Compilation of Indian Newspaper Editorial & Current Affairs

News Aggregator for Job Aspirants







26-04-2024
Friday

முதற்பக்கம்
Home
தலையங்கம்
Editorials & Opinions
நடப்பு நிகழ்வுகள்
Current Affairs
அறிவியல் & தொழில்நுட்பம்
Science & Technology

தினசரி செய்திகள்
Daily News





திண்டுக்கல்

History And Geography

       திப்பு சுல்தான் ஆண்ட திண்டுக்கல் சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் துணை சாம்ராஜ்ஜியமாகவும் விளங்குகின்றது. பழமை வாய்ந்த மலைக்கோட்டை முத்துகிருஷ்ணப்ப நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் 15.09.1985 அன்று பிரிக்கப்பட்டது. திண்டுக்கல் அண்ணா, காயிதமில்லத் மற்றும் மன்னர் திருமலை ஆகியோரால் பெயர் பெற்றது. அமராவதி, மஞ்சள் ஆறு, குதிரையாறு, மருதநதி ஆகியவை இங்கு முக்கியமான நதிகளாக கருதப்படுகிறது.

 சுற்றுலா

       பழனி மலை முருகன் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. பேகம்பூர் மசூதி, சிறுமலை, பரப்பளர் அணை, வராதமனதி அணை, மாரியம்மன் கோவில் மற்றும் நடுப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் ஆகியவை முக்கிய இடங்களாக உள்ளன. கொடைக்கானல் மலைத்தொடர் மற்றும் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிமலரும் அற்புதமான சுற்றுலா பயண இன்பத்தை தருகின்றது.

வரலாறு

திண்டுக்கல் மாநகர வரலாறு என்பது தென்னிந்தியாவின் முக்கிய அரசர்களாக சேர, சோழ, பாண்டியர்கள் காலத்திலேயே துவங்கியுள்ளது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் சோழ அரசனாகிய கரிகால் சோழன், பாண்டியர்களிடமிருந்து திண்டுக்கல் நகரைக் கைப்பற்றி தனது ஆளுமைக்கீழ் கொண்டுவந்தான். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் தென்னிந்தியாவின் அதிக பகுதிகளை கைப்பற்றும்போது திண்டுக்கல் அவர்கள் வசமானது. மீண்டும் சோழர்களால் ஒன்பதாம் நூற்றாண்டில் தன்வசமாக்கப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டில் பாண்டியர்கள் வசமானது.

14-ஆம் நூற்றாண்டில் (1335-1378) சுல்தானியர்கள் வசமானது. 1378-ல் விஜய நகர பேரரசால் சுல்தானியர்கள் வீழ்த்தப்பட்டு தங்களுடைய ஆழுமைக்குக் கீழ் கொண்டுவந்தனர்.

1559-ல் மதுரை நாயக்கர்களால் ஆளப்பட்டது. 1563 விஸ்வநாத நாயக்கர் மறைவிற்குப் பின் முத்துக்கிருஷ்ண நாயக்கர் ஆட்சிக் காலம் 1602-ல் துவங்கியது. அவர் காலத்தில் 1605-ல் மலைமீது கோட்டை கட்டப்பட்டது. மலைக் கோட்டைக்குக் கீழேயும் கோட்டை கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் காலத்தில் மிகவும் பிரபலமானது.  திருமலை நாயக்கருக்குப் பிறகு திறமையற்ற சிலர் ஆட்சி செய்தனர். அதன்பின்னர் வந்து இராணி மங்கம்மாள் மிகவும் திறமை வாய்ந்த அரசியாகத் திகழ்ந்தார்.

1742-ல் மைசூர் படை வெங்கட ராயர் தலைமையில் திண்டுக்கல்லை வெற்றி கொண்டது. அவரே திண்டுக்கல் பிரதிநிதியாகவும் ஆட்சி செய்தார். அச்சமயம் திண்டுக்கல் 18 பாளையங்களை உள்ளடக்கியதாக இருந்தது (ஒரு பாளையம் என்பது சில கிராமங்களைக் கொண்டது). அவரது ஆட்சிக் காலத்தில் அனைத்து பாளையங்களும் சேர்ந்து திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு, திண்டுக்கல் சீமை என அழைக்கப்பட்டது. அந்த பாளையக்காரர்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்க விரும்பினர், கிஸ்தி செலுத்தவும் மறுத்தனர். 1755-ல் வெங்கடப்பா என்பவர் வெங்கட ராயருக்கு பதிலாக பொறுப்பேற்றார். அவரால் வெற்றிகரமாக செயலாற்ற முடியவில்லை.  1755-ல் மைசூர் மகாராஜாவால் ஹைதர் அலி என்பவர் சூழலை சமாளிக்க அனுப்பிவைக்கப்பட்டார். பின்னர் ஹைதர் அலி மகாராஜாவின் பிரதிநிதியாக ஆட்சி செய்தார். 1777-ல் புருஷ்ன மிர் சாகிப் என்பவரை திண்டுக்கலின் ஆளுநராக நியமித்தார். ஹைதர் அலி திண்டுக்கல் கோட்டையை பலப்படுத்தினார். அவரது மனைவி திருமதி. அமீருன்னிஷா பேகம் என்பவர் பிரவசத்தின் இறந்துவிட்டார். அவரது நினைவாக மலைக் கோட்டைக்குக் கீழேயுள்ள கோட்டையின் முன்பாக மண்டபம் கட்டப்பட்டது. தற்போது அந்தக் கோட்டை பள்ளிவாசலாகவும், மண்டபம் அதற்கு முன்பாகவும் அமைந்துள்ளது. அந்தப் பகுதி அமீருன்னிஷா பேகம் நினைவாக பேகம்பூர் எனவும் அழைக்கப்படுகிறது.  1783-ல் ஆங்கிலேயர்கள் படையெடுப்பு துவங்கியது. 1784-ல் ஆங்கிலேயர்களுக்கும் மைசூர் மன்னருக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக திண்டுக்கல் மைசூர் மன்னராட்சிக்குட்பட்டதாக இருந்தது. 1788-ல் ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் திண்டுக்கலின் மன்னரானார்.

ஆங்கில பேரரசு

1790-ல் ஜேம்ஸ் ஸ்டீவாட் என்பவர் இரண்டாவது மைசூர் போரில் திண்டுக்கலை வென்றார். 1792-ல் மதுரை மாவட்டத்தில் திண்டுக்கல் தான் ஆங்கில பேரரசுக்கு முதன்முதலில் உட்படுத்தப்பட்டது. 1798-ல் மலைக்கோட்டையை பலப்படுத்தி பாதுகாப்பு அரணாக மாற்றியது. நாலாபுரமும் பீரங்கிகளும், துப்பாக்கி ஏந்திய வீரர்கள் தங்குமிடமும் அமைக்கப்பட்டன. ஆங்கிலப்படை 1798 முதல் 1859 வரை மலைக்கோட்டையிலேயே தங்கியிருந்தனர். அதன்பின் மதுரையைத் தலைநகராகக்கொண்டு, திண்டுக்கல்லை தாலுகாவாக வைத்து ஆட்சி செலுத்திவந்தனர்.  இந்திய சுதந்திரம் அடைந்த 15 ஆகஸ்ட் 1947 வரை ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

திண்டுக்கல் மலைக்கோட்டை பாளையக்காரர்களுக்கு முக்கிய தலமாக விளங்கியது. திப்பு சுல்தான் ஆங்கில பேரரசுக்கு எதிராக பிரஞ்சு படையுடன் சேர்ந்து பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் விருப்பாச்சி பாளையக்காரரும், திண்டுக்கல் பாளையத்திற்கு கோபால் நாயக்கரும், இதற்கு உதவியாக சிவகங்கை சீமையிலிருந்து அரசி வேலு நாச்சியாரின் தளபதிகளான மருதுபாண்டியர்கள் ஹைதர் அலியின் அனுமதி பெற்று மலைக்கோட்டையிலேயே தங்கியிருந்தனர்.

சிறுமலை

சிறுமலை 60000 ஏக்கர் பரப்பளவுள்ளவை (200 கி.மீ). திண்டுக்கல்லிலிருந்து 25 கி.மீ. (16 மைல்கள்), மதுரையிலிருந்து 40 கி.மீ. (25 மைல்கள்) தொலைவில் உள்ளது. உயர்ந்த மலைகளைக் கொண்டது. கொடைக்கானல் மலையைவிட அதிகமாக 18 கொண்டைஊசி வளைவுகளைக் கொண்டது. இங்கு கில்லாக் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. அடர்ந்த காடுகளும், நல்ல சீதோஷன நிலையையும் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இங்கு இயற்கையோடு கூடிய மக்கள் விரும்பும் பல முக்கிய இடங்கள் உள்ளன.

அன்னை வேளாங்கன்னி தேவாலயம்

மலையின் உச்சியில் சரிவான பகுதியில் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. செப்டம்பர் மாதம் ஆரோக்கி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெறும்.

சிறுமலை நீர்த்தேக்கம்

2010ஆம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட சிறு நீர்த்தேக்கமாகும். அடர்ந்துயர்ந்த மரங்களுக்கிடையே அமைந்துள்ளது. படகு சவாரியும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வார இறுதியில் போதுமான நீர் இருந்தால் மட்டும் படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது.

உயர் கோபுரம்

சிறுமலையின் 17வது கொண்டைஊசி வளைவில் இவ்விடம் அமைந்துள்ளது. அங்கிருந்து கீழே தெரியும் அற்புதமான இயற்கை காட்சிகளைக் கண்டுகளிக்க மிகவும் அருமையான இடம். திண்டுக்கல் நகரப்பகுதி முதல் சிறுமலையின் பிற மலைப் பகுதிகள் வரை கண்டுகளிக்கலாம்.

சஞ்சிவனி மலை

சிறுமலையின் ஒருபகுதியாக உள்ள இம்மலை. ராமாயனத்தில் ராவனனுடன் யுத்தம் நடந்தது. யுத்ததில் மயக்கமுற்ற லக்குமனனை எழுப்புவதற்குத் மூலிகை தேவைப்பட்டது. அதனை எடுத்துவர சென்ற அனுமான் மூலிகையை கண்டிறிய ஐயமுற்று மலையையே தூக்கிச் சென்றபோது அம்மலையிலிருந்து விழுந்த ஒரு சிறு துண்டாக சஞ்ஜீவினி மலை கருதப்படுகிறது.

சாதியாறு

சிறுமலையிலிருந்து புறப்படும் இந்நதி தென்புறமாக ஓடி வைகையில் கலக்கிறது. இக்கழிமுகப் பகுதி 819 சதுர கி.மீ. (316 ச.மைல்). நீர் பாய்ச்சல் பரப்பு 4279.89 ஹெக்டேர் (10575.8 ஏக்கர்). வாடிப்பட்டி அருகில் இவ்வாற்றின் குறுக்கே சாதியாறு அணை விவசாய பாசனத்துக்காக கட்டப்பட்டுள்ளது. பாசன பகுதிகள் மதுரை மாவட்டத்திலுள்ளன.

வெள்ளிமலை முருகன் கோவில்

சமவெளியிலிருந்து 45 நிமிடங்கள் நடந்து செல்லும் தூரத்தில் மலையில் அமைந்துள்ளது. மலையைச் சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களுக்கும் இக்கோவில் அமைந்துள்ளது.

கான்டிஜ் எஸ்டேட்

சிறுமலையில் 1000 ஏக்கர்களைக் கொண்டு அமைந்துள்ளது. இதிலிருந்து 3 ஆறுகளும் 2 நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. இப்பகுதியில் 120-132 செ.மீ. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மலையாகப் பொழிகிறது.20-30000 ஏக்கர் ஒதுக்குக் காடுகளைக் கொண்டுள்ளது. மருத்துவத் தாவரங்களை உள்ளடக்கிய இயற்கை வளமாக உள்ளது. காடு ஒழிப்பை தடுத்து மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கையைப் பாதுகாக்கும் அரனாக இம்மலை உள்ளது.

செல்வி கோவில்

நீ்ள் வட்ட வடிவில் சின்னமலைக்கும் திண்டுக்கல்லுக்கும் நடுவில் இயற்கை எழில்மிகு பார்வையில் இக்கோவில் அமைந்துள்ளது.

.அகஸ்தியர்புரம்

அகஸ்தியர் என அழைக்கபட்ட சித்தர் இங்கு தங்கியிருந்ததால் இப்பகுதி அகஸ்தியர்புரம் என அழைக்கப்படுகிறது. பழங்காலம் முதல் பல்வேறு சித்தர்கள் வசித்த இடமாக கருதப்படுகிறது. மருத்துவ தாவரங்களும், மூலிகைச் செடிகளும் இங்கு அதிகம் காணப்படுகிறது. இப்பகுதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ லிங்கம் காணப்படுகிறது.

வெள்ளிமலை

அகஸ்தியர் புரத்தில் வெள்ளிமலை காணப்படுகிறது. சிறுமலையிலேயே மிக உயர்ந்த மலை இதுவாகும். இம்மலையின் உச்சி முழுவதும் வெள்ளியாக இருந்தது. கலியுகத்தில் மக்களால் இது திருடப்பட்டுவிடும் என்பதால் அகஸ்தியர் இதனை பாறைக் கல்லாகி மாற்றிவிட்டதாகக் கூறுகின்றனர். இம்மலையின் உச்சியில்தான் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ லிங்கம் காணப்படுகிறது. 30-45 நிமிடங்கள் நடந்துசென்று இவ்வுச்சியை அடையலாம்.

 

சொளந்தரராஜ பெருமாள் திருக்கோயில், தாடிக்கொம்பு

சௌந்தர்ராஜ பெருமாள் கோவில் திண்டுக்கல்-கரூர் சாலையில் திண்டுக்கல்லிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. திரு. சௌந்தர்ராஜன் முக்கிய தெய்வமாக உள்ளார். இங்கு சக்கரத்தாழ்வாருக்கு தனியே கோயில் உள்ளது. இங்குள்ள சிவன்-பார்வதி, ரதி-மன்மதன் முதலான சிற்பங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுள்ள சிற்பங்களுக்கு இணையானவை. சித்திரை மாதம் (ஏப்ரல்-மே) முக்கிய விழா கொண்டாடப்படுகிறது. 12 தினங்கள் அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.

 

அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயில், பழனி

பழனி முருகன் கோவில் முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

கோவில் வரலாறு

ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் “பழம் நீ ” (பழனி) என அழைக்கப்படுகிறது.

பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் முலம் பழனிமலையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

புராணங்களில் இப்படியான பெயர்க்காரணங்கள் வழங்கப்பட்டாலும் பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லில் அடிப்படையில் உருவான பெயரே பழனி. பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது.

முருகன் சிலையின் சிறப்பு

முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

போகர் வரலாறு

போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும். அகத்திய முனிவருக்கும், போகருக்கும் தொழில் ரீதியாக போட்டியிருந்து வந்தது. அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார்.

அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.

கொடைக்கானல்

கொடைக்கானல் கோடை விடுமுறைக்கு பிரபலமான கோடை வாசஸ்தலமாகும். 7200 அடி கடல் மட்டத்திற்கு மேல் உயரம் கொண்டது. தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மற்றும் பழநி மலையின் ஒரு பகுதியாக உள்ளது. மலைகளின் இளவரசி என எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

குளிர்ந்த பனிமூட்டத்துடன் கூடிய மேகங்கள் சூழ்ந்த உயர்ந்த அடர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதியாக இருப்பதால் ஆண்டுமுழுவதும் மக்களை மிகவும் கவருகிறது. ஏரி, நீர்வீழ்ச்சி புல்வெளிகள் ஆகியவற்றில் நடப்பதும், மிதிவண்டியில் செல்வதும். குதிரைகளில் செல்வதும் மிகவும் மக்களைக் கவர்கிறது.

கொடைக்கானல் ஆய்வுக்கூடம்

1899ஆம் ஆண்டு சூரிய இயற்பியல் ஆய்வுக்கூடம் சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டது. தென்னிந்தியாவின் பழனி மலைப்பகுதியில் இந்திய வான்இயற்பியல் பயிலகமாக இக் கொடைக்கானல் ஆய்வுக்கூடம் உள்ளது.

கதிர் கோட்டம்

20 செ.மீ. அளவுள்ள கதிர்கோட்டம் காணப்படுகிறது. வின்வெளியினை பார்வையிட இது பயன்படுகிறது. சில நேரங்களில் பொதுமக்களின் பார்வைக்கும் அனுமதிக்கப்படுகிறது.

ஆஸ்ட்ரோனியம் அருங்காட்சியகம்

இந்த ஆய்வகத்தில் பிரசித்தி பெற்ற ஆஸ்ட்ரோனியம் அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. சூரிய மாதிரி இங்கே அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சூன் 15ஆம் தேதி வரை பொது மக்களுக்காக காலை 10 முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4 முதல் 6 வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். மற்ற காலங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 முதல் 12 மணி வரை திறந்திருக்கும்.

 




 

Dinamani India.. In Web from January 1, 2021. .

About Us         Contact Us