DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 15-03-2022

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்தின் 1,588 கோடி ரூபாய் முதலீட்டில் ஸ்ரீபெரும்புதூரில் காற்றழுத்த கருவிகள் (Compressor) உற்பத்தித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை திமுக அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

தமிழக அரசின் சாம்சங் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மூலம் உள்ளூர் மக்கள், பெண்கள் என 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பேசினார். 

ஒப்பந்தம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (15.03.2022) சென்னையில், பன்னாட்டு தொழில் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் 1,588 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய காற்றழுத்த கருவிகள் (Compressor) உற்பத்தித் திட்டத்தை ஸ்ரீபெரும்புதூரில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

சாம்சங் நிறுவனம், 450 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், கணினித்திரைகள், குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் மற்றும் சலவை சாதனங்கள் உற்பத்தி செய்யும் திட்டத்தை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள சிப்காட் நிறுவனத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலத்திலும், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பூங்காவிலும் (உள்நாட்டு கட்டணப்பகுதி) அமைத்திட உத்தேசித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் 10.11.2006 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ஒரே வருடத்திற்குள் ஆலை கட்டி முடிக்கப்பட்டு 13.11.2007 அன்று, கருணாநிதியால் திறந்தும் வைக்கப்பட்டது. அந்த முதலீடு நடப்பாண்டில் 1,800 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இன்று நடைபெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சாம்சங் நிறுவனத்தின் புதிய விரிவாக்கத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் 2022-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் நிறைவு பெறும் எனவும், 2022-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆண்டொன்றிற்கு 80 லட்சம் அளவிற்கு காற்றழுத்த கருவிகள் உற்பத்தி மேற்கொள்ளவும், 2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் 144 இலட்சம் அளவிற்கு அதன் உற்பத்தியைப் பெருக்கிட திட்டமிட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச்  செயலாளர் ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி, இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (SIPCOT) மேலாண்மை இயக்குநர் த. ஆனந்த், இ.ஆ.ப., சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தென்மேற்கு ஆசிய தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கென் காங் (Ken Kang), சாம்சங் நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையின் மேலாண்மை இயக்குநர் பியோங் ஜிங் கோன்ங் (Byong Jin Kong), சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சியோங் டியேக் லிம் (Seong Taek Lim), சாம்சங் நிறுவனத்தின் இந்தியாவிற்கான துணை மேலாண்மை இயக்குநர் பீட்டர் ரீ (Peter Rhee), தொழிலதிபர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 



Read in source website

பெங்களூரு: கர்நாடகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று ஹிஜாப் சா்ச்சை விவகார வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி(பெண்) காஜி ஜெய்புனிசா மொய்தீன் ஆகியோா் கொண்ட அமா்வு இன்று அளித்த தீர்ப்பில், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹிஜாப் தடைக்கு எதிரான சரியான முகாந்திரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது நியாயமான கட்டுப்பாடுதான். பள்ளிகளில் மதத்தை அடையாளப்படுத்தும் ஆடைகள் அணிவதை அனுமதிக்க முடியாது.அரசின் கல்வி நிறுவன சீருடை சட்டத்துக்கு அனைவரும் உள்பட்டவர்கள் என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், கர்நாடகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஹிஜாப் சர்ச்சை..

கா்நாடகத்தில் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை எழுந்தது. இதையடுத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு சீருடையில் மட்டுமே வர அறிவுறுத்தி பிப்.5-ஆம்தேதி கா்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிா்த்து உடுப்பி அரசு மகளிா் பி.யூ. கல்லூரி முஸ்லிம் மாணவிகள் உள்ளிட்ட பலரும் தாக்கல் செய்திருந்த மனுக்களை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி(பெண்) காஜி ஜெய்புனிசா மொய்தீன் ஆகியோா் கொண்ட அமா்வு, பிப்.10-ஆம் தேதி முதல் தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கில் இறுதித் தீா்ப்பு வரும் வரை ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட எதையும் அணிந்து வரை தடை விதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் தேவதத் காமத், சஞ்சய் ஹெக்டே, ரவிவா்ம குமாா், யூசுப் முச்சலா உள்ளிட்ட பலா் வாதிட்டனா். ஹிஜாப் அணிந்துகொண்டு கல்லூரிகளுக்கு வருகைதர முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதிஅளிக்க வேண்டும். ஹிஜாப் அணிவது மத நம்பிக்கையின் ஒரு பகுதி என்பதால், அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 19(1)(ஏ)இன்படி ஹிஜாப் அணிவது தனிப்பட்ட உரிமை. எனவே, ஹிஜாப் அணிவதற்கு சீருடை சட்டம் தடையாக இருக்க முடியாது என்று மனுதாரா்களின் வழக்குரைஞா்கள் வாதிட்டனா்.

இதனிடையே, அரசு தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் கே.நவடகி வாதிடுகையில், ‘சீருடை தொடா்பாக அரசு புதிய ஆணை எதையும் பிறப்பிக்கவில்லை. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஹிஜாப் அணிவது கட்டாய மத வழக்கம் கிடையாது’ என்று குறிப்பிட்டாா். பிப்.10-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிவரையில் 11 நாள்களுக்கு இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இறுதிதீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதித் தீா்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணி விதித்த தடை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

 



Read in source website

 

வங்கதேசத்தில் நடைபெறும் 50 ஓவர் டாக்கா பிரீமியர் லீக் (டிபிஎல்) போட்டியில் விஹாரி உள்பட ஏழு இந்திய வீரர்கள் விளையாடவுள்ளார்கள்.

விஹாரி, அபிமன்யூஸ் ஈஸ்வரன், பர்வேஸ் ரசூல், பாபா அபரஜித், அசோக் மெனேரியா, சிராக் ஜானி, குரிந்தர் சிங் ஆகிய ஏழு வீரர்களையும் ஐபிஎல் ஏலத்தில் எந்தவொரு அணியும் தேர்வு செய்யவில்லை. இதையடுத்து இன்று முதல் தொடங்கியுள்ள வங்கதேசத்தின் ஒரே லிஸ்ட் ஏ போட்டியான டிபிஎல் போட்டியில் இவர்கள் ஏழு பேரும் கலந்துகொள்ளவுள்ளார்கள். 

விஹாரி, ஈஸ்வரன், அபரஜித், மெனேரியா, ரசூல் ஆகிய வீரர்கள் ஏற்கெனவே டிபிஎல் போட்டியில் 2019-20-ல் கலந்துகொண்டார்கள். தினேஷ் கார்த்திக், மனோஜ் திவாரி, யூசுப் பதான் ஆகிய இந்திய வீரர்களும் இதற்கு முன்பு டிபிஎல் போட்டியில் விளையாடியுள்ளார்கள். 

ஏழு இந்திய வீரர்கள் கலந்துகொள்ளும் டிபிஎல் போட்டியில் பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், ஜிம்பாப்வேயின் சிகந்தர் ராஸா ஆகியோரும் விளையாடுகிறார்கள். டிபிஎல் போட்டியில் 11 அணிகள் பங்கேற்கின்றன. ஏப்ரல் இறுதியில் போட்டி நிறைவுபெறும். 



Read in source website

 

கிரிக்கெட் விளையாட்டில் விதிமுறைகளை உருவாக்கும் அமைப்பாக செயல்படுகிறது எம்.சி.சி. தற்போது கிரிக்கெட்டில் சில மாற்றங்களை எம்.சி.சி. கொண்டு வந்துள்ளது. அந்த மாற்றங்களின் ஒரு பகுதியை ஐபிஎல் போட்டியிலும் அமல்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் பிசிசிஐ கடைபிடிக்கவுள்ள புதிய விதிமுறைகள்:

* கரோனா காரணமாக 12 வீரர்களுக்குக் குறைவான வீரர்கள் மட்டுமே ஓர் அணியில் நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் (அவர்களில் 7 வீரர்கள் இந்தியர்கள்), அந்த ஆட்டம் ஒத்திவைக்கப்படும். இது சாத்தியமில்லை என்றால் ஐபிஎல் தொழில்நுட்பக் குழு ஆட்டம் குறித்த முடிவை எடுக்கும். 

* ஓவ்வொரு அணிக்கும் இரு டிஆர்எஸ் முறையீடு வழங்கப்படும். தற்போது ஒரு வாய்ப்பு தான் அளிக்கப்படுகிறது. 

* சர்வதேச கிரிக்கெட்டில் எம்.சி.சி. அறிமுகம் செய்யவுள்ள விதிமுறை இது. ஐபிஎல்-லிலும் நடைமுறைக்கப்படுத்தப்படுகிறது.  ஒரு வீரர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கும்போது கேட்ச் பிடிக்கும் முன்பு மறுமுனையில் இருந்த பேட்டர் மறுபக்க கிரிஸூக்குச் சென்றால் அவரால் அடுத்தப் பந்தை எதிர்கொள்ள முடியும். இந்த விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. இப்போது புதிய பேட்டர் தான் அடுத்தப் பந்தை எதிர்கொள்ள வேண்டும். ஒருவேளை ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு பேட்டர் ஆட்டமிழந்தால் மட்டுமே மறுமுனையில் உள்ள பேட்டர், அடுத்த ஓவரின் ஆரம்பத்தில் முதல் பந்தை எதிர்கொள்ளலாம்.

* நாக் அவுட் ஆட்டங்களில் சூப்பர் ஓவரை முடிக்க முடியாமல் போனால், லீக் சுற்றில் எந்த அணி முன்னிலை பெற்றதோ அந்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும். 

ஐபிஎல் போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணேவில் நடைபெறவுள்ளன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. குரூப் ஏ-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி-வில் சென்னை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே அணி - மும்பை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. (2022 ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைந்துள்ளன.)

இந்தியா முழுக்க கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மஹாராஷ்டிரத்தில் நடைபெறும் ஐபிஎல் 2022 போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. முதலில் ஏப்ரல் 15 வரை 25% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும், அதன்பிறகு கரோனா பரவலின் பாதிப்பைக் கொண்டு கூடுதல் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க பிசிசிஐயும் மஹாராஷ்டிர அரசும் முடிவு செய்யும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.



Read in source website

நேட்டோவில் இணையப் போவதில்லை என்பதை உக்ரைன் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய கூடாது என ரஷிய அதிபர் புதின் தெரிவித்து வந்தார். இதனை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கான அனைத்து முயற்சிகளையும் உக்ரைன் அதிபர் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், ரஷிய அதிபரின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷியாவின் முப்படைகளும் கடந்த 20 நாள்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும், மிகப் பெரிய அணு நிலையங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முனைப்பில் ரஷிய படைகள் வேகமாக முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், நேட்டோவில் இணையப் போவதில்லை என்ற உண்மையை உக்ரைன் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என உக்ரைன் அதிபர் தெரிவித்திருப்பதாக வெளியிட்டுள்ளனர்.



Read in source website

சென்னை: மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தொடக்கக் கல்வி துறைக்கு வட்டாரக் கல்வி அதிகாரிகளாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 95 பேர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர். சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சமூக, பொருளாதார அடிப்படையிலான அரசின் நலத் திட்டங்களை வழங்கும் நோக்கில்தான் பள்ளிகளில் சாதி விவரம் கேட்கப்படுகிறது. தவிர, சாதி விவரத்தை சொல்வது கட்டாயம் அல்ல. விருப்பம் இல்லாவிட்டால், சொல்ல வேண்டாம்.

அதேபோல, மாணவிகளிடம் மாதவிலக்கு பற்றிய விவரங்கள் கேட்கப்படுவதையும் சர்ச்சை ஆக்குகின்றனர். மாணவிகளின் உடல்நலம் தொடர்பாக சுகாதாரத் துறை பல்வேறு விவரங்களை கேட்கிறது. அதற்காகவே அதுபற்றிய விவரங்கள் கேட்கப்படுகின்றன. இனிமேல் இத்தகைய விவரங்கள் கேட்பது தவிர்க்கப்படும்.

புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை எந்த வகையிலும் தமிழக அரசு எடுத்துக்கொள்ளவில்லை. மாணவர்களுக்கு பயன்படும் வகையில் புதிய திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகிறோம். 3-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு, குலக்கல்வி முறை, இருமொழிக் கொள்கை பிரச்சினை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி, அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் - செயலர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



Read in source website

சென்னை: தேசிய அளவிலான இந்தியா ஸ்கில்ஸ் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக இளைஞர்களை பாராட்டி ஊக்கத் தொகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி னார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய அளவில் அனைத்து மாநிலங்களுக்கான திறன் போட்டிகள், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தியா ஸ்கில்ஸ் இறுதிப் போட்டிகள்கடந்த ஜன.6 முதல் 10-ம் தேதிவரை டெல்லியில் நடத்தப்பட்டது. தமிழகத்தின் சார்பில் துறைவாரியாக பல நிலைகளில் தேர்வு செய்யப்பட்ட 36 பேர், பல்வேறு திறன் போட்டிகளில் பங்கேற்றனர். இவர்கள் இதுவரை இல்லாத வகையில் 2 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம், 5 சிறப்புப் பதக்கம் என மொத்தம் 23 பதக்கங்களை வென்றது இதுவே முதல் முறையாகும். இப்போட்டிகளில் வென்றவர்களை ஊக்குவிக்கும் வகையில்,அவர்களுக்கு ஊக்கத் தொகைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முத்லவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தங்கப்பதக்கம் வென்ற ஏ.அனுஸ்ரீ, சுபாசிஸ் பால் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம், வெள்ளிப்பதக்கம் வென்ற எம்.காளிராஜ், சி.கார்த்தி, எஸ்.தாட்சாயணி, பி.வி.சரஸ்வதி, ஆர்.ஜெ.பிரகதீஸ்வரன், எஸ்.விஷ்ணுபிரியா ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம், வெண்கலப் பதக்கம் வென்ற எம்.ஜெ.அபர்ணா, பி.லோகேஷ், கே.அஜய் பிரசாத், வி.லோகேஷ், எஸ்.ஜெகன், என்.ஆர். பிரகதீஷ், ஆர்.தினேஷ் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்கள் பலர் தேர்வு செய்யப்பட்டு, ஸ்கில் ஒலிம்பிக்ஸ் எனப்படும் உலகஅளவிலான திறன் போட்டிகளில் பங்குபெற உள்ளனர். இப்போட்டிகள் வரும் அக்டோபரில் சீனாவின் ஷாங்காய் நகரில் நடக்க உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.28.08 கோடியில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகள், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.56.48 கோடியில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு கட்டமைப்புகள் ஆகியவற்றையும் காணொலிகாட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், சி.வி.கணேசன், சிவ.வி.மெய்யநாதன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, இளைஞர் நலத்துறை செயலர் அபூர்வா,தொழிலாளர் நலத்துறை செயலர்ஆர்.கிர்லோஷ் குமார், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் - செயலர் ஆனந்தகுமார்,திறன் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் இன்னசன்ட் திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Read in source website

புதுடெல்லி: மத்திய அரசின் இஷரம் (e-SHRAM) இணையத்தில் பதிவு செய்தமையால் பிரதமர் வேலைவாய்ப்பு நலத்திட்டங்களில் பலன்பெறும் அமைப்புசாரா தொழிலாளர்கள் 26.5 கோடி உள்ளதாக மக்களவையில் மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சரான ஸ்ரீராமேஷ்வர் டெலி தெரிவித்தார்.

இதன் மீதான ஒரு கேள்வியை நேற்று மாநிலங்களவையில் அதிமுகவின் எம்.பி.யான பி.ரவீந்தரநாத் எழுப்பியிருந்தார். அதில் அவர், பிரதமர் நலத்திட்டங்களின் உதவிபெற கடந்த ஆகஸ்டில் துவங்கிய இஷரம் இணையத்தில் பதிவுசெய்த அமைப்புசாரா தொழிலாளர்கள் எண்ணிக்கை குறித்தும், கேட்டிருந்தார். குறிப்பாக இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை குறித்தும் தேனி மக்களவை எம்.பி.,யான ரவீந்திரநாத் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சரான ஸ்ரீராமேஸ்வர் டெலி அளித்த பதிலில், "இஷரம் இணைய பதிவானது, தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வழங்குவதை எளிதாக்குகிறது. இதில், கடந்த மார்ச் 8 ஆம் தேதியின் நிலவரப்படி, 26.50 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

தகுதியுடைய பதிவு செய்யப்பட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் தற்செயலான காப்பீட்டுத் திட்டத்தின் பலனைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள். பிரதமர் பாதுகாப்பு மருத்துவ நலத்திட்டம் (பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா) மூலம் ஒரு வருடத்திற்கு ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகள் இலவசம். மேலும், இவர்களில் தொழிலாளர்கள் மற்றும் வர்த்தர்களுக்கு பிரதமர் ஓய்வூதியத் திட்டம் (பிரதான் மந்திரி ஷ்ரமியோகி மந்தன்) மூலம், பலன்களைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள்.

தற்போது, சமூகப்பாதுகாப்பு மற்றும் நலன்புரியும் திட்டங்களின் பலன்களைப் பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த தரவு எதுவும் இந்த இணையதளத்தில் பராமரிக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.

அதிமுக எம்.பி ரவீந்திரநாத்தின் கேள்விக்கானப் பதிலும் மத்திய இணை அமைச்சர் டெலி, மாநிலவாரியான பதிவு விவரங்களையும் இணைத்துள்ளார்.

அதில், இஷரம் இணையத்தில் மிக அதிகமாகப் பதிவு செய்தவர்களாக உத்தரப் பிரதேசத்தில் 8,22,91,089 தொழிலாளர்கள் உள்ளனர். இதன் அடுத்த எண்ணிக்கையில் பிஹாரின் தொழிலாளர்கள் 2,77,37,173 இடம் பெற்றுள்ளனர். மூன்றாவதாக 2,52,93,972 மேற்குவங்க மாநிலத்தின் தொழிலாளர்களும் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இவர்களது எண்ணிக்கை 67,53,461 என உள்ளது.



Read in source website

பெங்களூரு: பெங்களூரு டெஸ்டில் அஸ்வின் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 6 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயினை (439 விக்கெட்கள்) பின்னுக்குதள்ளி அந்த இடத்தை கைப்பற்றினார்.

இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் 442 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் நாயகன் ரிஷப் பண்ட்:

இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 252 ரன்களும், இலங்கை 109 ரன்களும் எடுத்தன. 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 68.5 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 303 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

447 ரன்கள் இலக்குடன் பேட்செய்த இலங்கை அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 59.3 ஓவர்களில் 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் திமுத் கருணாரத்னே 174 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 107 ரன்களும், குஷால் மெண்டிஸ் 54 ரன்களும் சேர்த்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 4, பும்ரா 3, அக்சர் படேல் 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 238 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

மொஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணிஇன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. முதல் இன்னிங்ஸில் 92 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 67 ரன்களும் விளாசிய ஸ்ரேயஸ் ஐயர் ஆட்ட நாயகனாக தேர்வானார். தொடர் நாயகனாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டார். அவர், 2 டெஸ்டிலும் சேர்த்து 185 ரன்கள் எடுத்திருந்தார்.



Read in source website

புதுடெல்லி: உக்ரைன் போரைத் தொடர்ந்து புதிய திருப்பமாக ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஆயத்தமாகி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது .

கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் ஒரு பீப்பாய் 100 டாலர், 110 டாலர் என விலை உயர்ந்தது. முன்பேர வர்த்தகத்தில் 120 டாலர், 130 டாலர் என தொடர்ந்து ஏற்றம் கண்டது. உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24-ம் தேதி தாக்குதல் தொடங்கிய பிறகு தற்போது 40% வரை உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யாவின் அனைத்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் படிப்படியாக நிறுத்த இருப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.

கச்சா எண்ணெய்; கோலோச்சும் நாடுகள்

இந்த அறிவிப்பு கச்சா எண்ணெய் விலையை மேலும் உயர்த்தும் என அச்சம் எழுந்துள்ளது. உலக அளவில் மூன்று மிகப்பெரிய நாடுகள் கச்சா எண்ணெய் சந்தையில் கோலோச்சுகின்றன.

உலக அளவில் கச்சா எண்ணெய் உலகில் அமெரிக்கா 18 முதல் 19% வரை பங்குகளை கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா நாடுகள் தலா 12% பங்குகளைக் கொண்டுள்ளன.

ரஷ்யாவின் உலக அளவிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி 12 சதவீதம் ஆகும். ஒவ்வொரு நாளும் உலக சந்தையில் கிட்டத்தட்ட 5 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்களை ரஷ்யா விநியோகம் செய்கிறது. குறிப்பாக ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா அதிகஅளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்கிறது.

ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா முன் வந்துள்ளது. பொருளாதார தடை காரணமாக இந்தியா உட்பட மற்ற நாடுகள் இதனை வாங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

அமெரிக்கா எச்சரிக்கை

இதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா ஏற்கெனவே எச்சரித்துள்ளது. ஆனால் சீனா இந்த கச்சா எண்ணெயை வாங்க தயார் என அறிவித்தது.

இந்தநிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்வ வாங்க இந்தியாவும் ஆயத்தம் ஆகி வருகிறது. முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதனை இந்தியா வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

அமெரிக்க செனட் உறுப்பினர் வெளியிட்டுள்ள கருத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளது. அதில் ‘‘ரஷ்யாவிடம் இருந்து இந்தியா முடிந்தவரை விலகி இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் வற்புறுத்தினர். பொருளாதாரத் தடைகள் மூலம் ரஷ்யாவை தனிமைப்படுத்த மேற்கத்திய நாடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்திய அதிகாரிகள் பேச்சு

ஆனால் கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருட்களை தள்ளுபடியில் வாங்குவதற்கான ரஷ்ய சலுகையை இந்தியா ஏற்க வாய்ப்புண்டு. இரண்டு இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை உறுதி செய்துள்ளனர். இந்தியா அதன் முக்கிய வர்த்தக கூட்டாளியுடன் தொடர்ந்து வணிகம் செய்ய விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயுதங்கள், வெடிமருந்துகள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் என அனைத்திற்கும் ரஷ்யாவை இந்தியா அதிகம் நம்பியிருக்கிறது’’ என செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் போரில் இந்தியா ஏற்கெனவே நடுநிலை வகித்து வருகிறது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்பு நடந்தபோது இந்தியா நடுநிலை வகித்து புறக்கணித்தது.



Read in source website

பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு செல்லும் கர்நாடக நீதிமன்றம்; ஹிஜாப் அணிவது சட்டபூர்வ பாதுகாப்பில் இல்லை என்ற கூறிய நீதிமன்றம் எழுப்பிய 4 முக்கிய கேள்விகள் இங்கே

Explained: Four questions in Karnataka HC’s hijab judgment, and why the court upheld Govt’s position: கல்வி நிறுவனங்களில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 15) உறுதி செய்தது. தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி மற்றும் நீதிபதிகள் கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் காசி எம் ஜெய்புன்னிசா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஹிஜாப் அணிவதற்கான உரிமை அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்படவில்லை என்று கூறியது.

பிப்ரவரியில் 11 நாள் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளை ஒருங்கிணைத்த கர்நாடக உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தைப் பற்றிய முழுமையான பார்வையை எடுத்து நான்கு பரந்த கேள்விகளை உருவாக்கியுள்ளதாகக் கூறியது. நான்கு கேள்விகளுக்கும் உயர் நீதிமன்றம் எதிர்மறையாக பதிலளித்தது.

மத சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்யும் ”அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் ஹிஜாப்/தலை முக்காடு அணிவது பாதுகாக்கப்பட்ட இஸ்லாமிய நம்பிக்கையின் ‘அத்தியாவசியமான மத நடைமுறையின்’ ஒரு பகுதியா?”

ஹிஜாப் அணிவதற்கு “குர்ஆன்-ல் எந்த உத்தரவும்” இல்லை என்றும், ஹிஜாப் அணிவது “மதம் சார்ந்தது” அல்ல என்றும் நீதிமன்றம் கூறியது. நீதிமன்றத்தின் விசாரணை, ஹிஜாப் அணிவது மிகவும் இன்றியமையாததா, அதை பின்பற்றப்படாவிட்டால், ஒருவர் மதத்தை கடைப்பிடிக்க முடியாதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

“ஹிஜாப் அணிவதாகக் கூறப்படும் நடைமுறையை கடைபிடிக்காவிட்டால், ஹிஜாப் அணியாதவர்கள் பாவிகளாகிவிடுவார்கள், இஸ்லாம் அதன் மகிமையை இழந்துவிடும், அது ஒரு மதமாக இல்லாமல் போய்விடும் என்பது இல்லை” என்று நீதிமன்றம் கூறியது.

கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் உட்பட, ஹிஜாப் தொடர்பான பிற உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள், அவை தற்போதைய வழக்கிற்குப் பொருத்தமற்றவை என்று பெஞ்ச் முடிவு செய்தது.

ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் இன்றியமையாத மத நடைமுறை என்பதை நிரூபிக்க மனுதாரர்கள் போதுமான ஆதாரங்களை முன்வைக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியது. வழங்கப்பட்ட தகவல்கள் “மிகவும் குறைவானது” என்றும், மனுதாரர்களின் கருத்துக்கள் “தெளிவற்றவை” என்றும் பெஞ்ச் கூறியது.

“ரிட் மனுக்களில் அத்தியாவசியத் தேவைகள் இல்லை என்றும், மனுதாரர்கள் தங்கள் வழக்கை நிரூபிப்பதற்கான போதுமான ஆதாரங்களை வழங்கவில்லை என்றும் பிரதிவாதிகள் வாதிடுவதில் நியாயம் உள்ளது. நமக்கு முன்னால் உள்ள தகவல்கள் மிகவும் குறைவானது மற்றும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தில், மனு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தெளிவற்றதாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது. மனுதாரர்கள் தரப்பில் மேற்கோள் காட்டப்பட்ட சூராக்களின் தாக்கங்களை விளக்கி மௌலானாக்கள் யாரேனும் சத்தியம் செய்த பிரமாணப் பத்திரம் எங்களிடம் சமர்பிக்கப்படவில்லை” என்று நீதிமன்றம் கூறியது.

“மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருப்பதால், அரசியலமைப்பு பிரிவுகள் 19(1)(a) (அதாவது, கருத்துச் சுதந்திரம்) மற்றும் 21-ன் (அதாவது தனியுரிமை) கீழ் பள்ளிச் சீருடையை (கல்வி நிறுவனங்களால்) பரிந்துரைப்பது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லையா… “:

மாணவர்கள் அணிய வேண்டிய ஆடையை பள்ளிகள் பரிந்துரைக்கலாம் என்பது நன்கு நிறுவப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியது.

“அனைத்து முன்னேறிய நாடுகளிலும், பொதுக் கொள்கையின்படி, பள்ளி அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாணவர்களின் நடத்தையை நிர்வகிக்கும் நியாயமான விதிமுறைகளை உருவாக்கலாம் மற்றும் மாணவர்கள் எந்த வகையான ஆடைகளை அணிய வேண்டும் அல்லது அவர்களின் தனிப்பட்ட தோற்றத்திற்கு நியாயமான விதிமுறைகளை உருவாக்கலாம் என்று ஒரு பெரும் சட்டக் கருத்து உள்ளது,” என்று நீதிமன்றம் கூறியது.

மனுதாரர்களின் வாதமானது, மாணவிகள் கல்வியைத் தொடர, குறிப்பிட்ட ஆடைக் குறியீட்டிற்கு ஏற்றவாறு கட்டமைப்பு மற்றும் நிறத்தில் ஹிஜாப் அணிய மாணவிகளை அனுமதிப்பது குறித்ததாக இருந்தாலும், ஆடைக் குறியீட்டை பரிந்துரைக்கும் உரிமை பள்ளி நிர்வாகத்திடம் உள்ளதாக நீதிமன்றம் வலியுறுத்தியது.

“இந்த வாதத்தால் நாங்கள் ஈர்க்கப்படவில்லை. காரணங்கள் தேடுவது வெகு தொலைவில் இல்லை: முதலாவதாக, அத்தகைய முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், பள்ளி சீருடை சீராக இருப்பதை நிறுத்துகிறது. பெண் மாணவர்களில் இரண்டு பிரிவுகள் இருப்பார்கள், அதாவது ஹிஜாப் அணிந்த சீருடை அணிபவர்கள் மற்றும் அதை அணியாமல் இருப்பவர்கள். அது விரும்பத்தகாத ‘சமூக-பிரிவினை’ உணர்வை நிறுவும். மதம் மற்றும் நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து மாணவர்களிடையேயும் ஆடைக் குறியீடு கொண்டு வர வடிவமைக்கப்பட்ட ஒரே மாதிரியான உணர்வையும் இது புண்படுத்துகிறது” என்று நீதிமன்றம் “நியாயமான மாற்றங்கள் செய்யும் கொள்கை” மீது கூறியது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் முக்காடு அணிவதை அனுமதித்ததற்கு, மத்திய அரசை மாநிலங்கள் பின்பற்றத் தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியது. “கேந்திரிய வித்யாலயாக்கள் சீருடை/ஆடைக் கட்டுப்பாடு என எதை பரிந்துரைக்கிறது என்பது மத்திய அரசின் கொள்கைக்கே விடப்பட்டுள்ளது. நம்முடையது ஒரு வகையான கூட்டாட்சி அமைப்பு…, கூட்டாட்சி அலகுகள், அதாவது மாநிலங்கள் மத்திய அரசின் கோட்டிற்கு அடிபணியத் தேவையில்லை, ”என்று அது கூறியது.

மேலும் “…மத அடையாளங்களை வெளிப்படுத்தும், பாகுவா அல்லது நீல நிற சால்வை போன்ற வேறு எந்த ஆடைகளையும் சீருடையில் இருந்து விலக்க வேண்டும் என்று தனியாக கூற வேண்டிய அவசியமில்லை” என்று நீதிமன்றம் கூறியது.

“எந்த நோக்கமும் இல்லாமல் வெளியிடப்பட்டதால் 05.02.2022 தேதியிட்ட அரசு ஆணை தகுதியற்றதா என்பதைத் தவிர… அரசாணை வெளிப்படையாக தன்னிச்சையானது, எனவே அரசியலமைப்பின் 14 & 15 வது பிரிவுகளை மீறுகிறதா” (சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் பாகுபாடு காட்டாதது):

கர்நாடக கல்விச் சட்டம், 1983-ன் கீழ் பிப்ரவரி 5-ம் தேதி கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவில், மாணவிகள் ஹிஜாப் அணிவதைக் கல்வி நிறுவனங்கள் கட்டுப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. “ஒற்றுமை” மற்றும் “ஒருமைப்பாடு” ஆகியவற்றுடன், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தலையில் முக்காடு அணிய அனுமதிக்காததற்கு “பொது ஒழுங்கு” என ஒரு காரணத்தை மேற்கோள் காட்டியது.

மாணவிகள் ஹிஜாப் அணிவது எப்படி பொது ஒழுங்குப் பிரச்சினையாக மாறும் என்பதை காட்ட வேண்டும் என்று மனுதாரர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். “இது ஒரு மத நடைமுறையில் ஆபத்தான ஆயுதங்களை அணிவகுத்துச் செல்லும் பொதுக் கூட்டத்தை உள்ளடக்கிய ஒரு வழக்கு அல்ல…” என்று மனுதாரர்களின் வழக்கறிஞர் தேவதத் காமத் வாதிட்டார்.

ஆனால், அரசு உத்தரவில் உள்ள வார்த்தைகளை உண்மையில் அர்த்தப்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் பரிந்துரைத்தது.

“அரசு உத்தரவில் பயன்படுத்தப்படும் ‘பொது ஒழுங்கு’ போன்ற சில சொற்கள் அரசியலமைப்பு அல்லது சட்டங்களில் பயன்படுத்தியவையாகக் கருத முடியாது என்பதை நாங்கள் அவசரமாகச் சேர்க்கிறோம். சட்டத்தின் வாசகக் கட்டமைப்பிலும், சட்டப்பூர்வ உத்தரவை கைகளில் உள்ளதாக அறிவிப்பதிலும் கடல் அளவு வேறுபாடு உள்ளது. சட்டப்பூர்வ கொள்கைகளை உரையாக வடிவமைக்கும் போது, ​​சில சமயங்களில் அரசாங்க அதிகாரிகளிடம் சொற்கள் பற்றாக்குறை உள்ளது,” என்று நீதிமன்றம் கூறியது.

ஆஸ்கார் வைல்டை மேற்கோள் காட்டி, சொர்க்கத்தில் கூட முன்னேற்றத்திற்கு இடம் உள்ளது என்று நீதிமன்றம் கூறியது. “தடுக்கப்பட்ட உத்தரவை நன்கு வரைவு செய்திருக்கலாம்…” என்ற அரசாங்கத்தின் சமர்ப்பிப்புடன் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

அரசாங்கத்தால் மேற்கோள் காட்டப்பட்ட பிற உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகள் விகிதத்தை வகுக்காததால், அரசாங்க உத்தரவு பொருள் ஒழுங்கீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் வாதிட்டனர், அதை அரசாங்கம் தவறாகக் கூறியது. அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை ஏற்கனவே வேறொரு இடத்தில் விவாதித்ததாக நீதிமன்றம் பதிவு செய்தது (பத்தி X, “ஹிஜாப் ஒரு அத்தியாவசியமான மதப் பழக்கம் குறித்த மற்ற உயர் நீதிமன்றங்களின் கருத்துக்கள்”), “எனவே, இங்கே விவாதிக்க வேண்டிய தேவையில்லை” என்று நீதிமன்றம் கூறியது.

எவ்வாறாயினும், நீதிமன்றம் கூறியது, “அரசு உத்தரவானது சட்டத்தில் நிலையானதாக இருந்தால், அதை நாங்கள் நம்புகிறோம், எனவே சவால் செய்யப்பட்ட மனு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக தோல்வியடையும்: அரசு ஆணையின் பொருள் பள்ளி சீருடைக்கான பரிந்துரை. 1983 ஆம் ஆண்டு சட்டம் மற்றும் அதன் கீழ் வெளியிடப்பட்ட விதிகளின் கீழ் கல்வி நிறுவனங்களின் பரிந்துரைக்கும் அதிகாரம் குறித்து நாங்கள் ஏற்கனவே அறிந்துள்ளோம். சட்டத்தின் 133(2) பிரிவானது, பரந்துபட்ட வார்த்தைகளில் கூறப்பட்டுள்ளதால், எந்தவொரு வழிகாட்டுதல்களையும் வெளியிடுவதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது… இதில் பள்ளி ஆடைக் குறியீட்டை பரிந்துரைக்கும் அதிகாரமும் உள்ளது.

ஹிஜாப் சர்ச்சை முதலில் தொடங்கிய உடுப்பியில் உள்ள கல்லூரியின் விரிவுரையாளர்கள் மற்றும் முதல்வர் மீது ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா:

இது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) அரசியல் அமைப்பான SDPI உடன் தொடர்புடைய வழக்கறிஞர் தாஹிர் முகமது தாக்கல் செய்த ரிட் மனு ஒன்றில் எழுப்பப்பட்ட ஒரு வாதமாகும். சீருடைகளை பரிந்துரைக்க தடை விதிக்கும் துறை ரீதியான வழிகாட்டுதல்களை மீறியதற்காகவும், விரோத போக்கை கடைப்பிடித்ததற்காகவும் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்தது: “மனு வெளிப்படையாகத் தவறாக வரைவு செய்யப்பட்டுள்ளது மற்றும் இந்த வகையான தீவிரமான கோரிக்கைகளைக் கருத்தில் கொள்வதற்குத் தேவையான இணக்கம் மற்றும் ஒத்திசைவு மனுக்கள் இல்லை. துறை ரீதியான வழிகாட்டுதல்கள் சட்டத்தின் பலம் இல்லை என நாங்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளோம். எனவே, பிரதிவாதிகள் (கல்லூரி நிர்வாகத்தினர்) அதை தொலைதூரத்தில் கூட மீறுகிறார்களா என்ற கேள்வி எழாது.



Read in source website

ரத்னகிரியில் 2011ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் 38 டிகிரி வெப்பநிலை பதிவாகியது.

மும்பை உள்பட கொங்கன் பிராந்தியத்தில் இந்த மார்ச் மாதம் ஏன் வெய்யில் சுட்டெரிக்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.

ஏன் அனல் காற்று வீசுவது?

பொதுவாக 40 டிகிரி செல்சியல் வெப்ப நிலை பதிவானாலே கடுமையான அனல் காற்று வீசும். மலைப் பிராந்தியங்களில் 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானலே அனல் காற்று கடுமையாக இருக்கும்.

கடலோரப் பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி ஆகும். அதிகபட்ச வெப்பநிலை 4.5 முதல் 6 டிகிரி வரை இருக்கும் போது, ​​இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அனல் காற்று குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது.

உதாரணமாக, ஒரு பகுதியின் இயல்பான வெப்பநிலை 40 டிகிரியாகவும், உண்மையான பதிவு செய்யப்பட்ட வெப்பநிலை 45 டிகிரியாகவும் இருந்தால், அந்த இடம் அனலாக இருக்கும்.

அதேபோல, ஒரு பிராந்தியத்தில் இயல்பிலிருந்து புறப்படும் அதிகபட்ச வெப்பநிலை 6.4 டிகிரிக்கு மேல் இருக்கும்போது கடுமையான அனல் காற்று வீசும் என எச்சரிக்கப்படுகிறது.

இதுதவிர, எந்த நாளிலும் உள்ளூரில் 45 டிகிரி மற்றும் 47 டிகிரிக்கு மேல் பதிவானால், வானிலை ஆய்வு மையம் முறையே அனல் காற்று மற்றும் கடுமையான அனல் காற்று என அறிவிக்கிறது.

இந்தியாவில், அனல் காற்று மார்ச் முதல் ஜூன் வரை ஏற்படும். எப்போதாவது ஜூலையில் ஏற்படும். உச்ச அனல் காற்று மே மாதத்தில் பதிவாகியுள்ளன.

பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் அனல் காற்றால் பாதிக்கப்படும் மாநிலங்கள் ஆகும்.

தமிழகம் மற்றும் கேரளத்தில் எப்போதாவது அனல் காற்று வீசும். குஜராத்தின் அருகிலுள்ள சௌராஷ்டிரா-கட்ச் பகுதிகளில் நிலவும் அனல் காற்றின் நேரடி தாக்கம் இருப்பதால் தான். மும்பை உள்ளிட்ட கொங்கன் பிராந்தியத்தில் தற்போது அனல் காற்று வீசி வருகிறது.

“வடமேற்கு இந்தியாவில் இருந்து வெப்பமான மற்றும் வறண்ட காற்று கொங்கனின் சில பகுதிகளை அடைகிறது. கூடுதலாக, மகாராஷ்டிர கடற்கரையில் கடல் காற்று மெதுவாக வீசுவது மற்றும் தெளிவான வானிலைகள் சேர்ந்து இத்தகைய வெப்பமான சூழலை ஏற்படுத்துகிறது”என்று மும்பையின் பிராந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறினார்.

மார்ச் மாதத்தில் இந்த வெப்பம் வழக்கத்திற்கு மாறானதா?

மும்பையில் உள்ள சான்டாக்ரூஸ் ஆய்வகத்தில் கடந்த திங்கள்கிழமை 39.6 டிகிரி பதிவானது. ரத்னகிரியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 40.2 டிகிரியைத் தொட்டது.

ஆனால் காலநிலை அடிப்படையில், இது அசாதாரணமானது அல்ல, ஏனெனில் மகாராஷ்டிராவின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலைகள் மார்ச் மாதத்தில் படிப்படியாக உயரத் தொடங்குகின்றன என்கிறார் வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர்.

குறிப்பாக, கொங்கனில் இம்மாதம் பல நாட்கள் 35 டிகிரிக்கு அதிகமாக வெப்ப நிலை பதிவானது. 2011, 2019, 2018, 2015 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் 40 டிகிரிக்கு மேல் மும்பையில் வெப்ப நிலை பதிவானது. 2013 ஆண் ஆண்டில் தான் அதிகபட்சமாக 41.7 டிகிரி வெப்பநிலை பதிவாகியது.

ரத்னகிரியில் 2011ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் 38 டிகிரி வெப்பநிலை பதிவாகியது. 1982 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் அதிகபட்சமாக 40.6 டிகிரி வெப்பநிலை பதிவானது.

முன்னறிவிப்பு என்றால் என்ன?
கட்ச் – செளராஷ்டிராவில் மார்ச் 16 வரை அனல் காற்று கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குஜராத்தின் கொங்கன், குறிப்பாக மும்பை உள்ளிட்ட வட கொங்கன் மாவட்டங்களில் வெப்பம் மற்றும் வறண்ட காற்று தொடர்ந்து வீசுவதால், அதிகபட்ச வெப்பநிலை அடுத்த இரண்டு நாட்களுக்கு குறைந்தபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



Read in source website

81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே, சவுதி அரேபியாவுடனான பேச்சுவார்த்தையை ஈரான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

சவுதி அரேபியாவில் சமீபத்தில் வரலாற்றில் மிகப்பெரிய எண்ணிக்கையாக ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில் கொலைக் குற்றவாளிகள், அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளனர். ஏழு ஏமன் நாட்டினரும், ஒரு சிரியா நாட்டினரையும் தவிர மற்ற அனைவரும் சவுதி அரேபியர்கள் ஆவர்.

இந்த மரண தண்டனை விதிக்கப்பட்ட அடுத்த நாளே, ஈரான் அரசு சவூதி அரேபியாவுடனான பேச்சுவார்த்தைகளை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு நெருக்கமான ஒரு செய்தி நிறுவனமான நூர் நியூஸ் வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது காரணம் அறிவிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் யார்?

சீனா, ஈராக், வியட்நாம், ஈரான் ஆகிய நாடுகளை போல் சவுதி அரேபியாவும் உலகில் அதிக எண்ணிக்கையிலான மரணதண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. சவுதி அரேபியா இதுவரை 800 க்கும் மேற்பட்ட மரணதண்டனைகளை நிறைவேற்றியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் மட்டும் 184 மரணதண்டனைகள் நிறைவேற்றியுள்ளது.

சமீபத்திய 81 பேர் மரண தண்டனை குறித்து செய்தி வெளியிட்ட சவுதி பிரஸ் ஏஜென்சி, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி ஆண்கள், பெண்கள்,குழந்தைகளைக் கொன்றவர்களும், ஐஎஸ்ஐஎஸ், அல்-கொய்தா மற்றும் ஹூதிகள் உள்ளிட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்களும் ஆவர்.

இது தவிர, கடத்தல், பாலியல் வன்புணர்வு, சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கடத்துதல் போன்ற குற்றங்களின் தண்டனைகளும் அடங்கும் என தெரிவித்துள்ளது.

ஷியா-சன்னி பிரிவு

சவுதி அரேபியா – ஈரான் இடையிலான உறவில் மத வேறுபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அதேசமயம் சவுதி அரேபியாவில் சன்னி முஸ்லிம்கள் உள்ளனர். உலகளவில் அதிக எண்ணிக்கையில் சன்னி பிரிவினரே வாழ்கின்றனர்.

இந்த மத வேறுபாடுகள் மத்திய கிழக்கின் எஞ்சிய பகுதிகளிலும் ஊடுருவியுள்ளன. சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகள், சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களின் மக்கள்தொகையை நம்பியுள்ளன.

உறவும் பதற்றமும்

இரு நாடுகளுக்கும் இடையிலான வரிசலின் தொடக்கம் குறைந்தது நான்கு தசாப்தங்களுக்கு முந்தையவை ஆகும். சவுதி அரேபியாவை சேர்ந்த முஸ்லீம் உலகின் தலைவர், அதே பதவிக்கு போட்டியிடும் மற்றொரு தலைவரை சந்திக்க வேண்டியதாக இருந்தது.

1979 இல், ஈரானியர்கள் புரட்சியின் போது, சவூதி அரேபிய முடியாட்சி ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உருவாக்கத்தால் அச்சுறுத்தப்பட்டது. அதுவரை முஹம்மது நபி பிறப்பிடமான மெக்கா மற்றும் அவர் அடக்கம் செய்யப்பட்ட மதீனா இடங்கள் அடங்கிய சவுதி அரேபியாவே முஸ்லிம் உலகின் தலைநகரமாக கருதப்பட்டது. ஆனால், ஈரானில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக மாற்று தலைநகரம் உருவாக வழிவகுத்தது.

தொடர்ந்து, ஈரான் மீது ஈராக் படையெடுப்பை தொடங்கியதையடுத்து, அங்கு போர் உருவானது. இந்த நேரத்தில், சவுதி அரேபியா ஈராக்கை ஆதரித்தது. இது, ஈரானுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. 2003 இல், ஷியா பிரிவினர் அதிகளவில் வசிக்கும் ஈராக் மீது அமெரிக்க படையெடுப்பு நடத்தியபோது, சன்னி சிறுபான்மை உறுப்பினரான சதாம் ஹுசைனை நீக்கப்பட்டார். அதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஷியாக்கள் இடத்தை ஆக்கிரமிக்க வாய்ப்பளித்தது.

2010 டிசம்பரில் அதிகாரிகளின் துன்புறுத்தலால் தீக்குளித்த துனிசிய பழங்கள் விற்பனையாளரின் மரணம், ‘அரபு ஸ்பிரிங்ஸ்’ என்கிற புரட்சியை உருவாக்கியது. இது, மத்திய கிழக்கின் மற்ற பகுதிகளில் ஜனநாயக சார்பு புரட்சிகளுக்கு வழிவகுத்தது

ஆனால், 2003 இல், ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சியின் வீழ்ச்சி, சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டி உணர்வுகளை அதிகப்படுத்தியது.

உதாரணமாக, சன்னி பிரிவினர் பெரும்பான்மையான சிரியாவின் பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக்கு ஈரான் ஆதரவு தெரிவித்தது. அதேவேளையில், சவுதி அரேபியா அவரது சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டங்களை ஆதரித்தது.

2011 இல் ஷியா பெரும்பான்மையான பஹ்ரைனில் ஜனநாயக சார்பு போராட்டங்களை ஈரான் ஆதரித்தது, அப்போது, சவுதி அரேபியா தனது படைகளை ஹமாத் மன்னர் ஆட்சிக்கு அனுப்பி எதிரிகளை அழிக்க உதவியது.

2016ல் இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவு முடிவுக்கு வந்தது. அப்போது, ஷியா மதகுரு நிம்ர் அல் நிம்ரை மற்ற சில கைதிகளுடன் சவுதி அரேபியா தூக்கில்லிட்டது. அப்போது, தெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது சவூதி அரேபியாவை தூதரக ரீதியான உறவுகளையும் நிறுத்த வழிவகுத்தது.



Read in source website

போர் காரணமாக கருங்கடலில் உள்ள துறைமுகங்கள் மூடப்பட்டுவிட்டன. அதே சமயத்தில் காஸ்பியன் கடல் வழியாக ரஷ்ய சரக்கு கப்பல்கள் இயங்கவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் இந்த இரண்டு நாடுகள் தற்போது எந்த விதமான தானிய ஏற்றுமதியையும் மேற்கொள்ள முடியாது. இந்த வெற்றிடத்தில் பாதியை இந்திய விவசாயிகள் நிரப்ப முடியும்.

Export avenue for farmers : வரலாற்றில் நடைபெற்ற யுத்தங்கள் அனைத்திலும் வெற்றியாளர்களும், தோல்வி அடைந்தவர்களும் உண்டு. அதே போன்று யுத்தங்கள் வாயிலாக அதிக அளவில் பயன் அடைந்தவர்களும் உண்டு. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, இந்திய விவசாயிகள் தங்களின் ராபிப் பயிர்களை அறுவடை செய்யும் காலத்தில், தீவிரமாக நடைபெற்று வருகிறது. குளிர் – வசந்தகால விவசாயமான ராபிப் பயிர்களில் கோதுமை மட்டுமின்றி, கடுகு, மக்காச்சோளம் மற்றும் பார்லி போன்ற பயிர்களும் அறுவடை செய்யப்படுகிறது. தற்போது இந்த பயிர்களின் விலை அனைத்தும் உயர்ந்துவிட்டது. காரணம், தற்போது போர் நடைபெற்று வருவதால் கருங்கடல் வழியாக நடைபெற்று வந்த வர்த்தகம் தடை பட்டுவிட்டது. அதே போன்று ரஷ்ய வங்கிகள் அனைத்தும் சர்வதேச பணப்பரிமாற்ற அமைப்புகளில் இருந்து முழுமையாக முடக்கப்பட்டுவிட்டது.

இந்தியா ஏற்கனவே 2021-22ல் ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி வரையில் 6 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நிதி ஆண்டில் மொத்தமாக, முன்பு எப்போதும் இல்லாத வகையில் 7.5 மில்லியன் டன் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படலாம் என்றும் கூர்கானை தளமாக கொண்டு செயல்படும் கோனிஃபெர் கமாடிட்டிஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற விவசாய வர்த்தக ஆலோசனை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அமித் தக்கர் கூறியுள்ளார்.

அதே போன்று அரிசியின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் 14 மில்லியன் டன் பாஸ்மதி அல்லாத இதர அரிசி ரகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2020-21 நிதி ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட 13.1 மில்லியன் டன் அரிசியைக் காட்டிலும் இது கூடுதலானது. இந்த நிதி ஆண்டின் இறுதியில் 17 மில்லியன் டன் பாஸ்மதி அல்லாத அரிசி மற்றும் 4 மில்லியன் டன் பாஸ்மதி அரிசி ஆகியவற்றை ஏற்றுமதி செய்திருப்போம் என்று தானிய ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் ஓலம் அக்ரோ இந்தியா பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் துணைத் தலைவர் நிதின் குப்தா கூறியுள்ளார். 2013-14 காலகட்டத்திற்கு பிறகு தற்போது 3.5 முதல் 4 டன் வரை மக்காச்சோளம் ஏற்றுமதியும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் உள்ள மொத்தவிற்பனை சந்தையில் ஒரு குவிண்டால் கடகு ரூ. 6500 முதல் 6700 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இது ரூ. 5000 முதல் ரூ. 5200 வரை இருந்தது. தற்போது கடுகுக்கு அரசு வழங்கும் குறைந்த பட்ச ஆதரவு விலையே ரூ. 5050 ஆக உள்ளது. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் கடுகு விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இது நன்மை அளிக்கும்.

ஒரு குவிண்டால் பார்லி தற்போது ரூ. 2100 முதல் 2200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இது ரூ. 1300 முதல் ரூ. 1400 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் இதன் குறைந்த பட்ச ஆதரவு விலையானது ரூ. 1653 ஆகும். இந்த தானியம் அதிக அளவில் மதுபான உற்பத்தி நிலையங்களில் மால்ட் உற்பத்திகாக பயன்படுத்தப்படுகிறது. ராஜஸ்தான், உ.பி., மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் இவை உற்பத்தி செய்யப்படுகிறது.

மக்காச்சோளம் அனைத்து மண்டிகளிலும் குவிண்டாலுக்கு ரூ. 1900 முதல் ரூ. 2000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதன் விலை ரூ. 1200 முதல் ரூ. 1300 ஆக இருந்தது. அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ. 1870.

மக்காச்சோளத்திற்கு அதிக விலை கிடைக்கும் பட்சத்தில் பீகார் அதிக அளவில் பயன்பெறும் மாநிலமாக இருக்கும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மக்காச் சோளத்தில் 25% இம்மாநிலத்தில் உற்பத்தி ஆகின்றது. அதிலும் நான்கில் மூன்று பங்கு ராபி காலத்தில் சந்தைக்கு வருபவை. வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மக்காச் சோளத்தின் அளவு அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கும் மக்காசோளம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் பீகாரின் மக்காச்சோளத்திற்கு மேலும் நல்ல விலை கிடைக்கும். ப்ரேசில் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் அதிக அளவில் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டாலும் கூட ஜூன்/ஜூலை காலங்களில் தான் ஏற்றுமதிக்கு தயாராகும். ஆனாலும் கூட தென் அமெரிக்காவில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளின் துறைமுகங்களுக்கு வருவதைக் காட்டிலும், விசாகப்பட்டினம் அல்லது காக்கிநாடா மூலம் விரைவில் இதர நாடுகளுக்கு இந்தியா எளிதில் மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்துவிட இயலும்.

கோதுமைக்கான வாய்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது. குஜராத்தின் காந்தலா மற்றும் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ஒரு டன் 340 டாலர் முதல் 350 டாலருக்கு விற்பனை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஒரு டன் கோதுமையின் விலை ரூ. 26000 முதல் ரூ. 26775 வரை இருக்கும். இதற்கான அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 20,150 ஆக உள்ளது. துறைமுக கட்டணம், சேமிப்பு கட்டணம், லோடிங்க் கட்டணம் என்று ரூ. 1400-மும், போக்குவரத்துக்கு ரூ. 1500 முதல் 3000 வரையும், பேக்கிங், லோடிங் மற்றும் மண்டியில் இதர பணிகளுக்காக ரூ. 1600 முதல் ரூ. 2000 வரையிலும் கொடுக்கப்பட்ட பின்பும் கூட இந்த விலை ஒரு விவசாயிக்கு கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.

உயர்ந்து வரும் சர்வதேச விலைகள் இந்திய கோதுமைக்கான ஏற்றுமதி வாய்ப்புகளைத் திறந்துவிட்டன, அதனால் அரசாங்கம் இந்த முறை குறைந்த பட்ச ஆதரவு விலையில் கோதுமையை கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குஜராத், மகாராஷ்ட்ரா, கர்நாடகா அல்லது ம.பி., குஜராத் மாநிலங்களில் ஏற்றுமதி தேவை அதிகரித்து வருவதால் MSP- பிளஸ் விலையை உணர வாய்ப்புள்ளது. இது பொது கோதுமை இருப்புகளை குறைக்க உதவும், இது மார்ச் 1 அன்று 23.4 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடாந்த இரண்டு நிதி ஆண்டுகளிலும் முறையே 29.5 மெட்ரிக் டன் மற்றும் 27.5 மெட்ரிக் டன் இருப்பும் இருந்தது குறிப்பிடத்தக்கது. குறைந்த கொள்முதல் மற்றும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (இலவச தானியத் திட்டம்) இம்மாதத்துடன் முடிவடைவதால், மத்திய அரசின் உணவு மானியத்தில் அதற்கேற்ப குறைப்பு ஏற்படலாம்.

ஒட்டுமொத்த மேம்பட்ட விலை உணர்வு, மேலும், வரவிருக்கும் காரிஃப் பயிர் பருவத்தில் மக்காச்சோளம், பருத்தி, சோயாபீன், எள் மற்றும் சூரியகாந்தி ஆகியவற்றை அதிக பரப்பளவில் பயிரிட விவசாயிகளைத் தூண்டலாம். பயிர் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதில் இது சில வழிகளில் செல்ல வேண்டும். குறிப்பாக விவசாயிகளை நெல் மற்றும் கரும்புகளிலிருந்து விலக்குவது முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்.

அச்சுறுத்தல்கள் என்ன?

இதுவரை இந்த போர் சூழலால் ஏற்படும் நன்மைகளையே நாம் பட்டியலிட்டோம். தற்போது இத்தகைய சூழலால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் என்ன என்றால், அதிகபட்ச அளவு தானியங்களை அனுப்புவதற்கு ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குள் போட்டியிடும் வாய்ப்பும் உள்ளது. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து தானியங்களுக்கு $400-450 என ஒப்பிடும்போது, ​​இந்திய கோதுமை அதிக அளவில் தள்ளுபடி செய்யப்பட்டு டன்னுக்கு $340-350 என வழங்கப்படுவதில் இது தெளிவாகிறது.

சரக்கு கப்பல்களின் அவசரத்தால் துறைமுகங்களில் நெரிசல் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் கப்பல்களின் காத்திருப்பு காலம் 5 முதல் 7 நாட்களாக அதிகரிக்கும். “வரவிருக்கும் வாரங்களில் தளவாட இடையூறுகள் ஒரு உண்மையான பிரச்சனையாக இருக்கும்” என்று தாக்கர் கூறுகிறார்.

இரண்டாவது, ஒருவேளை பெரிய, ஆபத்து உரங்கள் கிடைப்பது தொடர்பானது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உலகளாவிய உணவு விலைக் குறியீடு பிப்ரவரியில் எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியிருந்தாலும், உரங்கள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்கள் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. யூரியா, டி-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி), மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (எம்ஓபி) மற்றும் இதர உரங்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்து, ஜூன் முதல் காரீஃப் நடவு தொடங்குவதற்கு முன்பே, உரங்களை பெற முயற்சிக்க வேண்டும்.

ரஷ்யா மற்றும் பெலாரஸில் இருந்து எம்ஓபி வழங்குவது குறித்த கேள்விக்குறியுடன், கனடா, இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் போன்ற பிற நாடுகளுடன் அரசாங்கம் பேச வேண்டும். சவூதி அரேபியா, மொராக்கோ, ஜோர்டான், செனகல், துனிசியா மற்றும் டோகோ ஆகிய நாடுகளில் இருந்து டிஏபி, பாஸ்போரிக் அமிலம் மற்றும் ராக் பாஸ்பேட் ஆகியவற்றின் விநியோகத்தைப் பாதுகாக்க இதேபோன்ற விரைவான முயற்சி தேவைப்படுகிறது என்று உரத்துறை வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

(The writer is National Rural Affairs & Agriculture Editor of The Indian Express and Senior Fellow at the Centre for Policy Research, New Delhi)



Read in source website

இரண்டு வருடங்கள் மட்டுமே பணியாற்றும் ஊழியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கும் ஒரே மாநிலம் நீங்கள்தான் என கேரள அரசை கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம்

கேரளாவில் அமைச்சர்களுக்கு உதவியாளர்களாக 2 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக கேரள அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது.

மொத்தமாக வாங்குபவர்களிடம் இருந்து அரசுக்கு சொந்தமான எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் நிர்ணயிக்கும் டீசல் விலை உயர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேரள மாநில போக்குவரத்துக் கழகம் (கேஎஸ்ஆர்டிசி) சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதிகள் நசீர், கிருஷ்ணா முராரி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபரி முராரி, ” இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழலில் படித்தோம். இரண்டு வருடங்கள் மட்டுமே பணியாற்றும் ஊழியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கும் ஒரே மாநிலம் நீங்கள்தான். அதற்குப் பணம் இருக்கும் போது, இதற்கு ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்? இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் செய்தி வந்திருக்கிறது. உங்கள் மாநிலத்தின் மிக உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். எங்களின் வார்த்தைகளை மாநில அரசுக்குத் தெரிவியுங்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, நீங்கள் ஏன் இங்கு இருக்குறீர்கள்? கேரளா உயர் நீதிமன்றம் முடிவெடுக்கட்டும். அங்கு மனுவை தாக்கல் செய்யுங்கள்.அவர்களால் இவ்விவகாரத்தை கையாள முடியும்” எனக் கூறினார்.

கேஎஸ்ஆர்டிசி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிரி கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளை மாநில அரசிடம் எடுத்துச் சொல்வேன் என்றார்.

திங்களன்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மார்ச் 5 அன்று கேரளா கவர்னர் ஆரிப் முகமது கானுடன் ஆன்லைனில் நடத்திய ஐடியா எக்ஸ்சேஞ்ச் நிகழ்வின் உரையாடலை வெளியிட்டது.

உரையாடலின் போது, ஆளுநர் கானிடம், கேரளாவில் அமைச்சர்களின் தனிப்பட்ட உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் குறித்து சமீபத்தில் கேள்வி எழுப்பினர்கள். ஆனால், உங்களை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பது போல் தெரிகிறது. இவ்விவகாரத்தின் நிலைமை என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஆளுநர், அதை தடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை என கூறுவது சரிதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அரசும் எதிர்க்கட்சியும் கைகோர்த்துள்ளது. அரசு தரப்பில் இருந்து யாரும் நான் கூறியதற்கு எதிராக எந்த அறிக்கையும் வெளியிடுவதில்லை.

ஒவ்வொரு அமைச்சரும் 20க்கும் மேற்பட்டவர்களை ‘கோ டெர்மினஸ்’ அடிப்படையில் நியமிக்கிறார்கள்.அவர்கள் 2 ஆண்டுகள் பணியாற்றியதும், ஓய்வுதியம் பெற தகுதியுடையவர்களாக மாறுகிறார்கள். எனவே, ஒரு குழுவினர் பதவியை ராஜினாமா செய்கிறார்கள். இதையடுத்து, அடுத்த குழுவினர் பணிக்கு வருகிறார்கள்.

ஒவ்வொரு அமைச்சரும் சுமார் 45-50 பேரை நியமிக்கிறார்கள். ராஜினாமா செய்த பிறகு, அவர்கள் கட்சிக்காக முழுநேரமாக வேலை செய்கிறார்கள். தங்கள் சம்பளத்தை அரசிடமிருந்து ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள்.நாட்டில் எங்கும் இப்படி நடக்கவில்லை. இத்திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பினரும் பயனடைகின்றனர்.இதை முறையற்றதாக கருதுகிறேன்” என்றார்.

கேரளாவில் அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 1994 இல் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான UDF அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, இந்த நடைமுறை பல்வேறு அரசாங்கத்தால் பின்பற்றப்பட்டு வருகிறது.

கடந்த வாரம், கேரள உயர் நீதிமன்றம், மாநில அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் நோட்டீஸ் அனுப்பியது.



Read in source website

ஒரு மிகப் பெரிய பேராபத்து தவிா்க்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாகப் பாய்ந்த இந்திய ஏவுகணை அணு ஆயுத யுத்தத்துக்கு வழிகோலாமல் இருந்தது, தெற்காசியாவின் நல்ல நேரம்.

மாா்ச் மாதம் 9-ஆம் தேதி வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, தொழில்நுட்பத் தவறு காரணமாக இந்திய ஏவுகணை ஒன்று விண்ணை நோக்கிப் பாய்ந்து விட்டது. பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கி.மீ. தூரம், ஒலியைவிட மூன்று மடங்கு வேகத்தில் 40,000 அடி உயரத்தில் பாய்ந்து விரைந்தது அந்த ஏவுகணை.

நல்லவேளை, எந்தவொரு நகரத்திலும் விழவில்லை. அதனால் உயிரிழப்பு நேரவில்லை. அதைத் தொழில்நுட்பத் தவறு என்று பாகிஸ்தான் புரிந்து கொள்ளாமலோ ஏற்றுக்கொள்ளாமலோ திருப்பித் தாக்க முற்பட்டிருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும்?

இந்திய விமானப் படைத் தளத்தில் வழக்கமாக நடைபெறும் பயிற்சி, பராமரிப்புப் பணிகளின்போது, தொழில்நுட்பக் காரணங்களால் தவறுதலாக அந்த ஏவுகணை பாய்ந்தது என்கிற இந்தியத் தரப்பு வாதத்தை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டிருப்பதற்கு நாம் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அந்தத் தவறு குறித்து விசாரிக்க இந்திய அரசு உயா்நிலை ராணுவ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. இரு நாடுகளின் கூட்டு விசாரணை தேவை என்கிற பாகிஸ்தானின் கோரிக்கையை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், முறையான விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொணரப்படுவது அவசியம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத வல்லரசுகள். தவறுதலாகப் பாய்ந்த ஏவுகணையில் போா்க்காலத் தாக்குதலுக்கான வெடிகுண்டுகள் இல்லாமல் இருந்தது மிகப் பெரிய ஆறுதல்.

ஆனால், நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இந்தியாவிலிருந்து அதிவேகத்தில் பாய்ந்துவரும் ஏவுகணையை, பாகிஸ்தான் ராடாா் தாக்குதல் ஏவுகணையாகக் கருதி எச்சரிக்கை செய்திருந்தால் விளைவு என்னவாகி இருக்கும்? பாகிஸ்தான் திருப்பித் தாக்க முற்பட்டிருந்தால், அதுவே அணு ஆயுதத் தாக்குதலுக்கு வழிகோலி இருக்கும் என்பதை உணா்ந்தால், பிரச்னையின் கடுமை புரியும்.

இந்தியா தன்னை அணு ஆயுத வல்லரசாக அறிவித்தது முதலே, தெற்காசியா குறித்து உலகம் கவலைப்படத் தொடங்கிவிட்டது. அணு ஆயுதங்களை இந்தியா பொறுப்புடன் கையாள்வதுபோல, பாகிஸ்தான் கையாளும் என்கிற நம்பிக்கை உலக நாடுகளுக்கு இல்லை.

இந்தியாவின் அணு ஆயுதத் தொழில்நுட்பத் திறன் குறித்தும், அதைப் பாதுகாப்பாகக் கையாளும் பொறுப்புணா்வு குறித்தும் யாருக்கும் இதுவரை எந்தவித ஐயப்பாடும் எழுந்ததில்லை. மாா்ச் 9-ஆம் தேதி சம்பவம், அதற்கு மாசு கற்பிப்பதாக அமைந்திருக்கிறது.

2016-இல் இந்தியா விண்கலத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் இணைந்தது. உலகப் பாதுகாப்புக்கும், விண்கலத் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும் பங்களிக்கும் நாடாக உலக வல்லரசுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஹைப்பா்சானிக் ஏவுணை உள்ளிட்ட பல அதிநவீன தொழில்நுட்ப விண்கலத் தயாரிப்பில் இந்தியா சா்வதேச அளவில் உயா்ந்து நிற்கிறது என்பதும் உண்மை.

அப்படி இருக்கும் நிலையில், சிறிய தொழில்நுட்பத் தவறுகளால் விண்கலம் ஏவப்பட்டது என்று நாம் தெரிவித்தது, ஏனைய நாடுகளுக்கு இந்தியத் தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கையைக் குலைப்பதாக அமையும்.

குறிப்பாக, ராணுவத்தில் பயன்படுத்தப்படும் விண்கலன்களை ஏவுதல் என்பது, விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கும், துல்லியமான தாக்குதலை உறுதிப்படுத்துவதற்குமான பல கட்டுப்பாடுகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டது. அதனால்தான், மாா்ச் 9 விபத்தை விமா்சனக் கண்ணோட்டத்துடன் நாம் பாா்க்கத் தோன்றுகிறது.

2019 பிப்ரவரி மாதம் இதேபோல நடந்த தவறு, மீள்பாா்வைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. பாலாகோட் துல்லியத் தாக்குதலுக்கு அடுத்த நாள் இந்திய - பாகிஸ்தான் போா் விமானங்கள், எல்லைக் கோட்டுப் பகுதியில் வானத்தில் மோதிக் கொண்டிருந்த வேளை அது.

அப்போது ஸ்ரீநகா் விமானப் படைத் தளத்திலிருந்து கிளம்பிய போா் விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் பட்காம் என்கிற இடத்தில் விழ்த்தப்பட்டது. அதில் இருந்த விமானப் படை வீரா்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களில் இருவரும் உயிரிழந்தது நினைவு இருக்கலாம்.

அது குறித்த விசாரணை நடத்தப்பட்டது. விமானத் தளத்தில் இருந்த இஸ்ரேலிய ஸ்பைடா் ஏவுகணை, அந்த விமானத்தைப் பாகிஸ்தான் விமானம் என்று தவறுதலாகக் கருதித் தாக்கி வீழ்த்தியது என்பது தெரிய வந்தது. ஏவுகணைகளைக் கையாள்வதிலும், அதைக் கண்காணிப்பதிலும் கவனக்குறைவு இருப்பதை அந்தச் சம்பவம் ஏற்கெனவே நமக்கு உணா்த்தி இருக்கிறது. அதற்குப் பிறகும்கூட போதுமான எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதன் வெளிப்பாடுதான் இப்போதைய நிகழ்வு.

தவறுதலாக விண்ணில் பாய்ந்த ஏவுகணை இந்தியத் தயாரிப்பான ‘பிரம்மோஸ்’ என்று கூறப்படுகிறது. பிலிப்பின்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவிடமிருந்து தங்கள் ராணுவத்துக்கு ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கின்றன. அப்படி இருக்கும்போது, தொழில்நுட்பத் தவறு என்பது நமது தயாரிப்பின் மீதான நம்பகத்தன்மையைக் குலைத்துவிடும்.

மாா்ச் 9 சம்பவத்துக்கான காரணம், தொழில்நுட்பக் குறைவா அல்லது ஏவுகணை பராமரிப்பில் ஈடுபட்டிருந்தவா்களின் கவனக் குறைவா என்பதை விசாரணைதான் வெளிப்படுத்தும். சிறு தீப்பொறி போதும் பெரும் காடு தீப்பற்றி எரிந்து சாம்பலாக. அதேபோல, சிறு தவறுபோதும், அணு ஆயுத யுத்தத்துக்கு வழிகோல..!



Read in source website

நம் நாட்டில் 2020 டிசம்பர் இறுதியில் 79.518 கோடியாக இருந்த இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 2021 மார்ச் மாத இறுதியில் 82.53 கோடியாக உயர்ந்துள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது இணையப் பயனாளர் எண்ணிக்கையின் காலாண்டு வளர்ச்சி விகிதம் 3.79 % ஆக உள்ளது. 

இந்தியாவின் இணையப் பயனாளிகளில் கிட்டத்தட்ட 15% பேர் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று 'இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோஸியேஷன் ஆஃப் இண்டியா' அறிக்கை கூறுகிறது.  இந்தியாவில் 6.6 கோடி குழந்தைகள், தங்கள் பெற்றோரின் தொலைத்தொடர்பு சாதனங்களின் மூலம் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் அனைத்துத் துறைகளிலும் இணையம் வேகமாக ஊடுருவி வருவதால்  அந்நாடுகளில் இணையப் பயனர்களின் விகிதம் அதிகரித்து வருவதாக கூறும்  ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், உலக அளவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள் என்று மதிப்பிடுகிறது.

கற்றலை வழங்குவதோடு  குழந்தைகளிடையே ஆராய்ச்சி ஆர்வத்தினை தூண்டிய இந்த இணையவழி (ஆன்லைன்) பயன்பாடு பல ஆபத்துகளிலும் அவர்களை சிக்கவைத்துள்ளது. 

அதிகப்படியான இணையப் பயன்பாடு கல்வியிலும் தொழில்முறை செயல்திறனிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

2020ஆம் ஆண்டு 'க்ரை' (சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ) என்ற அமைப்பு இணையவழிப் பாதுகாப்பு குறித்தும் இணைய அடிமையாதல் குறித்தும் நடத்திய ஆய்வில் பதிலளித்தவர்களில் ஏறக்குறைய பாதி பேர் (48%) இணையத்திற்கு அடிமையானதை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களில் ஒரு சதவீதத்தினரிடத்தில் கடுமையான இணைய அடிமைத்தனம் உள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. 

இணையத்திற்கு  அடிமையாதல் என்பதனை மனநலக் கோளாறு என அங்கீகரித்துள்ளது 'மனநல நோயறிதல்  புள்ளிவிவரக் கையேடு' (பதிப்பு 5). அதிகப்படியான, நீடித்த இணைய விளையாட்டுகள் குழந்தைகளின் அறிவாற்றலிலும் நடத்தையிலும் மிகப்பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தும் எனவும் அது கூறுகிறது.

கரோனா கால பொதுமுடக்கம் இந்தியக் குழந்தைகளுக்கு இணையவழி விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியது. 

குழந்தைகளிடம் பாலியல் வன்முறை, அது சம்பந்தப்பட்ட காணொலிகளைத் தயாரித்து புழக்கத்தில் விடுதல், ஆபாச இணையதளங்கள்,  இணைய அச்சுறுத்தல், இணையவழி பாலியல் தொல்லை, இணையத்தினால் உருவாகும் பழிவாங்கும் உணர்வு போன்ற பல ஆபத்துகள் குழந்தைகளைச் சூழ்ந்துள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த  'இன்டர்நெட் வாட்ச் டிரஸ்ட்' என்ற இணையவழி கண்காணிப்பு அமைப்பு 2021-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பதிவுகள் அதிகமாக இருந்ததாக கண்டறிந்துள்ளது.

கொவைட் 19 பெருந்தொற்றின்போது உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் குற்றங்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து இன்டர்போல் அமைப்பு நடத்திய ஆய்வின் அறிக்கை, இணையவழி குற்றவாளிகள், குழந்தைகளை ஈர்க்கும் பொருட்டு இணையத்தில் செலவழிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கூடும் என்றும், குழந்தைகளிடத்தில் பிரபலமாக இருக்கும் தளங்களை குறி வைத்து  அதன் மூலம் குற்ற செயல்களில் ஈடுபட அவர்களது இணையவழி சூழல்களைத் தொடர்ந்து மாற்றியமைக்கக் கூடும் என்றும்  கூறுகிறது. 

கொவைட் 19  ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டலைஸ் அதிகப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

2020ஆம் ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு எதிராக இணையவழிக் குற்றங்கள் 400 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகள் கூறுகின்றன. 

2019ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான 164 இணையவழிக்  குற்றங்கள் பதிவாகியுள்ள நிலையில், 2020ஆம் ஆண்டில் 842 இணையவழிக்  குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த 842 இணையவழிக் குற்றங்களில் 738 குற்றங்கள், குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பான காணொலி வெளியிட்டது தொடர்பானவை.

இணையம் இன்றைய குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. குழந்தைகளுக்கு கல்வியையும், வாழ்வியல் நெறிகளையும் வழங்க கணிசமான பங்களிக்கும் இணையவழி பயன்பாட்டின்போது முகம் அறியாத மனிதர்களுடன் ஏற்படும் மனிதத் தொடர்பும், திரைப்பட நடிகர்-நடிகைகளும், குழந்தைகளுக்கு பிடித்தவர்களும் ஏற்படுத்தும் நடத்தை மாற்றமும் இணையவழித் தேடலின் போது அவர்கள் கற்கும் தேவையற்ற பாடத்தின் உள்ளீடுகளும் குழந்தைகளைக் கடுமையாக பாதிக்கின்றன.

இணையவழி பயன்பாட்டின்போது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு தேவை. இந்த 2022-23 நிதியாண்டில் குழந்தைகள் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு, கடந்த ஆண்டின் 1,089.36 கோடி ரூபாயிலிருந்து 44 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 1,573.82 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் எத்தனை விழுக்காடு, குழந்தைகளின் இணையவழி பயன்பாடு பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விளக்கம் இல்லை.

இணையவழி குற்றங்களைத் தடுக்கவும், இணையப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வைப் பரப்பவும் தற்போது குழந்தைகள் சார்ந்திருக்கும் இணையத்தின் பயன்பாட்டையும், போக்குகளையும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். 

அது மட்டுமே போதாது, இணைய நிர்வாகக் கொள்கை, குழந்தைப் பாதுகாப்பு இணையவழி சேவை, குழந்தைகளின் எண்ம (டிஜிட்டல்) உரிமைகளை உறுதிசெய்யும் வகையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கை ஆகியவையும் அவசியம். கரோனாவால் உருவான இணையவழி தாக்கத்தின் தீங்கிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் நம் அனைவருக்குமான கடமை.



Read in source website

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் ஒருவாறாக நடந்து முடிந்து முடிவுகளும் வெளிவந்துவிட்டன. வென்றவா்கள் பதவியேற்றுவிட்டனா். தோ்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு என்றும், வாக்குகள் விலைபேசப்பட்டன என்றும், தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் கட்சியின் கட்டளையை மீறி பதவியைப் பிடித்தனா் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

எப்படியிருந்தாலும், தன்னைத் தோ்ந்தெடுத்த மக்களின் எதிா்பாா்ப்புக்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயமும் கடமையும் மக்களாட்சியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இருக்கின்றன.

தோ்தலில் வேட்பாளா்களால் என்னென்ன உத்திகள் கையாளப்பட்டன, எவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். மக்களாட்சியின் நுழைவாயில் என்பது தோ்தல்தான்.

அந்தத் தோ்தல் நடத்தப்பட்ட விதமும், நடந்தவிதமும், பொதுமக்களாகிய நாமும் எப்படிப் பங்கெடுத்தோம் என்பது நாடறிந்த ஓா் உண்மை. மக்களாட்சியை சீா்குலைக்க நாமே ஒன்றுகூடி தோ்தலை நடத்தி முடித்துள்ளோம். எங்கோ ஆரம்பித்த பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவியதுபோல் இன்று இந்த மக்களாட்சிக்கு எதிரான செயல் உள்ளாட்சிவரை பரவிவிட்டது.

அரசியல் சாசனத்திற்காகவும், சட்டத்திற்காகவும் தோ்தல் பற்றி நாம் தரும் புள்ளிவிவரங்கள் நாம் செய்தவற்றுக்கு முற்றிலும் முரணானவை. நம் சொல்லுக்கும் செயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தொடா்ந்து நிரூபித்து வருகிறோம். இருந்தபோதிலும் மக்கள் பிரதிநிதிகள், தாங்கள் செய்ய வேண்டிய பணியினை செய்யாமல் இருக்க முடியாது.

ஏனென்றால் அடுத்த தோ்தலுக்கு அவா் வாக்குகளைப் பெற மக்களிடம் செல்ல வேண்டும். இந்தச் சூழலில்தான் நம் அரசியல் நகா்கிறது. அனைவருமே அரசியலில் புலிவாலைப் பிடித்துக் கொண்டு சுற்றி வருகிறோம்.

தமிழக முதலமைச்சா், உள்ளாட்சியில் வெற்றி பெற்றவா்கள் இது பதவி அல்ல பொறுப்பு என்று உணா்ந்து கடினமாக உழைத்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று கூறினாா். அத்துடன் ‘தவறு செய்யாமல் செயல்படுங்கள், உங்களை நான் கண்காணித்து வருவேன்’ என்றும் கூறினாா்.

தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள், தங்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டேயிருக்கிறது என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும். அவா்கள் உள்ளாட்சி அமைப்புக்களில் முறையாக தங்கள் பணிகளைச் செய்யவில்லை என்றால் அது மாநில அரசையும் பாதிக்கும் என்ற புரிதலுடன் செயல்பட வேண்டும்.

தமிழகம் சமூக மேம்பாட்டில் முன்னோடி மாநிலம் என்ற பெயா் எடுத்த மாநிலம். இருந்தபோதும் பல சமூகங்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளால் விலகி நிற்கின்றன. வளா்ச்சியில், மேம்பாட்டில் அவா்களைத் தொட்டு உள்வாங்குவதுதான் புதிய அணுகுமுறை.

அதை மிக எளிதாகச் செய்யக்கூடிய வல்லமை உள்ளாட்சிக்குத்தான் உண்டு. அதற்காகத்தான் உள்ளாட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தப் புரிதலுடன் மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி செயல்பாட்டுக்குத் தயாராக வேண்டும்.

உள்ளாட்சியில் பதவிக்கு வந்துள்ளவா்களுக்கு, இன்றைய உள்ளாட்சி என்பது தன்னாட்சி பெற்ற அரசாங்கம் என்ற புரிதல் தேவை. இன்றைய நகா்புற உள்ளாட்சி, பழைய சட்டங்களின்படி இயங்கிக் கொண்டுள்ளது. அதனை மாற்றி 74-ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டத்தை உள்வாங்கி உருவாக்கப்பட்ட நகா்பாலிகா சட்டத்தை இன்றைய தமிழக அரசு ஒரு சில மாற்றங்களுடன் கொண்டுவர வேண்டும். சட்டத்தின்படி நிா்வாகத்தை கொண்டு செலுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். அதே நேரத்தில், மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீா்வுகாண முயல்வது மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்.

மக்கள் பிரச்னைகளை மக்களிடமிருந்து சேகரித்து முடிவு எடுக்கும் நிலைக்குக் கொண்டு செல்வதுதான் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. அவற்றுக்கு சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு தீா்வு காண்பது அதிகாரிகளின் கடமை. எனவே, நம் உள்ளாட்சித் தலைவா்கள் சட்டங்களைப் பற்றியோ விதிகளைப்பற்றியோ பயம் கொள்ளத் தேவையில்லை.

அதே நேரத்தில் எது பிரச்னை என்பதைப் புரிந்து கொள்ளும் திறன் மக்கள் பிரதிநிதிகளுக்கு வேண்டும். எது அடிப்படை பிரச்னை, எது சாதாரண பிரச்னை, எவற்றை மாற்றினால் சமூகம் மேம்பாடு அடையும் என்பவற்றையெல்லாம் புரிந்து செயல்பட்டாக வேண்டும்.

சென்னை மாநகராட்சியின் புதிய மேயரிடம் ‘உங்களின் செயல் திட்டம்’ என்ன கேட்கப்பட்டபோது, அவா், ‘பொதுப்பள்ளிக் கல்வியை சீரமைப்பேன். அத்துடன் மக்களிடமும் பொதுக்கல்விக் கூடங்களில் தங்களின் குழந்தைகளைச் சோ்க்கச் சொல்லி, பொதுக்கல்விக் கூடத்தை வலுவாக்க முயற்சிப்பேன்’ என்று கூறியது, அவா் ஒரு பாா்வை கொண்ட தலைவராக விளங்குவாா் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.

ஆரம்பக் கல்வி, பொது சுகாதாரம் பற்றிய ஆழ்ந்த புரிதலுடன் நம் மக்கள் பிரதிநிதிகள் செயல்பட்டால், மனித வளம் மேம்படுவதையும், வாழ்க்கைத் தரம் உயா்வதையும் நாம் காண முடியும். இந்தப் பணிகள் அடித்தட்டு மக்கள் வாழும் இடங்களில் நடைபெற்றால், மிகப் பெரும் சமூக, பொருளாதார மாற்றம் ஏழை, எளிய மக்களிடம் வந்துவிடும்.

நாம் மக்களாட்சியைக் கற்றுக்கொண்டு சுதந்திரத்திற்குப் போராடவில்லை. சுதந்திரம் பெற்றுத்தான் மக்களாட்சியை உருவாக்கி செயல்பட்டு வருகிறோம். இன்னும் கூறப்போனால், மக்களாட்சிக்காக நாம் எந்தப் போராட்டமும் செய்தது கிடையாது. இந்தச் சூழலில் நம் நகா்புற உள்ளாட்சித் தலைவா்களுக்கு மிகப் பெரும் பணி காத்திருக்கிறது. அவை, சமூகத்தின் அடிப்படை மாற்றத்திற்கு தேவையானவை.

சத்துணவுக்கூடத்தை சீா் செய்வது, பொதுப்பள்ளிக்கூடங்களை சீா்திருத்துவது, அவற்றின் தரத்தைக் கூட்டுவது, பொதுக் கழிப்பறைகளை மேம்படுத்துவது, சத்துணவின் தரத்தைக் கூட்டுவது, நியாயவிலைக் கடைகளில் உள்ள அரிசி, கோதுமை, பருப்பு இவற்றின் தரத்தைக் கூட்டுவது, ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துவது ஆகியவை முக்கியமானவை.

மேலும், தாங்கள் பொறுப்பேற்றிற்கும் வாா்டு பகுதிகளில், ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளைக் கண்டறிந்து தீா்வு காண்பது, அப்பகுதியில் வளா் இளம் பெண்களில் எவ்வளவு போ் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள் எனக் கண்டறிந்து அதனை நீக்கத் திட்டமிடுதல், தெருக்களை சுத்தமாக வைத்திருக்க விழிப்புணா்வு ஏற்படுத்துதல், தங்கள் வாா்டுக்கு உட்பட்ட பகுதியில் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் எவ்வளவு போ் இருக்கின்றாா்கள், அவா்கள் குழந்தைகள் படிக்கின்றாா்களா போன்ற தரவுகளைத் திரட்டி அவா்களுக்கு உதவுதல் இவற்றையெல்லாம் செய்தால் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரண மாநிலமாக தமிழகம் மாறிவிடும்.

தமிழகத்தின் வளா்ச்சிப்பாதையை திராவிட வளா்ச்சிப்பாதை என்றும் அதாவது, வறுமையை முற்றிலும் ஒழித்து, வேலைவாய்ப்பை உருவாக்கி, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, சமூகநீதி காத்து அனைவரையும் உள்ளடக்கிய, அனைத்துப் பகுதியையும் உள்ளடக்கிய சீரான வளா்ச்சியே திராவிட வளா்ச்சிப் பாதை என்று தமிழக முதலமைச்சா் கூறியிருக்கிறாா். இவற்றை உள்ளாட்சிகளில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும்.

அனைத்து வாா்டு உறுப்பினா்களும், தங்கள் பகுதியில் யாரும் பட்டினியுடன் படுக்கச் செல்வதில்லை, பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் இல்லை, எந்தக் குழந்தையும் ஊட்டச்சத்து இன்றி பாதிக்கப்படவில்லை, குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டிடவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கும் நிலைக்கு தங்கள் பணியினை ஒழுங்குபடுத்திச் செயல்பட வேண்டும்.

கழிப்பறை இல்லாத வீடு இல்லை, கழிப்பறை இல்லாதவா்களுக்காக பொதுக் கழிப்பறை கட்டிக் கொடுத்து பயன்படுத்த வைத்துவிட்டோம். அனைத்துக் குடும்பங்களுக்கும் தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீா் கொடுக்கப்பட்டுவிட்டது, எங்கள் பகுதியில் எந்த இடத்திலும் குப்பை இல்லை, எந்த இடமும் திறந்தவெளிக் கழிப்பிடமாக இல்லை, எங்கள் பகுதியில் உள்ள பொதுப்பள்ளியில்தான் பெரும்பாலான மாணவா்கள் படிக்கின்றாா்கள், பொதுப்பள்ளிகள் நன்கு செயல்பட்டு தரமான கல்வியை அளிக்கின்றன.

தரமான வகுப்பறை, தரமான ஆய்வுக்கூடம், தரமான கழிப்பறையுடன் பள்ளிகள் இயங்குகின்றன. எங்கள் பகுதியில் வாழும் பெண்கள், குறிப்பாக வளா் இளம் பருவப் பெண்களில் யாரும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை, எங்கள் பகுதியில் பிறக்கும் குழந்தைகள் சரியான எடையுடன் பிறக்கின்றன. எந்தக் குழந்தையும் ஊட்டச்சத்து இன்றி பாதிக்கப்படவில்லை என்று கூறும் அளவுக்கு தங்கள் பணியினை ஒழுங்குபடுத்திச் செயல்பட வேண்டும்.

நகா்புறங்களில் வாா்டு சபையைக் கூட்டி மக்களின் குறைகளையும் பிரச்னைகளையும் கேட்டு, பின் அவா்களுடன் விவாதித்து பிரச்னைகளுக்குத் தீா்வுகாண வேண்டும். அந்தந்தப் பகுதியில் உள்ள சமூக வளத்தைக் கண்டறிந்து, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், மருத்துவா்கள், கருத்தாளா்கள், ஆசிரியா்கள் அனைவரையும் அழைத்து அந்தப் பகுதியை எப்படி மேம்படுத்துவது என்று கேட்டு அவா்கள் ஆலோசனையை ஏற்றுச் செயல்பட வேண்டும்.

நம் சமூகத்திலுள்ள ஆதிக்க மனோபாவத்தையும், சமத்துவமின்மையையும் மாற்றிட புதிய சமத்துவ சிந்தனை இன்றைக்கு மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேவை. அந்த புதிய சிந்தனைச் சூழலுக்குள் சென்றிட நம் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஆற்றலை வளா்த்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் இன்றைய இன்றியமையாத பணியும் தேவையும் ஆகும்.



Read in source website

மக்களே தாமாக முன்வந்து தகவல்களை அளிக்கும்வகையிலும் அத்தகவல்களை டிஜிட்டல் வடிவத்தில் சேகரித்துப் பாதுகாக்கும்வகையிலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தங்களைச் செய்துள்ளது. 2020-லேயே இது குறித்து அறிவிக்கப்பட்டுவிட்டாலும், கடந்த வாரம்தான் அரசிதழில் இத்திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இத்திருத்தங்களால், மக்களால் தங்களைப் பற்றிய விவரங்களை இணையம் வழியாக உரிய படிவங்களில் நிரப்பி சமர்ப்பிக்க முடியும். கரோனா பெருந்தொற்று காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டிருந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து நடத்தி முடிப்பதற்கு இத்திருத்தங்கள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன்படி, 2020 ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் வரையில் வீடுவாரி கணக்கெடுப்பை நடத்தவும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டைப் புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. இரண்டாம் கட்டமாக, மக்கள்தொகைக் கணக்கெடுப்பை பிப்ரவரி 2021-ல் தொடங்கவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்தக் காலக்கெடு 2019 மார்ச் மாதத்திலேயே அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஆனால், 2020 ஜனவரியில் பெருந்தொற்று தீவிரமாகப் பரவ ஆரம்பித்த நிலையில் இக்கணக்கெடுப்புகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டன. இந்நிலையில், நாட்டில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தவிருப்பதாக 2021 ஜூலையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. தகவல்களைச் சேகரிப்பதற்காக செல்பேசிச் செயலியொன்றை மேம்படுத்தவிருப்பதாகவும் கணக்கெடுப்பு தொடர்பான பல்வேறு பணிகளை ஒருங்கிணைக்க உதவியாக இணையதளம் ஒன்றைத் தொடங்கவிருப்பதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்பு நடைமுறையில் இருந்துவந்த, வீடுதோறும் சென்று தகவல்களைச் சேகரிக்கும் முறையும் இப்போது பின்பற்றப்படவுள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் 30 லட்சம் அரசு ஊழியர்களும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் 650 முதல் 800 வரையிலானவர்களைப் பற்றிய விவரங்களை நேரடியாகவோ இணைய வழியிலோ சேகரிப்பார்கள். என்றாலும், மக்கள் தாங்களே முன்வந்து தகவல்களை அளிப்பதற்கான வாய்ப்பும் அனுமதிக்கப்படுகிறது.

கடந்த வாரமே தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுக்கான இயக்குநர்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நியமித்துள்ளது. எனினும், பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த கணக்கெடுப்புப் பணிகள் எப்போது தொடங்கும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்கு வானொலி, சுவரொட்டிகள் ஆகியவற்றுடன் அச்சு ஊடகம், மின் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

குடியிருப்புகளின் நிலை, அதில் உள்ள வசதிகள் பற்றிய வீடுவாரி கணக்கெடுப்பும் மக்கள்தொகை, மதம், பட்டியல் சாதிகள், பழங்குடிகள், மொழி, கல்வி, பொருளாதார நடவடிக்கைகள், இடப்பெயர்வு, குழந்தைப் பிறப்பு வீதம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை உள்ளடக்கிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் அளிக்கும் தகவல்கள் ஆட்சி நிர்வாகத்திலும் சமூகநலத் திட்டங்களைத் திட்டமிடுவதிலும் முக்கியப் பங்குவகிப்பவை. தற்போதைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்ட விவரங்கள் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வெளியாகும்பட்சத்தில், தேர்தலின் முக்கிய விவாதப் பொருளாகவும் அமையக்கூடும்.



Read in source website

முல்லைப் பெரியாறு, வைகை அணைகள் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் வாழும் சுமார் 2 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 1 கோடி விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும், 5 லட்சம் ஏக்கர் நஞ்சை, புஞ்சை விளைநிலங்களின் பாசன நீர் ஆதாரமாகவும் விளங்குகின்றன. நெல், கரும்பு, வாழை, தென்னை, திராட்சை உள்ளிட்ட பழ வகைகள், சிறுதானியங்கள், காய்கறிகள், மலர் வகைகள் உள்ளிட்ட அனைத்துவிதமான பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிற பன்முகத்தன்மை கொண்ட விளைநிலப் பகுதியாக இது விளங்குகிறது. கேரளமோ இம்மாவட்டங்களின் பாசன உரிமையைத் தடுத்து, மின்னுற்பத்தி செய்து, விற்பனை செய்வதற்கான வணிக நோக்கோடு முல்லைப் பெரியாறு அணை நீரைப் பயன்படுத்துவதற்காகப் புதிய அணை கட்ட முயல்கிறது.

முல்லைப் பெரியாறு அணை 142 அடி உயரம் கொண்டது. முழு கொள்ளளவு நீரைத் தேக்கினால், மேலும் கூடுதலாக 5 டி.எம்.சி. நீரை மட்டுமே தேக்கிவைக்க முடியும். அதற்குக் கீழே 42 கிமீ தூரத்தில் கட்டப்பட்டுள்ள இடுக்கி அணை 555 அடி உயரம் கொண்டது. 73 டிஎம்சி நீரைத் தேக்கி வைக்கக்கூடிய வலுவான அணையாகக் கட்டப்பட்டுள்ளது. ஆனால், விளைநிலங்களின் பாசனப் பரப்பு 3,000 ஏக்கர் மட்டுமே. ஆனால், இடுக்கி அணை மூலம் 750 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்து, பல்வேறு மாநிலங்களுக்கு விற்று மிகப் பெரிய வருவாயைக் கேரளம் ஈட்டிவருகிறது. அணையின் கொள்ளளவை மேலும் கூடுதலாக்குவதற்காக அதற்குத் தேவையான தண்ணீரை முல்லைப் பெரியாறு அணையை அகற்றிவிட்டுப் பெற முயல்கிறது.

முல்லைப் பெரியாறு - இடுக்கி அணைகளுக்கு இடைப்பட்ட 42 கி.மீ. தூரம் மலைக் குன்றுகளாக உள்ளது. இடையிடையே இரு கிராமங்கள் மட்டுமே உள்ளன. முல்லைப் பெரியாறு அணையில் தேக்கப்படும் தண்ணீர், கேரளம் சொல்வதுபோல் அணையை உடைத்துக்கொண்டு வெளியேறினாலும் எந்த ஒரு கிராமமோ, குடியிருப்புப் பகுதிகளோ, விளைநிலங்களோ பாதிக்கப்படும் நிலை கிடையாது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் நமக்கு அனுமதித்ததன் அடிப்படையில் 142 அடி தண்ணீரைத் தேக்கி 4 ஆண்டுகளாகத் தொடர்ந்து சாகுபடிக்குப் பயன்படுத்தியுள்ளோம்.

கடந்த 2021-ல் கேரளத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் தோல்வியடைந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்தது. தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத காங்கிரஸ் முல்லைப் பெரியாறு அணையை வைத்து அரசியல் செய்யும் நோக்கோடு, அந்த அணையை உடைக்க வேண்டும், இல்லையென்றால் பேராபத்து ஏற்படும் என்ற விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதோடு, நடிகர்களையும் சில அமைப்புகளையும் தூண்டிவிடவும் செய்கிறது.

கடந்த நவம்பரில் நடந்த சட்டமன்றக் கூட்டத்திலேயே அணையை உடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியபோது, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்றும் அணையை உடைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அவ்வாறு விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பதிலளித்துள்ளார். இச்செய்தி தமிழ்நாட்டுக்கு நம்பிக்கை அளித்தாலும், முல்லைப் பெரியாறுக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதில் சமரசத்துக்கு இடமளிக்க மாட்டோம் என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் 142 அடி கொள்ளளவை உயர்த்துவதற்கான வாய்ப்பு உருவானபோது, அதை உயர்த்த விடாமல் தடுத்து நிறுத்துவதற்குப் பல்வேறு முயற்சிகளில் கேரளம் ஈடுபட்டது. உச்ச நீதிமன்றத்திலும் தவறான தகவல்களை அளித்தது. அதனை தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் குழு ஆதாரங்களுடன் மறுத்துக் கடுமையான சட்டப் போராட்டத்தை நடத்தி முறியடித்தது.

அதே நேரத்தில், ரூல்கர்வ் என்கிற நீர்ப்பாசன முறை, உள்நோக்கத்துடன் கேரள அரசால் முன்மொழியப்பட்டது. அதனை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றது. அதனை ஏற்று, ஆய்வுக் குழு அதனைப் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் வழிகாட்டினார்கள். ஆனால், ஆய்வுக் குழுவோ அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது அணை வலுவாக உள்ளதால் அணைக்குப் பேராபத்து ஏற்படாது என்பதை உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியது.

இருந்தாலும் உச்ச நீதிமன்றம் பேரிடரைக் கணக்கில் கொண்டு மறுபரிசீலனை செய்ய ஆய்வுக் குழுவுக்கு இட்ட உத்தரவு நமக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனால், உச்ச நீதிமன்றத்தால் வழிகாட்டப்பட்ட அடிப்படையில், மத்திய அரசால் தேர்வுசெய்யப்பட்ட முல்லைப் பெரியாறு ஆய்வுக் குழுவுக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும், இனி முல்லைப் பெரியாறு பாசனப் பிரச்சினைகள் குறித்து இரு மாநிலங்களும் குழுவிடம்தான் முறையிட வேண்டும். அக்குழுதான் இறுதி முடிவு எடுக்கும் என்று தெளிவாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஏற்கெனவே, 2018-ல் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாகப் புதிய அணை கட்டுவதற்கு வரைவுத் திட்ட அறிக்கையைத் தயார்செய்ய கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதனை இதுவரையிலும் மத்திய அரசு திரும்பப் பெறவில்லை. திரும்பப் பெறுவதற்கான அரசியல் அழுத்தத்தைத் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்குக் கொடுக்க முன்வராத நிலை தொடர்கிறது.

மத்திய அரசால் கொடுக்கப்பட்ட அனுமதியைப் பயன்படுத்தி, கேரள அரசு வரைவுத் திட்ட அறிக்கையைத் தயார்செய்து, அணையைக் கட்டியே தீருவேன் என்று தமிழக நலனுக்கு எதிராகத் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. ஆய்வுக் குழுவோ கடந்த மாதம் திடீரெனத் தனது நிலையை மாற்றிக்கொண்டு, முல்லைப் பெரியாறு அணையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுசெய்துள்ளது. இதனையடுத்து, மத்திய அரசும் ஆய்வுக் குழுவைப் பின்பற்றி மறுஆய்வு கோரும் மனுவைத் தாக்கல்செய்துள்ளதன் மூலம் அதன் இரட்டை வேடம் அம்பலப்பட்டுள்ளது. புதிய அணையைக் கட்ட அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு அரசியல் அழுத்தத்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும்.

தமிழக நீராதாரப் பிரச்சினைகளை கேரளம், கர்நாடக மாநிலங்களில் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காகவும், அதிகாரப் போட்டிக்காகவும் பயன்படுத்துவதில் பாஜக, காங்கிரஸ் இரண்டுமே ஒத்த கருத்தோடு செயல்படுகின்றன. இந்திய அளவில் ஏற்படுகிற அரசியல் கூட்டணிகள், தமிழக நீராதார உரிமையை மீட்பதில் சில பின்னடைவுகளை ஆளும் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுத்திவிடுகின்றன. எனவே, அரசியல் அணி வேறு, நீர்ப்பாசன உரிமை வேறு என்கிற கொள்கைத் திட்டத்தை உறுதியாக மேற்கொள்ள வேண்டுமானால் அரசியலுக்கு அப்பாற்பட்டு விவசாயிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே அது சாத்தியம்.

- பி.ஆர்.பாண்டியன், தலைவர், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு



Read in source website

தமிழகத்தில் கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக நரிக்குறவர்கள் (வாக்ரிகள்) மற்றும் மலைப் பகுதியில் வாழும் பழங்குடியினர் வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிக்கு உற்சாகமாக வந்தனர். அவர்கள் முதல் முறையாக வாக்களிக்க வந்திருந்ததால், அவர்களுக்கு வேண்டிய பயிற்சியும் வழிகாட்டுதலும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் கொடுக்கப்பட்டன.

நரிக்குறவர்கள் உள்நாட்டுப் பகுதியில் வாழும் மக்கள். பெரும்பாலும் அவர்கள் ஓர் இடத்தில் நிரந்தரமாகத் தங்கி வசிப்பதில்லை. அடிக்கடி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்துகொண்டே இருப்பவர்கள். வேட்டையாடுதல், கைவினைப் பொருட்களைச் செய்து பொது இடங்களில் விற்பனை செய்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள். தங்களுக்கென்று சொந்த இடம், சொந்த வீடு எதுவும் இல்லாதவர்கள். சாலை ஓரத்திலும், ரயில் நிலையங்களிலும், பாலங்களுக்கு அடியிலும், அரசுக்குச் சொந்தமான பொதுவெளியிலும் சின்னச் சின்னக் குடிசைகள் போட்டு வாழ்கின்றனர்.

ஒரு இடத்தில் நிரந்தரமாக இவர்கள் இருப்பதில்லை என்பதால், அரசாங்கம் தரும் எந்த விதமான அடையாள அட்டையும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. தாசில்தார் அலுவலகத்தில் இவர்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என்று எது கேட்டுப் போனாலும் நிரந்தர முகவரியுடன் கூடிய எந்த விதமான அத்தாட்சியும் இல்லையென்பதால், தர முடியாது என்று சொல்லிப் பல நேரங்களில் அரசு அதிகாரிகள் நிராகரித்துவிடுகிறார்கள். மேலும், அரசு கொடுத்திருக்கும் அட்டவணையில் எந்தப் பிரிவில் நீங்கள் வருகிறீர்கள் என்று தெரியவில்லை என்று சொல்லியும் அவர்களைக் குழப்பி, திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.

கடந்த ஆண்டு வெளிவந்த ‘ஜெய்பீம்’ திரைப்படம், இருளர் என்ற பழங்குடி இன மக்கள் எப்படித் தங்களுடைய அடிப்படை உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராடினார்கள் என்பதை அழகாகச் சித்தரித்திருந்தது. அதன் பிறகு, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின் பேரில், அரசு அதிகாரிகள் பழங்குடியினர் இருக்கும் பகுதிக்கே சென்று சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை வழங்குவதைப் பார்க்க முடிந்தது. இதனுடைய நீட்சியாகவே திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவள்ளூர் மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட நரிக்குறவர்களுக்கும் பழங்குடியினருக்கும் எல்லா அடையாள அட்டைகளும் துரிதமாக வழங்கப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்கள் தங்களுக்குக் கீழ் செயல்படும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகிய அதிகாரிகளின் துணையுடன் சிறப்பு முகாம்களை நடத்தினார்கள்.

அப்படிச் சிறப்பு முகாம் நடத்தியதில் பத்தே நாட்களுக்குள் நரிக்குறவர்களுக்கு வேண்டிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என்று அனைத்தும் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டன. எனவே, ஆறு மாதங்கள், ஒரு வருடம் என முயற்சி செய்தும் கிடைக்காத இந்த அடையாள அட்டைகள் 10 நாட்களுக்குள் கிடைத்தது மிகப் பெரிய ஆச்சரியமாக அவர்களுக்குப் பட்டது.

இந்த நரிக்குறவர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த பின்பு, அரசு தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்; சொந்தமாக வீடு கட்டித் தர வேண்டும்; பிள்ளைகளின் படிப்புக்கு உதவ வேண்டும், அதன் மூலம் தங்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் என்பதைச் சுட்டிக்காட்டினார்கள். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களோடு உரையாடியபோது, ‘‘உங்களுக்கு நிரந்தர வீடு வேண்டுமென்றால், நீங்கள் முதலில் உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டும். பொது இடங்களில் பொருட்களை விற்பதற்குப் பிள்ளைகளைப் பயன்படுத்தக் கூடாது. அதேபோல, பெண் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம்செய்து வைப்பதை நிறுத்த வேண்டும்” என்ற நிபந்தனைகளையும் முன்வைத்தார். வருங்காலத்தில் இவையெல்லாம் நிறைவேறினால், அவர்களின் வாழ்க்கைத்தரம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயரும்.

திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டைக்கு அருகில் இருக்கும் ஆனைமலை புலிகள் சரணாலயத்தின் எல்லைக்குள் வருகின்ற நான்கு பழங்குடியினர் கிராமங்கள் சமீபத்தில்தான் நகர்ப்புற எல்லைக்குள் சேர்க்கப்பட்டன. இங்கு வாழும் மக்கள் முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முன்வந்தனர். இவர்கள் முதல் முறையாக வாக்களித்ததால் கிராமத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற ஆசையோடும் கனவுகளோடும் இருக்கிறார்கள்.

வாக்களித்த பின்பு, அந்த மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து இயல்பாகக் கோரிக்கைகளை முன்வைத்தது கவனிக்கத்தக்கது. காட்டுக்குள் எங்கள் கிராமம் இருப்பதால் சரியான சாலை வசதி கிடையாது; மருத்துவ வசதி, கல்வி வசதி என்று எதுவும் கிடையாது. குறிப்பாக, எங்கள் குழந்தைகள் நகரத்தில் உள்ள விடுதியில் தங்கிப் படித்தவர்கள்; கரோனா பொதுமுடக்கக் காலத்தில் திடீரென்று வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், வீட்டில் இணையதள வசதி இல்லாததால், அவர்களால் எந்த இணையவழி வகுப்புகளிலும் இணைய முடியவில்லை. எனவே, எங்களுக்குக் கைபேசி அலைவரிசை கிடைக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தால், அது மிகப் பெரிய நன்மை பயக்கும் என்றெல்லாம் கூறினார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதே அந்தப் பகுதியில் உள்ள மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் என்ன, அடிப்படைத் தேவைகள் என்ன என்பதையெல்லாம் அறிந்துகொண்டு, அவற்றை நிறைவேற்றும் வகையில் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான். ஒவ்வொரு மாவட்டத்திலும் நரிக்குறவர்கள், பழங்குடியினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பை முதலில் நடத்த வேண்டும். அப்படிக் கணக்கெடுப்பு நடத்தும்போதுதான் எவ்வளவு பேரிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை இருக்கின்றன என்பதைப் பரிசோதிக்க முடியும். அடையாள அட்டை இல்லாத ஒவ்வொருவருக்கும் உடனடியாக அது வழங்கப்பட வேண்டும்.

அப்போதுதான் அவர்களுக்கு ஒரு நிரந்தர அடையாளமும், நிரந்தர அங்கீகாரமும் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் முக்கியமான உரிமைகளும் சலுகைகளும் அவர்களுக்குச் சரியாகச் சென்று சேரும். இதன் மூலம் அவர்களுக்குச் சமூகத்தில் மற்றவர்களோடு சரிசமமாக நிற்பதற்கும், மாண்போடு வாழ்வதற்கும் ஒரு வாய்ப்பு ஏற்படும். பாரம்பரியமாக, அவர்கள் செய்துகொண்டிருந்த தொழிலிலிருந்து விடுபட்டு, அவர்களுடைய பிள்ளைகள் அடிப்படைக் கல்வி பெறுவதற்கும், உயர் கல்விக்குச் செல்வதற்கும் நிச்சயமாக அது வழிவகுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

- அ.இருதயராஜ், காட்சித் தகவலியல் துறைப் பேராசிரியர், தொடர்புக்கு: iruraj2020@gmail.com



Read in source website