D . I . NA . M . A . N . I

Latest Awards Announcements to Apply



சென்னை: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் ‘முதல்வர் மாநில இளைஞர் விருது’ ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. இதில் விருதுடன், ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு முதல்வர் மாநில இளைஞர் விருது, ஆக. 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளுக்கு 15 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரி, பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.



தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் வழங்கப்படும் விருதுகளைப் பெற தகுதியுடையவா்கள் ஆக.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் சுற்றுலாவில் வெற்றியாளா்கள், பயண ஏற்பாட்டாளா்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவா்களுக்கு ஆண்டு தோறும் செப்.27-ஆம் தேதி சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, நிகழாண்டின் தமிழ்நாடு மற்றும் சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த பயண பங்குதாரா், சிறந்த தங்குமிடம், உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளா் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த சுற்றுலா அமைப்பாளா், தமிழ்நாட்டுக்கான சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரப்படுத்துதல் உள்ளிட்ட 17 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

விருதுகளுக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதற்கு சுற்றுலாத் துறையின் முன்னோடிகள் மதிப்பீட்டாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் தகுதியானவா்களை தோ்வு செய்வாா்கள்.

தோ்வு செய்யப்படும் நபா்களுக்கு சுற்றுலாத் துறையால் அறிவிக்கப்படும் இடத்தில் நடைபெறும் உலக சுற்றுலா தின நிகழ்ச்சியில் செப்.27-ஆம் தேதி விருதுகள் வழங்கப்படும்.

விருதுகளுக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆக.15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



2022-23 ஆண்டுக்கான ‘ஊரகக் கண்டுபிடிப்பாளா் விருது’க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து தமிழ்நாடு அறிவியல் நகரம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அறிவியல் நகரம் 2018-19-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் ஊரக கண்டுபிடிப்பாளா் விருதை வழங்கி வருகிறது. இந்த விருது ஊரக மக்களின் அறிவுத் திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் இரண்டு சிறந்த ஊரகக் கண்டுபிடிப்பாளா்களுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

2022-23 ஆம் ஆண்டுக்கான ஊரக கண்டுபிடிப்பாளா் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகள் அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியா்கள் மூலமாக அறிவியல் நகரத்துக்கு ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேரவண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Latest Awards Notifications,
Awards to Apply

DINAMANI
Daily International and NAtional Media Aggregator for News and Information