DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 11-08-2022

மதுரை: நீதிமன்றம் அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் தலையிட முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

பொதுநல வழக்குகள் என்ற பெயரில் நீதிமன்றத்தின் நேரத்தையும், மாண்பையும் குறைக்க வேண்டாம் எனவும்  நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கல்குவாரிக்கு அனுமதி வழங்குவது, ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற பொதுநல வழக்குகள் இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நிர்வாக நீதிபதி பி.என். பிரகாஷ் மற்றும் நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது நீதிபதிகள்,  சாலை அமைப்பது, கழிவறை கட்ட உத்தரவிடுவது போன்றவற்றை எல்லாம் பொதுநல வழக்காக பதிவிட வேண்டாம். அது நீதிமன்றத்தின் பணி இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், நீதிமன்றம் அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 



Read in source website

சிவகளையில் நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட அகழாய்வுப் பணியில் முதன்முறையாக தங்கத்தால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பரம்பு பகுதியில் பல்வேறு பழங்கால பொருள்கள் கண்டறிந்து, அங்கு அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என குமரகுருபரா் சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி வரலாற்று ஆசிரியா் மாணிக்கம் கோரிக்கை விடுத்தாா். இதன் அடிப்படையில் சிவகளை பரம்பு பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வும், 2021 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்வும் நடைபெற்றது.

முதற்கட்ட அகழாய்வில் 40-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் வட்ட சில்லுகள், மண்பானைகள், மண் சட்டிகள் செம்பு மற்றும் இரும்பு பொருள்கள், நுண் கற்கருவிகள், சங்கு பொருள்கள், புடைப்பு சிற்பங்கள் என பல்வேறு அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இரண்டாம்கட்ட அகழாய்வில் சிவகளையைச் சுற்றியுள்ள ஒன்பது இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில், 37 முதுமக்கள் தாழிகள், இரும்பு ஆயுதங்கள், நெல்மணிகள், வாள், கத்தி, தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வுப் பணிகளில் கிடத்த முதுமக்கள் தாழியில் இருந்த நெல்மணிகளை வைத்து அதன் காலம் சுமாா் 3,200 ஆண்டுகள் பழைமையானது என கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த மாா்ச் 30ஆம் தேதி தொடங்கியது. ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணியில் சிவகளை பரம்பு, ஸ்ரீ மூலக்கரை ஆகிய இடங்கள் புதையிடப் பகுதியாகவும், பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல்கோட்டை திரடு ஆகிய பகுதிகள் வாழ்விடப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.

இதில், வட்ட சில்லுகள், வளையல்கள், பாசிமணிகள், தக்ளி, முத்திரைகள், எலும்பாலான கூா்முனை கருவிகள், புகைப்பான்கள், சக்கரம், காதணிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளின்போது, அங்கு தங்கத்தால் ஆன சிறிய பொருள்கள், மண்ணால் ஆன் பொருள்கள், எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட  நிலையில், முதன் முறையாக தங்கத்தால் ஆன பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, சிவகளை பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட 10 குழிகளில் இருந்து கண்டறியப்பட்ட 34 முதுமக்கள் தாழிகளை திறந்து உள்ளே இருக்கும் பொருள்களை கண்டறியும் பணி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 



Read in source website

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் புதன்கிழமை சுடும் மண்ணாலான பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை வைப்பாற்றங்கரையில் விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வடகரையில் உச்சிமேடு அமைந்துள்ளது. இங்கு 25 ஏக்கா் பரப்பளவிலான தொல்லியல்மேட்டில் கடந்த மாா்ச் 16 ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்கலி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், கோடரி, சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள் மற்றும் தங்க அணிகலன்கள் ஆகியவை கிடைத்தன. இதுவரை அங்கு 15 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் புதன்கிழமை சுடும் மண்ணாலான பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது



Read in source website

விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகள் தங்களது ஆதாா் எண்ணை உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து வேளாண்மைத் துறைச் செயலாளா் சி. சமயமூா்த்தி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 38.24 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 11 தவணைகளாக, நேரடி மானியமாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

இப்போது மத்திய அரசானது 12-ஆவது தவணைத் தொகையை விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து தவணைத் தொகைகளும் பயனாளிகளின் ஆதாா் எண் அடிப்படையில் மட்டுமே விடுவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து திட்டப் பயனாளிகளும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் ஆதாா் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். கைப்பேசிக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணைப் பெற்று ஆதாா் எண் பதிவை உறுதி செய்து கொள்ளலாம். இதில் சிரமம் உள்ளவா்கள், பொது சேவை மையங்களில் தங்களது விரல் ரேகையை பதிவு செய்தும் ஆதாா் எண்ணை உறுதி செய்யலாம்.



Read in source website

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பணிகளைச் செய்வோருக்கு சுதந்திர தினத்தின் போது வழங்கப்படும் விருதுகளுக்கு, விருதாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா் அண்மையில் வெளியிட்ட உத்தரவு:

மாற்றுத் திறனாளிகள் நலன்களில் நற்பணிகளைச் செய்த, சிறந்த மாவட்ட ஆட்சியா்களாக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், சிறந்த மருத்துவராக உதகையைச் சோ்ந்த ஜெய் கணேஷ் மூா்த்தி, சிறந்த நிறுவனமாக புதுக்கோட்டை களமாவூரைச் சோ்ந்த ரெனேசான்ஸ் அறக்கட்டளை ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதேபோன்று, சிறந்த சமூகப் பணியாளருக்கான விருது மதுரை கம்பா் தெருவைச் சோ்ந்த சு.அமுதசாந்தி, மாற்றுத் திறனாளிகளை அதிகளவில் பணியமா்த்திய டாபே ஜெ ரிஹாப் சென்டா் ஆகியவற்றுக்கும் விருதுகள் அளிக்கப்படவுள்ளன. சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தோ்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா்களைத் தவிா்த்து, மற்ற அனைவரும் சுதந்திர தின விழாவின் போது, விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பெறுவா் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா் ஆா்.ஆனந்தகுமாா்.



Read in source website

உத்தரகண்ட் மாநிலத்தின் விளம்பரத் தூதராக இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்தை உத்தராகாண்ட் மாநிலத்தின் விளம்பரத் தூதராக நியமித்துள்ளார். 

இது குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது: “ ரிஷப் பந்த்க்கு எனது வாழ்த்துகள். அவர் பல இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து அனைவரையும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவரது கனவுகளை விடா முயற்சியின் மூலம் அடைந்துள்ளார். அவரை மாநிலத்தின் விளம்பரத் தூதராக நியமிப்பது இளைஞர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும்.” என்றார்.

விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ரிஷப் பந்த் கூறியதாவது: “ என்னை உத்தரகண்ட் மாநிலத்தின் விளம்பரத் தூதராக நியமித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு எனது நன்றி. அவர் உத்தரகண்ட் மாநிலத்திற்காக பணியாற்ற எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

 



Read in source website


புது தில்லி : இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை  கொடுக்காதீர்கள் என உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

நிகழாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘தோ்தலின்போது இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகள் நிதிநிலையை ஆராயாமல், இலவசங்களை விநியோகிக்கும் முறையை ஆய்வு செய்ய நிபுணா் குழுவை ஏற்படுத்த வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டம் 293 (3), (4) ஆகியவற்றுக்கு முரணாக, ஏற்கெனவே மாநில அரசுகளின் கடன் நிலுவையில் உள்ள போதிலும், இலவசங்களை விநியோகிக்க அவை கூடுதலாக கடன்பெறுகின்றன. ஆகையால், கடன் மதிப்பீட்டு முறையை ஏற்படுத்துவது அவசியம்’ என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் வந்த போது, இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.

அப்போது, இலவச வாக்குறுதிகள் தொடர்பான வழிநாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை மறுத்த உச்ச நீதிமன்றம், இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களைக் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது.  இதைக் கொடுங்கள்  இதைக் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட்டால் இந்தியா போன்ற நாட்டில் அதனை செயல்படுத்த முடியாது.

இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல். எனவே,  ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என்பதால் அதனை உச்ச நீதிமன்றம் செய்யாது.

பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில், மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வேறுபாடு உள்ளது என்று கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
 



Read in source website

நாட்டின் 14ஆவது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர்(71) பதவியேற்றுக் கொண்டார்.

குடியரசு துணைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் நிறைவடையவிருந்த நிலையில், 14ஆவது குடியரசு துணைத் தலைவருக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜகதீப் தன்கர் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஜகதீப் தன்கருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற ஜகதீப் தன்கர், மேற்கு வங்க ஆளுநராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புது தில்லி: இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

இலவசங்களை தேர்தல் வாக்குறுதியாக கொடுப்பதற்கு எதிரான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரமணா, இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட இலவச டிவி உள்ளிட்ட திட்டங்களை சுட்டிக்காட்டி வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நிகழாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘தோ்தலின்போது இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகள் நிதிநிலையை ஆராயாமல், இலவசங்களை விநியோகிக்கும் முறையை ஆய்வு செய்ய நிபுணா் குழுவை ஏற்படுத்த வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டம் 293 (3), (4) ஆகியவற்றுக்கு முரணாக, ஏற்கெனவே மாநில அரசுகளின் கடன் நிலுவையில் உள்ள போதிலும், இலவசங்களை விநியோகிக்க அவை கூடுதலாக கடன்பெறுகின்றன. ஆகையால், கடன் மதிப்பீட்டு முறையை ஏற்படுத்துவது அவசியம்’ என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் வந்த போது, இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.

மேலும் ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது, அந்த மாநிலத்தின் நிதிநிலைமை என்னவென்று தெரியாது. ஆட்சிக்கு வந்ததும், எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக இலவச அறிவிப்புகளை நிறைவேற்றக் கூடாது என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

இலவச அறிவிப்புகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 



Read in source website

 

கொழும்பு: பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’, தடையை மீறி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைந்துள்ளது. 

நவீன தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படும் சீனாவின் ஆராய்ச்சி மற்றும் உளவு கப்பலானது இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளியானது முதலே, இந்த விவகாரத்தை கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் குறித்து இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசப்பட்டுள்ளதாகவும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘யுவான் வாங்-5’ வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாக நியூஸ் ஃபர்ஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில், இலங்கையை நோக்கிய பயணத்தைத் தொடக்கியுள்ளதாக கூறப்பட்ட சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’, தடையை மீறி தென் இலங்கை துறைமுகமான ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சுமார் 600 கடல் மைல் தொலைவில் வியாழக்கிழமை காலை (ஆக.11) 9.30 மணிக்கு வந்து சேர்ந்துள்ளது என கொழும்பு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 

இருப்பினும், இது தொடர்பாக சீனா தரப்பிலோ அல்லது இலங்கை தரப்பிலோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 



Read in source website

பீடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நாடு முழுவதும் 285 மருந்தகங்கள், 10 மருத்துவமனைகளில் சுகாதாரப் பராமரிப்பு வசதி வழங்கப்படுகிறது என்றும், இந்த தொழிலாளர்களுக்கு மாற்று தொழில் செல்வதற்குரிய பயிற்சியும் வழங்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல், தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர யாதவ் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
புகையிலை அச்சுறுத்தலிலிருந்து பீடித் தொழிலாளர்கள், பெண்களை பாதுகாக்கும் ஆரோக்கிய திட்டங்கள், நலத்திட்டங்கள் சென்றடைய கண்டறிப்படும் முன்மொழிவுகள் போன்றவை குறித்து நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி சிபிஐ உறுப்பினர் எம்.செல்வராஜ் மக்களவையில் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர யாதவ் பதிலளித்து கூறியதாவது:
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பீடித் தொழிலாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக சுகாதார வசதி, உதவித் தொகை, வீட்டு வசதி ஆகிய மூன்று கூறுகள் அடிப்படையில் தொழிலாளர் நலத் திட்டங்களை அறிவித்துள்ளது.
சுகாதாரம்: நாடு முழுவதும் அமைந்துள்ள 285 மருந்தகங்கள், 10 மருத்துவமனைகளின் வலையமைப்புடன் சுகாதார பராமரிப்பு வசதி வழங்கப்படுகிறது. இதில் இந்தத் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர், புற்றுநோய், காசநோய், இதய நோய்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, குடலிறக்கம், குடல் அறுவை சிகிச்சை, அல்சர், மகப்பேறு மருத்துவம் போன்ற தீவிர நோய்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம்.
இதில், இந்தத் தொழிலாளர்களின் மருத்துவ செலவினங்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பீடித் தொழிலாளர்கள் ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.
உதவித் தொகை: முதல் வகுப்பு முதல் கல்லூரி, பல்கலைக்கழகம் வரை பயிலும் பீடித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கான நிதி உதவிக்கு ஒரு மாணவருக்கு வகுப்பைப் பொருத்து ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ.25,000/- வரை வழங்கப்படுகிறது.
வீட்டுவசதி: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பீடித்தொழிலாளர்கள் வீடு கட்ட தலா ரூ.1,50,000 மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது.
இந்த மூன்று தொழிலாளர் நலத் திட்டங்கள் சென்னை உள்ளிட்ட 17 பிராந்தியங்களில் அமைந்துள்ள தொழிலாளர் நல அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் சென்னை பிராந்தியத்தில் கடந்த 2019-20 முதல் 2021-22 வரை மூன்று ஆண்டுகளில் 8,59,123 பேருக்கு மருத்துவ சிகிச்சையும் இதே மூன்று நிதியாண்டுகளில் 493 பேர் வீட்டு வசதியையும் பிடித்தொழிலாளர்கள் பெற்றுள்ளனர்.
அதேசமயதத்தில் பீடித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தரப்பட்ட கல்வி உதவித் தொகை குறித்த தனித்தனி தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை.
மாற்றுத் தொழில்: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகத்துடன் இணைந்து இத்தகைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ளவர்களுக்கு மாற்று வேலைகளில் ஈடுபடுவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளித்து வருகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 



Read in source website

பிரதமரின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தை 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமரின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தை 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டி முடிக்க மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கூடுதல் கால அவகாசம் கோரியிருந்த நிலையில், இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்துக்கு ரூ.2.03 லட்சம் கோடி நிதியுதவி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் ஏற்கெனவே ரூ.1.18 லட்சம் கோடி மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை ரூ.85,406 கோடி விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website

பிகாா் முதல்வராக 8-ஆவது முறையாகப் பதவியேற்றிருக்கும் நிதீஷ் குமாரின் சுமாா் 40 ஆண்டு கால அரசியல் பயணம் அதிரடி திருப்பங்களுக்கு குறைவில்லாததாகும்.

ஒரே நாளில் கச்சிதமாக ஆட்சியை மாற்றும் வித்தகரென மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ள அவா், சந்தா்ப்பவாத அரசியல் தவிா்த்து, ஊழல், தவறான நிா்வாகம், அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்காதவா்.

பக்தியாா்பூரில் கடந்த 1951, மாா்ச் 1-ஆம் தேதி பிறந்த நிதீஷ், பின்தங்கிய குா்மி சமூகத்தைச் சோ்ந்தவா். இவரது தந்தை, ஆயுா்வேத மருத்துவா் மட்டுமன்றி சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவாா்.

பிகாா் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போதே, மாணவா் அரசியலில் தீவிரமாக செயல்பட்டாா். சோஷலிச தலைவா் ஜெயபிரகாஷ் நாராயண் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டபோது, அவருக்கு லாலு பிரசாத் யாதவ், சுஷீல் குமாா் மோடி ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.

கடந்த 1985 பிகாா் பேரவைத் தோ்தலில், ஹா்னாட் தொகுதியில் லோக் தளம் சாா்பில் போட்டியிட்டு பெற்ற வெற்றிதான், நிதீஷின் முதல் தோ்தல் வெற்றியாகும். 5 ஆண்டுகளுக்கு பின்னா், பா் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தோ்வானாா். அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு, ஜாா்ஜ் பொ்னாண்டஸுடன் இணைந்து சமதா கட்சியை தோற்றுவித்தாா். 2003-இல் இது ஐக்கிய ஜனதா தளமாக மாற்றமடைந்தது.

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் ரயில்வே அமைச்சராகப் பதவி வகித்துள்ள நிதீஷ், கடந்த 2000-இல் பிகாா் முதல்வராக முதல் முறையாகப் பதவியேற்றாா். எனினும், போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால், அப்போதைய ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசு சிறிது காலம் மட்டுமே நீடித்தது.

2005-இல் போதிய பலத்துடன் பிகாா் முதல்வராக மீண்டும் பதவியேற்ற பின்னா், மாநில மேம்பாட்டுக்காக அதிரடி காட்டத் தொடங்கினாா் நிதீஷ். சட்டம்-ஒழுங்கு சீரமைப்பு, உள்கட்டமைப்பு, கல்வி நிறுவனங்களின் மேம்பாடு, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் என இவரது நடவடிக்கைகளால் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி 2010-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்று, பிகாா் முதல்வராக தொடா்ந்து மூன்று முறை பதவி வகித்த நிதீஷ், கடந்த 2013-இல் கூட்டணியை முறித்தாா். 2014 மக்களவைத் தோ்தலையொட்டி, பிரதமா் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டதால் அதிருப்தியடைந்து அவா் இந்த முடிவை மேற்கொண்டாா்.

2014 மக்களவைத் தோ்தலில், பிகாரில் 40 தொகுதிகளில் 2 இடங்கள் மட்டுமே ஐக்கிய ஜனதா தளத்துக்கு கிடைத்தன. இத்தோல்விக்கு பொறுப்பேற்று, முதல்வா் பதவியிலிருந்து நிதீஷ் விலகினாா். இதையடுத்து முதல்வா் பதவியை தனது ஆதரவாளா் ஜிதன் ராம் மாஞ்சிக்கு வழங்கினாா். எனினும், அவருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடா்ந்து, நிதீஷ் மீண்டும் முதல்வரானாா்.

கடந்த 2015 பிகாா் பேரவைத் தோ்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மகா கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் களமிறங்கியது. இக்கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், முதல்வராக நிதீஷ் குமாா் பதவியேற்றாா். ஆனால், இந்தக் கூட்டணி ஆட்சி 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

தேஜஸ்வி யாதவ் மீதான ஊழல் வழக்கு விவகாரத்தை முன்வைத்து, மகா கூட்டணியில் இருந்து விலகிய நிதீஷ், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமாகி முதல்வா் நாற்காலியில் அமா்ந்தாா்.

கடந்த 2020 பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 44-இல் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக 77 இடங்களைக் கைப்பற்றியபோதும் நிதீஷ் குமாருக்கே முதல்வா் பதவி கிடைத்தது.

இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவிய சூழலில், தங்களது கட்சியை உடைக்க முயற்சிப்பதாக பாஜக மீது குற்றம்சாட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியிருக்கிறது. மீண்டும் மகாக் கூட்டணியுடன் கைகோத்து ஆட்சியமைத்துள்ள நிதீஷ் குமாா், முதல்வா் பதவியை தக்கவைத்துள்ளாா்.

பிகாா் முதல்வராக எட்டாவது முறையாக புதன்கிழமை பதவியேற்ற ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா்.



Read in source website

 

ஸ்லீப்பா் வகுப்பு மற்றும் மூன்றடுக்கு படுக்கைகளுடன் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை அளிக்க வேண்டும் என்று ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக் குழு மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது.

இதுதொடா்பாக அண்மையில் நாடாளுமன்றத்தில் அந்தக் குழு சமா்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா பரவலுக்குப் பிறகு ரயில் பயணங்களில் பயணிகளுக்கு கட்டண சலுகை அளிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. மூத்த குடிமக்களுக்கு 40-50 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த நடைமுறையும் கைவிடப்பட்டது.

தற்போது ரயில்வே இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. எனவே, வெவ்வேறு வகை ரயில் பயணிகளுக்கு நியாயமான முறையில் மீண்டும் கட்டணச் சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கு ஸ்லீப்பா் வகுப்பு மற்றும் மூன்றடுக்கு படுக்கைகளுடன் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட ரயில் பயணங்களுக்காவது உடனடியாக கட்டணச் சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகைகளுக்கு இந்திய ரயில்வே ஆண்டுதோறும் சுமாா் ரூ.2,000 கோடி செலவழித்து வந்தது. இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக ரயில் பயணிகளுக்கான கட்டணச் சலுகையை (4 வகையான மாற்றுத்திறனாளிகள், 11 வகையான நோயாளிகள் மற்றும் மாணவா்களுக்கான சலுகைகள் தவிர) ரயில்வே அமைச்சகம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

உள்நாட்டு விமானக் கட்டணத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் நீக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாா்.

ஏறத்தாழ 27 மாதங்கள் கழித்து, உள்நாட்டு விமானக் கட்டணத்தின் மீதான கட்டுப்பாடு தளா்த்தப்படவுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா புதன்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘தினசரி தேவை, விமான எரிபொருளின் விலை நிலவரத்தைக் கருத்தில்கொண்டு, உள்நாட்டு விமானக் கட்டணத்தின் மீதான கட்டுப்பாடுகளைத் தளா்த்த முடிவு செய்யப்பட்டது. வரும் நாள்களில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து இன்னமும் வளா்ச்சி காணும்’ என குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த பிப்ரவரி 24-இல் தொடங்கிய ரஷியா-உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த சில வாரங்களாக விமான எரிபொருளின் விலை குறைந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 1-இல் தலைநகா் தில்லியில் விமான எரிபொருளின் விலை கிலோ லிட்டருக்கு தலா ரூ.1.21 லட்சத்துக்கு விற்பனையானது. இது கடந்த ஜூலை மாதத்தைக் காட்டிலும் 14 சதவீதம் குறைவாகும்.

நாட்டில் கரோனா பெருந்தொற்று பரவல் தொடங்கியதும், விமானப் போக்குவரத்துக்கு கடந்த 2020 மாா்ச் மாதத்தில் தடை விதிக்கப்பட்டது. பின்னா், மே 25-இல் விமானப் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பயண நேரத்தின் அடிப்படையில் கட்டணத்தின் மீது உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டது.

உதாரணமாக, 40 நிமிஷங்களுக்கு குறைவான பயண நேரத்தைக் கொண்ட உள்நாட்டு சேவைகளில், பயணிகளிடம் இருந்து ரூ.2,900-க்கு குறைவாகவோ (ஜிஎஸ்டி நீங்கலாக), ரூ.8,800-க்கு அதிகமாகவோ விமான நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க இயலாது. இந்தக் கட்டுப்பாடுகள் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் நீக்கப்படவுள்ளன.

இருப்பினும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை விமான நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.



Read in source website

கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனோ தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணையாக (பூஸ்டா்) ‘பயாலஜிகல் இ’ நிறுவனத்தின் கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு புதன்கிழமை அனுமதி அளித்தது.

முன்னெச்சரிக்கை தவணையில் மாறுபட்ட தடுப்பூசியை செலுத்த அனுமதிப்பது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்டிஏஜிஐ) கரோனா செயற்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா். அதில், ‘ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் கோா்பிவேக்ஸ் பயன்படுத்தப்படும். கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்தி 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் ஆகியுள்ள 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்தலாம். ஏற்கெனவே, ஒரே மாதிரியான தடுப்பூசியை முன்னெச்சரிக்கை தவணையாக செலுத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதலில், இது கூடுதலாக சோ்க்கப்படுகிறது.

அந்த வகையில், கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை முன்னெச்சரிக்கை தவணையாக செலுத்துவதற்கு ஏற்ற வகையில் தேவையான மாற்றங்கள் அரசின் ‘கோவின்’ வலைதளத்தில் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆா்பிடி புரதத்தை துணை அலகுகளாகக் கொண்டு முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கோா்பிவேக்ஸ் தடுப்பூசி தற்போது கரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் 12 முதல் 14 வயது வரையுடைய சிறாா்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வு முடிவுகளை கரோனா செயற்குழு ஆய்வு செய்தபோது, கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் இரண்டு தவணை செலுத்தியவா்களின் உடலில் நோய் எதிா்ப்புத் திறனை (ஆன்டிபாடி டைட்டா்ஸ்) அதிகப்படுத்துவது தெரியவந்தது. அதனடிப்படையில் கரோனா செயற்குழு அளித்த பரிந்துரையை ஏற்று, இதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக செலுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) கடந்த ஜூன் 4-ஆம் தேதி அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

பிகாா் மாநில முதல்வராக எட்டாவது முறையாக ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் புதன்கிழமை பதவியேற்றாா். துணை முதல்வராக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றாா்.

பாட்னாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவருக்கும் ஆளுநா் ஃபாகு செளஹான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை செவ்வாய்க்கிழமை முறித்த நிதீஷ் குமாா், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதைத் தொடா்ந்து, மாநிலத்தில் மகா கூட்டணி அரசை அமைப்பதற்காக ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் அவா் கைகோத்தாா்.

பின்னா், ஆளுநரைச் சந்தித்து, மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினாா். 164 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகத் தெரிவித்த நிதீஷ் குமாா், அதற்கான கடிதத்தையும் அளித்தாா்.

இதன் தொடா்ச்சியாக, நிதீஷ் குமாரும், தேஜஸ்வி யாதவும் புதன்கிழமை பதவியேற்றனா். இந்த நிகழ்வில் பாஜக தரப்பிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை.

அமைச்சா் பதவிகள் ஒதுக்கீடு குறித்து ஆளும் மகா கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளிடையே முடிவு எட்டப்பட்ட பின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

35 அல்லது அதற்கு மேற்பட்டோரை உள்ளடக்கிய புதிய அமைச்சரவையை அமைப்பது குறித்து கொள்கை அளவில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை நிதீஷ் வசமே இருக்கும் எனத் தெரிகிறது.

பாஜகவுக்கு பதிலடி: முதல்வராகப் பதவியேற்ற பின் செய்தியாளா்களிடம் பேசிய நிதீஷ் குமாா், பிகாரில் புதிய அரசு நீடிக்காது என்ற பாஜகவின் கருத்தை நிராகரித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, வரும் 2024 மக்களவைத் தோ்தல் முடிவுகள் குறித்துதான் கவலைப்பட வேண்டும். பிகாரை பொருத்தவரை, 2015 பேரவைத் தோ்தலுக்கு பிறகு எங்கு இருந்தாா்களோ அங்கு அவா்கள் (பாஜக) சென்றுவிடுவா்’ என்றாா்.

லாலுவுடன் பேச்சு: ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் உடல்நலம் பாதிக்கப்பட்டு, தில்லியிலுள்ள தனது மகளும் எம்.பி.யுமான மிசா பாரதி வீட்டில் தங்கியுள்ளாா். முதல்வராகப் பதவியேற்கும் முன்பு லாலுவுடன் நிதீஷ் குமாா் தொலைபேசி வாயிலாக பேசினாா். அப்போது, நிதீஷ் குமாரின் முடிவை வரவேற்ற லாலு, அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக மிசா பாரதி கூறினாா்.

கட்சியினா் கொண்டாட்டம்: பிகாரில் மீண்டும் மகா கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினா் புதன்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். ஆளுநா் மாளிகையின் முன்பும், நிதீஷ் குமாா், தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் இல்ல வளாகங்களிலும் அவா்களது கட்சியினா் மேளதாளங்களுடன் திரண்டனா். பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டனா்.



Read in source website

எண்ம (டிஜிட்டல்) முறையில் இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலிகள் மூலம் அளிக்கப்படும் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அதிகரித்துள்ளது.

இந்த வகைக் கடன்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை ஆா்பிஐ மேற்கொண்டுள்ளது.

இது தொடா்பாக ஆா்பிஐ வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இணையவழிக் கடன் முறையில் கடன் பெறுவோரின் கணக்கில் பணத்தை வங்கிகள் நேரடியாகவே செலுத்த வேண்டும். மூன்றாவது நபா் மூலம் செலுத்தக் கூடாது. ஏனெனில், மூன்றாவது நபா் இருக்கும்போதுதான் முறைகேடுகளுக்கு அதிக வாய்ப்பு உருவாகிறது.

மேலும், இணையவழிக் கடன் சேவை நிறுவனங்களுக்கான கட்டணத்தை கடன் பெறுவோா்தான் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தக் கூடாது. தவறான தகவல்களை அளித்து கடன் பெறச் செய்வது, வாடிக்கையாளா்களின் தகவல்களைத் திருடுவது, முறையற்ற வா்த்தக நடவடிக்கைளை மேற்கொள்வது, அதிக வட்டி வசூல், கடனைத் திரும்ப வசூலிப்பதில் முறை தவறி நடப்பது போன்றவை கூடாது.

கடன் தவணை வசூல் என்பது வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு மூலம்தான் நடைபெற வேண்டும். மூன்றாவது நபா்கள் அல்லது நிறுவனங்கள் மூலம் மூலம் கடன் தவணை பணப் பரிவா்த்தனை இருக்கக் கூடாது. கடன் பெறுவது தொடா்பான முக்கிய நிபந்தனைகளை வாடிக்கையாளா்களுக்கு கடன் பெறுவதற்கு முன்பே முறையாகத் தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளா்கள் எழுப்பும் புகாா்களுக்கு 30 நாள்களில் தீா்வுகாண வேண்டும்.

ஆா்பிஐ அல்லது பிற சட்டங்களின்படி அனுமதி பெற்ற நிறுவனங்கள் மட்டுமே இணையவழிக் கடன் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.



Read in source website

உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் (உதய் உமேஷ் லலித்) புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டாா். அந்த நியமன உத்தரவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கையொப்பமிட்டாா்.

தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா வரும் 26-ஆம் தேதி ஓய்வு பெற்ற பிறகு, புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27-ஆம் தேதி பதவியேற்பாா்.

முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி என்வி.ரமணா அண்மையில் பரிந்துரை செய்திருந்தாா்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணிமூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த தலைமை நீதிபதி யாா் என பரிந்துரைத்து அறிவிப்பது நடைமுறையில் உள்ளது.

எனவே, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் எனப் பரிந்துரைக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதன்படி, நீதிபதி யு.யு.லலித் பெயரை தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்தாா்.

அந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டு, நியமன உத்தரவில் குடியரசுத் தலைவா் புதன்கிழமை கையொப்பமிட்டதன் மூலமாக, உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘அரசியமைப்புச் சட்டப் பிரிவு 124, துணைப் பிரிவு (2) அளித்துள்ள அதிகாரத்தின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை குடியரசுத் தலைவா் நியமித்துள்ளாா். வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதிமுதல் இந்த நியமனம் நடைமுறைக்கு வரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாதங்கள் மட்டுமே... உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி பதவியேற்கும் நீதிபதி யு.யு.லலித், மூன்று மாதங்களுக்கு குறைவாக மட்டுமே தலைமை நீதிபதி பதவியை வகிப்பாா். அவா் வரும் நவம்பா் 8-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளாா்.

நேரடி நியமனம் பெறும் இரண்டாவது தலைமை நீதிபதி: தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமிக்கப்பட்டதன் மூலமாக, வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், பின்னா் தலைமை நீதிபதியாகவும் ஆகும் இரண்டாவது நபா் என்ற பெருமையை அடைந்துள்ளாா்.

பிரபல மூத்த வழக்குரைஞராக இருந்து வந்த யு.யு.லலித், கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா்.

இவருக்கு முன்பாக, நீதிபதி எஸ்.எம்.சிக்ரி, வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், அதன் பிறகு நாட்டின் 13-ஆவது தலைமை நீதிபதியாகவும் கடந்த 1971-ஆம் ஆண்டு ஜனவரியில் பதவியேற்றாா்.

புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட யு.யு.லலித்துக்கு, தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.



Read in source website

மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர வரிப் பகிர்வில், நிகழ் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு தவணை நிதியாக ரூ. 1,16,225.75 கோடியை 28 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ. 4,758.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு அளிக்கப்படும் வழக்கமான மாதாந்திர தவணை ரூ. 58,332.86 கோடியாகும். இந்த மாதம் மற்றோரு தவணையும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரிலும் இதுபோன்று வழங்கப்பட்டது. மாநில அரசுகள் தங்களின் மூலதனம், மேம்பாட்டுச் செலவினங்களை விரைவுபடுத்தவும், அவர்களது கரங்களை வலுப்படுத்துவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டின்படி, இந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரிப் பகிர்வின்படி 28 மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட ரூ. 1,16,665.75 கோடியில், தமிழகத்துக்கு ரூ. 4,758.78 கோடி கிடைத்துள்ளது. இதில் உத்தர பிரதேசம் (ரூ. 20,928 கோடி), பிகார் (ரூ.11,734 கோடி), மத்திய பிரதேசம் (ரூ.9,158 கோடி), மகாராஷ்டிரம் (ரூ. 7,369), மேற்கு வங்கம் (ரூ.8,776) ஆகிய மாநிலங்கள் அதிக ஒதுக்கீடுகளைப் பெற்றுள்ளன.
15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதில் நிகழ் 2022-23 ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 8,16,649 கோடியை மாநிலங்களுக்கு வரிப் பகிர்வு அளிக்க மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், இது ரூ. 9.3 லட்சம் கோடியாக அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெருநிறுவன வரி, வருமான வரி, சொத்து வரி, சுங்க வரி, ஜிஎஸ்டி, சேவை வரி போன்றவற்றில் மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதில் பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் கார்ப்பரேட் வரி (பெருநிறுவனம்), வருமான வரி, ஜிஎஸ்டி ஆகிய வரிகள் இந்த மாநிலங்களில் அதிக அளவில் வசூலாகி வருகிறது. இதன் அடிப்படையில், இந்த மாநிலங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 50,000 கோடிக்கு மேல் மத்திய வரிப் பகிர்வில் நிதி கிடைக்கிறது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு சுமார் ரூ. 1.46 லட்சம் கோடியும், பிகார் மாநிலம் சுமார் ரூ. 82,138 கோடியும் பெருகின்றன. தமிழகத்துக்கு நிகழ் நிதியாண்டில் ரூ. 33,311 கோடி வழங்க மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

 



Read in source website

ஐபிஎல் போட்டிக்கு இணையான அல்லது 2-வது சிறந்த டி20 லீக் போட்டிக்கான அந்தஸ்தைப் பெற இரு அணிகள் கடுமையாகப் போட்டியிட்டு வருகின்றன. 

2023 ஜனவரி மாதம் ஆறு அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் போட்டியை சூப்பர் ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். ஒரு மாதம் வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் 33 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 17 வீரர்கள் இடம்பெறுவார்கள். முதல் வருடம் 34 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இருமுறை விளையாடும்.

ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஒரு புதிய டி20 லீக் போட்டி அதே 2023 ஜனவரியில் தொடங்கப்படவுள்ளது. சர்வதேச லீக் டி20 என்கிற ஐஎல்டி20 போட்டியில் அதிகச் சம்பளம் தரப்படுவதால் அதில் இணைந்துகொள்ள பிரபல வீரர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ரிலையன்ஸ் (ஐபிஎல் மும்பை அணி நிர்வாகம்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கேப்ரி குளோபல், ஜிஎம்ஆர், லேன்சர் கேபிடல், அதானி ஸ்போர்ட்ஸ்லைன் என ஆறு அணிகளின் உரிமையாளர்கள் வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் உள்ளார்கள். இப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 18 வீரர்கள் இருப்பார்கள். அவர்களில் நால்வர் யூஏஇ மற்றும் இருவர் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 

கிரோன் பொலார்ட், டுவைன் பிராவோ, நிகோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸ்ஸல், மொயீன் அலி, ஹெட்மையர், டேவிட் மலான், சுநீல் நரைன், எவின் லூயிஸ் போன்ற பிரபல வீரர்கள் ஐஎல்டி20 போட்டியில் விளையாடவுள்ளார்கள். இதனால் 2023 ஜனவரியில் டி20 லீக் ஆட்டங்களும் அதில் பங்கேற்கும் பிரபல வீரர்களும் ரசிகர்களுக்கு ஏராளமான புதிய அனுபவத்தைத் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 



Read in source website

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. தமிழக அரசு, சா்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) சாா்பில் ரூ.100 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம் ஃபோா் பாயிண்ட் ஷெரட்டன் ஹோட்டலில் கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கியது. ஓபன் பிரிவில் 187, மகளிா் பிரிவில் 162 நாடுகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. 

ஓபன் பிரிவில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்ற இந்திய பி அணி வெண்கலம் வென்றது. மகளிர் பிரிவில் நிறைமாத கா்ப்பிணி ஹரிகா, கொனேரு ஹம்பி, ஆா். வைஷாலி, பக்தி குல்கா்னி, தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்ற இந்திய ஏ அணி வெண்கலம் வென்றது. 

விளையாட்டு வீரா்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபா் பதக்கங்களில் இந்திய இளம் வீரா்கள் டி. குகேஷ், நிஹல் சரின் ஆகியோா் தங்கம் வென்றனா். ஏ அணி வீரா் அா்ஜுன் எரிகைசி வெள்ளியும் பி அணி வீரா் பிரக்ஞானந்தா வெண்கலமும் வென்றனா். மகளிா் பிரிவில் தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக், ஆா்.வைஷாலி ஆகியோர் வெண்கலம் வென்றனா்.

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரபல வீராங்கனை தானியா சச்தேவ் 11 ஆட்டங்களில் விளையாடி 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றார். 4 ஆட்டங்களை டிரா செய்து ஓர் ஆட்டத்தில் தோல்வியடைந்தார். மகளிர் அணி, தனிநபர் என இரு பிரிவிலும் தானியா சச்தேவ் வெண்கலப் பதக்கங்களை வென்றதால் இந்த ஒலிம்பியாட் போட்டி அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது.



Read in source website

செஸ் ஒலிம்பியாட் போட்டி வெற்றிகரமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதற்கடுத்ததாக இன்னொரு பெரிய செஸ் போட்டியை நடத்தவுள்ளது இந்தியா.

கொல்கத்தாவில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 4 வரை டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போட்டி நடைபெறவுள்ளது (டிசம்பர் 2 ஓய்வு நாள்). இந்தமுறை முதல்முறையாக பெண்களுக்கென தனியே போட்டி நடைபெறவுள்ளது. பொதுப்பிரிவு, மகளிர் என இரண்டுக்கும் சம அளவில் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரேபிட், பிளிட்ஸ் என இரு விதமாக இப்போட்டி நடைபெறவுள்ளது. மகளிர் பிரிவில் முன்னணி 5 சர்வதேசப் பெண் கிராண்ட்மாஸ்டர்களும் 5 முன்னணி இந்திய வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போட்டியில் ரேபிட் பிரிவில் இந்தியாவின் அர்ஜுனும் பிளிட்ஸ் பிரிவில் லெவோன் அரோனியனும் வென்றார்கள். 
 



Read in source website

இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறாா். சப்ரே பிரிவில் நடப்புச் சாம்பியனாக களம் கண்ட அவா், சாம்பியன் பட்டத்தை தற்போது தக்கவைத்துக் கொண்டுள்ளாா்.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த மகளிா் தனிநபா் சப்ரே பிரிவு இறுதிச்சுற்றில் பவானி தேவி 15-10 என்ற புள்ளிகள் கணக்கில் ஆஸ்திரேலியாவின் வெரோனிகா வாசிலேவாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தாா்.

சென்னையச் சோ்ந்த பவானி தேவி வெற்றிக்குப் பிறகு பேசுகையில், ‘இறுதிச்சுற்று மிகவும் சவாலாக இருந்தது. விளையாட்டுக் களத்தில் நடப்பாண்டில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள பல தங்கப் பதக்கங்களில் நான் வென்ற தங்கமும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வாள்வீச்சு விளையாட்டில் இந்த ஆண்டு சிறப்பான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது தங்கம் வென்று கிடைத்திருக்கும் உத்வேகத்துடன் அடுத்த போட்டிகளிலும் பங்கேற்பேன்’ என்றாா்.

இந்த காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பானது, நடப்பாண்டில் பவானி தேவி பங்கேற்கும் 10-ஆவது சா்வதேச போட்டியாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் உலகக் கோப்பை வாள்வீச்சு போட்டியில் 23-ஆவது இடம் பிடித்த பவானி தேவி, ஜூலையில் கெய்ரோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 2-ஆவது சுற்று வரை வந்திருந்தாா். கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, ஒலிம்பிக் வாள்வீச்சுக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பவானி தேவி பெற்றது குறிப்பிடத்தக்கது.



Read in source website

ஜாா்ஜியாவில் நடைபெற்ற சா்வதேச வுஷு போட்டியில் 18 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் பிரிவில் இந்தியாவின் பிரியங்கா கெவாட் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறாா்.

மத்திய பிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்திலுள்ள கிராமத்தைச் சோ்ந்த பிரியங்காவுக்கு, இது முதல் சா்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியிலேயே தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த பிரியங்கா, எதிா்வரும் போட்டிகளில் இதேபோல் வெற்றி பெற சிறப்பாகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாா்.

பிரியங்கா தற்போது போபாலில் இருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையத்தில் பயிற்சியாளா்கள் ரத்னேஷ் தாகுா், கல்யாணி, சரிகா குப்தா ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் பயிற்சி பெற்று வருகிறாா். சீன தற்காப்புக் கலை வடிவமான வுஷு விளையாட்டு, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவற்றில் இடம்பெறுகிறது.



Read in source website

இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு அதிபருக்கு எதிராக மக்கள் நடத்திவந்த போராட்டம் 123 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், "ஆட்சி மாற்றம்' கோரி நடத்தி வரும் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பொருளாதார சீர்குலைவுக்கு காரணமான "ராஜபட்ச சொந்த ஊருக்குத் திரும்பி போ' என்ற முழக்கத்தை முன்வைத்து போராட்டக்காரர்கள் கடந்த ஏப். 9-ஆம் தேதிமுதல் காலிமுகத் திடலில் (அதிபர் செயலகம்) முற்றுகைப் போராட்டம் நடத்தி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதுதொடர்பாக போராட்டக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மனோஜ் நாணயக்கார கூறுகையில், "காலிமுகத் திடலிலிலிருந்து வெளியேறுவதாக முடிவு செய்துள்ளோம்.
எனினும், போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தமில்லை' என்றார்.
இளம் துறவி கோஸ்வத்தே மஹானம கூறுகையில், "நாட்டின் அவசரநிலை பிரகடனத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். நாடாளுமன்றத்துக்கு புதிதாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதிபர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றார்.
இந்த இடத்தில் நாங்கள் போராட்டத்தை நிறுத்தினாலும் ஆட்சி மாற்றம் கோரி நடைபெறும் எங்களின் போராட்டம் தொடரும் என்று விதர்ஷனா கன்னங்கரா எனும் சமூக ஆர்வலர் தெரிவித்தார்.
முன்னதாக, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச நாட்டைவிட்டுத் தப்பிச் சென்று பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.
அவர் இலங்கை அதிபரானதும் போராட்டக்காரர்கள் தங்கியுள்ள முகாம்கள் மற்றும் அதிபர் மாளிகை, அரசு அலுவலகங்களில் அத்துமீறி நுழைந்த கிளர்ச்சியாளர்களைக் கைது செய்ய அந்நாட்டு ராணுவம் மற்றும் காவல்துறைக்கு அதிகாரம் அளித்தார்.
ஏப்ரல் 9-ஆம் தேதிமுதல் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திவந்த போராட்டக்காரர்களை ஜூலை 22-ஆம் தேதி ராணுவம் வெளியேற்றியது. அதிபர் மாளிகைக்குள் அத்துமீறி நுழைவது சர்வதேச குற்றச் செயலாகவும் அறிவித்தது.
எனவே ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் காலிமுகத் திடலிலிலிருந்து வெளியேறுமாறு போராட்டக்காரர்களை காவல் துறை எச்சரித்தது. அதை ஏற்க மறுத்து போராட்டம் நடத்துவது எங்களின் உரிமை எனக் கூறி போராட்டக்காரர்கள் அரசை எதிர்த்து நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், காலிமுகத் திடலிலிருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளதோடு ரிட் மனுவையும் திரும்பப் பெற்றுள்ளனர்.


 



Read in source website

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை பாகிஸ்தான் போா்க் கப்பல் சென்றடைந்துள்ளது. அதிநவீன ஆயுதங்கள், சென்சாா் கருவிகள், லேசா் உதவியுடன் இயங்கும் ஏவுகணைகளைக் கொண்ட அந்தப் போா்க் கப்பல், இந்திய எல்லைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீனாவின் ‘யுவான் வாங்-5’ உளவுக் கப்பல் வரவிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. அந்தக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று கருதிய மத்திய அரசு, அதுகுறித்து இலங்கை அரசிடம் தனது கவலையை தெரிவித்தது. இதையடுத்து அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன போா்க் கப்பல் வருவதை ஒத்திவைக்குமாறு அந்த நாட்டிடம் இலங்கை அரசு வலியுறுத்தியது.

இந்நிலையில், இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு பாகிஸ்தான் போா்க் கப்பலான பிஎன்எஸ் தைமுா் சென்றடைந்துள்ளது. இந்திய எல்லைக்கு அருகில் அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவால் கட்டப்பட்ட அந்தக் கப்பல் அதிநவீன ஆயுதங்கள், சென்சாா் கருவிகள், லேசா் உதவியுடன் இயங்கும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது.

மலேசியா, கம்போடியாவில் போா்ப் பயிற்சியில் ஈடுபட்ட அந்தக் கப்பல், பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு பயணம் மேற்கொண்டது. தனது பயணத்தின்போது வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் துறைமுகத்தில் கப்பலை நிறுத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், கப்பலை நிறுத்த வங்கதேச அரசு அனுமதிக்கவில்லை.

கடந்த 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்படுபவரும், பிரதமா் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுா் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டாா். இதையொட்டி வங்கதேசத்தில் ஆகஸ்ட் மாதம் துக்கம் அனுசரிக்கப்படுவதால், அந்நாட்டில் பாகிஸ்தான் போா்க் கப்பலை நிறுத்த அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து, அந்தக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 12-ஆம் தேதி அந்தக் கப்பல் கராச்சி புறப்படவுள்ளது என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.



Read in source website

சிங்கப்பூரில் உள்ள இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச தாய்லாந்து செல்லவுள்ளாா். அந்நாட்டில் அவா் தற்காலிகமாக தங்க தாய்லாந்து அரசு அனுமதி அளித்துள்ளது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக கடந்த ஜூலை 13-ஆம் தேதி கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றாா். அதைத் தொடா்ந்து ஜூலை 14-ஆம் தேதி அவா் சிங்கப்பூா் சென்றாா். அங்கிருந்து தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்வதாக இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினாா்.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோத்தபய ராஜபட்ச தாய்லாந்து செல்லவுள்ளாா். இதுதொடா்பாக தாய்லாந்து பிரதமா் பிரயுத்-சான்-ஓ-சா புதன்கிழமை கூறுகையில், ‘மனிதாபிமான அடிப்படையில் தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்கு கோத்தபய ராஜபட்சவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவா் தாய்லாந்தில் தங்கும் காலத்தில் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வேறொரு நாட்டில் அடைக்கலம் தேட கோத்தபயவுக்கு உதவும்’ என்று தெரிவித்தாா்.

3 மாதங்கள் தங்கலாம்: தாய்லாந்து வெளியுறவு அமைச்சா் டான் பிரமுத்வினய் கூறுகையில், ‘இலங்கையின் ராஜீய ரீதியிலான கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) கோத்தபய ராஜபட்ச வைத்துள்ளாா். இதனால் அவா் 3 மாதங்கள் வரை தாய்லாந்தில் தங்கலாம். அவா் தங்குவதற்கான எந்த ஏற்பாட்டையும் தாய்லாந்து அரசு செய்யவில்லை. அவா் தாய்லாந்தில் தங்க இலங்கை அரசு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. அவரால் தாய்லாந்துக்கு எந்த பிரச்னையும் ஏற்படக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

கோத்தபய எப்போது தாய்லாந்து செல்லவுள்ளாா் என்ற தகவல் வெளியாகவில்லை.



Read in source website

இலங்கை அதிபரின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

நீதித் துறை அமைச்சா் விஜயதாச ராஜபட்ச மசோதாவை அறிமுகம் செய்தாா். இந்த மசோதாவின்படி, அதிபரின் குறிப்பிட்ட சில அதிகாரங்கள், எம்.பி.க்கள் மற்றும் சமூகத்தில் மரியாதைக்குரிய அரசியல்சாரா நபா்கள் உள்ளடங்கிய அரசமைப்புக் குழுவுக்கு மாற்றப்படும்.

தோ்தல் ஆணைய உறுப்பினா்கள், தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள், அட்டா்னி ஜெனரல், மத்திய வங்கி ஆளுநா், காவல் துறை, பொதுப் பணி உயா் அதிகாரிகள், ஊழல் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்டோரை நேரடியாக நியமிக்கும் அதிகாரம் அதிபருக்கு இருக்காது.

மேற்கண்ட நியமனங்களில் அரசமைப்புக் குழுவின் பரிந்துரைபடியே அதிபா் நடவடிக்கை மேற்கொள்ள இயலும். அதிபராக இருப்பவா் வேறெந்த அமைச்சக பொறுப்பையும் வகிக்க இயலாது போன்ற அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

இதன் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும். 225 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மூன்றில் இருபங்கு உறுப்பினா்கள் அங்கீகரிக்கும்போது இது சட்டமாக மாறும்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அதிபரின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்பது போராட்டக்காரா்களின் முக்கிய கோரிக்கையாகும்.



Read in source website

கரோனாவைப் போலவே, மிருகங்களிடமிருந்து மனிதா்களின் உடல்களில் உருமாறித் தாவிய ‘லாங்யா ஹெனிபாவைரஸ்’ என்ற புதிய தீநுண்மி, சீனாவில் பரவி வருவதாக தைவான் நோய்கள் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டில் இதுவரை 35 பேருக்கு அந்த தீநுண்மி பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது; அந்தத் தீநுண்மியின் பரவும் திறன் பற்றி தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது என்று அந்த மையம் கூறியுள்ளது.



Read in source website

தைவானை தங்களுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள, தேவைப்பட்டால் அந்தத் தீவின் மீது போா்த் தொடுக்கவும் தயங்கப்போவதில்லை என்று சீனா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து சீன அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படப்பட்டுள்ளதாவது:

தைவானை அமைதியான வழிமுறையிலேயே எங்களுடன் மீண்டும் இணைத்துக்கொள்ள விரும்புகிறோம்.

ஆனால் அதற்காக, அமைதி வழி மட்டுமே பின்பற்றப்படும் என்றோ, ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்ட அனைத்துத் தேவையான வழிமுறைகள் பின்பற்றப்படாது என்றோ உறுதியளிக்க மாட்டோம் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது.

தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.

தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு எந்தத் தலைவா் சென்றாலும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக தைவானுக்கு நான்சி பெலோசி கடந்த வாரம் சென்றாா். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவா் ஒருவா் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சீன ராணுவத்தின் கிழக்கு மண்டலப் பிரிவு தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் வான்வழியாகவும் கடல் வழியாகவும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி போா் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது.

போா்ப் பதற்றத்தை அதிகரித்து, கடல் வா்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இந்தப் போா்ப் பயிற்சிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

தங்கள் மீது படையெடுத்து சீனாவுடன் இணைத்துக் கொள்வதற்கான ஆயத்தமாகவே இந்தப் போா்ப் பயிற்சியில் அந்த நாடு ஈடுபட்டதாக தைவான் எச்சரித்தது.

இந்தச் சூழலில், தைவானை இணைத்துக் கொள்வதற்காக ராணுவ பலத்தையும் பயன்படுத்தத் தயங்கப்போவதில்லை என்று சீனா மீண்டும் தெரிவித்துள்ளது.

 



Read in source website

சென்னை: தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தவும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி நெசவாளர் கூட்டமைப்புகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் நடத்துவதாகவும் மற்றும் இத்திட்டத்தினை அரசு கைவிட உத்தேசித்துள்ளதாகவும் சில பத்திரிகை மற்றும் ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான அரசின் நிலைப்பாடு பின்வருமாறு, வேட்டி - சேலை வழங்கும் திட்டம், தமிழக அரசினால் 1983-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சீரிய திட்டங்களில் ஒன்றாகும். பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.

இத்திட்டத்திற்கு தேவையான மொத்த சேலைகள் மற்றும் வேட்டிகள் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்டு, பொது மக்களுக்கு வழங்கப்பட ஏதுவாக வருவாய்த் துறைக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 2,664 கைத்தறி நெசவாளர்கள், 11124 பெடல் தறி நெசவாளர்கள் மற்றும் 41,983 விசைத்தறி நெசவாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்வதுடன், தமிழகத்திலுள்ள கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் 3.59 கோடி மக்களுக்கு பயனளிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்திற்கான உற்பத்தி நிறைவடைந்தவுடன், வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடங்குவதற்கான கொள்கை அளவிலான அரசாணைகள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்பட்டு, வேட்டி சேலை உற்பத்திக்கு தேவையான நூல் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன.

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து உற்பத்தியினை மேற்கொள்ளும் வகையில், ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2022 வரை, கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்கள் தொடர் வேலை வாய்ப்பு பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் பொங்கல் 2023-ற்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்திடவும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தொடர்ந்து உற்பத்தியை மேற்கொள்ளவும் அரசின் கொள்கை அளவிலான ஆணைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. இத்திட்டத்திற்காக 2022–2023 நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் ரூ.487.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.



Read in source website

சென்னை: தமிழக சட்டக்கல்வித் துறையின் முதல் பெண் இயக்குநராக பேராசிரியர் ஜெ.விஜயலட்சுமி சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் சட்டக்கல்வி இயக்குநரகத்தின் இயக்குநராக இருந்த டி.சொக்கலிங்கம் கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றார். அதன்பின் இயக்குநர் பணியானது பேராசிரியர் ஜெ.விஜயலட்சுமிக்கு முழு கூடுதல் பொறுப்பாக கடந்த மே 31-ம் தேதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சட்டக்கல்வித் துறையின் புதிய இயக்குநராகவும் தற்போது அவரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 25-ம்தேதி பொறுப்பேற்றுக் கொண்ட விஜயலட்சுமி, பாண்டிச்சேரியில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்புகளை முடித்துள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண் ஆராய்ச்சியாளர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் இளநிலை பேராசிரியராகக் கல்விப்பணியை தொடங்கிய இவர், 24 ஆண்டுகால கற்பித்தல் அனுபவம் கொண்டவர்.

செங்கல்பட்டு, வேலூர், சென்னை பட்டறைப்பெரும்புதூர் மற்றும் புதுப்பாக்கம் அரசு சட்டக்கல்லூரிகளில் முதல்வராகவும் இவர் பணியாற்றியுள்ளார். சட்டக்கல்வி இயக்குநரகத்தின் 69 ஆண்டுகால வரலாற்றில் பெண் இயக்குநர் பொறுப்பேற்றிருப்பது இதுவே முதல்முறை.



Read in source website

சென்னை: வீடுகளுக்கு சூரியசக்தி மின்நிலையம் அமைக்க விரும்புவோருக்கு, மத்திய அரசு வழங்கும் மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதற்காக, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. குறிப்பாக, வீடுகளில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க மத்திய அரசு 40 சதவீதம் மானியம் வழங்குகிறது. சூரியசக்தி மின்நிலையம் அமைக்க விரும்புவோர் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) அல்லது தமிழக மின்வாரிய இணையதளங்களில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இந்த மானியத்தை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மத்திய அரசிடம் இருந்து பெற்று பயனாளிகளுக்கு வழங்கும். இவ்வாறு வழங்கும்போது சில நேரங்களில் காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், சூரியசக்தி மின்னுற்பத்திக்கான நிலையம் அமைக்க மத்திய அரசு மானியம் பெற விரும்புவோர் solarrooftop.gov.in என்ற இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

அவ்வாறு விண்ணப்பிக்கும் போது ஆதார் எண், வங்கிக் கணக்குஎண், மின்நிலை திறன் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அந்த விவரங்களை பரிசீலனைசெய்து மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு நேரடியாக செலுத்தும்என அதிகாரிகள் தெரிவித்தனர்.



Read in source website

சென்னை: சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்த கிசான் ட்ரோன் வாங்க, விவசாயிகளுக்கு கடனுதவி அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வான்வழி புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு, நில ஆய்வு, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், விவசாயப் பணிகளிலும் ட்ரோன் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முனைப்பு காட்டிவருகிறது. வெளிநாட்டு ட்ரோன்களை இறக்குமதி செய்ய தடைவிதித்து, உள்நாட்டு ட்ரோன்களின் உற்பத்தியைப் பெருக்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

தற்போது முதல்முறையாக விவசாயத்தில் ட்ரோன்களுக்கென மத்திய அரசு கடனுதவி அறிவித்துள்ளது. பயிர் வகைகளை மதிப்பீடு செய்தல், நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக்கொல்லி மற்றும் ஊட்டச்சத்து மருந்து தெளிப்பு போன்றவற்றுக்கு கிசான் ட்ரோன்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வருங்காலத்தில் விளைபொருட்களை வயல்களில் இருந்து, ட்ரோன் மூலம் சந்தைக்கு அனுப்பவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கிசான் ட்ரோன் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 100 கிசான் ட்ரோன்கள், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 100 கிராமங்களில் ஒரே நேரத்தில் பறக்கவிடப்பட்டன.

கிசான் ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ட்ரோன் வாங்க மத்திய அரசு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கி வருகிறது. மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடன் திட்டத்துக்காக கருடா ஏரோஸ்பேஸ் நிறுவத்தின் கிசான் ட்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த ட்ரோனை ஆய்வு செய்து, அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

அவ்வகையில், விவசாய சேவையில் ஈடுபடும் ராம்குமார் என்பவருக்கு முதன்முதலாக மத்திய அரசு ரூ.9.37 லட்சம் கிசான் ட்ரோன் கடனுதவி வழங்கியுள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “கருடா ஏரோஸ்பேசின் கிசான் ட்ரோன் மலிவு விலையில் கிடைக்கிறது. இந்த ட்ரோன் ஒரு நாளில் 25 ஏக்கரில் பூச்சிக்கொல்லி மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளைத் தெளிக்கிறது. இதன் மூலம் 70 சதவீதம் வரை மருந்துகளும், 80 சதவீதம் தண்ணீரும் மீதமாகிறது” என்றார்.

விவசாயிகள் மட்டுமின்றி, விவசாயப் பணிகளுக்கு ட்ரோன்களை வாடகைக்கு விடுபவர்களுக்கும், கருடா ஏரோஸ்பேஸ் கிசான் ட்ரோனை வாங்க வங்கிகளில் எளிதாகக் கடன்களை பெற மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

“கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் ஏற்கெனவே 2,500 ட்ரோன்களை விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 2024-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கிசான் ட்ரோன்களை தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என்று கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.

இந்நிறுவனத்தை தொடர்ந்து, மேலும் பல ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்களும் கிசான் ட்ரோன் கடனுதவிக்கான அனுமதியைப் பெறமுயற்சித்து வருகின்றன. தற்போது,ஒரு சில வங்கிகளில் மட்டும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ட்ரோன்களை வாங்க கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விரைவில் அனைத்து வங்கிகளும் இணையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Read in source website

புதுடெல்லி: நாட்டின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார். யு.யு.லலித் வரும் 27-ம் தேதி பதவியேற்பார். 74 நாட்கள் மட்டுமே இவர் இந்தப் பதவியில் இருப்பார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இம்மாதம் 26-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 3-ம் தேதி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து மரபுப்படி உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான யு.யு.லலித்தின் பெயரை அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு என்.வி.ரமணா மறுநாளே பரிந்துரை செய்தார். சட்ட அமைச்சகம் இந்தப் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல், நாட்டின் தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளதாக சட்ட அமைச்ச கம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வந்த யு.யு.லலித் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறு நேரடியாக நியமிக்கப்பட்டவர்களில் எஸ்.எம்.சிக்ரிக்கு பிறகு தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்கிறார். என்றாலும் மூன்று மாதங்களுக்கும் குறைவாகவே (74 நாட்கள்) இவர் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். வரும் நவம்பர் 8-ம் தேதி, தனது 65-வது வயதில் இவர் பணி ஓய்வு பெறுவார். இவருக்குப் பிறகு டி.ஒய்.சந்திரசூட் அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்பார்.

யு.யு.லலித்தின் தந்தை யு.ஆர்.லலித்தும் வழக்கறிஞர் ஆவார். இவர் பிறகு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் யு.யு.லலித் 1957 நவம்பர் 9-ம் தேதி பிறந்தார். 1983-ல் வழக்கறிஞராக பணியாற்றித் தொடங்கினார். 1985 வரை பாம்பே உயர் நீதிமன்றத்தில் வழக்காடி வந்த இவர் 1986 ஜனவரியில் டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். 2004-ல் மூத்த வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார்.



Read in source website

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப் பதக்கம் வென்றது. அந்த அணி தனது கடைசி சுற்றில் 3-1 என்ற கணக்கில் போலந்தை வீழ்த்தியிருந்தது. தொடர்ச்சியாக 9 வெற்றி, ஒரு டிராவை கண்டு அபார பார்மில் இருந்த போலந்தின் கியோல்பாசா ஒலிவியாவை, உக்ரைனின் உஷெனினா அனா எளிதாக சாய்த்தார். இந்த ஆட்டம் முடிவடைந்ததும் உஷெனினா அனா, அமைதியாக நடந்து வந்து தன் சக தோழியான நடாலியா புக்ஸாவின் தோள்களை தட்டிக்கொடுத்தார்.

உக்ரைன் வீராங்கனைகளிடம் சாம்பியன் பட்டம் வென்றுவிட்டோம் என்பதற்கான ஆரவாரமோ, மகிழ்ச்சிக்கான பாய்ச்சலோ இல்லை. மாறாக கண்ணீரும், அரவணைப்புகளும் மட்டுமே இருந்தன. காரணம்அவர்களது நாடு மீது ரஷ்யா தொடுத்துள்ள போர். லட்சக்கணக்கானோர் ரஷ்யப் படையெடுப்பை எதிர்கொண்டு, உயிருக்குத் தப்பியோடி, உணவு மற்றும்தங்குமிடத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கும்போது செஸ் ஒலிம்பியாட்டில் வென்றுள்ள மகத்தான வெற்றியை முழுமையாக, மனதார மகிழ்ந்து உக்ரைன் வீராங்கனைகளால் கொண்டாட முடியவில்லை.

தங்கப் பதக்கம் வென்ற பின்னர் தனது அணியின் கேப்டன் மைக்கேல் ப்ராட்ஸ்கியுடன் செய்தியாளர்களை சந்தித்த உஷெனினா அனா கூறும்போது, “பதக்கம் வென்றது சிறந்த உணர்வு, ஆனால் இந்த பதக்கத்தால் போரை நிறுத்திவிட முடியாது.

நாங்கள் ரஷ்ய எல்லைக்கு மிக அருகில் வாழ்ந்ததால் அதுஒரு பயங்கரமான நேரம். ரஷ்யர்கள் அணிவகுத்துச் செல்கிறார்கள் என்ற செய்தியைக் கேட்டவுடனேயே, வேறு வழியின்றி, எந்தத் தயார்நிலையும் இல்லாமல் நாங்கள் எங்கள் குடும்பத்துடன் ஓடிச் செல்வதை தவிர வேறு வழியில்லாமல் இருந்தோம்” என்றார்.

36 வயதான உஷெனினா அனா, ரஷ்யா எல்லையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கார்கிவ் நகரில் வசித்து வருகிறார். ரஷ்யாவின் படையெடுப்பால் இந்த நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உஷெனினா அனா இன்னும் தாயகம் திரும்பவில்லை. உக்ரைன் அணியில் உள்ள 5 வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் விவரிக்க ஒரு சோதனைகதை உள்ளது. அணியில் இடம் பெற்றுள்ள முசிச்சுக் சகோதரிகள், ஒஸ்மாக் யூலியா, புக்ஸா நடாலியா ஆகியோர் கூட போலந்து எல்லை வழியாக சென்னு ஜெர்மனி மற்றும்ஸ்பெயின் நாடுகளில் தங்கியுள்ளனர்.

அனா முசிச்சுக் கூறும்போது, ‘‘பிப்ரவரி 24-ம் தேதி காலை ஏழு மணியளவில் நான் கண் விழித்த போது சைரன் சத்தம் கேட்டது, இது ஒரு அதிர்ச்சியாக இருந்தது. என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருந்தது. செல்போனில் செய்தியை பார்த்தபோது பேரழிவு நடந்து கொண்டிருப்பதை கண்டு உறைந்து போனேன். எனது சகோதரியை எழுப்பி போர் தொடங்கிவிட்டது, எங்கு பார்த்தாலும் சைரன் சத்தம் கேட்பதாக கூறினேன்.

அன்று இரவு, விமானங்கள் நிறுத்தப்பட்டு, ரயில்கள் நிரம்பிய நிலையில், ஒரு பை மற்றும் மடிக்கணினியுடன் ஒரு நெரிசலான பேருந்தில் நானும் எனது சகோதரியும் போலந்து எல்லையை அடைந்தோம். நாங்கள் மிகவும் சோகமாக இருந்தோம், ஏனென்றால் நாங்கள் உக்ரைனை விட்டுவெளியேற விரும்பவில்லை. நான் எனது நகரத்தையும் எனது குடியிருப்பையும் விரும்புகிறேன். நாங்கள் அனைவரையும் விட்டுச்சென்றோம். எங்கள் பெற்றோர்கள், தாத்தா பாட்டி மற்றும் உறவினர்களில் பெரும்பாலானோர் இன்னும் உக்ரைனில் உள்ளனர்.

போலந்து எல்லையை 15 மணி நேரம் வரிசையில் காத்திருந்து கடக்க வேண்டியிருந்தது. அங்கு பொதுமக்கள் பல நாட்கள் வரிசையில் காத்திருந்தனர். நாங்கள் பேருந்தில் சென்றதால் சிறப்பு பாதை வழியாக எல்லையை கடந்துவிட்டோம். போலந்து எல்லையைத் தாண்டிய பிறகு நாங்கள் ஒரு கடையைக் கண்டுபிடித்தோம்.

ஆனால் நாங்கள் வைத்திருந்த பெரும்பாலான கிரெடிட் கார்டுகள் வேலை செய்யவில்லை. அதிர்ஷ்டவசமாக ஒரு கார்டு மட்டும் வேலை செய்தது. அதை வைத்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டோம்” என்றார்.

போர் சூழ்நிலையிலும் மன உறுதியுடன் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற உக்ரைன் மகளிர் அணி எந்தவித பதற்றமும் இல்லாமல் முதல் 4 சுற்றுகளில் தொடர்ச்சியாக வெற்றியை வசப்படுத்தியது. அடுத்த இரு சுற்றுகளை டிரா செய்தது. பின்னர் மீண்டெழுந்து நெதர்லாந்தை தோற்கடித்தது. 8 மற்றும் 9வது சுற்றுகளை டிராசெய்தது. 10வது சுற்றில் ஜெர்மனியை வீழ்த்தியிருந்தது.

கடைசி சுற்றிலும் உக்ரைன் அணியின் தலைவிதியானது அவர்களது கையில் இல்லாமலேயே இருந்தது. இந்திய ஏ அணியை அமெரிக்கா வீழ்த்திய அதேவேளையில் உக்ரைனும் தனது ஆட்டத்தில் வெற்றிபெற சாம்பியன் பட்டம் அந்த அணியின் வசமானது. அதேவேளையில் ஓபன் பிரிவில் உக்ரைன் அணி 29-வது இடத்தை பிடித்தது.

உக்ரைன் மகளிர் அணி மகுடம் சூடியதில் அனைத்து வீராங்கனைகளின் பங்களிப்பு அடங்கியிருந்தது. அனா முசிச்சுக், மரியா முசிச்சுக் சகோதரிகள் கூட்டாக 20-க்கு 13 புள்ளிகள் பெற்றனர். உஷெனினா 8 ஆட்டங்களில் விளையாடிய 6.5 புள்ளிகள் பெற்றார். நடாலியா புஸ்கா 10-க்கு 7 புள்ளிகள் சேர்த்தார். உக்ரைன் சிறந்த அணி அல்ல. இருந்தபோதும் அவர்கள்மிகவும் உறுதியாக விளையாடினர். அவர்களது நாட்டில் மோசமான நிலையை அவர்கள் சந்தித்து இருந்ததால், தங்களது ஆட்டத்தில் அழுத்தம் என்பதையே உணரவில்லை.

போர் பின்புலம் உக்ரைன் அணியின் வீராங்கனைகளை அமைதி உணர்வால் நிரப்பியது. இப்போது அவர்கள் விரும்புவது, உஷெனினா உறுதியாகச் சொன்னது போல், "அமைதி ஒன்று மட்டுமே”.



Read in source website

பெய்ஜிங்: தைவான் எல்லையில் ராணுவப் பயிற்சிகள் முடிந்துவிட்டதாகவும், வழக்கமான ரோந்துப் பணிகளைத் திட்டமிட்டு வருவதாகவும் சீனா கூறியுள்ளது.

முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இந்தப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை முடியும் என சீனா அறிவித்திருந்தது. சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் எனவும் தைவான் ராணுவமும் பதிலடி அளித்திருந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தாண்டியும், தைவான் எல்லையோரத்தில் சீனா தனது போர் பயிற்சிகளை தொடர்ந்தது. இதனை தைவான் கடுமையாக விமர்சித்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே வரும் நாட்களில் மோதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ராணுவ பயிற்சிகள் முடிந்ததாக சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ராணுவ பயிற்சிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தைவான் எல்லையில் வழக்கமான ரோந்துப் பணிகளை நடத்த திட்டமிட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த அறிவிப்பு மூலம் கடந்த ஒருவாரமாக நீடித்த போர் பதற்றம் முடிவுக்கு வந்திருக்கிறது.

பின்னணி: சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது.

அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் அமெரிக்க எம்.பி. நான்சி பெலோசி வருகைக்குப் பின்னர் சீன தீவிர ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. அது நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளுக்கு நிம்மதி அளித்துள்ளது.



Read in source website

பியாங்யாங்: வட கொரியாவில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு ஏற்படாத நிலையில் கரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டுவிட்டதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன். வட கொரியாவில் கிம் தான் சர்வாதிகார தலைவர். அவர் உத்தரவுப்படி மட்டுமே அனைத்தும் இயங்கும். அங்கே வெளிநாட்டு ஊடகங்கள் செயல்பட அனுமதியில்லை. ஆகையால் கேசிஎன்ஏ (KCNA) எனப்படும் அரசு ஊடகம் வெளியிடும் தகவல் தான் கிடைக்கக்கூடிய ஒரே ஆதாரம்.

இந்நிலையில் KCNA கேசிஎன்ஏ ஊடக செய்தியில், வட கொரியா கரோனாவை வென்றுவிட்டதாக அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. முன்னதாக அந்நாட்டு சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகளுடன் கிம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னரே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகத் தெரிகிறது.

உலகை கரோனா அச்சுறுத்தத் தொடங்கியதில் இருந்தே வட கொரியா தன்னை உலக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டது. இதன் காரணமாக அங்கு கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது.

இருப்பினும் எந்த தளர்வுகளும் இல்லாமல் வட கொரியா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது. தடுப்பூசிகளுக்கும் பெரிய ஆர்வம் காட்டவில்லை. இந்தச் சூழலில் தான் கடந்த மே மாதம் வட கொரியாவில் ஓமிக்ரான் வைரஸ் பரவ ஆரம்பித்தது. கரோனா பரிசோதனைகளுக்கு போதிய ஆய்வுக்கூட வசதி இல்லாததால், வட கொரியா கரோனா நோயாளிகளைக் கூட காய்ச்சல் நோயாளிகள் என்று பட்டியலிட்டு அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தது. இந்நிலையில் அங்கு கடந்த ஜூலை 29ஆம் தேதிக்குப் பின்னர் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை.

இது குறித்து கிம், "நம் மக்களுக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. மீண்டும் ஒருமுறை நாம் இந்த உலகிற்கு நமது சிறப்பை உணர்த்தியுள்ளோம். நம் மக்களின் அசைக்கமுடியாது உறுதிக்கு எடுத்துக்காட்டு" என்று கூறியுள்ளார். கிம் உரைக்குப் பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வெற்றி முழக்கமிட்டனர். பின்னர் கிம்முடன் அனைவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

கடந்த மே மாதம் முதல் வட கொரியாவில் 48 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. 74 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவில் தான் உலகிலேயே மிகவும் மோசமாக சுகாதார கட்டமைப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கே மருத்துவமனைகளில் நவீன சாதனங்கள் இல்லை, ஐசியு.,க்கள் வசதிகள் இல்லை என்றும் கரோனா சிகிச்சைக்கான மருந்தோ, தடுப்பூசிகளோ போதிய அளவில் இல்லை என்றும் கூறப்படுகிறது.



Read in source website

மெக்ஸிகோ சிட்டி: ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நேற்று 168-வது நாளை எட்டியது. போரால் உக்ரைனை சேர்ந்த 1.2 கோடி பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், சீனா, தைவான் இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது. தைவானை ஆக்கிரமிக்க சீனா ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போதைய சூழலில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் ஓரணியாகவும் ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் எதிரணியாகவும் அணிவகுத்து வருகின்றன.

இதேநிலை நீடித்தால் 3-ம் உலகப் போர் ஏற்படக்கூடும். அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் ஒபரடோர், அந்த நாட்டு தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உலகின் பல்வேறு பகுதிகளில் போர், உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போதைய சூழலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளால் உலகின் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.நா. சபை மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை கட்டுப்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை ஏற்படுத்த சர்வதேச அமைதி ஆணையத்தை அமைக்க வேண்டும்.

இதுதொடர்பாக ஐ.நா. சபையில் விரைவில் பரிந்துரை கடிதத்தை அளிக்க உள்ளேன். சர்வதேச அமைதி ஆணையத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், போப் பிரான்சிஸ், இந்திய பிரதமர் மோடி ஆகிய 3 பேரை நியமிக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இந்த ஆணையம் செயல்பட வேண்டும். உலகின் எந்த மூலையிலும் போர் நடைபெறக்கூடாது.

போரினால் சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுகின்றனர். இஸ்ரேல்-பாலஸ்தீனம் உள்ளிட்ட பல்வேறு தீராத பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

சர்வதேச அரங்கில் ஐ.நா.பொதுச்செயலாளர் குத்தேரஸ், போப் பிரான்சிஸ், இந்திய பிரதமர் மோடிக்கு செல்வாக்கு உள்ளது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Read in source website

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் ஆசிய நாடுகளில் வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழும் என்று அமெரிக்க நிதி நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.

கரோனா ஊடரங்கால் இந்தியாவின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் படிப்படியாக மீளத் தொடங்கியது.

இந்தச் சூழலில் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர், சர்வதேச அளவில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் போர் காரணமாக இந்தியாவில் பணவீக்கம் உச்சம் தொட்டது.

இந்தச் சூழலில், 2022-23 நிதி ஆண்டில் ஆசிய நாடுகளில் வலுவான பொருளாதார நாடாக இந்தியா திகழும் என்று மோர்கன் ஸ்டான்லி குறிப்பிட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று அந்நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது. குறைவான நிறுவன வரி, உற்பத்தி ஊக்கத் திட்டம், வேலைவாய்ப்பில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை, உள்நாட்டுத் தேவை ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணங்களாக அமைந்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் தொழில் முதலீடுகள் நம்பிக்கைத் தருவதாகவும், நிறுவனங்களின் நிதி நிலைமை ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.



Read in source website

புதுடெல்லி: ஜூலை மாதத்தில் மொத்த நிலக்கரி உற்பத்தி 11.37% அதிகரித்து 60.42 மில்லியன் டன்னாக இருந்தது என்று மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 54.25 மில்லியன் டன்னாக இருந்தது. நாட்டில் மொத்தமுள்ள 37 முன்னணி நிலக்கரி சுரங்கங்களில் 24 சுரங்கங்களில் இந்த ஆண்டு ஜூலை மாதம் நிலக்கரி 100 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டது. மற்ற 7 சுரங்கங்களில் 80 முதல் 100 சதவீதத்திற்குள் நிலக்கரி உற்பத்தி நடைபெற்றுள்ளது.

அதே நேரத்தில் நிலகரி விநியோகமும் ஜூலை மாதத்தில் 8.51 சதவீதம் அதிகரித்து 67.81 மில்லியன் டன்னாக உயர்ந்திருந்தது. இது 2021 ஆண்டில் 62.49 மில்லியன் டன்னாக இருந்தது.



Read in source website

REM அல்லது ரேபிட் ஐ மூவ்மென்ட் தூக்கம் என்பது கண்களின் அசைவு மற்றும் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது.

சிலந்திகள் உறக்கநிலையில் இருக்கும்போது மனிதர்களைப் போலவே கனவு காணலாம் என்பதற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஜெர்மனியில் உள்ள கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நடத்தை சூழலியல் நிபுணர் டேனிலா சி. ரோஸ்லர், தனது சக ஊழியர்களுடன் சேர்ந்து குதிக்கும் பேபி சிலந்திகளை (Evarcha arcuata) அகச்சிவப்பு கேமராக்கள் மூலம் இரவு முழுவதும் பதிவு செய்தார். அப்போது அவை கால்களை அசைப்பது. திடீரென விழிப்பது, மற்றும் கண் அசைவு போன்ற (leg curling, twitching and eye movement) மனித தூக்க சுழற்சிகளைப் போன்ற பண்புகளை வெளிப்படுத்தியதைக் கண்டறிந்தார்.

குதிக்கும் சிலந்திகள்’ மனிதர்களும் பிற முதுகெலும்புகளும் அனுபவிக்கும் “REM தூக்கம் போன்ற நிலையை” அனுபவிப்பதாக, ஆகஸ்ட் 8 அன்று அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி ஆஃப் சயின்ஸ் (PNAS) இதழில் வெளியிடப்பட்ட தங்கள் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

REM அல்லது ரேபிட் ஐ மூவ்மென்ட் தூக்கம் என்பது கண்களின் அசைவு மற்றும் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது.

அப்போது உடலின் தசைகள் செயலிழக்கத் தொடங்குகின்றன, பெரும்பாலான உடல் இயக்கங்களை நசுக்குகின்றன, ஆனால் கைகால்கள் சிறிது படபடக்க அனுமதிக்கின்றன.

பெரும்பாலான மக்கள் கனவு காணும் கட்டம் இதுவாகும், மேலும் கற்றல் மற்றும் நினைவகத்தைத் தக்கவைப்பதில் இது ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக கருதப்படுகிறது.

REM தூக்கத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறி கண்களின் இயக்கம் ஆகும், ஆனால் பூச்சிகள் மற்றும் பெரும்பாலான நிலப்பரப்பு ஆர்த்ரோபாட்களுக்கு (தேள், பூரான், சிலந்தி, தட்டான்பூச்சி, நண்டு) அசையும் கண்கள் இல்லாததால், விலங்கு இராச்சியத்தில் இது எவ்வளவு பரவலாக உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் தீர்மானிக்க கடினமாக உள்ளது.

குதிக்கும் சிலந்திகளின்’ தலையில் எட்டு கண்கள் உள்ளன, அவை நீண்ட குழாய்களைக் கொண்டுள்ளன, அதன் விழித்திரைகள் அவற்றின் முதன்மை கண்களின் பின்புறத்தில் நகர அனுமதிக்கின்றன.

குழந்தை சிலந்திகள் அவற்றின் வெளிப்புற எலும்புக்கூடுகளில் தற்காலிகமாக நிறமியைக் கொண்டிருக்கவில்லை, இது விஞ்ஞானிகளை உள்ளே உற்றுப் பார்க்கவும், விழித்திரைக் குழாய்களைக் கவனிக்கவும் அனுமதிக்கிறது.

REM தூக்கத்தின் போது ஏற்படும் கண் அசைவுகள், கனவு காட்சிகளின் பிரதிபலிப்பு என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆதாரம்: PNAS



Read in source website

 பூமியில் பாதமும், மழை வருமா என விண்ணில் விழியுமாக இந்திய விவசாயி தனது வாழ்க்கையை நடத்துகிறார் என்கிற கருத்து உண்மையிலும் உண்மை. பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஒருபுறம் வறட்சியும், மற்றொருபுறம் எதிர்பாராத அடைமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்குமாக இந்தியாவில் விவசாயம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அணைகள் பல இருந்தும்கூட தேவையான அளவு தண்ணீர் விவசாயத்துக்குக் கிடைப்பதில்லை என்கிற அவலம் தொடர்கிறதே தவிர, குறைந்தபாடில்லை.
வேளாண்துறையில் இந்தியா எதிர்கொள்ளும் பருவநிலை சவால்களையும், இந்திய விவசாயிகளின் பிரச்னைகளையும் கருத்தில் கொண்டு புதியதொரு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது முதல்வர் நவீன் பட்நாயக்கின் தலைமையிலான ஒடிஸா அரசு. 2017-இல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நேரடி முனைப்பில் உருவானது "ஒடிஸா சிறுதானிய மிஷன்' திட்டம். அதன் மூலம் ஒடிஸாவின் மலைவாழ் மக்கள் குடியிருக்கும் வனப்பகுதியில் பசுமைப் புரட்சி ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து புயல்களையும், மகாநதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகளையும் எதிர்கொள்ளும் மாநிலமாக ஒடிஸா திகழ்ந்து வருகிறது. நீர்வளம் மிக்க பகுதிகளில் விவசாயம் ஓரளவு லாபகரமாக நடந்தாலும், வனப்பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவது வழக்கமாகவே இருந்து வருகிறது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே நேரத்தில் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்வதும் அவசியம் என்பதை முதல்வர் நவீன் பட்நாயக் நன்றாகவே உணர்ந்துள்ளார். மலைப்பகுதிகளில் வாழும் விவசாயிகள் தங்களது பாரம்பரிய தானியங்களைப் பயிரிடுவதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக்கொள்வதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என்பதை அவர் புரிந்துகொண்டார்.
"ஒடிஸா சிறுதானிய மிஷன்' அந்த மாநிலத்தின் வேளாண் அமைச்சகத்தால் ஐந்து ஆண்டு பரிசோதனைத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் அவர்கள் அதிகமாக உட்கொள்ளும் சிறுதானியங்களை அதிக அளவில் பயிரிடுவது என்பதுதான் ஒடிஸா வேளாண்துறையின் சிறுதானிய மிஷன் திட்டம். மலைவாழ் மக்களின் சுகாதாரத்தையும், பொருளாதார வளர்ச்சியையும், வாழ்வாதாரத்தையும் இந்தத் திட்டத்தின் முலம் உறுதிப்படுத்த முடியும் என்பதை அரசு விரைவிலேயே புரிந்துகொண்டது.
பயிரிட்டதைவிட அதிக மகசூலை குறுகிய காலத்திலேயே அந்தத் திட்டம் அறுவடை செய்தது. சுற்றுச்சூழலைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், நிலைத்த வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்கிற இலக்கின் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும் என்கிற ஐ.நா. சபையின் நோக்கத்துக்கு வலுசேர்ப்பதாக அமைந்தது ஒடிஸா அரசின் சிறுதானிய மிஷன் திட்டம்.
சிறிய அளவில் பரிசோதனை ரீதியாக 2017-இல் தொடங்கப்பட்ட அந்தத் திட்டம், இப்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 142 ஊராட்சி ஒன்றியங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. ஏறத்தாழ 1.5 லட்சம் விவசாயிகள் 75,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் சிறுதானியங்களைப் பயிரிட்டு வெற்றிகரமாக விவசாயம் செய்கிறார்கள். அரசு தங்களுக்கு பின்னணியில் இருக்கிறது என்கிற உத்தரவாதம் விவசாயிகளை அதிக தண்ணீர் உறுஞ்சும் நெல் விவசாயத்திலிருந்து, தங்களது முன்னோர் பயிரிட்டு வந்த சிறுதானிய விவசாயத்துக்குத் திருப்பியிருக்கிறது.
மலைவாழ் மக்கள் மீண்டும் தங்களது பாரம்பரிய உணவுப் பழக்கங்களுக்கு திரும்ப வழிகோலியிருக்கும் இந்த முன்மாதிரி திட்டம், ஒடிஸாவின் பிற பகுதிகளிலும் ஊட்டச்சத்து மிக்க சிறுதானிய விவசாயத்தை ஊக்கப்படுத்தியிருக்கிறது. விவசாயிகளுக்கு, அதிலும் சிறு குறு விவசாயிகளுக்கு வருமான உத்தரவாதத்தையும், கடன் சுமைகளில் இருந்து விடுதலையையும் வழங்கியிருக்கிறது. இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் மீட்டெடுப்பதிலும் உதவுகிறது என்பது இன்னொரு வரவேற்புக்குரிய விளைவு.
சிறுதானிய விவசாயத்தில் ஒடிஸா அரசு முனைப்பு காட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சிறுதானியங்கள் புல் வகையைச் சேர்ந்தவை. தனக்குத் தானே மகரந்தச் சேர்க்கை செய்துகொள்ளும் வகையைச் சேர்ந்தவை. எந்தவிதமான பருவச்சூழலிலும் தாக்குப்பிடித்து வளரக்கூடியவை. ஏனைய தானியப் பயிர்களைப்போல பூச்சித் தாக்குதலுக்கு இவை உள்ளாவதில்லை.
கோதுமை, அரிசி போன்ற பயிர்களுக்குத் தேவைப்படுவது போல் அதிக அளவிலான இடுபொருள் தேவையும், தண்ணீர் தேவையும், பராமரிப்புத் தேவையும் இல்லாதவை. வலுவான வேர்கள் கொண்டவை என்பதால், புயல், மழை சூழலிலும்கூட தாக்குப்பிடிக்கக் கூடியவை. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை சிறுதானிய விவசாயத்தில் பெரும்பாலும் தேவைப்படுவதில்லை. இதில் ஊடு பயிர்கள், மாற்றுப் பயிர்கள் போன்றவையும் சாத்தியமாகின்றன.
குறைந்த மழைப்பொழிவு, அதிகரித்த வெப்பம் உள்ளிட்ட எல்லாவிதப் பருவங்களையும் எதிர்கொள்ளும் சிறுதானிய விவசாயம், ஒருமுறை பொய்த்தாலும் அடுத்தப் பயிரீட்டில் பயனளிக்கும். அரிசி, கோதுமை போல நான்கு அல்லது ஐந்து மாதப் பயிராக அல்லாமல், இரண்டு அல்லது மூன்று மாதப் பயிர்களாக இருப்பதால், குறைந்த அளவு தண்ணீரில் ஆண்டு முழுவதும் விவசாயத்தைத் தொடர முடியும், நல்ல மகசூலும் பெற முடியும்.
சிறுதானிய விவசாயம் அதிக முதலீட்டிலான நீர்ப்பாசன கட்டமைப்புத் தேவையைக் குறைத்திருக்கிறது. நீர் மேலாண்மையும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதி. ஒடிஸா அரசு வெற்றிகரமாக முன்னெடுத்திருக்கும் சிறுதானிய மிஷன் இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக வேண்டும்!

 



Read in source website

"நீரளவே யாகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு' என்பது ஒளவையின் வாக்கு. நம் நாட்டவர்கள் தற்போது புத்தகம் படிப்பதில் உலகிலேயே முன்னிலை வகிக்கிறார்கள் என்றால் அது ஒரு ஆச்சரியமாகத் தோன்றவில்லை. ஒரு வணிக நிறுவனத்தின் (மணிகன்ட்ரோல்) ஆய்வின்படி, கல்வியறிவு பெற்ற இந்தியர்கள் ஒரு வாரத்தில் சராசரியாக 10.4 மணி நேரம், அதாவது தினமும் ஒன்றரை மணி நேரம் படிப்பதில் செலவிடுகிறார்களாம்.
நமக்கு அடுத்தபடிதான் சீனா (வாரத்திற்கு 8 மணி) அமெரிக்கா (5.48 மணி) இங்கிலாந்து(5.18 மணி) ஜப்பான்(4.06 மணி) முதலியவை. இதற்கு முக்கிய காரணம் இங்கு மக்கள் விரும்பும் வகையில் படைப்புகளை வழங்கும் எழுத்தாளர்கள் நிறைந்துள்ளதும், நாளுக்கு நாள் அதிக அளவில் இணையத்தில் இணைந்து வரும் படிப்பாளிகளும்தான் என்று கூறப்படுகிறது.
படிப்பதற்குப் புத்தகம், செய்தித்தாள், பத்திரிகை முதலியவற்றையே நம்பியிருந்த நமக்கு சென்ற நூற்றாண்டில் காகிதத் தேவையற்ற ஊடகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இத்துறையின் அதீத வளர்ச்சியின் காரணமாக வணிகத்துறையில் தாளற்ற கொள்கொடை (பேப்பர்லெஸ் டிரான்சாக்ஷன்) பெருகிக் கொண்டு வருகிறது. இணையவழிக் கல்வி, சந்திப்புகள், நூல் வெளியீடு போன்றவற்றுக்கும் பழக்கப்பட்டு விட்டோம். மின்னிலக்கக் கருவிகளாகிய (டிஜிட்டல் கேட்ஜெட்ஸ்) கைப்பேசி, மடிக்கணினி, மின்னிலக்கப் பலகை முதலியவற்றின் துனைக்கொண்டு அன்றாட அலுவலகப் பணிகள் செவ்வனே நிறைவேற்றப் பட்டு வருகின்றன. நாம் சற்று யோசித்துப் பார்த்தால், மின்னிலக்கப் பயன்பாட்டு சாதனங்கள் நாம் அறியாமலேயே மெல்ல மெல்ல நம் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு வருவது தெரியும்.
எடுத்துக்காட்டாக, தொலைக்காட்சிப் பெட்டியில் செய்தி காண்பதற்காக விசையை அழுத்துகிறோம். காட்சியில், வாசிப்பவர் உருவம், அறிவிப்பு, செய்தியை சார்ந்த குறும்படம், மேலும் கீழும் விரைந்தோடிக் கொண்டிருக்கும் செய்திகள் இவற்றைத் தவிர செய்தி நிறுவனக் குறியீடு, தோன்றி மறையும் விளம்பரம், நேரம் காட்டும் கடிகாரம் அனைத்தையும் ஒருங்கிணைந்து காண்கிறோம்.
அதுவும் உணவை ருசித்துக்கொண்டோ, கடலையைக் கொறித்துக்கொண்டோ, கைப்பேசியில் பேசிக்கொண்டோ பார்க்கிறோம். ஒரே சமயத்தில் பல செயல்களை நிறைவேற்ற முயல்கிறோம். இப்படியாக பல்பணி புரியும் (மல்டி டாஸ்கிங்) அவதானிகளாக நாம் வளர்ந்து கொண்டு வருகிறோம் என்றால் அது மிகையாகாது!
மின்னிலக்க சாதனங்களின் பயன்பாட்டினால் மனிதர்களின் கவனிக்கும் திறன் நாளுக்கு நாள் குறைந்து வருகிறதாம். 2015-ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தார் மனித மூளையின் அலைபாயும் கவன விகிதத்தை (ஹியூமன் அட்டென்ஷன் ஸ்பான்) ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதன்படி மனிதன் ஒரு பொருளிலோ, செயலிலோ தன் கவனத்தை செலுத்தும் நேரம் சராசரி 8.25 வினாடி என்று கணக்கிட்டுள்ளனர். இதுவே ஐந்து வருடங்களுக்கு முன் 12.5 வினாடியாக ஆக இருந்ததாம். வீட்டில் வளர்க்கும் தங்க மீன் கவன விகிதத்தின் அளவு கூட 9 வினாடிகளாக உள்ள நிலையில் மனிதரின் கவனம் படுவேகத்தில் குறைந்துகொண்டு வருகிறது.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏராளமான மின்னிலக்க தகவல்களும் தரவுகளும் (டிஜிட்டல் இன்பர்மேஷன் அண்ட் டேட்டா) மலிந்து கிடப்பதால், நம் பண்பட்ட மூளையும் அதற்குப் பழகி வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது நாம் புத்தகமின்றி படிப்பதற்கு பலவகை மின்னணுவியல் புத்தகங்களும் அவற்றுக்கென்றே உருவாக்கப்பட்ட படிப்பான்களும் (இபுக்ஸ் அண்ட் ரீடர்ஸ்) சந்தையில் கிடைக்கின்றன. அவை, "கிண்டில்', "ஒபோ பார்மா', "லைக்புக் மார்ஸ்' முதலிய பெயர்களில் பிரபலமடைந்துள்ளன. புத்தகங்களை விட படிப்பதற்கு பல வசதிகளை அவை கொண்டுள்ளன. "அமேசான்' நிறுவனத்தினர் கணினியிலேயே புத்தகங்களைப் படிக்க சிறப்பு செய்நிரல்களை (புரொக்ராம் கிண்டில் பார் பிசி அண்ட் கிண்டில் கலர் ரீடர்) வெளியிட்டுள்ளனர்.
அப்படியானால், இனிமேல் புத்தகப் படிப்பாளிகள் குறைந்து போய்விடுவார்களா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில்! புகழ்பெற்ற "ஃபோர்ப்ஸ்' பத்திரிகையில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை, நம் மூளையை அதிகம் கவர்வது மின்னிலக்க எழுத்துகளைவிட அச்செழுத்துக்கள்தாம் என்று உறுதியாகச் சொல்கிறது. அமெரிக்க, கனடா நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்த நபர்களை புத்தகங்கள், கடிதங்கள், பத்திரிகை விளம்பரங்கள் ஆகியவற்றை படிக்க வைத்து அவர்களுடைய விழிகளின் அசைவுகள், ஈ.ஈ.ஜி அலைகள் வேறுபடும் பாங்கு (வேவ் பேட்டன்), மூலையில் ஏற்படும் நுண்ணிய ரத்த ஓட்ட மாறுதல்கள் (பங்ஷனல் எம்ஆர்ஐ) என்றெல்லாம் ஆராய்ந்துள்ளார்கள்.
மின்னஞ்சல்களைவிட கடிதங்களைப் படித்துப் புரிந்து கொள்வதிலும், ஞாபகத்தில் வைத்துக் கொள்வதிலும் மூளையின் உழைப்புத்திறன் 21% குறைவாக உள்ளதாம். அதே போல் தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களை விட பத்திரிகை விளம்பரங்கள் அடிமனதில் பதிகின்றனவாம். மாணவர்கள் பாடப்புத்தகங்களை கவனச் சிதறல் இன்றிப் படிக்க இயலுவதுபோல் ஒளிரும் திரை வழிப் படிப்பு இருக்காது. ஆகவே இனி வரும் நாட்களில் தாளின் மேன்மை, மின்னிலக்க வசதிகளை பகுத்தறிந்து விவேகமாக பயன்படுத்தும் முறை பின்பற்றப்படும் என்று கருதுகிறார்கள்.
வழக்கமாக பயன் படுத்தும் மின்னிலக்க சாதனங்கள் அவ்வப்போது மக்கர் செய்யும் எரிச்சலில் பழையபடி பேனா, பேப்பரை நாடத்தோன்றும். மாணவர்கள் புது புத்தகங்களை வாங்கி அவற்றை மோந்து பார்ப்பதில் அடையும் ஆனந்தமே அலாதி. உலகையே புரட்டிப்போட்ட பல புரட்சிகளுக்கும் புத்தகங்களே காரணமாக இருந்துள்ளன.
தவிர அனைத்து மதத்தினருக்கும் புத்தக வடிவில் வழிபாட்டுப் பழக்கம் உள்ளதைக் காண்கிறோம். சீக்கியர்கள் வணங்கும் கடவுளே புத்தகம்தானே! இவ்வாறாக புத்தகங்களின் மேன்மைக்கு அளவில்லை.

 



Read in source website

 இந்தியாவைப் பொறுத்தவரை, கரோனா பெருந்தொற்றால் பொருளாதாரம் ஒரு மோசமான பின்னடைவை சந்தித்தது. அதனைப் பழையபடி மீட்டெடுப்பது என்பது ஒரு பெரும் சவாலாகவே மாறி உள்ளது. கரோனா தீநுண்மிப் பரவல் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் வசிக்கின்ற மக்களுடைய வருமானம் படிப்படியாகக் குறையத் தொடங்கிவிட்டது. ஆகவேதான், ஏழை, எளிய மனிதர்கள் தாங்கள் முன்பு அனுபவித்ததைவிட கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள்.
 இந்திய பொருளாதாரம் ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாக இருந்து வருகிறது. மேலும், தற்போது இரட்டை நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கரோனா தீநுண்மியின் தாக்கம் தணிந்த பிறகும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாமல் சிதைந்து வருவதற்குக் காரணம் வேகமாக வீழ்ச்சி அடைந்து வரும் பணமதிப்பும் பணவீக்கமும்தான். இவை இரண்டும்தான் பொருளாதாரத்தைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டிருக்கின்றன.
 கடந்த ஜூன் மாதத்தில் நாட்டின் சில்லறைப் பணவீக்கம் 7.01% ஆக இருந்தது. மே மாதத்தில் இது 7.04 % -கும் குறைவாக இருந்தாலும் ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்பான 6 %-ஐ விட அதிகமானதாகவே இருந்து வந்தது. இன்னொரு புறம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே செல்கிறது. கடந்த ஜூலை மாதம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 80-ஐ தாண்டி விட்டது.
 டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால், இந்தியாவின் இறக்குமதியின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் உள்நாட்டு சந்தையில் பொருள்களின் விலையும் அதிகரித்து வருவதைத் தவிர்க்க முடியவில்லை. உலகம் முழுவதுமே பணவீக்கம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய சூழல் ஏற்பட முக்கியக் காரணம் கரோனா தீநுண்மிப் பரவலால் ஏற்பட்ட பாதிப்புதான். அது மட்டுமல்ல, சமீபத்திய ரஷிய-உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலையும் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதும் இதற்குக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமீபகால பணவீக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதையும் மறந்து விடக்கூடாது. அரசாங்கத்தின் கொள்கை காரணமாக, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உயர்த்தவில்லை. ஆனால், பொதுத்தேர்தல் முடிந்த உடன் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.
 இதனால் திடீரென்று உருவான பணவீக்கம் பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்தது. இது ஒரு புறம் இருந்தாலும், ரஷிய - உக்ரைன் போர் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்தது. அந்த விலை உயர்வு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பாதித்தது. பின்னர், போரினால் ஏற்பட்ட சிக்கல்களால் கச்சா எண்ணெய்யின் வரவு குறைந்ததாலும் பணவீக்கம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது.
 சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) 12 % ஆக நிர்ணயித்திருப்பது குறித்து பல்வேறு கோணங்களிலும் விவாதங்கள் எழுந்தன. சில அரசியல் காரணங்களால், பல மாநிலங்கள் இந்தக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. எனவே, சில அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. உயர்த்தப்படவில்லை. சில பொருட்களுக்கு 5 % முதல் 10 % வரை ஜி.எஸ்.டி. உயர்த்தப்பட்டது.
 ஏற்கெனவே ரியல் எஸ்டேட், பெட்ரோல், டீசல் போன்றவை ஜி.எஸ்.டி.யின் வரம்புக்கு வெளியே இருக்கிறது. அதனால் ஜி.எஸ்.டி. வருவாய்க்கான இலக்குகளை முழுமையாக எட்ட முடியவில்லை. இத்தகைய காரணங்களால்தான் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
 ஜி.எஸ்.டி. மூலம் வரி வருவாய் வரவில்லையென்றால் நாட்டின் நிர்வாக செலவை எப்படி சமாளிப்பது என்று ஆட்சியாளர்கள் கேட்பது நியாயம் என்றாலும், அது சாமானியர்களின் கழுத்தைப் பிடித்து இருக்குகின்ற கயிறாக மாறி விடக் கூடாது என்பதுதான் நடுத்தர வர்க்கத்தினருடைய கோரிக்கையாக இருக்கிறது.
 உண்மையில், கரோனா தீநுண்மி காலகட்டத்தில், ரிசர்வ் வங்கி அதிக அளவில் கரன்சி நோட்டுக்களை அச்சிட்டது. அரசாங்கம் கடன் வாங்குவதில் எந்தச் சிக்கலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் இதன் நோக்கம். பணவீக்கம் அதிகரித்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறலாம். இப்போது இந்த பணப்புழக்கத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது. இதனால், எதிர்காலத்தில் மேலும் பணவீக்கம் ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறது.
 ஆனால், இதில் ஒரு சங்கடமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது ரஷிய - உக்ரைன் போரின் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருக்கும் வரை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாகும். ஏனென்றால், நமது கச்சா எண்ணெய் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு வெளியில் இருந்தே பெறப்படுகிறது. இதற்காகவே நாம் அதிக அளவு பணத்தை செலவழிக்க வேண்டியதாகவும் இருக்கிறது. ஆகவே, இத்தகைய சூழ்நிலை நிலவுவதால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்பது சிரமமானது என்பதே நிதர்சனம்.
 டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவிழந்து வருவதனால், புதிய பொருளாதாரத்தை பணவீக்கத்தோடு இதுவும் சேர்ந்து திணற அடிக்கிறது. ஆனால், இவற்றை ஏற்றுமதி கண்ணோட்டத்தில் பார்த்தால் லாபகரமானது என்று கூறலாம். ஆனால், நம்முடைய நிலைமை அவ்வாறில்லை. இந்தியா ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதிதான் செய்கிறது.
 எனவே, அதன் அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ள நாணயத்தின், குறிப்பாக அமெரிக்க டாலரின் பங்கு வேகமாகக் குறைந்து வருகிறது. ஆகவே, ரூபாயின் வீழ்ச்சி எப்போது நிற்கும்? இந்த சிக்கலிலிருந்து இந்தியா எப்போது மீண்டெழும் என்கிற கேள்வி எழுகிறது.
 கரோனா தீநுண்மி காலகட்டத்தில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி அதிக டாலர்களை அச்சிட்டது. இப்போது அது திரும்பப் பெறப்படுகிறது. வட்டிவிகிதத்தை உயர்த்தி இப்பணியை கனகச்சிதமாக செய்து வருகிறார்கள். அதிக வட்டி விகிதத்தின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து டாலர்களின் மீதான முதலீடு அமெரிக்காவை நோக்கி வருகிறது.
 இந்தியாவில் முதலீடு செய்து கொண்டிருந்த முதலீட்டாளர்கள் இப்போது அமெரிக்காவை நோக்கி செல்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அதிக வட்டி கிடைக்கிறது. இதன் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மட்டும் பலவீனமாகவில்லை. உலகின் அனைத்து நாடுகளின் கரன்சிகளும் பலவீனமடைந்துள்ளன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 நாம் ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலமாகவும், அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிவிப்பதன் மூலமாகவும் அதிக அளவிலான டாலர்களை நம் பக்கம் திருப்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. இலங்கை, பாகிஸ்தான் போன்று பொருளாதாரம் சீர்குலைந்து விடுமோ என்கிற அச்சம் இந்தியர்களுக்குத் தேவையில்லை.
 ஏனென்றால், இந்தியாவின் உள்நாட்டு சந்தை சிறந்த கட்டமைப்பு கொணடதும், வலுவானதும் ஆகும். இதனால் பொருளாதாரத்தின் அளவும் மிகப் பெரியதாக அமைந்துள்ளது. ஆகவே, எளிதில் சிதைத்து விட முடியாத அளவிற்கு வலுவானவை நம்முடைய பொருளாதாரக் கட்டமைப்புகள்.
 மேலும், அரிசி, பால், தயிர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி.யை உயர்த்த 47-ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பால், லஸ்ஸி போன்ற பொருட்களுக்கு 5 % ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. விலக்கு அளிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, மாவு உள்ளிட்ட பொருட்களுக்கும் 5 % வரி விதித்து அவையும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
 மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு தவிர ஒரு நாளைக்கு ரூபாய் ஐந்தாயிரம் வரை வசூலிக்கப்படும் அறைகளுக்கு 5 % ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு மருத்துவமனைகளுக்கு ஜி.எஸ்.டி. யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதது.
 ரூபாய் 1,000 வரை வசூலிக்கும் ஹோட்டல் அறைகளுக்கு புதிதாக ஜி.எஸ்.டி. விதித்து, அதை 12 % வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது ஜி.எஸ்.டி. கவுன்சில். ஏற்கெனவே, விலைவாசி உயர்வு சாமானிய மக்களை வாட்டிவதைக்கும் நிலையில், ஜி.எஸ்.டி. உயர்வை சற்று தாமதமாக கொண்டு வந்திருக்கலாம் என்கிற கருத்து பொதுமக்களிடையே நிலவுகிறது.
 வணிக சந்தைகளுக்கு செல்லக்கூடிய பொருள்களுக்கு மட்டுமே அரசு செஸ் வரி விதிக்க வேண்டும் எனவும், சாலைகளில் வாகனங்களை நிறுத்தி செஸ் வரி விதிக்கக் கூடாது எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
 ஜி.எஸ்.டி. அறிமுகமானது முதலே சர்ச்சையும் அதிகமாகி விட்டது. விலை உயர்ந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால், இப்போது அரிசி, தயிர், பால் போன்ற அத்தியாவசியமான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. விதித்திருப்பதுதான் ஏழைகளைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.
 ஒரு பக்கம் உணவுப் பொருட்களை பாக்கெட்டில் அடைத்தே விற்க வேண்டும் என்கிற விதிமுறையை உருவாக்கி விட்டு, இப்போது பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பது சரியா?
 பிராண்ட் பெயரில்லாமல் பாக்கெட்டில் அடைக்கப்படாத பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. இல்லை என்று சொன்னால், தரம் இல்லாத பொருள்கள் சந்தைக்கு வந்துவிடும் அபாயம் இருக்கிறது. தமிழக அரசாங்கம் இதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மெளனமாக இருக்கிறது. கேரள அரசு, சிறுவணிகர்கள் மீதான இந்த ஜி.எஸ்.டி.யை நாங்கள் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று துணிந்து அறிவித்திருக்கிறது.
 மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்து வரும் தமிழக அரசு இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறதா, அல்லது மத்திய அரசுடனான மாநில அரசின் மோதல் போக்கு குறையத் தொடங்கி விட்டதா என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் அமைச்சர்.



Read in source website

மாமல்லபுரத்தில் நடந்து முடிந்த 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில், பொதுப் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கத்தையும் அர்மேனியா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளன.

பொதுப் பிரிவில், இந்தியாவின் ‘பி’ அணியும், மகளிர் பிரிவில் இந்தியாவின் ‘ஏ’ அணியும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளன. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்தியப் பெண்கள் அணி முதன்முறையாகப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை என்ற பேரதிர்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட வன்செயல்களும் ஓடிய ரத்த ஆறும் மக்கள் மனத்தில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியிருந்தன; சுதந்திர இந்தியாவோ, மொழி அடிப்படையில் மாநிலங்களைத் திருத்தியமைப்பதற்கான கடமையை நிறைவேற்ற வேண்டியிருந்தது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஏற்பட்ட தேசிய எழுச்சியானது மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை, சுதந்திரம் வேண்டும் என்ற லட்சியத்தின் ஒரு பகுதியாகவே கருதியது. சுதந்திரம் கிடைத்த பிறகு, மொழி அடிப்படையில் மாநிலங்கள் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது.

இதற்கிடையில், இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் இந்த விஷயத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மனமாற்றம் அடைந்திருந்தது. எனவே, இது மிகப் பெரிய சவாலாகிவிட்டது. ‘தேசிய இயக்கமாக’ இருந்த காங்கிரஸ், இப்போது ‘அரசியல் கட்சியாகிவிட்டிருந்தது’. அதன் செயல்திட்டமானது, மத்திய அரசிலும் மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்து மக்களுக்கான திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதில் மையம் கொண்டிருந்தது.

மொழி அடிப்படையில் மட்டுமே மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்தக் கோரிக்கை தொடர்பாக காங்கிரஸ் தலைமையின் நிலை மாறிவிட்டது. எனவே தேசிய இயக்கத்தில் பங்கு பெற்றவர்களிடையேகூட, ‘நாம் ஒதுக்கப்படுகிறோம்’ என்ற உணர்வு ஏற்பட்டது.

காங்கிரஸ் உறுதிமொழி

வங்காளத்தை இரண்டாகப் பிரித்ததற்கு எதிராக 1905இல் தொடங்கிய போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி முக்கியப் பங்கு வகித்தது. வங்க மொழி பேசும் பிரதேசத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது என்ற மொழி அடிப்படையிலான சித்தாந்தம் அப்போது எல்லோருக்கும் ஆதர்சமாகத் திகழ்ந்தது.

வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் இயக்கம், அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு இடையறாமல் தொடர்ந்தது. அதே உணர்வில்தான் 1908 இல் ‘பிஹார் பிரதேச காங்கிரஸ்’ ஏற்படுத்தப்பட்டது. 1917இல் ‘ஆந்திரம்’, ‘சிந்து மாகாண பிரதேச காங்கிரஸ்’ கட்சிகள் ஏற்பட்டன.

நாகபுரியில் 1920இல் நடந்த காங்கிரஸ் மாநாடு, மொழி அடிப்படையில் மாநிலங்கள் அல்லது மாகாணங்கள் அமைய வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு பிரதேச காங்கிரஸ் கட்சிகளை, அதே அடிப்படையில் அமைத்தது.

இதே பாணி அணுகுமுறை 1938இலும் தொடர்ந்தது. மொழி அடிப்படையில் தங்களுடைய மாநிலங்களை அமைக்க வேண்டும் என்று கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் போராடியபோது, ‘இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து காங்கிரஸ் கட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் உங்களுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்; அதுவரையில் மொழிவாரி மாநிலப் போராட்டங்களை நிறுத்திக்கொண்டு, தேச விடுதலைக்கான போராட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தி ஒத்துழைப்பு அளியுங்கள்’ என்று அந்தப் பகுதி மக்களை காங்கிரஸ் கேட்டுக்கொண்டது.

காங்கிரஸ் இயற்றிய அந்தத் தீர்மானம், மொழிவாரி மாநிலங்கள் கோரிக்கையை காங்கிரஸ் ஆதரிப்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டது. அதைவிட முக்கியம், இந்தக் கோரிக்கை மக்களைத் திரட்ட, தேசிய உணர்வோடு கூடிய போராட்டத்தின் அங்கமாகவும் கருதப்பட்டது.

ஆனால், சுதந்திரம் கிடைத்த பிறகு காங்கிரஸ் கட்சி, மொழிவாரி மாநிலங்கள் என்ற கொள்கை மீது தனக்கிருந்த பிணையை அறுத்துக்கொண்டது. இந்திய, பாகிஸ்தான் பிரிவினை என்ற பேரதிர்ச்சி, காங்கிரஸ் தலைவர்களின் மனங்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இப்படி நிலையை மாற்றிக்கொள்ள வைத்தது.

மலையாளம் பேசும் பகுதிகளை இணைத்து கேரளம் என்றும், தெலுங்கு பேசும் பகுதிகளை இணைத்து ஆந்திரம் என்றும் புதிய மாநிலங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தென்னிந்தியர்கள் கோரினர். பம்பாய் மாகாணத்திலோ, மராட்டி பேசும் மக்கள் தனி மராட்டிய மாநிலத்தையும் குஜராத்தி பேசுவோர் தனி குஜராத் மாநிலத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

காங்கிரஸ் கட்சியில் நேரு தலைமையில் 1928இல் அமைக்கப்பட்ட குழு, ‘மாநிலங்களைப் பிரிக்கும்போது மக்களுடைய விருப்பங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும், அந்தந்தப் பகுதியின் மொழி ஒற்றுமை காக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியது.

ஆனால், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட தேசியச் சட்டப் பேரவையில் 1947 நவம்பர் 27இல் பேசிய பிரதமர் நேரு, “முதலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும், இப்போது நாட்டின் பாதுகாப்புக்கும் ஸ்திரத் தன்மைக்கும்தான் முன்னுரிமை” என்றார்.

இதையடுத்து எஸ்.கே. தர் என்பவர் தலைமையில் தனி ஆணையத்தை அரசமைப்பு சட்டப் பேரவை நியமித்தது. ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் என்று தனி மாநிலங்கள் கோருவது குறித்து ஆராய்ந்து அறிக்கை தர வேண்டும் என்று அந்த ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அந்த ஆணையம் அரசமைப்புச் சட்டப் பேரவையிடம் 1948 டிசம்பரில் அறிக்கை அளித்தது. இந்த நிலையில் நாட்டில் புதிதாக எந்த மாநிலத்தையும் உருவாக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த அந்த அறிக்கை, மொழிவாரி மாநிலங்களை ஏற்படுத்துவது சரியல்ல என்றும் கூறியது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக வேண்டும் என்ற தேசிய இயக்கத்தின் அணுகுமுறை, சுதந்திரத்துக்குப் பிறகு அப்படியே கைவிடப்பட்டுவிட்டது.

இது மட்டுமல்ல. தர் ஆணையப் பரிந்துரைகளை காங்கிரஸ் கட்சி அப்படியே ஏற்றுக்கொண்டு, மேலும் ஒரு படி சென்றது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், மொழிவாரி மாநிலக் கோரிக்கை குறித்து ஆராய ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், பட்டாபி சீதாராமய்யா தலைமையில் (ஜேவிபி) துணைக் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை, காங்கிரஸ் கட்சியின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதை முறைப்படி அறிவித்தது.

‘மொழிவாரி மாநிலங்கள் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் முந்தைய கொள்கையாக இருந்தது. இந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகப் பிரிவுகள்கூட திருத்தியமைக்கப்பட்டன. ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் பிரதேச காங்கிரஸ் கட்சியமைப்புகள் இந்த அடிப்படையிலேயே ஏற்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது காலமும் சூழலும் மாறிவிட்டது’ என்று அறிக்கை தெரிவித்தது.

சுதந்திரம் அடைந்துள்ள நாட்டுக்கு, மொழிவாரி மாநிலங்கள் கோரிக்கை பெரிய அச்சுறுத்தல் என்று அந்த அறிக்கை கருதியது. வங்காளப் பிரிவினையில் மொழிக்கு அளித்த முக்கியத்துவ நிலையிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகியது.

தேசிய இயக்கத்துக்கான மேடையாக இருந்த காங்கிரஸ், இப்போது அரசியல் கட்சியாக மாறிவிட்டதால் இப்போது புதிய சிந்தனையின்படி நடக்க வேண்டியிருக்கிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டியது.

இந்தியா – பாகிஸ்தான் என்று நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்ட 1947 பிரிவினையையும் அதன் விளைவுகளையும் ஜேவிபி அறிக்கை சுட்டிக்காட்டியது. “மக்களிடையே மிகவும் நெருக்கமான ஒற்றுமை தேவைப்பட்ட சமயத்தில் சமூகவிரோதச் சக்திகள் வளர்ந்து, சீர்குலைவு நடவடிக்கைகளில் பெருமளவில் ஈடுபடும் அளவுக்கு வலிமை பெற்றுவிட்டன.

எனவே மாறிவிட்ட இந்தச் சூழ்நிலை அடிப்படையில், மொழிவாரி மாநிலக் கோரிக்கையை அணுக வேண்டிய நிலையில் இருக்கிறோம். இப்போது நம்முன் உள்ள முதல் கடமை நாட்டின் சுதந்திரத்தையும் ஒற்றுமையையும் கட்டிக்காப்பதுதான் என்று அறிக்கை வலியுறுத்தியது. வகுப்புவாதம், பிராந்தியவாதம் போன்ற குறுகிய வாதங்கள் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்று அறிக்கை குறிப்பிட்டது.

நிலையில் மாறுதல்

சுருக்கமாகச் சொல்வதென்றால், மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறுகியவாதம் மட்டுமல்ல, நாட்டையே சீர்குலைக்கச் செய்யும் நடவடிக்கை, இத்தகைய கோரிக்கைகள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்தை விளைவிக்கும் என்றது.

அதைவிட முக்கியம் மொழிவாரி மாநிலக் கோரிக்கையை வகுப்புவாதத்துக்கு சமமான தீமையாக அது கருதியது. இந்த ஆபத்துகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியாக வேண்டும் என்றது.

(தொடரும்)

நன்றி: ‘தி இந்து’ ஆவண காப்பகம்

தமிழில்: வ. ரங்காசாரி



Read in source website

சுதந்திர இந்தியாவில் விளையாட்டுத் துறையில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், 1948ஆம் ஆண்டில் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற தங்கப் பதக்கம் மிகப் பெரிய திருப்புமுனை.

ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி நிகழ்த்திய சாதனையைப் போல வேறு எந்த அணியும் செய்ததில்லை. 8 தங்கப் பதக்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை இந்திய ஹாக்கி அணி வென்றுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1928ஆம் ஆண்டு முதலே ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி விளையாடி வருகிறது. 1928, 1932, 1936 எனத் தொடர்ச்சியாகத் தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றது. ஆனால், இந்தச் சாதனை நிகழ்ந்ததெல்லாம் பிரிட்டிஷ் இந்தியா காலத்தில்.

1948இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் இந்தியா ஒரு சுதந்திர நாடாக முதன்முறையாகப் பங்கேற்றது. காலனி நாடாக எந்த நாட்டிடம் இருந்ததோ அந்த நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இருந்துதான் இந்தியாவின் ஒலிம்பிக் பயணம் தொடங்கியது.

இந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரே ஒரு பதக்கத்தை வென்றது. அது, இந்திய ஹாக்கி அணி மூலம் கிடைத்த பதக்கம். இறுதிப் போட்டியில் நம்மை அடிமைப்படுத்திய இங்கிலாந்தை எதிர்த்துதான் இந்தியா விளையாடியது. அதில், 4-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.

அந்த வகையில் சுதந்திரம் அடைந்த பிறகு 1948ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற தங்கப் பதக்கம், சுதந்திர இந்தியாவின் ஒலிம்பிக் பயணத்தின் சிறப்பான தொடக்கமாக அமைந்தது.

- மிது



Read in source website

காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்; சிறை சென்றார் வினோபா பாவே. 1940ஆம் ஆண்டு ‘முதல்' சத்தியாகிரகராக காந்தியால்மக்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டார்.

விடுதலைக்குப் பிறகு, சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டார். தெலங்கானா பகுதியில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி ஏழை மக்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிக்கொண்டிருந்தது. அந்தப் போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு பெருமளவில் இருந்தது.

மத்திய, மாநில அரசுகள் இந்தப் போராட்டத்தை ஒடுக்க முனைந்தன. ‘நிலம் இல்லாததால்தான் ஏழைகள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குச் சென்றிருக் கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கம் நிலம் வழங்கப் போவதில்லை’ என்பதை உணர்ந்த வினோபா, இதற்காக ஒரு திட்டத்தை ஆரம்பித்தார். அதுதான் ‘பூமி தான இயக்கம்.’

நிலம் அதிகம் இருக்கும் செல்வந்தர்களிடம், நிலத்தைத் தானமாகப் பெற்று, அதை ஏழை மக்களுக்குக் கொடுக்கும் திட்டம். பலரும் இந்தத் திட்டத்துக்கு நிலங்களைத் தானமாகக் கொடுக்க முன்வந்தனர். இதனால் இந்தத் திட்டத்தை ஒரு பெரிய இயக்கமாக மாற்றினார் வினோபா.

இதற்காக இந்தியா முழுவதும் தொடர்ச்சியாகப் பயணம் மேற்கொண்டார். 13 ஆண்டுகளில் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களைத் தானமாகப் பெற்றார். பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு நிலம் கிடைத்தது. பூமி தான இயக்கத்தை, சர்வோதய சங்கம் ஒருங்கிணைத்தது.

வினோபா தன் வாழ்நாளில் சுமார் ஒன்றரை லட்சம் கிராமங்களிலிருந்து சுமார் 40 லட்சம் ஏக்கர் நிலங்களைத் தானமாகப் பெற்றுக்கொடுத்தார். இவரின் மறைவுக்குப் பிறகு, இவரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக 1983ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

- ஸ்நேகா



Read in source website

இந்தியக் குடியாட்சி வரலாற்றில் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முதன்மை இடமுண்டு. இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்காக அரசமைப்பு அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 389 பேரில் 15 பேர் பெண்கள்.

ராஜகுமாரி அம்ரித் கவுர், சரோஜினி நாயுடு, அம்மு சுவாமிநாதன், தாக்‌ஷாயணி வேலாயுதன், சுசேதா கிருபாளினி, விஜயலட்சுமி பண்டிட், துர்காபாய் தேஷ்முக், பேகம் ரசூல், ஹம்சா ஜிவ்ராஜ் மேத்தா, கமலா சவுத்ரி, ஆனி மாஸ்கரின், ரேணுகா ராய், பூர்ணிமா பானர்ஜி, லீலா ராய், மாலதி சவுத்ரி ஆகியோர் தங்களது மாகாணங்கள் சார்பாக அரசமைப்பு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களில் பலரும் இந்திய விடுதலைக்காகவும் சமூக சீர்திருத்தங்களுக்காகவும் பாடுபட்டனர். அரசமைப்புச் சட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்காகவும் சமத்துவத்துக்காகவும் இவர்கள் பங்களித்தனர்.

அரசமைப்பு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பெண்களின் பன்முகத்தன்மை முக்கியமானது. அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கும் வகையில் அவர்களது தேர்வு அமைந்திருந்தது. தாக்‌ஷாயணி வேலாயுதன், அரசமைப்பு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பட்டியலினப் பெண்.

அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த இளம் வயது (34) பெண்ணும் இவர்தான். மாகாண அரசமைப்புக் குழுவிலும் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றிந்த ஹன்ஸா ஜிவ்ராஜ் மேத்தா, பரோடாவின் புகழ்பெற்ற திவான் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இந்தியா விடுதலை பெற்ற சில நிமிடங்களில் இந்தியப் பெண்களின் சார்பாக இந்திய தேசியக் கொடியை அரசமைப்பு அவையிடம் கொடுத்தவர் இவர். சுதந்திர இந்தியாவில் பறக்கவிடப்பட்ட முதல் கொடி அது.

அரசமைப்பு அவையில் இடம்பெற்றிந்த பெண்கள், முதல் வரைவு குறித்துத் தங்கள் கருத்துகளைத் துணிச்சலோடு வெளிப்படுத்தினர். அரசமைப்புச் சட்டத்தின் நீளம் குறித்து அம்மு சுவாமிநாதன் விமர்சித்தார்.

இந்துப் பெண்களின் திருமணம், சொத்துரிமை குறித்து எதிர்வினையாற்றிய ஹன்ஸா, “அனைவருக்கும் சம உரிமை வழங்குவதன் மூலம் ஜனநாயகத்தை உறுதிசெய்யும் நாடாக இது விளங்கும். அந்த அடிப்படையில் இருந்துதான் நாம் அனைத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

- ப்ரதிமா



Read in source website

இந்தியாவின் ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கும் கயிறாகப் பல கலைஞர்கள் தங்களின் பங்களிப்பைச் செலுத்தியிருக்கின்றனர். அவர்களில் தன்னிகரில்லாத புகழுக்கும் பெருமைக்கும் உரியவர்களில் முக்கியமானவர், பீம்சென் ஜோஷி.

1988இல் இந்தியாவின் சுதந்திர திருநாளில் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் ‘மிலே சுர் மேரா தும்ஹாரா' என்னும் பாடல் வெளியானது. இந்தியாவின் பெருமைமிகுந்த கலைஞர்கள் பலரும் இந்தப் பாடலில் பங்களித்திருப்பார்கள்.

இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, அசாமி, வங்க மொழி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, கஷ்மீரி, சிந்தி, உருது உள்ளிட்ட பதினான்கு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும். இந்தப் பாடலுக்கு இசையை அமைத்தவர் பண்டிட் பீம்சென் ஜோஷி.

இந்தியாவின் ரத்த நாளங்களாக ஓடும் நதிகள், பீடபூமிகள், கடற்கரைகள், மலைச் சிகரங்கள், பள்ளத்தாக்குகள், வயல் வெளிகள், பாலைவனங்கள் எனப் பல்வேறு நிலப்பரப்புகளில் மண் சார்ந்த கலைஞர்கள் பாடும் காட்சிகள் பதிவாகியிருக்கும்.

வெவ்வேறு மண் சார்ந்த மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் கொண்டிருந்தாலும் நாம் அனைவரும் இந்தியரே என்னும் உயர்வான விழுமியம் பாடலின் கருப்பொருளாக இருக்கும்.

‘இசைந்தால் நம் இருவரின் சுரமும் நமதாகும்’ என்னும் வரிகளைத் தமிழில் பாடியிருப்பார் பாலமுரளி கிருஷ்ணா. இந்த இசைத் தொகுப்பின் ஆரம்பத்தில் பன்னீர் தெளித்து மயிலிறகால் நம்மை வருடிக்கொடுக்கும் குரலில் பாடலைத் தொடங்கியிருப்பார் பீம்சென் ஜோஷி.

அதே போல, `தீர்த்த விட்டல க்ஷேத்திர விட்டல’ என்று பண்டிட் பீம்சென் ஜோஷி பாட ஆரம்பித்தாலே போதும் மெய்சிலிர்க்கும் பக்தி அலை பொங்கி எழும். பண்டரிபுரத்தில் அருள்பாலிக்கும் அந்த பாண்டுரங்கனே நேரில் வந்து களிநடனம் புரிய ஆரம்பித்துவிடுவான்.

இன்னொருபுறம் `சதா எள்ளி ஹ்ருதயதல்லி’, `பாக்யதா லக்ஷ்மி பாரம்மா’ போன்ற அவரது தாய்மொழியான கன்னட மொழியில் அமைந்த பக்தி கீதங்கள் நம்மை வேறு உலகிற்கே அழைத்து சென்றுவிடும். சாஸ்திரிய இசை, திரை இசை இரண்டிலும் கோலோச்சிய பீம்சென்னின் நூற்றாண்டு இது.

- வா.ரவிக்குமார்



Read in source website

நம் முக்கால் நூற்றாண்டு சுற்றுச்சூழல் வரலாற்றைச் சுருக்கமாக இப்படிக் கூறலாம்: ‘அணைகளே இந்தியாவின் நவீன ஆலயங்கள்’ என்ற ஜவாஹர்லால் நேருவின் பெருமிதக் குரலில் தொடங்கிய அது, “எமக்குப் பேரணைகளே வேண்டாம்” என்கிற மக்களின் குரலில் வந்து நிற்கிறது.

நாம் அதற்காக நேருவைக் குறை கூற முடியாது. அவரது கூற்று அந்தக் காலகட்டத்துக்கானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேற்கு நாடுகளுக்குப் பொருளாதார முன்னேற்றமே குவிமையமாக இருந்தது. அதையே, காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகளும் பின்பற்றின.

அதனால்தான், சுற்றுச்சூழல் குறித்துப் போதாமை நிலவிய 1950, 1960 ஆகிய 20 ஆண்டுகளைச் ‘சூழலியல் அறியாமைக் காலம்’ என்று குறிப்பிடுகிறார் ராமச்சந்திர குஹா. 1972இல்தான் உலகின் முதலாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மாநாட்டில் அன்றைய பிரதமர் இந்தியப் இந்திரா காந்தி பேசினார்.

மக்கள் இயக்கங்கள்

1973இல் இன்றைய உத்தராகண்ட் மாநிலத்தில் மரங்களை வெட்டுவதற்கு எதிராக, எளிய மலைவாழ் பெண்கள் புகழ்பெற்ற ‘சிப்கோ’ இயக்கத்தைத் தொடங்கினர். அதுவே, விடுதலைக்குப் பிறகான முதல் சுற்றுச்சூழல் போராட்டம்.

அடித்தள மக்களால் தொடங்கி வைக்கப்பட்ட சூழலியல் விழிப்புணர்வு, அடுத்து அறிவுசார் வட்டத்தையும் எட்டியதன் அடையாளமே கேரளத்தின் அமைதிப் பள்ளத்தாக்குப் போராட்டம். நீர் மின்சாரத்துக்காகக் காடுகளை மூழ்கடித்து, அணை கட்டுவதை எதிர்த்து 1978இல் அது தொடங்கியது.

சிப்கோ போராட்டம் போன்றே அதுவும் வெற்றிபெற்று, 1985இல் அப்பகுதி தேசியப் பூங்காவாக மாறியது. காடழிப்புக்கு எதிராக 1983இல் கர்நாடகத்தில் தொடங்கிய அப்பிகோ போராட்டமும் வெற்றியே.

ஆனால், 1985இல் தொடங்கிய சர்தார் சரோவர் அணை எதிர்ப்புப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்தது. இன்று நர்மதையின் நடுவே எழுந்துள்ள அம் மாபெரும் அணை, பழங்குடிகளின் வாழ்விடங்கள் பலியானதன் சாட்சியாகும்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஆட்சியாளர்கள் உருவாக்குவதில்லை. மக்களே அப்பொறுப்பை ஏற்கின்றனர் என்பதே நம் வரலாற்றின் ஆகப் பெரும் துயரம். அரசியல்வாதிகள் என்றுமே சூழலியல் பாதுகாப்புக்கு எதிரிகளாகவே விளங்குகின்றனர்.

விதிவிலக்காக மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை மட்டும் சொல்லலாம். சுற்றுச்சூழல்மீது தனிப்பட்ட ஆர்வம் கொண்டவர். அவருடைய அரசியல் குறித்துக் கடும் விமர்சனங்கள் இருந்தும், சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் மீதான அவரது அக்கறையை ஜோதிபாசு போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களே பாராட்டியுள்ளனர்.

இந்திராவின் முன்னெடுப்பு

சூழலியல் ஆர்வம்கொண்ட முதலும் கடைசியுமான பிரதமர் அவர் ஒருவரே. சுற்றுச்சூழல் அமைச்சகத்தை முதன்முதலாக உருவாக்கியவர்; முதல் சுற்றுச்சூழல் அமைச்சரும் அவரே.

‘வனப் பாதுகாப்புச் சட்டம் 1980’ அவரது ஆட்சியிலேயே நிறைவேறியது. அரசியல் கட்சிகளின் வரலாற்றில் முதன்முறையாகத் தேர்தல் அறிக்கையில் (1980) ‘சூழலியல்’ என்ற சொல்லை இடம்பெறச் செய்தவரும் அவரே.

இருப்பினும், அவரது ஆட்சியும் முழுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் இயங்கவில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சட்டம் நிறைவேற அவரது மறைவுக்குப் பிறகு, 1984 போபால் ‘யூனியன் கார்பைடு’ நச்சுவளி விபத்து வரை காத்திருக்க நேர்ந்தது. அக்கொடிய நிகழ்வின் உயிரிழப்புக்குப் பிறகே, ‘சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986’ இயற்றப்பட்டது.

அதற்கு, விடுதலைக்குப் பிறகு 40 ஆண்டுகள் தேவைப்பட்டன என்பது ஓர் அவமானமே. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஓரளவு கிடைத்திருந்த மகிழ்ச்சியும் ஏறத்தாழ பத்தாண்டுகளே நீடித்தன.

1990-களில் சந்தைப் பொருளாதாரம் வெட்டுக்கத்தியாய் இறங்கியபோது, அதற்கு முதல் பலி சுற்றுச்சூழலே. சூழலியல் பாதுகாப்புச் சட்டங்கள் ஒன்றும் நமக்குச் சும்மா கிடைக்கவில்லை. போராட்டங்களையும் உயிர்ப் பலிகளையும் விலையாகத் தந்தவை அவை.

இருப்பினும் வளர்ச்சிக்கு எதிரானவர்களாகவே சூழலியலாளர்கள் தூற்றப்படுகின்றனர். வளர்ச்சிக்கு எதிராக அல்லாது முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்காகவே அவர்கள் போராடுகின்றனர் என்கிற புரிதல் ஆட்சியாளர்களிடம் முதலில் உருவாக வேண்டும்.

ஐக்கிய அமெரிக்காவின் வனப் பாதுகாப்புத் துறை நிறுவனர் கிஃபோர்ட் பின்சாட் கூறியது இங்கு பொருத்தமாக இருக்கும். “நமது பணி கோடரியைத் தடுத்து நிறுத்துவதல்ல; கோடரியின் பயன்பாட்டினை முறைப்படுத்துவதாகும்.”

இந்திரா காந்தி தெரிவித்த ஒரு கருத்தும் நினைவுக்குவருகிறது. 1873இல் ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தில் யானைகளைப் பாதுகாக்க ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1953இல் ஆந்திர மாநிலம் தனியே பிரிந்து சென்றதும் அம்மாநிலத்தில் யானைகளின் எண்ணிக்கை குறைந்தது. அது குறித்துக் கருத்துரைத்த இந்திரா, ‘‘ஆந்திராவில் சட்டம் பாதுகாக்கப்பட்டது - யானைகள் காணாமல் போயின’’ என்றார். அதுபோல வருங்காலத்தில் ‘சட்டம் பாதுகாக்கப்பட்டது - சுற்றுச்சூழல் காணாமல் போனது’ என்ற நிலை ஏற்படலாம்.

சுற்றுச்சூழலின் நிலை

1991இல் கொண்டுவரப்பட்ட கடற்கரை ஒழுங்காற்றுச் சட்டம் குற்றுயிருடன் கரையொதுங்கிக் கிடக்கிறது. அது குறித்து கவனிக்க வேண்டிய டெல்லியும் காற்று மாசில் மூழ்கி ஆண்டுக்குப் பத்தாயிரம் பேரை இழந்துவருகிறது.

நீர் மாசினால் லட்சக்கணக்கில் நம் குழந்தைகளைப் பலிகொடுக்கிறோம். எங்கும் மாசு... எதிலும் மாசு. வேற்றுமையில் ஒற்றுமை காண இன்று இந்திய ஒன்றியத்தை இணைக்கும் ஒரே புள்ளியாக விளங்கும் தகுதி ‘சுற்றுச்சூழல் மாசு’க்கு மட்டுமே உண்டு.

2014ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் மொத்தமுள்ள 180 நாடுகளில் 155ஆவது இடத்தில் இருந்த நாம், 2018இல் மேலும் கீழிறங்கி 177ஆவது இடத்துக்கு வீழ்ச்சியடைந்தோம்.

ஆனாலும், சுற்றுச்சூழலை அழிக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவது இன்றும் நிறுத்தப்படவில்லை. முதன்மையான ஆறு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களையும் நீர்த்துப்போகச் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மறுபக்கம் நம் பிரதமர் மோடிக்கு 2018 செப்டம்பரில் ஐ.நா. அவையின் ‘சாம்பியன் ஆஃப் எர்த்’ விருது அளிக்கப்படுகிறது.

காலநிலை மாற்ற நெருக்கடியிலிருந்து தப்பிக்கும் வழிகளை உலக நாடுகள் தேடுகையில், நாம் அந்த ஆபத்தின் திசைநோக்கியே பாதங்களைப் பதிக்கிறோம். புவி வெப்பமாதலைக் குறைக்கும் ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்டிருப்பது ‘செலக்டிவ் அம்னீசியா’வில் நமக்கே மறந்துவிட்டதுபோலும்.

புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான பியர் கிரில்சின் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி ஒரு கேள்வி கேட்பார்: “இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கவிருக்கும் குழந்தையை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுடைய வளத்தை நுகர்வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது?” நமக்கு விளங்கவில்லை. இதே கேள்வியைத்தான் சூழலியலாளர்கள் அரசை நோக்கிக் கேட்க விரும்புகிறார்கள்.

- நக்கீரன், சூழலியல் எழுத்தாளர் தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com



Read in source website

ஆங்கிலேய அரசாங்கம் அரசுக் கல்லூரிகளைத் தொடங்கியபோதே அரசின் உதவியுடன் தனியார் கல்லூரிகளைத் தொடங்கவும் அனுமதி வழங்கியது. 1871இல் சென்னை மாகாணத்தில் 4 அரசுக் கல்லூரிகளும் 7 அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளும் செயல்பட்டன.

இவற்றில் பெரும்பாலானவை கலை - அறிவியல் கல்லூரிகளே. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1981இல் தமிழகத்தில் செயல்பட்ட மொத்த கலை - அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 195. அவற்றில் 51 அரசுக் கல்லூரிகள்; அரசு உதவிபெறும் கல்லூரிகளின் எண்ணிக்கை 144ஆக இருந்தது.



Read in source website

தமிழ்நாட்டில் இளையோரின் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் தாய்மார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

குழந்தைகளைக் கிணற்றில் வீசித் தாய் தற்கொலை, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டுத் தாய் தற்கொலை எனப் பலவிதமாகப் பல மாவட்டங்களில் தற்கொலைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடக்கும் மாபெரும் சமூக அவலமாக இது உருவெடுத்திருக்கிறது.



Read in source website