Compilation of Indian Newspaper Editorial & Current Affairs

News Aggregator for Job Aspirants







18-04-2024
Thursday

முதற்பக்கம்
Home
தலையங்கம்
Editorials & Opinions
நடப்பு நிகழ்வுகள்
Current Affairs
அறிவியல் & தொழில்நுட்பம்
Science & Technology

தினசரி செய்திகள்
Daily News





பெரம்பலூர்

1741ஆம் ஆண்டு மராத்தியர்கள் திருச்சியை கைப்பற்றி சந்தா சாஹிப்பை கைதியாக்கினர். இருப்பினும், 1748ஆம் ஆண்டு விடுதலை பெற்று நவாப்புடன் போரில் ஈடுபட்டான். அதன் பின்னர் நவாப்பின் மைந்தனான முகமது அலி உடையர்பாளையம் மற்றும் அரியலூரை இணைத்து கொண்டு யூசப்கானின் இயக்கத்தை அடக்க முற்பட்டான். 1764 நவம்பரில் இந்த விவகாரத்தை மெட்ராஸ் கவுன்சிலிடம் அறிவித்து ராணுவ உதவியையும் பெற்றுக்கொண்டான். இந்த ராணுவ உதவி மூலம் பாளையங்களை தன்னோடு இணைத்துக் கொண்டு ஆற்காடு முதல் திருச்சி வரை தன்னுடைய ஆட்சிப் பகுதியை விரிவாக்கிக் கொண்டான்.

 சுற்றுலா

       ராஜன்குடி கோட்டை பெரம்பலூரின் மிக முக்கியமான சுற்றுலாத்தலம் ஆகும். இதற்கு ஆண்டு முழுவதும் நாடு முழுவதிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இது தவிர பல்வேறு கோயில்களும் உள்ளன. திருவாசூர் மதுர காளியம்மன் கோயில் மிகமுக்கியமான வழிபாட்டுத்தலமாக விளங்குகின்றது. பங்குனி மாத கடைசியில் நடைபெறும் வருடாந்திர விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. சித்திரை முதல் வாரத்தில் தேரோட்ட விழாவும் நடைபெறும். இது தவிர செட்டிக்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஏகாம்பரேசுவரர் மற்றும் தண்டாயுதபாணி கோயில்களையும் கொண்டுள்ளது. இவை குலசேகர பாண்டிய மன்னரால் 800 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டவையாகும்.

வரலாறு

1741 ஆம் ஆண்டு மராட்டியர் திருச்சிராப்பள்ளி மீது படையெடுத்து சந்தா சாபே என்பவரை சிறைபிடித்தார். 1748 இல் சந்தா சாகேப் சுதந்திர சாம்ராஜ்யத்தை கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார். ஆனால் விரைவில் ஆற்காடு நவாப் அன்வார்டின் மற்றும் அவரது மகன் முகமது அலி ஆகியோருக்கு எதிராக காநாடக நவாபின் பிரபலமான போர்களில் ஈடுபட்டார்.

 தற்சமயம் உள்ள அரியலூர் மாவட்டத்தின் அரியலூர் மற்றும் உடையார்பாளையத்தில் வசிக்கும் பழங்குடியினர் பணம் செலுத்துவதிலும், கிளர்ச்சியாளரான யூசப்காணுக்கு உதவுவதிலும், அடக்குவதிலும் முகமது அலி தோல்வியுற்றார். முகமது அலி இந்த பிரச்சனையை 1764 நவம்பரில் (மெட்ராஸ்) சென்னை சபை கவனத்திற்கு கொண்டு சென்றார். மேலும் 1765, 3ஆம் தேதி ஜனவரிமாதம் இராணுவ உதவிகளைப் பெற்றார்.   உமத்த் உல் உமர் மற்றும் டொனால்ட் காம்பெல் தலைமையிலான படைகள் அரியலூரில் நுழைந்து அதை கைப்பற்றியது. இளம் பாலிகர் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து அங்கிருந்து உடையார்பாளையம் தப்பியோடினர். ஜனவரி 19ஆம் தேதி இராணுவம் உடையார்பாளையம் மீது படையெடுத்த்து. பாலிகரின் படைகள் தோற்கடிக்கப்பட்டு பாளையம் கைப்பற்றப்பட்டது. இரண்டு பாலிகர்கள் தங்களுடைய நகரத்தை விட்டு தரங்கம்பாடியில் தஞ்சம் புகுந்து பிறகு டேனிஸ் குடியற்ற்த்தை அடைந்தனர். ஆற்காட்டிலிருந்து திருச்சிராப்பள்ளி வரை நவாப்பின் தலையீடு இல்லாமல் பாலிகரின் எல்லை விரிவாக்கப்பட்டது.

ஹைதர் அலிக்கு திப்பு சுல்தானுக்கும் இடையே போராட்டம் நடைபெற்றது. திப்பு சுல்தானுக்கு பிரிட்டீஸ்கார்ர்கள் துணைபுரிந்தார்கள். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பின் 1801 ஆம் ஆண்டு கர்நாடகத்தின் இராணுவ நிர்வாகம் ஆங்கில அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு 1801ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் வந்தது. 1995 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் வந்த்து. 1995 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியிலிருந்து பிரிந்து பெரம்பலூர் மற்றும் கரூர் ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் வடக்கே கடலூர் மற்றும் சேலம் மாவட்டங்கள், தெற்கே திருச்சிராப்பள்ளி கிழக்கே அரியலூர் மற்றும் மேற்கில் திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது.

அரசாணை எண் 913, வருவாய் Y3 தேதி 30.09.1995 இன் படி அன்றிலிருந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிந்து ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டம் நடைமுறைக்கு வந்த்து. அரசாணை எண் 656, வருவய், தேதி 29.12.2000 மற்றும் அரசாணை எண் 657, வருவாய் தேதி 29.12.2000 இன்படி பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூரைத் தலைமையிடமாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டம் எனவும், அரியலூரைத் தலைமையிடமாகக் கொண்ட அரியலூர் மாவட்டம் எனவும் இரண்டாகப் பிரிக்க ஆணை பிறப்பித்தது. பிறகு அரசாணை எண் 167 வருவாய், தேதி 19.04.2002 மற்றும் அரசாடைண எண் 168, வருவாய், தேதி 19.04.2002 இன்படி அரசு மேற்குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டம் அமைய ஆணை பிறப்பித்தது.

அரசாணை எண் 683, தேதி 19.11.2007 இன்படி, அரசு பெரம்பலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மற்றும் அரியலூர் என இரு மாவட்டங்களாகப் பிரிக்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பெரம்பலூரை தலைமையாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டம் உருவானது. இம்மாவட்டம் ஒரு வருவாய்க் கோட்டத்தினை உள்ளடக்கியது. இது பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய மூன்று வட்டங்களை (தாலுக்காக்கள்) கொண்டது. பின்னர் அரசாணை எண் 410, தேதி 21.11.2012 இன்படி குன்னம் வட்டம், குன்னம் மற்றும் ஆலத்தூர் வட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வடக்கே கடலூர் மற்றும் சேலம் மாவட்டங்களையும், தெற்கே திருச்சிராப்பள்ளி கிழக்கே அரியலூர் மேற்கே திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் மாவட்டத்தினாலும் சூழப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலங்கள்

அருள்மிகு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயில்

தலவரலாறு

சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாற்றுடன் தொடர்பு படுத்தி இங்குஅம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய்க் கூறப்பட்டு வருகிறது. கற்புடைத் தெய்வம் கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு மனம் பொறாமல் கோபம் கொண்டு மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் இத்தலமடைந்து அமைதி கொண்டாள் எனவும் கண்ணகியைக் கொண்டு மதுரையை எரியூட்டிய மதுரை காளியம்மனே இத்தலம் விரும்பி அமர்ந்தாள் எனவும் பெரியோர்கள் கூறுகின்றனர். சிறுவாச்சூர் வழிபாடு தெய்வம் செல்லியம்மன் ஆகும். ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையால் இவ்வம்மையைக் கட்டுப்படுத்தித் தீய செயல்களுக்கும் பயன் படுத்திவந்துள்ளான். அன்னை மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை இரவு வந்து சேர்ந்தபோது செல்லியம்மனுடன் இரவு தங்க இடம் கேட்க செல்லியம்மனோ தன்னை மந்திரவலிமையால்தொல்லைப் படுத்தும் மந்திரவாதி பற்றிக் கூறிய போது மதுரைகாளியம்மன் தான் அதற்குத் தக்க வழி செய்வதாகக் கூறி தங்கி, வழக்கப்படி வந்த மந்திரவாதியை அன்னை மதுரை காளி எதிர்கொண்டு அழித்து விட, செல்லியம்மன் அன்னையின் திறன் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாலித்து வர வேண்டும் என வேண்டி, தான் அருகிலிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டு மெனவும் கூற, மதுரை காளியம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஆலயத்திலே அமர செல்லியம்மன் பெரியசாமி மலை சென்று கோயில் கொண்டுவிடுவதாகவும், சிறுவாச்சூர்க்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரை காளியம்மன் பக்தர்களுக்குத் திங்கள் கிழமை காட்சி தருவதாகவும், எனவே தான் சிறுவாச்சூர் ஆலயம், வெள்ளி, திங்கள் மட்டும்திறந்து பூசை செய்யப்படுவதாகவும் ஆன்றோர்கள் செவிவழியே இந்த அரிய வரலாற்றை தெரிவித்துள்ளனர். இந்த நாட்கள் தவிர ஆலய சிறப்புத் திருநாட்கள் சிலவற்றிலும் ஆலயம் திறந்து பூசை செய்யப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் மதுரகாளியம்மனும், செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாக ஐதீகம் உள்ளது. மதுரை காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறுவார்கள் சினங்கொண்டு வந்த மதுரகாளியம்மன் இங்கு வந்து அமைதியுற்றுப் பக்தர்களுக்குப் பல இனிய நிகழ்வுகளை அருளுவதாலும், மதுரகாளியம்மன் (மதுரம்/ இனிமை) என்ற பெயர் பெற்றாள் என்பதும் பொருத்தமுடையதே ஆகும். செல்லியம்மன் தனக்கு முதல் மரியாதை தரவேண்டுமென்று கேட்டதற்கு ஏற்ப பூசையின் போது தீபாராதனை காட்டுகையில் முதலில் மலை நோக்கி மேலே தீபாராதனை காட்டி விட்டுத்தான் பின்னர் மதுரகாளியம்மனுக்குத் தீபாராதனை காட்டும் வழக்கம் இது தொண்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

இறைவன் : அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி

இறைவி : காமாட்சியம்மன்

தலவிருட்சம் : வில்வ மரம்

தீர்த்தம் : பஞ்சநதி தீர்த்தக்குளம்

தலவரலாற்றுச்சிறப்பு

முன்காலத்தில் இத்தலமானது கடம்ப மரங்கள் நிறைந்த அடர்ந்த கடம்ப வனமாக இருந்துள்ளது. உறையூரை தலைநகரமாகக் கொண்டுசோழமன்னன் ஆட்சி செய்த போது, வணிகன் ஒருவன் உறையூரிலிருந்து வணிக நிமித்தமாக வடக்கு நோக்கி பயணத்தை தொடங்கினான். அவ்வணிகன் இக்கடம்பவனத்தை வந்தடைந்தபோது மாலைப்பொழுதாகி பின் இருள் சூழ்ந்து விட்டதால் மேற்கொண்டு பயணம் மேற்கொள்ள இயலாமல், இக்கடம்ப வனத்திலேயே தங்க தீர்மானித்து அங்கிருந்த ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்து சாய்ந்திருந்தான்.

இக்கடம்பவனத்தில், நள்ளிரவில் திடீரென்று அவன் கண்ணெதிரில் ஒளி மிகுந்த, தீப்பிழம்பின் நடுவே ஓர் சிவலிங்கம் தோன்றி, தேவர்களும் முனிவர்களும் வழிபடுகின்ற காட்சி பளிச்சென்று தோன்றி மறைந்தது .

இவ்வற்புதக்காட்சியை கண்ட வணிகன் உணர்ச்சி மிகுதியால் மயிர்க்கூச்செறிந்து விதிர்விதிர்த்து, விடிந்ததும் இவ்வரியக் காட்சியை சோழமன்னரிடம் உரைப்பதற்காக உறையூரை நோக்கி திரும்பச் சென்றான்.

உறையூர் நகரையடைந்ததும் வணிகன் , அரண்மனைக்குச் சென்று மாமன்னன் பராந்தக சோழனிடம் முதல் நாள் இரவில் இக்கடம்ப வனத்தில் தான் கண்ட அற்புதக் காட்சியை எடுத்துரைத்தான்.

சோழனின் அரண்மனையில் விருந்தினராய் தங்கியிருந்த குலசேகரபாண்டியனும், இதைக் கேள்வியுற்று, பாண்டியனும், சோழனும் வணிகனுடன் தன்பரிவாரங்களையும் அழைத்துக் கொண்டு இக்கடம்ப வனத்தை வந்தடைந்து சிவலிங்கத்தை தேடி அலைந்தார்கள். இவ்வாறு நாற்றிசையும் தேடி அலைந்தபோது, கையில் செங்கரும்பு ஒன்றினை ஊன்றிக் கொண்டு முதியவர் ஒருவர் தடுமாறிக் கொண்டு மாமன்னர்களை அணுகி சிவலிங்க இருப்பிடத்தைக் காட்டி திடீரென்று ஜோதி வடிவமாக மறைந்தார். அச்சோதி மறைந்த கிழக்கு திசை நோக்கி மன்னவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தபோது, தூரத்தே ஒரு குன்றின் மீது முருகப் பெருமான் தண்டாயுதபாணியாக செங்கரும்புடன் காட்சி தந்தார்.

பக்தி பரவசத்தில் ஆழ்ந்த சோழனும், பாண்டியனும், ஏகஜோதியின் இடையில் தோன்றிய ஏகாம்பரேஸ்வரருக்கு ஓர் ஆலயமும் கிழக்கு குன்றின் மீது தோன்றிய தண்டாயுதபாணி சுவாமிக்கு அம்மலையின் மீது ஓர் ஆலயமும் ஏககாலத்தில் கட்டுவதென தீர்மானித்து குலசேகர பாண்டியனால் இரு ஆலயங்களும் கட்டப்பட்டது.

கற்புக்கரசியான கண்ணகி, பாண்டியனால் தன் கணவன் கோவலன் கொலையுண்ட பிறகு, கடுஞ்சினங்கொண்டு மதுரையை எரித்தும் சினம் தணியாதவளாக, வடமேற்கு நோக்கி வரும்பொழுது, இத்தலத்தின் வழியாக வந்தபோது, முருகப் பெருமான் கண்ணகியின் கடுஞ்சினத்தை, தணித்து, சிறுவாச்சூர் என்னும் இடம் சென்று மதுர காளியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஆற்றுப்படுத்தியதாகவும், இப்பகுதி வழக்காறு உள்ளது.

தலசிறப்பு

செட்டிகுளம் ஊரின் நடு நாயகமாக விளங்குகின்ற அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலும், ஊரின் கீழ்புறம் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலும் வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோயிலாகும். உறையூர் சோழன் பராந்தகனுக்கும் பாண்டியமன்னன் குலசேகரனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு எழுப்பப்பட்ட திருக்கோயிலே அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலாகும். மலையின் மீது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி தன் கையில் 11 கணுக்களை உடைய செங்கரும்பினை ஏந்தி காட்சி அளிப்பது சிறப்பு அம்சமாகும்.

தன் ஆணைக்கு இணங்க அசுரர்களை அழித்த முருக பெருமானுக்கு தன் கையில் இருந்த கரும்பை பரிசாக வழங்கி அன்னை காமாட்சியம்மன் ஆசி வழங்கினார். அன்று முதல் இத்தலத்தில் கரும்பு ஏந்திய கண்ணனாய் கலைகள் களையும் தோழனாய் அருள்பாலித்து வருகிறார். அதனாலே இத்தளத்திலுள்ள காமாட்சியம்மன் கையில் கரும்பு இல்லாமல் காட்சி தருகிறார்.

சூரிய பூஜை

அருள்மிகு ஏகாம்பரேஸ்வர் திருக்கோயில்i கிழக்கு நோக்கியும், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலையின் மீது தன் தந்தையை பார்த்து மேற்கு நோக்கியும் காட்சி கொடுப்பது தனிச்சிறப்பாகும். அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் சுவாமியின் மீது பங்குனி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் காலைநேர கதிரவனின் ஒளி விழும் இந்த ஒளியானது சுவாமி மீதிருந்து நகர்ந்து சற்று நேரத்தில் அம்பாள் மீது ஒளிப்படும். இக்காட்சியை காண பக்தர்கள் பெருமளவில் கூடுவர். தண்டாயுத சுவாமி மீது மாசி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் சூரியன் மறையும்போது ஒளிக்கதிர்கள் விழும் வகையிலும், சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா பெருந்திருவிழாவாகும். மலைகோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா பெருந்திருவிழாவாகும். மலைக்கோயிலில் இருந்து பங்குனி உத்திர திருவிழாவின்போது மட்டும் உற்சவர் மலையில் இருந்து இறங்கி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் பங்குனி உத்திர திருவிழா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே அறிவிக்கை செய்யப்பட்ட திருவிழா ஆகும். கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாட்கள் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் காலை மற்றும் இரவு என சுவாமி திருவீதிஉலா நடைபெறுகிறது. இவ்விழாவில் திருக்கல்யாண உற்சவமும் ஒவ்வொரு நாளும் குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம், புஸ்ப பல்லாக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

குழந்தைப்பேறு பிரார்த்தனை ஸ்தலம்

மழலைபேறு வேண்டுவோர் சஷ்டியில் விரதம் இருந்து மலைமீதுள்ள தலவிருட்சமான வில்வமரத்தில் தொட்டில்கட்டி வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து மலையேறி தங்கள் வேண்டுதலை நிறைவு செய்கின்றனர்.

12 இராசிகளுக்குமான குபேரன்

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் அம்பாள் சன்னதிக்கு எதிரில் குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு குபேரன் சித்ரலேகாவுடன் தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இந்த சன்னதியில் பக்தர்களுக்கு பச்சை குங்குமம் பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது வேறு எந்த திருக்கோயிலிலும் இல்லாத சிறப்பாகும். இதுவன்றி 12 ராசிகளுக்கும் குபேரன் ஓம் வடிவில் ஆலய தூண்களில் அமைந்துள்ளனர். குபேரனுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்வது சிறப்பு.

இதன் மூலம் குபேர சம்பத்துக்கு வழிகாட்டும் தளமாக இது திகழ்கின்றது. குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று குபேர ஹோமமும், சிறப்பு வழிபாடும் வெகு சிமர்சையாக நடைபெற்று வருகிறது.

வெள்ளித்தேர்

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி வீற்றிருக்கும் மலையின் வெளி பிரகாரத்தில் மாலை 6.00 மணிக்கு வெள்ளி ரதம் பவனி வருகிறது. வெள்ளிரத புறப்பாட்டு கட்டணமாக ரூ. 1000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ரூ. 20,000/-ம் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தி ஆண்டுக்கு ஒருமுறை தாங்கள் விரும்பிய நாளில் வெள்ளிரத புறப்பாடு செய்யலாம்.

அழகிய மலை மீது அழகன் முருகன் அருள்பாளிக்கிறார். இம்மலை மீது ஏறிசெல்ல தனிப்படிகளும், இறங்கி வர தனிப்படிகளும் வாகனங்கள் செல்ல தனிப்பாதையும் அமைந்துள்ளது.

சாத்தனூர் கல்மரம்

சாத்தனூருக்குக் கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் இன்று இருக்கும் கடல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் இவ்வூருக்கு மேற்கே 8 முதல் 10 கிலோ மீட்டர் வரையிலும் பரவியிருந்தாக புவியியல் கூற்றுப்படி தெரியவருகிறது. புவியியல் சாத்திரப்படி க்ரிடேஷன் காலம் எனக்கூறப்படும் அக்காலத்திலும் இன்று கடலில் காணும் பிராணிகளைப் போன்று பலவித பிராணிகள் நிறைய இருந்தன. இப்பிராணிகள் இறந்த பிறகு ஆறுகளிலும் அடித்து வரப்பட்ட மணல் களிமண் இவற்றால் மூடப்பட்டக் கடலின் அடியில் அமிழ்ந்தன. கடலோரப்பகுதிகளிலும் அதன் சமீப இடங்களிலும் தழைத்து வந்த மரங்களும் ஆற்றுவெள்ளத்தினால் அடித்து வரப்பட்டு இப்பிராணிகளுடன் கடலில் அமிழ்ந்து காலப்போக்கில் கல்லுருவாக மாறின.

இங்குக் காணப்படும் கல்லுருவாகிய பெரிய அடிமரம் ஏறத்தாழ 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தய திருச்சிராப்பள்ளி பாறையினப்பகுதியில் அமைந்திருக்கின்றது. “ஆஞ்சியோஸ்பெர்ம்ஸ் ” என இக்காலத்தில் காணப்படும் பூக்கள் தோன்றும் தாவர இனம் தோன்றியதற்கு முன்னால் பெரிதும் காணப்பட்ட அக்காலப் பூக்கள் இல்லாத (தோன்றாத) நிலத்தாவர இனமான “கோனிபர்ஸ்” வகையைச் சேர்ந்ததே இம்மரம்.

இங்குக் காணப்படும் கல்லுருவாகிய அடிமரம் 18 மீட்டர் நீளமுள்ளது. வரகூர், அனைப்பாடி, அலுந்தளிப்பூர், சாரதாமங்கலம் இவ்வூர்களின் அருகே நீர் ஓடைப்பகுதிகளிலும் சில மீட்டர் நீளமுள்ள இம்மாதிரியான கல்லுருவாகிய மரங்கள் காணப்படுகின்றன. இந்திய புவியியல் துறையைச் சேர்ந்த டாக்டர். எம்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் 1940-ஆம் ஆண்டில் இக்கல்லுருவாகிய மரம் பற்றி முதல் விவரம் தெரிவிக்கப்பட்டது.

சாத்தனூரில் உள்ள தேசிய புதைபடிவ மர பூங்காவில் ஒரு அருங்காட்சியகம் மற்றும் குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட கல்வி மையம் உள்ளது.

சாத்தனூர்  கல்லுருவாகிய அடிமர கல்வி மையம் என்று அழைக்கப்படும் இந்த மையம் தகவல், பார்வையாளர்களிடையே தளம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள புதைபடிவ மரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட கல்வி மையத்தில் சூரிய மண்டலம், பூமியின் தோற்றம், பெருவெடிப்பு கோட்பாடு, உயிர் மற்றும் பரிணாமம் மற்றும் பாழடைந்த மரம் பற்றிய விளக்கங்களுடன் கூடிய நான்கு அரங்குகள் உள்ளன. இப்பகுதியில் சேகரிக்கப்பட்ட புதைபடிவங்கள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ரஞ்சன்குடி கோட்டை

ரஞ்சன்குடி கோட்டை 17 வது நூற்றாண்டைச் சார்ந்த்து. இது தமிழ்நாட்டில் பெரம்பலூரிலிருந்து 22 கி.மீ. (14மைல்) தொலைவில் வடக்கே அமைந்துள்ளது. தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள பெரம்பலூரில் வடக்கே 22 கி.மீ. (14மைல்) தேசிய நெடுஞ்சாலை, NH 45-ல் அமைந்துள்ளது. இது மாநிலத்தின் தலைநகர் சென்னையிலிருந்து 253 கி.மீ. (157மைல்) தொலைவிலும் திருச்சியிலிருந்து 70 கி.மீ. (43மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. இந்தக் கோட்டை கர்நாடக நவாபினால் கட்டப்பட்டது.

1751 ஆம் ஆண்டில் வாலிகொண்டா போரின் போது ரஞ்சன்குடி கோட்டையானது போர் மையமாக இருந்த்து. அப்பொழுது பிரஞ்ச் படைவீர்ர்களின் ஆதரவுடன் இருந்த சந்தா சாஹிப் என்பவரை பிரிட்டிஷ் படைவீரர்களின் ஆதரவோடு இருந்த முகமது அலி என்பவர் எதர்த்து வெற்றிபெற்றார். கோட்டையானது நீள்வட்டமாகவும், அரைகோள வடிவ கோட்டைகளுடனும், வலுவான வெவ்வேறு உயரங்களில் கட்டப்பட்டுள்ள மூன்று அரண்களால் சூழப்பட்டுள்ள இக்கோட்டை சுவர்கள் ஒழுங்காக வெட்டப்பட்ட கற்தொகுப்புகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டையில் அரசர்களுக்கு உரிய மாளிகை, குடியிருப்பு கட்டிடங்கள், சுரங்க அறைகள் மற்றும் பேட்டை, மேல்பகுதி, கோட்டைய மேடு கீழ் பகுதியை இணைக்கும் ஒரு பாதை உள்ளது. தற்சமயம் இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தினால் இந்தக் கோட்டை பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. பெரம்பலூரின் சுற்றுலாத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்றாகவும் உள்ளது.

வரலாறு

இந்த கோட்டையை ரஞ்சன்குடி கோட்டை என்றும் நஞ்சன்குடி கோட்டை என்றும் குறிப்பிடலாம். சிவன் மற்றும் ஹனுமானுக்காக அர்ப்பணஞ்செய்த இந்து கோவில்களின் பழைய வளாகங்கள் இருந்த்தாக நம்பப்படுகிறது. 1751-ஆம் ஆண்டு நடைபெற்ற வாலிகொண்டா போரின் பிரதிபலிப்பு காட்சியாக இந்த கோட்டை அமைந்துள்ளது.

பிரஞ்சு படையானது சந்தா சாஹிப் என்பவருக்கும், பிரிட்டிஷ் படையானது முகமது அலி என்பவருக்கும் ஆதரவு அளித்தனர் அருகே அமைந்துள்ள கிராம்மான வாலிகொண்டாவிற்கு போரை அழைத்திருந்தாலும், அது கோட்டையில் போரிடப்பட்டது. தொடக்கத்தில் பிரெஞசு படை வெற்றி வாகை சூடியது. ஆனால் முடிவில் உள்ளுர் முஸ்லிம்கள் உதவியுடன் பிரிட்ஷ் படையானது வெற்றிவாகை சூடி போரை முடிவிற்கு கொண்டு வந்தது.

1752 ஆம் ஆண்டு மே மாதம் டிஅயுடில் கீழ் பிரெஞ்சு படை சரணடைந்த்தின் பிரதிபலிப்பாக கோட்டை அமைந்தது. மேலும் ஸ்ரீரங்கத்தில் தற்காப்பு தளத்தை அகற்றுவதற்காகவும் அனுப்பப்பட்டது. ஊட்டத்தூரில் பணியமர்த்தப்பட்ட டி அயுடில் என்பவர் மே மாதம் 9 ஆம் தேதி டால்டன் தலைமையிலான பிரிட்டிஷ் படையினால் வீழ்த்தப்பட்டார். ரஞ்சன்குடியிடம் அவர் பின்வாங்கிச் சென்றார். பிரெஞ்சு படையானது கோட்டையின் மேல் தளத்திற்கு செல்லாதவண்ணம் ஜகிர்தார் பிரிட்டிஷ் படையின் பக்கமாக எடுத்துச் சென்று டிஅயுடில்லை கோட்டையில் சரணடையச் செய்தார்.

கட்டிடக் கலை

இந்தக் கோட்டையானது நீற்வட்டமாகவும் அரைகோள வடிவில் அமைந்துள்ளது. வெவ்வேறு உயரங்களில் கட்டப்பட்டுள்ள மூன்று அரண்களால் சூழப்பட்டுள்ள இக்கோட்டை ஒழுங்காக வெட்டப்பட்ட கற்தொகுப்புகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. முக்கிய பாதுகாப்பு அரண், கோட்டையின் அடிப்பாகம் மண் சுவரினால் சூழப்பட்டுள்ளது. படிகளின் வழியாக பேட்டை எனப்படும் திறந்தவெளி போர்களத்திற்கு செல்லுமு அமைப்பு இருந்தன. மேல் அடுக்கு கோட்டை மேடு என்று அழைக்கப்படுகிறது. இது பீரங்கி தளம் மற்றும் சிப்பாய்கள் உதவியுடன் பாதுகாப்பு கோபுரமாகவும் அமைந்திருந்தது. கோட்டையில் உள்ள சிறிய நீரமைப்பானது நவாபின் நீச்சல் குளுமாக இருந்த்து. கோட்டையில் ஒரு அரண்மனை, குடியிருப்பு பகுதிகள், சுரங்க அறைகள், பேட்டை மற்றும் கோட்டை மேடு பகுதிகளை இணைப்பதற்கான சுரங்கப்பாதை ஒன்றும் இருந்தது.

கோட்டையின் மையப்பகுதியில் அமைந்த ஒரு குழியானது ஆண் கைதிகளுக்கான சிறைச் சாலையாகவும், கோட்டையின் உள்ளே அமைந்த சிறிய அறைகளைக் கொண்ட சிறைச்சாலையானது பெண்களுக்கான சிறையாகவும் இருந்தது. கோட்டையானது பெரம்பலூரின் சுற்றுலா மையங்களில் ஒரு மிக முக்கிய சுற்றுலா தலமாக இருந்தது.




 

Dinamani India.. In Web from January 1, 2021. .

About Us         Contact Us