DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 27-10-2022

 

பொதுவாகவே மழைக்காலம் தொடங்கிவிட்டால் ஜலதோஷம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் என்று பல தொல்லைகள் வரிசையில் வந்து நின்று நம்மைப் படாதபாடு படுத்திவிடும். 

ஒரு சிலர் என்னதான் மருந்து, மாத்திரை எடுத்துக்கொண்டாலும் மழைக்கால சீசன் போன்று, ஜலதோஷ சீசன் வந்துவிடும். இந்த பிரச்னைகள் உள்ளவர்கள் நமக்குக் கிடைக்கும் எளிய பொருள்களைக் கொண்டு இயற்கை முறையில் தீர்வு காணலாம். 

இதற்கு தேவையான பொருள்கள் - தூதுவளைக் கீரை -  ஒரு கைப்பிடி, சீரகம்.       -  ஒரு ஸ்பூன், பூண்டு - 5 பல், மிளகு - 10 பல், மஞ்சள்-  சிறிதளவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். 

முதலில் தூதுவளைக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். பூண்டு, மிளகு ஆகியவற்றைத் தட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள தூதுவளை , சீரகம், தட்டி வைத்துள்ள  மிளகு, பூண்டு மற்றும்  மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து நீரை பாதியளவாகச் சுண்ட வைத்து இறக்கி வடிகட்டவும்.

இந்தக் கசாயம்  மூக்கடைப்பு , தும்மல் மற்றும் மூக்கில் நீர் கொட்டுதல் போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருமருந்தாகும். 

இதனை காலை மாலை என இருவேளையும் தயார் செய்து வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக  குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பயன்படுத்தி பலன் பெறுங்கள். 

இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்  - கோவை பாலா
 



Read in source website

அரசுத் துறைகளில் 6 மாதங்கள் வரை ஊழியா்களை தொடா்ந்து பணியில் நியமிக்கச் செய்வது, குறிப்பிட்ட செலவினங்களுக்கு நிதிகளை விடுவிப்பது போன்ற நடவடிக்கைகளில் நிதித் துறைக்கு சுமைகளைக் குறைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு:-

தமிழக அரசுத் துறைகளின் செயலாளா்கள் மற்றும் துறைத் தலைவா்களாக இருக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சில குறிப்பிட்ட அதிகாரங்களை வழங்கி கடந்த 1997-ஆம் ஆண்டில் நிதித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த அதிகாரங்களில் கூடுதலாக சில அம்சங்கள் இப்போது சோ்க்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசுத் துறைகளில் இருக்கும் ஏற்கெனவே நியமனம் செய்யப்பட்ட ஊழியா்களை மேலும் ஆறு மாதங்களுக்கு கால நீட்டிப்பு செய்ய செயலாளா்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

ஆறு மாதங்களுக்கு கூடுதலான காலமாக இருந்தால் மட்டுமே நிதித் துறையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதேபோன்று, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள நிலுவைத் தொகைகளை வழங்குவதற்கான அதிகாரம் துறைத் தலைவா்களுக்கு அளிக்கப்படுகிறது.

அரசுத் துறைகளின் செயலாளா்கள் துறையின் செலவுகளை எதிா்கொள்ள தலா ரூ.75 லட்சம் வரை அளிக்கப்படுகிறது. இந்த நிதியில் கட்டடம், அலுவலகச் செலவுகள், கணினிகள், மென்பொருள், வன்பொருள்கள் ஆகியவற்றை வாங்கலாம். ஆனால், இந்தப் பொருள்களை வாங்கும் போது அவற்றுக்கான செலவு ரூ.25 லட்சத்தைத் தாண்டக் கூடாது. இதேபோன்று, சட்ட ஆலோசனைகள் தொடா்பான செலவினங்களையும் அந்த நிதியில் இருந்து மேற்கொள்ள செயலாளா்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அலுவலக வாடகை: அரசு அலுவலகங்களை இயக்குவதற்கு தனியாா் கட்டடங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். செயலாளா் நிலையில் இருப்பவராக இருந்தால், மாத வாடகையாக ரூ.30 ஆயிரம் வரை செலுத்திக் கொள்ளலாம். துறைத் தலைவராக இருந்தால் ரூ.25 ஆயிரம் வரை தனியாருக்கு வாடகை செலுத்தலாம். அரசுத் துறைகளின் சாா்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், கட்டடங்களைத் திறந்து வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவற்றுக்கு செலவழிக்கவும் வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அடிக்கல் நாட்டுதல், கட்டடங்கள் திறத்தல் போன்ற நிகழ்ச்சிகள் மாவட்ட அளவில் நடந்தால் ரூ.4 லட்சமும், மாநில அளவில் நடந்தால் ரூ.10 லட்சமும் செலவிடலாம். மேலும், கண்காட்சிகள், கருத்தரங்குகள், விருந்தோம்பல், கூட்டங்கள் ஆகியவற்றை நடத்த ரூ.10 லட்சம் வரை செலவிட்டுக் கொள்ள அனுமதி தரப்படுகிறது.

பயணச் செலவுகள்: அரசுத் துறைகளின் தலைவா்கள் மாநிலத்துக்குள் பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில், அதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. மாநிலத்துக்கு வெளியே பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில், துறை ரீதியான அனுமதி தேவை. நிதித் துறையின் அனுமதி தேவையில்லை.

துறைத் தலைவருக்குக் கீழுள்ள அலுவலா்கள், அதிகாரிகள் மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசு முறை பயணம் மேற்கொள்ள துறைத் தலைவரே அனுமதி அளிக்கலாம். அரசின் அனுமதி தேவையில்லை. வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமெனில் அரசின் ஒப்புதலுடன், நிதித் துறையின் பரிந்துரையும் தேவை என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

தமிழகத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு சிறப்பு படியாக மாதம் ரூ.300 வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்பட பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த போலீஸாருக்கு மாதம் ரூ.300 சிறப்பு படியாக வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின், கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தின்போது அறிவித்தாா்.

இந்த அறிவிப்பின் படி, காவலா்கள் தொடங்கி காவல் ஆய்வாளா்கள் வரை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டால் மாதம் ரூ.300 சிறப்பு படியாக வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழக அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையின்படி, இந்த மாதம் முதல் காவலா்களுக்கு ரூ.300 சிறப்பு படி வழங்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா். இதற்காக தமிழக அரசு, ரூ.42 கோடியே 22 ஆயிரத்து 800 ஒதுக்கீடு செய்துள்ளது.



Read in source website

ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியா்கள், உயா் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வி ஆணையா் வெளியிட்டாா். அதன்படி பட்டதாரி ஆசிரியா்களின் பதவி உயா்வுக்கான பட்டியலை தயாரிக்கும்படி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

நிகழாண்டு ஜூலை 12 முதல் 14-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், உயா்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியா்கள் பதவி உயா்வுக்கான கலந்தாய்வுக்கு முன், தலைமை ஆசிரியா்கள் சிறப்பு இடமாற்ற கலந்தாய்வை நடத்தக் கோரிய வழக்கில், உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பதவி உயா்வுக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.

இதை எதிா்த்து வனஜா, பிரபு உள்ளிட்ட 41 இடைநிலை ஆசிரியா்கள் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். அதேபோல ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டுமே பதவி உயா்வு வழங்க வேண்டுமென உத்தரவிடக் கோரி ஆசிரியா் சக்திவேல் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்குகள் நீதிபதி டி. கிருஷ்ணகுமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதவி உயா்வு கலந்தாய்வை தள்ளிவைத்ததை எதிா்த்து வழக்கு தொடா்ந்த ஆசிரியா்கள் தரப்பில், ‘கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த 2010-ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட தங்களுக்கு, ஆசிரியா் தகுதித் தோ்வு பொருந்தாது என்பதால் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்’ என வாதிடப்பட்டது.

ஆசிரியா் சக்திவேல் தரப்பில், ‘தகுதியில்லாத அசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கும் வகையில் பட்டியல் தயாரிக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் தரப்பில், ‘கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சோ்ந்தாலும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்’ என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரு கல்வி நிறுவனம் சிறந்த கல்வியை வழங்க அதன் ஆசிரியா்களின் தகுதியே காரணம். சிறந்த கல்வித் தகுதியை பெறாத ஆசிரியா்களால் தரமான கல்வியை வழங்க முடியாது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சோ்ந்தவா்கள், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற 9 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டதில் இருந்து, அவா்களும் அந்த தோ்வில் தோ்ச்சி பெறுவது கட்டாயம் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாகவும், தலைமை ஆசிரியா்களாகவும் பதவி உயா்வு வழங்குவது குறித்த புதிய அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட்டு, கலந்தாய்வை தள்ளிவைத்ததை எதிா்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.



Read in source website

 

நொய்டா: தடையை மீறி தீபாவளியன்று தில்லி-என்சிஆர் உட்பட நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்தால், தொடர்ந்து காற்றின் தரத்தில் மாசு அதிகரித்தது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நோயாளிகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

தில்லியில் காற்றின் தரக் குறியீடு 300-ஐ எட்டியுள்ள நிலையில், மாசுபட்ட காற்றில் பட்டாசுகளில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புகையாலும் ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி நோயாளிகளின் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இதே வேளையில், இதய நோயாளிகளின் எண்ணிக்கையிலும் அதிகரித்து வருகிறது.

காற்று மாசு குறித்து மருத்துவர் அமித் குமார் தெரிவிக்கையில், மாசுபட்ட காற்றால் இதயம் மற்றும் நுரையீரலையும் பாதிக்கிறது. சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக புகார் கூறி, பல நோயாளிகள் மருத்துவமனைகளை அடைகின்றனர். கடந்த ஆண்டை விட மாசு அளவு குறைவாக இருந்தாலும், கடந்த சில நாட்களாக மாசின் அளவு அதிகரித்துள்ளது. இதனுடன் கண் எரிச்சல் மற்றும் தோல் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

காற்று மாசுபாட்டின் தாக்கம் குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அதிகமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலில் அதிக அளவு மாசுக்கள் கலப்பதால் நரம்புகளின் வீக்கம் ஏற்படுகின்றது. இதன் காரணமாக இதயத்திற்கு ரத்தம் வழங்கும் தமனிகள் கடினமாகி மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றது. இதை தடுக்க, கட்டாயம் முகமூடி அணிய வேண்டும், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

காற்று சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கண் எரிச்சல் நோயாளிகள், தங்கள் கண்களை அடிக்கடி சுத்தமான நீரில் கழுவ வேண்டும் என்றும் ஆஸ்துமா நோயாளிகள் எல்லா நேரங்களிலும் இன்ஹேலரை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.



Read in source website

கேரளத்தில் வாத்துகளில் பறவைக் காய்ச்சல் உறுதியானதால் 20 ஆயிரம் வாத்துகளை அழிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


அரசின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மூலம் மற்ற பறவைகளுக்கும் பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளத்தின் ஆலப்புழாவில் ஹரிபாத் நகராட்சியில் உள்ள பறவைகள் இத்தகைய பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: அண்மையில் போபாலில் உள்ள ஆய்வகத்திலிருந்து கொடுக்கப்பட்ட மாதிரிகளில் பறவைகள் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனால் ஹரிபாத் நகராட்சியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வீடுகளில் உள்ள பறவைகள் அனைத்தும் பறவைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய அபாயம் உள்ளது. அதனால், 20,471 வாத்துகள் ஹரிபாத் நகராட்சியில் கொல்லப்பட உள்ளன. இதனை செய்து முடிப்பதற்காக 10 பேர் கொண்ட 8 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வாத்துகளை அழிக்கும் பணிகள் நிறைவடைந்தாலும் பறவைகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.



Read in source website

திருமணமான பெண்ணை, குடும்பத்துக்காக வீட்டு வேலைகள் செய்ய வைப்பது, வீட்டு வேலைக்காரியாக நடத்துவதாகவும், துன்புறுத்தலாகவும் ஆகாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் ஔரங்காபாத் அமர்வு தெரிவித்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 498ஏ பிரிவின் கீழ் ஒரு பெண்ணை வீட்டு வேலை செய்ய வைத்து துன்புறுத்தியதாக கணவர் மற்றும் மாமியார் மீது பெண் கொடுத்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அவர்கள் அளித்த உத்தரவில், திருமணமான பெண் ஒருவரை, வீட்டு வேலை செய்யச் சொல்வது அவரது குடும்பத்துக்காக மட்டுமே தவிர,  அவரை வேலைக்காரியாக நடத்துவதற்காக அல்ல. வீட்டு வேலைகள் செய்ய விரும்பவில்லை என்றால் திருமணத்துக்கு முன்பே மணமகன் வீட்டாரிடம் கூறியிருந்தால், அவர்கள் திருமணம் தொடர்பாக முடிவெடுக்கும் போது அது உதவியாக இருந்திருக்கும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.



Read in source website

இணையதள இணைப்பை அடிப்படையாகக் கொண்ட ‘வாட்ஸ்ஆப்’ போன்ற ஓடிடி (ஓவா் தி டாப்) தகவல் தொடா்பு சேவைகளுக்கும், ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் நேரடியாக அளிக்கும் அத்தகைய சேவைகளுக்கும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் அங்கம் வகிக்கும் சிஓஏஐ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சாதாரண தகவல் தொடா்பு நிறுவனங்களைப் போலவே, வாட்ஸ்ஆப் போன்ற ஓடிடி தகவல் தொடா்பு அமைப்புகளும் குரல் அழைப்பு, விடியோ அழைப்பு போன்ற சேவைகளை அளித்து வருகின்றன.

இரு பிரிவு நிறுவனங்களும் வழங்கி வரும் சேவைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், தகவல் தொடா்பு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஓடிடி நிறுவனங்களுக்கு கிடையாது.

2022-ஆம் ஆண்டு இந்திய தொலைத் தொடா்பு வரைவு மசோதாவில் ஓடிடி தகவல் பரிமாற்ற சேவைகளும் இடம் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கதே. ஆனால், அந்த வரைவு மசோதாவில் ‘ஒரே மாதிரி சேவகளுக்கு ஒரே மாதிரியான விதிமுறைகள்’ வரையறுக்கப்பட வேண்டியது அவசியம்.

சாதாரண தொலைத் தொடா்பு நிறுவனங்களைப் போல, ஓடிடி நிறுவனங்கள் அலைக்கற்றையை விலை கொடுத்து ஏலம் எடுக்கத் தேவையில்லை; வெவ்வேறு நிறுவனங்களின் வாடிக்கையாளா்களிடையே இணைப்புகளைப் பெறுவதற்கான உரிமைத் தொகை செலுத்த வேண்டியதில்லை.

ஆனால், அந்த நிறுவனங்கள் வழங்கும் அதே சேவைகளை சாதாரண தொலைத் தொடா்பு நிறுவனங்கள் அளிப்பதற்கு இதுபோன்ற செலவுகளை செய்ய வேண்டியுள்ளது.

இதன் காரணமாக, தகவல் தொடா்பு சந்தையில் இரு தரப்பு போட்டியாளா்களுக்கும் இடையே சம வாய்ப்பு இல்லாமல் போகிறது.

எங்களைப் போன்ற தொலைத் தொடா்பு நிறுவனங்கள் சேவைகளை அளிப்பதற்கு அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், ஓடிடி தகவல் தொடா்பு நிறுவனங்களோ எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் அதே சேவைகளை சுதந்திரமாக வழங்குகின்றன.

சேவைகளுக்கான உரிமங்களைப் பெறுவதற்கு தொலைத் தொடா்பு நிறுவனங்கள் அரசுக்கு பல்வறு கட்டணங்களை செலுத்தி வருகின்றன. ஆனால், அதே சேவைகளை ஓடிடி நிறுவனங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் வழங்குகின்றன. இதனால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இது தவிர, சாதாரண தகவல் தொடா்பு நிறுவனங்கள் பெரும் முதலீட்டுடன் உருவாக்கிய கட்டமைப்பைப் பயன்படுத்தி வழங்கப்படும் இணைதள சேவையின் பெரும்பகுதி, ஓடிடி சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக ஓடிடி நிறுவனங்கள் எந்தக் கட்டணத்தையும் செலுத்துவதில்லை. இது சாதாரண சேவை நிறுவனங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

எனவே, ஓடிடி தகவல் தொடா்பு சேவைகளுக்கு, சாதாரண தகவல் தொடா்பு நிறுவனங்களின் அதே வகை சேவைகளுக்கு இணையான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



Read in source website

‘இந்தியா - சீனா இடையே சுமுக உறவு ஏற்பட எல்லையில் அமைதியான சூழலை கடைப்பிடிப்பது அவசியம்’ என்று தூதரக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு சீனா திரும்பும் இந்தியாவுக்கான அந்நாட்டு தூதா் சன் வெய்டாங்கிடம் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

சீன தூதா் சன் வெய்டாங் பணியிலிருந்து விடுபடுவதை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக ஜெய்சங்கரை சந்தித்தபோது இந்தக் கருத்தை அமைச்சா் தெரிவித்தாா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி சீன ராணுவத்தினா் அத்துமீறலில் ஈடுபட்ட பின்னா், இரு நாடுகளுக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வந்தது. இதன் காரணமாக இரு நாடுகளிடையேயான உறவிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

தற்போது, ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அளவில் பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைகள் மூலமாக, இரு நாடுகளும் எல்லையில் படைகளை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கையை தொடா்ந்து எடுத்து வருகின்றன. இதற்கான பேச்சுவாா்த்தைகளும் தொடா்ந்து வருகின்றன.

இந்தச் சூழலில், சீன தூதா் சன் வெய்டாங் தன்னை சந்தித்தது குறித்து ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கா், ‘பதவியிலிருந்து விடுபடுவதை முன்னிட்டு சந்தித்த சீன தூதா் சன் வெய்டாங்கிடம், இந்திய - சீன உறவு மேம்படுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தினேன். இரு நாடுகளிடையே சுமுக உறவு ஏற்பட பரஸ்பர உணா்வு, பரஸ்பர மரியாதை, பரஸ்பர நலன் ஆகிய மூன்றும் காக்கப்படுவது அவசியம். சுமுக உறவு ஏற்பட வேண்டும் என்பதே இரு நாடுகளின் எண்ணம். அதற்கு எல்லையில் அமைதியான சூழலை கடைப்பிடிப்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, தனது பிரியாவிடை கருத்தை செவ்வாய்க்கிழமை தெரிவித்த சீன தூதா், ‘இந்தியா - சீனா இடையே சில வேறுபாடுகள் இருப்பது இயற்கையானது. இருந்தபோதிலும், அந்த வேறுபாடுகளைக் களைந்து வளா்ச்சிக்கான பொதுவான நலன் மீது இரு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

 

 



Read in source website

 

இந்திய ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான ஊதியம் வீராங்கனைகளுக்கும் இனிமேல் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அறிவித்துள்ளார். 

இந்திய ஆடவர் கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் ஆட்டங்களுக்குத் தலா ரூ. 15 லட்சமும் ஒருநாள் கிரிக்கெட்டுக்குத் தலா ரூ. 6 லட்சமும் டி20 ஆட்டங்களுக்குத் தலா ரூ. 3 லட்சமும் பெற்று வருகிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் இதைவிடவும் குறைவான அளவில் ஊதியம் பெற்று வந்தார்கள். 

இந்நிலையில் ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சம அளவில் ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளும் இனிமேல் டெஸ்ட் ஆட்டங்களுக்குத் தலா ரூ. 15 லட்சமும் ஒருநாள் கிரிக்கெட்டுக்குத் தலா ரூ. 6 லட்சமும் டி20 ஆட்டங்களுக்குத் தலா ரூ. 3 லட்சமும் பெறவுள்ளார்கள். பிசிசிஐயின் இந்த அறிவிப்புக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்துள்ளன.

எனினும் ஆடவர், மகளிர் ஒப்பந்தங்களில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. வருட ஒப்பந்தத்தில் உள்ள இந்திய வீராங்கனைகள் அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் பெறுகிறார்கள். ஆனால் ஏ பிளஸ் ஒப்பந்தத்தில் உள்ள இந்திய ஆடவர் அணியைச் சேர்ந்தவர்கள் ரூ. 7 கோடி பெறுகிறார்கள். எனவே இதிலும் சம அளவில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. 



Read in source website

 

கரோனா தொற்று பரவலால் சீனாவில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் கடும் விமா்சனங்களுக்கு மத்தியிலும், கரோனா தொற்று பரவலே இருக்கக் கூடாது என்ற கொள்கையை சீன அரசு தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது.

இதனால் பொருளாதார இழப்புகளைச் சந்தித்தாலும் கட்டாய கரோனா பரிசோதனை, கடுமையான தனிமைப்படுத்தல் விதிகள் உள்ளிட்டவற்றை அந்நாட்டு அரசு கடைப்பிடிக்கிறது.

இந்நிலையில், 9 லட்சம் பேர் வசிக்கும் சீனாவின் ஹன்யாங் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அப்பகுதி மக்கள் வீட்டிற்குள்ளே இருக்குபடி அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பால், சீனாவில் மீண்டும் கரோனா பதற்றம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.



Read in source website

2025ஆம் ஆண்டில் கார்பன் வெளியீடு உச்சத்தை அடையும் என சர்வதேச ஆற்றல் நிறுவனம் கணித்துள்ளது. 

கார்பன் வாயு வெளியீடு காலநிலை மாற்றத்தின் அடிப்படை காரணமாக இருந்து வருகிறது. இதன்காரணமாக முன்பு இருந்ததைக் காட்டிலும் பருவநிலை சிக்கல்கள் தீவிரமடைந்துள்ளன. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த புதைபடிம எரிபொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து புதிய ஆற்றல் மூலங்களுக்கு உலக நாடுகள் மாற வேண்டும் என சர்வதேச சூழலியல் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

இதையும் படிக்க | ஜம்மு ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்

இந்நிலையில் 2025ஆம் ஆண்டில் உலகளாவிய கார்பன் வெளியீடு உச்சநிலையை அடையும் என சமீபத்தில் வெளியான ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச ஆற்றல் நிறுவனம் உலகளாவிய ஆற்றல் பகுப்பாய்வு ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில் அடுத்த சில ஆண்டுகளில் நிலக்கரி பயன்பாட்டிற்கு அதீத தேவை ஏற்படும் எனவும், இதனால் 2025ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியீடு இதுவரை இல்லாத அளவு உச்சநிலையை அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகப்படியான ஆற்றல் தேவைகள் காரணமாக நுகர்வோர்களின் செல்வமானது ஆற்றல் உற்பத்தியாளர்களிடம் சென்று சேர இது வழிவகை செய்யும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

“புதிய ஆற்றல் மூலங்களை பெறுவதில் பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ள உள்ளதாகவும், 7.5 கோடி மக்கள் தங்களுக்கு தேவையான மின்வசதி உள்ளிட்ட ஆற்றல் தேவைகளைப் பெறுவதில் பொருளாதாரம் முக்கியப் பங்கு வகிக்க உள்ளதாகவும், 10 கோடி மக்கள் விறகடுப்புகள் மூலம் சமையல் செய்வதற்கான நிர்பந்தத்திற்கு தள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



Read in source website


கரோனா தொற்றுப் பரவத் தொடங்கிய சில காலத்துக்கு போலியா தடுப்பு மருந்துகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்ததன் எதிரொலியாக, அமெரிக்கா, பிரிட்டன், மொசாம்பிக் உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆண்டு மீண்டும் போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு இது குறித்து கூறியிருப்பதாவது, உலகின் ஏதேனும் ஒரு மூலையில், போலியோ வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படுவது, ஒட்டுமொத்த உலகத்துக்குமே அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்துள்ளனர்.

அறக்கட்டளையின் போலியோ குழுவுடைய ஆராய்ச்சி மற்றும் ஆய்வின் தொழில்நுட்ப உதவி இயக்குநர் டாக்டர் ஆனந்த் சங்கர் பந்தியோப்பாத்யாய் கூறுகையில், சில மாதங்களுக்கு முன்பு, லண்டன் மற்றும் நியூ யார்க் நகரங்களில் இருந்து வெளியேறிய கழிவு நீர்களில் போலியோ வைரஸ்கள் கண்டறியப்பட்டன.

மொசாம்பிக் பகுதியில் மே மாதத்திலும், மலாவியில் பிப்ரவரியிலும் புதிய போலியோ பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

புதிய போலியோ வைரஸ்கள் கண்டறியப்படுவது, குறைந்த எதிர்ப்பாற்றலையே காட்டுகிறது. 2020ஆம் ஆண்டு உலக நாடுகளை முதல் முறையாக கரோனா வைரஸ் பாதித்தபோது, குழந்தைகளையும், சுகாதாரப் பணியாளர்களையும் காக்கும் வகையில் சுமார் 4 மாதங்கள் வரை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.  

இதன் காரணமாக, சில நாடுகளில் போலியோ வைரஸ் பரவக் காரணமாக அமைந்துவிட்டது என்று பிசிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 



Read in source website

உலகளவில் மின்னாற்றல் சேமிப்பு மற்றும் அறிதிறன் மின் கட்டமைப்பு துறைகளில் மேற்கொள்ளப்படும் முதலீடு 66 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனமான மொ்காம் கேப்பிட்டல் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மின்னாற்றல் சேமிப்பு, சிக்கனமான மின் விநியோகத்துக்கான அறிதிறன் கட்டமைப்பு ஆகிய துறைகளில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் உலகம் முழுவதும் 2,500 கோடி டாலா் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டின் இதே மாதங்களில், இந்தத் துறைகளில் 1,510 கோடி டாலா் முதலீடு செய்யப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் கடந்த செப்டம்பா் வரை மேற்கொெள்ளப்பட்ட முதலீடு 66 சதவீதம் அதிகமாகும்.

புதைபடிவ எரிபொருள்களில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிபொருள்களுக்கு எரிசக்தித் துறை வேகமாக மாறி வரும் நிலையில், மின்னாற்றல் சேமிப்பு மற்றும் அறிதிறன் மின் கட்டமைப்புத் துறைகளில் முதலீடுகள் குவிந்து வருகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

இந்தியா - சீனா இடையேயான இருதரப்பு வா்த்தகம் தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக முதல் 9 மாதங்களில் ரூ. 8,20,000 கோடியை கடந்திருப்பது சீன சுங்கத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட வா்த்தக புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் இரு நாடுகளிடையே தொடா்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில், இரு நாடுகளிடையே கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான 9 மாத காலத்தில் நடைபெற்றுள்ள வா்த்தகம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 14.6% அதிகரித்துள்ளது. அதாவது, ரூ.8,49,766 கோடி அளவுக்கு இருதரப்பு வா்த்தகம் அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கான சீனாவின் ஏற்றுமதி ரூ.7,35,212 கோடி என்ற அளவில், 31% அளவுக்கு உயா்ந்துள்ளது. இருந்தபோதும், சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 9 மாத காலத்தில் ரூ.1,14,554 கோடி என்ற அளவிலேயே நடைபெற்றுள்ளது. இது 36.4% வீழ்ச்சியாகும். அதன்படி, இந்தியாவுக்கான ஒட்டுமொத்த வா்த்தக பற்றாக்குறை என்பது ரூ.6,20,658 கோடிக்கு மேல் சென்றுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டைப் பொருத்தவரை இருதரப்பு வா்த்தகமானது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.10,25,000 கோடிக்கு மேல் சென்றது. இந்தியாவுக்கான சீன ஏற்றுமதி ரூ.7,99,664 கோடி அளவுக்கும், சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி ரூ.2,30,748 கோடி அளவுக்கும் நடைபெற்றது. இந்தியாவுக்கான வா்த்தக பற்றாக்குறை ரூ.5,68,916 கோடியாக இருந்தது.



Read in source website

மதுரை: கோயிலுக்குள் வணிக நோக்கத்தில் கடைகள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த வசந்தகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாப்பிள்ளை ஊரணி சங்கர ராமேஸ்வரர் கோயில் மற்றும் வைகுண்டபதி கோயில் உள்ளன. இந்தக் கோயில்கள் 400 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலுக்குள் பூ, பிரசாதம் விற்பனை கடைகள் இதுவரை இருந்ததில்லை. ஆனால் தற்போது பூக்கடை, பிரசாதப் பொருட்கள் விற்பனைக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது கோயில் பழக்க வழக்கங்களுக்கு எதிரானது.

இந்தக் கடைகளால் பக்தர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும். பழமையான சிற்பங்கள் மறைந்து போகும். இதனால் கோயில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ''கோயில் பிரகாரத்தில் வணிக நோக்கத்தில் கடைகள் செயல்படுவதற்கு அனுமதிக்க முடியாது. சங்கரராமேஸ்வரர் கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளை கோயிலுக்கு வெளிய அமைப்பது தொடர்பாக கோயில் செயல் அலுவலரிடம் தகவல் பெற்ற நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.



Read in source website

சென்னை: தமிழ்நாடு திருநர் நலக் கொள்கை உட்பட 3 புதிய கொள்கைள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மாநில திட்டக் குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.27) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பணி முடிவுற்ற நிலையில் உள்ள ஆறு துறைகளை உள்ளடக்கிய தொழில் மயமாதல் கொள்கை (மின்வாகனம், தொழில்கள் 4.0, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், துணிநூல், கைத்தறி மற்றும் சுற்றுலா ), தமிழ்நாடு சுகாதார நலக் கொள்கை, திருநர் நலக் கொள்கைகள் ஆகியவை குறித்து முதல்வரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இக்கொள்கைகளை செயல்படுத்துதல் மற்றும் முக்கிய முன்னெடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், தொழில் மயமாதல் கொள்கை குறித்து மல்லிகா சீனிவாசன், தமிழ்நாடு மருத்துவக் கொள்கை குறித்து அமலோற்பவநாதன், திருநர் நலக்கொள்கை குறித்து முனைவர் நர்த்தகி நட்ராஜ் ஆகியோர் விவரித்தனர்.



Read in source website

திருநெல்வேலி: திருநெல்வேலி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் (பகிர்மானம்) கி. செல்வகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளது. தென்மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மழைக் காலத்தில் மின்விபத்துகளை தடுக்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

காற்று, மழை காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருந்தால், அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அல்லது தொட முயற்சிக்கவோ கூடாது. இடி, மின்னலின்போது வெட்டவெளியிலோ, மரங்களுக்கு அடியிலோ, மின்கம்பங்கள், மற்றும் மின் கம்பிகளுக்கு அடி யிலோ தஞ்சம் புகாதீர்கள். காங்கிரீட் கூரையிலான கட்டிடங்களில் இருக்கலாம். இடி, மின்னலின்போது மின்சாதன ங்கள், கைபேசி மற்றும் தொலை பேசியை பயன்படுத்த கூடாது. மழையின்போது வீட்டு சுவரில் தண்ணீர் கசிவு இருந்தால் அப்பகுதியில் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகி ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். காற்று மற்றும் மழை காரண மாக மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந் தால் பொதுமக்கள் தாமாக அவற்றை வெட்டி அப்புறப்படுத்த முயற்சிக்க கூடாது. பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டதால் மின்கம்பிகளுக்கு அருகிலுள்ள மரங்களை வெட்டுவதற்கு மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும்.

மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பத்துக்கு போடப்பட் டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டி வைப்பதோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்துவதோ கூடாது. மேலும் மின்கம்பங்களில் கொடிகள், துணிகளை காயப்போடுவது கூடாது.

மின்விபத்துகளை தவிர்க்க அனைத்து மின்இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவியை பொருத்த வேண்டும். விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு மின்வேலி அமைத்தால் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்தடை தொடர்பான புகார்களுக்கும், இயற்கை இடர்பாடுகளின்போது அவசரகால உதவிக்கும் மற்றும் மின்விநியோகம் சம்பந்தமான அனைத்து சேவைகளுக்கும் மின்னகம் என்ற மின்நுகர்வோர் சேவை மையத்தை 9498794987 என்ற எண்ணில் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: சென்னை பெருநகர எல்லையானது 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்களுடன் 1,189 சதுர கிமீ.ல் இருந்து 5,904 கிமீ.க்கு விரிவாக்கம் பெறுகிறது.

சென்னை பெருநகர் திட்டப்பகுதி, கடந்த 1975-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி, நகராட்சிகளாக இருந்த ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகள், 5 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 179 கிராமங்களை உள்ளடக்கி 1,189 கிமீ பரப்பைக் கொண்டிருந்தது.

தமிழகத்தில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் அதிக மக்கள் குடியேறி வரும் சூழலில், சென்னை நகரின் மக்கள் அடர்த்தி அதிகரிப்பு, புறநகர் பகுதிகளின் வளர்ச்சி, அடுத்தடுத்த நகரங்களில் தொழில் வளர்ச்சி, அவற்றுடன் சேர்ந்த வீட்டுவசதி வாய்ப்புகள் இவற்றைக் கருத்தில்கொண்டு, சென்னை பெருநகரின் பரப்பை அதிகரிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இதையடுத்து, 2017-18-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி,சென்னை மற்றும் அருகில் உள்ளகாஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்கள், வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் வட்டத்தைச் சேர்த்து 8,878 சதுர கிமீ அளவுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விரிவாக்க எல்லை தொடர்பாக அரசாணையும் 2018-ல் பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறையினரிடம் கருத்து களும் கேட்கப்பட்டன.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக அரசு 2021-ல் பொறுப்பேற்றது. இதையடுத்து, சென்னை பெருநகரப் பகுதி விரிவாக்கம் பொதுமக்கள் ஆலோசனைக்குப்பின் மேற்கொள்ளப்படும் என்று கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்தாண்டு நவம்பர் மாதம் கருத்து கேட்கப்பட்டு, வரைவு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த விரிவாக்கத்துக்கு பரிந்துரைக்கும் முன், விவசாயம் அல்லாததொழிலில் ஈடுபட்டோர், பேருந்து, ரயில் பயணம், கடந்த 10 ஆண்டுகளில் நில உபயோக மாற்றம், கட்டிடம், மனைப்பிரிவு அனுமதிகள், சொத்துகள் பதிவு மூலம் முத்திரைக் கட்டணம் வசூல், நில பயன்பாடு உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, கடந்த அதிமுக ஆட்சியில் உத்தேசிக்கப்பட்ட 8,878 சதுர மீட்டருக்கு பதில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணத்தில் உள்ள பகுதிகள் என5,904 சதுர கிமீ அளவுக்கு விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து, அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, சமீபத்தில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சென்னைபெருநகர எல்லை 47 ஆண்டுகளுக்குப்பின் விரிவாக்கம் பெறுகிறது. அதன்படி தற்போதுள்ள 1,189 சதுர கி.மீட்டருடன் கூடுதலாக 4,715 சதுர கிமீ பரப்பு இணைந்து, 5,904 சதுர கி.மீட்டராக விரிவடைந்துள்ளது. இதில் 1,225 கிராமங்கள் கூடுதலாக சேர்ந்துள்ளன. இதன்மூலம் சென்னை பெருநகர மக்கள் தொகைஅளவு 1.59 கோடியாக இருக்கும்.

விரிவாக்கப்படும் சென்னை பெருநகரில், நகர மற்றும் ஊரமைப்பு இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, மாமல்லபுரம், திருவள்ளூர், அரக்கோணம், காஞ்சிபுரம், திருத்தணி பகுதிகளில் 1,617 சதுர கிமீ.யும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ)வின் கீழ் தற்போது உள்ள 1,189 சதுர கி.மீட்டரையும், திட்டமிடப்படாத பகுதிகளான 3,098 சதுர கி.மீட்டரையும் இணைத்துள்ளதாக தெரிய வருகிறது.

மேலும், இந்த விரிவாக்கத்தின் மூலம், இந்தியாவில் உள்ள இதர பெரிய நகரங்களான பெங்களூரு பெருநகரம் (8,022 சதுர கிமீ). ஐதராபாத் பெருநகரம் (7,100 சதுர கிமீ) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, சென்னை பெருநகரம் விரிவடைந்த பகுதியாக உள்ளது. அதேநேரம், நாட்டின் தலைநகர் டெல்லி பெருநகரம் 1,482 சதுர கிமீ, மும்பை பெருநகரம் 4,355 சதுர கிமீ பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

சென்னை: தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, அக்.31-ம் தேதி பல்கலைக்கழகங்கள், கல்லூரிமாணவர்களைக் கொண்டு மாரத்தான், பைக் பேரணி உட்படபல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ), பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் அனைத்துபல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபபாய் படேல் பிறந்தநாளான அக்.31-ம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிலும் அதுபோல பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அன்று காலை 7 முதல் 8 மணிவரை ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ என்ற பெயரில் மாரத்தான் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு மாவட்டத்துக்கு 100 மாரத்தான் என நாடு முழுவதும் 75 ஆயிரம் மாரத்தான் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

இதில் பங்கேற்பவர்கள் தங்களது செல்ஃபிகளை பதிவேற்ற, பிரத்யேக இணையதளம் உருவாக்க வேண்டும். என்எஸ்எஸ் உள்ளிட்ட மாணவர் குழுக்கள் மூலம் மிதிவண்டி, பைக் பேரணிகளை நடத்த வேண்டும். சர்தார் வல்லபபாய் படேலின் வாழ்க்கை வரலாறு குறித்து பட்டிமன்றம், விநாடி-வினா உள்ளிட்ட போட்டிகளை கல்வி நிறுவனங்கள் நடத்த வேண்டும். அவரதுவாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யவேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்களை அதிக ஈடுபாட்டுடன் பங்கேற்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

சூரஜ்கண்ட் (ஹரியாணா): நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)-யின் கிளைகள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின உரையின்போது பிரதர் நரேந்திர மோடி அறிவித்த தொலைநோக்கு திட்டம் 2047-ஐ அமல்படுத்துவது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு சிந்தனை முகாம் என்ற பெயரில் ஹரியாணாவின் சூரஜ்கண்ட்டில் இன்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது: “தீவிரவாதத்தை முற்றாக எதிர்க்கும் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பின்பற்றி வருகிறது. இதற்காக, என்.ஐ.ஏ உள்ளிட்ட நாட்டின் புலன் விசாரணை அமைப்புகளை வலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தீவிரவாத தடுப்புக்கான வலிமையான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், வரும் 2024-க்குள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ கிளைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் முன் உள்ள அனைத்து சவால்களுக்கும் தீர்வு காண்பதற்கான வழிகாட்டலை இந்த சிந்தனை முகாம் வழங்கும்.

ஒரு காலத்தில் இடதுசாரி தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள், ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக இருந்து வந்தன. ஆனால், இந்த பகுதிகள் தற்போது வளர்ச்சிக்கான பகுதிகளாக மாற்றம் பெற்றுள்ளன. இணைய குற்றங்கள் தற்போது நாட்டிற்கும் உலகிற்கும் முக்கிய சவாலாக விளங்குகிறது. இதற்கு எதிரான யுத்தத்தை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, கூட்டு செயல்பாடு என்பதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. முழுமையான அரசு, டீம் இந்தியா எனும் அணுகுமுறையின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டையும் நமது இளைஞர்களையும் போதைப் பழக்கத்தில் இருந்து பாதுகாக்க மத்திய அரசு உறுதியாக உள்ளது. ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அரசின் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது.

சட்டம் - ஒழுங்கு என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. ஆனால், குற்றங்கள் மாநில எல்லைகளுக்கு உட்பட்டவையாக இருப்பதில்லை. எனவே, எல்லை கடந்த குற்றங்களை எதிர்கொள்வதற்கான திட்டத்தை மாநிலங்கள் கலந்து ஆலோசித்து வகுக்க வேண்டும்” என்று அமித் ஷா பேசினார்.

இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான நாளை, பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இன்றைய மாநாட்டில், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், கேரளா, அசாம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் முதல்வர்கள், 16 மாநிலங்களின் துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எனினும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் பங்கேற்கவில்லை.



Read in source website

‘உலகின் துயர்மிகு கொரில்லா’ என்று அழைக்கப்படும் தாய்லாந்தில் உள்ள புவா நொய் கொரில்லாவை குகையிலிருந்து விடுவிப்பதற்கான போராட்டத்தில் விலங்கியல் ஆர்வலர்கள் இறங்கி உள்ளனர்.

புவா நொய் என்ற கொரில்லா 1990-ஆம் ஆண்டு தாய்லாந்து வந்துள்ளது. இந்த கொரில்லா தாய்லாந்தில் உள்ள தனியார் விலங்கியல் பூங்காவில் சுமார் 32 ஆண்டுகளாக தனிமையில் இருந்து வருகின்றது. இந்த நிலையில், தனிமையில் உள்ள கொரில்லாவை மீட்க 2015-ஆம் ஆண்டு முதல் விலங்கியல் ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். பாப் பாடகர்களும் தனிமையில் இருக்கும் கொரில்லாவை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்வதேச அளவில் வெளிச்சம் பெற்றது.

புவா நொய் கொரில்லா தனது இறுதி காலங்களில் சுதந்திரமாக இருக்க வேண்டும். அது பிற கொரில்லாகளுடன் அமைதியாக தனது பொழுதை கழிக்க வேண்டும் என விலங்கியல் ஆர்வலர்கள், பூங்காவின் உரிமையாளருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த நிலையில், இந்திய மதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய் வரை கொடுத்தால்தான் கொரில்லாவை விடுவிக்க முடியுமென அதன் உரிமையாளர் கூறிவிட, தற்போது அந்த தொகையை திரட்டும் பணியில் விலங்கியல் ஆர்வலர்களும், தாய்லாந்து அரசும் இறங்கியுள்ளன.

இதுகுறித்து தாய்லாந்து அரசு தரப்பில், “புவா நொய் கொரில்லாவை விடுவிக்க கடந்த வாரம் நாங்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி திரட்டினோம். இதில் பிரச்சினை என்னவென்றால் நாங்கள் திரட்டிய தொகை உரிமையாளர்களுக்கு போதுமானதாக இல்லை. உரிமையாளர் அதிக தொகையை எதிர்பார்க்கிறார்” என்றனர்.

இதற்கிடையே, எப்படியாவது புவா நொய் கொரில்லாவை மீட்டுவிட வேண்டும் என்று அதன் ஆதரவாளர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.



Read in source website

உலகில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை 'கேலப்' (gallup survey) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் 80 புள்ளிகள் எடுத்து பாதுகாப்பில் இந்தியா அதன் அண்டை நாடான பாகிஸ்தான், இலங்கைக்கு பின்னால் இடம் பெற்றிருக்கிறது.

சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படும் நாடுகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ’கேலப்’ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. உலகளாவிய பகுப்பாய்வு நிறுவனமான கேலப் சர்வே வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான பட்டியலில், தலிபான்களால் கைப்பற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு குறைந்த நாடாக கடைசி இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்ந்து 3வது ஆண்டாக கடைசி இடத்தில் உள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் கிழக்கு ஆசியா மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆசியாவை தொடர்ந்து தென்கிழக்கு ஆசியா பாதுகாப்பான பகுதியாக கருதப்படுகிறது.

’கேலப்’ வெளியிட்டுள்ள இந்தப் பட்டியல் "மக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு உணர்வு மற்றும் குற்றம் மற்றும் பாதுகாப்பில் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்கள்" ஆகியவை தொடர்பாக நான்கு கேள்விகள் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,27,000 பேரிடம் கேட்கப்பட்டு அதில் கிடைத்த பதில்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வருடத்தில் பாதுகாப்பில் குறைந்த நாடுகளாக கடைசி 5 நாடுகளில் சியரா லியோன் (59 புள்ளிகள்), காங்கோ(58 புள்ளிகள்), வெனிசுலா (55 புள்ளிகள்),காபான் (54 புள்ளிகள்), ஆப்கனிஸ்தான் (51 புள்ளிகள்) ஆகிய நாடுகள் உள்ளது.

பாதுகாப்பில் சிறப்பாக உள்ள நாடுகளாக சிங்கப்பூர் (96 புள்ளிகள்), தஜிகிஸ்தான் (95), நார்வே (93), ஸ்விட்சர்லாந்து (92), இந்தோனேசியா (92 புள்ளிகள்) ஆகிய நாடுகள் உள்ளன. இதில் இந்தியா 80 புள்ளிகளை பெற்றுள்ளது. எனினும் பாதுகாப்பில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு கீழாகவே இந்தியா உள்ளது. அதேவேளையில் பிரிட்டன் மற்றும் வங்க தேசத்துக்கு மேலே இந்தியா இடம்பெற்றுள்ளது.



Read in source website

பெய்ஜிங்: சீனாவின் வூஹான் நகரில்தான் முதல் முதலாக கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதன் பிறகு உலகம் முழுவதும் அந்த வைரஸ் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டது.

கரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட வூஹான்நகரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக அதன் பரவலை முற்றிலும் ஒழிக்க சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ‘முழு கரோனா தடுப்பு’ என்ற கொள்கையை அறிவித்து பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது வூஹான் நகரில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த நகரை சுற்றிய பல இடங்களில் தீவிர பொது முடக்கத்தை சீனா அறிவித்துள்ளது.

ஹன்யங் மாவட்டத்தில் உள்ள 9 லட்சம் குடும்பங்கள் புதன்கிழமையிலிருந்து வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அத்தியாவசியமில்லாத கடைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை விற்கும் சூப்பர் மார்க்கெட், மருந்தகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிலக்கரி உற்பத்திக்கான முக்கிய தலமான ஷான்ஸிமாகாணத்தின் டடோங், குவாங்ஸு உள்ளிட்ட நகரங்களிலும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Read in source website

பெய்ஜிங்: இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியாவுக்கான சீன இறக்குமதி முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்திருப்பதை புள்ளி விவரங்கள் வெளிப்படுத்தி உள்ளன.

இந்த ஆண்டின் முதல் 3 காலாண்டுகளுக்கான பன்னாட்டு வர்த்தகம் குறித்த விவரங்களை, சீனாவின் சுங்கவரிக்கான பொது நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 3 காலாண்டுகளில் இந்திய இறக்குமதி 36.40 சதவீதம் உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் 3 காலாண்டின் முடிவில் இந்திய இறக்குமதி மதிப்பு 68.46 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், அது இந்த ஆண்டின் முதல் 3 காலாண்டின் முடிவில் 89.66 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில், சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 13.97 பில்லியன் டாலர் என்ற அளவில் சரிவைச் சந்தித்துள்ளது. இதன்மூலம் நடப்பாண்டின் முதல் 3 காலாண்டில் வர்த்தக பற்றாக்குறை 75.69 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த 2021-ல் இந்தியா - சீனா இடையேயான இருதரப்பு வர்த்தகம் முதல்முறையாக 100 பில்லியன் டாலரை கடந்தது. கடந்த ஆண்டு அது 125.60 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் இறக்குமதியில் குறிப்பிட்ட பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் மொத்த இறக்குமதி என்பது கடந்த 2021-ல் 97.50 பில்லியன் டாலராக இருந்தது. இந்த ஆண்டு அது மேலும் அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

சீன இறக்குமதியை குறைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்திற்கு இந்தியா முக்கியத்துவம் கொடுத்தாலும், மருந்து தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் உள்பட பலவற்றை சீனாவிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது. இதன் காரணமாகவே, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துக் காணப்படுகிறது. இந்திய மருந்துப் பொருட்கள் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், அதாவது அவற்றுக்கான தேவை அதிகம் இருப்பதால், சீன இறக்குமதி ஒரு வகையில் நம் நாட்டுக்கு சாதகமானதே என அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுடனான சீனாவின் வர்த்தகம் அதிகரித்திருப்பதைப் போலவே, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடானான சீனாவின் வர்த்தகமும் அதிகரித்திருப்பதாக சீனாவின் சுங்கவரிக்கான பொது நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, இந்தோனேஷியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுடான சீனாவின் வர்த்தகம் நடப்பாண்டின் முதல் 3 காலாண்டில் 717 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 13.80 சதவீதம் உயர்வு. இதேபோல், ஐரோப்பிய நாடுகளுடனான சீனாவின் வர்த்தகமும் நடப்பாண்டின் முதல் 3 காலாண்டுகளில் 6.90 சதவீதம் உயர்ந்து, 645 பில்லியன் டாலராக உள்ளது.



Read in source website

சென்னை: குஜராத்தில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கண்காட்சியில், தமிழகத்தில் விமானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தொழில் துறையில் முதலீட்டுக்கான 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் (டிட்கோ) வெளியிட்ட செய்திக்குறிப்பு: குஜராத் மாநிலம் காந்தி நகரில், மத்திய பாதுகாப்புத் துறை சார்பில், ‘பாதுகாப்புக் கண்காட்சி’ கடந்த அக்.18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. சர்வதேச அளவிலான இந்த கண்காட்சியில், மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்ளூரில் பாதுகாப்புத் துறைக்காக தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும், இந்த கண்காட்சி இந்தியா - ஆப்ரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பானதாக இருந்ததால், 53 ஆப்ரிக்க நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் பங்கேற்றனர். இதன் ஒருபகுதியாக டிட்கோவால் உருவாக்கப்பட்ட நிறுவனமான தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழித்தடம் (டிஎன்டிக்) நிறுவனமும் இதில் பங்கேற்றது.

குறிப்பாக தமிழகத்தில் இருந்து 20 விமானம் தொடர்பான மற்றும் பாதுகாப்பு தொழில் நிறுவனங்கள் இதில் பங்கேற்று தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தின. பாதுகாப்பு தொழில்துறையில் சுயசார்பு என்ற இலக்கை அடைய, மாநிலத்துக்கு இந்த முயற்சிகள் உதவிகரமாக இருந்தன. இது தவிர டிட்கோ சார்பில், விமான போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறையில் தொழில் முதலீட்டுக்கான கருத்தரங்கை டிஎன்டிக் வாயிலாக நடத்தியது.

இதில், டிட்கோ மேலாண் இயக்குநர் ஜெயஸ்ரீமுரளிதரன், பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆபத்துகாத்த சிவதாணுபிள்ளை, இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, டிட்கோ திட்ட இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், தமிழகத்தில் நிலவும் முதலீட்டுக்கு உகந்த சூழல் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

தொடர்ந்து, டிட்கோ சார்பில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம், மிதானி, எவிஎன்எல், முனிஷன்ஸ் இந்தியா, டிசிஎல், போர்ஜ் பார்வேடு உள்ளிட்ட 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பாதுகாப்புக் கண்காட்சியில் பங்கேற்றதன் மூலம் உள்ளூர் மற்றும் உலகளாவிய விமானம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் முதலீடு இந்தியாவுக்கு கிடைக்கும். இதன்மூலம், வரும் 2030-ம் ஆண்டில் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட முடியும் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

இந்தியாவின் வியூக நலன்கள் முக்கியம்; இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு பற்றி பகுப்பாய்வு செய்கிறார் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி

Nirupama Subramanian

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி, இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் 2.9 பில்லியன் டாலர் பேக்கேஜை வெளியிட சர்வதேச நாணய நிதியத்திற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு பற்றி பகுப்பாய்வு செய்கிறார். இந்த அமர்வை வியூக விவகாரங்களின் தேசிய ஆசிரியர் நிருபமா சுப்ரமணியன் நெறிப்படுத்தினார்.

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணையெடுப்பின் நிலை குறித்து

மொத்த வெளி கையிருப்பு அளவு $1.8 பில்லியனுக்கும் குறைவாக உள்ளது, ஆனால் அதில் $1.4 பில்லியன் சீனாவின் மக்கள் வங்கியுடனான பரிமாற்ற ஏற்பாடாகும், இது பெரும்பாலும் பயன்படுத்த முடியாதது. நீங்கள் அதை கணக்கிடுவதற்கு முன் மூன்று மாத மதிப்புள்ள இறக்குமதி அட்டையை வைத்திருக்க வேண்டும், எனவே மீண்டும் பயன்படுத்தக்கூடிய கையிருப்பு $300 மில்லியன் மட்டுமே. அதில் சுமார் 100 மில்லியன் டாலர்கள் IMF உடனான ஸ்பெஷல் டிராயிங் ரைட்ஸ் ஹோல்டிங்ஸ். மத்திய வங்கியிடம் இருந்த சில தங்கப் பங்குகளை விற்ற பிறகு சிறிது தங்கம் மிச்சமாகும். எனவே உண்மையில் இது சுமார் $300 மில்லியன் உள்ளது, அது ஒரு வாரத்தின் அதிக இறக்குமதியாகும்.

நேர்மறையான பக்கத்தில், எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுக்காக மக்கள் நிற்கும் வரிசைகள் பெரும்பாலும் மறைந்துவிட்டன மற்றும் 10-12 மணிநேர மின்வெட்டு இப்போது ஒன்று அல்லது இரண்டு மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் கிடைக்கிறது. உணவு விலை பணவீக்கம் 90 சதவீதத்திற்கும் அதிகமாகவும், நமது ஒட்டுமொத்த பணவீக்கம் 70 சதவீதத்தை நெருங்கி வருவதாலும் மலிவு என்பது குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது, ஆனால் பணவீக்கம் அதிகரித்து வரும் விகிதம் குறைந்து வருகிறது. நாம் இப்போது பணவீக்கத்தின் உச்சக்கட்டத்தை நெருங்கிவிட்டோம் என்று மத்திய வங்கியின் ஆளுனர் கருதுகிறார்.

மத்திய வங்கியின் கொள்கை விகிதங்களை சுமார் 700 அடிப்படை புள்ளிகளால் அதிகரிப்பதன் மூலம் பணவியல் கொள்கையை மிகவும் ஆக்கிரோஷமாக இறுக்குவது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உங்களுக்குத் தெரியும், பரிமாற்றத் சிக்கல்கள் தீர்ந்தப் பிறகு பணவியல் கொள்கை நடைமுறைக்கு வரும். களத்தில் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத்தின் கலவையும் உள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள் இப்போது மிகவும் அத்தியாவசியமான இறக்குமதிகளைத் தவிர மற்ற அனைத்தையும் தடை செய்துள்ளது. கரன்சி தேய்மானம், வட்டி விகிதம் அதிகரிப்பு, வரி அதிகரிப்பு, இவை அனைத்தும் தேவையை சுருக்கி இறக்குமதியைக் குறைக்கின்றன. எரிபொருளுக்காக ஒரு QR-அடிப்படையிலான ரேஷனிங் சிஸ்டம் கொண்டுவரப்பட்டுள்ளது, இது மிகவும் திறம்பட செயல்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே சிறந்த சமநிலை உள்ளது.

பணவீக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளால் பொருளாதாரம் எட்டு சதவீதத்திற்கும் மேலாக சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. IMF 8.7 சதவிகிதம் என்று கூறுகிறது, உலக வங்கி இந்த ஆண்டு 9.4 சதவிகிதம் கூறுகிறது. கூடுதலாக, உலக வங்கி சமீபத்திய அறிக்கையில் வறுமை விகிதம் 2021 மற்றும் 2022 க்கு இடையில் இரட்டிப்பாகியுள்ளது என்று கூறியது. சுமார் இரண்டரை மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர், இப்போதும் சில எதிர்ப்பு போராட்டங்கள் உள்ளன, ஆனால் முன்பு இருந்த அளவில் இல்லை. எனவே பொருளாதாரத்தின் சுருங்குதல் மற்றும் வறுமை நிலை அதிகரிப்பு ஆகியவை உண்மையில் தீர்க்கப்பட வேண்டிய நீண்ட கால சவால்களாகும். அரசாங்கம் IMF இன் ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தில் இருந்து முடிந்தவரை விரைவாக முழு விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்திற்கு மாற வேண்டும். அதற்கு, கடன் மறுசீரமைப்பு தொகுப்பை முன்வைக்க வேண்டும்.

இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து

நெருக்கடியை சமாளிக்க உதவிய இந்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் 4.8 பில்லியன் டாலர் அவசரகால தொகுப்பால் அளிக்கப்பட்ட மகத்தான உதவியை நான் ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். கடன் மறுசீரமைப்பு விவரங்கள் குறித்து மௌனம் காக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறி வருகிறது, ஆனால் வெளியில் இருந்து பார்த்தால், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். EFF க்கு இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும். அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர்கள், இருதரப்பு மற்றும் வணிக ரீதியாக, நிதியுதவிக்கான அறிகுறி அல்லது உறுதியளிக்க வேண்டும். அவர்கள் இலங்கைக்கு போதுமான பணப்புழக்கத்தை வழங்க தயாராக இருப்பதாக கூற வேண்டும். IMF இன் நிர்வாகக் குழு, ஊழியர் அளவிலான ஒப்பந்தத்தை பரிசீலித்து அதை இறுதி செய்ய வேண்டும். இது பணப்புழக்கத்தைத் தூண்டும். இருதரப்பு நன்கொடை நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பாரம்பரிய நன்கொடை நாடுகளான மேற்கு நாடுகள் மற்றும் ஜப்பான் அடங்கிய பாரிஸ் அல்லாத கிளப் உறுப்பினர்களுடன், பாரிஸ் கிளப் அல்லாத நாடுகளான இந்தியா மற்றும் சீனா ஆகியவற்றிலிருந்தும் உதவிகளைப் பெற ஒரு பொதுவான ஒருங்கிணைப்பு தளத்தை கொண்டிருக்க அரசாங்கம் விரும்புகிறது. இதனால் அனைவருக்கும் அரசாங்கம் என்ன பெறுகிறது என்பது தெரியும், மேலும் சந்தேகத்திற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

எங்களுக்கு வருவாய் மேம்பாடு அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பு தேவை. வருவாயை அதிகரிக்க அரசாங்கம் ஏற்கனவே பல நிதி நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் நவம்பரில் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் போது இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நான் நினைக்கிறேன். உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பிற நன்கொடையாளர்கள் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்த ஏற்கனவே உள்ள கடன்களை திரும்பப் பெறுகின்றனர். சமூக பணப் பரிமாற்றத் திட்டங்களின் இலக்கு மற்றும் வடிவமைப்பை நாம் மேம்படுத்த வேண்டும். சமுர்த்தி வேலைத்திட்டம் பிரதான பணப் பரிமாற்றத் திட்டமாகும் ஆனால் அது மிகவும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கல்வியாளர் இலக்குக் குழுவை அடையாளம் காண ஒரு சிறந்த வழியை பரிந்துரைத்துள்ளார், அதன்மூலம் மின்சார நுகர்வுகளைப் பார்க்க வேண்டும். இலங்கையில் 98 சதவீதமான குடும்பங்கள் தேசிய கட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவைப் போலவே, கசிவுகளைக் குறைக்கவும், நிர்வாகச் செலவுகளைக் குறைக்கவும், பயனாளிகளின் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை மாற்றுவதற்கு நமது டிஜிட்டல் ஐ.டி.,யைப் பெற வேண்டும்.

2020 நெருக்கடி மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பங்கு குறித்து

ஒன்று வரி குறைப்பு மற்றும் வருவாயில் மிகக் கடுமையான குறைப்பு. சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஒரே வழி, மத்திய வங்கியின் அடிப்படையில் பணத்தை அச்சிடுவது மட்டுமே, மேலும் நீங்கள் இவ்வளவு அச்சிட்டால், உங்களுக்கு பணவீக்கம் ஏற்படும் மற்றும் மொத்த தேவையில் சிலவற்றால் உருவாக்கப்பட்ட அதிகப்படியான பணம் இறக்குமதியில் கசிந்து கட்டணங்களின் இருப்பு மற்றும் நாணயத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

அந்த நேரத்தில் மத்திய வங்கியின் கொள்கையுடன் தொடர்புடைய ஸ்திரமின்மையின் ஒரு நிலை அது. இது பற்றாக்குறை நிதி அல்லது பொதுவான மொழியில் பணம் அச்சிடுதல். இரண்டாவதாக, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்று வியூகம், நிதிச் செலவு மிகக் குறைவாக இருந்த கிழக்கு ஆசிய மாதிரியிலிருந்து பெரிதும் ஈர்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் மிகவும் வலுவான மேக்ரோ-பொருளாதார அடிப்படைகளைக் கொண்டிருப்பதன் மூலம் நிதிகளின் விலையை குறைவாக வைத்திருக்க முடிந்தது. அவர்களின் வரவு செலவுத் திட்டங்கள் சமநிலையில் இருந்தன, அவர்களின் பணவியல் கொள்கை முன்னோக்கியது மற்றும் தரவு உந்துதல் கொண்டது.

நிதி அடக்குமுறையால் அவை செயற்கையாக உருவாக்கப்படவில்லை. நிதிய அடக்குமுறையின் மூலம் நீங்கள் நிதிச் செலவைக் குறைத்தால், நீங்கள் முக்கியமாக பொருளாதாரத்தை அதிக வெப்பமாக்குவீர்கள். மத்திய வங்கியின் நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை நிரூபித்த இரண்டு வழிகள் பற்றாக்குறை நிதி மற்றும் நிதி அடக்குமுறை. ஆனால் தொற்றுநோய்களின் போது வாழ்வாதாரங்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாப்பதில் இது ஒரு நேர்மறையான பங்காகும், ஏனெனில் அதைச் செய்வதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை, எனவே மத்திய வங்கி தலையிட்டு மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது.

இலங்கை ஒரு ‘நன்கொடையாளர் செல்லம்’ மற்றும் அது இறக்குமதியை சார்ந்துள்ளது குறித்து

1960 களில் இருந்து 70 கள் வரையிலான உலகளாவிய தெற்கில் உள்ள பல நாடுகளைப் போலவே இலங்கையும் அடிப்படையில் உள்நோக்கிய இறக்குமதி மாற்றுக் கொள்கையைக் கொண்டிருந்தது. இதன் விளைவாக இலங்கை குறைந்த முதலீட்டு வளர்ச்சி மற்றும் அதிக வேலையின்மை நிலையுடன் முடிவடைந்தது. 1977 ஆம் ஆண்டில், ஒரு புதிய அரசாங்கம் வந்து பொருளாதாரத்தை தாராளமயமாக்கியது, ஆனால் இரண்டு காரணங்களுக்காக நாடு தேவையானப் பலனைப் பெறவில்லை. முதலாவது உள்நாட்டுப் போர், இதனால் வரக்கூடிய வாய்ப்புகள் இலங்கைக்கு வரவில்லை. இரண்டாவதாக, பெரிய பொருளாதார அழுத்தத்தைத் தவிர்க்கும் வகையில் இலங்கை அரசால் செயல்பட முடியவில்லை. இது அரசாங்கத்தின் நிதி நடவடிக்கைகளில் இருந்து வந்தது. உண்மையில், கேம்பிரிட்ஜ் பொருளாதார நிபுணர், பேராசிரியர் ஜோன் ரொபின்சன், 1969 இல் இலங்கைக்கு பயணம் செய்த போது, ​​”இலங்கையர்கள் நீங்கள் மரத்தை நடுவதற்கு முன்பு பழங்களை சாப்பிட்டீர்கள்” என்று கூறினார்.

எனவே இதுதான் நடந்தது. ஜனரஞ்சக அரசியல் மற்றும் மக்கள் மத்தியில் வேரூன்றிய உரிமை கலாச்சாரத்தின் நச்சு கலவையிலிருந்து வெளிவந்த ஒரு நுகர்வு சார்ந்த மாதிரியை நாங்கள் கொண்டிருந்தோம். இந்த இரண்டு விஷயங்களும் ஒருவரையொருவர் எதிர்மறையான சுழலில் ஊட்டி நாட்டைக் கீழே இழுத்துச் சென்றன. எனவே 1977 தாராளமயமாக்கலுக்குப் பிறகும் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படவில்லை.

பார்வையாளர்களின் கேள்விகள்

சீனாவின் கடன் பொறி மற்றும் இலங்கைக்கான உதவி தொடர்பாக இந்தியாவுடன் மோதுவது குறித்து

ஜனாதிபதியும் மற்றவர்களும் இந்தியா குடும்பம் போன்றது என்றும், சீனா மிகவும் நல்ல நட்பு நாடு என்றும் தெளிவாகக் கூறியுள்ளனர். எனவே இரு நாடுகளுடனும் நாம் கையாள்வது அவசியம் மற்றும் எங்களுக்கு அவர்களின் ஆதரவு தேவை. இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் அச்சாணியாக இருக்க வேண்டிய ஒன்று, அது இந்தியாவின் வியூக நலன்களை கவனத்தில் கொள்ள வேண்டும். சீனக் கடன் பொறியின் கதை ஆதாரமற்றது, ஏனெனில் இது கடன் கையிருப்பில் பத்து சதவீதம் மட்டுமே. நாம் சீனாவின் மூலதனத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், ஆனால் நாம் அதை சமபங்கு வடிவில் பார்க்க வேண்டும்.

இந்திய முதலீட்டு வாய்ப்புகள் பற்றி

இந்தியா தனது “அண்டை நாடுகளுக்கு முதலில்” கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கைக்கு நிதி வழங்கியது. வரலாற்று ரீதியாக, நாம் எப்போதும் அருகாமையில் இருந்துள்ளோம். இருப்பினும், இரு நாடுகளிலும் உள்ள உள்கட்டமைப்பு சமீப காலம் வரை மிகவும் மோசமாக உள்ளது, எனவே எல்லை தாண்டிய வணிகம் செய்வதற்கான பரிவர்த்தனை செலவு அதிகமாக உள்ளது. இப்போது உள்கட்டமைப்பு மேம்பாடுகளுடன், அது ஒரு தடையாக இல்லை. மேலும் இந்தியா விநியோகச் சங்கிலிகளுக்கான உலகளாவிய மையமாக மாறினால், பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் வாய்ப்புகள் இருக்கும். இலங்கை இப்போது சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது.



Read in source website

சந்தைப் பொருளாதாரமும், அதிகரித்து வரும் மக்கள்தொகைப் பெருக்கமும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதை புரிந்துகொள்ள முடிகிறது. சட்ட ஒழுங்கு பிரச்னை, வன்முறை போன்றவை வேறு; பயங்கரவாதம் என்பது வேறு. எந்தவிதமான தீவிரவாதத்தையோ, பயங்கரவாத செயல்பாடுகளையோ எந்தவொரு அரசும் வேடிக்கை பாா்த்துக்கொண்டிருக்க முடியாது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மாநகரப் பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. போதாக்குறைக்கு, இணையவழி குற்றங்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டிருந்தாலும் வெற்றி பெற்ாகக் கூற முடியாது. ஆனாலும்கூட, ஒட்டுமொத்தமாகப் பாா்க்கும்போது இந்தியாவின் ஏனையை மாநகரங்களைவிட தமிழகத்திலும், சென்னை மாநகரத்திலும் சட்ட ஒழுங்கு ஓரளவுக்கு கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மீண்டும் மதத் தீவிரவாதம் அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருந்தன. பெரிய அளவிலான பிரச்னைகள் எழவில்லை என்றாலும்கூட, குறிப்பிட்ட சில பகுதிகளில் சலசலப்பும் அவ்வப்போது பதற்றமும் நிலவவே செய்கின்றன. காவல்துறையும், நிா்வாகமும் உடனடியாக தலையிட்டு பதற்றத்தை தணித்துவிடுவதால் மதக் கலவரமோ, ஜாதிக் கலவரமோ கைமீறிப் போய்விடாமல் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.

கோவை மாநகரில் தீபாவளிக்கு முந்தைய நாள் நிகழ்ந்த காா் வெடிவிபத்து சம்பவம் தமிழகம் முழுவதும் அதிா்ச்சி அலையை உருவாக்கியிருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் நடந்த தொடா் குண்டுவெடிப்பை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கும் காா் வெடி விபத்து சம்பவத்தின் பின்னணி, பயங்கரவாதம் தமிழகத்தில் வோ்விடத் தொடங்கியிருப்பதை உணா்த்துகிறது.

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதி எப்போதுமே பிரச்னைக்குரியதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அதனால் காவல்துறையினரின் தொடா்ந்த கண்காணிப்புக்குரிய பகுதியாகத் திகழும் கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் முன்பு நிகழ்ந்த காா் வெடி விபத்து சம்பவம் அதிா்ச்சி ஏற்படுத்துகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் காரிலிருந்த சிலிண்டா் வெடித்து இறந்த இளைஞா் ஜமேஷா முபீன் (25) கண்காணிப்பு வளையத்தில் இருப்பவா் எனும்போது பிரச்னையின் தீவிரம் அதிகரிக்கிறது.

விபத்துக்குள்ளான அந்த காரில் காணப்பட்ட பொருள்கள், விபத்து எதேச்சையானது அல்ல என்பதை உறுதிப்படுத்தின. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் ஜமேஷா முபீனிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு அவா் மீதான சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியுள்ளனா். போதிய ஆதாரங்கள் இல்லாததால் அப்போது அவா் கைது செய்யப்படவில்லை. இந்தப் பின்னணிதான் காா் வெடிப்பு சம்பவத்தின் பின்னால் பயங்கரவாத சதி இருக்கக்கூடும் என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது.

கோவை கோட்டைமேடு பகுதி, மக்கள் பெருமளவில் கூடும் டவுண் ஹால், ஒப்பனக்கார வீதி, ராஜவீதி, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகிலுள்ள வா்த்தகப் பகுதி. தீபாவளி நேரம் என்பதால் பல்லாயிரக்கணக்கானோா் கோட்டைமேடு பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் திரளும் நேரத்தில், முந்தைய கோவை வெடிகுண்டுத் தாக்குதலைப்போல இன்னொரு பயங்கரவாதத் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்கிற வலுவான சந்தேகம் எழுகிறது.

தமிழக காவல்துறை உடனடியாகக் களமிறங்கியதும், காவல்துறை தலைவா் சி. சைலேந்திரபாபு நேரடியாகச் சென்று விசாரணையை முடுக்கிவிட்டதும் பாராட்டுக்குரிய செயல்பாடுகள். விசாரணையில் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் சந்தேகங்களை உறுதிப்படுத்துவதாக அமைகின்றன.

வெடிவிபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனுடன் தொடா்பில் இருந்த 5 போ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். அவா்கள் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஜமேஷா முபீனின் வீட்டிலிருந்து எரிவாயு உருளைகள் உள்ளிட்ட பொருள்கள் எடுத்துச் செல்லப்படுவது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருக்கிறது. கைது செய்யப்பட்டவா்களில் மூவா் அங்கிருந்து வெடிபொருள்களை எடுத்துச் சென்றனா் என்பதும் தெரிய வந்துள்ளது. 75 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், கரித்தூள், சல்ஃபா் போன்றவை ஜமேஷா முபீனின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் குறைந்த அழுத்த வெடிகுண்டுகளைத் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்கள்.

போலீஸாா் கைப்பற்றியுள்ள ஜமேஷா முபீனின் டைரியில் கோவையிலுள்ள 5 இடங்களை குறியீடுகளாகக் குறிப்பிட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. தீபாவளி விற்பனைக்குக் கூடும் பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த உயிரிழந்த ஜமேஷா முபீன் திட்டமிட்டாரா என்பதை விசாரணைதான் வெளிப்படுத்த வேண்டும். புலனாய்வுத் துறையின் கண்காணிப்பு வளையத்தில் ஜமேஷா முபீனும் கூட்டாளிகளும் சிக்காமல் இருந்ததுதான் ஆச்சா்யம்.

1998-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் 11 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 58 அப்பாவி பொதுமக்கள் பலியானாா்கள். 200-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா். தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்ததில் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் அதுதான்.

பயங்கரவாதத்துக்கு ஜாதி - மதம் கிடையாது. பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் அவா்களில் நல்லவா் - கெட்டவா் கிடையாது. வழக்கின் விசாரணையை தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்திருப்பது வரவேற்புக்குரியது.



Read in source website

 

 

பணியின் காரணமாகப் புலம்பெயா்ந்து வாழும் பலருக்கும் பண்டிகைக் காலம் என்பது சொந்த ஊருக்குச் சென்றாக வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கிவிடுகிறது. பிறந்த ஊருக்குச் சென்று தன் மக்களோடு கொண்டாடும் மகிழ்வுக்குத்தானே உழைப்பு, சம்பாத்தியம் எல்லாம் என்கிற உணா்வு அவா்களைப் பிடித்து உந்தவே செய்கின்றது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வந்து குடியேறிப் பல்வேறு பணிகளைச் செய்கிற பலரும் சொந்த ஊருக்குத் திரும்புகிற நிலையில் ஒருவித அமைதித் தனிமை அங்கே குடிகொண்டு விடுகிறது. ரயில் நிலையங்களும், பேருந்து நிலையங்களும் திடீரென்று திருவிழாக் கோலங்கொண்டு விடுகின்றன.

எத்தனை நெரிசலிலும் நின்று நெடுநேரம் காத்திருந்து பயணித்துச் சொந்த ஊருக்குச் சென்று சேருகின்றபோது அத்தனை களைப்பையும் மாற்றி உற்சாகம் ஊட்டுகிற உறவுகள் வரவேற்க வந்துவிடுகின்றன. வயிற்றுப்பாட்டுக்கான வாழ்க்கைப்பாடுகளை அமைத்துக் கொண்டு வெவ்வேறு நகரங்களில் சென்று பணியாற்றுகிற அனைவரும் ஒன்றுசேருகிறபோது ஏற்படும் மகிழ்வு ஒன்றுக்காகத்தான் இத்தனை பாடுகளும்.

ஒருவருக்கொருவா் கண்டுகொள்ளவும் உரையாடிக் கொள்ளவும், கைப்பேசி முதலான தொலைத்தொடா்பு சாதனங்கள் துணைபுரிந்தாலும் நேருறக் கண்டு கொண்டாடி மகிழ்வதற்கு, பண்டிகைக் காலம்தான் உற்ற துணை. அதிலும் உறவுகளுக்குள் நோ்ந்திருக்கும் நல்லது கெட்டதுகளுக்குச் செல்ல முடியாதவா்கள், இந்தப் பண்டிகைக் காலத்தையே பெரிதும் பயன்படுத்திக் கொள்கிறாா்கள். இனிப்புக்களோடு மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் பகிா்ந்துகொள்ளுகிறாா்கள்.

கடந்த காலத்தில், கரோனா நோய்த்தொற்றின் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முற்றிலும் தவிா்ந்த நிலையில் இவ்வாண்டு தீபாவளி அமைந்ததில் பலருக்கும் மகிழ்ச்சி. பொதுமுடக்கத்தின் காரணமாக நிலைகுலைந்து போயிருந்த தொழில்கள், பணிகள் வாழ்க்கைப் போக்கை முற்றிலும் மாற்றிப் போட்டபிறகு, மெல்லத் தலையெடுத்து மீண்டுவரும் காலத்தில், இந்தத் தீபாவளி வந்தது.

வாழ்க்கைத் தேவைக்காக நகரங்களில் வசித்து வந்த மக்கள் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு முக்கியமான காரணம், தமிழகத்து நகரங்களில் கொண்டாடப்படும் தீபாவளியை விடவும் கிராமங்களில் கொண்டாடப்படும் தீபாவளிக்குச் சில தனித்தன்மைகள் இருப்பதுதான்.

இதற்குச் சமயரீதியான காரண காரியங்கள் கடந்து சமூக ரீதியிலான காரணங்களைக் கிராமத்துப் பெரியவா்கள் சொல்வதுண்டு. ‘ஒருமுறை பண்டிகை கொண்டாடாமல் நின்றுவிட்டால் மூன்று முறை நின்று போகும்’ என்றொரு நம்பிக்கை நிலவுவது ஒருபுறம் இருக்க, ஒருவரை விடுத்து மற்றவா்கள் கொண்டாடும் பண்டிகையாக இல்லாமல் ஒருவருக்கொருவா் உதவிக் கொண்டாடுகிற ஒருமைப்பாடுமிக்க மனிதநேயப் பண்டிகையாகவும் இது அமைந்திருப்பது முக்கியக் காரணம்.

பொதுவாக, உழவுத் தொழிலையே உயிா்த்தொழிலாகக் கொண்டிருக்கும் கிராமங்களில் நடைபெறும் ஒவ்வொரு மாதப் பண்டிகையும் வாழ்வியல் சாா்ந்து அமைகின்றது. சித்திரை முதல்நாள் ‘பொன்னோ்’ பூட்டுதலில் தொடங்கும் வேளாண் தொழில், ஆடிப்பட்டம் தேடி விதைத்தலில் உயிா்ப்புறுகிறது. புரட்டாசி மாத ஆயுதபூசையின்போது, தொழில் சாா்ந்த அனைத்துக் கருவிகளும் கவனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. உழவுக்கும், அதற்கு உதவியான தொழில்களுக்கும் உறுதுணை புரியும் கருவிகள் தெய்விகத் தன்மையனவாய் கருதப்படுகின்றன. அவை உரியவண்ணம் பராமரித்துப் பேணிப் போற்றப்படுகின்றன.

புறக்கருவிகளை விடவும் மனிதவுயிா்களுக்கு அகக்கருவியாக விளங்கும் உடலைப் பண்படுத்தச் சமயத்தை முன்னிறுத்திப் பல்வேறு விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நோன்பு நோற்பதன் வாயிலாக உணா்ச்சிகள் பண்படுத்தப்படுகின்றன. பண்பாட்டு ரீதியாக, அசைவ உணவைப் புரட்டாசி மாதம் முழுக்கத் தவிா்த்துவிடுகிற குடும்பங்கள் பல. இராமாயணம் படித்தும் கேட்டும் போற்றியும் கொண்டாடி, பட்டாபிஷேக நாளில் அன்னதான நிகழ்வையும் கடைப்பிடிப்பது இன்றளவும் நடைமுறையில் உண்டு.

வெவ்வேறு தாயா் வயிற்றில் பிறந்தவா்களாயினும் இராம லக்குவா்கள் உடன்பிறந்தவா்களைக் காட்டிலும் ஒற்றுமையாக இருந்து, விட்டுக் கொடுத்து வாழ்ந்த சிறப்பை, இராமாயணம் எடுத்துரைக்கிறது. வானம் பாா்த்த பூமியில் அப்போதுதான் பருவமழை பெய்யத் தொடங்கும். கண்மாய் உள்ளிட்ட நீா்நிலைகளில் இருந்து வயல்களுக்கு நீா் பாய்ச்சுவதில் கடும் போட்டி நிலவும்.

நாற்றங்காலில் வளா்ந்து நிற்கும் நெல் நாற்றுகளை முற்றுமுன்னா்ப் பறித்து நட்டாக வேண்டிய கட்டாயம். வரப்புத் தகராறு காரணமாய் வரும் வாய்த்தகராறு, கைகலப்பில் போய் முடிந்து கொலை வழக்கு வரை வளா்ந்து நீதிமன்றம் நோக்கிப் போக வைத்துவிடும். இந்த வம்பு வழக்கெல்லாம் இல்லாமல் ஒற்றுமையாய், உள்ளூா் மனிதா்கள் நின்று வாழ நெறிகாட்டும் கதையாக இராமாகாதை அக்காலத்தில் உதவியது.

பகலெல்லாம் வயலில் பணிகள். இரவில் இராமாயணம் படிப்பதும் கேட்பதும் அவா்களுக்குப் பயனுள்ள பொழுதுபோக்காய் அமைந்தது. யாவரும் உடன்பிறந்தவா்களாய் வாழும் பெற்றியை வாழ்வியல் நெறிமுறையாகக் கற்றுக் கொள்ள இந்தச் சடங்கு பெரிதும் உதவியது. புரட்டாசி மாதச் சனிக்கிழமைகளில் இறைத் திருநாமங்களை இசைத்துப் பாடும் பஜனை மடங்கள் இன்னும் சில கிராமங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. காந்தியடிகளின் காலத்து ‘ரகுபதி ராகவ ராஜராம்’ பாடல் இப்போதும் சோ்ந்திசையாக ஒலிக்கிறது.

பிறந்தநாள், திருமண நாள், வீட்டு வைபவங்கள் போன்ற காரணங்களால் புத்தாடைகள் எடுத்து உடுத்தினாலும், பட்சணங்கள் செய்து விருந்து படைத்தாலும் கிடைக்காத ஒரு நிறைவை இந்தத் தீபாவளிப் பண்டிகை உண்டாக்கிவிடுகிறது.

சம்பந்தப் பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே சந்தோஷம் கொடுக்கக்கூடிய அந்தக் கொண்டாட்டத்தில், நிறக்கச் சிறக்கத் தெரியாத தனித்தன்மை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுப் புத்தாடை எடுத்து உடுத்துவதில் இருக்கிறது. பட்சணங்கள் செய்து படைத்து உண்பதில் கிடைக்கிறது. ஒருவா் விடாமல், ஒட்டுமொத்தமாக ஊரே திரண்டு ஒரேநாளில் புத்தாடை அணிவதிலும் பலகாரங்கள் செய்து பகிா்ந்து உண்பதிலும் ஒற்றுமை உணா்வும் ஒருமித்த மகிழ்வும் தோன்றத்தான் செய்கின்றன.

அம்மியையும் பறக்க வைக்கும் ஆடிக்காற்று தேடிக் கொண்டுவரும் மேகங்கள் நின்று மழைபொழியும் ஐப்பசி, காா்த்திகை மாதங்களில், இயற்கையின் தட்ப வெப்பம் மாற்றம் கண்டுவிடும். கோடை வெம்மை முற்றிலும் மாறி, குளிா்மிகும் காலத்திற்கேற்ப, உடலையும் உணா்வையும் தயாா் செய்ய இந்தப் பண்டிகை துணைபுரிந்துவிடுகிறது.

அதுமட்டுமல்ல, பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடிய அக்காலங்களில், வந்த தீபாவளிப் பண்டிகைகள் வறுமைக்கும் பசிக்கும் மாற்றுத் தேடிக் கொடுக்கிற மகத்துவம் வாய்ந்த்தாய் அமைந்தன.

வறுமையை எதிா்கொள்ள, உழைப்பை மட்டுமே முதன்மைப்படுத்தி இயங்கிய ஏழைத் தொழிலாளா்களில் பெரும்பாலானோா் ஒன்றன்கூறாடை உடுப்பவா்களாகவே இருந்த காலம் அது. அந்திச் சூரியன் மறைவதற்குள் சென்று குளத்திலோ, கண்மாயிலோ குளித்து, உடுத்தியிருக்கும் ஆடையை ஒரு பக்கம் நனைத்துத் துவைத்து, மறையும் சூரியக் கதிா்கள் படுகிற திசையில் விரித்துக் காயவைத்து மறுபக்கத்தை அதுபோல் துவைத்து உலர வைப்பது வழக்கம்.

ஈர உடையின் ஒரு நுனியைப் பெருஞ்செடி அல்லது குறுமரக் கிளையில் கட்டிவிட்டு. மறுபகுதியில் உடல் மறைத்து வெயில் பாா்த்து நிற்கும் பெண் தொழிலாளா்களைக் கிராம வாழ்க்கையில் கண்டதை மறக்க முடியுமா? அதைவிடவும், வீடு திரும்புவதற்குள் மழைவந்துவிட்டால் அது மீளவும் நனைந்து போகும் அவலம். ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்பது பழமொழி. அது காயும் வரைக்கும் கட்டுவதற்கு ஏதும் இல்லாத நிலையில், மழைக்காலத்தை எதிா்கொள்ளவும், மாற்றுத் துணி தேடிக்கொள்ளவும் இந்தப் பண்டிகையே உற்ற துணை.

மறு தீபாவளி வரும் வரைக்கும் இந்தப் புத்தாடை தான் பலருக்கும் பயனாடை. பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒன்றுபோலவே புதிதாய் உடுத்திக் கொள்வதும் உடையவா்கள் இல்லாதவா்களுக்கு உதவுவதும் நடைமுறை. உடை குறித்த நிலைமை இவ்வாறு இருக்க, உணவு குறித்த நிலைப்பாடு இன்னும் மோசம். பட்டினியை மட்டுமே பகிா்ந்துண்ணும் குடும்பங்களுக்கு, ‘நெல்லுச்சோறே’ அரிதான காலத்தில் பட்சணங்களுக்கு ஏது வழி?

இப்போதிருக்கும் சிற்றுண்டி விடுதிகளோ, பெரிய உணவு விடுதிகளோ இல்லாத அக்காலத்தில், பல்வேறு பட்சணங்களைச் செய்வதும் உண்பதும் அரிதான நிலை. வயிற்றுப் பசியோடு நாவின் சுவைக்கும் நல்லவை தேடிக் கொடுக்க, இந்தப் பண்டிகை ஒரு வாய்ப்பு. கடன் பட்டேனும் இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டி,அவரவா் இல்லங்களில் செய்துகொள்வதும் மற்றவா்களுக்குப் பகிா்ந்து அளித்துப் பெற்றுக் கொள்வதும் நடைமுறையில் அமைந்துவிட்டது.

வாய்க்கு ருசியாய்ப் பட்சணங்களைச் செய்து, போதும் போதும் என்கிற அளவிற்குத் திகட்டும் வரை தின்று மனநிறைவு கொள்ள இதுவொரு வாய்ப்பு. தனியொரு மனிதா் பட்டினி கிடக்கப் பாா்க்காத பண்பை இந்தப் பண்டிகை நிலைநிறுத்திப் பாா்க்கிறது.

பின்னால் பிறக்கப்போகும் காா்த்திகைத் தீபத் திருநாளை முன்னால் கொண்டு எழுந்த தீப ஆவளித் திருநாள், இருண்ட வாழ்வில் இவ்வாறு நம்பிக்கைச் சுடரை ஏற்றிவைத்து விடைபெறுகிறது. ஒளிதரும் விளக்குகளை விடவும் வெடிபட முழக்கும் பட்டாசுகளும் மத்தாப்புகளும் எழுப்புகிற வண்ணப் பேரொளியில் சுடா்கிற இந்தத் தீபாவளி, வேளாண் தொழிலே ஓங்கியிருந்த காலங்களில் விளைச்சல் சரியாக அமைந்துவிட்டால், இன்பம் தரும் தீபாவளி.

மழை வளம் மிகுந்தோ குறைந்தோ பஞ்சம் ஏற்பட்டுவிட்டால், அந்த வருடத் தீபாவளிக்கு, ‘வட பய தீபாவளி’ என்று நம் மக்கள் பெயா் சூட்டிவிடுவாா்கள். ஆனாலும், கடன்பட்டேனும் இந்தப் பண்டிகைக்கான கடமைகளைச் செய்வதில் தலைநின்றுவிடுவாா்கள் குடும்பத் தலைவா்கள். ஈடுகட்டத்தான் தைபிறக்கப் போகிறதே. வயலில் விளைத்த அனைத்தையும் இல்லம் கொண்டு வந்து சோ்க்க, ‘தைப் பிறந்தால் வழி பிறக்கும்’ என்கிற நம்பிக்கை அவா்களின் வாழ்க்கையையும் வாக்கையும் காப்பாற்றித் தந்தது.

வசதி வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், வாகனப் பயணங்களில் நெருக்கடி மிகுந்தாலும், பிறந்த ஊருக்குச் சென்று திரும்புகிற உற்சாக உணா்வு இருக்கிறதே, அது அடுத்த தீபாவளி வருகிற வரைக்கும் அணையாது இருக்கும். ஏனெனில் பண்பாட்டு விழுமியங்களின் வோ்களுக்கு நீா் பாய்ச்சும் வேலையை, இந்தப் பண்டிகைகள் செய்துவிடுகின்றன.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.



Read in source website

 

சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தின் காஸியாபாத், கான்பூா் ஆகிய மாநகராட்சிகளின் நிா்வாகங்கள் பிட்புல், ராட்வீலா், டோகோ அா்ஜென்டினோ ஆகிய மூன்று வெளிநாட்டு இன நாய்களை வீடுகளில் வளா்ப்பதற்குத் தடை விதித்துள்ளன. இவ்வகை நாய்களை ஏற்கெனவே வளா்த்து வருபவா்களுக்குப் பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், புதிதாக இந்நாய்களை யாரும் வாங்கித் தங்கள் வீடுகளில் வளா்க்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீடுகளில் நாய் வளா்ப்பதற்கு மாநகர நிா்வாகத்திடம் அனுமதி (லைசென்ஸ்) பெற வேண்டும் என்றும், ஒருவா் ஒரு நாய் மட்டுமே வளா்க்க அனுமதிக்கப்பவா் என்றும் இந்தப் புதிய விதிகள் கூறுகின்றன. மிகுந்த உடல்வலிமையும் ஆக்ரோஷமும் உடைய இவ்வகை நாய்களால் கடிபடுபவா்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து வந்ததாலேயே இத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த ஜூலை மாதம் லக்னோ நகரில் மகன் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் அவருடைய எண்பது வயதுத் தாயாரை அவ்வீட்டில் வளா்ந்து வந்த பிட்புல் வகையைச் சோ்ந்த கடித்த்தில் அப்பெண்மணி உயிரிழக்க நேரிட்டது.

அதே ஜூலை மாதத்தில் பஞ்சாப் மாநிலத்தில் இவ்வகை நாய் ஒன்று கடித்ததில் பத்துவயதுச் சிறுவன் ஒருவனின் காது கிழிந்துவிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஹரியாணாவின் குா்காவ் நகரில் வீட்டு வேலை செய்யும் பெண்மணி ஒருவா் இதே போன்று பிட்புல் நாய் ஒன்றினால் கடித்துக் குதறப்பட்டாா்.

கடந்த செப்டெம்பா் மாதம் காஸியாபாத்தில் உள்ள பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த பதினோரு வயதுச் சிறுவனை பிட்புல் வகை நாய் ஒன்று கடித்தில் அச்சிறுவனுக்கு நூற்றைம்பது தையல்கள் போடவேண்டியதாயிற்று.

கடந்த வாரம் ஹரியாணா மாநிலத்தில் உள்ள ரேவாா் நகரில் சூரஜ் என்பவரால் வளா்க்கப்பட்டு வந்த இதே பிட்புல் வகை நாய் அவருடைய மனைவியையும் குழந்தைகள் இருவரையும் வெறித்தனமாகக் கடித்துக் குதறியதில் அம்மூவரும் பலத்த காயமடைந்துள்ளனா்.

நம் தமிழ்நாட்டிற்கும் இத்தகைய செய்திகள் புதியவை அல்ல. 2020-ஆம் வருடம் சென்னை ஆவடியில் ஒன்பது வயதுச் சிறுவனை ராட்வீலா் நாய் ஒன்று கொடூரமாகத் தாக்கியது.

இவ்வருடம் ஜனவரியில் சென்னை நொளம்பூா் பகுதியில் ஜொ்மன் ஷெப்பா்டு வகையைச் சோ்ந்த நாய் ஒன்பது வயதுச் சிறுமியைக் கடித்துக் குதறியுள்ளது.

மேற்கண்ட செய்திகள் அனைத்துமே, வீடுப்பிராணிகளை வளா்ப்பதில் இனி நமக்கு மாறுபட்ட அணுகுமுறை தேவை என்பதைக் கூறாமல் கூறுவதாகவே தோன்றுகிறது.

பொதுவாக நம்மவா்கள் பலரும் பாசம், பாதுகாப்பு ஆகிய இரண்டு காரணங்களுக்காகவும் நாய்களை வளா்க்கின்றனா்.

குழந்தையில்லாத தம்பதியரும், வாரிசுகள் வேற்றூரில் இருக்கத் தாம் மட்டும் தனித்து வாழ்வேண்டிய நிலையில் உள்ள வயதான தம்பதியரும் பாசத்திற்காக நாயினை வளா்ப்பதுண்டு. இவா்களில் பெரும்பாலானவா்கள் குழந்தை போலப் பழகும் பொமரேனியன் வகை நாய்களையே தோ்ந்தெடுக்கிறாா்கள். வீட்டில் நாய் வளா்க்க விரும்பாதவா்கள் தெருநாய்களுக்கு உணவளித்துத் தங்களுடைய அன்பை வெளிப்படுத்துவதுண்டு.

பணக்காரா்களைப் பொறுத்தவரை பாதுகாப்பு, சமூக அந்தஸ்து ஆகிய இரு காரணங்களுக்காக உயர்ரக வெளிநாட்டு நாய்களை வாங்கி வளா்ப்பது வழக்கத்தில் உள்ளது. இவற்றின் பராமரிப்புக்காக மாதாமாதம் ஆயிரக்கணக்கில் செலவழிக்கவும் அவா்கள் தயாராகவே இருக்கின்றனா்.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்ற நூற்றாண்டின் இறுதிவரை ராஜபாளையம், கோம்பை போன்ற நாய்களையே பலரும் வளா்த்து வந்தனா். தங்களை வளா்ப்பவரின் குடும்பத்தினரிடம் அதித அன்புகாட்டுவதும், அந்நியா்களை விரட்டி வேட்டையாடுவதுமாகத் தங்கள் எஜமானரின் குடும்ப உறுப்பினா்களாகவே இவ்வகை நாய்கள் மாறிவிடுவதுண்டு.

வளா்ப்பு நாய்கள் தங்கள் எஜமானின் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காகக் கொள்ளயா்களுடனும் விஷஜந்துக்களுடனும் போராடிய கதைகள் அநேகம். கடந்த செப்டெம்பா் மாதத்தில் திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகிலுள்ள ஒரு வீட்டில் அதிகாலையில் மதில் சுவரேறிக் குதித்த திருடனை, அவ்வீட்டிலிருந்த வளா்ப்பு நாய் இரண்டு மணி நேரம் இருந்த இடத்திலேயே அசையவிடாமல் நிற்கவைத்துத் தன் எஜமானிடம் பிடித்துக் கொடுத்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் பரவலாக வெளிவந்தது.

சென்ற வாரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் அருகில் தன் எஜமானரின் வீட்டிற்குள் நுழைய முயன்ற விஷப்பாம்பினைக் கண்ட வளா்ப்பு நாய், அதனைக் கொன்றதுடன் தானும் அப்பாம்பினால் கடிபட்டு உயிரிழந்த செய்தி நம் நெஞ்சினை நெகிழ வைக்கிறது.

இவ்வாறு வீரமும் விசுவாசமும் உள்ள நாட்டு நாய்களுக்கு பதிலாக, அல்சேஷியன், ஜொ்மன் ஷெப்பா்டு, டாபா்மேன் போன்றவற்றை வளா்க்கத் தொடங்கியவா்கள், நாளடைவில் பிட்புல் உள்ளிட்ட ஆக்ரோஷமான நாய்களை வளா்ப்பதில் ஆா்வம் காட்டியதே மேற்கண்ட நாய்க்கடி விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துவிட்டது. அந்நாய்கள் தங்கள் எஜமானரின் குடும்பத்தினரையே விட்டுவைப்பதில்லை என்னும் பொழுது சுற்றியிருப்பவா்களின் பாதுகாப்புக்கு ஏது உத்தரவாதம்?

இந்நிலையில், ஒதுக்குப்புறங்களில் வீடுகட்டிக் குடியேறுவதைத் தவிா்ப்பது, தங்கள் வீடுகளிலுள்ள விலையுயா்ந்த பொருட்களை வங்கிப் பெட்டகங்களில் வைப்பது, நான்கைந்து தெருக்களைச் சோ்ந்த இளைஞா்கள் சிறு குழுக்களாக இரவுநேரங்களில் ரோந்து வருவது, ஆங்காங்கே கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்துவது ஆகியவற்றைச் செய்ய முன்வந்தால் ஆக்ரோஷமான நாய்களைச் சாா்ந்திருக்க வேண்டிய அவசியமே இருக்காது.

முக்கியமாக, பிரிந்திருக்கும் உறவுகள் ஒரே கூரையின் கீழ்க் கூட்டுக் குடும்பமாக வாழ்த்தொடங்கினாலே போதும், அவரவா் வீட்டின் அருகினில் வளரும் தெருநாய்களின் குரைப்பே போதுமானதாக இருக்கும். இனி முடிவு மக்களின் கையில்.

 

 



Read in source website

தலைநகர் சென்னையில் நிறைவுபெறாத மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து 25 வயதுடைய ஊடகவியலாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. சென்னை மாநகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துரிதகதியில் நடைபெற்றுவரும் நிலையில், அலட்சியப் போக்கால் இந்த மரணம் நடந்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

“முத்துகிருஷ்ணன் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த பகுதி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை. அது நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்; “எந்த இடத்தில் உயிரிழந்தார் என அதிகாரிகள் உறுதிப்படுத்த முடியாத நிலை இருக்கிறது” என்று தமிழகப் பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியிருக்கிறார். மாநகராட்சியோ நெடுஞ்சாலைத் துறையோ எதுவாக இருந்தாலும், இரண்டுமே தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் வருகின்றன. எனவே, அமைச்சர் குறிப்பிட்டதுபோல இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததில் அரசுக்குப் பொறுப்பு இருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது. மழைநீர் வடிகால் பணியையொட்டி சென்னையில் நடைபெறும் முதல் மரணம் அல்ல இது. கடந்த மே மாதத்தில் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். கடந்த ஜூன் மாதத்தில் கே.கே.நகரில் வங்கிப் பெண் அதிகாரி ஒருவர் மரணமடைந்தார்.



Read in source website

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ‘காலநிலை செயல்திட்ட வரைவு அறிக்கை’யை சென்னை மாநகராட்சி வெளியிட்டது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அந்தச் சுருக்க அறிக்கை குறித்துக் கருத்துக்கூற இரண்டு வாரங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை விமர்சித்த பிறகே வரைவு அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டு, கருத்துக்கூற கூடுதலாக ஒரு மாத அவகாசம் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி வெளியிட்ட அந்த 52 பக்க வரைவு அறிக்கை, காலநிலை மாற்றம் குறித்த நகரங்களுக்கு இடையிலான சர்வதேச அமைப்பான ‘சி40’-யின் தேவைக்காக உருவாக்கப்பட்டதே. காலநிலை மாற்றம் குறித்து எவ்வளவு அலட்சியமான பார்வையை நாம் கொண்டுள்ளோம் என்பதற்கு இந்த நிகழ்வுகள் ஒரு சாட்சி.

அதே நேரம், இந்த அறிக்கை சில முக்கிய எச்சரிக்கைகள் விடுத்துள்ளதைப் புறக்கணிக்க முடியாது; அவை: அடுத்த ஐந்து ஆண்டுகளில் சென்னையின் கடல் மட்டம் 7 செ.மீ. உயர்ந்து 100 மீட்டர் நிலப்பகுதி கடலுக்குள் மூழ்கிவிடும். கடல் மட்டம் உயர்வதால் வடசென்னையில் உள்ள இரண்டு மின்னுற்பத்தி நிலையங்கள், 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் 60 சதவீதம் வரை மூழ்க வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறை வெள்ளம் ஏற்படுகிறது. சென்னையின் 30 சதவீதப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 2100-ஆம் ஆண்டுக்குள் சென்னையின் 67 சதுர கி.மீ. பரப்பளவு - தற்போதுள்ள நகரத்தின் 16 சதவீதம் நிரந்தரமாக நீரால் சூழப்படும். இதன் காரணமாக 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். 200-க்கும் மேற்பட்ட குடிசைப்பகுதிகள் பாதிக்கப்படும். ஆறுகள், நீர்நிலைகளை ஒட்டியுள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த 7,500 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்ககங்களும் பாதிக்கப்படும்.

திசை தெரியாத அறிக்கை: 2015 வெள்ளம், 2021 வெள்ளம் எனத் தொடர் இடைவெளிகளில் வெள்ளத்தால் அல்லல்பட்டுவரும் சென்னை மாநகராட்சி, காலநிலை மாற்றம் குறித்து சிந்திக்கத் தொடங்கியிருப்பது நல்ல மாற்றம். ஆனால், துண்டு துண்டான முழுமையற்ற ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டிருப்பதிலிருந்து மாநகராட்சியின் நோக்கம் கேள்விக்குரியதாகிறது. ஏனென்றால் மக்களுக்குப் புரிவதுபோலவோ, மக்களின் பங்கேற்பை உள்ளடக்குவதுபோலவோ அல்லாமல் அறிக்கை முழுவதுமே வரைபடங்கள், எண்கள், புள்ளிவிவரங்களாக உள்ளது. துறைசார் மொழியில் ஏற்கெனவே வெளியான தகவல்களை வெட்டி ஒட்டி வேறு யாருக்கோ தயாரிக்கப்பட்டதுபோல் இருக்கிறது. அறிவியல்பூர்வமாக ஒன்றை விவரிக்கும் தன்மையோ, வாதங்களோ இடம்பெறவில்லை.

“இந்த அறிக்கை பெருமளவு தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றியே பேசுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படப்போகும் சமூக-பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி இந்த அறிக்கை எந்த வகையிலும் கவலைப்படவில்லை. 200-க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றதாக மாநகராட்சி தெரிவித்தாலும், நேரடியாக மக்களுடனோ மீனவ மக்களுடனோ எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை” என சூழலியல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன் விமர்சித்துள்ளார்.

அறிக்கையின் பல இடங்களில் பசுங்குடில் வாயு வெளியீட்டைக் குறைப்பதையும் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதையும் பற்றி மட்டுமே பெருமளவு பேசப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்துக்கு எப்படித் தகவமைத்துக்கொள்வது, வளங்களைச் சுரண்டாத வகையில் எப்படி நகரை மாற்றியமைப்பது என்பது பற்றிப் பேசப்படவில்லை. இந்த வரைவு செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான அம்சங்கள் யூகத்தின் அடிப்படையிலான திட்டங்களாகவே இருக்கின்றன. நடைமுறைக்கு உகந்த, செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் பெரிதாகச் சொல்லப்படவில்லை.

இந்த அறிக்கையை முன்வைத்து எழும் சில கேள்விகள்: மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே கடலிலிருந்து சில நூறு அடிகள் தொலைவில் மெட்ரோ ரயில் நிலையம் தற்போது அமைக்கப்பட்டுவருகிறது. ஆனால், மேற்கண்ட வரைவு அறிக்கையோ 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் கடல் மட்ட உயர்வால் நீரில் மூழ்கும் என்கிறது. நகர் முழுவதையும் இணைக்கக்கூடிய நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் கடல் நீர் புகுந்தால் எப்படிப்பட்ட ஆபத்து ஏற்படும்? அதைச் சமாளிக்கவோ ரயில் நிலையத் திட்டத்தைக் கைவிடுவதற்கோ சென்னை மாநகராட்சி-மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் உள்ள திட்டம் என்ன?

பெருமளவு குறுக்கப்பட்டுவிட்ட சென்னையின் மூன்று ஆறுகளையும் பக்கிங்ஹாம் கால்வாயையும் ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்ட எண்ணற்ற ஏரிகளையும் மீட்டெடுப்பதற்கான திட்டம் என்ன? இவற்றை மீட்டெடுக்காமல் மழைக்கால வெள்ளத்தையும் கோடைக் கால நீர்த் தேவையையும் எப்படிச் சமாளிக்க முடியும்?

குடிசைப்பகுதி மக்கள் பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்படப் போவதாகவும், அவர்களுக்கு வெப்பநிலை அதிகரிப்பால் பாதிக்கப்படாத வீடு வழங்கப்படும் என்றும் அறிக்கை கூறுகிறது. குளிர்சாதன வசதி இல்லாமல் இந்த வீடுகளில் வெப்பநிலையைக் குறைப்பது எப்படிச் சாத்தியம்? அந்த வீடுகள் எங்கே அமைக்கப்பட உள்ளன? காலநிலை ஆபத்து - காலநிலை பேரிடர் நிகழ்வுகளின்போது பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகள் எப்படி அமையும், அதற்கான முன்னேற்பாடுகள் என்னென்ன?

“இதுவரையிலான சென்னை வெள்ளங்களில் அடித்தட்டு மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றப் பேரழிவிலும் அவர்களே பாதிக்கப்படுவார்கள் என்பதை இந்த வரைவு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், அவர்களைக் காப்பாற்றவோ, மீட்டெடுக்கவோ மாநகராட்சியிடம் உள்ள திட்டம் என்ன என்பதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை” என்கிறார் சென்னை கடல் மட்ட உயர்வு குறித்து ஆராய்ந்துள்ள சென்னை ஐ.ஐ.டி.யின் முதன்மை அறிவியலாளர் அவிலாஷ் ரௌல்.

பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்: காலநிலை மாற்றம் என்பது சென்னையை மட்டுமல்ல தமிழ்நாட்டை, இந்தியாவை, உலகைப் பாதிக்கவுள்ள மாபெரும் பிரச்சினை. அடுத்துவரும் ஆண்டுகளில் நிகழவுள்ள இயற்கைப் பேரழிவுகளைத் தீவிரப்படுத்த உள்ள பிரச்சினை. இதை எதிர்கொள்வதற்கு இன்னும் கொள்கை அளவில்கூட நாம் தயாராகவில்லை. இதைக் குறித்து மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை என்றாலும், அரசும் ஆட்சியாளர்களும் அதே போன்றதொரு அறியாமையை வெளிப்படுத்தக் கூடாது. ஏற்கெனவே தீவிரமடைந்துவரும் இயற்கைப் பேரழிவுகளைத் தடுப்பதற்கு அரசு மக்களுடன் கைகோப்பதும் புரிதலைப் பரவலாக்குவதும் அவசர, அவசியத் தேவை. இந்தப் பின்னணியில் காலநிலை மாற்றச் செயல் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படுவதைச் சென்னை மாநகராட்சி போன்ற அரசின் அங்கங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இந்திய அளவிலோ, தமிழக அளவிலோ இல்லாத ஒரு முன்முயற்சியை, மாற்றத்தைச் சென்னை மாநகராட்சி தன்னிச்சையாக மேற்கொண்டுவிட முடியாது. ஆனால், லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கும் ஒரு பெருநகரம், அந்த மக்களின் பாதுகாப்புக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். நகரைப் பாதுகாப்புமிக்கதாகவும், விரைவாக மீளும்திறன் கொண்டதாகவும் மாற்றுவதற்கான புரிதலுடன்கூடிய செயல்பாடுகளை இப்போதே தொடங்க வேண்டும். - ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in



Read in source website

கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்து பிரதமர்களைக் கண்டுவிட்ட நாடு உலகில் பிரிட்டனைத் தவிர வேறொன்றில்லை. பிரிட்டனின் சமகால வரலாறு ‘பிரெக்ஸிட்’டிலிருந்தே தொடங்குகிறது; பிரிட்டனின் தற்போதைய சீர்குலைவுக்கும் அதைச் சரிசெய்ய முடியாமல் பிரதமர்கள் தொடர்ந்து பதவி விலகுவதற்கும் ‘பிரெக்ஸிட்’டே அடிப்படை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்துவந்த நிகழ்வே ‘பிரெக்ஸிட்’. ஐரோப்பிய ஒன்றியத்தின் பின்தங்கிய நாடுகளிலிருந்து மக்கள் பிரிட்டனுக்கு வந்து அடிமட்ட வேலைகளில் ஈடுபடுவது இயல்பு. இது பிரிட்டிஷார் மனத்தில் பொதுவான ஒரு எதிர்ப்புநிலையை உருவாக்கியிருந்தது. பிரிட்டனின் வேலையின்மைக்கும் பொருளாதார மந்தநிலைக்கும் இதுவே காரணம் என்று பரவலாக நம்பப்பட்டது. இந்த நிலை தொடர்ந்தால் பிரிட்டன் சுரண்டப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் தீர்மானித்தது.



Read in source website