DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 06-08-2022

சிராவயலில் காந்தி-ஜீவா நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25ஆவது மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை, கம்யூனிஸ்ட், திமுக தனித்தனி இயக்கமாக இருந்தாலும் ஒரே கொள்கையைக் கொண்டது. கம்யூனிஸ்ட் இயக்கமே வாழ்வாக கொண்ட பெரும் போராளி நல்லகண்ணு. நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது வழங்குவதன் மூலம் தமிழ்நாடு அரசு பெருமை கொள்கிறது. 

தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் நல்லகண்ணு வழிகாட்ட வேண்டும். இந்திய நாட்டுக்கு 2 மாபெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. சமூக நல்லிணக்கத்தை கெடுப்பது, மாநில உரிமைகளை பறிப்பது ஆகியவை நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. சமூக நல்லிணக்கத்துடன் இந்தியா இருப்பதை ஒருசிலர் விரும்பவில்லை. நாட்டின் சமூக நல்லிணக்கத்தை கெடுக்க விரும்புவோர்தான் தேச விரோதிகள். 

நாட்டின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்கும் எதிராக செயல்படுவோர் நம்மை பார்த்து தேச விரோதிகள் என கூறுகின்றனர். சிவகங்கை மாவட்டம், சிராவயலில் காந்தியடிகள், தோழர் ஜீவா சந்திப்பின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்படும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்தியுடன் இணைந்து விடுதலைக்காக பாடுபட்டவர் ஜீவா.

நாணயத்தின் இருபக்கம் போன்று வளர்ச்சித்திட்டமும், சமூக மேம்பாடும் அவசியம், அதுவே திராவிட மாடல். இவ்வாறு அவர் தெரிவித்தார். 



Read in source website

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய வெள்ளி விழாவில், மனித உரிமைகள் செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பி. காயத்ரி கிருஷ்ணனுக்கு மு.க. ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், பல்வேறு துடிப்பான செயல்பாடுகளால் பலரும் அறிந்தவராகவே இருக்கிறார்.