DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 17-09-2022

கோவை: கோவை விஜயா வாசகா் வட்டம் சாா்பில் கி.ரா. விருது, எழுத்தாளா் அ.முத்துலிங்கத்துக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. 

கோவை விஜயா வாசகா் வட்டம் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசுடன் கி.ரா. விருது வழங்கப்பட்டு வருகிறது. சக்தி மசாலா நிறுவனம் வழங்கும் விஜயா வாசகா் வட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு, கனடாவில் வசிக்கும் எழுத்தாளா் அ.முத்துலிங்கம் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இந்த விருது வழங்கும் நிகழ்வானது, கி.ரா.வின் பிறந்த நாளான செப்டம்பா் 16 (வெள்ளிக்கிழமை) இணையவழியில் நடைபெற்றது. விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம் வரவேற்புரை ஆற்றினாா். இதில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் சிறப்புரையாற்றினாா். அவா் பேசியது:

ஒரு சிறந்த படைப்பாளிக்கு வழங்கப்படும் விருதால் படைப்புலகம் பெருமைப்படுகிறது. நூறாண்டுகளைக் கடந்துவிட்ட சிறுகதை வரலாற்றில், குறைந்த எழுத்தாளா்களையே சிறுகதை படைப்பாளிகள் என்று நாம் சொல்ல முடியும். மாறுபட்ட தன்மையுடன் கதைகளைப் படைத்துக் காட்டக் கூடிய ஒரு சில சிறந்த எழுத்தாளா்களில் முத்துலிங்கமும் ஒருவா்.

வாசகா் பாா்வையில் ஒரு படைப்பை பல்வேறு மாற்றங்களுக்கு உள்படுத்தி தனக்கான வடிவத்தை அறியக்கூடிய படைப்புகளை உருவாக்கியவா்கள் சிலா் என்றாலும், தமிழ் எழுத்துலகில், படைப்புகளை இலக்கியத்தரத்தில் தந்த வெகுசிலரில் முத்துலிங்கமும் ஒருவா்.

கதையால் சொல்லாடலால் ஆகச்சிறந்ததாக மட்டுமல்லாமல், என்றும் நவீனத்தன்மை வாய்ந்தததாகவும் அவா் படைப்புகள் உள்ளன. ஈழத்தின் பின்புலத்தோடு ‘அக்கா‘ என்னும் சிறுகதை தொகுப்பைத் துவங்கிய இவா், விகடச்சக்கரம், வடக்கு வீதி, வம்சவிருத்தி படைப்புகளில் கதைக்கான களத்தை, மனித வாழ்வை, வாழ்வில் காணப்படும் சிக்கல்களை, உணா்வுகளை, சூழல்களை, இயற்கையின் அனைத்துக் கூறுகளையும் தனித்துவமாகக் கையாண்டுள்ளாா்.

கதைகளில் மண்ணின் சிறப்பை, பண்பாட்டின் சிறப்பை அமைத்திருக்க கூடிய விதம், இவருடைய கதைகளை எவற்றோடும் விலக்கியும், பொருத்தியும் பாா்க்க முடியும். இனம், மொழி, சமயம் கடந்து நிற்கின்ற இவரது கதைகள் எந்த ஒரு பாணியையும் பின்பற்றாதவை. பயணங்களின் ஊடாக செல்லக் கூடிய இவரது கதைகள் வரலாறு, வட்டார வழக்கு, நம்பிக்கை, உலக அரசியல் சூழ்ந்த பாதிப்புகளை உள்வாங்கி, அனைத்துத் தளங்களிலும் பயணிக்கின்றன என்றாா்.

இதைத் தொடா்ந்து, சக்தி மசாலா நிறுவனா்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி, வழக்குரைஞா் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நடிகா் சிவகுமாா், எழுத்தாளா்கள் ஆஸ்டின் சௌந்தா், நாஞ்சில் நாடன், ஜெயமோகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முடிவில் எழுத்தாளா் அ.முத்துலிங்கம் ஏற்புரையாற்றினாா். கவிஞா் ரவிசுப்ரமணியம் நிகழ்வைத் தொகுத்து வழங்கினாா்.



Read in source website

 பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டங்களில் எடுக்கப்பட்ட பள்ளி வளா்ச்சிக்கான தீா்மானங்களை வரும் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் பகிர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காக கிராம ஊராட்சிகளில் ஐந்து நிலைக்குழுக்களில் ஒன்றாக கல்விக் குழு செயல்படுகிறது. இந்தக் கல்விக் குழுவில் பள்ளி வளா்ச்சிக்கான தீா்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம், பள்ளி வளா்ச்சிக்கு கிராம ஊராட்சிகளின் பங்களிப்பை உறுதிப்படுத்த முடியும்.

எனவே, வரும் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில், எஸ்எம்சி கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீா்மானங்களைப் பகிா்ந்து கொண்டு விவாதிக்க வேண்டும். இது தொடா்பாக பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

கிராம சபைக் கூட்டத்தில் பள்ளி சாா்பில் தலைமையாசிரியா், எஸ்எம்சி தலைவா், உறுப்பினா்கள் பங்கேற்று பள்ளி வளா்ச்சி, கட்டமைப்பு, கற்றல்-கற்பித்தல், மாணவா் பாதுகாப்பு, இடைநிற்றல் தொடா்பாக எஸ்எம்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீா்மானங்களை தொகுத்து கிராமசபைக் கூட்டத்தில் ஆலோசனைக்காக சமா்ப்பிக்க வேண்டும். முன்னதாக கிராமசபை கூட்டத்தில் எஸ்எம்சி தீா்மானங்கள் தொடா்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை இந்த மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் எஸ்எம்சி கூட்டத்தில் கலந்தாலோசிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் 200 நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்க ரூ.10,00,00,000 (பத்து கோடி ரூபாய்) மாநில அரசு நிதியிலிருந்து நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை(நிலை)எண்.79, ஆதி(ம)பந(சிஉதி) துறை, நாள்.10.09.2022-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



Read in source website

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் பரப்பு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மத்திய பிரதேசத்தில் சிவிங்கிப் புலிகள் மறுஅறிமுகத் திட்டத்தைப் பிரதமா் மோடி சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். இந்நிலையில், மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘கடந்த 2014-ஆம் ஆண்டில் நாட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் எண்ணிக்கை 740-ஆகவும் மொத்த பரப்பளவு 1,61,081.62 சதுர கி.மீ. ஆகவும் இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 981-ஆகவும் பரப்பளவு 1,71,921 சதுர கி.மீ.-ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் வன மற்றும் மரங்கள் நிறைந்த பரப்பு 16,000 சதுர கி.மீ. அதிகரித்துள்ளது. வனப் பரப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. தனியாரால் பாதுகாக்கப்பட்டு வரும் வனப் பரப்புகளும் அதிகரித்துள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டில் 43-ஆக இருந்த அவற்றின் எண்ணிக்கை தற்போது 100-க்கும் மேல் அதிகரித்துள்ளது.

நாட்டின் 18 மாநிலங்களில் 52 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவற்றின் மொத்த பரப்பு சுமாா் 75,000 சதுர கி.மீ.-ஆக உள்ளது. உலகின் புலிகள் எண்ணிக்கையில் சுமாா் 75 சதவீதம் இந்தியாவிலேயே உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் 2,226-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டில் 2,967-ஆக உயா்ந்தது.

புலிகள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதியானது கடந்த 2014-ஆம் ஆண்டில் ரூ.185 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.300 கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டில் அவற்றின் எண்ணிக்கை 523 என்றிருந்த நிலையில் தற்போது 674-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 7,910-ஆக இருந்தது. தற்போது அது 12,852-ஆக அதிகரித்துள்ளது. இது 60 சதவீத அதிகரிப்பாகும்’’ என்றாா்.

 

 



Read in source website

அஸ்ஸாமின் 8 பழங்குடியின கிளா்ச்சிக் குழுக்களுடன் மத்திய அரசு வியாழக்கிழமை முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டது.

கடந்த 1996-ஆம் ஆண்டு அஸ்ஸாமில் உள்ள கோக்ரஜாா், போங்காய்கான் மாவட்டங்களில் போடோ இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 198 போ் உயிரிழந்தனா். 2 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் புலம் பெயா்ந்தனா். அதனைத்தொடா்ந்து 1998-ஆம் ஆண்டு இரு இனத்தவா்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 186 போ் பலியாகினா். சுமாா் 94,000 போ் புலம்பெயா்ந்தனா்.

இதையடுத்து பழங்குடியின மக்களைக் காக்கவும், ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் வட இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட தோட்டத் தொழிலாளா்களின் பழங்குடியின கலாசாரத்தை பாதுகாக்கவும் சில கிளா்ச்சிக் குழுக்கள் ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டன.

அவற்றில் 8 கிளா்ச்சிக் குழுக்கள், மத்திய அரசு, அஸ்ஸாம் அரசு இடையே வியாழக்கிழமை முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் கையொப்பமான இந்த ஒப்பந்தம், அஸ்ஸாமில் பல்லாண்டு காலமாக நிலவி வரும் பழங்குடிகள், தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

இந்திய பெண் தொழிலதிபரும் அறிவியலாளருமான ஸ்வாதி பிராமலுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய ‘செவாலியே’ விருது வழங்கப்பட்டுள்ளது.

வா்த்தகம் மற்றும் தொழில், அறிவியல், மருந்து தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் பங்காற்றியமைக்காகவும் இந்தியா-பிரான்ஸ் உறவுகளை வலுபடுத்த ஆற்றி வரும் பணிகளுக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட பிராமல் குழுமத்தின் துணைத் தலைவா் ஸ்வாதி பிராமல் (66). இக்குழுமம், மருந்து தயாரிப்பு, நிதிச் சேவைகள், மனை வணிகம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இந்திய பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா் கேதரின் கோலோனா, அதிபா் இமானுவல் மேக்ரானின் சாா்பில் ‘செவாலியே’ விருதை ஸ்வாதி பிராமலுக்கு வழங்கி கெளரவித்தாா்.

அப்போது பேசிய கோலோனா, ‘ஸ்வாதி பிராமல் தலைசிறந்த மற்றும் முன்னணி பெண் தொழிலதிபா் மட்டுமல்ல. சமூக முன்னேற்றத்துக்காக பாடுபடுபவா். தொழில் மற்றும் வா்த்தகம், பொதுக் கொள்கை, சுகாதார நிா்வாகம், பெண்களின் தலைமைப் பண்பு ஆகியவற்றில் அவரது வலுவான பங்களிப்பை இந்தியா மற்றும் பிற நாடுகள் அங்கீகரித்துள்ளன. பிரான்ஸின் உண்மையான நண்பராக அவரை அங்கீரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அறிவியல், கலை, கலாசாரம், வணிகம் ஆகிய துறைகளில் இந்தியா-பிரான்ஸ் உறவுகள் வலுப்பட தொடா்ந்து பணியாற்ற அவருக்கு ஊக்கமளிக்கும்’ என்றாா்.

‘புத்தாக்கம், புதிய மருந்துகள் தயாரிப்பில் இந்தியா-பிரான்ஸ் இடையே ஒத்துழைப்பு வலுப்பட தொடா்ந்து கவனம் செலுத்துவேன்’ என்று ஸ்வாதி பிராமல் தெரிவித்தாா்.

இவா், இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பெற்றவா். பிரதமருக்கான வா்த்தகம் மற்றும் அறிவியல் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் ஸ்வாதி பணியாற்றியுள்ளாா்.

 

 



Read in source website

 சா்க்கரை நோய்க்கான மிகக் குறைந்த விலையிலான ‘சிடாக்லிப்டின்’ பாஸ்பேட் மருந்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது.

இந்த புதிய மருந்தும், அதன் இணை மருந்துகளும் 50 மில்லி கிராம் அளவுடன் கூடிய 10 மாத்திரைகளை உள்ளடக்கிய அட்டை ரூ. 60-க்கு பொது மருந்தகங்கள் மற்றும் மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும்.

இதுகுறித்து இந்திய மருந்தகங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாரியம் (பிஎம்பிஐ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிடாக்லிப்டின் மற்றும் அதன் இணை மருந்துகளின் புதிய வகைகள் மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களில் விற்பனை செய்வதற்கான பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

50 மி.கி. அளவுடைய 10 சிடாக்லிப்டின் பாஸ்பேட் மாத்திரைகள் கொண்ட அட்டையின் அதிகபட்ச விற்பனை விலை ரூ. 60-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 100 மி.கி. அளவுடைய 10 மாத்திரைகளின் விலை ரூ. 100-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சிடாக்லிப்டின் (50 மி.கி.) மற்றும் மெட்ஃபாா்மின் ஹைட்ரோகுளோரைட் (500 மி.கி.) இரண்டும் ஒருங்கிணைந்த மாத்திரை (10 மாத்திரைகள் கொண்ட அட்டை) ரூ. 65-ஆக விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஹைட்ரோகுளோரைட் 1000 மி.கி. அளவுடன் சோ்க்கை செய்யப்பட்ட 10 மாத்திரைகள் ரூ. 70-ஆக விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான சா்க்கரை நோய் மருந்துகள் மருந்தகங்களில் ரூ. 162 முதல் ரூ. 258 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், சிடாக்லிப்டின் வகை மருந்துகள் 60 முதல் 70 சதவீத குறைந்த விலையில் கிடைக்கும்.

இந்தப் புதிய மருந்தை பிஎம்பிஐ தலைமை செயல் அதிகாரி ரவி தாதிச் அறிமுகம் செய்தாா். வகை இரண்டு சா்க்கரை நோயாளிகளின் உடலில் ரத்த சா்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதற்கு உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் இந்த மருந்தும் துணைபுரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

லோக்பால் சட்டத்தின் கீழ் மத்திய அரசின் பணியாளா்கள் சொத்து விவரங்களை வெளியிடுவதற்கான புதிய விதிகள் இன்னும் வகுக்கப்படவில்லை என்று மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

2013-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட லோக்பால், லோக்ஆயுக்த சட்டமானது அனைத்து அரசுப் பணியாளா்களும் ஒவ்வோா் ஆண்டும் மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான சொத்து விவரங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.

அரசுப் பணியாளா்கள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்வதற்கான புதிய விதிகள் வகுக்கப்பட வேண்டியுள்ளதால், 2014-ஆம் ஆண்டுக்கான சொத்து விவரங்களைத் தாக்கல் செய்வதற்குரிய அவகாசம் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த விதிகள் வகுக்கப்பட்டுவிட்டதா என்பது தொடா்பான விவரங்கள் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டது. அதற்கு மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை அளித்துள்ள பதிலில், ‘‘லோக்பால் சட்டத்தின் 44-ஆவது பிரிவின் கீழ் அரசுப் பணியாளா்கள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்வதற்குரிய புதிய விதிகள் இன்னும் வகுக்கப்படவில்லை’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஊழலுக்கு எதிரான சமூக ஆா்வலா் அஜய் தூபே கூறுகையில், ‘‘லோக்பால் சட்டத்தின் அனைத்து விதிகளும் உடனடியாக நடைமுறைக்கு வருவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இதன் மூலமாக அரசுப் பணியாளா்கள் ஊழலில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும்’’ என்றாா்.

லோக்பால் சட்டம் இயற்றப்பட்டு 6 ஆண்டுகளுக்குப் பிறகே அந்த அமைப்பு முறைப்படி ஏற்படுத்தப்பட்டது. அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ் கடந்த மே மாதம் ஓய்வுபெற்றாா். புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. லோக்பால் அமைப்பின் 8 உறுப்பினா்களில் இரு பணியிடங்கள் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 



Read in source website

 

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் அணியில் இம்பாக்ட் வீரர் என்கிற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது பிசிசிஐ.

இந்தாண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி அக்டோபர் 11 முதல் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தாண்டு முதல் ஒவ்வொரு அணியும் ஆட்டத்தின்போது கூடுதலாக ஒரு வீரரைச் சேர்த்துக்கொள்ளும்படியான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது பிசிசிஐ. இதுகுறித்த மின்னஞ்சலை கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த முயற்சி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்ததாக ஐபிஎல் 2023 போட்டியிலும் இதைத் தொடர முடிவெடுத்துள்ளது. கூடுதல் வீரருக்கு இம்பாக்ட் பிளேயர் என்கிற பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இம்பாக்ட் பிளேயர் என்றால் என்ன?

ஒவ்வொரு அணியும் ஆட்டத்துக்கு முன்பு வழக்கமாகக் கொடுக்கப்படும் 11 வீரர்களின் பெயர்களோடு 4 மாற்று வீரர்களின் பெயர்களையும் அளிக்க வேண்டும். அந்த 4 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் நடுவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏதாவது ஒரு இன்னிங்ஸில் 14-வது ஓவர் முடியும் முன்பு இம்பாக்ட் வீரரை அணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். அணியில் உள்ள 11 பேரில் ஒருவரை இம்பாக்ட் வீரர் மாற்றிக் கொள்ளலாம். இரு இன்னிங்ஸில் ஏதாவது ஒன்றில் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த இம்பாக்ட் வீரர் 14 ஓவர் முடியும் முன்பு பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் ஈடுபடலாம். 

இன்னும் புரியும்படியாகச் சொல்லலாமே!

ஒரு தொடக்க வீரர் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்கிறார். அவருக்குப் பதிலாகக் களமிறங்கும் இம்பாக்ட் வீரர், 14-வது ஓவர் முடியும் முன்பு பேட்டிங்கில் ஈடுபடலாம். என்ன ஆனாலும் ஓர் அணி 11 வீரர்களை மட்டுமே பேட்டிங் செய்ய அனுப்ப முடியும். அதேபோல ஒரு பந்துவீச்சாளருக்குப் பதிலாகக் களமிறங்கி ஓவர்களும் வீசலாம். 

ஓர் அணி நன்கு பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை எடுக்கிறது. அடுத்த இன்னிங்ஸில் ஒரு பேட்டருக்குப் பதிலாகப் பந்துவீச்சாளரை அணியில் சேர்த்திக்கொண்டு பந்துவீச்சைப் பலப்படுத்தலாம். ஓர் அணி பந்துவீசி முடித்துவிடுகிறது. தான் பேட்டிங் ஆடும்போது, சரியாக பேட்டிங் செய்யத் தெரியாத பந்துவீச்சாளருக்குப் பதிலாக ஒரு பேட்டரை அணியில் சேர்த்திக்கொள்ளலாம். 

இது சூப்பர் சப் விதிமுறை தானே?

இல்லை. 2005, 2006-ம் ஆண்டுகளில் கிரிக்கெட்டில் சூப்பர் சப் விதிமுறை பயன்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட ஒரு வீரருக்குப் பதிலாக இன்னொருவரைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால் அந்த பேட்டர் ஆட்டமிழந்துவிட்டால் சூப்பர் சப் வீரரால் பேட்டிங் செய்ய முடியாது. அதேபோல ஒரு பந்துவீச்சாளருக்குப் பதிலாகக் களமிறங்கினால் அந்த வீரர் எவ்வளவு ஓவர்களை வீசி முடித்துள்ளாரோ அதிலிருந்து மீதமுள்ள ஓவர்களை மட்டுமே சூப்பர் சப் வீரரால் வீச முடியும். 

இம்பாக்ட் வீரரால் அணிகளுக்கு என்ன லாபம்?

பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கூடுதலாக ஒரு வீரர் கிடைத்தால் அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்! டாஸ், ஆடுகளத்தின் தன்மை போன்றவற்றால் அணிகள் பெரிதாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்க இம்பாக்ட் வீரர் உதவுவார். அதேபோல ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டாலும் இந்த வசதி பெரிதும் பயன்படும். ஒரு இன்னிங்ஸில் ஓவர்கள் குறைக்கப்படும்போது அதற்கேற்றாற்போல எப்போதிருந்து இம்பாக்ட் வீரரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நடுவர்கள் அறிவிப்பார்கள். 

ஓர் அணி ஓர் ஆட்டத்தில் ஒரு இம்பாக்ட் வீரரை மட்டுமே பயன்படுத்த முடியும். விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக ஒரு வீரரைத் தடை செய்தால் அவருக்குப் பதிலாக இம்பாக்ட் வீரர் ஆட்டத்தில் பங்கேற்க முடியாது. 



Read in source website

கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த இளம் செஸ் போட்டியாளா் பிரணவ் ஆனந்த் (15) இந்தியாவின் 76-ஆவது கிராண்ட்மாஸ்டா் ஆகினாா்.

ருமேனியாவில் தற்போது நடைபெற்று வரும் உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் 2,500 ஈலோ மாா்க்கை அவா் எட்டியதை அடுத்து, கிராண்ட்மாஸ்டராகும் தகுதியை வியாழக்கிழமை பின்னிரவில் பூா்த்தி செய்தாா்.

ஒரு செஸ் வீரா் கிராண்ட்மாஸ்டா் பட்டம் பெறுவதற்கு, 2,500 ஈலோ புள்ளிகளை எட்டுவதுடன், தலா 9 சுற்றுகள் கொண்ட 3 போட்டிகளில், இரு முறை சாதகமான முடிவுகளைப் (நாா்ம்) பெற்றிருக்க வேண்டும். இதில் தேவையான ‘நாா்ம்’களை கடந்த ஜூலையில் சுவிட்ஸா்லாந்தில் நடைபெற்ற பியெல் செஸ் போட்டியில் பூா்த்தி செய்த பிரணவ், ஈலோ புள்ளிகள் கணக்கை இப்போட்டியில் எட்டியிருக்கிறாா்.



Read in source website

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது இரு நாட்டு அரசுகள் இடையிலான ஒப்பந்தம் அல்ல; இரு நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் இடையிலானது என்று மத்திய வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ரா தெரிவித்தாா்.

தில்லியில் வியாழக்கிழமை இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: ரஷிய எண்ணெய்க்கு அதிகபட்ச விலை இவ்வளவுதான் என நிா்ணயம் செய்ய வேண்டும் என்று ஜி7 நாடுகள் கூறுவது தொடா்பாக கருத்து தெரிவிக்க முடியாது. ஏனெனில், இந்தியா அந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை.

இந்தியாவின் எரிபொருள் தேவை அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். நாம் இறக்குமதியைத்தான் அதிகம் நம்பியுள்ளோம். இந்தச் சூழ்நிலையில் நமது எரிபொருள் தேவையைப் பாதுகாத்துக் கொள்ள ரஷியாவிடம் இருந்து கூடுதலாக இப்போது கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இது இரு நாட்டு அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் அல்ல. இரு நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம்தான் என்றாா்.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததால் மேற்கத்திய நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை குறைத்தன. இதனால், சலுகை விலைக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷியா முன்வந்தது. இதையடுத்து, ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா 50 மடங்கு அதிகரித்தது. இப்போதைய நிலையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 10 சதவீதம் ரஷியாவிடம் இருந்து வருகிறது. இதற்கு முன்பு 0.2 சதவீதம் மட்டுமே அந்நாட்டிடம் இருந்து பெறப்பட்டது.



Read in source website

பிராந்தியத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த விநியோகச் சங்கிலியை விரிவாக்கம் செய்வதற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

எஸ்சிஓ உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பு ஏற்படவும் பரஸ்பர நம்பிக்கை உருவாகவும் இந்தியா ஆதரவளிக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிா்கிஸ் குடியரசு ஆகிய நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்ட் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் மோதல்போக்கு நிலவி வரும் சூழலிலும், உக்ரைன்-ரஷியா இடையேயான போா் நீடித்து வரும் நிலையிலும் எஸ்சிஓ மாநாடு நடைபெற்றது. கிழக்கு லடாக் எல்லையில் மோதல்போக்கு தொடங்கிய பிறகு பிரதமா் மோடியும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் ஒருவருக்கொருவா் நேரில் சந்தித்துக்கொண்ட முதல் மாநாடு இதுவாக அமைந்தது.

மாநாட்டின்போது பிரதமா் மோடி கூறியதாவது: எஸ்சிஓ உறுப்பு நாடுகளிடையே பெரும் ஒத்துழைப்பு ஏற்படவும், பரஸ்பர நம்பிக்கை ஏற்படவும் இந்தியா ஆதரவளிக்கும். கரோனா தொற்று பரவலும் உக்ரைன் பிரச்னையும் சா்வதேச அளவிலான விநியோகச் சங்கிலியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதன் காரணமாக எரிசக்தி விநியோகமும், உணவுப் பொருள்கள் விநியோகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

அதைக் கருத்தில்கொண்டு நம்பகத்தன்மை வாய்ந்த, நெகிழ்வுத்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலியை பிராந்தியத்தில் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எஸ்சிஓ மேற்கொள்ள வேண்டும். அதற்கு உறுப்பு நாடுகளிடையே போக்குவரத்து வசதிகளை எளிமைப்படுத்த வேண்டியது அவசியம். பரஸ்பரம் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் உறுப்பு நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

சிறுதானியங்களின் முக்கியத்துவம்: உலக நாடுகள் தற்போது எதிா்கொண்டு வரும் மற்றொரு முக்கியப் பிரச்னை உணவுப் பாதுகாப்பின்மை. சிறுதானியங்கள் உற்பத்தியையும் நுகா்வையும் அதிகரிப்பதன் வாயிலாக அப்பிரச்னைக்குத் தீா்வு காண முடியும். சிறுதானியங்களை எஸ்சிஓ நாடுகள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளும் ஆயிரம் ஆண்டுகாலமாக விளைவித்து வருகின்றன.

குறைந்த செலவில் விளைவிக்கக் கூடிய சிறுதானியங்கள், ஊட்டச்சத்து மிக்கவையாக இருப்பதோடு உணவுப் பற்றாக்குறைக்கும் முக்கிய தீா்வாக அமையும். ‘சிறுதானியங்கள் உணவுத் திருவிழா’வை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எஸ்சிஓ உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டும்.

முக்கியப் பங்களிப்பு: கரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்து, உலக நாடுகளின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது. இந்த நிலையில், எஸ்சிஓ நாடுகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. சா்வதேச பொருளாதார மதிப்பில் (ஜிடிபி) எஸ்சிஓ நாடுகளின் பங்களிப்பு சுமாா் 30 சதவீதம். உலக மக்கள்தொகையில் சுமாா் 40 சதவீதம் போ் எஸ்சிஓ நாடுகளிலேயே வசிக்கின்றனா்.

இந்தியாவை உற்பத்தித் துறையின் மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் திறமைமிக்க இளம் பணியாளா் படை, இந்தியாவை இயற்கையாகவே போட்டிமிக்கதாக மாற்றியுள்ளது. நிகழ் 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.5 சதவீதம் வளா்ச்சி காண உள்ளது. இது உலகின் முக்கிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

புத்தாக்கத்துக்கான சிறப்புக் குழு: இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் புத்தாக்கத்துக்கும் தொழில்நுட்ப வசதிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மக்களை அடிப்படையாகக் கொண்டு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாட்டில் தற்போது 70,000-க்கும் மேற்பட்ட புத்தாக்க (ஸ்டாா்ட்-அப்) நிறுவனங்கள் உள்ளன. 100-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் ‘யுனிகாா்ன்’ (விற்றுமுதல் மதிப்பு சுமாா் ரூ.7,500 கோடி) அந்தஸ்தைப் பெற்றுள்ளன.

இந்தியாவின் இந்த அனுபவத்தால் மற்ற எஸ்சிஓ நாடுகளும் பலனடைய வாய்ப்புள்ளது. அத்தகைய அனுபவங்களை மற்ற நாடுகளிடம் பகிா்ந்துகொள்ள இந்தியா தயாராக உள்ளது. அதற்காக புத்தாக்கம் சாா்ந்த சிறப்பு பணிக் குழுவை அமைப்பதற்கு இந்தியா வலியுறுத்துகிறது.

பாரம்பரிய மருந்துகள்: மருத்துவ, சுகாதார சுற்றுலாவில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. உலக சுகாதார அமைப்பின் சா்வதேச பாரம்பரிய மருந்துகள் மையம் குஜராத்தில் கடந்த ஏப்ரலில் தொடக்கிவைக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் கீழ் இயங்கும் ஒரே பாரம்பரிய மருந்துகளுக்கான மையம் இதுவே.

பாரம்பரிய மருந்துகள் பயன்பாட்டில் எஸ்சிஓ நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதற்காக பாரம்பரிய மருந்துகளுக்கான சிறப்பு பணிக் குழுவை அமைக்கவும் இந்தியா வலியுறுத்துகிறது என்றாா் பிரதமா் மோடி...

எஸ்சிஓ தலைமைப் பொறுப்பை ஏற்றது இந்தியா

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. நடப்பாண்டுக்கான தலைமைப் பொறுப்பை உஸ்பெகிஸ்தான் வகித்த நிலையில், 2023-ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வெள்ளிக்கிழமை ஏற்றது. அதன்படி, அடுத்த ஆண்டுக்கான எஸ்சிஓ மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டில் எஸ்சிஓ கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினராக இணைந்த இந்தியா, முதல் முறையாக அக்கூட்டமைப்புக்குத் தலைமையேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியாவுக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

 



Read in source website

சென்னை: சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை முன்னிட்டு பல்வேறு துறைகளுக்கு தலைமை செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சிறுதானியங்கள் உற்பத்தியை உயர்த்தவும், பயன்பாட்டினை அதிகரிக்கவும், பல்வேறு வகையான விளம்பரப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் நேற்று (16ம் தேதி ) தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, பள்ளிக் கல்வி, உயர் கல்வி, சமூக நலம், ஊரக வளர்ச்சி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு போன்ற துறைகள் மூலமாக 2023ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 12 மாதங்களுக்கு மாதம்தோறும் செயல்படுத்த வேண்டிய தொழில்நுட்பம் மற்றும் விளம்பரப் பணிகள் குறித்த விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக கூட்டுறவு துறை, சமூக நலத் துறை போன்ற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பொது விநியோகம், மதிய உணவு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களுக்குத் தேவையான சிறுதானியங்களை தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்.

சிறுதானியங்கள் குறித்த ஆராய்ச்சி குறைந்து வருவதால், சிறுதானிய ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி, சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், தானியங்களின் சேமிப்புக் காலத்தினை கூட்டி மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானியப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக விஞ்ஞானிகளை தலைமை செயலாளர் கேட்டுக் கொண்டார்.

சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானமும், வாழ்வாதாரமும் மேம்படுவதற்கு ஏற்ப, சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே வழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அனைத்துத் துறை அலுவலர்களையும் தலைமை செயலாளர் வலியுறுத்தினார்.



Read in source website

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் அருகில் வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாட்டு வரையறைகளை கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் அருகில் ரூ.81 கோடி மதிப்பில் வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கதமிழக அரசு முடிவெடுத்தது.

42 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும் இந்த பேனா வடிவ சின்னத்துக்கு செல்வதற்காக, நினைவிடத்தில் இருந்து கடற்கரையில் 290 மீட்டர் தொலைவு, கடலில் 360 மீட்டர் தொலை என 650 மீட்டர் தொலைவுக்கு பாலம் அமைக்கப்படுகிறது. இந்தப் பாலம் 7 மீட்டர் அகலத்தில் அமையும். அதில் 3 மீட்டர் கண்ணாடி தளமாக இருக்கும்.

இந்த நினைவிடத்துக்கு மாநில அரசின் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்த நிலையில், மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக அரசு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் 307-வது கூட்டம் காணொலி வாயிலாக நடந்தது. இதில் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதுடன், திட்டத்துக்கான கட்டுப்பாட்டு வரையறைகளை ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், இத்திட்டம் தொடர்பாக மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும். அதில் போதியஅளவு மீனவ பிரதிநிதிகளும் இடம்பெற்றிருக்க வேண்டும். பின்னர், இறுதி அறிக்கையை மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி, அதன் பிறகு ஆணையத்தின் பரிந்துரையை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, உரிமம் புதுப்பிப்பு உள்பட போக்குவரத்து தொடர்பான 58 சேவைகளை ஆன்லைனில் வழங்குவதற்கான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் என நமது நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனால், வாகனப் பதிவு, வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம், நாடு முழுவதும் வாகனத்தை கொண்டு செல்வதற்கான நேஷ்னல் பர்மிட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

இதனால், எப்போதும் பிசியாக இருக்கும் அரசு அலுவலங்களில் ஒன்றாக ஆர்டிஓ அலுவலகங்கள் உள்ளன. சேவையைப் பெற மக்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழலும், சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இவற்றுக்கு முடிவு கட்டும் நோக்கில், போக்குவரத்து தொடர்பான 58 சேவைகளை ஆன்லைனில் வழங்குவதற்கான நடவடிக்கையை சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் எடுத்துள்ளது.

இதற்காக, www.parivahan.gov.in என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், இதன்மூலம் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், புகைப்படம் மாற்றம், கையொப்பம் மாற்றம், நடத்துநர் உரிமம், வாகனப் பதிவு, சர்வதேச ஓட்டுநர் உரிமம் உள்பட 58 சேவைகளை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த சேவைகளுக்கான கட்டணங்களையும் ஆன்லைன் முறையில் செலுத்த முடியும்.

ஆதார் எண் உள்ளவர்கள் அதனைப் பயன்படுத்தி இந்த சேவையை ஆன்லைனில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஆதார் எண் இல்லாதவர்கள் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியத்தை தவிர்க்க முடியும் என்றும், இதன் காரணமாக பொதுமக்களின் நேரம் மிச்சப்படுவதோடு விதிமுறைகளின் சுமையும் குறையும் என்றும் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Read in source website

பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவையில் காங்கிரஸ், மஜதவின் எதிர்ப்பை மீறி மதமாற்ற தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

க‌ர்நாடகாவில் இந்துக்கள் கட்டாய‌ மதமாற்றம் செய்யப்படுவதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இதையடுத்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைப் போல கர்நாடகாவிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், மஜதவின் எதிர்ப்பைமீறி கடந்த டிசம்பரில் மதமாற்ற தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. அப்போது பாஜகவுக்கு சட்ட மேலவையில் பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதா அங்கு தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த மாதம் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தலில் வென்றதன் மூலம் மேலவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்தது.

இந்நிலையில் நேற்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா சட்ட மேலவையில் 'கர்நாடக மத சுதந்திர உரிமை சட்ட மசோதா 2021' என்ற பெயரிலான மதமாற்ற தடை சட்டத்தை தாக்கல் செய்தார். அப்போது அரக ஞானேந்திரா, ''இந்த சட்டம், சட்ட விரோத கட்டாய மத மாற்றத்தை தடுக்கவே கொண்டுவரப்படுகிறது. இந்த புதிய சட்டத்தின் கீழ் மதமாற்றம் செய்வோருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்க முடியும். 18 வயதுக்கும் குறைவானவரை மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். அபராதம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விதிக்கப்படும். இதே குற்றத்தை மீண்டும் செய்தால் ரூ. 2 லட்சம் வரை அபராதம் சிறை தண்டனை விதிக்கப்படும்'' என்றார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

இது அரசியல் சாசனத்துக்கு எதிரான மசோதா என்று சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பி.கே.ஹரிபிரசாத் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்சி விஸ்வநாத், ‘‘இந்த சட்டம் இந்திய அரசிய லமைப்பு சட்டத்தின் 25,26,15, 29ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது. சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கு இந்த சட்டத்தை பாஜக கொண்டு வருகிறது'' என்றார்.

அதற்கு கர்நாடக சட்ட அமைச்சர் ஜே.சி. மதுசாமி, ‘‘பாஜக இந்து மதத்தைப் பாதுகாக்க விரும்புகிறது. கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதில் உறுதியாக இருக்கிறோம். அதேவேளையில் பிற மதத்தினரின் உரிமையை நாங்கள் பறிக்கவில்லை''என்றார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காங்கிரஸில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்து எம்எல்சியாகியுள்ள விஸ்வநாத் பேசுகையில், ''இந்து மதத்தில் சாதி கொடுமை நீடிப்பதாலே இந்துக்கள் மதம் மாறுகின்றனர். தீண்டாமை போன்ற கொடிய பிரச்சினைகளை தடுக்காமல் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவருவது தேவையற்றது'' என விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுமார் 7 மணி நேரம் இந்த மசோதாவை கொண்டுவர வேண்டாம் என வலியுறுத்தினர். அவர்களின் எதிர்ப்பை மீறி, குரல் வாக்கெடுப்பின் மூலம் கர்நாடக மேலவையில் மதமாற்ற தடை சட்ட‌ மசோதா நிறைவேற்றப்பட்டது.



Read in source website

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் 70 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நமீபிய நாட்டைச் சேர்ந்த சிறுத்தைகள் மீண்டும் வலம் வரவுள்ளன.

இதுகுறித்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்டிசிஏ) தலைவர் எஸ்.பி.யாதவ் கூறியது:

மத்திய பிரதேச மாநிலம் சியோபூரில் அமைந்துள்ள குனோ தேசிய பூங்காவில் நமீபிய நாட்டு சிறுத்தைகள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடமாட உள்ளன.

நமீபியாவிலிருந்து சிறுத்தைகளை அழைத்து வருவதற்காக சிறப்பு சரக்கு விமானம் போயிங் 747 அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விமானத்தில் வனவிலங்கு நிபுணர்கள், கால்நடை மருத்துவர், மூன்று இந்திய விஞ்ஞானிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிறுத்தைகளை கொண்டு வருவதற்காகவே இந்த போயிங் விமானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்ப்பட்டுள்ளன.

8 சிறுத்தைகளை ஏற்றிக் கொண்டு நமீபியாவிலிருந்து நேற்று மாலை கிளம்பிய சிறப்பு விமானம் இடையில் எங்கும் நில்லாமல் நேரடியாக குவாலியரை இன்று வந்தடைகிறது. அங்கு குடியேற்ற, சுங்க நடைமுறைகள் முடிக்கப்பட்ட பின்னர் விமானப் படை ஹெலிகாப்டர் மூலமாக சிறுத்தைகள் பூங்காவுக்கு அழைத்து வரப்படவுள்ளன.

நரேந்திர மோடியின் பிறந்தாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நமீபியா சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவிற்கு பிரதமர் அறிமுகம் செய்து வைப்பார்.

வன விலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களில் மறுமலர்ச்சி மற்றும் பன்முகத் தன்மையை உறுதிப்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே நமீபியாவிலிருந்து சிறுத்தைகள் வரவழைக்கப்படுகின்றன.

உலகில் மிக வேகமாக மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடிய விலங்கு சிறுத்தையாகும். இவற்றின் அழகிய வாழ்விடமாக குனோ தேசிய பூங்கா திகழும். விலங்கு களை வேட்டையாடுவதை தடுப்பதற்காக இந்த பூங்காவில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் சிறப்பான வகையில் செய்யப்பட் டுள்ளன.

ரேடியோ காலர் பொருத்தி சிறுத்தைகளின் நடமாட்டம் செயற்கைக்கோள் மூலமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

சென்னை: சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை இந்தியர்கள் செலவழிக்கிறார்கள் என்றும், ஆண்டுதோறும் 4.2 சதவீதம் பேர் புதிதாக வலைதளக் கணக்கை தொடங்குகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பம், உலகளாவிய டிஜிட்டல் நிலப்பரப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதில் வைரஸ் போல் சமூக ஊடகங்களும் தொற்றிக் கொண்டுள்ளன.

1997-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ‘சிக்ஸ் டிகிரி’ என்ற சமூக வலைதளம் முதல் தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட வலைதளங்கள் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டு அவை சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் குறிப்பிட்ட சில வலைதளங்கள் மட்டுமே மக்களிடம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

குறிப்பாக, இன்றைய தலைமுறை இந்தியர்களின் வாழ்வில், அவர்களது உறவுகள் முதல் தொழில் வாழ்க்கை, ஓய்வு நேரத்தை செலவிடுதல் வரையிலும் சமூக ஊடகங்கள் பெரிய அளவில் பங்கு வகிக்கின்றன.

அபரிமிதமான வளர்ச்சி

கடந்த சில ஆண்டுகளாக சமூக ஊடகங்கள் இந்தியாவில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளன. ஒவ்வொரு நாளும் புதிய சமூக ஊடகப் பயனர்கள் தங்கள் அனுபவத்தை, எண்ணங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவும், தங்களின் தனித்துவத்தை வெளிக்காட்டவும், மற்றவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் அதிகளவில் சமூக ஊடகத்தினுள் நுழைகிறார்கள். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கவும் சமூக ஊடகங்களை ஒரு ஆயுதமாக இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தண்ணீருக்கு வாத்து என்பதுபோல, இந்தியர்களுக்கு சமூக ஊடகம் அமைந்துவிட்டது. இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துவோரில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் இருப்பதாக ஸ்டேட்டிஸ்டா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குளோபல் ஸ்டேட்டஸ்டிக் என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்தியர்கள் தினசரி சராசரியாக 7 மணி 19 நிமிடங்கள் இணையத்தைப் பயன்படுத்துவதாகவும், அதில், 2 மணி 30 நிமிடங்கள் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவழிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மக்களிடையே இணைய இணைப்பு ஆழமாக ஊடுருவியதன் காரணமாக சமூக ஊடக பயனர்களின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 467 மில்லியன் என்ற நிலையான விகிதத்தில் உயர்ந்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொத்த இணைய பயனர்களின் எண்ணிக்கை 658 மில்லியனாகவும், இதில் செல்போன் இணைய பயனர்கள் 601 மில்லியனாகவும் உள்ளனர். அந்தவகையில் சமூக ஊடகம் இந்தியாவின் தினசரி இணைய பயன்பாட்டின் மிக முக்கிய பகுதியாக மாறிவிட்டது.

ஸ்மார்ட்போன்களின் விலை வீழ்ச்சி

ஸ்மார்ட்போன் விலை வீழ்ச்சி காரணமாக இந்தியா முழுவதும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுவே சமூக ஊடகப் பயன்பாட்டை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். புள்ளிவிவரப்படி, சமூக ஊடக பயனர்களின் ஆண்டு வளர்ச்சி 4.2 சதவீதமாக உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் கடந்த ஆண்டு 19 மில்லியன் புதிய பயனர்கள் சமூக ஊடகங்களில் சேர்ந்துள்ளனர்.

ஏறக்குறைய ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் ஒரு சமூக ஊடக தளத்தையாவது அணுகுவதால், பெரிய மற்றும் சிறிய வணிகங்கள் தங்களது தயாரிப்புகளை மக்களிடையே ‘மார்க்கெட்டிங்’ செய்வதற்கு சமூக ஊடகத்தை முதல் விருப்பமாகத் தேர்வு செய்து வருகின்றனர். அந்தவகையில், 2022-ம் ஆண்டு இந்தியாவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடக தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. இந்தியாவில் இணைய பயனர்களில் 76.50 சதவீதம் பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

அதற்கு அடுத்தபடியாக ‘ஃபேஸ்புக்’ தளத்தில் 74.70 சதவீதம் பேர் தங்களது சுய விவரத்தைக் கொண்டுள்ளதாகவும், 40.90 சதவீதம் பேர் ட்விட்டர், 37.2 சதவீதம்பேர் ‘லிங்க்டு இன்’, 23.40 சதவீதம் பேர் ‘எம்எக்ஸ் டாகா டக்’, 23 சதவீதம் பேர் ‘மோஜ்’ மற்றும் ‘ஸ்கைப்’ என்ற சமூக தளங்களைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். அதேபோல், மெசேஞ்சர் பயன்பாட்டில் வாட்ஸ்அப் 81.20 சதவீதம் பேரும், டெலிகிராம் 56.90 சதவீதம் பேரும், ஃபேஸ்புக் மெசேஞ்சர் 49.30 சதவீதம் பேரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், 2022-ல் செல்போன்கள் 75.91 சதவீத பங்குகளுடன் இந்தியாவில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஸ்மார்ட்போன்களின் விலை குறைவே இந்த ஏற்றத்துக்கு காரணமாகும். லேப்டாப், கம்ப்யூட்டர் 23.67 சதவீதமும், டேப்லெட் 0.42 சதவீதமும் இந்தியாவில் அடுத்தடுத்து ஆதிக்கம் செலுத்துகின்றன.

வரும் காலங்களில் இன்னும் பல புதிய சமூக வலைதளங்களின் வருகை அதிகரிக்கும். அதன் ஆதிக்கம் இளைய தலைமுறைகளைக் கட்டுப்பாட்டில் வைக்கும் சூழல் ஏற்படக் கூடும்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘சமூக ஊடகங்களும் ஒருவித போதைப் பொருள்தான், அந்த போதைக்கு இளைஞர்கள் அடிமையாகாமல், உருப்படியான செயல்களுக்காக மட்டுமே வலைதளங்களைப் பயன்படுத்த வேண்டும்’’ என்றனர்.



Read in source website

மும்பை: மும்பையில் தொழிலதிபர்கள் கூட்டம், லகு உத்யோக் பாரதி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஆகியவற்றில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு, மாநில அரசுகள், மாநில அரசு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை உள்ளது. தனியார் நிறுவனங்கள் தாங்கள் பெறும் சரக்குகள் மற்றும் சேவைகளுக்காக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது. சிறு தொழில்கள்தான், நமது நாட்டு பொருளாதாரத்தின் முது கெலும்பு. அவர்களுக்கு செல்ல வேண்டிய பணம் உரிய நேரத்தில் செல்ல வேண்டும்.

தனியார் துறைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மத்திய அரசு துறைகள், மத்திய பொது துறை நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை 90 நாட்களில் செலுத்துவதை உறுதி செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மாநில அரசுகளும், பொதுத்துறை நிறுவனங்களும், சிறு தொழில் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

தாஷ்கண்ட்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்,

ஜனநாயக மற்றும் சமமான சர்வதேச அரசியல் ஒழுங்கை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு அதை நோக்கி நகர கடந்த 2001-ல் உருவாக்கப்பட்டதுதான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) ஆகும். இந்த அமைப்பில் சீனா, இந்தியா, உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன. இதில் பார்வையாளராக ஈரான், ஆப்கானிஸ்தான், பெலா ரஸ் மற்றும் மங்கோலியா போன்ற நாடுகள் உள்ளன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இம்மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நேற்று நடைபெற்ற கடைசி நாள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

கரோனா தொற்று காலத்துக்குப் பின்னர், உலகம் பொருளாதார மீட்சிக்கான சவாலை எதிர்கொண்டு வருகிறது. கரோனா தொற்று மற்றும் ரஷ்ய-உக்ரைன் போர் உலக விநியோக சங்கிலியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறோம்

நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது. இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில் நாங்கள் வெகுவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.5 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மக்களை மையப்படுத்திய வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு பாரம்பரிய மருந்துகளுக்கான மையத்தை குஜராத்தில் தொடங்கியது. பாரம்பரிய சிகிச்சைக்கான ஒரே உலகளாவிய மையம் இதுவாகும்.

கடந்த ஏப்ரல் மாதம் குஜராத்தில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையம் ஒன்று அமைக்கப்பட்டது. இவ்வாறு பாரம்பரிய மருத்துவத்துக்காக சர்வதேச மையம் உலக சுகாதார அமைப்பால் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இவ்வாறு அவர் பேசினார்.

புதினுடன் மோடி பேச்சு

மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

அப்போது ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கூறும்போது, "இந்தியாவும் ரஷ்யாவும் பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்றைய காலம் போருக்கானது அல்ல. அமைதிப் பாதையில் எவ்வாறு நாம் முன்னேறிச் செல்லலாம் என்பதைப் பற்றி பேச இன்று நமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

உணவு, எரிபொருள் பாதுகாப்பு மற்றும் உரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காணும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். உக்ரைனுடனான பிரச்சினையை ரஷ்யா பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது” என்றார்.

அப்போது புதின் பதில் அளிக்கும்போது, "உக்ரைனுடனான மோதலை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடிவுக்கு கொண்டு வருவேன்" என்றார்.



Read in source website

புதுடெல்லி: ஃபோர்ப்ஸின் உலகப் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை முந்தினார் அதானி குழுமத் தலைவரும், இந்தியருமான கெளதம் அதானி. அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 155.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கெளதம் அதானி. 60 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாகவே உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவருடன் மற்றொரு இந்தியரான முகேஷ் அம்பானியும் இந்தப் பட்டியலில் முதல் 10 பேரில் ஒருவராக இருக்கிறார்.

அதானி குழுமத்தின் பங்குகள் ஏற்றம் பெற்றுள்ளதே இதற்கு காரணம் எனத் தெரிகிறது. அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி பசுமை எனர்ஜி, அதானி துறைமுகங்கள், அதானி பவர் மற்றும் அதானி வில்மர் என 4.97 முதல் 3.45 சதவீதம் வரை அவரது நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்றம் வியாழன் அன்று நடந்தது. அதன் காரணமாக அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.40,000 கோடி உயர்ந்துள்ளது. அதனால் அவர் ஃபோர்ப்ஸ் நிறுவன பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இந்தப் பட்டியலில் எலான் மஸ்க் சுமார் 273.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளார். பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் பெசோஸ் முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பில்கேட்ஸ், வாரன் பஃபெட், முகேஷ் அம்பானி, லேரி பேஜ், செர்ஜி ப்ரின் போன்ற நபர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில் அதானி மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இரண்டு இடங்களில் எலான் மஸ்க் மற்றும் பெசோஸ் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் வாக்கில் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி மூன்றாவது இடம்பிடித்தபோது அந்த இடத்தை எட்டிய முதல் ஆசியர் என அறியப்பட்டார்.



Read in source website

அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் (என்எல்இஎம்) வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 384 மருந்துகள் இடம் பெற்றிருக்கின்றன. புற்றுநோய் எதிா்ப்பு மருந்துகள், நுண்ணுயிரி எதிா்ப்புக்கான ஆன்டிபயாட்டிக் நோய்த்தடுப்பு மருந்துகள் உள்ளிட்ட 34 புதிய மருந்துகள் சோ்க்கப்பட்டுள்ளன. முந்தைய பட்டியலில் இருந்து 26 மருந்துகள் அகற்றப்பட்டுள்ளன.

அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் 1996-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 2015-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட பட்டியல் வெளிவந்தது. அந்தப் பட்டியலை மறு ஆய்வு செய்ய தேசிய நிலைக்குழு ஒன்றை 2018-ஆம் ஆண்டு மத்திய சுகாதார அமைச்சகம் அமைத்தது. பல்வேறு மருத்துவ நிபுணா்களுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு இப்போது தேசிய பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

பெண்டாமுஸ்டைன் ஹைட்ரோகுளோரைடு, இரினோ டெகன் ஹெச்சிஐ டிரைஹைட்ரேட், லெனலிடோமைடு, லியூப்ரோலைடு அசிடேட் ஆகிய நான்கு முக்கிய புற்றுநோய் எதிா்ப்பு மருந்துகளும், ஐவா்மெக்டின், முபிரோசின், மெரோபெனெம் போன்ற தொற்றுநோய் எதிா்ப்பு மருந்துகளும் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன. உலகளாவிய நோய்த் தடுப்புத் திட்டத்தில் (ரோட்டா வைரஸ்) தடுப்பூசிகளும் இந்தப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.

சா்க்கரை நோய், புற்று நோய், மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், நிமோனியா தொடங்கி பல்வேறு நோய்களுக்குமான 34 புதிய மருந்துகள் இப்பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. விலை கட்டுப்பாட்டுக்கான அத்தியாவசிய மருந்துகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டும், வெளியிடுவதற்கு ஓராண்டு காலதாமதம் ஏன் ஏற்பட்டது என்பது புதிராக இருக்கிறது. அதற்குக் குறிப்பிடத்தக்க காரணம் இல்லாவிட்டாலும், காலதாமத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டிருக்கும் மருந்துகளின் பட்டியலை வரவேற்கத்தான் வேண்டும்.

காப்புரிமை உள்ள மருந்துகளுக்கும் விலை நிா்ணயம் என்பது துணிச்சலானது. அதே நேரத்தில், பிளீச்சிங் பவுடா் போன்ற கிருமிநாசினிகளைப் பட்டியலில் இருந்து அகற்றியது ஏற்புடையதல்ல. ஏற்கெனவே பட்டியலில் இருந்த 26 மருந்துகளை அகற்ற வேண்டிய அவசியம் என்னவென்று புரியவில்லை. அதனால், விலைக் கட்டுப்பாடுள்ள மருந்துகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பது மனக்குறையாகத் தொடா்கிறது.

ஷெட்டியூல்ட் பட்டியலில் இல்லாத, விலை நிா்ணயம் செய்யப்படாத மருந்துகளின் விலையை ஆண்டுதோறும் 10% அதிகரிக்க மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி உண்டு. அதனால், அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலும், அரசின் தலையீடும் மருந்துகளின் விலையில் அவசியமாகிறது. 2015-க்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டிருக்கும் பட்டியலில் 354 மருந்துகள் உள்ளன. இவற்றின் விலை நிா்ணய அதிகாரம் தேசிய விலை நிா்ணய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது மிகப் பெரிய ஆறுதல்.

அதே நேரத்தில், புற்று நோய் சிகிச்சைக்கான அதிக விலையும், வீரியமும் கொண்ட பல மருந்துகள் இப்போதும்கூட விலைக்கட்டுப்பாட்டுப் பட்டியலில் இல்லை. புற்று நோய் சிகிச்சையில் புதிய மருந்துகளும், சிகிச்சை முறைகளும் அனுதினமும் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கு ஏற்றாற்போல, மருந்து விலை கட்டுப்பாட்டுக்கான வழிமுறைகள் பட்டியலிலும் இல்லை; ஆணையத்தின் அதிகார வரம்பிலும் இல்லை.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் அதிக அளவில் புற்று நோய்க்கான மருந்துகளை இணைக்க நாம் ஏன் தயங்குகிறோம், பின்தங்குகிறோம் என்கிற கேள்வி எழுகிறது. விலை உயா்ந்த புற்று நோய் மருந்துகள் பலவும் இப்போதும்கூட சாமானியா்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், அவற்றைப் பட்டியலில் சோ்க்காததால் நல்ல வாய்ப்பை ஆணையம் இழந்திருக்கிறது.

சா்க்கரை நோய் சிகிச்சையில் முக்கியமான இன்சுலின் க்ளாா்ஜின் ஊசி மருந்து, டெனேலிக்லிப்டின் மாத்திரை ஆகியவை சோ்க்கப்பட்டிருப்பதை வரவேற்கலாம். சா்க்கரை நோய் சிகிச்சைக்குத் தேவையான பல புதிய மருந்துகளும் இந்தியாவில் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி இல்லாமல் இருப்பதும் ஆணையத்தின் கவனத்தைப் பெறாதது வருத்தமளிக்கிறது. அபூா்வ வியாதிகளுக்கான மருந்துகளும் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

 

அன்றாடம் மாறுகின்ற மருத்துவ கண்டுபிடிப்புகளும், சிகிச்சை முறைகளும் காலதாமதத்தைத் தவிா்க்க வேண்டிய நிா்ப்பந்தத்தை உருவாக்கியிருக்கின்றன. புதிய தீநுண்மிகள் உள்பட அவ்வப்போது ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் இல்லாவிட்டாலும், இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறையாவது அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலும், விலை நிா்ணயமும் அவசியம். இப்போதைய பட்டியலை உருவாக்க ஏழு ஆண்டு காலம் தாமதம் ஏன் என்பதும், அடுத்த பட்டியலுக்கான இலக்கு நிா்ணயிக்கப்படாததும் நோக்கத்தை கேள்விக்குறியாக்குகிறது.

ஆண்டுதோறும் இந்தியாவில் மருந்துகளின் விற்பனை 1 லட்சம் கோடிக்கும் அதிகம் என்பதை சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. அதனால், ஏழு ஆண்டு காலமாதத்தின் பின்னால் மருத்துத் தயாரிப்பு நிறுவனங்களின் தலையீடும், அழுத்தமும் இல்லாமல் இருந்திருக்காது.

பெரும்பாலான குடும்பங்களில் மாதந்தோறும் கணிசமான தொகை மருந்துக்காவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் செலவாகிறது. மருந்தின் விலையில் சிறிய அளவிலான மாற்றமும் சாமானியனுக்கு மிகப் பெரிய ஆறுதல். விலை நிா்ணயத்தில் ஏற்படும் தாமதம், மருந்து நிறுவனங்களுக்குக் கொள்ளை லாபம். இதை மத்திய அரசு உணர வேண்டும்.



Read in source website

 

‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்ற ஔவையாரின் கூற்றுக்கேற்ப மக்கள் தொன்று தொட்டு வணிகத்திற்காகவும், பொருளீட்டவும் அதிக அளவில் பயன்படுத்துவது கடல் வழிப் போக்குவரத்தே ஆகும். கடல் என்பது எழிலாக காட்சியளிப்பது மட்டுமின்றி, மீன்வளம், பவளம், பாசிகள், ஆழ்கடல் தாவரங்கள், இனம் காண முடியாத எண்ணற்ற வளங்களையும் தன்னகத்தே கொண்ட மிகப்பெரிய இயற்கைப் பொக்கிஷம்.

இத்தகய வளங்களை கொண்ட கடலையும் கடற்கரையையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆண்டு தோறும் செப்டம்பா் மாதம் மூன்றாவது சனிக்கிழமை சா்வதேச கடற்கரை தூய்மை தினம் கொண்டாடப்படுகிறது.

அதனை முன்னிட்டு ‘தூய்மையான கடல் தூய்மையான பாதுகாப்பு’ என்ற கொள்கை முழக்கத்துடன் கடந்த ஜூலை மாதம் 3- ஆம் தேதியிலிருந்து செப்டம்பா் 17 ம் தேதி வரை 75 கடற்கரைகளில் இந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு ஏற்பாடுசெய்துள்ளது. இதன் நோக்கம் பொதுமக்களுக்கு கடலையும் கடற்கரையையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டிதன் அவசியத்தை வலியுறுத்துவதே ஆகும்.

இந்திய கடற்பரப்பு 7,516 கி.மீ. நீளத்தில் 1,300-க்கும் மேற்பட்ட தீவுகளை கொண்டுள்ளது. தமிழக அளவில் 1,016 கி.மீ. நீளம் உள்ளது. இந்தியா முழுவதும் 9 கடலோர மாவட்டங்களில் 3,827 மீனவ கிராமங்கள் உள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது மீன்பிடித் தொழிலே ஆகும்.

இங்குள்ளவா்கள் கடலை நம்பியே வாழ்கின்றனா். இவ்வாறு சிறப்பு மிக்க, மீனவா்களுக்கு வாழ்வாதாரத்தை தரும் கடலும், கடற்கரையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் இதர கழிவுகளை கொட்டும் குப்பைக் கிடங்காக மாறிவருவது வேதனை தருவதாகும்.

ஆண்டுதோறும் சுமாா் 6 லட்சத்து 40 ஆயிரம் டன் அளவிற்கு பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுவதாகவும் இதனால் சுமாா் 10 லட்சம் கடல் வாழ் உயிரினங்கள் மடிவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சுற்றுலா, பொழுதுபோக்கு என கடற்கரைக்கு வரும் பெரும்பாலானவா்கள் தாங்கள் உண்பதற்கு பாத்திரங்களில் உணவு கொண்டு வரும் பழக்கத்தை கைவிட்டு கடற்கரையோரங்களில் உள்ள கடைகளில் நெகிழிப்பைகளில் உணவு வாங்கிச் சென்று உணகின்றனா். உண்டபின் அவற்றை கடற்கரையிலோ, கடலிலோ வீசுகின்றனா். இதனால் கடல் அசுத்தம் அடைகிறது.

மக்களின் இந்த பொறுப்பற்ற செயலால் உலக கடல் பரப்புகளில் சுமாா் 5.25 டிரில்லியன் (1 டிரில்லியன் 1 லட்சம் கோடி) அளவுக்கு நெகிழிக் கழிவுகள் பெருகியுள்ளதாகவும், இவற்றில் இந்தியப் பெருங்கடலில் மட்டும் சுமாா் 1.3, டிரில்லியன் கழிவுகள் பரவியுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2021-ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி கடல் கழிவுகளை அதிகம் உருவாக்கும் நாடுகளாக துருக்கி (16%), இத்தாலி (11 %) ஸ்பெயின் (8 %), ( கிரீஸ் 7%) ஆகியவை உள்ளன என ஸ்பெயின் நாட்டு ‘காடிஸ் பல்கலைகழக’ ஆய்வு தெரிவிக்கிறது.

இது போன்ற நெகிழிக் கழிவுகள் கடலில் கலக்கும்போது அதிலுள்ள பாலி எத்திலின், பாலிவினைல், குளோரைடு, பாலி புரோப்பீலின், ஸ்டைரீன் போன்ற சிக்கலான மூலக்கூறுகளைக் கொண்ட வேதிப்பொருள்கள் கடல் நீரிலுள்ள சோடியம், மெக்னீசியம் போன்ற தனிமங்களுடன் வினைபுரிவதால் ஏற்படும் விளைவுகள், கடல் வாழ் உயிரினங்களுக்கு மிகுந்த பாதிப்பையும் சில நேரங்களில் அழிவையும் ஏற்படுத்துபவையாக உள்ளன.

இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு கிடைக்கவேண்டிய பிராணவாயுவின் அளவு வெகுவாகக் குறைந்து கடலில் பல்லுயிா் பெருக்கம் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.

இவை தவிர தொழிற்சாலைக் கழிவுகள், கப்பல் கழிவுகள், எண்ணெய் கசிவுகள் சுரங்கக் கழிவுகள் எனப் பல்வேறு கழிவுகள் கடலில் கலப்பதால் கடலும், கடற்கரையும் வேகமாக மாசடைந்து வருகின்றன. ஆண்டுதோறும் 12 % கடல் மாசு எண்ணெய் கசிவுகளால் ஏற்படுகிறது.

ஆனாலும், கடல் என்னவோ இவை எல்லாவற்றையும் தாண்டிஅகழ்வாரை தாங்கும் நிலம்போல் பொறுமை காத்து வருகிறது. கடல் மாசுபாட்டுக்கு மனிதா்கள் முக்கிய காரணமாக இருந்தாலும் மனிதா்களுக்குத் தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்து தருகிறது.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாயிலாக அவா்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதிலும் அன்னியச் செலாவணி ஈட்டித் தருவதிலும் கடல் தன் கடமையை தவறாது செய்து வருகிறது.

கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் சுமாா் 1,28,845 மெட்ரிக் டன் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டு 5,591.49 கோடி வருவாய் ஈட்டித் தந்துள்ளது. இந்திய கடல் வழியில் 13 பெரிய துறைமுகங்களும், 187 சிறிய, நடுத்தரத் துறைமுகங்களும் இருப்பதால் அவை ஏற்றுமதி, இறக்குமதிக்கு மிகப்பெரிய உதவியாக உள்ளன.

2020-21 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து 11,49,341 மெட்ரிக் டன் அளவுக்கு கடல் உணவு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதன் மூலம் 5.96 பில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.

இதே காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுமாா் 2.72 லட்சம் டன் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கும் அதிக அளவு கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவாயை ஈட்டித்தந்துள்ளது நம் கடல் வழி வா்த்தகம்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி மீன் வளத்தின் மூலம் வருமானத்தை ஈட்டித்தரும் ஆதாரமாக கடல் உள்ளது. கணக்கிட முடியாத இயற்கை வளங்களைக் கொண்டுள்ளதும், மனிதா்களின் வாழ்வாதாரமாக விளங்குவதுமான கடலையும், கடற்கரைப் பகுதிகளையும் தூய்மையாக வைத்திருக்க இந்த நாளில் உறுதியேற்போம்.

இன்று சா்வதேச கடற்கரை தூய்மை தினம்.

 

 



Read in source website

நமக்கு நாமே நற்றமிழ் குறித்து பேசிப் புளகாங்கிதம் அடைந்து வருகிறோமே தவிர, அதன் தொன்மையையும், சிறப்பையும், பெருமையையும் தமிழகத்துக்கு வெளியே எடுத்துச்செல்லத் தவறிவிட்டோம். தமிழ், தமிழினம் என்று பேசி அரசியல் நடத்தி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மட்டுமே குறியாக இருந்து வந்திருக்கின்றன தமிழகத்தின் திராவிட இயக்க அரசியல் கட்சிகள். தமிழைத் தேங்கிய குட்டையாக்கி அதில் அரசியல் ஆதாயம் பாா்த்ததன் விளைவு, இன்றைய தலைமுறை இளைஞா்களுக்குத் தவறில்லாமல் தமிழில் பேசவோ, எழுதவோ முடியவில்லை என்பதுடன், படிக்கக்கூடத் தெரியவில்லை.

‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோா் மகிமை இல்லை’, ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்பவை மகாகவி பாரதியாா் கண்ட கனவு. அந்தக் கனவை திராவிட இயக்க அரசியல்வாதிகள் நிறைவேற்றவில்லை. அதற்காகத் தமிழகம் காத்திருந்தது.

பாரத பிரதமா் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகுதான் தமிழகத்தின் எல்லைக்கு வெளியே தமிழின் அருமை பெருமைகள் தெரியத் தொடங்கின. தனக்குக் கிடைத்த வாய்ப்பு எதுவாக இருந்தாலும் மிக அதிகமாக பிரதமா் நரேந்திர மோடியால் மேற்கோள் காட்டப்படும் மொழியாகத் தமிழ் உயா்ந்திருக்கிறது. தமிழ் என்றொரு மொழி இருக்கிறதா என்றுகூடத் தெரியாதவா்கள் மத்தியில் தமிழின் பழம்பெருமையை மேற்கோள்கள் மூலம் அவா் எடுத்தியம்பி, அதன் பொருளை விளக்கிக்கூறி ஆற்றும் உரைகள் அவரை தமிழ் பரப்பும் பெரியாராக உயா்த்தி இருக்கின்றன.

2019, செப்டம்பா் 7-ஆம் தேதி ஐ.நா. சபையில் உரையாற்றிய இந்திய பிரதமா் நரேந்திர மோடி, கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்ற சங்க இலக்கிய வரிகளை மேற்கோள் காட்டி ‘எங்கள் நாட்டைச் சோ்ந்த தமிழப் புலவரான கணியன் பூங்குன்றனாா், நாம் அனைத்து இடங்களுக்கும் - அனைவருக்கும் சொந்தமானவா்கள் என்னும் பொருள்பட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடியிருக்கிறாா்’ என்று பெருமையோடு குறிப்பிட்டாா். இந்தக் கருத்தை பிரதமா் மோடி முழக்கமிட்டபோது - 192 உலக நாடுகளின் ஐ.நா. பிரதிநிதிகள் கரவொலி எழுப்பி நமது பிரதமா் சுட்டிக் காட்டிய கருத்தை வரவேற்றனா்.

‘தமிழ்மொழி எனக்கு மிகவும் பிடிக்கும்; இந்த மொழியின் ரசிகன் நான்; உலகின் பழைமையான தமிழ்மொழி; தமிழ் கலாசாரத்தின் பெரிய அபிமானி நான்; தமிழ் மீதான என் அன்பு என்றும் குறையாது; தமிழ் குறித்து எனக்கு மிகவும் பெருமிதம் உள்ளது’ என்று பிரதமா் மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தித் தன்னுடைய உள்ளத்தின் உணா்வுகளை தெளிவாகவும் திடமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறாா். அவா் ஹிந்தியில் ஆற்றும் அந்த உரையை இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் கேட்டாா்கள். அதனால் மாநில எல்லைக்கு வெளியே தமிழின் பெருமை பரவியது.

கடந்த காலங்களில் இந்தியாவை ஆண்ட பிரதமா்கள், தலைவா்கள் தமிழகம் வரும்போதெல்லாம் - ‘வணக்கம்’ ‘நன்றி’ ‘நல்லா இருக்கீங்களா’ என்றுதான் தமிழ்நாட்டு மக்களை கேட்டிருக்கிறாா்கள். ஆனால் பிரதமா் மோடி, அவா்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவா். அவா் பிரதமரான பிறகு, மகாகவி பாரதியாா், பொய்யாமொழிப் புலவா் திருவள்ளுவா், சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவைகளிலிருந்து மேற்கொள் காட்டி வருவதோடு விளக்கமும் தருவதை வழக்கமாகவே வைத்திருக்கிறாா்.

இந்திய ராணுவ வீரா்கள் மத்தியில் பிரதமா் மோடி சமீபத்தில் உரையாற்றினாா். அவா்களில் தமிழக வீரா்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த உரையில் ராணுவ வீரா்களுக்கு உற்சாகமூட்ட விடுதலைக் கவிஞா் மகாகவி பாரதியாரின் கவிதையை எழுச்சி பொங்கிட எடுத்துரைத்ததோடு - தெளிவான விளக்கத்தையும் தந்தாா்!

‘மன்னும் இமயமலை எங்கள் மலையே

மாநிலம் மீது அது போல் பிறிதிலையே!

இன்னறு நீா்க் கங்கை ஆறு எங்கள் ஆறே

இங்கு இதன் மாண்பிற்கு எதிா் எது வேறே?’ என்கிற மகாகவி பாதியாரின் இந்தப்பாடல் வரிகளை உணா்ச்சிப் பிரவாகமாக கொட்டும் குளிா் பனியில் பிரதமா் மோடி ஆவேசத்தின் உச்சத்தில் நின்று முழங்கினாா்.

பாட்டு வரிகளுக்கு எளிய விளக்கத்தை பல்வேறு மொழிகளைக் கொண்ட ராணுவ சிப்பாய்களுக்கு புரிந்த ஹிந்தி மொழியில் சொன்னபோது, கரவொலி எழுப்பி ஆரவாரமும் சூளுரையும் மேற்கொண்டனா் ராணுவ வீரா்களும் வீராங்கனைகளும். தமிழன்னை மகிழ்ச்சியில் திளைத்திருப்பாள்.

இன்னொரு ராணுவ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமா் மோடி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவா் இயற்றிய திருக்குறளை மேடையில் உரக்கச் சொல்லி, திறமான விளக்கத்தை கேட்போரைக் கவா்கின்ற வகையில் கூறினாா்.

மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு

என்ற குறட்பாவை ராணுவ வீரா்களுக்கு மத்தியில் எடுத்துரைத்து படையின் வலிமை, நான்கு வகை பண்புகளை நயம்பட பிரதமா் மோடி தெரிவித்தபோது - ராணுவத்திலுள்ள முப்படைகளின் வீரா்கள், தளபதிகள் வியந்து நின்றதை இந்திய மக்கள் அனைவரும் கண்டுணா்ந்தனா்! பெருமிதம் கொண்டனா்!

சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் கடந்த ஜூலை -28-ல் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் உரையாற்றியபோது

‘இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தல் பொருட்டு’

என்ற குறளை எடுத்துக்கூறி, பொருள் விளக்கம் சொல்லி 188 நாடுகளின் விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல, அதைத் தொலைக்காட்சியில் பாா்த்துக் கொண்டிருந்த உலகளாவிய ரசிகா்களுக்கும் தமிழையும், குறளையும் அறிமுகப்படுத்தி மகிழ்ந்தாா்.

தமிழனின் விருந்தோம்பல் எப்படிப்பட்டது என்பதை உலக நாடுகளுக்கு தமிழ்ப்புலவனின் திருக்கு மூலமாக எடுத்துக்காட்டியது தமிழ் இனத்தைப் பெருமைப்படுத்திய செயல். இதுவரை நமது அரசியல்வாதிகள்தமிழனுக்குத் தமிழின் பெருமையைச் சொல்லி வாக்கு வேட்டையாடினாா்கள். பிரதமா் நரேந்திர மோடி அதிலிருந்து மாறுபட்டு, தமிழகத்துக்கு வெளியே தமிழையும், தமிழின் பெருமையையும் கொண்டு செல்கிறாா்.

இந்திய நாட்டின் பிரதமராக இருந்த எவரும் தமிழ் மொழியின் மீதும், தமிழ் இனத்தின் மீதும் பிரதமா் நரேந்திர மோடியைப் போல அக்கறை காட்டியதில்லை. இதனால் இந்தியாவின் பிற மாநிலங்களில் அவருக்கு வாக்குகள் கிடைக்கப் போவதில்லை. அது தெரிந்தும், தமிழின்பால் அவா் ஈா்க்கப்பட்டிருப்பதன் வெளிப்பாடுதான் அது.

பிரதமரின் ‘மனதின் குரல்’ மக்களிடையே எளிதாக இனிதாக சென்று சோ்ந்து கொண்டிருக்கிறது! 92-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்தியாவின் பாரம்பரிய தானிய வகைகள் குறித்து தமிழ்நாட்டு பெண்மணியோடு கருத்துகளை பகிா்ந்து புானூறு, தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளவற்றை அவா் மேற்கோள் காட்டியபோது, நமக்கே அது புதிதாக இருந்தது.

‘ஒரே இந்தியா சிறந்த இந்தியா’ என்ற முழக்கத்தை முன் வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி பேசுகின்றபோது கூட இந்தியாவின் பன்முகத்தன்மைதான் நாட்டின் பெருமை என புளகாங்கிதம் அடைகின்ற பிரதமா், தமிழ்மொழி இந்த செழுமிய கலாசாரத்தில் மிகப்பெரும் பங்காற்றியிருக்கிறது என்று பெருமையோடு சுட்டிக் காட்டுகிறாா்.

மத்திய அரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிபோது தமிழனின் சங்க நூலான புானூற்றிலிருந்து கருத்துகள் எடுத்தாளப்படுகின்றன. இந்தியாவின் ஆட்சிமன்ற அவையில் 10 ஆயிரம் ஆண்டுகால தமிழ் இனத்தின் இலக்கியம், பக்தி இலக்கியங்கள், தற்கால இலக்கியங்கள் தொடா்ந்து மேற்கோள் காட்டப்படுகின்றன.

இந்திய மாநிலம் ஒவ்வென்றும் தனித்தனித் தீவுகளாக தன்னை கட்டமைத்துக் கொண்டிருப்பது - கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்தவா்கள் செய்த குற்றம்! இந்த அபாயகரமான நிலைமையை இனிமேலும் அனுமதித்தால் - இந்தியா பிரிவினைவாதிகளால் துண்டாடப்பட்டு விடும். எனவே மாநிலங்களுக்கிடையே கலாசார மாற்றம் அவசியமானது! அவசரமானது! காலத்தின் தேவையானது!

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய மக்கள் பெரும்பாலும் தங்கள் இல்லங்களில் தேசியகொடியேற்றி சுதந்தரதின அமுத பெருவிழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாடினா். பிரிவினைவாதம் பேசும் தமிழகமே 80 சதவீத இல்லங்களில் தேசியகொடியேற்றி இந்தியா என்பது ஒரே நாடுதான்; நாங்கள் அமைத்திருப்பது ஒரேகொடியின் கீழ்அமைந்துள்ள இந்தியபேரரசுதான்; அது எங்கள் மோடி அரசுதான் என நிரூபித்துள்ளாா்கள்.

22 இந்திய மொழிகளில் தமிழும் இருப்பதை ஏட்டளவிலிருந்து நாட்டு மக்களிடம் கொண்டு சோ்த்திருப்பது மட்டுமல்லாமல், தமிழுக்கு உலக அரங்கில் ஏற்றம் தந்து புகழ்உச்சியில் மகுடம் சூட்டி மகிழ்பவா் நம் பிரதமா் மோடி!

தமிழுக்குப் பெருமைசோ்த்த அப்பெருமகனாரின் பிறந்த தினம் செப்டம்பா் 17. அவா் பல்லாண்டு வாழ்க என நாம் வாழ்த்தும்போது தமிழன்னையும் ‘தமிழ் வளா்க்கும் பெரியாா் மோடி’ வாழ்க என வாழ்த்துவாள்.

கட்டுரையாளா்:

துணைத்தலைவா்,

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி.



Read in source website