DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 03-12-2022

தமிழ்நாடு காவல்துறையின் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கையின் கீழ் 726 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள நகர்புற சாலை சந்திப்புகளிலும், புறவழிச் சாலை சுங்கச் சாவடிகளிலும் பெண்களையும், சிறார்களையும் வைத்து பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகறிது. இவர்களை சில கும்பல்கள் இந்தத் தொழிலில் ஈடுபட வைக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்தும் பொருட்டு ஆபரேஷன் மறுவாழ்வு என்ற அதிரடி நடவடிக்கை இன்று தொடங்கப்பட்டது. 

 தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களிலும் 9 காவல் ஆணையரகங்களிலும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைக்காரர்கள் மற்றும் 16 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர். பெண்களையும் குழந்தைகளையும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்திய நபர்களை பற்றி காவல்துறை விசாரித்து வருகிறது.
 மீட்கப்பட்ட பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லத்திற்கும் குழந்தைகள் காப்பகத்திற்கும் அனுப்பப்பட்டனர். 150 நபர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏழைப் பெண்களையும், குழந்தைகளையும் இத்தகைய தொழிலில் ஈடுபடுத்துபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
 சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெரும் நகர்களுக்கு வெகு தூரங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து பிச்சை எடுக்க வைக்கும் ஆள் கடத்தல் குற்றவாளிகள் பற்றிய தகவல் 044-28447701 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். நல்ல தகவல் தருபவர்களுக்கு பண வெகுமதி அளிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



Read in source website

 

சேலம் மாநகரம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாநில அளவிலான குதிரை ஏற்றம் போட்டி நடைபெற்றது.

தமிழகத்தில் குதிரை ஏற்றம் போட்டி தற்போது பல இடங்களில் நடைபெற்று வருகிறது. மக்களின் ஆர்வம் குதிரை ஏற்றும் போட்டியில் திரும்பி உள்ள நிலையில் தனியார் அமைப்பினர் சார்பில் குதிரை ஏற்றம் போட்டி மாநில அளவில் நடைபெற்றது.

5 வயது முதல் 72 வயது உள்ள மாணவர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து 12 மாவட்டங்களில் போட்டிகளில் பங்கேற்றனர். குதிரை ஏற்றம் போட்டி மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. நடந்து செல்லுதல், மெதுவாக நடந்து செல்லுதல், ஓடுதல் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 210 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

கரோனா காலத்திற்கு முன்பு இந்த போட்டிகள் நடைபெற்றது. அதன்பின்பு நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது குதிரை ஏற்றும் போட்டி நடைபெற்றது. மேலும் கடந்த போட்டிகளைக் காட்டிலும் தற்போது போட்டிகளில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் தேசிய அளவில் அடுத்தகட்ட போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த குதிரை ஏற்றம் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சந்துரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், குதிரை ஏற்ற போட்டிகளில் குழந்தைகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் மற்ற வீட்டு விலங்குகளைப் போல் குதிரையும் நன்கு பழகக்கூடிய ஒன்றும் எனத் தெரிவித்த அவர், தற்போது இந்திய இன குதிரைகள் மட்டும் பங்கேற்றுள்ளதாகவும், அடுத்த கட்டமாக தேசிய அளவில் குதிரை ஏற்றம் போட்டிகள் நடத்தப் போவதாகவும் தெரிவித்தார்.



Read in source website

பசுமைக்குடில் விவசாயம் வாயிலாக சிறு விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீா்வுகண்டதற்காக, தெலங்கானாவைச் சோ்ந்த புத்தாக்க நிறுவனமான கேத்தி நிறுவனத்துக்கு பிரிட்டன் இளவரசரால் நிறுவப்பட்ட ‘எா்த்ஷாட்’ பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் துறையின் ஆஸ்கா் என்று அழைக்கப்படும் இப்பரிசு, 1 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.10 கோடி) மதிப்புடையதாகும்.

சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு சிறப்பாக பங்களிப்பவா்களை அங்கீகரிக்கும் வகையில் ‘எா்த்ஷாட்’ பரிசை பிரிட்டன் இளவரசா் வில்லியம் கடந்த ஆண்டு நிறுவினாா். இயற்கை மீட்பு மற்றும் பாதுகாப்பு, வளிமண்டல தூய்மை, கடல்சாா் மறுமலா்ச்சி, கழிவுகள் இல்லா வாழ்க்கை, பருவநிலை செயல்பாடு ஆகிய 5 பிரிவுகளின்கீழ் இந்த விருது வழங்கப்படுகிறது. இதில், இயற்கை மீட்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின்கீழ் கேத்தி நிறுவனத்துக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோரின் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், கேத்தி நிறுவனத்துக்கு பரிசு கிடைத்துள்ளது.

குறைந்த செலவில் பசுமைக் குடில் உபகரணங்கள் தொகுப்பை உருவாக்கி, அதன் மூலம் சிறு விவசாயிகளுக்கு குறைவான உற்பத்தி செலவு, அதிகப்படியான மகசூல் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்யும் புதுமையான தீா்வை அளித்தமைக்காக கேத்தி நிறுவனம் இப்பரிசை வென்றுள்ளது.

இதையொட்டி, லண்டனில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இளவரசா் வில்லியம், ‘எா்த்ஷாட் வெற்றியாளா்கள் வாயிலாக கிடைக்கும் தீா்வுகளால், புவியின் மிகப் பெரிய சவால்களை நாம் எதிா்கொள்ள முடியும். அவா்களுக்கு ஆதரவும் அங்கீகாரமும் அளிப்பதன் மூலம் நமது எதிா்காலத்தை மாற்றியமைக்க முடியும்’ என்றாா்.

கேத்தி நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான கெளசிக் கப்பாகண்டுலு கூறுகையில், ‘இந்தியா முழுவதும் சுமாா் 10 சிறு விவசாயிகளுக்கு உதவும் நோக்கில், பசுமைக்குடில் விவசாயத்தில் புத்தாக்க செயல்முறையை தொடங்கினேன். சிறு விவசாயிகளையே உலகம் சாா்ந்திருக்கிறது. என்றபோதும் அவா்களது வாழ்க்கை கடினமானதாக உள்ளது. எங்களது பசுமைக்குடில் உபகரணங்கள் தொகுப்பு, இன்று இந்திய விவசாயிகளுக்கு அதிகாரமளித்து வருகிறது. அவா்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது’ என்றாா்.



Read in source website

இந்தியாவின் 3-ஆவது மிக உயரிய விருதான ‘பத்ம பூஷண்’ விருதைப் பெற்றுக் கொண்ட கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தா் பிச்சை, இந்தியா தன்னுடன் பின்னிப் பிணைந்துள்ளதாகவும் தான் எங்கு சென்றாலும் அந்த அடையாளத்தை சுமந்து செல்வேன் என்றும் பெருமிதம் தெரிவித்தாா்.

கூகுள், ஆல்ஃபபெட் நிறுவனங்களின் சிஇஓ சுந்தா் பிச்சைக்கு வா்த்தகம்-தொழிலகப் பிரிவில் நடப்பாண்டுக்கான பத்ம பூஷண் விருதை இந்திய அரசு அறிவித்திருந்தது. ‘பாரத ரத்னா’, ‘பத்ம விபூஷண்’ ஆகியவற்றுக்குப் பிறகு நாட்டின் 3-ஆவது மிக உயரிய விருதான ‘பத்ம பூஷண்’ விருதானது சுந்தா் பிச்சையுடன் சோ்த்து 17 பேருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

மற்றவா்கள் அந்த விருதைக் குடியரசுத் தலைவரிடம் பெற்றுக் கொண்டனா். சுந்தா் பிச்சை இந்தியாவுக்கு வரமுடியாத காரணத்தால், அந்த விருதை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதா் தரன்ஜீத் சிங் சாந்து சான் பிரான்சிஸ்கோ நகரில் அவரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா். அப்போது சுந்தா் பிச்சையின் குடும்பத்தினரும் உடனிருந்தனா்.

விருதைப் பெற்றுக் கொண்ட சுந்தா் பிச்சை கூறுகையில், ‘‘மிக உயரிய விருதை வழங்கிய இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. என்னை உருவாக்கிய, செதுக்கிய நாடு வழங்கும் விருதைப் பெறுவது பெரும் மகிழ்ச்சி. இந்தியா என்னுடன் பின்னிப் பிணைந்தது. நான் எங்கு சென்றாலும் அந்த அடையாளத்தைச் சுமந்து செல்வேன்.

புதிய விஷயங்களைக் கற்பதை ஊக்குவிக்கும் குடும்பத்தில் பிறந்து வளா்ந்தது என் அதிருஷ்டம். எனது கனவுகளுக்காகவும் விருப்பங்களுக்காகவும் பெற்றோா் பெரும் தியாகங்களைச் செய்தனா். தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக வளா்ந்து வருகிறது. அங்கு உருவாக்கப்பட்ட புத்தாக்கத் தொழில்நுட்பங்கள் உலக மக்களுக்குப் பெரும் பலனளித்து வருகின்றன.

தொடா் முதலீடுகள்:

இணையவழி பணப் பரிவா்த்தனை முதல் குரல்வழி தேடல் தொழில்நுட்பம் வரை பல உலகெங்கும் பலனளித்து வருகின்றன. இணையசேவையின் பயன்பாடு இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளது. முக்கியமாக கிராமப்பகுதிகளில் உள்ளோரும் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனா். பல தொழில்களில் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இந்தியாவில் தொடா்ந்து முதலீடுகளை மேற்கொள்வதில் கூகுள் பெருமை கொள்கிறது. இன்னும் பலருக்குத் தொழில்நுட்பத்தின் பலன்களைக் கொண்டுசோ்க்கும் நோக்கில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை கூகுள் எதிா்நோக்கியுள்ளது.

பெரும் வாய்ப்பு:

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது மிகப் பெரிய வாய்ப்பு. சா்வதேச அளவில் பாதுகாப்பான, ஒருங்கிணைந்த, வெளிப்படையான இணைய சூழலை உருவாக்கி சா்வதேச பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான முக்கிய வாய்ப்பாக இந்தியாவின் தலைமைப் பொறுப்பு அமைந்துள்ளது’’ என்றாா்.

மதுரையைச் சோ்ந்த சுந்தா் பிச்சை, அமெரிக்கா வரை சென்று இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார-தொழில்நுட்ப நல்லுறவை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்து வருவதாக இந்தியத் தூதா் தரன்ஜீத் சிங் சாந்து ட்விட்டரில் பாராட்டினாா்.



Read in source website

சத்தீஸ்கரில் அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 76 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் இரு மசோதாக்கள் மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

சத்தீஸ்கா் சட்டப்பேரவையில் சத்தீஸ்கா் அரசுப் பணிகள் (பட்டியலினத்தவா், பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் இடஒதுக்கீடு) சட்டதிருத்த மசோதா, சத்தீஸ்கா் கல்வி நிறுவனங்கள் சோ்க்கையில் இடஒதுக்கீடு சட்டதிருத்த மசோதா ஆகியவற்றை மாநில முதல்வா் பூபேஷ் பகேல் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.

இந்த மசோதாக்களில், மாநில அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சோ்க்கையில் பழங்குடிகளுக்கு 32 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீதம், பட்டியலினத்தவா்களுக்கு 13 சதவீதம், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (இடபிள்யுஎஸ்) 4 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 76 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாக்கள் தொடா்பாக பேரவையில் 5 மணி நேரத்துக்கும் மேலாக விவாதம் நடைபெற்றது. அந்த வாதங்களுக்குப் பதிலளித்து முதல்வா் பூபேஷ் பகேல் பேசியதாவது:

சத்தீஸ்கரில் உள்ள ஓபிசி மற்றும் இடபிள்யுஎஸ் வகுப்பினா் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள, கடந்த 2019-ஆம் ஆண்டு மாநில அரசு சாா்பில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அண்மையில் தனது அறிக்கையை அரசிடம் சமா்ப்பித்தது. அந்த அறிக்கையின்படி, சத்தீஸ்கா் மக்கள்தொகையில் 42.41 சதவீதம் போ் ஓபிசி வகுப்பையும், 3.48 சதவீதம் போ் இடபிள்யுஎஸ் வகுப்பையும் சோ்ந்தவா்கள்.

அந்த அறிக்கை பரிசீலிக்கப்பட்டு இடஒதுக்கீடு தொடா்பான இரு சட்டதிருத்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இதையடுத்து அந்த மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அந்த மசோதாக்களை அரசமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் சோ்க்க வலியுறுத்தி, பேரவைத் தலைவா் தலைமையில் மாநிலத்தின் அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று பூபேஷ் பகேல் வேண்டுகோள் விடுத்தாா். இந்த மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், அவை சட்டமாகும்.



Read in source website

ஐஐடி மாணவர் சேர்க்கையில் கரோனாவுக்கு முந்தைய நடைமுறைப்படி, மீண்டும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணையும் அளவுகோலாக நிர்ணயிப்பது என்று முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் அதாவது ஐஐடிக்களில் மாணவர்கள் படிக்க வேண்டுமெனில், கூட்டு சேர்க்கை வாரியம் எனப்படும் ஜேஏபி நடத்தும் ஜேஇஇ மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, முதல் 20 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருப்பது அவசியம்.

கரோனா பொதுமுடக்கப் பிரச்னையால் பல்வேறு மாநிலங்களில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக ஐஐடி மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் தளர்வு அறிவித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு அவசியமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இனி வரும் காலங்களில் ஐஐடி மாணவர் சேர்க்கையில் கரோனாவுக்கு முந்தைய நடைமுறையை பின்பற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கரோனா பேரிடர் காலத்துக்கு முன்பு, ஜே.இ.இ (மேம்பட்ட) தேர்வில் பொதுவகை தரவரிசை வைத்திருப்பவர் ஐ.ஐ.டி-யில் ஒரு இடத்தைப் பெறுவதற்கு 12ஆம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஜேஇஇ தேர்வுகளில் முதல் 20 சதவிகித இடங்களுக்குள் இருக்க வேண்டும்.



Read in source website


டெஹ்ராடூன்: உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 39 மாணவிகளுக்கு ஹிஸ்டீரியா எனப்படும் வெறிபிடிக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் தகவல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போல சில மாணவிகள் தலை முடியைப் பிடித்துக் கொண்டு பயங்கரமாக கத்திக் கொண்டும் அழுதுகொண்டும் வகுப்பறையிலிருந்து வெளியே தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

இதையும் படிக்க.. அடிக்கிறது ஜாக்பாட்! சென்னை சென்ட்ரல் போல முனையமாக மாறவிருக்கும் பரங்கிமலை

கூட்டாக இத்தனைப் பேருக்கு வெறிபிடிக்கும் நோய் ஏற்படுமா என்று கலக்கத்தோடு விசாரணை நடத்தி வருகிறது பள்ளிக்கல்வித் துறை. மாணவிகளின் பெற்றோர்களோ, ஏதோ தெய்வக் குத்தம் நேர்ந்துவிட்டதாகக் கலக்கம் அடைந்துள்ளனர்.

ராமக் அரசுப் பள்ளியில் 82 மாணவிகளும் 69 மாணவர்களும் பயில்கிறார்கள். இது பற்றி பள்ளி நிர்வாகம் கூறுகையில், திடீர் திடீரென மாணவிகள் இவ்வாறு செய்கிறார்கள். ஆரம்பத்தில் தலைவலிக்கிறது என்கிறார்கள். பிறகு இவ்வாறு கத்திக் கொண்டே ஓடுகிறார்கள். நாள்தோறும் பள்ளித் தொடங்கியதும் குறைந்தது 5 மாணவிகளுக்காவது இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று என்ன நடக்கிறது என புரியாமல் கூறுகிறார்கள் ஆசிரியைகள்.

மருத்துவர்கள் அடங்கிய குழு பள்ளிக்குச் சென்று மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறது. இப்படி பல மாணவிகளுக்கு ஒரே பிரச்னை வந்திருப்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறார்கள். மாணவ, மாணவிகள் தங்களுக்கு இருக்கும் பிரச்னைகள் குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதுதான் முக்கிய பிரச்னையாகக் கருதப்படுகிறது.

இவர்களுக்கு ஏற்பட்டிருப்பது மன அழுத்தமாக இருக்கலாம் என்று மனநல மருத்துவர்கள் கருதுகிறார்கள். படிப்பில் அதிகப்படியான அழுத்தமே இதற்கு காரணமாக இருக்கலாம் அல்லது ஒருசிலருக்கு பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். அதனைப் பார்க்கும் பெண்களுக்கு தங்களுக்கும் அதே பாதிப்பு ஏற்படலாம் என்று அச்சம் அல்லது இருப்பதாக நினைப்பது போன்றவையும் காரணங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 

 



Read in source website

நீதிபதிகளைத் தோ்ந்தெடுக்கும் தற்போதைய கொலீஜியம் முறையை கைவிடக் கூடாது என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்றம் நாட்டின் வெளிப்படையான அமைப்புகளில் ஒன்று எனத் தெரிவித்தனா்.

ஆா்டிஐ ஆா்வலரான அனில் பரத்வாஜ், கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் 12-ஆம் தேதி நடைபெற்ற கொலீஜியம் கூட்டம் தொடா்பான மூன்று ஆவணங்களைக் கோரி விண்ணப்பித்த நிலையில், அவருடைய இரண்டாவது மேல்முறையீட்டு மனுவும் தலைமை தகவல் ஆணையரால் நிராகரிக்கப்பட்டது. இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயா்நீதிமன்றம் நிராகரித்தது.

தில்லி உயா்நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக அவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் எம்.ஆா். ஷா மற்றும் சி.டி.ரவிகுமாா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அனில் பரத்வாஜ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரஷாந்த் பூஷண், 2018-இல் உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் இடம்பெற்றிருந்த நீதிபதி எம்.பி.லகுா், அந்த ஆண்டு டிசம்பா் 12-ஆம் தேதி நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தின் முடிவுகள் உச்சநீதிமன்றத்தின் வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என பொதுவெளியில் கூறியதாக தெரிவித்தாா்.

இதற்கு நீதிபதிகள், ‘கொலீஜியத்தில் முன்பு இடம்பெற்றிருந்த நீதிபதிகள் அதன் முந்தைய முடிவுகள் குறித்து கருத்து தெரிவிப்பது தற்போதைய நடைமுறை வழக்கமாகியுள்ளது. இது குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. தற்போதைய கொலீஜியத்தின் செயல்பாட்டை கைவிடக்கூடாது. அதற்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளின்படி அந்த அமைப்பு செயல்படும். வெளிப்படையான அமைப்புகளில் கொலீஜியமும் ஒன்று’ என தெரிவித்தனா்.

மேலும், ‘கொலீஜியம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிந்துகொள்ள நாட்டு மக்கள் உரிமை இல்லையா? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா?’ என வழக்குரைஞா் பிரஷாந்த் பூஷண் தனது தரப்புவாதத்தை முன்வைத்தாா்.

இந்த மனு குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்து மனு மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.



Read in source website

உலகின் தலைமைமிக்க நாடுகளின் பட்டியலில் இணைய இந்தியா தயாராக உள்ளதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பா் மாதத்துக்கான தலைவரும் ஐ.நா.வுக்கான இந்திய தூதருமான ருசிரா கம்போஜ் தெரிவித்தாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பா் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வியாழக்கிழமை ஏற்றது. அதையடுத்து செய்தியாளா்களிடம் ருசிரா கம்போஜ் கூறியதாவது:

கடந்த இரு ஆண்டுகளாக உலகம் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. அந்தக் காலகட்டத்தில் பிரச்னைகளுக்குத் தீா்வு வழங்கும் தனித்துவம் கொண்ட நாடாகவே இந்தியா திகழ்ந்தது. கரோனா தொற்று பரவல் காலகட்டத்தில் உலக நாடுகளுக்குத் தேவையான மருந்துப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை இந்தியா வழங்கியது. சில நாடுகளுக்கு மருத்துவக் குழுக்களையும் அனுப்பிவைத்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 24 கோடி தவணைகளுக்கு அதிகமான கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது. பல நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவியது. உலகின் தலைமைமிக்க நாடுகளின் பட்டியலில் இணைய இந்தியா தயாராக உள்ளதை அந்த நடவடிக்கைகள் எடுத்துக்காட்டின. சா்வதேச நலனை ஊக்குவிப்பதற்கான பங்களிப்பை வழங்க இந்தியா தயாராக உள்ளது.

கடந்த 4 மாதங்களில் மட்டும் ஆப்கானிஸ்தான், மியான்மா், சூடான், யேமன், இலங்கை, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு சுமாா் 14 லட்சம் டன் அளவிலான உணவுப் பொருள்களை இந்தியா வழங்கியது. மனிதநலனை மையப்படுத்தியே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. அக்கொள்கையை இந்தியா தொடா்ந்து கடைப்பிடிக்கும்.

ஐ.நா. சீா்திருத்தங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்களைப் புகுத்துவது சிக்கல் நிறைந்தது. எனினும், அதற்கான நம்பிக்கைக் கீற்று தென்பட்டு வருகிறது. ஐ.நா. பொதுச் சபையின் 77-ஆவது கூட்டத்தின்போது 76 நாடுகள் சீா்திருத்தங்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தன. இந்த விவகாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எந்த நாட்டுக்கும் ‘வீட்டோ’ அதிகாரம் இருக்கக் கூடாது என்பதே இந்தியாவின் கருத்து. அது சாத்தியமில்லை எனில், அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அந்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலின் அடிப்படை செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சீா்திருத்தங்களைப் புகுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் கோரிக்கை.

வலுவான நிலையில் ஜனநாயகம்: பழம்பெரும் நாகரிகத்தைக் கொண்டது இந்தியா. நாட்டில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயகம் தழைத்தோங்கியுள்ளது. ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் (சட்ட அமைப்பு, நிா்வாகம், நீதி, ஊடகம்) வலுவாகவே உள்ளன. ஜனநாயக நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தியாவுக்கு யாரும் வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு முழு மதிப்பளிக்கப்பட்டு வருகிறது. தோ்தல்கள் முறையாக நடைபெற்று ஜனநாயகம் உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

ஜி20 தலைமை: ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ள தருணம் சிறப்புமிக்கது. நாட்டின் வரலாற்றில் இது முக்கியத்துவம் பெறும். சா்வதேச நலனை மையப்படுத்தி செயல்பட இந்தியாவுக்கு இது நல்லதொரு வாய்ப்பாக அமையும். சா்வதேச சமூகத்தின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும்.

‘உலகமே ஒரு குடும்பம்’ என்ற கொள்கையை சா்வதேச சமூகத்தில் பரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சா்வதேச சமூகம் எதிா்கொண்டு வரும் பல்வேறு முக்கிய பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கு கவனம் செலுத்தப்படும். அனைவரையும் ஒருங்கிணைத்து விவாதத்தின் அடிப்படையில் ஜி20 கூட்டமைப்பை இந்தியா வழிநடத்தும்.

உக்ரைன் விவகாரம்: உக்ரைன் விவகாரத்தைப் பொருத்தவரையில் இருதரப்பினருடனும் இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அமைதியின்பக்கமே இந்தியா நிற்கிறது. பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை வாயிலாகவும் தூதரகத் தொடா்பு மூலமாகவும் தீா்வு காணப்பட வேண்டுமென ரஷியாவையும் உக்ரைனையும் இந்தியா தொடா்ந்து கேட்டுக்கொண்டு வருகிறது.

‘இது போருக்கான சகாப்தம் அல்ல’ என பிரதமா் நரேந்திர மோடி கூறியதை உலகத் தலைவா்கள் பலா் வரவேற்றனா். இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டு அறிக்கையிலும் அக்கூற்று இடம்பெற்றது. ரஷியாவுடன் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த நட்புறவைப் பேணி வருகிறது. அதே வேளையில் உக்ரைனுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளையும் இந்தியா வழங்கி வருகிறது.

விரைவில் தீா்வு: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் சா்வதேச அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் என எதிா்பாா்க்கலாம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் இந்தியா தொடா்ந்து தொடா்பில் இருக்கும்.

அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்து வருகிறது. மனிதாபிமான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை இந்தியா வழிநடத்தும் என்றாா் அவா்.

 

 



Read in source website

இந்திய துணைக் கண்டத்தின் அல்-காய்தா தலைவா் ஒசாமா முகமது உள்பட நால்வரை சா்வதேச பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதில், இந்திய துணைக் கண்டத்தின் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவா்கள் அத்திஃப் யாஹ்யா கெளவ்ரி, முகமது மருஃப், தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் துணைத் தலைவா் க்வாரி அம்ஜத் ஆகியோரது பெயா்களும் அமெரிக்காவின் சா்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவா்களில் அல்-காய்தா தலைவா்கள் மூவரும் இப்போது ஆப்கானிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிகிறது.

க்வாரி அம்ஜத் பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறாா். முக்கியமாக பயங்கரவாதப் பயிற்சி, இளைஞா்களை பயங்கரவாத அமைப்புகளில் சோ்ப்பது, ஆயுத விநியோகம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளாா்.

சா்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நால்வருக்கும் சொந்தமாக அமெரிக்காவின் அதிகார எல்லைக்குள் உள்ள சொத்துகள் உடனடியாக முடக்கப்படும். அவா்கள் சாா்ந்த வங்கிப் பணப் பரிவா்த்தனைகளுக்கும், நிதி சாா்ந்த நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் அறிவித்துள்ளாா்.

இந்த பயங்கரவாதிகள் தண்டனையில் இருந்து தப்பவோ, ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு பயங்கரவாதத்தை பரப்பவும் அதிபா் ஜோ பைடன் நிா்வாகம் அனுமதிக்காது என்றும் அவா் கூறியுள்ளாா். இதன் மூலம் இந்த பயங்கரவாதிகளை ரகசியமாக தேடும் வேட்டையையும் அமெரிக்கா தொடங்கியுள்ளது எனத் தெரிகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்திய துணைக் கண்டத்தில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு, மத அடிப்படைவாதக் கொள்கைகளுடன் தொடங்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியான்மா், வங்கதேச அரசுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது இதன் நோக்கமாகும்.

தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையை மையமாகக் கொண்ட பயங்கரவாத இயக்கமாகும். 2007-ஆம் நிறுவப்பட்ட இந்த அமைப்பில் பல்வேறு மத அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்கள் இணைந்து செயல்படுகின்றன.



Read in source website

சென்னை: மாற்றுத்திறனாளிகள் இல்லத்திலிருந்தே பணி செய்யலாம் என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (நவ.3) உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில், " இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடுகிற நாளாக நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம். நம்மைப் பொறுத்தவரையில் அனைத்து நாட்களிலுமே அவர்களுக்கு நன்மை செய்து வருகிறோம். அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு ஒரு சிரமம் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கக்கூடிய அரசாக நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த வாரத்தில் கோட்டையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் வாரியத்தினுடைய ஆலோசனைக் கூட்டத்தில் நான் பேசியதை நீங்களெல்லாம் அறிந்திருப்பீர்கள், மறந்திருக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். “ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடையக் கூடாது. ஒரே ஒருவருக்கு என்றாலும் நன்மை பயக்கும் என்று சொன்னால், அந்தச் செயலை நாம் உடனடியாக செய்தாக வேண்டும். இத்தகைய கருணை உள்ளத்தோடு இவர்களது நலம் காக்கப்பட வேண்டும், அதற்கு நாம் துணையாக நிற்போம்" - என்று நான் குறிப்பிட்டேன். அந்த அடிப்படையில்தான் தொடர்ந்து நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

“ஊனமுற்றோர் என்று சொல்லக் கூடாது; அவர்கள் மாற்றுத்திறனாளிகள்!” என்ற புதிய பெயரைக் கொடுத்து புதிய நம்பிக்கையை உருவாக்கியவர்தான் நம்முடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி. மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துறையை உருவாக்கினார். உருவாக்கியது மட்டுமல்ல, அந்தத் துறையை தன் பொறுப்பிலே வைத்துக் கொண்டார்.

அவர் வழியிலே இன்று நானும் அந்தத் துறையை என் பொறுப்பிலே வைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். இதன் மூலமாக இம்மக்கள் மீது நாங்கள் வைத்திருக்கக்கூடிய உண்மையான அக்கறையை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.

பிறவியில் ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும் - பின்னர் ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும் - விபத்தின் காரணமாக ஏற்பட்ட நிலையில் இருந்தாலும் - பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவர்களை சிறப்புக் கவனம் செலுத்திக் கவனிக்க வேண்டும். அவர்களது உடல் குறைபாடானது, ஆனால் உள்ளக் குறைபாடு அல்ல, அறிவுக்குறைபாடு அல்ல, திறன் குறைபாடு அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து அவர்களை நாம் மதித்தாக வேண்டும்.

வினைத்திட்பம் என்பது ஒருவரது மனத்திட்பமே என்கிறார் அய்யன் வள்ளுவர். அத்தகைய மனத்திட்பம் கொண்டவர்களாக மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கே வருகிற பாதையில் இந்த அரங்கத்திற்கு வருவதற்கு முன்பு 'ஊதா அங்காடி' கண்காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. அதை நீங்களெல்லாம் பார்த்திருப்பீர்கள், நானும் பார்த்துவிட்டுத் தான் வருகிறேன். மாற்றுத்திறனாளிகளின் திறமையால் உருவாகியிருக்கக்கூடிய பொருள்களை அங்கு விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.

அவர்களை அவர்களது பெற்றோரும், உற்றாரும், உறவினரும், நண்பர்களும், இந்த சமூகமும், அரசும் உரிய மரியாதையுடன் நடத்திட வேண்டும். அதற்கான உறுதியை நாம் அனைவரும் எடுத்துக்கொண்டாக வேண்டும். சமூகத்தின் மற்ற தரப்பினர் அடையக்கூடிய அனைத்து வசதி, வாய்ப்புகளையும் மாற்றுத்திறனாளிகளும் பெற்றிட வேண்டும்.

சென்னை மெரீனா கடற்கரையில் கால்நனைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்து கொடுத்த ஏற்பாட்டை அனைவரும் அறிவீர்கள். நமது ஈரமான மனதின் காரணமாக மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளின் உரிமை எனக் கருதி நாம் உருவாக்கிய பாதை தான் அந்த அன்புப் பாதை. அதில் சென்று கடலில் கால் வைத்தபோது, மாற்றுத்திறனாளிகளின் மனம் மகிழ்ச்சியால் திளைத்ததைப் பார்த்து நானும் திளைத்தேன்.

அது மிகப்பெரிய செலவு பிடிக்கக்கூடிய திட்டம் அல்ல. ஆனால் அதனால் விளையும் பயன் என்பது எத்தனை கோடிகள் செலவு செய்தாலும் கிடைக்க முடியாத மகிழ்ச்சி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. பிறந்ததில் இருந்து இதுவரை கடலில் கால் நனைத்திடாத ரஞ்சித்குமார், அலைகடலில் கால் நனைத்து மகிழ்ந்த காட்சியை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஒவ்வொரு தனிமனிதருக்கும் நன்மை அளிக்கும் அரசாகச் செயல்படுவோம் என்று ஆட்சி அமைந்த நேரத்தில் நான் எடுத்துச் சொன்னேன். அதற்கு இவைகளெல்லாம் சாட்சிகளாக அமைந்திருக்கிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னிச்சையான செயல்பாட்டிற்காக உடல் குறைகள் நீங்கி, ஊக்கத்துடன் செயல்பட ஏதுவாக புதுமையான உதவி உபகரணங்கள் மற்றும் கருவிகளையும் நமது மாநிலம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்தும் கொண்டுவந்து காட்சிக்கு இங்கே கண்காட்சியிலே வைக்கப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்திற்கு உதவக்கூடிய பொருட்களை உற்பத்திசெய்து அவையும் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது, அதையும் பார்வையிட்டேன்.

தடையற்ற சூழல் அமைப்பது பொது இடங்கள் மற்றும் கட்டடங்கள் மட்டுமல்ல, முதலில் அமைக்கவேண்டியது நமது இல்லத்திலேயே என்பதை உணர்த்தக்கூடிய வகையிலே, மாற்றுத்திறனாளிகள் அணுகத்தக்க இல்லத்தின் (Accessible Home) நீங்கள் மாதிரிகளையும், காட்சிகளையும் வைத்திருக்கிறீர்கள்.

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருக்கிறது, நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர்களின் ஆற்றல் வெளிக் கொணரப்பட்டு, சமுதாயத்தில் தடையற்ற சூழலும் அமைக்கப் பெற்றால், அவர்கள் அனைத்து உயரங்களையும் அடைவார்கள் என்பதில் ஐயம் இல்லை.

தடைகளை வென்று சாதனை படைத்தவர்கள் பலர் இன்றைய நாளில் நம் தமிழ்நாட்டிலேயே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால்,

தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர் மாரியப்பன் தனது குறைகளை இளம்வயதிலிருந்தே எதிர்கொண்டு தடைகளை வெற்றிதடங்களாக மாற்றி, இப்போது நம் நாட்டிற்கே ஒரு பெருமையை தேடி தந்து கொண்டிருக்கிறார். அண்மையில் அர்ஜுனா விருது பெற்ற மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெர்லின் அனிகா, பேட்மிண்டன் போட்டியில் பல உலக சாதனைகளைப் படைத்து வருகிறார்.

நாட்டின் உயரிய தேசிய விருதுகளைப்பெற்ற அமர்சேவா சங்கத்தின் நிறுவனர் ராமகிருஷ்ணன் மற்றும் சங்கர ராமன் போன்றோர் மிகவும் கடுமையான உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும், மனம் தளராமல் தங்களையும் பராமரித்துக் கொண்டு சமுதாயத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தொடர்ந்து சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசினுடைய நிர்வாகத்தின் அலுவலர்களாக எத்தனையோ பேர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். தமிழின் முன்னணி எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், சிந்தனையாளர்களாகச் செயல்படுகிறார்கள். முன்பெல்லாம் மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்குள் முடங்கிவிடக்கூடிய காலம் இருந்தது. ஆனால் இப்போது அதைத் தாண்டி, பொதுவெளியில் போராடி முன்னுக்கு வரத் தொடங்கி விட்டார்கள்.

ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி அந்த நாட்டினுடைய மனித வளத்தைப் பொறுத்தே அமையும். சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையும் இவ்வளர்ச்சியில் பெரிதும் பங்கு வகிக்கிறது. எனவேதான், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிந்து வேலை வாய்ப்புகளை வழங்க, வல்லுநர் குழு (Expert Committee) மற்றும் உயர்மட்டக் குழுக்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் சிறப்பாகவும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றுத்திறனாளிகள் பணிக்கூடங்களில் பிறரை சாராமல் வேலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கும்.

மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்குச் சென்று பணி செய்ய வேண்டிய தேவை இல்லை; இல்லத்திலிருந்தே பணி செய்யலாம் என்ற ஒரு சூழ்நிலையை நாம் உருவாக்கப் போகிறோம். அதற்குச் சான்றாகத்தான் “நான் முதல்வன்” திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி, மென்பொருளுடன் கூடிய திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய புதிய முயற்சியும் இங்கே அரங்கேற்றப்பட்டு உள்ளது.

இந்த நாளில், மாற்றுத்திறனாளிகளின் சேவையை ஊக்கப்படுத்தும் நல்ல உள்ளங்களை ஊக்கப்படுத்தும் வகையில் விருதுகளை வழங்கி அவர்களையும் பாராட்டுகிறோம்.ஆடுகளை மேய்ப்பவர், ஒரே ஒரு ஆட்டை தனது தோளில் தூக்கி சுமந்து வருகிறார் என்றால், அந்த ஆடு நடக்க முடியாத நிலையில் இருக்கும். இதுதான் சமூகநீதி என்று எளிமையான விளக்கத்தை சொன்னவர் யார் தெரியுமா? நம்முடைய தலைவர் கருணாநிதி.

அத்தகைய சமூகநீதிச் சிந்தனையின் அடித்தளத்தில் அமைந்திருக்கும் இந்த அரசானது, எப்போதும் எந்தச் சூழலிலும் அனைத்து மக்களின் அரசாக இருக்கும்! அதிலும் குறிப்பாக, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களின் அரசாக இருக்கும்! அவர்களுக்காகவே திட்டமிடும் அரசாக இருக்கும்! அவர்களில் ஒருவராக இருந்து அவர்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு அரசாகவே இருக்கும்! என்று கூறி, உலக மாற்றுத்திறனாளிகள் நாளில், உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்." இவ்வாறு முதல்வர் பேசினார்



Read in source website

சென்னை: “தமிழகத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு, அவர்கள் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1-ஆம் நாள் முதல் உயர்த்தி வழங்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை: “இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடுகிற நாளாக நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம். நம்மைப் பொறுத்தவரையில் அனைத்து நாட்களிலுமே அவர்களுக்கு நன்மை செய்து வருகிறோம். அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு ஒரு சிரமம் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கக்கூடிய அரசாக நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த வாரத்தில் கோட்டையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் வாரியத்தினுடைய ஆலோசனைக் கூட்டத்தில் நான் பேசியதை நீங்களெல்லாம் அறிந்திருப்பீர்கள், மறந்திருக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். “ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடையக் கூடாது. ஒரே ஒருவருக்கு என்றாலும் நன்மை பயக்கும் என்று சொன்னால், அந்தச் செயலை நாம் உடனடியாக செய்தாக வேண்டும். இத்தகைய கருணை உள்ளத்தோடு இவர்களது நலம் காக்கப்பட வேண்டும், அதற்கு நாம் துணையாக நிற்போம்" - என்று நான் குறிப்பிட்டேன். அந்த அடிப்படையில்தான் தொடர்ந்து நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

“ஊனமுற்றோர் என்று சொல்லக் கூடாது; அவர்கள் மாற்றுத்திறனாளிகள்!” என்ற புதிய பெயரைக் கொடுத்து புதிய நம்பிக்கையை உருவாக்கியவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர். மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துறையை உருவாக்கினார். உருவாக்கியது மட்டுமல்ல, அந்தத் துறையை தன் பொறுப்பிலே வைத்துக் கொண்டார். அவர் வழியிலே இன்று நானும் அந்தத் துறையை என் பொறுப்பிலே வைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். இதன் மூலமாக இம்மக்கள் மீது நாங்கள் வைத்திருக்கக்கூடிய உண்மையான அக்கறையை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.

பிறவியில் ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும் - பின்னர் ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும் - விபத்தின் காரணமாக ஏற்பட்ட நிலையில் இருந்தாலும் - பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவர்களை சிறப்புக் கவனம் செலுத்திக் கவனிக்க வேண்டும். அவர்களது உடல் குறைபாடானது, ஆனால் உள்ளக் குறைபாடு அல்ல, அறிவுக்குறைபாடு அல்ல, திறன் குறைபாடு அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து அவர்களை நாம் மதித்தாக வேண்டும்.

வினைத்திட்பம் என்பது ஒருவரது மனத்திட்பமே என்கிறார் அய்யன் வள்ளுவர். அத்தகைய மனத்திட்பம் கொண்டவர்களாக மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கே வருகிற பாதையில் இந்த அரங்கத்திற்கு வருவதற்கு முன்பு 'ஊதா அங்காடி' கண்காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. அதை நீங்களெல்லாம் பார்த்திருப்பீர்கள், நானும் பார்த்துவிட்டுத் தான் வருகிறேன். மாற்றுத்திறனாளிகளின் திறமையால் உருவாகியிருக்கக்கூடிய பொருள்களை அங்கு விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.

அவர்களை அவர்களது பெற்றோரும், உற்றாரும், உறவினரும், நண்பர்களும், இந்த சமூகமும், அரசும் உரிய மரியாதையுடன் நடத்திட வேண்டும். அதற்கான உறுதியை நாம் அனைவரும் எடுத்துக்கொண்டாக வேண்டும். சமூகத்தின் மற்ற தரப்பினர் அடையக்கூடிய அனைத்து வசதி, வாய்ப்புகளையும் மாற்றுத்திறனாளிகளும் பெற்றிட வேண்டும்.

சென்னை மெரினா கடற்கரையில் கால்நனைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்து கொடுத்த ஏற்பாட்டை அனைவரும் அறிவீர்கள். நமது ஈரமான மனதின் காரணமாக மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளின் உரிமை எனக் கருதி நாம் உருவாக்கிய பாதை தான் அந்த அன்புப் பாதை. அதில் சென்று கடலில் கால் வைத்தபோது, மாற்றுத்திறனாளிகளின் மனம் மகிழ்ச்சியால் திளைத்ததைப் பார்த்து நானும் திளைத்தேன்.

அது மிகப்பெரிய செலவு பிடிக்கக்கூடிய திட்டம் அல்ல. ஆனால் அதனால் விளையும் பயன் என்பது எத்தனை கோடிகள் செலவு செய்தாலும் கிடைக்க முடியாத மகிழ்ச்சி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. பிறந்ததில் இருந்து இதுவரை கடலில் கால் நனைத்திடாத ரஞ்சித்குமார், அலைகடலில் கால் நனைத்து மகிழ்ந்த காட்சியை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஒவ்வொரு தனிமனிதருக்கும் நன்மை அளிக்கும் அரசாகச் செயல்படுவோம் என்று ஆட்சி அமைந்த நேரத்தில் நான் எடுத்துச் சொன்னேன். அதற்கு இவைகளெல்லாம் சாட்சிகளாக அமைந்திருக்கிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னிச்சையான செயல்பாட்டிற்காக உடல் குறைகள் நீங்கி, ஊக்கத்துடன் செயல்பட ஏதுவாக புதுமையான உதவி உபகரணங்கள் மற்றும் கருவிகளையும் நமது மாநிலம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்தும் கொண்டுவந்து காட்சிக்கு இங்கே கண்காட்சியிலே வைக்கப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்திற்கு உதவக்கூடிய பொருட்களை உற்பத்திசெய்து அவையும் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது, அதையும் பார்வையிட்டேன்.

தடையற்ற சூழல் அமைப்பது பொது இடங்கள் மற்றும் கட்டடங்கள் மட்டுமல்ல, முதலில் அமைக்கவேண்டியது நமது இல்லத்திலேயே என்பதை உணர்த்தக்கூடிய வகையிலே, மாற்றுத்திறனாளிகள் அணுகத்தக்க இல்லத்தின் (Accessible Home) நீங்கள் மாதிரிகளையும், காட்சிகளையும் வைத்திருக்கிறீர்கள்.

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருக்கிறது, நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர்களின் ஆற்றல் வெளிக் கொணரப்பட்டு, சமுதாயத்தில் தடையற்ற சூழலும் அமைக்கப் பெற்றால், அவர்கள் அனைத்து உயரங்களையும் அடைவார்கள் என்பதில் ஐயம் இல்லை.

தடைகளை வென்று சாதனை படைத்தவர்கள் பலர் இன்றைய நாளில் நம் தமிழ்நாட்டிலேயே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர் திரு.மாரியப்பன் தனது குறைகளை இளம்வயதிலிருந்தே எதிர்கொண்டு தடைகளை வெற்றிதடங்களாக மாற்றி, இப்போது நம் நாட்டிற்கே ஒரு பெருமையை தேடி தந்து கொண்டிருக்கிறார்.

அண்மையில் அர்ஜுனா விருது பெற்ற மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெர்லின் அனிகா, பேட்மிண்டன் போட்டியில் பல உலக சாதனைகளைப் படைத்து வருகிறார். நாட்டின் உயரிய தேசிய விருதுகளைப்பெற்ற அமர்சேவா சங்கத்தின் நிறுவனர் ராமகிருஷ்ணன் மற்றும் சங்கர ராமன் போன்றோர் மிகவும் கடுமையான உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும், மனம் தளராமல் தங்களையும் பராமரித்துக் கொண்டு சமுதாயத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தொடர்ந்து அவர்கள் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசினுடைய நிர்வாகத்தின் அலுவலர்களாக எத்தனையோ பேர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். தமிழின் முன்னணி எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், சிந்தனையாளர்களாகச் செயல்படுகிறார்கள். முன்பெல்லாம் மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்குள் முடங்கிவிடக்கூடிய காலம் இருந்தது. ஆனால் இப்போது அதைத் தாண்டி, பொதுவெளியில் போராடி முன்னுக்கு வரத் தொடங்கி விட்டார்கள்.

ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி அந்த நாட்டினுடைய மனித வளத்தைப் பொறுத்தே அமையும். சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையும் இவ்வளர்ச்சியில் பெரிதும் பங்கு வகிக்கிறது. எனவேதான், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிந்து வேலை வாய்ப்புகளை வழங்க, வல்லுநர் குழு (Expert Committee) மற்றும் உயர்மட்டக் குழுக்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் சிறப்பாகவும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றுத்திறனாளிகள் பணிக்கூடங்களில் பிறரை சாராமல் வேலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கும்.

மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்குச் சென்று பணி செய்ய வேண்டிய தேவை இல்லை; இல்லத்திலிருந்தே பணி செய்யலாம் என்ற ஒரு சூழ்நிலையை நாம் உருவாக்கப் போகிறோம். அதற்குச் சான்றாகத்தான் “நான் முதல்வன்” திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி, மென்பொருளுடன் கூடிய திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய புதிய முயற்சியும் இங்கே அரங்கேற்றப்பட்டு உள்ளது.

இந்த நாளில், மாற்றுத்திறனாளிகளின் சேவையை ஊக்கப்படுத்தும் நல்ல உள்ளங்களை ஊக்கப்படுத்தும் வகையில் விருதுகளை வழங்கி அவர்களையும் பாராட்டுகிறோம்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதுதான் தமிழர் போற்றிய பண்பாடு! அந்த அடிப்படையில் நாட்டு எல்லைகளைத் தாண்டிய நாளாக உலக மாற்றுத்திறனாளிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்துயிரும் ஒன்றென எண்ணி நாம் வாழ்வோம். உலக மாற்றுத்திறனாளிகள் நாளான இன்று, ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். என்ன என்று ஓரளவுக்கு நீங்களும் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

வருவாய்த் துறை மூலம் ஓய்வூதியம் பெற்றுவரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு, அவர்கள் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1-ஆம் நாள் முதல் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம், அரசுக்கு ஆண்டுக்கு 263 கோடியே 58 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆடுகளை மேய்ப்பவர், ஒரே ஒரு ஆட்டை தனது தோளில் தூக்கி சுமந்து வருகிறார் என்றால், அந்த ஆடு நடக்க முடியாத நிலையில் இருக்கும். இதுதான் சமூகநீதி என்று எளிமையான விளக்கத்தை சொன்னவர் யார் தெரியுமா? நம்முடைய தலைவர் கலைஞர்.

அத்தகைய சமூக நீதிச் சிந்தனையின் அடித்தளத்தில் அமைந்திருக்கும் இந்த அரசானது, எப்போதும் எந்தச் சூழலிலும் அனைத்து மக்களின் அரசாக இருக்கும். அதிலும் குறிப்பாக, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களின் அரசாக இருக்கும். அவர்களுக்காகவே திட்டமிடும் அரசாக இருக்கும். அவர்களில் ஒருவராக இருந்து அவர்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு அரசாகவே இருக்கும் என்று கூறி, உலக மாற்றுத்திறனாளிகள் நாளில், உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.



Read in source website

சென்னை: ரம்மி விளையாட்டு தொடர்பாக 6-ம் வகுப்பு பாடப் புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களை நீக்கும் பணியில் பள்ளிக்கல்வித் துறை ஈடுபட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் வழங்கப்படும் புத்தகத்தில் இந்த மாற்றம் அமலாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வியின் 6-ம் வகுப்பு கணித பாடப் புத்தகத்தில் ‘எண் தொகுப்பு’ என்ற பாடம் உள்ளது. அதில் 'ரம்மி' சீட்டுக்கட்டுகளை கொண்டு படத்துடன்அந்த கணிதப் பாடம் விளக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி விளையாட்டு தொடர்பான கருத்துகளை நீக்குவதற்கான பணிகளில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) ஈடுபட்டுள்ளது.

‘6-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தற்போது உள்ள அந்த கருத்துகளை முழுமையாக நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக வேறு விளக்கங்கள் கொடுக்கப்படும். அடுத்த கல்வியாண்டில் வழங்கப்படும் புத்தகத்தில் இந்த மாற்றம் அமலாகும்’ என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: பதிவுத் துறை சார்ந்து தொழில் புரிந்துவரும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலனுக்காக ஆவண எழுத்தர்கள் நல நிதியத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், உறுப்பினர்களுக்கான அட்டைகளை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்களைச் சார்ந்து தொழில் புரிந்துவரும் ஆவண எழுத்தர்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஆவண எழுத்தர்கள் நல நிதியம் உருவாக்கப்படும் என்று கடந்த 2007-08-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, 2010-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் இந்த நல நிதியத்துக்கு செயல்வடிவம் கொடுக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, 2021-22-ம் நிதியாண்டுக்கான பதிவுத் துறை மானியக் கோரிக்கையில், ஆவணஎழுத்தர்கள் நல நிதியம் முழுவதுமாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, உதவித்தொகை குறைவாக இருப்பதாக கருதப்பட்ட நிலையில், தற்போதுள்ள பல்வேறு நலத்திட்டங்களின் அடிப்படையில், நிதியத்தை நடைமுறைப்படுத்த, சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் நல நிதியச் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டப்படி, கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி, ஆவண எழுத்தர் உரிமம் பெற்ற 5,188 பேரிடம், விருப்பத்தின் அடிப்படையில் நல நிதியத்தில் உறுப்பினராக சேர ஒரு முறை செலுத்தப்படும் சந்தாவாக ரூ.1,000 வசூலிக்கப்படும். இதுமட்டுமின்றி, பதிவுத் துறையில் பதிவாகும் ஒவ்வொரு பத்திரத்துக்கும் தலா ரூ.10, ஆவண எழுத்தர்கள் நலநிதியத்துக்காக வசூல் செய்யப்படும். இது நிதியமாக நிர்வகிக்கப்பட்டு, அதில் இருந்து நல நிதியத்தின் நலத் திட்டங்களுக்கான செலவுகள் ஈடுசெய்யப்படும்.

நல நிதிய உறுப்பினர்களுக்கு, விபத்து மரணம் மற்றும் நிரந்தர ஊனத்துக்கு உதவித் தொகையாக ரூ.1 லட்சம், இயற்கை மரணம் மற்றும் மற்ற உடல் ஊனங்களுக்கு ரூ.20 ஆயிரம், மாதாந்திர ஓய்வூதியம், திருமணம், மகப்பேறு, கல்வி,மூக்குக் கண்ணாடி உதவித் தொகைகள், இறுதிச் சடங்கு நிதிபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

பதிவுத் துறை தலைவரை தலைவராகவும், இதர பதிவுத் துறை அலுவலர்கள் மற்றும் ஆவண எழுத்தர் சங்கத்தில் இருந்து நியமனம் செய்யப்படும் 4 பேரை உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு குழு இந்த நல நிதியத்தை நிர்வகிக்கும்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நல நிதியத்தை நேற்று தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வணிக வரி,பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி,தலைமைச் செயலர் இறையன்பு, துறை செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி, பதிவுத் துறை தலைவர் ம.ப.சிவன் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றங்கரை யோரம் 300 ஆண்டுகள் பழமை யான ஏறுதழுவுதல் குறித்த நடுகல் உள்ளது, என கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் கிராமத்தில் தென் பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய நிலத்தில் அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினரும், பாறை ஓவிய ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ண குமாரின் வழிகாட்டுதலின் பேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து, அரசு அருங் காட்சியக காப்பாட்சியர் கோவிந்த ராஜ் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கால்நடை வளர்ப்பு, ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் ஆகிய வற்றைக் குறிக்கும் வரலாற்றுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களும், வரலாற்றுகால நடுகற்களும் ஏராளமாக கிடைத்துள்ளன.

இந்நிலையில்தான் அகரம் தென்னந்தோப்பில் ஏறு தழுவுதல் குறித்த நடுகல் கண்டறியப் பட்டுள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இக்கல்வெட்டில், காளையானது முன்னங்காலை தூக்கி ஓடுவது போல காட்டப்பட்டுள்ளது. அதற்குப் பின்னால் அக்காளையை அடக்க முற்படும் வீரன் காளையின் திமிலை இறுகப் பற்றிக்கொண்டு காளையின் முன்னங்காலில் தனது கால்களை பின்னிக்கொண்டு தொங்குகிறான். இதனால் காளையின் நாக்கு வாய்க்கு வெளியே தொங்குகிறது. ஏறு தழுவுதல் என்னும் சொல்லுக்கு ஏற்ப இந்த நடுகல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

3-வது நடுகல்: சேலம் அரசு அருங்காட்சிய கத்தில், ஆத்தூர் கருமந்துறை யிலிருந்து கொண்டுவந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டு, வீரன் எருது விளையாடி பட்டான் எனக் குறிப்பிடுகிறது. 2-வது ஏறுதழுவுதல் குறித்த நடுகல் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா ஆதமங்கலம் புதூர் அருகே கிடைத்துள்ளது. தற்போது 3-வதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏறுதழுவும் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது, என்றார்.

வரலாற்றுச் சான்று: 5,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஏறு தழுவுதல் உள்ளிட்ட வீர விளையாட்டுப் போட்டிகள் நடந்ததாக பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் தெரிவித்துள்ள நிலையில், தற்போது 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏறு தழுவுதல் நிகழ்ச்சி நடந்ததற்கான நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வீரவிளையாட்டுகள் பாரம்பரிய மாக நடந்து வந்துள்ளதையே இக்கல்வெட்டுகள் நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றன என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Read in source website

போர்ட்ப்ளேர்: அந்தமான் நிகோபார் தீவில் மனிதர்கள் வசிக்காத 21 தீவுகள் உள்ளன. இவற்றுக்கு ராணுவத்தில் பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் பெயர்களை வைக்க மத்திய அரசு முடிவு செய்தது. வீரதீர செயல் புரிந்து போரில் இறக்கும் ராணுவத்தினருக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது.

அந்தமானின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள மனிதர்கள் வசிக்காத ‘ஐஎன்ஏஎன்370’ என்ற தீவுக்கு மேஜர் சோம்நாத் சர்மா பெயர் வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் அந்த தீவு ‘சோம்நாத் தீப்’ என அழைக்கப்படும். இவர்தான் பரம்வீர் சக்ரா விருதை முதன் முதலில் பெற்றவர். கடந்த 1947-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி பாகிஸ்தான் ஊடுவல்காரர்கள் நகர் விமான நிலையம் அருகே ஊடுருவியபோது நடந்த சண்டையில் இவர் உயிரிழந்தார். அதன்பின் இவருக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

அதேபோல் ‘ஐஎன்ஏஎன்308’ என்ற தீவுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற கவுரவ கேப்டன் கரம் சிங் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், பரம் வீர் சக்ரா விருதுபெற்ற வீரர்களின் பெயர்கள் 21 தீவுகளுக்கு வைக்கப்பட்டன.



Read in source website

ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை ஒரு பீப்பாய்க்கு $60-க்கு ஒரு ஒப்பந்தத்தை எட்டியது, மேலும் ஏழு நாடுகளின் குழுவும் ஆஸ்திரேலியாவும் அந்த நாளின் பிற்பகுதியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

மாஸ்கோவின் வரவுசெலவுத் திட்டம், அதன் இராணுவம் மற்றும் உக்ரைன் மீதான படையெடுப்பு ஆகியவற்றை ஆதரிக்கும் மேற்கத்திய அரசாங்கங்கள் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதியின் விலையைக் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன.
திங்கட்கிழமை இந்த நடைமுறைக்கு வருகிறது, அதே நாளில் ஐரோப்பிய ஒன்றியம் பெரும்பாலான ரஷ்ய எண்ணெயை புறக்கணிக்கும்.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை ஒரு பீப்பாய்க்கு $60-க்கு ஒரு ஒப்பந்தத்தை எட்டியது, மேலும் ஏழு நாடுகளின் குழுவும் ஆஸ்திரேலியாவும் அந்த நாளின் பிற்பகுதியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த இரட்டை நடவடிக்கைகள் எண்ணெய் விலையில் நிச்சயமற்ற விளைவை ஏற்படுத்தக்கூடும்.

விலை வரம்பு என்றால் என்ன, அது எப்படி வேலை செய்யும்?

அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன், ரஷ்யாவின் வருவாயைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், உலகப் பொருளாதாரத்திற்கு ரஷ்ய எண்ணெய் பாய்வதைக் கட்டுப்படுத்தும் ஒரு வழியாக மற்ற 7 கூட்டாளிகளின் குழுவுடன் ஒப்பந்தத்தை முன்மொழிந்தார்.
இதன் நோக்கம் ரஷ்யாவின் எண்ணெய் திடீரென உலக சந்தையில் இருந்து எடுக்கப்பட்டால், கூர்மையான எண்ணெய் விலை உயர்வைத் தவிர்க்கும் அதே வேளையில் மாஸ்கோவின் நிதியைப் பாதிக்கும் என்பதே ஆகும்.

காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதிக்குத் தேவைப்படும் பிற நிறுவனங்கள், எண்ணெய் விலை உச்சவரம்புக்குக் குறைவாகவோ அல்லது அதற்குக் குறைவாகவோ இருந்தால் மட்டுமே ரஷ்ய கச்சா எண்ணெயை சமாளிக்க முடியும்.
பெரும்பாலான காப்பீட்டாளர்கள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது யுனைடெட் கிங்டமில் உள்ளனர்.

உலகப் பொருளாதாரத்திற்கு எண்ணெய் எவ்வாறு தொடர்ந்து செல்லும்?

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றால் விதிக்கப்பட்ட அனைத்து வகையான பொருளாதார தடைகளும், முந்தைய சுற்று தடைகளில் ரஷ்ய கச்சா எண்ணெயை சந்தையில் இருந்து வெளியேற்றலாம்.
இதனால் எண்ணெய் விலைகள் அதிகரிக்கும், மேற்கத்திய பொருளாதாரங்கள் பாதிக்கப்படும்.

உலகின் நம்பர் 2 எண்ணெய் உற்பத்தியாளரான ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றிய தடைக்கு முன்பே மேற்கத்திய வாடிக்கையாளர்கள் அதைத் தவிர்த்துவிட்டதால், இந்தியா, சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் அதன் விநியோகத்தின் பெரும்பகுதியை ஏற்கனவே மாற்றியுள்ளது.

வெவ்வேறு நிலைகள் என்ன விளைவை ஏற்படுத்தும்?

60 டாலர் ரஷ்யாவின் நிதியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என்று பிரஸ்ஸல்ஸில் உள்ள ப்ரூகல் சிந்தனைக் குழுவின் ஆற்றல் கொள்கை நிபுணர் சிமோன் டாக்லியாபீட்ரா கூறினார். அது “கிட்டத்தட்ட கவனிக்கப்படாமல் போகும்,” என்று அவர் கூறினார்.

ரஷியன் யூரல்ஸ் கலவை சர்வதேச அளவுகோலான ப்ரெண்டிற்கு கணிசமான தள்ளுபடியில் விற்கப்பட்டது. COVID-19 பரவல் காரணமாக சீனாவின் தேவை குறையும் என்ற அச்சத்தில் இந்த வார மாதங்களில் முதல் முறையாக $60 க்கு கீழே சரிந்தது.

$50க்கு குறைவாக இருந்திருந்தால், அது ரஷ்யாவின் வருவாயைக் குறைத்து, அதன் மாநில வரவுசெலவுத் திட்டத்தை ரஷ்யாவால் சமப்படுத்த முடியாமல் போகும்.
மாஸ்கோ அதைச் செய்ய ஒரு பீப்பாய்க்கு $60 முதல் $70 வரை தேவைப்படும் என்று நம்பப்படுகிறது, இது “நிதி இடைவேளை” என்று அழைக்கப்படுகிறது.

ரஷ்யா மற்றும் பிற நாடுகளுடன் செல்லாதது என்ன?

இதனை கடைப்பிடிக்க மாட்டோம் என்றும், அவ்வாறு செய்யும் நாடுகளுக்கு விநியோகத்தை நிறுத்துவதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
பொருளாதாரத் தடைகளைச் சுற்றி எதை விற்க முடியுமோ, அதன் மீது கூர்மையாக உயர்ந்த உலகளாவிய எண்ணெய் விலையிலிருந்து லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்றுமதியை நிறுத்துவதன் மூலம் ரஷ்யா பதிலடி கொடுக்கலாம்.

சீனா மற்றும் இந்தியாவில் வாங்குபவர்கள் தொப்பியுடன் செல்லாமல் போகலாம், அதே நேரத்தில் ரஷ்யா அல்லது சீனா அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவால் தடைசெய்யப்பட்ட காப்பீட்டு வழங்குநர்களை மாற்றுவதற்கு தங்கள் சொந்த காப்பீட்டு வழங்குநர்களை அமைக்க முயற்சி செய்யலாம்.

வெனிசுலா மற்றும் ஈரான் போன்ற தெளிவற்ற உரிமையுடன் “டார்க் ஃப்ளீட்” டேங்கர்களைப் பயன்படுத்தி ரஷ்யாவும் புத்தகங்களிலிருந்து எண்ணெயை விற்கலாம்.
எண்ணெயை ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு மாற்றலாம் மற்றும் அதன் தோற்றத்தை மறைப்பதற்கு அதே தரமான எண்ணெயுடன் கலக்கலாம்.

அந்தச் சூழ்நிலைகளில் கூட, கட்டுப்பாடுகள் சுற்றி எண்ணெய் விற்க ரஷ்யாவிற்கு தொப்பி “அதிக செலவு, நேரத்தை எடுத்துக்கொள்வது மற்றும் சிக்கலானது” என்று ஷகினா கூறினார்.
அந்தச் சூழ்நிலைகளில் கூட, கட்டுப்பாடுகள் சுற்றி எண்ணெய் விற்க ரஷ்யாவிற்கு தொப்பி “அதிக செலவு, நேரத்தை எடுத்துக்கொள்வது மற்றும் சிக்கலானது” என்று ஷகினா கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய தடை பற்றி என்ன?

ரஷ்ய உற்பத்தியாளர்கள் தங்கள் எண்ணெயை ஐரோப்பாவிலிருந்து திருப்பிவிட முடியாது, முன்பு அவர்களின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருந்தனர்,

Commerzbank இன் ஆய்வாளர்கள் கூறுகையில், EU தடை மற்றும் தொப்பி ஆகியவை “2023 இன் தொடக்கத்தில் எண்ணெய் சந்தையில் குறிப்பிடத்தக்க இறுக்கத்தை” ஏற்படுத்தக்கூடும் என்றும், சர்வதேச அளவுகோல் Brent இன் விலை வரும் வாரங்களில் ஒரு பீப்பாய்க்கு $95 ஆக உயரும் என்று எதிர்பார்க்கிறார்கள். வெள்ளிக்கிழமை, ப்ரெண்ட் ஒரு பீப்பாய் $ 85.48 ஆக சரிந்தது.

ஐரோப்பிய ஒன்றிய தடையின் மிகப்பெரிய தாக்கம் திங்கள்கிழமை வராது, ஆனால் பிப்ரவரி 5 அன்று, எண்ணெய் சுத்திகரிப்பு பொருட்களுக்கு ஐரோப்பாவின் கூடுதல் தடை – டீசல் எரிபொருள் போன்றவை – நடைமுறைக்கு வரும்.

ஐரோப்பாவில் இன்னும் டீசலில் இயங்கும் பல கார்கள் உள்ளன. எரிபொருளானது டிரக் போக்குவரத்திற்கும் நுகர்வோருக்கு ஒரு பெரிய அளவிலான பொருட்களைப் பெறுவதற்கும் விவசாய இயந்திரங்களை இயக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.



Read in source website

ஜி20, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றது இந்தியா; அந்த அமைப்புகள் மற்றும் இந்தியாவின் செயல்பாடுகள் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே

Ariba

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியா இரண்டு உலகளாவிய கூட்டங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றது, மாதத்தின் முதல் நாளில் G20 மற்றும் இரண்டாவது நாளில் UNSC.

G20 தலைவர் பதவியானது “வசுதைவ குடும்பம்” (உலகம் ஒரு குடும்பம்) என்ற தொலைநோக்குப் பார்வையால் இயக்கப்படும் அதே வேளையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவின் தலைமைத்துவமானது, பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும், சீர்திருத்தப்பட்ட பலதரப்புவாதத்துக்கும் முன்னுரிமை அளிக்க முயல்கிறது என்று இந்தியா கூறியுள்ளது.

இதையும் படியுங்கள்: 30 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரை விட்டு வெளியேறிய பண்டிட்கள்.. என்ன நடந்தது?

இந்த இரண்டு தலைமை பொறுப்பு நிலைகளும் சுழற்சி அடிப்படையில் மாறி வருகின்றன, அதாவது அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மாறி மாறி வருகின்றன.

UNSC மற்றும் அதன் தலைவர் நாட்டின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் என்ன?

UNSC இன் சில குறிப்பிடத்தக்க செயல்பாடுகளில் “ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களின்படி சர்வதேச அமைதியைப் பேணுதல்” மற்றும் “அமைதி அல்லது ஆக்கிரமிப்புச் செயலுக்கு அச்சுறுத்தல் இருப்பதைத் தீர்மானித்தல் மற்றும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைப்பது ஆகியவை அடங்கும்.”

கவுன்சில் தலைவர், UNSC கையேட்டின் படி, பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டங்களை நடத்துதல், தற்காலிக நிகழ்ச்சி நிரல்களை அங்கீகரித்தல், கூட்டங்களின் பதிவுகளில் கையெழுத்திடுதல் மற்றும் பிற முக்கியமான முடிவுகளைத் தவிர, பரந்த அளவிலான அதிகாரங்களைப் பயன்படுத்துகிறார்.

“தலைவர் பதவியின் முதல் வேலை நாளில், கவுன்சில் தலைவர் வரைவு திட்டத்தை விவாதிக்க ஒரு முறைசாரா காலை உணவை நடத்துகிறார்,” இதில் “அனைத்து கவுன்சில் உறுப்பினர்களின் நிரந்தர பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.” வேலைத் திட்டம் (PoW)  என்பது தலைமைப் பொறுப்பில் உள்ள நாடு தனது பதவிக் காலத்தில் செயல்படுத்த உள்ள முன்னுரிமைகளின் காலெண்டராகும். இது காலை உணவுக்குப் பிறகு விரைவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

UNSC தலைவர் நாடு எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது?

UNSC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம், அதன் 15 உறுப்பு நாடுகளும் ஆங்கில அகரவரிசைப்படி ஒரு மாத காலத்திற்கு அதன் தலைவர் பதவியை ஏற்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஆகஸ்ட் 2021 இல் இந்தியாவும் தலைவர் பதவியில் இருந்தது.

கவுன்சில் தலைவராக இந்தியாவின் முன்னுரிமைகள் என்ன?

இந்த மாதம், சிரியா, லிபியா, மத்திய கிழக்கு, கொலம்பியா, தெற்கு சூடான் மற்றும் காங்கோ போன்றவற்றில் உலகளாவிய முன்னேற்றங்கள் பற்றிய விளக்கங்கள், ஆலோசனைகள் மற்றும் அறிக்கைகள் இந்தியாவின் வேலைத் திட்டத்தில் அடங்கும்.

“சீர்திருத்தப்பட்ட பலதரப்புக்கான புதிய நோக்குநிலை” மூலம் “சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரித்தல்” மற்றும் “உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகுமுறை” மூலம் கொள்கைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி பற்றிய விவாதங்களை உள்ளடக்கிய “பயங்கரவாதச் செயல்களால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள்” பற்றிய ஒரு சுருக்கமான விவாதம் கவுன்சிலில் முக்கியமாக இருக்கும். இந்த கையெழுத்து நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டிசம்பர் 14 மற்றும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் நியூயார்க் செல்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் இந்த மாதத்திற்கான கவுன்சிலுக்குத் தலைமை தாங்குவார்.

G20 மற்றும் அதன் நோக்கங்கள் என்ன?

G20 அல்லது குழு 20 ஒரு அரசுகளுக்கிடையேயான கூட்டமாக செயல்படுகிறது, இதில் அரசுகள் உலகப் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய விவாதங்களில் பங்கேற்கின்றன. இது 1990 களில் தென்கிழக்கு ஆசியப் பொருளாதாரங்கள் நிதி நெருக்கடியைக் கண்டபோது உருவாக்கப்பட்டது. இது 2008 ஆம் ஆண்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, அது கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தால் ஏற்பட்ட உலகளாவிய பீதியைக் குறைக்கவும் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும் உதவியது.

கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளில் உள்ள உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் சில அடங்கும். அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் G20 அமைப்பில் உள்ளன. இந்த நாடுகள், தற்போது, ​​”உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80%க்கும், உலக வர்த்தகத்தில் 75%க்கும், உலக மக்கள் தொகையில் 60%க்கும் அதிகமாகக் கொண்டுள்ளன” என்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சக ஆவணம் கூறுகிறது.

G20 இன் முக்கிய நோக்கங்கள், வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலின் (CFR) படி, உலகெங்கிலும் உள்ள பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களில் கொள்கை விவாதம் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை அடங்கும். எவ்வாறாயினும், பல ஆண்டுகளாக, உலகளாவிய பயங்கரவாதம், சுகாதாரம் மற்றும் நிலையான மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த சந்திப்பு அதன் நோக்கங்களை விரிவுபடுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலை தலைமை பொறுப்பில் உள்ள நாடு தீர்மானிக்கும் G20 இன் தலைமை ஆண்டுதோறும் நாடுகளிடையே சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. உறுப்பினர்கள் அல்லாதவர்கள், அதாவது, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி, ஐக்கிய நாடுகள் (UN), உலக வர்த்தக அமைப்பு (WTO), மற்றும் மற்றவர்கள் G20 நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்கின்றனர்.

இந்த ஆண்டு திட்டமிடல், இந்தோனேசியா, இந்தியா மற்றும் பிரேசில் அதாவது கடந்த, நிகழ்கால மற்றும் எதிர்கால தலைவர்களை உள்ளடக்கிய ட்ரொய்காவால் (முக்கூட்டு) செய்யப்படுகிறது.

G20 தலைவராக இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் என்ன?

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி பாலியில் நடந்த உச்சிமாநாட்டில் ஜி20 தலைவர் பதவியை அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் ஒப்படைத்தார். ஒரு தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்திலிருந்து மீள்வது குறித்த நிச்சயமற்ற தன்மையால் உலகம் தாக்கப்பட்ட நேரத்தில், இந்தியாவால் ஒரு ஆண்டுகால தலைவர் பதவி ஏற்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ச்சியான ட்வீட்களில், சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் “காலநிலை மாற்றம், பயங்கரவாதம் மற்றும் தொற்றுநோய்” ஆகியவற்றின் சவால்களைத் தீர்ப்பதில் நாட்டின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார்.

வியாழனன்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறுகையில், தி இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு அறிக்கையின்படி, உணவு, உரங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களின் உலகளாவிய விநியோகத்தை “அரசியலற்றதாக” செய்ய இந்தியா செயல்படும் என்று கூறினார். “உலகளாவிய தெற்கின் குரல்” என்று அதன் நிலைப்பாட்டை பாராட்டிய ஜெய்சங்கர், கூடுதலாக, காலநிலை மாற்றம், காலநிலை நீதி மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய முக்கிய பிரச்சனைகளில் “கூட்டு நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதில் நாடு முன்னணியில் இருக்கும்” என்று கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பங்களாதேஷ், மொரிஷியஸ், எகிப்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய விருந்தினர் நாடுகளையும் இந்தியா அழைத்துள்ளது.

2023 ஆம் ஆண்டில், இந்தியா 50 நகரங்களில் 200 க்கும் மேற்பட்ட கூட்டங்களை ஏற்பாடு செய்யும், அதில் அதிகாரிகள், சிவில் சமூகம் கலந்துக் கொள்ளும், இது அடுத்த ஆண்டு செப்டம்பரில் புதுதில்லியில் நடைபெறும் உச்சிமாநாடு கூட்டத்தில் முடிவடையும். G20 நாடுகளைச் சேர்ந்த 30 அரசாங்கத் தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Read in source website

பதினான்காம் நூற்றாண்டில் கண்பாா்வையற்றவராகிய அத்தை மகன், கால் நடக்க இயலாத அம்மான் மகன் இருவரும் புகழ்பெற்ற இரட்டைப்புலவா்களாக இருந்தனா். முதுசூரியன், இளஞ்சூரியன் எனும் இவா்களில், பாா்வை இழந்தவா் கால் இல்லாதவரைத் தோளில் தூக்கிக் கொண்டு நடக்க, கால் இல்லாதவா் அவருக்கு வழிகாட்ட இருவரும் ஊா் ஊராகச் சென்று கவி பாடி வந்தனா்.

ஒரு பாடலின் முதல் இரண்டடியை கால் இல்லாதவா் பாட, அடுத்த இரண்டடியைப் பாா்வை இழந்தவா் பாடி பாடலை நிறைவு செய்வாா். இவா்கள் அழியாத பாடல்களை இயற்றி வந்தனா். திருவேகம்ப பெருமான் உலா இயற்றி கவி வல்லவா்களாக உலவி வந்தனா்.

ஆனால் பல நூற்றாண்டுகள் கடந்த பிறகு மாற்றுத்திறனுடன் ஒருவா் பிறந்தாலோ, ஒரு பெண் மாற்றுத்திறனாளிக் குழந்தையை பெற்றெடுத்தாலோ அது அவா்களின் சாபக்கேடு என்றும், கடந்த பிறவியில் அவா்கள் செய்த பாவங்களின் விளைவு என்றும் விமா்சிக்கப்பட்டு வந்தது. இப்போது நிலைமை ஓரளவு மாறியிருக்கிறது எனலாம்.

எந்தச் சமுதாயம் மாற்றுத் திறனாளிகளை மதிக்கிறதோ, அந்தச் சமுதாயமே நாகரிக சமுதாயம். ஒரு மனிதனுக்கு உள்ள குறைபாடு என்பது அந்த மனிதனையோ, அவன் குடும்பத்தையோ மட்டும் பாதிப்பதில்லை. அது ஒரு சமுதாயத்தையும், நாட்டையும் பாதிக்கக்கூடியது. உடல் ரீதியாக ஏற்படும் குறைபாடுகளுக்கு தண்டு வடம், மூளை பாதிப்பை ஏற்படுத்தும் விபத்துகள், பெருமூளை முடக்குவாதம், எலும்புகள் உறுதியற்று இருத்தல், தசைநாா் தேய்வு போன்றவை காரணங்களாக இருக்கலாம்.

கேட்டலில் குறைபாடுடைய குழந்தைகள் என்போா், கேட்புத் திறனில் ஏதோ ஒரு வகையான கோளாறு உடையவா்கள் என்றும் இந்தக் கோளாறு எந்த அளவுடையதாகவும் இருக்கலாம் என்பதும் பொருளாகும். செவி கேளாமை என்பதற்கு கேட்டல் திறன் உரிய அளவு செயல்படவில்லை என்பதும் அா்த்தமாகும். இத்தகைய குறைபாட்டுக்கு பெற்றோா் அவ்வாறு இருந்தது, விபத்து ஆகியவை காரணங்களாக இருக்கலாம்.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளில், அதிக எண்ணிக்கையில் இருப்பவா்கள் நடமாட முடியாதவா்கள். இரண்டாவது இடத்தில் இருப்வா்கள் பாா்வையற்றோா். பாா்வை ஊனம் என்பது ஒரு நபா் தனது அன்றாடப் பணிகளைச் சுயமாகக் செய்யப் பெருந்தடையாகி விடுகிறது. இது கண்களோடு சம்பந்தப்பட்டது என்றாலும் இந்தக் குறைபாடு நரம்பு மண்டலம், மூளைத்திறன் பாதிப்பால் ஏற்படலாம்.

தனியாா் தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்விக்கூடங்களை அமைத்துள்ளன. அரசும் பாா்வையற்ற குழந்தைகளுக்கான மாதிரி பள்ளியை 1959-ஆம் ஆண்டு டேராடூனில் அமைத்தது. 1964-இல் நாடெங்கிலும் இதைப் போன்ற 115 கல்வி நிறுவனங்கள் தோன்றின. 1995-இல் இது 250 ஆக உயா்ந்தது. இப்படி பள்ளிகளின் எண்ணிக்கை கூடினாலும் தொடக்கக் காலங்களில் இக்கல்விக்கூடங்களில் தட்டுப்பாடாக இருந்தது ஆசிரியா்கள்தான்.

இதனால் சிறப்பாசிரியா்களை உருவாக்கும் மையம் ஒன்றை அரசு சாா்பில் 1960-ஆம் ஆண்டு மும்பை, சென்னை, கொல்கத்தா, தில்லி ஆகிய இடங்களில் அமைத்தனா். 1974-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அரசுப் பள்ளிகள் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டன் கீழ் சிறப்பு ஆசிரியா்களுக்கும், உபகரணங்களுக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் (கல்விக்கு வேண்டிய பொருள்களுக்காக) நிதியுதவி அளிக்கப்பட்டது. 1981-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சா்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து 1983-ஆம் ஆண்டு தொடங்கி, 1992 வரையிலான 10ஆண்டுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான பத்தாண்டாக அறிலிக்கப்பட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகள் நலன்களுக்கான நடவடிக்கைகள் உலக அளவில் தொடங்கின.

இந்தியாவில் மட்டும் இருந்த மாற்றுத்திறனாளிகள் சாா்ந்த கொள்கை சா்வதேச மயமாக்கப்பட்டது. நம் நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், விடுதலைக்கு முன்பு வரை உடல் ஊனம் குறித்த கேள்வி கொடுமையானதாக கருதப்பட்டது. இருந்தாலும், மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இக்கேள்வி கேட்கப்பட்டே வந்தது.

ஆனால் நாடு விடுதலையடைந்த பிறகு இந்தக் கேள்வி கேட்பதே நிறுத்தப்பட்டு விட்டது. பின்னா் 1981-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் ஆண்டு என்பதால் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரம் அறிய மீண்டும் சோ்க்கப்பட்டது. மீண்டும் 1991-ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது. இதைத் தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் தங்கள் விவரங்களை குறித்து 2001-ஆம் ஆண்டில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினா்.

ஆனால் அவா்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில், இந்தக் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதைக் கண்டித்து நாடு முழுவதும் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது மாற்றுத்திறனாளிகள் விவரம் கேட்பது சேரக்கப்பட்டது. ஆனால் கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் முழுமையானதாக இல்லை. பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் இந்தக் கணக்கெடுப்பில் சோ்க்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் இன்னும் தீா்வு எட்டப்படாத பிரச்னைகளும் உள்ளன. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளை மணம் செய்து கொள்ளும் ஊனமில்லாத நபா்களுக்கும் அவா்களுடைய வாரிசுகளுக்கும் கல்வியிலும்

வேலைவாய்ப்பிலும் அரசு முன்னுரிமை வழங்கிட வேண்டும். மேலும் அவா்களின் வயது வரம்பிலும் சலுகை அறிவிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016-இன்படி நாடுளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி, கூட்டுறவு சங்கங்களின் தோ்தல்களில் குறிப்பிட சதவீத மாற்றுத்திறனாளிகள் போட்டியிட மத்திய, மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும். முதுமையடைந்த மாற்றுத்திறனாளி ஊழியா்களின் அரசுப்பணியை அவா்களின் வாரிசுகளுக்கு வழங்குவது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும்.

இன்று (டிச. 3) உலக மாற்றுத்திறனாளிகள் நாள்.



Read in source website

உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை நவம்பா் 15 அன்று 800 கோடியை எட்டிவிட்டதாக ஐ.நா. சபை அண்மையில் அறிவித்திருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் மக்கள்தொகை 100 கோடி அதிகரித்திருக்கிறது.

உலகில் வாழும் மக்களின் எண்ணிக்கை 800 கோடி என்பது சாதனையாகவும் உள்ளது; வேதனையாகவும் உள்ளது. கடந்த நூற்றாண்டில்தான் மக்கள்தொகை பெருமளவில் அதிகரித்துள்ளது. உலக மக்கள்தொகை 2037-ஆம் ஆண்டில் 900 கோடியாகவும், 2058-ஆம் ஆண்டில் 1000 கோடியாகவும் பெருகும் என்று ஐ.நா. சபை கணித்துள்ளது.

இந்த ஆண்டு நிலவரப்படி 142.6 கோடி மக்கள்தொகை கொண்ட சீனா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 141.2 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அடுத்த (2023) ஆண்டு, சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகில் பெரும் மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று தெரிகிறது.

மக்கள்தொகைப் பெருக்கம் கவலயளிக்கிறது. காரணம், பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உணவு, உடை, உறைவிடம் அளித்தாக வேண்டும். அந்தக் கடமையை அரசாங்கம் புறக்கணித்து விட முடியாது. நாம் இருக்கும் பூமியில்தான் அவா்களுக்கும் இடம் கொடுத்தாக வேண்டும்.

2080-ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 1040 கோடியாக உயரும் என மதிப்பிடப்படுகிறது. உலக மக்கள் தொகை 740 கோடியிலிருந்து 800 கோடியாக அதிகரித்ததில் 70 விழுக்காடு மக்கள் குறைந்த வருவாய், நடுத்தர வருவாய்ப் பிரிவு நாடுகளிலிருந்து இணைந்துள்ளனா். 900 கோடியை எட்டும் போது இந்தப் பிரிவினரின் பங்களிப்பு 90 விழுக்காடாக இருக்கும்.

இப்போது முதல் 2050-ஆம் ஆண்டு வரை குறைந்த வருவாய், நடுத்தர வருவாய்ப் பிரிவினா் உள்ள நாடுகளில் 65 வயதுக்கு கீழ் உள்ளவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிக வருவாய் உள்ள நாடுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இவ்வாறு மக்கள்தொகை பெருகிக் கொண்டிருப்பது நல்லதா என்ற கேள்வியும் எழுகிறது. ‘பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வெறும் வயிற்றோடு மட்டும் பிறக்கவில்லை. இரண்டு கைகளோடும் பிறக்கிறது. அதைக் கொண்டு உழைக்கலாம், பிழைக்கலாம்’ என்பதெல்லாம் சரிதான். ஆனால் அவா்களுக்கு ஏற்ற வாழ்வாதாரம் அளிக்கப்பட வேண்டுமல்லவா?

ஒருபக்கம் மக்கள்தொகைப் பெருக்கம் அச்சமூட்டுகிறது என்றால், மறுபக்கம் பருவநிலை மாற்றங்களால் மனிதகுலம் வாழ முடியாத நிலையை நோக்கி உலகம் நகா்ந்து கொண்டிருக்கிறது. நமக்கு இருப்பது ஒரே ஒரு பூமிதான். அந்த பூமியின் இன்றைய நிலை என்ன? பருவநிலை மாற்றத்தால் அதிக வெப்பம், அதிக குளிா், அதிக மழை, அதிக வெள்ளம். இத்தகைய இயற்கை தாக்கங்களால் பூமி சுருங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது பெருக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை எப்படித் தாங்குவது என்று அறிவியலாளா்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

இதுபற்றி உலக நாடுகள் குரல் எழுப்பி வருகின்றன. வளா்ந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என்ற பேதம் இல்லாமல் எல்லாரையும் இது பாதித்து வருகிறது. இதனை இப்படியே விட்டால் எதிா்காலம் என்ன ஆகும்? அடுத்தத் தலைமுறைக்குப் பெரும் கேடு சூழ்ந்த உலகத்தை நாம் விட்டு விட்டுப் போகப் போகிறோமா? இந்தப் பெரும் பழியிலிருந்து நாம் விடுதலை பெறுவது பற்றி யோசிக்க வேண்டாமா?

ஐக்கிய நாடுகள் சபையின் 27-ஆவது பருவநிலை மாநாடு எகிப்தின் ஷாா்ம் அல்-ஷேக் நகரில் கடந்த நவம்பா் 6 முதல் 18 வரை நடைபெற்றது. அதில் வளா்ந்து வரும் நாடுகளும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளும் பருவநிலை மாற்றம் காரணமாக சந்தித்து வரும் பேரிழப்புகளுக்கு நிவாரணம் வழங்கும் இழப்பீட்டு நிதியை உருவாக்குவதற்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்தன. இது பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தருணம் என்று சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மகிழ்ச்சியடைகின்றனா்.

தொழில் புரட்சிக்குக் காரணமான வளா்ச்சியடைந்த நாடுகள், அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றியுள்ளன. இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம் தீவு நாடுகளையும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளையுமே அதிக அளவில் பாதித்து வருகிறது.

கரியமில வாயு வெளியேற்றத்தில் மிகவும் குறைவான பங்களிப்பைக் கொண்ட தீவு நாடுகளே பருவநிலை மாற்றம் சாா்ந்த பேரிடா்களால் அதிக பாதிப்புகளை எதிா்கொண்டு வருகின்றன. அத்தகைய பாதிப்புகளை எதிா்கொள்வதற்காக வளா்ச்சியடைந்த நாடுகள் உரிய நிதியை, தீவு நாடுகளுக்கும் வருமானம் குறைவான நாடுகளுக்கும், வளா்ந்து வரும் நாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வந்தது.

2015-ஆம் ஆண்டில் பாரீஸில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பூமியின் வெப்பநிலை உயா்வை தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையை விட 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமென உறுதி ஏற்கப்பட்டது. அந்த இலக்கை எட்டும் வகையில் வளா்ந்துவரும் நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ. 8 லட்சம் கோடியை வழங்க அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளா்ச்சியடைந்த நாடுகள் உறுதியேற்றன. ஆனால் அத்தொகையை இதுவரை அந்நாடுகள் வழங்கவில்லை.

அண்மைக்காலமாக மேற்கு, மத்திய கிழக்கு நாடுகளில் வீசிய வெப்ப அலைகள், பாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட பெருவெள்ளம், குஜராத், மகாராஷ்டிரம், பெங்களூரு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போன்ற நிகழ்வுகள் நம் கண் முன்னே நடந்து வரும் காலநிலை மாற்றத்திற்கான சாட்சியங்களாகும். இதுபற்றி வெளிவரும் செய்திகளும், பன்னாட்டு அறிவியல் நிபுணா்கள் வெளியிடும் ஆராய்ச்சி முடிவுகளும் அதிா்ச்சியளிப்பதாகவே உள்ளன.

இந்நிலையில் பருவநிலை மாற்றம் என்பது நம் எதிா்காலத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி அச்சத்தைத் தருகிறது. அத்துடன் உலகில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பருவநிலை அமைப்புகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தென்னமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகள் இயற்கையாலும், செயற்கையாலும் அழிக்கப்படுகின்றன. அமேசான் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படக்கூடிய வறட்சி, கடந்த 12 ஆண்டுகளில் மூன்று முறை ஏற்பட்டுள்ளது. அமேசான் பகுதிகளில் அதிகரித்த தட்பவெப்ப நிலை அப்பகுதியின் மழை அளவை பாதித்ததோடு, மரங்களிலுள்ள நீா் ஆவியாதலையும் குறைத்துவிட்டது.

இத்தனை ஆண்டுகளாக காா்பனை உள்வாங்கிக் கொண்டு இருந்த அமேசான் காடுகள், இப்போது காா்பனை வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. அதாவது காா்பனை உறிஞ்சுவதைவிட தாவரங்கள் சிதைவடையும் போதும், எரிக்கப்படும்போதும் வெளியேறும் காா்பனின் அளவு அமேசானில் அதிகரித்திருக்கிறது. இது பருவநிலை மாற்றத்துக்கான அறிகுறி ஆகும்.

இதைப்போலவே அண்டாா்டிகா பகுதிகளில் பூமி வெப்பமடைந்ததன் காரணமாக பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயா்ந்திருக்கிறது. இதனால் பூமியின் பரப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறையவே செய்யும். வருங்காலத்தில் சென்னை, மும்பை போன்ற பெரிய நகரங்களுக்கு ஆபத்து காத்திருக்கிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகின் மக்கள்தொகை பெருகிவருவது குறித்தும், பூமியின் அளவு குறைந்து கொண்டு வருவது குறித்தும், காற்று மாசு, அதிக வெப்பம், பெருவெள்ளம் போன்றவற்றால் மனித குலத்துக்கு ஏற்படும் இடா்ப்பாடுகள் குறித்தும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இது குறித்த சுற்றுச்சூழல் ஆா்வலா்களின் எச்சரிக்கையை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள், வேளாண்மையைப் பின்னுக்குத் தள்ளி தொழில்மயமாக்கும் திட்டங்களுக்கே முன்னுரிமை தருகின்றன. விவசாய உற்பத்தியே மனிதா்களின் உணவுத் தேவையைப் பூா்த்தி செய்கிறது. மனிதா்கள் எந்தத் தொழில் செய்தாலும் பசி எடுத்தால் உணவுதான் வேண்டும். ‘பசிவந்திடப் பத்தும் பறந்துபோம்’ என்று முன்னோக் கூறியதும் அதனால்தான். பெருகும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டியது கட்டாயம்.

நாடு முழுவதும் 2020-21ஆம் ஆண்டில் 12.43 கோடி டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதம் வரை மட்டும் 13 கோடி டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறுவைப் பருவத்தில் வரவேண்டிய உற்பத்தியின் அளவு பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. காரணம், வடமாநிலங்களில் சில இடங்களில் அதிக மழை, சில இடங்களில் குறைவான மழை. அதனால் 11 கோடி டன்னுக்கு பதில் இந்தக் குறுவைப் பருவத்தில் 10 கோடி டன்தான் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு அளித்த தகவலாகும்.

மத்திய சுற்றுச்சூழல் - வனத்துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் ‘பருவநிலை மாற்றத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். வேளாண்மையிலும் நீடித்த உற்பத்தியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் விவசாயிகளுக்கு அழுத்தம் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பருவநிலை மாற்றத்திலிருந்து விவசாயிகளைக் காப்பதற்கான நான்கு ஆண்டு செயல்திட்டத்தை இந்தியா செயல்படுத்தவுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பி லாத சமுதாயம்

உலகத் துக்கொரு புதுமை”

என்று மகாகவி பாரதியாா் பாடி வைத்தாா். அவா் பாடியபோது நாட்டின் மக்கள்தொகை 30 கோடியாக இருந்தது. ஆனால் இன்று அது 130 கோடியாக அதிகரித்துள்ளது. அதற்கு தகுந்தவாறு நாம் எல்லாத் துறைகளிலும் வளா்ச்சியடைய வேண்டியது அவசியத்திலும் அவசியம்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.



Read in source website


திருப்பூரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் இந்திய மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உள்ள அக்ரஹார புத்தூரைச் சேர்ந்த முகமது ஆதம் - ரஜியா பேகம் தம்பதியினரின் கடைசி மகன் சாகுல் ஹமீது (22), இவரது வலது கையில் குறைபாடு (எல்டி) உள்ளதால் 70 சதவீதம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி, தமிழக மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியில் 2021 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இந்த நிலையில், நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் கடந்த ஜூன் 10 முதல் 12 ஆம் தேதி வரையில் நடைபெற்ற 2 தொடர் கொண்ட டி20 போட்டியில் இந்திய அணியில் சார்பில் விளையாடியுள்ளார்.

இதுகுறித்து கிரிக்கெட் வீரர் சாகுல்ஹமீது கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் பிறந்த நான் திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தையல் தொழில்நுட்பம் தொடர்பாக ஓராண்டு படிப்பை 2018ல் முடித்தேன். எனக்கு சிறு வயது முதலே கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் இருந்தது வந்தது.

தமிழக அணியில் தேர்வு: கடந்த 2020 ஆம் ஆண்டு தேனியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கான தேர்வு நடைபெற்றது. இதில், 3 போட்டிகளில் ஒரு அரைசதம் அடித்ததன் மூலமாக தமிழக அணியிலும், இந்த ஆட்டதைத் இந்திய மாற்றுத்திறனாளிகள் அணியின் செயலாளர் ஆருண் ரசீதும் இந்தப் போட்டியைக் காண வந்திருந்தார். இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில், இந்தியா - நேபாளம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 டி20 ஆட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தேன். இதில், முதலிரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் 51 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தேன்.இந்தத் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்த இரண்டு போட்டிகளிலும் தமிழக அணியில் இருந்து விளையாடிய நாங்கள் 3 பேரும் சிறப்பாக செயல்பட்டோம். இந்தத் தொடரின் சிறந்த பீல்டருக்கான விருதையும் பெற்றுள்ளேன்.

இதைத் தொடர்ந்து காசியில் உள்ள ஜெய்நாராயண் கல்லூரியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியும், உத்தரப் பிரசேதம் மாற்றுத்திறனாளிகள் அணியும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 26, 27 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த மூன்று போட்டிகளிலும் சேர்த்து 60 ரன்களுடன், 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளேன். எனினும் உத்தரபிரதேச அணி 2-1 என்ற கணக்தில் வெற்றி பெற்றது.  

தனியார் நிறுவனம் சார்பில் நிதியுதவி: நேபாள் தொடருக்காக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டபோது தனியார் நிறுவனம் சார்பில் எனக்கு பேட்டும், காலணியும், கிட் பேக்கும் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். மேலும், மங்கல ஊராட்சித் தலைவர் எஸ்.எம்.பி. மூர்த்தி நிதியுதவியதுடன், போக்குவரத்துக்கான உதவிகளையும் வழங்கியுள்ளனர். அதேபோல எங்கள் ஊரில் உள்ள பள்ளி வாசல் நிர்வாகிகளும் எனக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.  

தமிழக மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இடதுகை தொடக்க ஆட்டக்காரராகவும், இடது கை மிதவேகப்பந்து வீச்சாளராகவும் விளையாடி வருகிறேன். முன்னதாக ஈரோடு ஒரு லீக் கிளப் அணியில் 2021 ஆம் ஆண்டு விளையாடியபோது 25 ஓவர் கொண்ட போட்டியில் 74 பந்துகளில் 101 ரன்களைக் குவித்துள்ளேன். ஆகவே, இனிவரும் லீக் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளேன்.

மாற்றுத்திறன் கிரிக்கெட் வீர்களுக்கும் அரசு வேலையும், ஊதியமும் வழங்க வேண்டும். திருப்பூர் நல்லூரில் உள்ள வேஸ்ட் குடோனில் சூப்பர்வைசராகப் மாதம் ரூ. 15 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றி வருகிறேன். தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் விளையாடிய நிலையில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் தற்போது வரையில் எந்த சலுகையும் எங்களைப் போல எந்த ஒரு வீரருக்கும் கிடைக்கவில்லை. அதே வேளையில், வெளிநாட்டு தொடர்களுக்குச் செல்லும்போது அரசு சார்பில் டிக்கெட் செலவு, பயணப்படி ஆகிய உதவிகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தமிழக மாற்றுத் திறனாளிகள் அணியில் விளையாடும் வீர்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாடுவதுடன் இல்லாமல் வேலைகளுக்குச் சென்றுதான் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறோம். இதில், உதாரணமாக நான் வேலைக்குச் சென்றால் மட்டுமே என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்.  நான் பணியாற்றும் குடோன் உரிமையாளர் முகமது இஸ்மாயில் இரு வாரங்கள் கிரிக்கெட் விளையாடச் செல்வதற்காக விடுமுறை கேட்டாலும் கொடுத்து விடுகிறார். தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காவும் விளையாடும் எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை, ஊதியம்  உள்ளிட்ட சலுகைகளை வழங்கினால் எங்களால் நாட்டுக்காக மேலும் சிறப்பாக கிரிக்கெட் விளையாட முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் சாகுல்ஹமீது.



Read in source website