Compilation of Indian Newspaper Editorial & Current Affairs

News Aggregator for Job Aspirants







26-04-2024
Friday

முதற்பக்கம்
Home
தலையங்கம்
Editorials & Opinions
நடப்பு நிகழ்வுகள்
Current Affairs
அறிவியல் & தொழில்நுட்பம்
Science & Technology

தினசரி செய்திகள்
Daily News





தேனி

வரலாறு

தேனி மாவட்டம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் மேற்கு தொடர்ச்சிமலைகள் சூழ அமைந்த இயற்கை எழில்மிகு மாவட்டம் ஆகும். அரசாணை பல்வகை எண்-679-வருவாய்த்துறை-நாள்.25.07.1996 ன்படி மதுரை மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டத்தை புதிதாக பிரிப்பதற்கு ஆணையிடப்பட்டதை தொடர்ந்து அப்போதிருந்த பெரியகுளம் வருவாய் கோட்டத்தில் அடங்கிய பெரியகுளம் தாலுகாவில் இருந்து புதிய தேனி தாலுகா பிரிக்கப்பட்டு உத்தமபாளையம் தாலுகாவிலிருந்து புதிதாக போடிநாயக்கனூர் ஏற்படுத்தப்பட்டும் உத்தமபாளையம் போடிநாயக்கனூர் வருவாய் கோட்டங்களை உள்ளடக்கிய உத்தமபாளையம் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டும் தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டு 01.01.1997 முதல் தேனி மாவட்டம் செயல்பட தொடங்கியது. மேற்படி அரசாணையின்படி தேனி மாவட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட சிறப்பு அலுவராக நியமனம் செய்யப்பட்ட திரு.கே.சத்தியகோபால் இ.ஆ.ப., அவர்களை 01.01.1997 தேனி மாவட்ட பிரிவினைக்கு பின் முதல் ஆட்சியராக பதவி வகித்தார். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் வட்டத்தில் வைகைஅணை, கும்பக்கரை நீர்வீழ்ச்சி, உத்தமபாளையம் வட்டத்தில் சுருளி நீர்வீழ்ச்சி ஆகிய முக்கிய சுற்றுலாத் தளங்கள் ஆகும். தேனி வட்டம், வீரபாண்டி கிராமம் கௌமாரியம்மன் கோவில், உத்தமபாளையம் வட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவில் ஆகியவை இம்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களாகும். மேலும் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலில் சித்தரா பௌர்ணமி அன்று பக்தர்கள் திரளாக வந்து வழிபடுவர்.

 

சுற்றுலா தலங்கள்

மேகமலை அருவி (சின்னசுருளி)

இந்த அருவி தேனியிலிருந்து 54 கி.மீ தொலைவில் கோம்பைத்தொழு கிராமத்திற்கு அருகில் உள்ளது. இந்த அருவி மேகமலைப் பகுதியில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அருவியை சின்னச்சுருளி எனவும் அழைக்கப்படுகிறார்கள்

மங்களதேவி ஸ்ரீகண்ணகி திருக்கோவில்

புராண சிறப்புமிக்க மங்களதேவி ஸ்ரீகண்ணகி கோவில் மேற்குதொடா்ச்சி மலையில் அமைந்துள்ள மேகமலை வனஉயிரின சரணாலாயத்தின் முகட்டில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு தமிழகத்திற்கு மலையேற்றம் மூலமே செல்ல வழிகள் உள்ளது. மேலும், இத்தலத்திற்கு கேரள மாநிலத்திலிருந்து குமுளி வழியாக மலை ஈப்பு பயணமூலம் செல்ல வழிகள் உள்ளது. இக்கோவில் திருவிழா, சித்திரை முழுநிலவு தினத்தில் மிகச்சிறப்பாக கொண்டாப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களிலிருந்து பரவலாக இத்தலத்திற்கு சென்று வழிபடுகின்றனா். மேகலை வன உயிரின சரணாலாயத்தின் அடிவாரத்தில் உள்ள பளியன்குடி குக்கிராமம் வரை சாலை வழிகள் மற்றும் பேருந்து வசதிகள் கம்பம் நகரிலிருந்து உள்ளது. இடைப்பட்ட தூரம் 17 கி.மீ மேலும், பளியன்குடியிலிருந்து மங்கதேவி ஸ்ரீகண்ணகி கோவிலுக்கு இடையில் உள்ள தூரம் 6.6 கி.மீ முற்றிலும் மலையேற்றம் பயணம் மட்டுமே மேற்கொள்ள முடியும். சித்திரை முழுநிலவு தினத்தில் மட்டும் வழிபட அனுமதி வழங்கப்படும்

வைகைஅணை

இந்த அணை வைகை ஆற்றின் குறுக்கே, ஆண்டிபட்டியிலிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 111 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 71 அடி நீா் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணையைச் சுற்றி மிக அழகான பூங்கா உள்ளது. இப்பூங்காவில் சிறுவா்கள் விளையாட சிறுவா் இரயில் உட்பட ஒரு தனிப்பகுதி இருக்கின்றது. இத்தலத்தை இம்மாவட்ட மக்கள் ” சிறிய பிருந்தாவனம்” என அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசால் அதிகம் பிரபலமடையாத சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஸ்ரீ பென்னிகுவிக் மணிமண்டபம்

ஸ்ரீ பென்னிகுவிக் மணிமண்டபம் கூடலூா் நகரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள லோயா்கேம்பட் பகுதியில் அமைந்துள்ளது. பெரியார் அணையை உறுதியாக கட்டமைத்ததன நினைவாக தமிழ்நாடு அரசு இந்த மணிமண்டபம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட தலைநகரில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு ஸ்ரீபென்னிகுவிக் பேருந்து நிலையம் என்று பெயா் சூட்டி கௌரவிக்கப்பட்டுள்ளது.

குச்சனூா்

இவ்வூரில் சனி கிரகத்தை வழிபட ஸ்ரீசுயம்பு சனீஸ்வரன கோவில் உள்ளது. இங்குள்ள மூலவரை குச்சனூரான் என்று அழைக்கப்படுகிறார்கள். இக்கோவில் தேனியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் சின்னமனூருக்கு அருகே மத்தியில் உள்ளது.
முக்கிய விழாக்கள். ஆடித்திருவிழா

குரங்கனி

அதிகம் அறியப்படாத சுற்றுலா தலமான குரங்கனி, மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ளது. குரங்கனி, போடியில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், தேனியிலிருந்து 31 கி.மீ தொலைவிலும் உள்ளது. சாலை மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது.
குரங்கனி, முதுவாகுடி மற்றும் கொட்டக்குடி மலை வாழ்குடிகள், சாம்பல் மற்றும் கொட்டக்குடி ஆறுகள், மலைப் பண்ணைத் தோட்டங்கள், அழிந்த நிலையில் உள்ள கயிறு மூலம் நடைபெற்ற வாணிப்பாதை மற்றும் தலங்கள், மற்றும் தண்ணீா் மூலம் நீா் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட கூடங்கள் இப்பகுதியில் உள்ளது.

சுருளி அருவி

இயற்கையின் கட்டுக்கடங்காத சக்தியின் எடுத்துக்காட்டாகும். சுருளி அருவி இரண்ட கட்டமாக பிரதிபலிக்கின்றது. முதல் கட்டத்தில் தண்ணீா் 150 அடி ஆழத்திற்கு விழுகின்றது. சிறுது தொலைவிற்கு. ஆறு போல் பெருக்கெடுத்து ஓடி விட்டு மீண்டும் 40 அடி ஆழத்திற்கு வீழ்கிறது. கானகத்தின் நடுவில் இருக்கம் அருவியில், ஆண்களும், பெண்களும் தனித்தனியே நீராடும் வசதி இருக்கிறது.
இளங்கோ அடிகளார் தமது காப்பியமான சிலப்பதிகாரத்தில் இவ்வருவியின் சிறப்பை குறிப்பிட்டுள்ளார். இங்கு இஸ்லாமியா்கள் வணங்கும் தா்காவும், சுருளி வேலப்பா் கோயிலும் அருகாமையில் அமைந்துள்ளது. பக்தா்கள் இங்கு சித்திரை மாதத்தில் பால்குடங்கள் எடுத்துச் சென்று பிரார்த்தனை செய்கின்றனா்.

போடி மெட்டு

போடியிலிருந்து 26 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோடை வாசஸ்தலம் 4500 அடி உயரத்தில், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள புலி அருவி, மதுரை – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மூணார் செல்லும் வழியில் போடிக்கும் போடி மெட்டுக்கும் இடையில் உள்ளது.

அருள்மிகு ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோவில்

அருள்மிகு ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோவில் முல்லை பெரியார் ஆற்றுப்படுகையில், வீரபாண்டி கிராமத்தில் தேனியிலிருந்து மேற்கில் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னன் ஸ்ரீ வீரபாண்டி அவா்கள் அம்மனையும், கண்ணீஸ்வரமுடையாரையும் பிரார்த்தனை செய்து கண் பார்வை மீண்டும் பெற்றதன் நினைவாக கி.பி.14-ஆம் நூற்றாண்டில் இத்தலத்தில் ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோவிலைக் கட்டியுள்ளார். இத்திருக்கோவில் இம்மாவட்டத்தின் முதன்மையான புனித தலமாகும். தமிழ்நாட்டில் உள்ள 108 அம்மன் கோவில்களில் ஒன்றாகும். இத்திருத்தலத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா, அக்கினி / கத்தரி வெயில் ஏற்படுகின்ற நாட்களில் நடைபெறும், பக்தா்கள் வெள்ள கதிர்வீச்சால் ஏற்படுகின்ற நோய்களான பெரியம்மை, சின்னம்மை மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க அக்கினிசட்டி எடுத்தும், சேற்றாண்டி வேசமிட்டும், மஞ்சள் நீராடியும், ஆயிரம் கண் பானைகள் எடுத்தும், நெய் விளக்கு ஏற்றியும் வழிபட்டு ஆசிர்வாதம் பெறுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்

 




Dinamani India.. In Web from January 1, 2021. .

About Us         Contact Us