DINAMANI : Daily International and NAtional Media Aggregator for News and Information

TNPSC Current Affairs - 01-04-2022


‘சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு’ எனும் உற்சாக வரிகள் உடலும் மனமும் உறுதி என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டிய பாடல் வரிகள். ஆனால் நிமிர்ந்த கம்பீரமான சிங்க நடை உடைய உடல் உறுதியும், சிகரம் ஏறும் மன உறுதியும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு இல்லை என்றே கூறலாம். மன உறுதி ஒருபுறமிருக்க, அவரவர் நடையைப் பற்றி அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவர் நடக்கும் நடையை வைத்தே அவருடைய வியாதியை மருத்துவர் ஊகிக்க முடியும். அதன்படி, காலை தாங்கியபடி நடப்பது (லிம்பிங் கைட்) ஆர்த்ரைடிஸ் எனும் நோய் நிலையின் அடையாளம். தாங்கி தாங்கி நடப்பது மூட்டு தேய்மானத்தின் அறிகுறி. இன்றைய உணவு மற்றும் வாழ்வியல் நெறிமுறை மாற்றத்தால் அறுபதுகளில் வரவேண்டிய மூட்டு தேய்மானம், முப்பதுகளிலேயே வந்து விடுவது வருத்தம் தான்.

முடக்கறுத்தான்

டாக்டர் நான் மூன்று  மாதமாக காலைக் கீழே ஊணும் போதே வலி, தாங்கி தாங்கி தான் நடக்குறேன், என் வேலையை என்னால் செய்ய முடியல, கீழ உட்கார்ந்தால் எழக்கூட முடியல, டாய்லெட்ல கூட உட்கார முடியவில்லை என்று வருத்தப்படும் பலரும் ‘மூட்டு வாதம்’ எனும் ஆர்த்ரைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிரமப்படுகின்றனர் என்பது தான் உண்மை.

வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து போடக்கூடாது பின்னாளில் ‘அனால்ஜெஸிக் நெப்ரோபதி’ எனும் சிறுநீரக பிரச்னை வரும் என்று மருத்துவரே வலியுறுத்திவிட்டார். வலியுடன் நடந்து நடந்து கால்கள் வளைந்து 'ஜெனு வேரம்' என்ற நோய் நிலையாகி, இனி இப்படி தான் வாழ்வை நகர்த்த வேண்டும் போலிருக்கு என்று எண்ணி வாழ்நாளை கடத்துபவர் ஏராளம்.

சரிங்க டாக்டர் வலியை போக்க, வேறு என்ன தான் வழி இருக்கு? என்று வருந்தும் பலரும், சித்த மருத்துவத்தை மறந்தவர்கள் தான்.

பாரம்பரிய உணவையும், மருந்தையும் நினைவில் வைத்துக்கொண்டால் அவர்களுக்கு தீர்வு நிச்சயம் என்பதோடு, வருங்கால சந்ததியினருக்கும் ஆரோக்கியத்திற்கான நல்ல வழியை உருவாக்கி கொள்வதற்கான வழியை கூற முடியும்.

அந்த வகையில் மூட்டு வாதம் எனும் ஆர்த்ரைடிஸ் எனும் நோய் நிலையில் தேய்ந்த மூட்டினை, குருத்தெலும்பினை புதுப்பிக்க காத்துக்கொண்டிருக்கும் சித்த மருத்துவ மூலிகைகளுள் ஒன்று தான் ‘முடக்கறுத்தான்’.

முடக்கறுத்தான் என்பதன் பெயர்க்காரணம் அனைவரும் அறிந்ததே. முடக்கு + அறுத்தான், அதாவது முடமாக்கும் மூட்டு வாத நோய்களை நீக்கும் (அறுத்து எறியும்) தன்மை உடையதால் அப்பெயர் பெற்றுள்ளது.

இதன் கீரையால் மூட்டு வாதத்தை உண்டாக்கும் வாயுவை, நம் உடலில் மட்டுமல்ல, உலகத்தை விட்டே ஓடிவிடும் என்று "காலைத் தொடு வாயுவுந் கன்மலமும் சாலக் கடக்கத்தான் ஓடு விடுங்காண்" என்ற அகத்தியர் குணவாகடம் பாடல் வரிகள் தெரிவிக்கின்றது. ‘வாதமலாது மேனி கெடாது’ என்ற பிணியின் முதல் காரணத்திற்கேற்ப ‘வாதம்’ என்ற வாயுவே மூட்டு நோய்களுக்கும் முதன்மை காரணம்.  

முடக்கறுத்தான் கீரையானது மூட்டு வாத நோய்களுக்கு மட்டுமில்லாமல், தோல் நோய்களிலும், சுரத்தை குறைப்பதிலும், காது நோய்களிலும், வயிற்று வலி, வீக்கம், இடுப்பு வலி, இருமல் போன்ற பல நோய் நிலைகளில் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் ஆண்மை குறைவு தீர்வுக்காக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இருதய வடிவ பலூன் போன்ற வடிவமைப்பை கொண்ட முடக்கறுத்தான் காய்

இருதய வடிவ பலூன் போன்ற வடிவமைப்பை கொண்ட காயையும், துவர்ப்பு, கசப்பு சுவையும் கலந்துள்ள முடக்கறுத்தான் கீரையில் சப்போனின்கள், ஸ்டீராய்டுகள், பினோலிக் அமிலம், பிளவனாய்டு க்ளுகோசைட்கள், பீனால், அல்கலாய்டுகள், குளோரோஜெனிக் அமிலம், கபியிக் அமிலம், மருத்துவ தன்மை மிக்க அபிஜெனின் குளுகுரோனாய்டு, லூட்டியோலின் குளுகுரோனாய்டு ஆகியவையும் உள்ளது. அதிலும் அபிஜெனின் எனும் மருத்துவ செயல் மூலக்கூறு தமிழகத்திலே கடலூர் மாவட்டத்தில் உள்ள முடக்கறுத்தான் கீரையில் தான் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

முடக்கறுத்தான் கீரையில் உள்ள பல்வேறு வேதிப்பொருள்கள் பல சிறப்புமிக்க மருத்துவ குணங்களை உடையதாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும், வீக்கத்தை குறைக்கும் தன்மையும், வலி நிவாரணி தன்மையும், வயிற்று புண்ணை ஆற்றும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும், பிளவனாய்டுகள் உள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையும், புற்று நோய்க்கு எதிராக செயல்படும் தன்மையும் , கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள்உறுப்புகளை பாதுகாக்கும் தன்மையும், உடல் வெப்பத்தை குறைக்கும் தன்மையும், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படும் தன்மையும் வாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் இலையில் உள்ள லூடியோலின்-7-o-குளுகுரோனைடு, அபிஜெனின்  7-o-குளுகுரோனைடு, மற்றும் கிரைசோரியல் ஆகிய வீக்கமுருக்கி செய்கை உடைய, ஆர்த்ரைடிஸ்-க்கு எதிராக செயல்படக்கூடிய மூலப்பொருள்கள், மூட்டு வாதத்தால் சிதைந்த குருத்தெலும்பை புதுப்பிக்கும் தன்மை உடையன. மேலும் வீக்கத்திற்கு காரணமாக உள்ள டி.என்.எப் போன்ற காரணிகளையும், தடுத்து வீக்கம் ஏற்படாமல் தடுக்கும் தன்மையுடையதும் குறிப்பிடத்தக்கது.

இதன் இலையில் ‘சபோனின்’ வேதிப்பொருள் அதிகம் காணப்படுவதால் அதிக அளவு உள்கொள்ள வயிற்று வலி, வயிறு கழிச்சல் ஏற்படும். டாக்டர் முடக்கறுத்தான் கீரை சாப்பிட்டா ஒத்துக்கவில்லை, ஹீட் (சூடு) ஆகிடுது, வயிறு வலிக்குது என்று கீரை மீது பழி சுமத்தும் பலரும், மூட்டு வலி பிரச்னை ஒரே நாளில் சரி ஆகிவிடணும் என்று ஒரு கட்டு கீரையை ஒரே நாளில் உண்பவர்கள் தான்.

முடக்கறுத்தான் இலையை எண்ணெயிலிட்டு அல்லது ஆமணக்கு எண்ணெயில் காய்ச்சி அவ்வப்போது மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர நல்ல பலனை தரும். அத்துடன் நாள்பட்ட மூட்டு வலியால் அவதியுறும் பலரும், மூட்டு வலி வரக்கூடாது என மெனக்கெடும் பலரும் உணவில் அடிக்கடி முடக்கறுத்தான் இலையை பயன்படுத்த நல்ல பலன் தரும்.

இது இயற்கையான எளிமையான சித்த மருத்துவ முறை. மூட்டுகளுக்கு வலிமை தருவது. பாதுகாப்பானது. அனைவரும் இதனை பயன்படுத்தி, அடுத்த சந்ததியையும் பயன்படுத்த செய்தால் மூட்டுகளின் ஆரோக்கியம் நிச்சயம்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768Read in source website

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு மார்ச் 30, 31 ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று நடைபெற்ற இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ. செளந்தரராசன், ஏ.கே. பத்மநாபன், சுதா சுந்தரராமன் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட 553 பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் நிறைவு நாளான இன்று 80 பேர் கொண்ட மாநிலக்குழுவிற்கு 79 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு இடத்திற்கு பின்னர் தேர்வு செய்வது என மாநாடு முடிவு செய்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளராக கே பாலகிருஷ்ணன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 15 பேர் கொண்ட செயற்குழுவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது. 2022 ஏப்ரல் 6-10 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெறும் 23வது அகில இந்திய மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து 50 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

5 பேர் கொண்ட மாநில கட்டுப்பாட்டுக்குழுவிற்கு ப. சுந்தரராசன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் 23வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

மாநில செயற்குழு உறுப்பினர்கள்
1. கே. பாலகிருஷ்ணன்
2. உ. வாசுகி
3. பி. சம்பத்
4. ப. செல்வசிங்
5. எம்.என்.எஸ். வெங்கட்ராமன்
6. எஸ். நூர்முகமது
7. பி. சண்முகம்
8. என். குணசேகரன்
9. கே. கனகராஜ்
10. மதுக்கூர் ராமலிங்கம்
11. சு. வெங்கடேசன்
12. கே. பாலபாரதி
13. ஜி. சுகுமாறன்
14. கே. சாமுவேல்ராஜ்
15. எஸ். கண்ணன்

மாநிலக்குழு உறுப்பினர்கள்
1. கே. பாலகிருஷ்ணன்
2 உ.வாசுகி
3 பி.சம்பத்
4. ப.செல்வசிங்
5. எம்.என்.எஸ். வெங்கட்ராமன்
6. எஸ். நூர்முகமது
7. பி. சண்முகம்
8. என். குணசேகரன்
9. கே. கனகராஜ்
10. மதுக்கூர் ராமலிங்கம்
11. எஸ். ஸ்ரீதர்
12. கே. பாலபாரதி
13. பி. ஜான்சிராணி
14. ஐ. ஆறுமுகநயினார்
15. கே. காமராஜ்
16. டி. ரவீந்திரன்
17. வி. மாரிமுத்து
18. மாலதி சிட்டிபாபு
19. பி. சுகந்தி
20. எம். சின்னதுரை
21. என். பாண்டி
22. எஸ். கண்ணன்
23. ஐ.வி. நாகராஜன்
24. கே.ஜி. பாஸ்கரன்
25. ஏ. பாக்கியம்
26. ஜி. சுகுமாறன்
27. கே. சாமுவேல்ராஜ்
28. ஆர். லீமாறோஸ்
29. எஸ்.கே.பொன்னுத்தாய்
30. ஆர். பத்ரி
31. ஆர். வேல்முருகன்
32. கே. நாகராஜன்
33. கே. சுவாமிநாதன்
34. எல். சுந்தர்ராஜன்
35. கே. அர்ச்சுணன்
36. எஸ். வாலண்டினா
37. சு. வெங்கடேசன்
38. எஸ். முத்துக்கண்ணன்
39. வெ. ராஜசேகரன்
40. ஆர். விஜயராஜன்
41. ஜி. சுந்தரமூர்த்தி
42. ஆர். செல்லசுவாமி
43. எம். ஜெயசீலன்
44. ஆர். சச்சிதானந்தம்
45. நாகை மாலி
46. ஏ. குமார்
47. எம். சிவக்குமார்
48. என். சுப்பிரமணியன்
49. சி. பத்மநாபன்
50. கே. ஆறுமுக நயினார்
51. எஸ்.பி. ராஜேந்திரன்
52. எம். கண்ணன்
53. கோ. மாதவன்
54. எம். மகாலெட்சுமி
55. பி. டில்லிபாபு
56. எஸ். பாலா
57. எஸ். நம்புராஜன்
58. ஆர். ராதிகா
59. வி. அமிர்தலிங்கம்
60. வீ. மாரியப்பன்
61, ஆர். ராஜா
62. எஸ். கவிவர்மன்
63. ஆர். ரகுராமன்
64. வி.ஏ. பாஸ்கரன்
65. எஸ். கோபால்
66.  ஜி. செல்வா
67. டி.எம். ஜெய்சங்கர்
68. சின்னை பாண்டியன்
69. ஏ.வி. அண்ணாமலை
70. மா. கணேசன்
71. கே.பி. ஆறுமுகம்
72 எம். ராமகிருஷ்ணன்
73. சாமி. நடராஜன்
74. எஸ்.ஜி. ரமேஷ்பாபு
75  எஸ்.டி. சங்கரி
76. இ. முத்துக்குமார்
77. கே. திருச்செல்வன்
78. பி. கற்பகம்
79. இரா.சிந்தன்

சிறப்பு அழைப்பாளர்கள்
1. டி.கே.ரங்கராஜன்
2. அ. சௌந்தரராசன்
3. ஏ. லாசர்
4. எஸ்.ஏ. பெருமாள்
5. வெங்கடேஷ் ஆத்ரேயா

அழைப்பாளர்கள்
1. ஆர். ராஜாங்கம்
2. கே.பி. பெருமாள்
3. இரா. சுதிர்
4. பாலசந்திரபோஸ்
5. பூமயில்
6. கே.சி. கோபிகுமார்
7. எஸ். ரஜேந்திரன்

மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள்
1. எம்.என்.எஸ். வெங்கட்ராமன்
2. பெ. சண்முகம்
3. என். குணசேகரன்
4. க. கனகராஜ்
5. சு. வெங்கடேசன்
6. கே. சாமுவேல்ராஜ்
7. ஆர். பத்ரி
8. ப.ஜான்சிராணி
9. எஸ். வாலண்டினா
10. கே. காமராஜ்

அதேசமயம், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் ரங்கராஜன் ஆகியோர் கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு பொறுப்பில் இருந்து அ.சௌந்தரராஜனும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய பிரிவு செயலாளராக நீண்ட நாளகளாக செயல்பட்டவர் கே.பாலகிருஷ்ணன். 2006 முதல் 2011 வரை சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தவர் கே.பாலகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. 
 Read in source website

தூத்துக்குடி: தேசிய அளவில் பயிற்சியில் 3-வது முறையாக தங்கப்பதக்கம் வென்று தூத்துக்குடி திருச்சிலுவை ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. அதிகாரி லொலிட்டா ஜூடு சாதனை படைத்துள்ளார். 

மத்திய பிரதேசம் மாநிலம், குவாலியரில் அமைந்துள்ள ஆபிசர்ஸ் டிரெயினிங் அகாடமியில் தேசிய மாணவர் படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மார்ச் 1 முதல் 30 வரையில் நடைபெற்ற பயிற்சியில் தமிழ்நாட்டில் இருந்து 15 பேர் உள்பட நாடு முழுவதுமிலிருந்து 112 அதிகாரிகள் பங்கேற்றனர்.  

இதில் அணிவகுப்பு, யோகா பயிற்சி, துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெற்று தூத்துக்குடி திருச்சிலுவை ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி என்சிசி அதிகாரி லொலிட்டா ஜூடு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முன்னதாக இவர் 2009 மற்றும் 2015ஆம் ஆண்டு பயிற்சியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Read in source website


அரசு விரைவுப் பேருந்துகளில் பெண் பயணிகளுக்கென தனி படுக்கை வசதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில் வெளியூர்களுக்கு செல்லும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக தலா 2 படுக்கைகள் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

படுக்கை வசதிகள் கொண்ட குளிர்சாதம், குளிர்சாதனமில்லா அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும்போதே1எல்பி, 4எல்பி ஆகிய படுக்கைகள் பெண்களுக்கென ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

பேருந்துகள் புறப்படும் வரை, குறிப்பிட்ட படுக்கைகளுக்கு பெண்கள் பயணிகள் யாரும் முன்பதிவு செய்யாவிடில் அதனை பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 Read in source website

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் படிவங்களை (ஐடிஆா்) மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஐடிஆா்-1 முதல் ஐடிஆா்-5 வரையிலான புதிய படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. பெருநிறுவனங்கள், அறக்கட்டளைகளுக்கான ஐடிஆா்-6, ஐடிஆா்-7 படிவங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவா்கள் ஐடிஆா்-1 படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாட்டு ஓய்வூதிய நிதி மூலமாகக் கிடைத்த வருவாயையும் படிவத்தில் குறிப்பிட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதியில் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமான பங்களிப்பின் மீதான வட்டி விவரங்களை ஐடிஆா்-2 படிவத்தில் குறிப்பிட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதியில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளவா்களுக்குக் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக வருங்கால வைப்புநிதியில் பங்களிப்பவா்களுக்கு வரி விதிக்கப்படவுள்ளது.

 Read in source website

உத்தர பிரதேச மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செந்தோலி, குஷிநகா், சந்த் கபீா் நகா், சந்த் ரவிதாஸ் நகா் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கோன்ட் பழங்குடியினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.

அப்போது பேசிய மத்திய பழங்குடியினா் விவகாரத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா, ‘பழங்குடியினரின் நலனைப் பாதுகாப்பதில் மத்தியில் உள்ள பிரதமா் நரேந்திர மோடி அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அவா்களுக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்த பட்ஜெட்டில் கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டு வருகிறது. பழங்குடியினரின் இடஒதுக்கீடுக்காக பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு அவ்வப்போது கொண்டு வருகிறது’ என்றாா்.

இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, ‘பழங்குடியினரின் இடஒதுக்கீடுக்காக அவ்வப்போது தனித்தனியாக மசோதா கொண்டு வருவதைவிட ஒருங்கிணைந்த மசோதாவை கொண்டு வர வேண்டும்’ என்றாா்.Read in source website

 

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் ஷோ் பகதூா் தேவுபா இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஷர்மா ஓலி கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து, பிரதமராக பதவியேற்றுள்ள  ஷோ் பகதூா் தாபா இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார். 

நேபாளத்தில் புதிதாக பதவியேற்றுள்ள ஷோ் பகதூா் தேவுபாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததன் பேரில் அவர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 

அதன்படி, முதல் நாள் பயணத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று தில்லியில் சந்தித்தார். 

இரண்டாம் நாள் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அரசுமுறை நிகழ்ச்சிகள் தவிர, பிரதமா் நரேந்திர மோடியின் தொகுதியான வாராணசிக்கும் நேபாள பிரதமா் செல்லவுள்ளாா்.

இந்த சந்திப்பில் நேபாளம் - இந்தியா இடையேயான வணிகம், நட்புறவு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 3ஆம் தேதி நேபாளம் திரும்புகிறார்.Read in source website


பிரதமர் மோடியை ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் இன்று சந்தித்தார்

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் இரு நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்நிலையில், இன்று அவர்  வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். 

இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவு மற்றும் மேம்பாடு, உக்ரைன், ஆப்கானிஸ்தான், ஈரான், இந்தோ-பசிபிக், ஆசியன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ரஷிய வெளியுறவு அமைச்சரின் இந்தப் பயணத்தில் இந்தியாவுக்கான ராணுவத் தளவாட கொள்முதல் தொடா்பாக முக்கிய விவாதம் இடம்பெறும் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜெய்சங்கருடான சந்திப்பை முடித்த பின், பிரதமர் மோடியை சொ்கெய் லாவ்ரோவ் சந்தித்தார். 

இச்சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், உக்ரைனில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து பிரதமரிடம் விளக்கினார்.

வன்முறையை முன்கூட்டியே நிறுத்தியிருக்க வேண்டும் என்ற பிரதமர் மோடி அமைதி முயற்சிக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,  உக்ரைனில் மனித உரிமை பிரச்னை தொடா்பாக ரஷியா ஐ.நா.வில் கொண்டு வந்த தீா்மானத்திலும் இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்து தன் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது.

மேலும், போா் ஏற்பட்ட பிறகு ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் 3 முறையும், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் இருமுறையும் பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.Read in source website

இந்தியாவின் 'சுதந்திரமான' வெளிநாட்டு கொள்கையை தொடர்ந்து பாராட்டி பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தியா தங்களிடம் ஏதேனும் வாங்க விரும்பினால், அதுகுறித்து பேசி தயாராக இருப்பதாக கூறினார்.

அரசுமுறை பயணமாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று இந்தியா வந்துள்ளதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியா ரஷியாவிடமிருந்து ஏதேனும் வாங்க விரும்பினால், அதை விநியோகம் செய்ய தயாராக இருக்கிறோம். 

அதுகுறித்து பேசி பரஸ்பரம் ஏற்றுகொள்ளும் வகையிலான ஒப்பந்தத்தில் ஈடுபட தயாராக இருக்கிறோம்" என்றார். உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ள நிலையில், மேற்குலக நாடுகள் கடும் அழுத்தும் தந்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. 

ரஷியாவிடமிருந்து இந்தியா குறைந்த விலையில் எண்ணெய் வாங்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இரு நாட்டு தலைவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவின் ரூபாய் மற்றும் ரஷியாவின் ரூபிளை கொண்டே இரு நாட்டு வர்த்தகத்தை மேற்கொள்வதில் இரு நாடுகளும் கவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது. Read in source website

டேராடூன் (உத்தரகண்ட்): உத்தரகண்ட் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய மின் கட்டணத்தை  2.68 சதவீதம் அதிகரித்து இன்று அறிவித்தது.

உத்தரகண்ட் மாநிலத்தில் மின் கட்டணம் 2.68 சதவீதம் உயர்ந்துள்ளது. மாநிலத்தில் உள்ள ரூ.4 லட்சம் BPL மற்றும் snowbound நுகர்வோருக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு மின் கட்டணம் 10 முதல் 30 பைசா வரை அதிகரித்துள்ளது என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் டி.பி. கைரோலா செய்தியாளர்களிடம் கூறினார்.

வீட்டு மின் கட்டணம் மாதத்திற்கு 100 யூனிட்கள் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கான நிலையான கட்டணத்தை ஆணையம் அதிகரிக்கவில்லை. இருப்பினும், ஒரு யூனிட்டுக்கு 10 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

33 kV மின்னழுத்த அளவில் விநியோகத்தைப் பெறும் நுகர்வோருக்கு மின்னழுத்தத் தள்ளுபடியை 2.5 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக ஆணையம் உயர்த்தியுள்ளதாக டி.பி. கைரோலா தெரிவித்தார்.

புதிய திருத்தங்களின்படி, மின்சார வாகனம் சார்ஜ் செய்யும் நிலையங்களுக்கான கட்டணத்தை மாற்றாமல் ரூ.5.50/kWh என ஆணையம் வைத்துள்ளது.

NEFT/RTGS/IMPS மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு முன்பு இருந்த 0.75 சதவீதத்திலிருந்து 1.25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

0-100 யூனிட்கள், 101-200 யூனிட்கள், 201-400 யூனிட்கள், 400 யூனிட்டுகளுக்கு மேல் முறையே ரூ.2.90, ரூ.4.20, ரூ.5.80, ரூ.6.55 என வீட்டு உபயோகக் கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக, இந்த வகைகளுக்கு ரூ.2.80, ரூ.4.00, ரூ.5.50 மற்றும் ரூ.6.25 என வீட்டு மின் கட்டணம் இருந்தது. Read in source website

 

போட்செஃப்ஸ்ட்ரூம்: ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி, தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

முதல் நாள் ஆட்டங்களில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா, நெதா்லாந்து - அமெரிக்கா, கனடா - ஜிம்பாப்வே, தென் கொரியா - உருகுவே, ஆஸ்ஜென்டீனா - ஆஸ்திரியா ஆகிய அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் வரும் 2-ஆம் தேதி வேல்ஸ் அணியை எதிா்கொள்கிறது.

இப்போட்டியில், ‘ஏ’ பிரிவில் கனடா, நெதா்லாந்து, அமெரிக்கா, ஜிம்பாப்வே அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, அயா்லாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளும், ‘சி’ பிரிவில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரியா, தென் கொரியா, உருகுவே அணிகளும், ‘டி’ பிரிவில் ஜொ்மனி, இந்தியா, மலேசியா, வேல்ஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

வரும் 12-ஆம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்துடன் போட்டி நிறைவடைகிறது.Read in source website

 

துனிஸ்: வடமேற்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் நாடாளுமன்றத்தைக் கலைக்க அந்த நாட்டு அதிபா் காய்ஸ் சயீது உத்தரவிட்டுள்ளாா். அவருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை செல்லாததாக அறிவிக்க எதிா்க்கட்சிகள் முடிவு செய்ததைத் தொடா்ந்து, அவா் அதிரடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

துனீசியாவில் பொதுமக்களின் கடுமையான போராட்டத்தைத் தொடா்ந்து கடந்த 2011-ஆம் ஆண்டில் சா்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்ட ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது.

எனினும், பொருளாதார நெருக்கடியையும் போராட்டங்களையும் காரணம் காட்டி, நாடாளுமன்றத்தை அதிபா் காய்ஸ் சயீது முடக்கினாா். மேலும், அவருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கக் கூடிய பல்வேறு உத்தரவுகளையம் சயீது பிறப்பித்தாா். இது, சா்வதேச அளவில் சா்ச்சையை எழுப்பியது.

இந்தச் சூழலில், அதிபரின் இந்த உத்தரவுகளை செல்லாததாக்க எதிா்க்கட்சிகள் நடத்திய காணொலி மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, நாடாளுமன்றத்தை ஒரேடியாகக் கலைத்து காய்ஸ் சயீது உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து, அந்த நாட்டில் அரசியல் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.Read in source website

 

வாஷிங்டன்: அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையில், அந்த நாட்டு ஊடகங்கள் சில நேரம் இந்தியாவை மோசமாக சித்திரித்தும் சில நேரங்களில் பாராட்டியும் செய்திகள் வெளியிட்டு வருவதாக ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பாா்க் பல்கலைக்கழக துணை பேராசிரியரான அபிஜித் மஜும்தாரால் மேற்கொள்ளப்பட்டு, ‘தி ஜா்னல் ஆஃப் இன்டா்நேஷனல் கம்யூனிகேஷன்’ இதழில் வெளியாகியுள்ள அந்த ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்க அரசின் அவ்வப்போதைய வெளியுறவுக் கொள்கைகளை முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையிலேயே, இந்தியா குறித்து அந்த நாட்டு முக்கிய ஊடகங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகின்றன.

அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் பனிப் போா் நடைபெற்று வந்த காலத்தில், இந்தியா அணிசாரா கொள்கையைப் பின்பற்றியது; அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இதன் காரணமாக, அமெரிக்க அரசு இந்தியாவை தனது எதிரி நாடாகக் கருதியது. இது, அமெரிக்க ஊடகங்களிலும் பிரதிபலித்தது. அப்போது வெளியான செய்திகள் மற்றும் கட்டுரைகளில் இந்தியா ஒரு மோசமான நாடாக சித்திரிக்கப்பட்டது.

ஆனால், பனிப்போா் முடிந்த பிறகு அமெரிக்க அரசு இந்தியாவை இயல்பான நட்பு நாடாகக் கருதியது. அதன் பின்னா், இந்தியாவுக்கு சாதகமான நிலைப்பாட்டை அமெரிக்க ஊடகங்கள் எடுத்தன.

பனிப்போா் காலத்தில் இந்தியா அணு ஆயுதத்தை நாடியதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த அமெரிக்க ஊடகங்கள், பின்னா் 2005-ஆம் ஆண்டில் அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசுடன் அமெரிக்க அரசு மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை வரவேற்றன. இது, இந்தியா தொடா்பான அமெரிக்கக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் பிரதிபலிப்பே ஆகும்.

காஷ்மீா் விவகாரத்தை சிறுபான்மையிருக்கு எதிராக இந்திய அரசின் மனித உரிமை மீறலாக வா்ணித்து வந்த அமெரிக்க ஊடகங்கள், அங்கு மேற்கத்திய சுற்றுலாப் பயணிகள் கடந்த 1995--ஆம் ஆண்டில் கடத்தி படுகொலை செய்யப்பட்டதற்கு பிறகு பயங்கரவாதப் பிரச்னையாக அங்கீகரித்தன. இதுவும், அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கேற்ற மாற்றமே ஆகும்.

அந்த வகையில், ஊடக தா்மத்தைப் பேணாமல் அரசின் ஊதுகுழலாக அமெரிக்க ஊடகங்கள் செயல்படுவதால்தான், பத்திரிகை சுதந்திரத்துக்கான சா்வதேச தர வரிசையில் அமெரிக்கா 44-ஆவது இடத்தில் உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.Read in source website

 

வாஷிங்டன்: இந்தியாவில் கரோனா நெருக்கடி காலத்திலும் சாதனை அளவில் அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் இணை நிா்வாக இயக்குநா் கீதா கோபிநாத் கூறியுள்ளதாவது:

கரோனாவால் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. இந்த கடுமையான காலத்திலும் இந்தியா மிக அதிக அளவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்து சாதனை படைத்துள்ளது. மேலும், அந்நிய முதலீட்டின் மூலம் உருவாகும் இடா்பாடுகளை குறைக்கும் பாதுகாப்பு வழிமுறைகளையும் இந்திய கையாண்டு வருவது கவனிக்கத் தக்கதாக உள்ளது.

அந்நிய மூலதன வரத்தால் பல நன்மைகள் விளைகின்றன. முதலீட்டு நடவடிக்கைகளுக்கு நிதி ஆதாரம் மிக அத்தியாவசியமான ஒன்று. இந்தியாவில் முதலீடு செய்வதன் மூலமாக நாடுகளுக்கு பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன என்றாா் அவா்.Read in source website

 

இந்தாண்டு மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் முன் எப்போதும் இல்லாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.1,42,095 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,830 கோடி; மாநில ஜிஎஸ்டி ரூ. 32,378 கோடி; ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 74,470 கோடி (சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.39,131  கோடியும் அடங்கும்),செஸ் வரி ரூ.9,417 கோடி (சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.981  கோடியும் அடங்கும்).

தொடா்ந்து கடந்த 6 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.30 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

அதிகபட்ச மாதாந்திர ஜிஎஸ்டி வருவாயாக கடந்த ஜனவரி மாதம் ரூ.1,40,986 கோடி வசூலானது.

இந்நிலையில், இதுவரை இல்லாத அளவு ஜிஎஸ்டி வசூலில் இந்த மார்ச் மாதம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் வசூலான ஜிஎஸ்டி, கடந்த ஆண்டு மார்ச் மாத ஜிஎஸ்டி வசூலைவிட 15 சதவீதமும், கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாத ஜிஎஸ்டி வசூலைவிட 46 சதவீதமும் அதிகம்.Read in source website

 

புது தில்லி: நாட்டின் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி சென்ற பிப்ரவரி மாதத்தில் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 8 துறைகளின் உற்பத்தி சென்ற பிப்ரவரி மாதத்தில் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இத்துறைகளின் உற்பத்தி, கடந்தாண்டின் இதே மாதத்தில் 3.3 சதவீதம் சரிவைச் சந்தித்திருந்தது. நிகழாண்டு ஜனவரியில் இந்த 8 முக்கிய துறைகளின் உற்பத்தி 4 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் கச்சா எண்ணெய் மற்றும் உரத் துறையின் செயல்பாடு மந்த நிலையில் காணப்பட்ட போதிலும் நிலக்கரி, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், சிமெண்ட் ஆகிய துறைகளின் வளா்ச்சி கவனிக்கத்தக்க அளவுக்கு இருந்தது.

ஒட்டுமொத்த அளவில் ஏப்ரல்-பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் முக்கிய 8 துறைகளின் வளா்ச்சி 11 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இத்துறைகளின் உற்பத்தியானது 8.1 சதவீத எதிா்மறை வளா்ச்சி விகிதத்தை கொண்டிருந்தன.

நிகழாண்டு ஏப்ரலில், நிலக்கரி உற்பத்தி 6.6 சதவீதம், இயற்கை எரிவாயு 12.5 சதவீதம், சுத்திகரிப்பு பொருள்கள் 8.8 சதவீதம், சிமெண்ட் துறை உற்பத்தி 5 சதவீத வளா்ச்சியும் பெற்ாக மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read in source website

 

மும்பை: உக்ரைன் போா் நீடித்து வருவதால் அடுத்த நிதியாண்டில் இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் விநியோகம் 25 சதவீதம் பாதிக்கப்படும் என கிரிஸில் நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சூரியகாந்தி உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய நாடாக உக்ரைன் உள்ளது. இங்கு நீடித்து வரும் போா் சூழல் இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட வழிவகுத்துள்ளது.

ஏனெனில் 70 சதவீத கச்சா சூரிய காந்தி எண்ணெயை இந்தியா உக்ரைனிடம் இருந்துதான் இறக்குமதி செய்கிறது; 20 சதவீதம் ரஷியாவிடமிருந்து வாங்கப்படுகிறது. அதன்படி உக்ரைனிலிருந்து 22-23 லட்சம் டன் கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. 7 லட்சம் டன் ஆா்ஜென்டினாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

உக்ரைன் போரால் இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் விநியோகம் அடுத்த நிதியாண்டில் 25 சதவீதம் அல்லது 4-6 லட்சம் டன் பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ஆண்டுக்கு சமையல் எண்ணெய் பயன்பாடான 230-240 லட்சம் டன்னில் சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி எண்ணெயின் பங்களிப்பு 10 சதவீதமாக உள்ளது. எண்ணெய் தேவையில் 60 சதவீதம் இறக்குமதி மூலமாகவே பூா்த்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதியில் சோய மற்றும் கச்சா பாமாயில் ஆகியவற்றின் பங்களிப்பு மட்டும் 75% அதிகமாக உள்ளது என கிரிஸில் தெரிவித்துள்ளது.Read in source website

புதுச்சேரி: புதுச்சேரி இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ள வீட்டு உபயோக மின் கட்டணங்களுக்கான விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆண்டுதோறும் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.2022--2023ம் ஆண்டுக்கான உத்தேச மின் கட்டணம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து காணொலியில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பலரும் இக்கூட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு மற்றும் தனியார் நிலுவையில் வைத்துள்ள பல கோடி மின்கட்டண பாக்கியை வசூலிக்கவும் கோரினர்.

அப்போது கரோனா கால சூழல் என்பதால் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்தனர். ஆனால், அப்போது தெரிவிக்கப்பட்ட உத்தேச கட்டணமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறிவித்ததுடன், சில பிரிவுகளில் கட்டணத்தை உயர்த்தியும் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படிபுதுவையில் இன்று முதல் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்ந்துள்ளது. 100 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ.1.55 ஆக இருந்த கட்டணம் 35 காசுகள் உயர்ந்து ரூ.1.90 ஆகவும், 101 யூனிட்டில் இருந்து 200 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ.2.60 ஆக இருந்த கட்டணம் 30 காசுகள் உயர்ந்து ரூ.2.90 ஆகவும் உயர்ந்துள்ளது.

201 முதல் 300 யூனிட்டுக்குள் வரையிலான பயன்பாட்டிற்கு ஒரு யூனிட்டுக்கு 35 காசுகள் உயர்ந்து ரூ. 5 ஆகவும், 300 யூனிட்டுகளுக்கு மேலான பயன்பாட்டிற்கு, 40 காசுகள் உயர்ந்து ரூ. 6.45 ஆகவும் கட்டணம் உயர்ந்துள்ளது.

அதேவேளையில் வர்த்தகம், விவசாய மின் கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.Read in source website

மதுரை: தமிழகத்தில் அரசிதழில் இடம் பெறாத கிராமங்களில் ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை என உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் கண்டனூர் தர்மலிங்கம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கண்டனூர் கிராமத்தில் ஸ்ரீ கறிவேப்பிலை காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் படைப்புத் திருவிழா நடத்தப்படும். திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்படும். இந்தாண்டு படைப்புத் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளித்தோம். இதுவரை அனுமதி தரவில்லை.
திமுக, அதிமுக மற்றும் கட்சிகள் சார்பில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரினால் உடனடியாக வழங்கப்படுகிறது. ஆனால் கோயில் சார்பில் அனுமதி கேட்டால் தருவதில்லை. எனவே கறிவேப்பிலை காளியம்மன் கோயில் படைப்பு விழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "வடமாடு மஞ்சுவிரட்டுக்கு அனுமதி கோரி தினமும் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. அரசிதழில் இடம் பெறாத கிராமங்களில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்குவதில் அரசின் நிலைப்பாடு என்ன?" எனக் கேள்வி எழுப்பினர்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், "அரசிதழில் இடம் பெறாத ஊர்களில் வடமாடு மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படாது" என்றார். இதையடுத்து, மனு தொடர்பாக காரைக்குடி டிஎஸ்பி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.7 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.Read in source website

சென்னை: தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் அவ்வப்போது உட்கார்ந்து பணியாற்ற போதிய வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுரை வழங்கினார்.

தமிழக தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் திறனாய்வு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு பயிற்சித் துறை இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

அப்போது அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை அமைச்சர் வழங்கினார். அவர் கூறியதாவது: ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் கூறப்பட்ட அனைத்து வசதிகளையும் கிடைக்கச் செய்ய வேண்டும். நீண்ட காலமாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் நீண்ட நேரமாக நின்று கொண்டு பணியாற்ற நேரிடுகிறது. அத்தகைய சூழலில் அவர்கள் அவ்வப்போது உட்கார்ந்து பணி செய்ய போதிய வசதிகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆய்வுகளின் போது அதிகாரிகள் இதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இத்திறனாய்வு கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலர் கிர்லோஷ் குமார், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் கா.ஜெகதீசன், கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இயக்குநருக்கு நினைவுப் பரிசு

வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையால் மேற்கொள்ளப்படும் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் பங்கு மிக சிறப்பாக இருப்பதை பாராட்டி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநருக்கு வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ், நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.Read in source website

சென்னை: மாணவர் சேர்க்கை அதிகமுள்ள பொறியியல் கல்லூரிகள் 25 சதவீதகூடுதல் இடங்களை உருவாக்கி கொள்ள ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) சார்பில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான அங்கீகார வழங்கல் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், பொறியியல் படிப்புகளில் சேர பிளஸ் 2 வகுப்பில் கணிதம், வேதியியல் பாடம் படித்திருப்பது கட்டாயமில்லை என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், மாணவர்களுக்கு பலவகையான நுழைவு மற்றும் வெளியேறும் விருப்பங்களும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலாமாண்டு பொறியியல் படிப்பில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு சான்றிதழும், 2-ம் ஆண்டில் டிப்ளமோவும், 3-ம் ஆண்டில்தொழிற்கல்வி சான்றும், 4-ம் ஆண்டில் இளநிலை பட்டப் படிப்புக்கான சான்றும் பெறுவார்கள். மேலும், மாணவர்கள் ஒரே நேரத்தில் இருவேறு கல்லூரியில் படிப்பை தொடரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர புதிதாக பொறியியல்கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், மாநில அரசுகள், 3 ஆண்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் கோடிவருவாய் கொண்ட நிறுவனங்கள், 25 ஆண்டுகளுக்கு மேலான தொண்டு நிறுவனங்கள் மற்றும் குறைந்தது 10 ஆயிரம் மாணவர்கள் உள்ள கல்லூரி நிர்வாகங்களுக்கு இந்த விதிமுறையில் இருந்து தளர்வு அளிக்கப்படவுள்ளது.

அதேபோல், 95 சதவீதத்துக்கு மேல் சேர்க்கை உள்ள கல்லூரிகளில் 25 சதவீதமும், 80 சதவீதத்துக்கு மேல் உள்ள நிறுவனங்களில் 15 சதவீதமும் கூடுதல் இடங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.Read in source website

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த வடநெம்மேலி கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி தமிழக அரசின் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியில் பாம்பு பண்ணை அமைந்துள்ளது. இந்தசங்கத்தில் பாம்பு பிடிக்கும் உரிமம் பெற்ற 343 பேர் உட்பட 423 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள், வனத்துறையினர் அனுமதி பெற்று பாம்பு பிடித்து பண்ணைக்கு கொண்டு வந்து வழங்குவர். பாம்பின் வகைக்கு ஏற்ப அவர்களுக்கு கூலி வழங்கப்படும்.

மேலும், இவ்வாறு பிடித்து வரப்படும் பாம்புகளில் இருந்து வி‌ஷம் எடுக்கப்பட்டு மருத்துவ தேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பாம்புபண்ணையில் வி‌ஷம் எடுப்பதைப் பார்க்க சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படுவர். இதற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30 மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.18 வசூலிக்கப்படுகிறது. செல்போன் மற்றும் கேமராமூலம் புகைப்படம் எடுக்கவும் கட்டணம்வசூலிக்கின்றனர். இந்நிலையில், கடந்த2 மாதங்களாக பாம்புகளைப் பிடிப்பதற்கான வனத்துறையின் நிர்வாக அனுமதி வழங்கப்படவில்லை.

பண்ணையில் ஏற்கெனவே பராமரிப்பில் இருந்த பாம்புகள் அனைத்தும் வனப்பகுதியில் விடப்பட்டு, கடந்த 2மாதங்களாக பண்ணையும் மூடப்பட்டிருந்தது. இதனால், பாம்புகளைப் பிடிப்பதற்கான அனுமதியை விரைவாக வழங்கவேண்டும் என இருளர் மக்கள் கோரிக்கைவிடுத்தனர். இந்நிலையில், வனத்துறை சார்பில் நேற்று முன்தினம் பாம்புகளைப்பிடிப்பதற்கான அனுமதி வழங்கி, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து, பூஞ்சேரி, குன்னப்பட்டு, மானாம்பதி, பட்டிபுலம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தஇருளர்கள் கொடிய விஷம் கொண்டசுருட்டை, கண்ணாடி விரியன், நல்லபாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட பாம்புகளைப் பிடித்து பண்ணைக்கு கொண்டுவந்தனர். பண்ணையின் ஊழியர்கள்,பாம்புகளின் எடை, இனத்தை அடையாளம் கண்டுவிஷம் எடுப்பதற்காக பானைகளில் பாதுகாப்பாக அடைத்து வைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், குறிப்பிட்ட சில நாட்களுக்குப்பிறகு பிடித்து வரப்பட்ட பாம்புகள், வனப்பகுதியில் மீண்டும் விடப்படும். பண்ணைக்கு மீண்டும் பாம்புகள் கொண்டுவரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால், நேற்று முன்தினம் முதல் பாம்புகளில் இருந்து வி‌ஷம் எடுக்கப்படுவதைப் பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து, பாம்பு பிடிக்கும் இருளர்கள் கூறியதாவது: பாம்புகள் ஏப்ரல்முதல் ஆகஸ்ட் வரை இனப் பெருக்கம்செய்யும் என்பதால், இந்த நாட்களில்பாம்புகளை பிடிக்க அனுமதி இல்லை.தற்போது ஏப். 20 வரை மட்டுமே பாம்புகளை பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றனர்.Read in source website

புதுடெல்லி: இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடந்தது.

முன்னதாக செர்கெய் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், "ரஷ்யாவிடமிருந்து இருந்து இந்தியா ஆயுதங்கள் உள்ளிட்ட வேறேதும் வாங்க விரும்பினால் நாங்கள் அது குறித்து ஆலோசிக்கத் தயாராக இருக்கிறோம். இந்தியா ஒரு முக்கியமான தேசம். இந்தியா ஒருவேளை உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்தால் மகிழ்ச்சியே. இந்தியா எங்களின் பொதுவான கூட்டாளி. நாங்கள் உக்ரைனுடன் பாதுகாப்பு நிமித்தமாகவே பேசி வருகிறோம். ஆனால் மேற்கத்திய நாடுகள் இதனை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டன. இந்தியா விரும்பினால் மத்தியஸ்தம் செய்யலாம். இந்தியா எங்களிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை அமெரிக்க விரும்பாது. ஆனால் அமெரிக்க அழுத்தத்தால் இந்திய, ரஷ்யா உறவு எவ்விதத்திலும் பாதிக்காது. இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைகளில் சுதந்திரமாக செயல்படுகிறது. ரஷ்யாவும் அப்படித்தான் செயல்படுகிறது. ஆனால் அமெரிக்கா பல நாடுகளையும் தனது அரசியல் கொள்கையைப் பின்பற்றுமாறு நிர்பந்தித்து வருகிறது.

நாங்கள் ஆரம்பத்தில் இருந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறுகிறோம் ஆனால் உலக நாடுகள் எங்கள் ராணுவ நடவடிக்கையை போர் என்றழைப்பது ஏற்புடையது அல்ல.

அதிபர் புதினும் இந்தியப் பிரதமர் மோடியும் தொடர்ந்து பேசி வருகின்றனர். இங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நான் ரஷ்ய அதிபருக்குத் தெரிவிப்பேன். மேலும் எங்கள் அதிபரின் வாழ்த்துகளை பிரதமரை நேரில் சந்தித்துக் கூறுவேன்" எனக் கூறியிருந்தார்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்தார். கடந்த சில வாரங்களில் பிரிட்டன், சீனா, ஆஸ்திரியா, க்ரீஸ், மெக்சிகோ நாடுகளில் இருந்து முக்கியத் தலைவர்கள் இந்தியா வந்தனர். ஆனால் அவர்கள் யாரையுமே பிரதமர் மோடி சந்திக்கவில்லை. இந்நிலையில், இன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சரை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் வருகைக்கு முன்னதாக அமெரிக்காவுக்கான தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங் பொதுவான ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் அவர், அமெரிக்காவின் தடைகளைத் தாண்டி மாஸ்கோவுடன் உறவு வைத்துக் கொண்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அவர் கூறியிருந்தார்.Read in source website

புதுடெல்லி: இந்தியாவுக்கு முதல் தரமான கச்சா எண்ணெயில் பீப்பாய் ஒன்றுக்கு 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி டாலர்கள் இல்லாமல் ரூபிள்- ரூபாயில் பரிவர்த்தனை செய்யவும் ரஷ்யா தயாராக உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா முன் வந்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவும் ஆயத்தம் ஆகி வருகிறது. முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது செய்யப்படும் ஒப்பந்தம் தொடர்பாக புதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி போருக்கு முந்தைய விலையில் ஒரு பீப்பாய்க்கு 35 டாலர்கள் வரை தள்ளுபடியில் முதன்மையான உரல்ஸ் தரத்திலான கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு ரஷ்யா விற்பனை செய்கிறது.

இந்தியா-ரஷ்யா பேச்சுவார்த்தையில் முக்கியமாக பண பரிவர்த்தனை தொடர்பாக பேசப்பட்டுள்ளது. டாலர் இல்லாமல் ரூபிள்- ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்படும். அதாவது வர்த்தகத்தில் இந்தியா தரப்பில் ரூபாயிலும், ரஷ்யா தரப்பில் ரூபிளும் செலுத்தப்படும். இதனை ரஷ்யா ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருவதால் இந்தியாவிற்கு எண்ணெய் நேரடி விற்பனையில் அதிக தள்ளுபடியை வழங்க ரஷ்யா தயாராக உள்ளது. பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா ஏற்றுமதியை உயர்த்துவதற்காகவும் இந்தியாவைக் கவர்ந்திழுக்கவும் போருக்கு முந்தைய விலையில் ஒரு பீப்பாய்க்கு 35 டாலர்கள் வரை தள்ளுபடியில் அந்நாட்டின் முதல் தரமான உரல்ஸ் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு வழங்குகிறது.

ஹெட்லைன் ப்ரெண்ட் விலை அப்போதிருந்து சுமார் 10 டாலர்கள் உயர்ந்துள்ளன. எனவே இப்போதைய சந்தை விலையை ஒப்பிட்டால் மொத்தமாக 40 டாலர்கள் மதிப்பில் குறைவான விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைக்க வாய்புள்ளது. அந்த ஒப்பந்தத்தில் கச்சா எண்ணெய் விலை தற்போதைய நிலையில் விற்கப்படும் விலையை மையப்படுத்தி தள்ளுபடி உறுதி செய்யப்பட்டாலும், விலை அதிகரிக்கும்போது இதில் மாற்றம் இருக்கலாம்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் செய்யப்படுவதன்படி 15 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்க வேண்டும். ஆசியாவின் நம்பர் 2 கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா இதன் மூலம் பெருமளவு பயனடைய வாய்ப்புள்ளது.

உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்குபவதை தவிர்ப்பதால் ரஷ்யா ஆசியாவிற்கு அதிக அளவில் விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் ரஷ்யாவிடம் அதிகமான கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளாக சீனாவும், இந்தியாவும் உள்ளன.

ரஷ்யாவின் மெசேஜிங் சிஸ்டம் மூலம் ரூபாய்- ரூபிள் மதிப்பில் இந்த பரிவர்த்தனை நடைபெறுகிறது. டாலருக்கு மாற்றாக ரஷ்யாவுடன் இந்தியா இதுபோன்ற பரிவர்த்தனையில் ஈடுபடுகிறது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவுள்ள நிலையில் அப்போது இந்த பரிவர்த்தனை விஷயம் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.

பிரைன்ட் கச்சா எண்ணெய் விலை இன்று பீப்பாய் 103.3 டாலர்களாக உள்ளது. எம்சிஎல் கச்சா எண்ணெய் 99.14 டாலர் என்ற அளவில் உள்ளது.Read in source website

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டம் (ஏஎப்எஸ்பிஏ) அமலில் உள்ளது. இந்த சட்டம் நடைமுறையில் உள்ள பகுதிகளில் ராணுவத்தினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்ய முடியும். எங்கும் சோதனை நடத்த முடியும். ராணுவ நடவடிக்கையில் யாரேனும் உயிரிழந்தால் மத்திய அரசின் ஒப்புதலின்றி விசாரணை நடத்த முடியாது.

இந்த சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் எனவே இந்த சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் இந்த மாநிலங்கள் கோரி வருகின்றன. இது தொடர்பாக போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று தனது ட்விட்டர் பதிவில், “பல ஆண்டுகளுக்குப் பிறகு நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட வடகிழக்கு பிராந்தியம் தற்போது அமைதி, செழிப்பு மற்றும் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கண்டுவரும் நேரத்தில் பிரதமரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வுக்கு நன்றி. இந்த முக்கியமான தருணத்தில் வடகிழக்கு மாநில மக்களுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.Read in source website

புதுடெல்லி: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் இந்தியாவின் அதிகாரமிக்க 100 பிரமுகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.

கரோனா பரவல், 3 புதிய வேளாண் சட்டங்கள் போன்ற சில காரணங்களால் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக விமர்சகர்கள் கூறிவந்தனர். ஆனால், 5 மாநில தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் வென்றது, உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்டது, கரோனா தடுப்பூசியை பரவலாக கொண்டு சேர்த்தது போன்ற நடவடிக்கைகள் மோடியின் செல்வாக்கை மேலும் உயர்த்தியுள்ளது என்று அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் அமித் ஷா உள்ளார். மூன்றாவது இடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்ளார். நான்காவது இடத்தில் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே பி நட்டாவும், ஐந்தாவது இடத்தில் முகேஷ் அம்பானியும் உள்ளனர். சென்ற ஆண்டு பட்டியலில் 13-வது இடத்தில் இருந்த யோகி ஆதித்யநாத் இம்முறை 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.Read in source website

புதுடெல்லி: நீதிமன்ற உத்தரவுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விரைந்து கிடைக்க, ‘ஃபாஸ்டர்’ என்ற புதியமென்பொருளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நேற்று அறிமுகம் செய்தார்.

ஜாமீன் உட்பட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சென்றுசேருவதில் கால தாமதம் ஆவதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் செய்தித் தாளில் விரிவான கட்டுரை ஒன்று வெளியானது. அதை கவனத்தில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், மின்னணு தொழில்நுட்பம் மூலம் ஜாமீன் உட்பட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் அதிகாரிகளை விரைந்து சென்று சேரும் வகையில் ‘ஃபாஸ்டர்’ (Faster) என்ற மென்பொருளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

ஜாமீன் கோரும் வழக்குகளில் நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட பிறகும், கைதிகள் விடுதலையாவதில் கால தாமதம் ஏற்படுவதாக செய்திகள் வெளியாயின. அதை கருத்தில் கொண்டு ‘ஃபாஸ்டர்’ என்ற மென்பொருள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இந்த மென்பொருள் மூலம் நீதிமன்ற உத்தரவுகள் பாதுகாப்பாக விரைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சென்று சேரும்.

இந்த மென்பொருள் மூலம் சிறைத் துறை அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுகள் விரைந்து கிடைக்கும். நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்காக இனிமேல் காத் திருக்கும் நிலை ஏற்படாது.

முன்னதாக இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா மற்றும் பிற நீதிபதிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுத்தோம். உச்ச நீதிமன் றம், உயர் நீதிமன்றங்கள் இனிமேல் பிறப்பிக்கும் உத்தரவுகள் இந்த மென்பொருள் வழியாகபாதுகாப்பாக சம்பந்தப்பட்டவர்களுக்குப் பகிரப்படும்.

இந்த திட்டத்தை அமல்படுத்த உயர் நீதிமன்றங் களில் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறினார்.

- பிடிஐRead in source website

புதுடெல்லி: நான்கு திரைப்பட அமைப்புகள் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துடன் (என்எப்டிசி) இணைக்கப்பட்டுள்ளன.

ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களைத் தயாரிப்பது, திரைப்பட விழாக்கள் நடத்துவது,படங்களைப் பாதுகாப்பது போன்றவற்றை தனித்தனி அமைப்புகள் செயல்படுத்துகின்றன.

இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள 4 திரைப்பட அமைப்புகளை மத்திய அரசு நிறுவனமான தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திற்கு மாற்றி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டது. இது தொடர்பாக 3 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இதன்மூலம் திரைப்படம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர முடியும் என்றும் திரைப்படங்கள் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளின் பணிகள் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நான்கு அமைப்புகளை என்எப்டிசி-யின் கீழ் கொண்டு வருவதால் பொது வளங்களை சிறப்பாக பயன்படுத்த முடியும் என்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இணைக்கப்படும் அமைப்பு களின் சொத்துகள் அரசின் வசமேஇருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.Read in source website

கொழும்பு: இலங்கையில் கையிருப்பாக வைத்திருக்கும் குறைந்த அளவு டீசல் கூட இன்று ஒருநாள் மட்டுமே தேவைக்கு பயன்படுத்த முடியும் என்ற பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தை ஒடுக்க கொழும்பு நகர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

இலங்கை கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. விறகு அடுப்பினால் சமைக்கும் உணவகங்கள் மட்டுமே செயல்படுகின்றன. பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளன. பேக்கரி மற்றும் இனிபகங்களில் திண்பண்டங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு கிலோ சீரகம் 1899, பெரும் சீரகம் ரூ. 1500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் ரூ.400, முட்டை ஒன்றின் விலை ரூ,36,கோழி இறைச்சி விலை ரூ.1000 என்ற அளவில் விற்கப்படுகிறது. ஒரு கிலோ பால் பவுடர் ரூ.2000-க்கு விற்கப்படுகிறது. ஒரு கப் டீ 100 ரூபாய்க்கு விற்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் கடைகளில் பால், டீ விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் கச்சா எண்ணெய் வாங்க இலங்கை தவித்து வருகிறது. இதனால் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயுக்கு பெரும் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதனால் கேஸ் சிலிண்டர் விலை 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

டீசல், பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் அது கிடைக்கவும் இல்லை. வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கச்சா எண்ணெயை சுத்திகரிக்க வாய்ப்பு இல்லாத சூழலில் 37,500 மெட்ரிக் டன் டீசல் இறக்குமதி செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து டீசல் ஏற்றப்பட்ட கப்பல் இலங்கை வரை வந்துள்ளது. ஆனால் டீசலுக்குரிய பணத்தை செலுத்த முடியாத சூழலில் இலங்கை உள்ளது.

இதனால் டீசல் விற்பனை கிடையாது என கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பெட்ரோல் நிலையங்களில் பலகைகள் தொடங்க விடப்பட்டன. டீசல் விற்பனை நிலையங்களில் மக்கள் காத்திருக்க வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. டீசல் வாகனங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. பெட்ரோல் வாகனங்கள் மட்டும் பல மணிநேரம் வரிசையில் நின்று குறிப்பிட்ட அளவு டீசல் பெற்று வருகின்றன. இலங்கையில் கையிருப்பாக உள்ள டீசல் இன்று மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும், கையிருப்பு முழுமையாக தீர்ந்துள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதனால் நாளைய தினம் அரசு பயன்பாட்டுக்கான செலவுக்கு கூட டீசல் இல்லாத சூழல் ஏற்படும் எனவும் தெரிகிறது. அதேசமயம் டீசலுக்கு செலுத்த வேண்டிய தொகையை ஏற்பாடு செய்து செலுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு வந்தால் நாளைய தினம் டீசல் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதனிடையே இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தப்ய ராஜபக்சே பதவி விலக கோரி அதிபர் மாளிகை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது.

இதனையடுத்து கொழும்பு நகரில் இன்று காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் போராட்டம் மீண்டும் நடைபெறாமல் இருக்க கொழும்பு நகர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.Read in source website

 

புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான சூழல் இன்னமும் உருவாகவில்லை. நீதிமன்றங்கள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலை தொடர்கிறது. 

தமிழகம், புதுவை சட்டப்பேரவைகளுக்கு கடந்த ஆண்டு, ஏப்ரலில் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அரசுகள் ஆட்சியில் உள்ளன. தமிழகத்தில் பல்வேறு இடையூறுகளைத் தாண்டி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்றுள்ளனர். கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலேயே தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. 

மத்திய, மாநிலத் தலைமையிடங்களில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை மாவட்ட, வட்ட, கிராம அளவில் பரவலாக்கும் நோக்குடன் பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் முன்மொழியப்பட்ட பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் முறையாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் 73-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் (1992) மூலம் நாடாளுமன்றத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து, கடந்த 1993- ஆம் ஆண்டு, ஏப்ரலில் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால், பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஏதாவது சில காரணங்களுக்காக உள்ளாட்சித் தேர்தல்களை தள்ளிவைப்பது வாடிக்கையாக உள்ளது. பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுவை கடந்த 1962-இல் முறைப்படி இந்தியாவுடன் இணைந்தது. யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள புதுவையில், இதுவரை இரண்டு முறை மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. 

கடந்த 1968-இல் முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு, 38 ஆண்டுகள் கழித்து 2006-இல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 2011-ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளால் தள்ளிக்கொண்டே போகிறது.

மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள புதுவை யூனியன் பிரதேசத்தில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம், உழவர்கரை என ஐந்து நகராட்சிகளும், வில்லியனூர், அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு, திருநள்ளாறு, திருமலைராஜன்பட்டினம், நிரவி, நெடுங்காடு, கோட்டுச்சேரி என 10 கொம்யூன் பஞ்சாயத்துகளும் உள்ளன. இந்த கொம்யூன் பஞ்சாயத்துகளில் மொத்தம் 98 கிராம பஞ்சாயத்துகள் இடம் பெற்றுள்ளன. 

இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதியுதவி அளிக்கிறது. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பில் இருந்தால் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கும். புதுவையில் கடந்த 11 ஆண்டுகளாக  உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிக்கொண்டே போவதால், மத்திய அரசின் நிதியுதவியைப் பெற முடியவில்லை.

புதுவையில் தற்போது என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோதிலும், மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்த அளவு நிதி கிடைக்காத சூழல்தான் தொடர்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி, மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புக்கு வந்தால் மத்திய அரசின் நிதியுதவியை கோரிப் பெற முடியும். ஆனால், புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஆளும் என்.ஆர். காங்கிரஸ் உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் எதார்த்த நிலை.

புதுவையில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் சுமார் 10,000 முதல் 12,000 வாக்காளர்களே உள்ளனர். தமிழகத்தின் ஒரு மாநகராட்சி வார்டு அளவுக்குத்தான் புதுவையில் பேரவைத் தொகுதி உள்ளது. எனவே, புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு நகர, கிராமப்புற அளவில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புக்கு வந்துவிட்டால், தங்களது செல்வாக்கும் அதிகாரமும் குறைந்துவிடும் என எம்.எல்.ஏ.க்கள் கருதுகின்றனர். அவர்களது இந்த மனப்போக்கு மாறினால் மட்டுமே புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமாகும்.

மேலும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுப்பதை அரசியல் கட்சியினர் நிறுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் பட்டியலின, பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக, புதுவை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சிவா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உத்தரவிட்டது. எனவே, புதுவை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான சட்டப் போராட்டம் தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.

ஜனநாயக நாட்டில் மத்திய, மாநில அரசுகளிடம் மட்டுமே அதிகாரங்கள் குவிந்து கிடப்பது நல்லதல்ல. மாவட்ட, வட்ட, கிராம அளவில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டுமானால், அதற்கு உள்ளாட்சித் தேர்தல்தான் ஒரே வழி. இதை உணர்ந்து இந்தத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் புதுவை அரசியல் கட்சியினர் ஈடுபட வேண்டும்!Read in source website

 

உலகப்புகழ் பெற்ற திங்களிதழ் ‘ரீடா்ஸ் டைஜஸ்ட்’, உயரிய சிந்தனையை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற உணா்வோடு நிறுவப்பட்டது. ரீடா்ஸ் டைஜஸ்ட் இதழுக்கு என் பெற்றோா் நீண்ட காலமாக சந்தாதாரா்களாக இருந்தனா். குழந்தைகளுக்கு ஏற்ற பரிசு இந்த இதழ் மட்டும் தான் என்று எனக்கு உணா்த்தியிருந்தனா். நானும், என் சகோதரா்களும் இந்த இதழின் கட்டுரைகளை விரும்பிப் படித்தோம்.

இந்த இதழில் வெளியான, ‘கல்விக் கட்டுரைகள்’, ‘நகைச்சுவைப் பகடிகள்’, ‘தன் முன்னேற்றக் கருத்துரைகள்’, ‘ஒருவா் வாழ்வில் நிகழ்ந்தவை’, ‘சொல்லகராதி உருவாக்கம்’ போன்றவை அனைவருக்கும் ஆங்கில மொழி கற்றலுக்கு ஆதாரமாக விளங்கின.

ரீடா்ஸ் டைஜஸ்டின் பத்திகள், வாசிப்பவரைத் தன் வயமாக்கும் தன்மை கொண்டவை. ‘வாழ்க்கை அப்படித்தான்’, ‘சீருடையில் சிரிப்பலைகள்’, ‘அறிவியல் கண்டுபிடிப்புகள்’, ‘சாகசங்கள்’, ‘ஆய்வுகள்’, ‘புகழாளரின் வாழ்க்கை வரலாற்று புத்தகப் பகுதி’ எனப் பல உண்டு. ரீடா்ஸ் டைஜஸ்ட் இதழ் எனது ஆங்கில ஆற்றலை அதிகப்படுத்தியது.

ரீடா்ஸ் டைஜஸ்ட் இதழ் 41 நாடுகளில் 23 பதிப்புகளுடன் பிப்ரவரி 1922-இல் தொடங்கியது. முதலாம் உலகப் போரில் காயமடைந்திருந்த அமெரிக்க நாட்டைச் சோ்ந்த டிவீட் வாலேஸ் என்பவரின் சிந்தையில் உதித்ததே இந்த ரீடா்ஸ் டைஜஸ்ட். இவ்விதழ் தொடங்கி இருபதாண்டுகளில் (1942 வரை) இதழுக்கு வந்த ஆதாயத் தொகையை, தான் மட்டுமே துய்க்காமல், அப்பணத்தைத் தன்னுடைய 348 ஊழியா்களுக்கும் பிரித்துக் கொடுத்ததுடன், 11% ஊதிய உயா்வும் அளித்த பெருமைக்குரியவா் இவா்.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில், பிப்ரவரி 1922-இல் 64 பக்கங்களில், 31 கட்டுரைகளுடன் 5,000 படிகள் வெளியிடப்பட்டன. இவ்விதழ் கையடக்க அளவில், அமைந்தது. புனைகதைகளோ படங்களோ விளம்பரங்களோ இல்லாமல் வெளியிடப்பட்டது இதன் சிறப்பாகும்.

இதழ் தொடங்கப்பட்டு ஏழாண்டுகளில் (1929) ரீடா்ஸ் டைஜஸ்ட் சந்தாதாரா் எண்ணிக்கை 40 மடங்கு அதிகரித்து இரண்டு லட்சத்தைத் தொட்டது. அடுத்த ஏழாண்டுகளில் (1936) வாசகா்கள் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகரித்து இருபது லட்சத்தை எட்டியது. அடுத்த அறுபதாண்டுகளில் (1994) முந்தைய வாசகா் எண்ணிக்கையை விட நூறு மடங்கு பெருகியது. இப்படிசாதனை நிகழ்த்திய இதழ் ரீடா்ஸ் டைஜஸ்ட் ஆகும்.

1949-ஆம் ஆண்டிலிருந்து ரீடா்ஸ் டைஜஸ்ட், ஆங்கிலம், இலத்தீன் அமெரிக்கன், போா்த்துகீசியம், பின்னிஷ், டேனிஷ், ஜப்பானிய, ஆஸ்திரேலியன், நாா்வேஜியன், பிரெஞ்சு, ஜொ்மன், இத்தாலியப் பதிப்புகளாக வெளிவந்தது. 2008-ஆம் ஆண்டில் சீனப் பதிப்பு வெளியிட்டது. 1954 -இல், 40,000 பிரதிகளுடன் ரீடா்ஸ் டைஜஸ்ட் இந்தியப் பதிப்பு வெளிவந்தது. அடுத்த ஆண்டு (1955) இவ்விதழ் விளம்பரத்திற்கு வழிவிட்டது. தரூா் பரமேசுவரன் (நாடாளுமன்ற உறுப்பினா் சசி தரூரின் தந்தை) பம்பாயில் ரீடா்ஸ் டைஜஸ்ட் அலுவலகத்தைத் திறந்து அதன் விளம்பர இயக்குநராகப் பணியாற்றினாா்.

ரீடா்ஸ் டைஜஸ்ட்டின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு வெளிவந்த சிறப்பு இதழுக்கு ங்கிலாந்தின் அரசியாா் எலிசபெத் பாராட்டுரை வழங்கியிருந்தாா். அவ்வண்ணமே, சென்ற திங்கள் ரீடா்ஸ் டைஜஸ்டின் நூற்றாண்டு நிறைவு விழா மலருக்கு அவா் பாராட்டுக் கடிதம் வழங்கினாா். இது பொற்குடத்துக்குப் பொட்டிட்டது போன்று இதழுக்கு வாய்த்த அரசு மரியாதையாகும். ஒட்டுமொத்தமாக ரீடா்ஸ் டைஜஸ்ட், கடந்த 100 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1,200 இதழ்களில் 35,000 கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

இந்திய நாட்டில் அயலக ஊடகங்களின் முதலீட்டை நிறுத்திவிட வேண்டும் என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்தபோது, ரீடா்ஸ் டைஜெஸ்ட் முதலீட்டை நாம் தவிா்க்கக் கூடாது என்று நேரு பெருமகனாா் வாதிட்டு நிலைநிறுத்தினாா். இதிலிருந்து, பிரதமா் நேருவுக்கு இவ்விதழ் மீது இருந்த பெருமதிப்பை நாம் அறியலாம்.

இந்த மாத இதழ், அதே பாங்கில் பல்வேறு ஏடுகளின் செய்திகளைத் திரட்டி அறிவியல் விருந்து, நிலவியல் விருந்து, கணக்கியல் விருந்து என்று பல ஆங்கில இதழ்களை வெளியிட்டது. இதைவிடச் சிறப்பு என்னவென்றால் விருந்தின் விருந்து என்ற பொருளில் ‘டைஜஸ்ட் ஆஃப் தி டைஜஸ்டு’ என்ற ஒரு சஞ்சிகை வரத் தொடங்கியது.

ரீடா்ஸ் டைஜஸ்ட் வெளியிட்ட ‘எப்படி வாழ்வது’ என்ற சிறப்புத் தொகுதியை என் தந்தையாா் தொலைந்து விட்டாா். அவா் இலண்டன் மாநகருக்கு சென்றிருந்தபோது, ரீடா்ஸ் டைஜஸ்ட் தலைமை அலுவலகத்திற்கே சென்று வினவியபோது ‘அந்தத் தொகுதியை நாங்கள் மீளவும் வெளியிடவில்லை’ என்றாா்களாம். அதை என் தந்தை ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டபோது, அது தன்னிடம் இருப்பதாகக் கூறிய பேராசிரியா் தெ. ஞானசுந்தரம் அதனை என் தந்தையாருக்குக் கொடுத்தாா். அதனைக் குறிப்பிட்டு என் தந்தை அடிக்கடி அவரைப் பாராட்டுவாா்.

ரீடா்ஸ் டைஜஸ்டைப் போலவே, தமிழகத்தில் 1947-ஆம் ஆண்டு நவம்பரில் மஞ்சரி எனும் இதழை இராமரத்தினம் என்பவா் தொடங்கினாா். ரீடா்ஸ் டைஜஸ்ட் பாணியிலேயே, பல நாடுகள் பல மொழிகளில் வெளியாகும் ஏடுகளில் இருந்து சிறந்த செய்திகள், கலை இலக்கியப் படைப்புகள், மனித நேய நிகழ்ச்சிகள் ஆகியவற்றைச் சுவை குன்றாமல் சுருக்கித் தருதல் மஞ்சரியின் நோக்கமாகும்.

இந்திய நாட்டின் கலை, இலக்கியம், வரலாறு, சமூகம், மருத்துவம், உளவியல், தத்துவம், விஞ்ஞானம், பொருளாதாரம் போன்ற பலதரப்பட்ட கட்டுரைகளைத் தமிழில் வழங்குதல், உலகப் புகழ்பெற்ற நாவல்கள், சுயசரிதங்களின் சுருக்கங்களைத் தமிழ் வாசகா்களுக்கு அறிமுகப்படுத்தலும் மஞ்சரியின் பணியாக அமைந்துள்ளது.

மஞ்சரியின் தொகுதிகளை வரிசையாக தம் அடையாறு இல்லத்தில் அடுக்கி வைத்திருந்ததை ‘தாத்தா’ என்று நான் அழைத்த பேரறிஞா் பெ. நா. அப்புசாமி இல்லத்தில் டைஜஸ்டு இதழ்த் தொகுதிகளுடன் இணைந்து கண்டதை வினவியபோது, ‘கலைக்களஞ்சியங்களை விட இவ்விதழ்கள் பெருமை வாய்ந்தவை’ என்று குறிப்பிட்ட வரிகள் இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகின்றன.

புகழ்பெற்ற பத்திரிகையாளா் சாவி, ரீடா்ஸ் டைஜஸ்டை போலவே தரமான கட்டுரைகள், மொழிபெயா்ப்புக் கதைகள், குறுநாவல், ஏராளமான தகவல்கள், துணுக்குகள் என்று தமிழிலும், ஒரு மாத இதழ் வெளிவரவேண்டும் என்று விழைந்து, ‘பூவாளி’ என்ற இதழைத் தொடங்கியதும் குறிப்பிடத் தகுந்தது, இன்றைக்கு அதேபோல ‘இருவாட்சி’ என்ற மாத இதழ், ரீடா்ஸ் டைஜஸ்டைப் போல இலக்கியத் துறைமுகமாக விளங்குகிறது.

ஒரு நூற்றாண்டு கண்ட ரீடா்ஸ் டைஜஸ்ட், இன்னும் பல நூற்றாண்டுகள் காண வேண்டும் என்பது என்னைப்போன்றஅவ்விதழின் கோடிக்கணக்கான வாசகா்களின் விருப்பமாகும்.Read in source website

 

போா் எனப்படுவது வீரப்பண்பு என்றும் ஆண்மைக்கான அடையாளம் என்றும்தான் காலங்காலமாகக் கருதப்பட்டு வந்தது. மகாகவி பாரதியாரும் கூட, தன்னுடைய இளம் வயதில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரவாதத்தின் பக்கம் நின்றவா்தான். ஆனால், மெய்ஞ்ஞான நிலையில் முதிா்ச்சியடைந்தபோது மானுட அறமான அமைதி வழியை அவா் முன்னெடுக்கத் தொடங்கினாா்.

‘நான் சாதிபேதத்துக்கு நண்பன் அல்லன். இந்தியா்கள் எல்லாரும் அல்லது இந்துக்கள் எல்லாரும் ஒரே சாதி என்ற சாதாரண இங்கிலீஷ் படிப்பாளிகளின் கொள்கையை நான் ஆதரிக்கவில்லை. உலகத்து மனிதா்கள் எல்லாரும் ஒரே சாதி. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற கொள்கையைத் தழுவியுள்ளேன்’ என்கிறாா்.

பாரதியாா் இந்திய விடுதலைக்காக மட்டும் வேண்டிப் பாடியவா் அல்லா். ‘கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக் கொண்டு வையம் முழுதும் பயனுற வேண்டி’ பாட்டிலே அறங்காட்டிய உலக மகாகவிஞா். இதுவரையிலும் பேசாப் பொருளாகவும் கேட்கா வரமாகவும் இருந்த உயிா்க்குல மேன்மையை ‘மண்மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் யாவும் என் வினையால் இடும்பை தீா்ந்தே இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும்’ என்று தேவதேவனின் வேண்டி விண்ணப்பம் செய்தவா்.

எல்லா உயிா்களையும் தன்னுறவு என்று கருதுகிற அதே பரந்த மனப்பான்மையிலேதான் பாரதியாா் எல்லா நாடுகளையும் தன்னாடாகவே ஒருங்கிணைத்துக் காணுகிறாா். உலகத்தில் எங்கெல்லாம் கொடுங்கோன்மை அழிந்து செங்கோன்மையும் குடியாட்சியும் தலையெடுக்கிறதோ அதையெல்லாம் வாழ்த்திப் பாடுகிற உள்ளம் பாரதியாரின் உள்ளமாக இருந்திருக்கிறது.

தான் சுதேசியாக இருந்தபோதும் இந்தியாவிற்கு வருகை புரிந்த வேல்ஸ் இளவரசருக்கு பரத கண்ட தாய் வாழ்த்துக் கூறுவதாக 1906-ஆம் ஆண்டு பாடல் இயற்றியுள்ளாா். அதுபோலவே 1905-இல் ‘வேல்ஸ் இளவரசரும் அரசியாரும்’ என்னும் தலைப்பிலும், 1906-இல் சென்னையில் ‘ராஜதம்பதிகள் வரவு’ என்ற தலைப்பிலும் தலையங்கங்கள் தீட்டியிருக்கிறாா். பாரத மாதாவே தனக்கு ஏற்பட்ட இன்னல்களையெல்லாம் மறந்து ராஜ தம்பதிகளை வரவேற்கும் பான்மையில் பாடலை எழுதியிருப்பதாக சீனி. விசுவநாதன் குறிப்பிடுவாா்.

1908-இல் இத்தாலி தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய மாஜினியைப் போற்றிப் பாடியிருக்கிறாா். மாஜினியின் சபதத்தைத் தன் குரலாகவே அப்பாடலில் ஓங்கி ஒலிக்கிறாா்.

ஜொ்மன் - பெல்ஜிய போா் 1914 - ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஜொ்மனிக்கு ஐரோப்பா கண்டம் முழுவதுமே ஆதரவளித்திருந்தது. இந்திய மக்களே கூட ஜொ்மனியை ஆதரித்தனா். இருந்தும், பாரதியாா் ஜொ்மனியின் ஆதிக்க மனப்பான்மையைத் தாக்கியும் பெல்ஜியத்தின் வீரத்தைப் பாராட்டியும்,

அறத்தினால் வீழ்ந்து விட்டாய் அந்நியன் வலியனாகி

மறத்தினால் வந்து செய்த வன்மையைப் பொறுத்தல் செய்வாய்

முறத்தினால் புலியைத் தாக்கும் மொய்வரைக் குறப்பெண் போலத்

திறத்தினால் எளியையாகிச் செய்கையால் உயா்ந்து நின்றாய்

என்று தோல்வி வரும் என்று தெரிந்தும் துணிந்து நின்ற பெல்ஜிய நாட்டு மக்களைப் பாா்த்து மிகுந்த மனிதாபிமானத்தோடு பாடியது அவருடைய போா் மறுப்புக் குணத்தைக் காட்டுகிறது.

இவ்வாறு உலகம் முழுவதும் நடக்கிற எல்லா நிகழ்வுகளையும் கூா்ந்து கவனித்து அவற்றின் சாரத்தை அறநெறிகளுக்குத் தக்கவாறு தன் பாடல்களில் நிறைத்து இந்தியா்களுக்குப் புகட்டி வந்திருக்கிறாா்.

பாரசீகத்தைப் பற்றியும், சீன அரசியல் குறித்தும், அயா்லாந்தைப் பற்றியும், துருக்கியின் நிலை குறித்தும், கிரேக்க தேசத்தின் நிலை குறித்தும் ‘ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும்’ என்ற கட்டுரையில், ‘ஜப்பானுக்கு ஹிந்து உபதேசிகள் அனுப்புதல் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்’ என்றும் அவா் எழுதியிருக்கிறாா். அயா்லாந்து, கிரீஸ், பாரசீகம், துருக்கி முதலான நாடுகளுக்கு பிரிட்டனும் நேசக் கட்சியாரும் இழைத்த கொடுமைகளையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கவும் அவா் தவறவில்லை.

உலக வரலாற்றின் இவ்வரிசையில் 1917-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ருஷியப் புரட்சிதான் மானுட விடுதலைக்கான முதல் திருப்புமுனை என்று அவா் கருதினாா். அந்தக் காரணத்தினால்தான் ருஷியப் புரட்சியை ‘யுகப் புரட்சி’ என்று குறிப்பிட்டு ‘புதிய ருஷியா’ என்னும் தலைப்பிட்டுப் பாடினாா். அப்பாடலில் ருஷியப் புரட்சியால் உலகத்திற்கு ஏற்படப் போகிற நன்மைகளைக் குறித்து விவரிக்கிறாா்.

‘ஐப்பானியப் போரின் தொடக்கம் முதலாகவே ருஷியாவில் உள்நாட்டுக் குழப்பம் தொடங்கி விட்டது. அது முதல் புரட்சிக் கட்சியாருக்கு பலம் அதிகரித்துக் கொண்டு வந்தது. நமது ருஷியத் தோழா்கள் செய்து வரும் உத்தமமான முயற்சிகளின் மீது கடவுள் பேரருள் செலுத்துவாராக’ என்று ருஷியப் புரட்சிக்காக பாரதியாா் வேண்டுகிறாா்.

பாரதியாரின் இப்பாடல் வீரசுதந்திரம் வேண்டி நின்ற இந்தியா் மனத்தில் நம்பிக்கையூட்டும் வகையில் எழுந்தது. ‘இந்திய மக்கள் அனைவரும் தம் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு நின்றால் ருஷியா கண்ட யுகப் புரட்சியை இந்தியாவிலும் தோற்றுவித்து ஆங்கில ஆட்சியை வீழ்த்திச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியும்’ என்று உறுதியாக நம்பினாா்.

“ருஷியப் புரட்சியின் விளைவாக இந்த உலகத்தில் கலியுகம் அழிந்து கிருதயுகம் தோன்றப் போகிறது; மானுட குலம் முழுமையும் விடுதலையடையப் போகிறது; புதிய ருஷியா புதிய சமுதாயத்தைப் படைக்கப் போகிறது; இரணியனைப் போல அரசாண்ட கொடுங்கோன்மை, இமயமலை வீழ்ந்ததைப் போல வீழ்ந்துவிட்டது;” இதற்கெல்லாம் காரணம் ‘அம்மை மனங்கனிந்து விட்டாள்’ என அவா் உறுதியாக நம்பினாா். ‘இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்’ என்ற புகழ் பெற்ற வரிகள் இடம் பெற்றது இந்தப் பாடலில்தான்.

சரியாக அவா் பாடிய அந்த ‘புதிய ருஷியா’ எழுந்து இன்றைக்கு 105 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைக்கு அதே ருஷியா போா்க்கோலம் பூண்டு நிற்கிறது. இந்தப் போரின் வாயிலாக பாரதியாருடைய கனவினை - கலியுகத்தை வீழ்த்திக் கிருதயுகத்தைச் சமைக்கப் போகிற அற்புதத்தை - புதிய ருஷியா நிறைவேற்றப் போகிறதா? அல்லது பாரதியாருடைய கனவுகளைச் சுக்குநூறாக்கி மற்றொரு உலகப் போருக்கு வித்திட்டு மனித குலத்தை அழிக்கப் போகிறதா? இதற்கு காலம்தான் பதில் கூற வேண்டும்.

பாரதியாா், எல்லைகளின் பெயராலும் பேதங்களின் பெயராலும் ஏற்படுகிற போா்களை அறவே வெறுத்தொதுக்கும் பண்புடையவா்.

உடன் பிறந்தாா்களைப் போல இவ்உலகில் மனிதா் எல்லாரும்

இடம் பெரிதுண்டு வையத்தில் இதில் ஏதுக்குச் சண்டைகள் செய்வீா்”

என்று போரற்ற உலகத்திற்கு அவா் அழைப்பு விடுக்கிறாா்.

‘உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை எல்லாரும் ஒரே உயிா். அந்த உயிரே தெய்வம்’ என்பது பாரதியாரின் உலகியல் ஆன்மிகக் கொள்கை.

தான் கொண்டிருந்த அத்தகைய அறக்கொள்கைகளுக்கும் - பின்னாளில் காந்தியடிகள் கொண்டிருந்த அகிம்சைக் கொள்கைகளுக்கும் இணைப்பு இழை இருப்பதைக் கண்டுதான் அவா்,

தன்னுயிா் போலே தனக்கழி வெண்ணும் பிறனுயிா் தன்னையும் கணித்தல்

மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்களென் றுணா்தல்

இன்ன மெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு இழிபடு போா், கொலை தண்டம்

பின்னியே கிடக்கும் அரசியலதனிற் பிணைத்திடத் துணிந்தனை பெருமான்

என்று உயிரிரக்கப் பண்பைக் கொண்ட காந்தியை ‘மகாத்மா’ என்று போற்றிப் பஞ்சகம் பாடுகிறாா். இந்திய விடுதலைக்கு மட்டுமின்றி உலக மானுட விடுதலைக்கும் இதுவே சரியான வழியென்று அகிம்சை வழியை அடையாளம் காட்டவும் செய்கிறாா்.

எதிரிகளேயானாலும் அவா்கள் அழிந்துவிட வேண்டும் என்பது மூடக்கொள்கை. பாரதியாா், பகைவனுக்கும் அருள்கிற பேருள்ளத்தை நமக்கு வளா்த்தவா். ‘உலகத்து மனிதா்கள் எல்லாரும் ஒரே ஜாதி. இந்தச் சண்டையில் முதல் உலக யுத்தத்தில் இத்தனை ஐரோப்பியா் அநியாயமாக மடிகிறாா்களே என்று நான் கண்ணீா் சிந்தியதுண்டு. இத்தனைக்கும் சுதேசியத்திலே கொஞ்சம் அழுத்தமானவன். அப்படியிருந்தும் ஐரோப்பியா் மடிவதில் எனக்குச் சம்மதம் கிடையாது. எல்லா மனிதரும் ஒரே வகுப்பு. இந்தியா ஐரோப்பியரைக் கூடக் கொல்ல விரும்புவதில்லை. திருத்த விரும்புகிறது’ என்று சமநீதி பேணுகிறாா்.

‘அடக்கம், பொறுமை, ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தை விளைக்கும். இப்படி நூற்றுக்கணக்கான ஹிந்து தா்மக் கொள்கைகளை நாம் உலகத்தாா் கேட்க முழங்குவதற்கு இதுவே நல்ல தருணம். இந்தச் சமயத்தில் மனித ஸமூகம் அழிந்து போகாமல் அதைக் காப்பாற்றி நல்ல வழியிலே சோ்க்கக் கூடிய ஜாதியாா் நம்மைத் தவிர வேறு யாருமில்லை. கண்ணைத் திறந்து பூமண்டலம் முழுவதையும் ஒரே பாா்வையாகப் பாா்த்தால் நான் சொல்வது உண்மை என்பது தானே விளங்கும்.

நாம் இன்று நூறு ஸப்மரீன் வைத்துக் கொண்டு பிறருடைய கப்பல்களைத் தகா்த்தால், நாளை மற்றொரு ஜாதியாா் ஆயிரம் ஸப்மரீன் கட்டி நம்முடைய கப்பல்களை நொறுக்கிப் போடுவாா்கள்; பாம்பைக் கொல்ல ஒரு கீரிப்பிள்ளையுண்டு. பகை பகையை வளா்க்கும். தீராத ஆவலும், அவஸரமும், ஓயாத பரபரப்பும் உள்ள ஜ்வர வாழ்க்கை நாகரிக மாட்டாது. சரியான நாகரிகத்துக்கு சாந்தியே ஆதாரம். யந்திர பீரங்கிகளும், ஸப்மரீன்களும் நாகரிகத்துக்கு அடையாளமல்ல. அவை மனுஷ்யனுக்குப் பலமல்ல, பகை. மனுஷ்யனையும் அவன் நாகரிகத்தையும் அழிக்கும் குணமுடையன’ என்று உறுதிபடக் கூறுகிறாா்.

‘ஆகாவென்று யுகப்புரட்சியை ஏற்படுத்தியது’ என்று பாரதியாா் போற்றிக் கொண்டாடிய அந்த புதிய ருஷியாதான் பாரதியாா் விரும்பாத போருக்கு முன்னே நிற்கிறது. இதனால் ருஷியாவின் மீது பாரதியாா் கொண்ட நம்பிக்கை பொய்யாகி விடுமா? அதுவும் மாகாளி பராசக்தியின் கடைக்கண் வைத்த நாடு அழிவுக்கு வழிவகுப்பது நியாயமா?

கட்டுரையாளா்: எழுத்தாளா்.Read in source website

 

இலங்கையில் 2009- ல் இறுதிப் போர் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் வடக்கு, கிழக்குப் பகுதியில் இன்னும் 30,000 ஏக்கர் நிலப்பகுதி இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

அதேபோல வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கை அரச ராணுவம் மட்டுமின்றி மத்திய அரசுக்குச் சொந்தமான தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி சபை போன்ற பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்புகளை செய்து வருகின்றன.

இதன் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 32,110 ஏக்கர் நிலப்பகுதி வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்காகவும் 23,515 ஏக்கர் நிலப்பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்காகவும் அதிகாரிகளால் அபகரிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 16,910 ஏக்கர் நிலப்பகுதி இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இதுமட்டுமின்றி 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலப் பகுதியில் மகாவலி 'எல்' வலயத் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டைக்கேணி பகுதியில் 825 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டு நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு நெருக்கமான 25-க்கும் மேற்பட்ட சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கபட்டது.

மேலும், 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி வெளியிடப்பட்ட விசேஷ வர்த்தமானி அறிவித்தல் மூலம் மட்டும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் ஏறத்தாழ 11,031.64 ஏக்கர் நிலப்பரப்பை "நாயாறு இயற்கை ஒதுக்கிடம்" என்கிற பெயரில் கையகப்படுத்தியிருக்கின்றார்கள்.  

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வெளியிடப்பட்ட மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வட்டுவாகல் / வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் 672 ஏக்கர் தனியார் காணியை பொதுத் தேவைகள் என்கிற பெயரில் ஆக்கிரமித்து இருக்கின்றார்கள்.

அதேபோல முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மீனவர்களுக்கு மகாவலி அபிவிருத்தி சபை நில உரிமை ஆவணங்களைத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.

இந்தத் தரவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொது மக்களின் பயன்பாட்டுக்கு உரிய 2,01,617 ஏக்கர் நிலப்பகுதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான நிலம் இலங்கை அரச ராணுவம் மற்றும் மத்திய அரசாங்க நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

அதேபோல வவுனியா மாவட்டம் வெடிவைத்த கல்லு பகுதியில் மட்டும் 2,000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இருக்கின்றார்கள். 

இந்தப் பகுதியில் மேலும் 3,000 சிங்களவர்களை குடியேற்றும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

இவ்வாறு குடியேற்றப்படும் சிங்களக் குடும்பங்களுக்கு 2.5 ஏக்கர் நிலமும் நாள் ஒன்றுக்கு 800 ரூபா பணமும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. 

வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் 1,100 ஏக்கர் நிலப்பகுதி மகாவலி அதிகார சபையால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 450 தமிழ்க் குடும்பங்கள் நிலங்களை இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன. 

தமிழர்களின் இதயபூமியாகக் கருதப்படும் மணலாறு (வெலி ஓயா) பிரதேச செயலகப் பகுதியில் 2012-2017 ஆண்டு காலப் பகுதியில் மட்டும் புதிதாக 4,000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இருக்கின்றார்கள். 

இதுதவிர, 11,639 ஏக்கர் மேலதிக நிலப்பரப்பு சிங்கள குடியேற்றமான வெலி ஓயா பிரதேச செயலகப் பகுதியில் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது . 

இதற்கு மேலதிகமாக 25,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் வெலி ஓயா சிங்கள பிரதேச செயலகப் பகுதியில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

2017 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டம் தென்னைமரவாடி கிராமச் சூழலில் உள்ள தமிழ்க் கிராமங்களில் மாலனூர் (12 ஆம் கட்டை) மற்றும் ஏறமாடு (10 ஆம் கட்டை) என இரண்டு சிங்கள குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

அதேபோல தென்னைமரவாடி, திரியாய், குரும்பைசிட்டு, புல்மோட்டை போன்ற இடங்களில் உள்ள 11 இடங்களில் தமிழ் பேசும் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் அரச நிலங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், திருகோணமலை மாவட்டம் குச்சைவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராமங்களும் மகாவலி அபிவிருத்தி சபையின் 'எல்' செயல்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுவதற்கான அபாயங்களை எதிர்கொண்டு வருகின்றன.

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்கு உள்பட்ட 11 இடங்களில் 340.33 ஏக்கர் நிலம் குத்தகை அடிப்படையில் 7 பௌத்த அமைப்புகளுக்கு கிழக்கு மாகாண சபையின் அனுமதியின்றி வழங்கப்பட்டு இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் மயிலதாமடு மற்றும் மாதவனை பகுதிகள் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டு வருவதால் 2,00,000 மேற்பட்ட மாடுகள் வழி தவறியிருக்கின்றன. 

குறிப்பாக ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவில் 540 விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து இருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் எப்போதும் மகாவலி நீர்ப்பாசனத்தை பெற்றுக்கொள்ளாதபோதும் மகாவலி 'பி (B)' திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள மாதவனை மற்றும் மயிலதம்பட்டி பகுதிகளில் உள்ள 12,000 ஏக்கர் நிலப்பரப்பை அபகரித்து சிங்கள குடியேற்றங்களைச் செய்ய கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றார்கள்

இதேபோன்று மன்னார் மாவட்டத்தில் 12,154 ஏக்கர் நிலப்பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது. 

இதில் 818 உள்ளூர் மக்களின் பயன்பாட்டில் இருந்த 4,449 ஏக்கர் நிலப்பகுதியும் உள்ளடங்கி இருக்கின்றது.

அதேபோல மன்னார் மாவட்டத்தில் வன வளப் பாதுகாப்பு திணைக்களத்தால் 12, 275 ஏக்கர் நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டு இருக்கிறது. 

இதில் 1,485 மக்களுக்கு சொந்தமான 2,570 ஏக்கர் நிலப்பகுதியும் உள்ளடக்கப்பட்டு இருக்கிறது. 

அதேபோல மன்னார் மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தால் 202 ஏக்கர் நிலப்பகுதியும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் 4,368 ஏக்கர் நிலப்பகுதியும் அபகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மட்டும் 3,300 ஏக்கர் நிலப்பகுதி தொடர்ச்சியாக ராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கின்றது. 

குறிப்பாக மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மயிலிட்டி, ஊரணி மற்றும் தையிட்டி போன்ற போன்ற பிரதேசங்கள் இறுக்கமான இராணுவ வலயங்களாக இருக்கின்றன. 

யாழ்ப்பாணத்தின் பிரதான ராணுவத் தளமாகக் கருதப்படும் பலாலி ராணுவ முகாம் மயிலிட்டி முதல் பலாலி வரை பரந்த தேசத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்து இருக்கின்றது . 

ஆனால், மேற்குறித்த ஆக்கிரமிப்புகளை ராஜபட்ச சகோதரர்கள் மறுக்கின்றார்கள். தங்களுக்கு தெரியாது என்கிறார்கள்.

மறுபுறம் சம்பந்தன் தரப்பு 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் காணி அபகரிப்பைத் தடுக்கலாம் என்கிறார்கள்.

ஆனால், 13 ஆம் திருத்தத்தின் கீழ் அரச காணிகள் தொடர்பில் மாகாண சபைகளுக்கு குறிப்பிடத்தக்க எந்தவித அதிகாரமும் கிடையாது. 

அரச காணி வழங்கல் தொடர்பில் மாகாண சபை கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்பதனைத் தவிர மத்திய அரசாங்கத்திடமே அரச காணிகள் மீதான முழுமையான கட்டுப்பாட்டை 13 ஆம் திருத்தம் வழங்குகின்றது.

அரச காணிகள் தொடர்பில் இருக்கும் மேற்குறித்த பெயரளவு அதிகாரங்கள்கூட மகாவலி அதிகார சபை சட்டத்தின் கீழ் வரும் திட்டங்களின் காணிகள் தொடர்பில் மாகாண சபைக்கு இல்லை.

ராஜபட்ச சகோதரர்கள் மறுக்கின்ற போதும் உண்மையில் எங்களது தலையாயப் பிரச்னை காணி சுவீகரிப்பு. 

ஆனால் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக காணி அபகரிப்பைத் தடுக்க எந்த வாய்ப்பும் இல்லை  (முழுமையாக நடைமுறைப்படுத்தினாலும் வாய்ப்பில்லை தான்). காணிகள் குறித்த வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

வடக்கு, கிழக்கு பகுதியில் அழிக்கப்பட்டுள்ள கோயில்கள் தொடர்பான விபரங்கள் பற்றி கடந்த பதிவில் கூறியிருந்தேன்.

தேயிலை உற்பத்தி, ஆடை உற்பத்தி, சுற்றுலாப் பயணிகள் வருகை ஆகிய மூன்றும்தான் இலங்கைக்கு பெருமளவு வருமானம் அளித்து வந்தவை. கரோனாவால் 2020க்குப் பின்னர் இந்த மூன்று வழிகளும் மூடப்பட்டன. சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டதால் தேயிலை, ஆடை உற்பத்தி, சுற்றுலா ஆகிய மூன்றும் முற்றிலும் முடங்கியது. வருமானத்துக்கான வேறு வழிகளும் இல்லாத நிலையில் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.

ஆனால், “கரோனாவுக்கு முன்பே இலங்கை பொருளாதார நெருக்கடியில்தான் இருந்தது. ஆட்சியாளர்களின் ஊழல் இலங்கையின் இன்றைய பிரச்னைக்கு முதன்மையான காரணம். ஊழல் காரணமாக நாட்டின் பொருளாதார நிலை ஏற்கெனவே மோசமாகத்தான் இருந்தது' என்பது சிலரின் கருத்து.

ஜனாதிபதியும் அவரது அமைச்சர்களும் தமது தனிப்பட்ட நலன்களை மையமாக வைத்து மேற்கொண்ட திட்டங்களும் இதற்குக் காரணம். விமானங்களே ஓடாத விமான நிலையம், லாபம் ஈட்டாத துறைமுகங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், கோபுரங்கள், மைதானங்கள் என பல கட்டுமானங்கள் மூலம் கோத்தாவின் குடும்பங்கள் தனிப்பட்ட ரீதியில் சுபிட்சத்தின் நிலைமையை அடைந்திருக்கிறார்கள்.

(தொடரும்)Read in source website

கேரளத்தின் காசர்கோடு பகுதியில் எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டால் பாதிக்கப்பட்ட 3,714 பேருக்குத் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க, அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் 6,727 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் 1,442 பேருக்கு ஏற்கெனவே தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது. மேலும் 1,568 பேருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்டோர் பட்டியலில் எஞ்சியுள்ளவர்களைச் சுகாதாரம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேரில் விசாரித்து, இழப்பீடு பெறுவதற்கான தகுதியை முடிவுசெய்வார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் வாயிலாக உடனடியாக இழப்பீடு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, எழுந்து நடமாட முடியாமல் படுத்த படுக்கையாய் இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய்க்கு ஆளானவர்கள் ஆகியோருக்கு இந்நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை வகைபிரிப்பது குறித்தும் அறிவிக்கப்பட்ட இழப்பீடுகள் இன்னும் முழுமையாகச் சென்றுசேராதது குறித்தும் அதிருப்தியும் நிலவுகிறது. ‘மற்றையோர்’ எனக் குறிப்பிடப்பட்டவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாலேயே அரசு தற்போது அதை வழங்க முன்வந்துள்ளது. ஏற்கெனவே அரசு பாதிக்கப்பட்டவர்களைக் குறித்த விவரங்களைச் சேகரித்துவிட்ட நிலையில், இழப்பீடு வழங்குவதற்கான அவர்களது தகுதியை மீண்டும் சரிபார்க்க வேண்டிய அவசியம் என்ன என்று அங்குள்ள மனித உரிமை அமைப்புகள் கேள்விகளை முன்வைக்கின்றன. இந்த விவாதங்கள், எண்டோசல்ஃபான் பயன்பாட்டால் கேரளத்தில் நடந்த பெருந்துயரத்தை நினைவுபடுத்துகின்றன.

காசர்கோடு பகுதியில் முந்திரித் தோட்டங்களில் எண்பதுகள் தொடங்கி பயன்படுத்தப்பட்டுவந்த இந்தப் பூச்சிக்கொல்லியால் அப்பகுதியில் வாழ்ந்த மக்களும் விலங்குகளும் சருமப் பிரச்சினைகள், நரம்பியல் பிரச்சினைகளுக்குத் தொடர்ந்து ஆளாகிவந்தனர். 2001-ல் அங்கு நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய், உடலமைப்புக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பது உள்ளிட்ட கடும் பாதிப்புகளுக்கு எண்டோசல்ஃபானே காரணம் எனக் கண்டறியப்பட்டு, அதன் பயன்பாட்டுக்குத் தடைவிதிக்கப்பட்டது. பழத் தோட்டங்கள், நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் ஆகியவற்றிலும் இந்தப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், தடை விதிக்கப்பட்டாலும் சட்டவிரோதமான முறையில் அதைப் பயன்படுத்துவது தொடரவே செய்தது. கேரளத்தில் மட்டுமின்றித் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களிலும்கூட இந்தப் பூச்சிக்கொல்லி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுவந்தது.

வேதிப்பொருட்களைத் தவிர்த்த வேளாண்மை வாய்ப்புகள் குறித்து தீவிரமாக இன்று விவாதிக்கப்பட்டாலும், விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் வேதியுரங்களின் பயன்பாடு தவிர்க்கவியலாததாகத் தொடர்கிறது. இவ்வேதிப்பொருட்கள் நிலத்திலும் நீரிலும் காற்றிலும் கலக்கின்றன. தமிழ்நாட்டில் கிராமப் பகுதிகளில் விவசாயத்துக்காகப் பெரும்பாலும் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தே குடிநீர் எடுக்கப்பட்டுவருகிறது. இப்பகுதிகளின் நீராதாரங்களில் ஏற்பட்டுள்ள மாசுபாடுகள் குறித்தும் அங்கு வசிப்பவர்களின் உடல்நலப் பிரச்சினைகள் குறித்தும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம். எண்டோசல்ஃபான் பெருந்துயரம் வேளாண், சுகாதாரத் துறைகளுக்கு ஒரு நிரந்தரமான படிப்பினை.Read in source website

இரண்டு ஆண்டுகளாகச் சற்று வெறிச்சோடியிருந்த தூத்துக்குடி விமான நிலையம், இப்போது ஊர்ச்சந்தை போலாகிவிட்டது. அதேபோல், நெல்லையில் எல்லா இடங்களிலும் அப்படி ஒரு கூட்டம். தாமிரவருணி படித்துறையில், நெல்லையப்பர் கோயில் பிரகாரத்தில், அந்தோணியார் தேவாலயத்தில், ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்துக்கான அல்லோலகல்லோலக் கூட்டத்தில், புத்தகக்காட்சியில், பூப்புனித நீராட்டு விழாவில், தேநீர்க் கடைகளில், சிறிதும் பெரிதுமாக எக்கச்சக்கமாய் முளைத்திருக்கும் அனைத்து உணவு விடுதிகளிலும் ஏராளமான கூட்டம்.

சந்தித்த பல நண்பர்கள் கேட்ட ஒரே கேள்வி, ‘‘கரோனா அவ்வளவுதானே… இனி வராதில்ல?’’ தங்களின் ஊகம் அங்கீகரிக்கப்பட்டுவிடும் என்கிற அசாத்திய நம்பிக்கையைத் தாண்டி, எதையும் ஆராய்வதில் யாருக்கும் விருப்பமில்லை. ‘‘நாலாவதெல்லாம் நமக்கு வராதுல. நாந்தான் அப்பவே சொன்னேம்லா’’ என இப்பவும் பரபரப்பாய்ப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மார்ச் 24-ல் வெளியான பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் 4-ம் அலைக்கான ஆய்வறிக்கை சில செய்திகளைச் சொல்லியுள்ளது. அந்தக் கட்டுரையில் பேசியிருப்பது ‘டெல்டாக்ரான்’ எனும் கரோனாவின் புதிய வேற்றுரு பற்றி.

அந்தப் புதிய வேற்றுருவில், ஸ்பைக் புரதம் 36 வகை மாற்றங்களைக் கொண்டுள்ளதாம். இந்த 36-ல், 27 புரதக் கூறுகள் டெல்டா போல (AY.4 ), 4 புரதக் கூறுகள் ஒமிக்ரான் (BA.1) போல இருக்கின்றனவாம். மிச்சமுள்ள 5 கூறுகள் இரண்டின் தன்மைகளையும் கொண்டுள்ளனவாம். நவம்பர் 21 முதல் பிப்ரவரி 2022 வரை எடுத்துள்ள மாதிரிகள் அடிப்படையில் இந்த அறிக்கையை உலக சுகாதார நிறுவன கோவிட் ஆய்வுக் குழுத் தலைவர் மரியா வான் கேர்கோவ் வெளியிட்டுள்ளார். இந்தப் புதிய வேற்றுரு, தீவிர நோய் நிலை அச்சத்தை இதுவரை கொடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து சில காலமேனும் இதுபோல் வேற்றுருக்கள் வந்துகொண்டுதான் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

ஒரே நேரத்தில் மிக அதிக அளவில் தொற்றுப் பாதிப்பு உள்ள வேளைகளில், ஒரே உடலில் இருவகையான வேற்றுருக்களின் தாக்கம் நேரக்கூடிய நிலையில், புதிய வேற்றுரு உருவாகும் சாத்தியம் பற்றியும் அவர் கூறியுள்ளார். வளர்ந்த நாடுகளில் 75-90% வரை குறைந்தபட்சம் முதல் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் இன்னும் ஆப்பிரிக்க நாடுகளில் 15% தடுப்பூசிதான் போடப்பட்டுள்ளது. உலகெங்கும் 70 சதவீதத்தினருக்கும் மேல் தடுப்பூசி போட்டு முடிக்கையில், தடுப்பூசியின் மூலம் அல்லது தொற்று பெற்றேனும் திரள் நோய்க் காப்பை (herd immunity) 60-70% எட்டும்போது மட்டுமே நாம் ஆசுவாசம் கொள்ள முடியும்.

கரோனா பல கற்பிதங்களை உடைத்திருக்கிறது. பல வலிகளைக் கொடுத்திருக்கிறது. பல விவாதங்களை முடுக்கிவிட்டுள்ளது. சற்று ஆழமாக கரோனாவின் தடயங்கள் மீது பயணிக்கும்போது, நாம் ஆறறிவில்லா சேப்பியன்களாய் காலங்காலமாய்ச் செய்த பிழைகளுடன், செயற்கை நுண்ணறிவு வரை படைத்த அறிவாளிகளாக(?) இப்போதும் தொடர்ந்து செய்துவரும் பிழைகள் மட்டுமே இந்த வைரஸ் போருக்குக் காரணம் என்பது வெள்ளிடை மலை. 15,000 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தோனேசியத் தீவுகளிடை நீர்ச்சந்திகள் வழியாக நீந்தி, ஆஸ்திரேலியாவை அடைந்தபோது, அங்கு கோலோச்சிக்கொண்டிருந்த டைப்ரோடுடான் எனும் பேருயிரிக் கூட்டத்தைக் கூண்டோடு அழித்த கூட்டம்தான் மனிதர்களான நாம்.

சைபீரியாவின் கொடும்பனிக்கு இடையே கொத்துக்கொத்தாக வாழ்ந்துவந்த உலகின் மாபெரும் உடலமைப்பைக் கொண்டிருந்த மாமூத் யானைகள் மடிந்து அற்றுப்போனதும் நம் காலடி அங்கு பட்டபோதுதான். இன்னும் அலாஸ்காவின் தேன்கரடி, மடகாஸ்கரின் யானைப் பறவை போன்றவை அழிந்ததும் மனித வரவால்தான் என்பதை யுவால் நோவா ஹராரி உள்ளிட்ட மனிதகுல ஆய்வாளர்கள் பலர் தரவுகளுடன் நிறுவுகின்றனர். இன்னும் எத்தனை உயிரிகளை நான் அழித்திருக்கிறோம் என்பது முழுதாகத் தெரியாது. ஆனால், இப்போது ஈழத்திலும் உக்ரைனிலும் சொந்த இனத்தையே கொல்லும் கொடூர இரைகொல்லிகளான மனித இனம், நிச்சயம் அன்று சுயலாபத்துக்காகப் பிற உயிரிகளைக் கொன்றழித்திருக்கும் என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

கரோனாவின் வேற்றுருக்களைப் பற்றி யோசிக்கும்போது, அன்றும் சரி, இன்றும் சரி... சேப்பியன்களான நாம் தொடர்ந்து செய்த அட்டூழியங்களை ஆராயாமல் இருக்க முடியவில்லை. அன்று நெருப்பு கொடுத்த சக்தி, இடையில் வேளாண்மை தந்த பேராசை எனக் கூராயுதங்களுக்கான படிநிலைகள் நமக்குப் படிப்படியாக வந்துசேர இப்போதும் வளர்ச்சி என்ற பெயரில் செய்யும் வன்முறைகள்தான் விலங்குவழி தொற்றும் வைரஸ் இனங்களை உசுப்பிவிடுகின்றன. போலியோவைப் போல, பெரியம்மை ஏற்படுத்தும் வைரஸ்போலத் தடுப்பூசிகளால் மட்டும் உலகை விட்டு கரோனா வைரஸை ஒழித்துக்கட்டிவிட முடியாது.

விலங்குவழித் தொற்று மனிதரிடமிருந்து விரட்டப்பட்ட பின், வேறு உயிரினங்களில் ஒளிந்துகொள்ளும். மறுபடி நடத்தப்படும் சூழலியல் சிதைவில் மறுபடி வூஹானிலோ ஒட்டன்சத்திரத்திலோ வேறு வடிவில் பிறக்கலாம். உடனே வரிந்துகட்டிக்கொண்டு, ‘‘அதனாலதான் அன்றைக்கே தடுப்பூசி வேண்டாம்’’ எனத் தட்டையாகத் தர்க்கம் செய்ய வந்துவிட வேண்டாம். காய்தல் உவத்தலின்றி, எஸ்.ருக்மிணியின் ‘ஹோல் நம்பர்ஸ் அண்டு ஹாஃப் ட்ரூத்ஸ்’ உள்ளிட்ட கள உண்மைகளுடன் பகிரப்படும் அத்தனை கோவிட் நூல்களையும், ஆய்வுகளையும் வாசியுங்கள். கோவிட் மரணங்களைப் பேரளவில் குறைத்ததில் தடுப்பூசிகளின் பங்கு அளப்பரியது என்பதை அறிந்துகொள்ளலாம்.

இப்போதைய கேள்வி, இனி விலங்குவழி வைரஸ்களின் தாக்கம் மோசமாக இல்லாதிருக்க, அன்றைய சேப்பியன்கள் அழித்தொழித்த உயிரிகளின் புதைபடிவங்கள்போல நாமும் மாறிவிடாமல் இருக்க ஒரே வழி ‘ஒற்றை நலம்’ எனும் சிந்தனை மட்டுமே. இனி நலம் என்பது, என் கணையம் மட்டும் ஒழுங்காய்ச் சுரந்து நலமாயிருப்பதல்ல. என் மூச்சுப் பயிற்சியினால் என் ஆழ்மனம் அமைதியுடன் இருப்பதல்ல. நான் நின்றுகொண்டிருக்கும் நிலத்தின் அடியில் நெளிந்து ஊரும் மண்புழு நலமாயிருக்க வேண்டும்.

பக்கத்துத் தோட்டத்தில் நிற்கும் பூவரசு மரத்துப் பூவில் சுரக்கும் தேன் கலப்படமாகாமல் நலமாய் இருக்க வேண்டும். அதை உறிஞ்சும் தேனீயோ தேன்சிட்டோ நலமாக இருக்க வேண்டும். வானில் பறக்கும் இருவாச்சியோ குளத்தின் ஓரம் நிற்கும் நாரையோ வயிற்றுவலியுடன் அவதிப்படக் கூடாது. அதன் வாயில் இருக்கும் மீனில் ரசாயனக் கழிவு எஞ்சியிருக்கக் கூடாது. மீன், நாரை, மண்புழு, தேன்சிட்டு எல்லாம் நலமாக இருந்தால் மட்டும்தான் நாம் அனைவரும் நலமாயிருக்க முடியும். இந்த அத்தனையின் நலத்தில்தான் கரோனாவின் முடிவும் இருக்கிறது.

- கு.சிவராமன், சித்த மருத்துவர், தமிழக அரசின் கோவிட் கட்டுப்பாட்டு உயர்மட்டக் குழு உறுப்பினர்,

தொடர்புக்கு: herbsiddha@gmail.comRead in source website

சில நாட்களுக்கு முன்பு இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆறு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளமை, மிக முக்கியமான மாற்றத்தை இலங்கையில் ஏற்படுத்தப்போகிறது எனலாம். அந்த ஆறு ஒப்பந்தங்களையும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்.

1.இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள முறைமையை அமல்படுத்துதல்.

2. கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை.

3. யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள அனலை தீவு, நெடுந்தீவு, நைனா தீவு ஆகிய மூன்று தீவுகளிலும் கலப்பு மின்சக்தித் திட்டங்களை அமல்படுத்துதல்.

4. இலங்கையில் மீன்பிடித் துறைமுகங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பை நல்குதல்.

5. காலி மாவட்டத்திலுள்ள இருநூறு பாடசாலைகளில் பிரத்யேகமான கல்வி மென்பொருளுடன் கூடிய ஸ்மார்ட் அட்டைகளோடு நவீன கணினி ஆய்வுக்கூடங்களை ஸ்தாபித்தல்.

6. வெளிநாட்டுச் சேவைக்கான சுஷ்மா ஸ்வராஜ் நிலையம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச ராஜதந்திரப் பயிற்சி நிலையம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

இவற்றுள் இரண்டாவதான கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது, இந்திய அரசாங்கத்தின் ஆறு மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியோடு இலங்கையில் நிறுவப்படவுள்ளது. இதன் மூலம் இந்திய உளவு விமானங்கள் இலங்கை வானத்தைப் பயன்படுத்தும். இலங்கை தன்னுடைய கடல் மற்றும் வான் பாதுகாப்பை இந்தியாவுடன் நேரடியாகப் பகிர்ந்துகொள்வதாகக் கருதலாம். கடற்பரப்பில் பாதிப்புக்குள்ளாகும் கப்பல்களின் பாதுகாப்பை சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைய உறுதிப்படுத்தவும், இப்பிராந்தியத்துக்குள் பாதிப்புக்குள்ளாகும் கப்பல்கள் தொடர்பான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு இந்த நிலையம் மிகவும் அவசியம். மூன்றாவது உடன்படிக்கையை முன்பே இலங்கை சீனாவுடன் மேற்கொண்டிருந்தது. இப்போது சீனாவுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு, இந்தியாவிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம் சீனாவைக் கோபித்துக்கொள்ள நேரிடும் என்று சர்வதேசச் சமூகம் குரலெழுப்புகிறது. நான்காவது உடன்படிக்கையின் மூலம் இலங்கையிலுள்ள அனைத்து மீன்பிடித் துறைமுகங்களையும் இந்தியா எவ்விதத் தடங்கலும் இல்லாமல் அணுகலாம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

உண்மையில், இந்த உடன்படிக்கைகளைக் கடந்த ஆட்சியில் செய்திருந்தால், தற்போது இலங்கையை ஆளுபவர்கள் இந்திய விஜயத்தையும் இந்த உடன்படிக்கைகளையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருந்திருப்பார்கள். பௌத்தப் பிக்குகள்கூடத் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்கள். எனினும், இந்த உடன்படிக்கைகளால் இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படாது என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்திருக்கிறது. என்றாலும், இந்த ஆறு உடன்படிக்கைகளாலும் இலங்கையைப் பேராபத்து சூழும் என்று இலங்கையிலுள்ள இந்திய விரோத சக்திகள் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டேதான் இருக்கின்றன.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கை போன்ற எந்தவொரு சிறிய நாட்டுக்கும் பலம் மிக்க அண்டை நாடொன்றின் அரவணைப்பு அத்தியாவசியமானதாகும். கடனில் மூழ்கிக்கொண்டிருக்கும் தனித்த தீவான இலங்கையை மீட்டெடுக்கவும், பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுவிக்கவும் எந்த நாடாவது உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற நிலையில், அதை அருகிலேயே இருக்கும் இந்தியா செய்ய முன்வந்திருப்பது பாராட்டப்பட வேண்டியதும், வரலாற்று முக்கியத்துவம் மிக்கதுமான நிகழ்வாகும். இந்தியா போன்ற ஆளுமை மிக்க நாடொன்று, இலங்கைக்குப் பாதுகாப்பளிப்பதையும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதையும் இவ்வாறாக உறுதிசெய்துவிட்டால், சீனா போன்ற தந்திரமான நாடுகள் எளிதில் இலங்கையிடம் வாலாட்டாது.

கடந்த 2005-ல் ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்தியாவையும், மேற்கு நாடுகளையும் கையாளுவதற்காகவும், உள்நாட்டுப் பிரச்சினைகளிலும் வர்த்தகத்திலும் பொருளாதாரத்திலும் சீனாவையே சார்ந்திருந்தது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் சீனாவுடன் நெருக்கமான உறவு பேணப்பட்டதோடு, அப்போது நாட்டில் சீனாவால் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கியிருந்தது. பிறகு, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் அவர் சீனாவை இலங்கையுடன் அவ்வளவாக நெருங்க விடவில்லை. அதன் பிறகு, ஆட்சிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச சீனாவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி, அதனைச் சார்ந்திருக்கத் தொடங்கியதே சீனாவின் செல்வாக்கு இலங்கையில் மேலோங்கி, இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறியதற்குக் காரணம் என்று கூறலாம்.

இலங்கையின் பொருளாதாரச் சீர்குலைவைச் சீரமைக்க இந்தியா தொடர்ந்து உதவிசெய்யும் என்று ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அண்மையில் இந்தியக் கடனுதவிக்குப் பிறகு, இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நிகழ்ந்த கலந்துரையாடல் குறித்தும், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆகியவற்றிலான ஒத்துழைப்பு, மீன் பிடித்தலிலுள்ள பிரச்சினைகள் ஆகியவை குறித்தும் ஜெய்சங்கர் கவனம் செலுத்தியுள்ளார். அத்தோடு, இலங்கையிலுள்ள பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.

இவற்றுள் முக்கியமான ஒரு நிகழ்வாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவையும் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசியதைக் குறிப்பிடலாம். இதுவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துப் பேசியதில்லை. தற்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச பதவி விலக நேர்ந்தால், அடுத்த ஜனாதிபதியாக வரும் வாய்ப்பு எதிர்க்கட்சித் தலைவருக்கே உள்ள சூழ்நிலையில், அவருடனான சந்திப்பு அண்மைய இந்திய உடன்படிக்கைகளைப் பலப்படுத்தும் என்று நம்பலாம்.

இந்தியா உதவிசெய்வதாலும், புலம்பெயர்ந்துள்ளவர் ளிடம் இலங்கை அரசு உதவிகள் எதிர்பார்ப்பதாலும் இலங்கைத் தமிழர்கள் உட்பட சிறுபான்மைச் சமூகத்துக்கு ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது. இந்தியா செய்யும் நிதியுதவிகள் மூலம் நிறுவப்படவிருக்கும் நிலையங்கள் சிறுபான்மையினர் செறிந்து வாழும் இடங்களில் அமைக்கப்படவிருப்பதால், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தொழில்வாய்ப்புகள் கிடைக்கும் சாத்தியம் அதிகம். அவ்வாறே புலம்பெயர்ந்துள்ளவர்களில் அநேகமானவர்கள் தமிழர்கள் என்பதால், அவர்கள் இலங்கையில் தொழில் முயற்சிகளில் முதலீடு செய்ய முன்வரும்போது, அவற்றிலும் அதிகமான தொழில்வாய்ப்புகள் தமிழர்களுக்கு வழங்கப்படக் கூடும். அத்தோடு, இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளில் புலம்பெயர்ந்தவர்களின் ஆளுமை மேலோங்கும்.

இலங்கையில் தற்போது தட்டுப்பாடாக இருக்கும் உணவு, எரிபொருள், மருந்து, மின்சாரம் போன்ற அத்தியாவசிய விடயங்களில் இந்தியா தலையிட்டு உதவிசெய்ய முன்வருவதைப் பாராட்ட வேண்டும். மருந்துத் தட்டுப்பாட்டின் காரணமாக இலங்கையின் அரசாங்க மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதைக் கேள்விப்பட்டு, அது குறித்துக் கேள்வியெழுப்ப ஜெய்சங்கருக்கு எழுந்த துணிச்சல்கூட இலங்கையின் அமைச்சர்களுக்கு இருக்கவில்லை. ஆகவே, பொதுமக்கள் இப்போது தம்மை ஆளுவது யார் என்பதைப் பார்ப்பதில்லை. தம்மை யார் ஆதிக்கத்துக்குள்ளாக்கப் போகிறார்கள் என்றெல்லாம் யோசிப்பதில்லை. தம்மை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் பட்டினியின்றியும் யார் வாழ வைக்கப்போகிறார்கள் என்பதை அறியத்தான் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலர், இலங்கை. தொடர்புக்கு: mrishansh@gmail.comRead in source website

30-01-2023      Monday

TNPSC Newspaper Archives

t