Compilation of Indian Newspaper Editorial & Current Affairs

News Aggregator for Job Aspirants







18-04-2024
Thursday

முதற்பக்கம்
Home
தலையங்கம்
Editorials & Opinions
நடப்பு நிகழ்வுகள்
Current Affairs
அறிவியல் & தொழில்நுட்பம்
Science & Technology

தினசரி செய்திகள்
Daily News





மயிலாடுதுறை

வரலாறு

பார்வதி தேவியார் மயிலாக வடிவம் எடுத்து காவிரி ஆற்றுத்துறையில் ஆடி சிவபெருமானை வழிபட்டதால் இப்பகுதி மயிலாடுதுறை எனப்பட்டது.   18 ஆம் நூற்றாண்டு வரை “மயூரபுரம்” என்றும் பின்பு   “மாயவரம்” என்றும் அழைக்கப்பட்ட இந்நகரம் 1982ல் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது “மயிலாடுதுறை” என பெயர் மாற்ற அரசாணை வெளியிடப்பட்டது. ஆன்மிக பூமி வைத்தீஸ்வரன் கோவில்,கீழப்பெரும்பள்ளம் போன்ற நவக்கிரகங்கள் மயிலாடுதுறை நகரத்திற்கு மிகவும் அருகில் உள்ளன.சைவமும் தமிழும் சைவத்தையும்,தமிழையும் வளர்த்து தமிழ்த்தொண்டு செய்து வரும் தருமபுரம் ஆதினம் மற்றும் திருவாவடுதுறை ஆதினம் இம்மண்ணின் நீண்ட பாரம்பரியம் சான்றாகும். தேசத்தந்தையை ஈர்த்த தியாகபூமி  1915,1921,1927 என மும்முறை காந்தியடிகள் பாதம் பதித்த மண்.காந்தியுடன் தென் ஆப்பிரிக்காவில் தொண்டு செய்த தியாகி வள்ளியம்மையை பெற்ற தில்லையாடி இங்குதான் உள்ளது.அதற்கு ”தில்லையாடி வள்ளியம்மை:யின் பெயரால் ஒரு நினைவு மண்டபமும் தழிழக அரசால் கட்டப்பட்டுள்ளது.பழமையான நகராட்சி  ஆங்கிலேயே ஆட்சியில் அப்போதைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில்,(ஆந்திரம் உள்ளடக்கியது) 29 ஊர்கள் மட்டுமே “நகரம்: என அடையாளம் காணப்பட்டு நகராட்சிகளாக ஆக்கப்பட்டதில் மயிலாடுதுறை நகராட்சியும் ஒன்று.மயிலாடுதுறை நீதிமன்றமும், சப் கலெக்டர் அலுவலகமும் 100 ஆண்டுகள் பழைமையான வரலாறுடையது.இங்குள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி 148 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த பள்ளி என்பதுடன் சிறந்த புகழ்பெற்ற கல்வியாளர்களை உருவாக்கிய பள்ளி இந்நகரின் நடுவில் அமைந்துள்ளது. 1877ல் சென்னை-தூத்துக்குடி ரெயில்பாதை அமைக்கபட்ட போது முக்கிய இரயில் சந்திப்பாக மயிலாடுதுறை இருந்து வந்துள்ளது.

சித்தர் வாழ்ந்த சிறந்த மண் 

         ஆயுர்வேத மருத்துவத்தின் பிதாமகன் “தனவந்திரி” சித்தர் வாழ்ந்து சமாதியடைந்து வைத்தீஸ்வரன்கோயில் தலம் மற்றும் சித்தர் திருச்சிற்றம்பல நாதர் வாழ்ந்த” சித்தர்காடு” தற்போதும் மயிலாடுதுறை வட்டத்தில் ஒரு வருவாய் கிராமமாக உள்ளது.

”கம்பராமயணம்” தந்த கம்பர் பிறந்த மண் –தேரிழந்தூர் தமிழ்மொழியின் முதல் புதினம்  “பிரதாப முதலியார் சரித்திரம்” வழங்கிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை வாழ்ந்தது –மாயூரம்”பொன்னியின் செல்வன்” வரலாறு புதினம் எழுதிய கல்கி என்ற கிருஷ்ணமூர்த்தி பிறந்த மண் (மணல்மேடு-புத்தமங்கலம்)சிலப்பதிகாரம்,மணிமேகலை என்ற ஐம்பெரும்காப்பியங்கள் தோன்றிய சோழர் கால தலைநகரமாகவும்,துறைமுகமாகவும் விளங்கிய வரலாறு சிறப்பு மிக்க களப்பகுதி  “காவேரிப்பூம்பட்டினம்” என்ற பூம்புகார் மாவட்டத்தின் கிழக்கே அமைந்துள்ளது.இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நந்தனாரைக் கதாநாயகனாக  கொண்ட “நந்தானர் சரித்திரம்” படைத்த கோபாலகிருஷ்ண பாரதி பிறந்த மண்-ஆனந்ததாண்டவபுரம்.

நூலகத்தந்தை இந்திய  நுலகத்துறையின் தந்தை திரு.எஸ்.ஆர் ரெங்கநாதன் சொந்த ஊர்-சீர்காழி சிந்தனைச் சிற்பி எண்ணங்களின் வலிமை என்ன என்பதை தமிழுக்கு முதன் முதலில் அழுத்தமாகச் சொன்ன உலகப்புகழ்  பெற்ற சிந்தனையாளர் திரு.எம் எஸ்.உதயமூர்த்தி  விளநகர் ஆறுபாதி.

        மேற்கண்ட சரித்திர புகழ் வாய்ந்த அனைத்து தலங்களிலும் இப்புதிய மாவட்டத்திற்கு வரலாற்று புகழ் சேர்ப்பதாகும்.

சுற்றுலாத் தலங்கள்

பூம்புகார்

பூம்புகார் தரங்கம்படி மாவட்டத்தில் சீர்காழி தாலுக்காவில் உள்ளது. இது காவேரிபூம்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மயிலாடுதுறை சந்திப்பில் இறங்குவதால், பூம்புகார் சாலை வழியாக சாலையில் இருந்து வந்தவர்கள், சீர்காழியில் இறங்க வேண்டும். பூம்புகார் மயிலாடுதுறை மற்றும் சீர்காலி சாலையில் இணைக்கப்பட்டுள்ளது. 

தரங்கம்பாடி

வங்காள விரிகுடாவின் கிழக்கு கரையோரப் பாதையில் மயிலாடுதுறை தென் கிழக்கே 28 கி.மீ. டேனிஷ் கோட்டை தரங்கம்பாடியின் சிறப்பு அம்சமாகும். மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி மற்றும் சிதம்பரம் ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதிகள் உள்ளன. 1620 இல் கட்டப்பட்ட டேனிஷ் கட்டிடக்கலை அம்சங்களைக் காண்பிப்பதாகும். இந்த கோட்டை தற்போது தமிழ்நாட்டின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த அருங்காட்சியகம் அனைத்து நாட்களிலும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் திறக்கப்பட்டிருக்கும் .




 

Dinamani India.. In Web from January 1, 2021. .

About Us         Contact Us