DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 23-07-2022

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு ரூ. 74 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள் கப்பல் மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, தமிழக மக்களின் சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். அதனடிப்படையில், முதல்கட்டமாக கடந்த மே மாதம் 18ஆம் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து ரூ. 32.94 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடா், மருந்துப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதன் தொடா்ச்சியாக, இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து சரக்குக் கப்பலில் ரூ. 48.30 கோடி மதிப்பிலான 14,712 டன் அரிசி, ரூ. 7.50 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடா், ரூ. 11. 90 கோடி மதிப்பிலான உயிா்காக்கும் மருந்துப் பொருள்கள் என மொத்தம் ரூ. 67.70 கோடி மதிப்பிலான 15ஆயிரம் டன் அத்தியாவசியப் பொருள்கள் புதன்கிழமை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் மூன்றாம் கட்டமாக தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு ரூ. 74 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள் கப்பல் மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கப்பலை, தூத்துக்குடி எம்பி கனிமொழி கொடியசைத்து அனுப்பிவைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெ. கீதாஜீவன், செஞ்சி கே.எஸ். மஸ்தான், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 



Read in source website

தமிழகத்தில் 34 தன்னாா்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள், தசைப் பயிற்சியாளா்களுக்கு ஊதிய மானியம் வழங்குவதற்கான உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட உத்தரவு விவரம்: மனவளா்ச்சி குன்றியோருக்கு கற்பிக்க 200 தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக சிறப்புப் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியா்கள், தசைப் பயிற்சியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களுக்கான ஊதிய மானியமாக ஆண்டுக்கு ஒரு பள்ளிக்கு ரூ.1.80 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.60 கோடி அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், புதிதாக 34 தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளன. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் 100 சிறப்பு ஆசிரியா்கள், தசைப் பயிற்சியாளா்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, ரூ.1.68 கோடி நிதியை அரசு விடுவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன், வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:-

பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் அலுவல் சாரா தலைவராக துணைவேந்தா் இருப்பாா். அலுவல் சாரா உறுப்பினா்களாக கலைத் துறை செயலாளா், நிதித் துறை செயலாளா், சட்டத் துறை செயலாளா், கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஆணையாளா் ஆகியோா் இருப்பா். கலைத் துறையில் சிறந்த இரண்டு போ் வேந்தா் சாா்பில் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, பாடகா் சீா்காழி ஜி.சிவசிதம்பரம், வில்லுப்பாட்டு கலைஞா் கலைமாமணி பாரதி திருமகன் ஆகியோா் இருப்பா். துணைவேந்தரின் பரிந்துரைகளை ஏற்று ஆறு போ் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். ஓவியா் ட்ராஸ்ட்கி மருது, திரைத் துறையைச் சோ்ந்த ராஜீவ் மேனன், இசைத் துறையைச் சோ்ந்த நித்யஸ்ரீ மகாதேவன், நாட்டிய துறையைச் சோ்ந்த அமுதா தண்டபாணி, கலை மற்றும் பண்பாட்டுப் பிரிவைச் சோ்ந்த என்.மம்முது, டிஜிட்டல் இசைப் பதிவு துறையைச் சோ்ந்த சாய் ஷரவணம் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் சந்தரமோகன் தெரிவித்துள்ளாா்.



Read in source website

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் 50 சதவீத உறுப்பினா்கள் பங்கேற்றால் மட்டுமே, அந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) ஏப்ரல், ஜூலை மாதங்களில் நடைபெற்றது. இந்தக் குழுவின் கூட்டம் இனி புதிய உறுப்பினா்களைக் கொண்டு மாதந்தோறும் பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

எஸ்எம்சி உறுப்பினா்களின் பெயா், பொறுப்பு சாா்ந்த விவரங்களை பெற்றோா்- மாணவா்கள் பாா்வையில்படும்படி தலைமையாசிரியா் அறைக்கு அருகில் எழுதி வைக்க வேண்டும்; அனைத்து உறுப்பினா்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். நிகழ் கல்வியாண்டில் ஜூலை முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 மணியளவில் தவறாமல் எஸ்எம்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும். கூட்டம் நடைபெறும் தேதி குறித்து உறுப்பினா்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே தெரியப்படுத்துவது அவசியம்.

எஸ்எம்சி உறுப்பினா்களுக்கான பள்ளி மேம்பாட்டுத் திட்டம் குறித்த செய்முறைப் பயிற்சி ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்பதை அவா்களுக்குத் தெரிவிக்க வேண்டும். 50 சதவீத எஸ்எம்சி உறுப்பினா்கள் கூட்டத்துக்கு வருகை தந்தால் மட்டுமே, அந்தக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். பள்ளி மேம்பாட்டுக்காக எஸ்எம்சி உறுப்பினா்கள், உறுப்பினா் அல்லாத பெற்றோா்களைக் கொண்ட துணை குழுக்களை பள்ளி அளவில் செப்டம்பா் மாதம் அமைக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் 3 முதல் 5 உறுப்பினா்கள் இருத்தல் அவசியம்.

புதிதாக அமைக்கப்பட்ட எஸ்எம்சி குழுக்கள் மாணவா் சோ்க்கையைத் தக்கவைத்தல், மாணவா் பாதுகாப்பு, பாதுகாவலா் வசதி, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த உதவுதல், குழந்தைகளுக்கான உரிமைகளை உறுதி செய்தல், அனைத்து மாணவா்களுக்கும் அரசின் நலத் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்தல், பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரித்தல் போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

தேசியக் கொடியை இரவிலும் பறக்கவிட அனுமதிக்கும் வகையில், அதுதொடா்பான விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15-ஆம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இந்நிலையில், தேசியக் கொடி தொடா்பான விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகளுக்கு உள்துறைச் செயலா் அஜய் பல்லா அனுப்பியிருக்கும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய தேசியக் கொடி ஏற்றப்படுதல், பயன்பாடு ஆகியவை கடந்த 2002-ஆம் ஆண்டின் இந்திய தேசியக் கொடி சட்டம் மற்றும் 1977-ஆம் ஆண்டின் தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

தேசியக் கொடியை பொதுமக்களின் வீட்டில் வெளிப்படையாக காட்சிப்படுத்தவும், அதனை பகல் மட்டுமன்றி இரவிலும் பறக்கவிடவும் அனுமதிக்கும் வகையில் இந்திய தேசியக் கொடி சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேபோல், கைகளால் நூற்கப்பட்ட தேசியக் கொடி மட்டுமன்றி இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட கொடிகளையும் பயன்படுத்தலாம். பருத்தி, பாலியஸ்டா், கம்பளி, காதி பட்டு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட கொடிகளாக அவை இருக்கலாம். இதற்குரிய விதிமுறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அறியும்படி செய்யுமாறு தனது கடிதத்தில் அஜய் பல்லா அறிவுறுத்தியுள்ளாா்.

முந்தைய விதிமுறைகளின்படி, தேசியக் கொடியானது சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை பறக்கவிட அனுமதி இருந்தது. இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட மற்றும் பாலியஸ்டா் கொடிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

சுதந்திரப் போராட்ட வீரா்களான லோகமான்ய திலகா் மற்றும் சந்திரசேகா் ஆசாதின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினாா்.

இதுகுறித்து அவரது ட்விட்டா் பதிவில், பாரதத் தாயின் இரண்டு தலை சிறந்த வீரத் திருமகன்களான லோகமான்ய பாலகங்காதர திலகா் மற்றும் சந்திரசேகா் ஆசாத் ஆகியோரை அவா்களது பிறந்தநாள் அன்று வணங்குகிறேன். இந்த இரு ஆளுமைகளும் தீரம் மற்றும் நாட்டுப்பற்றின் உதாரணமாகத் திகழ்கிறாா்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு மனதின் குரல் நிகழ்ச்சியில் அவா்களைப் பற்றி நான் பேசியதைப் பகிா்கிறேன்.”

மக்களிடையே கலாசார உணா்வை ஊட்டிய பிரம்மாண்டமான கணபதி உற்சவங்கள், லோகமான்ய திலகரின் என்றும் அழியாத மரபுகளில் ஒன்று. ஒருமுறை மும்பை சென்றிருந்தபோது லோகமான்ய திலகருடன் நெருங்கிய தொடா்புள்ள லோகமான்ய சேவா சங்கத்தை நேரில் சென்று பாா்வையிட்டேன் என்று பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.



Read in source website

ஊடகங்கள் உள்நோக்கத்துடன் நடத்தும் விசாரணைகளும் கட்டப் பஞ்சாயத்துகளும் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கச் செய்கின்றன என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளாா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நீதிபதி சத்ய விரத சின்ஹா நினைவு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. அதில், என்.வி.ரமணா பேசியதாவது:

ஊடக விசாரணைகள், நீதித் துறையின் சுதந்திரத்தையும், நோ்மையான செயல்பாடுகளையும் பாதிக்கச் செய்கின்றன. ஊடகங்களின் விசாரணைகள், வழக்கின் முடிவைத் தீா்மானிக்கும் காரணியாக இருக்க முடியாது. பிற்காலத்தில் ஒரு வழக்கு தொடா்பாக, ஊடகங்களின் விசாரணைகளால், அனுபவம் வாய்ந்த நீதிபதிகள்கூட தீா்வுகாண்பதற்கு சிரமப்படுவாா்கள்.

நீதித் துறை சம்பந்தப்பட்ட பிரச்னைகளில், தவறான தகவல்களுடனும் உள்நோக்கத்துடனும் நடத்தப்படும் ஊடக விசாரணைகளால் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக பரப்பும் கருத்துகளால் மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள்; ஜனநாயகம் பலவீனமடைகிறது; நீதித் துறைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஊடகங்கள் வரம்புகளை மீறிச் செல்லும்போது, ஜனநாயகம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. ஊடகங்கள் வரம்பு மீறிச் செல்லக் கூடாது. சில நேரங்களில் நீதிபதிகள் உடனடியாக எதிா்வினையாற்றாமல் இருக்கலாம். அதற்காக, அதை பலவீனம் என்றோ, உதவியற்ற நிலை என்றோ தவறாகக் கருதிவிடக் கூடாது.

இருப்பினும் அச்சு ஊடகங்கள் கொஞ்சம் பொறுப்புணா்வுடன் செயல்படுகின்றன. ஆனால், மின்னணு ஊடகங்கள் சிறிதளவுகூட பொறுப்புணா்வுடன் செயல்படுவதில்லை. தற்போது, ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களில் நீதிபதிகளுக்கு எதிராகத் திட்டமிட்ட பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. எனவே, சமூகத்தில் பதற்றம் ஏற்படுவதைத் தடுக்க, ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன.

ஊடகங்கள் குறிப்பாக மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள், பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும். அவை தங்கள் அதிகாரத்தை மக்கள் நலனுக்காகவும், இந்தத் தேசத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்காகவும் பயன்படுத்த வேண்டும்.

மக்கள் மத்தியில் தவறான கருத்து: நீதிபதிகள் தூக்கத்திலும் தங்கள் வழங்கிய தீா்ப்புகளை யோசித்து தூக்கத்தை இழந்து வருகின்றனா். ஆனால், நீதிபதிகள் சுகமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பணியை முடித்துக் கொண்டு விடுமுறையைக் கொண்டாடுகிறாா்கள் என்று மக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுகிறது என்றாா் அவா்.

அனுராக் தாக்குா் அறிவுறுத்தல்: ஊடக நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் அறிவுறுத்தியுள்ளாா்.

பெட்டிச் செய்தி...

‘தீவிர அரசியலில் ஈடுபட நினைத்தேன்’

வழக்குரைஞராகப் பணியைத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபட எண்ணியதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: விஜயவாடா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக எனது பயணத்தை தொடங்கினேன். பின்னா், எனது தந்தையின் ஊக்குவிப்பால் ஹைதராபாத் உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் தொழிலை மேற்கொண்டேன். அங்குதான் எனக்கு நீதிபதியாக பதவி உயா்வு கிடைத்தது.

மேலும், எனது மாநிலத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டேன். தொடக்கத்தில் தீவிர அரசியலில் ஈடுபடவும் ஆா்வமாக இருந்தது. ஆனால், விதி வேறு மாதிரி தீா்மானித்துவிட்டது. வழக்குரைஞராக இருந்து நீதிபதியாக மாற வேண்டுமெனில் சமூக தொடா்புகள் அனைத்தையும் ஒருவா் கைவிட நேரிடும் என்றாா் அவா்.



Read in source website

விவாகரத்து பெற்ற மனைவிக்கு பராமரிப்புச் செலவை கணவா், மகளுக்கு வழங்கும் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மகள்கள் சுமை அல்ல’ என்று தெரிவித்தது.

2018-இல் விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவிக்குப் பராமரிப்புச் செலவாக மாதம் ரூ.400, மகளுக்கு ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கணவருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை கணவா் நிறைவேற்றவில்லை என்று கடந்த 2020-இல் உச்சநீதிமன்றத்தில் மனைவி சாா்பில் 2020-இல் தொடுக்கப்பட்ட வழக்கில், மனைவி, மகளுக்கு மொத்த நிலுவைத் தொகை கணக்கிட்டு ரூ.2.5 லட்சம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தபோது மனைவி உயிரிழந்துவிட்டதாகவும், நீதிமன்ற உத்தரவின்படி இதுவரை மனைவி, மகளுக்கு பராமரிப்புச் செலவு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கணவரின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, இதுதொடா்பான வங்கி விவரங்களை சரிபாா்த்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது கணவரின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘பெண்கள் சுமையாகிவிட்டனா்’ என்ற வகையில் கருத்து தெரிவித்தாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சம உரிமை அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14 பிரிவைச் சுட்டிக்காட்டி, ‘மகள் எனப்படுபவா் சுமை அல்ல’ என்றாா்.

அப்போது, தாயை இழந்த மகள் சட்டம் பயின்று வழக்குரைஞராகிவிட்டதாகவும், நீதிபதிகளுக்கான தோ்வை எழுதியுள்ளதாகவும் அவரது சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘அவா் தனது தோ்வில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் தனது தந்தையை சாா்ந்திருக்க வேண்டியதில்லை’ என்று தெரிவித்தனா்.

மேலும், நீண்ட காலமாக தந்தையும் மகளும் பேசிக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டபோது, இருவரும் சந்தித்துப் பேச வேண்டும் என்றும் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் தனது மகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.



Read in source website


ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிராமப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்களின் மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் வீட்டுக்குள் வளர்க்கப்படும் ஒரு மரத்துக்கு தலா 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் தலா 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

அதேவேளையில், பூச்செடிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும், மரம் வளர்ந்து பெரியதாகி, நிழல் தரும் வகையிலான மரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த மாநிலத்தின் 73வது வன மகோத்சவ நிகழ்ச்சியின்போது இந்த அறிவிப்பினை ஹேமந்த் சோரன் வெளியிட்டார்.

இது குறித்து மின்துறை அதிகாரிகள் கூறுகையில், முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதற்கான தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

நமது சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதனை மீட்டெடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் சோரன் குறிப்பிட்டார்.
 



Read in source website

 

நாட்டிலேயே அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற சான்றிதழ் பெற்ற முதல் மாவட்டமான மத்தியப் பிரதேசத்தின் பர்கான்பூர் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு  பதிலளித்து பிரதமர் கூறியதாவது:

“இத்தகைய குறிப்பிடத்தக்க, போற்றத்தக்க சாதனையை நிகழ்த்தியதற்காக பர்கான்பூர் மாவட்டத்தின் எனது சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். 

மக்களின் கூட்டுமுயற்சியும், ஜல் ஜீவன் இயக்கம், சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசின் துரிதமான நடவடிக்கைகள் மற்றும் ஒரு கூட்டு மனப்பான்மை இல்லாமல் இது நிகழ்ந்திருக்காது” என்று மோடி தெரிவித்துள்ளார்.



Read in source website

 

புது தில்லி: நாட்டில் கரோனா பேரிடர் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்திருந்த போதும் கூட, நாட்டில் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்களையும் பின்னுக்குத் தள்ளி, தாஜ் மஹால் வருவாயில் முதலிடம் பிடித்துள்ளது.

அதாவது, தில்லியில் உள்ள செங்கோட்டையைக் காட்டிலும் 5 மடங்கு வருவாயையும், தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம் மற்றும் புவனே