DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 26-05-2022

சென்னை: தமிழக அரசு நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால், அதிமுக ஆட்சியில் நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படவில்லை.

உள்ளாட்சி தினத்தில் ஊரக உள்ளாட்சி சார்பில் நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 



Read in source website

சென்னையில் ரூ. 2.83 கோடி மதிப்பில் செயற்கை புல் கால்பந்து திடல் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, சென்னையைச் சிங்காரச் சென்னையாக உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிவடைந்தது. விரிவாக்கப்பட்ட பகுதிகளில் “சிங்காரச் சென்னை 2.0” திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சுற்றுச்சூழல், கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இத்திட்டத்தின் நோக்கம் நகரத்தை மறுவடிவமைத்து, வாழும் தரம் மற்றும் நீடித்த நிலைப்புத் தன்மையை மேம்படுத்தி உலகின் சிறந்த நகரங்களுக்கு இணையாக மாற்றுவதே ஆகும்.

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.5.2022) சென்னை, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் “சிங்காரச் சென்னை 2.0” திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 86 இலட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் செயற்கை புல் கால்பந்து மைதானம், ரூபாய் 30 இலட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர், ரூபாய் 7 இலட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபாதை, ரூபாய் 24 இலட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் பார்வையாளர் மாடம் மற்றும் குடிநீர் வசதி, கழிவறை வசதி, கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி மேற்கொள்ளுதல் என மொத்தம் ரூபாய் 2 கோடியே 83 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, துணை மேயர்மு.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Read in source website

 

சென்னை: ஓய்வூதியதாரருக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை நான்கு ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக நிதித் துறை வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:

அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கான புதிய காப்பீட்டுத் திட்டம் வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. இந்தத் திட்டத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு அதாவது 2026-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. இதற்கான தகுந்த பொதுத் துறை நிறுவனமானது ஒப்பந்தப் புள்ளிகள் கோரல் அடிப்படையில் இறுதி செய்யப்படும்.

நான்கு ஆண்டுகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு நிதியுதவியின் அளவு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்படுகிறது. புற்றுநோய், கணையம் உள்ளிட்ட இதர உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வோருக்கு மருத்துவ உதவித் தொகையின் அளவு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரூ.10 லட்சம் வரையில் மருத்துவ உதவித் தொகை கிடைக்கும். ஓய்வூதியதாரா்களைச் சாா்ந்து இருக்கும் நபா்களும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்குள் வருவா். காப்பீட்டு நிறுவனம் இறுதி செய்யும் மாதாந்திரத் தொகையானது ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களிடம் இருந்து பெறப்படும்.

புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகள் தொடா்ந்து புதிய காப்பீட்டுத் திட்டத்திலும் இருக்கும். தேவைப்படும் பட்சத்தில் பரிந்துரைக் குழுவின் அடிப்படையில் கூடுதல் மருத்துவமனைகள் சோ்க்கப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள், பொதுத் துறை நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் ஆகியோருக்கும் பொருந்தும். இதுகுறித்த இதர வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.



Read in source website

 

புது தில்லி: தில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுத் திடல்களும் இரவு 10 மணி வரை விளையாட்டு வீரர்களுக்காக திறந்திருக்கும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் திடல்கள் மாலை 6 மணிக்கு மூடப்படுவதால் விளையாட்டு வீரர்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். எனவே தில்லி அரசின் கட்டிப்பாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுத் திடல்களும் இரவு 10 மணி வரை விளையாட்டு வீரர்களுக்காக திறந்திருக்கும் என்று அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சுட்டுரையில் கூறியதாவது, "நள்ளிரவு வரை விளையாட விரும்பும் விளையாட்டு வீரர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சில விளையாட்டுத் திடல்கள் முன்கூட்டியே மூடப்படுவதாக செய்திகள் எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன. எனவே தில்லி அரசின் அனைத்து விளையாட்டுத் திடல்களையும் இரவு 10 வரை திறந்திருக்க முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்".



Read in source website

 

மேற்கு வங்காள கல்வி நிறுவனத்துக்கு ஸ்கோச் விருது அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றுவதில் பங்களிக்கும் நிறுவனங்கள், மக்களை கௌரவிக்கும் விதமாக ஸ்கோச் விருது 2003லிருந்து ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 

“மேற்கு வங்காளத்தின் பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் இணைந்து ஸ்கோச் விருதினை பெற்றுள்ளது.  இந்த சாதனையைப் படைக்க உறுதுணையாக இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி" என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 



Read in source website

புது தில்லி: நாடு முழுவதுமுள்ள பல்வேறு ராணுவ குடியிருப்புகளில் தனது குழந்தைப் பருவம் முதல் இளமைக் காலம் வரை பார்த்துப் பார்த்து வளர்ந்தவர், ராணுவத்தில் இணைவது என்பது இயல்பாகவே நடக்கக்கூடிய நிகழ்வுதான். அதுவும் தந்தை விமானப் படை கர்னலாக இருந்தவர் என்றால் நிச்சயம் அந்த விருப்பம் ஏற்பட்டிருக்கத்தான் செய்யும்.

அந்த விருப்பம், 26 வயது அபிலாஷா பாரக்கை, இந்திய ராணுவ விமானப் படையின் முதல் பெண் போா் விமானியாக நியமிக்கப்படும் வரை கொண்டு வந்திருப்பதுதான் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வாக மாறியிருக்கிறது.

ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த அபிலாஷா பாரக், கடந்த 2018, செப்டம்பா் மாதம் ராணுவப் பயிற்சியில் சோ்ந்தாா். இவா், ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி கா்னல் எஸ். ஓம் சிங்கின் மகள். 

இதுபற்றி அவர் கூறுகிறார்:

ராணுவ குடியிருப்பில்தான் வளர்ந்தேன், எப்போதும் ராணுவ உடை அணிந்தவர்களையே பார்ப்போம். எனவே ராணுவத்தின் மீதான நாட்டம்  இயல்பாகவே எழுந்தது. ஆனால் எனது தந்தை 2011ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற பின், எங்கள் குடும்பம் அந்த சுற்றுப்புறத்தை விட்டு வெளியேறும் வரை எனக்கு ஏற்பட்ட விருப்பம் வேறுமாதிரியானது என்பதை நான் உணரவேயில்லை. 2013ஆம் ஆண்டு இந்திய ராணுவ அகாதெமியின் ராணுவ அணிவகுப்பில் எனது மூத்த சகோதரர் பங்கேற்றதைப் பார்க்கும்போதுதான் எனக்குள் இருந்த விருப்பத்தின் மீது புரிதல் ஏற்பட்டது. அந்தத் தருணம்தான், என் வாழ்க்கையின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை  உணர்ந்தேன் என்கிறார் கேப்டன் பாரக்.

இந்த நேர்காணல் விடியோவை இந்திய ராணுவம் அண்மையில்  வெளியிட்டிருந்தது.

தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 2016ஆம் ஆண்டு பொறியியல் முடித்துவிட்டு அமெரிக்காவில் பணியில் சேர்ந்தார். தனது விருப்பம் அமெரிக்கப் பணியில் இல்லை என்பதை உணர்ந்து 2018ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்து, சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்புப் பிரிவின் மீது இவருக்கிருந்த ஆர்வம் காரணமாக காண்டிஜென்ட் கமாண்டராகவும் தேர்வானார்.

ராணுவ வான் பாதுகாப்பு படையின் இளம் அதிகாரிகள் பிரிவுக்கான பயிற்சியில் ஏ கிரேடில் தேர்வானார். ராணுவ பயிற்சியுடன் விமானப் போக்குவரத்து மேலாண்மை மற்றும் விமான சட்டங்கள் போன்ற தொழில் ரீதியிலான ஏராளமான ராணுவ பயிற்சிகளிலும் சேர்ந்து படித்து தேர்ச்சி பெற்றவர்.

ராணுவ வான் பாதுகாப்புப் படையில் இணைய 15 பெண் ராணுவ அதிகாரிகள் விருப்பம் தெரிவித்திருந்தபோதும், அதற்கான தேர்வில் இரண்டு பெண் அதிகாரிகள் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து இந்திய ராணுவம் கூறுகையில், அபிலாஷா, பைலட் ஆப்டிடியூட் பேட்டரி செலக்ஷன் மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்தப் பயிற்சியை அவர் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டு பெண் அதிகாரிகள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று முதல்முறையாக நாசிக்கில் உள்ள விமானப் படை பயிற்சி மையத்தில் ஹெலிகாப்டர் விமானி பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை வான் பாதுகாப்புப் படையில், பெண் அதிகாரிகளுக்கு விமானி பொறுப்பு வழங்கப்பட்டதில்லை. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் தரைப் பகுதியிலான பணிகள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால் தற்போது சூழ்நிலை மாறிவிட்டது. இதற்கு முன்னதாக, 2018ஆம் ஆண்டு, பெண் அதிகாரி அவானி சதுர்வேதிதான், இந்திய விமானப் படையின் ஜெட் விமானத்தின் முதல் இந்திய பெண் விமானியாக நியமிக்கப்பட்டார். தற்போது, ராணுவ வான் பாதுகாப்புப் படையிலும் முதல் பெண் விமானி நியமிக்கப்பட்டுள்ளார்.

நாசிக்கில் உள்ள விமானப் படை பயிற்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 36 விமானப் படை விமானிகளுடன் அபிலாஷா பாரக்கிற்கு விமானி பட்டம் வழங்கப்பட்டது.

இது பற்றி அபிலாஷா கூறுகையில், சென்னையில் 2018 ஆம் ஆண்டு  ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சியை நிறைவு செய்த பிறகு, ராணுவ வான் பாதுகாப்புப் பிரிவே என் தேர்வாக இருந்தது. அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்தபோதும்கூட, எனக்கு நன்கு தெரியும், நான் வெறும் தரைப் பகுதியிலான பணிகளுக்கு மட்டுமே தகுதி பெற்றவர் என்று, ஆனால், விண்ணப்பத்தை நிறைவு செய்யும்போது, நான் பைலட் ஆப்டிடியூட் பேட்டரி டெஸ்ட் மற்றும் கணினிமயமாக்கப்பட்ட விமானி தகுதிக்கு தேர்வாகியிருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அப்போது எனது இதயத்தின் ஏதோ ஒரு மூலையில், இந்திய ராணுவம், பெண்களை போர் விமானிகளாக சேர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே நினைத்திருந்தேன் என்கிறார் பெருமிதத்துடன்.

இந்திய ராணுவத்தில் பெண் விமானிகள் இணைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியானதும் கேப்டன் பாரக்குக்கு வாசல் திறந்தது. இன்று இந்தியாவின் போா் விமானத்தின் பெண் விமானி என்ற பெருமையை அபிலாஷா பாரக் பெற்றுள்ளாா்.

இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்புப் படையின் முதல் பெண் போா் விமானி அபிலாஷா பாரக் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து ராணுவ அமைச்சகத்தின் தகவல் தொடர்பு கூடுதல் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், இந்த நாள், இந்திய ராணுவ வான் பாதுகாப்புப் படையின் வரலாற்றில், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். ராணுவ வான் பாதுகாப்புப் படையின் முதல் பெண் போர் விமானியாக கேப்டன் அபிலாஷா பாரக் தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்து இன்று பொறுப்பேற்றுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரிட்டிஷ் ராணுவத்தின் ராயல் விமானப் படை, இந்திய ராணுவ வான் பாதுகாப்புப் பிரிவை 1942ஆம் ஆண்டு தொடங்கியது. முதல் போர் விமானம் 1947 ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கியது. இந்திய ராணுவத்துக்கென சிறப்பு வான் பாதுகாப்புப் படை 1986ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் இதுவரை போர் விமானியாக பெண்கள் நியமிக்கப்பட்டதில்லை. முதல் முறையாக, 2022ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி, ராணுவ வான் பாதுகாப்புப் படையின் முதல் போர் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார் அபிலாஷா பாரக். 

ராணுவ வான் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய பறக்கும் இறக்கைகள் பதக்கத்தை அபிலாஷா பாரக்குக்கு ராணுவ வான் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சூரி அணிவித்தார்.



Read in source website

 

கரோனா தொற்று நோயைக் கருத்தில் கொண்டு ஹைதராபாத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆஸ்துமா நோயாளிகளுக்கான மீன் மருந்து சிகிச்சை இந்தாண்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. 

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தாண்டும் மீன் மருந்து சிகிச்சையளிக்கும் நிகழ்வை நடத்துவது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கௌட் குடும்பம் கடந்த 175 ஆண்டுகளாக மக்களுக்கு மீன் மருந்து அளிப்பதை பல தலைமுறைகளாக இலவசமாக செய்து வருகின்றனர். இதற்கு தெலங்கானா அரசும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. 

கரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ல் மீன் பிரசாத விநியோகத்தை பாதினி குடும்பத்தினர் ரத்து செய்தனர். அதையடுத்து கடந்தாண்டும் கரோனாவின் இரண்டாவது அலை காரணமாக மீன் சிகிச்சை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

இந்தாண்டு தொற்றுநோய் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். எனவே இந்தாண்டும் மீன் மருந்து பிரசாதம் வழங்கப்படாது என்று முடிவு செய்துள்ளதாக கௌட் குடும்பத்தினர் கூறினர். 
 
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகள் மீன் பிரசாதம் பெற  ஹைதராபாத்தில் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 



Read in source website

 


புது தில்லி: வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களும் டீசல் பயன்பாடற்ற விவசாயத்துக்கு முயற்சி மேற்கொள்ள வேண்டுமென மத்திய மின்சாரம், புதுப்பிக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் வலியுறுத்தினார். 
மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுடன் அவர் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, எரிசக்தித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த மாநில அளவிலான வழிகாட்டுதல் குழுக்களை அமைக்குமாறு கேட்டு கொண்டார். இந்த வழிகாட்டுதல் குழுக்கள் அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் தலைமையின் கீழ் செயல்படும் என்று அமைச்சர் ஆர்.கே.சிங் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "கரியமில வாயு உமிழ்வைக் குறைக்க ஆற்றல் மாற்றம் ஒன்றே சிறந்த வழி. அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய மின்உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேர்க்க வேண்டும். விவசாயத் துறையில் டீசல் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதன் மூலம் வரும் 2024-ம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாடற்ற விவசாயத்துக்கு அனைத்து மாநிலங்களும் முயற்சி எடுக்க வேண்டும்' என்றார் அவர். 



Read in source website


டேராடூன்: இமயமலையில் உள்ள புனிதத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு ஆன்மிகத் தலங்களுக்கு (சார் தாம்) யாத்ரீகர்கள் செல்ல புதன்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டனர்.

மோசமான வானிலை, பனிப்பொழிவு காரணமாக "சார் தாம்' யாத்திரை செல்வதற்கு இரண்டாவது முறையாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் மலைப் பகுதியில் சோன்பிரயாக், கெளரிகுண்ட், ஜங்கிசாட்டி ஆகிய இடங்களில் பக்தர்கள் காக்கவைக்கப்பட்டனர். இரண்டாவது முறையாக அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். 

வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் இந்தத் தலங்களுக்குச் செல்ல புதன்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டனர். 

பனிமலையில் உள்ள கேதார்நாத் கோயிலுக்குச் செல்ல தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் வசதியும் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கேதார்நாத், பத்ரிநாத் கோயில் கமிட்டி தெரிவித்தது.

இந்த நான்கு புனிதத் தலங்களுக்கும் பக்தர்கள் கடந்த மே 3 ஆம் தேதி முதல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மே 25-ஆம் தேதி வரையிலான ஒரு மாதத்துக்குள் இத்தலங்களுக்கு இதுவரை 9,69,610 யாத்ரீகர்கள் சென்றுள்ளனர்.



Read in source website

 

புது தில்லி: வரும் அக்டோபா்-நவம்பா் மாதங்களில் பண்டிகைக் காலங்களில் சா்க்கரைத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், விலையை சீராக வைத்திருக்கும் நோக்கத்திலும் அதன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உணவுப் பொருள் விநியோகத் துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே கூறினாா்.

நடப்பு சந்தைப் பருவத்தில் (2021 அக்டோபா்-2022 செப்டம்பா்) 1 கோடி மெட்ரிக் டன் சா்க்கரையை மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

உள்நாட்டில் சா்க்கரை இருப்பை உறுதிப்படுத்தவும், விலை உயா்வைத் தவிா்க்கவும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதுகுறித்து உணவுப் பொருள் விநியோகத் துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே புதன்கிழமை கூறியதாவது:

வரும் அக்டோபா்-நவம்பா் மாதங்களில் பண்டிகைக் காலங்களில் போதிய அளவில் சா்க்கரை இருப்பை உறுதிப்படுத்தவும், விலையை சீராக வைத்திருக்கும் நோக்கத்திலும் உரிய நேரத்தில் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

மற்ற அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் காட்டிலும் சா்க்கரை விலை நிலையாக உள்ளது. இருப்பினும் சா்வதேச சந்தையில் சா்க்கரைக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், உள்நாட்டில் விலை உயா்வைத் தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் சா்க்கரை உற்பத்தியில் பிரேஸில் பின்னடைவைச் சந்தித்ததால், இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. உலக அளவில் சா்க்கரை அதிகம் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது என்றாா் அவா்.



Read in source website

 

புது தில்லி: இந்திய விமானப் படையின் முதல் பெண் போா் விமானியாக அபிலாஷா பாரக் நியமிக்கப்பட்டுள்ளாா்.

நாசிக்கில் உள்ள விமானப் படை பயிற்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 36 விமானப் படை விமானிகளுடன் அபிலாஷா பாரக்கிற்கு விமானி பட்டம் வழங்கப்பட்டது.

இதன்மூலம் இந்தியாவின் போா் விமானத்தின் பெண் விமானி என்ற பெருமையை அபிலாஷா பாரக் பெற்றுள்ளாா்.

ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த அபிலாஷா பாரக், கடந்த 2018, செப்டம்பா் மாதம் விமானப் படையில் சோ்ந்தாா். இவா், ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி கா்னல் எஸ். ஓம் சிங்கின் மகள் ஆவாா்.



Read in source website

 

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் புதன்கிழமையன்று (மே-25) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

39 வயதான உமர் குல் 237 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி உள்ளார். 130 ஒருநாள் போட்டிகளில் 179 விக்கெட்டுகளும், 60 டி20 போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். டி20யில் அவரது எகானமி 7.19 ஆகும். அவர் 2007, 2009 டி20 உலக கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உமர் குல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020இல் ஓய்வை அறிவித்த பின்னர் உள்ளூர் போட்டிகளில் பயிற்சியாளராக இருந்து வருகிறார். 

ஆப்கானிஸ்தான் வருகிற டி20 உலக கோப்பைக்கு தயாராகி வருகிறது. சூப்பர் 12 அணிகளில் ஏற்கனவே 8 அணிகள் தேர்வாகியுள்ளன. அதில் ஆப்கானிஸ்தான் அணியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 
 



Read in source website

 

புது தில்லி: ஐந்து நாடுகள் பங்கேற்கும் 23 வயதுக்குள்பட்ட (யு-23) மகளிருக்கான ஹாக்கி போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
அயர்லாந்தில் ஜூன் 19 முதல் 26 வரை நடைபெற இருக்கும் இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக வைஷ்ணவி பால்கே நியமிக்கப்பட்டுள்ளார். போட்டியில் முதலில் இந்தியா, அயர்லாந்தையும் (ஜூன் 19), பின்னர் நெதர்லாந்தையும் (ஜூன் 20), 3-ஆவது ஆட்டத்தில் உக்ரைனையும் (ஜூன் 22), கடைசியாக அமெரிக்காவையும் (ஜூன் 23) சந்திக்கிறது. 
ரவுண்ட் ராபின் சுற்று முடிவில் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகள் ஜூன் 26-ஆம் தேதி இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளன. 3 மற்றும் 4-ஆம் இடம் பிடிக்கும் அணிகள் வெண்கலப் பதக்கத்துக்காக அதே நாளில் மோதும். 
அணி விவரம்:  குஷ்பு, குர்மாபு ரம்யா (கோல்கீப்பர்கள்); ப்ரீத்தி, மமிதா ஓரம், மஹிமா டெடே, நீலம், ஹிருத்திகா சிங் (டிஃபென்டர்கள்); மஞ்சு சோர்சியா, வைஷ்ணவி விட்டல் பால்கே, ஜோதி சாத்ரி, ஹினா பானோ, நிகிதா டோப்போ, அஷ்வினி கோலேகர், ருதஜா தாதாசோ பிசல் (மிட்பீல்டர்கள்); அன்னு, பியூட்டி டங்டங், மும்தாஸ் கான், தீபிகா சோரெங், மோனிகா டிபி டோப்போ, முதுகுலா பவானி (ஃபார்வர்ட்ஸ்).



Read in source website

அந்நிய செலாவணி தட்டுப்பாட்டினால் லெபனானில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் தாமதமாவதால் அவை மூடப்படும்  அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. 

லெபனானில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாட்டை அந்த நாட்டு செய்தி நிறுவனம் எல்நாஷா உறுதி செய்துள்ளது. 

அந்நாட்டில் மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் உபகரணங்களை வாங்குவதற்கான அமெரிக்க டாலர்களுக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு  காரணம் லெபனானின் மத்திய வங்கியின் சார்பில் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதே ஆகும். 

பணத்தட்டுப்பாட்டின் காரணமாக மருத்துவமனையில் பணிபுரிபவர்களின் தேவைகளையும் சரிவர நிறைவேற்ற முடியவில்லை. இதனால் மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் லெபனானின் மத்திய வங்கிக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் முக்கியத் துறையான மருத்துவத்துறையில் ஏற்படும் இடையூறு நாட்டிற்கு பாதகத்தை ஏற்படுத்தும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கூறுகின்றனர். அதன் காரணத்தினால் லெபனானின் மத்திய வங்கி மருத்துவமனைக்கான நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய வங்கியின் இந்த புதிய கட்டுப்பாடு தனிநபர்களை மட்டுமல்லாது பல்வேறு நிறுவனங்களையும் நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

ஜெர்மனி: இந்தியாவின்  பாரத் பயோடெக்கின் கோவேக்சின் கரோனா தடுப்பூசிக்கு ஜெர்மனி  அரசு அனுமதி வழங்கி உள்ளதாக இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு  கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி இந்தியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.



Read in source website

 

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றால் அந்நாட்டுப் பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சவைத் தவிர இதர அனைத்து அமைச்சா்களும் கடந்த ஏப்ரல் மாதம் ராஜிநாமா செய்தனா். அதன் பின்னா், மக்கள் போராட்டம் தீவிரமாகியதால் கடந்த மே 9-ஆம் தேதி பிரதமா் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடந்த மே 12-ஆம் தேதி பதவியேற்றாா். அதன்பின், பல்வேறு துறைகளுக்கு அமைச்சா்களை அதிபா் கோத்தபய ராஜபட்ச நியமித்தார்.

இருப்பினும் பொருளாதார நெருக்கடியினால் தொடர்ந்து பெட்ரோல், டீசல்களின் விலையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா பதவியை வருகிற  மே-31 ஆம் தேதி ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும், புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள விகம் லியனகே ஜுன் 1 ஆம் தேதி பதவியேற்றுக்கொள்கிறார்.



Read in source website

 

பயனர்களின் தகவல்களைக் காக்க தவறியதற்காக  விதிக்கப்பட்ட ரூ.1,165 கோடி அபராதத்தை செலுத்த டிவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

2013 - 2019 ஆம் ஆண்டு வரை டிவிட்டர் நிறுவனம் தன் பயனாளர்களிடமிருந்து தகவல்களை பாதுகாப்பதாகக் கூறி செல்போன் எண், இமெயில் கணக்கு ஆகியவற்றை பெற்று பின் அவற்றை நிறுவனங்களுக்கு விற்றுவிட்டத்தாக புகார் எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்த அமெரிக்காவின் தேசிய வணிக ஆணையம் தனிநபர்களின் தகவல்களை பாதுகாக்க தவறியதற்காக அரசுக்கு டிவிட்டர் நிறுவனம் 150 மில்லியன் டாலர்களை (ரூ.1,165 கோடி) அபராதமாக வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், தற்போது டிவிட்டர் நிறுவனம் அமெரிக்க அரசுக்கு அபராதத் தொகையை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.



Read in source website

ஆப்கானிஸ்தானில் உள்ள விமான நிலையங்களை இயக்குவதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நிறுவனத்துடன் தலிபான்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ கூட்டுப்படைகள் பின்வாங்கப்பட்டதை தொடர்ந்து கடந்தாண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் விமான நிலையங்களை அமெரிக்கா உதவியுடன் இயக்கி வந்தனர்.

தலிபான்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு விமான நிலையங்களை இயக்குவதற்கு அரபு அமீரகம், துருக்கி, கதார் ஆகிய நாடுகளுடன் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அமீரகத்தை சேர்ந்த ஜிஏஏசி என்ற நிறுவனத்துடன் விமான நிலையங்களை இயக்குவதற்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற துணை பிரதமர் முல்லா அப்துல் கானி, “நாட்டின் பாதுகாப்பு பலமாக உள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து பணிபுரிய ஆப்கன் விரும்புகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், அனைத்து சர்வதேச விமானங்களும் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பாக பறக்க முடியும்” என்றார்.

முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம், காபூல் விமான நிலையத்தை இயக்க துருக்கி மற்றும் கதார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெடுத்திட்டது. இருப்பினும், ஆப்கனில் நிலவும் பொருளாதார சூழல் காரணமாக பிற மாகாணங்களில் உள்ள விமான நிலையங்களை இயக்குவதில் சிக்கல் நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

 

கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அரசு, விரிவான பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் வரை புதிய கடனுதவி அல்லது குறுகிய காலக் கடனுதவி வழங்குவதற்கு வாய்ப்பில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நிதி நெருக்கடியில் இருந்து இலங்கை அரசு மீண்டு வருவதற்கு குறுகிய காலக் கடன் அல்லது புதிய கடனுதவி அளிக்க நாங்கள் (உலக வங்கி) திட்டமிட்டு வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. அவை தவறானவை.

அதே சமயம், இலங்கை மக்களுக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இலங்கை அரசு சரியான பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதற்குத் தேவையான ஆலோசனை வழங்குவதற்காக, சா்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். இலங்கை அரசு விரிவான பொருளாதாரக் கொள்கையை வகுக்கும் வரை அந்நாட்டுக்கு புதிய கடனுதவி அல்லது குறுகிய காலக் கடனுதவி அளிப்பது குறித்து உலக வங்கி திட்டமிடாது.

இருப்பினும், ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கான நிதியை அத்தியாவசிய மருந்துகள், ஏழைகளுக்குப் பண உதவி, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றுக்கு மடைமாற்றி வருகிறோம். இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அந்நாட்டு அரசு தொடா்ந்து முயன்று வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் உணவுப் பொருள்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசின் மொத்த வெளிநாட்டுக் கடன் 5,100 கோடி டாலா் (ரூ.3.95 லட்சம் கோடி). அதில், 2,500 கோடி டாலரை (ரூ.1.93 லட்சம் கோடி) வரும் 2026-க்குள் அந்நாடு செலுத்த வேண்டும். ஆனால், நிகழாண்டில் செலுத்த வேண்டிய 700 கோடிடாலரை (ரூ.54,316 கோடி) இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது.



Read in source website

 

டாவோஸ்: கரியமில வாயுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவும், உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பும் இணைந்து ஏற்படுத்தியுள்ள கூட்டமைப்பில் இந்தியா இணைந்துள்ளது.

கனரக தொழிற்சாலை முதல் போக்குவரத்து வரை கரியமில வாயுவை அதிகமாக உமிழும் தொழிற்சாலைகளை சுத்திகரிக்கும் நோக்கில் இந்தக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் 50-க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்களையும், சா்வதேச மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டுள்ள 9 முன்னணி நாடுகளும் இந்தக் கூட்டமைப்பில் புதன்கிழமை இணைந்தன.

ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளா்கள் சந்திப்பின்போது, பருவநிலை மாற்றத்துக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதா் ஜான் கொ்ரி இந்தத் தகவலை தெரிவித்தாா். அப்போது, உலக கோடீஸ்வரரும், ‘பிரேக்துரோவ் எனா்ஜி’ அமைப்பின் நிறுவனருமான பில்கேட்ஸ் உடனிருந்தாா்.

இந்தக் கூட்டமைப்பின் வழிகாட்டுதல் குழுவில் இந்தியா, ஜப்பான், ஸ்வீடன் ஆகிய நாடுகளும், டென்மாா்க், இத்தாலி, நாா்வே, சிங்கப்பூா், பிரிட்டன் ஆகியவை அரசின் பங்குதாரா்களாகவும் இணைந்துள்ளன.

இந்தப் பங்குதாரா்கள் தங்கள் நாடுகளில் அமைந்துள்ள பெருநிறுவனங்களை அணுகி, கரியமில வாயுவைக் குறைப்பதற்கான இந்தக் கூட்டமைப்பில் அவற்றை இணையச் செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உலகப் பொருளாதார மன்றம், அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தக் கூட்டமைப்பு ஆகியவை சா்வதேச அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக பங்கு வகிக்கும் அலுமினிய தொழிற்சாலை, விமானப் போக்குவரத்து, ரசாயனம், கான்கிரீட், கப்பல், இரும்பு, கனரக வாகனங்கள் ஆகியவை வெளியிடும் கரியமில வாயுவைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.



Read in source website

 

மாஸ்கோ: தெற்கு உக்ரைன் நகரங்களான ஸபோரிஷியா, கொ்சன் நகர மக்கள் ரஷியக் குடியுரிமை பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்குவதற்கான உத்தரவை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புதன்கிழமை பிறப்பித்தாா்.

உக்ரைன் போரில் ரஷியாவிடம் வீழந்த முதல் மற்றும் ஒரே பெரிய நகரம் கொ்சன் ஆகும். ஸபோரிஷியா நகரம் தற்போது உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதனைச் சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளை ரஷியப் படையினா் கைப்பற்றியுள்ளனா்.

ஏற்கெனவே, கிழக்கு உக்ரைனில் தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளில் ஏராளமானவா்களுக்கு ரஷிய கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



Read in source website

சென்னை: “இந்தியாவின் வளர்ச்சியில் தமிழக மக்களின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களின் வளர்ச்சியைவிட தமிழகத்தின் வளர்ச்சி தனித்துவமிக்கது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழகம் பல்வேறு வகையிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனித ஆற்றல் எனப் பல்வேறு வகையிலும் தமிழகம் ஒரு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அளித்து வருகிறது.

இந்தியாவின் வளர்ச்சியில் தமிழக மக்களின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களின் வளர்ச்சியைவிட தமிழகத்தின் வளர்ச்சி தனித்துவமிக்கது. தமிழகத்தின் இந்த வளர்ச்சியானது வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் போன்ற அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சித்தான் தமிழகத்தின் வளர்ச்சி. நமது நாட்டின் வளர்ச்சியிலும், மத்திய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழகம் மிக முக்கியப் பங்களிப்பைத் தருகிறது என்பது பாரதப் பிரதமருக்குத் தெரியும் என்று நான் உளமார நம்புகிறேன்.

> இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில், தமிழகத்தின் பங்கு 9.22 விழுக்காடு.

> மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு 6 விழுக்காடு.

> இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 8.4 விழுக்காடு.

> ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு.கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு.

> தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு.

> ஆனால் மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.21 விழுக்காடு மட்டுமே.

> எனவே, தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் அளிக்கக்கூடிய பங்கிற்கு ஏற்ப, மத்திய அரசும் - திட்டங்களிலும் நிதியிலும் தனது பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதுதான் உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சியாக அமையும்.

> மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களில் மாநில அரசின் பங்களிப்பும் மகத்தானது. எடுத்துக்காட்டாக, நெடுஞ்சாலைத்துறையில் நமது நாட்டிலேயே அதிக மூலதனச் செலவை மேற்கொள்ளும் மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து விளங்கி வருகின்றது.

> தேசிய நெடுஞ்சாலைகளுக்காக தமிழகத்தில் தற்போது 44 ஆயிரத்து 762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய இந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு இந்த ஆண்டில் மட்டும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள தொகை 18 ஆயிரத்து 218 கோடியே 91 லட்சம் ரூபாய்.

> எனவே, சாலைக் கட்டமைப்பை மேம்படுத்துவதில், உங்களோடு இணைந்து பணியாற்றுவதற்கு நாங்கள் முனைப்பாக இருக்கிறோம். மேலும் அதிக அளவிலான திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும்.

> இப்படி நாம் இணைந்து நிறைவேற்றும் திட்டங்கள் குறித்து, இரண்டு முக்கியக் கருத்துக்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்.ஒன்று, இத்தகைய இணைத் திட்டங்களை மத்திய அரசு தொடங்கும்போது தனது நிதிப்பங்கை அதிகமாக அளித்தாலும், காலப்போக்கில் தனது பங்கினைக் குறைத்து, மாநில அரசு செலவிட வேண்டிய நிதிப் பங்கை உயர்த்தும் நிலையைப் பார்க்கிறோம்.

> இரண்டாவது, மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்போடு, பயனாளிகளின் பங்கையும் முன்னிறுத்தி, பல திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இதில் அந்தத் தொகையை பயனாளிகள் செலுத்த முடியாதபோது, மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிற மாநில அரசுகள்தான் பயனாளிகளின் பங்களிப்பையும், சேர்த்து செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மாநில அரசின் நிதிச் சுமை அதிகரிக்கிறது.

> எனவே, மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் மத்திய அரசின் பங்கானது, திட்டம் முடியும்வரை தொடர வேண்டும் என்றும், பயனாளிகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களில், அவர்கள் தமது பங்களிப்பை செலுத்த முடியாதபோது மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து அதனை சமமாக ஏற்கவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறினார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் சார்பில் 5 கோரிக்கைகளை முன்வைத்தார். அதன் விவரம்:

"தமிழகத்திற்கு பிரதமர் வருகை தந்திருக்கும் இந்த நேரத்தில், மேலும் சில முக்கியமான கோரிக்கைகளைத் தமிழக மக்களின் சார்பில் முன் வைக்க விரும்புகிறேன்.

> தமிழகத்தின் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கியப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் கச்சத்தீவினை மீட்டெடுத்து தமிழக மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த தருணம் என்பதை பிரதமருக்கு நான் நினைவுப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

> 15-5-2022 அன்று வரை தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையானது 14 ஆயிரத்து 6 கோடி ரூபாய். இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

> பல்வேறு மாநிலங்களின் வருவாயானது முழுமையாக சீரடையாமல் இருக்கக்கூடிய நிலையில், ஜிஎஸ்டி இழப்பீட்டுக் காலத்தை ஜூன் 2022-க்குப் பின்னரும், குறைந்தது அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து தரவேண்டும் என்றும் நான் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வற்புறுத்திக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

> பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய், உலகச் செம்மொழிகளில் இன்றளவும் சீரிளமைத் திறத்துடன் உயிர்ப்போடு விளங்கும் தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்.

> இறுதியாக, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) முறையைத் தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இது குறித்து சட்டம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கான அனுமதியை, விரைந்து வழங்கிட பிரதமரை இந்தத்தருணத்தில் தமிழக மக்கள் அனைவரின் சார்பில் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இக்கோரிக்கைகளில் இருக்கக்கூடிய நியாயத்தை பிரதமர் உணர்வார் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.



Read in source website

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான தமிழ்நாடு ஓட்டலில் தங்கும் அறைகள், உணவுக் கூடம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று கூறியதாவது:

கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில், சாகச சுற்றுலாஉள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளரூ.1.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னவனூரில் சுற்றுலா துறைக்கு 5 ஏக்கர் பரப்பளவில் வருவாய்த் துறையினர் ஒதுக்கி உள்ள இடத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை தொடங்க இறங்குதளம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளின் திட்ட அறிக்கைகள் தயார்செய்யப்பட்டு வருகிறது. விரைவில் ஹெலிகாப்டர் சேவைதொடங்க முயற்சி எடுக்கப்பட்டுஉள்ளது என்றார்.



Read in source website

திருச்சி: தமிழகத்தில் அரசு இசைப்பள்ளிகளில் இசைப் படிப்புகளை முடித்தவர்களுக்கு அரசுப் பணி அல்லது சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதாக இசைக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இசைக்கல்வியை பரவலாக்குதல், மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்துதல், சிறந்த இசைக் கலைஞர்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத்துறையின் கீழ் தமிழகத்தில் திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், சீர்காழி உள்ளிட்ட 17 இடங்களில் அரசு இசைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு குரலிசை, நாகஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் படிப்பு கற்றுத் தரப்படுகின்றன.

இந்த பள்ளியில் சேர குறைந்தபட்சம் 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாகஸ்வரம், தவில் மற்றும் தேவாரம் ஆகிய படிப்புகளுக்கு எழுதப்படிக்கத் தெரிந்திருத்திருந்தால் போதுமானது.

இந்த பள்ளிகளில் இசைப் பயிற்சியை முடித்த ஆயிரக்கணக்கானோர் கோயில்களில் (அரசுப் பணியில்) பணியில் சேர்ந்துள்ளனர். மேலும், தனியாக கச்சேரிகள்(சுயதொழில்) நடத்தியும் வருகின்றனர். இப்பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான சேர்க்கை மே 23-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) என்.ராஜேஸ்வரி ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10 மாதங்களுக்கு தலா ரூ.400 வீதம் ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தொலைதூரத்திலிருந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு விடுதி வசதியும், இலவச பேருந்து பயண அட்டையும் வழங்கப்படுகிறது.

அனைத்து அரசு இசைப் பள்ளிகளிலுமே அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்த, தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, இசைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக இங்கு சேரும் மாணவ, மாணவிகள் 3 ஆண்டுகள் படிப்பை முடித்து விட்டு வெளியே செல்லும் போது, சிறந்த இசைக் கலைஞர்களாகவே செல்கின்றனர்.

இங்கு பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு கோயில்கள், பள்ளிகளில் உள்ள அரசுப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுபோன்று ஏராளமான கலைஞர்கள் கோயில்களில் பணியில் சேர்ந்துள்ளனர்.

மேலும், சுயமாகவும், குழுவாகவும் சேர்ந்து சுப நிகழ்ச்சிகள், கோயில்களில் இசைக் கச்சேரிகள் நடத்தியும், தனியாக பயிற்சி மையங்களை அமைத்து சுயதொழிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசுப் பணிக்கும், சுயதொழிலுக்கும் வாய்ப்பளிக்கும் இசைக் கல்வியை கற்க இசையில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து பயனடைய வேண்டும் என்றார்.



Read in source website

ராமநாதபுரம்: நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர் சி.எம்.பாண்டியராஜ் காலமானார்.

ராமநாதபுரம் பட்டிணம் காத்தான் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் சி.எம்.பாண்டியராஜ் (97). இவர் மலேசியா நாட்டில் தனது பெற்றோருடன் வசித்தபோது, 17 வயதில் 1943-ம் ஆண்டில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) சேர்ந்து பணியாற்றினார். 1945-ல் ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்டதால் ஐஎன்ஏ படைக்கு போதிய ஆயுத உதவி கிடைக்கவில்லை. அப்போது பிரிட்டிஷ் படைகள் மலேசியாவை கைப்பற்றி, ஐஎன்ஏ வீரர்களை கைது செய்தது. இதில் சி.எம்.பாண்டியராஜ் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் மலேசி யாவின் அலோஸ்கா சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ராமநாதபுரம் திரும் பினார். இவர் அகில இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் அமைப்பின் ராமநாதபுரம் மாவட்டப் பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தார். இவருக்கு மனைவி, 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

வயோதிகம் காரணமாக ராமநாதபுரத்தில் மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த சி.எம்.பாண்டியராஜ் நேற்று முன்தினம் இரவு காலமானார். ராமநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் மற்றும் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று மாலை ராமநாதபுரம் நகராட்சி அல்லி கண்மாய் மின்மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.



Read in source website

சென்னை: தமிழ்வழிச் சான்று உள்ளிட்ட 25 வகையான பள்ளி ஆவணங்களை ஆன்லைனில் பெறுவதற்கான வசதியை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.

தமிழக பள்ளிக்கல்வியில், வரும் கல்வியாண்டுக்கான (2022-23) நாட்காட்டி வெளியீடு மற்றும் ஆன்லைன் சேவைகள் தொடக்க விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:

தமிழ்வழியில் படித்தமைக்கான சான்று, கல்வி இணைச் சான்று உள்ளிட்ட 25 வகையான சான்றிதழ்களை, இ-சேவை மையங்கள் வாயிலாக ஆன்லைனில் பெறுவதற்கான வசதி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

பதிவேடுகள் மின்மயமாக்கல்

அதேபோல், ஆசிரியர்களின் நிர்வாகப் பணியைக் குறைக்க 100-க்கும் மேற்பட்ட பதிவேடுகளை மின்னணுமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முதல்கட்டமாக 30 பதிவேடுகள் மின்மயமாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதேபோல் வரும் கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுப்பு விவரங்கள் அடங்கிய நாட்காட்டி, ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான அட்டவணை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஆசிரியர்கள், மாணவர்கள், திட்டமிட்டு தங்கள் பணிகளை மேற்கொள்ள வழி செய்யும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார், தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து அமைச்சர் கூறியதாவது:

பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் மாணவர்களுக்கான புத்தகம், சீருடை உள்ளிட்ட இலவசக் கல்வி உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படும். அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட இருமடங்கு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஆராய்ந்து தேர்வெழுதாத மாணவர்களைச் சந்தித்து அவர்களை உத்வேகப்படுத்தி, துணைத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் கல்வியாண்டில் நீட் தேர்வு பயிற்சிக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உட்பட 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகளிலேயே உள்ள ஹைடெக் ஆய்வகம் மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

காலை சிற்றுண்டி திட்டம்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்துக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. பள்ளிகளில் காலை 8.30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார்.

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, பணி நிரந்தரம், தொழிற்கல்வி, உடற்கல்வி ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அரசின் நிதிநிலை சீரான பின்னர் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Read in source website

உக்ரைன் போர் மட்டுமின்றி காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் இந்த ஆண்டு கோதுமை உற்பத்தியும், அதன் தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷனில் வழங்கப்படும் கோதுமை இனி அரிசியாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் வட இந்திய மாநிலங்களில் சாதாரண குடும்பங்களில் பயன்படுத்தப்படும் சப்பாத்தி என்பது அரிதான ஒன்றாகும் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய் ரேஷன் முறையில் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பாதிப்பும் இந்தியாவிலும் கடுமையாக எதிரொலிக்கிறது.

சமையல் எண்ணெயை தொடர்ந்து இந்தியாவில் கோதுமை மற்றும் கோதுமைப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு வட இந்தியாவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வரலாறு காணாத வெப்பம் நிலவியது. இதனால் கோதுமை விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கோதுமை விளைச்சல் சுமார் 5 சதவிகிதம் குறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேசத்தில் இந்த முறை கோதுமை மகசூல் 15-25 சதவிகிதம் குறைந்துள்ளது.

கோதுமை மாவின் தரம்

இந்தியாவில் இந்த ஆண்டு கோதுமை விளைச்சல் 100 மில்லியன் டன்களைத் தாண்டினாலே அது அதிர்ஷ்டமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் மத்திய அரசோ இந்த ஆண்டு 111 மில்லியன் டன்கள் கோதுமை அறுவடை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போதையை நிலவரப்படி 10 மில்லியன் டன்கள் குறைவாகவே அறுவையாகும் எனத் தெரிகிறது.

இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு, ஒரு கிலோ இந்திய கோதுமையில் சுமார் 770 கிராம் மாவு கிடைத்தது. இந்த ஆண்டு, அது 720 கிராமாக குறைய வாய்ப்புள்ளது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பமான மார்ச் மாதத்தில் தானிய உற்பத்தி குறைந்துள்ளது.

உண்மையில் வணிகர்கள் கோதுமையை வாங்கி மாவாக மாற்றி பின்னர் விற்பனை செய்கிறார்கள். சாதாரணமாக கோதுமையில் இருந்து மாவாக மாற்றப்படும்போது கிடைக்கும் அளவு மற்றும் தரம் என்பது மிகவும் முக்கியம். இது சர்வதேச தர நிர்ணயத்திற்கும் குறைவாகவே உள்ளது.

ஹெக்டோலிட்டர் சோதனையில் 76-க்கும் குறைவாக இருப்பது குறைவான அளவீடாகும். தற்போது, நல்ல கோதுமை தட்டுப்பாடு காரணமாக 72 என்ற குறைவான அளவீடுகளை தான் இந்திய கோதுமை பெறுவதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரேஷன் கொள்முதல்

இந்தியாவில் 110 மில்லியன் டன்கள் கோதுமை அறுவடை செய்யப்பட்டு அதில் 15 மில்லியன் டன்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அவ்வாறு 15 மில்லியன் டன்கள் கோதுமை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டால் இந்தியாவில் கோதுமைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை நிர்ணயித்துள்ளது. இதனால் ஏற்றுமதி குறையும் என்றே தெரிகிறது. ஆனால் உலக நாடுகளுக்கே இந்தியா உணவு வழங்கும் என பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கூறினார். ஆனால் அந்த உறுதியை இந்த ஆண்டு நிறைவேற்ற முடியாமல் போகக்கூடும்.

எகிப்து உள்ளிட்ட நாடுகளுடன் அரசும்- அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் சுமார் 10 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இருப்பினும் இது மத்திய அரசின் பேச்சுவார்த்தையை பொறுத்தது.

உக்ரைன் போர்

கோதுமை விலை உயர்வுக்கு உலகளாவிய காரணங்களும் உள்ளன. பிப்ரவரி இறுதியில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக உலகில் இந்தியாவின் கோதுமைக்கான தேவை மேலும் அதிகரித்தது. கடந்த பிப்ரவரி மாத பிற்பகுதியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியதில் இருந்து கருங்கடல் பகுதியில் இருந்து கோதுமை ஏற்றுமதி குறைந்ததை அடுத்து, உலகளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

உலக அளவில் கோதுமைக்கு தேவை ஏற்பட்டதால் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து கோதுமை வாங்கும் பல நாடுகள் மற்ற நாடுகளை நாடின. உலகளாவிய கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் முப்பது சதவிகிதம் பங்கு வகிக்கிறது. இதனால் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அதிகஅளவு கோதுமை ஏற்றுமதி ஆகும் சூழல் ஏற்பட்டது.

கோதுமை விலை உயர்வு

உலக அளவில் கோதுமை உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி கடந்த 2 மாதங்களாகவே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கோதுமைக்கான தேவை உயர்ந்து விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான இந்திய உணவுக் கழகம் 43 மில்லியன் மெட்ரிக் டன்கள் கோதுமையை கடந்த ஆண்டு கொள்முதல் செய்தது. இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி மத்திய அரசிடம் 19 மில்லியன் டன் கோதுமை இருப்பு இருந்தது. கடந்த ஆண்டு போதிய அளவு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு விட்டதால் இந்த ஆண்டு 19.-20 மில்லியன் டன்கள் கோதுமை மட்டுமே கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

கரோனா காலம்

ஆனால் கடந்த ஆண்டு இதன் இருப்பு கணிசமாகவே குறைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றுக் காலத்தில் மக்களுக்கு இலவசமாக கோதுமை மத்திய அரசு வழங்கியது. இதனால் இந்திய உணவுக்கழகத்தின் தானியக்கிடங்குகளில் கோதுமை கையிருப்பு என்பது கணிசமாக குறைந்துள்ளது.

பிரதான் மந்திரி கரிப் அன்ன கல்யாண் யோஜனா திட்டத்தை 2022 செப்டம்பர் வரை நீட்டித்தது. முந்தைய கொள்முதல் மூலம் மிச்சம் இருக்கும் கோதுமையின் அளவை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கோதுமை வாங்கும் நிலை பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ளது.

ஆனால் உலகம் முழுவதுமே கோதுமைக்கு தேவை ஏற்பட்டுள்ளதால் அதிகஅளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி வாய்ப்பால் தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு கோதுமையை வாங்குவதால் விவசாயிகள் அரசு கொள்முதலுக்கு தருவதை குறைத்துக்கொண்டனர். இதனால் அரசின் கையிருப்பும் ஒரளவு குறைந்துள்ளது.

இந்த சூழலில் இந்த ஆண்டு இலக்கான 19.5 மில்லியன் டன்கள் கோதுமையை கொள்முதல் செய்வதே பெரும் சவாலாக இருக்கும் எனத் தெரிகிறது. தற்போது இந்திய உணவுக்கழக சேமிப்பு கிடங்குகளில் 30 மில்லியன் டன்கள் கோதுமை கையிருப்பதாக உள்ளது.

கரோனா தொற்று காலத்தில் வழங்கப்பட்ட இலவச தானியங்கள் திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டால் கையிருப்பில் பெரும்பாலும் பொது விநியோகத்திற்குச் செல்லும். உள்நாட்டில் வெளிச்சந்தையில் கோதுமை செல்வது தடைப்படும். இதனால் வெளிச்சந்தையில் கோதுமை விலை உயர்வதுடன் வர்த்தகர்கள் பதுக்கலில் ஈடுபடும் ஆபத்தும் உள்ளது. டெல்லியில் ஏற்கெனவே வர்த்தகர்கள் கோதுமையை பதுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கோதுமைக்கு பதில் அரிசி?

இந்த நெருக்கடியை சமாளிக்க பதுக்கலை தடுக்கவும், வெளிச்சந்தையில் கோதுமை விலை உயராமல் தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கூடும். இதுமட்டுமின்றி பொது விநியோகத்திட்டத்துக்கு செல்லும் கோதுமையின் அளவையும் குறைக்கலாம்.

அதற்கு பதில் அதிக அரிசியை மானிய பொது விநியோக அமைப்பின் மூலம் விநியோகிக்கலாம். அப்படி செய்தால் வட இந்தியாவில் சாதாரண குடும்பங்களில் சப்பாத்தி என்பது அரிதான பொருளாகி விடக்கூடும். வட இந்திய உணவில் அரசியை விடவும் சப்பாத்தி என்பது அவசியமான ஒன்றாக இருப்பது முக்கியமானது.

கருங்கடலில் ரஷ்ய ஏற்படுத்தியுள்ள முற்றுகையை உடைத்து அல்லது பேச்சுவார்த்தை நடத்தி உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கான பாதுகாப்பு பாதை திறககப்பட்டதால் உலக அளவில் தட்டுப்பாடு குறையும். இதனால் இந்தியாவிலும் கோதுமை தட்டுப்பாடு குறைய வாய்ப்புண்டு.

ஆனால் உலகளாவிய வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயரும்போது இந்தியாவில் சப்பாத்திக்கு சவால் ஏற்படவே செய்யும்.



Read in source website

தங்கம், நிலம், வீடு ஆகியவை நம் முதலீட்டில் முக்கிய அங்கம் வகித்தாலும் எளிமையான முதலீடு வங்கி முதலீடாக பார்க்கப்படுகிறது. வங்கியில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தொகையை பிக்ஸடாக முதலீடு செய்து அதில் இருந்து கிடைக்கும் வட்டியை பெறுவது என்பது பலரும் செய்யும் முதலீடாக உள்ளது. இதனை தாண்டி ரிஸ்க் எடுக்கக்கூடிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையை நோக்கிச் செல்கின்றனர். ஆனால் சரியான புரிதல் இல்லாமல், கண்காணிப்பு இல்லாமல் போனால் இந்த முதலீடு கையை கடித்து விடும் ஆபத்தும் உண்டு.

இந்தவகையில் வங்கி வட்டியை விட சற்றே அதிகமாக அதேசமயம் பாதுகாப்பான முதலீடுகளை பலரும் எதிர்பார்க்கின்றனர். இதில் ஒன்று கடன் பத்திரங்கள் உள்ளடக்கிய பாண்டுகள் ஆகும். இது நிலையான வட்டியை, வருவாயை கொடுப்பதுதான் அதன் சிறப்பு.



Read in source website

பாலியல் தொழிலும் ஒரு புரொஃபஷனல் (தொழில் முறை) தான் என்றும், அதில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த உத்தரவில், 'பாலியல் தொழிலும் ஒரு தொழிலே. அதை செய்வோருக்கும் சட்டத்தின் கீழ் சமமான மரியாதையும், பாதுகாப்பும் உண்டு. வயது வந்தோர் இருவர் அல்லது பாலியல் தொழிலாளியுடன் உவந்து உறவில் ஈடுபடுவோர் மீது போலீஸ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் வந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பல முக்கிய உத்தரவுகளை முன்வைத்துள்ளனர். அதன் விவரம்:

1. பாலியல் தொழிலாளர்களும் சட்டத்தின் பாதுகாப்பை பெற தகுதியானவர்களே. கிரிமினல் சட்டமானது எல்லோர் மீதும் சமமாக பயன்படுத்தப்பட வேண்டியது. அதனால் வயது, பரஸ்பர சம்மதம்... இது பாலியல் தொழிலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

2. இரண்டு வளர்ந்த நபர்கள் (18 வயதுக்கு மேற்பட்டோர்) பரஸ்பர சம்மதத்துடன் ஈடுபடும் உறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது. அவர்கள் மீது போலீஸ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க இயலாது.

3. பாலியல் தொழில் கூடங்களை ரெய்டு செய்யும்போது பாலியல் தொழிலாளிகளை கைது செய்வதோ, அபராதம் விதிப்பதோ அவர்களை துன்புறுத்தவோ கூடாது.

4. தன்னார்வத்தில் செய்யும் பாலியல் தொழில் சட்டவிரோதம் அல்ல. ஆனால் பாலியல் கூடங்கள் நடத்துவது சட்டவிரோதம்.

5. ஒரு பாலியல் தொழிலாளியின் குழந்தையை அவரிடமிருந்து பிரிக்கக் கூடாது. அவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பது, அதற்கு தகுந்த காரணம் அல்ல. மனிதர்களின் மாண்பைப் பாதுகாத்தல் என்பது பாலியல் தொழிலாளிகளுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் பொருந்தும். ஒரு குழந்தை, பாலியல் தொழிலாளியுடன் வாழ்ந்து வந்தால் அந்தக் குழந்தை கடத்தப்பட்ட குழந்தையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒருவேளை அதில் சந்தேகம் ஏற்பட்டால் குழந்தை, தாயின் மரபணுவை பரிசோதனை செய்து பார்க்கலாம். அதைவிடுத்து குழந்தையை வலுக்கட்டாயமாக பிரிக்கக் கூடாது.

6. பாலியல் தொழிலாளி என்பதால் அவர் கொடுக்கும் பாலியல் வன்கொடுமை புகார்களை ஏற்கக் கூடாது என்பதில்லை. அவர்களுக்கும் மருத்துவ, சட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

7. பாலியல் தொழிலாளிகள் மீதான காவல்துறையின் அணுகுமுறை எப்போதுமே கடுமையானதாக இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. சில நேரங்களில் காவல்துறையே அவர்களை வன்முறைக்கு உள்ளாக்குகிறது. இதில் காவல்துறையினருக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நீதிமன்றம் கருதுகின்றது.

8. அதேபோல் பாலியல் கூடங்களில் ரெய்டு நடந்தால், அதனை ஊடகங்கள் ஒளிபரப்பும்போது கவனமாக இருக்க வேண்டும். கைது அல்லது மீட்புப் பணிகளின் போது பாலியல் தொழிலாளியின் அடையாளம், பெயர் எக்காரணம் கொண்டும் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

9. மத்திய, மாநில அரசுகள் பாலியல் தொழில் சட்டங்களை இயற்றினால், அப்போது பாலியல் தொழிலாளிகளின் கருத்தையும் கேட்டறிய வேண்டும்.

10. அதேவேளையில், பார்வை மோகம் (வாயரிஸம்) என்பது கிரிமினல் குற்றம் என்பதில் நீதிமன்றத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை.



Read in source website

அமலாபுரம்: ஆந்திராவில் கோனசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர், எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர்.

ஆந்திராவில் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோனசீமா என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவானது. இதற்கு அமலாபுரம் மாவட்ட தலைநகராக அறிவிக்கப்பட்டது.

2 மாதங்கள் கழித்து இந்த மாவட்டத்துக்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என பெயர் சூட்ட அரசு பரிசீலனை செய்வதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மக்கள் தங்களது கருத்தை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதனால், மிகவும் அமைதியான மாவட்டம் என பெயர் எடுத்திருந்த அமலாபுரத்தில் திடீரென புரட்சி வெடித்தது. அம்பேத்கர் பெயர் சூட்ட அப்பகுதியினரும் எதிர்க்கட்சியினரும் ஆட்சேபம் தெரிவித்தனர். மெல்ல, மெல்ல இது அரசியல் சாயம் பூசப்பட்டு போராட்டமாக உருவெடுத்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் அமலாபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க சில அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர். அம்பேத்கரின் பெயரை சூட்டக்கூடாது என்பது இவர்களின் வாதமாகும். இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், திடீரென இந்த கண்டன ஊர்வலம் போராட்டக் களமாக மாறியது. அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால், போலீஸார் அவர்களை விரட்டி அடித்தனர். இந்த சமயத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸார் மீது கற்களை வீசினர். இதைத்தொடர்ந்து போலீஸார் 5 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

எஸ்பி உட்பட 20 போலீஸார் காயம்

இதனிடையே, ஆந்திர அமைச்சர் விஸ்வரூப் மற்றும் மும்மிடிவரம் எம்.எல்.ஏ. சதீஷ்குமார் வீடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் கார்களில் தப்பி உயிர் பிழைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்பி சுப்பா ரெட்டி, உதவி எஸ்பி லதா மாதுரி, டிஎஸ்பி மாதவ ரெட்டி உட்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும், ஊடகவியலாளர் சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டது. 3 அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.

46 பேர் கைது, 144 தடை உத்தரவு

இது தொடர்பாக சுமார் 130 பேர் மீது அமலாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 46 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடும் பணியில் 10 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது கோனசீமா மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தைப் பிரிக்கும்போதே அம்பேத்கர் பெயரை சூட்டி இருந்தால் இது போன்ற வன்முறை நடந்திருக்காது என ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கூறியுள்ளார். இது வேண்டுமென்றே மக்களை தூண்டும் செயல் எனவும், போலீஸாரின் அலட்சியப் போக்கே வன்முறைக்கு காரணம் என்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.



Read in source website

பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ஸ்பெயின் நாட்டு டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால். இத்துடன், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 300 வெற்றிகளை அவர் பதிவு செய்து புதிய மைல் கல்லையும் எட்டியுள்ளார்.

35 வயதான நடால், டென்னிஸ் விளையாட்டு உலகில் ஆடவர் பிரிவுக்கான தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

இந்நிலையில், அவர் நடப்பு ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் தொடரில் பங்கேற்றுள்ளார். இது கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்று. இதுவரை அவர் 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அதில் அதிகபட்சமாக பிரெஞ்சு ஓபன் தொடர் பட்டத்தை 13 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் நாட்டு வீரர் கோரன்டின் மவுடெட்டை எதிர்த்து விளையாடினார் நடால். அவரை 6-3, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 300 வெற்றிகளைப் பதிவு செய்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார் நடால்.

இதற்கு முன்னதாக ரோஜர் ஃபெடரர் 369 வெற்றிகளையும், ஜோகோவிச் 324 வெற்றிகளையும் கிராண்ட் ஸ்லாம் ஆட்டங்களில் பதிவு செய்துள்ளனர். நடால் இந்த வரிசையில் இணைந்துள்ள மூன்றாவது வீரராக உள்ளார். நெதர்லாந்து வீரர் போடிக் வேன் டி ஸான்ஷுல்புடன் உடன் மூன்றாவது சுற்றில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார் நடால்.



Read in source website

டெக்சாஸ்: அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞரை போலீஸார் சுட்டுத் தள்ளினர்.

அமெரிக்காவில் அவ்வப்போது பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடக்கின்றன.

இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தின் உவால்டே நகரில் ராப்என்ற பெயரில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 600 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்பள்ளி வளாகத்துக்கு நேற்றுமுன்தினம் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து அங்கிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தார். இதனால் பயந்து போன மாணவர்கள் அலறியடித்தபடி வெளியே தப்பியோடினர். இளைஞர் சரமாரியாக சுட்டதில் பல மாணவர்கள் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர்கள் சிலரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான போலீஸார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் அந்த பள்ளி வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் பள்ளிக்குள் நுழைந்து இளைஞரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்த இளைஞர் இறந்தார். துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு ஆசிரியர் உள்பட 2 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதன்மூலம் துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 21 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். குண்டு காயம்அடைந்த மாணவர்கள் பலரைபோலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளி வளாகத்தில் குவிந்தனர். குழந்தைகளை இழந்த பெற்றோர் அங்கு கதறி அழுதவண்ணம் இருந்தனர். விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் அதே பகுதியை சேர்ந்த சால்வடார் ராமோஸ் என்பது தெரியவந்தது. 18 வயதான இவர் தனது பாட்டியை வீட்டில் வைத்து கொலை செய்துவிட்டு பின்னர் பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். அவர் ஏன் பள்ளிக்குள் நுழைந்து சிறுவர்களை சுட்டார் என்பதும் தெரியவில்லை.

ஜோ பைடன் அதிர்ச்சி

இந்த சம்பவம் குறித்து அறிந்தஅமெரிக்க அதிபர் ஜோபைடன் கடும் அதிர்ச்சி தெரிவித்தார். இறந்தசிறுவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக அவர்குறிப்பிட்டார். குவாட் மாநாட்டுக்காக ஜப்பான் சென்றிருந்த அவர் நேற்று அமெரிக்கா திரும்பினார். அப்போது அதிபர் ஜோபைடன் கூறும்போது, ‘கடவுளின் பெயரால் நாம் எப்போது துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நிற்கப்போகிறோம்? இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் உலகில் வேறு எங்கும் அரிதாகவே நடக்கின்றன. துப்பாக்கி சூடு சம்பவங்களுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும்” என்றார்.

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் விதமாக அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளவெள்ளை மாளிகை மற்றும் மற்ற அரசு கட்டிடங்களில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.

சமூக வலைதளத்தில் தகவல்

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு தாக்குதல் குறித்து உயிரிழந்த இளைஞர் ராமோஸ் தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்கூட்டியே தகவல் பகிர்ந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. முன்னதாக ராமோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கிகளுடன் செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதையடுத்து முன்பின் தெரியாத ஒரு பெண்ணை இன்ஸ்டாகிராமில் டேக் செய்துள்ள ராமோஸ், ஒருரகசியம் இருப்பதாக அவருக்குகுறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 5.43 மணிக்கு, தான் ஒரு செயலை செய்யப்போவதாக மீண்டும் அப்பெண்ணுக்குஅவர் செய்தியும் அனுப்பியுள்ளார்.

- பிடிஐ



Read in source website

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று நிதியமைச்சராக பொறுப்பேற்றார். இலங்கையில் ஏற்பட்ட கடும்பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதையடுத்து மகிந்த ராஜக்பச, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தனது வீட்டை மக்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதால், அவர் திரிகோணமலை கடற்படை தளத்துக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்றார்.

பொருளாதார நெருக்கடி சூழலை சமாளிக்க அனைத்து கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச திட்டமிட்டார். அதனால், 5 முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, புதிய பிரதமராக கடந்த 12-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் வெளிநாடுகளுடன் பேசி,இலங்கைக்கு எரிபொருள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டார். அரசியல் சாசனத்திலும் சீர்திருத்தத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இடைக்கால பட்ஜெட் தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்து கட்சிகளையும் சார்ந்துள்ளார். வெளிநாட்டு க டன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், திவால் அறிப்பை இலங்கை கடந்தமாதம் வெளியிட்டது. இந்நிலையில இலங்கை அமைச்சரவை கடந்த 20-ம் தேதி விரிவுபடுத்தப்பட்டது. அப்போது கல்வி, துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து, சுகாதாரம், நீதித்துறை, வர்த்தகம் போன்ற துறைகளில் 9 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அப்போது நிதியமைச்சர் நியமிக்கப்படவில்லை.

இதையடுத்து கடந்த 23ம் தேதி, அமைச்சரவை இரண்டாவது முறையாக விரிவுபடுத்தப்பட்டது. அப்போது 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் ஆளும் லங்காபொதுஜன பெரமுன கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், இலங்கை சுதந்திர கட்சி, தமிழர்களின் ஈழம் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அப்போதும் நிதியமைச்சர் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, நிதியமைச்சராக அதிபர் கோத்தபயராஜபக்ச நேற்று நியமித்தார். இதையடுத்து அவர் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இத்துறையின் கீழ், நிதி, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் வருகின்றன.



Read in source website

உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த தகவலையும் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று சாத்தியப்படுத்தி இருக்கிறது தொழில்நுட்பம். ஆனாலும் தங்களிடம் இருக்கும் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என அரசு நிறுவனங்கள் மக்களுக்கு நம்பிக்கையளித்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணப்பரிமாற்றத்தில் பல தில்லுமுல்லுகளும் நடத்தப்படுகின்றன.

விழித்திருக்கும் போதே ஆடையை உருவிக்கொண்டோடும் கதையாக வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை வாங்கி, அவரது கணக்கிலிருந்தே பணம் பறிக்கும் சம்பவங்கள் அன்றாட செய்திகளாகிவிட்டன. இந்த நிலையில், தனிநபர் வருமானம் தொடர்பாக வருமான வரித் துறையில் இருக்கும் தகவல்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பானது, எப்போது எல்லாம் வருமான வரித் துறையில் இருந்து விளக்கம் கேட்டுக் கடிதம் வரும், அதை எப்படி அறிந்து கொள்வது, தனிநபர் தகவல்களை வருமான வரித் துறை எவ்வாறு பாதுகாக்கிறது?



Read in source website

ஆயுள் காப்பீடு எனப்படும் வாழ்க்கைக்கான இன்சூரன்ஸ் திட்டம் குறித்து தற்போது பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆயுள் காப்பீடு எடுக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. ஆயுள் காப்பீடு என்று கூறினாலும் பல்வேறு இன்சூரன்ஸ் திட்டங்கள் நம் முன் உள்ளன. இதில் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் முக்கியமானது.

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் பாலிசிதாரருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான நிதிக் காப்பீடு வழங்குகிறது. அந்தகாலத்தில் அவர் இறந்தால் யாரை வாரிசுதாரராக நியமித்து இருக்கிறாரோ அவருக்கு அல்லது அந்த குடும்பத்துக்கு அந்த தொகை வழங்கப்படும். இருப்பினும் பாலிசி காலம் முடிந்துவிட்டால் மற்ற காப்பீடுகளில் உள்ளது போன்று கட்டிய தொகை திரும்பி வராது. அதாவது இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதை முதலீடாக கருதாமல் அதனை எதிர்கால பாதுகாப்பு என்ற நோக்கில் எடுக்கப்படுவதாகும்.

மற்ற பல பாலிசிகளை ஒப்பிடுகையில் இதற்கான பிரிமியம் மிக குறைவாகவே இருக்கும். அதேசமயம் உயரிழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் தொகை மிக அதிகமாகவும் இருக்கும்.

உதாரணமாக 25 வயது நபர் ஒரு கோடி ரூபாய் பாலிசி திட்டத்தை தேர்ந்தெடுத்தால் அவர் கட்டவேண்டிய டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம் ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 என்ற அளவில் மட்டுமே இருக்கும். அவர் இறந்து விட்டாலோ கிடைக்கும் தொகை ஒரு கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிசிதாரர்கள் இறந்தாலும் அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும். ஒருவர் செலுத்தும் பிரீமியம் வயது, பாலினம், கால அளவு, உறுதியளிக்கப்பட்ட தொகை மற்றும் பல காரணிகளைப் பொறுத்து மாறக்கூடியது.

கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன?

50 லட்சத்திற்கும் குறைவான கவரேஜ் தொகைக்கு பல நிறுவனங்கள் உடல்நலப் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என அறிவித்துள்ளன.

உங்கள் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தில் critical illness coverage இருந்தால், உங்கள் திட்டத்தில் கவர் செய்யப்பட்டுள்ள முக்கிய நோய்கள் (critical illness) உங்களுக்கு இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான தொகை செலுத்தப்படும். இதற்கு நீங்கள் செலுத்தும் பிரிமீயத்தில் கூடுதலாக ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது.

இதுபோலவே விபத்தால் மரணம் ஏற்பட்டால் உங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க Accidental death benefit வசதியும் டேர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களிலும் உள்ளது. இதனை தேர்வு செய்தால் அதற்கான பயனை பெறலாம். பல நிறுவனங்கள் வழக்கமான மரணத்திற்கு வழங்கப்படும் தொகையை விடவும், விபத்து மரணத்துக்கு 2 மடங்கு தொகையை வழங்குகின்றன.

வருமான வரி விலக்கு

வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், செலுத்தப்பட்ட பிரீமியங்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளையும் டேர்ம் பிளான்கள் வழங்குகின்றன. கூடுதலாக, திட்டத்தின் கீழ் பெறப்படும் பலன்கள் பிரிவு 10 (10D) இன் கீழ் வரியற்றதாகக் கருதப்படுகிறது.



Read in source website

வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் அனைத்து வசதிகளையும் இருந்த இடத்தில் இருந்து பெறும் நிலை வந்துவிட்டது. இனி வரும் காலங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கர்நாடகாவில் பல அதி நவீன வசதிகளுடன் ஸ்மார்ட் பேருந்து நிறுத்தங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் அமையவுள்ளது.

பெருங்களூரு நகரத்தில் ஆனைக்கல் தாலுக்காவில் எலெக்ட்ரானிக் சிட்டி உள்ளது. இந்த நகரத்தின் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. இதன் காரணமாக இந்த நகரத்தை மேம்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரானிக் சிட்டி தொழில் நகர குழுமம் நவீன பேருந்து நிறுத்தங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

நியோ மெட்ரோ ரயில் திட்டத்துடன் இணைந்து இந்த அதி நவீன பேருந்து நிறுத்தங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டள்ளது. முதல் கட்டமாக 3 இடங்களில் இதுபோன்ற பேருந்து நிறுத்தங்கள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும், மாதிரிப் படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன பேருந்து நிறுத்தத்தின் உள் பகுதியில் ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் எந்திரம், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, எடை பார்க்கும் எந்திரம், சார்ஜிங் பாயின்ட், டிஜிட்டல் தகவல் பலகை ஆகியவை அமைக்கப்படவுள்ளன. பேருந்து நிறுத்தத்தின் இரண்டு புறங்களிலும் அவரச கால எஸ்ஓஎஸ் பட்டன்கள், குடிநீர் வசதி ஆகியவை இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்பகுதியின் ஒரு புறத்தில் சைக்கிள் நிறுத்தம், மறுபுறம் குப்பைத் தொட்டிக்கள் இடம்பெற்றுள்ளன. சைக்கிள் நிறுத்தம் இடத்தில் செங்குத்து தோட்டம் அமையும்.

பேருந்து நிறுத்தத்தின் மேல்புறத்தில் சிசிடிசி கேமரா, பொது அறிவிப்பு வசதி, வானிலை மற்றும் காற்றின் தரம் குறித்த அறிக்கை, சூரிய ஒளி மின் தகடுகள், ஏர் ப்யுரிபயர் ஆகியவை இடம்பெறும். 2 கட்டமாக மொத்தம் 15 பேருந்து நிலையங்களை அமைக்க எலக்ட்ரானிக் சிட்டி தொழில் நகர குழுமம் திட்டமிட்டள்ளது. நவீன, பாதுகாப்பான, அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்களாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

பாரதிய பழங்குடியினக் கட்சி (BTP),நான்கு மாநிலங்களில் உள்ள 39 மாவட்டங்களை மட்டும் தனியாக பிரித்தெடுத்து, பில் பிரதேசம் என்கிற தனி மாநிலத்தை உருவாக்கிட கோருகிறது.

மேற்கு இந்தியாவில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கான தனி மாநில கோரிக்கை “பில் பிரதேசம்”, நீண்ட நாள்களுக்கு பிறகு மீண்டும் எழுந்துள்ளது. கோரிக்கைக்கான காரணம் என்ன? என்பதை இங்கே காணலாம்.

பில் பிரதேசம் என்றால் என்ன?

குஜராத்தை தளமாகக் கொண்ட பாரதிய பழங்குடியினக் கட்சி (BTP),நான்கு மாநிலங்களில் உள்ள 39 மாவட்டங்களை மட்டும் தனியாக பிரித்து, பில் பிரதேசம் என்கிற தனி மாநிலத்தை உருவாக்கிட கோருகிறது. அதில், குஜராத்தில் 16, ராஜஸ்தானில் 10, மத்தியப் பிரதேசத்தில் ஏழு மற்றும் மகாராஷ்டிராவில் ஆறு மாவட்டங்களும் அடங்கும்.

BTP ராஜஸ்தான் தலைவர் டாக்டர் வேலாராம் கோக்ரா கூறுகையில், சமூக சீர்திருத்தவாதியும் ஆன்மீகத் தலைவருமான கோவிந்த் குரு, 1913 ஆம் ஆண்டு மன்கர் படுகொலைக்குப் பிறகு பழங்குடியினருக்கான தனி மாநில கோரிக்கையை முதலில் எழுப்பினார். நூற்றுக்கணக்கான பில் பழங்குடியினர் பிரிட்டிஷ் படைகளால் நவம்பர் 17, 1913 அன்று ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லையில் உள்ள மன்கர் மலைகளில் கொல்லப்பட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு, பில் பிரதேசத்திற்கான கோரிக்கை மீண்டும் எழுப்பப்பட்டுவதாக தெரிவித்தார்.

பழங்குடியினருக்கு ஏன் தனி மாநிலம் வேண்டும்?

கோக்ரா கூறுகையில், முன்பு ராஜஸ்தான், குஜராத்தில் உள்ள துங்கர்பூர், பன்ஸ்வாரா, உதய்பூர் பகுதிகளை போன்றவை ஒரே அமைப்பின் பகுதியாக இருந்தது. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, பழங்குடியினரின் பெரும்பான்மையான பகுதிகள் அரசியல் கட்சிகளால் பிரிக்கப்பட்டன. இது, பழங்குடியினர் ஒன்றுகூடுவதை தடுத்தது.

பழங்குடியினருக்காக அரசாங்கங்கள் பல்வேறு சட்டங்கள், திட்டங்கள் இயற்றினாலும், அதனை கொண்டு சேர்ப்பதிலும், அமல்படுத்துவதிலும் கால தாமதம் தான் ஏற்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 244(1) பிரிவின் கீழ் ஐந்தாவது அட்டவணையின் கீழ் பழங்குடியினரின் நலன்களைப் பாதுகாத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆனால், இவை காங்கிரஸ் அல்லது பாஜகவாக யார் ஆளும் கட்சியாக இருந்தாலும், வெறும் உறுதிமொழிகளாகவே உள்ளன.

இந்தியாவின் அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக பாரம்பரிய கிராம சபைகள் மூலம் சுய நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக இந்திய அரசாங்கத்தால் 1996இல் இயற்றப்பட்ட சட்டம் தான் Provisions of the Panchayats.

இந்த சட்டத்தை 1999 இல் ராஜஸ்தான் அரசு ஏற்றுக்கொண்டது. அதன் விதிகளை 2011 இல் வெளியிட்டது. ஆனால் 25 வருடங்களாக துங்கர்பூரில் வசிக்கும் எனது கிராமமான பால்தேவல் மக்களுக்கு இச்சட்டம் பற்றி தெரியாது. பாஜக, காங்கிரஸின் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கூட சட்டம் பற்றி தெளிவான புரிதல் கிடையாது.

2020 டிசம்பரில் ராஜஸ்தான் ஜிலா பரிஷத் தேர்தல் முடிவுகளில் இருந்து காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு BTP கட்சியின் முக்கியதவத்தை அறிந்திருக்கக்கூடும். ராஜஸ்தானின் துங்கர்பூரில் BTP ஆதரித்த ஜிலா பிரமுக் வேட்பாளரை தோற்கடிக்க, ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவின் ZP உறுப்பினர்கள் இணைந்தனர். ஆனால், துங்கர்பூர் ஜிலா பரிஷத்தில் BTP ஆதரவு பெற்ற 13 சுயேச்சைகள் 27 இடங்களில் வெற்றிபெற்றனர். பாஜக மற்றும் காங்கிரஸ் முறையே 8 மற்றும் 6 இடங்களிலும் வெற்றி பெற்றன.

பில் பிரதேசத்திற்கான கோரிக்கை வலுப்பெறுகிறதா?

2017 ஆம் ஆண்டு குஜராத்தில் உருவாக்கப்பட்ட BTP கட்சியின் முக்கிய கோரிக்கை தனி மாநிலம் பில் பிரதேசத்தை உருவாக்குவது தான். இதற்காக பழங்குடியினரைத் திரட்டவும், விழிப்புணர்வைப் பரப்பவும் பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக கோக்ரா தெரிவித்தார்.

பழங்குடியின இளைஞர்கள் காங்கிரஸ், பாஜக இரண்டின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டனர். சமூக ஊடகங்கள் உதவியின் மூலம், உங்களுக்கான விஷயத்தை படித்து நீங்கள் உறுதிப்படுத்தலாம். அப்படி 75 ஆண்டுகளாக நாங்கள் எப்படி இருந்தோம் என்பதைப் பார்க்கும்போது, தனி பில் பிரதேசம் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.



Read in source website

சர்க்கரை ஏற்றுமதி கட்டுப்படுத்தப்படும் அல்லது அனுமதியுடன் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்தியா எவ்வளவு சர்க்கரையை ஏற்றுமதி செய்கிறது, இந்த முடிவுக்கு என்ன வழிவகுத்தது, அதன் சாத்தியமான தாக்கங்கள் என்ன?

Explained: Sugar export curbs and their impact: ஜூன் 1 முதல் சர்க்கரை ஏற்றுமதியை “கட்டுப்படுத்த” அரசாங்கம் செவ்வாய்க்கிழமை முடிவு செய்துள்ளது. நான்கு ஆண்டுகளில் முதல் நடவடிக்கையாக, “சர்க்கரையின் உள்நாட்டில் கிடைக்கும் தன்மை மற்றும் விலை ஸ்திரத்தன்மையை” பராமரிக்க இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறியது. பிரேசிலுக்கு அடுத்தபடியாக சர்க்கரை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

சமீபத்திய கட்டுப்பாடுகள் என்ன?

அரசின் தலையீடு தேவையில்லாத ‘திறந்த வகை’யிலிருந்து, சர்க்கரை ஏற்றுமதியை ‘கட்டுப்படுத்தப்பட்ட’ வகைக்கு அரசு மாற்றியுள்ளது. அதாவது, சர்க்கரை இயக்குநரகம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை (DFPD), நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் ஆகியவற்றின் குறிப்பிட்ட அனுமதியுடன் மட்டுமே சர்க்கரை ஏற்றுமதி அனுமதிக்கப்படுகிறது. மேலும், கட்டுப்பாடுகள் ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வந்து அக்டோபர் 31 வரை அல்லது அடுத்த உத்தரவு வரை தொடரும்.

ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள கோதுமை போலல்லாமல், சர்க்கரை தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படும் என்றும், ஆனால் ஜூன் 1 முதல், ஏற்றுமதியை வெளியே அனுப்ப அனுமதி தேவை என்றும் சர்க்கரை உற்பத்தித் துறையைச் சேர்ந்தவர்கள் சுட்டிக்காட்டினர்.

இன்றுவரை, சர்க்கரை தொழில்துறை 90 லட்சம் டன் ஏற்றுமதி ஆர்டர்களை ஒப்பந்தம் செய்துள்ளது, அதில் 71 லட்சம் டன்கள் இந்தியாவிற்கு வெளியே அனுப்பப்பட்டுள்ளன. ஜூன் 1 முதல், நிலுவையில் உள்ள ஒப்பந்த அளவு மற்றும் ஆலைகளால் மேற்கொள்ளப்படும் புதிய ஒப்பந்தங்கள் ஆகிய இரண்டிற்கும் ஏற்றுமதிக்கான அனுமதி தேவைப்படும்.

கடந்த சில பருவங்களில் இந்தியா எவ்வளவு ஏற்றுமதி செய்துள்ளது?

கடந்த நான்கு பருவங்களில் மகத்தான பயிர் விளைச்சலுக்கு நன்றி, அதன் காரணமாக ஏற்றுமதியும் அதிகரித்தது. வெளிநாடுகளில் விற்பனையைத் தூண்டுவதற்காக ஆலைகளுக்கு மானியங்களையும் மத்திய அரசு நீட்டித்தது. சர்க்கரை சீசன் தொடங்குவதற்கு முன் (ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை), இலக்கை அடைய ஏற்றுமதிக்கான ஒதுக்கீடு மற்றும் மானியம் இரண்டையும் மத்திய அரசு அறிவிக்கும்.

2017-18 ஆம் ஆண்டில், அரசாங்கம் 20 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்தது மற்றும் உள் போக்குவரத்து, சரக்கு, கையாளுதல் மற்றும் பிற செயல்பாடுகளை கையாள ரூ.1,540 கோடி பட்ஜெட்டை அனுமதித்தது. அந்த பருவத்தில், தொழில்துறை 6.2 லட்சம் டன் ஏற்றுமதியை பதிவு செய்தது மற்றும் மானிய பட்ஜெட்டில் ரூ.440 கோடி செலவானது.

அடுத்த பருவத்தில் (2018-19), 5,538 கோடி ரூபாய் மானிய பட்ஜெட்டில் 50 லட்சம் டன் ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, இதில் 38 லட்சம் டன் சர்க்கரையானது, மானியத்தின் 4,263 கோடி ரூபாயைப் பயன்படுத்தி அனுப்பப்பட்டது.

2019-20 ஆம் ஆண்டில் மகத்தான விளைச்சலுக்குப் பிறகு, ஏற்றுமதி ஒதுக்கீடு 60 லட்சம் டன்களாக உயர்த்தப்பட்டது, மானிய பட்ஜெட் ரூ 6,268 கோடியாக அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டில் மானிய பட்ஜெட்டில் ரூ.6,225 கோடியை பயன்படுத்தி தொழில்துறை 59.60 லட்சம் டன்கள் ஏற்றுமதி செய்தது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தேவை அதிகரிப்பு 2020-21 ஆம் ஆண்டில் சர்க்கரை ஏற்றுமதி 70 லட்சம் டன்களைத் தொட உதவியது, அதில் 60 லட்சம் டன்கள் அரசு மானியம் ரூ. 3,500 கோடியைப் பயன்படுத்தி செய்யப்பட்டது மற்றும் 10 லட்சம் டன்கள் அரசாங்க உதவியின்றி ஏற்றுமதி செய்யப்பட்டது. அரசு மானியம் இல்லாத ஏற்றுமதி திறந்த பொது உரிமத்தின் கீழ் செய்யப்பட்டது.

நடப்பு பருவத்தில் (2021-22) 90 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை ஆலையாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இதில் 71 லட்சம் டன் சர்க்கரை ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளது. ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஏற்றுமதிக்குத் திட்டமிடப்பட்ட சரக்குகளுக்கு அரசின் அனுமதி தேவை.

கடந்த சில பருவங்களில் ஏற்றுமதி வளர்ச்சிக்கு உதவியது என்னவெனில், பிரேசில் எரிபொருள் விலை உயர்வை சமாளிக்க சர்க்கரையை விட அதிக எத்தனாலை உற்பத்தி செய்தது. இதன் காரணமாகவும் மற்றும் தாய்லாந்து போன்ற பிற பெரிய சர்க்கரை உற்பத்தியாளர்களைத் தாக்கிய வறட்சி காரணமாகவும், பிரேசிலிய சர்க்கரையை நம்பியிருக்கும் நாடுகளில் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி அதிகரித்தது. பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகில் சர்க்கரை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், பிரேசில் எப்போதும் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது.

தற்போதைய சர்க்கரை சீசனில், சர்வதேச சர்க்கரை விலை தொடர்ந்து ஏற்றத்துடன் உள்ளது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணப்பலன் கிடைப்பதை ஆலை நிர்வாகம் உறுதி செய்ய இந்த ஏற்றுமதி உதவியுள்ளது.

இப்போது தடைகள் ஏன்?

சர்வதேச தேவைக்கு ஏற்ப ஏற்றுமதிகள் தடையின்றி தொடரலாம் என்று தொழில்துறையினர் கூறுகின்றனர். ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அடுத்த சீசனின் தொடக்கத்தில் குறைந்த கையிருப்பு உள்ளது என்பது ஒரு சாத்தியமான கவலை. இதனால் சுமார் மூன்று மாதங்களுக்கு விநியோகம் தடைபடும்.

சர்க்கரை சீசன் அதிகாரப்பூர்வமாக அக்டோபரில் தொடங்குகிறது, ஆனால் டிசம்பர் மாதத்திற்குப் பிறகுதான் வேகத்தை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் கையிருப்பு பங்குகளின் பற்றாக்குறை இருந்தால், உள்நாட்டு சந்தையில் விலைகள் அதிகரிக்கலாம். விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது ஒரு முக்கிய முன்னுரிமையாக இருக்கும் நேரத்தில், அரசாங்கத்தால் அந்த ஆபத்தை தாங்கிக்கொள்ள முடியாது.

அக்டோபர் தொடக்கப் பங்கு 65-70 லட்சம் டன்களுக்கு குறைவாக இருந்தால் சில்லறை விலை உயர்வு ஏற்படலாம். தற்போதைய தடைகள், அடுத்த சீசனின் தொடக்கத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, நிகழ்நேரத்தில் சர்க்கரை இருப்பு குறித்து அரசாங்கம் கண்காணிப்பதை உறுதி செய்யும். சில்லறை சர்க்கரை விலை ஆண்டுக்கு ஆண்டு கிட்டத்தட்ட தேக்கமடைந்து ஒரு கிலோ ரூ.39.50 முதல் ரூ.41 வரை உள்ளது.

இந்த சீசனில் சர்க்கரை உற்பத்தி எப்படி இருக்கும்?

நாடு மகத்தான கரும்பு விளைச்சலைக் கண்டுள்ளது. இந்த பருவத்தில் கரும்பு அரவையில் ஈடுபட்டுள்ள 521 ஆலைகளில், மகாராஷ்டிராவில் உள்ள 116 ஆலைகள் முன்னிலையில் இயங்கி வருகின்றன. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் இரண்டாவது வாரத்தில் அரவை சீசன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள ஒரு சில ஆலைகள் செப்டம்பர் வரை அரவையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான ஆலைகள் செயல்பாட்டில் இருப்பதால், இறுதி உற்பத்தி எண்ணிக்கை இன்னும் யாராலும் யூகிக்கப்படவில்லை, ஆனால் பெரும்பாலான தொழில்துறையினர் நாடு 350 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தியைக் காணும் என்று நினைக்கிறார்கள். எத்தனால் உற்பத்திக்காக சுமார் 34 லட்சம் டன் சர்க்கரை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு நுகர்வு 260 லட்சம் டன்களாக உள்ளது.

சமீபத்திய கட்டுப்பாடுகள் குறித்த தொழில்துறையின் பார்வை என்ன?

இந்த தடையின் முதல் எதிர்வினையாக, ஆலை விலையில் டன் ஒன்றுக்கு ரூ. 50 குறைந்துள்ளது, இது எதிர்பார்த்தது தான். சர்வதேச விலைகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே உள்ளது. தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் பிரகாஷ் நாயக்னாவரே, இந்த சீசனில் இந்தியா சுமார் 100 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்யும் என்று நம்புகிறார். “தற்போதைய தளவாட மற்றும் துறைமுக நெரிசல் சிக்கல்கள் தீர்க்கப்பட்டால், இந்த எண்ணிக்கையை அடைவதில் எந்த பிரச்சனையும் இருக்காது,” என்று அவர் கூறினார். பெரும்பாலான ஆலைகளின் நிர்வாகங்கள் தடைகள் தங்களை அதிகம் பாதிக்காது மற்றும் ஏற்றுமதி தொந்தரவு இல்லாமல் தொடரும் என்று கூறினார்.



Read in source website

எம்.பி.சி பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முடிவு எடுப்பதை தடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு

Pleas filed against TN backward class commission deciding MBC internal reservation: மே 31ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய கூட்டத்தை நடத்தலாம். ஆனால், இடஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைகளையோ, முடிவையோ எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) இடஒதுக்கீட்டிற்குள் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து எந்த முடிவையும் எடுப்பதைத் தடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் உள்ள பழங்குடியினர் நலச் சங்கத் தலைவர் எம்.ஜெபமணி, தூத்துக்குடி மாவட்ட தமிழ்மீனவர் கூட்டமைப்பு ஏ.பிரேசில் ஆகியோர் இந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தனர்.

பிரேசில் தாக்கல் செய்த மனுவில், “மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையிலான இந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது என குறிப்பிட்டு, அந்த அரசாணையை ரத்து செய்தது. உச்சநீதிமன்றமும் இதனை உறுதி செய்தது. இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அதனை மீறும் வகையில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய தலைவர், மே 31-ஆம் தேதி கூட்டம் நடத்த முடிவு செய்து அதன் உறுப்பினர்களுக்கு அதுதொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே மே 31ஆம் தேதி நடைபெற உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய கூட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

மேலும், ஜாதி வாரியாகத் தரவு சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இதுவரை தனது அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் உள் இட ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்க முடியும் என்றும் மனுதாரர்கள் சுட்டிக் காட்டினர். மேலும், MBC பிரிவுக்குள் உள் இடஒதுக்கீடு என்பது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துடன் (என்சிபிசி) கலந்தாலோசித்து மட்டுமே எடுக்கப்படும் ஒரு முக்கிய கொள்கை முடிவு என்று உச்ச நீதிமன்றம் சமீபத்திய தீர்ப்பில் கூறியுள்ளது என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் மேற்கூறிய அம்சங்கள் இருந்தபோதிலும், ஜூலை 2020 இல் மாநில அரசு இயற்றிய அரசாணையின் அடிப்படையில் MBC பிரிவுக்குள் உள் இடஒதுக்கீடு குறித்து ஆலோசிக்க மே 31 அன்று அதன் உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மே 20, 2022 அன்று ஒரு தகவல் அனுப்பியுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.  அரசாணையின் படி, MBC இடஒதுக்கீட்டிற்குள் உள் இடஒதுக்கீடு கோரி பல்வேறு சமூகங்கள் முன்வைத்த கோரிக்கைகள் மீது பரிந்துரை செய்வது, ஆணையத்தின் குறிப்பு விதிமுறைகளில் ஒன்றாகும் என்றும் மனுதாரர்கள் கூறினார்.

இது 68 DNT சமூகங்கள் உட்பட 115 சமூகங்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் என்று கூறிய மனுதாரர்கள், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மேற்கூறிய குறிப்பு விதிமுறைகளின்படி செயல்படுவதைத் தடுக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், விஜயகுமார் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மே 31ஆம் தேதி கூட்டத்தை நடத்திக்கொள்ளலாம். ஆனால், இடஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைகளையோ, முடிவையோ எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து, மத்திய, மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய தலைவர்கள் வழக்கு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.



Read in source website

Car Price Hikes-The price of new cars is increasing across the country from June 1st in tamil: 1000 சிசி முதல் 1500 சிசி வரை உள்ள தனியார் கார்கள் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் பிரீமியத்தில் 6 சதவீதம் உயரும்.

This is important news for car buyers. The price of new cars has been rising since the first of June. The main reason behind this is the price of the third party insurance premium: ஜூன் 1 முதல் இந்திய வாகன சந்தையில் மூன்றாம் தரப்பு காப்பீட்டு பிரீமியங்களின் விலைகள் உயர்த்தப்படும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களுக்கான நோடல் அமைப்பான இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு (IRDAI) பதிலாக அமைச்சகத்திடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூன்றாம் நபர் காப்பீட்டின் உயர்வால் இந்தியாவில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களின் விலையும் உயரும். இந்தியாவில் ஏற்கனவே சிப் நெருக்கடி மற்றும் மூலப்பொருள் தட்டுப்பாடு ஆகியவற்றுடன் போராடி வரும் OEM களுக்கு (அசல் உபகரண உற்பத்தியாளர் – Original equipment manufacturer) அதிகரித்த வாகன விலைகள் சிக்கலை ஏற்படுத்தும்.

வெவ்வேறு வாகன வகைகளுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் விலை உயர்வு எவ்வளவு எதிர்பார்க்கப்படுகிறது என்பது இங்கே வழங்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி, இந்திய சந்தையில் மோட்டார் சைக்கிள்கள் 15% பிரீமியம் உயர்வைக் காணும். இருப்பினும், இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர், கேடிஎம் ஆர்சி 390, ராயல் என்ஃபீல்டு புல்லட் மற்றும் பல பிரிவுகளில் உள்ள 150 சிசிக்கு மேல் உள்ள பைக்குகளை மட்டுமே இந்த உயர்வு பாதிக்கிறது. நாட்டின் நடுத்தர வர்க்கத்தினருக்கு விஷயங்களை கடினமாக்குவதால், இந்தியாவில் ஒரு புதிய இருசக்கர வாகனத்திற்கு 17 சதவீதம் கூடுதல் காப்பீட்டு பிரீமியத்தை வெகுஜனங்கள் செலுத்த வேண்டும். சமீபகாலமாக உற்பத்தியாளர்களின் விலையேற்றத்துடன் இணைந்து இந்த உயர்வு மக்களின் போராட்டத்தை மேலும் அதிகரிக்கும்.

1000 சிசி முதல் 1500 சிசி வரை உள்ள தனியார் கார்கள் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் பிரீமியத்தில் 6 சதவீதம் உயரும். சமீபகால உற்பத்தியாளர்களின் விலை உயர்வுகளுடன் இணைந்தால், இந்த எழுச்சி, மக்களின் சிரமங்களை அதிகப்படுத்தும்.

இதனுடன், 1000 சிசி வரையிலான இன்ஜின்கள் கொண்ட அனைத்து கார்களுக்கும் புதிய தனியார் காருக்கான மூன்றாம் தரப்பு பிரீமியம் 23% அதிகரிக்கப்படும். மேலும், 1000 சிசி முதல் 1500 சிசி வரையிலான எஞ்சின் கொண்ட புதிய கார்கள் மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியத்தில் 11 சதவீதம் அதிகரிக்கும்.

ஆண்டின் தொடக்கத்தில், மாருதி சுஸுகி, டொயோட்டா, மஹிந்திரா மற்றும் டாடா போன்ற பல முக்கிய OEMகள் மூலப்பொருட்களின் பற்றாக்குறை காரணமாக தங்கள் மாடல் வரிசையின் விலைகளை அதிகரித்தன. மேலும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய சந்தையில் இரு சக்கர வாகனங்களின் விலையும் அதிகரித்துள்ளது.



Read in source website

Elon Musk’s net worth drops below $200 billion Tamil News: மே 25 நிலவரப்படி, மஸ்கின் நிகர மதிப்பு 193 பில்லியன் டாலராக இருந்தது. அப்படியென்றால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அவரது சொத்து மதிப்பில் 77.6 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார்.

Elon Musk Tamil News: உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக வலம் வருபவர் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். ரூ. 2 லட்சத்து 11 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பை கொண்டுள்ள இவர், உலகின் இரண்டாவது பணக்கார பில்லியனர் ஜெஃப் பெசோஸை விட 69 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை அதிகம் வைத்துள்ளார். சமீபத்தில் இவரை அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் மாத இதழ், இந்த ஆண்டுக்கான சிறந்த நபராக தேர்வு செய்தது.

இந்நிலையில், எலோன் மஸ்க் 2022 ம் ஆண்டில் 70 பில்லியன் டாலரை இழந்துள்ளார் என்றும், அவரது நிகர மதிப்பு (networth) 200 பில்லியன் டாலர்களுக்கு கீழே குறைந்துள்ளது என்றும் ப்ளூம்பெர்க் குறியீடு வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.

டெஸ்லராட்டியின் கூற்றுப்படி, மஸ்க் இந்தாண்டில் தனது நிகர மதிப்பில் 77.6 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பங்குகள் சுமார் 40 சதவீதம் வீழ்ச்சியடைந்ததால், டெஸ்லா பங்குகள் தாமதமாக பெரும் அழுத்தத்தில் உள்ளன. இதன் விளைவாக அவரின் நிகர மதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, மே 25 நிலவரப்படி, மஸ்கின் நிகர மதிப்பு 193 பில்லியன் டாலராக இருந்தது. அப்படியென்றால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அவரது சொத்து மதிப்பில் 77.6 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார்.

இருப்பினும், நிகர சொத்து மதிப்பின் அடிப்படையில் மஸ்க் இன்னும் உலகின் முன்னணி பணக்காரராகவே இருக்கிறார். அவரது நெருங்கிய போட்டியாளரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தற்போது 128 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலிடப்பட்டுள்ளார்.

மஸ்க்கைப் போலவே, பெசோஸின் நிகர சொத்து மதிப்பும் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைப் பெற்றுள்ளது. அதாவது அவர் 64.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக, பில் கேட்ஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட உலகின் 50 முன்னணி பணக்காரர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மொத்தமாக அரை டிரில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.



Read in source website



Read in source website

 

இலங்கையின் தேசிய அரசியலில் ராஜபட்ச குடும்பம் 2005-ஆம் ஆண்டு முதல் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அந்தக் குடும்பம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிட பல்வேறு காலகட்டங்களில் சிங்கள இனவெறியைத் தூண்டி விட்டிருக்கிறது. 2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலைகள், மூன்று லட்சம் தமிழா்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட கொடுமை, தமிழா்கள் வாழ்ந்த பகுதிகள் புல் பூண்டு இல்லாமல் அழிக்கப்பட்டது - இப்படி இலங்கையில் இனத்தைக் காட்டி வளத்தைப் பெருக்கிக் கொண்ட குடும்பம் ராஜபட்ச குடும்பம்.

அண்மையில், தலைநகா் கொழும்பில் கலவரத்தைத் தூண்டி விட்டவா் மகிந்த ராஜபட்சதான். தற்போது சிங்களா்கள், தமிழா்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு நிற்கின்றனா். ராஜபட்ச சகோதரா்களின் போலி வேடம் தோலுரித்துக் காட்டப்பட்டு விட்டது. போராடிய மக்கள் மீது போலீஸாரையும், ராணுவத்தையும் ஏவி விட்டதால், ரத்தக்களறியாக மாறிவிட்டது இலங்கை. ஆளுங்கட்சி எம்.பி. அமர கீா்த்தி அத்து கோரள தன்னுடைய கைத்துப்பாக்கியைக் காட்டி, போராட்டக் களத்தில் நின்ற மக்களை மிரட்டி இருக்கிறாா்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் வெகுண்டுடெழுந்தனா். கலவரத்தில் எம்.பி. ஒருவரும், அவரது காா் ஓட்டுநரும் உயிரிழந்திருக்கின்றனா். பொதுமக்களில் ஒருவா் பலி. இதுவரை பத்துக்கும் மேற்பட்டோா் படுகொலை. கொழும்பு புறநகா் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சா் ஜான்ஸ்டன் பொ்னாண்டோவின் வீட்டை போராட்டக்காரா்கள் தீ வைத்துக் கொளுத்தியிருக்கின்றனா்.

புத்தளம் ஆராய்ச்சிக்கட்டுப் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சா் சனத் நிஷாந்தின் வீடும், புறநகா் பகுதியான மொறட்டுவை நகர மேயா் சமன்லால் பொ்னாண்டோவின் வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இலங்கை முழுவதும் உள்ள ஆளுங்கட்சி தலைவா்களின் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் மீது தாக்குதல், வாகனங்களுக்கு தீவைப்பு. முன்னாள் அமைச்சா்கள் 14 போ், எம்.பி.க்கள் 18 போ் மீது தாக்குதல், வீடுகளுக்கு தீவைப்பு என பற்றி எரிந்தது இலங்கை.

‘நான் பதவி விலக மாட்டேன்’ என்று கூறி வந்த மகிந்த ராஜபட்ச, மக்களின் எழுச்சிக்கு அடிபணிய நோ்ந்தது. ஒரே குடும்பம் இலங்கை ஆட்சி பீடத்தை கபளீகரம் செய்து கொண்டு அராஜகம், அத்துமீறல், ஊழல், ஊதாரித்தனம், லஞ்ச - லாவண்யங்களில் பல ஆண்டுகளாக சுரண்டி கொழுத்தது. இதனால் அந்த நாடு வறுமை, பசி, பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மகிந்த ராஜபட்ச பதவி விலகியதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை அதிபா் கோத்தபய ராஜபட்ச நியமித்திருக்கிறாா்.

‘ராஜபட்ச குடும்ப ஆதிக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டிருக்கிறது’ என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவா் சனத் ஜெயசூா்யா தனது ட்விட்டா் பதிவில் தெரிவித்து இருக்கிறாா். இலங்கை மக்கள், ‘மகிந்த ராஜபட்சவின் தம்பியான அதிபா் கோத்தபய ராஜபட்சவும் பதவி விலக வேண்டும்’, ‘பல்லாண்டுகளாக நாட்டை சுரண்டி கொழுத்த ராஜபட்ச குடும்பத்தின் சொத்துகள் அனைத்தையும் மீட்டு அரசின் கருவூலத்தில் சோ்க்க வேண்டும்’ என்று கோரியிருக்கின்றனா்.

ஆளுங்கட்சியைச் சோ்ந்த தலைவா்கள், எம்.பிக்கள் ஆகியோரின் வீடுகளையும், வாகனங்களையும் பேராட்டக்காா்கள் தீவைத்து எரித்து வருகின்றனா். அம்பன்தோட்டாவில் இருந்த ராஜபட்சவின் பூா்விக வீட்டை போராட்டக்காரா்கள் தீவைத்து எரித்தனா். ராஜபட்சக்களின் முன்னோரின் கல்லறைகள் இடித்து தகா்க்கப்பட்டன. இனத்தைச் சொல்லி, மொழியைச் சொல்லி, கலாசாரத்தைச் சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை, கட்சி அதிகாரத்தை குடும்ப சொத்தாக்கிக் குளிா் காய்வோருக்கெல்லாம் இலங்கை மக்களின் எழுச்சி ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

மகிந்த ராஜபட்ச புதிதாக தொடங்கிய இலங்கை மக்கள் கட்சிக்கு 2019 ஆகஸ்டில் நடந்த தோ்தலில் மகத்தான வெற்றியை மக்கள் தந்தனா். இரண்டரை ஆண்டுகளில் அதே மக்களால் ராஜபட்சக்கள் விரட்டி துரத்தப்படுகின்றனா் என்றால், ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் எந்த அளவுக்கு கொடிக்கட்டி பறந்திருக்கிறது என்பதை நாம் உணா்ந்து கொள்ளலாம்.

1793-ஆம் ஆண்டு அமெரிக்காவின் அரசியல் மாமேதை தாமஸ் ஜெபா்ஸன் அறிஞா் ஷாா்ட்டுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ‘அவசியமாகிவிட்ட அந்தப் போராட்டத்தின் விசாரணை முறை ஏதுமில்லாமலேயே பல குற்றவாளிகள் வீழ்ந்துபட்டாா்கள். அவா்களோடு அப்பாவிகள் சிலரும் உயிரிழந்தாா்கள். இது குறித்து மற்றவா்களைப் போலவே நானும் வருந்தியிருக்கிறேன்; ஏதுமறியாத அவா்களில் ஒரு சிலரின் மரணம் குறித்து வாழ்நாள் முழுவதும் வருந்திக் கொண்டுதான் இருப்பேன். ஆனால், போா்க்களத்தில் அவா்கள் விழுந்திருந்தால் ஏற்படக்கூடிய வருத்தமே எனக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் பலத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது அப்போது. குண்டுகளைப் போல் முற்றிலும் பாா்வையற்றதல்ல என்றாலும் மக்கள் பலமும் ஓரளவுக்கு பாா்வையற்றதே. எனவே அவா்களுடைய நண்பா்களில் சிலா் விரோதிகளைப் போலவே கருதப்பட்டு கொல்லப்பட்டாா்கள். எனினும் காலக்கிரமத்தில் உண்மை வெளிப்பட்டு அவா்களுடைய நினைவு நிலைநிறுத்தப்படுவதுடன் புனிதத்துவமும் பெறும்’ என்று கூறியிருக்கிறாா்.

இன்றைய இலங்கையில் நடக்கின்ற அரசியல் புரட்சிக்கு பிரெஞ்சு புரட்சியின்போது தாமஸ் ஜெபா்ஸன் தெரிவித்திருக்கும் கருத்து மிகப்பொருத்தமாக இருக்கிறது. தனிமனித ஆதிக்கம், ஒரு குடும்பத்தின் அகம்பாவம், சுரண்டல் ஆகியவற்றை மக்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக அதிகாரத்தில் இருப்போா் நினைத்தால் அது தவறு என்பதை இலங்கை மக்கள் நிரூபித்து விட்டனா்.

ராஜபட்ச சகோதரா்கள், தோ்தல் பிரசாரத்தின்போது, பொதுமக்களிடம் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை அள்ளி வீசியதும், தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ‘கடன் சுமை’, ‘நிதி நெருக்கடி’ என்று முந்தைய ஆட்சியினா் மீது பழிபோட்டு தப்பிக்க முயன்றதும் இலங்கை மக்களை வெறிகொள்ளச் செய்தன. நாம் ஏமாற்றப்பட்டோம் என மக்கள் உணா்ந்தனா். ‘நமக்கு மக்கள் தந்திருக்கும் அதிகாரம் ஐந்து ஆண்டுகள், அதுவரை நம்மை எந்தக் கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது’ என்கிற ஆணவம் அதிகாரத்தில் அமா்வோருக்கு வந்துவிடுகிறது. ராஜபட்ச குடும்பத்திற்கும் அப்படியொரு அலட்சியம், அகம்பாவம், ஆணவம் ஏற்பட்டது இயல்புதான். ஐந்து ஆண்டு நிறைவில் மக்களுக்கு இன்னும் பல புதிய அறிவிப்புகளை தந்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற கனவு அவா்களுக்கு இருந்தது.

திடீா் பொருளாதார நெருக்கடி இலங்கையில் ஏற்படும் என்று அந்தக் குடும்பம் எதிா்பாா்த்திருக்கவில்லை; எல்லா மக்களும் ஓரணியாய் திரள்வா் என்பதையும் நினைத்துப் பாா்த்திடவில்லை. சீனாவோடு கொஞ்சிக் குலாவிய இலங்கை அரசு, ஆபத்து வந்தவுடன் இந்தியாவிடம் ஓடோடி வந்தது. பிரதமா் நரேந்திரா் மோடி அரசு, இந்திய மண்ணிற்கே உரிய உயா்ந்த பண்பாட்டோடு 25 ஆயிரம் கோடி ரூபாயை, பல்வேறு வகைகளில் உதவியாக இலங்கை அரசுக்கு வழங்கியது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோரை முடுக்கி விட்டாா் பிரதமா் நரேந்திர மோடி. அதன் விளைவாக, இலங்கையில் கோரத்தாண்டவமாடிய பொருளாதார சீா்குலைவு மெல்ல மெல்ல சீரான பாதைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. அந்த நிலையில் மகிந்த ராஜபட்ச போா்க்கோலம் பூண்டிருந்த மக்கள் மீது தாக்குதலைத் தொடங்கியது, மன்னிக்க முடியாத அரசியல் பிழை. இலங்கை இன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதற்கு மகிந்த ராஜபட்சதான் காரணம்.

அம்பன்தோட்டா துறைமுக நகரத்தை சீனாவுக்கு தாரை வாா்த்துக் கொடுத்த இலங்கை அரசின் தவறான ஒப்பந்தம், கடந்த பிப்ரவரியில் திடீரென இலங்கை அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனால் அவமானமடைந்த சீனா, இலங்கையில் மறைமுகமாக மக்கள் சக்தியைத் தூண்டிவிட்டு, எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை இன்னும் ஊடகங்கள் உணரவில்லை என்பதுதான் வியப்பு.

‘இலங்கை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அங்கு ஜனநாயகம் திரும்பிடத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து இலங்கைக்கு இந்தியா உதவும். இலங்கையின் அண்டை நாடாக, பல நூற்றாண்டு கால உறவு இந்தியாவுக்கு உள்ளது. அங்கு ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்சி திரும்புவதற்காக இந்தியா தனது முழுமையான ஆதரவை அளிக்கும்’ என்று இந்தியா தெரிவித்திருக்கிறது. இலங்கைக்கு, இந்தியா நிதியுதவி செய்ததோடு, உணவு, மருந்துப் பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கு மக்களின் போராட்டம் மூலம் மட்டுமே தீா்வு கண்டுவிட முடியாது. தும்பை விட்டு வாலைப் பிடிக்கின்ற செயலில் மக்கள் ஈடுபட்டிருக்கின்றனா். அங்குள்ள அரசியல் கட்சிகள், அறிஞா்கள் உடனடியாக கலந்து விவாதித்து, இந்தியா போன்ற நாடுகளோடு ஆலோசித்து அப்பாவி மக்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

விண்ணைத் தொடுகிற அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயா்ந்த நிலையில், வாழ்க்கையே கேள்விக்குறியாகும்போது, ஒரு நாட்டின் மக்கள் அமைதியாக இருக்க முடியாது; ஏதேனும் செய்ய வேண்டும். அதைத்தான் இலங்கை மக்கள் செய்திருக்கின்றனா். இந்தியா் அனைவரும் சோ்ந்து எரிகின்ற நெருப்பை அணைப்போம்; இலங்கை மக்களை மீட்போம்!

மாநில துணைத் தலைவா்,
பாரதிய ஜனதா கட்சி.



Read in source website

 

இந்திய ரயில்வே துறை, மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட கட்டணச் சலுகையைத் திரும்பப் பெற்ன் மூலம் கடந்த 2020-21 நிதியாண்டில் ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் கூடுதல் வருமானம் பெற்றுள்ளதாம். மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சந்திர சேகர கவுா் என்பவா் எழுப்பிய கேள்விக்கு, ரயில்வே நிா்வாகம் அளித்துள்ள பதிலில் மேற்கண்ட தகவல் கிடைத்திருக்கிறது.

2020-21 நிதியாண்டில் இந்தியா முழுவதிலும் 4.46 கோடி ஆண்களும் 2.86 கோடி பெண்களும் என சுமாா் 7.30 கோடி மூத்த குடிமக்கள் ரயில்கள் மூலம் பயணம் செய்துள்ளனா். அவா்கள் மூலம் 3,464 கோடி ரூபாய் டிக்கெட் கட்டணமாகக் கிடைத்துள்ளது. மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகையை வழங்கியிருந்தால் சுமாா் 1,964 கோடி ரூபாய் கட்டணம்தான் கிடைத்திருக்கும். சலுகை வழங்கப்படாததால் ரயில்வே துறை அடைந்த லாபமே அந்த ஆயிரத்தைந்நூறு கோடி ரூபாய் என்கிறது அந்தத் தகவல்.

2020-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் கரோனா தீநுண்மி பெருமளவில் பரவத் தொடங்கியபோது அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்றோ, மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்றோ அரசுக்கு எந்த ஒரு தெளிவும் இல்லாத நிலை இருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, மத்திய அரசு ஊழியா்களுக்கான பஞ்சப்படி ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டன. பல்வேறு மாநில அரசுகளும் இவ்வாறே சட்டப்பேரவை உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு, மாநில அரசு ஊழியா்களுக்கான பஞ்சப்படி ஆகியவற்றை நிறுத்தும் முடிவை எடுத்தன. ஒரு சில மாநிலங்கள் தங்கள் ஊழியா்களின் ஊதியத்தின் ஒரு பகுதியைக் குறைத்து வழங்கவும் திட்டமிட்டன. தொழில்துறை மேம்பாட்டுக்கான திட்டமும் மத்திய நிதி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது

நாட்டு மக்கள் அனைவருக்கும் கோவேக்ஸின், கோவிஷீல்டு உள்ளிட்ட இரண்டு தவணை கரோனா தடுப்பூசி மருந்துகளை இலவசமாக அளிக்கும் மாபெரும் திட்டம் மத்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டு, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக செயல்படுத்தியதன் விளைவாக கரோனாவிலிருந்து கிட்டத்தட்ட மீண்டு வந்திருக்கிறோம்.

வேலை இழப்பு, வருமானக் குறைவு ஆகிய விளைவுகளிலிருந்து நம் நாட்டுக் குடிமக்களும் இயல்புநிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கின்றனா். ஆனால், மூத்த குடிமக்களைப் பொறுத்தவரையில் இத்தகைய ஒப்பீடுகளைச் செய்வது சரியாக இருக்காது.

ஓய்வூதியம், சேமிப்பு ஆகியவற்றுக்கு வாய்ப்பு இல்லாத மூத்த குடிமக்கள் உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்ட தங்களுடைய அடிப்படைத் தேவைகள் அனைத்திற்கும் தங்களுடைய வாரிசுகளையே சாா்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஓய்வூதியம் பெறுபவா்களுக்கு இவ்வளவு சிரமம் இல்லை எனினும் அந்த ஓய்வூதியா்கள் தங்களுடைய வாழ்க்கைத் துணைக்கும், வேலைவாய்ப்பு கிடைக்காத பிள்ளைகளுக்கும் சோ்த்தே தங்கள் ஓய்வூதியத்தைச் செலவழிக்க வேண்டிய நிலை இருக்கிறது.

பணி ஓய்வுப் பயனாக ஓய்வூதியம் எதுவும் இன்றி பணிக்கொடை (கிராஜுவிடி) உள்ளிட்ட பணப்பயன்கள் கிடைக்கப்பெற்று அந்தத் தொகையை வங்கிகளில் நிலைவைப்பாகச் சேமித்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியை நம்பியிருக்கும் மூத்த குடிமக்கள் நிலைமையும் மோசம்தான். கடந்த சில வருடங்களாக நமது நாட்டின் வங்கிகள் அனைத்தும் சேமிப்புகளுக்கு வழங்கும் வட்டி விகிதத்தைக் குறைத்துக் கொண்டே வருகின்றன. இதன் காரணமாக, மூத்த குடிமக்களின் சேமிப்புக்குக் கிடைக்கும் வட்டி வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் இவா்கள் தங்களது மாதாந்திர குடும்பச் செலவுகளைச் சமாளிக்க மிகவும் சிரமப் படவேண்டியுள்ளது.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு யாராவது தனி நபரிடமோ, தனியாா் நிதி நிறுவனங்களிலோ முதலீடு செய்தால் அது முதலுக்கே மோசமாகிவிடும். இந்நிலையில் ஓய்வூதியம் இன்றி சேமிப்பை மட்டும் வைத்திருக்கும் மூத்த குடிமக்களின் நிலைமையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றே சொல்லவேண்டும். மற்றபடி எல்லாவிதமான மூத்த குடிமக்களுக்குமான பொது பிரச்னை அவா்களுடைய மருத்துவச் செலவுகளே ஆகும். தங்களுடைய அன்றாடச் செயல்பாடுகளுக்கே பிறருடைய ஒத்துழைப்பை நம்பியிருக்க வேண்டிய நிலையில் மூத்த குடிமக்கள் இருக்கிறாா்கள் என்பதே உண்மை.

இந்நிலையில், மத்திய - மாநில அரசுகள் உழைத்து ஓய்ந்து போன மூத்த குடிமக்களின் தற்கால நலன் குறித்துத் தாங்களாகவே நலத்திட்டங்களைத் தீட்டுவதுடன் சாத்தியமுள்ள சலுகைகளைத் தாமதம் இன்றி வழங்க முன்வரவேண்டும்.

சமீபத்தில் சென்னைக்கு வந்த மத்திய ரயில்வேத் துறை அமைச்சா், மூத்த குடிமக்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கட்டணச் சலுகையை மீண்டும் வழங்குவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியிருந்தாா்.

ஒவ்வொரு வருடமும் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் ரயில்வே துறை மூத்த குடிமக்களுக்கு வழங்கும் கட்டணச் சலுகையான ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் என்னும் சிறிய சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாதா என்ன ?

கட்டணச் சலுகை கொடுக்கிறாா்கள் என்பதற்காக மூத்த குடிமக்கள் எவரும் பயணம் செய்துகொண்டே இருப்பதில்லை. பல்வேறு உடல் உபாதைகளால் துன்பப்படும் மூத்த குடிமக்கள் ஒரு நிகழ்ச்சிக்கு நிச்சயம் போயாக வேண்டும் என்ற நிலை இருந்தால் ஒழிய பயணம் செய்ய விரும்ப மாட்டாா்கள். இந்நிலையில் அவா்களுக்கான கட்டணச் சலுகையை மீண்டும் வழங்குவதே சரியாக இருக்க முடியும்.

வங்கிகளும் மூத்தகுடிமக்களுக்கான சேமிப்பு வட்டியை உயா்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசைப் போன்றே மாநில அரசுகளும் அரசு நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியா்களுக்கான பணப்பயன்களைத் தாமதமின்றி வழங்க முன்வரவேண்டும்.

அரசாங்க அமைப்புகள் சேவையை முதல் குறிக்கோளாகவும் லாபத்தை இரண்டாவது குறிக்கோளாகவும் கொண்டிருக்க வேண்டும். அவற்றின் நடவடிக்கை ஒவ்வொன்றின் அடிநாதமாக மனிதாபிமானம் இருக்க வேண்டும் என்பதே மூத்த குடிமக்கள் எதிா்பாா்ப்பு மட்டுமல்ல, அனைத்து மக்களின் எதிா்ப்பாா்ப்பும் ஆகும்.



Read in source website

தமிழகத்தில் பசுமை போர்த்திய, தொன்மை சின்னங்கள் நிறைந்த குறிப்பிட்ட அளவு மலைகள் இன்று பெரும்பள்ளங்களாக மாறிவிட்டன. கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கற்களும், இதர கனிமங்களும் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளூர் தேவைகளுக்காகவும், வெளிமாநிலங்களுக்கு சட்ட விரோதமாகவும் கடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் திருநெல்வேலி அருகில் அடைமிதிப்பான்குளம் பகுதியிலுள்ள கல்குவாரியில் குவாரியில் 350 அடி ஆழத்தில் வெடித்து உடைக்கப்பட்ட பாறைகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் கடந்த மே 14-ம் தேதி நள்ளிரவில் ஈடுபட்டிருந்தபோது பாறைகள் சரிந்து விபத்து நடந்தது.

இடிபாடுகளில் சிக்கிய 6 பேரில் 2 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர். 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவரது உடல் சமீபத்தில் மீட்கப்பட்டுள்ளது. இந்த குவாரியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி கடந்த ஏப்ரல் மாதமே குவாரியை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரியில் விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்துக்குப்பின் தமிழக அரசு, அப்பகுதி கனிமவளத்துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்துள்ளது. அத்துடன், ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வருவாய்த்துறை செயலர் குமார்ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. தமிழகத்தில் 5,000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை மறு ஆய்வு செய்வோம் என்று வருவாய்த்துறை செயலர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு சென்னை அருகில் காஞ்சிபுரம் திருமுக்கூடல் அருகில் மதூர் பகுதியில் கல்குவாரி விபத்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த கல்குவாரியில் வெடிவைத்து கல் உடைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அவற்றை ஏற்ற லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது பாரம் தாங்காமல் மண் சரிந்ததில், ஒருவர் உயிரிழந்தார். வாகனங்களும் மண்சரிவில் சிக்கி சேதமடைந்தன. அந்த விபத்தின் போது, குவாரி தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டது. ஆனால் அதன்பின்னரும் தற்போதும் கல்குவாரி பணிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதிக குவாரிகள் செயல்படும் மாவட்டங்கள்

காஞ்சிபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் அதிகளவில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்குவாரிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு குவாரிக்கும் தனித்தனியாக அனுமதி அளிக்கப்படுகிறது. குறிப்பாக குவாரி அமைக்கப்படும் நிலம் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் இருக்க வேண்டும்.

பசுமை போர்த்திய மலைகளில் குவாரிகள் அமைக்கக்கூடாது. அனுமதியளிக்கப்பட்ட குறிப்பிட்ட பரப்பு அதாவது 10 எக்டேர் என்றால் அந்த நிலப்பரப்பின் வரைபடத்தின் அடிப்படையில் அந்த நிலத்தில் மட்டுமே கல் வெட்டி எடுக்கப்பட வேண்டும். கல் வெட்டி எடுக்க வெடிபொருள் பயன்படுத்தப்பட்டால், அதன் அளவுகள், வெடிபொருள் பயன்பாடு மற்றும் குவாரிப்பணிகளின் போது எழும் ஒலி அளவு, காற்று மாசுபாட்டின் அளவு ஆகியவை எந்த அளவில் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு குவாரிக்குமான அனுமதியின் போது குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, தொழிற்சாலை பகுதி என்றால் பகலில் 75 டெசிபலும், இரவில் 70 டெசிபலும் ஓசை அனுமதிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதி என்றால் பகலில் 55 டெசிபலும், இரவில் 45 டெசிபலும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால்,
பெரும்பாலான குவாரிகள் இந்த விதிகள் எதையும் பின்பற்றுவதில்லை. அத்துடன் அதிகப்படியான மரம் சூழ்ந்த மலைப்பகுதிகள், விவசாய நிலத்தை ஒட்டிய பகுதிகள், நீர்நிலைப்பகுதிகளில் குவாரிகள் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

வெளிமாநிலங்களுக்கு கடத்தல் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள மலைகளிலும், குன்றுகளிலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பாறைகளை உடைத்து கேரளத்துக்கு கடத்துவது கடந்த 20 ஆண்டுகளாகவே நீடிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சிலவற்றை பாதுகாக்கப்பட்ட மலைகளாக யுனெஸ்கோ அறிவித்திருக்கிறது. இதுபோல் சில மலைகள் பாதுகாப்பு குழுமத்தின்கீழ் உள்ளன.இருப்பினும், பாறைகளை உடைத்து எடுக்க தென்மாவட்டங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் விரிசல்

ராதாபுரம், கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் கல் உடைத்து, அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி விடிய, விடிய பாறைகளை உடைத்து கடத்துவது இங்கு தொடர்ந்து வருகிறது. குவாரிகளில் பாறைகள் மிதமிஞ்சி உடைக்க, குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவிலான வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவதால், நில அதிர்வால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக சுற்றுவட்டார கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கேரளத்தில் மலைகளில் குவாரிகள் அமைக்கத் தடை அமலில் உள்ளது. இதனால் தமிழகத்திலிருந்து முறைகேடாக டன் கணக்கில் பாறைகளை கேரளத்துக்கு கடத்துவது தமிழகத்தில் பலருக்கு செல்வம் கொழிக்கும் தொழிலாகியிருக்கிறது. இவற்றை தடுக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருநெல்வேலி சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.பி. முத்துராமன் கூறியதாவது: அனைத்து குவாரிகளுக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும். குவாரிகள் பலவற்றுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை. அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வது இல்லை. இஷ்டத்துக்கு பாறைகளை உடைக்கின்றனர். பணத்துக்காக கேரளத்துக்கு கனிமவளங்களை கடத்துகின்றனர் என்று வேதனை தெரிவித்தார்.

தடுக்க சட்டம் இல்லை வெளிமாநிலத்துக்கு தமிழகத்தில் இருந்து கனிமங்கள் கொண்டு செல்வதை தடுக்க தனி சட்டம் இல்லை என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். குவாரிகளில் எடுக்கப்படும் கற்களை தமிழகத்தில் விற்க 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்தால் 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. கடந்த 7 மாதங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 6 கல் குவாரிகள் விதிமீறல் கண்டறியப்பட்டு மூடப்பட்டுள்ளன.

கோவையிலும் விதிமீறல்

கோவையில் மதுக்கரை, அன்னூர், சோமனூர், காரமடை, பேரூர், செட்டிபாளையம், சூலூர், பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 120-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இவற்றில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் தற்போது இயங்கி வருகின்றன. இயற்கை எழில் சூழ்ந்த கோவைப்பகுதியை பாதுகாக்கும் எண்ணமின்றி, கல் குவாரிகள் இரவு பகலாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கோவைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையை நாங்கள் பாரபட்சமாக நடத்தவில்லை என்று பேசினார்.

ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டவர்கள் தற்போதைய திமுக ஆட்சியிலும் கவனிக்க வேண்டியவர்களை கவனித்து குவாரிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் அதிக வெடிசத்தம் கேட்பதால் பாதிக்கப்படும் குடியிருப்பு பகுதியினர், திருநெல்வேலியில் நடந்த குவாரி விபத்து போன்று கோவை பகுதியிலும் நடக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சுகின்றனர். இதுகுறித்து ஏராளமான புகார்கள் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கப்பட்டும், நடவடிக்கையும் இல்லை.

நீர்நிலைகளாக மாற்றலாம்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறும்போது, “அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டியும், விதிகளை மீறியும் இஷ்டத்துக்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுகின்றன. ஒரு லாரியின் மூலம் 4 டன் முதல் 6 டன் வரை கற்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

குவாரிகளில் வைக்கப்படும் சக்தி வாய்ந்த வெடியால் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைகின்றனர். கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றுவதால், வழியெல்லாம் கற்கள் கொட்டி,கிராமப்புற சாலைகள் சேதமடைகின்றன. கனிமவளங்கள் கடத்தலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காலாவதியான கல்குவாரிகளை நீர்நிலைகளாக மாற்ற வேண்டும்” என்றார்.

கைவிடப்படும் தொழிலாளர்கள்!

குவாரி தொழிலாளர்கள் விபத்தில் சிக்கும் போது, பெரும்பாலும் குவாரி உரிமையாளர் இதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று ஒதுங்கிக் கொள்ளும் சூழல் உருவாகிவிடுகிறது. இதுகுறித்து,காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் இயக்க செயலாளர் அருங்குன்றம் சி.தேவராஜன் கூறுகையில்,“குவாரிகளில் சிறியது முதல் பெரிய அளவிலான விபத்துகள் அவ்வபோது நிகழ்கின்றன. பெரிய அளவில் நிகழும் போது வெளியில் தெரிகிறது.

மற்ற நேரங்களில் தெரிவதில்லை. கல்குவாரி ஒப்பந்தம், உரிமம் பெற்றவர், வெடிவைப்பவர், கற்களை வெட்டி எடுப்பவர், மேற்பரப்புக்கு கொண்டுவருபவர், வாகனம் இயக்குபவர், தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர் என தனித்தனியாக ஒப்பந்தம் கொடுத்துவிடுவதால், தொழிலாளர்களுக்கும் குவாரி உரிமம் பெற்றவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும். உயிரை பணயம் வைத்து கல் உடைக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காக்கும் நடைமுறைகள் வரவேண்டும்” என்றார்.

‘தொடர்ந்து கண்காணிக்கிறோம்’

இதுதொடர்பாக கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கல்குவாரி செயல்பட கனிம வளத்துறையின் அனுமதி மட்டுமின்றி வருவாய் துறை, புவியியல் துறை, வேளாண்மை துறை உட்பட பல்வேறு துறைகளின் அனுமதியை பெற வேண்டும். இதில் நிலத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல் தோண்டி எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

அதிகபட்சம் 70 மீட்டருக்கு கீழ் கற்களை தோண்டி எடுக்க அனுமதிக்கப்படுவது இல்லை. மாவட்டங்கள் தோறும் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். கல்குவாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட அளவில், வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விதிகளை மீறி செயல்படும் குவாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரிகள் குறித்த புகார்களை, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

குவாரிகள் இயங்கும் நிலையில், அவற்றின் மூலம் அரசுக்கும், தனியாருக்கும் வருவாய் கிடைக்கும் போது, பணியாற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதே போல், கனிமம் அதிகளவில் சுரண்டப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். இதற்கு அரசு கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

கிணறு வடிவில் தோண்டுவதை தவிர்த்து படிக்கட்டு வடிவில் வெட்டியெடுக்க வேண்டும்

கல்குவாரியில் சூப்பர்வைசராக பணியாற்றி ஓய்வு பெற்ற வரும், சமூக செயல்பாட்டாளருமான எஸ்.சி.சண் முகம் கூறும்போது,“கல் குவாரிகளில் இருந்து கனிமவளங்கள் எடுக்கும் முறை அரசுக்கு வருவாய் கிடைப்பதாக இருக்க வேண்டும். அதற்கு கனிமவளங்கள் சட்ட விதிகளை பின்பற்றி எடுக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் அரசு விதிகளை மீறி தான், கல்குவாரிகளில் கனிமங்கள் எடுக்கப்படுகின்றன. கல்குவாரிகளில் கல் வெட்டி எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.750 முதல் ரூ.1000-ம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு பி.எஃப், இ.எஸ்.ஐ வசதி, இன்சூரன்ஸ் ஆகியவை முறையாக ஏற்படுத்தி தர வேண்டும்.

அவர்களுக்கு என பிரத்யேக பணிநேரத்தை பின்பற்ற வேண்டும். கல்குவாரிகளில் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தலைக்கவசம், கையுறை, காலணிஆகியவற்றை பெரும்பாலான குவாரிகளில் தருவதில்லை. பாதுகாப்பு உபகரணங்களை தவறாமல் வழங்க வேண்டும். கல்குவாரிகளில் விபத்து சம்பவங்களைத் தடுக்க, கிணறு வடிவில் தரையை தோண்டி எடுப்பதை தவிர்த்து, படிக்கட்டு வடிவில் தோண்டி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது 30 அடிக்கு கீழே தோண்டுவதை தவிர்க்கலாம்.

குறைந்தபட்சம் 10 முதல் 15 ஏக்கருக்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். அப்போது தான் முறையாக கனிமவளங்கள் எடுக்கப்படும். கேரளாவில் உள்ளது போல், குவாரிகளில் இருந்து கனிமவளங்கள் எடுத்துச் செல்வதை ஆன்லைன் முறையில் கண்காணிக்க வேண்டும். அனுமதி பெறும் போது அளித்தவரைபட அளவின் படி தான் கனிமங்களை எடுக்கின்றனரா என்பதை அதிகாரிகள் குழுவினர் கண்காணிக்க வேண்டும்.மேலும், கல்குவாரிகளில் வெடிமருந்துகளை அதற்கென பிரத்யேக பயிற்சி பெற்றவரை பயன்படுத்தியே வைக்க வேண்டும்,” என்றார்.

80 சதவீதம் மலை வெட்டி எடுக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் இயக்க செயலாளர் அருங்குன்றம் சி.தேவராஜன் கூறுகையில், “காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாமூர் சுற்றுவட்டாரப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளாக குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இப்பகுதிகளில் இருந்த மலைகள் 80 சதவீதம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் குவாரி அமைந்திருக்க வேண்டும் என்பது உட்பட எந்த விதிகளும் அங்கு மதிக்கப்படுவதில்லை.

5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என குவாரி குத்தகை விடப்படுகிறது. ஆனால், எவ்வளவு அளவுதான் வெட்டி எடுக்க வேண்டும் என்பதற்கான வரன்முறை இல்லாமல் அனுமதியளிக்கப்படுகிறது. இதனால் பெரும் பள்ளங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டால் கூட அளவீடுகள் தரப்படுவதில்லை. இங்குள்ள ஒரு சில குவாரிகளை நாங்கள் போராட்டம் நடத்தி தடுத்துள்ளோம். செயல்பாட்டில் உள்ள குவாரிகள் குறித்து புகார் அளிக்கப்பட்டும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.

- கி.கணேஷ், அ.அருள்தாசன், டி.ஜி.ரகுபதி



Read in source website

சிறு குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதல்வர் 08.05.22 அன்று சட்டமன்றத்தில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதலாவது, அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்குக் காலை உணவு இலவசமாக வழங்கப்படும். மற்றொன்று, ஆறு வயதுக்குக் குறைவாக உள்ள, ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்ட குழந்தைகளைக் கண்டறிந்து, அந்தப் பிரச்சினையைத் தீர்க்க மருத்துவப் பரிசோதனை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரவேற்கத்தக்க அறிவிப்புகள் என்றாலும் கீழ்க்கண்ட விஷயங்களைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் திட்டத்தின் நோக்கங்கள் சிறப்புற நிறைவேறும்.

காலை உணவுத் திட்டம்

கண் விழித்தது முதல் சுறுசுறுப்பாக குழந்தைகள் இயங்குவதற்கான சக்தி காலை உணவிலிருந்து கிடைக்கிறது. ஆனால், உணவு உண்பதன் நோக்கம், வயிற்றை நிரப்புவது மட்டும் அல்ல. ஆரோக்கியத்துக்கான கலோரி மற்றும் புரதச்சத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கும் வைட்டமினும் தாதுப்பொருட்களும் நார்ச்சத்தும் உணவிலிருந்து கிடைக்க வேண்டும். நுண்சத்துக்களில் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, ‘போலேட்’, ‘பி 12’ மிக முக்கியமானவை. இரும்புச் சத்து மற்றும் ‘போலேட்’ நம் உடலுக்கான ரத்த உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் ஏ கண் பார்வைக்குத் தேவையானது.

‘பி 12’ நமது டி.என்.ஏ.வில் முக்கியப் பங்குவகிக்கிறது. தேசிய அளவில் குழந்தைகளின் ஊட்டசத்து நிலை குறித்து எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், தமிழ்நாட்டில் 5 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளில் 10% வரை ரத்தசோகையும், வைட்டமின் ஏ பற்றாக்குறையும், 41% பேர் ‘போலேட்’ பற்றாக்குறையும், 7% பேர் ‘பி 12’ பற்றாக்குறையும் உடையவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இவற்றில் ‘பி 12’ தவிர, இதர சத்துகள் காய்கறி, பழங்களிலிருந்து கிடைக்கின்றன.

ஒரு வேளை உணவில், ஒரு நாளைக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் கிடைக்க வேண்டும். இதன் அடிப்படையில் தற்சமயம் ஆரம்பப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு 450 கலோரியும் 12 கிராம் புரதமும் கொடுக்க வல்லதாக உள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் 50 கிராம் காய்கறியைக் கொடுப்பதற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. சமைப்பதற்குத் தேவையான வைட்டமின் ‘ஏ’ செறிவூட்டப்பட்ட பாமாயிலும், அயோடின், இரும்புச் சத்துடன் கூடிய உப்பும் வழங்கப்படுகிறது.

வாரத்தில் ஐந்து நாட்கள் சனி, ஞாயிறு தவிர உணவு வழங்கப்படுகிறது. முதல் ஐந்து நாட்கள் வெஜிடபிள் பிரியாணி, கருப்புக் கொண்டைக்கடலை புலாவ், தக்காளி சாதம், சாதம் காய்கறிகளுடன் கூடிய சாம்பார், கறிவேப்பிலை சாதம் வழங்கப்படுகிறது. அடுத்த ஐந்து நாட்கள் சாம்பார் சாதம், சோயாவிலிருந்து தயாரிக்கப்பட்ட ‘மீல் மேக்கர்’ சேர்க்கப்பட்ட சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் வழங்கப்படுகிறது. எல்லா நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது. உணவைத் தயாரிப்பதற்கான செய்முறை விளக்கம் கைதேர்ந்த சமையல் கலை நிபுணர்கள் மூலம் மதிய உணவுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கலோரியும் புரதமும் அளிக்கும் அரிசி, எண்ணெய், முட்டை, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை அரசு தேவையான அளவில் நேரடியாகப் பள்ளிகளுக்கு வழங்கிவிடுகிறது. மற்ற சத்துக்கள் அடங்கிய இதர காய்கறிகளை வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் 50 கிராம் காய்கறி கொடுப்பதற்கு ரூ 1.06-ம், தாளிக்க மற்றும் இதர மசாலாப் பொருட்கள் வாங்குவதற்கு 40 பைசாவும், சமையல் எரிவாயுவுக்கு 61 பைசாவும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில், மதிய உணவுப் பணியாளர் காய்கறியையும் மசாலாப் பொருட்களையும் அன்றாடம் வாங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த நிதி ஒதுக்கீடு மேற்கூறிய பொருட்களை வாங்குவதற்குப் போதாத நிலையில், கூடுதலாக 50 கிராம் காய்கறி வாங்குவது சாத்தியமற்றது. மேலும், பல சமயங்களில் அன்றாடம் ஏற்படும் விலைவாசி உயர்வால் இந்த ஒதுக்கீட்டை வைத்து குழந்தைகளின் காய்கறிக்கான தேவையைப் பூர்த்திசெய்ய முடிவதில்லை. இதனாலேயே பெரும்பாலும் ஒவ்வொரு குழந்தைக்கும் 50 கிராம் காய்கறிக்குப் பதில் சாம்பாரில் போடப்பட்ட ஓரிரு துண்டங்களே கிடைக்கின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும் 50 கிராம் காய்கறி பொரியலாகவோ வேறு வடிவிலோ கிடைக்க வேண்டும். மதிய உணவிலிருந்து கலோரியும் புரதமும் கிடைப்பதைப் போல் நுண்ணூட்டச்சத்து கிடைப்பதில்லை என்பது ஊட்டச்சத்து நிபுணர்களாலும் ஆய்வறிக்கைகளிலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

நுண்சத்துப் பற்றாக்குறையை ஈடுகட்டவும், மாணவர்களுக்குக் காய்கறி வளர்ப்பதற்குப் பயிற்சி அளிக்கவும் 2019-ல் தமிழ்நாடு அரசு சுமார் 10,000 பள்ளி வளாகங்களில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்கான திட்டத்தை ஏற்படுத்தியது. இதன்படி மதிய உணவு வழங்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் காய்கறித் தோட்டம் அமைப்பதற்காக ரூ. 5.000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றாலும், அனைத்துக் குழந்தைகளின் அன்றாட நுண்சத்துத் தேவையைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு எல்லா பள்ளிகளாலும் காய்கறியை உற்பத்தி செய்ய முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஊட்டச்சத்து இலக்கை அடைவது என்பது வேறு; விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது வேறு.

மற்ற உணவுப் பொருட்களை வழங்குவதுபோல அரசே தேவையான காய்கறிகளையும் மையங்களுக்கு நேரடியாக வழங்குவது குறித்துப் பரிசீலனை செய்ய வேண்டும். அந்தந்த நகரங்களிலும் கிராமங்களிலும் இயங்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலமோ, சிறு குறு விவசாய அமைப்புகளின் மூலமாகவோ ஒப்பந்த அடிப்படையில் இம்முயற்சியில் ஈடுபடலாம். காய்கறிகள் தவிர, ஊட்டச்சத்து நிறைந்த கொய்யா, பப்பாளி போன்ற பழங்களையும் குழந்தைகளுக்கு வழங்கலாம். இது பல விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்வதுடன் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சமையல் எரிவாயு மற்றும் மசாலா பொருட்களுக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிட்ட கால இடைவெளியில் (உம்) மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டுத் திருத்தப்பட வேண்டும். குழந்தைகளுக்கு வாய்க்கு ருசியான உணவு வழங்குவதில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் போலவே நுண்சத்துக்களும் தேவையான அளவில் கிடைப்பதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும்.

- ரமா நாராயணன், சமூக ஊட்டச்சத்து நல ஆய்வாளர்; நித்யா டி.ஜே., மா.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிவியலராகப் பணிபுரிகிறார்.

தொடர்புக்கு: narayananrama6@gmail.com, djnithya@mssrf.res.in



Read in source website

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு மே 21 அன்று தேர்தல் நடைபெற்றது. அன்றிரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அடுத்த நாள் வெளியான முடிவுகள் ஆளும் லிபரல் கட்சிக்கு (வலதுசாரி) சாதகமாக இல்லை. அதே வேளையில், எதிரணியில் முன்னேறிக்கொண்டிருந்த தொழிற் கட்சி தனிப் பெரும்பான்மை பெறுமா என்பதும் ஐயமாக இருந்தது. எனினும், பிரதமர் ஸ்காட் மோரிசன் பதவி விலகினார்; லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் துறந்தார்.

மூன்றாம் நாள், அதுகாறும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஆண்டனி அல்பனேசே ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராகப் பதவியேற்றார். நான்காம் நாள் அவர் டோக்கியோவுக்குப் பயணமானார். அங்கேதான் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளின் கூட்டமைப்பான நாற்கரத்தின் (Quad) மாநாடு நடக்கிறது. புதிய பிரதமரை ஜோ பைடன் வரவேற்றார். அப்போதும் 70% வாக்குகளே எண்ணப்பட்டிருந்தன. தொழிற் கட்சி பெரும்பான்மைக் கோட்டுக்கு அருகில் இருந்தது; கோட்டைத் தாண்டவில்லை.



Read in source website

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணமும் அங்கு நடந்த இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சிக் கூட்டமைப்பின் (ஐபிஇஎஃப்) தொடக்க விழாவில் அவர் பங்கெடுத்திருப்பதும் பொருளாதாரரீதியில் முக்கியத்துவம் கொண்டது. அமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள இந்தப் பொருளாதாரத் திட்டத்தில் பங்கெடுக்க இந்தியா தயாராக இருப்பதை இப்பயணம் உணர்த்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ, ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனேசே ஆகியோருடன் இந்தியப் பிரதமர் மோடியும் கலந்துகொண்ட இவ்வமைப்பின் தொடக்க விழாவில் மேலும் 10 நாடுகளின் தலைவர்கள் காணொளி வாயிலாகக் கலந்துகொண்டுள்ளனர். வர்த்தகம், சந்தையின் எதிர்பாராத இடர்ப்பாடுகளிலிருந்து தாக்குப்பிடிக்கும் உறுதிநிலை, இயற்கையை மாசுபடுத்தாத ஆற்றல்வளங்கள், கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகிய நான்கும் இந்தப் பொருளாதாரத் திட்டத்தின் முக்கியக் கூறுகளாக அமைந்துள்ளன.



Read in source website