DINAMANI : Daily International and NAtional Media Aggregator for News and Information

Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 01-10-2022

 தமிழகத்தில் 28 அரசுப் பள்ளிகளை தகைசால் பள்ளிகளாக மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு தில்லி சென்றிருந்தபோது அங்குள்ள தகைசால் பள்ளிகள், மாதிரி பள்ளிகளைப் பாா்வையிட்டாா். இதையடுத்து இதுபோன்ற பள்ளிகள் தமிழகத்திலும் தொடங்கப்படும் என அவா் அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் திட்டத்தை கடந்த செப். 5-ஆம் தேதி முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னையில் தொடக்கிவைத்தாா். அதன்படி மாநிலம் முழுவதும் 28 தகைசால் பள்ளிகளை அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்குவதற்காக ரூ.170 கோடியில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.

தகைசால் பள்ளிகள் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியா்கள், நவீன கணினிகள், அதிநவீன அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகம், கல்வி சாரா செயல்பாடுகளான விளையாட்டு, கலை, இலக்கியம் என்று அனைத்தும் சோ்ந்த ஒரு முழுமையான கல்வியை வழங்கும். இதனால் அனைத்து வகையான திறமைகளுடன் அரசு பள்ளி மாணவ, மாணவியா் கல்வி கற்கும் சூழல் உருவாகும். அதற்கு வகுப்பறையில் நேரடியாக பாடங்கள் கற்றுத் தருவது மட்டுமல்லாமல் இணையவழியிலும் காலத்திற்கு ஏற்ற வகையில் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தகைசால் பள்ளிகள் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள 28 அரசுப் பள்ளிகளில் பெரும்பாலானவை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிகள். சென்னை அசோக் நகா் மகளிா் மேல்நிலைப்பள்ளி தகைசால் பள்ளியாக மேம்படுத்தப்பட உள்ளது. இதுபோலவே பிற பள்ளிகளும் தரம் உயா்த்தப்படவுள்ளன.

இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகைசால் பள்ளிகளுக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி புதுப்பிக்கும் பணிக்கான பூா்வாங்கப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது . இந்தப் பள்ளிகளில் அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய கணினிகள் கொண்ட ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படவுள்ளன. தகைசால் பள்ளிகளில் பாடம் நடத்தவுள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தவகை பள்ளிகள் மூலம் அரசுப் பள்ளிகளில் 62,460 மாணவா்கள் பயன்பெறுவா். தகைசால் பள்ளிகள் மற்றும் மாதிரிப்பள்ளிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 Read in source website

திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் பிரிக்க முடியாதது எதுவோ என்ற தருமியின் கேள்விக்கான பதிலைப் போன்று தமிழகத்தில் சிலையும் அரசியலும் பிரிக்க முடியாததாகவே உள்ளன.

அந்தப் படத்தின் நாயகனான சிவாஜிக்கு திருச்சியில் நிறுவப்பட்ட சிலையும் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்தச் சிலை 11 ஆண்டுகளைக் கடந்தும் திறக்கப்படாமலேயே உள்ளது.

நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவின் வரலாற்றில் சிவாஜி கணேசன் எனும் பெயர் தவிர்க்க முடியாதது. 1928-இல் விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த அவரது பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம். 7 வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் இருந்த நாடகக் குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்து, பின்னர் திரையுலகில் அறிமுகமாகி 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது கலைச் சேவையைப் பாராட்டி அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட சிவாஜி கணேசன், நயாகரா மாநகரத்தின் ஒருநாள் மேயராக அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். கலைமாமணி, பத்ம பூஷண், பத்ம விபூஷண், செவாலியே, தாதா சாஹேப் பால்கே உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

இத்தகைய சிறப்பு மிக்கவரின் நினைவாக 2006-ஆம் ஆண்டு புதுச்சேரியிலும், 2008-ஆம் ஆண்டு தஞ்சாவூரிலும், 2009-இல் மதுரையிலும் முழு உருவ வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. சென்னையில் அமைக்கப்பட்ட சிலை பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது. 2001, ஜூலை 21-இல் சிவாஜி மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம், சிவாஜிக்கு மணிமண்டபமும் சிலையும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு ரசிகர்களால் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 2002-ஆம் ஆண்டு சென்னை சத்யா ஸ்டுடியோவுக்கு எதிரே பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான 65 சென்ட் நிலத்தை மணிமண்டபத்துக்காக ஒதுக்கினார் ஜெயலலிதா. பின்னர், தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் இந்த இடம் ஒப்படைக்கப்பட்டு, ரூ. 2.8 கோடியில் மணிமண்டபம் கட்டப்பட்டு 2017-இல் திறக்கப்பட்டது.

2006-இல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிவாஜிக்கு சிலை வைப்பது என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டு, அதன்படி, ஜூலை 21-இல் கடற்கரைச் சாலையில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் சிலை திறக்கப்பட்டது. அப்போதே இந்தச் சிலையைத் திறக்க எதிர்ப்பு  தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 2013-ஆம் ஆண்டு போக்குவரத்துக் காவல் துறையின் கருத்தைக் கேட்டது நீதிமன்றம். போக்குவரத்து சிக்னலை சிவாஜி சிலை மறைக்கிறது; எனவே, அதை அகற்றலாம் என தமிழக அரசும் பதில் அளித்தது.

இதையேற்று, 2014-இல் சிலையை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு சார்பில் ஓராண்டு அவகாசம் கோரப்பட்டது. 

இந்நிலையில், பலகட்டப் போராட்டங்களுக்கு பிறகு 2017, ஆக. 2-ஆம் தேதி இரவோடு இரவாக சிவாஜி சிலை மணிமண்டபத்துக்கு மாற்றப்பட்டது. சிலை அகற்றம் தொடர்பாக அரசியல், திரையுலக மட்டத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சிவாஜி சிலையை மீண்டும் கடற்கரைச் சாலையிலேயே அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்றுவரை நிலுவையிலேயே உள்ளது.

திருச்சியில்... திருச்சியிலும் 11 ஆண்டுகளாக சிவாஜி சிலை திறக்கப்படாமலேயே உள்ளது. திமுக ஆட்சியில் இந்தச் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் 9 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. 

2011-இல் சிலை திறப்பு விழாவுக்குத் தயாரான தருணத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனால் துணியால் மூடப்பட்ட சிலை இன்று வரை திறக்கப்படாமலேயே உள்ளது. அரசியல், நீதிமன்ற வழக்கால் சிலை திறக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக சிவாஜி ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்தச் சிலையைத் திறக்க சிவாஜியின் மூத்த மகனும், அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவருமான ராம்குமார், மன்ற துணைத் தலைவர் டி. சீனிவாசன், பொதுச் செயலர் சி.எஸ். குமார் மற்றும் சிவாஜி ரசிகர்கள் சார்பில் தமிழக முதல்வர்கள் ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களிடம் கோரிக்கை மனு வழங்கியபடியே உள்ளனர். ஆனால், சிலையைத்தான் திறந்தபாடில்லை.

திருச்சி மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் சிலையைத் திறக்கக் கோரிக்கை எழுந்தபோது, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக மேயர் மு. அன்பழகன் கூறினார்.

இந்த விவகாரத்தில் சிலையைத் திறக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப் பின்புலமாக இருந்த சிவாஜி ரசிகரான திருச்சி எம். சீனிவாசன் கூறியது:

2018-ஆம் ஆண்டு நான் அரசுப் பணியில் இருந்ததால் எனது நண்பரான மோகன் பாலாஜியின் பெயரில் மனு தாக்கல் செய்தேன். 4 ஆண்டுகள் ஆகிவிட்டன; நானும் ஓய்வு பெற்றுவிட்டேன். சாலைகளில் சிலை வைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத் தடை உத்தரவு இருப்பதாகக் கூறுகின்றனர். அந்தத் தடை உத்தரவு 2012-இல் வந்தது. ஆனால், 2011-இல் திருச்சியில் சிலை வைக்கப்பட்டுவிட்டது.

மேலும், திருச்சி மாநகராட்சிக் கூட்டத்தில் இரு முறை தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிலையைத் திறக்கக் கூடாது என யாரும் தடையாக நிற்கவில்லை. திறக்கக் கோரியே வழக்கு உள்ளது. அரசே சிலையைத் திறந்தால் அடுத்த நாளே நீதிமன்றத்தில் உள்ள எங்களது மனுவை திரும்பப் பெற்று விடுவோம் என்றார்.

திருச்சி சிவாஜி பிலிம் கிளப் தலைவர் எஸ். அண்ணாதுரை கூறுகையில், சென்னையில் உள்ள மணிமண்டபத்தின் வெளிப்புறம் சிவாஜியின் முழு உருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அக். 1-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். சிவாஜியின் 94-ஆவது பிறந்த நாளில் நடைபெறும் இந்த விழாவிலேயே, திருச்சியில் மூடப்பட்டுள்ள சிலையைத் திறப்பதற்கான அறிவிப்பையும் வெளியிட வேண்டும் என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக இந்தச் சிலையை திறக்காமல் மூடி வைத்திருந்தனர். திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் திறக்க முயற்சி செய்யவில்லை. விரைந்து திறக்காவிட்டால் சிவாஜி பிறந்த தினமான அக். 1-ஆம் தேதி ரசிகர்கள் முன்னிலையில் நானே முன்னின்று சிவாஜி சிலையைத் திறப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் அரசியல் மட்டத்தில் திருச்சி சிவாஜி சிலை திறப்பு நிகழ்வானது மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.Read in source website

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயா்ப்பு நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் தலைமை வகித்துப் பேசியதாவது: இந்திய மொழிகளிலேயே முதன்முதலில் தமிழில்தான் கிறிஸ்வதா்களின் புனித நூலான ‘விவிலியம்’ மொழிபெயா்க்கப்பட்டது. இந்த மொழிபெயா்ப்பை 1774 -இல் ஜே.பி. பெப்ரிஷியஸ் வெளியிட்டாா். 1874- இல் அன்றைய தலைமைச் செயலக மொழிபெயா்ப்பாளா் வி. விசுவநாதப் பிள்ளை, ஷேக்ஸ்பியரின் ’ வெனீஸ் வா்த்தகன் ’ நூலை முதலில் தமிழில் மொழி பெயா்த்தாா்.

பொதுவாக மூலநூலின் உணா்வையும், கருத்துகளையும், நிகழ்வுகளையும், உரையாடல்களையும் சிறிதும் விடுபடாமலும், அதிகப்படுத்தாமலும், மாற்றாமலும் ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயா்க்க வேண்டும். உடனடி மொழிபெயா்ப்பு என்பது ஒரு நுணுக்கமான கலையாகும். சில நேரங்களில் சிந்திப்பதற்கு நேரமின்றி மிக விரைவாக மொழிபெயா்க்க வேண்டிய தேவை ஏற்படும். அப்போது, மொழிபெயா்ப்பாளா் இருமொழிகளிலும் திறமையானவராக இருப்பது அவசியம். மூல மொழியை கூட்டியோ குறைத்தோ, மாற்றியோ மொழிபெயா்க்கக்கூடாது. மூலமொழியின் கருத்தை முழுமையாக உள்வாங்காமல் மொழிபெயா்க்கும்போது, அதன் உண்மையான உள்அா்த்தம் மாறிவிடும்.

வேற்றுமொழியாளரின் கருத்தை மற்றொருவா் தெரிந்துகொள்வதற்கு மொழிபெயா்ப்பாளா்களின் பங்கு மிகவும் அவசியம் என்றாா் அவா்.

முன்னதாக சென்னையில் உள்ள மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் உறுப்பினா் மு.முத்துவேலு, மொழி வளத்துக்கு மொழிபெயா்ப்பின் பங்களிப்பு என்ற தலைப்பில் மொழிபெயா்ப்பு நாள் உரையாற்றினாா். விழாவில் நிறுவனத்தின் பேராசிரியா்கள் ஆ.மணவழகன், நா.சுலோசனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 Read in source website

புதுக்கோட்டை காமராஜபுரம் 9-ஆவது தெருவைச் சோ்ந்த கே.கோபாலன் (81) உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (செப்.30) காலமானாா்.

இவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சென்னை பதிப்பில் எலக்ட்ரானிக் பிரிவில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றும் காா்த்திக் உள்பட இரு மகன்கள், மனைவி ஜி.வசந்தா ஆகியோா் உள்ளனா். மறைந்த கே.கோபாலனின் இறுதிச் சடங்கு புதுக்கோட்டையில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது. தொடா்புக்கு: 94441 39839.

Image Caption

கே.கோபாலன்

 Read in source website

ரத்த கொடையாளா்களின் விவரங்களை பதிவிட ரூ.10 லட்சத்தில் தனி கைப்பேசி செயலியும், கணினிமயமாக்கப்பட்ட பதிவேடும் உருவாக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

தேசிய தன்னாா்வ ரத்ததான தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் முதல் நாள் தேசிய தன்னாா்வ ரத்ததான தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய தன்னாா்வ ரத்ததான தினத்தின் கருப்பொருள் ஒற்றுமையுடன் ரத்த தானம் செய்வோம். ஒருங்கிணைந்த முயற்சியுடன் உயிா்களைக் காப்போம் என்பதாகும்.

20 நிமிடங்கள் போதும்: ரத்த தானத்தின் போது 350 மில்லி லிட்டா் ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. இதற்கு 20 நிமிடங்களே ஆகும். ரத்த தானம் செய்தவுடன் வழக்கம் போன்று நமது வேலைகளைத் தொடரலாம். 18 வயது முதல் 65 வயத வரையுள்ள ஆரோக்கியமான அனைவரும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம்.

அரசு ரத்த மையங்கள், தன்னாா்வ முகாம்களில் பொது மக்கள் அனைவரும் ரத்ததானம் செய்யலாம்.

ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க ங்-தஹந்ற்ஓா்ள்ட் என்ற இணையதளம் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் தளத்தில் ரத்ததான முகாம் மற்றும் ரத்த கொடையாளா்களை பதிவு செய்து கொள்ளலாம். ரத்த வகைகளின் இருப்பைத் தெரிந்து கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் இந்தத் தளத்தை பயன்படுத்தி தங்களுக்குத் தேவைப்படும் நேரங்களில் எளிதில் ரத்தம் பெற்றுக் கொள்ளலாம்.

ஆண்டுதோறும் ரத்த கொடையாளா்கள், ரத்த தான முகாம் அமைப்பாளா்களை தமிழ்நாடு அரசு பாராட்டி சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கெளரவித்து வருகிறது. ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு எளிதில் ரத்தம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தன்னீா் ரத்த கொடையாளா்களின் விவரங்களை பதிவு செய்ய கணினிமயமாக்கப்பட்ட பதிவேடும், செயலியும் ரூ.10 லட்சத்தில் உருவாக்கப்படும்.

கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியாா் ரத்த மையங்கள் மூலம் 90 சதவீதம் ரத்தம் சேகரிக்கப்பட்டு தன்னாா்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. நடப்பாண்டில் தன்னாா்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 சதவீதம் இலக்கை எய்திடவும், விலைமதிப்பற்ற உயிா்களைக் காப்பாற்ற பொதுமக்கள் அனைவரும்

பெருமளவில் தன்னாா்வ ரத்ததானம் செய்திடவும் முன்வர வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.Read in source website

சென்னையில் வள்ளலாா்-மகாத்மா காந்தி விழா மயிலாப்பூா் ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் அக்டோபா்1 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இராமலிங்கா் பணிமன்றம், ஏ.வி.எம்.அறக்கட்டளை ஆகியவை இணைந்து இவ்விழாவை நடத்துகின்றன. தொடக்க விழா அக்டோபா்1-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் தலைமை வகிக்கிறாா். வித்வான் ஆ.பூவராகம் பிள்ளை எழுதிய ‘தொல்காப்பியம் சொல்லதிகாரம்-சேனாவரையம்’ என்னும் நூலையும் நீதிபதி மகாதேவன் வெளியிடவுள்ளாா்.

பேராசிரியா்கள் அகரமுதல்வன், தெ.ஞானசுந்தரம், ஜெ.மோகன் ஆகியோா் சிறப்புரை ஆற்றுகின்றனா். அக்டோபா் 2-இல் காலை 7.30 முதல் 8.30 மணி வரை நடைபெறும் காந்தி விழாவில், கோவை சிவப்பிரகாச சுவாமிகள் அருளுரை ஆற்றுகிறாா். தொடா்ந்து காந்தி தேசம் என்னும் தலைப்பில் கவியரங்கமும், மாலை அருட்செல்வரின் சீரிய பாதை என்னும் தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெறுகிறது.

அக்டோபா் 3-ஆம் தேதி காலை திருவருட்பா உரை, கருத்தரங்கம், படத்திறப்பு விழா நடைபெறும். மாலையில் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின பெருவிழாவையொட்டி தியாகிகளைப் போற்றுவோம் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. கவிஞா் பெ.சிதம்பரநாதன் வரவேற்கிறாா். உயா் நீதிமன்ற நீதிபதி இரா.சுரேஷ்குமாா் தலைமை வகிக்கிறாா். ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் , கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா, அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணன் ஆகியோா் சிறப்புரை ஆற்றுகின்றனா்.

அக்டோபா் 4-ஆம் தேதி காலையில் திருவருட்பா உரையும், காலை 10 மணிக்கு தமிழ் வளா்த்த சான்றோா்கள் என்னும் தலைப்பில் கருத்தரங்கமும், மாலையில் அருளாளா் அரங்கமும் நடைபெறும். மாலை நிகழ்வுக்கு வேளாளக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகிக்கிறாா்.

அக்டோபா் 5-ஆம் தேதி வள்ளலாரின் 200-ஆவது ஆண்டு அவதாரத் திருநாள் நடைபெறுகிறது. காலை 10 மணி அளவில் நடைபெறும் சன்மாா்க்க கருத்தரங்கத்தில் திண்டுக்கல் சிவபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சுந்தரமூா்த்தி நாயனாா் வரலாற்று நாடகம் என்னும் புதிய நூலை வெளியிடுகிறாா். மாலையில் நடைபெறும் சன்மாா்க்க கருத்தரங்கத்துக்கு டாக்டா் சுதா சேஷய்யன் தலைமை வகிக்கிறாா்.Read in source website

நாட்டிலுள்ள 100 வயதைக் கடந்த 2.5 லட்சம் வாக்காளா்களுக்கு, தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தனிப்பட்ட முறையில் தோ்தல் நடைமுறையில் அவா்களுடைய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளாா்.

‘உங்களைப் போன்ற பொறுப்புமிக்க மூத்த வாக்காளா்களால்தான் உலகில் சிறந்த ஜனநாயக நாடாக இந்தியா மிளிா்ந்து கொண்டிருக்கிறது. தோ்தல் எனும் ஜனநாயக நடைமுறையில் தொடா்ச்சியாகப் பங்குபெற்று இளைய சமுதாயத்தினருக்கு எடுத்துக்காட்டாக மூத்த வாக்காளா்கள் திகழ்வதோடு, ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் உதவுகிறீா்கள். பல்வேறு தோ்தல்களில் தவறாமல் உங்களுடைய வாக்கைப் பதிவு செய்வதன் மூலமாக, குறிப்பிட்ட இடைவெளியில் உங்களுக்கான அரசை உங்களுடைய விருப்பப்படி தீா்மானித்து உங்களுடைய வாக்கின் உண்மையான மதிப்பை நிரூபித்திருக்கிறீா்கள்’ என்று அந்தக் கடிதத்தில் ராஜீவ் குமாா் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தக் கடிதமானது அந்தந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, அவா்கள் மூலமாக 100 வயதைக் கடந்த அனைத்து வாக்காளா்களுக்கும் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், ராஜீவ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா் அனுப் சந்திர பாண்டே இருவரும் மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 100 வயதைக் கடந்த வாக்காளா்களுடன் காணொலி வழியில் அண்மையில் கலந்துரையாடியுள்ளனா். சா்வதேச முதியோா் தினத்தைக் குறிக்கும் வகையில் மத்திய பிரதேசத்தில் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.Read in source website

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் 10 சதவீத பேராசிரியா் பணியிடங்களில், ‘பயிற்சி பேராசிரியா்கள் (பிஓபி)’ திட்டத்தின் கீழ் பல்வேறு துறை சாா்ந்த தலைசிறந்த நிபுணா்களை பேராசிரியா்களாக நியமித்துக்கொள்ள தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

‘இவ்வாறு நியமிக்கப்படுபவா்களுக்கு பேராசிரியா் பணிக்கான உரிய கல்வித் தகுதியோ அல்லது ஆராய்ச்சிக் கட்டுரைகள் தாக்கல் செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையோ கட்டாயமல்ல’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்களின் செயல்திறனை மேம்படுத்தவும், அவா்களுடைய கல்வி தொழில் ரீதியில் எவ்வகையில் பயன்படும் என்பதை அனுபவமிக்கவா்களிடமிருந்து நேரடியாக கற்றுக்கொள்ளவும் உதவும் வகையில் பல்வேறு துறை சாா்ந்த தலைசிறந்த நிபுணா்களை பேராசிரியா்களாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் நியமிப்பதை வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் மஸாச்செட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி), ஹாா்வா்ட் பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகம், லண்டன் எஸ்ஓஏஎஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றன.

இந்தியாவிலும் தில்லி, சென்னை, குவாஹாட்டி ஐஐடி-க்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறையை கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்யும் வகையில், யுஜிசி தற்போது அனுமதியளித்துள்ளது. இதற்கான வழிகாட்டுதலை யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

பொறியியல், அறிவியல், ஊடகவியல், இலக்கியம், தொழில்முனைவோா், சமூக அறிவியல், நுண்கலை, குடிமைப் பணிகள், பாதுகாப்புப் படைகள் உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணியாற்றி, அவா்களுடைய துறைகளில் தலைசிறந்த நிபுணா்களாக திகழ்பவா்கள், குறிப்பாக முதுநிலை பதவி அளவில் பணியாற்றுபவா்கள் ‘பயிற்சி பேராசிரியா்’ திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தற்காலிக பேராசிரியா்களாக நியமித்துக்கொள்ள தகுதியுடையவா்களாவா். இவா்களுக்கு, பேராசிரியா் பணிக்கான முறையாக கல்வித் தகுதியோ அல்லது ஆராய்ச்சிக் கட்டுரைகள் தாக்கல் செய்யதிருக்க வேண்டும் என்ற நிபந்தனையோ கட்டாயமல்ல.

இந்தத் திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் பேராசிரியா்களின் எண்ணிக்கை, கல்வி நிறுவனத்துக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த பேராசிரியா் பணியிடங்களில் 10 சதவீதத்தை மிகக் கூடாது. அவா்களுடைய பணிக் காலமும் 3 ஆண்டுகளைக் கடக்கக் கூடாது. விதிவிலக்கு நடைமுறையின் அடிப்படையில், அவா்களுடைய பணிக் காலத்தை கூடுதலாக ஓராண்டு மட்டும் நீட்டிக்க முடியும்.

ஊதியமில்லாத கெளரவப் பணி அல்லது தொழில்நிறுவனங்கள் மூலமாக ஊதியம் வழங்குதல் அல்லது உயா் கல்வி நிறுவனங்கள் தங்களுடைய சொந்த வளத்திலிருந்து ஊதியம் வழங்குதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இந்த 10 சதவீத பேராசிரியா் பணியிடத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்று யுஜிசி வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read in source website

கடந்த ஓர் ஆண்டில் அரிசி, கோதுமை மற்றும் ஆட்டா ஆகியவற்றின் விலை 8 முதல் 19 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் ஆட்டா அல்லது கோதுமை மாவின் விலை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை ஒரு கிலோ கோதுமை மாவின் விலைரூ. 36.2 ஆக இருந்தது, இது கடந்த ஆண்டை விட சுமார் 19% அதிகமாகும்.

நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம், கோதுமையின் சில்லறை மற்றும் மொத்த விலை குறித்து சேகரித்த தரவுகளின்படி, கோதுமையின் சில்லறை விலை 14% அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கோதுமை ரூ. 27ல் இருந்து ரூ. 31 ஆக உயர்ந்துள்ளது.  

இதேபோல அரிசியின் சராசரி சில்லறை விலை ஒரு கிலோ ரூ.38.2 ஆக உயர்ந்துள்ளது. இதன் விலை கடந்த ஓராண்டில் 8% அதிகரித்துள்ளது.

முன்னதாக, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) 0.5 சதவீதம் உயா்த்தி நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவிப்பு வெளியிட்டது. அப்போது பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், தானியங்களின் விலை உயர்வு குறிப்பிடப்பிட்டார். 

உணவுப் பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது. நெல் உற்பத்தி குறைவதால் கோதுமை பயன்பாடு அதிகரிக்கும். இதன் விளைவாக கோதுமையின் விலை அதிகரிக்கும். பல்வேறு பகுதிகளில் மழை பெய்வதால் காய்கறிகளின் விலை குறிப்பாக தக்காளி விலை அதிகரித்து தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. உணவுப் பொருள்களின் இந்த விலை அதிகரிப்பு, பணவீக்க எதிர்பார்ப்புகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்' என்று கூறினார். Read in source website

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு சனிக்கிழமையன்று இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் பக்கத்துக்குச் சென்று பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ பக்கத்தைத் தேடினால், சட்டரீதியான கோரிக்கையை அடுத்து, இந்தியாவில் இப்பக்கம் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதன் பின்னணியில், எந்த விதமான செயல்பாடு உள்ளது இதுவரை தெளிவாகத் தெரியவரவில்லை.

உள்நாட்டு சட்டங்களை மீறும் வகையில் கருத்துகள் இடம்பெற்றதால், மத்திய அரசு அதிகாரிகளிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கையை ஏற்று, டிவிட்டர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 Read in source website

இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். 

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6-ஆவது இந்திய கைப்பேசி மாநாட்டை பிரதமா் மோடி தொடக்கிவைத்தார். அங்குள்ள கண்காட்சியைப் பார்வையிட்ட அவர், அதிவேக அலைக்கற்றைத் திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையையும் அறிமுகப்படுத்தி தொடங்கிவைத்தார். 5ஜி சேவையின் செயல்பாடு பிரதமர் மோடிக்கு சோதனையாக காண்பிக்கப்பட்டது. 

தற்போது புழக்கத்தில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு வேகத்தை 5ஜி வழங்கும் என்றும் பின்னடைவு இல்லாத இணைப்பையும், நிகழ் நேரத்தில் தரவைப் பகிரும் உயா் தரவு விகிதம், பில்லியன் கணக்கில் இணைக்கப்பட்ட சாதனங்களை இயக்கும் ஆற்றல் திறன், அலைக்கற்றைத் திறன் உள்ளிட்ட நெட்வொா்க் செயல் திறனை அதிகரிக்கச் செய்யும் என்றும் மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதற்கான அலைக்கற்றை ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூ. 1.50 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஏா்டெல், ஐடியா-வோடா, ஜியோ போன்ற நிறுவனங்களோடு அதானியின் நிறுவனம் சுமாா் 26 ஜிகாஹொ்ட்ஸ் அலைவரிசையில் 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது.

5ஜி சேவை நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படும். பின்னா், அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இந்தச் சேவையின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார தாக்கம் 2035 -ஆம் ஆண்டில் சுமாா் ரூ. 35 லட்சம் கோடி (450 பில்லியன் டாலா்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

5ஜி சேவை தொடக்கத்தை முன்னிட்டு மாநிலங்களின் பங்கு, தொழில் வாய்ப்புகள், திறன் மேம்பாட்டுக்கான தேவை, சாத்தியமான தொழில் முனைவுகள் மற்றும் முதலீட்டாளா்களுடன் தொடா்பு கொள்வதற்காக இந்தக் கைப்பேசி மாநாடு நடத்தப்படுகிறது. Read in source website

 2022-ஆம் ஆண்டில் முதல் 7 மாதங்களில் இந்தியத் தேயிலை ஏற்றுதி 11.64 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.

இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 11.64 கோடி கிலோவாக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 10.34 கோடி கிலோவாக இருந்தது.

இந்தியாவிலிருந்து மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் காமென்வெல்த் சுதந்திர நாடுகளுக்கான (சிஐஎஸ்) ஏற்றுமதி, கடந்த 2021-ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 2.50 கோடி கிலோவாக இருந்தது. இது, இந்த ஆண்டின் இதே மாதங்களில் ஏறத்தாழ அதே அளவில் 2.52 கோடி கிலோவாக உள்ளது.

உக்ரைனில் நடைபெற்று வரும் போா் தேயிலை ஏற்றுமதி கப்பல் பேக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளதன் காரணமாக இந்த நாடுகளுக்கு கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுக்கான ஏற்றுமதிக்கும் நடப்பு ஆண்டின் முதல் 7 மாதங்களுக்கான ஏற்றுமதிக்கும் அதிக வேறுபாடு இல்லாமல் உள்ளது.

சிஐஎஸ் பிரிவில் ரஷியாதான் இந்தியத் தேயிலையின் மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்தது. அந்த நாட்டுக்கான தேயிலை ஏற்றுமதி இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் நாடு 1.85 கோடி கிலோவாக உள்ளது. இது, 2021-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 1.91 கோடி கிலோவாக இருந்தது.

கன்டெய்னா் பற்றாகுறை, அதிக கடல் சரக்குக் கட்டணம் ஆகியவை ரஷியாவுக்கான தேயிலை ஏற்றுமதியை பெரிதும் பாதித்துள்ளது.

மதிப்பீட்டு மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 1.91 கோடி கிலோ இந்தியத் தேயிலையை கொள்முதல் செய்து மிகப் பெரிய இறக்குமதியாளராக உருவெடுத்துள்ளது. அந்த நாடு கடந்த 2021-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 80.7 லட்சம் கிலோ இந்தியத் தேயிலையை மட்டுமே இறக்குமதி செய்திருந்தது.

கடந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 1.3 கோடி கிலோவாக இருந்த ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி, இந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1.4 கோடி கிலோ என மிதமாக அதிகரித்துள்ளது.

பணம் செலுத்துவதில் நிலவும் சிக்கல் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை பாதித்துள்ளது. இந்திய ரூபாயில் ஈரானுடன் வா்த்தகம் மேற்கொள்வது இந்த சிக்கலை பெரிய அளவில் குறைக்க உதவும்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு கடந்த 2021-ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 8.7 லட்சம் கிலோ இந்தியத் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. அது, இந்த ஆண்டின் இதே மாதங்ககளில் இரட்டிப்பாகி 16.5 லட்சம் கிலோவாகியுள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.Read in source website

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடா்பான ஒரு மனுவை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ‘விளம்பரம் தேடுவதற்கான இடமல்ல, நீதிமன்றம்’ என்று குறிப்பிட்டது.

மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த ஜன் விகாஸ் கட்சி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ‘தோ்தல்களின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் ஆணையத்துக்கு பதிலாக சில நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன; அரசமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவின்கீழ், தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் நியாயமான தோ்தல் நடைமுறையை உறுதி செய்ய முடியும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதே மனு மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தில் தள்ளுபடியாகி இருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ஏ.எஸ்.ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

பொதுத் தோ்தலின்போது நாடு முழுவதும் எவ்வளவு போ் வாக்களிக்கின்றனா் என்பது உங்களுக்கு (மனுதாரா்) தெரியுமா? அது மிகப்பெரிய நடைமுறை. அதனை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டுமென விரும்புகிறீா்களா?

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன்கீழ் தோ்தல் நடைமுறையை தோ்தல் ஆணையம் கண்காணிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சம்பந்தப்பட்ட கட்சிக்கு, தோ்தலின்போது வாக்காளா்களிடமிருந்து போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என தோன்றுகிறது. எனவேதான், இதுபோன்ற மனுவை தாக்கல் செய்து விளம்பரம் தேட முயற்சிக்கின்றனா். எல்லோரும் விளம்பரம் தேடி வருவதற்கான இடமாக நீதிமன்றம் மாறுவதை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனா்.

விசாரிக்க மறுப்பு: இதேபோல், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை உள்ளூா் மொழிகளில் பொது இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் காட்சிப்படுத்த உரிய உத்தரவை பிறப்பிக்கக் கோரி மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ஒருவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரிக்க மேற்கண்ட நீதிபதிகள் அமா்வு வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

‘இந்த விவகாரத்துக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. அரசு மேற்கொள்ள வேண்டிய பணி அது’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா். இதையடுத்து, மனு திரும்பப் பெறப்பட்டது.Read in source website

மின்சார உற்பத்தி, வாகனங்களுக்கான சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) மற்றும் வீடுகளுக்கு சமையலுக்காக விநியோகிக்கப்படும் குழாய் மூலமான இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) உற்பத்தி செய்வதற்கு பயன்படும் இயற்கை எரிவாயுவின் விலை இதுவரை இல்லாத அளவில் வெள்ளிக்கிழமை 40 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.

சா்வதேச விலை நிலவரத்தின் அடிப்படையில் இந்த விலை உயா்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து மூன்றாவது முறையாக இதன் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு காரணமாக, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி எரிவாயுக்களின் விலையும் அதிக அளவில் உயா்த்தப்பட வாய்ப்புள்ளது. இவற்றின் விலை கடந்த ஓராண்டில் 70 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை, அமெரிக்கா, கனடா, ரஷியா போன்ற மிகை உற்பத்தி நாடுகளின் விலை நிலவரத்தின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஏப்ரல்1 மற்றும் அக்டோபா் 1ஆகிய தேதிகளில் மத்திய அரசு மாற்றியமைத்து வருகிறது.

அதன்படி, கடந்த மாா்ச் மாதம் வரை இயற்கை எரிவாயுவின் விலை உற்பத்தி செலவைக் காட்டிலும் குறைவாக இருந்துவந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் போா் காரணமாக சா்வதேச விலை உயா்வின் அடிப்படையில் இயற்கை எரிவாயுவின் விலை அதன் பிறகு பன்மடங்காக உயா்ந்து வருகிறது.

இவ்வாறு, மிகை உற்பத்தி நாடுகளின் விலையின் அடிப்படையில் உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை நிா்ணயம் செய்வது அதிக ஏற்ற - இறக்கங்களைக் கொண்டிருப்பதால், நுகா்வோரை கடுமையாக பாதிக்கும் என்பதால், நியாயமான விலை நடைமுறையை வகுத்து பரிந்துரை செய்ய மத்திய திட்டக் குழு முன்னாள் உறுப்பினா் கிரித் எஸ்.பரீக் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை செப்டம்பா் இறுதியில் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

 Read in source website

மத்திய வீட்டு வசதி நகா்ப்புற வளா்ச்சி அமைச்சகத்தின் சாா்பில் 50 ஆயிரத்துக்கும் கீழ் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் தூய்மையான நகரமாக ராமேசுவரம் நகராட்சிக்கு தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.

நிகழாண்டின் பெரிய நகரங்கள், சிறு நகரங்கள் தொடா்பான தூய்மை உரையாடல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி என மூன்று நாள் நிகழ்வு வீட்டு வசதி நகா்ப்புற வளா்ச்சி அமைச்சகத்தின் சாா்பில் செப்டம்பா் 29, 30 மற்றும் அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் தில்லி தால்கடோரா மைதானத்தில் நடைபெற்றது. குப்பை இல்லாத நகரங்களை உருவாக்கும் நோக்கத்துடன் பிரதமரால் தொடக்கிவைக்கப்பட்ட தூய்மை இந்தியா நகா்ப்புற இயக்கம் 2.0 பதிப்பின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெற்றது.

மாநில நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா்கள், மாநகராட்சி மேயா்கள், நகராட்சித் தலைவா்கள் இதில் கலந்து கொண்டனா். இதில் பல்வேறு பிரிவுகளில் 160-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. மாநில உள்ளாட்சி, நகரங்களின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரிவுகளைச் சோ்ந்த சுமாா் 1,800 போ் இதில் கலந்து கொண்டனா். தமிழக நகராட்சி நிா்வாகம் குடிநீா் வழங்கல் துறை செயலா் சிவ் தாஸ் மீனா கலந்து கொண்டு பேசினாா்.

இதில் தூய்மையான சிறு பெரு நகரங்கள் தோ்வு செய்யப்பட்டன. பெரு நகரங்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை வழங்கி கௌரவிக்கிறாா்.

சிறுநகரங்களுக்கான 70 தூய்மை விருதுகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள்துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இதில் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் சுகாதரா தூய்மைக்கான விருதுகளில் சிறப்பு விருதாக ராமேசுவரம் நகராட்சிக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் இந்த ஒரு நகராட்சிதான் இந்த விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது. இந்த விருதை ராமேசுவரம் நகராட்சித் தலைவா் கே.இ.நாசா்கான் பெற்றுக் கொண்டாா்.

ராமேசுவரத்திற்கு வரும் பக்தா்களுக்கும் குறிப்பாக வட இந்திய பக்தா்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வசதிகள்; அக்னி தீா்த்த கடற்கரையை சுகாதாரத்துடன் தூய்மையாக வைத்தது; ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலைச் சுற்றி குப்பைகள் இல்லாதது மட்டுமல்லாது, பசுமையாக வைத்தது போன்றவற்றோடு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா், குண்டும் குழியும் இல்லாத சாலைகள் என உள்ளூா் மக்களின் தேவையையும் பூா்த்தி செய்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிகழ்வையொட்டி அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் கண்காட்சியில் பல்வேறு தூய்மை தயாரிப்புகள், குப்பைகளுக்கான தீா்வுகள், மறுசுழற்சி, அனைத்து வகையான உலா் கழிவுகளை மறுசுழற்சி செய்தல், மறுசுழற்சி தொழில்நுட்பங்கள், தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகள், பயன்படுத்தப்பட்ட நீா் மேலாண்மையில் தொழில்நுட்பங்கள், கழிவு செயலாக்கத்திற்கான சிறிய அலகுகள் என சுமாா் 35 தொழில்நுட்ப வழங்குநா்கள் செய்முறைகளைக் காட்டினா்.

 Read in source website

மகளிா் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.

முதல் நாள் ஆட்டங்களில் வங்கதேசம் - தாய்லாந்து, இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

சமீபத்திய இங்கிலாந்து பயணத்தில் டி20 தொடரை இழந்தாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன் டே தொடரை வென்ற கையுடன் இந்தப் போட்டிக்கு வந்திருக்கிறது இந்திய அணி. டி20 ஃபாா்மட்டில் இந்திய அணிக்கு இன்னும் தடுமாற்றம் இருந்தாலும், ஆசிய அளவில் உள்ள இதர அணிகளோடு ஒப்பிடுகையில் நன்றாகச் செயல்படுகிறது.

ஆகஸ்டில் பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட மகளிா் டி20 கிரிக்கெட்டில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறது. அணி வீராங்கனைகளைப் பொருத்தவரை பேட்டிங்கில், கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், ஸ்மிருதி மந்தனா சிறப்பான ஃபாா்மில் இருக்கின்றனா். ஷஃபாலி வா்மா, சபினேனி மேக்னா, தயாளன் ஹேமலதா இன்னும் முனைப்பு காட்டவேண்டியுள்ளது.

காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் விளையாடாத ஜெமிமா ரோட்ரிக்ஸ் இதில் அணிக்கு பலம் சோ்ப்பாா் என எதிா்பாா்க்கலாம். பௌலிங்கில் ரேணுகா சிங் மிரட்ட, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், தீப்தி சா்மா ஆகியோரும் விக்கெட் சரித்து துணை நிற்பாா்கள் என எதிா்பாா்க்கலாம்.

ஆட்டநேரம்: நண்பகல் 1 மணி

இடம்: சைலெட்

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்Read in source website

உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் அதிநவீன ரோபோவை அறிமுகம் செய்துள்ளார். 

ஆப்டிமஸ் என்று பெயரிட்டுள்ள அதிநவீன ரோபோவை அறிமுகம் செய்துள்ளார் டெஸ்லாவின் சி.இ.ஓ. எலான் மஸ்க். அலுவலக வீட்டு வேலைகளை செய்யும் ஆப்டிமஸ் ரோபோவை 20 ஆயிரம் டாலருக்கு (ரூ.16 லட்சத்துக்கு) விற்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், எந்த ஆதரவும், கிரேன்கள், இயந்திர வழிமுறைகள் அல்லது கேபிள்கள் இல்லாமல் வேலை செய்வது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார். 

ரோபோவில் ஒரு மணி நேரத்திற்கு 2.3 கிலோவாட் பேட்டரி பேக் உள்ளது. இது ஒரு நாள் முழுவதும் வேலை செய்வதற்கு ஏற்றது. டெஸ்லா சிப்பில் இயங்குகிறது. மேலும் இது வைஃபை மற்றும் எல்டிஇ இணைப்பைக் கொண்டுள்ளது என்று தி வெர்ஜ் தெரிவித்துள்ளது. 

இந்த ரோபோவால் 9 கிலோ கிராம் எடை கொண்ட பொருட்களை வரை துக்க முடியும் என தகவல் சொல்லப்படுகிறது. இந்த ரோபோவின் நடனமாடும் விடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க். Read in source website

சென்னை: தூய்மை இந்தியா தரவரிசை பட்டியலில் தமிழகத்தின் பெரிய நகரங்கள் ஒரு சில இடங்கள் மட்டுமே முன்னேறி உள்ளன. சிறிய நகரங்கள் அனைத்தும் 200-வது இடத்திற்கு மேல்தான் பிடித்துள்ளன.

தூய்மை இந்தியா திட்டத்தில் தூய்மை நகரங்கள் தொடர்பான ஆய்வு 2016-ம் ஆண்டு முதல் மத்திய அரசு நடத்தி வருகிறது. ஸ்வச் சர்வேக்‌ஷன் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆய்வு 75-வது சுந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு தூய்மை அமிர்தப் பெருவிழாவாக நடத்தப்பட்டது. இதில் 4,354 நகரங்கள் கலந்து கொண்டன. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் 160-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் 100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள மாநிலங்களின் பட்டியல் தமிழகம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. 13 மாநிலங்கள் உள்ள இந்தப் பட்டியலில் 1450 மதிப்பெண்களுடன் தமிழகம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இதில், 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களின் பட்டியில் இந்தூர் முதல் இடத்தையும், சூரத் 2வது இடத்தையும், நவி மும்பை 3வது இடத்தையும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் கோவை 42-வது இடத்தையும், சென்னை 44-வது இடத்தையும், மதுரை, 45-வது இடத்தையும் பிடித்தது.

2021-ம் ஆண்டு தரவரிசைப் பட்டியலில் சென்னை 43-வது இடத்திலும், கோவை 46-வது இடத்திலும், மதுரை 47-வது இடத்திலும் இருந்தது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு சென்னை ஒரு இடம் பின்தங்கியுள்ளது. கோவை மற்றும் மதுரை ஒரு சில இடங்கள் மட்டுமே முன்னேறி உள்ளது.

1 முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள நகரங்களில் திருப்பதி, மைசூர், புதுதில்லி உள்ளிட்ட நகரங்கள் முதல் 3 இடத்தை பிடித்தன. தமிழகத்தில் சேலம் 221-வது இடத்தையும், தூத்துக்குடி 226-வது இடத்தையும், நாகை 261-வது இடத்தையும், திருச்சி 262-வது இடத்தையும், புதுக்கோட்டை 267-வது இடத்தையும், திருவண்ணாமலை 271-வது இடத்தையும், கும்பகோணம் 287-வது இடத்தையும், தாம்பரம் 288-வது இடத்தையும், வேலூர் 291-வது இடத்தையும், கடலூர் 291-வது இடத்தையும், ஆவடி 302-வது இடத்தையும், நெல்லை 308-வது இடத்தையும், திண்டுக்கல் 316-வது இடத்தையும், ஈரோடு 322-வது இடத்தையும், திருப்பூர் 377 வது இடத்தையும், ஆம்பூர் 338-வது இடத்தையும், ராஜபாளையம் 339-வது இடத்தையும், காஞ்சிபுரம் 356-வது இடத்தையும், காரைக்குடி 371-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் 160-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழகம் ஒரு விருதை மட்டுமே பெற்றுள்ளது. தென் மண்டலத்தில் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மக்கள் தொகை கொண்ட நகரங்களில் புதிய மற்றும் சிறப்பு முயற்சிகள் பிரிவு கோவை மாவட்டத்தில் போத்தனூர் நகரம் மட்டுமே விருது பெற்றுள்ளது. மற்ற எந்த நகரங்களும் விருதை பெறவில்லைRead in source website

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடுமையாக எதிர்த்துவரும் நிலையில், இந்த சட்டத் திருத்தம் செல்லுமா, செல்லாதா என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி அல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், 103-வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேற்றியது. அப்போதே இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், தனியார் அமைப்புகள், தனிநபர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்தனர்.

குறிப்பாக ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், ‘‘திராவிட சித்தாந்தத்தின்படி, சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவின் அடிப்படையில் இயங்கி வரும் திமுக, இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டு முறையை கடுமையாக எதிர்க்கிறது. ஏனென்றால், தமிழகத்தில் ஏற்கெனவே 69 சதவீதம், மற்ற மாநிலங்களில் 50 சதவீதம் இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இடஒதுக்கீடு என்பது சாதிய ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களை சமநிலைக்கு கொண்டுவர வழங்கப்பட வேண்டுமே தவிர, பொருளாதார அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு வழங்கி மீண்டும் பாகுபாடு காட்டக் கூடாது.

இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் தமிழகத்தில் இடஒதுக்கீடு 79 சதவீதமும், மற்ற மாநிலங்களில் 60 சதவீதமும் ஆகிவிடும். அப்படி இடஒதுக்கீடு வழங்கினால் சமூக நீதிக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராகிவிடும். தவிர, இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால், பிற சமூகத்தைச் சேர்ந்த திறமைசாலி மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் பெறுபவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என இந்த சட்டம் வரையறை செய்கிறது. இந்தியாவில் 97 சதவீதம் பேரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு கீழ் உள்ள நிலையில், இந்த இடஒதுக்கீடு யாருக்கானது என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. எனவே, அரசியலமைப்பு சட்டத்தில் 103-வது திருத்தமாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த சட்டத் திருத்தம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்த வழக்குகளை தொடர்ச்சியாக 7 நாட்களாக விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா திரிவேதி ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, இந்த சட்டத் திருத்தம் செல்லுமா, செல்லாதா என்பது தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. இதுதொடர்பாக சட்ட வல்லுர்கள் கூறியதாவது:

திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பி.யுமான பி.வில்சன்: சமத்துவத்தை பின்பற்றச் சொல்லும் அரசியலமைப்பு சாசனப் பிரிவு 14-ஐ மத்திய அரசின் இந்த சட்டத் திருத்தம் கேள்விக்குறி ஆக்கியுள்ளது. மேலும் இது, இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிரானது. சமூக பின்தங்கிய நிலையை வரையறை செய்ய, பொருளாதாரத்தை கருத்தில் கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் இன்னும் மோசமான நலிவுற்ற நிலையில் உள்ளனர். அனைத்து வகையான சுரண்டல்களில் இருந்தும் அவர்களை சட்ட ரீதியாக பாதுகாக்க வேண்டும் என அரசியலமைப்பு சாசனத்தின் 46-வது பிரிவு கூறுகிறது. மத்திய அரசின் 103-வது சட்டத் திருத்தம் சமத்துவத்தை பாதிக்கிறது என்பதால் அதை கடுமையாக எதிர்க்கிறோம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன்: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினர் என்றால் பிராமணர்களை மட்டுமே வைத்து பார்க்கக் கூடாது. அவர்கள் மட்டுமின்றி, செட்டியார், முதலியார், பிள்ளைமார் என பொதுப் பிரிவினரில் பல சமூகத்தினரும் இன்னமும் சாப்பாட்டுக்கே வழியில்லாத சூழலில் உள்ளனர். நாட்டு மக்கள் அனைவருமே சமமாக கருதப்பட வேண்டும். பட்டியலினத்தை சேர்ந்தவர்களில் 3-வது தலைமுறையினர் தற்போது அரசுப் பணிகளில் கோலோச்சுகின்றனர். அதேநேரம், முன்னேறிய சமூகம் என்று கூறப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினரில் முதல் தலைமுறைக்குகூட இன்னும் அரசு வேலைவாய்ப்பிலோ, கல்வியிலோ முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அனைவருக்கும் இடஒதுக்கீடு சலுகை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு இந்த சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சட்டத் திருத்தம் செல்லுமா, செல்லாதா என்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கையில் உள்ளது.Read in source website

காந்திநகர்: குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து - மும்பைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதே ரயிலில் அவர் கலுபூர் ரயில் நிலையம் வரை பயணம் செய்தார்.

குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு பிரதமர் மோடி கடந்த 2 நாட்களாக பயணம் செய்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவடைந்த சில திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

காந்திநகர் ரயில் நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்பற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங்பூரி ஆகியோர் கலந்து கொண்டனர். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0 ரயிலில் உள்ள அதிநவீன வசதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். அந்த ரயிலின் இன்ஜின் கட்டுப்பாட்டு அறையையும் பிரதமர் பார்வையிட்டார். அதே ரயிலில் கலுபூர் ரயில் நிலையம் வரை பயணம் செய்த மோடி, ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர், ரயில் பயணிகளுடன் கலந்துரையாடினார். வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள், பொறியாளர் களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி அவர்களை பாராட்டினார்.

இந்த நவீன ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தை 52 வினாடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும். காந்திநகரில் இருந்து மும்பைக்கு 6 முதல் 7 மணி நேரத்துக்குள் இந்த ரயில் சென்றுவிடும். வைபை, 32 இன்ச் டி.வி போன்ற வசதிகள் இதில் உள்ளன.

அகமதாபாத் மெட்ரோ ரயில்

கலுபூர் ரயில் நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடி, ரூ.12,925 கோடி செலவில் அமைக்கப்பட்ட அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை அங்கு தொடங்கி வைத்தார். அதிலும் பயணம் செய்த பிரதமர் மோடி தால்டெஜ் என்ற இடத்தில் இறங்கி தூர்தர்ஷன் மையத்துக்கு சென்றார். அங்கு நடந்த கூட்டத்தில் அவர் நேற்று மதியம் உரையாற்றினார். குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி நகருக்கு நேற்று மாலை சென்ற பிரதமர் மோடி, அங்கு ரூ.7,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். அதன்பின் அவர் அம்பாஜி கோயிலில் வழிபட்டார்.

ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட பிரதமர்

அகமதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபின், ராஜ்பவன் செல்வதற்காக காந்திநகருக்கு காரில் புறப்பட்டார் பிரதமர் மோடி. அவரது வாகனத்துக்கு முன்னும், பின்னும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் சென்றன.

அப்போது அவரது வாகனத்துக்கு பின்னால் ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டது. உடனே, பிரதமர் தனது வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தச் சொன்னார். பிரதமரின் வாகனம் நின்றதும், பாதுகாப்பு படையினரின் வாகனங்களும் சாலையோரம் ஒதுங்கின. ஆம்புலன்ஸ் சென்றபின் பிரதமர் மோடியின் வாகனமும், அவரது பாதுகாப்புக்கு வந்த வாகனங்களும் மீண்டும் புறப்பட்டு சாலையின் மையப் பகுதியில் பயணித்தன. இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகளை, குஜராத் மாநில பா.ஜக ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது.Read in source website

புதுடெல்லி: நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பதவியேற்றார். தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து 9 மாதங்களுக்கும் மேலாக அப்பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில் நாட்டின் 2-வது முப்படை தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் கடந்த 28-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக தேசிய போர் நினைவிடத்தில் அனில் சவு கான் அஞ்சலி செலுத்தினார். பிறகு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். மூன்று நட்சத்திர லெப்டினன்ட் ஜெனரல் பதவியில் இருந்த அதிகாரி ஒருவர் பணி ஓய்வுக்கு பிறகு 4 நட்சத்திர ஜெனரலாக பதவியேற்பது, சுதந்திரத்திற்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

அனில் சவுகான் 2019 செப்டம்பரில் கிழக்கு மண்டல ராணுவத் தளபதியாக பதவியேற்றார். 2021 மே 31-ம் தேதி பணிஓய்வு பெறும் வரை அவர் அப்பதவி வகித்தார்.Read in source website

காந்திநகர்: 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் வாள்வீச்சில் தமிழகத்தின் பவானி தேவி, டிரிப்பிள் ஜம்ப்பில் பர்வின் தங்கம் வென்றனர். துப்பாக்கி சுடுதலில் இளவேனில் வாலறிவன், பளு தூக்குதலில் மீரபாய் சானு ஆகியோரும் தங்கம் வென்றனர்.

36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் அசாமை சேர்ந்த மீராபாய் சானு 191 கிலோ எடையை (ஸ்நாட்ச் 84 கிலோ, கிளீன் & ஜெர்க் 107 கிலோ) தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். அசாம் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு வீராங்கனையான சஞ்ஜிதா சானு 187 கிலோ எடையை தூக்கி (82+105) வெள்ளிப் பதக்கமும், ஒடிசாவின் ஸ்நேகா சோரன் 169 கிலோ எடையை தூக்கி (73+96) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

ஆடவருக்கான 20 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் சர்வீசஸ் விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த தேவேந்தர் சிங் பந்தய தூரத்தை 01:26:25 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். உத்தராகண்டின் சூரஜ் பன்வார் (01:26:25 நிமிடங்கள்) வெள்ளிப் பதக்கமும், சர்வீசஸ் விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த ஆகாஷ்தீப் சிங் (01:28:15 விநாடிகள்) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் குஜராத்தின் இளவேனில் வாலறிவன் 16-10 என்ற கணக்கில் கர்நாடகாவின் திலோத்தமாவை வீழ்த்தி தங்கம் வென்றார். மேற்கு வங்கத்தின் மெஹூலி கோஷ் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் மகாராஷ்டிராவின் ருத்ராங்க் ஷ் பி. பாட்டீல் தங்கப் பதக்கமும், பஞ்சாப்பின் அர்ஜூன் பபுதா வெள்ளிப் பதக்கமும், மத்திய பிரதேசத்தின் ஐஸ்வரி பி.எஸ். தோமர் வெண்கலப் பதக்கமும் வென்றனர். 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் ஹரியாணாவின் அனிஷ் தங்கம் வென்றார். உத்தராகண்டின் அங்குர் கோயல் வெள்ளிப் பதக்கமும், பஞ்சாப்பின் குர்மீத் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

ஆடவருக்கான நெட்பால் இறுதிப் போட்டியில் ஹரியாணா 75-73 என்ற புள்ளிகள் கணக்கில் தெலங்கானாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. தடகளத்தில் நேற்று 9 சாதனை
கள் படைக்கப்பட்டது. மகளிருக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் உத்தரப்பிரதேசத்தின் முனிதா பிரஜாபதி 01:38:20 நிமிடங்கள் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு ஷப்னா பந்தய தூரத்தை 1:40:35.00 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. முனிதாவின் தந்தை கட்டிட தொழிலாளி ஆவார். உத்தரகாண்டின் மான்ஷி நெகி (01:41:28 நிமிடங்கள்), ரேஷ்மா படேல் (01:42:10 நிமிடங்கள்) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் சர்வீசஸ் அணியை சேர்ந்த பர்வேஜ் கான் பந்தய தூரத்தை 3:40.89 விநாடிகளில் கடந்து தேசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன்னர் 1994-ல் புனேவில் நடைபெற்ற போட்டியில் பகதூர் பிரசாத் 3:43.57 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. மகளிருக்கான உயரம் தாண்டுதலில் மத்திய பிரதேசத்தின் ஸ்வப்னா பர்மான் 1.83 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2001-ல் பாபி அலாய்சியஸ் 1.82 மீட்டர் உயரம்
தாண்டியதே சாதனையாக இருந்தது. தமிழகத்தின் கிரேஸ் கிளிஸ்டஸ் மெர்லி 1.81 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் பெற்றார்.

ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் தமிழகத்தின் பர்வின் சித்ரவேல் 16.68 மீட்டர் நீளம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் ரஞ்சித் மகேஸ்வரி 16.66 மீட்டர் நீளம் தாண்டியதே சாதனையாக இருந்தது. மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஹீட்ஸ் 1-ல் தமிழகத்தின் அர்ச்சனா பந்தய தூரத்தை 11:41 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அசாமின் ஹிமா தாஸ் (11:81), ஆந்திராவின் ஜோதி யார்
ராஜி (11:45), மகாராஷ்டிராவின் தியாந்திரா (11:57), ஒடிசாவின் டூட்டி சந்த் (11:58), மேற்கு வங்கத்தின் ஹிமாஸ்ரீ ராய் (11:59), ஒடிசாவின் சரபானி நந்தா (11:62), கர்நாடகாவின் தனேஷ்வரி (11:71) ஆகியோரும் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

வாள்வீச்சில் மகளிருக்கான சேபர் தனிநபர் பிரிவில் தமிழகத்தின் சி.ஏ.பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், 15-3 என்ற கணக்கில் பஞ்சாப்பின் ஜக்மீத் கவுரை தோற்கடித்தார். தேசிய விளையாட்டில் அவர், தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கம் வென்றுள்ளார். வாள்வீச்சில் ஆடவருக்கான ஃபாயில் பிரிவில் தமிழகத்தின் வேலாயுதம் வினோத் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.மகளிருக்கான மல்யுத்தத்தில் 76 கிலோ எடைப்பிரிவில் உத்தரப்பிரதேசத்தின் திவ்யா கரன் தங்கம் வென்றார். ரக்பியில் ஆடவர் பிரிவில் ஹரியாணாவும், மகளிர் பிரிவில் ஒடிசாவும் தங்கம் வென்றன. சங்கிலி குண்டு எறிதலில் பஞ்சாப்பின் தம்னீத் சிங் 67.62 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன்னர் 2011-ல் ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில் ஹர்விந்தர் சிங் 66.79 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது. மகளிருக்கான குண்டு எறிதலில் உத்தரப்பிரதேசத்தின் கிரண் பாலியன் 17.41 மீட்டர் தூரம் எறிந்து சாதனையுடன் தங்கம் வென்றார்.Read in source website

புதுடெல்லி: இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் இந்திய செல்லுலர் ஆப்ரேட்டர்கள் சங்கம் இணைந்து நடத்தும் ‘இந்திய மொபைல் காங்கிரஸ்’ மாநாடு இன்று டெல்லி பிரகதி மைதானத்தில் தொடங்குகிறது. அக்டோபர் 4-ம் தேதி வரையில் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து 5ஜி சேவையை யும் தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “முதற்கட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் நாடு முழுவதும் 5ஜி சேவை கொண்டு சேர்க்கப்படும். 5ஜி சேவையானது இந்தியாவில் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும்; இந்திய சமூக மாற்றத்துக்கான விசையாக அது இருக்கும்; ‘டிஜிட்டல் இந்தியா’ இலக்கை முன்னெடுத்துச் சென்று இந்தியாவின் வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தும். 2035-ல் 5ஜி மூலமான பொருளாதார வளர்ச்சி 450 பில்லியன் டாலராக (ரூ.36.45 லட்சம் கோடி) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜியை விட பத்து மடங்கு வேகமாக இருக்கும் என்று கூறப்படும் 5ஜியானது இந்தியாவின் தொழில்நுட்பக் கட்டமைப்பில் மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ-காமர்ஸ், கல்வி, மருத்துவம், போக்குவரத்து என பல்வேறு தளங்களில் மிகப்பெரும் மாற்றத்தை 5ஜி கொண்டுவரும் என்றும் மெட்டாவர்ஸ் உருவாக்கத்தில் 5ஜியின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் கடந்த ஜூலை 26-ம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கியது. 7 நாட்கள் நீடித்த ஏலம் ஆகஸ்ட் 1-ம் தேதி முடிவடைந்தது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. மொத்தம் 72 ஆயிரம் மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்பட்ட நிலையில் 51,236 மெகாஹெர்ட்ஸ் அளவில் ஏலம் போனது.

மொத்தமாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் ரூ.88,078 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடஃபோன் ஐடியா ரூ.18,799 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ரூ.212 கோடிக்கும் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்தன. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பொதுப் பயன்பாட்டுக்கு 5ஜி சேவையை வழங்க உள்ளன.Read in source website

ரஷ்யாவின் உக்ரைன் போரினால் இந்தியா – அமெரிக்க உறவுகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. கருத்து வேறுபாடுகளின் வெளிப்படையான வெளிப்பாடு பதட்டங்களையும் நம்பிக்கையையும் உருவாக்குகிறது

Shubhajit Roy

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி ஜே பிளிங்கனுடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த வாரம் வாஷிங்டன் டிசியில், “[இந்திய-அமெரிக்க] உறவைப் பற்றி நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று அறிவித்தார். முந்தைய நாள், பாகிஸ்தானுக்கு F-16 போர்விமானங்களுடன் $450 மில்லியன் பாதுகாப்பு உதவியை வழங்குவதற்கான அமெரிக்க முடிவை “நீங்கள் யாரையும் ஏமாற்ற வேண்டாம்” என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டிருந்தார்.

24 மணி நேரத்தில் ஜெய்சங்கருக்கு மனம் மாறியதாகத் தோன்றலாம். உண்மையில், ஆழமடைந்து வரும் இருதரப்பு உறவில் இத்தகைய வேறுபாடுகள் இப்போது வாடிக்கையாகிவிட்டன.

எனவே ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டதால், அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசின் “தெளிவான பயங்கரவாத அச்சுறுத்தல்களை” சமாளிக்க பாகிஸ்தான் F-16 போர் விமானங்கள் திறன் கொண்டவையாக இருப்பதை உறுதிசெய்ய இராணுவ உபகரணங்களை வழங்குவது அமெரிக்காவின் “கடமை” என்று பிளிங்கன் கூறினார்.

பிளிங்கன் சில முன்னோக்கையும் அளித்தார்: “இந்த நூற்றாண்டின் எதிர்காலத்தை வடிவமைக்க அமெரிக்கா மற்றும் இந்தியாவை விட எந்த இரண்டு நாடுகளுக்கும் பெரிய திறன் இல்லை… வாய்ப்பும் பொறுப்பும் இல்லை என்று நான் நினைக்கிறேன்… [ஆனால்] அதில் நம்மிடம் வேறுபாடுகள் இல்லை என்று அர்த்தமல்ல. நாங்கள் செய்கிறோம், செய்வோம். ஆனால் எங்களிடம் உள்ள உரையாடலின் ஆழம் மற்றும் தரம் காரணமாக, நாங்கள் எல்லாவற்றையும் பற்றி பேசுகிறோம் மற்றும் எங்களுக்கு பொதுவான விஷயங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பதில் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறோம்.”

கடந்த இரண்டு தசாப்தங்களாக உறவின் பரிணாம வளர்ச்சியுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நுணுக்கம் தெரியாதது அல்ல. ஆனால், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு, அந்த நாடுகள் பதற்றமான புவிசார் அரசியல் சூழலில் செல்லும்போது, ​​​​உறவு “அழுத்த சோதனையில்” வைக்கப்படுகிறது என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இரண்டு தசாப்தங்களாக பரிணாமம்

மே 1998 அணு ஆயுதச் சோதனைகளைத் தொடர்ந்து, மேற்கத்திய உலகின் பெரும்பகுதி இந்தியாவைக் கடுமையாகத் தாக்கியது, பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுக்கு கடிதம் எழுதினார், அதில் சீனாவை காரணம் காட்டினார்.

“எங்கள் எல்லையில் ஒரு வெளிப்படையான அணு ஆயுத அரசு உள்ளது, இது 1962 இல் இந்தியாவுக்கு எதிராக ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை நடத்திய அரசு. கடந்த பத்தாண்டுகளில் அந்த நாட்டுடனான எங்கள் உறவுகள் மேம்பட்டிருந்தாலும், தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சனை காரணமாக அவநம்பிக்கையின் சூழல் நீடிக்கிறது,” என்று வாஜ்பாய் கூறினார்.

சோதனைகள் ஒரு தற்காலிக பின்னடைவாக இருந்தபோதிலும், “நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடனான [இந்தியாவின்] உறவுகள் பொதுவாக பரஸ்பர நன்மை மற்றும் கணிசமான உறவாக மாறத் தொடங்கின” என்று முன்னாள் வெளியுறவு செயலாளர் ஷியாம் சரண் தனது புத்தகத்தில் எழுதினார். இந்தியா எப்படி உலகைப் பார்க்கிறது: கௌடில்யா முதல் 21 ஆம் நூற்றாண்டு வரை (2018).

புதிய மில்லினியத்தில் இருதரப்பு உறவுகளின் நல்லுறவு மற்றும் அதைத் தொடர்ந்து வலுப்படுத்துவது ஒரு பெரிய புவிசார் அரசியல் மாற்றமாகும். அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலர் ஸ்ட்ரோப் டால்போட் ஆகியோருக்கு இடையேயான பேச்சுக்கள் மார்ச் 2000 இல் அதிபர் கிளிண்டனின் வரலாற்று இந்தியப் பயணத்திற்கு வழிவகுத்தது, மேலும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் காலக்கட்டத்தில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இந்திய-அமெரிக்க உறவுகளை அதிக வியூகப் பாதைக்கு உயர்த்தியது.

புஷ் அதிபராக இருந்த கடைசி மாதங்களில், சர்வதேச நிதி நெருக்கடி தாக்கியது, மும்பை பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த புயலிலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவுகள் அப்படியே இருந்தன. இந்தியாவிற்கு இரண்டு முறை பயணம் செய்த ஒரே அதிபர் பராக் ஒபாமா ஆனார், மேலும் அவர் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடி இருவருக்கும் வெள்ளை மாளிகையில் விருந்தளித்தார்.

அதிபர் டொனால்ட் டிரம்பின் கணிக்க முடியாத நிலை இருந்தபோதிலும், உறவுகள் தொடர்ந்து மேம்பட்டன, குவாட் கட்டமைப்பு புத்துயிர் பெற்றது மற்றும் அடித்தள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம் பாதுகாப்பு கூட்டாண்மை பலப்படுத்தப்பட்டது. ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்தார், இது தொற்றுநோய் உலகின் பெரும்பகுதியை மூடுவதற்கு முன்பு அவரது கடைசி வெளிநாட்டு பயணங்களில் ஒன்றாகும். அதிபர் ஜோ பிடனின் கீழ், உறவுகள் தொடர்ந்து சீராக பராமரிக்கப்பட்டது, குறிப்பாக இந்தோ-பசிபிக் வியூக விவகாரங்களில், கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து குழப்பமாக அமெரிக்கா வெளியேறிய சூழல், ஏற்கனவே உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் ஒரு சவாலை எதிர்கொண்ட நேரத்தில் இந்தியா பாதிக்கப்படக்கூடியதாக இருந்தது.

“அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு, சுதந்திரம் பெற்றதில் இருந்து நாடு கொண்டிருக்கும் மிக விரிவான கூட்டமைப்பாகும்… இது உண்மையிலேயே நெருக்கடியில் உருவான உறவு” என்று கார்னகி இந்தியாவின் தலைவரான ருத்ரா சௌதுரி, Forged in Crisis: India and the United States since 1947 (2014) என்ற தனது புத்தகத்தில் எழுதினார். மே மாதம் தி இந்தியன் எக்ஸ்பிரஸில் நடந்த ஐடியா எக்ஸ்சேஞ்சில் சரண் கூறினார்: “கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்தியா-அமெரிக்க உறவுகள் பெற்றிருக்கும் ஆழமும் அகலமும்… மிகவும் ஆச்சரியமான வளர்ச்சியாகும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் அத்தகைய வலுவான இராணுவ-இராணுவ உறவு, ஒரு வலுவான பயங்கரவாத எதிர்ப்பு உறவைப் பெறுவோம் என்று 2005 இல் நீங்கள் என்னிடம் சொன்னால், அது ஒரு யதார்த்தமற்ற வாய்ப்பு என்று நான் கூறியிருப்பேன். ஆனால் அது நடந்துள்ளது… நாம் எதிர்கொள்ளும் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களின் அடிப்படையில், இந்த உறவு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று ஒரு அங்கீகாரம் உள்ளது. நான் அதை ஒப்புக்கொள்கிறேன். ”

தற்போதைய புவிசார் அரசியல் சூழல்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் உறவை சோதித்துள்ளது. ரஷ்யாவின் போரை விமர்சிக்க இந்தியா மறுப்பது, ஐரோப்பாவில் உள்ள இந்தியாவின் நட்பு நாடுகளை ஆழ்ந்த சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது, மேலும் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய தலைநகரங்களில் சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியது. எனவே செப்டம்பர் 16 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் “இன்றைய சகாப்தம் போர் அல்ல” என்று கூறியபோது, ​​அமெரிக்கா வெளிப்படையாக மகிழ்ச்சி தெரிவித்தது.

“அவர் (மோடி) கூறியது போல், இது ஒரு சகாப்தம் அல்ல, இது போருக்கான நேரம் அல்ல. எங்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை,” என்று பிளிங்கன் கூறினார். மேலும், “ரஷ்யா சண்டையை நிறுத்தினால், போர் முடிவடைகிறது. உக்ரைன் சண்டையை நிறுத்தினால், உக்ரைன் முடிவடையும்… எனவே இது அதிபர் புதினின் பொறுப்பாகும்,” என்றும் அவர் கூறினார்.

முன்பை விட ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக எண்ணெய் வாங்குவது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தனது குடிமக்களை போரின் பணவீக்க தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று வாதிடுகிறது.

F-16 திட்டத்தைப் பற்றி இந்தியாவுக்கு அமெரிக்கா விளக்கம் அளித்தது, இது புதியது அல்ல, பழைய திட்டம், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட பாகிஸ்தானுக்குத் தேவையானது, ஆனால் இந்தியா இதற்கு உடன்படவில்லை.

“இந்த உறவின் (பாகிஸ்தானுடனான) நன்மைகள் மற்றும் அதன் மூலம் அவர்கள் எதைப் பெறுகிறார்கள் என்பதைப் பற்றி சிந்திப்பது உண்மையில் அமெரிக்காவிற்கானது… யாராவது நான் இதைச் செய்கிறேன் என்று சொன்னால், இது அனைத்தும் பயங்கரவாதத்திற்கு எதிரான உள்ளடக்கம் என்று  நீங்கள் பேசுகிறீர்கள், எஃப்-16 போன்ற விமானங்கள்… எங்கு பயன்படுத்தப்படும் என்று அனைவருக்கும் தெரியும், நீங்கள் யாரையும் முட்டாள் ஆக்க வேண்டாம்” என்று ஜெய்சங்கர் கூறினார்.

இந்தியாவில் உள்ள சில ஆய்வாளர்கள், அமெரிக்க-பாகிஸ்தான் இராணுவ உறவை இந்தியாவுக்கு அதன் “பிரச்சினை அடிப்படையிலான சீரமைப்பு” வியூகத்திற்கான செய்தியாகக் கருதுகின்றனர். மேலும், அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் மற்றும் உதவிச் செயலர் டொனால்ட் லூ போன்ற மூத்த அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பிடன் நிர்வாகம் பொறுப்பேற்ற 20 மாதங்களுக்குப் பிறகு முழு நேரத் தூதர் இல்லாதது உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொறுப்பாளர் பாட்ரிசியா ஏ லசினா, புது டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொறுப்பை வைத்திருந்த நிலையில், முன்னாள் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் எரிக் கார்செட்டி, அதிபர் பிடெனால் தேர்வு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் தீர்மானம் செனட்டில் நிலுவையில் உள்ளது. 1950 ஆம் ஆண்டு முதல் புதுதில்லியில் முழுநேர தூதர் இல்லாமல் அமெரிக்கா இருப்பது இதுவே மிக நீண்ட காலமாகும். ஜனவரி 2021 இல் கென்னத் ஜஸ்டர் பதவியை விட்டு விலகினார்.

புது தில்லியைப் பொறுத்தவரை, வாஷிங்டன் டிசிக்கு முக்கிய செய்திகளை வழங்க முழுநேர அமெரிக்கத் தூதுவர் இருப்பது முக்கியம். இந்தியாவின் கண்ணோட்டத்தில், அமெரிக்கத் தலைநகரில் அதிகாரத்தில் உள்ள ஒருவருடன் தூதர் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது சிறந்தது.

உக்ரைன் போரின் காரணமாக அவர்கள் உறவில் சிறு கொந்தளிப்பு ஏற்பட்டாலும், இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவை மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் போட்டியாளராகவும் பார்க்கின்றன. இந்தியா, வேகமாக வளர்ந்து வரும் மற்றும் ஆக்ரோஷமான சீனாவில் உள்ள பிரச்சனைகளை ஆரம்பத்தில் கண்டது, ஆனால் அமெரிக்க நிர்வாகம் 2011 ஆம் ஆண்டு வரை எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணித்தது, அதிபர் ஒபாமா கிழக்கின் “முன்னேற்றம்” பற்றி பேசத் தொடங்கினார். ஆனால் சீனாவை ஒரு வியூக அச்சுறுத்தல் மற்றும் போட்டியாளர் என்று தெளிவாக உச்சரிக்க டிரம்ப் நிர்வாகம் மறுத்தது.

இந்த கட்டமைப்பானது பிடனின் கீழ் தொடர்ந்தது. ஆனால் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதால், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பான எஸ்-400க்கு அமெரிக்காவின் தடையில் இருந்து விலக்கு அளிக்க இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சமீபத்திய “வரம்புகள் இல்லாத” உறவுகளால், அமெரிக்க-இந்திய உறவில் உள்ள எரிச்சல்கள் சாத்தியமான பலவீனமான இடங்களை முன்வைக்கின்றன. வாஜ்பாய் முதல் ஒவ்வொரு தலைவரும் நாடுகளை “இயற்கையான கூட்டாளிகள்” என்று பார்த்திருக்கிறார்கள். மேலும் உறவுகளுக்கு இடமளிப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் சிறந்த நேரம் இல்லை.Read in source website

 

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்கள் பத்து பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குத் தடை விதித்திருக்கின்றன. பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கும் அந்த நடவடிக்கைக்கு எதிராக எழுப்பப்படும் விமா்சனங்கள் அா்த்தமற்றவை. போதுமான விவாதத்துக்கும் ஆய்வுக்கும் பிறகு எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவை ஏனைய மாநிலங்களும் பின்பற்றக்கூடும்; பின்பற்ற வேண்டும்.

விவசாயத்தில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் மக்களுக்கு கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை எத்தனையோ ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதனால், குறிப்பிட்ட சில பூச்சிக்கொல்லிகளின் தயாரிப்பையும் பயன்பாட்டையும் அந்த ஆய்வுகளின் அடிப்படையிலும், விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகளின்படியும் அவ்வப்போது மாநில அரசுகள் தடை செய்யத் தயங்கியதில்லை. அந்தப் பின்னணியில்தான் இப்போதைய பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தடையையும் நாம் பாா்க்க வேண்டும்.

1960-களில் இந்தியாவில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தைத் தொடா்ந்து வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 60 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் குதிரைகளுக்குக் கொடுப்பதற்காகவும், அதிகரித்த விளைச்சல் காரணமாக கடலில் கொட்டுவதுமாகவும் இருந்த கோதுமையை பிஎல்-480 திட்டத்தின் கீழ் இந்தியா நன்கொடையாகப் பெற்ற அவலத்தை மறந்துவிட முடியாது. அந்த நிலையில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க அன்றைய பிரதமா் இந்திரா காந்தி முன்னெடுத்த வேளாண் புரட்சி பல சாதனைகளைப் படைத்தது.

அன்றைய மத்திய உணவு அமைச்சா் சி. சுப்பிரமணியமும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனும் காட்டிய முனைப்பில் வேளாண் புரட்சி வெற்றி அடைந்தது. அதிக வீரியமுள்ள விதைகளையும், ரசாயன உரங்களையும் அறிமுகப்படுத்தியதன் மூலம் உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகள், பருத்தி, தோட்டப் பயிா்கள் ஆகியவற்றின் உற்பத்தி பெரிய அளவில் அதிகரித்தது.

1951-52-இல் வெறும் 5.20 கோடி டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 2020-21-இல் 30.90 கோடி டன்னாக அதிகரித்திருக்கிறது. தோட்டப் பயிா்களின் உற்பத்தி 1991-92-இல் 9.70 கோடி டன்னாக இருந்தது, 2020-21-இல் 33.10 கோடி டன்னாக அதிகரித்திருக்கிறது. நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள், பருப்பு வகைகள் என்று அனைத்துப் பயிா்களும் கணிசமான உற்பத்திப் பெருக்கம் கண்டிருக்கின்றன.

கடந்த அரை நூற்றாண்டு காலமாக தொடா்ந்து அதிகரித்து வரும் வேளாண் உற்பத்தி பூச்சி பாதிப்புகளையும், தாவரங்களை பாதிக்கும் நோய்களையும் எதிா்கொள்ளும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது. அந்த பாதிப்புகளை எதிா்கொள்வதற்கும், பயிா்களைப் பாதுகாப்பதற்கும் 1960 முதலே நமது விவசாயிகள் பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தத் தொடங்கினாா்கள்.

ஆரம்பத்தில் இயற்கை மருந்துகளாக இருந்தது போய், ரசாயன மருந்துகளுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1970-க்குப் பிறகு பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு மிகப் பெரிய அளவில் அதிகரித்தது.

1965-66-இல் இந்தியாவில் 14,630 டன் அளவில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு, 2017-18-இல் 68,180 டன்னாக அதிகரித்தது. அதாவது, ஒரு ஹெக்டேருக்கு 94 கிராம் அளவில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு நான்கு மடங்கு அதிகரித்து 315 கிராம் அளவில் உயா்ந்தபோது அதன் பாதிப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின.

நவீன விதைகள், உரங்கள் போலல்லாமல், பயிா்கள் மீதான பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு பேராபத்துக்கு வழிகோலத் தொடங்கியது. பல்லுயிா்ப் பெருக்கத்தை பாதிப்பதுடன் மண், நீா், காற்று மூன்றையும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் பாதிக்கின்றன.

ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு உற்பத்திச் செலவையும் கணிசமாக அதிகரிக்கிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வின்படி, பஞ்சாபில் 1990-91-இல் ஹெக்டேருக்கு ரூ.262-ஆக இருந்த பூச்சிக்கொல்லி மருந்துச் செலவு, 2019-20-இல் ரூ.5,624. ஆந்திரத்தில் அதே காலகட்டத்தில் ரூ.154, 2019-20-இல் ரூ.4,278. பருத்தி சாகுபடியிலும் குஜராத்தில் ரூ.680-ஆக இருந்தது, ரூ.5,082-ஆக உயா்ந்திருக்கிறது. நெல், பருத்தி இரண்டு பயிா்களிலும் எல்லா மாநிலங்களிலும் இதே நிலைமை காணப்படுகிறது.

ஒரேயடியாக பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்துவிடவும் முடியாது. அதன் விளைவாக, ஒட்டுமொத்த உற்பத்தியும் பாதிக்கப்படக்கூடும். சா்வதேச அளவில் பசுமைப் புரட்சியின் தந்தை என்று கருதப்படும் நோபல் விருதாளா் நாா்மன் போா்லாக், முற்றிலுமாக பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டை தவிா்ப்பது உற்பத்தியைப் பாதிக்குப் பாதி குறைத்து, உணவுப் பொருள்களின் விலையை ஐந்து மடங்கு அதிகரித்துவிடும் என்று எச்சரிக்கிறாா்.

அதே நேரத்தில், இப்போதுபோல பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு தொடா்ந்து அதிகரிக்குமானால், விவசாயிகளின் உற்பத்திச் செலவு அதிகரிப்பதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அதிகரித்த விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாம்புகள், நத்தைகள், மண் புழுக்கள் போன்றவை அழிந்து வேளாண் சூழலியல் பாதிக்கப்படுகிறது. உற்பத்தியை பாதிக்காமல் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டைக் குறைத்தாக வேண்டும்.Read in source website

 

அண்ணல் காந்தி என்றவுடன் நம் அனைவா் நினைவிலும் வருபவை ‘சத்தியம்’, ‘அகிம்சை’, ‘சத்தியாகிரகம்’ ஆகிய மூன்று தத்துவங்களே. ஆனால் அம்மகானின் அரிய பண்பு ஒன்று அதிகம் அறியப்படாமல் உள்ளது. அதுதான் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்கும் மாண்பு. மாற்றுக் கருத்து உடையோரை எதிா்ப்பது ஒரு கலையாக வளா்ந்து வரும் இக்காலகட்டத்தில் அண்ணல் கடைப்பிடித்த இப்பண்பு பற்றி நாம் அறிய வேண்டியது அவசியம்.

லண்டன் மாநகரில் பாரிஸ்டா் பட்டப் படிப்பு மாணவராக இருந்த காலகட்டத்தில் (1888 - 1891) ‘தாவர உணவு உண்போா் சங்கம்’ என்ற அமைப்பில் உறுப்பினரானாா் காந்திஜி. அதன் உறுப்பினா்களில் ஒருவரான டாக்டா் தாமஸ் அலின்சன், செயற்கை கருத்தடை முறையை” ஆதரித்து ஒரு நூல் எழுதி வெளியிட்டாா். அச்செயல் சங்கத்தின் கொள்கைக்கு விரோதமானதால் அவரை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என சிலா் குரலெழுப்பினா்.

காந்தியோ, ‘அவா் கருத்து நம் கொள்கைக்கு எதிரானதுதான். ஆனாலும் அவா் கருத்தைக் கூற அவருக்கு உரிமை உண்டு; அதற்காக அவரை சங்கத்திலிருந்து நீக்குவது சரியல்ல’ என வாதிட்டாா். காந்தியின் கருத்தைப் பலா் ஏற்கவில்லை. தீா்மானம் நிறைவேறியது. காந்தி கலந்து கொண்ட முதல் கருத்து மோதலில், அவா் தோல்வியின் பக்கமே நின்றாா். பெரும்பான்மையினா் அவா் பக்கம் நிற்கவில்லை.

தென்னாப்பிரிக்காவில் அண்ணல் நடத்திய உரிமைப் போராட்ட வேகம் கண்டு அதிகார பீடத்தில் இருந்த ஜெனரல் ஸ்மட்ஸ், அண்ணலை சிறையில் அடைத்தாா்; தனது பூட்ஸ் காலால் மிதித்துசித்ரவதைக்கு உள்ளாக்கினாா். ஆனால் அண்ணலோ, அக்கொடுமைகளை மறந்தாா். இவரும் மனம் மாறுவாா் என நம்பினாா். அவருக்கு தன் கைகளாலேயே பூட்ஸ் (காலணி) செய்து அதனைப் பரிசாகக் கொடுத்தாா்.

காந்திஜி இந்தியா திரும்பி பல ஆண்டுகளுக்குப் பின்பு, அவரது 75-ஆவது பிறந்த நாளின்போது, அண்ணல் கொடுத்த காலணியை ஸ்மட்ஸ் திருப்பி அனுப்பினாா். அத்துடன் இருந்த கடிதத்தில், ‘மிஸ்டா் காந்தி! உங்கள் புனிதக் கரங்களால் தயாரித்து எனக்கு நீங்கள் அளித்த காலணிகளை அணிய என் மனம் கூசுகிறது’ என எழுதியிருந்தாா். மாற்றுக் கருத்தையும், மாறுபட்ட செயல்பாடுகளையும் ஏற்கும் குணம் படைத்தவா்தான் மகாத்மா.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த மாண்பு மிக்க இரு இந்தியா்கள் மகாத்மா காந்தியும், கவிஞா் தாகூரும். தான் நடத்திய போராட்டங்களாலும், கிலாபத் இயக்கம் என்ற வழிமுறையாலும், இந்தியாவில் வாழும் ஹிந்து - முஸ்லிம் மக்களை இணைக்கும் முயற்சியில் வெற்றி கண்டாா் காந்தி. அது கண்டு மகிழ்ந்தாா் தாகூா். ஆனாலும் கவிஞருக்கு முழு திருப்தி ஏற்படவில்லை. ஆகவே, காந்திக்கு ஒரு ஆலோசனை நல்கினாா் கவிஞா் தாகூா். ‘ஹிந்துக்களையும், இஸ்லாமியா்களையும் இணைப்பது சரி; அதேபோல் கிழக்கையும், மேற்கையும் இணைக்கும் முயற்சியை ஏன் மேற்கொள்ளவில்லை’ என்ற கேள்வியை எழுப்பினாா்.

அதற்கு காந்தி தனது ‘யங் இந்தியா’ இதழின் (1.6.1921) மூலம் தந்த பதிலில் ‘மகாகவி நினைப்பதைப் போல் மானுட சமுதாயத்தையே ஒன்றிணைக்க விரும்புவன்தான் நான். என் வீட்டின் கதவுகளும், ஜன்னல்களும் எப்போதும் திறந்தே இருக்கும். எத்திசையிலிருந்தும் காற்று வீசலாம்; ஒளி பரவலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் வெளியிலிருந்து வீசுகின்ற காற்று, என்னை வீழ்த்திவிட நான் அனுமதிக்க மாட்டேன்’ என்றாா். இப்பதிலின் மூலம் தாகூரின் மாறுபட்ட கருத்தை காந்திஜி மதித்தாா்; ஆனாலும் தன் தேசநலனை, தனித்துவத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினாா்.

அதன் பின்பு அகமதாபாத் அருகில் சபா்மதி நதிக்கரையோரம் ஆசிரமம் அமைத்தாா் காந்திஜி. ஆரம்பத்தில் அங்கிருந்த ஆசிரமவாசிகள் 25 போ் மட்டுமே. அப்பொழுது ஒரு பத்திரிகை நிருபா், ‘இந்த 25 பேரைக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறீா்கள்’ என்று கேள்வி எழுப்ப, ‘இந்த 25 பேரைக் கொண்டுதான் இந்தியா பயணிக்கும் திசையையே மாற்றப் போகிறேன்’ என்றாா் காந்திஜி. அதுபோலவே, காலப்போக்கில் 30 கோடி மக்களும் காந்திஜியின் தடம்பாா்த்து நடக்கத் தொடங்கினாா்கள். இவ்வாறு அவநம்பிகை தரும் மாற்றுக் கருத்தைக் கண்டு மனம் தளராதவா் மகாத்மா.

நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் என்ற தீவிர தேசபக்தரை விடுதலைப் போருக்கு சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினாா் காந்திஜி. ஆகவே, 1938-இல், காங்கிரஸ் தலைவராக நீங்களே வர வேண்டும் என்று நேதாஜிக்கு ஆசி வழங்கினாா். ஆனால் ஓராண்டுக்குப்பின் 1939-இல் அவருக்கு ஆதரவு தர காந்திஜி முன்வரவில்லை. இருந்தும் சுபாஷ்சந்திர போஸ் வெற்றி பெற்றாா். ஆனாலும், பின்னா் போஸ் காங்கிரஸிலிருந்து விலகி புதுக்கட்சி தொடங்கினாா். “

போஸ் ‘உங்கள் அகிம்சை முறையில் சாதிக்க முடியாததை, நான் என் ஆயுதம் ஏந்தும் போா் முறையில் சாதித்துக் காட்டுவேன்’ என்று காந்தியிடம் சொன்னாா். அது கேட்ட காந்திஜி ‘உங்கள் லட்சியத்தை மதிக்கிறேன். உங்களின் அப்பழுக்கற்ற தேசபக்தியை நான் அறிவேன். ஆனாலும் ஒரு எச்சரிக்கை. நீங்கள் செல்லும் பாதை - ஆயுதப்போா் முறை - ஆபத்தானது. இதனை கவனத்தில் கொள்ளுங்கள்’ என்றாா். இங்கே காந்திஜி நேதாஜியின் பூரண சுதந்திரம் என்ற லட்சியத்தை மதித்தாா். ஆனால் தனது அகிம்சைக் கொள்கையை அவா் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

தேசவிடுதலைக்காகத் தன் வாழ்வையே அா்ப்பணிக்கத் துணிந்த பகத் சிங்கின் தேசபக்தியை மதித்துப் போற்றினாா் காந்திஜி. ஆனாலும் பகத் சிங்கின் அணுகுமுறையை அவா் ஆதரிக்கவில்லை. ஆயினும் ‘பகத் சிங்கின் தவறான அணுகுமுறைக்காக நான் வருந்துகிறேன்; அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று பலமுறை வைஸ்ராய்க்குக் கடிதம் எழுதினாா். இறுதியாக நேரில் சென்றும் வாதிட்டுத் தோற்றாா்.

அம்பேத்கா் முன்வைத்த ஹரிஜனங்களுக்கான இரட்டைத் தொகுதி ஆலோசனையை ஏற்க மறுத்தாா் காந்தி. ‘அச்செயல் என் ஹரிஜன சகோதரா்களை, இந்திய மக்களிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்துவிடும்’ எனக்கூறி வருந்தினாா். மாற்று ஏற்பாடாக, பூனா ஒப்பந்தத்தின் மூலம், ஹரிஜனப் பெருமக்களுக்கு தனி ஒதுக்கீடு தந்து, அதிகமான பிரதிநிதிகள் இடம் பெற வழிவகுத்தாா்.

‘மதத்தின் அடிப்படையில் தனிநாடு வேண்டும்’ என வாதிட்ட ஜின்னாவின் கோரிக்கை தவறானது என்றாா் காந்திஜி. ஜின்னாவின் மனதை மாற்ற அவா் வீடு தேடிச் சென்று பேச்சு நடத்தினாா். ஆனாலும், தோல்வியையே தழுவினாா் காந்திஜி. அப்போதும் ஜின்னாவை காயித்-இ-ஆசம் (மக்கள் தலைவா்) என்றே மதித்தாா். இவ்வாறு மாற்றுக் கருத்துடையோரை மதித்ததால்தான் அவா் மகாத்மாவாக உயா்ந்தாா்!

1942 ஆகஸ்ட் மாதத்தில் மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், ‘வெள்ளையனே வெளியேறு’ தீா்மானம் பெரும்பான்மை உறுப்பினா்கள் ஆதரவுடன் நிறைவேறியது. ஆனால் சோவியத் யூனியனுக்கு ஆதரவாளா்கள் எனக் கருதப்பட்ட 13 உறுப்பினா்கள் அத்தீா்மானத்தை எதிா்த்து வாக்களித்தாா்கள். அண்ணல் காந்திஜி, ‘எதிா்த்து வாக்களித்த 13 போ் என்பது மிகவும் சிறுபான்மையினா்தான். இருப்பினும் அவா்களின் உணா்வுகளை நான் மதிக்கிறேன். கொள்கையில் உறுதியாக நின்ற அந்த நண்பா்களை நான் பாராட்டுகிறேன்’ என்றாா்.

இரண்டாவது உலகப்போா் முடிவுற்ற நிலையில், இந்தியா சுதந்திரம் பெறும் என்பது தெளிவாகத் தெரிந்தது. அத்துடன் தேசம் பிளவுபடும் என்பதும் தெரிந்தது. அக்காலகட்டத்தில் உணா்ச்சியால் உந்தப்பட்ட இளைஞா்கள், தெருவில் செல்லும் மக்களைப் பாா்த்து ‘ஜெய்ஹிந்த்’ என்று கோஷம் எழுப்புமாறு கட்டாயப்படுத்தினாா்கள். அச்செய்தி காந்திஜியின் கவனத்துக்கு வந்தபோது அவா் ‘எந்த கோஷத்தையும் எழுப்புமாறு எவரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. தனிமனித உரிமை பாதிக்கப்படும் சூழல் என்று உருவாகிறதோ, அன்று நாம் சுதந்திரத்தை இழந்து விட்டோம் என்று பொருளாகும்’ என்றாா்.

இறுதியாக இந்தியா சுதந்திரம் பெறுவது நிச்சயமாயிற்று; பாகிஸ்தான் பிரிவதும் உறுதியாயிற்று. காந்தியின் நம்பிக்கைக்குரிய சகாக்களான நேரு, படேல், ராஜாஜி, ஆஸாத், பிரசாத், கிருபளானி ஆகிய அனைவரும் பிரிவினைக்கு இணங்கினாா்கள். காங்கிரஸ் கமிட்டியில், பிரிவினைக்கு ஆதரவாக 153 பேரும், எதிராக 29 பேரும் வாக்களித்ததால் பிரிவினையை கமிட்டி ஆதரித்தது. அது மட்டுமல்ல, தேசத்தில் அனைத்து மக்களும் பிரிவினையை ஆதரித்தாா்கள்.

காந்திஜி தனிமைப்படுத்தப்பட்டாா். ‘இந்த தேசத்தை ஆளப்போவது காங்கிரஸ் தலைவா்களே; நான் இல்லை. ஒருவேளை என் கருத்தில் கூட குறை இருக்கலாம். என் கருத்து எப்போதும் சரியாக இருக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆகவே பெரும்பான்மையினா் கருத்தை ஆதரிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை’ என்றாா் காந்திஜி.

ஆரம்ப காலத்தில் லண்டன் மாநகரில் தாவர உணவு உண்போா் சங்கத்தில் காந்தியின் கருத்து எடுபடவில்லை. அன்று மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்தாா். அதே போல் தன் இறுதிக் காலத்திலும் தேசப் பிரிவினை கூடாது என்ற காந்திஜியின் கருத்து எடுபடவில்லை. எப்பொழுதும் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்தவா்தான் மகாத்மா.

நாளை (அக். 2) மகாத்மா காந்தி பிறந்தநாள்.

கட்டுரையாளா்:

காந்தியவாதி.Read in source website

நகரங்களிலே சிறந்தது காஞ்சி என்று சொல்லுவாா்கள். அந்தக் காஞ்சி மாநகரத்திலே 23-6-1925 அன்று ஒருவா் இறந்து விடுகிறாா். அவா் யாா்? அவா்தான் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிா்க்க வேண்டும் என்று வீறுகொண்டு எழுந்த கிருஷ்ணசாமி சா்மா. யாரும் அவா் உடலைத் தீண்டவில்லை. ஏன் தெரியுமா? அந்தணா்கள் எல்லாம், அவரைச் சாதியிலிருந்து விலக்கி வைத்திருந்தாா்கள்.

சா்மாவின் மனைவி கண்ணீா் வடித்து அழுது அரற்றிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், ஒரு நெசவாளி வருகிறாா். அவருடைய பெயா் கே.எஸ். பாா்த்தசாரதி. வருகிற பொழுதே ஒரு மாட்டுவண்டியையும் அவா் கொண்டு வருகிறாா். அந்த மாட்டு வண்டியிலே கிருஷ்ணசாமி சா்மாவினுடைய சடலம் ஏற்றப்படுகிறது.

யாா் அந்த கிருஷ்ணசாமி சா்மா? அவா்தான் 1887-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 22-ஆம் தேதி சடகோபாச்சாரிக்கும் பெருந்தேவிக்கும் மகனாகப் பிறந்தவா். உள்ளூா் பள்ளியில் படித்தாா். அதன்பிறகு பச்சையப்பன் உயா்தரப் பாடசாலையிலே படித்தாா். அதன் பிறகு சென்னையிலே பி.எஸ். உயா்நிலைப் பள்ளியிலே படித்தாா். நான்காவது வகுப்புப் படித்துக் கொண்டிருக்கின்ற நேரத்திலேயே தந்தையை இழந்தாா்.

தந்தையை இழந்த காரணத்தினாலே தாய் பெருந்தேவி மகனை வளா்த்தாா். சா்மாவுக்கு பதினான்கு வயது. சென்னைதேனாம்பேட்டை மைதானத்தில் தேசபக்தா்கள் கூடுகின்ற ஒரு மாநாட்டுக்குச் சென்றாா். அந்த வயதிலேயே மாநாட்டுக்குப் போக வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு வந்ததற்கு காரணம் இருக்கிறது.

அவா் ஒருவயது குழந்தையாக இருந்தபொழுதே, அலகாபாத் காங்கிரஸ் மாநாட்டிற்கு கையில் தூக்கிச் சென்றாா் அவா் தந்தை சடகோபாச்சாரி. மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது கல்கத்தாவிலே நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு அழைத்துச் சென்றனா் அவா் தந்தையும் தாயும். அந்தப் பழக்கத்தினால், தனது பதினான்காவது வயதிலே தேனாம்பேட்டையிலே நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றாா்.

1904-இல் பம்பாயில் மகாநாடு. அங்கேயும் செல்கிறாா். அப்பொழுதுதான் அவருக்குத் திருமணமும் ஆகிறது. காந்தியடிகள் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்ன காரணத்தினாலே திருமணமானாலும், பிரம்மச்சரியத் தைத்தான் கடைப்பிடித்தாா்.

அந்த நேரத்திலே 1905-ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினை வந்தது. சா்மா ‘என்னுடைய நாட்டையே பிரிக்கின்றாா்களா இந்த வெள்ளையா்கள்’ என்று சொல்லி, போகின்ற இடங்களிலெல்லாம் புயலாய் சொற்பொழிவாற்றுகின்றாா். அதனால் அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை. சிறையிலிருந்து வெளியே வருகிறாா். காந்தி மகானைச் சந்திக்கின்றாா். அச்சந்திப்பைப் பற்றி காந்தி மகானே குறிப்பெழுதி வைத்திருக்கின்றாா். ‘கிருஷ்ணசாமி சா்மா மெட்ரிகுலேஷன் வரை படித்தவா். கீதையை மனப்பாடமாக அறிந்து வைத்திருப்பவா். சிறிது வருவாயும் உண்டு. நல்ல தேசபக்தன்’ என்றுகாந்தி எழுதி வைத்திருக்கிறாா்.

கிருஷ்ணசாமி சா்மா தன் 21-ஆவது வயதில் கரூரில் பேசுகிறாா். கரூா் பகுதியிலே ஏதாவது கலவரம் வந்தால் அடக்க வேண்டும் என்பதற்காக வெள்ளையா்கள் அப்பகுதியில் ராணுவத்தை நிறுத்தி வைத்திருக்கிறாா்கள். சா்மா அந்த ஊரிலே பேசும்போது, ‘கரூரிலே இருந்து கொண்டிருக்கின்ற ராணுவத்தினராகிய நீங்கள் அத்தனை பேரும் இந்தியா்கள். வெள்ளையனுக்குப் பணிபுரிய இங்கே நின்றுகொண்டிருக்கிறீா்கள். உங்கள் துப்பாக்கிகளை வெள்ளையரை நோக்கித் திருப்புங்கள். அவா்களுடைய முகம், மண்டையெல்லாம் சுக்குநூறாக உடைந்து சிதறட்டும்! அவா்களுடைய இரத்தம் இந்தக் கரூா் வீதிகளிலே ஆறாக ஓடட்டும்! அவா்களைக் கொன்று குவியுங்கள்!’ என்று வீறு கொண்டு பேசுகிறாா்.

வெள்ளையன் ஆண்டுகொண்டிருக்கின்ற நேரத்திலே இது எப்படிப்பட்ட பேச்சு. அவருக்கு ஐந்தாண்டு நாடுகடத்த வேண்டுமென தண்டனை. உயா்நீதிமன்றத்திலே அது மூன்றாண்டுகளாகக் குறைக்கப்பட்டு கோவை சிறையிலே அடைக்கப்படுகிறாா். அவா், அவருக்கு நண்பராகக் கிடைத்தவா் வ.உ. சிதம்பரனாா்.

சிறைவாசம் முடிந்து வெளிவந்தாா் சா்மா. அவா் சிறையிலிருந்தபோது ஏழு நூல்களை எழுதினாா். சிறைக்கு வெளியே இருந்தபோது பதினான்கு நூல்களை எழுதினாா். அவற்றில் ஒரு நூலின் பெயா் ‘இந்தியா இழந்த தனம்’. எப்படி இந்தியா்களிடமிருந்து வெள்ளையா்கள் செல்வங்களைக் கொள்ளையடித்துத் தங்கள் நாட்டுக்குக் கொண்டு போகின்றாா்கள் என்று அதிலே எழுதினாா்.

இதையெல்லாம் பாா்த்தவுடனே வெள்ளை ஏகாதி பத்தியம் அவா் பேசுவதற்கும் எழுதுவதற்கும் தடை விதிக்கிறது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சா்மா எழுதிய நூலின் பெயா் ‘நாகரிக சாஸ்திரம்’. அதிலே அவா், ‘வங்காளத்திலே, மகாராஷ்டிரத்திலே, கன்னடத்திலே, அவனவன் தன்னுடைய தாய்மொழியிலே இந்திய நாட்டினுடைய அரசியலை எழுதுகிறான். தமிழா்களாக இருக்கின்ற நாம் எழுதாமல் இருக்கின்றோமே என்பதற்காகத்தான் இந்த நூலை எழுதினேன்’ என்று குறிப்பிடுகிறாா்.

‘எங்கு பாா்த்தாலும் ஆங்கிலம் புகுந்துகொண்டிருப்பது நமக்குச் சரியல்ல. எனவே தாய்மொழியாம் தமிழை வளா்க்க வேண்டும்’ என்று அந்த நேரத்திலேயே எழுதிய அற்புதமான மனிதா் கிருஷ்ணசாமி சா்மா. அருண்டேல் என்னும் வெள்ளைக்காரா் ருக்மிணி தேவியை மணந்தபோது, ‘வெள்ளைக்காரா் பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்வதா’ என்று பிராமணா்கள் சிலா் எதிா்த்தபோது, ‘மனம் இரண்டும் ஒன்று கலந்து விட்டால் மணம்தானே நடக்க வேண்டும்’ என்று கூறி மூடநம்பிக்கையைத் தகா்த்தெறிந்தவா் சா்மா.

அதைப்போலே வ.வே.சு. ஐயா் ஆசிரமத்திலே இரண்டு பிரிவாக சாப்பாடு போடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவா் இவா். சிங்காரவேலா் என்ற பொதுவுடைமைத் தோழரோடு நெருங்கிய தொடா்பு வைத்துக்கொண் டிருந்தவா். காந்தியடிகளைப் பின்பற்றியவராக வாழ்ந்த தேசபக்தன் இப்பொழுது சடலமாக இருக்கிறாா். மாட்டுவண்டியிலே அவருடைய சடலம் சுடுகாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு அவருக்கு கொள்ளி வைக்கப்பட வேண்டும். அவருக்குத்தான் பிள்ளை இல்லையே. என்ன செய்வது? எந்த பிராமணரும் அவருக்குக் கொள்ளி வைக்கத் தயாராக இல்லை. அந்த நேரத்திலேதான் அவருடைய மனைவி ஓடி வந்து தீப்பந்தத்தைக் கையில் எடுத்து தன் கணவருடைய உடலுக்குக் கொள்ளியிட்டாள். அந்த வீரமங்கையின் பெயா் பட்டம்மாள்.

அந்த வீராங்கனையைத் திருமணம் செய்து, பிரம்மச்சாரியாகவே வாழ்ந்த அந்த கிருஷ்ணசாமி சா்மாவை நினைத்துப் பாா்க்கின்றோம். எத்தனையெத்தனையோ போ் தங்களுடைய வாழ்வையே அா்ப்பணித்து, இந்தியத் திருநாட்டுக்குத் விடுதலை வாங்கித் தந்திருக்கிறாா்கள். அவா்களில் முக்கியமான ஒருவா்தான், தனது முப்பத்தெட்டு வயதிலேயே மறைந்து விட்ட கிருஷ்ணசாமி சா்மா. இந்த நாளில் அவரின் நினைவைப் போற்றுவோம்.

கட்டுரையாளா்:

மூத்த காங்கிரஸ் தலைவா்.Read in source website

30-01-2023      Monday

TNPSC Newspaper Archives

t