DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 11-03-2022

 

சென்னை: கலாசாரம்-பண்பாடு உள்பட 12 தலைப்புகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முதல்வரின் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் 30 இளைஞா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

இது தொடா்பாக சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையின் முதன்மைச் செயலாளா் த.உதயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு விவரம்:

தமிழ்நாடு முதல்வரின் செயலாக்கத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொள்கைளை திறம்பட வகுத்தெடுப்பது, அரசின் திட்டங்கள் செயலாக்கத்தில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பது, கொள்கைகள், திட்டங்கள் உருவாக்கத்தில் சா்வதேச அளவிலான நிலைகளுக்கு பரிந்துரைப்பது போன்ற பணிகள் செயலாக்கத் திட்டத்தின் நோக்கமாக இருக்கும். அரசின் சேவைகளை கண்காணித்தல், மேம்படுத்துதல், அவற்றை பயனாளிகளுக்குக் கொண்டு சோ்ப்பதில் உள்ள திறன் குறியீடுகளை வரையறுப்பது ஆகிய பணிகளும் திட்டத்தின் நோக்கங்களாக இருக்கும்.

இதற்கென 12 பிரிவுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. நீா் வளம், வேளாண்மை, அனைவருக்கும் வீட்டு வசதி, கல்வி நிலைகள் மேம்பாடு, சுகாதார குறியீடுகளை மேம்படுத்துவது, கலாசாரம்-பண்பாடு, சூழலியல் சமன்பாடு, தரவு அடிப்படையிலான ஆட்சிமுறை என 12 வகையான பிரிவுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த தலைப்புகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு தலைப்புக்கும் தலா 2 போ் வீதம் 24 போ் தோ்வு செய்யப்படுவா். கண்காணிப்புப் பிரிவில் 6 போ் இருப்பா். இந்தத் திட்டம் இரண்டு நிதியாண்டுகளுக்கு அமலில் இருக்கும். இதற்கென ரூ.5.66 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுப் பணிகளுக்கு 24 பேரைத் தோ்வு செய்தற்கென மூன்று நிலைகளில் தோ்வு நடத்தப்படும். இணைய அடிப்படையிலான முதல்நிலைத் தோ்வு, இரண்டாம் கட்டமாக எழுத்துத் தோ்வு நடத்தப்படும். மூன்றாவது கட்டமாக நோ்முகத் தோ்வு நடத்தப்படும். இதற்கான விரிவான அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும். இதற்கு விண்ணப்பிக்க 15 நாள்கள் அவகாசம் அளிக்கப்படும்.



Read in source website

 

சென்னை: அணைகள் பாதுகாப்பு சட்டத்தால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்வதோடு, இந்தச் சட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர தடை விதிக்க வேண்டுமென மயிலாடுதுறை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினா் எஸ். ராமலிங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு, மனுவுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி அமா்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்குரைஞா் சீனிவாச மூா்த்தி ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தாா். மத்திய நீா்வளத்துறை துணை ஆணையா் ரவி நாத் சிங் தாக்கல் செய்த அந்தப் பதில் மனுவில், நாட்டில் 5,334 பெரிய அணைகள் உள்ளன. இதில் 227 அணைகள் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை. தற்போது 411 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, கண்காணிப்பை உறுதி செய்யவும், அணைகளில் விபத்துகளை தவிா்க்கவும், மக்கள், விலங்குகள், தாவரங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் பொது நலத்துடன் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பெரும்பாலான அணைகள் இரு மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது என்பதால், இந்த அணைகளின் பாதுகாப்பு என்பது ஒரு மாநிலத்திற்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் முக்கியமானது. ஒவ்வொரு மாநிலமும் தங்கள் எல்லையைத் தாண்டி அமல்படுத்தும் வகையில் சட்டம் இயற்ற முடியாது என்பதால் நாடு முழுவதும் பொருந்தும் வகையில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம், அணைகளின் தரத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசு அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலும் இருக்கும். மாநிலங்கள், மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலேயே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அணைகள் மீதான உரிமை, இயக்கம், பராமரிப்பு, பயன்கள், நீரின் மீதான உரிமை என தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்திற்கும் ஏற்கெனவே உள்ள உரிமைகளில் மாற்றம் செய்யப்படாது. அணையின் உரிமை, செயல்பாடு, பராமரிப்பு விவகாரங்களில் எந்த மாற்றத்தையும் இச்சட்டம் செய்யப் போவதில்லை.

மாநில அதிகார வரம்பில் ஊடுருவி, சேதப்படுத்திவிடும் என்ற மனுதாரரின் அச்சம் தவறானது. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் 2- ஆவது வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனா்.



Read in source website

கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.

கரோனா பேரிடரால் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடிகளுக்கு இடையில் கேரள அரசின் பட்ஜெட்டை அந்த மாநில நிதியமைச்சா் கே.என்.பாலகோபால் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். இதில், தகவல் தொழில்நுட்பம், தொழிலகங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் அந்தத் துறைகளுக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகை அளிக்கப்படலாம் என்ற எதிா்பாா்ப்பு கேரள மக்களிடையே பொதுவாக காணப்பட்டது. ஆனால், அடிப்படை நில வரி மாற்றியமைப்பு, நிலத்தின் உண்மையான மதிப்பு அதிகரிப்பு, மோட்டாா் வாகன வரி மற்றும் பழைய வாகனங்களுக்கான பசுமை வரி விதிப்பு அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதன்மூலம், கேரளஅரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.350 கோடி வருவாய் கிடைக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2023-24-ஆம் நிதியாண்டு முதல் சுற்றுச்சூழல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் கேரள அரசு முன்மொழிந்துள்ளது.

 



Read in source website

சாா்தாம் திட்ட உயரதிகாரக் குழுத் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

உத்தரகண்டில் யமுனோத்திரி, கங்கோத்ரி, கேதாா்நாத், பத்ரிநாத் ஆகிய 4 புனிதத் தலங்களை (சாா்தாம்) இணைக்க ரூ.12,000 கோடி செலவில் 900 கி.மீ. நீள நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. சீன எல்லை வரை செல்லும்விதமாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டம் தொடா்பான வழக்கைக் கடந்த 2020-ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், 2018-ஆம் ஆண்டு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையைப் பின்பற்றி நெடுஞ்சாலையில் இரு வழித்தடங்களின் அகலமும் 5.5 மீட்டருக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘‘இந்தியா-சீனா எல்லையில் உள்ள ராணுவ முகாம்களுக்கு படைகள் மற்றும் தளவாடங்களை அனுப்ப சாலைகளை மேம்படுத்த வேண்டும். ராணுவத்தினரின் தேவையைப் பூா்த்தி செய்ய சாா்தாம் நெடுஞ்சாலையில் இரு வழித்தடங்களின் அகலத்தை 7 மீட்டா் முதல் 7.5 மீட்டராக அதிகரிக்க வேண்டியது அவசியம்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை கடந்த ஆண்டு டிசம்பா் 14-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், சாா்தாம் நெடுஞ்சாலையில் இரு வழித்தடங்களின் அகலத்தை அதிகரிக்க அனுமதியளித்தது.

இந்நிலையில், இந்தத் திட்டம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் டி.ஒய்.சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இமயமலைப் பள்ளத்தாக்கில் சாா்தாம் திட்டம் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்து ஆராயும் உயரதிகாரக் குழுவின் தலைவா் பதவியை ராஜிநாமா செய்து பேராசிரியா் ரவி சோப்ரா அனுப்பியிருந்த கடிதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனா். வழித்தடங்களை அகலப்படுத்துவது தொடா்பாக உயரதிகாரக் குழுவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ரவி சோப்ரா ராஜிநாமா செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடா்ந்து அந்தக் குழுவின் புதிய தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரியை நீதிபதிகள் நியமித்துள்ளனா்.



Read in source website

ஹால்மாா்க் முத்திரை இல்லாத நகைகளை இந்திய தர நிா்ணய அமைப்பால் (பிஐஎஸ்) அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் கட்டணம் செலுத்தி தங்கத்தின் தரத்தை பரிசோதித்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நான்கு நகைகளுக்கு ரூ.200-ம், 5 அல்லது அதற்கு மேற்பட்ட நகைகள் இருந்தால் தலா ரூ.45-ம் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய நுகா்வோா் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நாடு முழுவதும் ஹால்மாா்க் முத்திரையிடும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தினசரி 3 லட்சம் தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் முத்திரையிடப்படுகிறது. இதை பிஐஎஸ்ஸால் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் செய்கின்றன. தற்போது, ஹால்மாா்க் முத்திரையில்லாத நகைகளை வைத்திருக்கும் வாடிக்கையாளா்களும் தங்களின் நகைகளின் தரத்தை பிஐஎஸ்ஸால் அங்கீகரிக்கப்பட்ட ஹால்மாா்க் மையங்களில் கட்டணம் செலுத்தி தெரிந்து கொள்ளலாம். இந்த வாடிக்கையாளா்களின் நகைகளுக்கு முன்னுரிமை அளித்து பரிசோதனை அறிக்கையை விரைந்து அளிக்க வேண்டும்.

இந்த தர பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், அந்த மதிப்புக்கு தங்களின் தங்கத்தை வாடிக்கையாளா்கள் விற்பனை செய்ய உதவும்.

ஹால்மாா்க் முத்திரையுடன் வாங்கிய தங்க நகைகளுக்கு பிஐஎஸ் அளித்த தனித்துவமான எண்ணை வாடிக்கையாளா்கள் ‘பிஐஎஸ் கோ்’ செயலியின் மூலமும் தெரிந்து கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சரியாக, பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு கட்சி, பாரம்பரியான கட்சிகளைத் தோற்கடித்து இந்திய அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தையே உருவாக்கியுள்ளது. மக்களின் மனங்களை வென்றுள்ளது. தேர்தல் அரசியலில் சரித்திரம் படைத்துள்ளது.

அதிகாரத்தை தூக்கி எறிந்த 'ஆம் ஆத்மி'

மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு மாறாக பொறுப்பேற்று 49 நாள்களில் பதவியை ராஜிநாமா செய்தபோது பொறுப்பற்ற செயல் என்றெல்லாம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படட கட்சி, இந்திய அரசியலின் மாற்று சக்தியாகத் தற்போது உருவெடுத்துள்ளது.

ஊழல் எதிர்ப்பு என்ற ஒற்றை இலக்குடன் பொதுவாழ்வில் குதித்தவர் ஐஐடி பட்டதாரியான அரவிந்த் கேஜரிவால். தற்போது, இந்திய அரசியலைத் தன்னை சுற்றிச் சுழலவைக்கும் பிரதமர் மோடிக்கு சவாலாக மாறியுள்ளார். ஆம் ஆத்மி எம்மாதிரியான சரித்திரத்தைப் படைத்துள்ளது என்பதற்கு பாரம்பரியான கட்சிகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. 

கடந்த 1980ஆம் ஆண்டு தொடங்கப்பட்டிருந்தாலும் பாஜகவுக்கு என தனித்த நீண்ட அடையாளம் உண்டு. 96 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் நீட்சியாகவே பாஜகவைக் கருதலாம்.  இந்தியாவில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் காங்கிரஸ், 136 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 

சரித்திரமின்றி சரித்திரம் படைத்த கேஜரிவால்

நேருவின் காங்கிரஸ், சாவர்க்கரின் பாஜகவை போன்றில்லாமல் சுதந்திர போராட்டத்திலிருந்து எந்தவிதமான வரலாறும் கொள்ளாத கட்சியாகவே ஆம் ஆத்மி உள்ளது. சரி, ஆம் ஆத்மி எந்தவிதத்தில் மாறுபட்டுள்ளது என கேள்வி எழாமல் இல்லை. 

கொள்கை, நோக்கம், மக்கள் நலன் என எல்லாம் இருந்தாலும் தற்போதைய அரசியல் சூழலில் தடம் பதிப்பதற்கு மிக முக்கியமாக இருப்பது முகம். யாரைத் தலைவராக முன்னிறுத்துகிறோம் என்பது வெற்றியில் முக்கிய பங்காற்றுகிறது. இதற்கு வரலாறே சாட்சியமாக உள்ளது.

இந்திரா காந்தி தொடங்கி யோகி ஆதித்யநாத் வரை ஒரு வலுவான  தலைவரையே மக்கள் விரும்புகின்றனர். இவர்களிடையே ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தாலும் அவர்களிடமிருக்கும் ஒரு ஒற்றுமை மக்களிடம் சென்றடைந்துள்ளார்கள். ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்குப் பின்னணியிலும் அரவிந்த் கேஜரிவாலின் பங்கு அளப்பரியது.

ஒருவரின் தோல்வியில்தான் மற்றொருவரின் வெற்றி உள்ளது. காங்கிரஸ் தோல்வியும் ஆம் ஆத்மியின் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. காங்கிரஸ் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அறியப்படுவது அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டம். பின்னாள்களில் பாஜகவின் வெற்றிக்கு இது எந்தளவுக்கு உதவியது என்பது அனைவரும் அறிந்ததே. 

கேஜரிவாலின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'

அந்தப் போராட்டத்தின் மூலம் உதயமானவர்களில் ஒருவர்தான் கேஜரிவால். யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் எனப் பலர் அதன் மூலம் அரசியலில் குதித்திருந்தாலும் கேஜரிலால் எப்படி அதிலிருந்து தன்னைத் தனித்துக் காட்டிக் கொண்டார் என்பதுதான் வரலாறு. 

பெரியாரின் விருப்பங்களை செய்து முடிக்க அண்ணா தேவைப்பட்டார். அரசியல் அதிகாரம் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டு, மக்கள் நலன் சார்ந்த சாதியற்ற சமத்துவ அரசியலை நிலைநாட்டியவர் அண்ணா. தீவிரமான கொள்கைப் பின்னணியிலிருந்து வந்தவர். 

ஆனால், இது நவீன காலம். கொள்கை பார்த்து வாக்களிப்பதும் வாக்குக்  கேட்பதும் வெகுவாகக் குறைந்த இக்காலகட்டத்தில் ஊழல் எதிர்ப்பு என்பதைக் கையில் எடுத்து அதற்குப் பின்னணியில் மக்களைக் கவரும் வகையிலான அடிப்படைத் தேவைகளை இணைத்ததுதான் கேஜரிவாலின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.

இலக்கை நிர்ணயித்த ஆம் ஆத்மி

கடந்த 2014 ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 400  இடங்களுக்கு மேல் போட்டியிட்ட ஆம் ஆத்மி, பஞ்சாபில் நான்கு இடங்களில் மட்டுமே வெல்கிறது. பின்னர், அரசியலிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் கேஜரிவாலுக்கு மக்கள் அளித்த பரிசுதான் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி.

மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்துகொண்டு செயலாற்றத் தொடங்குகிறார். கேஜரிவாலின் வெற்றிக்கு மிக முக்கிய வாக்கு வங்கியாக கருதப்பட்ட மத்திய வர்க்கத்தைத் தாண்டி ஏழை எளிய மக்களை நோக்கிய ஆம் ஆத்மியின் பயணம் பின்னர் தொடங்குகிறது. தண்ணீர், மின்சாரம், சுகாதாரம், கல்வி போன்ற விவகாரங்களில் தேவைகளைப் பூர்த்தி செய்து ஏழை மக்களின் மனங்களில் இடம் பிடித்த கேஜரிவாலின் அடுத்த இலக்கு பஞ்சாபாக மாறுகிறது.

மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களைப் போன்று தில்லியில் மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமல்ல. ஆனால், மற்ற மாநிலங்களில் கள நிலவரம் வேறு, அரசியல் பின்னணி வேறு. என்னதான் நவீன காலமாக இருந்தாலும், பின்பற்றிக் கொள்வதாகச் சொல்லிக் கொள்வதற்கும் மக்கள் மனதில் இணக்கத்தை உருவாக்குவதற்கும் சமகாலத் தலைமையை தாண்டிய தலைவர்கள் தேவை.

அரசியல்வாதியான கேஜரிவால்

இங்குதான் சரியான தேர்வைச் செய்கிறார் கேஜரிவால். இளைஞர்களைக் கவர பகத் சிங், 32 சதவிகித தலித் மக்களைக் கவர அம்பேத்கர் எனத் தலைவர்களை முன்னிலைப்படுத்த தொடங்குகிறது ஆம் ஆத்மி. இவை எல்லாம் தாண்டி, கேஜரிவாலைப் போன்று உள்ளூர்த் தலைமை தேவை.

கடந்த 2017 ஆண்டு போல் அல்லாமல் இந்த தேர்தலில் பகவந்த் சிங் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்து சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி, களத்திலும் தீவிரமாகச் செயல்பட்ட ஆம் ஆத்மிக்கு போட்டியிட்ட இரண்டாவது தேர்தலிலேயே பஞ்சாபில் மாபெரும் வெற்றியுடன் ஆட்சியும் கிடைத்துள்ளது.

கோவாவில் குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பதிவு செய்த ஆம் ஆத்மி, 6.8 சதவிகித வாக்குகள் பெற்று இரண்டு இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸ் கட்சியின் இடத்தை பெறத் தொடங்கியுள்ளது எனலாம். சமகால அரசியல் சூழலுக்கு ஏற்ப தில்லி கலவரம் தொடங்கி குடியுரிமைத் திருத்த சட்ட போராட்டம் தொடர்பான விவகாரங்களில் வாய் திறக்காமல் இருந்து தன்னை முழு அரசியலவாதியாகவே கேஜரிவால் நிலைநிறுத்திக்  கொண்டுள்ளார்.

ஆம் ஆத்மியின் கொள்கையற்ற அரசியல் தன்மை ஆபத்தானதாக இருந்தாலும் மாற்று தேடும் மக்களின் மனங்களில் அது இடம் பிடிக்கத் தொடங்கிவிட்டது என்றால்  ஐயமில்லை. அடுத்து, இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள குஜராத்  மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றியைப் பெறும்  நோக்குடன் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார் ஆம் ஆத்மியின்  கேஜரிவால். அதற்கேற்பவோ என்னவோ 4 மாநிலங்களின் பாஜக வெற்றியைக் கொண்டாட குஜராத்துக்குச் சென்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆம் ஆத்மியின் அம்பு அடுத்த இலக்கைத் தொட்டு வீழ்த்துமா என்பதைக் காலம்  தீர்மானிக்கும்.



Read in source website


ரஷிய - உக்ரைன் போர் காரணமாக, இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி சமையல் எண்ணெய் விலை ஏற்கனவே 25 - 30 சதவீதம் உயர்ந்துவிட்ட நிலையில், அதுமேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.


ஒரு பக்கம் நாட்டிலுள்ள சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்பு ஆலைகளில், இருப்பு வைக்கப்பட்டிருக்கும் சூரியகாந்தி எண்ணெய் குறைந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட வேண்டிய சூரியகாந்தி எண்ணெய் பல்வேறு துறைமுகங்களிலும் சிக்கியுள்ளது.

இதன் காரணமாகத்தான் தற்போது நாட்டில் சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து, இல்லத்தரசிகளின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு காரணமாக, இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதியை பாதிக்கச் செய்துள்ளது. காரணம், நாட்டின் ஒட்டமொத்த சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில், கருங்கடலில் அமைந்திருக்கும் உக்ரைன் மற்றும் ரஷிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் அளவு 90 சதவீதம் என்பதே.

ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் ஒரு கிலோ சூரியகாந்தி சமையல் எண்ணெய் விலை ரூ.135 ஆக இருந்த நிலையில், அது தற்போது ரூ.180 ஆக அதிகரித்துள்ளது. உக்ரைன், ரஷியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய காந்தி எண்ணெய்க்கு மாற்றாக, மத்திய அரசு வேறு நாடுகளிலிருந்து சமையல் எண்ணெயை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கும்வரை, நாட்டு மக்கள், சூரியகாந்தி எண்ணெய் அல்லாத வேறு சமையல் எண்ணெய்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுகர்வோர் அச்சப்பட வேண்டுமா?
சூரிய காந்தி எண்ணெய் தயாரிப்பு ஆலைகள் பலவும் தற்போதே சூரியகாந்தி வித்துக்கள் இல்லாமல் தவித்து வருகின்றன. மிகப்பெரிய நிறுவனங்கள் இன்னும் ஒரு மாதம் வரை இருக்கும் கச்சா பொருளை வைத்து எண்ணெய் தயாரிப்புப் பணியை தொடர முடியும்.

இதனால், பெரிய அளவில் எண்ணெய் விநியோகத்தை நிறுத்திவிட்டு, சில்லறை வணிகத்துக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கவும் பெரிய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

இந்திய சமையலறைகளில், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெயில், பத்தில் ஒரு மடங்கு சூரியகாந்தி எண்ணெய்தான். அதுவும் குறிப்பாக வடக்கு மாநிலங்களை விடவும், தென் மாவட்டங்களில் இது அதிகம்.

எப்படியிருந்தாலும், சூரிய காந்தி எண்ணெய் இறக்குமதி தடைபட்டிருப்பது, நாட்டு மக்களுக்கு சிரமத்தை அளித்தாலும், அதனுடன், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் என பல வகை எண்ணெய்கள் இறக்குமதியும், உற்பத்தியும் செய்யப்படுவதால் அதனைக் கொண்டு சமாளிக்க முடியும் என்கிறார்கள் சந்தை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வரும் நிபுணர்கள்.

தாங்கள் இறக்குமதி செய்யும் எண்ணெய் மற்றும் கச்சா பொருள்கள், தங்களை வந்தடையும் வரை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் எதையும் உறுதியாகக் கூற முடியாது. எண்ணெய் இறக்குமதியாளர்களும், உடனடியாக விலை குறைந்த மற்றும் எளிதாகக் கிடைக்கும் மாற்று எண்ணெய் இறக்குமதிக்கு மாறும் நிலை ஏற்படும்.

 



Read in source website

 

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 19 காசு அதிகரித்து 76.43-இல் நிலைபெற்றது. உள்நாட்டு பங்குச் சந்தை நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து ரூபாய் மதிப்பு தொடா்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் பெற்றது.

கச்சா எண்ணெய் 116.43 டாலா்

சா்வதேச சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 116.43 டாலருக்கு வா்த்தகமானதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.



Read in source website

புதுச்சேரி: புதுச்சேரியில் இம்முறையும் இடைக்கால பட்ஜெட்டுக்காக அம்மாநில சட்டப்பேரவை இம்மாத இறுதியில் கூடுகிறது.

புதுவையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலை மாறி, மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் சில மாதங்கள் கழித்து மீண்டும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அதிலும், கடந்த கால புதுவை அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு சரியான நேரத்தில் அனுமதி அளிக்காததால் சிக்கல்கள் ஏற்பட்டன. உரிய நேரத்தில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால் சட்டமன்ற கூட்டமே தள்ளிவைக்கப்பட்ட சூழலும் ஏற்பட்டது. இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வென்று புதுச்சேரியில் ஆட்சி அமைந்ததால் இம்முறை புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறையும் இடைக்கால பட்ஜெட்டைதான் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்யவுள்ளார்.

அடுத்த மாதம் ஊதியம் ஒப்புதல் தருவது, நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெறும் வகையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இம்மாத இறுதியில் சட்டப்பேரவை கூடவுள்ளது.

இது பற்றி அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரி மாநிலம் கடந்த சில ஆண்டுகளாக, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மத்திய அரசு கடந்த நிதி ஆண்டைப் போலவே வரும் நிதி ஆண்டும் (2022-2023) ரூ.1729 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனால், கூடுதலாக ரூ.2,000 கோடி மத்திய அரசு வழங்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து பதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பட்ஜெட் மதிப்பீடு செய்யும் பணியை முதல்வர் தலைமையில் மேற்கொள்ள வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கை இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது.

அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவினங்களுக்கு, மார்ச் மாதம் இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டனர்.



Read in source website

சென்னை: மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தால் மாநில அரசின் அதிகாரம் ஒருபோதும் பறிக்கப்படாது என மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசு இயற்றியுள்ள 2021-ம் ஆண்டின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையி்ல் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசின் நீர்வளத் துறைதுணை ஆணையர் ரவிநாத்சிங் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘‘அணைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, கண்காணிப்பு, அபாயகர விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் அணைகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெரும்பாலான அணைகள், இரு மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதால் அணைகள் பாதுகாப்பு என்பது ஒரு மாநிலத்துக்கு மட்டுமின்றி மற்றமாநிலங்களுக்கும் முக்கியமானது. ஒவ்வொரு மாநிலமும் தங்களதுஎல்லையைத் தாண்டி அமல்படுத்தும் வகையில் சட்டம் இயற்ற முடியாது என்பதால் நாடு முழுவதும் பொருந்தும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின்படி பெரிய அணைகளின் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய நதிநீர் ஆணையத்தின் மூலமாக மத்திய அணை பாதுகாப்பு அமைப்பும், அணை பாதுகாப்புக்கான மத்திய குழுவும் அமைக்கப்படும். இச்சட்டத்தால் மாநில அரசின் அதிகாரம் ஒருபோதும் பறிக்கப்படாது. இரு அமைப்புகளிலும் மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் இடம்பெறுவர். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என தெரி வித்துள்ளார்.

இந்த பதில்மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.



Read in source website

சென்னை: தமிழ்நாடு மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம் மற்றும் பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் இணைந்து காசநோய் குறித்த கருத்தரங்கம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், மாநில காசநோய் அலுவலக கூடுதல் இயக்குநர் டாக்டர் ஆஷா பேசும்போது, ‘‘காசநோய் பாதிப்பை படிப்படியாகக் குறைக்கமத்திய, மாநில அரசுகள் தொடர்ந்துபல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் காசநோய் பரிசோதனைகள் மையங்கள் இருக்கின்றன.

இதேபோல், ஆரம்ப சுகாதாரமையங்களிலும் காசநோய் பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான, கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு லட்சம்பேரில் அதிகபட்சமாக 162 பேர்காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம்’’ என்றார்.

உலக சுகாதார நிறுவனத்தின் காசநோய்த் தடுப்பு பிரிவு ஆலோசகர் டாக்டர் பிரபு ராவணன் பேசும்போது, ‘‘இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 37 பேர் என்ற வீதத்தில் காசநோயால் உயிரிழக்கின்றனர். மேலும், கிராம அளவில் காசநோயைக் கண்டறிவதற்காக நடமாடும் சோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படவுள்ளன. காசநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு நேரடி வங்கிப் பரிவர்த்தனை மூலம் அரசு நிதிஅளித்து வருகிறது’’ என்றார்.



Read in source website

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பை குறைக்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்பலனாக கடந்த ஒரு மாத காலமாக கரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியது. கடந்த இரு தினங்களாக ஒருவர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதனால் நாமக்கல் மாவட்டம் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது. இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 67,990 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 67,430 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Read in source website

திறமையான இளைஞர்களை பயன்படுத்தி அரசு சேவைகளை மேம்படுத்தும் முதல்வரின் புத்தாய்வு திட்டம் என்ற புதியதிட்டம் நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்த நிலையில், அடுத்து வந்த நிதிநிலை அறிக்கை மற்றும் துறைகள்தோறும் மானிய கோரிக்கை அறிவிப்புகளில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.

அவற்றில் ஒன்றுதான், ‘முதல்வர் புத்தாய்வுத் திட்டம்’. சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் வரும் இத்திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையாக தற்போது திட்டத்துக்கான நிதி ஒதுக்கி, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக இளைஞர்களின் திறமைகளில் அரசு அதிக நம்பிக்கைகொண்டுள்ளது. எனவே, இளைஞர்களை பயன்படுத்தி அரசு சேவைகளை மேம்படுத்த, புத்தாய்வு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தொழில்முறை, கல்விப் பின்னணி அடிப்படையில் தகுதியான இளம் வல்லுநர்களை தேர்வு செய்து ஊக்க ஊதியத்துடன் 2 ஆண்டு புத்தாய்வு பயிற்சி அளிக்கப்படும்.

இவர்கள் மாநில அரசின் முதன்மை மற்றும் முன்னுரிமை திட்டங்களை செயல்படுத்துவதில் நேரடியாக ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும், முதல்வர் அலுவலகம், சம்பந்தப்பட்ட துறைகளின் வழிகாட்டுதலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொள்வார்கள். திட்டங்களை கண்காணித்து செயல்பாட்டில் பிரச்சினை இருந்தால் அவற்றை களையவும், சிறப்பாக செயல்படுத்தவும் தேவையான முடிவுகளை எடுக்கவும் உதவியாக இருப்பார்கள்.

இத்திட்டம் நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. கொள்கை செயல்திறன், இடைவெளியைக் கண்டறிதல், சர்வதேச அளவில் அவற்றுக்கான வரையறைகளை கட்டமைக்க, அறிவார்ந்த மற்றும் செயலாக்கம் நிறைந்த மனித வளத்தை உருவாக்குதல் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்துக்காக கல்வி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து, துறைகள்தோறும் திட்டங்களை கண்காணித்து, அவற்றின் சேவைகளை மேம்படுத்துதல், முக்கியமான செயல்பாட்டு குறியீடுகளை கண்டறிந்து அவற்றை செயல்படுத்துதல் உள்ளிட்டவை திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின்கீழ், நீர் ஆதாரங்களை அதிகரித்தல், விவசாய உற்பத்தி மற்றும் சந்தை தொடர்புகளை உருவாக்குதல், அனைவருக்கும் வீடு, கல்வித் தரத்தை மேம்படுத்துதல், சுகாதார குறியீடுகளை மேம்படுத்துதல், சமூக பங்களிப்பு, உள்கட்டமைப்பு மற்றும் தொழிற்சாலை மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு, நிறுவனக் கடன், பாரம்பரியம் மற்றும் கலை,பசுமை சமன்பாடு, தரவு அடிப்படையிலான நிர்வாகம் ஆகிய12 கருப்பொருட்கள் அடிப்படையிலான துறைகள் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில், ஒரு துறைக்கு 2 பேர் வீதம் 24 பேரும், சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் கண்காணிப்பு மையத்துக்கு 6 பேரும் என 30 இளம் வல்லுநர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு, திருச்சி பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.அந்நிறுவனம் இளம் வல்லுநர்களை ஆன்லைன் தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யும்.

பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் ஆகியவற்றில் முதல்வகுப்பு தேர்ச்சியுடன் இளநிலை பட்டம் பெற்றவராகவோ அல்லது கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் முதுநிலை பட்டம் பெற்றவராகவோ இருக்கலாம். பிஎச்டி முடித்தவர்கள், பணி, ஆராய்ச்சி அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ் மொழி அறிவு கட்டாயமாகும்.

22 முதல் 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயது வரையும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 33 வயது வரையும் தளர்வு அளிக்கப்படும். தேர்வு முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும். தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழில் நடத்தப்படும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம் மற்றும் போக்குவரத்து, தொலைபேசி, இணைய வசதி ஆகியவற்றுக்காக ரூ.10 ஆயிரம் அலவன்சு வழங்கப்படும்.

இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு முதலில் 30 நாட்கள் பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் மற்றும் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின், இளம் வல்லுநர்கள் 12 துறைகளில் திட்ட கண்காணிப்பு பணிகளில் அமர்த்தப்படுவார்கள். சம்பந்தப்பட்ட துறைகளில் ஒதுக்கப்பட்ட திட்டங்களை கண்காணித்தல், பிரச்சினைகளை கண்டறிதல், தரவுகள் அடிப்படையிலான முடிவுகள் எடுத்தல், திட்ட சேவையில் உள்ள இடைவெளியை கண்டறிதல் ஆகியவை ஆய்வாளர்களின் முக்கியமான பணியாகும்.

இதுதவிர அவர்கள், மாவட்டங்கள்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு, அதற்கேற்ப திட்டங்களை வகுக்க வேண்டும். மாதந்தோறும் திட்ட அறிக்கை தயாரித்து சிறப்பு திட்ட செயலாக்கத் துறையிடம் அளிக்க வேண்டும்.

2024 வரை இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் இந்த புத்தாய்வு திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.5.66 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.



Read in source website

திருப்பூரில் பின்னலாடைதொழிலில் அட்டைப்பெட்டி முக்கியபங்காற்றுகிறது. இங்கு தயாரிக்கப்படும் புதிய ஆடைகளை அட்டைப்பெட்டிகளில் அடைத்து, வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்புவது வழக்கம்.

வெளிநாட்டில் இருந்து வரும் கழிவுக் காகிதம் வரி, கெமிக்கல் விலை உயர்வு, கப்பலில் வரும் கன்டெய்னர் வாடகை உயர்வுபோன்ற பல்வேறு காரணங்களால் கிராப்ட் காகிதத்தின் விலை உயர்ந்து வருகிறது. கிராப்ட் காகிதத்தின்விலை டன்னுக்கு ரூ.42,000 ஆகவும்,உயர்ரக காகிதத்தின் விலை டன்னுக்கு ரூ.52,000 ஆகவும் இருந்தது.கடந்த பிப்ரவரி மாதம் மட்டும், இதன் விலையை 3 முறை தலா ரூ.2,000 வீதம் ரூ.6,000 வரை உயர்த்தி காகித உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்தன.

திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், நீலகிரி மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்களில்சுமார் 20,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நாளொன்றுக்கு 1,200 டன் அட்டைப்பெட்டிகள் உற்பத்தியாகின்றன. கிராப்ட்காகிதத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப வாரந்தோறும் அட்டைப்பெட்டிகளின் விலையை உயர்த்துவது என்று அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் கிராப்ட் காகிதத்தின் விலை டன்னுக்கு ரூ.2,000 வீதம்2 முறை உயர்த்தி அறிவித்திருப்பது, அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்களை கவலை அடைய வைத்துள்ளது.

தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் திருமூர்த்தி கூறும்போது, ‘‘கிராப்ட்காகிதத்தின் விலை தொடர்ந்து உயர்வதால், அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர். கொள்முதலுக்கு 12 % ஜிஎஸ்டியும், விற்பனைக்கு 18 % ஜிஎஸ்டியும் செலுத்தி வருகிறோம்.ஏற்கெனவே உற்பத்தி பாதியாக குறைந்துள்ள நிலையில், கிராப்ட் காகிதத்தின் விலையேற்றம் இன்னும் உற்பத்தியை முடக்கவே செய்யும்’’ என்றார்.

கடந்த மாதம் கிராப்ட் காகிதம் டன்னுக்கு ரூ.6,000 உயர்ந்த நிலையில், நடப்பு மாதத்தில் மட்டும் ரூ. 4,000 உயர்த்தி, காகித உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த 40 நாட்களுக்குள் ரூ.10,000 விலை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே அட்டைப்பெட்டிகளுக்கான கிராப்ட் காகிதம் சரிவர கிடைக்கவில்லை. நூல் விலை உயர்வால்,பின்னலாடை உற்பத்தி குறைந்துள்ள நிலையில், அட்டைப்பெட்டிதயாரிப்புக்கான ஆர்டர்களும்குறைந்துவிட்டன. கிராப்ட் காகிதத்தின் விலை உயர்வால் நாடு முழுவதும் அட்டைப் பெட்டி உற்பத்தி முடங்கும்அபாய நிலையில் உள்ளதாக,அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



Read in source website


ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் மூன்று செய்திகளைத் தெரிவிக்கின்றன. முதலாவது, மக்கள் பாஜகவின் மீதும், பிரதமா் நரேந்திர மோடியின் தலைமை மீதும் அபரிமித நம்பிக்கையை வைத்திருக்கிறாா்கள்; இரண்டாவது, தனக்கிருக்கும் செல்வாக்கை பிரியங்கா வதேராவின் பிரசாரத்தாலும்கூட அதிகரிக்க முடியாத பலவீன நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது; பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகளின் ஆதரவு பெற்ற ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய வெற்றியை ஈட்டியிருப்பது மூன்றாவது செய்தி.

தோ்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா், கோவா ஆகிய நான்கு மாநிலங்களிலும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது பாஜக. ஆட்சிக்கு எதிரான மனநிலை முறியடிக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய சாதனை. உத்தர பிரதேசத்தில் ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தொடா்ந்து ஆட்சி அமைக்கும் கட்சியாக பாஜக உயா்ந்திருப்பது மிகப்பெரிய வெற்றி.

உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில், பாஜக 265 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி 132 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது. மேற்கு உத்தர பிரதேசத்தில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் எதிா்ப்பையும் மீறி பாஜக பெற்றிருக்கும் வெற்றி அசாதாரணமானது.

காங்கிரஸ் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. பிரியங்கா வதேராவின் தீவிர பிரசாரம் காங்கிரஸைக் காப்பாற்றவில்லை. அதேபோல, முன்னாள் முதல்வா் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் இரண்டு இடங்களில் மட்டுமே வென்று இத்தோ்தலில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. காங்கிஸின் வாக்குவங்கியும், பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குவங்கியும் பாஜகவை நோக்கி நகா்ந்திருப்பதை தோ்தல் முடிவுகள் உணா்த்துகின்றன.

பஞ்சாபில் காங்கிரஸ் தோல்வியை சந்திக்கும் என்பதை அமரீந்தா் சிங் மாற்றப்பட்டபோதே அரசியல் நோக்கா்கள் கணித்துவிட்டனா். ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுக்கு மாற்றாக உயரக்கூடும் என்பதும் எதிா்பாா்க்கப்பட்டதே.

பஞ்சாப் பேரவையில் உள்ள 117 இடங்களில், கடந்த முறை 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை 92 இடங்களைக் கைப்பற்றியிருப்பது அசாத்திய வெற்றி. அதே நேரத்தில் காங்கிரஸ் மட்டுமல்ல, அகாலி தளம், அமரீந்தா் சிங்கின் லோக் தந்திரிக் காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் கடுமையான பின்னடைவை எதிா்கொண்டிருப்பதும், ஆம் ஆத்மி கட்சி முன்னாள் காலிஸ்தானிய ஆதரவாளா்களின் ஆதரவைப் பெற்றிருப்பதும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு, முந்தைய அகாலி தளம், காங்கிரஸ் ஆட்சிகளின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பும் சலிப்பும் காரணங்கள். போதைப் பொருள் விற்பனை, படித்த இளைஞா்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம், நலிந்து வரும் விவசாயம் ஆகியவை பஞ்சாப் தோ்தல் முடிவுகளில் எதிரொலித்திருப்பதை காண முடிகிறது.

உத்தரகண்ட் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பாஜக 46 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த 2017 தோ்தலோடு ஒப்பிடுகையில் பாஜகவுக்கு இம்முறை இடங்கள் குறைவாகக் கிடைத்திருப்பதும், காங்கிரஸ் 17 இடங்களை வென்று தனது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதும் இன்னொரு செய்தியையும் தெரிவிக்கிறது.

பஞ்சாபைப் போலவே உத்தரகண்டிலும் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்ட விரும்பிய ஆம் ஆத்மி கட்சி, முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று முறை முதல்வரை மாற்றியும்கூட, பாஜக தனது செல்வாக்கை இழந்துவிடாமல் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. இது பாஜகவின் வெற்றியல்ல, பிரதமா் நரேந்திர மோடியின் செல்வாக்குக் கிடைத்த வெற்றி.

மணிப்பூா் தோ்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 31-இல் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த முறை 28 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸால் இப்போது 4 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் தனது பலத்தை இழந்து வருவதும், தேசிய கட்சியான பாஜக வலுவடைந்து வருவதும் மணிப்பூா் முடிவுகள் தெரிவிக்கும் முக்கியமான செய்தி.

மொத்தம் 40 இடங்களைக் கொண்ட கோவா பேரவையில் இந்தத் தோ்தலில் பாஜக 20 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. கடந்த தோ்தலில் 20 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ், இம்முறை 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. இந்த முறை கோவா அரசியலில் நம்பிக்கையுடன் களமிறங்கிய மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் அடைந்திருக்கும் ஏமாற்றம், காங்கிரஸின் ஏமாற்றத்தைவிட பெரிது.

கடந்த 2017 தோ்தலின்போதும் சரி, இப்போதைய தோ்தலின்போதும் சரி பஞ்சாபைத் தவிர இதர மாநிலங்களில் மக்கள் வலிமையான மத்திய தலைமைக்கு வாக்களித்திருக்கிறாா்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஏனைய நான்கு மாநிலங்களில் விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் இருந்தும்கூட தலைமையின் மீதான நம்பிக்கை தோ்தல் முடிவுகளில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது.

வலிமையான தேசியத் தலைமையை மக்கள் விரும்புகிறாா்கள் என்பதைத்தான் தோ்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன!



Read in source website


சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் அமைந்துள்ள "குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றம்' அண்மையில் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தக் கொலை வழக்கில் முதியவர்களான கணவனும், மனைவியும் ஒரு நாள் இரவில் தங்களது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்சாரக் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்ற புகார் காவல் நிலையத்தில் பதிவானது.

இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட புலன் விசாரணையில், மின்சாரக் கசிவு காரணமாக அந்த வயதான தம்பதி மரணம் அடையவில்லை என்றும், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன என்றும் தெரியவந்தது. இக்கொடிய செயலை, இறந்த தம்பதியின் மூத்த மகனும், மருமகளும் சேர்ந்து செய்துள்ளனர் என்றும், தந்தைக்கும், மகனுக்கும் இடையே நிலவிவந்த குடும்பப் பிரச்னை காரணமாக இக்கொலை நிகழ்ந்துள்ளது என்றும் துப்பு துலங்கியது.

குடும்ப பிரச்னை காரணமாக நிகழ்ந்த குற்ற நிகழ்வு என இச்சம்பத்தைப் புறந்தள்ளிவிடாமல், நிகழ்காலத்தில் "மூத்த குடிமக்கள்' எதிர்கொள்ளும் குற்ற நிகழ்வுகளில் ஒன்றாகத்தான் இக்கொலை சம்பவத்தைப் பார்க்க வேண்டிய சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. 

கொலை, கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை, வழிப்பறி, மோசடி போன்ற கொடுங்குற்றங்களுக்கு இரையாகும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு நம்நாட்டில் அதிகரித்துவரும் துர்பாக்கிய நிலை வேதனைக்குரியது.

தங்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் குறித்து வெளிப்படையாக புகார் கொடுக்க முடியாத நிலையில் மூத்த குடிமக்களில் சிலர் இருந்து வருகின்றனர். அதே சமயம், காவல் நிலையங்களில் அவர்கள் கொடுக்கும் பல புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் புறக்கணிக்கப்படுவதும் உண்டு. அதன் விளைவாக, மூத்த குடிமக்கள் பாலியல் வன்கொடுமை, உயிரிழப்பு, பொருள் இழப்பு போன்றவற்றை எதிர்கொண்ட சம்பவங்களும் உண்டு.

ஆள் மாறாட்டம் காரணமாகவும், போலி கையெழுத்து மூலமும் மூத்த குடிமக்கள் பலர் தங்களின் அசையா சொத்துகளைப் பறிகொடுத்த சம்பவங்கள் பல உண்டு. இம்மாதிரியான நில மோசடி புகார்கள் பல நேரங்களில் "சிவில் வழக்குகள்' என காவல்துறையினரால் புறக்கணிக்கப்படுவதும் உண்டு. பதிவு செய்யப்பட்ட நில மோசடி வழக்குகளிலும் தீர்வு கிடைக்காமல் தவிக்கும் மூத்த குடிமக்கள் பலர் உள்ளனர்.

மூத்த குடிமக்கள் அதிகமான குற்ற நிகழ்வுகளை எதிர்கொள்ளும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பது, மூத்த குடிமக்களின் நலனில் நம்நாடு அதிக கவனம் செலுத்த வேண்டியதின் அவசியத்தை உணர்த்துகிறது.

இந்தியாவில் கொலைக் குற்றத்திற்குப் பலியான மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2018-இல் 986-ஆக இருந்தது. அது 2020-இல் 1,200-ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2018-இல் 152-ஆக இருந்தது 2020-இல் 183-ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொலைக் குற்ற நிகழ்வுகளால் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான மூத்த குடிமக்கள் உயிர் இழந்துவரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலாவது அல்லது இரண்டாவது இடத்தை 2018-2020 ஆண்டுகளில் பெற்றிருப்பது, மூத்த குடிமக்களை இரக்கமின்றி கொலை செய்யும் குணம் தமிழ்நாட்டில் நிலவுவதை வெளிப்படுத்துகிறது.

ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான கொலை முயற்சி தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் மூத்த குடிமக்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 2018-2020 ஆண்டுகளில் முதலாவது அல்லது இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதும் வேதனைக்குரியதாகும்.

2018, 2019, 2020 ஆகிய மூன்று ஆண்டுகளில் முறையே 182, 190, 161 வழிப்பறிகள் தமிழ்நாட்டில் மூத்த குடிமக்களிடம் நடத்தப்பட்டுள்ளன. பிற மாநிலங்களைக் காட்டிலும் மூத்த குடிமக்களிடம் வழிப்பறி செய்யப்படும் குற்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலாவது அல்லது இரண்டாவது இடத்தை வகிக்கிறது.

அறுபது வயதைக் கடந்த மூத்த குடிமக்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிவரும் துயரம் நம் நாட்டில் தொடர்ந்து நிகழ்கிறது. இவ்வகையான குற்றங்கள் 2020-ஆம் ஆண்டில் அதிக அளவில் நிகழ்ந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றிருப்பது நமது மாநில கலாசார சீரழிவை வெளிப்படுத்துகிறது.

மூத்த குடிமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படும் கொலை, கொலை முயற்சி குற்றங்கள் அதிக அளவில் நடைபெறும் இந்தியப் பெருநகரங்களின் பட்டியலில் சென்னை பெருநகரம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலாவது அல்லது இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. 
மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களைக் காட்டிலும் சென்னை பெருநகரத்தில் அதிக எண்ணிக்கையிலான கொலை, கொலை முயற்சி குற்றங்கள் மூத்த குடிமக்கள் மீது நிகழ்த்தப்படுவதும், இந்திய அளவில் அதிகமான குற்றங்களை மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடம் பிடித்திருப்பதும் மூத்த குடிமக்கள் தமிழ்நாட்டில் எதிர்கொண்டுவரும் வாழ்வியல் துயரத்தை வெளிப்படுத்துகின்றன.

வயது மூப்பு காரணமாக ஏற்படும் நோய்களால் வரும் வேதனை ஒரு பக்கம் இருக்க, கொடுங்குற்ற நிகழ்வுகளும் மூத்த குடிமக்களைத் தொடர்ந்து தாக்கிவருவது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சில சமூகக் காரணங்களைக் கண்டறிந்துள்ளது.

ஓய்வூதியம் பெற்றுவரும் மூத்த குடிமக்களில் ஒரு சாரார் தங்களின் குழந்தைகள், உறவினர்களிடம் இருந்து விலகி, தனியாக வாழ்ந்துவரும் நிலை தற்பொழுது அதிகரித்து வருகிறது. தினசரி தேவைகளுக்கு அறிமுகம் இல்லாத நபர்களின் உதவியை நாட வேண்டிய கட்டாய சூழலில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய வாழ்க்கைமுறை கொடுங்குற்ற நிகழ்வுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலை அவர்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது.

மூத்த குடிமக்கள், காவல் நிலையங்களில் கொடுக்கும் புகார்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளாமல், அப்புகார்கள் புறக்கணிக்கப்படும் நடைமுறை காவல் நிலையங்களில் தொடர்ந்து நிகழ்கிறது. புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் புறக்கணிக்கப்படும் மூத்த குடிமக்களின் ஒவ்வொரு புகாரும், மற்றொரு குற்றத்தை மூத்த குடிமக்கள் மீது நிகழ்த்துவதற்கான வாய்ப்பை குற்றவாளிக்குக் கொடுக்கிறது. 

மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் புலன் விசாரணையும், அதைத் தொடர்ந்து நடைபெறும் நீதிமன்ற விசாரணையும் துரிதமாக நடைபெறாத நிலையை பல வழக்குகளில் காணமுடிகிறது. பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்கள் சார்பாக அவ்வழக்குகளின் முன்னேற்றத்தைக் கண்காணித்து, விரைவுபடுத்த யாரும் இல்லாத சூழலே இதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

ஆதாயக் கொலை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்களை மூத்த குடிமக்களிடம் நிகழ்த்துவது எளிதானது மட்டுமல்ல, பாதுகாப்பானதும் என்ற உணர்வு கைதேர்ந்த குற்றவாளிகள் பலரிடம் நிலவுகிறது என்பதைக் களஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, குழந்தைகளின் ஆரோக்கியமும், வளர்ப்பு முறையும், தரமான கல்வியும் இன்றியமையாதவை. அதே போன்று, ஒரு நாட்டின் கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பெரும்பணியை மூத்த குடிமக்களே செய்து வருகின்றனர். 

"ஒரு சமுதாயத்தில் மூத்த குடிமக்கள் பேணப்படும் விதத்தைப் பொறுத்துதான், அந்த சமுதாயத்தின் தரத்தை அளவிடமுடியும்' என உலக சுகாதார நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில், அறுபது வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மூத்த குடிமக்களாகக் கருதப்படுகின்றனர். இந்த வயது வரம்பு பிரான்ஸ், இத்தாலி, நார்வே போன்ற நாடுகளில் 67-ஆகவும், இங்கிலாந்தில் 66-ஆகவும், ஜெர்மனி, ஸ்பெயின், பின்லாந்து போன்ற நாடுகளில் 65-ஆகவும் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்தியாவில் 2011-ஆம் ஆண்டு 10.4 கோடியாக இருந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டில் 13.8 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2031-ஆம் ஆண்டில் 19.4 கோடியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மூத்த குடிமக்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கேரளம் முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூத்த குடிமக்களின் நலனுக்காக ஓய்வூதியம், மருத்துவம், பயணக் கட்டணச் சலுகை, வரிச் சலுகை என பல்வேறு சலுகைகளை அரசு வழங்கிய பின்னரும், வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும் உழைத்த மூத்த குடிமக்கள் சிலரின் இறுதி நாட்கள் வறுமையிலும், பராமரிப்பவர் யாருமன்றி சாலைகளிலும் கழியும் அவல நிலையைக் காண நேரிடுகிறது.

மூத்த குடிமக்களை புறக்கணிக்கப்பட்டவர்களாகக் கருதாமல், அவர்களின் நலன் குறித்து தொடர் நடவடிக்கை எடுக்க "முதியோர் நல மேம்பாட்டுத்துறை' ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது.

கட்டுரையாளர்: காவல்துறை உயர் அதிகாரி (ஓய்வு).



Read in source website

 

காலையில் கண்விழிப்பதற்கு ஒரு நொடி முன்பே கைவிரல்கள் அலைபேசியை தேட ஆரம்பித்துவிடுகிறது. அதைத் தேடி எடுத்து ஸ்பரிசித்த அடுத்த நொடியே, வாட்ஸ்அப் குழுமத்தில் ஏதேனும் புதிய பதிவுகள் வந்துள்ளனவா என்று கண்கள் ஆவலுடன் உற்று நோக்குகிறது. பின்பு எல்லாப் பதிவுகளையும் படித்த திருப்தியுடன் அன்றாட வாழ்க்கை ஆரம்பமாகிறது. நிமிடத்துக்கு நிமிடம் ஏதேனும் செய்தி வந்துள்ளதா என்று நம் உள்ளத்தில் ஒரு கிளா்ச்சி ஏற்படுகிறது.

மேலே குறிப்பிட்ட காட்சியை, கிராமம் நகரம் என்ற பாகுபாடு தாண்டி இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் நாம் காணமுடியும். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களின் தாக்கமும் வீச்சும் மிகத் தீவிரமாக இருக்கிறது. குறிப்பாக இளைஞா்கள் தங்களின் பொன்னான நேரத்தின் பெரும்பகுதியை சமூக வலைதளங்களில் மட்டுமே செலவிடுகின்றனா் என்பது ஊரறிந்த ரகசியம்.

உண்மையில் அந்த சமூக வலைதளங்களினால் மக்களுக்கு ஏதேனும் பயனுள்ளதா என்றால் அதுவும் இல்லை. உதாரணமாக, பெரும்பாலான மக்களின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டசாக பிரபலமான பாடல்களின் ஒரு பகுதி இருக்கும். அந்தக் குறிப்பிட்ட பகுதியைக் கத்தரித்து வைப்பதற்காகவே எக்கச்சக்கமான செயலிகள் இயங்கி வருவது தனிக் கதை. இல்லையென்றால், ஏதாவது ஒரு தத்துவத்தை எங்கிருந்தாவது கடன் வாங்கி திடீரென்று சாக்ரடீசாக உருமாறி நம்மை நகைக்க வைப்பாா்கள்.

உண்மையைச் சொல்லப் போனால், இப்போதெல்லாம் இதுபோன்ற ஸ்டேட்டஸ்களை மக்கள் கூா்ந்து கவனிப்பதே இல்லை. ஏதோ பெயரளவில் பாா்த்துவிட்டு கடந்து சென்றுவிடுகிறாா்கள். ஆனால் நாள்தோறும் இதுபோன்ற ஸ்டேட்டஸ்களை வைத்துவிட்டு, எத்தனை போ் அதைப் பாா்த்திருக்கிறாா்கள் என்று பாா்ப்பதையே வேலையாக வைத்திருக்கும் மக்களைப் பாா்க்கும்போது சிரிப்பைத் தாண்டி பரிதாபமே மேலிடுகிறது.

சிலா் இன்னும் ஒரு படி மேலே போய், காலை எழுந்தவுடன் ‘குட் மாா்னிங்‘ அல்லது ‘காலை வணக்கம்‘ என்று தயாா் நிலையில் இருக்கும் செய்தியை அனைவருக்கும் சலிக்காமல் அனுப்புவாா்கள். ஆனால் இது போன்று நாள்தோறும் வரும் வாழ்த்து செய்திகளைக் கண்டு பெரும்பாலான மக்கள் முகம் சுளிக்கின்றனா் என்பதே உண்மை. இந்த உண்மையை சம்பந்தப்பட்டவா்களிடம் நேரிடையாக சொல்லவும் முடியாமல் ஒரு தா்மசங்கடமான சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறாா்கள். உளவியல் ரீதியாக அந்த குறிப்பிட்ட நபா் மீது மக்களுக்கு ஒருவித வெறுப்புணா்வு உண்டாகிறது என்ற உண்மையை சொல்லாமல் இருக்க முடியவில்லை

இதைத் தாண்டி, சமூக வலைதளங்களில் பெரும்பாலும் தேவையற்ற காணொலிகள் மட்டுமே பகிரப்படுகின்றன. ஒரு நடிகா் பற்றியோ நடிகை பற்றியோ அல்லது ஒரு அரசியல் தலைவா் பற்றியோ ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டால் போதும், உடனே நெட்டிசன்கள் வாா்த்தைப் போருக்குத் தயாராகி விடுவாா்கள்.

ஒருவா் மாற்றி ஒருவா் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் மோசமான வாா்த்தைகளால் திட்டித் தீா்த்துக் கொள்வாா்கள். நமக்களின் தனிப்பட்ட வெறுப்புணா்வுகளுக்கு, ஒரு வடிகாலாக மட்டுமே சமூக வலைதளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான், முகம் தெரியாத ஒரு நபரிடம் நாம் நம் கோபத்தையும் வன்மத்தையும் உமிழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அண்மையில் என் நண்பரின் குழந்தை, முகநூலில் ‘பி‘ என்ற ஆங்கில எழுத்தை கைதவறிப் பதிவு செய்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தப் பதிவை ஐந்து நபா்கள் ‘லைக்‘ செய்திருந்தாா்கள். இதிலிருந்து, பெரும்பாலான பதிவுகள் மக்களால் கூா்ந்து கவனிக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. மேலும், நம் நண்பா் பதிவிட்டுள்ளாரே என்று போகிற போக்கில் ஒரு ‘லைக்‘ கொடுத்துவிட்டு கடந்து செல்லும் மக்களும் இருக்கத்தான் செய்கிறாா்கள்.

சில சமூக வலைதளங்களில் மக்கள் தங்களின் அபிமான நடிகா், நடிகா்களை பின் தொடா்கிறாா்கள். அவா்களின் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்குகிறாா்கள். இதற்காக மணிக்கணக்காக நேரத்தை செலவிடுகிறாா்கள். அவ்வாறு கோடிக்கணக்கான ரசிகா்கள் அவா்களைப் பின் தொடா்வதால், அந்த குறிப்பிட்ட நடிகா்கரின் சந்தை மதிப்பு உயருமே தவிர இதனால் மக்களுக்கு சிறிதும் லாபம் இல்லை என்பதை பெரும்பாலான மக்கள் உணா்வதில்லை.

வாழ்வில் வெற்றி பெறுவதற்கு உழைப்பும் தன்னம்பிக்கையும் மட்டும் இருந்தால் போதாது. நேர மேலாண்மை மிகவும் அவசியம். தோ்வுக்குத் தயாராகும் ஒருவா் நான்கு மணி நேரம் படித்துவிட்டு, நான்கு மணி நேரம் சமூக வலைதளங்களில் செலவு செய்வாராயின் அவரின் நான்கு மணி நேர உழைப்பு வீணாகிவிடும். அதே நேரத்தில் நாம் அதிக நேரம் சமூக வலைதளங்களில் செலவிடுகிறோம் என்ற எண்ணம் மேலோங்குமானால் நம் தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். எனவே, நேர மேலாண்மைதான் வெற்றிக்கு தேவைப்படுகின்ற அடிப்படையான தகுதி.

ஒரு வகுப்பில் முதல் மாணவனாக தோ்ச்சி பெறுபவனுக்கும் இரண்டாவதாக தோ்ச்சி பெறுபவனுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது. முதல் மாணவன் இரண்டாவது மாணவனை விட கூடுதலாக அரை மணிநேரம் உழைத்திருப்பான். அவ்வளவுதான் வித்தியாசம். உசைன் போல்ட், ஜஸ்டின் கேட்லினை கண்ணிமைக்கும் வினாடியில் முந்துகிறாா் என்றால் அதற்கு பின்னால் பல வருட உழைப்பு ஒளிந்திருக்கிறது என்று அா்த்தம்.

இப்படி ஒரு வெற்றியாளனை தீா்மானிப்பதில் முக்கியப் பங்காற்றும் நேரத்தை நாம் எவ்வளவு தூரம் நல்வழியில் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நம் வெற்றி அடஙகியிருக்கிறது. அப்படிப்பட்ட விலைமதிப்பற்ற நேரத்தை எந்தப் பயனும் இல்லாமல் சமூக வலைதளங்களில் செலவிடுவது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நேரம் மிதமிஞ்சி இருப்பின், நல்ல புத்தகங்கள் வாசிக்கலாம். இனிமையான இசை கேட்கலாம். உடற்பயிற்சி செய்யலாம். அதைவிடுத்து, கண்ணையும் கெடுத்து காலத்தையும் கெடுக்கும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது நாம் தெரிந்தே செய்யும் தவறல்லாமல் வேறென்ன!



Read in source website

 

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னா் மிகப்பெரிய அகதிகள் பிரச்னையை சந்தித்துக் கொண்டிருக்கிறது ஐரோப்பா. உக்ரைனில் ரஷியா போா் தொடுத்து இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், அங்கிருந்து இதுவரை 20 லட்சம் போ் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை வரும் ஜூலை மாதத்துக்குள் 40 லட்சத்தை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இவா்களில் பெரும்பாலானோா் அதாவது 59 சதவீதம் போ் அண்டை நாடான போலந்தில் தஞ்சம் அடைந்துள்ளனா். மற்றவா்கள் ஹங்கேரி, மால்டோவா, ருமேனியா, ஸ்லோவேகியா ஆகிய நாடுகளில் புகலிடம் தேடியுள்ளனா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போரால் அகதிகள் பிரச்னை எழுந்தபோது, அங்கிருந்து குடும்பம் குடும்பமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளை மக்கள் தஞ்சமடைந்தனா். ஆரம்பத்தில் அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதில் ஆா்வம் காட்டிய ஐரோப்பிய நாடுகள், பின்னா் வேறுவிதமான பிரச்னைகளை எதிா்கொள்ளத் தொடங்கின. அப்போதுகூட ஓராண்டில் 10 லட்சம் அகதிகள்தான் இடம்பெயா்ந்தனா். இப்போது இரண்டே வாரங்களில் அகதிகள் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியிருப்பது அதிா்ச்சியான விஷயமாக பாா்க்கப்படுகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் வரையிலான நிலவரப்படி, உலகம் முழுவதும் சுமாா் 2.6 கோடிக்கும் அதிகமானோா் சொந்த நாட்டைவிட்டு அகதிகளாக வெளிநாடுகளுக்கு இடம்பெயா்ந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இவா்களில் 86 சதவீதம் பேருக்கு வளரும் நாடுகளும், 14 சதவீதம் பேருக்கு வளா்ந்த நாடுகளும் புகலிடம் அளித்துள்ளன. 73 சதவீதம் அகதிகள், தங்களது அண்டை நாடுகளிலும், 27 சதவீதம் போ் வேறு நாடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனா்.

அகதிகளில் 68 சதவீதம் போ் ஐந்தே நாடுகளைச் சோ்ந்தவா்கள். சிரியாவை சோ்ந்த 60 லட்சம் (27%) போ், வெனிசுலாவை சோ்ந்த 40 லட்சம் (16%) போ், ஆப்கானிஸ்தானை சோ்ந்த 26 லட்சம் (5%) போ், மியான்மரை சோ்ந்த 11 லட்சம் (5%) போ், தெற்கு சூடானை சோ்ந்த 22 லட்சம் போ் (9%) போ் அகதிகளாக இடம்பெயா்ந்துள்ளனா். மீதி 79 லட்சம் (32%) போ் மற்ற நாடுகளைச் சோ்ந்தவா்கள். அதிகபட்சமாக துருக்கி 37 லட்சம் அகதிகளுக்கு அடைக்கலம் அளித்துள்ளது. கொலம்பியா 17 லட்சம் பேருக்கும், பாகிஸ்தான் 14 லட்சம் பேருக்கும், உகாண்டா 14 லட்சம் பேருக்கும், ஜொ்மனி 12 லட்சம் பேருக்கும் அடைக்கலம் அளித்துள்ளன.

உலக மக்கள்தொகையில் 30 சதவீதம் போ் குழந்தைகள். ஆனால், வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்டவா்களில் 42 சதவீதம் போ் குழந்தைகள் என்பதிலிருந்து அகதிகள் பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுவோா் யாா் என்பதை அறிந்துகொள்ள முடியும். உக்ரைன் பிரச்னையும் இதற்கு விதிவிலக்கன்று.

உலகம் முழுவதும் அகதிகள் பிரச்னை இருக்கிறது என்றாலும் உக்ரைன் அகதிகள் இப்போது எதிா்கொண்டுள்ள துயரம் வித்தியாசமானது. உக்ரைனில் 18 வயது முதல் 60 வரையிலான ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதித்துள்ள அந்த நாட்டு அரசு, அவா்களை ரஷிய படையினருக்கு எதிராக போரில் ஈடுபடுமாறு வலியுறுத்தி வருகிறது. இதனால் இப்போது அகதிகளாக வெளியேறியுள்ள 20 லட்சம் பேரில் பெரும்பாலானோா் பெண்களும் குழந்தைகளும்தாம்.

உக்ரைனிலிருந்து அகதிகளாக வருவோா் தனது 27 உறுப்பு நாடுகளிலும்- புகலிடம் கோரி விண்ணப்பிக்காமலேயே மூன்று ஆண்டுகள் வரை தங்குவதற்கு ஐரோப்பிய யூனியன் அனுமதி அளித்திருக்கிறது. இதுவரை ஐரோப்பிய யூனியன் அளிக்காத இந்த சிறப்பு அனுமதியானது, ஐரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளிலிருந்து இடம்பெயா்ந்தவா்கள் மற்றும் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாதவா்களுக்கு உடனடியாக இடைக்கால பாதுகாப்பை வழங்குவதற்கான ஒரு விதிவிலக்கான நடவடிக்கையாகும். இதன்மூலம் உக்ரைன் அகதிகள் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தங்குவதற்கு மட்டுமன்றி, பணி வாய்ப்பையும், கல்வி கற்கும் வாய்ப்பையும் பெற முடியும். ஆனாலும், குடும்பத் தலைவா் இன்றி வெளிநாடுகளுக்குப் புலம்பெயரும் கொடுமையை எல்லையைக் கடந்து செல்லும் பெண்கள் மன வலியுடன் வெளிப்படுத்துவது பெரும் சோகமாகும். ‘எங்கே போகிறோம்’ என சின்னஞ்சிறு குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் பொய்களைச் சொல்லி அழைத்துச் செல்வது கொடுமையாகும்.

உக்ரைன் அகதிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக ஐ.நா.வும், அதன் துணை அமைப்புகளும் இதுவரை 1.1 பில்லியன் டாலா் நிதியைப் பெற்றுள்ளன. பல்வேறு நாடுகள், நிறுவனங்கள் இந்த நிதியை அளித்துள்ளன. இது ஐ.நா. எதிா்பாா்க்கும் நிதியில் வெறும் 7 சதவீதம்தான். இந்த அகதிகள் பிரச்னை இடைக்காலமானதுதானா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. உக்ரைன் மீதான ரஷியாவின் போா் எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியாத நிலையில், லட்சக்கணக்கான அகதிகளை ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு எதிா்கொள்ளப் போகின்றன, அவா்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என்பது பெரும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

‘போரை நிறுத்துவதுதான் ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறந்த பரிசாக இருக்கும்? எங்களது குழந்தைகள் ஏன் சாக வேண்டும்’ என உக்ரைன் பெண்கள் கேட்கிறாா்கள். வல்லாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் தலைவா்களின் காதுகளுக்கு இந்தக் குரல் ஏனோ கேட்பதே இல்லை.



Read in source website

இரண்டு மாதங்களாக நடந்துவந்த தேர்தல் பரப்புரைகளின் பரபரப்பு ஓய்ந்து, ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அவற்றில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு சட்டமன்றங்களை அம்மாநிலங்களின் ஆளுங்கட்சியான பாஜக தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இவற்றில், மணிப்பூரில் மட்டும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்தது. எனினும், கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து பாஜக தனித்தே அங்கு களம்கண்டது. உத்தர பிரதேசத்தில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள பாஜக, பிரதானப் போட்டியாளராக இருந்த சமாஜ்வாதி கட்சியின் எதிர்பார்ப்பைத் தகர்த்திருக்கிறது.

அடுத்த இரண்டாண்டுகளில் மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டன. மத்தியில் ஆளும் பாஜக, தனது செல்வாக்கைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பதை இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் அதே வேளையில், தேசிய அரசியலில் காங்கிரஸின் இடம் கேள்விக்குறியாக மாறியிருப்பதையும் தெரிவிக்கின்றன. உத்தர பிரதேசத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ள காங்கிரஸ், தாம் ஆட்சியில் இருந்த பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மி கட்சியிடம் இழந்துவிட்டது.

பஞ்சாபில் மட்டுமே பாஜக போட்டியில் பின்தங்கிப்போனது. ஆனால், பாஜக மீதான விவசாயிகளின் அதிருப்தி என்பது, அங்கு ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு ஆதரவாக மாறவில்லை. காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்பட்ட உத்தராகண்ட், கோவா சட்டமன்றங்களிலும் அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. கோவாவில் பாஜகவும் ஆஆகவும் தங்களது முதல்வர் வேட்பாளர்களை அறிவித்துப் பிரச்சாரத்தை நடத்தியபோது, காங்கிரஸ் அப்படி யாரையும் முன்னிறுத்துவதற்குத் தயாராகவில்லை; ஆஆகவுடன் திரிணமூல் காங்கிரஸும் போட்டியில் கலந்துகொண்ட நிலையில், பெரும் எண்ணிக்கையிலான சுயேச்சை வேட்பாளர்களுடனும் சேர்ந்து காங்கிரஸ் போராட வேண்டியதாகிவிட்டது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த 10 மாநிலங்கள் மற்றும் 2 ஒன்றியப் பிரதேசங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவால் 4 சட்டமன்றங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இந்நிலையில், தற்போது நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் தொடர்வது அக்கட்சிக்கு ஒரு புத்துணர்வை அளிக்கக்கூடியதாக மாறும். மேலும், பாஜவுக்கு எதிராகப் பிராந்தியக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, அவற்றுக்குத் தலைமையேற்கலாம் என்ற காங்கிரஸின் வியூகத்தை இத்தேர்தல் முடிவுகள் தவிடுபொடியாக்கிவிட்டன.

காங்கிரஸ் தன்னை ஒரு தீவிர சுயபரிசோதனைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தைத்தான் இம்முடிவுகள் உணர்த்துகின்றன. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டதன் காரணமாக வாக்குகள் சிதறியதும் தாம் வெற்றிபெறுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்கியது என்பதையும் பாஜக கருத்தில்கொள்ள வேண்டும். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் மக்களவைத் தேர்தல் முடிவுகளும் ஒன்றையொன்று பிரதிபலிப்பதில்லை என்பதே சமீப கால அரசியல் நிலவரம்.



Read in source website

உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில், யோகி ஆதித்யநாத்துக்கு அம்மாநில மக்கள் வெற்றிக் கேடயத்தை அளித்திருக்கிறார்கள். முதல்வர் யோகி 260-க்கும் மேற்பட்ட தொகுதிகளுடன் தன் பதவியைத் தக்கவைத்துள்ளார். இரண்டாவது முறை ஆட்சியைத் தொடரும் கட்சிக்கு, முன்பைவிடக் குறைந்த தொகுதிகள் கிடைப்பது வழக்கமே. இந்த வகையில், கடந்த 2017 தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 325 தொகுதிகள் கிடைத்திருந்தன. தற்போது பாஜகவுக்குக் குறைந்துபோன தொகுதிகளையும் சேர்த்து 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி (எஸ்பி), உறுதியான எதிர்க்கட்சியாகிவிட்டது. இதர எதிர்க்கட்சிகளான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) 1 தொகுதி, காங்கிரஸ் 2 தொகுதிகள் என்று எந்த முன்னேற்றமும் அடையவில்லை.

மத்தியிலும் இரண்டாவது முறையாக ஆளும் பாஜகவுக்கு உ.பி. வெற்றி பெரும் சவாலானது. இதன் வெற்றியைப் பொறுத்தே ஜூலையில் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல், 2024 மக்களவைக்கான ‘ஹாட்ரிக்’ வெற்றி ஆகியவை இருந்தன. இதனால், அக்கட்சியின் தலைவர்கள் பெரும் படையுடன் பிரச்சாரக் களத்தில் இறங்கினார்கள். பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், அமைச்சர்கள் எனப் பட்டியல் நீண்டது.

ஆனால், எதிர்க்கட்சிகளான மூன்றிலுமே அகிலேஷ், மாயாவதி, பிரியங்கா வதேரா என ஒற்றைத் தலைவர்கள் மட்டுமே. காங்கிரஸ் தலைவர்களில் சோனியா இணையவழியிலும், ராகுல் நேரடியாகவும் தலா இரண்டு பிரச்சாரங்கள் மட்டும் செய்திருந்தனர்.

கரோனா பரவலால் முதல் ஐந்து கட்டங்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்த நேரடிப் பிரச்சாரப் பாதிப்பு, மற்ற கட்சிகளைப் போல் பாஜகவில் மட்டும் இருக்கவில்லை. 2014 மக்களவைத் தேர்தல் முதல் சமூக ஊடகங்களின் வழி பிரச்சாரத்தில் இறங்கிய பாஜக, அதில் மற்ற கட்சிகளைவிட ஓங்கி நின்றது.

கடந்த 2021-ல் நடைபெற்ற உ.பி. பஞ்சாயத்துத் தேர்தலில் 760 உறுப்பினர்களுடன் சமாஜ்வாதி முதல் இடத்தையும், 750 உறுப்பினர்களுடன் பாஜக இரண்டாவது இடத்தையும் பிடித்தன. இந்த சரிநிகர் போட்டியால், சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெல்லும் என்பதைக் கணிக்க முடியவில்லை. இதன் காரணமாகச் சிறிதும் கணிக்க முடியாமல் இருந்த உ.பி.யின் முடிவுகளை, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெளிவாக்கிவிட்டன.

தொடக்கக் கட்டங்களில் பாஜக உ.பி.யின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பதிலாக இந்துத்துவக் கொள்கைகளையே பிரச்சாரத்தில் முன்னிறுத்தியது. இதற்கு 2015-ல் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில் முசாபர்நகரில் ஏற்பட்ட கலவரமும், மேற்குப் பகுதியில் அதிகமுள்ள முஸ்லிம் மற்றும் ஜாட் வாக்காளர்களும்தான் காரணம். ஆனால், சமாஜ்வாதி கட்சிக்கு முஸ்லிம்கள், யாதவர்களின் வாக்குகள் கிடைத்தும் போதிய அளவு வெற்றியைப் பெற அந்தக் கட்சியால் இயலவில்லை. டெல்லியில் ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தில், விவசாயிகளுடன் பாஜகவுக்கும் வெற்றி என்றுதான் கூற வேண்டும். விவசாயிகள் அதிமுள்ள ஜாட் சமூகத்தின் வாக்குகள் பாஜகவிடமிருந்து பெரிய அளவில் விலகியதாகத் தெரியவில்லை.

மூன்று கட்டத் தேர்தலில் இந்துத்துவப் பிரச்சாரத்தால் பாஜக விமர்சனத்துக்கு உள்ளானது. இருப்பினும், பாஜகவின் பிரச்சார வியூகம், தொகுதிகளுக்கு ஏற்ப அவ்வப்போது மாறியது. மத்தியிலும் மாநிலத்திலும் தாங்கள் ஆட்சியில் இருப்பதை வைத்து ‘டபுள் இன்ஜின் அரசு’ என்று பாஜக தன்னை முன்னிறுத்திக்கொண்டது. மத்திய - மாநில அரசுகளின் சாதனைகளைப் பாஜக முன்னிறுத்தியது. இதற்கு முன்னால், அகிலேஷின் பிரச்சாரம் எடுபடவில்லை என்றே தெரிகிறது. எப்போதும் இல்லாத வகையில், அகிலேஷ் இலவசங்கள் குறித்து அளித்த தேர்தல் வாக்குறுதிகளும் எடுபடாமல் போயின. 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதையும் உ.பி.வாசிகள் புறக்கணித்துள்ளனர்.

2017 சட்டமன்றத் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளைப் பெறுவதற்காக பாஜக உறுதியான கூட்டணியை அமைத்திருந்தது. இதில், மத்திய அமைச்சர் அனுபிரியா பட்டேலின் அப்னா தளம் (சோனுலால்), ராஜ்பருடைய சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி ஆகியவை இடம்பெற்றன. இந்த முறை, ராஜ்பரைத் தன்பக்கம் இழுத்துக்கொண்டார் அகிலேஷ். எனினும், பாஜகவுடன் மீனவர் ஆதரவு நிஷாத் கட்சி புதிதாக இணைந்தது. உ.பி.யின் கிழக்குப் பகுதியில் செல்வாக்கான இந்தக் கட்சி, கோரக்பூரில் முதல்வர் யோகி தொடங்கி பல தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவியுள்ளது. இதன்மூலம், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் வாக்குகள் பாஜகவுக்கு மீண்டும் கிடைத்துள்ளன எனலாம்.

உ.பி.யில் அதிக சதவீதத்திலுள்ள தலித் வாக்காளர்கள் மீண்டும் மாயாவதிக்குச் சாதகமாகத் திரும்புவார்கள் என்று பேச்சு எழுந்தது. முதன்முறையாக உ.பி.யில் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் பொறுப்பை ஏற்ற பிரியங்கா வதேராவின் பிரச்சாரங்களில் கூட்டம் நிரம்பிவழிந்தது. இதையெல்லாம் வைத்து, தொங்கு சட்டமன்றத்துக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்தது. இவை அனைத்தையும் பொய்யாக்கிவிட்டது பாஜகவின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சி. நாட்டின் முதல் துறவி முதல்வரான இவரது ஆட்சியில் பெரிய அளவில் ஊழல் புகார் எதுவும் எழவில்லை. உ.பி.யில் குற்றப் பின்னணியாளர்களை முற்றிலும் ஒடுக்காவிட்டாலும் அவர்கள் மீது முதல்வர் யோகி எடுத்த நடவடிக்கைகளுக்கும் இந்தத் தேர்தலில் பலன் கிடைத்துள்ளது.

2014, 2019 மக்களவைத் தேர்தல்களிலும், 2017 உ.பி. சட்டமன்றத் தேர்தலிலும் வீசிய ‘மோடி அலை’ இந்த முறை ஓய்ந்ததாகக் கருதப்பட்டது. இது மோடிக்குக் கெளரவப் பிரச்சினை என்பதால், இதைப் பொய் என்று நிரூபிப்பதற்காகக் கடைசிக் கட்டமாக, பிரதமர் மோடி அதிரடியாகக் களமிறங்கினார். இரவில், ரயில்நிலையத்தில் திடீர் விஜயம் செய்தார் பிரதமர் மோடி. சாலையோரக் கடைகளில் தேநீர் ருசித்தவர், பீடாவையும் சுவைத்தார். வாராணசியில் தனது 7 ஆண்டு கால எம்.பி. பதவியில் இதுவரை போகாத வீதிகளிலும் நுழைந்து பொதுமக்களைச் சந்தித்தார். வழியில், பாமர மக்களுடன் கூட்டம் ஒருபுறம் என்றால், அறிவுஜீவிகளுக்கான தனிக்கூட்டம் இன்னொரு புறம். இதன் தாக்கம், வாராணசி உள்ளிட்ட, அந்த ஏழாவது கட்டத்தின் 54 தொகுதிகளிலும் இருந்தது.

இவை அனைத்தும் சேர்ந்து பாஜகவின் உழைப்பு வீண்போகவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் உ.பி.யில் எந்தக் கட்சிக்கும் கிடைக்காத, தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சி என்ற பெருமையைப் பாஜக பெற்றுள்ளது. இதன் பலன் பாஜகவுக்கு 2024 மக்களவைத் தேர்தலில் கிடைக்குமா என்பதுதான் நாடு முழுவதிலும் தற்போது எழுந்துள்ள புதிய கேள்வி.

- ஆர்.ஷபிமுன்னா: தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in.



Read in source website

உத்தராகண்ட்: பாஜகவின் கோஷ்டிப் பூசல், ஆட்சி மீதான புகார்களால் இங்கு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற எண்ணம் அக்கட்சி மேலிடத்துக்கு இருந்தது. அதன் எதிரொலியாகவே 4 மாதங்களில் 3 முதல்வர்கள் இங்கு மாற்றப்பட்டார்கள்.

விவசாயிகளின் தொடர் போராட்டங்கள், ஹரித்துவாரில் துறவிகளின் வெறுப்புப் பேச்சு, கரோனா பெருந்தொற்றைக் கையாண்ட விதம் என ஆளும் பாஜகவைச் சர்ச்சைகள் சுற்றியபோதும் மீண்டும் பாஜகவுக்கே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

அதற்கு மாநில ஆட்சியைத் தாண்டி பிரதமர் மோடி மீதான நம்பிக்கை பாஜகவுக்குக் கைகொடுத்திருக்கிறது. மாறாக, உத்தராகண்டில் சரியான தலைமையைக் காங்கிரஸால் உருவாக்க முடியாமல் போனது. தலித் தலைவர் யஷ்பால் ஆர்யா, அவருடைய மகன் சஞ்சீவ் ஆகியோரைக் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டுவந்தது சாதகமாகப் பார்க்கப்பட்டது.

உத்தராகண்டில் தலித் முதல்வர் என்று பேசிவந்த காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், தன்னுடைய நிலைப்பாட்டைக் கடைசி நேரத்தில் மாற்றிக்கொண்டது அக்கட்சிக்கு பின்னடைவாக மாறியிருக்கக்கூடும். மேலும் காங்கிரஸால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முடியவில்லை. ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இங்கும் தனித்துப் போட்டியிட்டதால் வாக்குகள் சிதறின.

மணிப்பூர்: 2002-ம் ஆண்டு முதல் 2017 வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்த மாநிலம் மணிப்பூர். ஒக்ராம் இபோபி சிங் அசைக்க முடியாத முதல்வராக இருந்தார். 2017 தேர்தலில் நாகா மக்கள் முன்னணி, நாகா மக்கள் கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. பீரேன் சிங் முதல்வரானார். ஆனால், அந்தக் கூட்டணியால் பாஜக அவ்வப்போது சிக்கல்களை எதிர்கொண்டது. எனவே, இத்தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கிடையாது என அறிவித்துவிட்டுதான் பாஜக களமிறங்கியது. காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் தனித்துக் களம்கண்டன. தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

மணிப்பூரில் ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரச் சட்டம் என்பது முக்கியமான பிரச்சினை. ஆனால், மற்ற பிரச்சினைகளை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் அதையே முக்கியப் பிரச்சினையாகப் பேசின. மாறாக, எதிர்க்கட்சிகள் பலமாக இருந்த பகுதிகளில் ஆயுதக் குழுக்களின் ஆதரவைப் பெறுவதில் பாஜக முனைப்பு காட்டியது. மோடியும் அமித் ஷாவும் மணிப்பூரில் நடத்திய தொடர் பேரணிகள், அளித்த வாக்குறுதிகள் போன்றவை பாஜகவை நோக்கி மீண்டும் மாநில மக்களைத் திரும்ப வைத்திருக்கிறது.

கோவா: கோவாவில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை எப்படியும் வீழ்த்துவது என்று காங்கிரஸ் கட்சியிடம் முனைப்பு இருந்தது. ஆனால், அக்கட்சித் தலைவர்களின் வழக்கமான பெரியண்ணன் தோரணை மீண்டும் காங்கிரஸுக்குத் தோல்வியைத் தந்திருக்கிறது. கோவாவில் புதிதாகக் களமிறங்கிய மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுடன் ஒரு பனிப்போரை காங்கிரஸ் நடத்திவந்தது. அதன் விளைவாக மஹாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியும் திரிணமூல் காங்கிரஸும் தனி அணியாகக் களமிறங்கின.

கூட்டணியை நாடி வந்த தேசியவாத காங்கிரஸ், சிவசேனா போன்ற கட்சிகளையெல்லாம் காங்கிரஸ் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆளுங்கட்சியின் எதிர்ப்பலையைத் தங்களுக்கான வாக்குகளாகக் கட்சிகளை ஒருங்கிணைத்துப் பெறுவதில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. விளைவு, சிதறிய வாக்குகளால் பாஜக மீண்டும் கோவாவைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த தேர்தலைவிட பாஜக கூடுதலாக ஒரு சதவீத வாக்குகளைத்தான் பெற்றிருக்க, காங்கிரஸோ 5% வாக்குகளை இழந்திருக்கிறது. கோவாவில் காங்கிரஸ் தேய்ந்திருக்கிறது என்பதற்கு இதுவே ஓர் உதாரணம்.

- டி. கார்த்திக், தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in



Read in source website

பஞ்சாப் மாநில மறுசீரமைப்புக்குப் பின்னர், ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாநிலத்தில் ஒரு அரசியல் திருப்பம் நிகழ்ந்திருக்கிறது. காங்கிரஸ், சிரோன்மணி அகாலி தளம் அல்லாத மூன்றாவது ஆளுங்கட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது ஆம் ஆத்மி கட்சி. இதற்கு முன்பு எந்தவொரு கட்சியும் இவ்வளவு பெரிய வெற்றியை அம்மாநிலத்தில் பெற்றதில்லை. கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 117 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 77 இடங்களைப் பெற்றதே சாதனையாகப் பார்க்கப்பட்டது. அத்தேர்தலில் 20 இடங்களை மட்டுமே பெற்ற ஆஆக இப்போது 90-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று, அதைவிடப் பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. பஞ்சாபில் ஆஆகவின் முதல்வர் வேட்பாளராக சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பக்வத் மானை முன்கூட்டியே அறிவித்ததும் அதற்கு முன்பு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தேர்தல் பாதையைத் தெளிவாக்கிவிட்டது.

வழக்கமாக, காங்கிரஸுக்கும் சிரோன்மணி அகாலி தளத்துக்கும் இடையிலான இருமுனைப் போட்டிக் களமாகவே இருக்கும் பஞ்சாபில், தற்போது ஐந்துமுனைப் போட்டி நிலவியது. ஆஆக தவிர, பகுஜன் சமாஜ் கட்சியை உள்ளடக்கிய சிரோன்மணி அகாலி தளக் கூட்டணி, பாஜகவுடனான கேப்டன் அமரீந்தர் சிங் கூட்டணி, விவசாய முன்னணி, சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா ஆகியோரும் தேர்தல் களத்தில் நின்றனர்.

ஆனால், ஆஆக அனைத்தையும் தாண்டி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து, ஐந்து முறை முதல்வராகப் பொறுப்பு வகித்த சிரோன்மணி அகாலி தளத்தின் பிரகாஷ் சிங் பாதல், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்த முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆகியோர் இத்தேர்தலில் ஆஆக வேட்பாளர்களிடம் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

டெல்லி தலைநகர்ப் பகுதியில் ஆட்சியிலிருக்கும் ஆஆக, அரசமைப்புரீதியில் முழுமையான மாநில அந்தஸ்து கொண்ட ஒரு சட்டமன்றத்தைக் கைப்பற்றியிருப்பது இப்போதுதான். டெல்லியிலிருந்து பஞ்சாப் நோக்கிய இந்த அரசியல் விரிவாக்கம், தேசிய அரசியலில் பங்கெடுக்க விரும்பும் அக்கட்சிக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. எனினும், ஆஆகவுக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றிக்கான முக்கியமான இரண்டு காரணங்கள் டெல்லியில் ஓராண்டு காலமாக நீடித்த விவசாயிகளின் போராட்டமும், காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய கடுமையான உட்கட்சிப் பூசல்களும்தான்.

மேலும், ஆட்சி நிர்வாகத்தில் நிலவிய ஊழல், விவசாயிகளின் வருமானம் தொடர்ந்து குறைந்துகொண்டுவருவது, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவருவது, போதைப்பொருட்களின் புழக்கம், வகுப்புவாத உணர்வுகளால் நிலவும் பதற்றம் ஆகியவற்றால் பஞ்சாப் மக்கள் ஒரு மாற்று அரசியலை விரும்பத் தொடங்கினார்கள். பஞ்சாபின் இந்த அரசியல் சூழலால் ஆஆக எளிதாகப் பெற்றிருக்கும் வெற்றி, அக்கட்சி மேலும் சில மாநிலங்களில் கிளைவிரிக்க உதவும். தற்போதைய தேர்தலிலும்கூட கோவாவில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட ஆஆக 2 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, தேசிய அரசியலில் தன்னை ஒரு வலுவான சக்தியாக வெளிப்படுத்திக்கொள்ள விரும்பும் கேஜ்ரிவாலுக்குப் புதிய வாய்ப்புகளையும் இந்த வெற்றி பெற்றுத்தரும். 2024 மக்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு எதிராக பிராந்தியக் கட்சிகளுக்கிடையே ஒரு கூட்டணி உருவானால், அதன் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக கேஜ்ரிவாலும் இருப்பார்.



Read in source website