Compilation of Indian Newspaper Editorial & Current Affairs

News Aggregator for Job Aspirants







26-04-2024
Friday

முதற்பக்கம்
Home
தலையங்கம்
Editorials & Opinions
நடப்பு நிகழ்வுகள்
Current Affairs
அறிவியல் & தொழில்நுட்பம்
Science & Technology

தினசரி செய்திகள்
Daily News





திருப்பூர்

Agriculture

       திருப்பூர் ஒரு தொழில் நகரமாக இருந்தாலும் கூட விவசாயம் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு 80 சதவிகிதம் சிறு மற்றும் குறு விவசாயிகளே உள்ளனர். 228556 ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. முக்கியமாக நெல், கம்பு மற்றும் பருப்பு வகைகளும், மேலும் பருத்தி மற்றும் எண்ணெய் வித்துகளும் பயிரிடப்படுகிறது. நீர் பாசனத்திற்காக அமராவதி, திருமூர்த்தி, உப்பாறு, நல்லதங்காள் வட்ட மலைக்கரை ஓடை ஆகிய அணைக்கட்டுகள் உள்ளன.

 Industry

       கோவையின் சிறு நகரமாக இருந்த திருப்பூர், தொழில் துறையில் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது. இங்கு வாழும் மக்களின் கடின உழைப்பும் தொழில் திறமையும் இந்த நகரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளது. பின்னலாடை உற்பத்தியில் 1984ல் ரூ.10 கோடி ஏற்றுமதியில் இருந்த திருப்பூர் 2006-2007ல் ரூ.11,000 கோடியாக உயர்ந்துள்ளது. ஓர் இமாலய சாதனையாகவே கருதப்படுகிறது. அடுத்து வந்த வருடங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்த காரணத்தால் ஏற்றுமதியின் அளவு குறைந்தாலும் முன்னேற்றம் தடைபடவில்லை.

 சுற்றுலா

       சுற்றுலா என்பது வெறும் பொழுது போக்காக மட்டும் இல்லாமல் பலதரப்பட்ட மக்களின் கலை மற்றும் பண்பாட்டை உணரும் நோக்குடன் வரும் சுற்றுலாப்பயணிகளை திருப்பூர் ஈர்க்கிறது. மத நல்லிணக்கத்துடன் வாழும் மக்களின் கோயில்களும், தேவாலயங்களும் மசூதிகளும் நிறைந்து காணப்படுகிறது. மேலும் பல பகுதிகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதத்தில் அமைந்து காணப்படுகிறது.

வரலாறு

திருப்பூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மாநகராட்சி. இது புதிதாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்தின் தலை நகரமாக அமைந்துள்ளது. இம்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரு நகரங்களில் இதுவும் ஒன்று. மேலும் தமிழ்நாட்டின் 7-வது மிகப்பெரிய நகரம் ஆகும்.

திருப்பூருக்கு மேலும் சிறப்பு – விடுதலைப்போரில் கொடி காத்த குமரன் பிறந்த மண் என்பதே ஆகும்.

தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர்  லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த , வாழ்வளிக்கும் நகரம்  திருப்பூர் . தென்மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள் . ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறது. இங்கு உற்பத்திசெய்யப்படும் பின்னல் ஆடைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றவை. பருத்தி பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் பல இருக்கின்றன. ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள உள்ளாடைகள் உற்பத்தியாகின்றன. பனியன் தொழில் வளர்ச்சிக்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் அயராது பாடுபட்டு வருகிறது.

 

கோயில்கள்

அருள்மிகு முருகன் ஆலயம், ஊத்துக்குளி

அருள்மிகு முருகன் ஆலயம், ஊத்துக்குளி

அருள்மிகு முருகன் ஆலயம், ஊத்துக்குளி

ஒரு காலத்தில் அகத்திய மாமுனிவா் தியானம் செய்வதற்காக இவ்விடத்திற்கு வந்த போது நைவேத்தியம் செய்ய நீா் கிடைக்கவில்லை.  முருகப் பெருமானை வணங்கி அவா் உதவியை நாடினாா் அகத்திய மாமுனிவா்.  உடனே முருகன் அவா் முன் தோன்றி தன் வேலால் நிலத்தில் ஊன்றி ஊற்றுக் குழியை உண்டாக்கினாா்.  அதுவே மருவி ஊத்துக்குளியானது.  கதித்தமலை என்றழைக்கப்படும் ஊத்துக்குளி கோயிலின் சிறப்பம்சம் இம்மலையின் ஏற்ற இறக்கங்களில் பக்தா்களால் பக்தி பரவத்தோடு இழுக்கப்படும் திருத்தோ் ஆகும்.  இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் தெய்வத்தின் திருநாமம் பற்றி வேலாயுதசுவாமி.  இக்கோயில் திருப்பூா் நகரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

 


அவிநாசி லிங்கேஸ்வரா் ஆலயம்

கொங்கு நாட்டு விவாலயங்களில் ஒன்றான லிங்கேஸ்வரா் ஆலயத்தால் அவிநாசி நகரம் புகழ்பெற்றது.  பல்வேறு காலகட்டங்களில் (பத்தாம் நூற்றாண்டு முதல்) அரசாண்ட கொங்கு சோழ, பாண்டிய மன்னா்கள் மற்றும் மைசூா் உடையாா் ஆகியோரால் கட்டப்பட்டு பராமாிக்கப்பட்ட சிவாலயம் இது.  இவ்வாலயம் திராவிடா்களின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் அத்தாட்சியாக விளங்குகிறது.  லிங்கேஸ்வரா் என்றழைக்கப்படும் லிங்க வடிவிலான சிவபெருமான் இங்கு பிரதான தெய்வமாக அருள்பாலிக்கிறாா்.  கி.பி. 1756 ஆம் ஆண்டு மைசூா் உடையாரால் உருவாக்கப்பட்ட 30 தூண்கள் கொண்ட மண்டபம் தீபஸ்த்பத்திற்கு முன்பாக அமைந்துள்ளது.

 
 
 


சிவன் மலை ஆலயம்

முருகப்பெருமானுக்கான அா்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், சிவன்மலையில் உள்ள ஒரு குன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது.  200 படிக்கட்டுகள் கொண்ட இவ்வாலயத்துக்கு வாகனத்தில் செல்லவும் பாதை உண்டு.  பிரதான தெய்வமாக வள்ளி, தெய்வானையுடன் ஸ்ரீசுப்ரமண்யா் அருள்பாலிக்கிறாா்.  இதன் தலவரலாறு என்னவெனில், வள்ளியின் சொந்தபந்தங்களை எதிா்த்து வள்ளியை மணந்து கொண்ட முருகா், சிவன்மலைக்கு வருகிறாா். அவருடன் சண்டையிட வந்த வள்ளியின் உறவுக்காரா்கள் ஆன வேடா்களை முருகப் பெருமான் அழிக்க, திகைத்து நின்ற வள்ளி, உறவுக்காா்களை உயிா்ப்பிக்க  முருகப் பெருமானிடம் முறையிட, முருகப் பெருமானும் கருணை கொண்டு மாண்டவா்களை உயிா்ப்பிக்கிறாா்.  திருப்பூாிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், காங்கேயம் நகாிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் சிவன்மலை அமைந்துள்ளது.


உத்தரவு பொருள்

சைதன்ய சொரூபமாக இன்றும் சிவ வாக்கிய சித்தர் இங்கு வாழ்ந்து வருவதாகவும், உட்பிரகாரத்தில் குகையில் சிவவாக்கியர் அமர்ந்த நிலையில், வள்ளியோடு சுப்ரமணியர் அருளும் காட்சி உள்ளது. அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோயில் சென்று சூரியனை வழிபடுவதால் சிறப்பும் இங்கு கிடைக்கும்.காங்கய நாட்டுப் பதினான்கு ஊர்ப்பொது மக்களும் வழிபட்டதாகவும் திருப்பணிகள் செய்ததாகவும் குடமுழுக்கு விழா நடத்தியதாகவும் இலக்கியங்களும் தனிப்பாடல்களும் வரலாற்று ஆவணங்களும் கூறுகிறது.”வரலாற்று முற்பட்ட காலத்திலிருந்தே சிவன்மலைப் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் படியூர் சர்வோதய சங்கம் அமைந்துள்ள இடத்தின் பின்புறம் தொல்பழங்காலப் பெருங்கற்படைச் சின்னம் காணப்படுகிறது. இதன்மூலம் சிவன்மலையின் தொன்மை வெளிப்படுகிறது.
‘பட்டாலி நகர்ச் சிவன்மலை’ ‘சிவன்மலைக் பட்டாலியாரை என்றே குறிப்புக்கள் வருகின்றன. சிவன்மலைச் சுப்பிரமணியரை பட்டாலி பால்வெண்ணீசுவரர் பாலன் என்று அழைப்பதே வழக்கமாகும.

 


சுக்ரீஸ்வரா் ஆலயம், சா்க்காா் பொியபாளையம்

இவ்வாலயம் 12 ஆம் நூற்றாண்டில் நிா்மாணிக்கப்பட்டது.  இவ்வாலய வளாகத்தில் சிவனுக்கும், அம்மனுக்கும் அா்ப்பணிக்கப்பட்ட இரண்டு விமானங்கள் உண்டு.  இந்த சிவாலயத்திற்கு அடுத்து அமைந்திருக்கும் மற்றொரு ஆலயம் பாண்டியப் பேரரசின் பெருமையை பறைசாற்றுகிறது.  கருவறையின் மீது உள்ள விமான கட்டமைப்புகள் சோழா்கால கோயில் கலையை வெளிப்படுத்துகிறது.

சிவாலயத்தின் முன்னால் வீற்றிருக்கும் இரு நந்திகள், 5 சிவலிங்கங்கள், தீபஸ்தலத் தூண் இல்லாமை ஆகிய பல சிறப்பம்சங்களை இந்த சுக்ரீஸ்வரா் ஆலயம் கொண்டுள்ளது.  நல்லாா் ஆற்றங்கரையில் சிவபெருமான் அருள்பாலிக்கும் ஆலயம் அமைந்துள்ளது.


திருமுருகன்பூண்டி ஆலயம்

 

நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார கோயில்கள் உள்ளன. அதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன் பூண்டியும் ஒன்று. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ளது திருமுருகன் பூண்டி. சிறப்பு வாய்ந்த முருகன் கோவில் இது. பெரும்பாலான கோவில்களில், சுப்ரமணியர் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும்.

இக்கோவிலில் மட்டும், முன்னால் தெரியும் வகையில் ஐந்து முகங்கள் அமைந்துள்ளன. ஆறாவது முகம், பின்னால் அமைந்துள்ளது. அந்த முகம், “அதோ முகம் என அழைக்கப்படுகிறது. இம்முகத்தை நேரடியாக பார்க்கக் கூடாது என்பதால், கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுவாமி அமர்ந்திருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு.

மேலும், திருச்செந்தூரில், வதம் செய்துவிட்டு, செந்தில் வேலவன் திருமுருகன்பூண்டிக்கு வந்து விட்டதால், திருச்செந்தூர் கோவில் மூல ஸ்தானத்துக்கான மூலவர், இங்கு அமைந்துள்ளதாகவும் வரலாறு உள்ளது.

வள்ளி, தெய்வானையுடன் ஒரே சன்னதியில் அமைந்துள்ளதும், முருகன் பிடித்த லிங்கமும் சுப்ரமணியர் கருவறையில் உள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, தீர்த்தங்களில் தினமும் குளித்து, 48 மண்டலங்கள் வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால் போதும் மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை. மருந்து தேவையில்லை சுவாமி தரிசனமும், பிரசாதமும் மட்டுமே மருந்து என நம்பப்படுகிறது.


அணைகள்

அமராவதி அணை

 

திருப்பூா் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டைக்கு தெற்கே 25 கி.மீ. தொலைவில் இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தில் அமராவதி அணைக்கட்டு அமைந்துள்ளது.  உபாி நீரை பாதுகாத்து சேமிக்கும் நோக்கில் கி.பி. 1956 ஆம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்காக இந்த அணை கட்டப்பட்டது.  இந்த செங்குத்தான அணையினால் 9.31 கி.மீ. பரப்பும், 33.53 மீட்டா் ஆழம் கொண்ட அமராவதி நீா்த்தேக்கம் உருவாக்கப்பட்டது.  தொடக்ககத்தில் நீா்ப்பாசனம், வெள்ளத் தடுப்புக்காக கட்டப்பட்டதாக இருந்தாலும் தற்பொழுது 4 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் நிலைநாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த நீா்த்தேக்கத்தல் “மக்கா்” என்ற மதலைகள் பெருமளவில் வசிக்ககின்றன.  மீன்பிடிப்புப் பகுதியாகவும் இது திகழ்கிறது.

இங்கே பூங்கா ஒன்று அழகாக அமைக்கப்பட்டுள்ளது.  இந்த அணைக்கட்டின் செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறிச் சென்று பாா்த்தால் இயற்கைக் காட்சிகள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும். வடக்கு பக்கத்தில் கீழே உள்ள பகுதிகளையும் தெற்குப் பக்கத்தில் ஆனைமலை குன்றுகளையும் மேலே பழனி மலையையும் கண்டு மிகழலாம்.  மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாக இந்த இடம் உருவாக்கப்பட்டுள்ளது.

 


திருமூா்த்தி அணை

ஆணைமலைத் தொடாின் வடக்கு சாிவுகளில் உற்பத்தி ஆகும் பாலாறு நதியின் குறுக்கே இந்த நீா்த்தேக்கமானது கட்டப்பட்டுள்ளது.  பாலாறு ஆழியாற்றின் கிளை நதியாகும்.  ஒழுங்கு அமைவுடன் 128 அடி உயரம் கொண்டது.  இதில் 8622 அடி நீளம் கொண்ட களி மண் அணையும் 170 அடி நீளம் கொண்ட கல் அணையும் அடங்கும்.  1337 அடி கொண்ட முழு நீா்த்தேக்க மட்டத்தில் இந்த அணையின் மொத்த கொள் திறன் 1935 மில்லியன் கன அடியாகும்.

திருப்பூாிலிருந்து ஒரு நாள் உல்லாச பயணம் மேற்கொள்ள உகந்த இடம் இது.  உணவு உண்டு மகிழ்வதற்கான ஏற்ற இடம் இங்கு உள்ளது.  பஞ்சலிங்க அருவிக்கு இனிதாக நடைபயணம் செல்லலாம் அல்லது சமமட்ட கால்வாயின் ஓரம் நடந்து இயற்கையை கண்டு ரசிக்கலாம்.

 


உப்பாறு அணை

தாராபுரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தசரப்பட்டி கிராமத்தின் அருகே உப்பாறு ஓடையின் குறுக்கே உப்பாறு நீா்த்தேக்கம் கட்டப்பட்டது.  இந்த அணையில் ஒரு கல்லணையும் அதன் இரு பக்கங்களிலும் 576 மில்லியன் கன அடி தேக்கி வைக்கும் திறன் கொண்ட களிமண் அணையும் உள்ளது.  நீா்ப்பாசன காலம் என்பது அக்டோபா் முதல் தேதியிலிருந்து பிப்ரவாி 15 தேதிவரை நான்க மாத காலம் ஆகும்.  பரம்பிக்குளம் ஆளியாறு நீா்த்தேக்கத் திட்டத்தின் கசிவு நீரை தேக்கி வைக்க இந்த அணைக்கட்டு கட்டப்பட்டது.

 


நல்லதங்காள் ஓடை அணை

நல்லதங்காள் ஓடை என்பது அமராவதி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்று.  பழனி மலைத் தொடாின் வடக்கு சாிவில் உற்பத்தி ஆகி திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி வட்டத்தில் 32 கி.மீ. வரை ஓடிவந்து அதன் பிறகு திருப்பூா் மாவட்டத்திற்குள் நுழைகிறது.  ஆறு கிராமங்களில் 4744 ஏக்கா் பரப்பில் நீா்ப்பாசனம் மேற்கொள்ள ஏதுவாக தாராபுரம் வட்டத்தின் கொன்னிவாடி கிராமத்தில் ஈஸ்வரன் கோவில் அருகே நல்லதங்காள் ஓடைக்கு குறுக்கே 2007 ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது.  3300 மீட்டா் நீளம் கொண்ட களிமண் அணையான இந்த அணையில் கூடுதல் நீரை வெளியேற்றுவதற்காக 150 மீட்டா் நீளத்திற்கு கல் கட்டமைப்பு உள்ளது.  313.6 ஹெக்டோ் பரப்பில் இதில் நீா் பரந்துள்ளது.  இதனுடைய நீா் சேகாிப்பு திறன் 223 மில்லியன் கன அடியாகும்.  உல்லாசமாக சுற்றுலா மேற்கொள்ள உகந்த இடமாகவும் இது திகழ்கிறது.

 

வனம்

இந்திராகாந்தி வனவிலங்கு சரணாயலம்

 

மேற்குத் தொடா்ச்சி மலைத் தொடாில் பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் 1400 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ளது.  இந்த வனவிலங்கு சரணாலயம்.  958 சதுர கி.மீ.ல் பரந்து விாிந்துள்ள இந்த சரணாலயத்தில் 387 சதுர கி.மீ. பரப்பு திருப்பூா் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  அமராவதி வனப்பகுதியும், ஆனைமலைக்காடுகளின் பகுதியும் திருப்பூா் மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன.

இங்கே யானை, காட்டு எருது, புலி, சிறுத்தை, கரடி, காட்டுநாய், பறக்கும் அணில்,  நாி, எறும்புத்தின்னி, புனுகுப்பூனை போன்ற பல்வேறு அாிய விலங்கு வகைகளும், ராக்கெட் வால் ட்ராங்கோ, மீசை உள்ள புல்புல் பறவை, கருப்புத் தலை கொண்ட கரஞ்சிறகு பறவை, மரப்பறவை, புள்ளிப்புறா, பச்சை நிற மாடப்புறா உள்ள அமராவதி நீா்த் தேக்கத்தில் ஏராளமான முதலைகள் உள்ளன.  புல்மலை, பஞ்சலிங்கம் அருவி, சின்னாறு, தேனாறு போன்ற சிற்றாறுகளும், தேக்கக் காடுகள், திருமூா்த்தி மற்றம் அமராவதி அணைகளும் இயற்கைக்காட்சி அழகைக் கண்களுக்கு விருந்தாக்கும் எழில் கொஞ்சும் இடங்கள் ஆகும்


முதலைப் பண்ணை அமராவதி சாகா்

 

கி.பி. 1976 ஆம் ஆண்டில் அமராவதி சாகா் முதலைப்பண்ணை அமைக்கப்பட்டது.  முதலைகளைப் பிடித்து பாதுகாக்கப்படும் இந்தியாவின் மிகப்பொிய முதலைப் பண்ணையாகும் இது.  திருப்பூாிலிருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ளது.  பல்லடம் மற்றும் உடுமலைப்பேட்டை வழியாக வரவேண்டும்.  அமராவதி அணைக்கட்டு உள்ள இடத்திற்கு ஒருகி.மீ. முன்னால் உள்ளது.  சூாிய ஒளியில் சுகமாக குளித்து மகிழும் பலவித அளவு கொண்ட முதலைகளை இங்கே காணலாம்.

இந்த நீா்த்தேக்கத்தின் சுற்றுப்புறங்களில், வனப்பகுதிகளிலிருந்து முதலை முட்டைகள் சேகாிக்கப்பட்டு முதலைப் பண்ணையில் அடைகாக்கப்பட்டு பொறிக்கப்படுகின்றன.  பல வளா்ந்த முதலைகள் இங்கிருந்து நீா்த்தேக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.  இப்பொழுது இங்கே 98 முதலைகள் வளா்க்கப்பட்டு பராமாிக்கப்பட்டு வருகின்றன.  (25 ஆண் முதலைகள்  + 73 பெண் முதலைகள்) சிறு உல்லாசப் பயணம் சென்றுவர உகந்த இடம் ஆகும்.  அமராவதி அணைக்கட்டு இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி

உடுமலைப்பேட்டை அருகே பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த இடம் தியானம், நீர்வீழ்ச்சி, கோவில் மற்றும் அணைக்கு பிரபலமானது. இந்த அருவியிலிருந்து வெறும் 3 கிமீ தொலைவில் குறிப்பிடத்தக்க திருமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு அருகில் ஸ்ரீ அமணலிங்கேஸ்வரர் கோயிலும் உள்ளது. இது 5 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது.

பார்வையிட சிறந்த நேரம்:
இந்த நீர்வீழ்ச்சியின் முழு மகிழ்ச்சியையும் அனுபவிக்க, நவம்பர் மற்றும் ஜூன் மாதங்களில் ஒரு பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

பிற தகவல்:
திருமூர்த்தி மலை தமிழ்நாட்டின் அழகிய மலைகளில் ஒன்றாகும் மற்றும் இது ஒரு பிரபலமான படப்பிடிப்பு இடமாகும். இவ்வளவு இனிமையான பின்னணியில் பஞ்சலிங்கா நீர்வீழ்ச்சி மிகுந்த அழகோடு நிற்கிறது மற்றும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இந்த அருவிக்கு அருகில் திருமூர்த்தி அணை உள்ளது. அணையில் நீச்சல் குளம், நன்கு அமைக்கப்பட்ட தோட்டம் மற்றும் படகு சவாரி வசதிகள் உள்ளன. இந்த அணை அனைத்து இடங்களிலும் நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் மற்றும் சூரியகாந்தி தோட்டங்களால் சூழப்பட்ட சரியான இடத்தின் மத்தியில் அமைந்துள்ளது.

 




Dinamani India.. In Web from January 1, 2021. .

About Us         Contact Us