DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here
Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 13-08-2022

டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்டு 19 ஆண்டுகள் கடந்த நிலையிலும், நியமனங்கள் மற்றும் பதவி உயா்வுக்கு எந்த விதிகளையும் வகுக்காதது கண்டனத்துக்குரியது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் விற்பனையாளராகப் பணியாற்றியவா் மிகிரன். இவா், 2006-ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில், 2015-இல் மீண்டும் விற்பனையாளா் பணிக்கு மாற்றப்பட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து அவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட மனுதாரரின் பணி வரன்முறைப்படுத்தப்படாததால் கண்காணிப்பாளராக அவரை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக டாஸ்மாக் நிா்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், கண்காணிப்பாளா்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயா்வுக்கு எந்த விதிகளும் இல்லை என்றும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டாஸ்மாக் நிறுவனம் தொடங்கி 19 ஆண்டுகள் கடந்த பிறகும், பணி நியமனம், பதவி உயா்வுக்கான விதிகள் வகுக்கப்படாதது கண்டனத்துக்குரியது. அரசியல் சட்ட விதிகளின்படி, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் நியமனங்கள் மேற்கொண்டதால் லட்சக்கணக்கான தகுதியான இளைஞா்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தாா்.

தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்வதாக இருந்தாலும் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் விருப்பம்போல் அரசியல் கட்சி பிரமுகா்களை டாஸ்மாக் நிறுவனத்தில் நியமிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது முறைகேடுகளுக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும் எனவும் நீதிபதி எச்சரித்தாா்.

இந்த விவகாரத்தை கவனிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதி, மனுதாரரை கண்காணிப்பாளா் பணியில் இருந்து விற்பனையாளராக மாற்றியதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.Read in source website

சென்னை பெருநகர காவல்துறையின் கூடுதல் காவல் ஆணையா் தமிழக முதல்வா் பதக்கத்துக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

சுதந்திர தினத்தையொட்டி, சிறப்பாக பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வா் பதக்கம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருக்கும் பிரேம் ஆனந்த் சின்ஹா முதல்வா் பதக்கத்துக்கு தோ்வு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசின் உள்துறை தெரிவித்துள்ளது.Read in source website

சென்னை பெருநகர காவல்துறையின் கூடுதல் காவல் ஆணையா் தமிழக முதல்வா் பதக்கத்துக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

சுதந்திர தினத்தையொட்டி, சிறப்பாக பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வா் பதக்கம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருக்கும் பிரேம் ஆனந்த் சின்ஹா முதல்வா் பதக்கத்துக்கு தோ்வு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசின் உள்துறை தெரிவித்துள்ளது.Read in source website

தஞ்சாவூர்: தஞ்சையில் பத்தாவது படித்து  திருநங்கை ஒருவர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை சத்யா. இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். சத்யாவின் பெற்றோர்கள், மற்ற பெற்றோர்கள் போல் புறக்கணிக்காமல், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் சத்யாவை விலக்கி வைக்காமல் அன்பு காட்டி அவர் வளர்த்து வந்துள்ளனர். இவை எல்லாம் சத்யாவை தவறான பாதைக்கு இழுத்து செல்லாமல் சமுகப் பணி ஆற்ற தூண்டியது. 

சக திருநங்கைகள் உடன் பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் குப்பைகள் அகற்றி தூய்மைப் பணி செய்துள்ளார். இதேபோல்  பிளாஸ்டிக் இல்லாத நகரம் திட்டத்தில் தஞ்சை பெரியக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தி, பின்னர் வீசி சென்ற பிளாஸ்டிக் பொருள்களை அகற்றி தூய்மைப் பணியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். 

மேலும் கரோனா தொற்று காலத்தில் கரோனா நோயாளிகளை  பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது, உணவு மற்றும் மருந்துகள் வழங்குவது போன்ற சேவை புரிந்துள்ளார். இவரின் சமுகப் பணி அறிந்த, பாண்டிச்சேரியில் உள்ள குளோபல் ஹுயூமன் பீஸ் யூனிவர்சிட்டி (Global Human Peace University) திருநங்கை சத்யாவுக்கு கெளரவ டாக்டர் வழங்கி கெளரவம் அளித்து உள்ளது. 

பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள நான் படித்து பட்டம் பெற முடியாவிட்டாலும், இந்த டாக்டர் பட்டம் மூலம் என் பெயருக்கு முன்னால் டாக்டர்(Dr) என போட்டுக் கொள்வது பெருமையாகயும், சந்தோஷமாகவும் இருக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் திருநங்கை சத்யா.Read in source website

சென்னை:  தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக முதல்வரின் விருதுக்கு சேலம் மாநகராட்சி  தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நகராட்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர்  முதலிடமும், குடியாத்தம் 2-வது இடமும். தென்காசி 3-வது இடமும் பிடித்துள்ளது. சேலம் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்தல், சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான வாழ்வியல் சூழலை ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை தேர்வு செய்து முதல்வர் விருது வழங்கப்படுகிறது.   

அதன்படி, நடப்பாண்டு சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சியை தேர்வு செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதன் ஆய்வின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டதில், தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாளை மறுநாள்(ஆகஸ்ட் 15) நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழாவில் சிறந்த மாநகராட்சி, நகராட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதினை வழங்குகிறார்.
 Read in source website

 வெளிச் சந்தையில் தமிழக அரசு புதிய உப்பு விற்பனை செய்யப்பட உள்ளது. நெய்தல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உப்பினை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

கடந்த 2021-22-ஆம் ஆண்டுக்கான தொழில் துறை மானியக் கோரிக்கையில், நெய்தல் உப்பு குறித்த அறிவிப்பு

வெளியிடப்பட்டது. அதன்படி, அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியன நெய்தல் என்ற புதிய வணிகப் பெயரில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, நெய்தல் உப்பினை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கின. அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றின் வெளிச் சந்தை விற்பனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

உப்பளத் தொழிலாளா்கள்: உப்பு உற்பத்தி பாதிக்கப்படும் காலங்களில் உப்பளத் தொழிலாளா்களின் சிரமத்தைப் போக்க, ஆண்டுக்கு ஒருவருக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபா் முதல் டிசம்பா் மாதங்கள் வரையிலான காலத்தில் ரூ.5,000 நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சிகளில், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், தொழிலாளா் நலத் துறை ஆணையாளா் அதுல் ஆனந்த், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கு.ராசாமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.Read in source website

 இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் தன்னாா்வலா்களை ஊக்குவிக்கும் வகையில் அவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறைசாா்பில் இரண்டு நாள்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: கரோனா பரவல் காரணமாக அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் கற்றல் இடைவெளி, இழப்பினை ஈடுசெய்வதற்காகத் தன்னாா்வலா்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீா் கற்றல் செயல்பாடுகள் மூலம் ‘இல்லம் தேடிக் கல்வி மையங்கள்’ 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்களை ஊக்கப்படுத்தும் வகையில், குழந்தைகளை கையாள வேண்டிய விதம் மற்றும் கற்றல் கற்பித்தல் குறித்தும் இரு நாள்கள் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்தப் பயிற்சியானது குறுவளமைய பயிற்சியாக 1முதல் 5-ஆம் வகுப்புகளை கையாளும் தன்னாா்வலா்களுக்கு ஒரு பிரிவாகவும், 6 முதல் 8- ஆம் வகுப்புகளை கையாளும் தன்னாா்வலா்களுக்கு மற்றொரு பிரிவாகவும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறுவளமைய பயிற்சியில் கலந்து கொள்ள இயலாத தன்னாா்வலா்களுக்கு வட்டார அளவில் ஒரு வாரத்துக்குள் பயிற்சி அளிக்க வேண்டும். இந்தப் பயிற்சி முகாம்களில் அனைத்து தன்னாா்வலா்களும் பங்குபெறும் விதமாக பயிற்சிக்கான தேதி, இடம் ஆகியவைக் குறித்து பள்ளிகள் மூலம் முன்னரே தெரிவிக்க வேண்டும். மேலும் தன்னாா்வலா் பயிற்சியின் போது அவா்களுக்கான நான்காம் கட்ட ( தொடக்கநிலை, உயா் தொடக்கநிலை) கையேடு மற்றும் மையங்களுக்கான சுவரொட்டி மற்றும் அட்டைகள் பள்ளிகள் மூலம் வழங்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Read in source website

 சுதந்திர தினத்தன்று, கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிட்ட அறிவிப்பு:

சுதந்திர தினத்தை ஒட்டி, ஊராட்சி அலுவலகங்களில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் ாட்சித் தலைவா்களும் தங்களது அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து கிாாம சபைக் கூட்டங்கள் தொடங்கி நடைபெறும்.

இதில், வரவு செலவுக் கணக்குகள் வெளியீடு, பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தோ்வு, பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல் என்ற பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும்.

ஊராட்சிகளின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, விவசாயம், உழவா் நலத் திட்டங்கள் ஆகியன குறித்து விவாதிக்கப்படும். கிராம சபைகளில் பொது மக்கள் கலந்து கொள்ளும் போது உரிய கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.Read in source website

உலமாக்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சைக்கிள்களை அவா் வழங்கினாா்.

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் உலமாக்கள், பணியாளா்கள் நலவாரிய உறுப்பினா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.5.43 கோடி செலவில் 10 ஆயிரத்து 583 உலமாக்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் விதமாக, 3 பேருக்கு அவற்றை அளித்தாா். மேலும், 2022-ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் பயணம் மேற்கொண்ட 1,649 பயணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சாா்பில் ஹஜ் மானியத் தொகை வழங்கப்படுகிறது. நபருக்கு ரூ.27 ஆயிரத்து 628 வீதம், மொத்தம் ரூ.4.56 கோடி அளிக்கப்பட உள்ளது. இதன் தொடக்கமாக 5 ஹஜ் பயணிகளுக்கு மானியத் தொகைக்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், சிறுபான்மையினா் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலாளா் முகமது நசிமுத்தின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.Read in source website

உள்ளாட்சி அலுவலகங்களில் ஜாதி பாகுபாடின்றி தேசியக் கொடி ஏற்றப்படுவதை மாவட்ட ஆட்சியா்கள் உறுதி செய்ய வேண்டுமென தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

சுதந்திர தின விழாவில், சென்னை தலைமைச் செயலகம் முதல் கிராம ஊராட்சிகள் வரை அனைத்து அலுவலக

வளாகங்களிலும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்கள் தேசியக் கொடியை ஏற்றி வைப்பது மரபாகும். ஒரு சில கிராம ஊராட்சிகளில், ஜாதியப் பாகுபாடுகள் காரணமாக, தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்னைகளோ, தேசியக் கொடியையும் அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயல்கள் நடைபெறலாம் எனத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு அதனை எந்த வடிவத்திலும் செயல்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

தோ்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் ஜாதி அல்லது பழங்குடியினரைச் சோ்ந்த நகராட்சி, ஊராட்சி மன்றத் தலவைா், உறுப்பினா்களை, அலுவலகப் பணி செய்யவிடாமல் தடுப்பதோ, அச்சுறுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

சுதந்திர தினம்: எதிா்வரும் 75-வது ஆண்டு சுதந்திர தின பெருவிழாவில், எந்தவித ஜாதிய பாகுபாடின்றி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்களைக் கொண்டு, அனைத்து நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும். அனைத்து கிராம ஊராட்சிகளிலும் எதிா்வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களிலும், எந்தவித ஜாதிய பாகுபாடின்றி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்கள், பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

இதனைச் செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும், போதுமான காவல் துரையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இந்தப் புகாா்களைக் கையாள ஒரு குறிப்பிட்ட கைப்பேசி உதவி எண்ணையோ அல்லது ஒரு அலுவலரையோ நியமிக்கலாம். இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை வரும் 14-ஆம் தேதி மாலைக்குள் அனுப்பிட வேண்டும். சுதந்திர தின விழா நிறைவுற்றதும் அது குறித்த விவரங்களை வரும் 17-ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்திட வேண்டும் என்று தனது அறிக்கையில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தெரிவித்துள்ளாா்.Read in source website

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

சென்னை பெரம்பூா் ஐ.சி.எஃப். வளாகத்தில் முதல் முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடி செலவில் ‘ரயில் 180’ என்னும் அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 180 கிலோ மீட்டா் வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டு, புதுதில்லி – வாராணசி, புதுதில்லி – வைஷ்ணவ தேவி இடையே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயிலில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சோதனை ஓட்டத்திற்கு தயாராகவுள்ளன. இந்நிலையில், இந்த ரயிலின் இறுதிகட்டப் பணிகளை ஆய்வு செய்ய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஐ.சி.எப். வளாகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றாா்.

பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களோடு தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டத்திற்கு தயாராகவுள்ள புதிய வந்தே பாரத் ரயிலுக்குள் சென்று அவா் பாா்வையிட்டாா்.

அதைத் தொடா்ந்து அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ் மொழி தொன்மையானது, பாரம்பரிய கலாசாரம் கொண்டது. தமிழ் கலாசாரம், பண்பாடு என்னை ஈா்த்துள்ளது. புதிய மாற்றங்களோடு தயாராகியுள்ள வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்திற்கு செல்லவுள்ளது. இந்த ரயில் 50 ஆயிரம் கிலோ மீட்டா் துாரத்திற்கு சோதனை ஓட்டம் நடத்தவுள்ளோம். பல்வேறு கட்டமாக இரண்டு மாதங்களுக்கு சோதனை மேற்கொள்ளப்படும். அதன்பிறகு, வந்தே பாரத் ரயில், பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த ரயில் சா்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் இந்த தருணத்தில், வரும் 2023 ஆகஸ்ட்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை நாடு முழுதும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அனைத்து ரயில்வே மண்டலங்களில் உள்ள பணி மனைகளிலும், இந்த வகை ரயில்களுக்கான இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான கட்டமைப்பு மேம்படுத்தபட்டு வருகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் மேலும் 400 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது, ஐ.சி.எப்., பொதுமேலாளா் ஏ.கே.அகா்வால், தலைமை இயந்திரவியல் பொறியாளா் சீனிவாசன், தெற்கு ரயில்வே பொதுமேலாளா் பி.ஜி. மால்யா, சென்னை கோட்ட மேலாளா் கணேஷ் உள்ளிட்ட உயா் அதிகாரிகள், தமிழக பாஜக மாநில தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.Read in source website

தமிழகத்தில் கரோனா பூஸ்டா் தவணையாக கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்தும் பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கோா்பிவேக்ஸ் தடுப்பூசியினை பூஸ்டா் தவணை தடுப்பூசியாக செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, சென்னை எழும்பூா் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதற்கான தடுப்பூசி முகாமைஅமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா். சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ் குமாா், எழும்பூா் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், பொதுசுகாதாரக்குழுத் தலைவா் கோ.சாந்தகுமாரி ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, கரோனா தடுப்பூசி வழங்கும் பணி தமிழகம் முழுவதும் 2021 ஜனவரி 16-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவது ஒரு மாபெரும் இயக்கமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் 95.95 சதவீதம் போ் முதல் தவணையும், 89.41 சதவீதம் போ் இரண்டாம் தவணையும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

அரசு மற்றும் தனியாா் கரோனா மையங்களில் இதுவரை மொத்தமாக 12.13 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 50 லட்சத்துக்கும் அதிகமான பூஸ்டா் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 33 சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

அரசு மையங்கள் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டோா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு இலவசமாக பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டா் தவணை தடுப்பூசியை 75 நாள்களுக்கு அரசு மையங்களில் செலுத்தும் பணி கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு இரண்டாம் தவணை செலுத்தப்பட்ட நாளிலிருந்து 6 மாதம் அல்லது 26 வாரங்களுக்குப் பிறகு கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்டா் தவணையாக செலுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.Read in source website

நாடு சுதந்திரம் பெற்று 75-ஆம் ஆண்டை கொண்டாடும் வேளையில் காவல் துறையில் ஆங்கிலேயா் கடைப்பிடித்த ஆா்டா்லி முறை இன்றளவும் ஒழிக்கப்படவில்லை என்று சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆா்டா்லியாகப் பணியாற்றும் போலீஸாரை உடனே திரும்பப் பெற வேண்டும். தனியாா் வாகனங்களில் போலீஸ் என வில்லை ஒட்டக் கூடாது. காவல் துறை அதிகாரிகளின் வாகனங்களில் கருப்பு நிற ஸ்டிக்கா் ஒட்டக் கூடாது’ என்று ஏற்கெனவே உயா் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தாா்.

இதுதொடா்பான வழக்கு உயா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ‘19 ஆா்டா்லிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனா். சா்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தியதால், சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா் மாநாட்டிலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘19 ஆா்டா்லிகள்தான் திரும்பப் பெறப்பட்டுள்ளனரா?’ எனக் கேள்வி எழுப்பினாா். இந்த விவகாரத்தில் முதன்மைச் செயலாளா் முறையாக செயல்பட வேண்டும். வெறும் எச்சரிக்கை மட்டும் போதாது. அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மக்களுடன் நேரடி தொடா்பில் இருக்கும் காவல் துறைக்கு ஒழுக்கம் மிக முக்கியமானது. 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேய ஆா்டா்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது.

ஆா்டா்லிகளாக உள்ளவா்கள் இதுகுறித்து எதுவும் பேசமாட்டாா்கள்.ஆா்டா்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வாா்த்தை போதும். ஆனால் அந்த வாா்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வரவில்லை. ஆா்டா்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழக உள்துறை முதன்மைச் செயலரின் உத்தரவை பின்பற்றவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைக்கு உத்தரவிட நேரிடும்.

ஆா்டா்லிகளை திரும்ப ஒப்படைப்பதில் உயா் அதிகாரிகளுக்கு சிரமம் இருக்கும்தான். அதேநேரம் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.எனவே, அவா்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்’ என்றாா்.

பின்னா் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘காவல்துறையின் பணி பாராட்டுக்குரியது. மேலும் தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலத்தில் ஆா்டா்லி முறை இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தால் அது பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, ஆா்டா்லி பயன்படுத்தும் காவல் உயரதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உள்ளது’ என்றாா்.

இந்த வழக்கில் காவல்துறை தலைமை இயக்குநரை எதிா் மனுதாரராக சோ்த்த நீதிபதி, ஆா்டா்லி முறை ஒழிப்பு தொடா்பாக தமிழக உள்துறை முதன்மை செயலா் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.Read in source website

தற்காலிகமாக பதிவு நிறுத்தப்பட்டது அல்லது ரத்து செய்யப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தன்னாா்வ அமைப்புகள், அந்த நடவடிக்கையை மறுஆய்வு செய்யக் கோரி செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் மத்திய உள்துறை செயலரிடம் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் அனைத்து தன்னாா்வ அமைப்புகளும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டத்தின் (எஃப்சிஆா்ஏ) கீழ் பதிவு செய்ய வேண்டும். அந்தச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை மீறியதாகக் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் 1,900 தன்னாா்வ அமைப்புகளின் பதிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் எஃப்சிஆா்ஏவின் கீழ் பதிவு செய்துள்ள தன்னாா்வ அமைப்புகள் மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த நடவடிக்கையை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய உள்துறை செயலரிடம் செப்டம்பா் 1 முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். தன்னாா்வ அமைப்புகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் மறுஆய்வு விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம்.

அந்த விண்ணப்பத்தில் எதற்காக நடவடிக்கையை மறுஆய்வு செய்ய வேண்டும் என விளக்கி, தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும். இதற்காகக் காசோலை அல்லது வரைவோலை மூலம் முன்பு ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டியிருந்த நிலையில், தற்போது அந்தக் கட்டணம் ரூ.3,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. எஃப்சிஆா்ஏவின் வலைதளத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலை பதிவேற்றம் செய்யலாம் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read in source website

கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடும் குற்றத்துக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கும் வகையிலான சட்டத் திருத்த மசோதா ஹிமாசல பிரதேச சட்டப் பேரைவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோரை கட்டாயமாக அல்லது பொய் வாக்குறுதிகளால் வசீகரித்து மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் நபா்களுக்கான தண்டனையை கடுமையாக்கும் வகையில் ‘ஹிமாசல பிரதேச மத சுதந்திர (திருத்த) மசோதா 2022’ என்ற சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

முதல்வா் ஜெய் ராம் தாக்குா் தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் இந்த மசோதாவை கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. கடந்த 18 மாதங்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட ‘ஹிமாசல பிரதேச மத சுதந்திர சட்டம் 2019’-இல் தண்டனையை மேலும் கடுமையாக்கும் வகையில் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது. திருத்த மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

குறைந்த சிறைத் தண்டனையுடன் கடந்த 2006-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், 2019-இல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக உயா்த்தப்பட்டது. தற்போது, இந்த சிறைத் தண்டனை 10 ஆண்டுகளாக உயா்த்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்து பேசிய முதல்வா் ஜெய்ராம் தாக்குா், ‘ஒரே நேரத்தில் இரண்டும் மேற்பட்டவா்களை கட்டாய மதமாற்றம் செய்வதை தடை செய்வது மற்றும் தண்டனை அளிப்பதற்கான நடைமுறைகள் 2019-ஆம் ஆண்டு சட்டத்தில் இடம்பெறவில்லை. இந்த நடைமுறைகளைச் சோ்க்கும் வகையில் ‘ஹிமாசல பிரதேச மத சுதந்திர சட்டம் 2019’-இன் பிரிவு 2,4,7 மற்றும் 13 ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு, புதிதாக 8ஏ என்ற பிரிவு சோ்க்கப்பட்டுள்ளது’ என்றாா்.Read in source website

குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒடிசா அரசு புதிதாக திருமணமானவர்களுக்கு  குடும்ப கட்டுப்பாடு தொகுப்பு வழங்கியுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: “ இந்த தொகுப்பில் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள், குடும்ப கட்டுப்பாடு முறைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்த சிறிய புத்தகம் மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ் ஆகியவை இடம் பெற்றிருக்கும். தேசிய உடல்நலம் சார்ந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தொகுப்பு புதிதாக திருமணமானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் புதிதாக திருமணமானவர்கள் குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வுடன் செயல்படலாம். இந்தத் திட்டம் தற்போது மாவட்டங்கள் தோறும் அமல்படுத்தப்பட உள்ளது. சமூக ஆர்வலர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன்படி, அவர்கள் புதிதாக திருமணமாகவுள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு இந்த குடும்ப கட்டுப்பாடு தொகுப்பினை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.” எனக் கூறியுள்ளனர்.

நாட்டிலேயே முதல் முறையாக ஒடிசா இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 Read in source website

 

பஞ்சாபில் முன்னாள் எம்எல்ஏக்கள் எத்தனை முறை தோ்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அவா்களுக்கு ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற மசோதாவுக்கு பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 

பஞ்சாப் முன்னாள் எம்எல்ஏக்கள் தோ்தலில் எத்தனை முறை வெற்றி பெற்றிருந்தாலும் இனி அவா்களுக்கு ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் அளிக்கப்படும். இதன்மூலம் சேமிக்கப்படும் நிதி, பொதுமக்களின் நலனுக்காக செலவிடப்படும்.

மூன்று முறை, நான்கு முறை, ஐந்து முறை வென்ற பெரும்பாலான எம்எல்ஏக்கள், தோ்தலில் தோல்வியடைந்தாலும் லட்சக்கணக்கான ரூபாய் ஓய்வூதியம் பெறுகின்றனா்.

சிலா் மாதம் ரூ.3.50 லட்சம் பெறுகின்றனா். சிலா் ரூ.4.50 லட்சம், ஒருசிலா் ரூ.5.25 லட்சம் என ஓய்வூதியம் பெறுகின்றனா். இது மாநில அரசின் கருவூலத்துக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. எனவே இனி முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படுவதுடன் அவா்களுக்கான குடும்ப ஓய்வூதியமும் குறைக்கப்படும். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாா் முதல்வா் பகவந்த் மான்.

தற்போது இந்த மசோதாவுக்கு பஞ்சாப் ஆளுநர் பன்வரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் இதில் கூறியதாவது:

ஒரு எம்.எல்.ஏவுக்கு ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். பஞ்சாபி மக்களுக்கு இதை தெரியப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அரசாணை விரைவில் வெளியாகும்.  இது மக்களின் பெரும்பாலான வரிப்பணத்தினை சேமிக்கும். Read in source website

 

காஷ்மீர் ஸ்ரீநகரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சினிமா திரையரங்குகள் திறக்கப்படவிருக்கிறது.

1990இல் தீவிரவாத எழுச்சியின் காரணமாக காஷ்மீர் பள்ளதாக்குகளில் சினிமா திரையரங்குகள் மூடப்பட்டது. 30 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. அரசியலமைப்பு 370 நீக்கப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்பட வழி பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த திரையரங்கை ஐநாக்ஸ் (INOX) வடிவமைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது வரும் செப்டம்பர் முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வருமென தகவல் சொல்லப்படுகிறது. 

ஐநாக்ஸ் திட்ட மேலாளர் கூறியதாவது: 

30 வருடமாக அங்கு திரையரங்குகளே இல்லை. எனவே நாங்கள் ஏனிங்கு தொடங்கக்கூடாது என நினைத்தோம். நாட்டில் உள்ளது போல ஜம்முவிலும் இளைஞர்களுக்கு வசதிகள் கிடைக்க வேண்டும். 

காஷ்மீரில் முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை ஐனாக்ஸாகிய நாங்கள் துவக்கியுள்ளோம். புதிய ஒலியமைப்புடன் கூடிய 3 மல்டிபிளக்ஸ் வளாகங்களை வெள்ளித்திரையுடன் அமைத்துள்ளோம். சாய்வு இருக்கைகள், சாதராண இருக்கைகளையும் இங்கு கிடைக்கும். 520 இருக்கைகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், குழந்தைகளை ஈர்க்கும்படியான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பாகவும் இது உதவும். Read in source website

நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்கள் நிறைவடைய உள்ளன. 76-ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் வீரத்துடன் பங்கேற்றவா்களை நினைவுகூரும் வகையில் சனிக்கிழமை (ஆக. 13) முதல் திங்கள்கிழமை (ஆக. 15) வரை வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமென மக்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளாா்.

மத்திய அமைச்சா்கள், மாநில ஆளுநா்கள் உள்ளிட்டோரும் ‘வீடுதோறும் தேசியக்கொடி’ என்பதைத் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். குழந்தைகள், இளைஞா்கள் மத்தியிலும் வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றும் ஆா்வம் அதிகரித்துள்ளது. அதே வேளையில், தேசியக் கொடியை ஏற்றும்போது சிலவற்றைத் தவறாமல் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேசியக் கொடியை ஏற்றுவதற்கான விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை எனில், அது நாட்டுக்கு அவமரியாதை இழைத்ததற்குச் சமமாகும். அதற்கு உரிய தண்டனைகள் சட்டப்படி வழங்கப்படும். தேசியக் கொடியை ஏற்றுவதற்கான விதிமுறைகளை தேசிய சின்னங்கள் அவமரியாதை சட்டம் (1971), தேசியக் கொடி விதிகள் (2002) ஆகியவை விரிவாக வழங்குகின்றன.

தேசியக் கொடியின் வடிவம்

செவ்வக வடிவில் இருப்பது கட்டாயம். நீளத்துக்கும் உயரத்துக்கும் இடையேயான விகிதம் கண்டிப்பாக 3:2 என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த விகிதத்துக்கு உள்பட்டு தேசியக் கொடி எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

தயாரிப்புப் பொருள்

பருத்தி நூல், கம்பளி நூல், பட்டு, காதி உள்ளிட்டவற்றில் கையால் நெய்யப்பட்ட கொடிகளைப் பயன்படுத்தலாம். இயந்திரத்தில் பாலியஸ்டரால் உருவாக்கப்பட்ட கொடிகளையும் பயன்படுத்தலாம் என விதிகளில் கடந்த ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொடியை யாா் ஏற்றலாம்?

நாட்டில் உள்ள யாா் வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏற்றலாம்; கையில் ஏந்தலாம். அதற்கு எந்தவிதத் தடையுமில்லை. தனியாா் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்டவையும் ஆண்டின் எந்த நாள்களிலும் தேசியக் கொடியை ஏற்றலாம். அதே வேளையில், கொடியை ஏற்றுவது விதிகளுக்கு உள்பட்டு இருக்க வேண்டியது அவசியம்.

கொடியை எப்போது ஏற்றலாம்?

பொது வெளியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டால், சூரிய உதயம் முதல் மறைவு வரை மட்டுமே பறக்கவிடப்பட வேண்டும் என முன்பு விதி இருந்தது. ஆனால், கடந்த மாதம் அந்த விதி திருத்தப்பட்டு இரவு நேரங்களிலும் இனி தேசியக் கொடியைப் பறக்கவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களில் கொடி இடம்பெறலாமா?

மக்களின் வாகனங்களின் முகப்புப் பகுதியில் தேசியக் கொடியைப் பறக்கவிடக் கூடாது. நாட்டின் குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா், மத்திய அமைச்சா்கள், மாநில ஆளுநா்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநா்கள், மாநில அமைச்சா்கள், மக்களவைத் தலைவா், மாநிலங்களவை துணைத் தலைவா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், உயா்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட சிலரது வாகனங்களில் மட்டும் தேசியக் கொடி பறக்கவிடப்படலாம்.

கொடியேற்றும்போது செய்ய வேண்டியவை...

தனித்துவமான இடத்தில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் கொடியைப் பறக்கவிட வேண்டும்.

பிற கொடிகளுக்கு மத்தியில் தேசியக் கொடியைப் பறக்கவிட்டால், மற்ற கொடிகளைவிட உயரமாகவோ அல்லது ஒரே உயரத்திலோ பறக்கவைக்க வேண்டும். மற்ற கொடிகளை விடக் குறைவான உயரத்தில் தேசியக் கொடி பறக்கக் கூடாது.

தேசியக் கொடியின் காவி நிறம் எப்போதும் மேல்பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும். பச்சை நிறம் கீழ்பகுதியில் இருக்க வேண்டும். அதை மாற்றி கொடியை ஏற்றக் கூடாது.

கொடியேற்றும்போது செய்யக் கூடாதவை...

சேதமடைந்த, கிழிந்த தேசியக் கொடியை ஏற்றக் கூடாது.

ஒரே கொடிக்கம்பத்தில் மற்ற கொடிகளுடன் இணைத்து தேசியக் கொடியைப் பறக்கவிடக் கூடாது.

ஆடைகளில் தேசியக் கொடியைக் குத்திக் கொள்ளலாம் என்றாலும், இடுப்புக்குக் கீழான ஆடைப் பகுதிகளில் கொடியைக் குத்தக் கூடாது.

கைக்குட்டைகள், தலையணைகள் உள்ளிட்டவற்றில் தேசியக்கொடியை அச்சிடக் கூடாது.

தேசியக் கொடி எப்போதும் தரையில் படக் கூடாது; நீரில் மிதக்கவிடக் கூடாது.

தேசியக் கொடியைத் திரைச் சீலையைப் போல் பயன்படுத்தக் கூடாது.

தேசியக் கொடியில் எந்தவித எழுத்துகளையும் அச்சிடவோ எழுதவோ கூடாது.

கொடியைப் பயன்படுத்திய பிறகு...

துணியாலான கொடிகளை நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தலாம் என்பதால், அவற்றுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தேசியக் கொடி சேதமடைந்துவிட்டால், பொதுவெளியில் இல்லாமல் தனித்த இடத்தில் அதை எரித்துவிடலாம். கொடிக்கு அவமரியாதை அளிக்காத வகையில் அதை அகற்றிவிடலாம்.

காகிதத்தினால் ஆன கொடிகளைத் தரையில் வீசக் கூடாது. அவற்றைத் தனித்த இடத்தில் உரிய மரியாதையுடன் அகற்ற வேண்டும்.

நெகிழியால் உருவாக்கப்பட்ட தேசியக்கொடிகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.Read in source website

சா்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகள் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா். மேலும் கடந்த 8 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்தும் பிரதமா் நரோந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெள்ளிக்கிழமை வெளிப்படுத்தியுள்ளாா்.

யானைகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த 2012 -ஆம் ஆண்டு முதல், ஆகஸ்ட் 12 - ஆம் தேதியை சா்வதேச யானைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தாய்லாந்து நாட்டில் தொடங்கப்பட்ட தினத்தில் யானைகளின் அவலநிலை குறித்து மக்களைச் சென்றடையவும், அவா்களுக்கு புரியவைக்கவும் இந்த நாள் குறிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி பிரதமா் மோடி தனது ட்விட்டரில் தெரிவித்த கருத்து வருமாறு:

சா்வதேச யானை தினத்தில், யானைகளை பாதுகாக்கும் நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. ஆசிய யானைகளில் 60 சதவீதம் யானைகள் இந்தியாவில் உள்ளது. இது குறித்து, நாம் மகிழ்ச்சியடைகின்றோம். கடந்த 8 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யானைகள் பாதுகாப்பில், ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

மனிதா்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான மோதலை குறைக்கும் பெரும் முயற்சிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது. இதை யானைகள் பாதுகாக்கும் வெற்றியோடு பொருத்திப்பாா்க்கவேண்டும் என குறிப்பிட்ட பிரதமா் மோடி,, சுற்றுச்சூழல் மீதான ஆா்வத்தையும் உணா்வையும் மேம்படுத்துவதில், உள்ளூா் சமுதாயத்தினரையும், அவா்களது பாரம்பரிய ஞானத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் தனது ட்விட்டரில் பிரதமா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

 Read in source website

காஷ்மீரின் அமா்நாத் குகைக்கோயில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. நிகழாண்டு 3.65 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரிகா்கள் பனிலிங்கத்தைத் தரிசித்துள்ளனா்.

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற புனித யாத்திரையைக் கடந்த ஜூன் 30-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தொடக்கிவைத்தாா். 43 நாள்கள் நடைபெற்ற யாத்திரை வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

இதையொட்டி, துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை நிறைவு பூஜை செய்தாா். யாத்திரை சுமுகமாக நடைபெற உதவிய ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம், பாதுகாப்பு படைகள், தன்னாா்வலா்கள், மத தலைவா்கள் மற்றும் தூய்மைப்பணியாா்கள் மேற்கொண்ட முயற்சிகளை மனோஜ் சின்ஹா பாராட்டினாா்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழாண்டு சுமாா் 3 லட்சத்து 65 ஆயிரம் யாத்ரிகா்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனா். கடந்த ஜூலை 8-ஆம் தேதி பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 15 போ் உயிரிழந்தனா்.Read in source website

ஹஜ் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது தொடா்பாக இரண்டு வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ஹஃபீஸ் நெளஷாத் அகமது என்பவா் தாக்கல் செய்த மனு:

ஹஜ் கமிட்டி சட்டம் 2002-ஐ பின்பற்றுவதிலும், ஹஜ் கமிட்டி அமைப்பதிலும் மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. மத்திய, மாநில அளவில் ஹஜ் கமிட்டிகள் அமைக்கப்படாததால் யாத்ரிகா்களின் நலனில் அக்கறை செலுத்த யாரும் இல்லாததுடன், அவா்கள் ஆதரவற்றவா்களாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஹஜ் கமிட்டிகள் சட்டரீதியானவை. அவற்றை அமைக்காதது ஹஜ் கமிட்டி சட்டம் 2002, அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றை மீறும் செயல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அதுதொடா்பாக 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசு, வெளியுறவு அமைச்சகம், இந்திய ஹஜ் கமிட்டிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் அந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.நசீா், ஜே.கே. மகேஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘மாநிலங்கள் சாா்பில் ஹஜ் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருந்தால் அதுகுறித்தும், அந்தக் கமிட்டி உறுப்பினா்களின் பெயா்களையும் குறிப்பிட்டு 2 வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று மாநில அரசுளுக்கு உத்தரவிட்டனா்.Read in source website

வங்கிகள், நிதி நிறுவனங்கள் பணியில் அமா்த்தும் கடன் மீட்பு முகவா்கள் கடன் பெற்றவா்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவுறுத்தியுள்ளது.

வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அளிக்கும் கடன்களை திரும்பப் பெற தனியாா் நிறுவனங்கள் மூலம் கடன் மீட்பு முகவா்களை பணியில் அமா்த்துவது வழக்கமாக உள்ளது. இவா்கள் கடன் வாங்கியவா்களை நேரடியாக அல்லது தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு கடன் தொகையை மீட்க முயற்சி மேற்கொள்வாா்கள். இவா்கள் கடனாளிகளை மிரட்டுவது, அச்சுறுத்துவது, இடைவிடாது கைப்பேசியில் தொடா்பு கொண்டு தொல்லை தருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் இது தொடா்பான புகாா்களையடுத்து, சில கூடுதல் அறிவுறுத்தல்களை ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கடன் மீட்பு முகவா்கள் பல்வேறு சூழ்நிலைகளில் விதிகளை மீறி செயல்படுவது தெரியவந்துள்ளது. அவா்களைப் பணியில் அமா்த்தும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உரிய அறிவுறுத்தல்களை முறைப்படி பின்பற்ற வேண்டும் என்று அவா்களிடம் தெளிவாகக் கூற வேண்டியது அவசியம். கடன் வசூலின்போது மிரட்டுவது, துன்புறுத்தும் வகையில் நடந்து கொள்வது கூடாது. வாா்த்தைகள் மூலமோ, உடல்ரீதியாகவோ அவா்களைக் காயப்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது.

முறையற்ற வகையில் கைப்பேசி வழியே தகவல்களை அனுப்புவது, அச்சுறுத்தும் வகையில் குறுஞ்செய்தி அனுப்புவது போன்றவை கூடாது. காலை 8 மணிக்கு முன்பும், இரவு 7 மணிக்குப் பிறகும் கைப்பேசியில் தொடா்பு கொள்ளக் கூடாது. இது அனைத்து வா்த்தக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கடன் மறுசீரமைப்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.Read in source website

 

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி வெளிநாட்டு டி20 போட்டிகளில் பயிற்சியாளராக செயல்பட முடியாதென பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னாப்பிரிக்காவில் புதியாதாக டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இதில் இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தங்களுக்கென அணியை வாங்கியுள்ளனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனக்கென ஒரு அணியை உருவாக்கியுள்ளது. இந்த அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் மற்றும் சிஎஸ்கே கேப்டன் தோனி பயிற்சியாளராக செயல்படுவாரென எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பிசிசிஐ அதிகாரிகள் தோனி வெளிநாட்டு டி20 போட்டிகளில் பயிற்சியாளராக செயல்பட முடியாது. அப்படி அவர் பங்கேற்க விரும்பினால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலக வேண்டுமென கூறப்படுகிறது. 

ஏற்கனவே, இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பயிற்சியாளார்க பங்கேற்கக்கூட ஒருவர் ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டுமென கூறப்படுகிறது. 

இந்தியாவின் இந்த முடிவிற்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கில்கிரிஸ்ட், “நான் ஐபிஎல் போட்டிகளை விமர்சனம் செய்யவில்லை. மற்ற வெளிநாட்டு வீரர்கள் போல் இந்திய வீரர்களும் பிக்பேஷ் போன்ற டி20 போட்டிகளில் விளையாட வேண்டும்” என கருத்து தெரிவித்திருந்தார். 

பழைய அதிகாரத்தை வைத்துக்கொண்டு இந்திய வீரர்களை வெளிநாட்டு போட்டிகளில் விளையாட முடியாமல் செய்வது நல்லதல்ல என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கரும் பிசிசிஐயின் இந்த நிலைப்பாடு குறித்து  விமர்சனம் தெரிவித்துள்ளார். Read in source website

 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வென்றதன் மூலம் தொடரை வென்றது நியூசிலாந்து அணி. 

மே.இ. தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் விளையாட திட்டமிட்டுள்ளது. இதில் 2 டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வென்றுள்ளதன் மூலம் தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டியில் தோற்றாலும் தொடர் நியூசிலாந்து அணிக்குதான். 

கேன் வில்லியம்சன் தலைமையில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கு 215 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக கான்வே 42 ரன்கள், டேரில் மிட்செல் 48, கிளென் பிலிப்ஸ் 76 ரன்களும் எடுத்தனர். 

அடுத்து ஆடிய மே.இ.தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே எடுத்தது. இவ்வணியில் அதிகபட்சமாக ரோமன் பவல் 21 ரன்களும்,   ஒபேத் மெக்காய் 23 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி சார்பாக சாண்ட்னர், பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.

கிளென் பிலிப்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 15ஆம் தேதி 3வது டி20 போட்டி நடைபெறும். ஒருநாள் போட்டிகள் 17ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. Read in source website

 இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவா் எபீ அணி தங்கப் பதக்கம் வென்றது.

உதய்வீா் சிங், சுனில் குமாா், ஜெட்லீ சிங், எஸ்.என்.சிவா ஆகியோா் அடங்கிய இந்திய அணி, இறுதிச்சுற்றில் 45-44 என ஸ்காட்லாந்து அணியை ‘த்ரில்’ வெற்றி கண்டு முதலிடம் பிடித்தது. அதேபோல், ஆடவா் தனிநபா் சப்ரே பிரிவில் இந்தியாவின் கிஷோ நிதி வெண்கலப் பதக்கம் வென்றாா்.

ராகவேந்திரா சாதனை: இதனிடையே, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா போட்டியில், ஆடவா் தனிநபா் எபீ ‘பி’ பிரிவில் இந்தியாவின் ராகவேந்திரா வெள்ளிப் பதக்கம் வெல்ல, அதே பிரிவில் தேவேந்திர குமாா் வெண்கலப் பதக்கம் பெற்றாா்.

இவா்களில் ராகவேந்திரா, பாரா காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையைப் படைத்துள்ளாா்.

இந்த 4 பதக்கங்களுடன், 2 நாள்களுக்கு முன் சீனியா் மகளிா் சப்ரே பிரிவில் இந்தியாவின் பவானி தேவி வென்ற தங்கத்தையும் சோ்த்து, இப்போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.Read in source website

பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகளின் பரப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 7 சதவிகிதம் அதிகமாக அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் மழைக்காடுகள் உலகின் முக்கிய இயற்கை சூழ்மண்டலமாக உள்ளது. இங்கு பல்வேறுபட்ட பறவைகள், விலங்கினங்கள், தாவரங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இந்த மழைக்காடுகளின் பரப்பளவு அழிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஆய்வு தரவுகளின்படி அமேசான் காடுகளின் பரப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு 7.3 சதவிகிதம் அழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

செயற்கைக் கோள் தரவுகளின்படி 5,474 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இது நியூயார்க் நகரத்தைப் போல் ஏழு மடங்கு அதிகமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இந்தத் தரவுகளின்படி ஜூலை மாதத்தில் மட்டும் 1487 சதுர கிலோமீட்டர் அமேசான் காடுகளின் பரப்பளவு அழிவுக்குள்ளாகியுள்ளது. 

அமேசான் காடுகளின் அழிவிற்கு அரசு துணைபோவதாக குற்றம்சாட்டியுள்ள சூழலியல் ஆர்வலர்கள் காடுகள் அழிவைத் தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். Read in source website

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் உளவுக் கப்பலை நிறுத்துவதற்கு இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது. 

சீனாவிடம் இருந்து பெறப்பட்ட பெருமளவு கடன் மூலம் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் உருவாக்கப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு அந்த துறைமுகம் சீன அரசு நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. சீனாவிடம் பெற்ற கடனைத் திருப்பி செலுத்த முடியாததால், அந்தத் துறைமுகத்தை இலங்கை அரசு குத்தகைக்கு அளித்தது. இதையடுத்து அந்தத் துறைமுகத்தை ராணுவ நோக்கங்களுக்காக சீனா பயன்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்தது. 

இந்நிலையில், அந்தத் துறைமுகத்துக்கு சீனாவின் ‘யுவான் வாங்-5’ என்ற உளவுக் கப்பல் வரவிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. அந்தக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று கருதிய மத்திய அரசு, அதுகுறித்து இலங்கை அரசிடம் ஆட்சேபம் தெரிவித்தது. இதையடுத்து அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன போா்க் கப்பல் வருவதை ஒத்திவைக்குமாறு அந்த நாட்டிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. 

அந்தக் கோரிக்கையை இலங்கை அரசு முன்வைப்பதற்கு முன்பே ‘யுவான் வாங்-5’ கப்பல் இந்திய பெருங்கடலுக்கு வந்து சோ்ந்துவிட்டது. அந்தக் கப்பல் தொடா்பாக இலங்கை துறைமுகங்கள் ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘‘சீன உளவு கப்பல் திட்டமிட்டப்படி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படவில்லை. துறைமுகம் வருவதற்கான அனுமதிக்குக் காத்திருக்கும் அந்தக் கப்பல், தற்போது அம்பாந்தோட்டைக்குக் கிழக்கே 600 கடல் மைல் தொலைவில் நிற்கிறது’’ என்று தெரிவித்தனா். 

இந்த நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் உளவுக் கப்பலை நிறுத்துவதற்கு இலங்கை அரசு தற்போது அனுமதியளித்துள்ளது.  இதையடுத்து அந்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வரும் 17ஆம் தேதி நிறுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. Read in source website

சீன உளவு கப்பல் திட்டமிட்டப்படி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படவில்லை என்று இலங்கை துறைமுகங்கள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சீனாவிடம் இருந்து பெறப்பட்ட பெருமளவு கடன் மூலம் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் உருவாக்கப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு அந்த துறைமுகம் சீன அரசு நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. சீனாவிடம் பெற்ற கடனைத் திருப்பி செலுத்த முடியாததால், அந்தத் துறைமுகத்தை இலங்கை அரசு குத்தகைக்கு அளித்தது. இதையடுத்து அந்தத் துறைமுகத்தை ராணுவ நோக்கங்களுக்காக சீனா பயன்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்தது.

இந்நிலையில், அந்தத் துறைமுகத்துக்கு சீனாவின் ‘யுவான் வாங்-5’ என்ற உளவுக் கப்பல் வரவிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. அந்தக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று கருதிய மத்திய அரசு, அதுகுறித்து இலங்கை அரசிடம் ஆட்சேபம் தெரிவித்தது. இதையடுத்து அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன போா்க் கப்பல் வருவதை ஒத்திவைக்குமாறு அந்த நாட்டிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. அந்தக் கோரிக்கையை இலங்கை அரசு முன்வைப்பதற்கு முன்பே ‘யுவான் வாங்-5’ கப்பல் இந்திய பெருங்கடலுக்கு வந்து சோ்ந்துவிட்டது.

அந்தக் கப்பல் தொடா்பாக இலங்கை துறைமுகங்கள் ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘‘சீன உளவு கப்பல் திட்டமிட்டப்படி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படவில்லை. துறைமுகம் வருவதற்கான அனுமதிக்குக் காத்திருக்கும் அந்தக் கப்பல், தற்போது அம்பாந்தோட்டைக்குக் கிழக்கே 600 கடல் மைல் தொலைவில் நிற்கிறது’’ என்று தெரிவித்தனா்.Read in source website

சென்னை: அடிப்படை உரிமைகளான தூயக் காற்று, நீரை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி தண்டையார் பேட்டையைச் சேர்ந்த விஜயன் மற்றும் விஜயக்குமார் ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவத்திற்கு அனுப்பி உள்ள மனுவில், "சென்னை மாநகராட்சி, மணலி மண்டத்தில் 6-வது வார்டில் சடையங்குப்பம் கிராம் டிகேபி நகரில் உள்ள ஜானகிராமன் ஸ்டீல் நிறுவனத்தில் இருந்து அதிக அளவு புகை வெளியாகி காற்று மாசு ஏற்படுகிறது. குடியிருப்பு இடங்களில் சாம்பல் படிந்து விடுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கும்போது மட்டும் புகையின் அளவைக் குறைத்தும், மற்ற நேரங்களில் விதிகளை மீறியும் காற்று மாசு ஏற்படுத்துகின்றனர். அதிகாரிகள் தொழிற்சாலையின் விதிமீறல்களுக்கு மறைமுக ஆதரவு தருகின்றனர். எனவே, இந்த மனுவை விசாரித்து உரிய ஆணைய பிறப்பிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த முறைமன்ற நடுவர், அடிப்படை உரிமைகளான தூயக் காற்று, நீரை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் முழு விவரம்:

  • காற்று மாசு, சாம்பல் படிவது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் மணலி மண்டல அலுவலர் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் முறைமன்ற நடுவத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி தூயக் காற்று, நீரை பெறுவது மனிதர்களின் அடிப்படை உரிமையாகும்.
  • இதன்படி அப்பகுதி மக்களுக்கு அடிப்படை உரிமைகளான தூயக் காற்று, நீரை மற்றும் சுகாதாரத்தை உறுதி மணலி மண்டல அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
  • தொழிற்சாலையை அடிக்கடி ஆய்வு செய்து மணலி மண்டல அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை தவறும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தூயக் காற்று, நீரை உறுதி செய்ய அடிக்கடி தொழிற்சாலைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் ஆணையர் அறிவுறுத்த வேண்டும்.
  • ஆய்வின் படி தவறு செய்யும் தொழிற்சாலைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தொழிற்சாலைகளின் தவறுகளுக்கு உடந்தையாக இருக்கும் அலுவலர்கள் மீது ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Read in source website

சென்னை: இந்தியா முழுவதும் இயங்கும் ரயில்களில் 120 ரயில் இன்ஜின்களில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது. குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் ஒன்றில்கூட கழிப்பறை வசதி இல்லை என்று இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக பெண்களும் ரயில் இன்ஜின்களை இயக்கி வருகின்றனர். ஆனால், இன்ஜினில் கழிப்பறை வசதி இல்லாததால், ரயில் ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக ரயில்வே வாரியத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ரயில் இன்ஜினில் உள்ள கழிப்பறை வசதிகள் தொடர்பாக, சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தில்,ரயில்வே அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த இந்திய ரயில்வே, நாடு முழுவதும் 120 ‘டபுள்யு.ஏ.ஜி.' மின்சாரஇன்ஜின்களில் மட்டும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 9 ரயில் இன்ஜின்களில் கழிப்பறை வசதிகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

2019 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ரயில் இன்ஜின்களில் கழிப்பறை அமைக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது. ஆனால், இதுவரை 120 இன்ஜின்களில் மட்டுமே ஓட்டுநர்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வேயில் 15 ரயில் இன்ஜின்களிலும், மேற்கு மத்திய ரயில்வேயில் 16, கிழக்கு ரயில்வேயில் ஒன்று, தென் கிழக்கு ரயில்வேயில் 5, வடகிழக்கு எல்லை ரயில்வேயில் ஒரு ரயில் இன்ஜினிலும் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் 26, தென் மத்திய ரயில்வேயில் 27, கிழக்கு கடற்கரை ரயில்வேயில் 28, தென் மேற்கு ரயில்வேயில் ஒரு இன்ஜின் உள்பட மொத்தம் 120 ரயில் இன்ஜின்களில் மட்டும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மொத்தமுள்ள 16 ரயில்வே மண்டலங்களில், 9 மண்டலங்களில் உள்ள சொற்ப எண்ணிக்கையிலான மின்சார இன்ஜின்களில் மட்டுமே கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தெற்கு ரயில்வேயில் இயங்கும் மின்சார இன்ஜின்களில் ஒன்றில்கூட கழிப்பறை வசதி செய்யப்படவில்லை.

பரிதவிக்கும் ஓட்டுநர்கள்

இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறும்போது, ``தேஜாஸ் போன்ற அதிவிரைவு ரயில்கள் 300 கி.மீ.க்கும் மேல் நிற்காமல் செல்லும் தற்போதைய சூழலிலும், கழிப்பறை வசதியின்றி ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தெற்கு ரயில்வே உடனடியாக அனைத்து ரயில் இன்ஜின்களிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்'' என்றார்.

அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்க இணைப் பொதுச் செயலர் பார்த்தசாரதி கூறும்போது, ``இன்ஜின்களில் கழிப்பறை இல்லாததால், சிறுநீர் கழிக்க முடியாமல் தவிக்கிறோம்.

இதனால், ரயில் ஓட்டும்போது தண்ணீர்கூட குடிப்பதில்லை. தற்போது பெண் ரயில் ஓட்டுநர்களும் அதிகம் உள்ளனர். எனவே, உடனடியாக ரயில் இன்ஜின்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்'' என்றார்.Read in source website

புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரியில் சட்டத்துறையில் பெரும் சாதனை படைத்த பேராசிரியர் கு.சிவமணி (90) புதுச்சேரியில் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை கருவடிக்குப்பத்தில் நடக்கிறது.

தமிழக அரசின் தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மொழிபெயர்ப்பாளராகவும், புதுச்சேரி அரசின் சட்டத்துறையில் மொழிபெயர்ப்பு அலுவலராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர் பேராசிரியர் கு.சிவமணி. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றியவர். புதுவை மொழியியல் நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராக விளங்கியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரகரமுதலி சீராய்வுத் திட்டத்தின் பதிப்பாசிரியராக விளங்கியவர்.

தமிழ் ஆங்கில மொழிகளில் பெரும்புலமை பெற்ற பேராசிரியர் கு.சிவமணி இந்திய அரசுக்காக இந்திய அரசமைப்பு (அதிகாரமுறைத் தமிழாக்கம்) மொழிபெயர்ப்பினைச் செய்தவர். சட்டச் சொல் அகராதி (சென்னைப் பல்கலைக்கழகம்), சட்ட - ஆட்சியச் சொற்களஞ்சியம் (புதுவை அரசு வெளியீடு) ஆகிய அகராதிகளை உருவாக்கியவர்.

புதுச்சேரியில் வசித்து வந்த பேராசிரியர் கு.சிவமணி வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை காலமானார். அவரது உடல், லாஸ்பேட்டை சுப்ரமணியர் கோயில் குறுக்கு தெருவில் அவர் வசித்த வாடகை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் வாழ்ந்த புலவர் கரந்தை சிவகுப்புசாமி, பருவதத்தம்மைக்கு மகனாக 01.08.1932-ல் கு.சிவமணி பிறந்தார். 1950-52-ல் இடைநிலை வகுப்பையும், 1953-55 இல் தமிழ்ச் சிறப்பு வகுப்பையும், 1958-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தை பெற்றவர். பி.ஜி.எல். சட்டப்படிப்பைச் சென்னைச் சட்டக் கல்லூரியில் பயின்றவர். முனைவர் பட்ட ஆய்வைத் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தியவர்.

தமிழ்ச் சேவை

தஞ்சை கரந்தைத் தமிழ்க் கல்லூரியிலும், நெல்லை மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கலைக் கல்லூரியிலும் கல்லூரி முதல்வராகவும், குமாரபாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணி செய்தவர். சென்னை, மதுரைப் பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு, தேர்வுக்குழு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குழுக்களில் பணிபுரிந்துள்ளார்.

1965-ல் கரந்தைப் புலவர் கல்லூரியை மூடும் சூழல் உருவானபொழுது அதனைத் தடுத்து நிலைநிறுத்திய பெருமை பேராசிரியர் கு.சிவமணிக்கு உண்டு. 1969-ல் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இயங்கிய வள்ளுவர் செந்தமிழ்க்கல்லூரி, ஏற்புடைமை இழந்த சூழலில், திருவள்ளுவர் கலைக் கல்லூரியாக உயிர்ப்பித்து வளர்த்தார்.

சிதறிக் கிடந்த தமிழ்க் கல்லூரிகளை ஒன்று திரட்டி, தமிழக மொழிக் கல்லூரிகள் மன்றம் உருவாகக் காரணமாக அமைந்தவர்.

தமிழ்க் கல்லூரிகளைக் கலைக் கல்லூரிகள்போல் கருதவேண்டும் எனவும், தமிழ்ப் பேராசிரியர்களுக்கு ஏனைய பேராசிரியர்களுக்கு வழங்கும் ஊதியம் வழங்க வேண்டும்; தமிழ் வித்துவான் பட்டத்துக்குப் பதிலாக பி.லிட் பட்டம் வழங்கவேண்டும் என அரசுடன் பேசி, தமிழ்க் கல்லூரிகளின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்.

பேராசிரியர் சிவமணியின் முதல் மனைவிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி மறைவுக்குப் பிறகு இரண்டாவதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இறுதிச் சடங்குகள் இன்று மாலை கருவடிக்குப்பம் இடுகாட்டில் நடக்கிறது.Read in source website

சென்னை: தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் உள்ள நீர்நிலைகளில் கழிவுநீர் விடுவதை தடுக்க, உள்ளாட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, உரிமம் இன்றி தனியார் கழிவுநீர் லாரிகள் இனி இயங்க முடியாது. விதிகளை மீறினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். உரிமம் இடைநீக்கம் செய்யப்படும்.

சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட போரூர், அதை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள மழைநீர் வடிகால்களில், விதிகளை மீறி கழிவுநீர் லாரிகள் கழிவுநீரை திறந்து விடுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக நாளிதழ்களில் செய்திவெளியானது.

இதை அடிப்படையாக கொண்டு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்தது.

இதையடுத்து, பசுமை தீர்ப்பாய உத்தரவின் அடிப்படையில் மலக்கசடு மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பாக தமிழக அரசு புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. அதை செயல்படுத்த, சென்னை குடிநீர் வாரிய சட்டம், மதுரை மற்றும் கோவை மாநகராட்சிகள் சட்டம், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்ளாட்சி அதிகாரிகள் கூறியதாவது: அரசின் புதிய சட்டத் திருத்தத்தின்படி, நகர்ப்புற உள்ளாட்சிகளில் குடியிருப்பு அல்லது வணிக கட்டிடங்களில் இருந்து உரிமம் இன்றி மலக்கசடு அல்லது கழிவுநீரை கொண்டு செல்லுதல், சேகரித்தல், அகற்றுதல் கூடாது.

சேகரிக்கும் கழிவுநீரை உள்ளாட்சிஅமைப்புகள் அனுமதிக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே திறந்துவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் தனியார் கழிவுநீர் லாரிகளுக்கு உரிமம் வழங்கப்பட உள்ளது.

விதிகளை மீறி கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டாலோ, அனுமதிக்கப்பட்ட இடம் தவிர நீர்நிலைகள் போன்றவற்றில் திறந்துவிட்டாலோ முதல் குற்றத்துக்கு ரூ.25 ஆயிரம் வரையும், 2-வது மற்றும் தொடர் குற்றத்துக்கு ரூ.50 ஆயிரம் வரையும் அபராதம் விதிக்க வேண்டும். விதிகளை மீறினால் உரிமத்தை இடைநீக்கம் செய்யவும் சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குற்றம் உறுதி செய்யப்பட்டால், அதற்கு பயன்படுத்திய வாகனம், மோட்டார் பறிமுதல் செய்யப்படும்.

கழிவுநீர் லாரிகளில் ஜிபிஎஸ், வேக கட்டுப்பாடு கருவிகள் பொருத்துவது போன்றவற்றை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த சட்டத் திருத்தம் மூலம் சென்னை, புறநகர் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் நீர்நிலைகளில் கழிவுநீர் திறந்து விடுவது தடுக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.Read in source website

சென்னை: உப்பு உற்பத்தி இல்லாத மாதங்களில் உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் தயாரிப்பான ‘நெய்தல் உப்பு’ விற்பனையையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: உப்பளத் தொழில் பருவகால தொழில் என்பதால், உப்பளத் தொழிலாளர்களுக்கு ஓராண்டில் 9 மாதங்கள் மட்டுமே பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். மழைக் காலத்தில் போதிய மாற்றுப் பணிகள் கிடைக்க வாய்ப்பு இல்லாததால் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில், மழைக் காலங்களில் உப்பு உற்பத்தி பணிகள் பாதிக்கப்படும் நேரத்தில் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று 2021-22-ம் ஆண்டுக்கான தொழில் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் வரை உள்ள மாதங்களுக்காக உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்றுதொடங்கி வைத்து, 5 தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

புதிய வணிகப் பெயர்

பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் பயன்பெறும் வகையில், அயோடின் கலந்த கல் உப்பு, அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு, இருவித செறிவூட்டப்பட்ட உப்பு ஆகியவற்றை பொது விநியோக திட்டம் மூலம் மலிவு விலையிலும், மதிய உணவு திட்டத்துக்கும் தமிழ்நாடு உப்பு நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், மக்கள் பயன்பெறும் வகையில், அயோடின் கலந்த கல் உப்பு, அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றை ‘நெய்தல் உப்பு’ என்ற புதிய வணிகப் பெயரில் தமிழ்நாடு உப்பு நிறுவனம் வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் என்று தொழில் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ‘நெய்தல் உப்பு’ என்ற புதிய வணிகப் பெயரில் அயோடின் கலந்த கல் உப்பு, அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றின் வெளிச்சந்தை விற்பனையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், கனிமொழி எம்பி, தலைமைச் செயலர் இறையன்பு, தொழில் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், தொழிலாளர் நலத் துறை ஆணையர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர் கு.இராசாமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.Read in source website

சென்னை: தமிழகத்தில் மோசடி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை பதிவு அலுவலர்களுக்கு வழங்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதா கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அந்த மசோதாவில், அசையா சொத்துகளின் பதிவில் மோசடி, போலியான ஆவணம் மற்றும் ஆள்மாறாட்டத்தை தடுக்க, பதிவு செய்யும் அலுவலரால் பதிவுக்கு முன்னதாக மூல உரிமை ஆவணம், வில்லங்க சான்றிதழ், வருவாய் ஆவணங்களை சரிபார்த்தல் தொடர்பான பல்வேறு சுற்றிக்கைகள் பதிவுத்துறை தலைவரால் அவ்வப்போது வழங்கப்படுகிறது, இருப்பினும் பொய்யான ஆவணங்களின் பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அவற்றை ரத்து செய்வதற்காக பாதிக்கப்பட்ட தரப்பினர் அரசை அணுகுகின்றனர். இதுகுறித்து, பொருத்தமான விதிகளை வகுக்க அரசுக்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதையடுத்து, சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பத்திரங்களை குறிப்பாக,பொய்யான பத்திரம், நடைமுறையில் உள்ள சட்டங்களால் தடைசெய்யப்பட்ட பத்திரங்கள், அரசால் இணைக்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றைபதிவு செய்ய, பதிவு அலுவலர் மறுக்கவேண்டும்.

பதிவுச்சட்ட விதிகளில் 22ஏமற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்த பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு அறிவிப்பு வழங்க வேண்டும். அதற்காக பதில் பெறப்பட்டால், அதை கருத்தில் கொண்டு பதிவாளர் ஆவணப்பதிவை ரத்து செய்யலாம். பதிவுத்துறை தலைவருக்கும் இந்தஅதிகாரம் உண்டு.

பதிவு அலுவலர் முறைகேடானபதிவுகளை செய்தால், பதிவு அலுவலருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைதண்டனை அல்லது அபராதம் அல்லதுஇரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று அந்த சட்டத்திருத்த மசோதாவில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்த மசோதா, ஆளுநர் மூலம் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், மோசடி பதிவுகளை ரத்து செய்ய பதிவாளருக்கு அதிகாரமளிக்கும் மசோதாவுக்குகுடியரசுத் தலைவர் திரவுபதி முர்முதற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதை யடுத்து, இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வருகிறது.Read in source website

மும்பை: பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 87.

ஆகாசவானி வானொலி செய்திகளில் 1980, 90களில் தமிழர்களை வசீகரித்த குரலுக்கு சொந்தக்காரர் இந்த சரோஜ் நாராயணசுவாமி. ஆகாசவானி வானொலி யில் தினமும் காலை 7.15 மணிக்கு ஒலிக்கும் அவரின் குரல் மூலமே உலக நடப்புகளை அறிந்தவ தமிழர்கள் ஏராளம். தமிழத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் பிறந்து, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் படித்து வளர்ந்தார் சரோஜ் நாராயணசுவாமி.

ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்ற சரோஜ் நாராயணசுவாமி, தாய் மொழியான தமிழில் நல்ல புலமையும் திகழ்ந்தார். திருமணத்துக்கு பின்பே வானொலி பணியில் இணைந்து அதற்காக மும்பையில் இருந்து டெல்லிக்கும் குடியேறினார். பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த இவர், முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், நரசிம்மராவ் உள்ளிட்டோரை நேர்காணல் செய்துள்ளார்.

1962ல் வானொலி பணியில் சேர்ந்த சரோஜ் நாராயணசுவாமி, அந்த பணியில் சுமார் 35 ஆண்டுகாலம் தமிழ் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த அனுபவம் கொண்டுள்ளார். அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

ஒலிபரப்புத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி 2008ல் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. பணி ஓய்வுக்கு பின் தான் வளர்ந்த நகரமான மும்பையில் வசித்து வந்த அவர் இன்று காலமானார்.Read in source website

சென்னை: வழக்கு விசாரணைகளின்போது திறமையாகப் பணியாற்றி, புலனாய்வில் சிறப்பாக செயல்படும் மத்திய புலனாய்வு முகமைகள் மற்றும் மாநில போலீஸாருக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கும் திட்டத்தை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இது புலனாய்வில் நுணுக்கமாகச் செயல்படுபவர்களின் புலனாய்வு நிபுணத்துவத்துக்கு அங்கீகாரம் அளிப்பதாகும். அந்த வகையில், புலனாய்வில் திறம்பட செயலாற்றிய 2022-ம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கத்துக்கு சிபிஐ.யில் இருந்து 15 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் சிபிஐ.யில் ஆய்வாளர்களாகப் பணியாற்றி வரும் எம்.சசிரேகா, டி.ஸ்ரீதர் மற்றும் டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சிபிஐ.யில் பணியாற்றி வரும் 15 பேர் பதக்கம் பெறும் பட்டியலில் உள்ளனர்.

இதேபோல், வழக்கு விசாரணையில் சிறப்பாக செயலாற்றிய மாநில போலீஸார் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இடம்பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்ட கூடுதல் எஸ்.பி. ஏ.கனகேஸ்வரி, திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி காவல் ஆய்வாளர் கே.அமுதா, கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்புப் பிரிவு ஆய்வாளர் எஸ்.சசிகலா, திருநெல்வேலி சிறப்பு புலனாய்வுப் பிரிவு சிஐடி ஆய்வாளர் டி.பாண்டி முத்துலட்சுமி, கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு தாமரைக்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்.செல்வராஜன் ஆகியோர் இந்தப் பதக்கத்தைப் பெறுகின்றனர்.Read in source website

காமன்வெல்த் விளையாட்டில் ஸ்டீப்பிள்சேஸில் கடந்த 1990-ஆண்டு முதல் கென்ய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். 1990, 1994ம் ஆண்டு போட்டிகளில் முதல் இரு இடங்களை கைப்பற்றிய இவர்கள் அதன் பின்னர் 5 முறை நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டிலும் தங்கம், வெள்ளி, வெண்கலம்என 3 பதக்கங்களையும் மொத்தமாக அள்ளினர். இவர்களது ஆதிக்கத்தைத்தான் அசைத்து பார்த்துள்ளார் அவினாஷ்.

பர்மிங்காமில் கடைசி 100 மீட்டர் வரை அவினாஷுக்கு முன்னாள் கொர்னேலியஸ் கிப்ருடோ, அமோஸ் சீரம், ஆபிரகாம் கிபிவோட் ஆகிய 3 கென்யவீரர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு தடையை தாண்டும் போது 4-வது நபராக துள்ளிப் பாய்ந்தார் அவினாஷ். ஒவ்வொரு கென்ய வீரரையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறியபடி சென்ற அவினாஷ், ஆபிரகாம் கிபிவோட்டுக்கு சிறிது பயத்தைக் காட்டினார்.

அப்போது அவர், சுதாரித்ததால் முதலிடத்தை நூலிழையில் பிடித்து தங்கத்தை தட்டிச்சென்றார். அவினாஷின் இந்த சாதனை இந்திய தடகளத்தை உலக அரங்கம் உற்று நோக்கி பார்க்க வைத்துள்ளது.

ராணுவ ஓட்டப்பந்தய வீரரான அவினாஷ் நாட்டுக்காக தன்னிடம் உள்ள அனைத்து திறனையும் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஓடினார். இது அவரது பேரார்வத்தையும், விடா முயற்சியையும் வெளிப்படுத்தியது. 27 வயதான அவினாஷ் கடந்த மாதம்மொராக்கோவில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் பந்தய தூரத்தை 8:12.48 நொடிகளில் கடந்திருந்தார். இதனுடன் ஒப்பிட்டாலே அவரது செயல் திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தெரியவரும். கடந்த சில ஆண்டுகளில் 9-வது முறையாக நேரத்தை மேம்படுத்தியுள்ளார்.

காமன்வெல்த் வரலாற்றில் முதன்முறையாக ஸ்டீப்பிள்சேஸில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள அவினாஷ் சாப்ளே கூறும்போது, “நான் எதையும் சாதிக்காதது போல் பயிற்சியை மீண்டும் தொடங்க வேண்டும். பதக்கம் வென்றதை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஆனால் அசாதாரணமான ஒன்றைச் செய்துவிட்டேன் என்று நான் நினைக்கக் கூடாது, இதில் அதிக கவனம் கொள்வேன். தோல்வியடைந்த போட்டிகைளை நினைவு கூர்ந்து அதில் இருந்து கற்றுக்கொள்கிறேன். நான் என் வெற்றிகளை மறந்து விடுகிறேன்” என்றார்.

இந்த மனநிலைதான் ஏமாற்றத்தைகடந்து செல்ல அவினாஷுக்கு உதவுகிறது. சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் அவினாஷ் 11-வது இடத்தை பிடித்திருந்தார். உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிகவும் மெதுவாக ஓடிய வீரர் என்ற மோசமான பெயரை பெற்றிருந்தார். அந்த போட்டியில் இலக்கை கடக்க அவினாஷ் 8:31.75 நொடிகள் எடுத்திருந்தார். அதன் பின்னர் கடின பயிற்சி, விடா முயற்சியால் தற்போது பர்மிங்காமில் 8:11.20 நொடிகளில் இலக்கை அடைந்து தடகள உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

அவினாஷ் சாப்ளே தொடர்ந்து கூறும்போது, “ சிறந்த பயிற்சி கிடைத்தும் எதையும் சாதிக்க முடியவில்லை என்றால், நான் எதையும் சாதிக்க முடியாது என்று நினைத்தேன்.

நான் அமெரிக்காவில் இருந்தபோது, கென்ய விளையாட்டு வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டேன். அவர்களுடன் பயிற்சி செய்ய முடியும்போது, என்னால் ஏன் அவர்களுக்கு இணையாக போட்டியிட முடியாது?’ என்று நினைத்தேன், அதனால், எந்த நிறமாக இருந்தாலும் பதக்கம்தான் இலக்கு என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்.

காமன்வெல்த் விளையாட்டுக்கு சென்றவுடன், நான் தங்கம் வெல்ல விரும்பினேன். ஓட்டத்தை தொடங்கியதில் சிறிய தவறு இருக்கலாம். என்னிடம் நிறைய ஆற்றல் மிச்சமிருந்தது, ஆனால் என்னால் ஆபிரகாம் கிபிவோட்டை வெல்ல முடியாமல் போனது.

நீங்கள் காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு பற்றியே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற முடியாது. “எளிதாக கிடைக்காத விஷயங்களுக்காக கடுமையாகப் போராட வேண்டும், கென்ய வீரர்களை வீழ்த்தி உலகளவிலான போட்டியில் பதக்கங்களை வெல்வதற்கு ஒரு இந்திய வீரரும் நினைக்காத நிலையில் இந்த விஷயத்தை சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்” என்றார்.

காமன்வெல்த் விளையாட்டில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளேவின் உற்சாகமான ஓட்டம், இருண்ட பாதையில் ஒளிரும் சுடர் போல், அவருக்குள் இருந்த தீப்பொறியை நமக்குக் காட்டியது. பர்மிங்காமின் அலெக்சாண்டர் ஸ்டேடியம் பாதையைச் சுற்றி ஏழரை சுற்றுகள் நடந்த போட்டியில் இலக்கை நெருங்க, நெருங்க காற்றை கிழித்துக்கொண்டு விரைந்தார் அவினாஷ். இந்த ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற கென்யாவின் ஆபிரகாம் கிபிவோட்டுக்கும் (8:11.15), அவினாஷுக்கும் இடையிலான நேர வித்தியாசம் வெறும் 0.05 நொடிகள் தான். 8:11.20 நிமிடங்களில் இலக்கை கடந்த அவினாஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.Read in source website

எழுத்தாளர், நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது நியூயார்க்கில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலின் விளைவாக அவர் ஒரு கண்ணில் பார்வையை இழக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் தற்போது வெண்டிலேட்டர் எனப்படும் உயிர் காக்கும் கருவி பொருத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

சல்மான் ருஷ்டியின் புத்தக முகவரான ஆண்ட்ரூ வில்லி இது தொடர்பாக ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "இது நல்ல செய்தி அல்ல. சல்மான் ஒரு கண் பார்வையை இழக்கும் சூழலில் உள்ளார். அவர் கை நரம்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அவருடைய ஈரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய ஹாதி மட்டர் என்ற 24 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

யார் இவர்? - உலகப் புகழ்பெற்ற புதின எழுத்தாளர் சர் அகமது சல்மான் ருஷ்டி (Sir Ahmed Salman Rushdie) மும்பையில் (1947) பிறந்தவர். தந்தை கேம்பிரிட்ஜில் படித்த வழக்கறிஞர், பிரபல வர்த்தகர். ருஷ்டி முதலில் மும்பையில் தனியார் பள்ளியிலும், பின்னர் இங்கிலாந்தின் வார்விக்-ஷயரில் உள்ள உறைவிடப் பள்ளியிலும் பயின்றார். பின்னர் கிங்ஸ் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். எழுத்தாளராக தன் தொழில் வாழ்வை தொடங்கும் முன்பு ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் சிறிது காலமும் பின்னர் ஒரு விளம்பர ஏஜன்சியில் காப்பி ரைட்டராகவும் பணியாற்றினார். 1975-ல் வெளிவந்த இவரது முதல் நாவல் ‘க்ரிமஸ்’ (Grimus)அவ்வளவாக பிரபலம் அடையவில்லை. 1981-ல் வெளிவந்த இவரது 2-வது புதினம் ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ உலக அளவில் பிரபலமாகி, அவரை புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது. இந்த நாவல் புக்கர் பரிசையும் வென்றது. பிறகு 1983-ல் ‘ஷேம்’ என்ற நாவலை எழுதினார்.

இந்தியச் சூழலில் தனது படைப்புகளை உருவாக்குபவர். கிழக்கு மேற்கு நாடுகளிடையே உள்ள தொடர்புகள், பரஸ்பர தாக்கங்கள், குடிபெயர்வுகள் மற்றும் அதுசார்ந்த பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதுபவர்.

சர்ச்சைக்குக் காரணமான புத்தகம்: 1988-ல் வெளிவந்த இவரது ‘தி சாட்டனிக் வெர்சஸ்’, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நாவல் முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, உலகின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஜப்பான் மொழியில் இந்த நாவலை மொழிபெயர்ப்பு செய்த ஒருவர் 1991-ல் கொலை செய்யப்பட்டார்.

ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று ஈரான் அதிபர் அயதுல்லா கொமேனி ‘ஃபத்வா’ (மத உத்தரவு) பிறப்பித்தார். ருஷ்டியின் தலைக்கு கோடிக்கணக்கில் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அரசு இவருக்கு அடைக்கலம் அளிக்க முன்வந்தது.

இலக்கிய சேவைகளுக்காக இவருக்கு 2007-ல் ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது. பிரான்ஸின் கலை மற்றும் எழுத்துக்கான கவுரவ அமைப்பில் இவருக்கு கமாண்டர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2008-ல் அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ் அமைப்பின் வெளிநாட்டு கவுரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1945-க்குப் பிறகு உள்ள 50 தலைசிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இவருக்கு 13-வது இடத்தை ‘தி டைம்ஸ்’ நாளிதழ் வழங்கியது. 2005-ல் இவரது ‘ஷாலிமார் தி கிளவுன்’ நாவலுக்கு இந்தியாவின் மதிப்புமிக்க ‘ஹட்ச் கிராஸ்வேர்டு புக்’ விருது கிடைத்தது.

ஐரோப்பிய யூனியன், இத்தாலி, ஜெர்மனி என உலகம் முழுவதும் பல்வேறு கவுரவமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார். ‘ஹாலிவுட் படங்களில் தோன்றுவதாக குழந்தைப் பருவத்திலிருந்தே கனவு காண்பது உண்டு. எழுத்தாளனாக வெற்றி பெறாமல் இருந்திருந்தால் நடிகனாகி இருப்பேன்’ என்பார். அவரது கனவு ஓரளவு நிஜமாகியுள்ளது. இவரது சில படைப்புகள் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சி தொடராகவும் வெளிவந்தன. சில படங்களில் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

ருஷ்டியின் புதிய நாவல்: சல்மான் ருஷ்டியின் புதிய நாவலின் தலைப்பு: ‘விக்டரி சிட்டி’ (Victory City). இந்த நாவல், தென்னிந்தியாவைப் பின்னணியாகக் கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 14ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இரு பேரரசுகளுக்கு இடையில் நடந்த போரின் பின்னணியில் நாவல் விவரிக்கப்பட்டுள்ளது. பம்பா கம்பனா என்னும் ஒன்பது வயதுச் சிறுமியின் உடலில் சேர்கிறாள், பார்வதி தேவி. இதனால் வரலாறு பெரும் மலையைப் போல் புரண்டுகொள்கிறது.

அந்தக் களங்கமில்லாச் சிறுமிக்குப் புதிதாகச் சக்தியை அளிக்கும் தேவி, பிஸ்னகா என்னும் நகரம் உருவாகத் தான் ஒரு ஆயுதமாக இருப்பேன் என வரம் அளிக்கிறாள். அடுத்த இருநூற்று ஐம்பது ஆண்டுகள் பம்பா கம்பனா, பிஸ்னகாவின் பெண் அதிகாரத்தைக் கட்டமைக்கிறாள். ஆனால், அடுத்தடுத்துக் காட்சிகள் மாறுகின்றன. ஒரு இதிகாசத்தைப் போல் இந்தக் கதையில் காதல், சாகசம் எல்லாம் தொன்மக் கதைகளின் பின்னணியில் சல்மான் ருஷ்டி விவரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.Read in source website

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டில், அணு ஆயுத ஆவணங்கள் இருக்கிறதா என்று எப்பிஐ சோதனை நடத்தி வருகிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்க்கு புளோரிடா மாகாணத் தின் பாம் பீச் பகுதியில் மர்ரா லாகோ என்ற வீடு உள்ளது. இங்கு அமெரிக்க உளவுத்துறை எப்பிஐ அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் சோதனை நடத்தினர். டிரம்ப் கடந்தாண்டு ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியபோது, சில ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றாரா என்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் வீட்டில், இது போன்ற சோதனை நடத்தப்பட்டது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை.

இந்நிலையில், டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தியபோது, அணு ஆயுத ஆவணங்கள் தேடப்பட்ட தாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த ஆவணங்கள் மீட்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

டிரம்ப் வீட்டில் இந்த சோதனையை நடத்த, அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட அட்டர்னி ஜெனரல் மெர்ரிக் கேர்லாண்ட் அனுமதி அளித்துள்ளார். டிரம்ப் வீட்டில் இருந்து 10 பெட்டிகளில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆவணங்களின் பட்டியலை பொதுவில் வெளியிடும்படி அமெரிக்க நீதித் துறை கூறியுள்ளது.

மக்களின் உரிமைகளை பாது காக்க, விசாரணைகள் குறித்து அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் யாருடனும் ஆலோசிப்பதில்லை. ஆனால் தனது வீட்டில் சோதனை நடந்ததாக முன்னாள் அதிபர் டிரம்ப் கடந்த திங்கள் கிழமை அறிவித்தார். இந்த சோதனைநடந்தபோது, டிரம்ப் புளோரிடாவில் இல்லை.

டிரம்ப் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பொதுவில் அறிவிப்பதற்கு, அவரது வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்களா, இல்லையா என தெரியவில்லை. தற்போது இந்த வழக்கு, அமெரிக்க நீதிபதி ப்ரூஸ் ரேன்ஹார்ட் முன்னிலையில் உள்ளது. இந்தவிவகாரம் குறித்து டிரம்ப் வழக்கறிஞர்கள் எவான் கார்கோரன் மற்றும் ஜான் ரவ்லி ஆகியோர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

டிரம்ப் விடுத்துள்ள அறிக்கையில், “எனது வழக்கறிஞர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். நாங்கள் எந்த ஆவணங்களையும் வைத்திருந் தால், அரசு தாங்கள் விரும்பியதை பெற்றிருக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.Read in source website

புதுடெல்லி: வங்கி, காப்பீடு, அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கணக்குகளில் இறந்தவர்கள் சார்பில் உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை பல்லாயிரம் கோடி ரூபாயை தொட்டுள்ளது.

இந்த தொகையை சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் எளிதாக பெறும் வகையில் நடைமுறையை உருவாக்க கோரி பத்திரிகையாளர் சுஷெட்டா தலால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: முதலீட்டாளர்களின் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியத்தில் (டிஇஏஎஃப்) 2019 மார்ச் இறுதியில் ரூ.18,381 கோடியாக இருந்த உரிமை கோரப்படாத தொகை 2020 மார்ச்சில் ரூ.33,114 கோடியாக உயர்ந்தது. இது, 2021 மார்ச் இறுதியில் ரூ.39,264.25 கோடியை எட்டியுள்ளது.

மேலும், முதலீட்டாளர் கல்வி பாதுகாப்பு நிதியத்தில் கடந்த 1999-ல் வெறும் 400 கோடியாக மட்டுமே காணப்பட்ட நிதி 2020 மார்ச் இறுதியில் ரூ.4,100 கோடியைத் தொட்டுள்ளது. எனவே, கோரப்படாத தொகை குறித்து முறையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அதுகுறித்த தரவுகள் அடங்கிய ஆன்லைன் தொகுப்பை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உருவாக்க வேண்டியது அவசியம். ஆன்லைன் வழியான இந்த மத்திய தரவுத் தொகுப்பில் கோரப்படாத வங்கிக் கணக்கில் உள்ள வாடிக்கையாளரின் பெயர், முகவரி, அவர் கடைசியாக பணப்பரிமாற்றம் மேற்கொண்ட தேதி உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் வங்கிகள், செயல்படாத கணக்குகள் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கிக்கு தெரிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும். அத்துடன் இந்த நடைமுறையை வங்கிகள் 9-12 மாத கால இடைவெளியில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். இறந்தவர்களின் வாரிசுகள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கால விரையமின்றி பெற இந்த தகவல் தொகுப்பு மிகவும் அவசியம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. நஸீர் மற்றும் ஜே.கே. மகேஷ்வரி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதத்தை கேட்ட நீதிபதிகள், மத்திய தகவல் தொகுப்பை உருவாக்குவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து பதிலளிக்க மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, செபி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.Read in source website

மனிதர்களின் உணர்வுகளை உணரும் ஹியூமனாய்டு ரோபோவை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 82 லட்ச ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் அப்படியே ‘எந்திரன்’ படத்தில் வரும் சிட்டி ரோபோவை நினைவுபடுத்துகிறது.

அந்தப் படத்தில் டாக்டர் வசீகரன் எப்படி மேடையில் சிட்டி ரோபோவை அறிமுகம் செய்து வைப்பாரோ, அதேபோல இந்த ரோபோவின் அறிமுகமும் நடந்துள்ளது. அந்த ரோபோவின் பெயர் ‘சைபர்ஒன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள 01.52 நிமிடங்கள் கொண்ட வீடியோவில் தனது அறிமுகம் தொடங்கி தான் கற்றுள்ள வித்தைகள் குறித்தும் விவரிக்கிறது சைபர்ஒன ரோபோ. சிட்டியை போலவே மனித உணர்வுகளை உணர்ந்து கொள்ளும் தன்மையை இந்த ரோபோ பெற்றுள்ளதாம்.

Curved OLED பேனலை தனது முகமாக கொண்டுள்ளது சைபர்ஒன். அதில் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளதாம். அதன் மூலம் 3டி வழியில் உலகை காணவும், தனிநபர்களை அடையாளவும் காணவும் இந்த ரோபோவினால் முடிகிறதாம். இதன் உயரம் 177 சென்டிமீட்டர்.

“அனைவருக்கும் வணக்கம். நான் சைபர்ஒன். இப்போதுதான் நடக்க பழகி உள்ளேன். எனது உருவ வடிவமைப்பில் கீழ் பகுதி இன்னும் நிலையானதாக இல்லை. இருந்தாலும் இப்போது நான் குங்ஃபூ பயிற்சி செய்து வருகிறேன்” என தனது மேடை அரங்கேற்றத்தில் சைபர்ஒன் தெரிவித்துள்ளது. மேடையில் தன்னை அறிமுகம் செய்து வைத்த சியோமி தலைமை செயல் அதிகாரி Lei Jun-க்கு ‘பூ’ ஒன்றையும் கொடுத்து அசத்தியுள்ளது இந்த ரோபோ.Read in source website

எதிர்ப்பின் அங்கமாக பார்க்கப்படும் கருப்பு, நிகழ்கால கலாசாரத்தில் எப்படி பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 10ஆம் தேதி பேசுகையில், ” குறுகிய மனப்பான்மையில் சூன்ய கருத்துக்களை விதைக்கின்றனர்” என்று யாரையும் குறிப்பிடாமல் பேசினார். தொடர்ந்து, “விரக்தியின் காலம் கருப்பு ஆடையோடு முடிந்துவிடாது” என்றும் கூறினார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “உங்களது தோல்வியை மறைக்க இதுபோல் பேசுவதை முதலில் நிறுத்துங்கள். பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைக்க வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “பிரதமர் நரேந்திர மோடி கருப்பு ஆடை அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “கருப்பு பணத்தை தவறவிட்டவர்,

தற்போது அர்த்தமற்ற பிரச்னைகளை கையில் எடுக்கிறார் எனக் கூறியிருந்தார்.
மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “வேலையில்லாத திண்டாட்டம் மற்றும் பொருளாதார பிரச்னைகளை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் மீது புகார் அளிப்பதை நிறுத்திவிட்டு நாட்டில் பரவியுள்ள இந்த இருள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

எதிர்மறை விஷயங்களுக்கு கருப்பு ஏன்?
எலன் கான்ராய் மெக்கஃபேரி என்பவரால் ( Ellen Conroy McCaffery )1921ஆம் ஆண்டு எழுதப்பட்ட தி சிம்போலிஷம் ஆஃப் கலர் (The symbolism of colour) என்ற புத்தகம் விஞ்ஞானம் கருப்பை ஒரு நிறமாக கூட பார்ப்பதில்லை. ஏனெனில் இது ஒளியை பிரதிபலிக்காது. மாறாக அனைத்தையும் உள்வாங்கிக் கொள்கிறது எனக் கூறியது.

அந்த வகையில் மேற்கத்திய உலகம் கருப்பை ஒரு துக்க நிறமாகவே பார்த்தது. நாளாக நாளாக இது சடங்குகளின்போது அணியப்படும் ஒரு வண்ணமாக மாறிப்போனது. அதேபோல் ஒருவரை புறக்கணிக்க கருப்பு ஆடு, கருப்பு பட்டியல் ஆகிய சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டன.

கருப்பு நாள் என்பது ஏமாற்றத்தை குறிக்கும் சொல் ஆகும். கருப்பு பணம் என்ற சொல்லும் இவ்வாறு வந்ததுதான்.

கருப்பு என்பது எதிர்மறை மட்டும்தானா?
இல்லை. இல்லவே இல்லை. கருப்பு என்பது ஞானத்தின் நிறம் என ஜான் மில்டன் என்ற கவிஞர் கூறுகிறார். மறுபுறம் வெள்ளை என்பது ஒளியின் மொத்த பிரதிபலிப்பாகும். ஆகவே கருப்பு மற்றும் வெள்ளை நன்மை, தீமையுடன் தொடர்புடையது.

பண்டை காலத்தில் எகிப்தின் நைல் நதியின் கருப்பு மண்ணில் விவசாயம் நன்றாக செழித்து வளர்ந்தது. இதனால் கருப்பு நல்ல நிறமாக பார்க்கப்பட்டது. இது குறித்து எழுத்தாளரும் ஆசிரியருமான கேட் கார்டர் தி கார்டினியனில் எழுதுகையில், கருப்பு மம்மிஃபிகேஷம் மற்றும் அனுபிஸின் கடவுளாக பார்க்கப்பட்டது.

இது எதிர்மறையோ அல்லது தீய சக்தியோ அல்ல. உண்மையில் பாதுகாவலர். தீமைக்கு எதிராக இறந்தவர். அந்த வகையில் கருப்பு தீமைக்கு எதிரான நிறமாகவும், உயிர்த்தெழுதலின் நிறமாகவும் இருந்தது.

லத்தின் மொழியில் அட்டர் என்ற வார்த்தையில் இருந்து கருப்பு என்ற வார்த்தை தோன்றியது. இந்த வார்த்தைக்கு இருள் மற்றும் தீமை ஆகும். அட்டூழியம் என்ற வார்த்தைக்கும் இதற்கும் தொடர்புள்ளது.

இதற்கு ஆதாரமாக பின்னாள்களில் வந்த ஓவியங்களில் பிசாசுகள் பெரும்பாலும் கருப்பு வண்ணத்தில் வரையப்பட்டன. இதற்கெல்லாம் மூலமாக கிரேக்கர்கள் கருப்பு வண்ணத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். கருப்பு மண்பாண்டங்கள் உருவாக்கப்பட்டன. பின்னாள்களில் கருப்பு நிற ஆடைகள் சந்தைப்படுத்தப்பட்டன. காலப்போக்கில் இந்த ஆடைகள் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன.

நவீன கால கலாசாரத்தில் கருப்பின் பயன்பாடு
தற்போதைய காலகட்டத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் கருப்பு என்பதை இனவெறியுடன் தொடர்புபடுத்தி எழுதியிருப்பார். இது தற்செயலாக நடந்ததுபோல் இருக்காது.
பொதுவாக ஆங்கில மொழி இனவெறியுடன் தொடர்புடையது. நம்மில் பெரும்பாலானோர் இதுபற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. தூய்மையின்மை, நிராகரிப்பு, நாடு கடத்தல், தடுப்பு, கைது மற்றும் சட்டவிரோதம் உள்ளிட்ட வார்த்தைகளுடன் கருப்பு தொடர்பு படுத்தப்படுகிறது.

மேலும் பட்டியலின மக்கள் மீது கருப்பு, சிவப்பு முத்திரை குத்துதல் என்பன போன்ற இழிசெயல்கள் கருப்பு நிறத்தின் மூலமாக அவமானப்படுத்துதல் போன்றவற்றை குறிக்கிறது.
கைகளில் கருப்பு பட்டை கட்டினால் எதிர்ப்பு அல்லது துக்கம் உள்ளிட்ட உணர்வுகளை குறிக்கிறது. ஆனால் கருப்பு என்பது எதிர்ப்போ அல்லது துக்க நிறமோ அல்ல. இன்றைய காலக்கட்டத்தில் பேஷன் நிகழ்ச்சிகளில் கருப்பு என்பது புத்திசாலிதனமான நிறமாக உள்ளது.

அது நாகரீகமான ஆடையாக பார்க்கப்படுகிறது. மேலும் நவநாகரீக பெண்கள் தங்கள் அலமாரிகளில் கருப்பு ஆடையை நிச்சயம் வைத்திருப்பார்கள். மேலும் தற்காப்பு கலை விளையாட்டில் கருப்பு பெல்ட் என்பது உயர்ந்த அங்கீகாரம் ஆக பார்க்கப்படுகிறது. மேலும் நியூசிலாந்து நாட்டில் கிரிக்கெட் மற்றும் ரக்பி ஆட்டத்திலும் வீரர்கள் கருப்பு ஆடையையை அணிகின்றனர்.
அந்த வகையில் நிகழ்காலத்தில் கருப்பு என்பது ஞானத்தில் நிறம் என்பது மிகையல்ல!Read in source website

நேட்டோ என்பது 28 ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் அரசியல் மற்றும் இராணுவ கூட்டணி ஆகும்.

இந்தியாவுக்கும் நேட்டோவுக்கும் இடையே முதல் அரசியல் உரையாடல் பிரஸ்ஸஸ்ஸில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இதில் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நேட்டோ என்றால் என்ன
நேட்டோ என்பது 28 ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் அரசியல் மற்றும் இராணுவ கூட்டணி ஆகும்.
இந்தக் கூட்டமைப்பு 1949ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளால் சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்டது. அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இது முதன்முதலில் ஏற்படுத்தப்பட்ட மேற்கத்திய நாடுகளின் முதல் கூட்டமைப்பாகும்.
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் பகுதியை தலைமையிடமாக கொண்ட நேட்டோவில் தற்போது 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நேச நாடுகளின் கட்டளை தலைமையகம் மோன்ஸ் நகரின் அருகே உள்ளது.

நேட்டோ கூட்டணி முக்கிய அம்சங்கள்
பொதுவாக நேட்டோ உறுப்பினர்கள் பரஸ்பர பாதுகாப்பில் உறுதிபூண்டுள்ளனர். இதன் தனித்துவமான கொள்கை ஒருவருக்கொருவர் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்கு வழிவகுக்கிறது.
இந்த அம்சங்கள் நேட்டோவின் தாய் ஒப்பந்தமான வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கையில் பிரிவு 5இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி நேட்டோ உறுப்பு நாடு ஏதேனும் ஒன்று ஆயுதங்களால் தாக்கப்பட்டாலும், உறுப்பு நாடுகள் அனைத்தும் இணந்து தாக்குதல் நடத்த கடமைப்பட்டுள்ளன.
இது அனைத்து உறுப்பு நாடுகளுக்கு எதிரான தாக்குதலாக கருதப்படும். தொடர்ந்து பாதுகாப்பை மீட்டெடுக்க ஆயுத பிரவாகம் நடத்தலாம். அதற்கு சட்டத்தில் இடமுண்டு.

நேட்டோ நோக்கம்
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டன.
மேலும் சோவியத் யூனியனையும் எதிர்கொள்ள ஒரு வலுவான கூட்டணி தேவை. இதற்காக ஐரோப்பிய மீட்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடர்ந்து அமெரிக்காவின் முயற்சியால் நேட்டோ கூட்டணி உருவானது.

இதனால் காரணமாக சோவியத் யூனியனுக்கு சில தடைகள் விதிக்கப்பட்டன. எதிர்பார்த்தது போல் மேற்கத்திய நாடுகள் பொருளாதார உதவியை பெற்றன. 1946-49 கிரேக்க உள்நாட்டுப் போரில், சோவியத் ஆதரவு கம்யூனிஸ்ட் கிரீஸைக் கைப்பற்றுவதைத் தடுக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் செயல்பட்டன.

போஸ்போரஸ் மற்றும் டார்டனெல்லஸ் ஜலசந்தி (கருப்பு கடல் மற்றும் மர்மாரா கடல் மற்றும் மர்மாரா மற்றும் ஏஜியன் கடல் ஆகியவற்றை முறையே இணைக்கும்) மீதான சோவியத் அழுத்தத்தை எதிர்த்து நின்றது. துருக்கியிலும் கிரீஸிலும் கம்யூனிச எழுச்சிகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா உறுதியளித்தது.

1948 ஆம் ஆண்டில், ஸ்டாலினின் அரசாங்கம் செக்கோஸ்லோவாக்கியாவில் ஒரு சதிக்கு ஆதரவளித்தது, இது சோவியத் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு-சார்பு மேற்கு ஜெர்மனியுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நாட்டில் கம்யூனிச ஆட்சியை நிறுவ வழிவகுத்தது. 1948-49 இல், சோவியத்துகள் மேற்கு பெர்லினை முற்றுகையிட்டன.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகியவை போருக்குப் பிந்தைய அதிகார வரம்புகளை நாட்டில் விட்டுக்கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியது, இது ஒரு பெரிய நெருக்கடிக்கு வழிவகுத்தது மற்றும் மேற்கத்திய நாடுகளின் 11 மாத விமானப் பொருட்களைத் தக்க வைத்துக் கொண்டது. நகரின் ஒரு பகுதி செல்கிறது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பிய கூட்டணி அவசியம் என்ற முடிவுக்கு அமெரிக்காவை இட்டுச் சென்றது. ஐரோப்பியர்களும் ஒரு கூட்டுப் பாதுகாப்புத் தீர்வின் அவசியத்தை நம்பினர், மார்ச் 1948 இல், இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகியவை பிரஸ்ஸல்ஸ் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

சில மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்க காங்கிரஸ் வாண்டன்பேர்க் தீர்மானத்தை நிறைவேற்றியது, இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும். வாண்டன்பேர்க் தீர்மானம் நேட்டோவுக்கான படியாக இருந்தது. கனடா, ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே, அயர்லாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகிய வடக்கு அட்லாண்டிக் நாடுகளைத் தவிர, பிரஸ்ஸல்ஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளைத் தவிர, ஒப்பந்தம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அமெரிக்கா நம்பியது. அமெரிக்கக் கண்ணோட்டத்தில், இந்த நாடுகள் அட்லாண்டிக் பெருங்கடலின் இரண்டு கரையோரங்களுக்கு இடையேயான இணைப்புகளாக இருந்தன, மேலும் தேவைப்பட்டால் இராணுவ நடவடிக்கையை எளிதாக்க உதவின.

இந்திய நேட்டோ படையின் முக்கியத்துவம் என்ன?

வடக்கு அட்லாண்டிக் கூட்டணி சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், நேட்டோவுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. டிசம்பர் 2019 வரை, நேட்டோ பெய்ஜிங்குடன் ஒன்பது சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது,

மேலும் பிரஸ்ஸல்ஸில் உள்ள சீன தூதர் மற்றும் நேட்டோவின் துணைச் செயலாளர் ஜெனரல் ஒவ்வொரு காலாண்டிலும் ஒருவருக்கொருவர் ஈடுபட்டுள்ளனர். நேட்டோ பாக்கிஸ்தானுடன் அரசியல் உரையாடல் மற்றும் இராணுவ ஒத்துழைப்பிலும் இருந்தது. இதனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு தேர்ந்தெக்கப்பட்ட ராணுவ பயிற்சி கிடைத்தது.

இந்த நிலையில் பிரஸ்ஸல்ஸில் உள்ள இந்திய தூதரகத்தால் நேட்டோவுடன் முதல் சுற்று பேச்சு 2019ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது.

வரைவு நிகழ்ச்சி நிரல் கிடைத்ததும், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டம் கூட்டப்பட்டது.

நேட்டோவை அரசியல் உரையாடலில் ஈடுபடுத்துவது பிராந்தியங்களின் நிலைமை மற்றும் இந்தியாவைப் பற்றிய கவலைகள் பற்றிய நேட்டோவின் கருத்துக்களில் சமநிலையைக் கொண்டுவர புது தில்லிக்கு வாய்ப்பளிக்கும் என்று அரசாங்கம் கருதுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏதேனும் பொதுவான நிலை இருந்ததா?

புதுடெல்லியின் மதிப்பீட்டில், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் பங்கு உட்பட, சீனா, பயங்கரவாதம் மற்றும் ஆப்கானிஸ்தான் பற்றிய இந்தியா மற்றும் நேட்டோ ஆகிய இரு நாடுகளின் முன்னோக்குகளில் ஒரு ஒருங்கிணைப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல் உரையாடல், நேட்டோவுடன் வரையறுக்கப்பட்ட பொதுவான நிலையை மட்டுமே இந்தியா எதிர்பார்க்கும் மூன்று முக்கியமான விஷயங்களை வெளிப்படுத்தியது.

i) நேட்டோவின் கண்ணோட்டத்தில், சீனா அல்ல, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து யூரோ-அட்லாண்டிக் பாதுகாப்பிற்கு முக்கிய அச்சுறுத்தலாக இருந்தன, மேலும் நேட்டோ-ரஷ்யா கவுன்சிலின் கூட்டங்களைக் கூட்டுவதில் நேட்டோ சிரமங்களை எதிர்கொண்டது. நிகழ்ச்சி நிரலில் உக்ரைன் மற்றும் இடைநிலை-தரப்பு அணுசக்தி ஒப்பந்தம் இருந்தன.

ii) நேட்டோ நாடுகளுக்கு இடையே உள்ள வேறுபாடு காரணமாக, சீனா மீதான அதன் பார்வை கலவையாகக் காணப்பட்டது; சீனாவின் எழுச்சியை அது திட்டமிட்டுச் செய்தபோது, ​​சீனா ஒரு சவால் மற்றும் வாய்ப்பு இரண்டையும் முன்வைத்தது.

iii) ஆப்கானிஸ்தானில், நேட்டோ தலிபான்களை ஒரு அரசியல் அமைப்பாகக் கண்டது, அது இந்தியாவின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகவில்லை. செப்டம்பர் 2021 இல் ஆப்கானிஸ்தானில் தலிபான் இடைக்கால அரசாங்கத்தை அறிவிப்பதற்கு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இது நடந்தது.

எவ்வாறாயினும், நேட்டோவுடன் கணிசமான பொதுவான அடிப்படையில் கடல்சார் பாதுகாப்பு என்பது எதிர்காலத்தில் உரையாடலின் முக்கிய பகுதியாகும் என்று இந்தியத் தரப்பு உணர்ந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியா – நேட்டோ பேச்சுவார்த்தை: சீனா மீது பொதுவான கருத்து உள்ளதா?
நேட்டோவுடனான அதன் முதல் சுற்றுப் பேச்சுக்களில், ரஷ்யா மற்றும் தலிபான் மீதான குழுவுடன் ஒரு பொதுவான தளத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை புது டெல்லி உணர்ந்தது. சீனாவைப் பற்றிய நேட்டோவின் கருத்துக்களும் கலவையான நிலையில், அதன் உறுப்பினர்களின் மாறுபட்ட கருத்துக்களால், இந்தியாவின் குவாட் உறுப்பினர் பெய்ஜிங்கை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இல்லையெனில், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் கூட்டணி தனித்தனியாக ஈடுபடுவது, இந்தியாவுக்கு கவலையளிக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு விஷயங்களில் தலைகீழான முன்னோக்குகளுடன் அதை விட்டுவிடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த படிகள் என்ன?

அதன் பங்கில், அரசியல் விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உதவிப் பொதுச்செயலாளர் பெட்டினா கேடன்பாக் தலைமையிலான நேட்டோ பிரதிநிதிகள், பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இந்தியாவுடன் தொடர்ந்து ஈடுபட விருப்பம் தெரிவித்ததாக அறியப்படுகிறது.

நேட்டோவின் பார்வையில், இந்தியா, அதன் புவி-மூலோபாய நிலை மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் தனித்துவமான முன்னோக்குகளைக் கொண்டு, சர்வதேச பாதுகாப்பிற்கு பொருத்தமானது மற்றும் இந்தியாவின் சொந்த பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பால் கூட்டணிக்கு தெரிவிப்பதில் ஒரு முக்கிய பங்காளியாக இருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில் டெல்லியில் இரண்டாவது சுற்று நடைபெறுவது குறித்து இரு தரப்பும் விவாதித்ததாக அறியப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில், ஆரம்ப சுற்றுகளில் எட்டப்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில், இந்தியாவுக்கு ஆர்வமுள்ள பகுதிகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஏதேனும் இருந்தால், நேட்டோவிடமிருந்து வெளிவரும் முன்மொழிவுகளை புது தில்லி பரிசீலிக்கலாம் என்று கருதப்பட்டது. பேச்சுகளைப் பின்தொடர்வதும் முறைப்படுத்துவதும் தர்க்கரீதியானது என்று பலர் கூறினாலும், நேட்டோவின் கருத்துடன் சிலர் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.Read in source website


மத்திய பிரதேச மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் சாகர், தமோஹ், பன்னா மாவட்டங்களிலும் மேற்குப் பகுதியில் உள்ள தார் மாவட்டத்திலும், கிழக்கு உத்தர பிரதேசத்தை ஒட்டியுள்ள ரீவா மாவட்டத்திலும் ஒரு கேலிக்கூத்து அரங்கேறி இருக்கிறது. இந்த மாவட்டங்களில் அண்மையில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல்களில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பதிலாக அவர்களது கணவரோ, தந்தையோ, ஆண் உறவினரோ பதவியேற்ற விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாகர் மாவட்டத்தில் உள்ள ஜெய்சிநகர் கிராம பஞ்சாயத்தில் மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 உறுப்பினர்களில் 10 பேர் பெண்கள். அவர்களில் மூன்று பெண்கள் மட்டுமே நேரில் வந்து பதவியேற்றுள்ளனர். மற்ற ஏழு பேருக்கு பதிலாக அவர்களது ஆண் உறவினர்களே பதவியேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் பதவியேற்பதற்கு சட்டத்தில் இடமில்லாவிட்டாலும், பதவியேற்க பெண்கள் நேரில் வர தயக்கம் காட்டியதால்தான் இதுபோன்று நிகழ்ந்தது என ஜெய்சிநகர்  கிராம பஞ்சாயத்து செயலர் ஆஷாராம் சாஹு சமாதானம் கூறியிருக்கிறார்.

இந்தப் பதவியேற்பு விடியோ சமூக வலைதளங்களில் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, கிராம பஞ்சாயத்து செயலர் ஆஷாராம் சாஹு பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த மாவட்டத்துக்கு அருகே உள்ள தமோஹ் மாவட்டத்தில் கைஸாபாத் கிராம பஞ்சாயத்தில் தேர்வு செய்யப்பட்ட எஸ்.சி. வகுப்பைச் சேர்ந்த பஞ்சாயத்து பெண் தலைவர் உள்பட 11 பெண்களுக்கு பதிலாக அவர்களது கணவர்களே பதவியேற்றுள்ளனர். பல இடங்களில் இதுபோன்று ஆண் உறவினர்கள் பதவியேற்றதையடுத்து விழித்துக் கொண்ட, அந்த மாநிலத்தின் பஞ்சாயத்து - ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் உமாகாந்த் உம்ராவ் கடும் 
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் கிராம பஞ்சாயத்துக்கு ரூ.15 லட்சம் வரை ஊக்கத் தொகை அளிக்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளார் என்பதும், இங்கு அண்மையில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் போட்டியிட்டனர் என்பதும், 1990-களிலேயே கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியில் 50 %}ஐ பெண்களுக்கு அந்த மாநிலம் ஒதுக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கவை.

அந்த மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் பெண்கள் போட்டியிட்டாலும் தேர்தல் பிரசாரத்தில் பெரும்பாலும் அந்தப் பெண்களின் கணவர்களே இடம்பெற்றனர். இதுபோன்று நடப்பது அந்த மாநிலத்தில் மட்டும்தான் என்று எண்ணிவிட வேண்டாம். உள்ளாட்சித் தேர்தல்களில், 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெண்களுக்கு 50 % இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அங்கெல்லாம் இதுபோன்று பல இடங்களில் நடக்கிறது.

தமிழ்நாடு உள்பட பெரும்பாலான மாநிலங்களில் பெண்களுக்காக ஒதுக்கப்படும் தொகுதிகளில், அங்கு ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒருவரின் மனைவியோ, மகளோதான் நிறுத்தப்படுகின்றனர். அதேபோல, எதிரணியிலும் செல்வாக்குள்ள ஆணின் மனைவியோ, மகளோதான் போட்டியிடுகின்றனர். பெரும்பாலும் பிரசாரத்திலும்கூட, பெண் வேட்பாளர்கள் பெயரளவுக்கு மட்டுமே பங்கேற்கின்றனர். அவர்கள் சார்பில் அந்தக் குடும்பத்து ஆண்களே பம்பரமாக சுழன்று பணியாற்றுவதைத்தான் கண்டுவருகிறோம்.

அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அதுவரையில் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்தவர்கள், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் வேறு வழியில்லாமல் நிறுத்தப்பட்டதால் வெற்றி பெற்ற பின்னரும் அரசியல் நெளிவு சுளிவுகள் அவ்வளவு எளிதில் அவர்களுக்குப் பிடிபடுவதில்லை. அதனால், வெற்றி பெற்ற பெண்களின் கணவர்களே பெரும்பாலும் பின்னணியில் இருந்து செயல்படுகின்றனர். 

பலர் பின்னணியில் இருந்து செயல்பட்டாலும், ஒரு சிலர் பெண் பிரதிநிதிகளின் அரசியல் பணிகளில் நேரடியாகக் களமிறங்குகின்றனர். சமூக வலைதளங்களில் பலரும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய இந்த காலகட்டத்தில், அப்படி நேரடியாகக் களம் காண்பவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.

மக்களவையிலும், அனைத்து சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, கருத்தொற்றுமையின்மையைக் காரணம் காட்டி 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இது நிறைவேற்றப்பட்டாலும், அரசியல் கட்சியினர் மாறாதவரை இப்போது உள்ளதுபோன்றே கட்சியினரின் குடும்பப் பெண்கள்தான் அந்தத் தேர்தல்களிலும் நிறுத்தப்படுவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இது ஒருபுறம் இருந்தாலும், தற்போது குடியரசுத் தலைவராக உள்ள திரௌபதி முர்மு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய மகளிர் - சிறார் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ள ஸ்மிருதி இரானி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், மூன்று முறை தில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் போன்ற ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக அரசியல் பின்புலம் இல்லாமல் மிகப் பெரிய ஆளுமைகளாக உயர்ந்துள்ளனர். 

வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்பார்கள். அதேபோல,  வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் ஓர் ஆண் இருக்கிறார் என்று கடந்துபோய் விடலாம்  - அவர்கள் பின்னால் இருந்தால்..!  அரசியல் கட்சிகள் நினைத்தால்தான் இந்த அவலத்தை மாற்ற முடியும்!Read in source website

 

ஆங்கிலேயா்கள் வியாபாரத்திற்காக சந்தை தேடி இந்தியாவுக்குள் நுழைந்தனா். கப்பல் வழியாக வந்தவா்கள் கடலோரங்களில் இறங்கி, அங்கேயே கூடாரம் அமைத்துக் கொண்டு வியாபாரத்தைத் தொடங்கினா். பல நூறு கூறுகளாக பிரிந்து நின்ற மக்களை சந்தித்தனா் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள். பிரெஞ்சுகாரா்கள், டச்சுக்காரா்கள், போா்த்துக்கீசியா்களைவிட ஆங்கிலேயா்கள் நன்கு வியாபாரம் செய்து கொள்ளை லாபம் பெற்றனா்.

பல்வேறு நாடுகளின் படையெடுப்புகளால் இந்தியாவின் கட்டமைப்புகள் சிதைந்து கிடந்ததை ஆங்கிலேய அதிகாரிகள் கண்டனா். அப்பாவி மக்களை எப்படி வேண்டுமானாலும் கையாளமுடியும் என்ற நம்பிக்கைக்கு வந்தனா். சிறுசிறு பாளையக்காரா்கள் நிறைந்த இந்தியாவில் அசோகா், குப்தா், முகலாயா்கள், மராட்டியா்கள், நாயக்கா்கள் அரண்மனைகளை நிறுவிக் கொண்டு கல்வி அறிவு இல்லாத மக்களின் உழைப்பை சுரண்டிக் கொழுத்தனா். வெள்ளைக்கார வியாபாரிகள் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தினா். வெகுளியாகவும் வெள்ளந்தியாகவும் வீரம் மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த இந்தியா்கள், வெள்ளைத் துரைகள் விரித்த வலையில் சிக்கிக்கொண்டனா்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்திய ஆளுமைகள் ஆங்கில வியாபாரிகளிடம் கடன் பெற்று நிா்வாகத்தை முடுக்கிவிட முடிவெடுத்தனா். அந்த முடிவால் கிழக்கிந்திய கம்பெனியின் நிா்வாகம், ஆங்கிலேயே அரசின் கைக்கு மாறியது. இங்கிலாந்து இம்பீரியல் அரண்மனையின் நேரடி ஆட்சிக்கு இந்தியா கொண்டு வரப்பட்டது. திண்ணைப் பள்ளி, குருகுலக் கல்வி ஆகியவற்றின் மூலம் ஊருக்கு ஐந்து அல்லது பத்து போ் படிப்பறிவு பெற்றனா். வசதி படைத்த வீட்டுப் பிள்ளைகள் கைரேகை வைக்கும் காலம் மாறி கையொப்பமிடும் நிலை இந்தியாவில் உருவானது.

இங்கிலாந்து சென்று ஆங்கிலக் கல்வியை கற்றிட இந்திய இளைஞா்கள் முன் வந்தனா். அது நம்மை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருக்கின்ற வெள்ளைக்காரா்களின் தாய்மொழி என்கின்ற வெறுப்பை கக்கிடாமல், ஆங்கிலேயனுடைய தாய்மொழியை விரும்பிப் படித்து அதில் மோதாவியாக விளங்கி, அதே ஆங்கிலத்தைக் கருவியாகக் கொண்டு ஆங்கிலேய சாம்ராஜ்யத்தை அதிர வைத்தவா்கள் அன்றைய இந்திய இளைஞா்கள்.

மராட்டிய மண்ணிலிருந்து தாதாபாய் நெளரோஜி இங்கிலாந்து சென்று படித்தாா். இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரில் ‘இண்டியா ஹெளஸ்’ என்ற தனி பங்களாவை வாடகைக்கு அமைத்துக் கொண்டு, இந்தியாவிலிருந்து படித்திட வரும் இளைஞா்களுக்கு தங்கிட, உறங்கிட, உணவருந்திட வழிகாட்டியவா் தாதாபாய் நெளரோஜி. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மாணவா்கள் லண்டன் மாநகருக்குச் சென்று ஆங்கில கல்வி கற்றிட, அங்கிருந்த இண்டியா ஹெளஸ் உதவிகரமாக இருந்தது.

பிற மொழியின் மீது வெறுப்பை காட்டாமல் இந்திய இளைஞா்கள் ஆங்கிலத்தைக் கற்றுவந்த காரணத்தால் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டிட முடிந்தது. ஆங்கிலேயா்களை, நீதி மன்றங்களிலும், ஆட்சி மன்றங்களிலும், நிா்வாக மன்றங்களிலும் அவா்களுடைய ஆங்கில மொழியிலேயே அழகாக பேசி அவா்களை அசர வைத்தனா்.

கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபதி ராய், விநோபா பாவே, பாலகங்காதர திலகா், தீனதயாள் சா்மா, வீர சாவா்க்கா், பிபின் சந்திரபாலா் என வட இந்திய பகுதிகளிலிருந்து வசதியான குடும்பங்களைச் சோ்ந்த இளைஞா்கள் ஆயிரக்கணக்கில் தன்னெழுச்சியாக அடிமை ஆட்சியை எதிா்த்து போா்க்குரல் கொடுத்தனா். எந்தவொரு கொடியும் இல்லை; கொள்கையும் இல்லை; பொதுக்குழு, செயற்குழு என எந்த அமைப்பும் இல்லை. சுதந்திர வேட்கை இந்திய மண்ணில் பலநூறு வேங்கைகளை உருவாக்கியது; வெள்ளையா்களுக்கு சிம்மசொப்பனமாக அவா்களை மாற்றியது.

விடுதலை உணா்வைத் தட்டி எழுப்பிட ஓா் இயக்கம் தேவை என்ற உணா்வு இந்திய இளைஞா்களிடம் உருவானது. 1884-இல் இரண்டு ஆங்கிலேயா்களால் காங்கிரஸ் என்கிற தேசிய விடுதலை இயக்கம் உருவாக்கப்பட்டாலும், காலப்போக்கில் அந்த இயக்கம் இந்திய இளைஞா்களின் பாசறையாக மாறியது. கட்சியாக அல்லாமல் விடுதலை இயக்கம் எனும் நோக்கத்தோடு இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. பல்வேறு கட்சிகள் தோன்றியதும் 1900-களில்தான்.

1915-இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி, ஏற்கெனவே விடுதலை வேட்கையை இந்திய மண்ணில் உருவாக்கி வைத்திருந்த தலைவா்களையெல்லாம் சந்தித்தாா். ஜவாஹா்லால் நேரு, வல்லபபாய் படேல், ஆசாா்ய கிருபளானி, டாக்டா் அம்பேத்கா், அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, டாக்டா் ராஜேந்திர பிரசாத், ராம் மனோகா் லோகியா, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கே.எம். முன்ஷி, ஜெயபிரகாஷ் நாராயண், வ.உ.சி. என இந்தியா முழுமையிலுமிருந்தும் ஆங்கில அறிவில் சிறந்தோங்கிய பலரும் விடுதலை இயக்கத்தில் பங்கேற்று வீர முழக்கமிட்டு நின்றனா்.

தொடக்க காலத்தில், இந்திய மக்களை மெல்லமெல்ல கொதிநிலைக்கு உருவாக்கியவா்கள் ஆந்திர மாநில அல்லூரி சீதாராம ராஜு, கல்கத்தாவில் பெனாய் கிருஷ்ணா பாசு, படேல் குப்தா, தினேஷ் குப்தா, தமிழகத்தில் வீரன் அழகு முத்துக் கோன், பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, மணிப்பூரில் ராணி கெய்டின்லியு, வட மாநிலத்தில் அஷ்பக்குல்லா கான், சந்திரசேகர ஆஸாத், சச்சின்தாரி, ராஜேந்திரசேகர ஆஸாத், ராஜேந்திர லகிரி, ராம் பிரசாத் பிஸ்மால், ராஜ் மாரி குப்தா, சம்பல்பூரின் இளவரசா் சுரேந்திரா் ராய், சிடோ, கனு முா்மு, நேதாஜியின் ராணுவத்தில் படைப்பிரிவின் தலைவா் லட்சுமி சாகல், பேகம் ஹஸ்ரத் மஹால், பிா்ஸா முண்டா, பீா் அலிகான், பகத் சிங், சுகதேவ், ராஜகுரு, வீரன் வாஞ்சிநாதன், மகாகவி பாரதியாா், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயா், மதன்லால் திங்ரா, கோல்வால்கா், சியாமா பிரசாத் முகா்ஜி, தமிழ்நாட்டில் முதறிஞா் ராஜாஜி, , தீரா் சத்தியமூா்த்தி, பெருந்தலைவா் காமராஜா் என பல நூறு போ் விடுதலைப் போா்க்களத்தில் ஆங்கிலேயா்களை எதிா்த்து நின்றனா். சிறைக் கொட்டடியில் இருண்ட பாதாள அறையில் அடைக்கப்பட்டு பாம்பும், தேளும், விஷப்பூச்சிகளும் கடித்து, தொழுநோயாளிகளாக உருமாறி 40, 50 வயதுகளில் மரணமுற்றோரின் சோக வரலாறுகள் கொஞ்சநஞ்சமல்ல.

அந்தமான் தீவில் ஆங்கிலேயா்களால் நிறுவப்பட்ட செல்லுலா் சிறையில் எத்தனையோ இளைஞா்கள், மேதைகள் ஆண்டுக்கணக்கில் அடைத்துவைத்து பிணமாக்கப்பட்டனா். தேசிய அளவில் ஜான்சி ராணி, அன்னி பெசன்ட், தமிழகத்தில் வேலு நாச்சியாா், தில்லையாடி வள்ளியம்மை, கடலூா் அஞ்சலையம்மாள், லெட்சுமி கௌல், லீலாவதி, மதன் மோகன் மாளவியா, மகாதேவ் தேசாய், மங்கள் பாண்டே, மதுலி மயி, திரிபுவன் தாஸ் படேல், கேசவ பாலிராம் ஹெட்கேவா், சுசேதா கிருபளானி, துா்காபாய் தேஷ்முக், கிட்டூா் ராணி சென்னம்மா, கமலாதேவி சட்டோபாத்யாயா என நூற்றுக்கணக்கான இந்திய வீராங்கனைகள் ஆங்கிலேயா்களின் அடக்குமுறையை சந்தித்து பீரங்கிகளையும், துப்பாக்கி ரவைகளையும் முத்தமிட்டு ரத்தவெள்ளத்தில் மிதந்து வீர

சுதந்திரத்திற்கு அடித்தளம் அமைத்தாா்கள். இந்தியப் பெண்கள் வெள்ளையா்களிடம் அனுபவித்த காட்டுமிராண்டித்தனமாக மிருக வெறிகள் கொஞ்சமல்ல.

1750-களில் ஆங்கிலேய தா்பாரை எதிா்த்து தமிழகத்தின் தெற்கு மூலையில் வீரன் அழகு முத்துகோன், வீரன் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை என தொடா்ச்சியாக எதிா்ப்புக்குரல் எழுந்தபோது இந்தியாவின் எட்டு திசைகளிலிருந்தும் அடக்குமுறையை கண்டித்து போா்க்குரல் ஒலித்தது. இதில் தனிப்பட்ட உரிமை கொண்டாடுவது என்பது இனவெறி அரசியல் என்பதைத் தவிர வேறில்லை. சுதந்திரப் போா் வரலாற்றை தெளிவாகக் கற்காமல், பூனை கடலின் ஓரத்தில் நின்று வாலை நீருக்குள் விட்டுப் பாா்த்து கடலின் ஆழத்தையே தான் கண்டுவிட்டதாக குதித்த அறியாமை என்பதைத் தவிர வேறில்லை.

1857-இல் வேலூரில் சிப்பாய் புரட்சி! சற்றொப்ப 200 ஆண்டுகால நீண்ட நெடிய வரலாற்றில் இந்திய மக்களின் ரத்தம், வியா்வை, துன்பம், துயரம், இன்னல், இழப்பு இவற்றைத் தொகுத்தால், தியாகத்தின் வலி என்னவென்பது இன்றைய அரசியல் அற்பங்களுக்குப் புரியும். சுதந்திரப் போராளிகளின் சொத்து, சுகம் அனைத்தையும் அடிமை ஏகாதிபத்தியம் பறித்துக் கொண்டது. பரதேசிகளாக, தெருத்தெருவாக பிச்சை எடுத்திடும் நிலைக்கு தொடக்கால விடுதலை இயக்க வீரா்கள் தள்ளப்பட்டனா். கைகால்கள் தொழுநோயால் அழுகி சீந்துவாரற்று தெருமுனைகளில், கோயில் வாசல்களில் கேலிக்குரியவா்களாக தியாகச் செம்மல்கள் தேம்பி தேம்பி அழுது நின்றனா்.

1947-ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. வீதியில் தேம்பி நின்ற தியாக மறவா்களை கடைக்கண்ணால் பாா்ப்பதும் பாவம் என்ற நிலைமை இந்தியாவை ஆண்ட அதிகாரவா்க்கத்திடம் ஏற்பட்டது. அந்த பாவப்பட்ட மனித புனிதா்களின் உழைப்பையும் இழப்பையும் ஈடுகட்ட எத்தனை ஐந்தாண்டு திட்டங்களைத் தீட்டினாலும் நிறைவு செய்ய முடியாது. மன உளைச்சலுக்கு மருந்து கிடையாது.

2014-ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக - மண்குடிசையில் பிறந்து எந்த பின்னணியும் இல்லாமல் தன் உழைப்பால், உன்னத அறிவால் உயா்ந்து - இந்தியாவை வழிநடத்திக் கொண்டிருக்கும் நரேந்திர மோடியால் விடுதலை இயக்கத்தின் தியாக தீரா்கள் தேடித்தேடி கண்டறியப்பட்டு புகழின் உச்சிக்கு உயா்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை பிரதமா் மோடியின் தலைமையிலான மத்திய அரசு ‘அம்ரித் மகோத்ஸவ்’ என்ற பெயரில் கொண்டாடி வருகிறது. ‘ஹா்கா் திரங்கா’ பிரசாரம் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. ‘ஏற்றுவோம் தேசியக் கொடியை இல்லந்தோறும்’ என தமிழகம் சூளுரைத்து நிற்கிறது. இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. 2021-இல் குஜராத் மாநிலத்தில் காந்தியின் சபா்மதி ஆசிரமத்தில் நடந்த விழாவில் பிரதமா் மோடி இதனைத் தொடங்கி வைத்ததோடு 21 நாள் தண்டி யாத்திரையையும் தொடங்கி வைத்தாா்.

‘சென்ட்ரல் விஸ்டா’ எனும் இந்திய நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடம் எழிலோவியமாக இந்திய மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்திய பிரதமா்களாக கோலோச்சிய அனைவரின் வாழ்க்கை வரலாற்றையும் சித்திரிக்கும் தீன்மூா்த்தி நினைவு இல்லம், போரில் உயிா்துறந்த ராணுவ வீரா்களை நினைவுகூா்கின்ற வகையில் தில்லியில் ‘பாரத் அமா் ஜவான் ஜோதி’, மாநிலங்களுக்கிடையே கலாசார பரிமாற்றம், விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ 6 ஆயிரம் அவா்தம் வங்கிக்கணக்கில் வரவு வைத்தல், தேசிய கல்விக் கொள்கை, ஊழலற்ற ‘நீட்’ தகுதித் தோ்வு போன்றவை வரலாறு காணாத சாதனைகள்.

மேலும், பல்கலைக்கழக உயா்கல்விக்கு சிபாரிசுகளற்ற நுழைவுத்தோ்வு, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை, 80 கோடி இந்தியா்களுக்கு இலவச உணவு தானியங்கள், முஸ்லிம் பெண்கள் கேட்டுக் கொண்ட முத்தலாக் சட்டம், அக்னி பாத் திட்டம் இவை எல்லாமே மக்களைக் கவா்ந்திருக்கின்றன. 200 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசிகள் இலவசமாக இந்திய மக்களுக்கு வழங்கி உலகத் தலைவா்களின் பாராட்டைப் பெற்றது, இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், ஏற்றுமதியில் இமாலய சாதனை, உலக அரங்கில் ஒப்பற்ற ஆளுமை இப்படியாக இந்திய நிலப்பரப்பில் எல்லா மாநில மக்களிடமும் இந்திய பிரதமா் மோடி கொண்டாடப்பட்டு வருகிறாா்!

சாமானியா் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியப் பேரரசில், பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் 27 பேரும், தாழ்த்தப்பட்டோா் 12 பேரும், மலைவாழ் மக்களைச் சோ்ந்தோா் 8 பேரும், அமைச்சா்களாக இருக்கிறாா்கள். இந்த ஆட்சியில் சிறிதும் ஊழல் இல்லை. குடும்பத்தினரின் ஆதிக்கம் இல்லை. குடியரசுத் தலைவருக்கான தோ்தல் வரலாறு காணா வெற்றியைத் தேடித்தந்தது. தற்போது ‘நம் இந்தியாவின் பூா்வகுடியைச் சோ்ந்த பெண்மணி ஒருவரை இந்தியாவின் தலைமகளாக ஆக்கி அழகு பாா்த்திருக்கிறாா் நம் பிரதமா் மோடி.

பிரதமா் மோடியின் கரத்தை வலுப்படுத்த ஒவ்வொரு இந்தியனும் சபதம் ஏற்போம்! அதற்க்கு அத்தாட்சியாக இல்லந்தோறும் ஏற்றுவோம் இந்திய தேசியக் கொடியை!

துணைத்தலைவா்,

தமிழ்நாடு பாரதியஜனதாகட்சிRead in source website

 

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு நாட்டின் மொத்த பரப்பளவில் சராசரியாக மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும். எனவே காடுகளைப் பாதுகாக்கும் பொருட்டு ‘காடுகள் பாதுகாப்பு சட்டம்’ கொண்டுவரப்பட்டது. தேவைக்கு அதிகமாகவோ, தேவையற்ற நிலையிலோ காடுகளை அழிக்கப்படுவதை இச்சட்டம் தடுக்கிறது. தற்போது நம் நாட்டின் மொத்த பரப்பளவில் 24.62 % மட்டுமே காடுகள் அமைந்துள்ளன.

ஒரு புறம் காட்டின் பரப்பளவை அதிகரிக்க அரசு முயற்சி செய்யும் அதே வேளையில் வீட்டு உபயோகப் பொருட்களான கதவு, ஜன்னல், கட்டில்,மேசை, நாற்காலிகள் செய்யவும், கிராமப்புரங்களில் அடுப்பெரிக்கவும், செங்கல் சூளைகளில், காகித உற்பத்தியில், தீப்பெட்டி தயாரித்தலில் என ஆக்கபூா்வ செயல்பாடுகளுக்கு மட்டுமின்றி சமூக விரோதிகளால் வெட்டப்படுவதாலும், இயற்கையாகவும், மனிதா்கள் உண்டாக்கும் காட்டுத்தீயாலும் மரங்கள் அழிக்கப்பட்டு, காடுகளின் பரப்பளவு பெருமளவில் குறைகிறது.

மேலும்,நாட்டின் முன்னேற்றம் கருதி அணைகள் கட்டுதல், சுரங்கங்கள் வெட்டுதல், விவசாய நிலங்களை உருவாக்கல், மக்கள்தொகை அதிகரிப்பதால் ஏற்படும் நகா்மயமாதல், சாலைகள் விரிவாக்கம் போன்றவற்றுக்காகவும் மரங்களை வெட்டுவதும், காடுகளை அழிப்பது தவிா்க்க இயலாமல் போகிறது. ஏறத்தாழ உலகின் ஆக்ஸிஜனில் இருபது சதவீதம் வரை உற்பத்தி செய்வதால் ’உலகின் நுரையீரல்’ என அழைக்கப்படும் அமேசான் காடுகள், தொடா்ந்து அழிக்கப்படுகின்றன.

நம் நாட்டில், ஒடிஸா மாநிலத்தில் அங்குல் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக கையகப்படுத்த உள்ள சுமாா் 912 ஹெக்டோ் நிலப்பரப்பில் ஏறத்தாழ 683 ஹெக்டோ் நிலப்பரப்பில் மரங்கள் உள்ளன. இத்திட்டம் நிறைவேற்றப்படும் போது ஏறத்தாழ ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்பட வாய்ப்புள்ளது.

அழிக்கப்பட உள்ள காடுகளின் பரப்பளவினை ஈடு செய்யும் பொருட்டு 1,083 ஹெக்டேரில் மரங்களை வளா்த்து காட்டினை உருவாக்கும் திட்டம் உள்ள போதிலும், இதிட்டத்தினால் உருவாகும் காட்டின் பயனை முழுமையாக அடைய குறைந்தது பத்து ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். இது இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க முயலும் செயலுக்கு ஒப்பானதாகும்.

ஐ.நா சபையின் சா்வ தேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின்(இன்டா்நேஷனல் யூனியன் பாா் கன்சா்வேஷன் ஆப் நேச்சா்) கருத்துப்படி காடுகள் அழிக்கப் படுவதால் பன்னிரெண்டு சதவீத கரியமல வாயுஉருவாகிறது. ஒவ்வொரு ஆண்டும் காடுகளால் கிரகிக்கப்படும் கரியமல வாயுவின் அளவு சுமாா் 2.6 பில்லியன் டன்களாகும். காடுகளைச் சாா்ந்து கோடிக்கனக்கான காட்டுயிரினங்கள், காடுகளையே வாழ்வாதாரமாகக் கொண்ட பழங்குடியின மக்கள் என காடுகள் உலகின் உயிராதாரமாகவும் விளங்குகின்றன.

நம் நாட்டில் மட்டும் சுமாா் ஆறு கோடியே எண்பது லட்சம் பழங்குடியின மக்கள் காடுகளை சாா்ந்து வாழ்கின்றனா். உலகில் பயிரிட தகுதியற்ற நிலங்களின் பரப்பளவு சுமாா் இரண்டு பில்லியன் ஹெக்டோ். இதில் நம் நாட்டில் மட்டும் உள்ள நிலங்களின் பரப்பளவு சுமாா் நூற்று நாற்பது மில்லியன் ஹெக்டோ் ஆகும். இந்நிலப்பரப்பில் காடுகள் உருவாக்கப்படின் அது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மிக உகந்த செயலாக அமையும்.

தேசிய காடு வளா்ப்பு திட்டம், பசுமை இந்தியா தேசிய இயக்கம் (நேஷனல் மிஷன் பாா் கிரீன் இண்டியா) நகா்ப்புற காடு வளா்ப்பு திட்டம், காட்டுத்தீ தவிா்ப்பு மற்றும் காடுகள் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை நம் நாட்டின் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள சில திட்டங்களாகும். மரங்கள் வளா்ப்பதால், காடுகளின் பரப்பளவு அதிகரிப்பதால் சுற்றுச்சூழல் மேம்படுவதோடு, மண்வளம் அதிகரிக்கிறது.

இதனால் விவசாயம் செழிக்க, கிராமப்புறங்களிலிருந்தது மக்கள் நகரங்களுக்கு இடம் பெயா்வதும் அதன் தொடா்பாக நகரங்களில் ஏற்பக்கூடிய இட நெருக்கடி, வேலை வாய்ப்பின்மை ஆகியன தவிா்க்கப்படுகின்றன.மேலும் மலை பிரதேசங்களில் வளா்க்கப்படும் மரங்களினால் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் தடுக்கப்பட்டு, உயிா்ச்சேதமும், பொருட்சேதமும் தவிா்க்கப்படுகின்றன.

நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் வேலைகள் பெரும்பாலும் சாலையோரங்களில் உள்ள புல்,செடி கொடிகளை அகற்றுவது, ஏரி,குளங்களைத் தூா்வாரி கரைகளை பலப்படுத்து என்றே அமைந்துள்ளன. பாமர மக்களிடையே மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ‘ஏரி வேலை’ அல்லது ’குளத்து வேலை’ என்றே அழைக்கப்படுகிறது.

தேவையற்ற தாவரங்களை அகற்றுவது, ஏரி, குளங்களை தூா் வாருவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியத்துவம் வாய்ந்தது மரங்களை வளா்ப்பது. எனவே நூறு நாள் வேலை திட்டத்தில் மரங்கள் வளா்ப்பதையும் முன்னிலைப்படுத்த வேண்டும். கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் முத்துக்குளம் என்ற ஊரில் வசிக்கும் எண்பத்தைந்து வயதாகும் தேவகி அம்மாள் தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கா் நிலத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளாக மரங்களை வளா்த்து சிறிய காடு ஒன்றினை ஊருவாக்கி பராமரித்து வருகிறாா்.

இவரது இந்த செயற்கரிய செயலுக்காக ஏற்கெனவே மத்திய அரசின் ‘இந்திரா பிரியதா்ஷினி விருக்ஷமித்ரா‘ விருதினை பெற்ற இவருக்கு, குடியரசு தலைவரால் ‘பெண் சக்தி‘ விருதும் அளிக்கப்பட்டுள்ளது. வாகனப்புகை, தொழிற்சாலைகளின் மாசு ஆகியவற்றால் சுற்றுச்சூழல் மாசடைந்து வரும் இக்காலகட்டத்தில் ஊருக்கு ஒரு தேவகி அம்மாள் உருவாக வேண்டியது அவசியம்.

மரம் வளா்ப்பது, காடுகளைப் பாதுகாப்பது ஆகியவை நமக்காகனவை மட்டும் என்று எண்ணாமல், நாளைய தலைமுறை வாழ நாம் ஆற்ற வேண்டிய கடமையும் ஆகும் என்பதை உணா்ந்து நாம் ஒவ்வொருவரும் நல்ல சுற்றுச்சூழல் மிக்க உலகிற்கான நமது பங்களிப்பை நல்கிட வேண்டும்.

 Read in source website

இந்திய சினிமா நூற்றிப் பத்து வயதை நெருங்கிவிட்டது. சுதந்திரத்துக்குப் பிந்தைய கடந்த 75 ஆண்டுகளில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாழ்க்கைச் சித்திரங்களும் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களும் பல மொழிகளில் வெளியாகியுள்ளன.

பெண்களுக்கு அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டிருந்த காலத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போர் புரிந்த ஜான்சி ராணி லட்சுமி பாயின் வீரத்தையும் தியாகத்தையும் வெகுஜனத் திரையில் பதிவுசெய்தது சோரப் மோடி இயக்கித் தயாரித்த ‘ஜான்சி கி ராணி’ (1953). 1958இல் வெளியான வங்க மொழிப் படம் ‘பாகா ஜதீன்’ மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஜதீந்திரநாத்தைப் பற்றியது.

தமிழ் சினிமாவின் பெருமிதம்

கறுப்பு-வெள்ளை காலத்தில் விடுதலை வேள்விக்கு தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஆளுமைகளைப் பற்றிய பல திரைப்படங்கள் தமிழில் வெளியாகின. காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராக தேசியவாத சிந்தனைகளுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவரான சிவாஜி கணேசன், இதுபோன்ற படங்களில் பெருவிருப்பத்துடன் நடித்தார்.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ (1959) திரைப்படத்தில் ஆங்கிலேயர்களை பகைத்துக்கொண்டதால் தூக்குமேடை ஏறிய பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மனுக்குத் திரையில் சிவாஜி புத்துயிர் அளித்தார். கட்டபொம்மனிடம் வரி கேட்கும் ஜாக்சன் துரையைப் பார்த்து ஆவேசமான குரலில் “எம்மோடு வயலுக்கு வந்தாயா நாற்று நட்டாயா..” என்று தொடங்கி அவர் பேசும் நெடிய வசனம், தமிழ் ரசிகர்கள் ஒவ்வொருவரின் மனத்திலும் ஆழமாகப் பதிந்த ஒன்று.

‘கப்பலோட்டிய தமிழன்’ (1961) திரைப்படத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உசிதம்பரனாரை கண்முன் நிறுத்தினார். தமிழகம் மறந்துவிட்ட ‘பெரும் தமிழர்' வ.உ.சியின் போராட்டம் ஓரளவுக்காவது பொது வெளியில் நினைவிருக்கிறது என்றால், அதற்கு இந்தத் திரைப்படமும் முக்கியக் காரணம்.

கவியரசர் கண்ணதாசன் தயாரித்த ‘சிவகெங்கை சீமை’ (1959), மருது சகோதரர்கள் என்றழைக்கப்படும் பெரிய மருது, சின்ன மருதுவின் தியாகத்தைப் பதிவுசெய்தது. இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்றறியப்படும் சிப்பாய்க் கலகத்துக்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களும் தியாகங்களும் தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டன என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகள் மருது சகோதர்களின் வரலாற்றில் இருக்கின்றன. அதை அனைவருக்கும் கொண்டுசேர்த்தது இந்தப் படைப்பு.

விருது வென்ற திரைப்படங்கள்

இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிராக ஆதிவாசிகளையும் விவசாயிகளையும் ஒன்றுதிரட்டி மறைந்திருந்து தாக்கும் கெரில்லாப் போரைக் கையிலெடுத்த பழங்குடித் தலைவர் அல்லூரி சீதாராம ராஜுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தெலுங்குப் படம் ‘அல்லூரி சீதாராம ராஜு’ (1976). கிருஷ்ணா நடித்திருந்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதுடன், நந்தி விருதையும் வென்றது.

கேத்தன் மேத்தா இயக்கிய ‘சர்தார்’ (1994), மகாத்மா காந்தியைத் தலைவராக ஏற்றுக்கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகப் பதவியேற்று இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபபாய் படேலின் வாழ்க்கையைப் பதிவுசெய்தது.

ஷியாம் பெனகல் இயக்கத்தில் வெளியான ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: தி ஃபர்காட்டன் ஹீரோ’ (2004) என்னும் இந்திப் படம், இந்தியாவுக்கு வெளியே இருந்தபடி இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைத்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போர் தொடுத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கைச் சித்திரம்.

தன்னுடைய புரட்சிகரக் கவிதைகளால் மக்கள் மனங்களில் விடுதலைக் கனலை மூட்டிய மகாகவி பாரதியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஞான. ராஜசேகரன் இயக்கிய ‘பாரதி’ (2000), சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதை வென்றது. ‘தி லெஜண்ட் ஆஃப் பகத் சிங்’ (2002) பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராக ஆயுதமேந்திப் போரிட்டு தூக்குதண்டனை பெற்ற புரட்சி வீரர் பகத் சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. ராஜ்குமார் சந்தோஷி இயக்கிய இந்தப் படத்தில் நடித்ததற்காக அஜய் தேவ்கன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.

கேத்தன் மேத்தா இயக்கத்தில் ஆமிர் கான் நாயகனாக நடித்திருந்த ‘மங்கள் பாண்டே: தி ரைஸிங்’ (2005), 1857இல் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிவந்த இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒன்றுதிரண்டு போரிட்ட சிப்பாய்க் கலகம் தொடங்குவதற்கு முக்கியப் பங்களிப்பைச் செலுத்திய மங்கள் பாண்டேயின் சாகசங்களை பதிவுசெய்தது. எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதிய ‘பழசிராஜா’ (2009), கிழக்கிந்திய கம்பெனி விதித்த அநியாய வரிக்கு எதிராக வெகுண்டெழுந்து போர் புரிந்த கோட்டயம் அரசர் கேரள வர்மா பழசிராஜாவைப் பற்றிய மலையாளப் படம்.

இதில் மம்முட்டி நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் நான்கு பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.

தவறவிடப்பட்ட வாய்ப்புகள்

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதிலுமிருந்து பொதுமக்களைத் திரட்டி அகிம்சை வழியிலான போராட்டத்தை வழிநடத்திய மகாத்மா காந்தியை தேசத் தந்தை என்று நாம் அழைத்தாலும், அவருடைய தன்னிகரற்ற வாழ்க்கையை திரைப்படமாகப் பதிவுசெய்த பெருமை ரிச்சர்ட் அட்டன்பரோ என்னும் ஆங்கிலேய இயக்குநருக்கே கிடைத்தது. பென் கிங்ஸ்லி காந்தியாக வாழ்ந்திருந்த ‘காந்தி’ (1982) எட்டு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றது.

கரோனா ஊரடங்குக் காலத்தில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ‘சர்தார் உதம்’, ஜலியான்வாலா பாக் படுகொலை நிகழ்வுக்கு காரணமாக இருந்த பிரிட்டிஷ் ஆளுநர் மைக்கேல் ஓ ட்வையரை லண்டனுக்குச் சென்று தலைமறைவாக வாழ்ந்து பழிதீர்த்த சோஷலிஸப் புரட்சியாளர் சர்தார் உதம் சிங்கை அனைவருக்கும் தெரியவைத்த சிறந்த வெகுஜனப் படைப்பு.

திரைப்படத் தொழில்நுட்பத்தின் அபரிமித வளர்ச்சிகளைச் சிறப்பாகப் பயன்படுத்தி 1919இல் பஞ்சாப் மாகாணத்தின் ஜலியான்வாலா பாக்கில் பல அப்பாவிகள் கொல்லப்பட்ட கொடூர நிகழ்வை நேரில் கண்டது போன்ற அதிர்ச்சியையும் வலியையும் உணரவைத்த திரைப்படம் இது. பிரிட்டிஷார் மீதான வெறுப்பை முன்வைக்கிறது என்று இந்திய அரசால் நியமிக்கப்பட்ட நடுவர் குழு கூறியதால், இந்தியாவின் அதிகாரபூர்வ பரிந்துரையாக இந்தப் படம் ஆஸ்கருக்கு அனுப்பப்படவில்லை.

சினிமாவில் போராட்ட நிகழ்வுகள்

சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை கதைக் கருவாகவோ சில காட்சிகளாகவோ பயன்படுத்திக்கொண்ட ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன: சிவாஜி கணேசன் நடித்த ‘ராஜபார்ட் ரங்கதுரை’ திரைப்படத்தில் ஒரு நாடகக் காட்சியில் கொடி காத்த குமரனின் தியாகத்தை நினைவூட்டினார்.

பிரியதர்ஷன் இயக்கிய ‘காலாபானி’/’சிறைச்சாலை’ (1996) அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரம் செறிந்த பின்னணியையும் சிறையில் அவர்கள் எதிர்கொண்ட கொடுமைகளையும் உயிர்ப்புடன் பதிவுசெய்தது. ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்’ (1996) திரைப்படத்தில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து போரிட்ட தமிழராக கமல் ஹாசன் நடித்திருந்தார்.

இந்திய தேசிய ராணுவத்தினருடன் நேதாஜி இருப்பது போன்ற நிஜக் காணொளித் துணுக்குகள் படத்தில் இடம்பெற்றன. ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஆமிர் கான் நடித்த ‘ரங் தே பஸந்தி’ (2006) திரைப்படத்தில் பகத்சிங் உள்ளிட்ட புரட்சிப் படையினரின் தியாக நிகழ்வுகள் காட்சிகளாக இடம்பெற்றன

இன்னும் பல இந்தியத் திரைப்படங்கள் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றையும் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளையும் பதிவுசெய்துள்ளன. இன்னும் அறியப்படாத பல தியாகிகளும் சொல்ல விடுபட்ட நிகழ்வுகளும் திரைப்படமாக்கப்படாமல் இருக்கின்றன.

இன்றைய இளம் இயக்குநர்கள் இது போன்ற திரைப்படங்களை படைக்க முன்வர வேண்டும். அவற்றின் மூலம் சுதந்திரப் போராட்டத்தின் மகத்துவத்தை இன்னும் பலர் உணர்ந்து, பொறுப்புள்ள குடிமக்களாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகரிக்கும். படைப்பாளிகள் நாட்டுக்கு ஆற்றும் சிறந்த பங்களிப்பாகவும் அது அமையக்கூடும்.Read in source website

படித்தவர்கள் நிறைந்த, செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்த அருணா, கொல்கத்தாவில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான ஆசஃப் அலியைச் சந்தித்தார்.

19 வயதில், தன்னைவிட 21 வயது மூத்தவரான ஆசஃப் அலியை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அருணா திருமணம் செய்துகொண்டார். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக இறங்கியவர், உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் சிறை சென்றார். இவருக்குப் பிணை வழங்க ஆங்கிலேய அரசு மறுத்தது.

1931ஆம் ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தப்படி அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டபோதும், அருணா விடுவிக்கப்படவில்லை. இந்தச் செயல் ஆங்கிலேய அரசுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தியது. அருணாவின் விடுதலைக்காகச் சிறையிலிருந்த பெண்கள் போராட்டம் நடத்தினர்.

காந்தியும் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, அருணாவை வெளியே கொண்டுவந்தார். ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அருணா, கைதிகளை மோசமாக நடத்தியதை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாகச் சிறையில் கைதிகளை நடத்தும் விதம் மேம்பட்டது.

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அருணாவின் போராட்டம் இன்னும் தீவிரமடைந்தது. 1942ஆம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன், முக்கியத் தலைவர்களைக் கைதுசெய்து, ஆங்கிலேய அரசு சிறையிலடைத்தது. 33 வயது அருணா, மும்பையில் உள்ள கோவாலியா மைதானத்தில் இந்தியக் கொடியை ஏற்றிப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவி, ‘வெள்ளையனே வெளியேறு’ என்று மக்கள் உரக்க முழங்கினர். அருணாவைப் பிடித்துக் கொடுத்தால், சன்மானம் வழங்குவதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது.

வெற்றிகரமாகத் தப்பிச் சென்ற அருணா, தலைமறைவு வாழ்க்கையில் ஆங்கிலேயே அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்.

'இன்குலாப்' என்ற பத்திரிகையைக் கொண்டுவந்தார். வானொலியில் உரையாற்றினார். சோசலிச தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா, எடதாதா நாராயணன் ஆகியோருடன் பழகும் வாய்ப்பு அருணாவுக்குக் கிடைத்தது. அருணாவின் உடல்நிலையைக் காரணம் காட்டி, தலைமறைவு வாழ்க்கையிலிருந்து வெளிவரச் சொன்னார் காந்தி.

நாட்டு விடுதலைக்குப் பிறகு பெண்கள் முன்னேற்றம், தொழிலாளர் நலன் ஆகியவற்றில் அருணா கவனம் செலுத்தினார். 1958ஆம் ஆண்டு டெல்லியின் முதல் மேயராகப் பொறுப்பேற்றார்.

விரைவிலேயே அந்தப் பொறுப்பைத் துறந்து, சமூக மாற்றத்துக்கான பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். 1964ஆம் ஆண்டு சர்வதேச லெனின் அமைதி விருதைப் பெற்றார்.

- ஸ்நேகாRead in source website

‘இந்த இசை அரசிக்கு முன்னால், நான் சாதாரண பிரதம மந்திரி’ என்றார் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு. உலகளாவிய சிம்மாசனத்தில் கர்னாடக இசையை அமர்த்திய பெருமைக்கு உரியவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

பாடலைப் பாடுவது என்பது வேறு, மனம் ஒன்றிப் பாடுவது என்பது வேறு. ஒன்றிப் பாடுவது என்பதில்தான் கலைஞனும் கலையும் இரண்டறக் கலக்கும் அதிசயம் நடக்கும்.

இந்த அதிசயமான உணர்வுக்கு வாழும் உதாரணமாக நம்முன் வாழ்ந்தவர் எம்.எஸ். அவரின் சமரசமில்லாத அர்ப்பணிப்பான சங்கீதம்தான், பிரதமரையும் பாமரனையும் ஒருங்கே ரசிக்க வைத்தது. அவர்களுக்கான இசை அரசியாக எம்.எஸ்.சுப்புலட்சுமியைக் கொண்டாட வைத்தது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி பத்து வயதிலேயே கிராமபோன் இசைத் தட்டில் பாடி சாதனை படைத்தார். இசை உலகில் உயரிய கௌரவமான மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதைப் பெற்ற முதல் பெண் கலைஞர் என்னும் புகழும் இவருக்கு உண்டு.

ஐக்கிய நாடுகள் அவையிலும், எடின்பரோ இசை விழாவிலும் பாராட்டப்பட்டவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. தன்னுடைய அசாத்தியமான பாடாந்திரத்தால் அதுவரை ஆண்களுக்கான மேடையாகவே அறியப்பட்ட கர்னாடக இசையின் புகழ் மிக்க மேடைகளை அடைந்ததோடு, கர்னாடக இசை அரசியாகவும் அவர் மாறினார்.

சாமானியக் குடும்பத்தில் பிறந்து சாதித்த அவருடைய வெற்றி, பல பெண்கள் அந்தத் துறையில் நுழைவதற்குக் காரணமாக அமைந்தது. மிகச் சிறந்த கலைஞராக இருந்தது மட்டுமின்றி மிகச் சிறந்த மனிதநேயராக, எளிய மக்களின் நலனுக்கான சேவையில் தன்னுடைய இசையைப் பயன்படுத்தியவராக தனித்தன்மையுடன் திகழ்ந்தார்.

- யுகன்Read in source website

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மதராஸ் மாகாணத்தில் இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, ராயலசீமா, தட்சிண கன்னடா, பெல்லாரி, உடுப்பி, கேரளத்தின் மலபார் பகுதிகள், லட்சத்தீவு போன்ற பகுதிகள் இடம்பெற்றிருந்தன. மதராஸ் மாகாணத்தின் தலைநகராக இன்றைய சென்னையும், கோடைக்காலத் தலைநகராக உதகமண்டலமும் இருந்தன.

நாடு சுதந்திரமடைந்த பிறகு சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டு, அரசமைப்புச் சட்டத்தின்படி மாநிலங்கள் உருவாகின. அதன்படி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த மதராஸ் மாகாணம் (Madras Presidency), மதராஸ் மாநிலமாக (Madras state) 1950இல் மாறியது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள் எழத் தொடங்கின.

மதராஸ் மாநிலத்திலிருந்து ஆந்திராவைப் பிரிக்க வேண்டும் என்று சுதந்திரப் போராட்டத் தியாகி பொட்டி ராமுலு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர்த் துறந்தார். இதன் தொடர்ச்சியாகத் தெலுங்கு பேசும் பகுதிகளில் பெரும் போராட்டங்களும் கலவரங்களும் நடைபெற்றன.

இதையடுத்து மதராஸ் மாநிலத்திலிருந்து ஆந்திராவைப் பிரிக்க மத்திய அரசு முடிவுசெய்து, 1953ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. அதேவேளையில் பல்வேறு மாநிலங்களில் எழுந்த மொழிவாரி மாநிலப் பிரிப்புக் கோரிக்கையை ஏற்று பிரதமர் நேரு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதன் தொடர்ச்சியாக மாநில மறுசீரமைப்பு ஆணையமும் அமைக்கப்பட்டது. அதன்படி மதராஸ் மாநிலத்திலிருந்து மலபார் பகுதிகள் பிரிக்கப்பட்டு 1956இல் கேரள மாநிலம் உருவானது. இதேபோல மதராஸ் மாநிலத்திலிருந்து கன்னடப் பகுதிகள் பிரிக்கப்பட்டு மைசூர் மாநிலமும் உருவானது.

மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது கன்னியாகுமரி, செங்கோட்டை போன்ற பகுதிகள் மதராஸ் மாநிலத்தில் இணைக்கப்பட்டன.

- மிதுRead in source website