DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 03-05-2022

கைதிகளிடம் இரவு நேரங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தக் கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

சத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு திருவண்ணாமலை மற்றும் சென்னையில் விசாரணைக் கைதிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழக டிஜிபி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இன்று வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகம் முழுவதும் வழக்குகளில் கைது செய்யப்படும் அனைவரையும் மாலை 6 மணிக்குள் சிறைகளில் அடைக்க வேண்டும். கைதிகளிடம் இரவு நேரங்களில் விசாரணை நடத்தக் கூடாது. கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் இனி வைத்திருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.



Read in source website

 

தடுப்பூசி போடாத 12 முதல் 18 வயது வரையிலான மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு சண்டிகர் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சண்டிகர் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்விநிலையங்களில் 12 முதல் 18 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

மே 15ஆம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் அதாவது 100 சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது.

படிக்கரமலான்: பாகிஸ்தான், வங்கதேச வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய இந்தியா

மேலும் தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் மாநில சுகாதாரத் துறையுடன் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று சண்டிகர் அரசு அறிவித்துள்ளது.

அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சண்டிகரில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது. நாள்தோறும் 10 - 15 வரையிலான நபர்கள் பாதிக்கப்படுகின்றனர். 



Read in source website

ரஷியா-உக்ரைன் இடையேயான போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

தனது மூன்று நாள் ஐரோப்பிய பயணத்தை திங்கள்கிழமை தொடங்கிய பிரதமர் மோடி முதலில் ஜெர்மனி சென்றடைந்தார். தலைநகர் பெர்லின் விமான நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த இந்தியர்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸை சந்திக்கச் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 

அதையடுத்து இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ""இந்தியா-ஜெர்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகப் பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. இருதரப்பு நல்லுறவு குறித்து மறுஆய்வு செய்த தலைவர்கள், வர்த்தகம், கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதிபூண்டனர்'' என்று குறிப்பிடப்பட்டது. 

யாருக்கும் வெற்றி கிடைக்காது: 

பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருநாட்டுப் பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், ""உக்ரைன்-ரஷியா மோதல் தொடங்கியபோதே வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காணப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தியது. 

இந்தப் போரில் எத்தரப்புக்கும் வெற்றி கிடைக்காது. ஆனால், அனைவரும் பெருமளவில் பாதிக்கப்படுவர். உக்ரைன் விவகாரத்தால் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டுள்ளது; உரங்கள், உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், உலகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளும், ஏழ்மை நாடுகளுமே அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. 

போரால் மனித குலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தே இந்தியா கவலை கொள்கிறது. இந்த விவகாரத்தில் அமைதியையே இந்தியா விரும்புகிறது.

வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை: ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்த இந்தியா உறுதி கொண்டுள்ளது. 

ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஜெர்மனியும் பல்வேறு பொதுவான கொள்கைகளைப் பகிர்ந்து கொண்டு வருகின்றன'' என்றார். 

முக்கியப் பங்கு: ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""சர்வதேச பொருளாதாரத்திலும், பருவநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தையிலும் இந்தியா முக்கியப் பங்கு வகித்து வருகிறது'' என்றார்.

ஜெர்மனியில் நடைபெறவுள்ள ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு அவர் அழைப்புவிடுத்தார். 

இந்தியா-ஜெர்மனி அரசுப் பேச்சுவார்த்தை: இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை (ஐஜிசி) கூட்டமானது கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 6-ஆவது ஐஜிசி கூட்டமானது திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் இருநாட்டுப் பிரதமர்களும் கலந்துகொண்டனர். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக ஜெர்மனி அமைச்சர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். 

தனித்துவமான நட்புறவு: ஐஜிசி கூட்டமானது இருநாடுகளுக்கிடையேயான தனித்துவமான நட்புறவை வெளிப்படுத்துவதாகப் பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்தது. பசுமைசார் வளர்ச்சி, நீடித்த எதிர்காலம், சுதந்திரமான, அமைதியான இந்தோ-பசிபிக் பிராந்தியம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்விட்டரில் தெரிவித்தார். 

ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியே இந்தியாவின் மிகப் பெரும் வர்த்தகக் கூட்டாளியாக விளங்கி வருகிறது. இருதரப்பு வர்த்தக மதிப்பானது சுமார் ரூ.1,50,000 கோடியாக உள்ளது. 

தொழில்துறை வட்ட மேஜை: பின்னர் மோடி-ஷோல்ஸ் தலைமையில் தொழில்துறை வட்ட மேஜை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஜெர்மனியின் முன்னணி தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, இந்திய இளைஞர்களிடத்தில் முதலீடு செய்யுமாறு ஜெர்மன் தொழிலதிபர்களுக்கு  அழைப்பு விடுத்தார். 

பிரதமர் மோடி நெகிழ்ச்சி: தலைநகர் பெர்லின் விமான நிலையத்துக்கு வெளியே கூடியிருந்த இந்தியர்கள், "வந்தே மாதரம்' எனவும், "பாரத் மாதா கீ ஜே' எனவும் முழக்கங்களை எழுப்பி பிரதமர் மோடியை வரவேற்றனர். அப்போது நாட்டுப்பற்றுப் பாடலைப் பாடிய சிறுவனைப் பிரதமர் மோடி பாராட்டினார். இந்தியச் சிறுமி ஒருவர், பிரதமர் மோடியின் ஓவியத்தை அவருக்குப் பரிசளித்தார். 

அதிகாலை வேளை என்றபோதிலும், இந்தியர்கள் பெருந்திரளாகக் கூடி அளித்த வரவேற்புக்குப் பிரதமர் மோடி நெகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தியர்களுடன் கலந்துரையாடல்: அதன் பின்னர், பெர்லினில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில், ""21-ஆம் நூற்றாண்டின் இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைய இந்தியா தீர்க்கமாக முன்னோக்கிச் செல்கிறது. புதிய இந்தியா பாதுகாப்பான எதிர்காலம் குறித்து சிந்திக்கவில்லை. மாறாக இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்தும் புத்தாக்கம் குறித்தும் சிந்திக்கிறது. 

கடந்த 2014-இல் இந்தியாவில் வெறும் 200-400 புதிய நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப்) மட்டுமே இருந்தன. ஆனால் இன்றைக்கு 68,000-க்கும் அதிகமான புதிய நிறுவனங்களை இந்தியா கொண்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் நேரடி பயன்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.22 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு செலுத்தியுள்ளது'' என்றார் பிரதமர் மோடி.



Read in source website

 

புது தில்லி: கிரீஸில் நடைபெறும் ஜூனியா் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஹா்ஷதா சரத் தங்கப் பதக்கம் வென்றாா். இதன் மூலம் இப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா்.

போட்டியின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை மகளிருக்கான 45 கிலோ பிரிவில் களம் கண்ட ஹா்ஷதா, ஸ்னாட்ச் பிரிவில் 70 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 83 கிலோ என மொத்தமாக 153 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தாா். துருக்கியின் பெக்தாஸ் கான்சு (150 கிலோ) வெள்ளியும், மால்டோவாவின் ஹின்கு தியோதோரா லுமினிடா (149 கிலோ) வெண்கலமும் வென்றனா்.

இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான அஞ்சலி படேல் 148 கிலோ (67+81) எடையைத் தூக்கி 5-ஆம் இடம் பிடித்தாா். வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவின் சாா்பில் 8 போ் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் இப்போட்டியில் சாய்கோம் மிராபாய் சானு வெண்கலமும் (2013), அசிந்தா ஷியுலி வெள்ளியும் (2021) வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.



Read in source website


உக்ரைனில் உடனடியாகப் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

3 நாள்கள் ஐரோப்பிய பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) டென்மார்க் சென்றடைந்தார். அங்கு தலைநகர் கோபன்ஹேகனில் அரசுமுறை இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "உக்ரைனில் நிலவும் நெருக்கடி குறித்து ஆலோசனை நடத்தினோம். அங்கு உடனடியாகப் போரை நிறுத்தி பிரச்னையைத் தீர்க்க பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்" என்றார்.

டென்மார்க் பிரதமர் மேட் ஃபிரடெரிக்சென் கூறுகையில், "எனது செய்தி மிகவும் தெளிவானது. புதின் போரை நிறுத்தி, அங்கு நிகழும் கொலைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ரஷியாவிடம் இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தும் என நம்புகிறேன்" என்றார்.



Read in source website

புதுச்சேரி: சங்கராபரணியில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் புஷ்கரணி விழா நடப்பதையொட்டி வரும் மே 15-க்கு பின்னர் 64 அடி உயர பிரமாண்ட சிவன் சிலை அமைக்கும் பணியைத் துவங்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரா கோயிலையொட்டி சங்கராபரணியில் புஷ்கரணி விழா நடத்த முடிவு எடுக்கப்பட்டது. புஷ்கரணி விழா தொடர்பாக அரசு சார்பில் பல்வேறு குழுக்கள் அமைத்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன் வரலாறு இல்லை என்பதால் இதுவே புதுச்சேரியில் முதல் முறையாக நடத்தப்படும் புஷ்கரணி விழாவாகும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியதன் மூலம் கோயில் திருப்பணிகள், படித்துறை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் போது குறிப்பிட்ட ராசிக்குரிய நதியில் நடைபெறுவது தான் புஷ்கரணி விழா. அந்தவகையில் மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு குருபகவான் இடம்பெயர்வதால் வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேஷம் ராசிக்குரிய கங்கை நதிக்கு இணை யான சங்கராபரணி நதியில் புஷ்கரணி விழாநடைபெற இருக்கிறது. ஏப்ரலில் மொத்தமாக 24 நாட்களுக்கு இவ்விழா நடக்கும்.

புஷ்கரணி விழாவையொட்டி கெங்கரவராக நதீஸ்வரர் கோயிலில் சங்கராபரணி ஆற்றில் கரையோரத்தில் 64 அடி உயரத்தில் பிரமாண்டமாக சிவபெருமான் அமர்ந்த நிலையில் இருப்பது போன்ற சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நடந்துள்ளது. புஷ்கரணிக்கு முன்பாக சிலை அமைத்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இப்பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், சங்கராபரணி மகா புஷ்கரணி விழா பற்றி ஆலோசனைக்கூட்டம் இன்று அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடந்தது.

இதுபற்றி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ''சங்கராபரணி ஆற்று கரையோரத்தி