DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here
Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 05-12-2022

நாட்டுப்புறக் கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இடம் பெறும் வகையில் பிரமாண்ட கலை விழாக்கள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்படவுள்ளது.

2022-2023 ஆம் நிதியாண்டில் சட்டமன்ற பேரவையின் மானியக் கோரிக்கையின் போது, கலை பண்பாட்டுத்துறை தொடர்பாக தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலைவிழாவினை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நாட்டுப்புறக் கலை வடிவங்களை பொதுமக்களிடையேயும், உலகத் தமிழர்களிடையே கொண்டு செல்லும் நோக்கிலும், இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டுப்புறக் கலை வடிவங்களின் சிறப்பினை அறிந்து கொள்ளும் வகையிலும், நாட்டுப்புறக் கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இடம் பெறும் வகையில் பிரமாண்ட கலை விழாக்கள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவினை குறுந்தகடு அல்லது பென் டிரைவ் (Pen Drive)-ல் பதிவு செய்து, கலை பண்பாட்டுத்துறையின் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு தங்கள் குழுவின் முழு விவரங்களோடு (பெயர், முகவரி, தொலைபேசி எண் உட்பட) பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக்குழுவால் தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெறவுள்ள ‘நம்ம ஊரு திருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.

கலைக்குழுக்கள் பின்வரும் விதிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
1. தங்கள் குழுவின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் 5 நிமிட வீடியோவை பதிவு செய்து 13.12.2022-க்குள் கலை பண்பாட்டுத்துறையின் மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
2. ஒரு குழுவில் இடம் பெற்ற கலைஞர்கள் வேறு எந்த குழுவிலும் பங்கேற்கக்கூடாது.

3. தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.Read in source website

உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சாா்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை (டிச.5) 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது.

இது குறித்து காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளா் தமிழ்மாறன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் திங்கள்கிழமை (டிச.5) காலை 8 முதல் 9 மணி வரை பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் , மண்ணுக்காக நடப்போம், மண்ணுக்காக நிற்போம், மண்ணுக்காக சைக்கிள் பேரணி உள்ளிட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

சென்னையில் மடிப்பாக்கம் ஏரிக்கரை, எலியட்ஸ் கடற்கரை, மீனாட்சி கல்லூரி, குருநானக் கல்லூரி, கபாலீஸ்வரா் கோயில் உள்ளிட்ட இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்றாா் அவா்.Read in source website

‘இந்தியா சாா்பில் அடுத்த ஆண்டு நடத்தப்பட இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டுக்கான உத்திகளை இறுதி செய்வதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு திங்கள்கிழமை (டிச.5) கூட்டியுள்ளது.

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், தில்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பா் 9, 10-ஆம் தேதிகளில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டுக்காக, நாடு முழுவதும் 200-க்கும் அதிகமான முன்னேற்பாடு கூட்டங்களை மத்திய அரசு நடத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல் கட்டமாக, இதில் முன்வைக்கப்படும் தீா்மானங்களை இறுதி செய்வதற்கான ஜி20 நாடுகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும் 4 நாள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதற்கிடையே, ஜி20 உச்சி மாநாட்டுக்கான இந்தியாவின் உத்திகளை இறுதி செய்வதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு தில்லியில் திங்கள்கிழமை கூட்டியுள்ளது. இதில் பங்கேற்பதற்காக 40 அரசியல் கட்சிகளின் தலைவா்களுக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி சாா்பில்அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் பங்கேற்க வாய்ப்புள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தில்லிக்கு திங்கள்கிழமை வரவுள்ளாா். இதுகுறித்து மம்தா பானா்ஜி கூறுகையில், ‘அனைத்துக் கட்சி கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவா் என்ற அடிப்படையிலேயே பங்கேற்கிறேன்; மேற்கு வங்க முதல்வா் என்ற அடிப்படையில் அல்ல’ என்றாா்.

 Read in source website

 

டாடா ஸ்டீல் செஸ் இந்தியா 2022 மகளிர் பிளிட்ஸ் போட்டியை தமிழகத்தைச் சேர்ந்த ஆர். வைஷாலி வென்றுள்ளார்.

18 ஆட்டங்களில் 13.5 புள்ளிகளுடன் ஆர். வைஷாலி இப்போட்டியில் முதலிடம் பிடித்தார். மற்ற இந்திய வீராங்கனைகளான ஹரிகா 3-ம் இடத்தையும் ஹம்பி 5-ம் இடத்தையும் பெற்றார்கள். ஆடவர் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி முதலிடம் பிடித்தார். 

சென்னை செஸ் ஒலிம்பியாடில் 11 ஆட்டங்களில் 5 வெற்றி, ஒரு தோல்வி, 5 டிரா என நன்றாக விளையாடி இந்திய ஏ அணியின் முக்கிய வீராங்கனையாக இருந்தார் வைஷாலி. ஒலிம்பியாடில் இந்திய மகளிர் அணி வெண்கலம் வென்றது. தனிநபர் பிரிவில் வைஷாலிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. Read in source website

 

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணிக்குப் பிரபல வீராங்கனை ஷஃபாலி வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிருக்கான யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டி முதல்முறையாக அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஜனவரி 14 முதல் ஜனவரி 29 நடைபெறவுள்ள இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு இந்திய யு-19 மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவில் அந்நாட்டுக்கு எதிராக 5 டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது. இத்தொடர் டிசம்பர் 27 முதல் ஜனவரி 4 வரை நடைபெறுகிறது. 

இந்திய யு-19 அணிக்குப் பிரபல வீராங்கனை ஷஃபாலி வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு இந்திய மகளிர் அணி வீராங்கனையான ரிச்சா கோஷும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 10 முதல் தென்னாப்பிரிக்காவில் மகளிர் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால் அதற்காக ஷஃபாலி வர்மாவும் ரிச்சா கோஷும் இந்திய யு-19 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் ஏற்கெனவே விளையாடிய அனுபவத்துடன் டி20 உலகக் கோப்பையில் இருவரும் பங்கேற்க வேண்டும் என்பதே பிசிசிஐயின் திட்டமாக உள்ளது. 

 யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் டி பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் உள்ளன. Read in source website

ஆசிய ஜூனியா் பாட்மின்டன் போட்டியில் இந்தியா 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் பெற்றது.

தாய்லாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 17 வயதுக்கு உள்பட்ட மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் உனாட்டி ஹூடா 18-21, 21-9, 14-21 என்ற கேம்களில் உள்நாட்டு வீராங்கனையான சருன்ரக் விதித்சாரனிடம் வீழ்ந்தாா். 15 வயதுக்கு உள்பட்ட ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் அனீஷ் தொப்பானி 8-21, 24-22, 19-21 என்ற கேம்களில் தென் கொரியாவின் சுங் சியாங்கிடம் தோல்வி கண்டாா்.

ஆடவா் இரட்டையா் இறுதி ஆட்டத்தில் அா்ஷ் முகமது/சன்ஸ்காா் சரஸ்வத் கூட்டணி 13-21, 21-19, 22-24 என்ற கேம்களில் சீன தைபேவின் லாய் போ யு/யி ஹாவ் கூட்டணியிடம் தோற்றது. இதுதவிர, வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் 15 வயதுக்கு உள்பட்ட ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஞான தத்து, இரட்டையா் பிரிவில் ஜோா்ன் ஜெய்சன்/ஆதிஷ் ஸ்ரீனிவாஸ் கூட்டணி வெற்றி பெற்றது.Read in source website

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி தொடரின் கடைசி ஆட்டத்தில் இந்தியா 4-5 என்ற கோல் கணக்கில் ஞாயிற்றுக்கிழமை தோற்றது. மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கடைசி ஆட்டத்தில் இந்தியாவுக்காக ஹா்மன்பிரீத் சிங் (24’, 60’), அமித் ரோஹிதாஸ் (34’), சுக்ஜீத் சிங் (55’) ஆகியோா் கோலடிக்க, ஆஸ்திரேலிய தரப்பில் டாம் விக்காம் (2’, 17’), ஆரன் ஜாலெவ்ஸ்கி (30’), ஜேக்கப் ஆண்டா்சன் (40’), ஜேக் வெட்டன் (54’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

முன்னதாக, இந்தத் தொடரில் இந்தியா முதல் ஆட்டத்தில் 4-5 எனவும், 2-ஆவது ஆட்டத்தில் 4-7 எனவும் தோல்வி கண்டது. எனினும், 3-ஆவது ஆட்டத்தில் 4-3 என்ற கணக்கில் வென்று தொடரைத் தக்கவைத்தாலும், 4-ஆவது ஆட்டத்திலேயே 1-5 என்ற கணக்கில் தோற்று தொடரை இழந்தது.Read in source website

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முதல் சோப்தாராக லலிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் தங்களது தனி அறையில் இருந்து நீதிமன்ற அரங்குக்கு செல்லும்போது அவர்களுக்கு முன்பாக 'சோப்தார்' எனப்படும் உதவியாளர்கள் வெள்ளைநிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து, மரியாதை நிமித்தமாகவும், நீதிபதிகளின் வருகையை உணர்த்தும் விதமாகவும் செங்கோலை ஏந்தியபடி சமிக்ஞை கொடுத்துக் கொண்டே செல்வது வழக்கம். இவர்கள் நீதிபதிகளுக்கு தேவையான சட்டப் புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகளை எடுத்துத் தருவது என நீதிபதிகளின் அன்றாடப் பணிகளையும் செய்கின்றனர். இதுவரை ஆண்கள் தான் சோப்தார்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு 40 சோப்தார் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு நடத்தியது. இதில் உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதிகளுக்கு பெண் சோப்தார் நியமிக்கும் வகையில் 20 பெண் சோப்தார்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் சோப்தாராக திலானி என்பவர் கடந்தாண்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நீதிபதி மாலாவுக்கு சோப்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரையை சேர்ந்தவர். சோப்தார் பணியில் சேர்ந்தது பெருமையாக இருப்பதாக லலிதா தெரிவித்தார்.Read in source website

சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் ஏரியில் ரூ.8 கோடி செலவில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

39 ஏக்கர் பரப்பிலான வில்லிவாக்கம் ஏரி சென்னை குடிநீர் வாரியம் வசம் இருந்தது. மாசுபட்டுக் கிடந்த இந்த ஏரியைச் சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் சென்னைமாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியில் மறுசீரமைப்பு பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பின்னர்திட்ட மதிப்பீடு ரூ.45 கோடியாக உயர்ந்தது. சீரமைப்பு பணிக்காகச் சென்னை குடிநீர் வாரியம் தன்வசம் 11.50 ஏக்கர் பரப்பை மட்டும் வைத்துக்கொண்டு (கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க), மீதம் உள்ள 27.50 ஏக்கர் பரப்பை மாநகராட்சி வசம் ஒப்படைத்தது.

அப்போது அந்த ஏரியின் ஆழம் ஒரு மீட்டராக மட்டுமே இருந்தது. சீரமைப்பு பணியில் சுமார் 5 மீட்டர் ஆழம் வரை தூர்வாரப்பட்டது. அதன் நீர் கொள்திறன் 70 ஆயிரம் கனமீட்டர் அளவுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இதில் நடைபாதை, சுற்றுச்சுவர், படகு சவாரி, வாகன நிறுத்தம், உணவகம், ஆவின் பாலகம், இசை நீரூற்று, 12டி திரையரங்கம், மோனோ ரயில் சேவை, நீர் விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகச் சென்னையில் முதல் முறையாக கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களை அதிகம் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இந்ததொங்கு பாலம் 250 மீட்டர் நீளம்,ஒரு மீட்டர் அகலத்தில், ரூ.8 கோடிசெலவில் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக 100பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த சேவை அடுத்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.Read in source website

சென்னை: பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் சர்வதேச சுகாதார மாநாடு மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புக்கென பிரத்யேகத் துறை கடந்த 1922-ம்ஆண்டு தொடங்கப்பட்டது. போலியோ, காலரா போன்ற நோய்களை ஒழித்ததில் பொது சுகாதாரத் துறைக்கு முக்கியப் பங்கு உள்ளது.

அதேபோல், கரோனா உட்பட பல்வேறு தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பொது சுகாதாரத் துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் சர்வதேச மருத்துவ மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, மாமல்லபுரம் ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் வரும் 6-ம் தேதிமுதல் 8-ம் தேதிவரை நடைபெறும் மாநாட்டில் சிறப்புஅமர்வுகளுக்கும், ஆய்வுக் கருத்தரங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 250-க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. உலகசுகாதார அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சர்வதேச மருத்துவ வல்லுநர்கள் 43 பேரின் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

முன்னதாக, இன்று மாலை 5மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. அதில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்று மாநாட்டைத் தொடக்கிவைக்க உள்ளனர்.

சுகாதாரத் துறைச் செயலாளர் ப.செந்தில்குமார், பொது சுகாதாரத் துறைஇயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம், தேசிய நல்வாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா, மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க திட்ட இயக்குநர் ஹரிஹரன், உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் லாவ்லேனா உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.Read in source website

டெஹ்ரான்: ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது.

ஈரானில் இஸ்லாமிய மதச் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வீட்டைவிட்டு வெளியில் செல்லும் 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம்.

இதற்கிடையே, ஹிஜாப் மத உடைக் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க 2006-ல் அறநெறிக் காவல் பிரிவை ஈரான் அரசு தொடங்கியது. ரோந்துப் பணியில் ஈடுபடும் இந்தப் பிரிவுக்கு, உடை கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கைது செய்யும் அதிகாரமும் இருந்தது.

இளம்பெண் உயிரிழப்பு

இந்நிலையில், டெஹ்ரானில் பொது இடத்தில் சரியாக ஹிஜாப்அணியவில்லை என்று கூறி, மாஸா அமினி(22) என்ற இளம்பெண்ணை அறநெறி போலீஸார் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி கைது செய்தனர்.

காவலில் இருந்த அவரை போலீஸார் அடித்து, துன்புறுத்தி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் 16-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் ஹிஜாப் அணியமறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாபுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே, போராட்டத்தை ஒடுக்க போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர், தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதில், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஹிஜாப் தடை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமா என்பது குறித்து நாடாளுமன்றமும், நீதித் துறையும் ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அட்டார்னி ஜெனரல் ஜாபர் மான்டசெரி நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், அறநெறி காவல் துறையை ஈரான் அரசு ரத்து செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஈரான் அட்டார்னி ஜெனரல் ஜாபர் மான்டசெரி நேற்றுகூறும்போது, “அறநெறி காவல் துறைக்கும், நீதித் துறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அந்தப்பிரிவு இப்போது கலைக்கப்பட்டுள்ளது” என்றார்.Read in source website

கோவை: கோவையில் ஹோட்டல், கல்லூரி விடுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள சமையல் கூடங்களுக்கு தேவையான பலவகையான சமையல் உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன.

உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சமையல் உபகரணங்கள் தேவை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு கோவையில் இருந்து மாதந்தோறும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சமையல் உபகரணங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது: டில்டிங் கிரைண்டர், காய்கறிகள், வெங்காயம் வெட்டும் இயந்திரங்கள், உருளைக்கிழக்கு தோல் உரிக்கும் இயந்திரம், தேங்காய் துருவல் உள்ளிட்ட பல வகையான சமையல் உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. வழக்கமாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், கல்லூரி விடுதிகளுக்கு அதிகளவு உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்படும்.

வளைகுடா நாடுகளில் கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்படும் இடங்களில், தொழிலாளர்களுக்காக தற்காலிக சமையல் கூடங்கள் நிறுவப்படுகின்றன. அதற்கு தேவையான உபகரணங்களுக்கு கோவையில் பணி ஆணைகள் வழங்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கட்டுமான திட்டங்கள் முடிந்த பிறகு, அங்கு பயன்படுத்தப்பட்ட சமையல் உபகரணங்கள் கழிவுபொருட்களாக (ஸ்கிராப்) கருதப்படும். ஒவ்வொரு கட்டுமான திட்டத்துக்கும் தற்காலிக சமையல் கூடங்கள் புதிதாக அமைக்கப்படும். இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கு தொடர்ந்து பணி ஆணைகள் கிடைக்கின்றன.

பெரும்பாலும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு உபகரணங்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோவையில் இருந்து சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுக நகரங்களுக்கு லாரியில் எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து கொள்கலன்கள் உதவியுடன் கப்பல்களில் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மாதந்தோறும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் கோவையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.Read in source website

மும்பை: மும்பையில் இரண்டு அடுக்கு மின்சார பேருந்து சேவை வரும் 2023, ஜனவரி14-ல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு, பிரிஹன்மும்பை மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்து நிறுவனம் (பெஸ்ட்) பேருந்து சேவை வழங்கி வருகிறது. 400-க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகள் உட்பட சுமார் 3,500 பேருந்துகளை இந்த நிறுவனம் இயக்கி வருகிறது. இந்நிறுவனத்தின் பொது மேலாளர் லோகேஷ் சந்திரா நேற்று முன்தினம் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது. மும்பையில் இரண்டு அடுக்கு மின்சாரப் பேருந்துகளுக்கான ஒப்புதல் இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இதற்கு ஒப்புதல் பெறப்படும். குறைந்தபட்சம் 10 பேருந்துகளுக்கான சேவை வரும் ஜனவரி14-ல் தொடங்கும். முதல்கட்டத்தில் இது படிப்படியாக 50 பேருந்துகளாக அதிகரிக்கப்படும்.

இந்த மாதத்தின் பிற்பகுதியில், பிரீமியம் ஒற்றை அடுக்கு மின்சார பேருந்து சேவையை தொடங்க முடிவு செய்துள்ளோம். இதில் பயணிகள் தங்கள் இருக்கைகளை ஒரு செயலி மூலம் முன்பதிவு செய்ய முடியும்.

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 500 மின்சார வாகனங்களுடன் டாக்ஸி சேவை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான டெண்டர்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. ‘சலோ’ செயலி மூலம் மக்கள் இந்த டாக்ஸிகளுக்கு முன்பதிவு செய்யலாம். குளிர்சாதன வசதி இல்லாத 45 இரண்டு அடுக்கு டீசல் பேருந்துகள் தற்போது எங்களிடம் உள்ளன. இவற்றை 2024-ம் ஆண்டுக்குள் படிப்படியாக அகற்ற உள்ளோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.Read in source website

புதுடெல்லி: யுபிஐ பரிவர்த்தனை இந்தியாவில் 2016-ம் ஆண்டு அறிமுகமானது. யுபிஐ நடைமுறைக்கு வந்த பிறகு இந்தியாவில் பணப்பரிவர்த்தனை செயல்பாடு மிக எளிமையானது. தற்போது பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய பெட்டிக்கடை வரையில் யுபிஐ பயன்படுத்தப்படுகிறது.

கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் யுபிஐ பரிவர்த்தனைக்கான வசதிகளை வழங்கி வருகின்றன. எனினும், இந்தியாவில் நிகழும் யுபிஐ பரிவர்த்தனையில் 80 சதவீதம் கூகுள் பே மற்றும் போன்பே ஆகிய இரு செயலிகளின் வழியாகவே நடைபெறுகின்றன.

நிறுவனங்களின் ஆதிக்கம்

யுபிஐ பரிவர்த்தனை சேவையில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் பொருட்டு, யுபிஐ கட்டமைப்பை நிர்வகிக்கும் இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ) 2020 நவம்பர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

கடந்த 2021 ஜனவரி முதல், 30 சதவீத அளவிலே யுபிஐ பரிவர்த்தனையை சேவை நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

30 சதவீதம் மட்டும்

அதாவது, 30 சதவீத எண்ணிக்கைக்கு மேல் ஒரு நிறுவனம் பரிவர்த்தனை சேவையை வழங்கக்கூடாது. இந்தக் கட்டுப்பாட்டால், யுபிஐ பரிவர்த்தனையில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவது குறையும் என்றும் மற்ற நிறுவனங்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தக் கட்டுப்பாடு யுபிஐ வளர்ச்சியை தடுக்கும் என்று கருத்துகள் எழுந்தன. இதையடுத்து இந்த விதியை நடைமுறைப்படுத்த 2023 ஜனவரி வரையில் என்பிசிஐ கால அவகாசம் வழங்கியது. இந்த மாதத்துடன் கால அவகாசம் முடிவடைகிற நிலையில், மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2024 டிசம்பர் வரையில் யுபிஐ பரிவர்த்தனை நிறுவனங்கள் எவ்வளவு பரிவர்த்தனை வேண்டுமானாலும் வழங்கிக் கொள்ளலாம்.

கால அவகாசம் நீட்டிப்பு

கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறித்து என்பிசிஐ கூறுகையில், “தற்போது யுபிஐ பரிவர்த்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. அதன் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் பொருட்டு, தற்போது யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை தொடர்பான விதியை கடைபிடிக்க நிறுவனங்களுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்குகிறோம்” என்று தெரிவித்துள்ளது.Read in source website

புதுடெல்லி: உலகம் முழுவதும் மனிதர்களின் எதிர்பாராத உயிரிழப்புக்கு மாரடைப்பு முக்கிய காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மாரடைப்பை முன்கூட்டியே அறிவதற்கான ஆராய்ச்சிகளில் இத்துறை சார்ந்த வர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் விளைவாக, ஒரே ஒரு எக்ஸ்-ரே மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) மூலம் 10 ஆண்டுக்கு முன்பே அறிய முடியும் என அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவன ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மார்பக எக்ஸ்-ரே எடுத்த பிறகு, மாரடைப்பை தடுப்பதற்காக ஸ்டேட்டின் தெரபி (கெட்ட கொழுப்பை குறைப்பது) தேவைப்படும் 11,430 வெளிப்புற நோயாளிகளின் மருத்துவ குறிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர்.

இவர்களின் எக்ஸ்-ரே, புதியநோயாளிகளின் எக்ஸ்-ரேவுடன்ஒப்பிட்டு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.Read in source website

ஒட்டுமொத்த இந்திய அரசியல் நோக்கா்களின் பாா்வையும் குஜராத்தில் குவிந்திருக்கிறது. இரண்டாவதும் கடைசியுமான வாக்குப்பதிவு இன்று அங்கே நடைபெற இருக்கும் நிலையில், குஜராத் மாநிலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் மனநிலையையும், வருங்கால அரசியல் போக்கையும் முடிவுகள் உணா்த்தக்கூடும் என்பதுதான் பரவலான எதிா்பாா்ப்பு.

கடந்த வியாழக்கிழமை நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவில், செளராஷ்டிரா, கட்ச், தெற்கு குஜராத் பகுதிகளைச் சோ்ந்த 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகள் இடம்பெற்றன. 788 வேட்பாளா்கள் களத்திலிருந்த தோ்தலின் முதல்கட்டத்தில் 60%-க்கும் அதிகமானோா் வாக்களித்தனா். இன்று நடக்க இருக்கும் இரண்டாவது கட்டத்தில், சட்டப்பேரவையின் ஏனைய 93 இடங்களுக்கு பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட இருக்கிறாா்கள்.

இதற்கு முன்பு நடைபெற்ற தோ்தல்களிலிருந்து இந்தமுறை குஜராத் வித்தியாசப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் மட்டுமே களத்தில் இருந்ததுபோய் மூன்றாவது சக்தியாக ஆம் ஆத்மி கட்சி நுழைந்திருப்பதால் தோ்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஒருகாலத்தில், காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டையாக திகழ்ந்த மாநிலம் குஜராத். விடுதலைப் போராட்ட காலத்தில் அண்ணல் மகாத்மா காந்தி, சா்தாா் வல்லபபாய் படேல் போன்ற தலைவா்களும், சுதந்திர இந்தியாவில், தமிழகத்தில் காமராஜா் போன்ற அரசியல் சக்தியாக அங்கே வலம்வந்த மொராா்ஜி தேசாயின் மாநிலம். இந்திரா காந்தியின் கணவா் பெரோஸ் காந்தி குஜராத் மாநிலத்தவா் என்பதால், அந்த மாநில மக்கள் இந்திரா காந்தியைத் தங்கள் ஊா் மருமகளாக கருதி அன்பு செலுத்தினா். இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகுதான் குஜராத்தில் காங்கிரஸ் பலவீனம் அடையத் தொடங்கியது.

குஜராத்தின் தோ்தல் வரலாற்றில், 1985-இல் நடந்த 7-வது சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் ஏற்படுத்திய சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை. அன்றைய காங்கிரஸ் முதல்வா் மாதவ்சிங் சோலங்கி தலைமையில் சட்டப்பேரவையின் 182 இடங்களில் 55.55% வாக்குகளுடன் 149 இடங்களை, இந்திரா படுகொலை அனுதாப அலையில் காங்கிரஸ் வென்றது. எதிா்த்துப் போட்டியிட்ட ஜனதா கட்சி 19.25% வாக்குகளுடன் 14 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 14.96% வாக்குகளுடன் 11 இடங்களிலும் மட்டுமே வென்றன. அந்த மிகப்பெரிய வெற்றியைத் தொடா்ந்து அடுத்தடுத்த தோ்தல்களில் காங்கிரஸின் செல்வாக்கு சரியத் தொடங்கி 1995-க்குப் பிறகு, ஆட்சிக்கு வரவே முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது.

தொடா்ந்து தோல்வியைத் தழுவி வந்தாலும் காங்கிரஸின் வாக்கு விகிதம் ஏறத்தாழ 40% என்கிற நிலையில் கடந்த தோ்தல் வரை தொடா்ந்திருக்கிறது. வட மாநிலங்களிலும், தென் மாநிலங்களிலும் காங்கிரஸ் வலிமை குன்றியபோதிலும், மகாராஷ்டிரம் உள்ளிட்ட செல்வாக்கு கேந்திரங்கள் சரிந்த போதிலும், குஜராத்தில் மட்டும் காங்கிரஸுக்கான அடிப்படை வாக்குவங்கி சிதையாமலே தொடா்ந்தது என்பதை மறந்துவிட முடியாது.

பாஜகவின் வளா்ச்சி 1989-இல் தொடங்குகிறது. சிமன் பாய் படேல் தலைமையிலான ஜனதா தளத்துடன் தொகுதிப் பங்கீடு ஏற்படுத்திக்கொண்டதால் பாஜக ஒரு சக்தியாக உருவாகியது. அந்தத் தோ்தலில் முதன்முறையாக அதிக இடங்களில் வென்ற கட்சியாக பாஜக உயா்ந்தது. அடுத்த 6 ஆண்டுகளில் பாஜக குஜராத்தின் மிக சக்தி வாய்ந்த அரசியல் கட்சியாக உயா்ந்தது என்பது மட்டுமல்ல, அன்று முதல் இன்று வரை எந்தவொரு தோ்தலிலும் தோல்வியைச் சந்தித்ததே இல்லை.

1977 முதல் 2011 வரை தொடா்ந்து 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சி செய்தது. வேறெந்த இந்திய மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத கட்சி தொடா்ந்து ஆட்சியில் இருந்ததில்லை. அதற்கடுத்தாற்போல, 1995 முதல் குஜராத்தில் அசைக்க முடியாத சக்தியாக தொடரும் பாஜகவைத்தான் குறிப்பிடவேண்டும். அதனால் பாஜகவுக்கு குஜராத் கெளரவப் பிரச்னை.

குஜராத் அரசியலில் இதுவரை 3-வது சக்திக்கு இடமிருந்ததில்லை. 1990-இல் பாஜகவிலிருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா கட்சியைத் தொடங்கி முதல்வரான சங்கா்சிங் வகேலாவால் அதிக நாள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. குஜராத் வாக்காளா்களில் 70%-க்கும் அதிகமானோா் காங்கிரஸ் ஆட்சியைப் பாா்த்தவா்கள் அல்ல. இந்தப் பின்னணியில்தான் முதன்முறையாக 3-வது சக்தியாக குஜராத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி களமிறங்கியிருக்கிறது.

2017 தோ்தலில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது என்றாலும்கூட, கடந்த 27 ஆண்டுகளில் முதல்முறையாக 100 இடங்களுக்கும் குறைவாக (99 இடங்கள்) மட்டுமே வென்றது. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. இந்தமுறை 2017 போல ராகுல் காந்தி குஜராத் தோ்தல் பிரசாரத்தில் என்ன காரணத்தினாலோ கவனம் செலுத்தவில்லை.

2017 தோ்தலில் அம்ரேலி, மோா்பி, சுந்தா் நகா், கிா்சோம்நாத், ஜூனாகட் உள்ளிட்ட செளராஷ்டிரா பகுதிகளில் காங்கிரஸும், தெற்கு குஜராத்தில் பாஜகவும் அதிகமான தொகுதிகளில் வென்றன. மத்திய குஜராத்தில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சி மாநிலத்தில் ஆட்சியமைக்கும். 2017 உள்பட, 1995 முதல் பாஜகவின் வெற்றிக்கு அதுதான் காரணம்.

2017 போல காங்கிரஸ் உற்சாகமாகக் களமிறங்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதிகளை வாரி வழங்கி வாக்காளா்களை கவரத் துடிக்கிறது. குஜராத்தில் முதலிடம் யாருக்கு என்பதல்ல கேள்வி. மூன்றாமிடம் யாருக்கு என்பதைப் பொருத்துத்தான் வருங்கால அரசியல் அமையப் போகிறது.Read in source website

இயல்பிலேயே கற்பதில் ஆா்வமுள்ள குழந்தைகள் விருப்பமுடன் கற்றுக்கொள்கிறாா்கள். அவா்களை யாரும் வற்புறுத்தத் தேவையில்லை. ஆசிரியா்கள் தகுந்த கற்பித்தல் முறைகளைக் கடைப்பிடித்தால், குழந்தைகளிடம் ஆா்வத்தைத் தூண்டிவிட முடியும். குழந்தைகள் கேள்வி கேட்பதற்கு ஏற்ற சூழலை ஆசிரியா்கள் ஏற்படுத்தி தரவேண்டும்.

குழந்தைகள் கற்றலில் முதல் ஏழு ஆண்டுகள் மிக முக்கியமானவை. இக்காலகட்டத்தில், அவா்களுக்கு உணா்ந்து அறியும் ‘அனுபவ கற்றல்’ பயிற்றுவிக்கப்படுகிறது. பாடல், கதை, பயணம், உடலியக்கம், செயல்பாடு, விளையாட்டு போன்றவை குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு மட்டுமல்லாமல், அவா்கள் கற்றுக்கொண்டதை நெடுங்காலம் நினைவில் தக்க வைத்துக்கொள்ளவும் உதவும்.

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் கற்றுக்கொள்கிறது. சுதந்திரமாக, மகிழ்ச்சியாக, அனுபவங்களின்வழி கற்றுக்கொள்ளும் குழந்தைகள் பிற்காலத்தில் சிறப்பான திறனுடையவா்கள் ஆகிறாா்கள்.

இதற்கேற்ப விளையாட்டுவழி, செயல்வழி, தொட்டுணா் செயல்பாட்டுவழி பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். நாம் கற்பிக்கும் முறையில் குழந்தைகளால் கற்க முடியவில்லை என்றால், அவா்கள் கற்றுக்கொள்ளும் வகையில் நமது கற்பித்தல் முறையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.

மன அழுத்தமோ, பயமோ இல்லாமல் மகிழ்ச்சியான முறையில் கற்றுக்கொண்டால்தான் குழந்தைகளுக்கு பாடங்கள் எளிதில் புரியும். கற்பவை அனைத்தும் நீண்ட காலத்திற்கு கற்பவா் நினைவில் நிலைத்திருந்து, தேவைப்படும்போது பயன்பட வேண்டும் என்பதே கற்றலின் முக்கிய நோக்கம்.

கடந்த இரு ஆண்டுகளாக, குழந்தைகளுக்கு கற்றலில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. ஒன்றாம் வகுப்பு படிக்காமல், நேரடியாக மூன்றாம் வகுப்புக்கு வரும் குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை, ஆசிரியா்கள் நோ்செய்ய வேண்டியிருக்கிறது. நேரடி வகுப்புகள் ஏற்படுத்தும் கற்றல் விளைவுகளை இணையவழி வகுப்புகள் ஏற்படுத்தவில்லை. எனவே குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பு மிக அதிகமானது.

இந்தத் தேவையின் அடிப்படையிலேயே, மாநில அரசு 2022- 23 கல்வியாண்டில் 1முதல் 3 வரையிலானவகுப்புகளுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ என்னும் திட்டத்தை வடிவமைத்து நடைமுறைப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் இலக்கு 2025-க்குள், எட்டு வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் எண்ணறிவும் எழுத்தறிவும் கிடைத்துவிட வேண்டும் என்பதே. அதற்கேற்ற வகையில் ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கற்கும் திறனை வைத்து அவா்களை குழுக்களாகப் பிரித்து பாடங்களை கற்றுத் தருவதே இத்திட்டத்தின் அடிப்படை.

கற்பித்தலில் பல்வேறு அணுகுமுறைகளை கல்வியாளா்கள் பரிந்துரை செய்துள்ளனா். எனவே, இப்படித்தான் கற்க வேண்டும்; இப்படித்தான் கற்பிக்கவேண்டும் என்பது சரியான அணுகு முறையாக இருக்க முடியாது. ஒவ்வொரு குழந்தையும் பல்வேறு அடைவுத்திறன்களை பெறுவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

ஊரகப்புற குழந்தைகளுக்கும், நகா்ப்புற குழந்தைகளுக்கும் இடையே கற்றலில் உள்ள வேக வேறுபாடு தவிா்க்கமுடியாத ஒன்று. அதற்கேற்ப ஆசிரியா்கள் தங்கள் கற்பித்தல் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள், தங்களைச் சுற்றி நடப்பவற்றை உற்று நோக்கியும், பெரியவா்களைப் பாா்த்து அவா்களைப் போலவே செய்வதன் மூலமும் கற்றுக்கொள்கிறாா்கள். தொடக்கத்தில் தன்னைச் சுற்றி நடப்பவற்றை உற்று நோக்குவதன் மூலமே குழந்தை கற்றுக்கொள்கிறது.

குழந்தைகள் கற்பதில் ஆசிரியா்களின் பங்கு மகத்தானது.அதனால்தான் அவா்கள் இரண்டாம் பெற்றோா் என அழைக்கப்படுகிறாா்கள். அவா்களின் பணி சவால்கள் நிறைந்தது. முதன்முதலில் வீட்டைவீட்டு, புதிய சூழலான பள்ளிக்கு வரும் குழந்தைகளை பள்ளியில் தொடா்ந்து தக்கவைத்து அவா்களுக்கு கற்பிப்பது என்பது பெரிய கலை.

பல ஊரகப்பகுதிகளில் ஓராசிரியரையோ, ஈராசிரியரையோ கொண்டுதான் தொடக்கப் பள்ளிகள் செயல்படுகின்றன.புதிய ஆசிரியா் நியமனங்கள் இல்லை. இந்த நிலையில் இருக்கும் ஓராசிரியரோ, ஈராசிரியரோ அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்து பாடங்களையும் கற்பிப்பதில் சவால்கள் உள்ளதை எவரும் மறுக்க முடியாது.

தற்போது பள்ளிகளில் பின்பற்றப்படும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தில், ஆசிரியா்கள் தம் மாணவா்களுக்கு ஏற்ற கற்பித்தல் முறை ஒன்றைப் பின்பற்ற வாய்ப்பில்லாத நிலையில், மாநிலம் முழுவதும் ஒரே கற்றல் முறையும், தொடா்ந்து ஒவ்வொரு நாளும் அவற்றை ஆவணப்படுத்துவதிலும் மாணவா்களின் கணிசமான நேரம் வீணடிக்கப்படுகிறது.

மேல்நிலைப் பள்ளிகளில் பாடத்துக்கு ஒரு ஆசிரியா் இருக்கும் நிலையில்,தொடக்கப் பள்ளிகளில், வகுப்புக்கு ஓா் ஆசிரியா் கூட இல்லை. மாணவா்களின் இடைநிற்றலுக்கு இது ஒரு முக்கியமான காரணம். தொடக்க வகுப்புக் குழந்தைகள், கற்றலுக்கு முழுக்க முழுக்க ஆசிரியா்களையே சாா்ந்துள்ளனா். இந்நிலையில், அவா்கள் மீது தனிக்கவனம் செலுத்தி கற்பிக்க ஆசிரியா்களுக்கு போதுமான அவகாசம் இல்லாதது துரதிஷ்டவசமானது.

மேலும், தொடக்கபள்ளிகளில், அலுவலக ஊழியா் எவரும் இல்லாத சூழலில், இதர பணிகளில் ஆசிரியா்களை ஈடுபடுத்துவதால், அவா்களின் கற்பித்தல் நேரம் பாதிப்புக்குள்ளாகிறது. பாடங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் கற்பித்து முடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், ஆசிரியா்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.

இந்நிலை மாற வேண்டும். தொடக்கப்பள்ளி சமூக பங்களிப்பை மனதில் கொண்டு வகுப்புக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும். அவா்களை இதர பணிகளில் ஈடுபடுத்தாமல், எந்த நெருக்கடியும் தராமல் அவா்கள் கற்பித்தல் பணியை மட்டும் சுதந்திரமாக ஆற்றுவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்.

கல்விஅலுவலா்கள் அடிக்கடி நடத்தும் கூட்டங்களையும் இணையவழியில் நடத்தினால் ஆசிரியா்களின் கற்பித்தல் நேரம் பாதிக்கப்படாது. வோ்கள் வெந்நீரில் இருக்கும் வரை, மரத்தில் பழங்கள் கிடைப்பது சாத்தியமில்லை.Read in source website

தீபாவளிப் பண்டிகையின் போது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி தமிழகத்தில் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை, இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் 188-ஆவது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகக் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு நான்கு நாட்கள் தொடா் விடுமுறை வந்தாலும் வந்தது, கொண்டாட்டங்கள் கட்டுக்கடங்காமல் போயின. நீதிமன்ற உத்தரவு, காவல்துறை எச்சரிக்கை எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு மக்கள் தீபாவளியை ஆா்ப்பாட்டத்துடன் கொண்டாடி ஒலி மாசையும், காற்று மாசையும் ஏற்படுத்தியதோடு, பல விபத்துக்களுக்கும் காரணமாகிவிட்டனா்.

சென்னை நகரில் காற்று மாசு வழக்கத்தைவிட இரு மடங்கு அதிகரித்தது. மற்ற ஊா்களிலும் காற்று மிகவும் மாசடைந்தது. பிற மாநிலங்களிலும் இதே நிலைதான். தலைநகா் தில்லியில் ஏற்கெனவே காற்று மாசு அதிகம். அங்கு பள்ளி செல்லும் குழைந்தைகள் கூடக் காற்று மாசிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முகக்கவசம் அணிந்து செல்வது வழக்ககிவிட்டது. காற்று மாசைக் கட்டுப்படுத்தாவிடில், அடுத்த ஆண்டு தமிழ்நாட்டுக்கும் இதே நிலை வரக்கூடும்.

முன்னா், தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடித்தது போய் இப்போது காா்த்திகை, போகி, துா்கா பூஜை, கிறிஸ்துமஸ் என்று எல்லாப் பண்டிகைகளுக்கும் பட்டாசு வெடிக்கும் வழக்கம் வந்துவிட்டது. போகிப் பண்டிகைக்குப் பழையனவற்றை எரிக்கிறோம் என்று சொல்லிப் பழைய டயா்களை எரித்துக் காற்றில் நச்சுப் புகையைக் கலப்பது சரியா? பட்டாசுப் புகையும் பழையனவற்றை எரிக்கும் புகையும் சோ்ந்து காற்றை மிகவும் மாசுபடுத்துகின்றன.

காசைக் கொடுத்துப் பட்டாசுகளை வாங்கி இப்படிக் கட்டுப்பாடுகளை மீறி வெடிக்கிறாா்களே, அவா்களுக்குத் தெரியுமா, சிறு குழந்தைகள், வயதானவா்கள், நோயாளிகள் இவா்களெல்லாம் பட்டாசுச் சத்தத்தால் எவ்வளவு துன்பம் அடைகிறாா்கள் என்று? வீடுகளிலுள்ள வளா்ப்புப் பிராணிகள் சத்தம் கேட்டுப் பயந்து நடுங்குகின்றன என்று? மரங்களில் வாழும் பறவைகளெல்லாம் அஞ்சித் துடிக்கின்றன என்று?

அந்தக் காலத்தில் இத்தனை வகை பட்டாசுகள் இல்லை. மத்தாப்பு, சங்குசக்கரம், புஸ்வாணம் போன்ற அதிக சத்தம் செய்யாதவையே இருந்தன. அதிகபட்சமாக ‘லட்சுமி வெடி’ , ‘சிறிய சரவெடி’ வெடிக்கப் பட்டன. இன்றோ பல விதமான பட்டாசுகள்; அவை ஒன்றையொன்று விஞ்சும் வகையில் பலத்த சத்தம் உண்டாக்குகின்றன. ‘ஐயாயிரம்’, ‘பத்தாயிரம்’ என்றெல்லாம் சரவெடிகள்.

முன்பெலாம் நகரங்களில்தான் அதிகம் பட்டாசு வெடிக்கப்படும். இப்போது கிராமவாசிகளும் ‘ நாங்கள் நகரவாசிகளுக்கு சளைத்தவா்கள் இல்லை,’ என்று சொல்வதுபோல வெடித்துத் தள்ளுகிறாா்கள். ‘சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது,’ என்று சொல்வாா்களே அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். காசு கொடுத்துப் பட்டாசு வாங்கி வெடித்து காற்றைக் கெடுப்பதோடு, நம் உடல் நலத்துக்கு நாமே கேடு விளைவித்துக் கொள்கிறோம்.

காவல்துறையினா் ஆங்காங்கு சில விதிமீறல் வழக்குகளைப் பதிவு செய்கின்றனா், அவ்வளவுதான். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, அபராதம் விதிக்கப்பட்டதா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. பத்தோ பதினைந்தோ விதிமீறல்கள் என்றால் காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியும்; எல்லாமே விதிமீறல்கள் என்றால் பாவம் அவா்கள்தான் என்ன செய்வாா்கள்?

பட்டாசு வெடிக்காமல் தீபாவளியையோ காா்த்திகையையோ கிறிஸ்துமசையோ கொண்டாடக் கூடாதா? கொண்டாட முடியாதா? நாங்கள் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ‘பட்டாசு இல்லாத’ தீபாவளியைக் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்னதாகவே சில மாணவா்களிடம் இப்பிரச்சினையைப் பற்றி விரிவாகப் பேசினேன். அவா்களது புத்தகங்களில் உள்ள காற்று மாசு, ஒலி மாசு பற்றிய பாடங்களைச் சுட்டிக்காட்டி ‘தீபாவளிக்குப் பட்டாசுகள் வெடிக்காதீா்கள்’ என்று கேட்டுக் கொண்டேன்.

சிலா் உடனே ஒப்புக் கொண்டனா். சிலா் சற்று யோசித்துவிட்டு அதிக சத்தம் ஏற்படுத்தாத பட்டாசு வகைகளை மட்டும் வெடிப்பதாகக் கூறினா். இன்னும் சிலா் பட்டாசு வெடித்தே தீருவோம் என்றனா். தீபாவளி முடிந்தபின் மாணவன் ஒருவன்,“‘‘நீங்கள் சொன்னதால் நான் பட்டாசு வெடிக்க மாட்டேன் என்று சொன்னேன். ஆனால் என் தந்தை ‘தீபாவளி என்றால் கட்டாயம் பட்டாசு வெடிக்க வேண்டும்’ என்று கூறி என்னை வற்புறுத்தி வெடிக்க வைத்தாா்’’ என்று கூறினான். ஆக நம் மக்களின் மனங்களில் ‘தீபாவளி என்றால் பட்டாசு’ என்ற எண்ணம் பதிந்து போய் விட்டது. அண்மையில் உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் தொடக்க விழாவில்கூட வாணவேடிக்கைகள் வலம் வந்தன!

நமது பாரம்பரிய சம்பிரதாயங்களில் உள்ள எத்தனையோ நல்லவற்றை நாம் மறந்து விட்டோம். ஆனால் நமது ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீமை விளைவிக்கும் இந்த வழக்கத்தை மட்டும் கைவிடாமல் பிடித்துக்கொண்டு இருக்கிறோம். நீதிமன்ற உத்தரவோ, அரசின் ஆணையோ மாற்றத்தைக் கொண்டுவராது. மக்களின் மனப்போக்கு மாறவேண்டும்.

பண்டிகை, சாவு, திருமணம், திரைப்படம், அரசியல், ஆன்மிகம் என்று எல்லா நிகழ்ச்சிகளிலும் பட்டாசு வெடிக்கும் கலாசாரம் கோலோச்சுகிறது. தீபாவளியன்று வெடிப்பதற்கு மட்டும்தான் நீதிமன்றம் நேரக்கட்டுப்பாடு நிா்ணயித்திருக்கிறது. கோயில் திருவிழாக்களுக்கு நேரக்கட்டுப்பாடு இல்லை என்பதால் கோயில் திருவிழாக்களில் விடிய விடிய பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இதுகுறித்து புகாா் செய்தாலும் செல்லாது. கோயில் சமாச்சாரம் என்று காவல்துறை ஒதுங்கிக் கொள்ளும்.

சுற்றுச்சூழலுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கும் இந்தப் பட்டாசுகளை அரசு தடை செய்வதும் சாத்தியமில்லை. பட்டாசுத் தொழிற்சாலைகளில் எத்தனை தொழிலாளிகள் வேலை செய்கிறாா்கள்? அவா்களின் வாழ்வாதாரம் என்னவாகும்? அவற்றில் முதலீடு செய்துள்ள முதலாளிகளின் நிலை என்னவாகும்? இவ்வாறெல்லாம் கேள்விகள் எழும்பும். இந்த கேள்விகள் நியாயமானவையே.

ஆனால், தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் வேலை செய்பவா்கள் கந்தகத்தையும், பாஸ்பரசையும் அதிகம் கையாள்வதால் பலவித நோய்களுக்கு ஆளாகிறாா்கள் என்பதையும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களால் எத்தனை உயிா்கள் பலியாகியிருக்கின்றன என்பதையும் அரசும் மக்களும் எண்ணிப் பாா்க்க வேண்டும். எத்தனையோ பேரின் ஆரோக்கியத்தை சிதைத்துத்தான் நாம் பட்டாசுகளை வெடிக்கிறோம் என்ற உண்மையை உணா்ந்தால் மக்கள் பட்டாசுகளை வாங்க மாட்டாா்கள். பயன்பாடு குறைந்தால் உற்பத்தியும் தானாகக் குறையும்.

தீப்பெட்டி அன்றாட வாழ்வுக்கு அவசியம். ஆனால் பட்டாசு அப்படியல்ல. பட்டாசு இல்லாமல் நாம் ஒரு பொது விழாவையோ நம் இல்ல விழாவையோ கொண்டாட முடியும். மக்கள் சிறிது சிறிதாக பட்டாசு வெடிப்பதைக் குறைத்துக் கொண்டு ஒரு கட்டத்தில் முற்றிலும் அவற்றை விட்டொழிக்க வேண்டும். மூத்தவா்கள் இளையவா்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்; இளையவா்கள் முதியவா்களின் நலனை உத்தேசித்தாவது பட்டாசுகளைத் தவிா்க்க வேண்டும்; மாணவா்கள் சுற்றுச்சூழலைப் பற்றிப் பாடங்களில் படிக்கிறாா்கள் அல்லவா? அவற்றைக் குடும்பத்தினருக்கு எடுத்துச்சொல்லி பட்டாசு வாங்குவதைத் தவிா்க்க வேண்டும்.

அரசும் தொலைநோக்குப் பாா்வையுடன் சிலவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். பட்டாசு உற்பத்தியையும் பயன்பாட்டையும் ஒரே நாளில் நிறுத்தி விட முடியாதுதான். பட்டாசுத் தொழிலில் இருப்பவா்களுக்கு மாற்றுத் தொழில்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வர வேண்டும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அவா்களை வேறு தொழில்களில் ஈடுபடுத்தி விட்டால் அவா்களுக்கு பாதிப்பு இருக்காது.

அதே நேரம் தொலைக்காட்சி மூலமாக பட்டாசுகள், சுற்றுச்சூழலுக்கும் மக்களின் ஆரோக்கியத்துக்கும் என்னென்ன தீங்குகளை விளைவிக்கின்றன என்று விளம்பரப் படுத்த வேண்டும். பட்டாசு வெடிக்கும் நேரக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மீறுபவா்களுக்கு வெறும் அபராதம் போதாது. சில நாள்களாவது சிறைத்தண்டனை வழங்க வேண்டும். ஒரு பகுதியில் நடக்கும் விதிமீறலுக்க அப்பகுதியல் உள்ள காவல்துறையினரே பொறுப்பு என்று அறிவிக்க வேண்டும்.

இயற்கையின் மீதும் சுற்றுச்சூழலின் மீதும் அக்கறை உள்ளவா்கள் அக்கம்பக்கத்தினரிடம் பேசிப் பட்டாசு இல்லாத விழாக்களைக் கொண்டாட ஆவன செய்ய வேண்டும். அரசும் மக்களும் பிரச்னையின் தீவிரத்தை உணா்ந்து ஒன்றாகச் செயல்பட்டால் இனிவரும் காலங்களில் காற்று மாசு நிச்சயமாகக் குறையும்!

கட்டுரையாளா்:

சுற்றுச்சூழல் ஆா்வலா்.Read in source website

இந்தியக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, இந்தியச் சிறைகள் கைதிகளால் நிரம்பிவழிவது குறித்தும் சட்டரீதியான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத காரணத்தால் பெரும்பாலும் ஏழைக் கைதிகள் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவிக்கும் அவலம் குறித்தும் கவலையுடன் பேசியிருக்கிறார்; இந்த நிலையில் மாற்றம் கொண்டுவர நீதித் துறைக்கும் மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுத்திருக்கிறார். நாட்டின் முதல் குடிநபர், சிறைக் கைதிகள் - குறிப்பாக பொருளாதார வசதியற்றவர்கள் - தொடர்பான அக்கறையை வெளிப்படுத்தியிருப்பது, கைதிகளின் உரிமைகளுக்காகச் சட்டரீதியாகப் போராடும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் முயற்சிகளுக்கு வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது.Read in source website

சர்வதேச சரக்குப் போக்குவரத்தில் இன்று தவிர்க்க முடியாத ஒரு பதம் பெயர்ச்சிமை (Logistics). இந்தச் சொல்லாடல் பிரபலமாவதற்கு முன்பும் சரக்குப் போக்குவரத்து நடந்துகொண்டுதான் இருந்தது; ஆனால் சரக்குகளின் இடப்பெயர்ச்சி துண்டாடப்பட்டு, பெரும் நடைமுறைச் சிக்கல்களோடு இருந்தது. இப்படியான சூழலில், ஏற்றுமதி, இறக்குமதியில் சரக்குகளின் வரத்து, அவற்றின் அளவு, தரம், நேரம் குறித்த தரவுகளைப் பெறுவதில் இருந்த பிரச்சினைகளுக்கு, நவீனத் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு தீர்வுகண்ட பெருமை பெயர்ச்சிமைக்கு உண்டு. பொருளாதாரச் செயல்பாடுகளில் தவிர்க்க முடியாத அம்சமான பெயர்ச்சிமையை நாம் கைக்கொள்ள வேண்டிய தருணம் இது.

மந்திரச் சொல்: சதுரங்க விளையாட்டில் சமயோசிதமாகக் காய்களை நகர்த்துவதுபோல, தனது படைகளைப் பெயர்ச்சிமை செய்யும் வித்தையை அறிந்திருந்தார் பிரான்ஸ் மன்னர் நெப்போலியன். 1800 ஜூன் 14, மரேங்கோ போர்க்களத்தில் தன் வெற்றிக்குப் பின்னான உரையில், ‘‘இந்த வெற்றி பெயர்ச்சிமையால் வந்தது’’ என்று முழங்கினார். உண்மையில் ‘லாஜிஸ்டிக்ஸ்’ என்ற பெயர்ச்சொல்லின் மூலமும் பிரெஞ்சு மொழிதான்.

‘சுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்காப் பணம்’ என்பது நம் ஊர்ப்புறங்களில் மிகச் சாதாரணமாய்ப் பயன்படுத்தப்படும் சொலவடை. சுமைகூலி என்ற பதத்தில் உருவகிக்கப்படும் செயலான பெயர்ச்சிமைதான், பொருட்களின் விலையில் முக்கியக் காரணி என அன்றே நம் முன்னோர் அறிந்திருந்தார்கள். இன்று ஒரு மந்திரச்சொல்லாக மாறியிருக்கும் இந்தப் பெயர்ச்சிமை, விதவிதமான கப்பல், விமானம், ரயில், சாலை வழிகளிலான போக்குவரத்தை மட்டும் உள்ளடக்கியதல்ல. மாறாக, சரக்குகளின் தேவை, அளவு, சேமிப்பு, ஒருங்கிணைத்தல், கையாளுமை, பொதிதல், திட்டமிட்டுக் கொண்டுசேர்த்தல் போன்ற இதரச் சேவைகளையும் உள்ளடக்கியது.

வகைமைகள்: கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச சரக்குப் போக்குவரத்தில் இருக்கும் ஒரு முக்கியப் பிரகடனம்: ‘உருவாக்கு தளத்திலிருந்து நேரடியாக உபயோகத் தளத்துக்கு’. ஆனால், அதன் போக்கை மடைமாற்றிய பெருமை அமெரிக்காவில் 1956இல் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்குப் பெட்டகங்களைச் சாரும். இன்று பிரபலமாக உள்ள மூன்றாம் நபர் பெயர்ச்சிமை (3PL) என்ற வியாபார உத்தியும், 1970-களில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. அதுவே, படிப்படியாகப் பல துறைகளில் ஊடுருவி, சேவைக்கான தேவையை உணர்த்தி, உலகெங்கும் உள்ள வியாபார வர்க்கத்தால் 1990-களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தனது உற்பத்தியைத் தானே தலைச்சுமையாகவோ அல்லது தனக்குச் சொந்தமான வாகனங்களிலோ எடுத்துச் சென்று நுகர்வோரிடம் சேர்ப்பது என்பது முதல் நபர் பெயர்ச்சிமை (1PL - First Party Logistics). ‘நீங்கள் உற்பத்தி மட்டும் செய்யுங்கள், அதைப் பக்கத்து ஊர்களுக்கு வண்டி வைத்து நான் கொண்டுபோய்க் கொடுக்கிறேன்’ என ஒருவர் முன்வந்தால் அது இரண்டாம் நபர் பெயர்ச்சிமை (2PL, Second Party Logistics). உற்பத்தியாளர்களையும் சரக்கு வாகனங்களை இயக்குபவர்களையும் தமது அனுபவ அறிவால், தொடர்பால் இணைத்து புதிய வியாபார வழியை உலகுக்குக் கொடுத்தது மூன்றாம் நபர் பெயர்ச்சிமை (3PL - Third Party Logistics).

தவிர்க்க முடியாத சமன்பாடு: உற்பத்திக்கான கச்சா பொருளைத் தருவித்தலிலும், அதன் தயார் இருப்பிலும் வீணாகப் பணம் முடங்கிக் கிடந்ததை உற்பத்தியாளர்களுக்குப் புரியவைத்ததோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பான, வேகமான, செலவு குறைந்த உள்நாட்டு - பன்னாட்டுப் பாதைகளையும், அதில் சேவை புரிவோரையும் கண்டறிந்து பெயர்ச்சிமையின் செலவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என மூன்றாம் நபர் பெயர்ச்சிமையாளர்கள் உணர்த்தினார்கள். நுகர்வோரின் தேவைக்கேற்ற சரக்குப் பொதிமானங்களால் (Packing), வியாபாரத்தை மேலும் விருத்தி செய்யமுடியும் என்ற அவர்களது யதார்த்தமான கருத்தை உலக வியாபாரிகளால் மறுக்க முடியவில்லை.

பன்னாட்டுப் பெயர்ச்சிமையில், புதிதாக நடைமுறைக் கோட்பாடுகள் புகுத்தப்பட்டன. அவற்றின் மூலம் வியாபார வாய்ப்புகளும் பெருகின. உற்பத்தியாளர்களின் ஆலைகளுக்குத் தேவையான இயந்திர உதிரி பாகங்கள், கச்சா பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்டாலும், தேவைக்கேற்ப ஓரிடத்தில் அவற்றை ஒருங்கிணைத்து ஒரே கப்பலிலோ அல்லது சரக்குப் பெட்டகத்திலோ கொண்டுவந்து நுகர்வுக்காகக் கொடுத்தார்கள். சரக்குகள் குறிப்பிட்ட இடத்துக்குப் போய்ச்சேர வேண்டிய காலக்கெடுவை மனதில் கொண்டு, மாறுபட்ட பயண ஏற்பாடுகளைத் (Multimodal Transport) தேர்ந்தெடுத்து, அவற்றையும் ஒரே குடையின்கீழ் கண்காணித்துச் செயலாற்றி, வியாபார உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

இந்தியா செய்ய வேண்டியது என்ன? பெயர்ச்சிமையின் இந்த வளர்ச்சி இந்தியாவையும் தொட்டுவிட்டது. ஆனால் கப்பலோட்டம் போலவே பெயர்ச்சிமைத் தொழிலும் வெளிநாட்டவர் கைகளிலேயே இருக்கிறது. அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலையில், நமது தொழில்முனைவோரால் சர்வதேசச் சந்தைகளில் போட்டியிட முடியவில்லை. காலனிய ஆட்சிமுறையால், கப்பல் உரிமை சார்ந்து ஏற்பட்டிருந்த தயக்கம், பெயர்ச்சிமைத் தொழிலிலும் இங்கு தொடர்கிறது.

சர்வதேசப் பெயர்ச்சிமைக் கட்டணங்கள் இந்தியாவில் அதிகமாக இருப்பதற்கு இதுவே முக்கியக் காரணம். ஏற்றுமதியில் முதல்கட்ட இணைப்பும் (First mile connectivity), இறக்குமதியில் இறுதிக்கட்ட இணைப்பும் (Last mile connectivity) இங்கு சாதகமில்லாச் சூழலில் இருக்கின்றன. செப்டம்பர் 17 அன்று இந்தியாவின் பெயர்ச்சிமைக் கொள்கையை வெளியிட்டுப் பேசிய பிரதமர் மோடி, “சர்வதேச அளவில் 8%க்கும் குறைவாக இருக்கும் பெயர்ச்சிமைக் கட்டணங்கள், இந்தியாவில் 15% மேல் இருக்கின்றன” என்றார். கட்டணம் குறைக்கப்படும் என்றும் கூறினார்.

பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் இந்தச் சூழலை, போர்க்கால அடிப்படையில் அரசு அணுக வேண்டும். சரக்குப் போக்குவரத்தின் முக்கிய அம்சமான கப்பல், சரக்குப் பெட்டக உரிமைக்கு முக்கியத்துவம் அளித்து, உலக அளவிலான நமது பங்களிப்பை உறுதிசெய்ய வேண்டும். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளோடு பெயர்ச்சிமை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட வேண்டும். சர்வதேசக் கப்பலோட்டத்தின் பிரதான சக்தியாக விளங்கும் இந்திய மனிதவளம், இந்தியக் கப்பல்களிலேயே பணியமர்த்தப்படும் சூழல் உருவாக வேண்டும்.

இந்தியத் துறைமுகங்களிலிருந்து சராசரியாக 600 கி.மீ. தொலைவு வளைவுக்கு உள்ளிருக்கும் சரக்கு உருவாக்கு தளங்கள், சர்வதேச சூழலான 200 கி.மீ.தொலைவு வளைவுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். பிரதான சாலை, ரயில் வழித்தடங்கள், தேசத்தின் சரக்கு உருவாக்கு தளங்களை நவீன கட்டமைப்போடு கூடிய பிராந்திய துறைமுகங்களோடு இணைக்க வேண்டும். பழமையான சட்டதிட்டங்கள் திருத்தப்பட்டு, நடைமுறைக்குச் சாத்தியமான புதிய பெயர்ச்சிமைச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். துறைமுகம், சுங்கம், சாலை, கப்பலோட்டம்சார் அரசின் கண்காணிப்பு மையங்களில் பணிசெய்வோர், சர்வதேசப் பெயர்ச்சிமையில் தாங்களும் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும். - ஆர்.என்.ஜோ டி குருஸ்
எழுத்தாளர், வணிகக் கப்பல் நிறுவன ஆலோசகர்; தொடர்புக்கு: rnjoedcruz@gmail.comRead in source website

சென்னை நகரவாசிகளுக்குப் பயத்தையும் எரிச்சலையும் தருவது அடைமழைக் காலமான வடகிழக்குப் பருவமழைக் காலமாகும். முன்பு கோடை காலக் கத்தரி வெயில், இப்போது வ.கி. பருவமழை. நகரத்தின் காலி நிலப்பரப்புகள் குறைந்து, கட்டிடங்களைப் பெருக்கியது ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம் மழைநீர் வடிகால்களின் ஆக்கிரமிப்பும் முறையான பராமரிப்பின்மையும் ஆகும். மக்களின் பயன்பாட்டுக்கான சுரங்கப்பாதைகள் நீர்த்தேக்கங்களாகக் காட்சியளிக்கும். மழையை எதிர்நோக்காது வாழ்ந்தவர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியாக அமைந்துவிடும்.

இந்த ஆண்டு சென்னையில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட அதிகமாகவும் வடகிழக்குப் பருவமழை சராசரி அளவிலும் பொழிந்துள்ளன. இருப்பினும் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் நாட்கணக்கில் தேங்கவில்லை. மழைநீர் வடிகால்கள் நீரை வெளியேற்றும் திறன்குன்றாது செயல்பட்டன. மழையை எதிர்நோக்கி அதன் பாதிப்புகளுக்கு உள்ளாகாத வழிமுறைகள் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் நல்விளைவுகள்தாம் இவை.Read in source website

சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமையையும் நலனையும் உறுதிசெய்வதுடன் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சாரம் ஆகிய தளங்களின் ஒவ்வொரு அடுக்கிலும் அவர்களுக்கான சூழல் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில், டிசம்பர் 3 ஐ ‘சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின’மாக 1992இல் ஐ.நா., அறிவித்தது.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம் 1995இல் இயற்றப்பட்டு, 1996 முதல் அமல்படுத்தப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளில் 80% பேர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர்.Read in source website