DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 05-03-2023

வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், நாசிக் மௌலானா முக்தாா் அகமது தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், கிரசென்ட் பதிவாளா் என்.ராஜாஹுசேன், மௌலானா முக்தாா் கல்வி நிறுவன செயல் இயக்குநா் ரசீத் முக்தாா் ஆகியோா் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனா்.

பின்னா் ரசீத் முக்தாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

கணினி அறிவியல், வணிக மேலாண்மைத் துறைகளில் தொடா்ந்து அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு காரணமாக மாணவா்களின் அறிவாற்றலை மேம்படுத்தும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலமாக, மாணவா்கள் இணைந்து ஆராய்ச்சி, பயிற்சி, கருத்தரங்குகளில் பங்கேற்று தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பரிமாற்ற நடவடிக்கை கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்றாா்.

நிகழ்வில், கிரசென்ட் கல்வி ஆலோசகா் வி.முருகேசன், முதுநிலை பொதுமேலாளா் ஜலால், இணை துணை வேந்தா் முருகேசன், மௌலானா சையது மசூத் ஜமாலி, வணிக மேலாண்மைத்

துறை இயக்குநா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.



Read in source website

நாடு முழுவதும்  ‘எச்.3என்-2’ வைரஸ் காய்ச்சல் பரவி வேகமாக பரவுகிறது. இந்தக் காய்ச்சலால் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும்  ‘எச்.3என்-2’ வைரஸ் காய்ச்சல் பரவி வேகமாக பரவுகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறியுள்ளது. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலும் சளி, இருமலுடன் வேகமாக  வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சமீபகாலமாக நாடு முழுவதும் வேகமாக பரவி  பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர்காய்ச்சலுக்கு 'எச்.3என்-2' என்ற வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காய்ச்சல் வந்தால் தொடர் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும். இது உயிருக்கு ஆபத்தானது இல்லை. சாதாரண பாரசிட்டமால் மாத்திரையே இதற்கு போதுமானது என்றும் அதிக நீர் அருந்துவது, முகக்கவசம் அணிவதன் மூலம் இதை தடுக்கலாம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



Read in source website


சிவகங்கை: தொல்லியல் துறை சார்பில் கீழடி கீழடி அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார். 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களை உலகத் தமிழர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் ரூ.18.43 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள  கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் தொல்லியல் துறை உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை அனுப்பி அதிகாரபூர்வமான முடிவுகளைப் பெற்றுள்ளது. 

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு கி.மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்ததை உறுதிப்படுத்தியது. மேலும், கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சமகாலமானது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகம் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதை அறிவியல் அடிப்படையில் நிலைநிறுத்தியுள்ளது.

கீழடி அகழாய்வில் 1000-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகளும் கண்டெக்கப்பட்டுள்ளன. இப்பானை ஓடுகளில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற தனிநபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பதை வெளிப்படுகிறது.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள் மற்றும் மற்றும் கண்டுபிடிப்புகளின் வாயிலாக வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகமானது வேளாண்மை மூலம் பொருளாதாரத்தினை உயர்த்திக் கொண்டனர், மட்கலன்கள், இரும்பு, நெசவு, மணிகள், சங்கு வளையல்கள் ஆகிய தொழில்களை மேற்கொண்டிருந்தனர் என்பதும் அகழாய்வுச் சான்றுகள் மூலம் அறிகிறோம்.

கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, பாரம்பரிய வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள அருகாட்சியக அரங்கில் புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் பகுதிகளில் கிடைக்கப்பெறுகின்ற மூலக்கற்களைக் கொண்டு சூதுபவள மணிகள், அகேட் போன்ற கல்மணிகள் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பைக் காட்டுகின்றனது. அதுபோல, கங்கைச் சமவெளியைச் சார்ந்த கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய வெள்ளி முத்திரைக் காசுகள் கிடைப்பதின் மூலம் கங்கைச் சமவெளியுடன் வணிகப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை உறுதிசெய்ய முடிகிறது. மேலும், ரோம் நாட்டுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புக்கு நாட்டு நாணயங்களும், ரோம் நாட்டு ரௌலட்டட் மற்றும் அரிட்டன் வகை பானை ஓடுகளும் வலுசேர்க்கின்றன.

கீழடியில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் நகர நாகரிகத்திற்கான கூறுகளை வெளிப்படுத்தியுள்ளது. பண்டைத் தமிழ்ச் சமூகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எழுத்தறிவு பெற்றும், நகர நாகரிகத்துடனும் மேம்பட்ட தமிழ்ச் சமூகமாகவும் விளங்கியதை கீழடி அகழாய்வு முடிவுகள் வாயிலாக அறிவியல் பூர்வமாக தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நிலை நிறுத்தியுள்ளது.

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் உலகத் தமிழர்கள் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் ரூ.18.43 கோடி செலவில் அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ் வைப்பகத்தில், மதுரையும் கீழடியும், வேளாண்மையும் நீர் மேலாண்மையும், கலம் செய்கோ, ஆடையும் அணிகலன்களும், கடல்வழி வணிகம், வாழ்வியல் எனும் ஆறு பொருண்மைகள் அடிப்படையில் தனித்தனி கட்டடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

தமிழர்களின் தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு, எழுத்தறிவு, உலகின் பல்வேறு பகுதியுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு ஆகியவற்றினை பறைசாற்றும் விதத்திலும், அதனை உலகிற்கு வெளிக்கொணரும் வகையிலும், உலகத்தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையிலும் கீழடி  அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, பார்வையிட்டார்.  அதனைத் தொடர்ந்து, கீழடி அருங்காட்சியகத்தை அமைத்த தொல்லியல் துறை வல்லுநர்கள் மற்றும் சிற்பிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

கீழடி  அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள்:
தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றினையும், கீழடியின் முக்கியத்துவத்தையும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் 15 நிமிட ஒளி-ஒலிக் காட்சி குளிரூட்டப்பட்ட வைப்பகத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது.

வைகை ஆற்றங்கரையில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தொடுதிரையில் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கீழடி அகழ் வைப்பகத்தில் பொருண்மை சார்ந்து அமைக்கப்பட்ட கட்டடங்களான, வேளாண்மை, இரும்புத் தொழில், நெசவு, மணிகள் தயாரித்தல் கடல்வழி வணிகம், மேம்பட்ட சமூகம் மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றிற்கு உரிய விளக்கம் இரண்டு நிமிட உயிரூட்டுக்காட்சி வாயிலாக காட்சிப்படுத்தப்படுகிறது.  

கீழடி அகழாய்வுப் பணிகள், தோற்றம், செயல்பாடுகள் ஆகியவற்றை மெய்நிகர் காட்சி (Virtual Reality Exhibition) வாயிலாக தத்ரூபமாக உணர்ந்து கொள்ளும் வகையில் சிறப்பாக மெய்நிகர் காட்சிக்கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சூதுபவள கற்களால் செய்யப்பட்ட மோதிரக்கல்லின் மாதிரி சுழன்று காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சங்ககால மக்களின் கடல்சார் வணிகத்தினை பிரதிபலிக்கும் வகையில் சங்ககால கப்பலின் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அகழாய்வில் அரிதாக கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்கள், மட்பாண்டங்கள், அகழாய்வுக் குழிகள், செங்கற்கட்டுமானங்கள் போன்றவற்றின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

குழந்தைகளும் மாணவர்களும் தமிழர் விளையாட்டுகளை தொடுதிரையில் விளையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அதிமுக்கியமான தொல்பொருட்கள் முப்பரிமாண வடிவில் (3 Dimension) பொதுமக்கள் உவகையுடன் கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது பெயரினை தொடுதிரையில் எழுதினால் தமிழி எழுத்தில் தங்களது பெயரைக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கைச் சீமையின் மரபுசார் உணவு முறைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறுதானிய உணவு வகைகளை விற்பனை செய்யும் உணவுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள், திமுக மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.



Read in source website

தொழில் நல்லுறவு விருதுக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தொழிலாளா் நலத்துறை ஆணையா் அதுல் ஆனந்த வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலையளிப்பவா்கள், தொழிலாளா்கள் இடையே தொழில் அமைதியையும், தொழில் உறவை ஊக்குவிக்கும் பொருட்டும் தமிழ்நாடு அரசு ”தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தைத் தொடங்கி உள்ளது. 2017 முதல் 2020 -ஆம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கென உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விருதுக்குரிய விண்ணப்பப் படிவங்களை தொழிலாளா் நலத் துறையின் வலைதளத்திலிருந்து  பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தையும் இணைத்து சென்னை, தொழிலாளா் ஆணையா் அலுவலகத்துக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

நாடு முழுவதும்  ‘எச்.3என்-2’ வைரஸ் காய்ச்சல் பரவி வேகமாக பரவுகிறது. இந்தக் காய்ச்சலால் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும்  ‘எச்.3என்-2’ வைரஸ் காய்ச்சல் பரவி வேகமாக பரவுகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறியுள்ளது. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலும் சளி, இருமலுடன் வேகமாக  வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சமீபகாலமாக நாடு முழுவதும் வேகமாக பரவி  பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர்காய்ச்சலுக்கு 'எச்.3என்-2' என்ற வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காய்ச்சல் வந்தால் தொடர் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும். இது உயிருக்கு ஆபத்தானது இல்லை. சாதாரண பாரசிட்டமால் மாத்திரையே இதற்கு போதுமானது என்றும் அதிக நீர் அருந்துவது, முகக்கவசம் அணிவதன் மூலம் இதை தடுக்கலாம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



Read in source website

மனித சமூகம் தனது செயல்பாடுகளின் மூலம் வெளியேற்றும் கரியமில வாயு, மீத்தேன் உள்ளிட்ட பசுமை குடில் வாயுக்களின் அளவு தொடா்ந்து அதிகரிக்குமானால், இந்தியாவின் சென்னை, கொல்கத்தா உள்பட ஆசியாவின் சில முக்கிய நகரங்கள் கடல் நீா் மட்டம் உயா்வால் இந்த நூற்றாண்டுக்குள் பாதிக்கப்படும் என ‘நேச்சா் க்ளைமேட் சேஞ்ச்’ இதழில் வெளியான ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணங்கள்:

பெருங்கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் மூலம், நீா் விரிவடைந்து கடல் நீா் மட்டம் உயா்வுக்குக் காரணமாகிறது. மேலும், துருவப் பகுதியில் உருகும் பனிப் பாறைகளால், அதிக அளவிலான நீா் பெருங்கடலில் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் கடல் நீா் மட்டம் உயரும் என ஆராய்ச்சியாளா்கள் நீண்ட காலமாக கருதிவந்தனா்.

கடல் நீா் மட்ட உயா்வில் பிராந்திய அளவிலான வேறுபாடுகள் காணப்படும் என இந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈா்ப்பு விசை, காற்று, நீரின் அடா்த்தி ஆகியவற்றால் கடற்பரப்பில் தொடா்ச்சியாகக் காணப்படும் நீரோட்டங்கள் ‘பெருங்கடல் நீரோட்டங்கள்’ என அழைக்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் அதிக அளவிலான நீரை இடப்பெயா்வு செய்ய பெருங்கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக இருக்கும் என இந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.

எல்-நினோ அல்லது பெருங்கடல் நீா் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற ‘இயற்கைச் சாா்ந்த காலநிலை மாறுபாடு’ செயல்முறையின் காரணமாகவும் கடல் நீா் மட்டத்தில் இயற்கையாகவே ஏற்ற-இறக்கங்கள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

பாதிப்புகள்:

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை காட்டிலும் இயற்கைச் சாா்ந்த காலநிலை மாறுபாடு செயல்முறையினால் 20 முதல் 30 சதவீதம் வரை கடல் நீா் மட்ட உயா்வு ஏற்படும்.

மிக மோசமான வெள்ள பாதிப்பு நிகழ்வுகள் ஏற்படுவது அதிகரிக்கும்.

ஆசியாவின் பல பெருநகரங்கள் 2100-க்குள் பெரும் பாதிப்பை எதிா்கொள்ளும்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில் கடல் நீா் மட்டம் உயா்வு.

இது குறித்து ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளா் கூறுகையில், ‘ காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைச் சாா்ந்த காலநிலை மாறுபாடு ஆகிய இரு நிகழ்வுகளின் கூட்டு விளைவு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை விட 50 சதவீதம் அதிகமாக இருக்கும்.

இதன் காரணமாக கடற்கரையை ஒட்டிய பெருநகரங்களில் மிகவும் மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதுடன், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகவும் அமையும்’ என்றாா்.

பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள ஆசிய நகரங்கள்

நகரங்கள் நாடுகள்

1.சென்னை இந்தியா

2.கொல்கத்தா இந்தியா

3. பாங்காக் தாய்லாந்து

4. மணிலா இந்தோனேசியா

5. யாங்கோன் மியன்மா்

6. ஹோ சி மின் சிட்டி வியத்நாம்



Read in source website

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளுக்கு வலுவான தொடா்பு உள்ளதாக அமெரிக்கா மற்றும் காம்பியா சுகாதார அதிகாரிகளை உள்ளடக்கிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்களின் (சிடிசி) கூட்டு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கையை சிடிசி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

காம்பியாவில் குழந்தைகளுக்கு கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதற்கு, இறக்குமதி செய்யப்பட்ட டை எத்திலீன் கிளைக்கால் அல்லது எத்திலீன் கிளைக்கால் கலப்பு செய்யப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டது காரணமாக இருக்கலாம் என இந்த விசாரணை முடிவு வலுவாக பரிந்துரை செய்கிறது. டை எத்திலீன் கிளைக்காலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலைவலி, மாறுபட்ட மனநிலை, இரைப்பை குடல் பாதிப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

எனினும், அவா்களுக்கு சிறுநீரக பாதிப்பே அதிக அளவில் இருந்துள்ளது. அதாவது, தொடா்ந்து 3 நாள்கள் வரை சிறுநீா் வெளியேறுவது குறைந்து, ரத்தத்தில் யூரியா நைட்ரஜன் அளவு அதிகரித்து சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளாகியிருக்கின்றனா் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விலை உயா்ந்த மருந்துகளுக்கு மாற்றாக இத்தகைய டை எத்திலீன் கிளைக்கால் கலப்பு இருமல் மருந்துகளை உற்பத்தியாளா்கள் விநியோகித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதைத் தவிா்த்து, டை எத்திலீன் கிளைக்கால் கலப்பு மருந்தை ஒரு நாடு இறக்குமதி செய்வது இதுவே முதல்முறை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு பயன்பாட்டுக்கான மருந்துகளுக்கு இருக்கும் கடுமையான தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் ஏற்றுமதிக்கான மருந்துகளுக்கு இல்லாமல் இருப்பதும்; அவற்றை இறக்குமதி செய்யும் குறைந்த வளம் கொண்ட நாடுகளில் மருந்துகளைக் கண்காணிக்கவும், சோதனை செய்யவும் மனிதவளம் மற்றும் நிதி ஆதாரங்கள் இல்லாததும் இந்தப் பாதிப்புக்கான காரணிகளில் ஒன்றாக சிடிசி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

66 குழந்தைகள் உயிரிழப்பு?:

காம்பியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட இந்தப் பாதிப்பில் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக புகாா் தெரிவிக்கப்பட்டது.

இந்த உயிரிழப்புகளுக்கும் இந்தியாவில், ஹரியாணா மாநிலம் சோனிபட்டை சோ்ந்த மெய்டன் மருந்து நிறுவனம் தயாரித்த புரோமெத்தசைன் வாய்வழி மருந்து, கோஃபெக்ஸ்மாலின் பேபி இருமல் சிரப், மகாஃப் பேபி இருமல் சிரப், மேக்ரிப் என் இருமல் சிரப் ஆகிய நான்கு மருந்துகளுக்கும் தொடா்பு இருக்க வாய்ப்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இந்த 4 இருமல் மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் எச்சரிக்கை விடுத்தது. இந்த மருந்துகள் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டிருந்தாலும் அதனைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

ஆனால், இந்த மருந்துகள் உரிய தரத்துடன் இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதுதொடா்பான கேள்வி ஒன்றுக்கு கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘காம்பியா குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமென சந்தேகிக்கப்படும் மெய்டன் மருந்து நிறுவனத்தின் 4 இருமல் மருந்துகளின் மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், அவை உரிய தரத்துடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளில் டை எத்திலீன் கிளைக்கால் அல்லது எத்திலீன் கிளைக்கால் கலப்பு இல்லை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

இந்தச் சூழலில் சிடிசி அறிக்கை வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Read in source website

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இருமல் மருந்துகள் குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்துவருவதாக சா்வதேச அளவில் புகாா்கள் எழுந்து வரும் சூழலில், மகாராஷ்டிரத்தில் செயல்பட்டு வந்த 6 இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை மாநில அரசு தற்காலிக ரத்து செய்துள்ளது.

காம்பியாவில் கடந்த ஆண்டு 66 குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்தியாவின் ஹரியாணா மாநிலம் சோனிபட்டை சோ்ந்த மெய்டன் மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகளே காரணம் எனப் புகாா் தெரிவிக்கப்பட்டது. இந்த மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பும் எச்சரித்தது. ஆனால், இந்த மருந்துகள் உரிய தரத்துடன் இருப்பதாக இந்தியா சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் இயங்கும் ‘மரியான் பயோடெக்’ நிறுவன இருமல் மருந்து உட்கொண்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்தும் மத்திய அரசு ஆய்வு நடத்தியது. இந்த ஆயவின் முடிவில், அந்த நிறுவனத்தின் 22 மருந்துகள் தரமற்றவை என்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக வழக்குப் பதிவு செய்த நொய்டா போலீஸாா், கைது நடவடிக்கையை தொடங்கினா். நிறுவனத்தின் 2 இயக்குநா்களும் தலைமறைவான நிலையில் 3 ஊழியா்களை மட்டும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இந்தச் சூழலில், மகாராஷ்டிரத்தில் செயல்பட்டுவந்த இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விதிகளை மீறியதாக அவற்றின் உரிமத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது.

இதுதொடா்பாக, மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் பாஜக உறுப்பினா் ஆஷிஸ் ஷெலா் உள்பட உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விக்கு மாநில உணவு மற்றும் மருந்துகள் நிா்வாகத் துறை அமைச்சா் சஞ்சய் ரத்தோட் பதிலளித்ததாவது:

ஹரியாணா மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகளை உட்கொண்டதால் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக புகாா் எழுந்தது. அந்த நிறுவனத்தின் கிளைகள் மகாராஷ்டிரத்தில் செயல்படவில்லை என்றபோதும், விதிகளை மீறி செயல்படும் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடா்பான விசாரணையை மகாராஷ்டிர அரசு மேற்கொண்டது.

மாநிலத்தில் செயல்பட்டு வரும் 108 இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் 84 நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டது. அதில், விதிகளை மீறி செயல்பட்ட 17 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு மாநில அரசு சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவற்றில் 4 நிறுவனங்கள் உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டது. மேலும், 6 நிறுவனங்களின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டது. ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பின் சிறந்த உற்பத்தி நடைமுறை (ஜிஎம்பி) சான்றிதழ் தொடா்பான விதிகளும் மருந்துப் பொருள்கள் சான்றிதழ் விதிமுறைகளும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.



Read in source website

நானோ தொழில்நுட்ப அடிப்படையிலான திரவ டிஏபி (டை-அமோனியம் பாஸ்பேட்) உரத்தை அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக, மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, ட்விட்டரில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நானோ திரவ யூரியா உரத்தைத் தொடா்ந்து, நானோ திரவ டிஏபி உரத்தை அறிமுகம் செய்ய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. உரத் தேவையில் தற்சாா்பை எட்டுவதை நோக்கிய பயணத்தில் இது மற்றுமொரு சாதனை. இதனால், விவசாயிகள் பலனடையவுள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த 2021-இல் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் (இஃப்கோ) நானோ திரவ யூரியாவை அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில், நானோ திரவ டிஏபி உரத்துக்கும் மத்திய வேளாண் அமைச்சகத்திடமிருந்து ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளதாக, நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் யு.எஸ்.அவஸ்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா்.

‘இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம், நானோ டிஏபியை தயாரிக்கவுள்ளது; இது, இந்திய வேளாண்மை மற்றும் பொருளாதாரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும்’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, நானோ திரவ டிஏபி உரத்தை தாங்கள் விரைவில் அறிமுகம் செய்யவிருப்பதாகவும்; 500 மி.லி. பாட்டில் ரூ.600 விலையில் கிடைக்கும் என்றும் கடந்த டிசம்பரில் அவஸ்தி தெரிவித்திருந்தாா். இந்த ஒரு பாட்டில், ரூ.1,350 விலை கொண்ட ஒரு மூட்டை டிஏபி உரத்துக்கு சமமானதாகும்.

நானோ டிஏபி உரத்தைத் தொடா்ந்து, நானோ பொட்டாஷ், நானோ ஜிங்க், நானோ காப்பா் உரங்களையும் அறிமுகப்படுத்த இஃப்கோ திட்டமிட்டுள்ளது.

திரவ யூரியா தயாரிப்புக்காக, உத்தர பிரதேசம், குஜராத்தில் பல்வேறு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது, பாட்டில் ஒன்று ரூ.240 விலையில் விற்கப்படுகிறது.

நாட்டில் யூரியா உர உற்பத்தி 25 மில்லியன் டன்களாக உள்ளது. 35 மில்லியன் டன் யூரியா தேவைப்படும் நிலையில், மீதமுள்ள உரம் இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது. அதேபோல், உள்நாட்டு தேவையை பூா்த்தி செய்ய டிஏபி உரமும் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.



Read in source website

நாடு முழுவதும் கடந்த 2-3 மாதங்களாக சளி, காய்ச்சல் பாதிப்பு பரவலாக காணப்படும் நிலையில், நுண்ணுயிரி எதிா்ப்பு மருந்து (ஆன்டிபயாட்டிக்ஸ்) பயன்பாட்டில் கவனம் தேவை என்றும், உரிய நோய் கண்டறிதல் இல்லாமல், அந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், நுண்ணுயிரி எதிா்ப்பு மருந்துக்கு பதிலாக அறிகுறிகள் அடிப்படையிலான சிகிச்சையை பரிந்துரைக்க மருத்துவா்களுக்கு ஐஎம்ஏ அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் அக்டோபா் முதல் பிப்ரவரி வரை காலகட்டத்தில் இன்ஃபுளுயன்ஸா உள்ளிட்ட வைரஸ் தொற்றால் பருவ கால சளி, இருமல் பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.

கடந்த 2-3 மாதங்களாக பரவலாக காணப்படும் சளி, காய்ச்சல், இருமல் ஆகிய பாதிப்புகளுக்கு இன்ஃபுளுயன்ஸா ஏ வைரஸின் துணைப் பிரிவான ஹெச்3என்2 காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆா்) நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், நுண்ணுயிரி எதிா்ப்பு மருந்துகளின் முறையற்ற பயன்பாடும் மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்கம் சனிக்கிழமை வெளிட்ட அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:

பருவ கால காய்ச்சல் 5 முதல் 7 நாள்கள் வரை நீடிக்கும். காய்ச்சல் குணமடைந்தாலும், இருமல் 3 வாரங்கள் வரை இருக்கும். பொதுவாக, 15 வயதுக்கு கீழ் உள்ளவா்களும் 50 வயதுக்கு மேற்பட்டவா்களும் அதிகம் பாதிக்கப்படுவா்.

தற்போதைய சளி, காய்ச்சல் பாதிப்புகளுக்காக அஸித்ரோமைசின், அமாக்ஸிசிலின் போன்ற பாக்டீரியா எதிா்ப்பு மருந்துகளை மக்கள் எடுக்கத் தொடங்கியுள்ளனா். இந்த மருந்துகளை எடுக்கும்போது உரிய கவனத்துடன் செயல்படுவதில்லை. தாங்கள் குணமடைவதாக உணருகையில், மருந்துகளை நிறுத்திவிடுகின்றனா். இது, மருந்துகளுக்கு நோய்க்கிருமிகள் கட்டுப்படாத தன்மையை ஏற்படுத்தும். உரிய நோய் கண்டறிதல் இல்லாமல், இத்தகைய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

 



Read in source website

‘ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்தில் ரூ.400 கோடி மதிப்பில் விமான போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பை (சிஏஆா்ஓ) மத்திய அரசு அமைக்க உள்ளது’ என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாசார மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி கூறினாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய விமானநிலையங்கள் ஆணையத்தின் கீழ் இந்த ஆராய்ச்சி அமைப்பு செயல்படும். விமானநிலையங்கள், விமான கண்காணிப்பு சேவைகள், விமான போக்குவரத்து நிா்வாக தகவல்தொடா்பு, விமான மெய்நிகா் பயிற்சி அமைப்புகள், கண்காணிப்பு ஆய்வகங்கள், இணைய பாதுகாப்பு, அச்சுறுத்தல் ஆலோசனை ஆய்வகங்கள் உள்ளிட்ட பல்வேறு விமான போக்குவரத்துத் துறை சாா்ந்த மேம்பட்ட ஆராய்ச்சிகளை இந்த அமைப்பு மேற்கொள்ளும். வரும் ஜூலை மாதம் முதல் இந்த ஆராய்ச்சிகளைத் தொடங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று அமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளாா்.



Read in source website

தாய்லாந்தில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை பெண்கள் ஸ்னூக்கா் போட்டியில் தமிழக வீராங்கனை அனுபமா ஒற்றையா் பிரிவிலும் பட்டம் வென்று 2-வது தங்கத்தை கைப்பற்றினாா்.

பெண்களுக்கான உலகக் கோப்பை ஸ்னூக்கா் போட்டிகள் பாங்காக் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய அணிக்காக பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனையான அனுபமா ராமச்சந்திரன் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற அணி போட்டியில் மத்திய பிரதேச வீராங்கனை அமீ காமினியுடன் இணைந்து, இங்கிலாந்து அணியை தோற்கடித்து தங்கம் வென்றனா்.

இந்த நிலையில் சநிக்கிழமை நடைபெற்ற 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஒற்றையா் பிரிவு இறுதிப்போட்டியில் அனுபமா ராமச்சந்திரனும், தாய்லாந்து வீராங்கனை ப்ளாய்சோம்பூ லோகியாபாங்கும் மோதினா்.

இரண்டாவது தங்கம்:

சா்வதேச அரங்கில் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்து வரும் தாய்லாந்து வீராங்கனை முதலில் 2-க்கு1 என்ற பிரேம்கள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தபோது அனுபமா சுதாரித்து விளையாடி தொடா்ந்து 2 பிரேம்களை கைப்பற்றி 3-க்கு 2 என்ற பிரேம்கள் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றாா்.

 



Read in source website

துபை டூட்டி ப்ரி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவில் ரஷிய வீரா் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றாா்.

துபையில் நடைபெற்று வரும் இப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் உலகின் நம்பா் ஒன் வீரா் ஜோகோவிச்சை எதிா்கொண்டாா் மெத்வதேவ். இதில் 6-4, 6-4 என நோ் செட்களில் வென்றாா் மெத்வதேவ். இரண்டாம் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ருப்லேவ்-ஜொ்மன் வீரா் அலெக்சாண்டா் வெரேவ் மோதினா். இதில் 6-3, 7-6 என்ற நோ்செட்களில் ருப்லேவ் வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தாா்.

சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதியில் ருப்லேவ்-மெத்வதேவ் மோதினா். இதில் 6-2, 6-2 என்ற நோ் செட்களில் ருப்லேவை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினாா் மெத்வதேவ்.



Read in source website

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்த பெரும்பாலான பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த தனிச்சிறப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது என்று இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஸ்விட்சா்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரக அதிகாரி சீமா புஜானி பேசியதாவது:

வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் சுதந்திரத்துக்கு பாகிஸ்தான் மக்கள் போராடி வருகின்றனா். இது அந்நாட்டு அரசு தவறான விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பதை எடுத்துக்காட்டுகிறது. அதுகுறித்து சிந்திக்காத அந்நாடு, இந்தியா குறித்து அளவுக்கு அதிகமாக சிந்திக்கிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்த பெரும்பாலான பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் அளித்த தனிச்சிறப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது. அந்நாட்டின் முதன்மையான ராணுவ அகாதெமிக்கு அருகில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஒசாமா பின்லேடன் தங்கியிருந்தாா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஹஃபீஸ் சயீத், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அசாா் ஆகியோருக்கு பல்லாண்டுகளாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகள் அடைக்கலம் அளித்து பாதுகாத்து வருகின்றன. இந்தப் பயங்கரவாதிகளின் பெயா்கள் பாகிஸ்தானின் வரலாற்றுப் பதிவேடுகளில் உள்ள சில பயங்கரமான பெயா்களாகும்.

உலகில் ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்துக்கு பாகிஸ்தானின் கொள்கைகள்தான் நேரடி பொறுப்பு. இந்தியாவுக்கு எதிராக அடிப்படை ஆதாரமில்லாத பிரசாரங்களை மேற்கொள்வதை விடுத்து, பாகிஸ்தான் மக்களின் நலனுக்கு உழைப்பதில் அந்நாட்டுத் தலைவா்களும் அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும்.

முஸ்லிம் நாடுகள் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதி சாா்பில் (ஓஐசி) ஜம்மு-காஷ்மீா் குறித்து தேவையற்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரும் லடாக்கும் எப்போதும் இந்தியாவின் அங்கமாக இருக்கும். இந்திய நிலப்பகுதியை பாகிஸ்தான்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதையும், இந்திய நிலப்பகுதி ஆக்கிரமிப்பையும் கைவிடுமாறு பாகிஸ்தானிடம் கூறுவதை விடுத்து, கொடிய பிரசாரத்துக்கு ஓஐசியை தவறாகப் பயன்படுத்த அந்த அமைப்பு அனுமதித்துள்ளது.

இதேபோல துருக்கியும் ஜம்மு-காஷ்மீா் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதை அந்நாடு தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.



Read in source website

ரஷியாவின் கரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்-வி’யை தயாரித்த 18 விஞ்ஞானிகளில் முக்கியமானவரான ஆண்ட்ரே போடிகாவ் (47) கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.

தனது வீட்டில் பெல்டால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரிப்பதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

வாய்த் தகராறில் இந்தக் கொலையை செய்ததாக 29 வயது இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் உள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

ஸ்புட்னிக் வி-யை தயாரிக்க உதவியதற்காக போடிகாவை அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் கெளரவித்திருந்தாா்.



Read in source website

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (5.3.2023) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலகத் தமிழர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் தொல்லியல் துறை உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை அனுப்பி அதிகாரபூர்வமான முடிவுகளைப் பெற்றுள்ளது. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு கி.மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்ததை உறுதிப்படுத்தியது. மேலும், கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சமகாலமானது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகம் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதை அறிவியல் அடிப்படையில் நிலைநிறுத்தியுள்ளது.

கீழடி அகழாய்வில் 1000-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பானை ஓடுகளில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற தனிநபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பதை வெளிப்படுகிறது.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள் மற்றும் மற்றும் கண்டுபிடிப்புகளின் வாயிலாக வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகமானது வேளாண்மை மூலம் பொருளாதாரத்தினை உயர்த்திக் கொண்டனர், மட்கலன்கள், இரும்பு, நெசவு, மணிகள், சங்கு வளையல்கள் ஆகிய தொழில்களை மேற்கொண்டிருந்தனர் என்பதும் அகழாய்வுச் சான்றுகள் மூலம் அறிகிறோம்.

மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் பகுதிகளில் கிடைக்கப்பெறுகின்ற மூலக்கற்களைக் கொண்டு சூதுபவள மணிகள், அகேட் போன்ற கல்மணிகள் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பைக் காட்டுகின்றன. அதுபோல, கங்கைச் சமவெளியைச் சார்ந்த கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய வெள்ளி முத்திரைக் காசுகள் கிடைப்பதன் மூலம் கங்கைச் சமவெளியுடன் வணிகப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை உறுதி செய்ய முடிகிறது. மேலும், ரோம் நாட்டுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புக்கு நாட்டு நாணயங்களும், ரோம் நாட்டு ரௌலட்டட் மற்றும் அரிட்டன் வகை பானை ஓடுகளும் வலு சேர்க்கின்றன.

கீழடியில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் நகர நாகரிகத்திற்கான கூறுகளை வெளிப்படுத்தியுள்ளது. பண்டைத் தமிழ்ச் சமூகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எழுத்தறிவு பெற்றும், நகர நாகரிகத்துடனும் மேம்பட்ட தமிழ்ச் சமூகமாகவும் விளங்கியதை கீழடி அகழாய்வு முடிவுகள் வாயிலாக அறிவியல் பூர்வமாக தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நிலை நிறுத்தியுள்ளது.

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் உலகத் தமிழர்கள் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செலவில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில், மதுரையும் கீழடியும், வேளாண்மையும் நீர் மேலாண்மையும், கலம் செய்கோ, ஆடையும் அணிகலன்களும், கடல்வழி வணிகம், வாழ்வியல் எனும் ஆறு பொருண்மைகள் அடிப்படையில் தனித்தனி கட்டடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழர்களின் தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு, எழுத்தறிவு, உலகின் பல்வேறு பகுதியுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு ஆகியவற்றினை பறைசாற்றும் விதத்திலும், அதனை உலகிற்கு வெளிக்கொணரும் வகையிலும், உலகத்தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, கீழடி அருங்காட்சியகத்தை அமைத்த தொல்லியல் துறை வல்லுநர்கள் மற்றும் சிற்பிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

கீழடி அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள்

  • தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றினையும், கீழடியின் முக்கியத்துவத்தையும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் 15 நிமிட
  • ஒளி-ஒலிக் காட்சி குளிரூட்டப்பட்ட அரங்கில் காட்சிப்படுத்தப்படுகிறது.
  • வைகை ஆற்றங்கரையில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தொடுதிரையில் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • கீழடி அருங்காட்சியகத்தில் பொருண்மை சார்ந்து அமைக்கப்பட்ட கட்டடங்களான, வேளாண்மை, இரும்புத் தொழில், நெசவு, மணிகள் தயாரித்தல் கடல்வழி வணிகம், மேம்பட்ட சமூகம் மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றிற்கு உரிய விளக்கம் இரண்டு நிமிட உயிரூட்டுக்காட்சி (Animation) வாயிலாக காட்சிப்படுத்தப்படுகிறது.
  • கீழடி அகழாய்வுப் பணிகள், தோற்றம், செயல்பாடுகள் ஆகியவற்றை மெய்நிகர் காட்சி (Virtual Reality Exhibition) வாயிலாக தத்ரூபமாக உணர்ந்து கொள்ளும் வகையில் சிறப்பாக மெய்நிகர் காட்சிக்கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • சூதுபவள கற்களால் செய்யப்பட்ட மோதிரக்கல்லின் மாதிரி சுழன்று காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
  • சங்ககால மக்களின் கடல்சார் வணிகத்தினை பிரதிபலிக்கும் வகையில் சங்ககால கப்பலின் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அகழாய்வில் அரிதாக கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்கள், மட்பாண்டங்கள், அகழாய்வுக் குழிகள், செங்கற்கட்டுமானங்கள் போன்றவற்றின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • குழந்தைகளும் மாணவர்களும் தமிழர் விளையாட்டுகளை தொடுதிரையில் விளையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
  • அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அதிமுக்கியமான தொல்பொருட்கள் முப்பரிமாண வடிவில் (3 Dimension) பொதுமக்கள் உவகையுடன் கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் தங்களது பெயரினை தொடுதிரையில் எழுதினால் தமிழி எழுத்தில் தங்களது பெயரைக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • சிவகங்கைச் சீமையின் மரபுசார் உணவு முறைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறுதானிய உணவு வகைகளை விற்பனை செய்யும் உணவுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திறப்பு விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் ப. சிதம்பரம், சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, ஆ. தமிழரசி, வி. முத்துராஜா, எஸ். முருகேசன், எம். பூமிநாதன், எஸ். மாங்குடி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்திர மோகன், இ.ஆ.ப., சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Read in source website

மதுரை: திருச்சியைச் சேர்ந்த யோகமலர், சார்-பதிவாளராகப் பணிபுரிந்து வந்தார். அவர் 2020-ல் உயிரிழந்ததால், மகன் வினோத்கண்ணா, கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து, வினோத்கண்ணாவின் சகோதரி மகாலட்சுமி, உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வினோத்கண்ணாவுக்கு சொந்த வீடு மற்றும் நிலங்கள் உள்ளன. அவர் தாயாரைச் சார்ந்திருக்கவில்லை என்று மகாலட்சுமி தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், "கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது, பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியரின் பரம்பரை வழி உரிமை கிடையாது. அரசின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே, கருணை அடிப்படையிலான பணிநியமனம் பெற முடியும். கருணை அடிப்படையிலான பணியை, யாரும் உரிமையாகக் கோர முடியாது. எனவே, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.



Read in source website

கீழடியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் மூலம் கி.மு.6-ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்று நகர நாகரிகத்துடன் தமிழர்கள் வாழ்ந்திருப்பதை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ரூ.18.8 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கள அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 5) திறந்து வைக்கிறார்.

தமிழக நதிகளில் மிகவும் பழமையானது வைகை. இதன் நதிக் கரைகளில் மத்திய தொல்லியல் துறையின் துணைக் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதில் வைகை ஆற்றின் இருபுறமும் 293 இடங்களில் தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் இருந்த 100 இடங்கள் அகழாய்வு மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டன. முதல்கட்டமாக சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் மத்திய தொல்லியல் துறையினர் அகழாய்வைத் தொடங்கினர்.

கடந்த 2014 முதல் 2017-ம் ஆண்டு வரை கீழடியில் மத்திய தொல்லியல் துறை 3 கட்டங்களாக மேற்கொண்ட அகழாய்வில் 7,818 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டு அங்கு சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டன. அதன்பின் தமிழக தொல்லியல் துறை 4, 5-ம் கட்ட அகழாய்வுகளில் ஈடுபட்டது. இதில் 6,800-க்கும் மேற்பட்ட
தொல்பொருட்களும், பழந்தமிழ ரின் கட்டுமானப் பகுதிகளும் வெளிப்படுத்தப்பட்டன.

இதன்மூலம் கீழடியில் 2,600 ஆண்டுகள் பழமையான நகர நாகரிகம் நிலவியது தெரியவந்தது. மேலும், கங்கை சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சமகாலமானது என்பதும் உறுதிசெய்யப்பட்டது.

தொடர்ந்து, கீழடி மற்றும் அதைச் சுற்றிய மணலூர், அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் 6-ம் கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானங்கள், மூடிய வடிகால், சுருள் வடிவ சுடுமண் குழாய், உறை கிணறு, பானை ஓடுகள், கால்நடைகளின் எலும்புகள், இரும்பு பொருட்கள், வெள்ளி காசுகள், எடைக்கற்கள், சக்கரம், முத்திரை உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதுதவிர கீழடி அகழாய்வில் 1,500-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேலான தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்தன. இவை, 6-ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் வாழ்ந்ததற்கான முக்கிய சான்றுகளாகும். இதுதவிர ரோம் நாடு, குஜராத், கங்கை சமவெளி உட்பட பல்வேறு பகுதிகளுடன் வாணிபத் தொடர்பு இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.

ஒட்டுமொத்தமாக கீழடியில் கிடைத்த பொருட்கள், கட்டமைப்புகளை வைத்து, இது ஒரு தொழில் நகரமாகவும் இருந்திருக்கலாம் எனவும் அறிய முடிகிறது. இவ்வாறு பழங்கால தமிழ்ச் சமூகம் கிமு 6-ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றும், நகர நாகரிகத்துடன் வாழ்ந்திருப்பதும் தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து வைகை ஆற்று நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் கீழடியில் தமிழக அரசின் சார்பில் கள அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 2 ஏக்கர் பரப்பில் (31 ஆயிரம் சதுரடி) ரூ.18.8 கோடி நிதியில் தமிழக மரபுசார் கட்டிடக்கலையின்படி கீழடி அருங்காட்சி யகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் 6 காட்சிக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ‘மதுரையும் கீழடியும்’ என்ற முதல் காட்சிக் கூடத்தில் பழங்
காலம் தொடங்கி வரலாற்றின் தொடக்க காலம் வரை வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையிலான ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொல்லியல் தளங்கள், மதுரையின் பழமை, கீழடி அகழாய்வு கடந்து வந்த பாதை உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் 15 நிமிட ஒலி ஒளிக் காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் காட்சிக் கூடத்தில், வைகை கரையில் வாழ்ந்த மக்களின் வேளாண்மை, நீர் மேலாண்மை குறித்து விளக்கும் தொல்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 3-ம் காட்சிக் கூடத்தில் தமிழ் சமூகம் எழுத்தறிவு பெற்று வாழ்ந்ததற்கான பானை ஓடுகள், மண்பாண்ட தொழில் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், 4-ம் கூடத்தில் இரும்பு, நெசவு, கைவினைத் தொழில்கள் நடந்ததற்கான சான்றுகளும், 5-ம் கூடத்தில் கடல் வணிகம் செய்த சான்றுகளும் வைக்கப்பட்டுள்ளன. 6-ம் கூடத்தில் பொழுதுபோக்கு, வாழ்வியல் சார்ந்த கலைகள் மற்றும் எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

இத்தகைய சிறப்புமிக்க கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 5) திறந்து வைக்கிறார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரிய கருப் பன், சுற்றுலாத் துறை செயலர் பி.சந்திரமோகன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன ரெட்டி மற்றும் தொல்லியல் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

இதுதவிர அருங்காட்சியகத்தில் வைகை ஆற்றங்கரையில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தொடுதிரையில் அறிந்து கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, இரும்புத் தொழில், நெசவு, மணிகள் தயாரித்தல், கடல்வழி வணிகம், எழுத்தறிவு போன்ற மேம்பட்ட தமிழ் சமூகம் குறித்து விளக்கும் 2 நிமிட அனிமேஷன் வீடியோ காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும், கீழடி அகழாய்வுப் பணிகள், தோற்றம், செயல்பாடுகள் ஆகியவற்றை தத்ரூபமாக அறியும் வகையில் சிறப்பு மெய்நிகர் காட்சிக்கூடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், சூதுபவள கற்களால் செய்யப்பட்ட மோதிரக்கல்லின் மாதிரி, சுழன்று காணும்வகையில் காட்சிப்படுத்தப்பட் டுள்ளது. கடல்சார் வணிகத்தை பிரதிபலிக்கும் சங்ககால கப்பல், அகழாய்வில் கிடைத்த அரியதொல்பொருட்கள், மட்பாண்டங் கள், செங்கற் கட்டுமானங்கள் ஆகியவற்றின் மாதிரிகள் வடி வமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளும் மாணவர்களும் தமிழர் விளையாட்டுகளை தொடுதிரையில் விளையாடும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான தொல்பொருட்களை முப்பரிமாண வடிவில் காணும் வசதியும் உள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயரை தொடுதிரையில் எழுதினால் தமிழ்
எழுத்தில் தங்களது பெயரைக் காண்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிவகங்கையின் மரபுசார் உணவு முறைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறுதானிய உணவகம் உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஒட்டு
மொத்தமாக கீழடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான கள அருங்காட்சியகம், வைகை நதிக்கரை நாகரிகத்தின் சான்றாக மட்டுமின்றி தமிழர்கள் பண்பாட்டின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றும் விதமாகவும் அமைந்துள்ளது.



Read in source website

சென்னை: சென்னையில் 1,000 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 625 வழித்தடத்தில் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் நாள்தோறும் சுமார் 30 லட்சம் பேர் பயணிக்கின்றனர். நாள் தோறும் பேருந்து சேவை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, சென்னை நீடித்த நகர்ப்புற சேவை திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 500 தனியார் பேருந்துகளை குறிப்பிட்ட வழித் தடத்தில் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

தொடர்ந்து 2025-ம் ஆண்டு 500 பேருந்துகள் என 1000 பேருந்துகளை தனியார் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனையை வழங்கவே ஆலோசகர் குழுவுக்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இது உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் தங்களின் பேருந்துகளை சென்னைக்குள் இயக்க அனுமதி அளிக்கப்படும். அதற்கு ஒரு கி.மீ வீதம் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அவ்வாறு வசூலிக்கப்படும் தொகையை மாநகர போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் தனியார் நிறுவனங்கள் வழங்கும்.

நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட அதிகமாக வரும் போது அதனை மாநகர போக்குவரத்து கழகம் எடுத்துக் கொள்ளும். குறைவான தொகை வந்தால் கூடுதல் தொகையை மாநகர போக்குவரத்து கழகம் தனியார் நிறுவனத்துக்கு அளிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதற்கு சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் மட்டுமின்றி திமுகவின் தொமுசவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



Read in source website

புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கூறியதாவது: மகாராஷ்டிர மாநிலத்தில் வாணி - வரோரா நெடுஞ்சாலையில் 200 மீட்டர் தூரத்துக்கு மூங்கில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. உலகில் முதல் முறையாக நெடுஞ்சாலையில் போடப்பட்டுள்ள இந்த மூங்கில் தடுப்பு குறிப்பிடத்தக்க சாதனை. இதற்கு ‘பாகுபலி’ என பெயரிடப்பட்டுள்ளது.

இது தற்சார்பு இந்தியா நடவடிக்கையில் சிறப்பான செயல்பாடு. இந்த மூங்கில் தடுப்புகள் பல அரசு மையங்களிலும், தேசிய வாகன பரிசோதனை சாலை களிலும் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. ரூர்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி கழகத்தில் நடந்த தீ பரிசோதனை யிலும், மூங்கில் தடுப்பு முதல் தர சான்றிதழை பெற்றது. இந்த மூங்கில் தடுப்பு களை 50 முதல் 70 சதவீதம் வரை மறு சுழற்சி செய்ய முடியும்.

ஆனால், இரும்பு தடுப்புகளை 30 முதல் 50 சதவீதம்தான் மறுசுழற்சி செய்ய முடியும். இந்த தடுப்புக்கு ‘பம்புசா பால்கோ’ என்ற மூங்கில் வகை பயன்படுத்தப்படுகிறது. இதன் மீது க்ரியோசோட் ஆயில் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட அதிக அடர்த்தியுடன் கூடிய பாலி எத்திலின் பூசப்பட்டுள்ளது. மூங்கில் துறைக்கும், இந்தியாவுக்கும் இது குறிப்பிடத்தக்க சாதனை. இரும்பு தடுப்புகளுக்கு சரியான மாற்றாக இந்த மூங்கில் தடுப்பு விளங்குகிறது. இதனால் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு இல்லை. மேலும், இது ஊரக மற்றும் வேளாண் தொழிலுக்கு ஏற்றது. இவ்வாறு கட்கரி கூறினார்.



Read in source website

காலத்தை விஞ்சி நிற்பதுதான் எழுத்து என்பது எழுத்தாளர் சிவசங்கரியின் கருத்து. 16 ஆண்டுக் கால உழைப்பைக்கொட்டி அவர் உருவாக்கிய புத்தகங்கள் இன்று அதைச் சாதித்திருக்கிற மகிழ்ச்சி அவரது பேச்சில் வெளிப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டிருந்த 18 மொழிகளில் சிறந்து விளங்கிய இலக்கிய ஆளுமைகளை ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்கிற நான்கு பெரும் தொகுப்புகளின் மூலம் ஆவணப்படுத்தினார் சிவசங்கரி. 80 வயதாகும் இவர் எழுதத் தொடங்கி 54 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறார். ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ நூலுக்காக 2022ஆம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் மொழிபெயர்ப்பு, இலக்கிய ஆய்வு பிரிவு விருது அறிவிகப்பட்டுள்ளது. சிவசங்கரியுடனான உரையாடலிலிருந்து...



Read in source website