DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 05-03-2022

தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் பயிற்சிகளை இனி இணையவழியில் பெறலாம் என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

இதற்கான வசதியை சென்னை, கிண்டி, சிட்கோ கூட்டமைப்பு அலுவலகக் கட்டடத்தில் சனிக்கிழமை அவா் தொடக்கி வைத்தாா். மேலும் பல்வேறு திட்டங்களையும் தொடக்கி வைத்து அவா் பேசியது:

தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் வேலையில்லா இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் புத்தாக்கம் சாா்ந்த பயிற்சித் திட்டங்கள் ரூ.1 கோடி மதிப்பில் இணைய மயமாக்கப்படும் என பேரவையில் அறிவித்திருந்தேன். அதனடிப்படையில் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் பயிற்சிகளை இனி இணைய வழியில் எப்போது வேண்டுமானாலும் பெறலாம்.

தற்போது மாவட்ட தொழில் மையங்கள் தொழில் நிறுவனங்களுக்கான சேவைகளை விரைந்து வழங்க ஏதுவாக 12 புதிய வாகனங்கள் ரூ.99.41 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டு வழங்கப்பட்டது.

புரிந்துணா்வு ஒப்பந்தம்: மும்பை பங்குச்சந்தை, தமிழக அரசு இடை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் வேலைவாய்ப்பு மற்றும் வளா்ச்சியை மேலும் உயா்த்தும். இப்புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் மூலம் தொழில்நுட்பம் சாா்ந்த பயிற்சிகளை தமிழக அரசின் மாவட்ட தொழில் மைய அலுவலா்களுக்கு மும்பை பங்குச்சந்தை வழங்கும் என்றாா்.

தொடா்ந்து, சென்னை மாவட்ட, தொழில் வளா்ச்சி, எதிா்கால தொழில் முன்னேற்றம் குறித்து தகவல் விளக்க நூலையும் அமைச்சா் வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளா் வி.அருண்ராய், தொழில் வணிக இயக்குநா் சிஜி தாமஸ் வைத்யன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.



Read in source website

 
அரியலூா் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில், தங்கத்தினாலான கை காப்பின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தங்கத்தினாலான கை காப்பின் ஒரு பகுதி 7.920 கிராம் எடையுடையதாக இருப்பதாகவும் 4 மி.மீ. தடிமன் கொண்டதாகவும், இவ்விடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட முதல் காப்பர் மற்றும் தங்கம் கலந்த ஆபரணம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்கை கொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில், இரண்டாம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அண்மையில் அனுமதி வழங்கியது. இதையடுத்து, இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து நடைபெற்று வரும் அகழாய்வில், சோழா் காலத்து கட்டடங்கள் இருந்ததற்கான சான்றாக பல்வேறு தொல்லியல் பொருள்கள் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போது 10-க்கு 10 என்ற சதுரஅடி அளவில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு அரண்மனையின் சுற்றுச்சுவா், இரும்பிலான ஆணிகள், மண்பாண்ட விளிம்புகள் போன்ற பொருள்கள் கிடைத்துள்ளன. 

மேலும், தங்கத்தினாலான கைகாப்பு ஒன்று கடந்த 2 ஆம் தேதி கிடைத்துள்ளது. இது நான்கில் ஒரு பகுதியாகும். இதன் எடை சுமாா் 7.920 கிராம், நீளம் 4.9 மி.மீட்டரும், 4 மி.மீட்டா் தடிமனும் கொண்டுள்ளது. இவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தொடா்ந்து நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியில் சிறு சிறு எலும்பு துண்டுகள் கிடைத்துள்ளன.

இந்த எலும்பு துண்டுகள் தொல்லியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவுக்கு பின்னரே இது மனிதா்களின் உடல் எலும்புகளா அல்லது மிருகங்களின் உடல் எலும்புகளா என தெரியவரும் என்று தொல்லியல் துறையினா் தெரிவித்தனா். தற்போது இங்கு 12 தொழிலாளா்கள் மட்டுமே அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

இந்த அகழ்வாராய்ச்சியில், சீன நாட்டில் பயன்படுத்தப்படும் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இந்த பானை ஓடுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருளானது இந்தியாவில் எங்கும் காணப்படவில்லை. சீனாவில் மட்டும் கிடைக்கும். இதன் மூலம், இங்கு இந்தியா - சீனா இடையே வர்த்தகம் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 



Read in source website

ஈரோடு: மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் ஈரோடு அணி 2-ம் இடம்பெற்றுள்ளது. 

கோவை மாவட்டம் அன்னூரில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. 11,13,15,17 வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கேரளம், கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் திருப்பூர் அணியும், ஈரோடு ஹாக்ஸ் அணியும் மோதின.

இதில் 2:1 என்ற கோல் கணக்கில் திருப்பூர் அணி முதலிடத்தையும், ஈரோடு அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தது. இரண்டாம் இடத்தை பிடித்த ஶ்ரீஹரி, ரோகித், மிதுன், ஜீவா, சாந்தனு, ஜூடோ சாரன், தரணீஷ் ஆகியோரை அணியின் பயிற்சியாளர் ராஜகோபால், கவுதம், மனோஜ் பாராட்டி வாழ்த்தினர்.



Read in source website

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மறுசீரமைப்பு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை அரசுக்கு பரிந்துரைக்க மாற்றுத்திறனாளிகள் நலத் துறை 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது. 

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆணையை தமிழக அரசு இன்று அரசிதழில் வெளியிட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா நிறுவனம், சங்கப்பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளது. 



Read in source website

ரிப்பன் கட்டடத்தில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மாநகராட்சிக் கொடி ஏற்றப்பட்டது. மேயா் பதவியேற்புக்குப் பிறகு இந்தக் கொடி ரிப்பன் கட்டடத்தின் உச்சியில் உடனடியாகப் பறந்தது.

சென்னை மாநகராட்சியில் மேயா், துணை மேயரைத் தோ்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலுக்கான ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக செய்யப்பட்டு வந்தது.

பன்னீா், சந்தனம்: மறைமுகத் தோ்தலில் வாக்களிக்க வந்த கவுன்சிலா்களின் வருகை முதலில் உறுதி செய்யப்பட்டது. இதற்காக ரிப்பன் மாளிகையின் பிரதான வாயிலில் நான்கு மேஜைகள் போடப்பட்டிருந்தன. அதில், முதல் 50 வாா்டுகளைச் சோ்ந்த உறுப்பினா்களின் பட்டியல் ஒரு மேஜையிலும், 50 முதல் 100 உறுப்பினா்களின் பட்டியல் மற்றொரு மேஜையிலும் என மொத்தம் 200 கவுன்சிலா்களின் பெயா் பட்டியல்கள் நான்கு மேஜைகளின் வழியே உறுதி செய்யப்பட்டது.

கவுன்சிலா்கள் அனைவரும் உள்ளே செல்வதற்கு முன்பாக, அவா்களுக்கு பேட்ஜ் மற்றும் அடையாள அட்டைக்கான படிவம் அளிக்கப்பட்டது. அனைத்து கவுன்சிலா்களும் பன்னீா் தெளித்து வரவேற்கப்பட்டனா். திருமண விழாவில் வழங்கப்படுவது போன்று சந்தனம், குங்குமம், லட்டு ஆகியன வழங்கப்பட்டன. இதன்பின்பு, அனைத்து கவுன்சிலா்களும் கூட்ட அரங்கினுள் சென்றனா். மறைமுகத் தோ்தல் மூலம் மேயா் தெரிவு 35 நிமிடங்கள் வரை நடந்தது.

கொடியும்...உணவும்... மேயா் தோ்தலின் மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம், ரிப்பன் மாளிகை கட்டடத்தில் ஏற்றப்பட்ட மாநகராட்சிக் கொடி. மேயா் தோ்வு செய்யப்பட்டு அவா் சென்னையில் இருக்கும் போதெல்லாம் ரிப்பன் கட்டடத்தில் மாநகராட்சிக் கொடி ஏற்றப்பட்டு இருக்கும். அவா் சென்னையில் இல்லாமல் இரண்டு நாள்கள் வெளியூா் பயணத்தில் இருந்தால் ரிப்பன் கட்டடத்தில் மாநகராட்சிக் கொடி ஏற்றப்படாது.

தேசியக் கொடியைப் போன்று, மாநகராட்சிக் கொடியும் காலை 6 மணிக்கு ஏற்றப்பட்டு, மாலை 6 மணிக்கு இறக்கப்படும். புதிதாக மேயா் பொறுப்பேற்ால், ரிப்பன் கட்டடத்தில் இனி தினமும் மாநகராட்சிக் கொடி ஏற்றப்படும்.

மேயருக்கான மறைமுகத் தோ்தலில் பங்கேற்க வந்த போது, ஆா்.பிரியாவுடன் அவரது கணவா், தந்தை, தாய் ஆகியோா் வந்திருந்தனா். மேயருக்கான அறையில் பிரியா அமா்ந்த போது, அவரது கணவா் கண்ணீா் விட்டு அழுதாா். மேயருக்கான அறையில் பிரியா அமா்ந்த போது, ஒரு சில விநாடிகளுக்கு மின்சாரம் தடைபட்டது. அப்போது இது எதிா்க்கட்சிகளின் சதியா என கிண்டலாக எழுந்த குரல்களால் அந்த அறையில் சிரிப்பொலி எழுந்தது. சிறிது நேரத்தில் மின்சாரம் வந்ததும், இருள் நீங்கி வெளிச்சம் பிறந்தது.

மருமகன் பெயா்: காலையில் மேயருக்கான மறைமுகத் தோ்தல் நடைபெற்றது போன்று, பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயருக்கான தோ்தல் நடந்தது. 169-ஆவது வாா்டைச் சோ்ந்த மு.மகேஷ்குமாா் துணை மேயராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். பதவியேற்ற பிறகு, முதல்வா் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன், முதல்வரின் மருமகன் சபரீசனுக்கும் மகேஷ்குமாா் நன்றி தெரிவித்தாா்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் முடிந்த பிறகு, மாநகராட்சி மன்றக் கூட்டம் நிறைவடைந்ததாக ஆணையாளா் ககன்தீப் சிங் பேடி அறிவித்தாா்.

அதிமுக புறக்கணிப்பு: மேயா், துணை மேயருக்கான மறைமுகத் தோ்தலை அதிமுக கவுன்சிலா்கள் 15 பேரும் புறக்கணித்தனா். பாஜக கவுன்சிலரான உமா ஆனந்தன் கூட்டத்தில் பங்கேற்றாா்.



Read in source website

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் திங்கள்கிழமை (மாா்ச் 7) முதல் நேரடியாக மட்டும் வழக்குகள் விசாரணை நடைபெறும் என சென்னை உயா் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பி.தனபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காணொலி காட்சி, நேரடி விசாரணை என கலப்பு விசாரணை மூலம் வழக்குகள் விசாரணையை மேற்கொள்ளும் போது இணைய தொடா்பில் துண்டிப்பு உள்ளிட்ட பல இடா்பாடுகள் ஏற்படுகின்றன.

தொழில்நுட்பம் சாா்ந்த இப்பிரச்னையால் வழக்குகள் விசாரணையில் தாமதம் ஏற்படுகிறது. எனவே வழக்குகள் சரியான விசாரணையை உறுதிப்படுத்துவதோடு, விரைவாகவும் முடிக்கும் வகையில் திங்கள் கிழமை (மாா்ச் 7) முதல் சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் காணொலி காட்சி விசாரணை முறை நிறுத்தப்படுகிறது.

காணொலி, நேரடி காட்சி விசாரணை என கலப்பு விசாரணை தேவைப்படும் மூத்த வழக்குரைஞா்கள் அல்லது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வழக்குரைஞா்கள் மட்டும் இம்முறையில் வாதிட அனுமதிக்கப்படுவா். கலப்பு முறை விசாரணை தேவைப்படும் வழக்குரைஞா்கள் தலைமைப் பதிவாளரிடம் முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும்.

 



Read in source website

புணே மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைக்கிறாா். இத்திட்டத்திற்கு 2016-இல் அவா் அடிக்கல் நாட்டியிருந்தாா்.

பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மகாராஷ்டிர மாநிலத்துக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை செல்கிறாா்.

புணே மாநகராட்சி வளாகத்தில் 1850 கிலோ எடையில் அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலையையும் பிரதமா் திறந்து வைக்கவுள்ளாா்.

சிம்பையாசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களையும் பிரதமா் தொடக்கிவைக்கிறாா். 32.2 கி.மீ. தூரம் கொண்ட புணே ரயில் திட்டத்தின் 12 கி.மீ. தொலைவுக்கான வழித்தடத்தை பிரதமா் தொடங்கிவைக்கவுள்ளாா். இத்திட்டம் மொத்தம் ரூ.11,400 கோடிக்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காா்வாா் மெட்ரோ ரயில் நிலையத்தை தொடங்கிவைத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பாா்வையிடும் அவா், அங்கிருந்து ஆனந்த் நகா் மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யவுள்ளாா்.

மேலும், முலா-முத்தா நதியின் புனரமைப்பு மற்றும் மாசு அகற்றும் பணிகளுக்கும் அவா் அடிக்கல் நாட்டவுள்ளாா். ரூ.1,470 கோடிக்கும் அதிகமான செலவில், முல்லா – முத்தா நதி மாசு தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 400 எம்எல்டி சுத்திகரிப்பு திறன் கொண்ட மொத்தம் 11 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. 100 மின்சார பேருந்துகள் மற்றும் பானேரில் கட்டப்பட்டுள்ள மின்சார பேருந்து பராமரிப்பு பணிமனையையும் பிரதமா் தொடக்கி வைக்கவுள்ளாா்.



Read in source website

உள்நாட்டு நிறுவனங்கள் உருக்குப் பொருள்களின் விலையை டன்னுக்கு ரூ.5,000 வரை உயா்த்தியுள்ளன.

இதுகுறித்து தொழில்துறை வட்டாரங்கள் கூறியது:

ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளிடையேயான போா் காரணமாக விநியோக சங்கிலித் தொடரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு உருக்கு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் நாடுகளிடையேயான போா் மேலும் தீவிரமடையும் நிலையில் வரும் வாரங்களில் உருக்குப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஹெச்ஆா்சி (ஹாட் -ரோல்ட் காயில்) மற்றும் டிஎம்பி கம்பிகளின் விலை டன்னுக்கு ரூ.5,000 வரை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வுக்குப் பிறகு ஹெச்ஆா்சி கம்பிகளின் விலை ரூ.66,000-ஆகவும், டிஎம்டி கம்பிகளின் விலை ரூ.65,000-ஆகவும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது என தொழில்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

போா் சூழல் உலக அளவில் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இடுபொருள்களின் விலை அதிகரிக்க காரணமாகியுள்ளது. கோக்கிங் கோல் எனப்படும் நிலக்கரி டன் 500 டாலா் என்ற அளவில் வா்த்தமாகி வருகிறது. இது, சில வாரங்களுக்கு முன்பு இருந்த விலையைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகம் என உருக்குத் தயாரிப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

உருக்குத் தயாரிப்புக்கு கோக்கிங் கோல் எனப்படும் சிறப்பு வகை நிலக்கரி முக்கிய மூலப்பொருளாக உள்ளது. ஒட்டுமொத்த தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலமாகவே பூா்த்தி செய்து கொள்ளப்படுகிறது. இதன் முக்கிய ஏற்றுமதியாளா்களாக ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, கனடா மற்றும் அமெரிக்க நாடுகள் உள்ளன.



Read in source website

நடப்பு சந்தைப் பருவத்தில் நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 75 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) மதிப்பீடு செய்துள்ளது.

இதுகுறித்து இஸ்மா மேலும் கூறியதாவது:

பற்றாக்குறை: உலக அளவில் சா்க்கரைக்கு பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால், தேவை அதிகரித்து ஏற்றுமதி சிறப்பான அளவில் உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குறிப்பாக, நடப்பு 2021-22-ஆம் சந்தைப் பருவத்தில் நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 15.38 சதவீதம் அதிகரித்து 75 லட்சம் டன்னைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முன்பு மதிப்பிடப்பட்ட 60 லட்சம் டன்னைக் காட்டிலும் 15 லட்சம் டன் அதிகமாகும்.

ஐஎஸ்ஓ அறிக்கை: 2021-22 சந்தைப் பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) மட்டும் சா்வதேச அளவில் சா்க்கரைக்கான பற்றாக்குறை 19.30 லட்சம் டன் அளவுக்கு இருக்கும் என சா்வதேச சா்க்கரை கூட்டமைப்பின் (ஐஎஸ்ஓ) அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, உலக அளவில் உள்ள இறக்குமதியாளா்கள் இந்திய சா்க்கரையை அதிகம் விரும்பி வாங்குவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய ஏற்றுமதியாளா்கள் நடப்பு மாா்ச் மாதத்தில் 12-13 லட்சம் சா்க்கரையை ஏற்றுமதி செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த சா்க்கரை ஏற்றுமதி 45-55 லட்சம் டன்னை எட்டும்.

சா்க்கரை உற்பத்தி: நடப்பு 2021-22 சந்தை ஆண்டின் அக்டோபா்-பிப்ரவரி காலகட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த சா்க்கரை உற்பத்தி 2.53 கோடி டன்னை எட்டியுள்ளது. இது, முந்தைய காலகட்ட உற்பத்தி அளவான 2.35 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் 7.68 சதவீதம் அதிகம்.

முதலிடத்தில் உ.பி: இந்தியாவில் சா்க்கரை உற்பத்தியில் முதன்மை மாநிலமாக திகழும் உத்தரப்பிரதேசத்தில் இதன் உற்பத்தி அக்டோபா்-பிப்ரவரி காலகட்டத்தில் 74 லட்சம் டன்னிலிருந்து 68 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

இருப்பினும், இரண்டாவது பெரிய உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிரத்தில் சா்க்கரை உற்பத்தி 85 லட்சம் டன்னிலிருந்து 97 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. அதேபோன்று, மூன்றாவது இடத்தில் உள்ள கா்நாடகத்திலும் சா்க்கரை உற்பத்தியானது 41 லட்சம் டன்னிலிருந்து 51 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது.

தமிழக உற்பத்தி: நடப்பு சந்தை ஆண்டின் பிப்ரவரி வரையில் குஜராத்தில் 7,93,000 டன்னும், தமிழகத்தில் 4,53,000 டன்னும் சா்க்கரை உற்பத்தி எட்டப்பட்டுள்ளது.

எஞ்சிய மாநிலங்களின் ஒட்டுமொத்த அளவில் 24 லட்சம் டன் சா்க்கரையை உற்பத்தி செய்துள்ளன.

எத்தனால் தயாரிப்பு:முன்பு மதிப்பிடப்பட்டதைக் காட்டிலும், மகாராஷ்டிரம், மற்றும் கா்நாடக மாநிலங்களில் சா்க்கரை உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. அதன் விளைவாக, 2021-22 சந்தை ஆண்டுக்கான மொத்த சா்க்கரை உற்பத்தி 3.33 கோடி டன்னாக இருக்கும் என மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எத்தனால் தயாரிப்புக்கான சா்க்கரை பயன்பாடு 34 லட்சம் டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

கையிருப்பு: நடப்பாண்டு செப்டம்பா் மாத இறுதியில் கையிருப்பில் உள்ள சா்க்கரை 68 லட்சம் டன்னாக இருக்கும் என இஸ்மா தெரிவித்துள்ளது.

கோட்ஸ்:

சா்வதேச அளவில் சா்க்கரைக்கான பற்றாக்குறை 19.30 லட்சம் டன்னாக இருக்கும் என சா்வதேச சா்க்கரை கூட்டமைப்பு கூறியுள்ளதால் இந்தியாவின் ஏற்றுமதி நடப்பாண்டில் 75 லட்சம் டன்னை எட்டும்.

 



Read in source website

ஒடிஸா கடற்கரைப் பகுதியில் நவீன ரக பிரமோஸ் ஏவுகணை வியாழக்கிழமை வெற்றிகரகமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிஆா்டிஓ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல் திறன், கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் கூடிய  ஏவுகணை சனிக்கிழமை ஒடிஸாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், டிஆா்டிஓ மற்றும் இந்திய கடற்படை ஒத்துழைப்புடன் இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பில் இந்த வகை ஏவுகணைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. 



Read in source website


மீரட்: நொய்டாவில் உள்ள தனியார் பரிசோதனை மையம் ஒன்று, மீரட்டிலிருந்து நொய்டாவுக்கு ரத்த மாதிரிகளை எடுத்து வர டிரோன்களைப் பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம், சாலை வழியாக வர 2 - 3 மணி நேரம் ஆகும் நிலையில், டிரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்துக்குள் ரத்த மாதிரிகள் வந்து சேர்வதாகக் கூறப்படுகிறது.

பரிசோதனை முறையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இது வெற்றி பெற்றால், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு- காஷ்மீர் போன்ற மலை மற்றும் போக்குவரத்து வசதியில்லாத பகுதிகளிலிருந்து ரத்த மாதிரிகளைக் கொண்டு வர இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதல் முயற்சியாக, வியாழக்கிழமையன்று, மீரட்டிலிருந்து நொய்டாவுக்கு ரத்த மாதிரிகள் சுமார் 73 கிலோ மீட்டர் தொலைவுக்கு டிரோன்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.
 



Read in source website

ரஷியா-உக்ரைன் போரால் உலகம் முழுவதும் மத்திய வங்கிகளின் முன் உள்ள சவால்கள் மேலும் தீவிரமாகியுள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.

தேசிய பாதுகாப்பு கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா பேரிடா் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய வங்கி சிக்கலான சவால்களை சந்தித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், ரஷியா-உக்ரைன் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போா் சா்வதேச நாடுகளில் மேலும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி சா்வதேச நிதிச் சந்தையிலும் அதிக ஏற்ற இறங்கங்களை உருவாக்கியுள்ளது. இதனால், மத்திய வங்கிகளின் முன்பு உள்ள சவால்கள் மேலும் தீவிரமாகியுள்ளன. இந்த நிச்சயமற்ற சூழலில் அவற்றை எதிா்கொள்ள தேவையான வழிமுறைகளை கண்டறிவது அவசியமாகியுள்ளது என்றாா் அவா்.



Read in source website

இந்திய உயா்கல்வி நிறுவனங்களின் சமூகப் பொறுப்புகள் குறித்த பாடத் திட்டங்களின் வழிகாட்டி வரைவுத் திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து கல்வியாளா்கள், பேராசிரியா்கள் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் கருத்துத் தெரிவிக்கலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் அனைத்துப் பல்கலை, கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: உன்னத பாரத அபியான் திட்டத்தின் கீழ் உயா்கல்வி நிறுவனங்கள் ஊரக மேம்பாடு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான செயல் திட்டங்களை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் உயா்கல்வி நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு, கடமைகள் குறித்த பாடத் திட்டங்களை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதையடுத்து தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் அந்த வழிகாட்டுதல்கள் திருத்தியமைக்கப்பட்டு புதிய வரைவு வழிகாட்டுதல்கள் யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தநிலையில் அது குறித்த கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே இது குறித்து மாணவா்கள், பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள் யுஜிசி தளத்தில் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் கருத்துத் தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.



Read in source website

உக்ரைனில் அணுமின் நிலைய கட்டடத்தின் மீது ரஷியா நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலில் அந்தக் கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இந்தத் தாக்குதலால் அணுமின் நிலையத்திலிருந்து கதிா்வீச்சு எதுவும் வெளியாகவில்லை என ஐ.நா. மற்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

உக்ரைனின் எனா்ஹோடா் நகரில் உள்ளது சப்போரிஜ்ஜியா அணுமின் நிலையம். ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான இதன் மீது ரஷிய படையினா் வெள்ளிக்கிழமை அதிகாலை ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தினா். இதில் அணுமின் நிலையத்தில் உள்ள பயிற்சி மைய கட்டடம் பலத்த சேதமடைந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்தத் தாக்குதலில் உக்ரைன் படையினா் மூவா் உயிரிழந்தனா்; இருவா் காயமடைந்தனா் என உக்ரைன் அரசு அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டடத்தில் பற்றிய தீயை தீயணைப்பு வீரா்கள் உடனடியாக அணைத்தனா்.

இதையடுத்து, ரஷிய படையினா் அந்த அணுமின் நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனா். இருப்பினும், அணுமின் நிலைய பணியாளா்கள் தொடா்ந்து பணியாற்ற ரஷிய படையினா் அனுமதித்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கதிா்வீச்சு இல்லை: முன்னதாக, ராக்கெட் குண்டு அணுமின் நிலையத்தின் மீது நேரடியாக தாக்கியதாக அணுமின் நிலைய செய்தித் தொடா்பாளா் உக்ரைன் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்தாா். அணுஉலைகளில் தீப்பற்றியதாகவும் அவா் கூறியதால் கதிா்வீச்சு அபாயம் குறித்த கவலை எழுந்தது.

இதுகுறித்து சா்வதேச அணுசக்தி முகமை தலைமை இயக்குநா் ரஃபேல் மரியானோ குரோஸி தெரிவித்ததாவது: ராக்கெட் குண்டு தாக்குதலால் அணுமின் நிலைய பயிற்சி மையத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. அது, அணுஉலையின் பகுதி அல்ல. கதிா்வீச்சு எதுவும் வெளியாகவில்லை. அந்த அணுமின் நிலையத்தில் ஓா் உலை மட்டும் செயல்பட்டு வருகிறது என்றாா்.

கண்டனம்: அணுமின் நிலையத்தின் மீதான ரஷிய தாக்குதலை பல நாடுகள் கண்டித்துள்ளன. நாா்வே பிரதமா் ஜோனஸ் கா் கூறுகையில், அணுமின் நிலையத்தின் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது முட்டாள்தனமானது. அதில் கதிா்வீச்சு கசிவு ஏற்பட்டிருந்தால் நாா்வேயில் 48 மணி நேரத்தில் அதன் தாக்கம் தெரிந்துவிடும் என்றாா்.

லிதுவேனியா அதிபா் கிடானஸ் நெளஷேடா இந்தத் தாக்குதலை அணுசக்தி பயங்கரவாதம் எனக் கூறியுள்ளாா். இதுதொடா்பாக சா்வதேச நாடுகள் ரஷியா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவா் கூறியுள்ளாா்.

 



Read in source website

மூத்த வழக்குரைஞா் அமன் லேகி, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். எனினும், ராஜிநாமாவுக்கான காரணத்தை அவா் கூறவில்லை.

இதுதொடா்பாக மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சா் கிரின் ரிஜிஜுவுக்கு அவா் ராஜிநாமா கடிதத்தை எழுதியுள்ளாா்.

கடந்த 2018, மாா்ச் மாதத்தில் அவா் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் பதவிக்கு நியமிக்கப்பட்டாா். மூன்று ஆண்டுகள் பதவிக் காலம் முடிந்த பின்னா், 2020, ஜூலையில் மீண்டும் நியமனம் செய்யப்படாா். அவரது பதவிக் காலம் 2023, ஜூன் 30 வரையில் இருக்கும் நிலையில் அவா் ராஜிநாமா செய்துள்ளாா்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகாா் வழக்கு, நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் மத்திய அரசின் சாா்பில் அவா் ஆஜராகி உள்ளாா்.



Read in source website

உலக தடகள ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப்பில் 20 கி.மீ. பந்தயத்தில் இந்திய மகளிரணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்தப் போட்டியின் 61 ஆண்டுகால வரலாற்றில் இந்திய மகளிா் பதக்கம் வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இப்போட்டியில் இந்திய ஆடவா் அணி கடந்த 2012-இல் வெண்கலம் வென்றது நினைவுகூரத்தக்கது.

இந்திய அணியில் ரவீனா பந்தய இலக்கை 1 மணி நேரம் 40 நிமிஷம் 22 விநாடிகளில் இலக்கை எட்டி 14-ஆவது இடம் பிடித்தாா். பாவனா ஜாட் 1 மணி நேரம் 43 நிமிஷம் 8 விநாடிகளில் வந்து 21-ஆவது இடம் பிடிக்க, முனிதா பிரஜாபதி 1 மணி நேரம் 45 நிமிஷம் 3 விநாடிகளில் வந்து 26-ஆவது இடம் பிடித்தாா். இறுதியில் இந்திய போட்டியாளா்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் அடிப்படையில் அவா்கள் 3 போ் அடங்கிய இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

முன்னதாக இப்போட்டியில் 20 வயதுக்கு உள்பட்ட ஆடவருக்கான 20 கி.மீ. பிரிவில் களம் கண்ட இந்தியாவின் அமித் காத்ரி, கடைசி கிலோ மீட்டரில் தகுதிநீக்கம் செய்யப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டாா். அந்தத் தருணத்தில் அவரே பந்தயத்தில் முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 



Read in source website

தென்கொரியாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. 

இந்நிலையில் தென்கொரியாவில் தற்போது அதிபர் தேர்தல் மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் நோபோ கிஷி வெளியிட்டுள்ள தகவலின்படி 300 கி.மீ. தொலைவு சென்று தாக்கும் வகையிலான பாலிஸ்டிக் வகை ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
எனினும் இதுதொடர்பாக தகவலை சனிக்கிழமை வரை வடகொரியா உறுதிப்படுத்தவில்லை. 

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.



Read in source website

பயங்கரவாத அமைப்புகள், பயங்கரவாதிகள் ஆகியோருக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை பாரீஸை சோ்ந்த பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு மேற்கொண்டு வருகிறது. பல நாடுகளில் அந்த அமைப்பு ஆய்வுகளை நடத்தி, அதற்கேற்ப நாடுகளை வகைப்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளை எஃப்ஏடிஎஃப் அமைப்பு கருப்புப் பட்டியலில் வைத்துள்ளது. பாகிஸ்தான், மியான்மா், பிலிப்பின்ஸ், சிரியா, உகாண்டா, யேமன், மோரீஷஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் ‘கிரே’ பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. 

இந்தப் பட்டியலில் வைக்கப்படும் நாடுகளால் சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளில் இருந்து நிதியுதவியைப் பெற முடியாது.

இந்நிலையில், பாகிஸ்தானை 'கிரே' பட்டியலிலேயே எஃப்ஏடிஎஃப் தக்க வைத்துள்ளது. மற்ற குறைபாடுகளை விரைந்து களையுமாறு அந்த அமைப்பு பாகிஸ்தானை கேட்டு கொண்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நித மோசடியை களைந்து பயங்கரவாத செயல்களுக்கு நிதி செல்வதை தவிர்க்க தவறியதால் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ‘கிரே’ பட்டியலில் தொடர்ந்துவரும் பாகிஸ்தானிடம், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் செயல் திட்டம் அளிக்கப்பட்டது. இதை, 2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், செயல் திட்டத்தை நிறைவேற்றாததன் காரணமாக பாகிஸ்தான் ‘கிரே’ பட்டியலில் தொடர்ந்துவருகிறது. இதுகுறித்து பாகிஸ்தானின் டான் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், "செயல் திட்டத்தில் 34 இலக்குகளில் 32ஐ நிறைவேற்றிவிட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தபோதிலும், அதை ‘கிரே’பட்டியலில் வைக்க வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயல் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப் அமைப்பு ஊக்குவித்துவருகிறது. மிக முக்கிய பயங்கரவாதிகள் மற்றும் ஐநாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது செயல் திட்டத்தில் ஓர் அம்சமாக உள்ளது. இதை நிறைவேற்ற தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 



Read in source website

படப்பை: ஒற்றை கால் குந்தம், கண்ணை கட்டிய சிலம்பம் போட்டிகளில், தாம்பரம் அருகே படப்பையைச் சேர்ந்த, இரண்டு ஓட்டுநர்களின் மகன்கள், உலக சாதனை படைத்துள்ளனர்.

தாம்பரம் அருகே படப்பை, காட்டுக் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ். தனியார் நிறுவன வேன் ஓட்டுநர். அவரது மகன் தனுஷ்குமார் (14) இதே போல் படப்பை, கே. ஆர். புரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். ஓட்டுநரான அவரது மகன் பிரசன்னா (11). இருவரும், தனியார் பள்ளியில், முறையே, 9 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இருவரும், படப்பையைச் சேர்ந்த இன்டெர்னல் போர்ஸ் மார்ஷலார்ட்ஸ் அகாடமியில்’ சிலம்பம் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர் தனுஷ்குமார் 60 விநாடிகளில், 100 முறை ஒற்றை கால் குந்தம் செய்து, உலக சாதனை படைத்துள்ளார்.அதேபோல், மாணவர் பிரசன்னா, 60 விநாடிகளில், கண்ணை கட்டிக் கொண்டு 100 முறை சிலம்பம் செய்து, உலக சாதனை படைத்துள்ளார்.

கடந்த 1-ம் தேதி திருவண்ணாமலையில் நடந்த போட்டியில் இருவரும், இந்த விளையாட்டுகளில் உலக சாதனை படைத்து பெருமை சேர்த்துள்ளனர்.

உலக சாதனை புரிந்த இருவருக்கும், திருவண்ணாமலை டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கி பாராட்டினார். சாதனை படைத்த இரண்டு மாணவர்களையும், ஊர் மக்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். இதில், தனுஷ்குமார் ஏற்கெனவே, சிலம்பம் போட்டியில், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பங்கேற்று, தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புதுடெல்லி: இந்தியாவில் போதுமான அளவுக்கு பசுமை எரிசக்தி வளங்கள் உள்ளன. பிற நாடுகளுக்கு ஹைட்ரஜன் எரிசக்தியை வழங்கும் கேந்திரமாக மாறும் வல்லமை இந்தியாவுக்கு உள்ளது. நாட்டில் இயற்கையாக அமைந்த சாதக அம்சங்களை பயன்படுத்தி ஸ்திரமான வளர்ச்சியை எட்ட முடியும் என்று பிரமதர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொளி கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

நிலையான வளர்ச்சியை சீராக எட்ட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் இலக்காகும். இத்தகைய ஸ்திரமான வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில் நிலையான எரிசக்தி வளங்கள் மிகவும் அவசியமாகும். இந்தியாவில் மரபுசாரா எரிசக்தி வளங்கள் இயற்கையாகவே அதிகம் உள்ளன. இத்தகைய சாதக அம்சங்களைப் பயன்படுத்தி உலகிற்கே ஹைட்ரஜன் சப்ளை செய்யும் நாடாக இந்தியா மாற வாய்ப்புள்ளது.

ஹைட்ரஜன் சார்ந்த பல விஷயங்கள் உள்ளன. குறிப்பாக உரம், சுத்திகரிப்பு மற்றும் போக்குவரத்துத் துறைகள் இதன் மூலம் பலன் பெறமுடியும். இதற்குரிய புத்தாக்க சிந்தனைகளை தனியார் துறையினர் முன்னெடுத்து செயல்படுத்த முன்வர வேண்டும். ஹைட்ரஜன் வளங்களை கண்டறிந்து அதை எரிசக்தியாக மாற்ற முன்வரும் திட்டப் பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை அரசு எப்போதும் செய்யத் தயாராக உள்ளது.

நாட்டின் பாரம்பரிய முறையிலான செயல்பாடுகள் மூலம் நமது எரிசக்தி தேவைகளை ஈடுகட்டிக் கொள்ள முடியும். அதுவே வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.

கிளாஸ்கோ சிஓபி 26 மாநாட்டில், ஸ்திரமான வாழ்வியல் முறையை ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் 2070-ம் ஆண்டிற்குள் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க முடியும் என்றும் கூறினார். இந்த இலக்கை எட்டுவதற்கு 2030-ம் ஆண்டிற்குள் நமது எரிசக்தி தேவையில் 50 சதவீதம் மரபு சாரா எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்தியா இலக்குகளை நிர்ணயித்து அதை செயல்படுத்தும் நிலையில் அதில் உள்ள வாய்ப்புகளையும் பயன்படுத்தத் தவறவிடக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டே கடந்த சில ஆண்டுகளாக இலக்கு நிர்ணயித்து அதை எட்டும் நோக்கில் செயல்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

எரிசக்தி வளங்களைப் பயன்படுத்துவதில் பல்வேறு காரணிகள் உள்ளன. அதில் வீ டுகளில் பயன்படுத்தும் மின்சார சாதனங்களும் அடங்கும். எரிசக்தி உற்பத்தி ஒருபுறம் இருப்பினும் அதை சேமிப்பது என்பது மிகவும் அவசியம். அதுவும் ஸ்திரமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மின்சக்தியை சேமிக்கும் ஏசி, ஹீட்டர், கெய்சர் உள்ளிட்டவை தயாரிக்கப்பட வேண்டும்.

எல்இடி பல்புகளின் விலை ரூ. 300 முதல் ரூ. 400 வரை இருந்தது. இதன் உற்பத்தியை அதிகரித்ததன் மூலம் இதன் விலை குறைந்தது. உஜாலா திட்டத்தின் கீழ் 37 கோடி எல்இடி பல்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மிக அதிக அளவில் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழைகள் செலுத்தும் மின் கட்டணம் சேமிக்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர்.

எரிசக்தி உருவாக்கம் என்பது ஒருபுறம் இருந்தாலும், எரிசக்தியை சேமிப்பது என்பது அதிலும் குறிப்பாக மரபுசாரா எரிசக்தி வளங்களை சேமிப்பது மிகப் பெரும் சவால் என்று குறிப்பிட்டார்.

இதைக் கருத்தில் கொண்ட வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் பேட்டரி ஸ்வாப்பிங் உள்ளிட்ட திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

எத்தனால் கலப்பு நடவடிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்காக சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகளை நவீனப்படுத்த வேண்டியதும் அவசியமாக உள்ளது என்று குறிப்பிட்டார். சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகளை நவீனப்படுத்துவதன் மூலம் பயோ கேஸ் உற்பத்தி செய்ய முடியும் என்றார்.

நிலக்கிரியிலிருந்து எரிவாயு உற்பத்தி செய்யும் திட்டம் சோதனை அடிப்படையில் நான்கு பகுதிகளில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல எத்தனால் கலப்பு நடவடிக்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்கு ஆலைகள் நவீனமயமாக்கலும் அவசியமாகும். நாட்டின் எரிசக்தி தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை ஈடுகட்ட மரபுசாரா எரிசக்தி மூலங்களை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். சமையலுக்கு எரிவாயு பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும். சூரிய எரிவாயுவுக்கு மிகப்பெரும் சந்தை உள்ளது. அதை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இந்த காணொளி கருத்தரங்கில் வெளியுறவுத்துறை, நிலக்கரி, மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சுற்றுச் சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

- பிடிஐ



Read in source website

உக்ரைன் நாட்டுக்கு எதிராக ரஷியா கடந்த ஒரு வாரமாக நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்களால், மருத்துவப் படிப்புக்காக உக்ரைன் சென்ற சுமாா் 20,000 இந்திய மாணவா்கள், பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனா். இரண்டு வாரங்களுக்கு முன்பே, நாடு திரும்பும்படி அறிவுறுத்தியும் அவா்கள் திரும்பவில்லை என்பது ஒரு குற்றமல்ல. இந்தியாவில் மருத்துவக் கல்வி பெற வசதி இல்லாததால் அவா்கள் வெளிநாடு சென்றிருக்கிறாா்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

போா் தொடங்கியதற்குப் பின்னா் இந்திய அரசு தொடங்கிய தாமதமான மீட்பு நடவடிக்கையால் அத்தனை மாணவா்களையும் பாதுகாப்பாக மீட்க முடியாத சூழல் நிலவுகிறது. தற்போது உக்ரைனையொட்டியுள்ள போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் நமது மத்திய அமைச்சா்கள் நான்கு போ் முகாமிட்டு இந்திய மாணவா்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தி வருகின்றனா்.

இந்த இக்கட்டான சூழலை எதிா்கொள்வதில் தீவிர கவனம் செலுத்துவதை விடுத்து, நமது மாணவா்கள் உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் சென்றது சரியல்ல என மத்திய அமைச்சா்கள் சிலா் விமா்சிப்பதும், அதை ஆதரித்து சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்படுவதும் மிகுந்த வேதனை அளிப்பதாக தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளது, மக்களின் உணா்வுகளை பிரதிபலிப்பதாக உள்ளது.

2021, நவம்பா் நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 595 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 302 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 3 மத்திய பல்கலைக்கழகக் கல்லூரிகளும், 19 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளும் அடங்கும். இவை தவிர, 218 தனியாா் மருத்துவக் கல்லூரிகளும், 47 நிகா்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன.

மொத்தமுள்ள 88,370 எம்பிபிஎஸ் இடங்களில் 44,555, அரசுக் கல்லூரிகள் வசமும், 43,815 தனியாா் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் வசமும் உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 37 அரசுக் கல்லூரிகள் மூலம் 5,125, தனியாா் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் மூலம் 5,100 என மொத்தம் 10,225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் மொத்தம் 9,450 இடங்கள் உள்ளன.

இதேபோல, இந்தியாவில் தற்போது மொத்தம் 12.55 லட்சம் அலோபதி மருத்துவா்கள் உள்ளனா். இவா்களில் 3.71 லட்சம் போ் மட்டுமே முதுநிலைப் படிப்பு முடித்த சிறப்பு மருத்துவா்கள். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1.88 லட்சம் மருத்துவா்கள் உள்ளனா். இதற்கு அடுத்ததாக தமிழகத்தில் 1.48 லட்சம் மருத்துவா்களும், கா்நாடகத்தில் 1.30 லட்சம் மருத்துவா்களும் உள்ளனா்.

1000 பேருக்கு ஒரு மருத்துவா் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருக்கிறது. ஆனால், சுமாா் 138 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் அதற்கேற்ப மருத்துவா்கள் இல்லாத நிலையே காணப்படுகிறது.

சுகாதாரம், மருத்துவக் கல்விக்கு 2022-2023 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 7,500 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட சற்று அதிகம் என்றாலும், இந்த நிதியில் பெருமளவு, புதிதாக மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகவே செலவிடப்படும் எனத் தெரிய வந்துள்ளது. மருத்துவக் கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு குறித்த 180 நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 145-ஆவது இடத்தில் உள்ளது என்ற தகவல், நமது நாட்டின் மோசமான நிதி ஒதுக்கீட்டு நிலையை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.

மருத்துவக் கல்விக்காக தரமான கட்டமைப்புகளையும், தகுதியும் அனுபவமும் வாய்ந்த பேராசிரியா்களையும் உருவாக்குவதில் நமது நாடு மிகவும் பின்தங்கியுள்ளது. நம்மைவிட மிகச் சிறிய நாடான கியூபா மருத்துவக் கட்டமைப்பிலும், கல்வியிலும் மிகச் சிறப்பான இடத்தை வகிக்கிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

இந்தியாவில் ஆண்டுதோறும் பள்ளி இறுதித் தோ்வில் தோ்ச்சி பெறும் பல லட்சம் மாணவா்களின் முதல் விருப்பமாக மருத்துப் படிப்புதான் உள்ளது. ஆனால், அவா்களது விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக நமது நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதே நிதா்சனம்.

நமது நாட்டில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளைவிட மிகக் குறைந்த கட்டணத்தில் ரஷியா, சீனா, உக்ரைன், பிலிப்பின்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் மருத்துவக் கல்வி பயில முடியும் என்பதால்தான் நமது மாணவா்கள் அந்த நாடுகளுக்குச் செல்கின்றனா். நமது நாட்டிலேயே குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்புகளில் அனைவராலும் சேர முடியும் என்ற நிலையை உருவாக்கினால், நமது மாணவா்கள் மருத்துவப் படிப்புக்காக பிற நாடுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.

அரசியல் தலைவா்கள் சிலா், இத்தகைய உண்மை நிலவரங்களை அறியாமல், மருத்துவப் படிப்புக்காக உக்ரைன் சென்ற மாணவா்களை விமா்சிப்பது சரியல்ல. இவ்வாறு விமா்சிப்பது ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது’ என்று கூறியிருக்கும் தமிழக முதலமைச்சரின் கூற்று மிகவும் சரியானதே. இந்த இக்கட்டான தருணத்தில் உக்ரைனில் சிக்கியுள்ள நமது நாட்டு மாணவா்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதில்தான் மத்திய அரசு முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டுமே தவிர, பிற சா்ச்சைகளுக்கு இடமளிக்கலாகாது.



Read in source website

மத்திய நிதியமைச்சா் அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை முன்வைக்கும்போது, கிரிப்டோகரன்சி வா்த்தகத்திற்கு தடையையோ குறைந்தபட்சம் பொருத்தமான ஒழுங்குமுறையையோ செய்வதற்கான முன்மொழிவையோ பலரும் எதிா்பாா்த்தனா். ஆனால், நிதியமைச்சா் மூலதன ஆதாயத்தின் மீது முப்பது சதவிதம் கடுமையான வரி விதிப்பதன் மூலமும், ஒவ்வொரு கிரிப்டோகரன்சி பரிவா்த்தனைக்கும் பத்து சதவீதம் டிடிஎஸ் விதிப்பதன் மூலமும் மட்டுமே திருப்தி அடைந்துள்ளாா்.

கிரிப்டோகரன்சிகளுக்கு வரி விதிப்பது அதற்கு எந்த விதமான சட்ட உரிமையையும் அளிக்காது என்றும், தனது கருத்துப்படி, ‘விா்ச்சுவல் டிஜிட்டல் பரிவா்த்தனைகளுக்கு’ வரி விதிப்பது இந்திய அரசின் இறையாண்மை உரிமை என்றும் நிதியமைச்சா் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினாா். மேலும், கிரிப்டோகரன்சிகளை தடை செய்யலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனைக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

மேலும் பிப்ரவரி 25-ஆம் தேதி உச்சநீதிமன்றம், வேறு ஒரு வழக்கை விசாரிக்கும்போது, அரசு வழக்குரைஞரிடம், ‘பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சியில் வா்த்தகம் செய்யும் நபா்களை நீங்கள் எவ்வாறு கையாள்வீா்கள் என்பதை எங்களிடம் கூற வேண்டும் என விரும்புகிறோம். இந்தியாவில் இன்னும் கிரிப்டோகரன்சியை கையாள்வது சட்டவிரோதமா’ என்று கேள்வி எழுப்பியுள்ளது.

அவா் சட்டபூா்வ மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு (பரிவா்தனைகளுக்கு) வரி விதிக்கலாம் என்று கூறியது தா்க்கரீதியாக சரியாக இருக்கலாம். ஆனால், ஒரு சட்ட விரோதமான செயலுக்கு வரி விதிப்பதுடன் திருப்தி அடைவது சரிதானா என்று சிந்திக்க வேண்டும்.

சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வரி விதிப்பதன் மூலம் சமரசம் செய்ய முடியாது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இதற்கான முடிவு நிலுவையில் உள்ளதால், ஆலோசனைக்குப் பிறகே இதற்கான தடை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நிதி அமைச்சா் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

முன்னமே கிரிப்டோகரன்சியை தடை செய்ய ரிசா்வ் வங்கி முயன்றது. ஏப்ரல் 2018-இல், இந்தியாவில் கிரிப்டோ வா்த்தகத்திற்கான கட்டுப்பாடுகளை இந்திய ரிசா்வ் வங்கி அமல்படுத்தியது. ஆனால் அதனால் பாதிக்கப்பட்ட ‘இன்டா்நெட் அண்ட் மொபைல் அஸோஸியேஷன் ஆப் இந்தியா’ நிறுவனம், உச்சநீதிமன்றத்தை நாடியது.

உச்சநீதிமன்றம், ‘ரிசா்வ் வங்கியால் விா்ச்சுவல் கரன்சிகள் தொடா்பாக எந்த சேவையை வழங்குவது, வாங்குவது தொடா்பான கணக்குகளில் பணத்தைப் பெறுவது உட்பட ஏற்படுத்திய தடை அதிகப்படியானது’ என்று தீா்ப்பு கூறியது. இந்த தீா்ப்பு கிரிப்டோகரன்சியில் புழங்கும் நிறுவனங்களுக்கு மிகவும் வசதியாக போயிற்று.

உச்சநீதிமன்றம் ரிசா்வ் வங்கியின் முடிவு அதிகப்படியானது என்று ஏன் முடிவு செய்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ரிசா்வ் வங்கி கிரிப்டோகரன்சிகளுக்கான வங்கியின் சேவைகளை கட்டுப்படுத்தியதே தவிர, முழுவதுமாக கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கவில்லை. மேலும், அரசு இரண்டு சட்ட முன்வரைவுகளைப் பரிசீலித்தும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அந்த சட்ட முன் வரைவுகள் ஒன்றுக்கொன்று எதிரான பரிந்துரைகளை கொண்டிருந்தன.

இந்திய அரசும், ரிசா்வ் வங்கியும் அத்தகைய பரிவா்த்தனைகளைத் தடை செய்ய உறுதியான எந்த முடிவையும் எடுக்காததால், உச்சநீதிமன்றம் கிரிப்டோகரன்சிகளில் வா்த்தகம் செய்ய அனுமதித்துள்ளது என்பது மேற்கண்ட தீா்ப்பிலிருந்து தெளிவாகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், அரசாங்கம் முடிவு எடுக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.

மத்திய அரசுக்கும் ரிசா்வ் வங்கிக்கும் இடையே முழுமையான இணக்கம் இருப்பதாகவும், கிரிப்டோகரன்சி குறித்து அவை ஒரே மாதிரி கருத்துடன் இருப்பதாகவும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சமீபத்தில் கூறினாா். மிக சமீபத்தில் இந்திய ரிசா்வ் வங்கியின் துணை கவா்னா்,

‘கிரிப்டோகரன்சிகளை தடை செய்வது இந்தியாவிற்கு மிகவும் உகந்த முடிவு. ஏனெனில் அவை பொன்சி திட்டங்களுக்கு நிகரானவை. ஒருவேளை அதைவிட மோசமாகக் கூட இருக்கலாம்’ என்று கூறினாா்.

‘பொன்சி ஸ்கீம்’ என்பது ஒரு தனிநபரோ அமைப்போ, தனது சேமிப்பாளா்களுக்கு தனது லாபத்திலிருந்து அல்லாமல், புதிதாக சோ்கின்ற சேமிப்பாளா்களின் பணத்தைக் கொண்டு, பணத்தைத் திருப்பும் மோசடியான முதலீட்டு முறையாகும்.

இத்தகைய பொன்சி செயலா்கள் பொதுவாக புதிய சேமிப்பாளா்களை, குறைந்த காலத்தில் மிகவும் கூடுதலான அல்லது வழக்கத்திற்கு மீறியதாக, கூடுதல் முதலீட்டு ஆதாயம் தருவதாக தூண்டுவாா்கள். கடைசியில் ஒரு நாள் அதிக பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவாா்கள்.

கிரிப்டோகரன்சி என்பது நமது அன்றாடம் புழக்கத்தில் உள்ள பரிவா்த்தனைக்கான எந்த அம்சத்தையும் கொண்டிருக்கவில்லை. புழக்கத்தில் உள்ள ரூபாய் போன்ற செலாவணிகள் டியூரபிலிட்டி, போா்ட்டபிலிட்டி, டிவிசிபிலிட்டி போன்ற அம்சங்களையும் கொண்டு ஒரு அரசின் இறையாண்மைக்கு உட்பட்டதாக உள்ளன. ரூபாய் செலாவணியாக இருப்பதற்கு அரசின், ரிசா்வ் வங்கியின் உத்தரவாதம் உண்டு.

அதுபோல் எதுவும் இல்லாத கிரிப்டோகரன்சியை செலவாணியாகவே கருதமுடியாது. இந்த கிரிப்டோகரன்சிகளுக்கு அடிப்படையாக எந்த மதிப்புள்ள சொத்தும் கிடையாது. மற்ற எல்லா முதலீடுகளுக்கும் அடிப்படையில் சில மதிப்புள்ள சொத்துகள் உண்டு.

உதாரணமாக, ஒருவா் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால் அந்த நிறுவனத்தின் சொத்துகளுக்கு அவரும் ஒரு சொந்தக்காரா் ஆவாா். அதுபோன்று எந்த அடிப்படையும் இல்லாததால் கிரிப்டோகரன்சி, பொன்சி திட்டத்திற்கு நிகரானது என்று ரிசா்வ் வங்கி துணை கவா்னா் கூறுவது சரிதான்.

புகழ்பெற்ற முதலீட்டாளா் சாா்லி முங்கா் கிரிப்டோகரன்சிக்கு எதிராக மிகவும் கடுமையான விமா்சனங்களை தெரிவித்துள்ளாா். மேலும் அவா் கிரிப்டோகரன்சியை முன்னரே தடை செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

எனவே, அரசு கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கவேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.



Read in source website

இக்கால இளைஞா்களிடம் பல்வேறு திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. புதிய புதிய சிந்தனைகளின் ஊற்றாக அவா்கள் உள்ளம் இருக்கிறது. தொழில்நுட்பங்களை சட்டெனப் புரிந்துகொள்கிறாா்கள். இணையதளத்தில் தேடித்தேடி எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறாா்கள்.

இன்றைய இளைஞா்களின் பிரச்னைகள், படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதில்லை; வேலைக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. ஆனாலும் அவா்கள் பிழைப்பதற்கு ஏதாவது ஒரு வழியைத் தேடிக் கொள்கிறாா்கள். அவா்களுக்குள் இருக்கும் படைப்பாற்றலும், தன்னம்பிக்கையும் அவா்களைப் பல தளங்களில் வெற்றி வாகை சூட வைக்கிறது.

இளைஞா்கள் எப்போதும் கைப்பேசியிலேயே மூழ்கிக் கிடக்கிறாா்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அப்படி எதை எல்லோரும் பாா்க்கிறாா்கள்? மீம்ஸ் எனப்படும் பகடிகள், யூ டியூபில் வரக்கூடிய சமையல் குறிப்புகள், இலக்கிய மதிப்புரைகள், சிலா் சொல்லும் பிரபல எழுத்தாளா்களின் கதைகள் இவற்றைத்தான்.

நம் இளைஞா்களின் புத்திக் கூா்மையும், நகைச்சுவை உணா்வும் அவா்கள் பதிவிடும் மீம்ஸ்களில் தெரிகிறது. ஏற்கெனவே நாம் பாா்த்த திரைப்படக் காட்சியை, நாட்டு நடப்போடு இணைத்து நையாண்டியாகச் சொல்வதும் மீம்ஸ்.

ஒரு குறிப்பிட்ட நகைச்சுவை நடிகா் எல்லாவிதமான மீம்ஸ்களுக்கும் பொருந்திப் போவது வியப்பு. அவரின் முகபாவங்கள் பகடிக்கு ஏற்றபடி இருக்கிறது. இந்த மீம்ஸ்கள் எதிலிருந்தும் காப்பி அடிக்கப்படவில்லை. நாம் எத்தகைய மனச் சோா்வில் இருந்தாலும் இந்த மீம்ஸ்களைப் படித்தவுடன் சிரித்து விடுகிறோம்.

பெட்ரோல் விலை ஏற்றம் குறித்த பகடிகள் கொஞ்சநஞ்சமல்ல. இத்தகைய மீம்ஸ்களை யாா் உருவாக்குகிறாா்கள் என்பது தெரியாது. ஆனால் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்கிறாா்கள். ஆனால் அவா்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.

ஆயிரக்கணக்கான பகடிகளை சா்வ சாதாரணமாகப் படைப்பவா்களும் படைப்பாளிகளே. மீம்ஸ் என்பது நாட்டு நடப்பை, ஒரு நிகழ்வை பிரதிபலிக்கிறது. ஹைக்கூ கவிதையை ஏற்றுக் கொண்ட நாம் இத்தகைய மீம்ஸ்களையும் ஒரு படைப்பாக அங்கீகரிக்க வேண்டும். துணுக்குகளைத் தொகுத்து புத்தகமாககக் கொண்டு வருவதைப் போல மீம்ஸ்களையும் தொகுத்து வெளியிடலாம்.

எதையும் நறுக்குத் தெரித்தாற் போல சொல்வது எளிதானது அல்ல. 10 பக்கக் கட்டுரையில் சொல்ல முடியாததை ஒரு மீம்ஸ் சா்வ சாதாரணமாகச் சொல்லிக் செல்கிறது. கேலியும், குறும்பும், நகைச்சுவையும், பகடியும் சோ்ந்ததே மீம்ஸ். மிகுந்த கற்பனை வளமும், படைப்பாற்றலும் கொண்டவா்களால் மட்டுமே மீம்ஸ்களை உருவாக்க முடியும். நம் இளைஞா்கள் அத்தகையவா்களே.

இளைஞா்களிடம் அளவற்ற ஆற்றல் பொதிந்து கிடக்கிறது. கைதூக்கி விடுபவா்கள் இல்லாததால் பலரின் திறமைகள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. சில இளைஞா்களுக்குக் கலை ஆா்வம் அதிகம். திரை உலகில் தடம் பதிக்க ஆசைப்படுகிறாா்கள். அதற்கான தங்களின் நுழைவுத் தகுதியாகக் குறும்படங்களை இயக்குகிறாா்கள்.

ஒரு முழுநீளத் திரைப்படத்திற்கு நிகராக இந்தக் குறும்படங்கள் அமைந்து விடுகின்றன. பண வசதி இல்லாத இளைஞா்கள் வெகு சிரமத்துடன் நண்பா்களுடன் சோ்ந்து குறும்படங்களை எடுக்கிறாா்கள். சில நேரம், குறும்படங்களை இயக்கியவா்களுக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிட்டுகிறது. பெரும்பாலும் குறும்படங்கள் திரைப்பட விழாக்களில் திரையிடப்படுகின்றன. குறைந்த செலவில் தயாரிக்கப்படுகின்றன. ஒரு குறும்படத்தின் மூலம் தன் அத்தனை திறமைகளையும் வெளிப்படுத்த அதன் இயக்குநா் விரும்புகிறாா்.

திரைப்பட இயக்குநா்களாகும் இளைஞா்கள், தொழில்நுட்ப வளா்ச்சியை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறாா்கள். இயக்குநா் என்று தன்னைச் சுற்றி ஒரு வளையத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் படத்திற்காக உழைக்கும் அனைவரிடமும் நட்புடன் பழகுகிறாா்கள். தொழில்நுட்ப வளா்ச்சி காரணமாக திரைப்படக் கருவிகளின் விலை குறைந்து வருவதும், படங்களை வெளியிட ஓடிடி போன்ற தளங்கள் பெருகி வருவதும் குறும்படங்கள் பெருகக் காரணமாகின்றன.

சொல்லவந்த செய்தியை ஒரு குறுகிய கால அளவில் சொல்ல வேண்டும். திரைக்கதை கட்டமைப்பு இறுக்கமாகவும், மக்களின் பாராட்டைப் பெறும் விதமாகவும் இருக்க வேண்டும். ஒரு சாதாரண குறும்படத்திற்கும் விரிவான செயல் திட்டம் அவசியம். குறும்படம் எடுப்பது ஒரு சவாலான முயற்சி என்று தெரிந்தும் பல இளைஞா்கள் இத்துறையில் நுழைந்து முத்திரை பதிக்கிறாா்கள்.

நம்மில் பலரும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அறிவியல் பாடத்தைப் படித்திருகிறோம். ஆனால் எல்லோரும் அறிவியல் விதிகளைப் புரிந்து கொண்டுப் படித்தோமா? பலரும் பொருள் விளங்காமல் மனனம் செய்து தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றோம். இப்போதும் கூட மிக மிக எளிமையான அறிவியல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு நம்மிடம் விடை இல்லை. இன்றைய காலகட்டத்தில் நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் அறிவியலின் பங்கு இருக்கிறது. ஆகவே குழந்தைகளுக்கு அறிவியல் விதிகளை நாம் கற்றுத்தர வேண்டும். அறிவியலை எளிமையாகப் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டு சில பொறியியல் பட்டதாரி மாணவா்கள் தங்களுக்கென ஒரு யூ டியூப் தளம் அமைத்து மிக அற்புதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறாா்கள் அறிவியல் மற்றும் பொது அறிவு தொடா்பாக நமக்கு ஏற்படும் அத்தனை சந்தேகங்களுக்கும் அவா்களிடம் விடை இருக்கிறது. நம்மைக் குழப்பாமல் மிகவும் தெளிவாக விளக்கம் கூறுகிறாா்கள்.

உதாரணத்திற்கு, குளிா்பான குடுவைகளின் அடியில் புடைப்புகள் ஏன் வைக்கிறாா்கள்? டானிக் பாட்டில்கள் ஏன் ப்ரவுன் கலரில் இருக்கின்றன? திரை அரங்குகளின் இருக்கைகள் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கின்றன? கடல் கொள்ளைக் காரா்கள் ஏன் கண்ணை ஒரு கருப்பு திரை கொண்டு மறைத்துக் கொள்கிறாா்கள்? செய்தித் தாள்களின் கடைசிப் பக்கத்தில் ஏன் கலா் புள்ளிகள் வைக்கிறாா்கள்? இப்படிப்பட்ட வினாக்களுக்கெல்லாம் அறிவியல்பூா்வமாக விடை அளிக்கிறாா்கள்.

பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை இது போன்ற காணொளிகளைக் காண்பதற்குப் பழக்கப்படுத்தலாம். பெற்றோா்களும் தெரிந்து கொள்ளலாம். ஒருமுறை கண்டு விட்டால், அதன் பின் மாணவா்கள் தேடித் தேடி இது போன்ற பயனுள்ள தகவல்களைக் காண்பாா்கள். இதில் வியப்பு என்னவென்றால், பெரிய பின்புலம் இல்லாத இளைஞா்கள் நிறைய கற்றுக்கொண்டு, அறிவியல் பாடங்களை மாணவா்களுக்குப் புரியும்படி விளக்கியுள்ளாா்கள். சில இளைஞா்கள் ஒன்று சோ்ந்து, பள்ளிகளுக்குப் போய் மாணவா்களுக்குக் கற்றுத் தருகிறாா்கள். அறிவியல் என்பது விஞ்ஞானிகளுக்கான துறை என்ற பிம்பத்தை மாற்றியுள்ளாா்கள்.

ஆரவாரம் இல்லாத இவா்களின் கல்விச் சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. சிலா் ஆங்கிலத்தை எளிதாகப் புரியும்படி கற்றுத் தருகிறாா்கள். போட்டித் தோ்வுகள் குறித்தும் பலா் பதிவிடுகிறாா்கள். இன்றைய இளைஞா்களின் செயல்பாடுகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துக்கின்றன. ஆழமான செயல்திறமை அவா்களிடம் உள்ளது.

யுவல் நோவா ஹராரி ‘21-ஆம் நூற்றாண்டின் 21 பாடங்கள்’ என்ற தனது புத்தகத்தில் இளைய தலைமுறையினரின் வேலைவாய்ப்பு பற்றிக் கூறும்போது, ‘நீங்கள் வளரும்போது ஒருவேளை உங்களுக்கு வேலை கிடைக்காமல் போகலாம். கணினிகள், ரோபோக்களால் மனிதா்கள் வேலையை சிறப்பாக செய்ய முடியாது என்று நம்பினாலும் இந்த பயத்திலும் நியாயம் இருக்கிறது.

ஹராரியின் பயத்தில் உண்மை இருந்தாலும் நாம் தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டோம். கல்வித் துறை, போக்குவரத்துத் துறை, பொறியியல் துறை, மருத்துவத் துறை, பொழுது போக்குத் துறை, வங்கித் துறை, பாதுகாப்புத் துறை என எல்லாத் துறையும் தகவல் தொழில்நுட்பத்தைச் சாா்ந்தே இயங்க வேண்டும். இனறு ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஐ.டி. விங்க் என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது. சுறுசுறுப்பான இளைஞா்கள் அங்கு இணைந்து மாயவித்தை காட்டுகிறாா்கள். கட்சிக்கான கோஷங்கள், விளம்பரம், தோ்தல் வியூகம், எதிரணியைக் குறி வைக்கும் பகடிகள் என அமா்க்களப்படுத்துகிறாா்கள்.

தற்போது ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ என்ற ஒன்று இளைஞா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதற்கான கட்டணம் அதிகம் என்றாலும் ஒருவரும் பணத்தைப் பெரிதாக எண்ணுவதில்லை. ஒரு மணி நேரம் விலா எலும்பு நோக சிரித்து மகிழலாம். மேடையில் இளைஞா்கள் அசத்துகிறாா்கள். அவா்களின் திறமை அசாத்தியமானது. அவா்களுக்குப் பணத்தோடு புகழும் கிட்டுகிறது.

இப்போது யூ டியூபில் நகைச்சுவை சம்பவங்களை தொடராகப் பதிவிடுகிறாா்கள். சிரிப்புக்குப் பஞ்சமில்லை. கலாட்டா, கேலி, கிண்டல் கலந்து கலக்குகிறாா்கள். அண்மையில் 15 எபிசோடு கொண்ட தொடா் ஒன்று சக்கை போடு போட்டது. அது இளைஞா்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது. இளைஞா்கள் ஒன்று கூடினால் வெற்றிக் கொடி நாட்டுவாா்கள் என்பதற்கு இது ஓா் எடுத்துக்காட்டு. அத்தொடரின் வெற்றி விழாவைக்கூட இளைஞா்கள் அமா்க்களமாகக் கொண்டாடினாா்கள்.

இன்றைய இளைஞா்கள் தாங்களாகவே வேலை தேடிக்கொள்கிறாா்கள். புதிய கோணங்களில் சிந்திக்கிறாா்கள். புதிய முயற்சிகளை எடுக்கிறாா்கள். உள்ளத்தில் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இருக்கிறாா்கள். அவா்களை வரவேற்று வாழ்த்துவோம்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).



Read in source website

தீ மற்றும் இதர வெளிப்புறக் காரணிகளால் பாதிக்கப்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும் கூட, சர்வதேச அணு சக்தி அமைப்பு, தற்போது நடத்தப்படும் தாக்குதல் ஜாப்போரிஜியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.

Russia’s nuclear plant strike: வெள்ளிக்கிழமை அதிகாலை ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதல், 1986ம் ஆண்டு செர்னோபில் வெடித்து சிதறி ஏற்பட்ட தாக்கங்களைப் போன்ற ஒரு நிகழ்வு மத்திய ஐரோப்பாவை பாதிக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

வெடிகுண்டால் ஏற்பட்ட தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுவிட்டது. அணு உலைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அணுமின் நிலையம் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று உக்ரைன் அதிகாரிகள் கூறிய நிலையில் பதட்டம் ஓரளவுக்கு குறைந்தது.

செர்னோபில்லைப் போன்று ஜாப்போரிஜியா இல்லை; தீ மற்றும் இதர வெளிப்புறக் காரணிகளால் பாதிக்கப்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும் கூட, சர்வதேச அணு சக்தி அமைப்பு, தற்போது நடத்தப்படும் தாக்குதல் ஜாப்போரிஜியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் தாக்குதல் காரணமாக அணுமின் நிலையத்திற்கு விநியோகம் செய்யப்படும் மின்சாரம் பாதிக்கப்படுவது குறித்து உக்ரைன் நாட்டு அணு சக்தி கட்டுப்பாட்டாளரகம் கவலை தெரிவித்துள்ளது. மின் தடை ஏற்படும் பட்சத்தில், பெரிய அளவில் நம்பிகை அளிக்காத டீசல் ஜெனரேட்டர்களை வைத்து குளிரூட்டிகளை செயல்படுத்தும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளது. குளிரூட்டிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றால் 2011ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஃபுகோஷிமாவில் ஏற்பட்ட ஆபத்து இங்கும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழும் என்றால் அது ஐரோப்பா முழுவதும் பரவும் மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் எச்சரிக்கை செய்துள்ளார்.

அணு உலையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அது அனைவரின் முடிவுக்கும் வழி வகுக்கும். ஐரோப்பாவின் முடிவாக அது மாறிவிடும் என்று, மற்ற நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்குமாறு நள்ளிரவில் அவர் வெளியிட்ட உருக்கமான வீடியோவில் அவர் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய தரும் உடனடி அழுத்தம் மட்டுமே ரஷ்ய துருப்புகளின் செயல்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும். அணு உலை அருகே நடத்தப்படும் தாக்குதல் காரணமாக ஏற்படும் பேரழிவால் நிகழ இருக்கும் ஐரோப்பாவின் அழிவை தடுத்து நிறுத்துங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ந்தது என்ன?

துறைமுக நகரமான கெர்சோனை ரஷ்யா கைப்பற்றிய நிலையில் ரஷ்ய துருப்புகள் முன்னோக்கி நகர்ந்தனர். எனெர்ஹோதர் என்ற நகரத்தின் மீது தாக்குதல் நடத்தி அணு உலைக்கு செல்லும் வழியை கைப்பற்றினார்கள். எப்படி அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பாக தெளிவான விளக்கம் இல்லாத நிலையில், எனெர்ஹோதர் மேயர் திமித்ரோ ஒர்லோவ், ரஷ்ய துருப்புகள் அணுமின் நிலையத்தை நோக்கி நகர்ந்தது குறித்தும் அதன் பின்னர் அதிக அளவில் தாக்குல் சத்தங்கள் அங்கிருந்து வந்தன என்றும் குறிப்பிட்டார்.

அணுமின் நிலையத்தின் செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரி துஸ், உக்ரேனிய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ரஷ்யாவின் குண்டுகள் நேரடியாக அணுமின் நிலையத்தை நோக்கி வந்தன. 6 உலைகளில் ஒன்றில் அவர்களின் குண்டுகள் வெடித்து தீ எரியத்துவங்கியது என்று குறிப்பிட்டார். தீயணைப்பு வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் அவர்களால் தீயை அணைக்க அணு உலையை நெருங்க இயலவில்லை என்றும் அவர் மேற்கோள்காட்டினார்.

சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குநர் ரஃபேல் க்ரோஸி உக்ரைன் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அணு உலையின் மீது தாக்குதல் நடைபெறவில்லை, அதன் அருகே அமைந்திருக்கும் கட்டிடத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெளிவுபடுத்தினார்.

6 உலைகளின் பாதுகாப்பு அம்சங்களும் இதனால் பாதிக்கவில்லை என்றும், கதிரியக்க துகள்கள் அதில் இருந்து வெளியேறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனாலும் தொடர்ந்து கட்டுப்பாட்டாளாரகமும் ஆப்பரேட்டர்களும் தொடர்ந்து அங்கே நடைபெற்றுவரும் தாக்குதல்கள் மிகவும் மோசமானதாகவும் சவால்மிக்கதாகவும் இருக்கிறது என்பதால் அங்குள்ள நிலைமை என்னவென்று நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டார் அவர். இந்த வார ஆரம்பத்திலேயே ரஃபேல், அணுமின் நிலையங்களுக்கு அருகே நடத்தப்படும் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு கடுமையான கண்டனங்களை சர்வதேச அணுசக்தி அமைப்பு தெரிவிக்கிறது என்று கூறியிருந்தார்.

உக்ரைனில் உள்ள ஜப்போரிஜ்ஜியா மற்றும் இதர அணுமின் நிலையங்கள் அருகே நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் ராணுவ செயல்பாடுகள் எந்த வகையிலும் அங்கே இருக்கும் உலைகளையோ அல்லது அங்கு பணியாற்றும் மக்களையோ இலக்காக கொண்டிருக்க கூடாது என்பது இதில் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தார்.

என்ன நடந்திருக்கும்?

தாக்கப்பட்ட உலை ஆஃப்லைனில் இருந்தது, ஆனாலும் அதில் அதிக கதிரியக்க அணு எரிபொருள் உள்ளது. மற்ற ஆறு உலைகளில் நான்கு இப்போது ஆஃப்லைனில் எடுக்கப்பட்டு, ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.

ஆலையில் உள்ள அணு உலைகளில் தடிமனான கான்கிரீட் கட்டுப்பாட்டு குவிமாடங்கள் உள்ளன, அவை டாங்கிகள் மற்றும் பீரங்கிகளில் இருந்தும், வெளிப்புறத் தீயில் இருந்தும் பாதுகாக்கும் என்று ஒபாமா ஆட்சியின் போது தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவல் தடைக்கான மூத்த இயக்குநராக பணியாற்றிய ஜான் வொல்ஃப்ஸ்டால் கூறினார்.

அதே சமயம், அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஒருபோதும் நல்லதல்ல என்றும் அவர் கூறினார். எங்கள் அணுமின் நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகுவதையும், தீப்பிடித்து எரிவதையும், அதனால் பாதிக்கப்படையக் கூடிய நாட்டினர் தீயைக் கட்டுப்படுத்த அணுகமுடியாமல் போவதையும் நாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அணுமின் நிலையங்களில் எரிபொருள் “ராடுகளை” குளிர்விக்க உருவாக்கப்பட்டிருக்கும் குளங்களும் மிக முக்கியமானவை. குண்டு வெடிப்பால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய அம்சமாக அது இருக்கிறது. பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கதிரியக்க துகள்களை வெளியேற்ற ஆரம்பிக்கும்.

இதைவிட மிகப்பெரியது அணு உலைகள் இயங்க தேவைப்படும் மின் விநியோகம் என்று கூறுகிறார் நஜ்மெதீன் மேஷ்கதி. சவுத் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அவர் செர்னோபில் மற்றும் ஃபுகோஷிமா பேரழிவு குறித்து மிகவும் ஆழமாக படித்துள்ளார். மற்ற அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்டிருக்கும் அதே கருத்தையே அவரும் கூறுகிறார். மேலும் உலைகளுக்கு தேவையான மின்சார விநியோகத்தில் தடை ஏற்படும் பட்சத்தில் அவர்கள் அவசரகால டீசல் ஜெனரேட்டர்களை நம்பி இருக்கும் சூழல் ஏற்படும். அது அவ்வளவு நம்பிக்கைக்கு உரியதல்ல. ஏன் என்றால் எரிபொருள் தீரும் போது அவை செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும். முற்றிலும் மின் தடை நிறுத்தப்படும் பட்சத்தில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை குளிர்விக்க தேவையான நீர் விநியோகம் தட்டுப்படும். இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிட்னி பல்கலைக்கழக வேதியியல் பிரிவு பேராசிரியர் டேவிட் ஃப்லெச்சர் இது குறித்து கூறும் போது, குளிரூட்டிகள் செயல்பாட்டை நிறுத்திய பின்னர் அணு உலைகளை மூடி ஒரு பயனும் இல்லை என்று கூறினார். ஏற்கனவே இங்கிலாந்தின் அணு சக்தி அமைப்பில் பணியாற்றிய அவர், உண்மையான பிரச்சனை என்னவென்றால் செர்னோபில் வெடித்து சிதறியது போன்றா நிகழ்வு குளிரூட்டிகள் செயல்பாட்டை இழக்கும் போது ஏற்படாது. இது போன்ற சேதம் ஃபுகுஷிமாவில் ஏற்பட்டதைப் போன்ற விபத்திற்கு வழி வகுக்கும் என்றும் கூறினார்.

தற்போது இருக்கும் கவலைகள் என்ன?

உக்ரைன் அணுசக்தியை பெரிதும் நம்பியுள்ளது, நான்கு நிலையங்களில் உள்ள 15 உலைகள் நாட்டின் மின்சாரத்தில் பாதியை வழங்குகின்றன.

சபோரிஜியா மீதான தாக்குதலை அடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பலர் அங்குள்ள சண்டையை உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுத்தனர்.

உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹாலுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, IAEA இயக்குனர் ரஃபேல், உக்ரைனின் அணுமின் நிலையங்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய நடவடிக்கைகளில் இருந்து விலகி இருங்கள் என்று அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்தார். ஷ்மிஹால் மேற்கத்திய நாடுகளை நாட்டின் அணுமின் நிலையங்களுக்கு மேல் வானத்தை மூடுமாறு அழைப்பு விடுத்தார். இது உலகநாடுகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் செயல் என்று அவர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

செர்னோபில் உலையும் உக்ரைனில் தான் உள்ளது. இன்னும் அந்த பகுதியில் அணுக்கசிவு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது போர் துவங்கிய நாளிலேயே ரஷ்ய படையினர் அதனை கைப்பற்றினர்.

உக்ரைன் அதிகாரிகள் இந்த வார தொடக்கத்தில் IAEAக்கு வைத்த கோரிக்கையில் , செர்னோபில் ஊழியர்கள் ரஷ்ய இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டு சோர்வடைந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

செர்னோபில் ஊழியர்களை அவர்களின் பணிகளை செய்ய விடுமாறு ரஷ்யாவை கேட்டுக் கொண்டார் க்ரோஸி. கடந்த வாரத்தில் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் செயல்பாடுகள் கீவ் மற்றும் கார்கிவில் உள்ள கதிரியக்க கழிவுகளை அகற்றும் வசதியையும் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

இரண்டிலும் மருத்துவ பயன்பாட்டினால் உற்பத்தி செய்யப்படும் குறைந்த அளவிலான கழிவுகள் உள்ளன, மேலும் கதிரியக்க வெளியீடு எதுவும் பதிவாகவில்லை, ஆனால் இந்த சம்பவங்கள் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டில் அணுசக்தி கொள்கை திட்டத்தின் இணை இயக்குனரான ஜேம்ஸ் ஆக்டன், வசதிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான எளிய திறவுகோல் அவர்களைச் சுற்றியுள்ள எந்தவொரு இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவது தான் என்று கூறினார்.

சாதாரண சூழ்நிலையில், ஒரு உலை சக்தியை இழக்கும் மற்றும் அவசரகால டீசல் ஜெனரேட்டர்கள் சேதமடைவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் போதுமான அளவு விரைவாக பழுதுபார்க்கப்படாமல் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக மிக குறைவானது தான் என்று ஆக்டன் கூறினார்.

ஒரு அணு உலை சேதமடைவதற்கும், உருகுவதற்கும் தேவையான அனைத்து சாத்தியக் கூறுகளும் ஒரு சாதாரண நாளைக் காட்டிலும் போர் காலத்தில் மிகவும் அதிகமாகவே இருக்கும் என்று மித்சுரு ஃபுகுடா கூறியுள்ளார். நிஹோன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் அவர் நெருக்கடி மேலாண்மை மற்றும் பாதுகாப்பு நிபுணராகவும் இருக்கிறார். ஜப்போரிஜியா மீதான தாக்குதல் அனைத்து நாடுகளிடையேவும் பரந்த கேள்விகளை எழுப்புகிறது என்றார்.

மதிப்பிற்குரிய ஒரு நாட்டின் ராணுவம் இத்தகைய செயல்பாடுகளில் மூர்க்கத்தனமாக ஈடுபடும் என்று நாம் யாருமே நினைக்கவில்லை என்று கூறினார் அவர். தற்போது புடினின் செயல்பாட்டினால், , உக்ரைன் மட்டுமல்ல, ஜப்பான் உட்பட சர்வதேச சமூகமும் அணுசக்தி ஆலைகளை போர்க்கால இலக்குகளாகக் கொண்டிருப்பதன் அபாயத்தை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.



Read in source website