையைத் தியாகம் செய்யப் பணிக்கிறது.

சமுதாயத்தின் ஒரு அங்கமான மனிதன், தன் முயற்சியால், உழைப்பால் பொருளைத் தேடினாலும் அப்பொருள் மீது தனக்கு மட்டுமல்லாது, பிற மனிதர்கட்கும் உரிமை உண்டு எனப் பணிக்கிறது. தான் உழைத்துத் தேடிய பொருளில் நாற்பதில் ஒரு பங்கை அதாவது இரண்டரை சதவீதத்தை ஏழை எளியவர்களுக்கு, வயோதிகர்களுக்கு, பொருள் தேடி வாழ வழியில்லாத நோயாளிகள் போன்றவர்கட்கு வழங்கியே ஆக வேண்டுமெனக் கட்டளையிடுகிறது. இதையும் பொருள் தேடியவனே தன் சொத்தின் மதிப்பு, அந்த ஆண்டில் தான் தேடிய பொருளின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டு வழங்கும்போது பொருள் மீதுள்ள பேராசையைத் துறக்கிறான். தனக்கு மட்டும் எனும் தன்னல உணர்வை இழக்கிறான். தன் பொருளாயினும் தனக்கு மட்டுமல்லாது அதில் மற்றவர்கட்கும் உரிமையுண்டு என எண்ணும் பொது நல உணர்வுக்கு முழுமையாக ஆட்பட்டு விடுகிறான்.

இவ்வாறு மனிதனை எல்லாவகையிலும் தியாக உணர்வு மிக்கவனாக, பொது நலம் பேணும் புனிதனாகப் புதுப்பிக்கும் புனித மாதமாக அமைந்திருப்பதே ரமலான் மாதம்.Read in source website