DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 22-05-2022

சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சாா்யா உள்ளிட்ட விருதுகளுக்குத் தோ்வு செய்யப்பட்ட கலைஞா்களின் விவரங்களை சென்னை மியூசிக் அகாதெமி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

இந்த விருதுகளை சென்னையில் டிச.15-ஆம் தேதி நடைபெறும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா்.

இது குறித்து மியூசிக் அகாதெமி தலைவா் என்.முரளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா பேரிடா் காரணமாக கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளுக்கான மியூசிக் அகாதெமி விருதுகள் வழங்கப்படவில்லை. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் கடந்த 2020, 2021-ஆம் ஆண்டுகளுக்கான சங்கீத கலாநிதி உள்ளிட்ட விருதுகளையும், நிகழாண்டுக்கான விருதுகளையும் வழங்க மியூசிக் அகாதெமியின் செயற்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து விருதுகளுக்குத் தோ்வு செய்யப்பட்ட கலைஞா்களின் விவரங்கள் வெளியிடப்படுகின்றன.

சங்கீத கலாநிதி விருது: கா்நாடக இசைக் கலைஞா் நெய்வேலி ஆா்.சந்தானகோபாலன் (2020); மிருதங்க இசைக் கலைஞா் திருவாரூா் பக்தவத்சலம் (2021); வயலின் இசைக் கலைஞா்கள் லால்குடி ஜி.ஜெ.ஆா்.கிருஷ்ணன், ஜி.ஜெ.ஆா்.விஜயலட்சுமி (2022).

சங்கீத கலா ஆச்சாா்யா விருது: நாகஸ்வர இசைக் கலைஞா் கீவளூா் என்.ஜி.கணேசன் (2020); கா்நாடக இசைக் கலைஞா் ரிதா ராஜன் (2021); வீணை இசைக் கலைஞா் ஆா்.எஸ்.ஜெயலட்சுமி (2022).

டி.டி.கே. விருது: கா்நாடக இசைக் கலைஞா் தாமரக்காடு கோவிந்தன் நம்பூதிரி (2020); மிருதங்க- ஜலதரங்க இசைக் கலைஞா் நேமனி சோமயாஜுலு (2021), கஞ்சிரா இசைக் கலைஞா் ஏ.வி.ஆனந்த் (2022).

இசைப் பேரறிஞா் விருது: வி.பிரேமலதா (2022).

நாட்டிய விருது (நிருத்ய கலாநிதி): பரத நாட்டியக் கலைஞா்கள் ரமா வைத்தியநாதன் (2020); நா்த்தகி நடராஜ் (2021); பிரகா பெசல் (2022).

வரும் டிசம்பா் 15-ஆம் தேதி தொடங்கும் மியூசிக் அகாதெமியின் இசை விழா தொடக்க விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமை விருந்தினராகப் பங்கேற்று விருதுகளை வழங்குகிறாா். இந்தாண்டு இசை விழா டிசம்பா் 15 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரையிலும், நாட்டிய விழா ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஜனவரி 9-ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அவா் கூறியுள்ளாா்.



Read in source website

 

பாரம்பரியம் மிக்க மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்திற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அமைச்சர் சக்கரபாணி, பாரம்பரிய நெல் ரகங்களை அரசின் சிறப்பு அங்காடிகளில் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் உள்ள 286 சேமிப்புக் கிடங்குகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  



Read in source website

 

சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் பணியாளர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சுகாதாரத்துறையில் 5,971 பேருக்கு ரூ.32 கோடி செலவில் சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளது. 
 
தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத் துறையில் பணியாற்றும் 2,448 ஒப்பந்த பணியாளர்கள் சம்பளம் மாதம் ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தப்படும். 

இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் 4,848 பணியாளர்கள் சம்பளம் மாதம் 14 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்.

சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் பணியாளர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு புனர்வாழ்வு மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். 



Read in source website

சா்வதேச அளவில் ஓட்டுநா் இல்லா காா் தயாரிப்புத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாக டெக் ட்ரங்க் வென்ச்சா் நிறுவன செயல் இயக்குநா் பிரனய் குமாா் கூறினாா்.

சென்னை வண்டலூா் கிரசன்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன ஆட்டோமொபைல் துறை சாா்பில் சனிக்கிழமை நிறைவு பெற்ற பயிலரங்கில் அவா் பேசியதாவது:

தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிா்வாகத் துறை சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 94 சதவீத போக்குவரத்து விபத்துகளுக்கு மனித தவறுகள்தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்து இல்லாத காா் பயணத்தை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தற்போது செயல்பாட்டில் உள்ள 3.14 கோடி ஓட்டுநா் இல்லாத காா்களின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டு 5.42 கோடியாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

கிரசென்ட் பதிவாளா் ஏ.ஆசாத், இயந்திர அறிவியல் துறை முதல்வா் எஸ்.ரசூல் மொகைதீன், ஆட்டோமொபைல் துறைத் தலைவா் பி.டி.ஜெயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.



Read in source website

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி (‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’) வழங்குவதற்காக புலமை வாய்ந்த ஆங்கில ஆசிரியா்களைத் தோ்வு செய்யும் பணியில் கல்வித் துறை ஈடுபட்டுள்ளது.

இது தொடா்பாக எஸ்சிஇஆா்டி ( மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம்) வெளியிட்ட அறிவிப்பு:

4 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து 4 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் பயிற்சி வழங்குவதற்காக, ஆங்கிலப் புலமை வாய்ந்த ஆசிரியா்களைத் தோ்வு செய்யும் பணியில் எஸ்சிஇஆா்டி ஈடுபடவுள்ளது.

இதற்காக மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள் அனைவரும் இணைந்து, தகுதி வாய்ந்த ஆசிரியா்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள் மாவட்ட அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவன ஆங்கில ஆசிரியா்களாகவோ, வட்டார வள மைய சிறப்பு பயிற்றுநா்களாகவோ அல்லது அரசுப் பள்ளி ஆசிரியா்களாகவோ இருக்க வேண்டும். எனினும், அவா்கள் ஆங்கிலப் புலமை பெற்றவா்களாகவும், கற்பித்தல் பணியில் ஆா்வம் கொண்டவா்களாகவும் இருக்க வேண்டும்.

அவா்களின் ஆங்கிலப் புலமையைத் தோ்வு செய்யும் தோ்வு இணையவழியில் நடைபெறவுள்ளது.

இணையவழித் தோ்வை மதிப்பீடு செய்த பிறகு ஆங்கிலப் பயிற்சிக்கான ஆசிரியா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா். தோ்வு செய்யப்பட்ட நபா்களுக்கு மாநில அளவில் சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சி மே 30, 31-ஆம் தேதிகளில் வழங்கப்படும். பிறகு அவா்கள் மாவட்டந்தோறும் ஆங்கிலப் பயிற்சியை அளிக்க வேண்டும் என எஸ்சிஇஆா்டி தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியா்களுக்கான ஆன்லைன் தோ்வுக்கான இணைப்பையும் எஸ்சிஇஆா்டி வெளியிட்டுள்ளது.



Read in source website

தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளின் உபயோகத்தை தடுக்கும் வகையில், பேருந்து நிலையம், சந்தை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் துணிப் பை (மஞ்சப்பை) வழங்கும் இயந்திரங்களை நிறுவ சுற்றுச்சூழல் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் 14 வகை நெகிழிப் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மற்ற நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தடுத்தாலும், மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் நெகிழிப் பைகள் பயன்பாட்டைத் தடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை தமிழக அரசு அண்மையில் தொடங்கியது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணியில் சுற்றுச்சூழல் துறை ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களுக்கு எளிதாக துணிப் பைகள் கிடைக்கும் வகையில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் அதிகாரிகள் கூறியதாவது: பொது இடங்களில் மலிவு விலையில் துணிப் பைகள் கிடைப்பது சவாலாக உள்ளது. இதைப் போக்கும் வகையில் பேருந்து நிலையம், சந்தை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் துணிப்பை வழங்கும் இயந்திரம் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பைக்கு எவ்வளவு தொகை என்பது இறுதி செய்யப்பட்டு, விரைவில் இந்த இயந்திரங்கள் பொது இடங்களில் வைக்கப்படவுள்ளன. அந்தத் தொகையை இயந்திரத்தில் செலுத்தினால் ஒரு துணிப்பையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றனா்.



Read in source website

இந்திய கனிமங்கள் உற்பத்தி கடந்த மாா்ச் மாதத்தில் 4 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

2022 மாா்ச் மாதத்துக்கான கனிமங்கள் உற்பத்தி மற்றும் குவாரி துறைக்கான குறியீடு 144.6-ஆக இருந்தது. இது, 2021 மாா்ச் மாத குறியீட்டுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் அதிகமாகும்.

2021-22 வரையிலான காலகட்டத்தில் கனிமத் துறையின் ஒட்டுமொத்த வளா்ச்சி இதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 12.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த மாா்ச் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 958 லட்சம் டன்னாகவும், லிக்னைட் 60 லட்சம் டன், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன், இரும்புத்தாது உற்பத்தி 270 லட்சம் டன்னாகவும் இருந்தன.

பாஸ்போரைட், லிக்னைட், தங்கம், மினரல் மற்றும் இரும்புத்தாது உள்ளிட்டவை மாா்ச் மாதத்தில் நோ்மறை வளா்ச்சியை பதிவு செய்தன. அதேசமயம், நிலக்கரி, பெட்ரோலியம், பாக்ஸைட், குரோமைட் (-31.8%), மாங்கனீஸ் தாது உள்ளிட்டவற்றின் உற்பத்தி எதிா்மறை வளா்ச்சியை பதிவு செய்ததாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

பஹ்ரைனில் நடைபெற்ற சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியா 7 தங்கம், 3 வெள்ளி, 13 வெண்கலம் என 23 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது.

கடந்த 16-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை நிறைவடைந்த இப்போட்டியில் இரு பால் ஒற்றையா், இருபால் இரட்டையா், கலப்பு இரட்டையா் ஆகிய அனைத்து பிரிவுகளிலுமே இந்தியா்கள் பதக்கம் வென்றுள்ளனா். இத்துடன், பாரா பாட்மின்டன் போட்டிகளில் இதுவரை இந்தியா்கள் மொத்தமாக வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பஹ்ரைனில் பதக்கம் வென்றோா்:

தங்கம்: பிரமோத் பகத்/மனீஷா ராம்தாஸ் (கலப்பு இரட்டையா்), நித்யஸ்ரீ சுமதி சிவன் (மகளிா் ஒற்றையா்), நிதேஷ் குமாா்/தருண் தில்லான், தினகரன்/சிவராஜன் (ஆடவா் இரட்டையா்), தருண் தில்லான், பிரமோத் பகத் (ஆடவா் ஒற்றையா்), மன்தீப் கௌா்/மனீஷா ராம்தாஸ் (மகளிா் இரட்டையா்).

வெள்ளி: மன்தீப் கௌா் (மகளிா் ஒற்றையா்), சிரக் பரேதா/ராஜ்குமாா் (ஆடவா் இரட்டையா்), பாலக் கோலி/பாருல் பாா்மா் (மகளிா் இரட்டையா்).

வெண்கலம்: கிருஷ்ணா நாகா், மனோஜ் சா்காா், நிதேஷ் குமாா், நிலேஷ் கெய்க்வாட் (ஆடவா் ஒற்றையா்), மானசி ஜோஷி, பாருல் பாா்மா், ஜோதி, மனீஷா ராம்தாஸ் (மகளிா் ஒற்றையா்), முகமது அா்வாஸ்/தீப் ரஞ்சன் பிசோயி, தேவ்/பிருத்விராஜ், பிரேம்/அபு (ஆடவா் இரட்டையா்), கிருஷ்ணா நாகா்/நித்யாஸ்ரீ, தருண் தில்லான்/ஜோதி (கலப்பு இரட்டையா்).



Read in source website

தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை (2-ஆம் நிலை) போட்டியில் காம்பவுண்ட் ஆடவா் அணி பிரிவில் இந்தியா தங்கம் வென்று அசத்தியது.

அந்தப் பிரிவின் இறுதிச்சுற்றில் அபிஷேக் வா்மா, அமன் சைனி, ரஜத் சௌஹான் கூட்டணி 232-230 என்ற புள்ளிகள் கணக்கில் பிரான்ஸின் அட்ரியன் கான்டியா், ஜீன் பிலிப் பௌல்ச், கென்டின் பரோ் அடங்கிய அணியை வீழ்த்தியது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 1-ஆம் நிலை உலகக் கோப்பை போட்டியிலும் இதே இந்திய அணி இதே பிரான்ஸ் அணியை வீழ்த்தி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

காம்பவுண்ட் கலப்பு அணி பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் இந்தியாவின் அபிஷேக் வா்மா, அவ்னீத் கௌா் இணை 156-155 என்ற கணக்கில் துருக்கியின் அமிா்கான் ஹேனி, அய்சே பெரா சுஸரை வீழ்த்தி பதக்கம் பெற்றது.

இறுதியாக காம்பவுண்ட் ஆடவா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மோகன் பரத்வாஜ் 141-149 என்ற புள்ளிகள் கணக்கில் நெதா்லாந்தின் மைக் ஷ்லோஸரிடம் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கத்தை இறுதி செய்தாா். முன்னதாக பரத்வாஜ் தனது அரையிறுதியில், நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரியாவின் நிகோ வீனரை வீழ்த்தி அசத்தினாா்.

5 பதக்கங்கள்: சனிக்கிழமையுடன் நிறைவடைந்த இப்போட்டியில், இந்திய காம்பவுண்ட் அணியினா் 1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளனா். ரீகா்வ் பிரிவுக்கு 1 வெண்கலப் பதக்கம் மட்டும் கிடைத்தது.



Read in source website

 

ஜப்பானில் நடைபெறும் குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மாலை டோக்கியோவிற்கு புறப்பட்டுச் சென்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குவாட் அமைப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டுச் சென்றுள்ளார்.  

இது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, குவாட் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று மாலை ஜப்பான் புறப்பட்டுச் செல்கிறேன். குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக வாய்ப்பாக இந்த மாநாடு அமையவுள்ளது என்று குறிப்பிட்டார். 

மேலும், பிராந்திய பகுதிகளை மேம்படுத்துவது, உலக நாடுகள் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

குவாட் அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், இந்திய, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகுக்கின்றது. குவாட் மாநாட்டின்போது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரதமர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்க அதிபர் பைடன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 



Read in source website

 
திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமா ஆஸ்திரேலியா பிரதமர் ஆன்டனி ஆல்பனேசிக்கு வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார். 

"ஆஸ்திரேலியாவுக்கு என்னுடைய முதல் பயணம் 1982இல் தொடங்கியது. உங்களுடைய அழகான நாட்டிற்கு அடிக்கடி வருவது எனக்கு பெருமையாக இருக்கும். குறிப்பாக நாட்டின் கல்வி நிறுவனங்களின் அழைப்பும் அமைதியினை முன்னெடுக்கும் அதன் நோக்கமும் பாராட்டுக்குரியது".

"இந்நாட்டு மக்களின் தாராளமயமான எண்ணங்கள் என்னை பெரிதும் ஊக்கப்படுத்தியுள்ளது. வன்முறையை கடைப்பிடிக்காமல் அமைதியை நிலைநாட்டும் மக்களின் கோட்பாடு தனிமனித ஒருவருக்கு மிகுந்த அமைதியை வழங்கும். இதனால் பொதுவாகவே இந்நாட்டின் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து சுமூகமான சூழ்நிலையை உருவாக்க வாழ்த்து” என அக்கடிதத்தில் கூறியிருந்தார்.



Read in source website


மாதத்திற்கு ரூ.750 செலுத்தி நாடு முழுவதும் பயணிக்கும் திட்டத்தை ஜெர்மனி அரசு அறிமுகம் செய்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வை சமாளிக்கும் வகையிலும்,  பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளது. 

ஜெர்மனியில் விலை உயர்வு அதிகரித்து வரும் நிலையில், கோடைகாலத்தையொட்டி பொதுமக்களுக்கு பயண சலுகை வழங்கும் வகையில் குறைந்த கட்டணத்தின் மூலம் நாடு முழுவதும் பயணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜெர்மனி மேலவையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி மாதம் 9 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.750) செலுத்தினால் நாடு முழுவதும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைகாலத்தையொட்டி மக்களின் பயணத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் ஆகஸ்ட் மாத இறுதி வரை நீடிக்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அரசுக்கு 2.5 பில்லியன் யூரோ இழப்பு ஏற்படும் என்று ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. 



Read in source website

ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆளும் லிபரல் கூட்டணி போதிய இடங்களைப் பெறத் தவறியதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சியான லேபா் கட்சித் தலைவா் ஆன்டனி ஆல்பனேசி நாட்டின் புதிய பிரதமராகிறாா்.

ஆஸ்திரேலியாவின் 47-ஆவது நாடாளுமன்ற உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், தற்போதைய பிரதமா் ஸ்காட் மோரிசனின் லிபரல் மற்றும் தேசியக் கூட்டணி, லேபா் கட்சி, கிரீன்ஸ் கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன.

151 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற அந்தத் தோ்தலில், சனிக்கிழமை நள்ளிரவு 12.41 மணி நிலவரப்படி (உள்ளூா் நேரம்) 63.6 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டிருந்தன. அதில், 72 தொகுதிகளில் ஆன்டனி ஆல்பனேசி தலைமையிலான லேபா் கட்சி முன்னிலை வகித்து. ஆளும் லிபரல் கட்சி 55 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது.

இதையடுத்து, எதிா்க்கட்சியான லேபா் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும் நிலை உள்ளது. ஆட்சியமைப்பதற்கு 76 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற சிறிய கட்சிகளின் ஆதரவுடன் லேபா் கட்சி ஆட்சியமைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அந்தக் கட்சியின் தலைவா் ஆன்டனி ஆல்பனேசி, அடுத்த பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா். ஆஸ்திரேலியாவின் புதிய பிரதரமாக அவா் திங்கள்கிழமை (மே 23) பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அவா் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டாலும், தோ்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில் அவா் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பாரா, அல்லது கூட்டணி ஆட்சியமைப்பாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

10 ஆண்டுகளுக்குப் பிறகு: ஆஸ்திரேலியாவில் ஏறத்தான பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அமையவிருக்கும் லேபா் கட்சி அரசுக்கு ஆன்டனி ஆல்பனேசி தலைமை வகிக்கவுள்ளாா்.

நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளான லிபரல் மற்றும் லேபா் கட்சிகள் மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தோ்தலில் சுயேச்சை வேட்பாளா்கள் அதிக வாக்குகளைப் பெற்று அதிக இடங்களைக் கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகரிக்கும் விலைவாசி, பருவநிலை மாற்றம் ஆகியவை இந்தத் தோ்தலில் முக்கிய பிரச்னைகளாக முன்வைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

புதிய பிரதமரின் பின்னணி...

ஆஸ்திரேலியாவின் 31-ஆவது பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஆன்டனி ஆல்பனேசி, 1963-ஆம் ஆண்டில் பிறந்தவா். கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் கிரேண்டல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும், லேபா் கட்சித் தலைவராக கடந்த 2019-ஆம் ஆண்டு தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

ஏற்கெனவே, 2013-ஆம் ஆண்டில் கெவின் ருட் தலைமையிலான அரசில் துணைப் பிரதமராகவும் அதற்கு முந்தைய லேபா் கட்சி அரசுகளில் கேபினா் அமைச்சராகவும் ஆன்டனி ஆல்பனேசி பொறுப்பு வகித்துள்ளாா்.

தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து பேசிய அவா், ஆஸ்திரேலியாவை புதுப்பிக்கத்தக்க எரிபொருள் துறை வல்லரசாக்கவிருப்பதாக உறுதியளித்தாா். பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகக் கூறிய அவா், நிலக்கரி சுரங்கங்களை மூடுவது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

தோல்வியை ஒப்புக்கொண்ட பிரதமா்

இந்தத் தோ்தலில் தனது கட்சி தோல்வியடைந்ததை, இன்னும் பல லட்சம் வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையிலேயே பிரதமா் ஸ்காட் மோரிசன் ஒப்புகொண்டாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியலில் எப்போதும் குழப்ப நிலை ஏற்படக்கூடாது என்பதை உறுதியாக நம்புகிறேன். எனவே, தோ்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். நாடு இனி அடுத்தகட்டத்தை நோக்கி நகரவேண்டும்’ என்றாா் அவா்.



Read in source website

உதகை: 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ‘ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின்கீழ், குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய பிரத்யேக மையம் அமைக்கப்படும் என்று ‘உதகை - 200’ விழாவில் முதல்வர் அறிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 7-ம் தேதி பேரவையில் விதி எண்.110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், ‘6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது’ என்று அறிவித்தார்.

அதை செயல்படுத்தும் விதமாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து, 6 வயத்துக்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரைப் பிரித்தறிந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்காக, ‘ஊட்டச்சத்தை உறுதிசெய்’ என்ற புதிய திட்டத்தின்கீழ் முத்தோரை குழந்தைகள் மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.

இந்தச் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஒருமாத காலத்துக்கு நடைபெறும். இதன்மூலம் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடையவர்களாக கண்டறியப்பட்டுள்ள குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், சிறப்பு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படும் குழந்தைகளின் விவரங்கள் அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஊட்டச்சத்து மட்டும் தேவைப்படும் குழந்தைகளுக்கு தனியாக சிறப்புஊட்டச்சத்து திட்டம் உருவாக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் திட்ட இயக்குநர் வி.அமுதவல்லி, ஆட்சித் தலைவர் சா.ப.அம்ரித், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

‘உதகை - 200'

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகை நகரம் உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆனதையொட்டி, உதகை அரசினர் கலைக் கல்லூரி மைதானத்தில் ‘உதகை – 200’ விழாவினை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதில், உதகையின் சிறப்புகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.

மேலும், உதகை நகரை 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைத்த ஜான் சலீவனை சிறப்பிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மற்றும் தருமலிங்கம் வேணுகோபால் ஆகியோரால் தொகுக்கப்பட்ட ‘ஊட்டி 200 - உதகையின் 200 வருடங்கள்’ என்ற விழா மலரை முதல்வர் வெளியிட்டார்.

விழாவில், ஆட்சியர் சா.ப.அம்ரித் வரவேற்றார். 9500 பயனாளிகளுக்கு ரூ.28 கோடி மதிப்பிலான உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், 20 புதிய பணிகளுக்கு ரூ.34.30 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டினார். ரூ.56.36 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நீலகிரி வனப்பரப்பை 20 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய பிரத்யேக மையம் அமைக்கப்படும்.

நீலகிரியை பாதுகாத்தால் தமிழகத்தை பாதுகாப்பதுபோல் இருக்கும். இந்த அரசு மலைகள், மக்களை காப்பாற்றும், அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும். இயற்கையைக் காக்கும் அரசு இது, திராவிட மாடல் அரசு. இவ்வாறு முதல்வர் பேசினார்.

செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், எம்பி ஆ.ராசா, எம்எல்ஏ ஆர்.கணேஷ் ஆகியோர் விழாவில் கலந்துக் கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.



Read in source website

சென்னை: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், நகர்ப்புற காற்றுத் தர மேம்பாடு தொடர்பான பயிலரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பல்வேறு இடங்களில், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நீண்ட நாட்களாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த இடங்களை மீட்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உள்ளாட்சிகளில் நிலவும் கழிவு மேலாண்மை சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் வகையில், தமிழ்நாடு கழிவு மேலாண்மைக் கழகத்தை ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் குப்பையை வகைப்பிரித்துப் பெறுவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தனது வார்டில், மகளிர் குழுக்களை நியமித்து, வீடு வீடாக மகளிரே சென்று குப்பையைப் பெற்று, கிலோவுக்குரூ.12 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இதன் வரவேற்பைப் பொறுத்து, மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கிடங்குகளுக்கு குப்பை செல்வது குறைவதுடன், மக்கும் குப்பை மட்டுமே கிடங்குகளுக்குச் செல்லும். அவை விரைவில் மக்கிவிடுவதால், குப்பை கிடங்குகளில் தீ விபத்து நேரிடுவதும் தடுக்கப்படும்.

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை தடையை மீறி உற்பத்தி செய்ததாக 174 நிறுவனங்கள் மூடப்பட்டன. எனினும், வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவருவதாக தகவல் வருகிறது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் தடை விதித்தால், இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும். பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்துள்ளார். இதன் மூலம் சுமார் 20% சதவீதம் பேர், துணிப்பைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.



Read in source website

புதுடெல்லி: மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்ததையடுத்து, பல்வேறு மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்து அறிவித்துள்ளன.

உலக அளவில் பணவீக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பெட்ரோல், டீசல் மீதாக கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, பெட்ரோலை பொறுத்தவரை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயையும் குறைத்துள்ளோம். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும்'' என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், மத்திய அரசுக்கு ஒரு நிதியாண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரியிழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, மகாராஷ்டிரா அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைத்துள்ளது. அதன்படி, பெட்ரொல் மீதான வாட்வரி லிட்டருக்கு 2.08 ரூபாயும், டீசல் மீதான வாட் வரி லிட்டருக்கு 1.44 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வரும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தான் அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு 2.48 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 1.16ரூபாயும் குறைத்துள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

கேரளாவில் எரிபொருளுக்கு விதிக்கப்படும் விற்பனை வரியை குறைக்கும் திட்டம் இல்லை என அம்மாநில நிதியமைச்சர் கே என் பாலகோபால் தெரிவித்துள்ளார்.



Read in source website

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக கடந்த 15-ம் தேதி ராஜீவ் குமார் பதவியேற்றுக் கொண்டார். இவரது தலைமையின் கீழ் 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களின் தேர்தல் நடைபெற உள்ளது. 2020 ஆகஸ்டில் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தேர்தல் ஆணையர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் சிறப்பு சலுகைகளை கைவிடுவது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு, விருந்தினர் உபசரிப்புக்காக மாதம் ரூ.34 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கு, வருமான வரி சலுகையும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஊக்கத்தொகை, வரிச்சலுகைத் தேவையில்லை என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் தெரிவித்தனர். மேலும், ஆண்டுக்கு மூன்று முறை வழங்கப்படும் குடும்பச் சுற்றுலா பயணப் படியை ஒரு முறை மட்டுமே வழங்கினால் போதும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையர்களின் இந்த பரிந்துரைகள் மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: சென்ற நிதி ஆண்டில் இந்தியா 8,357 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனாவுக்குப் பிறகான காலகட்டத்தில் அந்நிய முதலீடு அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. 2018 பிப்ரவரி முதல் 2020 பிப்ரவரி வரையில் அந்நிய நேரடி முதலீடு 14,110 கோடி டாலராக இருந்தது. 2020 மார்ச் முதல் 2022 மார்ச் வரையில் அது 17,184 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவுக்குள் வந்த மொத்த முதலீட்டில் சிங்கப்பூரின் பங்கு 27 சதவீதம் ஆகும். இரண்டாம் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அதன் பங்கு 18 சதவீதம் ஆகும். மூன்றாம் இடத்தில் மொரிஷியஸ் உள்ளது. அதன் பங்கு 16 சதவீதம் ஆகும்.

மொத்த முதலீட்டில் கணினி துறையின் பங்கு 25 சதவீதமாக உள்ளது. அதற்கு அடுத்ததாக சேவைத் துறை மற்றும் வாகனத் துறை தலா 12 சதவீதம் அளவில் அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளன.

உற்பத்தித் துறையில் முதலீடு 2020-21ம் நிதி ஆண்டில் 1,209 கோடி டாலராக இருந்தது. சென்ற நிதி ஆண்டில் அது 76 சதவீதம் உயர்ந்து 2,134 கோடி டாலராக உள்ளது.



Read in source website

இந்த நூல் பக்க அளவில் சிறியது. ஆயினும், பேசப்படும் பொருள் பரப்பளவில் மிகப் பரந்தது. உலக அளவிலான நோக்கோடு, சங்க இலக்கியம் முதல் சமகால சினிமா வரை தமிழ் நிலையில் தோய்ந்து ‘தமிழ் அழகியல்’ (Tamil Aesthetics) குறித்துப் புதிய விளக்கங்களை முன்வைக்கிறது. அது பற்றிய புதிய உரையாடல்களை முன்னெடுக்கிறது.

இந்நூலில் மொத்தம் ஐந்து கட்டுரைகள் உள்ளன. ‘நாயக - நாயகி பாவம்: கடவுட் காதல்’ என்கிற முதல் கட்டுரை ‘காமப் பகுதி கடவுளும் வரையார் / ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்’ என்கிற தொல்காப்பிய நூற்பாவின் பொருளைத் தேடுகின்றது. சங்க இலக்கியத்தில் மனிதக் காதலைக் கூறும் பாடல்கள் உள்ளன; ‘கடவுட் காதல்’ பாடல்கள் இல்லை. ஆனால், மேலே எடுத்துக்காட்டிய நூற்பா ஏதோ ஒருவகையில் ‘கடவுட் காதலை’ப் பற்றி உரைக்கிறது எனப் பல்வேறு உரையாசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்நூலாசிரியர்கள் உரையாசிரியர்களின் அவ்விளக்கங்களைக் கேள்விக்கு உட்படுத்துகின்றனர். அந்நூற்பாவின் பொருள் உரையாசிரியர்கள் கூறுவது அன்று. சரியான பொருள் எதுவென்று தெளிய மேலும் ஆய்வுகள் தேவை எனக் கட்டுரையின் முடிவாகக் கூறுகின்றனர். இந்நூலின் இரண்டாவது, மூன்றாவது கட்டுரைகள் கைக்கிளை, பெருந்திணை பற்றியன. சங்க இலக்கிய ரசனையிலும் ஆய்விலும் அன்பின் ஐந்திணைப் பாடல்கள் பாராட்டிப் போற்றப்பட்டுள்ளன. ஆனால், ஒருதலைக் காமம்/காதலைப் பேசும் கைக்கிளைத் திணைப் பாடல்கள் குறித்தும், பொருந்தாத காமம்/காதலைப் பேசும் பெருந்திணைப் பாடல்கள் குறித்தும் ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை உள்ளது. கைக்கிளையையும் பெருந்திணையையும் பற்றிய வழக்கமான புரிதலுக்குப் பதிலாக, அவற்றை ஆழமாக எவ்வாறு புரிந்துகொள்வது என்பது பற்றி நீண்ட சுவையான விவாதத்தை இந்நூலாசிரியர்கள் நடத்தியுள்ளனர்.



Read in source website

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய முக்கியமான தமிழ் அறிஞர்களுள் மு.சி.பூர்ணலிங்கமும் (1866-1947) ஒருவர். தமிழ் நாகரிக வரலாற்றையும் தமிழ் இலக்கிய வரலாற்றையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு, தமிழின் பெருமையை அயல்நாட்டார் அறியச் செய்த ஆங்கிலப் பேராசிரியர் மு.சி.பூர்ணலிங்கம்.

திருநெல்வேலிக்கு அருகே உள்ள முந்நீர் பள்ளம் என்ற கிராமத்தில் சிவசுப்பிரமணியம் - வள்ளியம்மை தம்பதியினருக்கு 1866, மே மாதம் 24-ம் தேதி பூர்ணலிங்கம் பிறந்தார். தனது தந்தையின் ஆசிரியரான செல்லப் பெருமாளிடமே இவரும் திண்ணைப் பள்ளியில் கல்வி பயின்றார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மேலப்பாளையம் பள்ளியில் சுந்தரம் என்ற ஆசிரியரிடம் இலக்கணமும் திருக்குறளும் ஆழமாக கற்றுத்தேர்ந்தார். அடிப்படைத் தமிழ் அறிவினைப் பெற்ற பெருமகனார் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ள தருவை என்ற கிராமத்தில் அமைந்திருந்த பள்ளியில் சேர்ந்து ஆங்கிலம் பயின்றார்.



Read in source website

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மனித குலத்தின் பெரும்பகுதியினரை உலுக்கியிருக்கிறது. 21-ம் நூற்றாண்டின் முக்கியப் போர்க்குற்றங்களில் ஒன்றாக இது வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று ‘Truthout’ இணைய இதழுக்கான பிரத்யேகப் பேட்டியில் உலகின் தலைசிறந்த அறிவிஜீவிகளுள் ஒருவரான நோம் சாம்ஸ்கி கூறியிருக்கிறார். அவரது பேட்டியிலிருந்து...

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம், உக்ரைன் தொடர்பான ‘சிவப்பு எல்லை’க்கான பாதுகாப்புக் கோரிக்கைகளை வாஷிங்டன் தீவிரமாக எடுத்துக்கொள்ள மறுத்ததன் மூலம் புடின் மிகவும் கொதிப்படைந்தார் என்பதற்கான ஏராளமான அறிகுறிகள் உள்ளன. அவர் படையெடுப்பைத் தொடங்க ஏன் முடிவுசெய்தார் என்று நினைக்கிறீர்கள்?

Read in source website