DINAMANI : Daily International and NAtional Media Aggregator for News and Information

TNPSC Current Affairs - 01-03-2022

பிரதமரின் விரைவுசக்தி தேசியப் பெருந்திட்டத்தில் கட்டமைப்புக்குத் திட்டமிடுதல், அமலாக்கம், கண்காணிப்பு ஆகியவை புதிய திசையைப் பெறும். இது திட்டத்திற்காகும் செலவையும், கால நேரத்தையும் குறைக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

நிதி நிலைய அறிக்கைக்கு பிந்தைய மெய்நிா் முறையிலான ஆறாவது கருத்தரங்கு ‘விரைவுசக்தி தேசியப் பெருந்திட்ட கட்டமைப்புத் திட்டமிடலின் தொலைநோக்குப் பாா்வை’ குறித்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரமதா் நரோந்திர மோடி பேசியதாவது: 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வளா்ச்சிக்கான இலக்காக ‘விரைவு சக்தி’ இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் வைக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு அடிப்படையிலான வளா்ச்சி, நாட்டின் பலத்தை அசாதாரணமாக அதிகரிக்கவும், பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும். திட்டங்களை முடிப்பதில் தேவைக்கேற்ப துண்டு துண்டாக உள்கட்டமைப்பை உருவாக்குவதே இதுவரை பாரம்பரியமாக இருந்தது. இதன்விளைவு மத்திய, மாநில உள்ளாட்சி மற்றும் தனியாா் அமைப்பினருக்கிடையே ஒருங்கிணைப்பு என்பது இல்லாமல் இருந்தது.

இந்த விரைவுசக்தியில் தற்போது அனைவருக்குமான முழுமையான தகவலுடன் தங்களின் திட்டத்தை உருவாக்க முடியும். இது நாட்டின் ஆதார வளங்களை முழுமையாகப் பயன்படுத்தவும் வழிவகுக்கும். அரசு மேற்கொள்ளும் அடிப்படை கட்டமைப்பு வளா்ச்சியின் அளவை அதிகரிக்க இந்த விரைவுசக்தியின் தேவை முக்கியத்துவம் பெறுகிறது. இதில் ஏற்கெனவே உள்ள திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்பு பற்றிய தகவல்கள் மட்டுமல்லாமல், வன நிலம், தொழிற்பேட்டை போன்ற தகவல்களும் உள்ளன.

2013-14-ம் ஆண்டில் மத்திய அரசின் நேரடி மூலதனச் செலவு ரூ.2.50 லட்சம் கோடியாக இருந்தது, இது 2022-23-இல் ரூ.7.50 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பிரதமரின் விரைவுசக்தியிலிருந்து கட்டமைப்புக்குத் திட்டமிடுதல், அமலாக்கம், கண்காணிப்பு ஆகியவை புதிய திசையைப் பெறும். இது திட்டத்திற்கு ஆகும் காலத்தையும், செலவையும் குறைக்கும். அதே சமயத்தில் அரசுத் துறைகளும் தனியாரும் தரமான கட்டுமானப் பணிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும். பாலங்கள் உள்ளிட்ட பல கட்டுமானங்கள் விரைவாக சேதமடைகிறது. பின்னா், அவற்றை மீண்டும் கட்டுவதற்கு ஒரிரு தசாப்தங்களாகின்றன.

பிரதமரின் விரைவுசக்தி தேசியப் பெருந்திட்டத்தில் தற்போது 400-க்கும் அதிகமான தரவுப் படிநிலைகள் உள்ளன. ஒற்றை இணையதளத்தில் தேசிய பெருந்திட்டம் தொடா்பான அனைத்து முக்கியத் தகவல்கள் இப்போது கிடைக்கின்றன. தனியாா் துறையினா் தங்களின் திட்டமிடலுக்கு இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் விரிவான திட்ட அறிக்கை நிலையிலேயே பல்வேறு வகையான அனுமதிகளைப் பெறுவதும் சாத்தியமாகும். இந்தியாவில் மற்ற நாடுகளை விட சரக்குப் போக்குவரத்து செலவு அதிகமாக உள்ளது. பிரதமரின் விரைவுசக்தி அடிப்படை கட்டமைப்புத் திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்து இடைமுக தளம் (யுஎல்ஐபி) இடம் பெற்றுள்ளது. யூஎல்ஐபி-இல் 6 அமைச்சகங்களின் 24 மின்னணு முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது சரக்குப் போக்குவரத்து இணையப்பக்கத்தில் தேசிய ஒற்றைச்சாளரத்தை உருவாக்கும். இதனால், சரக்குப் போக்குவரத்து செலவு குறைய வழி ஏற்பட்டுள்ளது.

 

சரக்கு போக்குவரத்திற்காக ஒவ்வொரு துறையிலும் போக்குவரத்து பிரிவு உருவாக்கப்பட்டு, அதிகாரம் அளிக்கப்பட்ட செயலா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், நமது ஏற்றுமதிகளுக்கும் பெரும் உதவி கிடைக்கும். மேலும், சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் உலகளவில் போட்டியிட முடியும். அடிப்படை கட்டமைப்பு உருவாக்கத்திலிருந்து வளா்ச்சி மற்றும் பயன்பாட்டு நிலை வரையிலான கட்டமைப்புத் திட்டமிடலில் அரசு - தனியாா் துறையின் சரியான பங்களிப்பை விரைவுசக்தி உறுதி செய்யும்.

முன்பு ஒட்டுமொத்த சா்வதேச சமுதாயமும் ஆற்றுப்படுகையில் வசித்தன. இதன் மூலமே பல நகரங்கள் ஆறு, கடல் பகுதிகளில் உருவானது. பின்னா் நெடுஞ்சாலைப் பகுதிகளில் இடம் பெயா்ந்தனா். இப்போது, ஆப்டிகல் பைஃபா் இருக்கும் இடங்களில் சமுதாயம் செழிக்க உள்ளது என்றாா் பிரதமா் மோடி.Read in source website

இந்திய பங்கு பரிவா்த்தனை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவராக மாதவி புரி புச் (57) நியமிக்கப்பட்டுள்ளாா். செபி தலைவராக பெண் ஒருவா் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.

நிதி, வங்கித் துறையில் நீண்ட அனுபவமுள்ள மாதவி, தனியாா் துறையில் பணியாற்றி செபி தலைமைப் பொறுப்பேற்கும் முதல் நபா் என்ற பெருமையையும் பெற்றுள்ளாா். அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவா் இப்பொறுப்பில் இருப்பாா் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இந்த முடிவை எடுத்தது.

இப்போது செபி தலைவராக உள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அஜய் தியாகியின் பதவிக்காலம் திங்கள்கிழமையுடன் (பிப். 28) முடிவடைந்தது.

தில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற மாதவி, அகமதாபாத் ஐஐஎம்-இல் எம்பிஏ படித்தாா். 30 ஆண்டுகளாக நிதித் துறையில் பணியாற்றி வருகிறாா். ஐசிஐசிஐ வங்கியில் தனது பணியைத் தொடங்கிய அவா், 2009-2011 காலகட்டத்தில் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிா்வாக இயக்குநராக உயா்ந்தாா்.

அதைத் தொடா்ந்து சிங்கப்பூரில் உள்ள பங்குச் சந்தை சாா்ந்த நிறுவனத்தில் முக்கியப் பதவி வகித்தாா். தொடா்ந்து பிரிக்ஸ் நாடுகள் உருவாக்கிய நியூ டெவலப்மெண்ட் வங்கியில் ஆலோசகராக இருந்தாா். செபியின் பல்வேறு குழுக்களிலும் ஆலோசகராக அவா் செயல்பட்டுள்ளாா்.Read in source website

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 2021-22 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. இருந்தபோதும், இதே கால கட்டத்தில் சீனாவின் 4 சதவீத ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சியைக் காட்டிலும் இந்தியா கூடுதல் வளா்ச்சி பெற்றுள்ளதோடு, உலகின் வேகமான பொருளாதார வளா்ச்சி பெறும் மிகப் பெரிய நாடு என்ற நிலையை தொடா்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

நிகழ் நிதியாண்டில் ஜிடிபி வளா்ச்சி விகிதம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 20.3 சதவீதமாகவும், ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 8.5 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) இரண்டாவது தேசிய பொருளாதார வளா்ச்சிக்கான முன்கூட்டிய மதிப்பீட்டை திங்கள்கிழமை வெளியிட்டது.

அதன்படி, 2021-22 ஆம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளா்ச்சி 8.9 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட முதல் முன்கூட்டிய மதிப்பீட்டைக் காட்டிலும் வளா்ச்சி விகிதம் சற்று குறைவாகும். அப்போது, பொருளாதார வளா்ச்சி 9.2 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது.

அதுபோல, முந்தைய 2020-21 ஆம் நிதியாண்டில், முதல் முன்கூட்டிய மதிப்பீட்டில் பொருளாதார வளா்ச்சி 7.3 சதவீதமாக கணிக்கப்பட்டது. பின்னா், கரோனா பாதிப்பின் தாக்கத்தை கருத்தில் கொண்டு என்எஸ்ஓ வெளியிட்ட திருத்திய மதிப்பீட்டில் வளா்ச்சி விகிதம் 6.6 சதவீதமாக சரிந்தது.

அந்த வகையில், 2020-ஆம் ஆண்டில் ஜிடிபி வளா்ச்சி விகிதம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 23.8 சதவீதமாகவும், ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 6.6 சதவீதமாகவும் பதிவானது என்று என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

மேலும், நிலையான விலைகளில் ஜிடிபி 2020-21 மூன்றாவது காலாண்டில் ரூ. 36.26 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், 2021-22 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ. 38.22 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டது. இது 5.4 சதவீத வளா்ச்சியைக் காட்டுகிறது என்றும் என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

இதே 2021 அக்டோபா்-டிசம்பா் கால கட்டத்தில் சீனாவின் ஜிடிபி 4 சதவீதமாக பதிவானது. அந்த வகையில், ‘ இந்தியா சீனாவைவிட கூடுதல் வளா்ச்சி பெற்றுள்ளதோடு, உலகின் வேகமான பொருளாதார வளா்ச்சி பெறும் மிகப் பெரிய நாடு என்ற நிலையை தொடா்ந்து தக்கவைத்துகொண்டுள்ளது’ என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவித்தனா்.Read in source website

தங்களது 1.28 சதவீத பங்குகளை சுமாா் ரூ.7,500 கோடிக்கு கூகுள் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய பாா்தி ஏா்டெல் நிறுவன பங்குதாரா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா்.

இதுகுறித்து நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது:

நிறுவனத்தின் சிறப்புப் பொதுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கூகுள் நிறுவனத்துக்கு பங்குகள் விற்பது தொடா்பான தீா்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீா்மானம் 99 சதவீத பங்குதாரா்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, பாா்தி ஏா்டெல் நிறுவனத்தில் ரூ.7500 கோடி முதலீடு செய்யும் தனது திட்டத்தை முன்னணி இணையதள நிறுவனமான கூகுள் கடந்த மாதம் அறிவித்தது.Read in source website

 

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ரஷியா பங்கேற்கத் தடை விதித்துள்ளது ஃபிஃபா அமைப்பு.

2022 கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறும் என ஃபிஃபா அமைப்பு 2010 டிசம்பரில் அறிவித்தது. நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தோஹாவைச் சுற்றியுள்ள 8 மைதானங்கள் இப்போட்டிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. ஃபிஃபா 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-ல் ரஷியாவில் முதல்முறையாக நடைபெற்றது. தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றது. குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் பெற்றுள்ளன. இப்போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

உக்ரைன் மீது ரஷியா கடந்த வாரம் தாக்குதலைத் தொடங்கியது. ஏவுகணைகள், ராக்கெட் குண்டுகள், போா் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதுடன் ரஷிய தரைப் படையும் உக்ரைனுக்குள் ஊடுருவியது. இதுவரையிலான ஐந்து நாள் சண்டையில் உக்ரைனில் பொதுமக்கள் 102 போ் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோா் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு திங்கள்கிழமை தெரிவித்தது.

இந்நிலையில் உக்ரைன் மீது போரில் ஈடுபடும் ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடவடிக்கை எடுத்துள்ளது ஃபிஃபா. 2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ரஷியா பங்கேற்கத் தடை விதித்துள்ளது. மேலும் சர்வதேசப் போட்டிகளில் ரஷிய அணி பங்கேற்கவும் ஃபிஃபா மற்றும் ஐரோப்பியக் கால்பந்து அமைப்பான யூஈஎஃப்ஏ ஆகிய இரு அமைப்புகளும் தடை விதித்துள்ளன.

இம்மாதம் உலகக் கோப்பைப் போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டியின் அரையிறுதியில் போலந்துக்கு எதிராக ரஷிய அணி விளையாடவிருந்தது. ஜூலையில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு ரஷிய மகளிர் அணி ஏற்கெனவே தகுதி பெற்றிருந்தது. ஃபிஃபாவின் இம்முடிவால் ரஷிய அணியால் இரு போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. மேலும் ஐரோப்பியப் போட்டிகளில் ரஷியக் கால்பந்து கிளப்புகளாலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  Read in source website

மெக்ஸிகோவில் நடைபெற்ற குவாதலஜரா மகளிா் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சாம்பியன் ஆனாா்.

போட்டித்தரவரிசையில் 6-ஆவது இடத்திலிருந்த ஸ்டீபன்ஸ் இறுதிச்சுற்றில் 7-5, 1-6, 6-2 என்ற செட்களில் செக் குடியரசின் மேரி பௌஸ்கோவாவை 2 மணி நேரம் 28 நிமிஷங்களில் தோற்கடித்தாா். வெற்றிக்குப் பிறகு பேசிய ஸ்டீபன்ஸ், ‘சீசனின் தொடக்கத்தில் சாம்பியன் ஆகியிருப்பது மகிழ்ச்சி. இன்னும் நிறைய போட்டிகளில் களம் காண இருப்பதால், இந்த வெற்றி உத்வேகம் அளிப்பதாக இருக்கும்’ என்றாா்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிா் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறாா் ஸ்டீபன்ஸ். இதற்கு முன் கடந்த 2018-இல் மியாமி ஓபனில் அவா் கோப்பை வென்றிருந்தாா்.

இரட்டையா் சாம்பியன்: குவாதலஜரா ஓபன் இரட்டையா் பிரிவில் அமெரிக்காவின் கேட்லின் கிறிஸ்டின்/பெலாரஸின் லிட்ஸியா மரோஸவா இணை சாம்பியன் ஆனது. இறுதிச்சுற்றில் இந்த இணை சீனாவின் வாங் ஜின்யு/ஜு லின் ஜோடியை 7-5, 6-3 என்ற செட்களில் வீழ்த்தியது.Read in source website

 

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான இந்தியர் சத்ய நாதெள்ளாவின் மகன் ஜைன் நாதெள்ளா உயிரிழந்தார்.

ஆந்திரத்தைச் சேர்ந்த சத்ய நாதெல்லா உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு தலைமைச் செயல் அதிகாரியாக பணி உயர்வு செய்யப்பட்டார்.

பில்கேட்ஸின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள மைக்ரோசாஃப்டில் இந்தியர் மிகப்பெரிய பதவிக்கு தேர்வானது பெரிதும் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், பெருமூளைவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சத்ய நாதெள்ளாவின் மகன் ஜைன் நாதெள்ளா(26) உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து இன்று உயிரிழந்தார்.

சத்ய நதெள்ளாவிற்கு திவ்யா நாதெள்ளா மற்றும் தாரா நாதெள்ளா என்கிற 2 மகள்களும் உள்ளனர்.Read in source website

சென்னை: "என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற வழிகாட்டி மையங்களாகப் பள்ளிகள் இனி மாறும். என்ன வேலைக்கு தகுதிப்படுத்தலாம் என்பதன் வழிகாட்டி மையங்களாக கல்லூரிகள் இனி மாறும். வேலை தேடுபவர்களுக்குத் தகுதிப்படுத்தும் மையங்களை அரசே நிறுவும்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். பள்ளி, கல்லூரி மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான “நான் முதல்வன்” என்கிற புதிய திட்டத்தை தொடங்கிவைத்த அவர் இவ்வாறு கூறினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய 'நான் முதல்வன்' என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இலச்சினையையும் வெளியிட்டார். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டிப் பாடநூலை வெளியிட்டு, இதற்கென உருவாக்கப்பட்டுள்ள naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

'நான் முதல்வன்' திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து இலட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும். அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும். தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

இவற்றைத் தவிர, மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ, மாணவியர்களிடம் ஏற்படுத்தப்படும். இப்பயிற்சிகள் அனைத்தும், தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நேரடிப் பயிற்சி, இணைய வழிப் பயிற்சி, அவரவர் கல்லூரியில் பயிற்சி, மாவட்ட ரீதியாக பயிற்சி எனத் தேவைக்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படும். முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் நெறிப்படுத்தும் (mentoring) முறையும் அறிமுகப்படுத்தப்படும்.

கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்யை உறுதி செய்ய அவரவர் விருப்பத்திற்கேற்ப அயல்நாட்டு மொழிகள் (Foreign Language) கற்பிக்கப்படுவதற்கு இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும். அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் Industry 4.0 தரத்திற்கு உயர்த்தப்படும். மாணவ, மாணவியர்களின் தகுதி மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப, நாட்டின் தலைசிறந்த நிறுவனங்கள்/புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் / திறன் மேம்பாட்டு நிறுவனங்களில் சேர்க்கையையும் இந்த தொடர் பயிற்சிகள் மூலம் உறுதி செய்யப்படும்.

தமிழக அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள், ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகள், பிற மாநிலங்களின் வேலைவாய்ப்புகள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டு, பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்படும். பயிற்சி பெற்ற பயனாளிகள் வேலைவாய்ப்பு பெறுவதையும், அதைத் தொடர்வதையும், தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதைத்தவிர, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்களும் தேவைகளின் அடிப்படையில் நடத்தப்படும். இத்திட்டத்தின் அனைத்து விவரங்களும் அடங்கிய வலைதள பலகை (Portal) உருவாக்கப்படும்.

தமிழக முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை இப்புதிய திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தை ஒருங்கிணைக்கும். மேலும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு இத்திட்டத்தை செயல்படுத்தும்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "இந்த நாள் என்னுடைய வாழ்விலே ஒரு பொன்னாளாக அமைந்திருக்கிறது. இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள் காண்கிறேன் என்பதற்காக மட்டும் நான் இதைச் சொல்லவில்லை. எனது கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தின் தொடக்க நாள் இது. அதனால் தான் இது, 'என்னுடைய வாழ்விலே கிடைத்திருக்கக்கூடிய பொன்னாள் என்று நான் குறிப்பிட்டுச் சொன்னேன்.

தமிழ்நாட்டு மக்களால் முதல்வராக ஆக்கப்பட்டிருக்கக்கூடிய நான் அனைத்து மாணவச் செல்வங்களையும் முதல்வன் ஆக்க, உருவாக்கிய திட்டம்தான் இந்தத் திட்டம். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் அனைவரும் அனைத்து விதமான தகுதியையும் பெற்று முன்னேறி, அனைவரும் அனைத்திலும் முதலாவதாக வந்தார்கள் என்ற நிலையை உருவாக்கும் திட்டம்தான் இந்தத் திட்டம், இந்தத் திட்டத்தினுடைய நோக்கம். அனைத்து இளைஞர்களையும் கல்வியில், ஆராய்ச்சியில், சிந்தனையில், செயலில், திறமையில் சிறந்தவர்களாக மாற்றிட வேண்டும் என்கிற அந்த உணர்வோடு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் எல்லோரும் பள்ளிக்கல்வியை முடித்துவிடுகிறார்கள். கல்லூரிப் பட்டங்களையும் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்குமே வேலை கிடைத்திருக்கிறதா என்று கேட்டால் அது ஒரு கேள்விக் குறியாகத் தான் இருக்கிறது. வேலை இல்லை என்று சொல்லும்போது, சிலர் ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். "வேலைகள் நிறைய இருக்கிறது; ஆனால் அதற்குத் தகுதியான இளைஞர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய நிலை இன்றைக்கு நாட்டில் இருக்கிறது. இதைக் கேட்கும்போது மிக வருத்தமாகத் தான் இருக்கிறது. பட்டம் வாங்கியிருக்கிறார்கள், ஆனால், அந்தப் படிப்பு குறித்த தெளிந்த அறிவு எல்லோருக்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் 33 விழுக்காடு இடங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்று நாம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். இன்னொரு பக்கம், திறமைக் குறைவு பற்றியும் கவலைப்பட வேண்டிய சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறோம். பள்ளிக்கூடங்கள் இல்லாத கிராமமே இல்லை என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் அதே நேரத்தில், அப்படிக் கற்பவர்களுக்குத் தனித்திறமைகள் இல்லை என்பது பற்றியும் கவலைப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

''இந்தியாவைப் பார்த்து உலக நாடுகள் பயப்படுகிறார்கள் - இந்தியாவில் இருக்கும் ஆயுதங்களைப் பார்த்து பயப்படவில்லை. இந்தியாவில் இருக்கும் இளைய சக்தியின் எண்ணிக்கையைப் பார்த்து பயப்படக்கூடிய பெருமையை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், இந்த இளையசக்தி முழுமையான திறமை கொண்டதாக இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

இப்படிப்பட்ட குறைகளை மட்டும் சொல்லிக்கொண்டு இருப்பதால் பயன் இல்லை. அவர்களை நிறையுடை மனிதர்களாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறோம், அதற்காகத் தான் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தான் 'நான் முதல்வன்' என்ற அந்தப் பெயரையும் நாம் சூட்டியிருக்கிறோம்.

மாணவர்களே... 'நான் முதல்வன்', நான் முதல்வன், நான் முதல்வன் என்று சொல்லிப் பாருங்கள். உங்களுக்குள் ஒரு சக்தி பிறக்கும். உங்களுக்குள் ஒரு நம்பிக்கை பிறக்கும். உங்களுக்கு ஒரு தைரியம் பிறக்கும்.

நான் முதல்வன் என்று சொல்லுவது எளிது. ஆனால், எல்லாவற்றுக்கும் முதல்வன் ஆவது என்பது எளிமையான செயல் அல்ல. அதற்கு முதலில் உங்களை நீங்கள் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களது தனித்த திறமைகள் எது என்பதில் உங்களுக்கு ஒரு தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும். பலர், தங்களுடைய பெற்றோர்கள் சொன்னார்கள் என்று மருத்துவம் படிப்பது, பொறியியல் படிப்பது என்று சேர்கிறார்கள். எந்தப் படிப்பில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ, உங்களுக்கு விருப்பம் இருக்கிறதோ, அந்தப் படிப்பில் சேருங்கள். அந்தப் படிப்பு, பட்டம் வாங்குவதற்காக மட்டுமில்லாமல், அந்தப் படிப்பு குறித்த முழுமையான அறிவை நீங்கள் தெளிவு பெற வேண்டும்.

மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. எனவே போட்டிகளும் அதிகம் ஆகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஏராளமான கல்வி நிலையங்கள் இருக்கின்றன. எனவே கல்லூரிப் பட்டம் என்பதை எளிதாக, எல்லோரும் பெற்றுவிடலாம். ஆனால், அந்தப் பட்டத்தைத் தாண்டிய தனித்திறமை இருந்தால்தான் இந்தப் போட்டி நிறைந்த உலகத்தில் உங்களால் வெல்ல முடியும்.

உலகப் போட்டியில் உங்களையும் ஒரு மனிதராக நீங்கள் இணைத்துக் கொள்ள வேண்டும். உங்களை நீங்களே திறமைசாலிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதனுக்குப் புறத் தடைகளைவிட உள்ளார்ந்த அந்தத் தடைகள்தான் அதிகம் இருக்கிறது. இந்தப் புறத் தடைகளை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உடைக்க வருகிற திட்டம்தான் நான் முதல்வன் திட்டம் ஆகும் என்பதைப் பெருமையோடு சொல்கிறேன்.

நான் திட்டத்தை உருவாக்கி இருக்கிறேன். இது மாணவர்கள் அனைவரையும் தகுதிப்படுத்தும் திட்டம். இளைஞர்கள் அனைவரையும் உயர்த்தும் திட்டம். தமிழ்நாட்டு மாணவர் ஒருவர், உலகின் எந்த நாட்டு மாணவரையும் விட, தரமும் தகுதியும் குறைந்தவர் கிடையாது என்பதைக் காட்டும் திட்டம் தான் இந்தத் திட்டம்.

இந்தத் திட்டத்தின் மூலமாக நிறுவனங்களை, தொழில் நிறுவனங்களை, அரசு நிறுவனங்களை, கல்வி நிறுவனங்களை ஒன்றிணைப்போம். அதற்கான முயற்சியில் நாம் முழுமையாக ஈடுபட்டிருக்கிறோம். அரசு நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், தகுதியானவர்களாக இளைஞர்களை உருவாக்குவதை எனது முக்கியக் குறிக்கோளாக நான் ஏற்றுக் கொள்கிறேன்.

கல்வியில் சிறந்தவர்களாக - சிந்திக்கும் திறம் படைத்தவர்களாக - தனித்திறமை கொண்டவர்களாக - தொழில்திறன் கொண்டவர்களாக - நிறுவனங்களை நடத்துபவர்களாக - அவர்களை உருவாக்க எனக்கு நானே உறுதி எடுத்துக் கொள்கிறேன்.

கலைத் திறன் படைத்தவர்கள் கலைஞர்களாகட்டும். தொழில் திறன் படைத்தவர்கள் தொழில் முனைவோர் ஆகட்டும். விளையாட்டில் ஆர்வம் கொண்டோர் விளையாட்டு வீரர்கள் ஆகட்டும். நிறுவனங்கள் நடத்தத் தெரிந்தோர் நிறுவனங்களைத் தொடங்கட்டும். வேலை தேடுபவர்களாக இல்லாமல் - வேலை கொடுப்பவர்களாக எல்லோரும் மாற வேண்டும். பிற நிறுவனங்களின் கதவுகளைத் தட்டுபவர்களாக இல்லாமல் - இவர் நிறுவனத்தைப் பிறர் பயன்படுத்திக் கொள்ளட்டும். அந்த வரிசையில், உங்கள் பெயரும் இணைய வேண்டும் என்றால், அப்போது, உங்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த 'நான் முதல்வன்' திட்டம் என்பதை நான் மீண்டும், மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

படிப்பு என்பது பட்டம் சார்ந்தது மட்டுமல்ல - திறமை சார்ந்ததாக மாறவேண்டும். வேலை என்பது சம்பளம் சார்ந்ததாக மட்டுமல்ல, திறமை சார்ந்ததாக மாறவேண்டும். நீங்கள் அடையும் உயரம் சலுகை சார்ந்ததாக மட்டுமல்ல, திறமை சார்ந்ததாக மாறவேண்டும்.

அத்தகைய திறமையை உங்களுக்கு உருவாக்க, உங்களுக்காக உருவாக்க ஒருவன் இருக்கிறான்... அதுதான் இந்த தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதை இன்று முதல் நீங்கள் நினைவில் வையுங்கள். உங்களது மூத்த சகோதரனாக இருந்து, உங்கள் வளர்ச்சியை தூரத்தில் இருந்து நானே நேரடியாகப் பார்க்கப் போகிறேன்.

அதற்காக எனது நேரடி மேற்பார்வையில் ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறேன். உங்கள் படிப்பை கவனிப்போம்; உங்கள் தனித்திறமையை வளர்த்தெடுப்போம்; உங்கள் மனதில் அறிவியல் திறனை உருவாக்குவோம்; உங்களுக்குத் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டுவோம்; உங்களுக்கு விருப்பமான பயிற்சிகளை நாங்களே தருவோம்; தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவோம்; புதிது புதிதாக உருவான படிப்புகளை அறிமுகம் செய்வோம்; அந்தப் படிப்புகளுக்குத் தகுதியான இளைஞர்களை உருவாக்குவோம்; நவீனம் அனைத்தையும் உங்களது உள்ளங்கையில் கொண்டு வந்து சேர்ப்போம்; மொழித் திறனை மேம்படுத்துவோம்; தாய் மொழியாம் தமிழ் மொழியா? அதை அனைவர்க்கும் எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும்; உலக மொழியாம் ஆங்கிலமா? அதில் அனைவர்க்கும் எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும்; உடல்பயிற்சியும் - உள்ளப்பயிற்சியும் வழங்குவோம். மனப்பயிற்சியும், குணப்பயிற்சியும் நிச்சயம் வழங்குவோம்; ஒரு வரியில் சொல்வதென்றால் உங்களைப் பெற்ற தாய் போல் - உங்களுடைய நலனில் அக்கறை கொண்ட திட்டம்தான் 'நான் முதல்வன்' என்கிற அந்தத் திட்டம்.

அனைவரையும் உள்ளடக்கிய, அனைத்துத் துறை வளர்ச்சி என்று நான் சொல்லி வருகிறேன். இதான் திராவிட மாடல் என்று நான் சொல்லி வருவது உங்களுக்கு இப்போது புரியும். தெரியும். 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்று சொல்லி வருகிறேன். இப்படிப் பொருளாதாரம் வளர வேண்டும் என்றால், 2026-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் 2 மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும். இதற்காக மாணவர்களுக்குப் பயிற்சி தரப் போகிறோம். அதற்கு முன், பயிற்சி தரக்கூடிய ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்சி தரப் போகிறோம்.

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற வழிகாட்டி மையங்களாகப் பள்ளிகள் இனி மாறும். என்ன வேலைக்கு தகுதிப்படுத்தலாம் என்பதன் வழிகாட்டி மையங்களாக கல்லூரிகள் இனி மாறும். வேலை தேடுபவர்களுக்குத் தகுதிப்படுத்தும் மையங்களை அரசே நிறுவும். மொத்தத்தில் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து மாணவர்களையும், இளைஞர்களையும் தமிழ்நாடு அரசு தகுதிசால் மனிதர்களாக மாற்ற நினைக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிப்பதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.

சில திட்டங்கள் சில வாரங்களுக்கு பயன்படும். சில திட்டங்கள் சில மாதங்களுக்கு பயன்படும். சில திட்டங்கள் சில ஆண்டுகளுக்கு பயன்படும். ஆனால் இந்தத் திட்டம் என்பது தலைமுறை தலைமுறைக்குப் பயன்படும் திட்டம் ஆகும்.

கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டு கழித்தும் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி, மு.க.ஸ்டாலின் என்ற ஒரு முதலமைச்சர் உருவாக்கிய 'நான் முதல்வன்' என்ற திட்டத்தின் மூலமாக நான் முன்னேறினேன் என்று ஒருவர் சொன்னால், அதைவிட வேறு பெரிய பெருமை எனக்கு நிச்சயமாக இருக்க முடியாது.

உங்கள் முதலமைச்சரான இந்த மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் நான் மனதார வாழ்த்துகிறேன், போற்றுகிறேன், பாராட்டுகிறேன். வருங்காலச் சமுதாயம் உங்களுக்கு ஒளிமயமானதாக ஆகப் போகிறது. உங்களது வாழ்வில் மலர்ச்சி ஏற்படப் போகிறது.

இன்று முதல் நீங்கள் புதிய மனிதர்களாக மாறப் போகிறீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு ஒளியேற்றும் வாய்ப்பை நான் பெற்றமைக்காக பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். பள்ளிகளில் ஏற்படுத்த இருக்கும் பயிற்சிகள், கல்லூரிகளில் தொடங்க இருக்கும் பயிற்சிகள் பற்றி விரிவாக அரசின் சார்பில் விரைவில் அதற்குரிய அறிவிப்புகள் எல்லாம் வெளியிடப்படும். அந்த அறிவிப்பு அறிவின் உதயமாக அமையும்.

உங்களில் ஒருவனான நான். எனது பிறந்தநாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்ததை எனது வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன். உங்கள் அனைவரையும் சந்தித்தற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அது மட்டுமல்ல, பிறந்த நாள் வாழ்த்தை இங்கே நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது என் செவிகளில் விழாமல் இல்லை, அந்த வாழ்த்தையும் ஏற்றுக் கொண்டு என் உரையை முடித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.Read in source website

தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை வருகிற நிதியாண்டில் செயல்படுத்த, இம்மாத இறுதிக்குள் டெல்லி சென்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்க இருக்கிறோம் என, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் திருவள்ளூர் உள்ளிட்ட புதிதாக அமைக்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கடந்த ஜனவரி 12-ம் தேதி, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்களைச் சேர்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், 85 மாணவ-மாணவிகள் சேர்க்கை முடிவடைந்துள்ளது.

இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் பெற்ற 6 மாணவ-மாணவிகளுக்குப் பாட நூல்கள், மருத்துவ அங்கி, ஸ்டெதஸ்கோப் ஆகியவற்றையும், மற்ற மாணவர்களுக்கு மருத்துவ அங்கி ஸ்டெதஸ்கோப் ஆகியவற்றையும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்புகளுக்கான பாடப் புத்தகங்கள், கை கணினி விரைவில் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் இன்னமும் மயிலாடுதுறை, தென்காசி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் வராமல் இருக்கின்றன. அம்மாவட்டங்களிலும் வந்துவிட்டால், இந்தியாவிலேயே அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கிற மாநிலமாகத் தமிழகம் உருவாகும்.

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இந்த மாத இறுதிக்குள், நானும், சுகாதாரத் துறை செயலாளர் உள்ளிட்டோரும் டெல்லிக்குச் சென்று, 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை வருகிற நிதியாண்டில் செயல்படுத்துவதற்கான வேண்டுகோளை ஒன்றிய அரசிடம் விடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், சுகாதாரத் துறை சிறப்பு அலுவலர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி வத்சன், திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார். எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, சுதர்சனம், டி.ஜெ.கோவிந்தராசன், துரை.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.Read in source website

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட இல்கர் ஐசி, திடீரென அந்த பதவி வேண்டாம் என மறுத்துள்ளார்.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. அதன் பிறகு ஏலத்தில் அதிக தொகை கேட்டதால் டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் ஏர் இந்தியா நிறுவனத்திடம் விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை டாடா குழுமத்திடம் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு முறைப்படி ஒப்படைத்தது. இதன் தொடர்ச்சியாக ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய டாடா குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக இல்கர் ஐசி நியமனம் செய்யப்படுவதாக டாடா அறிவித்தது.

துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் இல்கர் ஐசி. கடந்த 1971-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இல்கர் ஐசி பிறந்தார். 1994-ம் ஆண்டு பில்கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல், பொதுநிர்வாகம் பயின்ற ஐசி, அரசியல் அறிவியல் பாடம் பயின்றவர் ஆவார்.

மர்மரா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்த முதுகலைப்படிப்பையும் அவர் முடித்துள்ளார். இதுமட்டுமின்றி துருக்கி அதிபர் எர்டோகனுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் அவர் இருந்து வருகிறார். அவர் ஏப்ரல் 1-ம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக இல்கர் ஐசி பொறுப்பேற்க இருந்தார்.

இந்தநிலையில் திடீரென அவர் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் ‘‘அந்த பதவியை ஏற்றுக்கொள்வது சாத்தியமானது அல்லது கெளரவமான முடிவாக இருக்காது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.

அவரது நியமனத்துக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளப்பின. துருக்கி அதிபருக்கு நெருக்கமானவர் என்பதால் அவரது பணி நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்தது.

குறிப்பாக ஆர்எஸ்எஸ் துணை அமைப்புகளில் ஒன்றான சுதேசி ஜாக்ரண் மஞ்ச் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த அமைப்பு கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் ‘‘ஏர் இந்தியா இயக்குநராக துருக்கி நாட்டவர் நியமிக்கப்பட்டதை ஏற்க முடியாது. ஏர் இந்தியா தலைமை நிர்வாக இயக்குநராக இல்கர் ஐசி நியமனத்தக்கு தேசத்தின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.Read in source website

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வாகன விபத்தில் சிக்கு வோருக்கு இழப்பீடு வழங்கு வதற்காக கடந்த 1989-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 25-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, வாகன விபத்தில் உயிரிழப் போரின் குடும்பத்தினருக்கான இழப் பீடு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப் படுகிறது. இதுபோல காயமடைந் தோருக்கான நிவாரணத் தொகை ரூ.12,500-லிருந்து ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தப்படுகிறது. இது வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இது தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து உரிய இழப்பீட்டை வழங்குவதற்கான காலவரையறையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2020-ல் நாடு முழுவதும் 3 லட்சத்து 66 ஆயிரத்து 138 சாலை விபத்துகள் ஏற்பட்டதாகவும் இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 714 பேர் உயிரிழந்ததாகவும் அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.-பிடிஐRead in source website

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் குறைதீர்ப்பாளரை நியமிக்காத மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் நடைமுறைக்கு வந்தது. 100 நாள் வேலை என்றழைக்கப்படும் இந்த திட்டம் நாடு முழுவதும் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் விதிகளின்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறை தீர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் குறை தீர்ப்பாளர் நியமிக்கப்படவில்லை.

குறிப்பாக குஜராத், அருணாச்சல பிரதேசம், கோவா, தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான்-நிகோபர் தீவுகள், லட்சத்தீவு, தாத்ரா-நாகர் ஹவேலி ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரு குறை தீர்ப்பாளர் கூட இதுவரை நியமிக்கப்படாதது தெரிய வந்துள்ளது.

ராஜஸ்தானின் 33 மாவட் டங்களில் 4 மாவட்டங் களில் மட்டுமே குறைதீர்ப்பாளர் நிய மிக்கப்பட்டுள்ளார். மேற்குவங்கத் திலும் 4 மாவட்டங்களில் மட்டுமே குறை தீர்ப்பாளர்கள் உள்ளனர். பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே நிலை நீடிக்கிறது.

இந்நிலையில், கடந்த 24-ம் தேதி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் குறை தீர்ப்பு செயலியை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் குறை தீர்ப்பாளரின் செயல்பாட்டை எளிதில் கண்காணிக்க முடியும். செயலி அறிமுக விழாவில் பேசிய அமைச்சர் கிரிராஜ் சிங், பல்வேறு மாநிலங்களில் குறை தீர்ப்பாளர் நியமிக்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து திட்டத்தின் செயலாளர் நாகேந்திர நாத் சின்ஹா, செய்தியாளர் களிடம் கூறும்போது, "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறை தீர்ப்பாளரை கண்டிப்பாக நியமிக்க வேண்டும். ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் 80 சதவீத மாவட்டங்களில் குறை தீர்ப் பாளர்கள் நியமிக்கப் படவில்லை என்றால் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப் படாது. அடுத்த நிதி யாண்டு முதல் இந்த புதிய கட்டுப் பாடு அமலுக்கு வரும்" என்று தெரிவித்தார்.- பிடிஐRead in source website

சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு மறு உத்தரவு வரும் வரை தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால் கடந்த 2020-ம் ஆண்டு முதல் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. பிப்ரவரி 28-ம் தேதி (நேற்று) வரைஏற்கெனவே தடை நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையில், அவசர கால விமானங்கள் சில நாடுகளுக்கு இயக்கப்பட்டன. மேலும் சரக்கு விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து சேவைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்துத்துறை இயக்கு நரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு சர்வதேச சரக்கு போக்குவரத்து விமானங்களுக்கு பொருந்தாது. அதேபோல், இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் சிறப்புஅனுமதி அளிக்கப்பட்ட விமானங்களுக்கும் பொருந்தாது.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. - பிடிஐRead in source website

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியை ஒருங்கிணைக்க 4 மத்திய அமைச்சர், உக்ரைன் அண்டை நாடுகளுக்கு செல்கின்றனர்.

உக்ரைன் எல்லையில் நீண்டநாட்களாக படைகளுடன் காத்திருந்த ரஷ்யா, கடந்த 24-ம் தேதி உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இவர்களை மீட்க, மத்தியஅரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த மீட்புப் பணிக்கு ‘ஆபரேஷன் கங்கா' என பெயரிடப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில், இந்திய மாணவர்களுக்கு உதவிடவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்றி அழைத்து வரும் பணியை ஒருங்கிணைக்கவும் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரஜிஜு, வி.கே.சிங் ஆகியோர் உக்ரைன் அண்டைநாடுகளுக்கு செல்கின்றனர். இதற்கான முடிவு பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இந்த 4 அமைச்சர்களில் ஜோதிராதித்ய சிந்தியா, ருமேனியாமற்றும் மால்டோவில் இருந்து மேற்கொள்ளப்படும் மீட்புப் பணியை கவனிப்பார். கிரண் ரிஜிஜு, ஸ்லோவாக்கியா நாட்டுக்கும் ஹர்தீப் சிங் புரி, ஹங்கேரிக்கும் செல்கின்றனர். வி.கே.சிங், போலந்து நாட்டில் இருந்து மீட்புப் பணியை நிர்வகிப்பார்.

இதனிடையே ‘ஆபரேஷன் கங்கா' திட்டத்துக்கு உதவிட 'OpGanga' என்ற பிரத்யேக ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. போலந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக் குடியரசு ஆகிய நாடுகள் வழியாக இந்தியர்களை வெளியேற்றுவதற்கு உதவிட 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பல இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுஉள்ளன.

போலந்து நாட்டில் திறக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுக்கு அறைக்கு 48225400000, 48795850877, 48792712511 ஆகிய ஹெல்ப்லைன் எண்கள் தரப்பட்டுஉள்ளன. இதுதவிர controlroominwarsaw@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் உதவி கோரலாம் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுபோல் ருமேனியால் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 40732124309, 40771632567, 40745161631, 40741528123 ஆகிய ஹெல்ப் லைன் எண்களும் controlroombucharest@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹங்கேரி நாட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 36 308517373, 36 13257742, 36 13257743 ஆகிய தொலைபேசி எண்களும் 36 308517373 என்றவாட்ஸ் அப் எண்ணும் தரப்பட்டுஉள்ளன.

ஸ்லோவாக்கியா நாட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 421 252631377, 421 252962916, 421 951697560 ஆகிய தொலைபேசி எண்களிலும் hoc.bratislava@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொண்டு உதவி கோரலாம் என கூறப்பட்டுஉள்ளது.

6-வது விமானத்தில் 280 இந்தியர்கள் நாடு திரும்பினர்:

ரஷ்யா தொடுத்துள்ள போரினால், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு மீட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 6-வது விமானம் நேற்று மாலை 6.00 மணிக்கு டெல்லி வந்தடைந்தது. இதில், தமிழகத்தின் 21 மாணவர்கள் உட்பட 280 இந்தியர்கள் பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர். இவர்களில் 15 மாணவிகள், 5 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த21 பேரும் உக்ரைனின் உஸ்கரண்ட்தேசிய அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றனர்.

இவர்களை 250 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து உக்ரைனின் எல்லையில் உள்ள ஹங்கேரி மற்றும் ருமேனியா நாடுகளுக்கு பல்கலைக்கழகம் பேருந்துகளில் அனுப்பி வருகிறது. அதன்படி ஹங்கேரி வந்தவர்களை புத்தபெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு கிளம்பிய ஏர் இந்தியாவின் 6-வது மீட்பு விமானத்தில் டெல்லி வந்தனர்.

அவர்களில் கோவையை சேர்ந்த 5-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஆஷிர்பின் நிஸா இந்து தமிழ் நாளிதழிடம் கூறியதாவது: போருக்கு முன்பாக உக்ரைனில் இருந்து எங்கள் அனைவரையும் வெளியேறும்படி இந்திய அரசுஅறிவித்தது. அப்போது எங்களுக்கும் வகுப்புகள் நடந்து கொண்டிருந்ததால் எங்களால் கிளம்ப முடியவில்லை. போர் துவங்கிய பின் பல்கலைக்கழக நிர்வாகம் 10 நாட்களுக்கு விடுமுறை அறிவித்தது. தற்போது தான் மேற்குப்பகுதி எல்லையிலும் போரின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதற்காக உக்ரைன் ராணுவம் சார்பில் அபாய எச்சரிக்கை ஒலிகளின் வகைகள் பற்றி பொதுமக்களுக்கு விளக்கி வருகின்றனர். இதன் பிறகு எங்களுக்கு உருவானப் பதற்றம் டெல்லி வந்தடைந்த பிறகே முடிவுக்கு வந்தது.

பல்கலைக்கழக நிர்வாகத்தினர் உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து எங்களை பத்திரமாக திருப்பி அனுப்பும் பணியில் இறங்கினர். ஹங்கேரி எல்லையில் இந்திய அதிகாரிகள் உணவு வழங்கி வரவேற்றனர். டெல்லி வந்த பின் தமிழ்நாடு இல்லத்தின் அதிகாரிகள் அன்புடன் வரவேற்று தமிழக வகை உணவளித்தனர்.

இவ்வாறு ஆஷிர்பின் நிஸா கூறினார். பின்னர் இவர்கள் நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். இதுவரை 6 ஏர் இந்தியா மீட்பு விமானங்களில் தமிழக மாணவர்களில் 43 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

பொறுமை காக்குமாறும் தூதரகம் அறிவுரை:

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் ரயிலில் மேற்குப் பகுதிக்கு செல்ல இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு சிக்கியுள்ள இந்தியமாணவர்களை அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்துக்கு சாலை மார்க்கமாக வரவழைத்து அங்கிருந்து விமானம்மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இந்த சூழலில் உக்ரைன்தலைநகர் கீவில் செயல்படும் இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உக்ரைன் தலைநகர் கீவில்ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுஉள்ளது. மீட்புப் பணிக்காகஉக்ரைன் ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. எனவே அனைத்து இந்திய மாணவர்களும் ரயில் நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து மேற்குப் பகுதிக்கு செல்ல வேண்டும். இக்கட்டான இந்த நேரத்தில் இந்தியர்கள், இந்திய மாணவர்கள் பதற்றம் இன்றி ஒற்றுமையாகவும் செயல்பட வேண்டும். ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

ரயில்கள் தாமதமாக வரலாம்.சில நேரங்களில் ரத்து செய்யப்படலாம். எனவே, இந்தியர்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும். ரயில் நிலையங்களில் முண்டியடிக்ககூடாது. மாணவர்கள் தங்களது பாஸ்போர்ட், போதுமான ரொக்கம், உணவுகள், குளிரைத் தாங்கக்கூடிய உடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மட்டுமேஎடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Read in source website

மாஸ்கோ: ரஷ்ய தேசிய அணி உட்பட அந்த நாட்டின் எந்த அணிகளும் உலக அளவில் கால்பந்து விளையாட்டு தொடர்களில் பங்கேற்க FIFA மற்றும் UEFA அமைப்புகள் இடைக்கால தடை விதித்துள்ளன. இந்த தடை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று FIFA அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 6-வது நாளை எட்டியிருக்கும் நிலையில், ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு கால்பந்து அணிகள் மற்றும் கிளப்புகள், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA மற்றும் ஐரோப்பிய கால்பந்தாட்ட நிர்வாகக் குழுவான UEFA.

இதுதொடர்பாக FIFA வெளியிட்டுள்ள அறிவிப்பில், "FIFA மற்றும் UEFA அமைப்புகள் இணைந்து ஆலோசனை நடத்தின. அதன்படி, ரஷ்யாவின் அனைத்து அணிகளையும், அது தேசிய அணியாக இருந்தாலும் சரி அல்லது கிளப் அணிகளாக இருந்தாலும் சரி FIFA மற்றும் UEFA அமைப்புகள் நடத்தும் போட்டி தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்கள் முன் உலகளாவிய கால்பந்து அமைப்பு, "ரஷ்ய கால்பந்து யூனியன்" என்ற பெயரில் ரஷ்ய தேசிய அணி அந்நாட்டைத் தாண்டி நடுநிலையான இடங்களில், அதன் தேசிய கீதம் மற்றும் தேசிய கொடி இல்லாமல் விளையாட அனுமதிக்கப்படும் என்று கூறியிருந்தது. மேலும் போலந்து, செக் குடியரசு போன்ற நாடுகள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரஷ்ய அணியை எதிர்த்து விளையாட மாட்டோம் என்று அறிவித்தது. ஆனால், அந்த நாடுகளை FIFA கண்டிக்கும் விதமாக ஆரம்பத்தில் பேசிய நிலையில், இப்போது அதற்கு மாறாக ரஷ்ய அணிக்கு தடை விதித்துள்ளது.

ஐரோப்பா முழுவதிலும் உள்ள பல கால்பந்து சங்கங்கள் ரஷ்யா உடன் விளையாட மறுப்பு தெரிவித்ததை அடுத்து, FIFA தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது என்பது இதில் இருந்து தெளிவாகிறது.

போலந்து, செக் குடியரசு ஆகிய நாடுகள் மட்டுமில்லாமல் ஸ்வீடன், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து என பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக விளையாட மறுத்துள்ளன. இந்த எதிர்ப்புகளால் FIFA எடுத்துள்ள இந்த திடீர் மாற்றம் வரவிருக்கும் உலகக் கோப்பையில் ரஷ்ய அணியை வெளியேற்றுவதற்கான அறிகுறி என்று சொல்லப்படுகிறது.Read in source website

 

தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது, ஒரே நாடு - ஒரே தேர்தல் அடிப்
படையில் 2024-இல் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறப் போகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், பல இடங்களில் பேசியது ஊடகங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. 
பிரதமர் நரேந்திர மோடி கடந்த பல ஆண்டுகளாகவே "ஒரே நாடு  ஒரே தேர்தல்' என்பதை வலியுறுத்தி வருகிறார். நமது நாட்டில் இது சாத்தியமாவது அவ்வளவு எளிதல்ல.

 அஸ்ஸாம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுடன் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்துக்கும் 2021-இல் தேர்தல் நடைபெற்றது. பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மாநிலங்களில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்துள்ளது. மணிப்பூரில் மார்ச் 3 வரை 2 கட்டங்களாகவும், உத்தர  பிரதேசத்தில் மார்ச் 7 வரை 7 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது. ஹிமாசல பிரதேசத்திலும், குஜராத்திலும் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

மத்திய பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான், தெலங்கானா, 
திரிபுரா, மேகாலயம், சத்தீஸ்கர், மிúஸாரம், நாகாலாந்து ஆகிய 
9 மாநிலங்களில் 2023-இல் சட்டப்பேரவைத் தேர்தலும், 2024-இல் மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ளன.

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளதால், அங்கெல்லாம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், 2024 தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் பிரதமர் நரேந்திர மோடி முதல், மத்திய அமைச்சர்கள் வரை பலரும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால், அமைச்சர்களின் அரசு ரீதியான அலுவல்கள் பாதிக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றால் இவர்கள் நிர்வாக ரீதியான அலுவல் களில் கவனம் செலுத்த முடியும் என்று ஒரே நேரத்தில் தேர்தலை வலியுறுத்துபவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் ஒவ்வொரு தேர்தலின்போதும், வாக்குப்பதிவுக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் அரசின் நிதி செலவழிக்கப்படுகிறது. தேர்தல் பிரசாரத்துக்காக கட்சிகள் செலவழிக்கும் தொகைக்கு  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை எந்தக் கட்சியும் கண்டுகொள்ளாததால் ஒவ்வொரு தேர்தலின்போதும் கட்சிகள் ஏராளமான பணத்தை செலவிடுகின்றன.

ஒவ்வொரு தேர்தலின்போதும், பல்லாயிரக்கணக்கான உள்ளூர் போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தேர்தல் பணிகளில் அமர்த்தப்படுகிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதால் அரசுப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதை மறுப்பதற்கில்லை. 

ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் போலீஸார், துணை ராணுவப் படையினர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மனித ஆற்றலும், கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணமும் விரயமாவது தடுக்கப்
படும் என்பதும் ஏற்கக்கூடிய வாதமே. 

நம் நாட்டில் 1967 வரை ஒரே நேரத்தில்தான் பேரவைக்கும், மக்களவைக்கும் தேர்தல் நடைபெற்றது. ஆனால், அதன் பின்னர் அவ்வப்போது மாநில அரசுகள் கலைக்கப்பட்டதால் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டது.
தமிழ்நாட்டிலேகூட, 1977-இல் பதவியேற்ற எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு, விவசாயிகள் போராட்டத்தைக் காரணம் காட்டி 1980-இல் கலைக்கப்பட்டது. 1989-இல் தேர்தலில் திமுக வென்று கருணாநிதி முதலமைச்சர் ஆனார். சட்டம் - ஒழுங்கைக் காரணம் காட்டி 1991-இல் அவரது அரசு கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இதுபோன்ற சூழல்கள் ஏற்பட்டால் எவ்வளவு ஆண்டுகள் தேர்தல் நடத்தாமல் இருக்க முடியும்? 
ஒரு தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், கூட்டணி ஆட்சிக்கும் வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? இதுபோன்ற சூழ்நிலை பிகாரில் ஏற்பட்டது. அங்கு 2005 பிப்ரவரியில் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணியும் அமையவில்லை. எனவே, அதே ஆண்டு அக்டோபர் - நவம்பரில் மீண்டும் தேர்தல் நடைபெற்றது.

பதவிக் காலம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இருக்கையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில், மத்திய அரசோ, மாநில அரசோ தோல்வியடைந்தால் என்ன செய்வது?

ஜெர்மனியில், பதவியில் இருப்பவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் தோல்வி அடைந்தாலும், மற்றொருவருக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் முதலாமவரே ஆட்சியில் தொடர முடியும். ஆனால், எந்த மசோதாவையும் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படும். இது ஆட்சியாளருக்கு மிகவும் சிக்கலைத்தான் ஏற்படுத்தும்.
2024-இல் ஒரே நேரத்தில் தேர்தல் என்றால், சில மாநில அரசு
களின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும்; வேறு சில மாநில அரசுகளின் பதவிக் காலம் குறைந்துவிடும். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் தீவிரமாக எதிர்ப்பது என காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சிவசேனை உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் முனைப்புடன் உள்ளன.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு என்ற விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்ற காரணத்தால் அது கிடப்பில் போடப்பட்டது. அதேபோல, பல எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்க்கும் என்பதால்  "ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டமும் நடைமுறை சாத்தியமாவது என்பது கானல் நீர்தான்.Read in source website

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாசார அடையாளத்தோடு ரஷியாவுடன் ஒருமித்த கருத்தோடு இணைந்திருந்த உக்ரைனை அன்றைக்கு ரஷியா தன்னுடைய அங்கங்களில் ஒன்றாகவே கருதியது. ஆனால், அந்த நாட்டு மக்களோ தங்களை பிற ஐரோப்பிய நாடுகளுடன் அடையாளப்படுத்திக் கொள்ளவே பெரிதும் விரும்பினா்.

தடையற்ற வா்த்தகம், முதலாளித்துவப் பொருளாதாரம், அதீத ஜனநாயக உரிமைகள், மேற்கத்திய நாடுகளின் நுகா்வு கலாசாரம், பொழுதுபோக்கு ஆகியவற்றால் ஈா்க்கப்பட்ட உக்ரைன், சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாடான பழைய வாழ்க்கை முறையில் இருந்து விடுபட்டு, சுதந்திரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டது. ஒன்றியம் என்ற வாா்த்தையே நீா்த்துப் போன பின்பும், அா்த்தமற்று போன பின்பும் ஏன் தொடா்ந்து ரஷியாவின் பிடிக்குள் நாம் வாழ வேண்டும் என்கிற எண்ணம் உக்ரைன் மக்கள் உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்டது.

ஆகவே, ரஷியாவின் பிடிக்குள் அவா்கள் வாழ விரும்பவில்லை. அதை அவா்கள் மனம் ஏற்கவில்லை. பொருளாதாரத்தில் வளரும் நாடு உக்ரைன். மனித ஆற்றல் வளா்ச்சியில் உலகத்தில் 75-வது இடத்தில் உக்ரைன் இருக்கிறது. வறுமையும், ஊழலும் அதிகமாக இருந்தபோதிலும் கூட, வளமான விவசாய நிலங்கள் இருப்பதால், வேளாண் பொருள் ஏற்றுமதியில் முக்கிய நாடாக அது திகழ்கிறது.

ராணுவ பலத்தில் ரஷியா, பிரான்சுக்கு அடுத்து வருகிற ஒரு குடியரசு நாடு. அதிபா் தலைமையிலான ஒற்றை ஆட்சி முறை நிலவுகிறது. நீதித்துறை, அரசு நிா்வாகத்துறை, சட்டமியற்றும் நாடாளுமன்றம் ஆகிய மூன்று உறுப்புகளைக் கொண்டிருக்கிறது உக்ரைனின் அதிகார மையம். இந்த செல்வாக்கை உடைத்தெறிய வேண்டும் என்கிற அதிகார வெறியோடு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஒரு வலையைப் பின்னினாா்.

ரஷியாவின் அதிபா், பிரதமா் பின்பு மீண்டும் அதிபா் என்று கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறாா் விளாதிமீா் புதின். மக்களுக்கு புதினின் ஆட்சி அலுத்துப் போய்விட்டது. ஆரம்ப காலத்தில் இருந்த பொருளாதார வளா்ச்சி இப்போது இல்லை. பொருளாதாரத்தில் தடுமாற்றம் ஏற்பட்டு தடம் மாறுகிறது. வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. ரஷிய அரசில் ஊழலும், வேண்டியவா்களுக்கு சலுகையும் காட்டும் போக்கும், முதலாளித்துவ ஆதிக்கமும் மிகுந்து வருகின்றன.

தானே ஆட்சியில் தொடர வேண்டும் என்பதற்காக, எதிா்க்கட்சிகளையும், எதிா்க்கட்சித் தலைவா்களையும் வெவ்வேறு காரணங்களைக் கூறி நசுக்கி விடுகிறாா் புதின். மக்களுடைய ஜனநாயக விருப்பங்களை நிறைவேற்ற மேற்கத்திய நாடுகள் ஆசை வாா்த்தைகளை அள்ளி வீசுவதாக புதின் குற்றம் சாட்டுவதோடு, நாட்டை பழைய கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தைப் போல கட்டுக்குள் வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறாா்.

ரஷியாவில் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்றவை கிடைப்பது அரசுக்கு பொருளாதார வளத்தை ஈட்டித்தந்துள்ளது. கூடுதலான பலமாக அன்றைய சோவியத் யூனியனின் ராணுவ பலம் இன்னும் அப்படியே இருக்கிறது.

எனவே, இவற்றைக் கொண்டு ரஷியாவும் ஒரு வல்லரசுதான் என்பதை நிரூபிக்க விளாதிமீா் புதின் முயல்கிறாா். புதிய வல்லரசாகவும், பொருளாதார வளா்ச்சி மிக்க நாடாகவும் திகழும் சீனா, ரஷியாவை நெருக்கமான நண்பனாக வைத்திருக்கிறது. இதன் மூலம், அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்கலாம் என்கிற கணக்கைப் போடுகிறது சீனா. ஐரோப்பாவில் இருந்தும், மத்திய ஆசியாவில் இருந்தும் அமெரிக்காவை வெளியேற்றத் துடிக்கிறது சீனா. ரஷியாவுக்கும் சீனாவுக்கும் ஒரே கொள்கைதான், அதாவது எதிரிக்கு எதிரி நண்பன். இந்த அடிப்படையில்தான் ரஷியாவும், சீனாவும் கைகோத்துக் கொண்டிருக்கின்றன.

அதனுடைய அடிப்படையில் ரஷியாவால் தனது நாட்டுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டால் சீனா தோளோடு தோள் நிற்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது அமெரிக்கா. அதனால் அமெரிக்காவை சீண்டிப் பாா்க்க விரும்புகிறாா் புதின். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, அதலபாதாளத்துக்கு இறங்கிவிட்ட தொழில் வா்த்தகத்துறையை மீட்டெடுப்பதிலேயே தனது முழுமையான கவனத்தை செலுத்தி வருகிறது.

எனவே, இந்த பலவீனமான நேரத்தில் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வைக்கும் நோக்கில் உக்ரைன் விவகாரத்தில் நேரடியாகத் தலையிடுகிறது ரஷியா. இது ரஷிய ராணுவ பலத்தைக் காட்டுவதற்காகவும், ஐரோப்பியாவின் சந்தையை தங்கள் வசம் மாற்றுவதற்காகவுமே. ஆக, மொத்ததில் இதை ஒரு வா்த்தகப் போராகவும் நாம் பாா்க்கலாம்.

அதை விட மிக முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. இருபெரும் நாடுகளின் தலைவா்களுக்கும், தங்களுடைய அரசியல் எதிா்காலம் சூனியமாகாமல் இருக்க, தங்களை செல்வாக்குள்ள தலைவா்களாகக் காட்டிக் கொள்ள வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் பிரச்னையைப் பெரிதாக்கி அதன் மூலம் உலகின் கவனத்தை ஈா்க்க எண்ணுகிறாா்கள். அப்படிச் செய்தால் புதிய வரலாற்றைப் படைத்து விடலாம் என்று அரசியல் கணக்குப் போடுகிறாா்கள்.

முதல் இரண்டு உலகப் போா்களை விட, மிகப்பெரிய போருக்கு இந்த உக்ரைன்-ரஷியா போா் அச்சாரம் போட்டு விடும் என்கிற அளவிற்கு நிலைமை தீவிரமாகி இருக்கிறது. ஏனென்றால், உக்ரைன் - ரஷியா இரண்டுமே அணுகுண்டுகளை தயாரித்து வைத்திருக்கும் நாடுகள். போா் தீவிரமானால் அணு ஆயுதங்களை அந்நாடுகள் பயன்படுத்தக் கூடும் என்கிற அச்சம் நிலவுகிறது.

உக்ரைன் தலைநகா் கீவ் மீது குண்டுமழை பொழியத் தொடங்கி உள்ளது. உக்ரைனில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு 18 முதல் 60 வயதுள்ள அனைவரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடங்கிய உடனேயே சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயா்ந்து விட்டது. நேட்டா அமைப்பில் இணைய உக்ரைன் தொடா்ந்து தனது ஆா்வத்தை வெளிப்படுத்தி வந்தது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், இதற்கு ரஷியா கடுமையாக எதிா்ப்பு தெரிவித்தது. இந்தப் போருக்கான மூலகாரணமே அந்த விவகாரம்தான்.

நேட்டா அமைப்பின் மீதான ரஷியாவின் கடுமையான எதிா்ப்பே இந்தப் போருக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. நேட்டா அமைப்பில், அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், கனடா, டென்மாா்க், பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, லக்சம்பா்க், நெதா்லாந்து, நாா்வே, போா்ச்சுக்கல் ஆகிய 12 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளுடன் உக்ரைனும் இணைந்துவிடக்கூடாது என ரஷியா எண்ணுகிறது. அப்படி இணைந்தால் அதனால் ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷியா கணக்குப் போடுகிறது. இதன் அடிப்படையிலேயே போா் தொடங்கி இருக்கிறது.

‘இந்தப் போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம்’ என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வேதனையுடன் தெரிவித்திருக்கிறாா். ரஷியாவின் படையெடுப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜப்பான் தலைநகரம் டோக்கியோ முதல் அமெரிக்காவின் நியூயாா்க் வரை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அவா்களோடு ரஷிய மக்களும் இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். உள்நாட்டுப் பாதுகாப்பு காரணமாகவும், நேட்டா அமைப்போடு நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்னை காரணமாகவும், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மனிதாபிமானமற்ற முறையில் விளக்கம் அளித்திருக்கிறாா் ரஷிய அதிபா் புதின்.

அதேசமயம், ஒரே நாளில் உக்ரைனின் கிழக்குப் பகுதி மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுவதற்கு புதின் வழிவகை செய்துள்ளதாக அண்டை நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. ரஷிய அதிபா் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை எதிா்த்து சொந்த நாட்டு மக்களே போராட்டத்தில் குதித்திருப்பதன் மூலம் இந்த நடவடிக்கை முறையற்றது என்பதை நாம் உணரலாம். ஒருதலைப்பட்சமான நடவடிக்கையாகவும், அதிபா் புதினுடைய சொந்த விருப்பத்தை நிறைவோ்றும் நடவடிக்கையாகவும் இதனைக் கருதலாம்.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே நிகழ்ந்த எந்த நாடு பெரிய வல்லரசு நாடு என்கிற பனிப்போா் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. பல நாடுகளையும், பல ஆட்சிகளையும் உருவாக்குவதும், திடீரென அவற்றைக் கவிழ்ப்பதுமான விளையாட்டுகளை வல்லரசுகள் விளையாடுகின்றன. அதனால்தான், ஒரு காலகட்டத்தில் சோவியத் யூனியனின் உளவு அமைப்பை அமெரிக்காவே மிரட்சியுடன் பாா்க்க நேரிட்டது.

1991-ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் உடைந்து சிதறியது. ரஷியா தனி நாடாகி விட, வேறு 16 பிரிவுகள் தனித்தனி நாடுகள் ஆகிவிட்டன. இது உடைந்து போன தேசத்தின் கண்ணீா் கதையாகும். அப்படிக் கண்ணீரில் பிறந்த நாடுதான் உக்ரைன். இப்படி விலகிவிட்ட எல்லைக் கோடுகளை ரஷியா மீண்டும் ஒருபோதும் புதுப்பித்து விடக்கூடாது என்று அமெரிக்கா கருதி, பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இதன் அடிப்படையில், பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய ஐரோப்பிய வல்லரசுகளும் இதே எண்ணத்துடன் திட்டங்களைத் தீட்டி வந்தன. அவற்றின் விளைவாக சோவியத் யூனியனில் இருந்து உடைந்து உருவான சிறிய சிறிய நாடுகளை, தங்கள் பக்கம் வளைக்கத் தொடங்கின. அப்போது ஊன்றப்பட்ட போருக்கான விதை, இப்போது போரை உருவாக்கிவிட்டது என்பதே உண்மை.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

 Read in source website

பல ஆண்டுகளாக நம் நாட்டின் தூய்மைப் பணிகளுக்கு கழிப்பறைகள் முதல் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் வரை அனைத்து நிலைகளிலும் 50 லட்சத்துக்கும் அதிகமானோரின் உழைப்பு மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமுடக்க காலத்தில் இந்திய கிராமப்புறங்களில் கட்டப்பட்ட உலா்ந்த கழிவறைகளால் மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் இழிநிலை ஏற்பட்டது.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நம் சமுதாயத்தின் சாபக்கேட்டினை ஒழிப்பதற்கான முயற்சி கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக 1994-ஆம் ஆண்டில் உருவான ‘சபாய் கா்மாச்சரி அந்தோலன்’ (துப்புரவுப் பணியாளா்கள் கிளா்ச்சி) இயக்கம் அரசு ஊழியா்கள், வழக்குரைஞா்கள், கல்வியாளா்களிடையே மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.

2021 ஏப்ரல் மாதம் 30-க்குள் அனைத்து மலம் மக்கல் தொட்டிகளையும் (செப்டிக் டேங்க்) கழிவுநீா் தொட்டிகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் முழுமையாக இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு 2020-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 243 நகரங்களில் ‘சஃபைமித்ரா சுரக்ஷா சேலஞ்ச்’ திட்டம் தொடங்கப்பட்டது.

2008-ஆம் ஆண்டில் 7,70,338 ஆக இருந்த மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டு 42,303 ஆகக் குறைந்துள்ளதாக இந்திய அரசின் அதிகாரபூா்வ தரவு ஒன்று கூறுகிறது. ஆனால், பதினான்கு இந்திய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் சமூக நீதி -அதிகாரமளித்தல் அமைச்சக உத்தரவின் பேரில் தேசிய தூய்மை பணியாளா்கள் நிதி மேம்பாட்டு கழகம் நடத்திய கணக்கெடுப்பு, 2018-ஆம் ஆண்டில் மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை 87,913 போ் என தெரிவிக்கிறது.

2011 ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1,82,505 போ் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியினை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தனா் எனக் கூறுகிறது. அதே சமயம் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் உலா் கழிப்பறைகளின் எண்ணிக்கை சுமாா் 26 லட்சம் என மதிப்பிடப்பட்டிருப்பதால், துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை சுமாா் 12 லட்சம் என்று சபாய் கா்மாச்சரி அந்தோலன் மதிப்பிட்டுள்ளது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, சபாய் கா்மாச்சரி அந்தோலன் தரவு, தேசிய தூய்மை பணியாளா்கள் நிதி மேம்பாட்டு கழக தரவு ஆகியவற்றை ஆராயும்போது அரசாங்கத்தின் முயற்சிகள் தீவிரமாக இருந்ததால், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பழைமையான நடைமுறை ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 89 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனாலும், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணி இந்திய நகரங்களில் மட்டுமே உள்ள பிரச்னை போன்று இந்திய நகா்ப்புற தரவுகளை மட்டுமே கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவிலும் மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்று கூறுவது ஏற்றுக்கொள்ள இயலாதது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளா் தடை - மறுவாழ்வு சட்டத்தில் கடுமையான விதிகள் இருந்தபோதிலும் 2014-ஆம் ஆண்டில் இவ்வகைக் குற்றங்களுக்கு இந்தியாவின் எந்த ஒரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை ஒன்றுகூடப் பதிவாகவில்லை என்கிறது சமூக நீதி - அதிகாரமளித்தலுக்கான 57-ஆவது நிலைக்குழு அறிக்கை. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி 2015-ஆம் ஆண்டில் மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளா் தடைசட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகள் மட்டும் கா்நாடக மாநிலத்தில் பதிவாகியுள்ளது. அதில் ஒன்று மட்டுமே விசாரணைக்கு வந்தது.

துப்புரவுப் பணியாளா் தேசிய ஆணைய தரவின்படி 2013 - 2017 ஆண்டுகளுக்கிடையில் 608 துப்புரவுப் பணியாளா்கள் கழிவுநீா் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது இறந்துள்ளனா். துப்புரவுப் பணியாளா் தேசிய ஆணையம் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் 123 துப்புரவுப் பணியாளா்களின் இறப்பினை பதிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில் தில்லி பிராந்தியத்தில் மட்டும் 429 துப்புரவுப் பணியாளா்கள் இறந்துள்ளதாக சபாய் கா்மாச்சரி அந்தோலன் அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே தேசிய ஆணைய தரவின் நம்பகத்தன்மை குறித்து சட்ட வல்லுநா்கள் பலா் கவலை எழுப்பியுள்ளனா்.

2007-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளா்களின் விடுதலை - மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட 42,203 தூய்மைப் பணியாளா்களில் 27,268 பேருக்கு மட்டுமே ஒருமுறை வழங்கப்படும் நாற்பதாயிரம் ரூபாய் பண உதவி வழங்கப்பட்டதாக 2017-18-ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் 2014-ஆண்டு முதல், கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சுமாா் 1,000 லட்சம் கழிப்பறைகளில், 13 சதவீதம் இரட்டைக் குழி கழிப்பறைகளாகவும், 38 சதவீதம் கழிவு நீா்ப்போக்குக் குழிகளுடன் (சோக் பிட்) கூடிய மலம் மக்கல் தொட்டி கொண்ட கழிப்பறைகளாகவும், 20 சதவீதம் ஒற்றைக் குழி கழிப்பறைகளாகவும் இருந்தன என்று 2017-18 ஆண்டுக்கான தேசிய வருடாந்திர ஊரக சுகாதார மதிப்பீட்டு ஆய்வு கூறுகிறது.

இரட்டைக் குழி கழிப்பறைகள் தவிர மற்ற இரண்டு வகைக் கழிப்பறைகளையும் சுத்தம் செய்ய ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மனித உழைப்போ இயந்திரமோ தேவைப்படுகிறது. கழிவு நீா்ப்போக்குக் குழி, ஒற்றைக் குழி வகையிலான கழிப்பறைகள் இந்தியாவில் ஏராளமாக இருப்பதாலும், கிராமபுறங்களில் இயந்திர பயன்பாடு குறைவாக இருப்பதாலும் பெரும்பாலான கழிப்பறைகளை மனிதா்களே சுத்தம் செய்வது வெளிப்படையாக தெரிகிறது.

இந்திய கழிவறைப் பயன்பாட்டிலும் கட்டமைப்பிலும் பெரும் மாற்றம் ஏற்படுத்திய தூய்மை இந்தியா இயக்கம், தூய்மைப் பணியாளா் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; ஏற்படுத்தும் என நம்புவோம்.Read in source website

தமிழ்த் திரைப்படத் துறையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தவர், பொதுவாழ்க்கையில் சிறந்த மனிதராக வாழ்ந்து காட்டியவர் தியாகராஜ பாகவதர். தமிழகத்தில் மகாத்மா காந்திக்கு அடுத்து அதிகக் கூட்டம் கூடியது இந்த புனிதருக்குத் தான். அவர் பிறந்த நாள் மார்ச் 1.

திரையில் மட்டும் அல்ல, பொது வாழ்க்கையிலும் சூப்பர் ஸ்டாராக விளங்கிய இவரது வரலாற்றை இளைய தலைமுறையினர் படித்தால், சினிமா, அரசியல், பொது வாழ்க்கை பற்றிய தெளிவு கிடைக்கும். 

சுருக்கமாக எம்.கே.டி. என அழைக்கப்படும் தியாகராஜ பாகவதர் மார்ச் 1, 1910 ஆம் ஆண்டு மாயவரத்தில் பிறந்தவர். இவர்களது பெற்றோர் மாயவரம் கிருஷ்ணமூர்த்திஆச்சாரி - மாணிக்கத்தம்மாள் ஆவார்.

1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய இவர்,  14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார், அதில் 6 படங்கள் இமாலய வெற்றிப் படங்களாக வலம் வந்தவை.

1944 இல் வெளிவந்த இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ், சென்னை பிராட்வே திரையரங்கில் மூன்று ஆண்டுகள் ஓடி சாதனை படைத்தது.  மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியப் படம் என்ற சரித்திரமும் படைத்தது.

அன்றைய காலகட்டத்தில் நாடக மோகம் அதிகமிருந்த காலகட்டமானாதால், திரைப்படத்திற்கு நாடகக் கலைஞர்களையே தேர்வு செய்தனர். நாடகக் கலைஞர்களுக்கு நடிப்புடன் பாடவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகையால் பாரம்பரிய இசைக்கலைகளை கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தனர். பாகவதரும் அவ்வாறு தேர்ச்சி பெற்றவராவார். அவரின் இசைப்புலமைக்கு போட்டி போட்டுக் கொண்டு திரைப்படமெடுக்க பல செல்வந்தர்கள் மதுரை டாக்கிஸ் என்ற குழு அமைத்து படமெடுக்க முன்வந்தனர். மதுரை செல்வந்தரால் மதுரை டாக்கீஸ் நிறுவனத்தால் எடுத்து திரையிடப்பட்ட சிந்தாமணி படம் அமோக வெற்றிபெற்றதனால் அத்திரையரங்கு சிந்தாமணி திரையரங்கம் என்று பெயர் பெற்று இன்று வரை அவ்வாறே அழைக்கப்படுகின்றது.

ஏழிசை மன்னர் எனப் போற்றப்படுவர், மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரான இவர் 41/2 கட்டை சுருதியில் அருமையாக பாடக்கூடியவர். தியாகராஜ பாகவதரின் இசையை செல்வந்தர் முதல் பாமரர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி ரசித்தனர். அனைவருக்கும் புரியும்படி எளியத் தமிழில் பாடினார். இவரின் திரைப்பாடல்கள் பெரும்பாலும் இறைப்பற்றுடனும், தென்னிந்திய பாரம்பரிய இசையை சார்ந்தே இருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பாடலெழுதும் ஆஸ்தான பாடலாசிரியரான பாபநாசம் சிவன், இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில் வல்லவராய் இருந்தார். பாபநாசம் சிவன் இயற்றிய பல பாடல்கள் எம்.கே.டி யின் புகழை உயர்த்தின, மக்களிடையை பெரும்புகழையும் பெற்றன.

இவரின் குரல் வளத்தை உணர்த்தும் ஒரு நிகழ்வைப் பார்ப்போம்.  தஞ்சாவூர் அருகே உள்ள மாவூரில் இவருடைய இசைக் கச்சேரி நடந்தது. இரவு நேரம், அப்போது  அங்கிருக்கும் மாவு மில் சங்கு  வழக்கம் போல ஒலித்தது. பாகவதர் அந்த இடையூரைப் பொருட்படுத்தவில்லை, மாறாக அந்த சங்கொலிக்கு ஈடுகொடுத்து தன குரலை உயர்த்தி கணீரென்று தம் கட்டி பாடினார். அந்த சங்கொலிக்கு நிகராக தன் குரலை இழுத்து அது முடியும் வரை பாடினார். மக்களின் கவனம் முழுவதும் அசையாமல் அவரின் குரலின் மீதுதான் இருந்தது.

புகழின் உச்சத்தில் இருந்த அவரின் வாழ்க்கை சில சதிகளுக்குள்ளும் சிக்கிக் கொண்டது. சென்னையில் (அன்றைய மதராஸ்) மிகப் பரப்பரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக ஆத்ம தோழரான என்.எஸ்.கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டார். 4 வருடம் சிறைத் தண்டனையும் பெற்றார்.

லண்டன் கவுன்சிலில் இருந்த பிரபல வழக்குரைஞர் வேலூர் எத்திராஜ் முதலியார் இவர்களின் வழக்கின் தன்மையை ஆராய்ந்தார். சாட்சிகளின் குளறுபடிகளை அறிந்தார். எனவே, இவர்கள் இருவருக்காகவும் தானாக முன்வந்து ஆர்வத்துடன் வாதாடினார். தண்டனை காலத்திலேய இவரின் வழக்கு மறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு வருட சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். விடுதலையானாலும்,  இந்த குற்ற பாதிப்பு அவரின் நெஞ்சை, வாழ்க்கையை, சினிமா உச்சத்தை பொளாதார ரீதியாக பாதித்தது. பாகவதர் சிறை செல்ல நேர்ந்தபோது 12 படங்களுக்கு முன்பணம் வாங்கி இருந்தார். படத் தயாரிப்பாளர்கள் கொடுத்த முன் பணத்தை திருப்பிக் கேட்டார்கள். அந்த சிரமமான நேரத்திலும் அந்தப் பணத்தை யெல்லாம் மிகுந்த சிரத்தையோடு திருப்பிக் கொடுத்தார்.

சிறை விடுதலைக்குப்பின்  முயற்சி செய்து, அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சிறைக்குப்பின் பலர் படமெடுக்க முன்வந்தாலும் பாகவதர் அவற்றை ஒதுக்கித் தள்ளினார். அவரின் கஷ்ட காலத்தில் உதவாத திரைப்படத்துறையை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தார்.

அதன்பின் சொந்தப் படங்கள் எடுத்து தோல்வியைத் தழுவினார். அதன் பின் மேடைக் கச்சேரிகளை மட்டும் பண்ணிக் கொண்டு வந்தார். அதிலும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறமுடியவில்லை.

இவரின் ரசிகராகவும் நண்பராகவும் விளங்கிய முக்கூடல்த.பி சொக்கலால் பீடி அதிபர் ஹரிராம் சேட் இவருக்கு மிக உயர்ந்த பாண்டாக் கார் பரிசளித்தார், அதை வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

இவரின் ரசிகராக வீட்டை விட்டு ஒடி வந்த கோபால், ரசிகரானப் பிறகு எம்.கே.டி கோபால் எனப் பெயர் மாற்றிக்கொண்டு எம்.கே.டி யின் ஆத்ம நண்பனாக மாறினார். ஒரு முறை எம்.கே.டி.-யின் வைர மோதிரம் கிணற்றில் விழுந்ததை அனைவரும் திடுக்கிட்டு நிற்கையில் அக்கிணற்றில் யாரும் எதிர்பாராத வகையில், உயிரைப் பற்றிக்கவலைப்படாமல் குதித்து அம்மோதிரத்தை கண்டுபிடித்துக் கொடுத்தார், அது முதல் ஆத்ம ரசிகனாகவும், நண்பனாகவும் எம்.கே.டி.யுடனே இருந்துவரலானார். பலருக்கு உதவி செய்வதில் பாகவதர் தயாள குணம் கொண்டவர். சேமிப்பு குணம் அற்றவர். படங்களில் இருந்து ஒய்வு பெற்ற சமயத்தில் தன்னையே நம்பி இருந்த பாடலாசிரியர் பாபநாசம் சிவனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கலை உணர்ந்து, அவர் கேட்காமலேயே தான் சாப்பிடுவதற்கும், விருந்தினர்களை உபசரிக்கவும் பயன்படுத்தும் தங்கதட்டையே கொடுத்துதவியவர். தனது வழக்கை சிக்கலின்றி முடித்து வைத்த வழக்குரைஞர் எத்திராஜிக்கு ஒரு தங்கத்தட்டை அளித்து பெருமைப்படுத்தியவர்.

வழக்கறிஞர் எத்திராஜ் இந்த தங்கத் தட்டையும் தன்னிடமிருந்த பணத்தையும் வைத்து 1948ஆம் சென்னையில் எத்திராஜ் மகளிர் கல்லூரியை ஆரம்பித்தார்.

இப்படி உதவிய பாகவதர் குடும்பம் மிகப் பெரிய பொருளாதார இக்கட்டையும் சந்தித்தது. இன்றைய பல ஜாம்பவானகள் அனைவரும் வந்து காத்திருந்த அவரது வீட்டில் வறுமைத் தாண்டவமாடியது. பாகவதரின் கடைசி காலம் மிகவும் சோகமயமானது. வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். மருத்துவத்திற்காகக்கூட யாருடைய தயவையும் அவர் நாடவில்லை. பல திரைக்கலைஞர்கள் விழா எடுத்து நிதி திரட்டும் ஆலோசனையைக் கூறியும் அதை ஏற்க மறுத்து விட்டார். சிவகாமி படத்தின் இறுதிக் காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காடசிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார். கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்க தடுமாறினார்.

நவம்பர் 1, 1959, ஈரல் நோயினால் பாதிப்படைந்தவராக சென்னை பொதுமருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அங்கு காலமானார்.

பாகவதர் வாழ்க்கையில் சில நிகழ்வுகள்

பாகவதர் சிறுவனாக நாடக உலகத்தில் பிரவேசித்த காலத்தில் குருவாக இருந்தவர் நடராஜ வாத்தியார். பிற்காலத்தில் வாத்தியாரின் நலனுக்காக நாடகம் நடத்தி அதில் வந்த பணத்தை அப்படியே அவருக்குக் கொடுத்து உதவினார் பாகவதர் திருச்சி வானொலியில் நிரந்தர வித்வானாக இருந்த சமயம். அன்று அவர் கச்சேரிக்குத் தம்பூரா போட இருந்த கலைஞரை மாற்றும்படிக் கேட்டுக் கொண்டார். ஏனென்று தெரியாதபோதிலும் அவரை மாற்றினார்கள் வானொலி நிலையத்தார். அந்தக் கலைஞர் ஒரு காலத்தில் தனக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்த குரு. என்று பாகவதர் சொல்லித்தான் மற்றவர்களுக்குத் தெரிந்தது. வாழ்க்கைத்தரம் சரிந்து விட்ட நிலையில் குரு தம்பூரா போட வர நேர்ந்தது. அதை விரும்பாத பாகவதர் தனக்குக் கிடைத்த சன்மானத்தொகையை குருவுக்கே கொடுத்து விட்டார்.

ஒருமுறை நாகர்கோவிலில் என்.எஸ்.கே வீட்டில் புதுமனை புகுவிழாவில் பாகவதரின் கச்சேரி நடந்தது. என்.எஸ்.கே பாகவதருக்கு எல்லோர் முன்னிலையிலும் ஒரு வைர மோதிரம் வழங்கினார். அந்த மோதிரத்தை கச்சேரியில் சிறப்பாக வயலின் வாசித்த வயலின் வித்வானுக்கு அன்பளிப்பாக அளித்து விட்டார் பாகவதர். கலைஞர்களை கவுரவிக்கும் சிறந்த பண்பு பாகவதரிடம் இருந்தது.

ஒருமுறை கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள மண்டைக்காடு என்ற இடத்தில் பாகவதர் கச்சேரிக்கு ஏற்பாடாகி இருந்தது. கச்சேரி ஏற்பாடு செய்தவர்கள் இலவசம் என்று அறிவித்திருந்த போதிலும் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக நிர்வாகிகள் கட்டணம் வசூலிக்கலாம் என பாகவதரை நிர்பந்தம் செய்தார்கள். ஆனால், இலவசமென்று அறிவித்துவிட்டு கட்டணம் வசூலிப்பது தவறு என்று தனக்கு வந்திருக்கக்கூடிய பல ஆயிரம் ரூபாய் வருமானத்தையும் லட்சியம் செய்யாமல் கூறினார்.

பாகவதர் திரை இசை உலகின் உச்சத்தில் இருந்தபோது தங்கத்தட்டில்தான் சாப்பிடுவாராம். ஒரு முறை கவிஞர் சுரதா அவர் இல்லத்திற்கு சாப்பிடச் சென்றபோது அவருக்கு வாழை இலை போட்டார்கள். ஆனால் பாகவதர், “அவர் என்னுடன் விருந்தாளியாக இருக்கும் வரை அவருக்கும் தங்கத் தாம்பாளத்தில் தான் உணவளிக்க வேண்டும்” எனக் கட்டளை இட்டார்.

பாகவதருக்கு செல்வந்தரான ஒரு முஸ்லீம் நண்பர் இருந்தார். அவரின் இரு மகன்களுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.  அந்த நண்பர் மகன்கள் பேரில் கோபங்கொண்டு தான் சம்பாதித்ததை எல்லாம் பாகவதர் பெயருக்கு எழுதிப் பதிவு செய்து விட்டார். ஆனால் அந்த நண்பர் ஆத்திரத்தால்தான் அப்படிச் செய்து விட்டாரென புரிந்து கொண்டு அந்த முஸ்லீம் நண்பரின் மகன்கள் இருவரையும் கூப்பிட்டு அறிவுரை கூறினார் பாகவதர். அந்தப் பெரியவர் மறைந்ததும் அவருடைய மகன்கள் பேரில் சொத்துக்களை சரி சமானமாகப் பிரித்து அவர்களுக்கே அளித்து விட்டார்.

அன்றைய கால கட்டத்தில் இவரின் கச்சேரிகளை காண மக்கள் மின்சாரக் கம்பத்தில் ஏறி நின்று கொண்டு கேட்டனர். அம்மாதிரி சமயத்திலே ஒரு சிறுவன் மின்சாரம் தாக்கி மரணமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்த்து உண்டு. பாகவதர் அச்சிறுவனின் குடும்பத்துக்கு பின் 5000 ரூபாய் நிதியுதவி அளித்தார். இது அன்றைய நாட்களில் மிக்பெரியத் தொகை.

ஒருமுறை திருச்சிக்கு காரில் பயணமான பொழுது இவரின் கார் புதுக்கோட்டை வழியாக தொடர் வண்டி பாதையைக் கடக்க முற்படுகையில் அளவுக்கதிமான கூட்டம் இவரின் காரை கடக்க விடாமல் சூழ்ந்து கொண்டது. ரயில் வண்டியின் கார்ட் இதையறிந்து வண்டியை நிறுத்திவிட்டு பாகவதரை பாட வற்புறுத்தினார். பாகவதர் வேறுவழியின்றி அங்கு பாடிய பிறகு தான் தொடர் வண்டி அங்கிருந்து நகர்ந்தது. தமிழகத்தில் மகாத்மா காந்திக்கு பிறகு அதிக அளவில் கூட்டம் கூடியது இவருக்குத் தான்.

1957-ல் பிரதமர் நேரு தமிழக முதல்வர் காமராஜருடன் திருச்சிக்கு வந்தபோது,  இவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்து, எம்.பி.யாக தேர்தலுக்கு நியமிக்க கூறினார், தான் நடிகராக இருப்பதால் அதை ஏற்கும் தகுதி இல்லை என்று கூறி மறுத்துவிட்டார் பாகவதர்.

2 வது உலக யுத்த நிதிக்கு பாகவதர் உதவிய போது, அவரைப் பாராட்டிய கவர்னர் 3 கிராமங்களை பரிசாக வழங்கினார், ஆனால் அதை அப்படியே ஏழைகளுக்கு வழங்கினார் பாகவதர்.

இன்றைய சினிமா நட்சத்திரங்களையும், அரசியல்வாதிகளையும் பார்க்கும் இளைய தலைமுறையினர் பகாவதர் வாழ்க்கையை படித்தால்.. பொதுவாழ்கைக்கு போலிகள் வராது. 

[கட்டுரையாளர் - தமிழ் முழக்கப் பேரவை அமைப்பாளர்]Read in source website

சென்னைப் பெருநகரத்தின் முதலாவது தலித் பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படவிருப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னையையொட்டி அமைந்துள்ள புதிய மாநகராட்சிகளான தாம்பரம், ஆவடி ஆகியவற்றிலும் முதல் மேயராக தலித் பெண் பிரதிநிதிகளே பதவியேற்கவுள்ளனர். தவிர, ஒன்பது மாநகராட்சிகளிலும் பெண்கள் பொதுப் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் 50% ஆக உயர்த்தப்பட்டிருப்பது, இனி வரும் காலத்தில் அரசியலில் பெண்களுக்கான இடத்தைத் தவிர்க்கவியலாததாக மாற்றும். 1992-ல் அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி தேசிய அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் 33% ஆக நிர்ணயிக்கப்பட்டது.

பெண்களுக்கான அரசியல் உரிமைகளைக் குறித்து தீவிரமாக விவாதிக்கும் தமிழ்நாடு, அந்த இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தியதன் வாயிலாக முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் தன்னையும் நிறுவிக்கொண்டுள்ளது. தமிழ்நாடு தவிர கேரளம், ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் சரிபாதி பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரசியலில் பெண்களுக்கு அதிகாரமளித்தலே உள்ளாட்சி அமைப்பில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான நோக்கம். எனவே, தேர்ந்தெடுக்கப்படும் பெண் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான சூழலை உருவாக்குவதன் வாயிலாகவே பெண்களை அதிகாரமயப்படுத்துதல் என்ற இலக்கை எட்ட முடியும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் சரிபாதியாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டுவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை 33% ஆக நிர்ணயிப்பதற்கான சட்டத்தை நிறைவேற்ற இயலாத நிலை நெடுங்காலமாக நீடித்துவருகிறது. மக்களவையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் தற்போது 14% என்ற அளவிலேயே உள்ளது. கடுமையான போட்டி நிலவும் சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் பெண் வேட்பாளர்களை நிறுத்த அரசியல் கட்சிகள் தயங்குகின்றன.

அரசியல் துறையில் பெண்களின் கள அனுபவங்கள் குறைவாக இருப்பதே அதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. அதனால் சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களின்போது பெண்களின் பிரதிநிதித்துவம் என்பதைக் காட்டிலும் அரசியல் கட்சிகளின் வெற்றியே பிரதானமாகிவிடுகிறது. இந்த நடைமுறைச் சிக்கலுக்கு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் ஒரு தீர்வாக அமைய முடியும்.

உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பாகச் செயல்படும் பெண் பிரதிநிதிகள் இடஒதுக்கீட்டுக்கான சுழற்சிமுறைக் காலம் முடிந்த பிறகும், பொதுத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை அரசியல் கட்சிகள் வழங்க வேண்டும். அவர்களது உள்ளாட்சி அனுபவங்கள், சட்டமன்றத்தை நோக்கியும் நாடாளுமன்றத்தை நோக்கியும் பயணிப்பதற்கான படிக்கல்லாகவும் அமைய வேண்டும். உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்படுவதால், கட்சி வகுத்த பாதையில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தையும் உள்ளாட்சித் தலைவர்களின் மீது சுமத்திவிடக் கூடாது. உள்ளாட்சிகளின் தன்னாட்சி மேம்பட வேண்டும், சட்டமியற்றும் சபைகளுக்கான பயிற்சிக் களமாக அவை மாற வேண்டும்.Read in source website

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இல்லாவிட்டாலும் வேண்டுமென்றே தங்களைக் காயப்படுத்திக் கொள்கிறவர்களின் (Deliberate self-harm) எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதிலும், பதின்பருவத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் மாணவர்கள் முதல் இரண்டு இடங்களில் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுவதால் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பருவமடைந்த மாணவர்களின் மூளையில், ஒரு செயலைச் செய்வதற்கு ஊக்கம் தருகின்ற, செய்தபின் மகிழ்ச்சியூட்டுகின்ற டோபமைன் அதிகம் சுரப்பதாலும், சிந்தித்துச் செயல்படவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும் வழிகாட்டும் பிரீஃபிரான்டல் கார்டெக்ஸ் முழுமையாக வளர்ச்சியடையாததாலும் பதின்பருவத்தினர் இதில் எளிதில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆபத்தானதாக இருந்தாலும், தற்காலிகமாகக் கிடைக்கும் மகிழ்ச்சிக்காகத் தங்களைக் காயப்படுத்திக்கொள்கிறார்கள்.

உடனிருப்பவர்கள் சிறிது கவனமாக இருந்தாலே இத்தகைய மாணவர்களைக் கண்டறிந்து சரியான நேரத்தில் காப்பாற்றிவிட முடியும். ஏனென்றால், தங்கள் உடலில் உள்ள காயத்தை யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காக, எப்போதும் நீளமான கால்சட்டை, பாவாடை, மணிக்கட்டுவரை மூடியுள்ள ஆடையை அவர்கள் அணிந்திருப்பார்கள். காயத்தின் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட துணியைச் சுற்றி, கட்டு போட்டிருப்பார்கள். காரணம் சொல்ல முடியாத புதிய காயங்கள் அல்லது சரிவர ஆறாத பழைய காயங்கள் இருக்கும். கத்தி, பிளேடு போன்ற கூர்மையான பொருட்களை வாங்குவார்கள். ரத்தக் கறை படிந்த துணிகளை மறைப்பார்கள். தன்னைக் காயப்படுத்திக்கொள்வதால் ஏற்படும் ஆபத்து குறித்து இணையத்தில் வாசிப்பார்கள். அதிகமாகத் தனிமையைத் தேர்ந்தெடுப்பார்கள்.

அதிக நேரம் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது, சரியில்லாத குடும்ப உறவுகள், புறக்கணிப்புகள், உடல், மன, பாலியல் துன்புறுத்தல்கள், மனச்சோர்வு, ஆளுமைக் கோளாறுகள் உள்ளிட்ட காரணிகள் இதற்குத் தூண்டுதலாக இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பெற்றோரையும் நண்பர்களையும் பழிவாங்கவும், கோபத்தை வெளிப்படுத்தவும், தான் எதற்கும் பயனில்லை என நினைப்பதாலும் தங்களையே காயப்படுத்திக்கொள்கிறவர்களும் உண்டு. இது போன்ற சிக்கல்களை சில மாணவர்கள் ஆக்கபூர்வமான வழிகளில் கையாளுகிறார்கள். ஓவியம் வரைவது, கவிதை எழுதுவது, தங்கள் துயரங்களை ஒரு தாளில் எழுதிக் கிழித்துவிடுவது, வாசிப்பில் ஈடுபடுவது, நண்பர்களுடன் கலகலப்பாக உரையாடுவது, இசை, விளையாட்டு போன்ற வழிகளில் தங்கள் சோகத்தை, விரக்தியை, ஏமாற்றத்தை, வெறுமையை இவர்கள் சரிசெய்துகொள்கிறார்கள்.

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதன் வழியாக வெறுமையை வெற்றிகொள்ள முடியும் என்கிறார் உளவியலர் விக்டர் பிராங்கிள். இதற்காக அவர் பரிந்துரைத்த மூன்று வழிமுறைகள் பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

(1) பிறர்நல சேவை: தன்னலமின்றிப் பிறருக்கு உதவுகிறவர்கள் தாம் உயிர் வாழ வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்கிறார்கள். உதாரணமாக, 1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவரின் மகள் பிரியங்கா காந்தி மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். அவரைச் சந்தித்த அன்னை தெரசா, ‘வந்து என்னோடு சேவை செய்’ என்று அழைத்ததாகவும், பல ஆண்டுகள் அவருடன் இணைந்து பணியாற்றியதாகவும், அவருக்குத் தான் நன்றிக்கடன்பட்டிருப்பதாகவும், தன்னலமற்ற சேவையையும், அன்பையும் தன்னிடம் அவர் காட்டியதாகவும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். இழப்பின் இருளில் வாழ்வைத் தொலைத்துவிடாதிருக்க பிரியங்காவுக்கு உதவியது பிறர்நல சேவை.

(2) உறவுகளின் மீது கவனம்: முற்சாய்வு எண்ணமின்றி மற்றவர்களோடும் இயற்கையோடும் திறந்த மனதுடன் தொடர்பில் இருப்பது, பாராட்டுவது, அன்றாடம் நாம் செய்யும் செயல்கள் மீது மனம்நிறைக் கவனத்துடன் (mindfulness) செயல்படுவது எல்லாம் பேருதவி செய்யும்.

(3) அணுகுமுறை மாற்றம்: எதிர்மறைச் சூழ்நிலைகளிலும், அதில் ஏதாவது நல்லது இருக்கிறதா என பார்ப்பதும், துன்பம் அல்லது கஷ்டத்தை வாய்ப்பாக ஏற்று முன்னேறி மற்றவர்களுக்கு உந்துசக்தியாக இருப்பதும் பலன் தரும்.

எதார்த்தத்தில், பெரும்பாலான பதின்பருவப் பிள்ளைகளுக்குத் தங்கள் மனச்சோர்வை, உணர்வெழுச்சியை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்தும் வழி தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பள்ளி மாணவி என்னைச் சந்திக்க வந்திருந்தார். இறுக்கமான மனநிலையில் இருந்த அவர், தயங்கித் தயங்கிப் பேசினார். திடீரென, ‘என்னால முடியல சார். வீட்டுல அப்பாவும் அம்மாவும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்க. பள்ளிக்கூடத்திலயும் நிறைய வேலை கொடுக்கிறாங்க. அதனால…’ என்று தயங்கியவர், ‘என்னையே நான் காயப்படுத்திக்கிறேன்’ என்றார். நான் மாணவியின் கைகளைப் பார்த்தவுடன், ‘தொடையில சார்’ என்றார்.

தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்கிறவர்களில், உடலைக் கீறிக்கொள் கிறவர்கள்தான் உலகளவில் அதிகம் இருக்கிறார்கள். தற்கொலை செய்துகொள்வது இவர்களின் எண்ணம் இல்லையென்பதால் பட்டும் படாமலும்தான் ஆரம்பத்தில் காயப்படுத்திக்கொள்வார்கள். மனம் இலகுவாவதுபோலத் தோன்றுவதால் ஏற்படும் ‘மகிழ்ச்சி’யால் சில நாட்கள் கழித்து சற்றுக் கடுமையாகக் காயப்படுத்திக்கொள்வார்கள். அடுத்ததாக, அழுத்தமும் ஆழமும் அதிகரிக்கும். தங்களைக் காயப்படுத்திக்கொள்ளும்போது, அல்லது அடுத்த சில நிமிடங்களுக்கு மிகவும் ஆறுதலாக உணர்ந்தாலும் அவமானமும் குற்ற உணர்வும் தங்கள் மீதே வெறுப்பும் கொள்வார்கள்; பயப்படுவார்கள். குற்ற உணர்விலிருந்து வெளிவரவும், ஆறுதல் பெறவும் மறுபடியும் தங்களையே காயப்படுத்திக்கொள்வார்கள். காயத்தை ஆற விடாமல் செய்கிறவர்களும், மருந்து போட்டுக்கொள்வதைத் தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளும்போது, இறுக்கமான மனநிலை இலகுவாவதுபோலவும், எதிர்மறை எண்ணங்களும் உணர்வுகளும் குறைந்து உணர்வுச் சமநிலை அடைவதுபோலவும் தோன்றலாம். ஆனால், இது உண்மையுமல்ல, நிரந்தரமுமில்லை! இவ்வழிமுறைகள் ஆக்கபூர்வமானதாக இல்லாததால் மறுபடியும் மனச்சோர்வுக்கு இட்டுச்செல்வதுடன், அவர்களையும் அறியாமலேயே சில வேளைகளில் உயிரையும் பறித்துவிடுகிறது. யார்மீதும் நம்பிக்கையற்ற, நல்ல நண்பர்கள் இல்லாத இருளில் தள்ளிவிடுகிறது, உடலில் சில பகுதிகளில் நிரந்தரப் பலகீனம், நிரந்தரத் தழும்பு ஏற்படுகிறது, சதையையும் ரத்த நாளங்களையும் காயப்படுத்துகிறது, காயத்தில் தொற்று ஏற்படுகிறது.

காயப்படுத்திக்கொள்கிறவர்களைக் குற்ற வாளிகள்போல் தீர்ப்பிடுவதோ, தனியாக விட்டுவிடுவதோ கூடாது. அவர்களோடு கலந்துரையாடுவதும், பாசமான குடும்பச் சூழலும், உடனடியாக மனநல ஆலோசனையும் இருந்தால் அவர்களை நிச்சயம் காப்பாற்றிவிடலாம்.

மார்ச் 01: தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்வதற்கு எதிரான விழிப்புணர்வு நாள்

- சூ.ம.ஜெயசீலன், ‘வாழ்வைத் திறக்கும் சாவி: கொஞ்சம் வாழ்வியல் கொஞ்சம் உளவியல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.comRead in source website

ரஷ்யக் கொடி மற்றும் தேசிய கீதத்தைப் பயன்படுத்தவும் ஃபிஃபா இடைக்கால தடை விதித்துள்ளது.

Explained news in tamil: ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து போர் தொடுத்து வருகிறது. இதன் எதிரொலியாக அடுத்த அறிவிப்பு வரும் வரை ரஷ்யா அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என்று கூறியுள்ள சர்வதேச நாடுகளின் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (FIFA), ரஷ்யாவை இடைநீக்கம் செய்துள்ளது. இதையே ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பும் (UEFA) தெரிவித்துள்ளது. மேலும், ஐரோப்பிய கால்பந்து லீக் தொடருக்கான முக்கிய ஸ்பான்சர்களில் ஒன்றான ரஷ்ய அரசின் எனர்ஜி நிறுவனமான காஸ்ப்ரோம் (Gazprom) உடனான உறவுகளையும் துண்டித்துள்ளது.

இந்த இடைநீக்கத்தால் ரஷ்யா ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான பிளே-ஆஃப் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது. முன்னதாக ரஷ்யா நாட்டில் இந்த மாதம் பிளே-ஆஃப் சுற்றுகள் நடைபெற இருந்தது. ஆனால் அதில் விளையாட இருந்த போலந்து உள்ளிட்ட சில நாடுகள் மறுத்திருந்தன. மேலும், இது தொடர்பாக அந்த அணிகள் ஃபிபாவுக்கு தங்களது வாதத்தையும் முன்வைத்திருந்தன. எனவே ஃபிபா நடவடிக்கை எடுத்துள்ளது.

ஃபிபாவின் (FIFA) சமீபத்திய அறிக்கை என்ன சொல்கிறது?

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, அந்த நாடு உலக விளையாட்டிலிருந்து விரைவாக தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை மாலை ஃபிபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “FIFA கவுன்சில் மற்றும் UEFA நிர்வாகக் குழுவின் ஆரம்ப முடிவுகளைப் பின்பற்றி, கூடுதல் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதைக் கருத்தில் கொண்டுள்ளது. FIFA மற்றும் UEFA இன்று அனைத்து ரஷ்ய, தேசிய பிரதிநிதி அணிகளாக இருந்தாலும் அல்லது கிளப் அணிகளாக இருந்தாலும், மறு அறிவிப்பு வரும் வரை FIFA மற்றும் UEFA இரண்டு போட்டிகளிலும் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்யப்படும்.” என்று முடிவு செய்துள்ளன.

இந்த இடைநீக்கத்தால் ரஷ்ய கால்பந்து அணிக்கு என்ன பாதிப்பு?

இந்த இடைக்கால தடை ரஷ்ய கால்பந்து அணியை 2022 உலகக் கோப்பையிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றுகிறது. மார்ச் 24 அன்று போலந்துக்கு எதிராக உலகக் கோப்பை பிளேஆஃப் ஆட்டத்தில் ரஷ்யா விளையாட உள்ளது. ஆனால் போலந்து ஏற்கனவே ரஷ்யாவுக்கு எதிராக விளையாட மறுத்துவிட்டது. இப்போது, ​​பிளேஆஃப் இறுதிப் போட்டிக்கு போலந்துக்கு பை கொடுக்கப்படுமா? என்பதைத்தான் பார்க்க வேண்டும் (பை என்பது போட்டியின்றி அடுத்த சுற்றுக்கு தானாக முன்னேறுவதை குறிக்கிறது).

கூடுதலாக, ரஷ்யாவின் மிகவும் பிரபலமான கால்பந்து கிளப்புகளில் ஒன்றான “ஸ்பார்டக் மாஸ்கோ” அணி யூரோபா லீக்கில் விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஃபிஃபாவின் (FIFA) ஆரம்ப அறிக்கை என்ன?

சர்வதேச நாடுகளின் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிஃபா நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ரஷ்யாவில் எந்தவித சர்வதேச போட்டியும் நடத்தப்பட மாட்டாது. நடுநிலை பிரதேசத்திலும் பார்வையாளர்கள் இல்லாமல் ‘ஹோம்’ போட்டிகள் நடத்தப்படும்.”

மேலும் “ரஷ்யாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் சங்கம், ‘புட்பால் யூனியன் ஆஃப் ரஷ்யா (RFU)’ என்ற பெயரில் போட்டிகளில் பங்கேற்கலாம். ஆனால் ‘ரஷ்யா’ என்கிற பெயரை பயன்படுத்த கூடாது. இதேபோல் ரஷ்யக் கொடி மற்றும் தேசிய கீதத்தைப் பயன்படுத்தவும் ஃபிஃபா இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

ஃபிஃபாவின் ஆரம்ப அறிக்கைக்கு ரஷ்யாவின் உலகக் கோப்பை எதிரணிகள் எவ்வாறு பிரதிபலித்தனர்?

வெளிப்படையாக, இந்த அறிக்கை ரஷ்யாவின் உலகக் கோப்பை எதிரணிகளுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகத்தான் உள்ளது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து, போலந்து கால்பந்து சங்கத் தலைவர் செசரி குலேசா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஃபிஃபாவின் இன்றைய முடிவு எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. உக்ரைனில் யுத்த சூழ்நிலையில், தோற்ற விளையாட்டில் எங்களுக்கு ஆர்வம் இல்லை. எங்கள் நிலை மாறாமல் உள்ளது: ரஷ்ய அணியின் பெயரைப் பொருட்படுத்தாமல், தேசிய அணி போலந்து ரஷ்யாவிற்கு எதிராக பிளே-ஆஃப் போட்டியில் விளையாடாது.

போலந்து கால்பந்து சங்கமும் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “… 2022ல் கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன்னேற பிளேஆஃப் போட்டிகளில் ரஷ்ய தேசிய அணியுடன் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் காணவில்லை. ரஷ்ய கால்பந்து வீரர்களைக் கொண்ட அணியின் பெயர் மற்றும் போட்டி நடைபெறும் இடம் குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைப்பாட்டை எத்தனை நாடுகள் எடுத்துள்ளன?

உக்ரைனுடன் ஒற்றுமையைக் காட்ட, செக் குடியரசு, போலந்து மற்றும் ஸ்வீடன் ஆகியவை ஏற்கனவே ரஷ்யாவிற்கு எதிராக விளையாட மறுத்துவிட்டன. இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து கால்பந்து சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ரஷ்யாவை புறக்கணிக்கும் அதன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியது. “உக்ரைனுடனான ஒற்றுமை மற்றும் ரஷ்ய தலைமையின் அட்டூழியங்களை முழு மனதுடன் கண்டிக்கும் வகையில், எதிர்காலத்தில் எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் நாங்கள் ரஷ்யாவிற்கு எதிராக விளையாட மாட்டோம் என்பதை எங்கள் கால்பந்து சங்கம் உறுதிப்படுத்த முடியும். சீனியர், வயதுக் குழு அல்லது பாரா கால்பந்தின் எந்த மட்டத்திலும் சாத்தியமான போட்டிகளும் இதில் அடங்கும்.” என்று இங்கிலாந்து கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நாடுகளுடன் கடையாக ஸ்காட்லாந்து கால்பந்து சங்கமும் ரஷ்யாவை நிராகரித்துள்ளது.

இதனால் கத்தார் உலகக் கோப்பை தொடரில் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா?

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நவம்பர் 21-ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு இன்னும் ஒன்பது மாதங்கள் உள்ளன. ஆனால் நிராகரிப்புகளின் தொடர் மற்றும் ஃபிஃபாவின் ஆரம்பக் குழப்பம் ஒரு பெரிய புதிருக்கு வழிவகுத்திருக்கலாம். போலந்து மார்ச் 24 அன்று ரஷ்யாவிற்கு எதிராக பிளேஆஃப் அரையிறுதியில் விளையாட இருந்தது. அந்த ஆட்டத்தில் வெற்றி பெறுபவர்கள் செக் குடியரசு அல்லது ஸ்வீடனுக்கு எதிராக பிளேஆஃப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளனர்.

இப்போது மூன்று நாடுகளும் வெளியேறினால், கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரஷ்யாவுக்கு பை கொடுக்கப்படலாம்.

ஃபிஃபாவின் முடிவை மாற்றத் தூண்டியது எது?

விளையாட்டின் ஆளும் குழு அரை-அரை அளவை எடுத்ததற்காக உலகளாவிய விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளதால், அதன் மிகப்பெரிய வணிக பங்காளிகள் சிலவற்றை, குறிப்பாக சில அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களை இழக்கும் அபாயம் உள்ளது.

யுஇஎஃப்ஏ-வின் UEFA முந்தைய அனுமதி என்ன?

ஐரோப்பிய கால்பந்தின் தாய் அமைப்பு இந்த சீசனின் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து செயிண்ட்-டெனிஸில் உள்ள ஸ்டேட் டி பிரான்சுக்கு மாற்றியுள்ளது. அது கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், “இன்றைய கூட்டத்தில், UEFA நிர்வாகக் குழு, யுஇஎஃப்ஏ போட்டிகளில் போட்டியிடும் ரஷ்ய மற்றும் உக்ரேனிய கிளப்புகள் மற்றும் தேசிய அணிகள் மறு அறிவிப்பு வரும் வரை நடுநிலை மைதானங்களில் தங்கள் சொந்த போட்டிகளை விளையாட வேண்டும் என்று முடிவு செய்தது.”என்று கூறியிருந்தது.

மனித உரிமைகள் பிரச்சினைகளுக்கு விளையாட்டு அமைப்புகள் எப்படி பிரதிபலித்து இருக்கின்றன?

ஃபிஃபா மற்றும் யுஇஎஃப்ஏ ஆகியவற்றால் இன்று ஒரு வலுவான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) நிர்வாக வாரியம் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளது.

இருப்பினும், பெரிய அளவில், விளையாட்டு அமைப்புகள் ஸ்போர்ட்ஸ்வாஷிங்கை அனுமதித்துள்ளன. ரஷ்யாவைச் சேர்ந்த 335 விளையாட்டு வீரர்கள் தங்கள் நாட்டின் பெயர், கொடி மற்றும் கீதம் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல், ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி (ROC) என்ற பெயரில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ஐஓசி அனுமதித்துள்ளது. உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (வாடா) ரஷ்யாவை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டுகளுக்கு தடை விதித்த போதிலும் இது நடந்தது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) தலைவர் தாமஸ் பாக், சமீபத்திய பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்று, விளையாட்டுகளை நடத்தியதற்காக சீனாவைப் பாராட்டி இருந்தார். தொழிலாளர் உரிமைகள் நிபந்தனைகளை விதிக்காமல் 2022 உலகக் கோப்பையை கத்தாருக்கு ஃபிஃபா வழங்கி இருந்தது.

2018ல் நாடு கடத்தப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலைக்கு சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக கடந்த ஆண்டு, அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கண்டறிந்தது. எனினும், இங்கிலாந்தில், பிரீமியர் லீக் மற்றும் அதிகாரிகள், இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான சவூதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியத்தால் (PIF) நியூகேஸில் யுனைடெட் அணியை கையகப்படுத்த அனுமதி வழங்கினர்.

கடந்த சனிக்கிழமையன்று, செல்சியாவின் (Chelsea FC) ரஷ்ய உரிமையாளர் ரோமன் அப்ரமோவிச் ஒரு கிளப் அறிக்கை மூலம் “செல்சியாவின் அறக்கட்டளையின் அறங்காவலர்களுக்கு செல்சியா எஃப்சியின் பொறுப்பாளர் மற்றும் கவனிப்பை” வழங்குவதாக அறிவித்தார். இருப்பினும், பிரீமியர் லீக்கில் “செல்சியாவின் உரிமையை மாற்றியமைக்கும் முறையான விண்ணப்பம் எதுவும் வழங்கப்படவில்லை” என்று டெலிகிராப் (லண்டன்) அறிக்கை தெரிவித்துள்ளது.Read in source website

ஐ.நா. பொதுச்சபை, பாதுகாப்பு கவுன்சில், செயலகம், பொருளாதார சமூக சபை மற்றும் அறங்காவலர் சபை என்று ஐ.நாவின் 6 முக்கிய உறுப்புகளில் ஐந்து நியூயார்க்கில் அமைந்திருக்க சர்வதேச நீதிமன்றம் மட்டும் நெதர்லாந்தை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

International Court of Justice : சர்வதேச நீதிமன்றத்தை அணுகியுள்ள உக்ரைன், ரஷ்ய கூட்டமைப்புக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுவில், “ஒரு பிரச்சனையில், இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை பற்றிய 1948 உடன்படிக்கையின் விளக்கம், விண்ணப்பம் மற்றும் நிறைவேற்றம் தொடர்பான” விளக்கம் கேட்டுள்ளது.

உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் மற்றும் டோனட்ஸ்க் மாகாணங்களில் ஒரு இனப்படுகொலைக்கு சாத்தியமான செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று ரஷ்யா கூறுவது முற்றிலும் தவறானது என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மேலும் இந்த மாகாணங்களுக்கு சுதந்திரம் வழங்குகிறோம் என்று உக்ரைனுக்கு எதிராக தன்னுடைய போரை துவங்கியுள்ளது ரஷ்யா என்றும் குற்றம் சுமத்தியுள்ளது.

சர்வதேச நீதிமன்றம்

ஐ.நா.வின் தலைமை நீதி அமைப்பு தான் சர்வதேச நீதிமன்றம். ஐ.நாவின் சாசனத்தின் அடிப்படையில் இது 1945ம் ஆண்டு நிறுவப்பட்டு 1946ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.

சர்வதேச நீதிமன்றத்திற்கு, நிரந்தர சர்வதேச நீதிமன்றம் (Permanent Court of International Justice) என்ற அமைப்பு முன்னோடியாக செயல்பட்டு வந்த இது லீக் ஆஃப் நேஷன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. 1922ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நெதர்லாந்தில் உள்ள ஹாக்கில் அமைந்திருக்கும் அமைதி மாளிகையில் தங்களின் முதல் அமர்வை நடத்தியது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னால் லீக் ஆஃப் நேஷன்ஸ் மற்றும் நிரந்தர சர்வதேச நீதிமன்றம் ஐ.நா மற்றும் சர்வதேச நீதிமன்றமாக மாற்றப்பட்டது. 1946ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிரந்தர சர்வதேச நீதிமன்றம் கலைக்கப்பட்டு அதன் கடைசி தலைவர், எல் சால்வேடர் நாட்டைச் சேர்ந்த நீதிபதி ஜோஸ் கஸ்டவோ குரேர்ரோ, சர்வதேச நீதிமன்றத்தின் முதல் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

இங்கு விசாரணைக்கு வந்த முதல் வழக்கு கோர்ஃபு கணவாய் விவகாரம் ஆகும். அல்பானியாவுக்கு எதிராக இங்கிலாந்து இந்த வழக்கை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்து வந்தது. ஐயோனியன் கடலில் கோர்ஃபுவின் க்ரீக் தீவிற்கும் ஐரோப்பாவின் அல்பானியாவுக்கும் நடுவே இந்த நீரிணை அமைந்துள்ளது.

இதன் பங்கும் பணியும்

நிரந்தர நீதிமன்றம் போன்றே, சர்வதேச நீதிமன்றமும் ஹாக்கில் உள்ள அமைதி மாளிகையை தலைமையாக கொண்டுள்ளது. ஐ.நா. பொதுச்சபை, பாதுகாப்பு கவுன்சில், செயலகம், பொருளாதார சமூக சபை மற்றும் அறங்காவலர் சபை என்று ஐ.நாவின் 6 முக்கிய உறுப்புகளில் ஐந்து நியூயார்க்கில் அமைந்திருக்க சர்வதேச நீதிமன்றம் மட்டும் நெதர்லாந்தை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

சர்வதேச சட்டங்களின் படி உறுப்பு நாடுகள் சமர்ப்பிக்கும் புகார்களுக்கு தீர்வு காண்பது மற்றும் ஐ.நா.வின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பு நாடுகள் மற்றும் சிறப்பு அமைப்புகள் கேட்கும் சட்டப் பூர்வமான கேள்விகளுக்கு ஆலோசனைகளை வழங்குவது போன்றவையே சர்வதேச நீதிமன்றத்தின் பணி என்று சொந்த விளக்கத்தை வழங்குகிறது நீதிமன்றம். நீதிமன்றம் நாகரீகத்தின் அனைத்து வடிவங்களையும், உலகில் உள்ள அனைத்து சட்ட அமைப்புகளையும் பிரநிதித்துவப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு சர்வதேச நீதிமன்றத்தின் பதிவகம் தேவையான உதவிகளை வழங்குகிறது. ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்ச் அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஐ.நாவின் அனைத்து உறுப்பினர்களும் சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் ஆவார்கள். ஆனால் உறுப்பு நாடுகள் ஏதேனும் ஒரு விவகாரத்தில் சிக்கும் பட்சத்தில் தானாக நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்காது. இரு தரப்பினரும் ஒரு பிரச்சனைக்கு முடிவு காண விரும்பும் போது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. இரண்டு தரப்பினர்களையும் இணைக்கும் ஒன்றாகவே இது இருக்கும். மேல் முறையீட்டிற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால் அதிகபட்சமாக, விளக்கத்திற்கு உட்பட்டதாக இருக்கலாம் அல்லது ஒரு மாறுபட்ட கோணத்தின் மீது மறுபரிசீலனை செய்யப்படலாம்.

எவ்வாறாயினும், உறுப்பு நாடுகள் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இணங்குவதை உறுதிப்படுத்த எந்த வழியும் இல்லை. மேலும் நீதிமன்றத்தின் அதிகாரமானது அதன் உறுப்பு நாடுகள் தீர்ப்பை கடைபிடிக்க தெரிவிக்கும் விருப்பத்தில் இருந்தே பெறப்படுகிறது.

சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகள்

ஐ.நா பொதுசபை மற்றும் பாதுகாப்பு சபைகளில் தனித்தனியாக நடைபெறும் வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் 15 பேர் 9 ஆண்டுகள் நீதிபதிகளாக செயல்படுவார்கள். ஒருவர் தேவு செய்யப்பட வேண்டும் எனில் இரண்டு சபைகளிலும் பெரும்பான்மை வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். பல கட்டங்களாகவும் இவை நடைபெறும். ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் போது, நியூயார்க்கில் அமைந்திருக்கும் ஐ.நா.தலைமையகத்தில் நீதிபதிகளுக்கான தேர்தல்கள் நடைபெறும்.

மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகளுக்கான தேர்தல்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் தேர்தல்களில் தேர்வு செய்யப்படும் நீதிபதிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி பதவி ஏற்பார்கள். நீதிமன்றத்திற்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் ரகசிய வாக்கெடுப்புகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களின் பணி காலம் 3 ஆண்டுகள் ஆகும். நீதிபதிகள் மறு தேர்வுக்கு தகுதியானவர்கள்.

இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தால்வீதர் பண்டாரி, தலைமை நீதிபதி ஆர்.எஸ் பதக் மற்றும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நாகேந்திர சிங் ஆகியோர் நீதிபதிகளாக தேர்வு செய்யபப்ட்டனர். தல்வீர் 2012ம் ஆண்டு முதல் அங்கே நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். ஆர்.எஸ். பதக் 1989 – 91 காலகட்டங்களில் நீதிபதியாக செயல்பட்டார். நாகேந்திர சிங் நீதிபதியாக செயல்பட்டது மட்டுமின்றி சர்வதேச நீதிமன்றத்தின் துணைத் தலைவராக 1976 – 79 ஆண்டுகளிலும், தலைவராக 1985-88 ஆண்டுகளிலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அதற்கும் முன்பாக அரசியல் சாசன சபையின் ஆலோசகராக பணியாற்றிய சர் பனேகல் ராவும் 1952 – 53 காலகட்டங்களில் சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டார்.

சர்வதேச நீதிமன்றத்தை நாடிய இந்தியா

இந்தியா 6 பல்வேறு தருணங்களில் சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது. 6-ல் 4 முறை பாகிஸ்தான் விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

  1. இந்திய பிரதேசத்தில் செல்வதற்கான உரிமை (போர்ச்சுகல் vs இந்தியா – விவகாரம் 1960களில் உச்சம் பெற்றது)
  2. ICAO கவுன்சிலின் அதிகார வரம்பு தொடர்பான மேல்முறையீடு (இந்தியா v. பாகிஸ்தான், விவகாரம் 1972-ல் தீவிரம் அடைந்தது)
  3. பாகிஸ்தான் போர்க் கைதிகள் விசாரணை (பாகிஸ்தான் vs இந்தியா – விவகாரம் 1973-ல் தீவிரம் அடைந்தது)
  4. ஆகஸ்டு 10, 1999 வான்வெளியில் ஏற்பட்ட நிகழ்வு (பாகிஸ்தான் vs இந்தியா – விவகாரம் 2000-ல் தீவிரம் அடைந்தது)
  5. அணு ஆயுதப் போட்டி நிறுத்தம் மற்றும் அணு ஆயுதக் குறைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் (மார்ஷெல் தீவுகள் vs இந்தியா, 2016)
  6. குல்புஷான் ஜாதவ் விவகாரம் (இந்தியா vs பாகிஸ்தான் 2019)


Read in source website

30-01-2023      Monday

TNPSC Newspaper Archives

t