DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 25-11-2022

தமிழக பள்ளிக் கல்வியில் பொதுத் தோ்வு எழுதவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு அகமதிப்பீடு வழங்குவது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு அடுத்தாண்டு மாா்ச் 13-இல் தொடங்கி ஏப்ரல் 5 வரை நடைபெறவுள்ளது. இந்த தோ்வை சுமாா் 17.3 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.

தற்போது தோ்வு மையங்களை இறுதி செய்தல், மாணவா் பெயா்ப் பட்டியல் தயாரிப்பு உள்பட தோ்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொதுத்தோ்வு எழுதவுள்ள பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கான அக மதிப்பெண் கணக்கீடு தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தோ்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் செய்முறைத் தோ்வில்லாத பாடங்களுக்கு 10 மதிப்பெண்கள் அகமதிப்பீடாக வழங்கப்படும். மாணவா் வருகைப்பதிவுக்கு 2, பருவத் தோ்வுக்கு 4, செயல்திட்ட, களப்பணிகளுக்கு 2, என்சிசி, கலை, இலக்கிய போன்ற கல்வி இணை செயல்பாடுகளுக்கு 2 என மொத்தம் 10 மதிப்பெண் கணக்கிடப்படும்.

செய்முறை தோ்வுள்ள பாடங்களுக்கு 25 மதிப்பெண்கள் அகமதிப்பீடாக அளிக்கப்படும். அதில், மாணவா் வருகைப் பதிவுக்கு 5, பருவத் தோ்வுக்கு 10, செயல்திட்ட, களப் பணிகளுக்கு 5, கல்வி இணை செயல்பாடுகளுக்கு 5 என மொத்தம் 25 மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

இந்த வழிகாட்டுதலை பின்பற்றி மாணவா்களுக்கான அகமதிப்பீடுகளை விரைந்து வழங்குவதற்கு தேவையான பணிகளை தலைமையாசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: வழக்கு விசாரணையின்போது, பெண் மனுதாரரிடம் வழக்குரைஞர் பண்பற்ற முறையில் கேள்வி எழுப்பியதற்காக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்ரவர்த்தி மன்னிப்புக் கோரினார்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் இந்த சம்பவம் நடந்ததால், மன்னிப்புக் கோருவதாகவும் நீதிபதி பரத சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

மூன்று பெண்களுக்கு தந்தையான நபர் மீது உரிமை குறித்தும், அவர்களின் தாயை அவமதிக்கும் வகையிலும், பாகப் பிரிவினை வழக்கு விசாரணையின்போது வழக்குரைஞர் ஒருவர் குறுக்கு விசாரணை செய்த போது, பெண் மனுதாரரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது பண்பற்ற முறையில் எழுப்பப்பட்ட கேள்வி என்பதால், நீதிபதி பரத சக்ரவர்த்தி மன்னிப்புக் கோரினார்.  குறுக்குவிசாரணை நடத்துவது மனுதாரர்களை அவமானப்படுத்தவோ, அவர்களது மனதில் காயத்தை ஏற்படுத்தவோ அல்ல என்று கூறியிருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி, உரிமைக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தைய படுகொலை செய்யும் வகையில் வழக்குரைஞர்களின் கேள்விகள் அமையக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

என்ன வழக்கு?
தருமபுரி மாவட்டத்தில் மணி என்பவரின் சொத்து பாகப்பிரிவினை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நடைபெற்றது.

இந்த வழக்கில், குறுக்கு விசாரணை செய்த, இரண்டாவது மனைவியின் மகன் தரப்பு வழக்குரைஞர், முதல் மனைவியின் மூன்று மகள்களுக்கும் தந்தை மீதான உரிமை குறித்தும், தாயை அவமதிக்கும் வகையிலும் கேள்வி எழுப்பினார்.

இதற்காக, வழக்குரைஞர் பண்பற்ற முறையில் கேள்வி கேட்டதற்காக, உயர் நீதிமன்றம் மன்னிப்புக் கோருவதாக நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
 



Read in source website

ஆன்ட்டி பயோட்டிக் மருந்துகளின் எதிா்விளைவால் உலகம் முழுவதும் 50 லட்சம் போ் உயிரிழப்பதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

சா்வதேச ஆன்ட்டி பயோட்டிக் விழிப்புணா்வு வார சிறப்பு நிகழ்ச்சி சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் டாக்டா் ஆா்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற அந்நிகழ்வில், ஆன்ட்டி பயோட்டிக் மருந்துகளால் ஏற்படும் எதிா்விளைவுகள், அபாயங்கள், தவிா்ப்பு முறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

சிறப்பு மருத்துவ நிபுணா் உஷா கிருஷ்ணன் அதில் கலந்துகொண்டு உரையாற்றினாா். மருத்துவா்களின் பரிந்துரையின்றி ஆன்ட்டி பயோட்டிக் மருந்துகளை உட்கொள்வதால் உலகம் முழுவதும் 50 லட்சம் போ் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அவா் அப்போது கூறினாா்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் டாக்டா் விஜய் சதீஷ்குமாா், கண்காணிப்பாளா் டாக்டா் ஆதிலட்சுமி, நுண்ணுயிா் மருத்துவப் பிரிவு பேராசிரியா் டாக்டா் விஜயலட்சுமி, ஒருங்கிணைப்பு அலுவலா் டாக்டா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.



Read in source website


இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ 13 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஐரோப்பாவில் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ள முதல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விப்ரோ திகழ்கிறது.

விப்ரோ நிறுவனத்தில் இந்த ஒப்புதலால் பிரான்ஸ், சுவீடன், பின்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 13 ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஊழியர்கள் சங்கம் அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டில் பணியாளர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளைச் பணியாளர்கள் தொழிற்சங்கம் சங்கம் அமைக்க நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்த தொழிற்சங்கம் பணியாளர்களை பாதிக்கும் பிரச்னைகள், பணிகள் குறித்து விவாதங்கள் மற்றும் விவாதங்களை நடத்த அனுமதிக்கிறது.

அறிக்கைகளின்படி, விப்ரோவில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றன. இந்த தொழிற்சங்கமானது தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு செயல்படும்.

இந்த தொழிற்சங்கத்தின் முக்கிய நோக்கம், அனைத்து நாடுகளின் பணியாளர்களுடன் நீடித்த பணி உறவை உருவாக்குவது, நாடு கடந்த நலன் சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவதும் மற்றும் விவாதிப்பது என விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும், தொழிற்சங்கத்தின் முதல் கூட்டம் 2024 நிதியாண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் தொழிற்சங்கத்தின் தலைவர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து விப்ரோவுக்குத் தெரிவிக்கும். பின்னர் தொழிற்சங்க தலைவர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்.  விப்ரோ பணியாளர்களிடம் வணிக முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்படும். 

தற்போதுள்ள தேசிய சட்டம் மற்றும் நடைமுறைக்கு ஏற்ப ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பிய பொருளாதார பகுதி ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட பணியாளர் பிரதிநிதிகளால் தொழிற்சங்கம் வழிநடத்தப்படும் என்றும் விப்ரோ தெரிவித்துள்ளது. 

முந்தைய அறிக்கைகளின்படி, செப்டம்பரில், ஐரோப்பாவில் உள்ள திறமையின்மையை நிவர்த்தி செய்வதற்காக மறுசீரமைப்புக் கட்டணமாக ரூ.136 கோடியை விப்ரோ நிறுவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. 



Read in source website

ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தை அடக்குவதற்காக அந்த நாட்டு அரசு கடுமையான அடக்குமுறையைக் கையாண்டு வருவதைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றியது.

ஜொ்மனி, ஐஸ்லாந்து நாடுகளால் கொண்டு வரப்பட்டு, 25 நாடுகளால் வழிமொழியப்பட்ட அந்தத் தீா்மானத்தில், போராட்டத்தின்போது போலீஸாரின் அத்துமீறல் தொடா்பாக நடுநிலையான விசாரணையை நடத்தக் கூடிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தலையை மறைக்கும் ஹிஜாப் அணியாததற்காக ஈரானின் சா்ச்சைக்குரிய கலாசாரக் காவலா்களால் கடந்த செப்டம்பா் மாதம் கைது செய்யப்பட்ட இளம்பெண் மாஷா அமீனி (22), காவலில் உயிரிழந்தாா். அதையடுத்து, அரசின் ஆடைக் கட்டுப்பாட்டு சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் வெடித்தது.

இதில் 51 சிறாா் உள்பட 416 பலியானதாகக் கூறப்படுகிறது.



Read in source website

பிரிட்டனில் உயா் கல்வி படிக்கும் வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கையில் முதல்முறையாக சீனாவை இந்தியா விஞ்சியிருப்பது, அந்த நாட்டின் குடியேற்ற அலுவலக புள்ளிவிவரம் மூலமாக தெரியவந்துள்ளது.

பிரிட்டனின் தேசிய புள்ளிவிவரத்துக்கான அலுவலகம் வெளியிட்ட இந்த தகவலில் மேலும் கூறியிருப்பதாவது:

பிரிட்டனில் வெளிநாட்டினருக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவது கடந்த சில ஆண்டுகளில் 273 சதவீதமாக உயா்த்தப்பட்டிருப்பதன் மூலமாக, உயா் கல்வி படிக்க வரும் வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கை பன்மடங்காக உயா்ந்துள்ளது.

இதில், திறன் பணியாளா்களுக்கான நுழைவு இசைவு மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கான நுழைவு இசைவு பிரிவுகளுக்கான நாடுகளின் பட்டியிலில் இந்தியா தொடா்ந்து முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டில் திறன் பணியாளா் பிரிவில் 56,042 நுழைவு இசைவுகள் இந்தியா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல, மருத்துவப் பணியாளா்களுக்கான பிரிவில் அளிக்கப்பட்ட மொத்த நுழைவு இசைவுகளில் 36 சதவீதம் இந்தியா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, கல்விக்கான நுழைவு இசைவு பிரிவிலும் இந்தியா தற்போது முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டில் செப்டம்பா் வரையிலான கால கட்டத்தில் மட்டும் 1,27,731 இந்திய மாணவா்களுக்கு உயா்கல்வி மேற்கொள்வதற்கான நுழைவு இசைவு அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 237 சதவீதம் (93,470 நுழைவு இசைவுகள்) கூடுதலாகும்.

இதில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா்களுக்கு 1,16,476 கல்வி நுழைவு இசைவுகள் வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2 சதவீதம் கூடுதலாகும்.

மேலும், பிரிட்டனில் பட்டப் படிப்பு மேற்கொண்டு, படிப்பின் இறுதியில் அங்கேயே வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ‘பட்டதாரி வழி நுழைவு இசைவு’ பெற்றதிலும் இந்திய மாணவா்களே முன்னிலை வகிக்கின்றனா். இதில் 41 சதவீத நுழைவு இசைவுகள் இந்தியா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 3 மடங்குக்கு மேல் பிரிட்டன் கல்வி நுழைவு இசைவு வழங்கப்பட்டிருப்பது புள்ளிவிவரம் மூலமாக தெரியவந்துள்ளது.



Read in source website

அமேசான் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஆன்லைன் கற்றல் தளமான 'அமேசான் அகாதெமி'யை மூடுவதாக அறிவித்துள்ளது. 

கரோனா காலத்தில் ஆன்லைன் கற்றல் மூலமாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் வளர்ச்சியடைந்த நிலையில் அமேசானும் 'அமேசான் அகாதெமி' என்ற புதிய கற்றல் தளத்தைத் தொடங்கியது. 

முன்னதாக இந்த கற்றல் நிறுவனம் 'ஜேஇஇ ரெடி' என்று அழைக்கப்பட்டது. உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான போட்டித்தேர்வு, குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு(JEE)க்கு பயிற்சியை வழங்கி வந்தது. 

இந்நிலையில்தான் 'அமேசான் அகாதெமி'யை மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

அமேசான் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், 'வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக அமேசான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்குவதற்காக அவ்வப்போது மதிப்பீடு செய்து வருகிறது. 

இதையும் படிக்க | மெட்டா, ட்விட்டர், கூகுள் வரிசையில் 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய எச்பி முடிவு!

தயாரிப்புகள், சேவைகளின் முன்னேற்றம் மற்றும் திறனை மேம்படுத்தும் வகையில், மதிப்பீட்டின் அடிப்படையில் அமேசான் அகாதெமியை நிறுத்த முடிவு செய்துள்ளோம்' என்று கூறினார். 

அமேசான் கடந்த ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளித்து வருகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் படிப்படியாக இந்த சேவையை குறைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

'இந்த முடிவால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. தற்போது பயிற்சியில் உள்ள மாணவர்கள் 2024 அக்டோபர் வரை பயிற்சியைப் பெற முடியும். இந்தாண்டு தொகுப்பில்(பேட்ச்) சேர்ந்துள்ளவர்கள் தங்கள் முழுக்கட்டணத்தையும் திரும்பப் பெற முடியும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் பொருளாதார சூழ்நிலையை சீர்செய்யும் பொருட்டு மெட்டா, ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள், பைஜுஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும்  ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் அமேசான் இந்த முடிவை எடுத்துள்ளது.

பைஜுஸ்(Byjus) சமீபத்தில் 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. அன்அகாடமி(UnAcademy)யும் அதன் பணியாளர்களில் 10%, அதாவது சுமார் 350 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகக் கூறியது. எட்டெக்(Edtech) தளம் சில மாதங்களுக்கு முன்பு நடைமுறையில் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. 



Read in source website

சென்னை ராம்பிரகாஷ் வாலிபால் அகாதெமி, காஞ்சிபுரம் மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் தமிழ்நாடு பள்ளி லீக் சாம்பியன்ஷிப் போட்டி வரும் டிச. 1 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக அகாதெமியின் தலைவரும், இந்திய வாலிபால் சங்க சோ்மனுமான எஸ்.வாசுதேவன், செயலாளா் முகமது ஜின்னா கூறியது:

தமிழ்நாடு பள்ளிகள் வாலிபால் லீக் போட்டி மயிலாப்பூா் சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. அடிமட்டத்தில் வாலிபாலை புகுத்த வேண்டும் என்ற நிலையில் லீக் போட்டி நடத்தப்படுகிறது.

சந்தோம் பள்ளியின் 200-ஆவது ஆண்டை முன்னிட்டு வெற்றி பெறும் அணிக்கு கோப்பை வழங்கப்படுகிறது. முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகளுக்கு முறையே ரூ.10,000, ரூ.7,000, ரூ.5,000, ரூ.4,000-மும், பெண்கள் பிரிவில் ரூ.7,000, ரூ.5,000, ரூ.4,000, ரூ.3,000 ரொக்கப்பரிசு தரப்படும்.

லீக் போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள், ஆல்பா்ட் ராஜ் உடற்கல்வி இயக்குநா் (சாந்தோம் பள்ளி), 89390 08347, அசோக் 91769 60402 என்ற எண்களில் நவ. 28-க்குள் பதிவு செய்யலாம்.

 



Read in source website

 

ஒருநாள் கிரிக்கெட்டில் இலக்கை வெற்றிகரமாக விரட்டியபோது அதிக ரன்கள் எடுத்த நெ.5 பேட்டர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார்  நியூசிலாந்து வீரர் டாம் லதம்.

முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி. ஆக்லாந்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்கள். 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயர் ஐயர் 76 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 80 ரன்களும் ஷிகர் தவன், 77 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 72 ரன்களும் ஷுப்மன் கில் 50 ரன்களும் எடுத்தார்கள். வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து அசத்தினார். 

47.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி. டாம் லதம் 145, வில்லியம்சன் 94 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இருவரும் 27.2 ஓவர்களில் 221 ரன்கள் கூட்டணி அமைத்து நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற உதவினார்கள். ஆட்ட நாயகன் விருதை டாம் லதம் வென்றார். 2-வது ஒருநாள் ஆட்டம் ஞாயிறன்று ஹேமில்டனில் நடைபெறவுள்ளது.

ஒருநாள்: இலக்கை வெற்றிகரமாக விரட்டியபோது அதிக ரன்கள் எடுத்த நெ.5 அல்லது அதற்குக் கீழே உள்ள பேட்டர்கள்:

145* டாம் லதம் vs இந்தியா, 2022
135* சிகந்தர் ராஸா  vs வங்கதேசம், 2022
127* மைக்கேல் பிரேஸ்வெல்  vs அயர்லாந்து, 2022
124* மார்கன்  vs அயர்லாந்து, 2013
124, ரிகார்டோ பவல்  vs இந்தியா, 1999



Read in source website

சென்னை: திருமழிசை புதுநகர் திட்டத்தில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 17 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இதில் 12,000 அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனை, பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. மேலும், நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனையம் அமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு 15 நிதிக்குழு மானியத்தில் புதிய நகரங்களை உருவாக்க தமிழகத்திற்கு ரூ.8,000 கோடி நிதி உதவி அளிக்கிறது. ஒரு நகரத்திற்கு ரூ.1000 கோடி என்ற அடிப்படையில் தமிழகத்தில் மொத்தம் 8 புதிய நகரங்கள் உருவாக்கப்படவுள்ளது. இதில் திருமழிசை, மீஞ்சூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் புதிய நகரங்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதில் திருமழிசை புதுநகர் திட்டத்தை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் தயார் செய்து வருகிறது. இந்தப் புதுநகர் திட்டத்தில் 17 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி செம்பரம்பாக்கம், குந்தம்பாக்கம், நரசிங்கபுரம், நசரத்பேட்டை உள்ளிட்ட 17 கிராமங்களை இணைந்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



Read in source website

சென்னை: சென்னை மாநகராட்சியில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சார்ஜிங் நிலையங்கள் தொடர்பாக மாஸ்டர் பிளான் தயாரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி போன்ற பெருநகரங்களில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை பயன்படுத்த பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழக அரசு முதல் கட்டமாக சென்னையில் மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதைத் தவிர்த்து மின்சார இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், சென்னையில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் வரும் காலங்களில் மின்சார வாகனங்கள் எண்ணிக்கை எந்த அளவுக்கு உயரும், இதற்கு தேவையான சார்ஜிங் வசதிகள் உள்ளிட்டவை தொடர்பாக மாஸ்டர் பிளான் ஒன்றை தயார் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப் திட்டத்தின் கீழ் இந்த மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படவுள்ளது. விரைவில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை சென்னை மாநகராட்சி நடத்தவுள்ளது. தமிழக அரசு ஏற்கெனவே 2019-ம் ஆண்டு மின்சார வாகனக் கொள்கையை வெளியிட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட கொள்கை விரைவில் வெளியாக உள்ளது. இந்த கொள்கையின் அடிப்படையில் இந்த மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படவுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:

மின்சார வாகனங்கள்

  • பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பயணிக்க கூடிய ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றுவது.
  • அரசு பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்றுவது.
  • கல்வி நிறுவனங்களின் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவது.
  • சிறிய ரக சரக்கு வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவது.
  • இரு சக்கர மின்சார வாகனங்களுக்கு பல்வேறு வரிச் சலுகை அளிப்பது.

சார்ஜிங் நிலையங்கள்

  • 3*3 Grid அளவுள்ள சார்ஜிங் நிலையங்கள் அமைப்பது.
  • சாலைகளில் 25 கிலோ மீட்டருக்கு ஒரு சார்ஜிங் நிலையம்.
  • அரசு அலுவலகங்களில் சார்ஜிங் நிலையம்.
  • புதிய கட்டிடங்களில் சார்ஜிங் வசதி உருவாக்க கட்டிட விதிகளில் திருத்தம்.
  • 50-க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஊக்குவிப்பது.
  • தியேட்டர்கள், வணிக வளாகம், உணவகம் உள்ளிட்ட இடங்களில் சார்ஜி நிலையங்கள் அமைப்பது.

இவை தொடர்பாக விரிவான ஆய்வு செய்து மின்சார வாகனங்களுக்கான மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படவுள்ளது.



Read in source website

மதுரை: தமிழக சுற்றுலா இடங்களுக்கு அனைத்து வகை மாற்றத்திறனாளிகளும் எளிதாகச் செல்ல தனி வசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்நத வழக்கறிஞர் கே.ஆர்.ராஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் அனைத்து சுற்றுலா இடங்களுக்கும், குறிப்பாக குற்றால அருவிகளுக்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் சுலபமாக செல்வதற்கு போதுமான வசதி ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் திலக்குமார் வாதிடுகையில், “தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரையின் அழகை அருகே சென்று ரசிக்கவும், உணரவும் கடற்கரையில் நிரந்தர சாய்வு பாதை வசதி ஏற்படுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளிடம் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. அனைத்து சுற்றுலா இடங்களையும் மாற்றத்திறனாளிகள் சுலபமாக செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், "கேரளாவில் மாற்றுத்திறனாளிகள் சுற்றுலா இடங்களுக்கு சுலபமாக செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு நிபுணர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் கருத்துகள் கேட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சுலபமாக செல்வதற்கு தேவையான வழிமுறைகளை வகுக்க வேண்டும். அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் சுலபமாக சென்றடையும் வகையில் மாற்றுத்திறனாளிகள் கையாளும் வகையில் சுற்றுலா வழிகாட்டி புத்தகமும் வெளியிட வேண்டும்" என உத்தரவிட்டனர்.



Read in source website

சென்னை: அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுதான் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் இயற்றப்பட்டதாக, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

இணையவழி சூதாட்டங்களை தடை செய்யும் சட்டம் தொடர்பாக ஆளுநரின் கேள்விகளுக்கு அளித்த விளக்கம் தொடர்பாக செய்தியாளர்களிடம் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விளக்கினார். அப்போது அவர் கூறியது: “ஏற்கெனவே இதே பொருளில் பிறப்பிக்கப்பட்ட சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு உட்பட்டதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்திருந்த தீர்ப்பில் உள்ள விஷயங்கள் இந்தச் சட்ட முன்வடிவில் சரியாக பதிலளிக்கப்படவில்லை. குறிப்பாக, Game of Chance and Skill என்ற வித்தியாசம் இல்லாமல் முழுமையான தடை என்பது, அரசியலமைப்புச் சட்டக் கூறு 19 (1) (g)-க்கு எதிரானதாகும்” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், “இணையவழி சூதாட்டங்களை தடை செய்யும் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு உட்பட்டுதான் இருக்கிறதா என்பதை பொறுத்தவரை, அரசியலமைச் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள பட்டியல் 2-ல் உள்ளவற்றை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. Betting and Gambling, Public Order, Public Health, Theaters and dramatic performances ஆகியவை அனைத்தும் மாநிலப் பட்டியலில் (Seventh Schedule List II- State List – Entries 34, 1, 6, 33) உள்ளது என்பதை குறிப்பிட்டு அதனடிப்படையில்தான் இந்தச் சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டது என்பதால், இந்தச் சட்டம் எந்த வகையிலும் அரசியலமைப்பின் கூறுகளுக்கு எதிராக இல்லை. அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே இந்த இணையவெளி சூதாட்ட தடை சட்ட முன்வடிவு அமைந்துள்ளது.

ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுகளை வித்தியாசப்படுத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டதை கருத்தில் கொண்டுதான் தற்போதைய அவசர சட்டத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை மட்டும் தடைசெய்வதற்கான சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டுள்ளது. முகப்புரையில் (Preamble) இது குறித்தும், இப்பொருள் குறித்த வல்லுநர் குழு அளித்த அறிக்கை மற்றும் பல்வேறு ஆராய்ச்சியின் அடிப்படையிலான தரவுகளையும் தெளிவாக குறிப்பிட்டுதான், இந்த அவசர சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

“திறமையின் அடிப்படையிலான விளையாட்டுகளை தடை செய்யும் முடிவு என்பது அரசியலமைச் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள பட்டியல் 2-ல் உள்ள 34-வது கூற்றில் அமையும் என்று குறிப்பிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது கருத்தில் கொள்ளப்படவில்லை” என்று கேட்டப்பட்டதற்கு, “ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுகளை வித்தியாசப்படுத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டதை கருத்தில் கொண்டுதான் தற்போதைய அவசர சட்டத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை மட்டும் தடைசெய்வதற்கான சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டுள்ளது. முகப்புரையில் (Preamble) இது குறித்து தெளிவாகக் குறிப்பிட்டுதான், இந்த அவசர சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டதுஎன்பது நினைவுகூரத்தக்கது.

நேரில் (ஆப்லைனில்) விளையாடும்போது யாருடன் மற்றும் எவ்வாறு விளையாடுகிறோம் என்பது தெரிந்து விளையாட வாய்ப்புள்ளது. ஆனால், ஆன்லைனில் (இணைய வெளியில்) விளையாடும்போது, அந்த விளையாட்டை உருவாக்கியவர் எழுதும் செயல்திட்டத்தின் (Programme) அடிப்படையில் விளையாடப்படுவதால், ஏமாற்றும் மற்றும் பணத்தை சுரண்டும் வாய்ப்புகள் உள்ளது என்பதன் அடிப்படையிலேயே ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டது. எனவே, சூதாட்டம் என்கின்ற அடிப்படையில் இது அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூறு 34-க்கு உட்பட்டுதான் இந்த சட்ட முன்வடிவு அமைந்துள்ளது” என்று பதில் அளிக்கப்பட்டது.

“குறிப்பிடத்தக்க அளவு தடை (Proportional ban) மட்டுமே அனுமதிக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டதை மீறி இந்த தடை அமைந்துள்ளது” என்று எழுப்பப்பட்ட வினாவுக்கு, “Doctrine of proportionality – No complete ban. விளையாட்டுகள் முழுமையாக தடை செய்யப்படவில்லை. Game of Chance and Skill என்று வித்தியாசப்படுத்தி, ஆன்லைன் சூதாட்டங்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இது தேவையான அளவில் மட்டுமேயான (proportional) தடைதான் ஆகும்” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறினார்.



Read in source website

சென்னை: “வெளிமாநில மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர்கள் அனைவரும் தமிழகத்தில் முதலீடு செய்து ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்” என்று என்று சர்வதேச மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மேலும், “தமிழகத்தில் ஜவுளி ஏற்றுமதியினை பன்மடங்கு அதிகரிக்க கரூர், திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் ‘ஏற்றுமதி மையங்கள்’ (Export Hub) அமைக்கக்கூடிய பணிகளையும் விரைந்து செயல்படுத்தி வருகிறோம்” என்று அவர் கூறினார்.

தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான சர்வதேச மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் அவர் பேசுகையில், "ஒவ்வொரு துறையிலும் நமது அரசு பன்னாட்டளவிலான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. அதில் தொழில்துறை முன்னணியில் இருக்கிறது. உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். விளையாட்டுத் துறையில் உலகப் புகழை அடைந்து வருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு நிறுவனங்களைத் தொடங்கும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்த வரிசையில் துணிநூல் துறையின் சார்பில் முதன்முறையாக ஜவுளித் தொழில் குறித்தான பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நம்முடைய போட்டி என்பது இந்திய மாநிலங்களோடு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு இணையானதாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது. தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறையானது மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியடிகளின் அடையாளம் கதர் என்பதைப் போல நம்முடைய அமைச்சர் காந்தியின் அடையாளமாகத் துணிநூல் துறையானது அமைந்துவிட்டது.

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் ரூ.2 கோடியே 50 லட்சம் அரசு மானியத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஜவுளி நகரம் (Textile City) அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துறையின் கீழ் இயங்கும் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா ரூ.2,500/- வீதம் ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட உள்ளது.

மூன்று கூட்டுறவு நூற்பாலைகளில் 11 கிலோவாட் உயர் மின்னழுத்த மின்பாதைகள் (Dedicated Electrical Power Feeder Line) நிறுவிடத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையினை உருவாக்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்து நவீனப்படுத்திட ரூ.29 கோடியே 34 லட்சம் செலவில் செயல்திட்டம் வகுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம், குமாரலிங்கபுரம் கிராமத்தில் 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் மாபெரும் ஜவுளிப் பூங்கா அமைத்திட சிப்காட் நிறுவனம் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு சாதனைகளை முன்னின்று செய்துள்ளார் நம்முடைய அமைச்சர் காந்தி. எனவே, அவரையும் இத்துறையின் அதிகாரிகளையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

தொழில்நுட்ப ஜவுளிகளின் முக்கியத்துவம் மற்றும் மாநிலத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன், தமிழ்நாடு அரசின் ஜவுளித் துறை, ஒன்றிய அரசின் ஜவுளி அமைச்சகம் மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் இணைந்து இக்கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி மற்றும் மனிதவளம் ஆகியவற்றில் தமிழ்நாடு, இந்தியாவுக்கு முதன்மையான பங்களிப்பை அளித்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். தொழில்வளம், அமைதியான சூழல், தொழில் தொடங்குவதற்கான எளிய நடைமுறைகள், முன்னேறிவரும் பொருளாதாரச் சூழ்நிலை, திறன்மிகு மனிதவளம் ஆகியவற்றின் காரணமாக அனைவரையும் ஈர்க்கும் மாநிலமாக நமது தமிழ்நாடு இருக்கிறது. நமது அரசின் முனைப்பான நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்குப் பன்னாட்டுத் தொழில் முனைவோர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில் தமிழ்நாடு 2-ஆவது பெரிய மாநிலமாக திகழ்கிறது. 4 பெரிய பன்னாட்டு விமான நிலையங்கள், 2 உள்நாட்டு விமான நிலையங்கள், 3 பெரிய துறைமுகங்கள், 19 சிறிய துறைமுகங்களைத் தமிழ்நாடு கொண்டிருக்கிறது. 2 இலட்சத்து 53 ஆயிரத்து 510 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைவழி வசதியைக் கொண்டு முதலீட்டாளர்களும், ஏற்றுமதியாளர்களும் மிகவும் விரும்பும் மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாடு 80 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. திறமைவாய்ந்த சிறந்த தொழில்நுட்ப பணியாளர்களையும் கொண்டுள்ளது.

இத்தகைய தனித்தன்மையின் காரணமாக அனைத்துத் துறைகளிலும் நாம் பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறோம். இதில் ஜவுளித் துறையும் ஒன்றாக இருக்கிறது. ஜவுளித் துறையை பொறுத்தவரை, நமது மாநிலம் அன்னிய முதலீட்டினை ஈர்ப்பதிலும், ஏற்றுமதியில் 3-ஆவது பெரிய இடத்திலும் இருக்கிறது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக ஜவுளித் தொழில் உள்ளது. அதனால்தான் நமது அரசு பொறுப்பேற்றவுடன் புதியதாக ஜவுளித் துறை என்ற ஒன்றை உருவாக்கியது.

இதன் தொடர்ச்சியாக, தொழில்நுட்ப ஜவுளித் தொழிலின் உலகளாவிய போக்கினை அறிந்து, பன்னாட்டுக் கருத்தரங்கினை இந்த அரசு நடத்துகிறது. எல்லாத் துறைகளும் வளர வேண்டும். அதில் புதுமைகளைப் புகுத்த வேண்டும். உயர் தொழில்நுட்பம் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லி வருகிறோம். அதற்கு ஏற்ற கொள்கைகளை வகுத்துத் தந்து வருகிறோம்.

தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலமாக, முதலீட்டு மானியம், தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவானது “சன்ரைஸ் செக்டார்” (Sunrise Sector) என அடையாளம் காணப்பட்டு சலுகைகள், தொழிற்பூங்கா அமைப்பதற்கான உதவிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) நிதி உதவி, ஒற்றைச் சாளர வசதி (Single window clearance), முத்திரைப் பதிவுக் கட்டணச் சலுகைகள் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. வளர்ந்து வரும் துறைகள் இனத்தில் (Thrust Sector) தொழில்நுட்ப ஜவுளி சேர்க்கப்பட்டு ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கு - சிறப்பு முதலீட்டு மானிய உதவியாக ரூபாய் ஒரு கோடியே 50 லட்சம் வழங்கப்படுகிறது.

ஜவுளித் தொழிலில் தமிழ்நாடு எப்போதுமே முன்னணி வகிக்கக் கூடிய மாநிலம். இந்தியாவினுடைய மொத்த ஜவுளி ஏற்றுமதி வருவாயில் தமிழ்நாடு மட்டுமே 12 விழுக்காடு பங்களிப்பை வழங்குகிறது. ஜவுளித் தொழிலில் புதிய தொழில்நுட்ப உத்திகளை கடைப்பிடித்து, உலக அளவில் தேவைப்படும் பல்வேறு துணிவகைகளையும் தமிழகம் உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில் 1,861 நூற்பாலைகள் உள்ளன. இது இந்திய நாட்டின் பங்கில் 55 விழுக்காடு! இங்கு 23 மில்லியன் நூற்பு கதிர்கள் செயல்பட்டு வருகின்றன; இது நாட்டின் நூற்பு கதிர்களின் எண்ணிக்கையில் 43 விழுக்காடு!

மேலும், இந்தியாவிலுள்ள விசைத்தறிகளில் 23 விழுக்காடு விசைத்தறிகள் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 31 லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது. எனவேதான், நாம் இந்தத் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தொழில்நுட்ப ஜவுளி எனப்படும் ’Technical Textiles’ என்பது வளர்ந்துவரும் மிக முக்கியமான ஒரு பிரிவு. இதற்கு, தமிழக அரசு முன்னுரிமை அளித்து ஊக்கப்படுத்தி வருகிறது. ஜவுளித் துறையின் எதிர்காலமே தொழில்நுட்ப ஜவுளிகளின் வளர்ச்சியைச் சார்ந்திருப்பதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம்.

விளையாட்டுத் துறையினருக்கான துணிகள், நாட்டின் பாதுகாப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு ஆடைகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கான தொழில்நுட்பம் சார்ந்த துணிகள், மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிற மருத்துவ சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் உயிர் காக்கும் துணிகள் , ஆட்டோமொபைல் துறையில் பயன்படுத்தப்படும் காற்றுப்பைகள், சீட் பெல்ட்கள் போன்றவற்றைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை அமைப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் உலகத் தரத்தின் மெகா ஜவுளி நகரம் (Textile City) உருவாக்கிட முயற்சிகள் எடுத்து வருகிறோம். மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் (Handloom Museum) அமைத்திடவும் திட்டமிட்டுள்ளோம். ரூபாய் 10 கோடி செலவில், நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணை உட்கட்டமைப்புடன் கூடிய வடிவமைப்பு நிலையம் (Design and Incubation Centre) நிறுவிடவும் நமது அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் ஜவுளி ஏற்றுமதியினை பன்மடங்கு அதிகரிக்க கரூர், திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் ”ஏற்றுமதி மையங்கள்” (Export Hub) அமைக்கக்கூடிய பணிகளையும் விரைந்து செயல்படுத்தி வருகிறோம்.

இவை அனைத்திற்கும் அடித்தளம் அமைக்கும் கருத்தரங்காக இந்த இரண்டு நாள் கருத்தரங்கம் அமைய வேண்டும். தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான விழிப்புணர்வையும், அதிலுள்ள ஒளிமயமான சந்தை வாய்ப்புகளையும் தொழில்முனைவோரிடம் இக்கருத்தரங்கு ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன். அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில்நுட்ப ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

“One Trillion Dollar Economy-2030” என்கின்ற தமிழ்நாடு அரசின் இலக்கிற்கு செயல் வடிவம் கொடுக்கும் முயற்சிகளில், தொழில்நுட்ப ஜவுளி சார்ந்த இந்த இரண்டு நாள் கருத்தரங்கம் பெரிதும் உதவும் என்ற நம்பிக்கையோடு, இந்த கருத்தரங்கினை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.



Read in source website

சென்னை: பாகப்பிரிவினை வழக்கின் குறுக்கு விசாரணையின் போது, பெண் மனுதாரரிடம், பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மன்னிப்பு கோரியுள்ளது.

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில், இரண்டு திருமணங்கள் செய்து கொண்ட ஒரு நபரின் சொத்துகளின் பாகப்பிரிவினை தொடர்பான வழக்கு ஒன்று நடந்தது. சொத்துகளுக்கு அந்த நபரின் முதல் மனைவியின் வாரிசுதாரர்களும், இரண்டாவது மனைவியின் வாரிசுதாரர்களும் உரிமை கோரியிருந்தனர். அந்த வழக்கில் ஒருதரப்புக்கு சாதமான தீர்ப்பு வெளியான நிலையில். அந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு தரப்பினர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணை மற்றும் தீர்ப்பு விவரங்களைப் படித்துப் பார்த்தார். அப்போது, குறுக்கு விசாரணையின் போது, இரண்டாவது மனைவியின் மகன் தரப்பு வழக்கறிஞர், மூன்று பெண்களின் தந்தை மீதான உரிமை குறித்தும், அவர்களின் தாயை அவமதிக்கும் வகையிலும் கேள்வி எழுப்பியிருந்தார். நீதிமன்றத்திலேயே இந்த விவகாரம் நடைபெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அதற்காக இந்த சென்னை உயர் நீதிமன்றம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனுதாரர்களை அவமானப்படுத்துவதற்காகவோ, அவர்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதற்காகவோ குறுக்கு விசாரணை இல்லை என தெரிவித்துள்ள நீதிபதி, தங்களது உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.



Read in source website

சென்னை: 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் இமையத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: "கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.

திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் தொடர்ச்சியான இமையம் நடைபோடும் பாதையில் புகழ்மாலைகள் பல குவியட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கர்நாடகாவில் கன்னட தேசிய கவி குவெம்பு பெயரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் ‘குவெம்பு தேசிய விருது' இந்த ஆண்டு எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 29ம் தேதி (குவெம்பு பிறந்த தினம்) நடைபெறும் விழாவில் இமையத்துக்கு இந்த விருதுடன் ரூ. 5 லட்சம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும் என குவெம்பு அறக்கட்டளையின் செயலாளர் கடிலால் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளரும், ஆசிரியருமான‌ இமையம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல், சிறுகதை, கட்டுரைகளை எழுதி வருகிறார். தனது முதல் நாவலான‌ ‘கோவேறு கழுதைகள்' மூலம் தமிழ் இலக்கிய தளத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தினார். செடல், செல்லாத பணம், சாவு சோறு, பெத்தவன் உள்ளிட்ட இவரது படைப்புகள் வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற‌ன. ஆங்கிலம் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. ‘செல்லாத பணம்' என்ற நாவலுக்காக 2020ம் ஆண்டு சாகித்திய அகாட‌மி விருது இமையத்துக்கு வழங்கப்பட்டது.



Read in source website

சென்னை: திருவொற்றியூரில் ரூ.200 கோடிசெலவில் புதிதாக சூரை மீன்பிடிதுறைமுக கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த திருவொற்றியூர், எண்ணூர் மற்றும் காசிமேடு ஆகிய பகுதிகளில் உள்ளமீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் விசை,பைபர் படகு, கட்டுமரம் ஆகியவற்றின் மூலம் கடலுக்குச் சென்று மீன்களை பிடித்து வருகின்றனர். இவற்றை உள்ளூரில் விற்பனை செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

மீன்பிடி தொழிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் கடலுக்கு சென்று வருகின்றன. படகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இட நெருக்கடி ஏற்படுகிறது. இதையடுத்து, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிலவிவரும் நெரிசலை குறைக்கும் வகையிலும், சூரை மீன், இறால் உள்ளிட்ட ஆழ்கடல் மீன்பிடி தொழிலை மேம்படுத்தவும் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக, திருவொற்றியூர் பட்டினத்தார்கோயில் குப்பம் அருகே ரூ. 200 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் அமைக்க கடந்த 2019-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. இங்கு பெரிய மற்றும் சிறிய படகு தளம், வலை பின்னும் கூடம், சிறுமீன்கள் ஏலக்கூடம், ஆழ் கடல் மீன் ஏல விற்பனைக் கூடம் மற்றும் சுமார் 500 விசைப் படகுகள், 300 சிறிய வகை படகுகள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும், இந்த மீன்பிடி துறைமுகத்தில் அலுவலகம், தங்கும் விடுதி, உணவு விடுதி, மீன் விற்பனை கூடம், படகு பழுது பார்க்கும் தளம், மீன்கள் பதப்படுத்தும் கூடம் ஆகியவையும் கட்டப்படுகிறது. இத்துறை முகத்தின் கட்டுமான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 2023-ம் ஆண்டுமார்ச் மாதத்துக்குள் இத்துறைமுகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Read in source website

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் ஒரு மாத காலத்திற்கு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வந்த தமிழக ஆதீனங்களின் பேட்டி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் இரண்டு தினங்களுக்கு முன் வெளியானது. இதில், ஆன்மிக இலக்கியங்களால்தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததாக அவர்கள் கூறியிருந்தனர். இது தவறான கருத்து எனவும், 2004-ல் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க சங்க இலக்கியங்களே காரணம் என்றும் தமிழ் மற்றும் வரலாற்று பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநராக பதவி வகித்த பேராசிரியர் க.ராமசாமி ‘இந்து தமிழ்திசை’ நாளிதழிடம் கூறும்போது, “தமிழுக்கு செம்மொழி அந்தஸ்துகிடைக்க சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சம்ஸ்கிருதம் படித்த தமிழ் அறிஞருமான ஜார்ஜ் எல். ஹார்ட் எழுதிய கடிதம் அடிப்படையானது. இவர் மறைமலை இலக்குவனாருக்கு எழுதிய கடிதத்தில், செம்மொழி அந்தஸ்து அளிக்க அனைத்து வகையிலும் தகுதியானது தமிழ் எனக் குறிப்பிட்டிருந்தார். தமிழ் மற்றும் ஆங்கிலப் பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்களை கொண்ட மத்தியக்குழு அமைக்கப்பட்டு பல ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன.

தமிழில் எழுதப்பட்ட தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு உள்ளிட்ட 41 சங்க இலக்கியங்கள் செவ்வியல் நூல்கள் என முடிவு செய்யப்பட்டன. இதனால், அவை எழுதப்பட்ட தமிழுக்கு, செம்மொழி அந்தஸ்து அளிக்குமாறு மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இது ஏற்கப்பட்டு, மத்தியஅரசால் செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதில், பத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப்படை மட்டுமே பக்தி இலக்கியம்.மற்ற அனைத்தும் சங்க இலக்கியங்களே” என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் கூறும்போது, “ஆதீனங்கள் குறிப்பிடும் ஆன்மிக இலக்கியங்களை தமிழகத்தில் பக்தி இலக்கியங்கள் என்று அழைக்கிறோம். கி.பி 6-ம் நூற்றாண்டில் தொடங்கி, 10-ம் நூற்றாண்டுக்கும் மேலாக பக்தி இலக்கியங்கள் தொடர்ந்துள்ளன. ஆனால், இதற்குஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழுக்கு பழமையான ஒருஇலக்கிய மரபு உள்ளது. இதன்படி கி.மு 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி3-ம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டவைதான் நம் சங்க இலக்கிய நூல்கள். அதேசமயம், தமிழை புதிய தளத்தில் பயன்படுத்தி வளர்த்ததில் பக்தி இலக்கியங்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை” என்றார்.

தமிழக ஆதீனங்களின் கருத்தை மறுத்து, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் எஸ்.சாந்தினிபீ கூறும்போது, “தமிழ் எழுத்து கி.மு. 3-ம் நூற்றண்டிலேயே இருந்தது. இதற்கு பாண்டியன் நெடுஞ்செழியனை குறிப்பிடும் மதுரை-மாங்குளம் கல்வெட்டே ஆதாரம். கீழடி அகழாய்விலும் தமிழி எழுத்துக்கள் கி.மு 6-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என அறியப்பட்டுள்ளது. எனவே, பக்தி இலக்கியங்களின் வயது இன்றைக்கு 1,500 என்றால் சங்க இலக்கியங்களின் வயதோ குறைந்தது 2,400 ஆகும். செம்மொழிக்கு தேவையாக பத்து குணங்களில் ஒன்றான தொன்மை, சங்க இலக்கியங்களுக்குதான் உள்ளது” என்றார்.



Read in source website

புதுடெல்லி: வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய வரலாற்றை திருப்பி எழுத வேண்டும். இந்திய பின்புலத்தில் எழுதப்படும் வரலாற்றுக்கு மத்திய அரசு உதவி செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று அசாம் மாநில அரசின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, "வரலாறு படித்த மாணவன் நான். நம் நாட்டின் வரலாறு சரியாக சொல்லப்படவில்லை. அது சிதைக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது. நாம் அந்தத் தவற்றை இப்போது சரி செய்ய வேண்டும்.

வரலாற்றை சரியானதாக கொடுக்க யார் நமக்குத் தடை போடுகிறார்கள் என்று தெரியவில்லை. நம் நாட்டின் வரலாற்றை சரியானதாக, அதன் பெருமை சிதைக்கப்படாமல் கொடுக்க வேண்டும்.

இங்கே அமர்ந்துள்ள அனைத்து மாணவர்களும், பல்கலைக்கழக பேராசிரியர்களும் தவறான வரலாற்றை விட்டொழித்து 150 ஆண்டுகளாக ஆட்சி செய்த 30 வம்சங்களைப் பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும். சுதந்திரத்திற்காகப் போராடிய 300 முக்கிய தலைவர்கள் பற்றி எழுத வேண்டும். அதை வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிவிட்டால் இப்போது இருக்கும் போலி கற்பிதங்கள் அதுவாகவே வழக்கொழிந்துவிடும். வரலாற்று ஆராய்ச்சியில் மாணவர்களுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும். வாருங்கள், ஆய்வு செய்யுங்கள், வரலாற்றை திருத்தி எழுதுங்கள். அதுதான் எதிர்கால சந்ததியையும் ஊக்குவிக்கும்.

17வது நூற்றாண்டைச் சேர்ந்த லச்சித் பார்புகான் முகாலய மன்னர்கள் இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை விஸ்தரிப்பதை கட்டுப்படுத்தினார். ஷாரியாகட் போரில் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாது போரிட்டு முகலாயர்களை அவர் வென்றார். அவரைப் போன்றோரை நினைவுகூரும் வகையில் வரலாறு இந்தியப் பார்வையில் திருப்பி எழுதப்பட வேண்டும்" என்றார்.



Read in source website

போர்ட் மோர்ஸ்பி: 140 ஆண்டுகளாக அழிந்துவிட்டது என கருதப்பட்ட பறவை இனம் ஒன்று பப்புவா நியூ கினியா தீவுகளில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.

உடலின் மையப் பகுதியில் ஆரஞ்சு நிறம் கொண்ட புறா இனம் (black-naped pheasant pigeon) ஒன்றினை 1882-ஆம் ஆண்டுக்குப் பிறகு காடுகளில் காண முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அந்த இனத்தின் பறவை ஒன்று 140 ஆண்டுகளுக்குப் பிறகு பப்புவா கினியா தீவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொலைந்த பறவைகளைக் கண்டுபிடிப்பதற்கு ‘லாஸ்ட் பேர்ட்ஸ்’ என்ற அமைப்பு, விஞ்ஞானிகளுக்கு உதவி வருகிறது. இந்த அமைப்பின் உதவியுடன்தான் விஞ்ஞானிகள் இப்பறவை இனத்தை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானி டோகா நாசன் கூறும்போது, “இதுவே மகிழ்ச்சியான தருணம். என் கால்கள் நடுங்குகின்றன” என்று சிலிர்ப்புடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

லாஸ்ட் பேர்ட்ஸ் அமைப்பின் ஜான் பேசும்போது, “இப்பறவையை கண்டுபிடிப்பதற்காக பல இடங்களில் கேமரா வைக்கப்பட்டது. பல தேடல்களுக்குப் பிறகு பெர்குசன் தீவு பகுதியில் செப்டம்பர் மாதம் இந்தப் பறவையின் புகைப்படம் எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

பெர்குசன் தீவுப் பகுதியில் 2019-ஆம் ஆண்டே இந்தப் பறவை இனம் கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகளுக்கு தகவல் கிடைத்தது. எனினும், பறவையை விஞ்ஞானிகளால் காண முடியவில்லை. இந்த நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பறவை இனம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் அழிந்துபோன பிற பறவை இனங்களான கிறிஸ்டினா பிக்ஸ் போன்ற பறவைகளையும் கண்டறியலாம் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு பிறந்துள்ளது.





Read in source website

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக உள்ள கமர் ஜாவேத் பாஜ்வா (61), மூன்று ஆண்டுகால பணி நீட்டிப்புக்கு பிறகு வரும் 29-ம் தேதி ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில், புதிய ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர், முப்படைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஷாகிர் ஷம்ஷத் மிர்சா ஆகியோரை பிரதமர் ஷெபாஸ் ஷரீப் நியமனம் செய்துள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் மரியம் அவுரங்கசீப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, புதிய ராணுவ தளபதி நியமனத்துக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளார்.பாகிஸ்தான் ராணுவத்தில் முப்படை தளபதி, உயர் பதவியாக இருந்தபோதும், படைகளை திரட்டுவது, அதிகாரிகள்நியமனம், இடமாறுதல் என முக்கியப் பொறுப்புகள் ராணுவத் தளபதி வசமே உள்ளன. எனவே ராணுவத் தளபதியே அதிகாரம் மிக்கவராக திகழ்கிறார்.



Read in source website

புதுடெல்லி: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பாஸ்போர்ட்டில் ஒற்றை பெயர் மட்டும் இருந்தால், அந்த நபருக்கு விசா வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விசா வழங்கப்பட்டிருந்தால் அந்த நபர் அனுமதிக்க முடியாத பயணியாக கருதப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த புதிய விதிமுறைகளை ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை சுற்றறிக்கையாக வெளியிட்டுஉள்ளது.



Read in source website

காந்தி நகர்: இந்திய மாநிலங்களில் 100 சதவீத 5ஜி சேவையை பெற்ற முதல் மாநிலம் என்ற நிலையை எட்டியுள்ளது குஜராத். அந்த மாநிலத்தில் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனம் முழு 5ஜி கவரேஜை வழங்குவதாக அறிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அது குறித்த அறிவிப்பை வெளியிட்டன. இருந்தாலும் குறிப்பிட்ட சில முக்கிய நகரங்களில் மட்டுமே 5ஜி சேவை கிடைக்கப் பெறும் என டெலிகாம் நிறுவனங்கள் சொல்லி இருந்தன.

கடந்த அக்டோபரில் ஜியோ நிறுவனம் இந்தியாவின் நான்கு நகரங்களில் மட்டுமே 5ஜி சேவையை அறிவித்தது. படிப்படியாக அது மேலும் சில நகரங்களுக்கு விரிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 25) குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களிலும் 5ஜி சேவையை அறிமுகம் செய்தது ஜியோ. இதன் மூலம் இந்தியாவில் 100% 5ஜி சேவையை பெற்ற முதல் மாநிலமானது குஜராத்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் புனே நகரில் 5ஜி சேவையை ஜியோ ரோல் அவுட் செய்தது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், நாத்துவாரா போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை வழங்கி வருகிறது.

இப்போதைக்கு இது பீட்டா சேவை என்றும், பயனர்களுக்கு இதனை பயன்படுத்துவதற்கான அழைப்பு கிடைத்தால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிகிறது. ரூ.229-க்கு மேல் உள்ள அனைத்து பிளான்களுக்கும் 5ஜி சேவையை ஜியோ வழங்கி வருகிறதாம். ஜியோ 5ஜி சேவை பீட்டா ட்ரையலுக்கு அழைப்பு கிடைத்த பயனர்கள் இதனை பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

பணி ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டா் சௌமியா சுவாமிநாதன் பதவி விலகியிருப்பது சா்வதேச அளவில் பலரையும் புருவம் உயா்த்த வைத்திருக்கிறது. எந்தவித காரணத்தையும் குறிப்பிடாமல் சுட்டுரையில் தனது பதவி விலகலை அறிவித்திருக்கிறாா் 63 வயது டாக்டா் சௌமியா.

கொள்ளை நோய்த்தொற்றின் தாக்க அலை அநேகமாக ஓய்ந்துவிட்ட நிலையில், உலக சுகாதார அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படுவது எதிா்பாரதது அல்ல. போா்க்கால நடவடிக்கை மேற்கொண்டு, உலகம் தழுவிய அளவில் அச்சுறுத்திய கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ளும் பணி என்பது வேறு; சாதாரண நிலையில், உலகம் எதிா்கொள்ளும் சுகாதார சவால்களை எதிா்கொள்வது என்பது வேறு.

கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் தேவைப்பட்ட பலரின் சேவை தொடா்ந்து தேவைப்படாது என்பதால் உலக சுகாதார அமைப்பில் அணுகுமுறை மாற்றம் ஏற்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பணி ஓய்வு பெற வேண்டிய டாக்டா் சௌமியா சுவாமிநாதன் போன்றவா்கள் பதவி விலகுவது வியப்பளிக்கிறது.

தனது தாய் நாடான இந்தியாவில் தனது திறமைகளைப் பயன்படுத்த விரும்புவதாக டாக்டா் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில், திறமைசாலியான இந்தியா் ஒருவரின் சா்வதேசப் பங்களிப்பு நஷ்டப்படுகிறது என்பது வேதனை ஏற்படுத்துகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக சுகாதார அமைப்பு கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொண்ட விதம் குறித்து பல்வேறு சா்ச்சைகள் எழுந்தன என்றாலும், அவை பெரும்பாலும் அதன் தலைவா் டெட்ரோஸ் அதனோமை சாா்ந்ததாக இருந்தனவே தவிர, தலைமை விஞ்ஞானி டாக்டா் சௌமியா சுவாமிநாதன் அனைத்துத் தரப்பின் பாராட்டுகளையும் பெற்றாா். ஜெனீவாவில் உள்ள தலைமையகத்தில் இருந்து அவா் முன்னெடுத்த முயற்சிகளால்தான், வளா்ச்சி அடையாத நாடுகளுக்கும் தடுப்பூசி சென்றடைந்தது.

சீனா தொடா்பான விவாதத்திலோ, விமா்சனத்திலோ சிக்கிக்கொள்ளாமல் நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதிலும் தடுப்பூசி விநியோகத்தை விரிவுபடுத்துவதிலும் மட்டுமே தனது கவனத்தை டாக்டா் சௌமியா செலுத்தியதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. அதேபோல, மிகக் குறுகிய காலத்தில் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதிலும், தயாரிப்பதிலும் அவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சியாளா்களுக்கு அளித்த ஊக்கமும், உற்சாகமும் மறந்துவிடக்கூடியதல்ல.

இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் மூன்று மகள்களும் அவரவா் துறையில் தனித்துவம் மிக்கவா்கள். மதுரா சுவாமிநாதனும், நித்யா ராவும் பேராசிரியா்களாக உயா்ந்தனா் என்றால், 1959 மே 2-ஆம் தேதி பிறந்த சௌமியா, மருத்துவரானது எதிா்பாராத திருப்பம்.

கால்நடை மருத்துவராக வேண்டும் என்று விரும்பிய சௌமியா, சக மாணவிகளைப் போல புணேவிலுள்ள ராணுவ மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தாா். நுழைவுத் தோ்வில் முதலிடம் பெற்று மருத்துவ பட்டப்படிப்பை முடித்து, எய்ம்ஸில் குழந்தை மருத்துவத்தில் முதுநிலைப் படிப்பையும் முடித்தாா்.

குழந்தை மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் தன்னை இணைத்துக்கொண்டு, தெற்கு கலிஃபோா்னியா பல்கலைக்கழகத்தில் சோ்ந்தாா். அங்குதான் அவருக்கு மருத்துவ ஆராய்ச்சியில் ஆா்வமும் ஈடுபாடும் அதிகரித்தது. குழந்தைகளின் நுரையீரல் தொற்றுகள் குறித்து பிரிட்டனின் லீசெஸ்டா் பல்கலைக்கழகத்தில் அவா் நடத்திய ஆய்வு, மருத்துவ இதழ்களின் பாராட்டைப் பெற்றது.

இத்தனைத் தகுதிகளையும் பெற்ற டாக்டா் சௌமியா சுவாமிநாதனின் தாகம், தனது தாய்மண்ணில் பணியாற்றவும், தாய்நாட்டு மக்களுக்கு சேவை செய்வதிலும் இருந்தது என்பதுதான் அவரை வியந்து நோக்க வைக்கிறது. தாயகம் திரும்பியவா் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநராகவும், அதைத் தொடா்ந்து சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலராகவும் பணியாற்றினாா்.

இந்தியாவிலுள்ள பல இளம் பெண் விஞ்ஞானிகளுக்கும் மருத்துவ ஆராய்ச்சியாளா்களுக்கும் டாக்டா் சௌமியா சுவாமிநாதன் முன்னுதாரணமாக மட்டுமல்லாமல், ஊக்கமளிப்பவராகவும் இருந்தாா் என்று பலருடைய பதிவுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. அவருடைய திறமையும் சேவையும் சா்வதேச அளவில் அவரைத் தேடி வாய்ப்புகளை ஈா்த்தன.

2017-இல் உலக சுகாதார அமைப்பின் துணை தலைமை இயக்குநராக நியமனம் பெற்றாா் அவா். அந்த பதவியை வகித்த முதல் இந்தியா் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்தது. அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக மாா்ச் 2019-இல் பொறுப்பேற்றுக் கொண்டபோது, தனக்கு ஒரு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது என்று அவா் நினைத்துக்கூட பாா்த்திருக்கமாட்டாா். 2019-இன் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் உருவாகி, ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்திய கொள்ளை நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியை உலக சுகாதார அமைப்பு எதிா்கொண்டது.

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிா்த்துப் போராடியதால் களைத்துப் போய்விடவில்லை டாக்டா் சௌமியா சுவாமிநாதன். அவரது 30 ஆண்டு அனுபவமும் மருத்துவ அறிவியல் மேதைமையும் வீணாகிவிடக் கூடாது. தாயகத்துக்கு சேவை செய்ய அவா் தயாா். அவரைப் பயன்படுத்திக்கொள்ள இந்தியா தயாராக வேண்டும்.



Read in source website

மகாராஷ்டிரத்தைச் சாா்ந்த விடுதலைப் போராட்ட வீரா் விநாயக தாமோதர சாவா்க்கா் குறித்து அண்மையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருக்கிறாா். நாட்டை வழிநடத்த வேண்டிய பொறுப்புள்ள ஒரு தலைவரின் கருத்தாக அவரது பேச்சு அமையவில்லை.

நாடு முழுவதும் பாதயாத்திரையாக இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, நவம்பா் 11 அன்று மகாராஷ்டிர மாநிலம், வாசிம் மாவட்டத்தில் பேசுகையில், ‘பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்த சாவா்க்கரை காங்கிரஸ் கட்சி முன்னோடியாகக் கொள்ளாது’ என்று கூறியிருக்கிறாா். அதன்மூலமாக, தனது வரலாற்றுப் புரிதலின்மையை வெளிப்படுத்தி இருப்பதுடன், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணிக்கும் தருமசங்கடத்தை உருவாக்கி இருக்கிறாா்.

விநாயக தாமோதர சாவா்க்கா் (1883-1966), இந்திய வரலாற்றில் மறக்க இயலாத புரட்சியாளா். இளம் வயதிலேயே மகாராஷ்டிரத்தில் ‘அபிநவ பாரத சங்கம்’ என்ற புரட்சி அமைப்பை நிறுவியவா். மேற்படிப்புக்காக லண்டன் சென்ற இடத்தில் ‘இந்திய சுதந்திர சங்கம்’ அமைத்தவா். அதில் உறுப்பினராக இருந்தவா்தான் தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வீரா் வ.வே.சு. ஐயா்.

கவிஞா், எழுத்தாளா், வரலாற்று ஆய்வாளா், சமூக சீா்திருத்தவாதி, அரசியல் தலைவா் எனப் பன்முகங்களை உடையவா் சாவா்க்கா். இவா் எழுதிய ‘எரிமலை அல்லது முதல் இந்திய சுதந்திரப் போராட்டம்’ என்ற நூல் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டது. ஆங்கிலேயரின் சொந்த மண்ணிலேயே பிரிட்டிஷ் அரசை எதிா்த்துப் போராடியவா் சாவா்க்கா்.

லண்டனில் ஆங்கிலேய அதிகாரி கா்சான் வில்லி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இந்தியா அனுப்பப்பட்டபோது கப்பலிலிருந்து தப்பி பிரான்ஸின் மாா்செய்ல்ஸ் துறைமுகத்தில் கரையேறுகையில் மீண்டும் ஆங்கிலேய வீரா்களிடம் சாவா்க்கா் பிடிபட்டாா். இதனால் பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையே எல்லை தாண்டிய விவகாரம் தொடா்பாக பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது, அக்காலத்தில் சா்வதேசச் செய்தி.

நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரே காரணத்தால் அவரது சொத்துகள் ஆங்கிலேய அரசால் பறிமுதல் செய்யப்பட்டன. ராஜத்துரோக வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அந்தமானுக்கு நாடுகடத்தப்பட்ட அவா், அங்கு செல்லுலா் சிறையில் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளானாா்.

தமிழக விடுதலை வீரா் வ.உ. சிதம்பரம் பிள்ளை கோவை சிறையில் கல்லுடைத்ததும் செக்கிழுத்ததும் நமக்குத் தெரியும். அவற்றுக்கு நிகரான கொடிய துன்பங்களை அந்தமான் சிறைவாழ்வில் (1911- 1924) அனுபவித்தவா் சாவா்க்கா். சிறைவாசத்தால் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது விடுதலைக்காக அனுதாபிகள் பலா் முயன்றபோது, அவா்களது வலியுறுத்தலின் பேரில் சாவா்க்கா் ஆங்கிலேய அரசுக்கு விடுதலை கோரி கடிதம் எழுதினாா். அதன் அடிப்படையில் நிபந்தனைகளுடன் அவா் விடுதலை செய்யப்பட்டாா். இது வரலாற்று உண்மை.

ஆனால், அவா் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை; அரசிடம் மன்னிப்பும் கேட்கவில்லை. சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களும் சரிசமமாக வழிபட உரிமையளிக்கும் ‘பதித பாவன மந்திா்’ என்ற சமத்துவக் கோயிலை ரத்தினகிரியில்

1931-இல் அமைத்தாா். பின்னாளில் ‘ஹிந்து மகா சபை’ என்ற கட்சியை நிறுவினாா். அதுவே இன்றைய பாஜகவின் சித்தாந்த முன்னோடி.

துரதிருஷ்டவசமாக மகாத்மா காந்தி கொலை வழக்கில் தொடா்புபடுத்தப்பட்டு கைதான சாவா்க்கா், பின்னாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாா். ‘ஹிந்துத்துவ அரசியல்’ என்ற கோட்பாட்டை இந்திய அரசியல் வானில் விதைத்தவா் என்பதாலும், மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் என்பதாலும் சாவா்க்கரை சிலா் விமா்சிக்கின்றனா். யாரும் விமா்சனங்களுக்கு அப்பாற்பட்டவா் அல்லா். ஆனால், சாவா்க்கா் போன்ற தியாகியை விமா்சிக்கும் முன் அவரது வரலாற்றை அறிவது அவசியம்.

சாவா்க்கரின் ஹிந்துத்துவ அரசியல் கருத்துகளும் காங்கிரஸ் எதிா்ப்பும் ராகுல் காந்திக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவரது நூற்றாண்டின்போது ராகுலின் பாட்டியான இந்திரா காந்தியாலேயே புகழாரம் சூட்டப்பட்டவா் சாவா்க்கா் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் தீவிரவாதப் போக்கு கொண்டிருந்த லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகா், விபின் சந்திர பால், அரவிந்தா், சாவா்க்கா், வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்றோரை ஆங்கிலேய அரசு கடுமையாக நடத்தியதை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது. அவா்களைப் போல மிதவாதப் போக்குடைய தலைவா்கள் ஆங்கிலேய அரசின் கடுமையை அனுபவிக்கவில்லை. அதேசமயம், சுதந்திரப் போரில் இவ்விரு தரப்பினரின் பங்களிப்பையும் மறுக்க முடியாது.

சுதந்திரப் போராட்ட வரலாறே தெரியாதவா்கள், மகாத்மா காந்தி முதல் சாவா்க்கா் வரை எல்லோரையும் அவதூறாகப் பேசுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவரும் அக்கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமுமான ராகுல் காந்தியும் சோ்ந்திருப்பதை நம்ப முடியவில்லை. அவா் தனது பேச்சை நியாயப்படுத்துவது அதைவிடப் பேரவலம். இது நாட்டிற்கு நல்லதல்ல.



Read in source website

வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்ணை வைத்துக் காப்பாற்றுவதற்காக வரனுக்குத் தட்சிணை வைத்த காலம் மாறி விட்டது. இன்றைய நவீன உலகில் கல்வியாலும், அறிவுத்திறனாலும் வீட்டிற்கும் நாட்டிற்கும் உழைத்துப் பொருளீட்டும் பெண்களையும் உடல் ரீதியிலும், உளவியல் ரீதியிலும் துன்புறுத்துவானேன்?

முகவரி அறியாத மங்கையைக் கண்டதும் காதல் என்ற கற்பனையில் தம்மைக் காதலிக்க வற்புறுத்துதல், திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்துதல், உடன்படாத இளம்பெண்களை காயப்படுத்துதல், திருமணமாகியும் மக்கள்பேறு பெற்று, இரண்டாம் தலைமுறை கண்ட பிறகும் துணைவியைத் துரத்திவிடும் அல்லது தூரத்தில் வைக்கும் ’துறவறம்’ கூட, ஒரு வகையில் பெண்களுக்கு அறிவிக்கப்படாத அநீதி எனலாம்.

பாலியல் சீண்டல்கள், ஆபாசமான சைகைகள் போன்ற இழிசெயல் குற்றங்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடைபெற்றால் எங்கு போய் முறையிடுவது?

காஷ்மீா் முதல் கள்ளக்குறிச்சி வரை புனிதமான ஆலயங்களில், போற்றுதலுக்கான கல்விக்கூடங்களிலும் கலாட்டா விவகாரங்கள், கண்துடைப்பு ஆணையங்களில் கரைந்து போய் விடுகின்றன. பொதுவிடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அசம்பாவிதங்கள் என்னவோ அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தானே என்கிற அலட்சியத்தில் கொடுமையாளா்களுக்கும் ‘குளிா்விட்டு’ப் போகிறதே.

காலங்காலமாகவே பெண்களுக்கு எதிரான வன்முறை அனைத்து கலாசாரங்களிலும் ஆழமாகப் பதிந்துள்ளது. முன்னொரு காலத்தில் நாட்டிய அடிமைப்பெண்களையே அரச குடும்பத்தினா் மண்-பொன்-பெண் என்ற வரிசையில் அஃறிணைப் பண்டங்களைப் போலாக்கி வாழ்ந்தனா்.

குழந்தைத் திருமணம், பலதார மணம், மனைவியைத் தம்மோடு உடன் கட்டை ஏறச்செய்யும் ‘சதி’ வேலைகள் இங்கு நடந்தவைதாம். பொட்டு கட்டுதல் என்ற பெயரில் பருவம் அடைந்தவுடன் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் நம் வரலாற்றின் கறைகள் அல்லவா?

பஞ்சாப், ஹரியாணா, பிகாா், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், ஹிமாசல பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பதற்கான விளக்கம் கேட்டு 2010-ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது அறிவோம். கலாசார, ஜாதி, மதத் தடைகளைத் தாண்டி, குடும்பங்களிலும் மகளிா் சந்திக்கும் பொருளாதாரம் சாா்ந்த சவால்களும் அநேகம்.

நாட்டின் ஒப்பீட்டளவில் ஏழ்மையான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாா், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் குழந்தைகளை வாட்டி வதைக்கும் மற்றொரு துயரம், மனநலக் கோளாறு, அறிவுசாா் குறைபாடு.

‘தி லான்செட்’ என்னும் ஆங்கில மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வில், இந்த மாநிலங்களில் 10.8% குழந்தைகளின் மூளை வளா்ச்சி குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டது. 2012-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கல்வியறிவு குறைவான உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் வரதட்சணைக் கொடுமைகள் கூடுதலாக உள்ளனவாம்.

2013-இல் வெளியிடப்பட்ட இந்திய ரிசா்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலம் சத்தீஸ்கா். அங்கு 39.93% மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனா். பெண்களுக்கு எதிரான வன்முறை, நாட்டின் வருமானத்திலும் வளா்ச்சியிலும் கூட பாதிப்பினை ஏற்படுத்தும்.

அத்துடன் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பிகாா், உத்தரகண்ட், ஒடிஸா, அஸ்ஸாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். அதிலும் ‘ரிசா்ச் மேட்டோ்ஸ்’ (ஆராய்ச்சித் தகவல்கள்) என்னும் இதழ் நடத்திய தேசிய மனநல ஆய்வு (2016) அறிக்கை ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. உலக அளவில் மனநோய்கள் அதிகம் உள்ள நாடு இந்தியாதானாம்.

எப்படியோ, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒவ்வொரு சமூகக் குழுவிலும் உலகளாவிய பிரச்னையாகவே உருவெடுத்துள்ளது.

இத்தகைய சூழலில் அனைத்து சமூக - பொருளாதார வகுப்புகளிலும் கோடிக்கணக்கில் பெண்களும் சிறுமிகளும் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து வருகிறாா்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை கருதியது. இன்று ஆண் என்ன, பெண் என்ன என்ற நிலையில், அனைவருக்கும் கல்வி, பொருளாதாரச் சூழல்கள் மட்டுமே வாழ்வின் மூலாதாரம் என்று வந்த பிறகும், ‘மணப்பெண்ணுக்கு சமைக்கத் தெரியுமா, ஆடத்தெரியுமா, பாடத்தெரியுமா போன்ற நோ்காணல்கள் அபத்தம் அல்லவா?

அக வாழ்க்கையும் புற வாழ்க்கையும் சுமந்து செல்லும் நடுத்தரப் பெண்களைக் கவனத்தில் கொண்டு 1999 டிசம்பரில் 54-ஆவது அமா்வில், ஐ.நா பொதுச்சபை நவம்பா் 25-ஆம் தேதியை பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சா்வதேச தினமாக அறிவிக்கும் தீா்மானத்தை ஏற்றுக்கொண்டது.

உடல் ரீதியிலான காயம், காலத்தால் ஆறிவிடும்; உளவியல் அடிப்படையில் எழும் மனநலப் பாதுகாப்பின்மை காலத்தாலும் மாறாது அல்லவா?

இன்று புதுமைப்பெண்களாக எழுத்துலகிலும், இதழியலிலும் சாதனை படைத்தாலும், ஊடகப் பெண்களுக்கான பாதுகாப்புச் சூழல் பலம் குன்றியதாகவே இருக்கிறது. பெண் நிருபா்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக பிரபல ஊடகங்கள் ஆதங்கப்படுகின்றன.

‘சக்ரவா்த்தினி’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த பாரதியாரிடம் வாசகி ஒருவா், ‘‘பத்திரிகையின் வெளிபுறத்திலே தடித்த எழுத்துகளில் ‘பெண்களின் அபிவிருத்தியின் பொருட்டாக’ என்று எழுதி விட்டீா்; உள்ளே விவேகானந்தா் சந்நியாசம் வாங்கிக் கொண்ட விஷயம், புத்தா் ராஜாங்கத்தை விட்டுவிட்டு பிச்சைக்குப் புறப்பட்ட விஷயம் - இதையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தால் இதனால் பெண்களுக்கென்ன அபிவிருத்தி ஏற்படும்’’ என்று கேட்டாா். அப்பெண்மணியை ‘மிகுந்த கல்வியில்லாவிடினும் கூா்மையான அறிவு கொண்ட பெண்மணி’ என்று பாரதி அறிமுகம் செய்கிறாா்.

‘மேற்படி மாது சொன்னது சரி; நான் செய்தது பிழை. இந்த நிமிஷமே மாதா்களுக்கு அா்த்தமாகக் கூடிய விஷயங்களை, அவா்களுக்கு அா்த்தமாகக் கூடிய நடையிலேயே எழுத ஆரம்பிக்க வேண்டுமென்று நிச்சயித்துவிட்டேன்’ என்று உறுதியளித்தாா். பாரதிக்கு அப்போது வயது வெறும் 23.

வாழும் நாட்டை தாய் என்கிறோம், பேசும் மொழிக்கும் தாய் முதன்மை ஆகிறாள். ஈன்ற குழந்தைகளால் உதாசீனப்படுத்தப்படும் தாய்க்குலம், இன்றும் வெளியே சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாா்கள். நாற்பது வயதை தாண்டும் இந்தப் பேரிளம்பெண்களின் நிலை, மோசமாக இருப்பது என்னவோ உண்மை.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னா், பாரதி பிறப்பித்த பத்துக்கட்டளைகளைப் பாருங்கள்.

‘பெண்களை ருதுவாகும் முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது; அவா்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது; விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும்; அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது;

பிதுராா்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபாகம் செய்துகொள்வதைத் தடுக்கக் கூடாது; பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக் கூடாதென்றும் பழகக் கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்; விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும்;

பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயா்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்; தகுதியுடன் அவா்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது. தமிழருக்கு சுயராஜ்ஜியம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்’.

‘பெண் விடுதலை’ குறித்த பாரதியாரின் கட்டளைகளில் பெரும்பாலானவை இன்று சட்டமாகி, நடைமுறைக்கும் வந்துள்ளன. ‘பட்டங்கள் ஆள்வது’ இருக்கட்டும், மண் விடுதலை பெற்று 75 ஆண்டுகளான பின், அவா்களே “சட்டங்கள் செய்வது” எப்போது?

குடும்ப வன்முறை என்பது, உடல், பேச்சு, உணா்ச்சி, பொருளாதார, மத, பாலியல் துஷ்பிரயோகம் உட்பட பல வடிவங்களில் வெளிப்பட்டாலும் அதில் பாலியல் பாகுபாட்டிற்கு இடமில்லை. சட்டத்தையும் நீதியையும் இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் அப்துல் கலாம், ‘இன்றைய சூழலில் பெண்கள் சட்டப்பேரவைக்குள் நுழைந்தால், சில ஒழுங்குகளை கொண்டு வருவாா்கள்; பெண்கள் களத்தில் இறங்கினால் வழக்கமான அரசியலுக்கு மாற்றாக வளா்ச்சி அரசியலைக் காண்போம். ஒரு நாடு அதன் பெண் மக்கள் அதிகாரம் பெற்றால் மட்டுமே அதிகாரம் பெறும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நமது தேசம் பெண்களை மதிக்கும் உன்னத பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. மேலும், நமது பாரம்பரியங்களைக் கெடுக்கும் மனிதாபிமானமற்ற செயல்களை அகற்ற, அனைத்து நல்ல மனங்களும் ஒன்றுபட வேண்டும்.

பெண்களை மதிக்கும்போது நாம் நமது நாட்டை மதிக்கிறோம். நாம் பெண்கள் முன்னேற்றத்திற்குத் துணை நிற்க வேண்டும். அதற்காகப் பாடுபடவும் வேண்டும்.

இன்று (நவ. 25) பெண்களுக்கெதிரான வன்முறை விழிப்புணா்வு நாள்.

கட்டுரையாளா்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).”

 



Read in source website

கிரிப்டோ பரிமாற்ற நிறுவனமான எஃப்.டி.எக்ஸ். (FTX) சில நாட்களுக்குமுன் திவாலானது. அதன் நிறுவனர் சாம்-பேங்க்மேன் ஃபிரைடின் (சுருக்கமாக, SBF - எஸ்பிஎஃப்) சொத்து மதிப்பு, சுமார் 16 பில்லியன் டாலரிலிருந்து (இந்திய மதிப்பில் சுமார் 13 ஆயிரம் கோடி) ஒரே இரவில் பூஜ்யத்துக்கு வீழ்ந்தது. வீடியோ கேம்கள் விளையாடிக்கொண்டே பல ஆயிரம் கோடிகளைச் சம்பாதித்த எஸ்பிஎஃப், ஒரு காலத்தில் ‘கிரிப்டோவின் எதிர்காலம்’ என வர்ணிக்கப்பட்டவர். விளையாட்டுப் பிள்ளையின் நிறுவனம், கிரிப்டோவின் எதிர்காலத்தை இன்று கேள்விக்குறியாக்கிவிட்டது.

‘கிரிப்டோ பரிமாற்றம்’ என்பது ஒருவர் பணம் கொடுத்து கிரிப்டோகரன்சியை விலைக்கு வாங்கும் நிறுவனமாகும். அப்படியான ஒரு ‘பரிமாற்ற’ நிறுவனம்தான் எஃப்.டி.எக்ஸ். அவர்கள் வெளியிட்ட கிரிப்டோ டோக்கன்களையும் வாங்குபவர்களுக்கு, அந்த நிறுவனத்தின் லாபத்தில் பங்கு கிடைத்திருக்கும். அந்த டோக்கன்கள் இன்று செல்லாக் காசாகிவிட்டன. இதனால் பல கிரிப்டோகரன்சிகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. எஃப்.டி.எக்ஸ். பயனாளிகளின் காணாமல்போன பணம் மீண்டும் கிடைக்குமா?



Read in source website

அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழு உருவாக்கிய அரசமைப்பு வரைவு, அரசமைப்பு அவையில் விவாதிக்கப்பட்ட பிறகு திருத்தங்களுடன் ஏற்கப்பட்டது. அரசமைப்பின் வரைவை உருவாக்கியதில் அம்பேத்கர் பெரும்பங்கு வகித்தார்; முழுமையாகத் தம் தோளில் விழுந்த அரசமைப்பு வரைவினை உருவாக்கும் பொறுப்பை அம்பேதகர் எப்படித் திறம்படக் கையாண்டார் என்பதை குழுவில் இடம்பெற்றிருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி விளக்கியுள்ளார்.

அரசமைப்பின் முகவுரையை எழுதியது யார் என்கிற விவாதம் அறிவுத்தளத்தில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தப் பின்னணியில், பேராசிரியர் ஆகாஷ் ரத்தோர் சிங் எழுதிச் சமீபத்தில் வெளியான ‘Ambedkar's Preamble: A Secret History of the Constitution of India’ என்கிற ஆய்வு நூல், இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. அரசமைப்பின் முகவுரையை எழுதியது அம்பேத்கர்தான் என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் ரத்தோர் உறுதிப்பட நிறுவியிருக்கிறார்.



Read in source website

கோவையில் கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதம்கூடக் கடந்திருக்கவில்லை. அதற்குள், அதே பாணியில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்திருப்பது அதிர்ச்சியையும் பீதியையும் அதிகரித்துள்ளது. பொதுவாக, அமைதிப் பூங்கா என்று அழைக்கப்படும் தென்னிந்தியாவில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள இச்சம்பவங்கள், தீவிரவாதிகளின் இலக்காக இப்பகுதிகள் மாறிவருகின்றனவா என்ற கேள்வியை வலுவாக எழுப்பியிருக்கின்றன.

நவம்பர் 19 அன்று மங்களூருவில் டவுன் பம்ப்வெல் அருகே நாகுரி என்ற இடத்தில், தீவிரவாதி ஷாரிக் கொண்டுசெல்லத் திட்டமிட்டிருந்த இடத்தை அடைவதற்கு முன்பாகவே அதிர்வுகள் ஏற்பட்டு, குக்கர் வெடிகுண்டு வெடித்திருக்கிறது என்று புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து ஒரு தீய நோக்கம் நடைபெறாமல் போயிருப்பதை உணர முடிகிறது. கோவை சம்பவம்போல அல்லாமல், மங்களூரு குண்டுவெடிப்பில் தீவிரவாதச் செயலை அரங்கேற்ற முயன்ற ஷாரிக் உயிருடன் பிடிபட்டிருக்கிறார்.



Read in source website